Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அமர்நாத் ராமகிருஷ்ணா, அகழ்வாராய்ச்சி(!), அறிவியல்(!!), அறிவு(!!!) – சோகக் குறிப்புகள்


Guru

Status: Offline
Posts: 7387
Date:
அமர்நாத் ராமகிருஷ்ணா, அகழ்வாராய்ச்சி(!), அறிவியல்(!!), அறிவு(!!!) – சோகக் குறிப்புகள்
Permalink  
 


அமர்நாத் ராமகிருஷ்ணா, அகழ்வாராய்ச்சி(!), அறிவியல்(!!), அறிவு(!!!) – சோகக் குறிப்புகள்

08/10/2019

பாண்டிச்சேரிவாழ் தமிழ்வெறி அன்பர் ஒருவரிடமிருந்து (ஆனால் சுட்டுப்போட்டாலும், இவருக்கு, ‘ழ’ உச்சரிக்கமுடியாத கையறுநிலை! தமிள்தாயின் அருள் கிடைக்கவில்லை, பாவம்!  “எங்கல் தமிளில் இருக்கும்  சப்தம் வேறு எந்த மொளியிலும் இல்லை” என அவர் அன்புடன் கூறும்போது, எப்படி என்னால் சிரிப்பை அடக்கிக்கொள்ளமுடியும், சொல்லுங்கள்? பொதுவாக, அவர் இப்படி ஆரம்பிக்கும்போது சிரித்துக்கொண்டே, “ஏனய்யா, ஏன் ‘எங்கள்’ என்கிறீர்கள்? ‘நம்’ என்று சொல்லலாமே” என்பேன்! அவரும் உடனே, அன்புடன் அர்ச்சனை செய்துகொண்டே தேவநேயப்பாவாணர், ஈவெரா என்று இன்னொரு ரூட்டில் போய்விடுவார்! நல்ல மனிதர், ஆனால் திராவிடர், மூளையைத் தானே முனைந்து குறுக்கிக் கொண்டுவிட்டார், பாவம்!)  … இன்றுகாலை ஒரு ஆனந்தக் கூத்தாட்டச் செய்தி!

பண்டைய தமிழர்களின் திராவிட நாகரிகம் ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையானது! அகழ்வாராய்ச்சியாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவே கார்பன் டேட்டிங் மூலம் இன்றைக்கு 5560 ஆண்டுகள் முற்பட்டது கீழடி நாகரிகம் என்று சொல்லிவிட்டார்! ஆகவே சங்ககாலம், கிமு 3000 வருடங்களுக்கு முற்பட்டது என நிரூபணம் ஆகிவிட்டது!

எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை – ஆனால் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது – என்ன மசுருக்கு நான் அடிப்படை வரலாற்று விஷயங்களை அறிந்துகொண்டிருக்கிறேன் என ஒர்ரே சுயபச்சாத்தாபம்வேறு! கீழடி பற்றி அறிவேன் என்றாலும், பொதுவாக வரலாற்றுகாலத்துக்கு முந்தைய பாரதவெளியைக் கொஞ்சம் நேரடியாகவே அறிமுகம் கொண்டுள்ளேன் என்றாலும்… இப்படி!

…ஒருவழியாக இன்றுதான் இந்த, தேவையேயற்ற ‘அடிக்கறாங்க அடிக்கறாங்க’ வகையறா ‘இன்னொருவாட்டி புத்தம்புதிய பதிப்பு’ ஸீன்போடுதல்களைப் பற்றிய மூல உரையாடல்களையும் கட்டுரைகளையும் பல ‘ஆரிய Vs திராவிட’ + ‘தமிழன் வஞ்சிக்கப்படுகிறான்’ + ‘வரலாறு புதைக்கப்படுகிறது’  சதிவலைத் திட்ட வகை பப்பராக்களையும்  படித்தேன். சிலபல காணொளிகளைப் பார்த்தேன்…

ஆக… கீழடி, அறிவிலித்தனமான அரசியல் அக்கப்போர் பற்றித்தான் இந்தப் பதிவு. (நம்ப வாள்க்கைக்கு இத்து ற்றொம்ப முக்கியண்டே!)

