Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழர் தம் வழிபாட்டில் சமஸ்கிருதமொழியை எதிர்ப்பது ஏன்?


Guru

Status: Offline
Posts: 7329
Date:
தமிழர் தம் வழிபாட்டில் சமஸ்கிருதமொழியை எதிர்ப்பது ஏன்?
Permalink  
 


Krishnakumar Prathapan

சிங்களவர் தம்பௌத்தமத வழிபாட்டில் பாளிமொழியைக் கைவிடாது போற்றி வரும்போது, தமிழர் தம் வழிபாட்டில் சமஸ்கிருதமொழியை எதிர்ப்பது ஏன்?

பாளி, தமிழ், வடமொழி என்பவற்றால் உருவானதே சிங்களம். சிங்களமொழி மும்மொழிகள் புணர்ந்து தோன்றிய மொழியேயொழிய, தனித்தமொழி அல்ல!!!
ஆனால் தமிழ் அங்ஙனமானதல்ல! தனித்து இயங்கக்கூடிய வளங்கள் கொண்ட, சிவபெருமானே அருளினாரென்று பெருமையையும், சிவபெருமான் தம்கையொப்பம் இடப்பயன்படுத்திய மொழியென்பதால் அச்சிவபெருமானின் சொந்தமொழியென்றும் அழகுடைச் சிறப்புகளையுடைய மொழி! இங்ஙனம் தனித்த பெருமைகளையுடைய ஒருமொழியை தாய்மொழியாய்க்கொண்ட தமிழர் காலங்காலமாக சங்கதமொழியைக் கொண்டாடியே வந்தனர்.இக்காலத்தில் ஏற்பட்டுள்ள வெறுப்பு எதனால்? கிருஷ்தவ ஆபிரகாமிய திராவிடச்சதியா? ஆழமாக சிந்திப்போம்!!!

1)சங்கதமொழியைத் தமிழுக்குள் கலந்தெழுதும், கலந்துபேசும் பழக்கத்தால் தமிழிலிருந்து பிரிந்து மலையாளம் தனிமொழியாக உருவாகியது. மூவேந்தரில் சேரத்தமிழர், இன்று மலையாளிகளாகத், தனியினமாக தாய்த்தமிழரிலிருந்து பிரிந்து, தனியினமாகியுள்ளனர். கண்முன்னே இம்மாற்றம் நிகழ்ந்துள்ளது. மலையாள நாடும் , நம்தமிழர் நாடாய் இருந்திருந்தால் தமிழர் எண்ணிக்கையிலும், நிலப்பரப்பளவிலும் பெரும்தேசத்தை உடையவராய், பாரத அரசியலின் வலுவுள்ள தீர்மான சத்தியாய் விளங்கியிருப்பர். அகண்ட தமிழர் மாநிலம் நீர்வளம், மலைவளம், நிலவளம் என்று பெருவளம்பொருந்திய தேசமாய் விளங்கியிருக்கும்.

வடதமிழகத்தார் தமிங்கில மொழி இனத்தாரென்று பிரியும்நிலை உருவாகினால், தென் தமிழகத்தாருக்கு ஏற்படக்கூடிய அதிகார இழப்பு எவ்வளவு மன உளைச்சலை ஏற்படுத்துமென்று சிந்தித்துப் பாருங்கள். அதுபோல்த்தான் தமிழரில் ஒருபெரும் பகுதித்தேசத்தினர், சமஸ்கிருதக்கலப்பால் வெறும் சொற்ப நூற்றாண்டுகளில் தனியினமாக பிரிந்துள்ளனரென்று எண்ணும்போது சங்கதமொழியில் எவருக்குத்தான் காதல் வரும்?

2)சேரநாடு மலையாளமொழி நாடாய்ச் சிதைத்துபோக, எஞ்சிய தமிழர்
மணிப்பிரவாள மொழியினராக மாறிக்கொண்டிருந்தபோது, தனித்தமிழ் இயக்கம் கொண்டு தமிழைக்காத்தனர் நம்முன்னோர். அவை நடந்திராவிட்டால், இன்று சென்னைமுதல் இலங்கைவரை அனைவரும் மணிப்பிரவாள இனத்தாரேயாம்.

3)தமிழுக்குள் சங்கதத்தைக் கலத்தல் இரத்தினமும் பவளமும் கலத்தலென்று நம்மை நம்பவைத்துவிட்டு, வேதத்தோடு தமிழ்த்தோத்திரம் படித்தல் வேதத்திற்கு தீட்டென்னும் நிலையை ஸ்மார்த்தமதத்தார் புகுத்தும் போது, நம்முன்னோர் கேளாதிருந்தனர்.

பேச்சுமொழியில் தமிழுக்குள் சங்கதம் கலத்தல் இரத்தினமும் பவளமும் கலக்கின்றதென்று கொண்டாடிய ஸ்மார்த்தர், பூசைமொழிக்குள் இரத்தினமும் பவளமும் என்று சங்கதத்தோடு தமிழைக் கொண்டாடாது, தமிழை நீசமொழியாகவே கொண்டனர்.
தேவாரம் அருளிப்பாட, திருவாசகம் அருளிப்பாட என்று சைவப்பத்ததிகள் விதித்திருக்க, "பஞ்சபுராண அவதாராய" என்று தமிழை சங்கதமொழிப்படுத்தினர். ஆசிர்வாதத்திற்கு முன்னரே திருமுறை ஓதலை சைவப்பத்ததிகள் விதித்திருக்க, ஆசிர்வாதத்திற்கும் சங்கராச்சாரியார் முதலியோர் படித்த இலிங்காஷ்டகம் முதலிய பாச-பசுவாக்கிய சம்ஸ்கிருதத்தோத்திரங்களுக்கும் பிறகே தமிழ்த்திருமுறைகளென்னும் சைவப்பத்ததிகளுக்கு மாறான கேடுகளைப் புகுத்தினர். ஆக, பூசைக்குள் தமிழை இரத்தினமாகவோ, பவளமாகவோ கருதாது, நீசமாகக்கருதினர்.