…எப்படித்தான் தன் மொட்டைத்தலைக்கும் இன்னொருவனின் முழங்காலுக்கும் நம் வாட்ஸ்அப் தமிழர்கள் முடிச்சுபோடுகிறார்கள் என்பதை நினைத்தால்… அதுவும், நம்முடைய மிக்க துறை அனுபவமும் அறிவும் பெற்ற ஆராய்ச்சியாளர்களே அப்படித்தான், அதனால்தானே பிறபாமரர்களும் அப்படியே புல்லரிக்கப்பெறுகிறார்கள் என்பதையும் நினைத்தால்…

-0-0-0-0-0-

சரி, கீழடி அகழ்வாராய்ச்சி இன்னபிற குறித்து – பிஏகிருஷ்ணன் அவர்கள், பெரியவர் நாகசாமி போன்றவர்களுடைய கட்டுரைகள், கருத்துகள், இடஞ்சுட்டிப் பொருள்விளக்குதல்கள், அமர்நாத் அவர்களின் பழைய பேட்டிகள், ‘என்னை இடமாற்றம் செய்துவிட்டார்கள், இது திராவிடர்களுக்கெதிரான சதி’ வகை வெட்டிப் பிலாக்கணங்கள் உட்படப் படித்தேன்; ஒருமுறைக்கு இருமுறை படித்து சரிபார்த்துக்கொண்டேன்.

…ஆனால், எவ்வளவு தேடியும் எந்தவொரு, பாரத அளவிலோ பன்னாட்டளவிலோ மதிக்கத்தக்க எந்தவொரு அகழ்வாராய்ச்சி/வரலாற்றுச் சஞ்சிகையிலும், இந்த இளம் அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள் எழுதியிருக்கக் கூடும் ஒரேயொரு கட்டுரையைக் கூடப் படிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை! அப்படியெல்லாம் எழுதியிருக்கிறாரா என்பதே,  எனக்குப் புலப்படவில்லை.  ஒரு ஸைட்டேஷன்/மேற்கோள் காட்டப்படக்கூட இல்லை… ஆனால் இவருக்கு சுமார் 20 வருட பயிற்சி/அனுபவம் இருப்பதால் ஏதாவது உருப்படியாகச் செய்திருக்கவே வேண்டும் என்பதுதான் சரியான, நியாயமான எதிர்பார்ப்பு. (ஆக, அப்படி ஏதாவது  இவர் எழுதி கிழுதி இருந்தால் எனக்குத் தயவுசெய்து தெரிவிக்கவும்! படித்து இன்புறவே எனக்கு ஆசை!)

ஆனால், இவரும், தன் தொழிலறத்தைவிட, அரசியல் பண்ணும் திறமையை வளர்த்திக்கொண்டால் போதும் என (நம் திராபைத் திராவிடச் சூழலில்) ஒரு முடிவுக்கு வந்துவிட்டாரோ என்னவோ! அப்படியென்றால் சோகம்தான்.

+ அன்பர் அமர்நாத் அவர்கள் ஏதோவொரு அண்மைய நிகழ்ச்சியில் அவருடைய அன்பர் கேள்விகளுக்குப் பதில் கொடுப்பது உட்பட பார்த்தேன். பிரச்சினை பிரச்சினை

என்னைப் பொறுத்தவரை – பிஏகிருஷ்ணன் அவர்கள், கீழடி குறித்துப் பதிவு செய்த கருத்துகள், மிகுந்த பொறுப்புணர்வோடுதான் செய்யப் பட்டிருக்கின்றன. அவர் சர்வ நிச்சயமாக (இவ்விஷயங்களில்) அட்ச்சிவுடவில்லை. சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். அதேபோலத்தான் பெரியவர் மகாமகோ நாகசாமி அவர்களுடைய கருத்துகளும். அவை அறிவியல்பூர்வமாகவும் சமனத்துடனும்தான் இருக்கின்றன. அவர்கள் மிகச் சரியாகவே, சான்றுகள்பூர்வமாகவே தம் கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்கள். மிக முக்கியமான கேள்விகளைக் கேட்கிறார்கள். சர்வ நிச்சயமாக உணர்ச்சிபூர்வமாக சதிகிதி என்கிற பெயரில்,  இல்லாதவற்றை, இவர்கள் ஊதிப் பெருக்கவில்லை. எதையும் மூடிமறைக்கவும் இல்லை!

அவர்கள் கார்பன் டேட்டிங் என்கிற அறிவியல்பூர்வமான வழிமுறையை, சர்வ நிச்சயமாக மறுதலிக்கவேயில்லை!

ஆனால் – பெரியார் மணியம்மை இன்னபிற உதிரிகள் பெயரால் நடத்தப்படும் கருத்தரங்குகளில் மேடையில் நின்றுகொண்டு – பெரியவர் நாகசாமியின் கருத்துகளைத் திரித்துப் பொய் சொல்லி, மேலும் அழகன்குளம் அதுஇது என முகாந்திரமில்லாமல் உளறிக்கொட்டிப் பேசி, அபாண்டங்கள் சொல்லிக் கைதட்டல் வாங்குவது எளிது. இளம் அமர்நாத் அதனை மிக நன்றாகவே செய்திருக்கிறார். (கயமையிலும் அதிசராசரித்தனத்திலும் மூழ்கியிருக்கும் ஒருவர்தாம், அமர்நாத் அவர்கள் போல நாக்கில் நரம்பில்லாமல் பேசமுடியும்)

பிஏகிருஷ்ணன் அவர்களின் சமனமும் நேர்மையும் மிகுந்த கருத்துகளை, அவர் ‘அகழ்வாராய்ச்சியாளரல்லர்’ என்ற ஒரே காரணத்தால், அவருடைய மிகச்சரியான புரிதல்களையும் விளக்கங்களையும் கேள்விகளையும் ஒதுக்கி – அதே சமயம் தன் துறை பற்றிய அடிப்படை அறிவுகூட இல்லாமல் மினுக்கிக்கொண்டலைவது மிகவும் சுலபமான விஷயம்.

அதைத்தான் இஂளம் அகழ்வாராய்ச்சியாளர் அமர்நாத், ஒரு கீழ்த்தரமான இகழ்வாராய்ச்சியாளராகச் செய்திருக்கிறார்.

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் – ஒரு இளம் அகழ்வாராய்ச்சிக்காரராக, அமர்நாத் அவர்கள் இப்படியெல்லாம் தன் அறியாமையை வெளிப்படுத்திக்கொள்ளவேண்டிய அவசியமேயில்லை!

ஆனால், என்ன செய்ய! காலத்தின் கந்தறகோளத்தில் அமர்நாத் அவர்கள் மட்டும் ஐக்கியமாகக் கூடாதா என்ன?

-0-0-0-0-

நான் பயிற்சி பெற்ற அகழ்வாராய்ச்சிக்காரன் கிடையாது. ஆனால், ஓரளவு நன்றாகவே என் அடிப்படைக் கணிதத்தையும் அறிவியலையும் அறிந்துகொண்டிருப்பவன். ஓரளவுக்கு நம் வரலாறுகளையும்கூட.

+ஒரேயொரு அகழ்வாராய்ச்சியிலும் மூன்று வாரங்கள் போல  பங்கு பெற்றிருப்பவன். (தினக்கூலிக்காக அகழ்பவர்களைக் ‘கூலி’ என்று மேட்டிமைப் புரிதலுடனும் கேவல மனப்பான்மையுடனும் விளக்குகிறார் அல்லவா,  இந்த அமர்நாத் ராமகிருஷ்ணா – அதே கூலி வேலையைத் தான் செய்தேன், அந்தப் பேறு பெற்றேன்;- ~2015 வாக்கில், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த ஒரு பெருங்கற்கால ‘பரியல் ஸைட்’ கட்டுமானத்தை அகழ்வதில் ஒரு சிறுபங்கு வகித்தேன்)

…ஆனாலும் வரலாறு பற்றிய அமர்நாத் அவர்களின் உளறாறுகளையும், பெரியவர்கள் குறித்த அவருடைய அறியாமைசார் காமாலைக்கண் பார்வையையும் லூஸ்லவுட்டுவிட்டு, அவருடைய அகழ்வாராய்ச்சி குறித்த அடிப்படைக் கோளாறு அறிவியல் புரளியை, புரட்டை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்.

thisaivu-on-twitter-amazing-that-this-rabble-rousing-archaeologist-darling-of-the-emotional-dravi...1.png">thisaivu-on-twitter-amazing-that-this-rabble-rousing-archaeologist-darling-of-the-emotional-dravi...1.png?w=362&h=624" border="0" alt="" width="362" height="624" style="height:auto;border-style:none;margin:5px auto;" />

இந்த வீடியோவில்… இவர், கார்பன் கால அளவையியல் (கார்பன் டேட்டிங், இன்னமும் சரியாகச் சொல்லவேண்டுமானால், கார்பன்14 டேட்டிங்) குறித்த தன் புரிதலை(!)  1.06 நிமிட அளவில் ஆரம்பித்து, மிகுந்த தன்னம்பிக்கையுடனும் நக்கலான வாயோரச் சிரிப்புடனும் இப்படிச் சொல்கிறார்!

ஒரு(!) கரி அழிவதற்கான காலம் 5560 ஆண்டுகள் + /- 50 ஆண்டுகள்

…என்கிறார்!

அதுவும் ஒருமுறை என்றால், வாய் குழறிச் சொல்லிவிட்டார், தவறு என்று விட்டுவிடலாம்; ஆனால் இரண்டுமுறை அழுத்தம் திருத்தமாக அழிச்சாட்டியம் செய்து சொல்கிறார், என்ன செய்வது, சொல்லுங்கள். தனக்கு இதைப் பற்றி ஒரு முடிக்கும் சரியாகத் தெரியாது எனக் காண்பித்துக் கொள்வதில் அவ்வளவு குவியம் செய்யப்பட்ட முனைப்பு! இந்த எழவையும் தூக்கிப் பிடிக்கும் ‘சதுக்கப் பூத’ அரைகுறைகள் வேறு! தாங்கமுடியவில்லை!!

நண்பர் ஒருவருக்கு நன்றியுடன், அந்தக் காணொலியிலிருந்து ‘க்ளிப்’ செய்யப்பட்ட அந்த  23 வினாடி பாகத்தை மட்டும் இங்கே கொடுக்கிறேன்.

https://archive.org/details/amarnathramakrishna50s1m13.7sixmsy1ka8t4

கார்பன்14 மீதான கால அளவியலுக்கான குட்டி, அறிவியல் விளக்கம்: இதனை, ‘கதிரியக்கக் கார்பன் வழி கால நிர்ணயமுறை’ எனவும் குறிப்பிடலாம். கார்பனின் ஐஸோடோப்புகளில் கார்பன்14 என்பதும் கார்பன்12 என்பதும் முக்கியமானவை. இதில் கார்பன்14 கதிரியக்கம் காரணமாகக், கொஞ்சம் கொஞ்சமாக தன் பருப்பொருளை கழித்துக்கட்டிக்கொண்டிருக்கும். ஒவ்வொரு 5,730 (+/- 40) வருடங்களுக்கும், அது ஆரம்பித்த அளவில் பாதியாகியிருக்கும். இதற்கு பாதிவாழ்க்கை அல்லது அரைவாழ்வுகாலம் அல்லது ஹாஃப்டைம்லைஃப் எனச் சொல்லலாம், கார்பன்14 அணுக்களுக்கு, இது ஆகவே, 5,730 (+/- 40) வருடங்கள்.

உயர் வாயு/வளிமண்டலத்தில், சூரியசக்தியினாலும் உந்தப்பட்ட ந்யூட்ரான்கள்  அங்கிருக்கும் காற்றிலுள்ள நைட்ரஜன் அணுக்களுடன் இணைந்து கார்பன்14 அணுக்களாகி, பின் பின்னவை அங்கிருக்கும் ஆக்ஸிஜனுடன் கலந்து கார்பன் டையாக்ஸைட் – கரியமிலவாயுவாகின்றன. கீழ்வளிமண்டலத்தில் இந்த கார்பன்14 கரியமிலவாயுவும் (=அ) கார்பன்12 கரியமிலவாயுவும் (=ஆ) ஏறத்தாழ சரிவிகிதத்தில், பப்பாதி, இருக்கின்றன. இவை ஓளிச்சேர்க்கை (ஃபோட்டோஸிந்தெஸிஸ்) மூலம்  தாவரங்களை அடைகின்றன, பின்னர் தாவரங்களை உண்ணும் விலங்குகளையும் சென்றடைகின்றன. இவை உயிருடன் இருக்கும் வரை, கார்பன்14 குறையக் குறைய அவை, ஒளிச்சேர்க்கை மூலம் நிரவப்படுகின்றன. ஆகவே அ-ஆ விகிதம் சரியாக 1:1 அளவில் இருக்கிறது. ஆனால் அவை இறந்தவுடன், ஒளிச்சேர்க்கையோ அல்லது உண்பதோ நடக்காது என்பதால்… அ மட்டும் கதிரியக்கம் காரணமாகக் குறைந்துகொண்டே வரும். ஆனால் ஆ அப்படியே இருக்கும். இந்த விகிதத்தை வைத்துக்கொண்டு, ஒரு ஃபாஸ்ஸில்/படிமத்திலிருந்து – எப்போது சம்பந்தப்பட்ட,  விலங்கு/தாவரம் இறந்தது, அல்லது கரியாகியது என்றெல்லாம் ஓரளவு துல்லியத்துடன் கருத்தில் கொள்ள முடியும்.

அதாவது கார்பன்14 முழுவதும் அழியவே முடியாது… அதற்குக் கிட்டே போவதற்குள் இந்தப் ப்ரபஞ்சமே முடிந்துவிடும்! மாறாக – அப்படி கார்பன்14,  5560 வருடங்களில் அழிந்து தீர்ந்துவிட்டால், அத்தனை வருடங்களுக்கு முன்னால் நடந்த எந்தவொரு ஃபாஸ்ஸில் விஷயத்தையும் இம்முறையில் அனுமானிக்கவே முடியாது!   என்ன சொல்கிறார் இந்த அகழ்வாராய்ச்சியாளர்? அடிப்படைகள் தெரியாமல் உளறிக்கொட்டி…. தேவையா?

…இத்தனைக்கும் ஒரு சோட்டா அகழ்வாராய்ச்சியாளனுக்கும், ஏன