பேச்சுமொழியில் தமிழுக்குள் சங்கதத்தைக் கலக்க, இருமொழிகளும் இரத்தினமும் பவளமும் போன்றதென்ற நச்சுத்தேனை ஸ்மார்த்தமதத்தார் இட்டுக்கட்டினர்.

😠இவை தான், தமிழருக்கு சங்கதமொழியின்பால் வெறுப்பும் வேற்றுமையுணர்வும் தோன்றக்காரணம். சங்கதமொழிக்கலப்பால் மலையாளத்தேசத்தை தமிழ்த்தேசத்திலிருந்து இழந்த வலி, மணிப்பிரவாளர் என்னும் புதிய இனமாக மாறும்தருவாய்க்க்குச்சென்று மீண்ட காயங்கள், சங்கதவெறுப்புக்கு தமிழரை இட்டுச்சென்றதேயொழிய, ஆபிரகாமிய கிருஷ்தவப்பூதக்கதைகளெல்லாம் இவ்வுண்மைகளை மறைக்கச் சுமார்த்த ஆதீக்கவாதியினர் கையாளும் உத்திகளாகும்.

👍சரி......சங்கதமொழியின்பால் ஏற்பட்டுள்ள வெறுப்பை நீக்கத் தமிழர் என்னசெய்யவேண்டும்? இதுபற்றி உண்மைச் சைவர்களும் சிந்தித்தாரில்லை. சிங்கள மக்கள் பாளிமொழியை அவர்தம் வழிபாட்டில் பயன்படுத்தினாலும், இன்றைய சிங்களமொழிக்குள் முந்திய பாளிமொழியைக் கலப்பதில்லை.
ஆனால் நாம், கிரியை மொழியென்று கூறிக்கொண்டு, திருவிழா நிகழ்ச்சிகளையும், கடவுள் பெயர்களையும், திருவிழா விளப்பர அச்சுப்பிரதிகளையும் சங்கதக் கலப்பிலேயே மேற்கொண்டவாறுள்ளோம். சங்கதம் கிரியை மொழியா? எழுத்து-பேச்சுமொழியா?

துவஜாரோகணம், துவஜஸ்தம்பம், துவஜா அவரோகணம், கும்பாவிஷேகம், விஞ்ஞாபனம் என்றெல்லாம் வலிந்து எழுத்துமொழிக்குள்-பேச்சுமொழிக்குள் கிரியைமொழியைத் திணிப்பதேன்? சிங்களவர் தம்வழிபாட்டுமொழியாகிய பாளியை, இங்ஙனம் எழுத்து-பேச்சுமொழியாகத் தற்காலச் சிங்களத்துள் கலப்பதில்லையே? சிங்களவர் பாளிமொழியின்பால் கசப்புணர்வுகொள்ளாது இருப்பதற்கு இங்ஙனம் அவர்கள் கிரியைமொழிக்கும் பேச்சு-எழுத்துமொழியாகிய சிங்களமொழிக்குமிடையில் தெளிவான வரம்புகளைக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால் சைவசமயத்தாராகிய நாம், தாய்மொழித்தமிழுக்குள் தேவையில்லாத, வலிந்த சங்கதமொழித்திணிப்புக்களை அனுமதித்தவாறு, வழிபாட்டுமொழிக்குள் தமிழ்த்திருமுறைகளை வேதாகம மந்திரங்களோடு ஆசீர்வாதத்திற்கு முன்னர் ஓதவேண்டுமென்ற வரம்பை, ஸ்மார்த்த தீட்டுமொழிக்கதைக்குள் அகப்பட்டு, ஆசீர்வாதத்திற்கும் சமஸ்கிருத பசு-பாசவாக்கியத் தோத்திரங்களுக்குப்பிறகே திருமுறையென்னும் சீர்கேடுகளை அமைதியாக ஏற்றுக்கொண்டும் இருப்பதால்த்தான், தனித்தமிழ் வழிபாடுகள் தோன்றினவேயொழிய, கிருஷ்தவ ஆபிரகாமியப்பூதங்களால் அல்ல! மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடாது, ஸ்மார்த்தமதத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் சைவத்தில் இருந்துவிலக்குவதே, வைதீக சுத்தாத்துவித சைவசித்தாந்தம் தழைத்தோங்கவும் தமிழ்வாழவும் சங்கதமொழியின்பால் தமிழருக்கு மரியாதை ஏற்படவும் வழிவகுக்கும்.

ஆழச்சிந்தித்தால் நாம் சிறக்கலாம்! இல்லையேல் இன்னும் சில நூற்றாண்டுகளில் ஸ்மார்த்த சமயத்தவர்களாகவும் தமிங்கி மொழியினத்தவராகவும் தமிழர் கெட்டொழிய வேண்டியது தான்!!!-- Edited by admin on Friday 11th of October 2019 04:39:06 AM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard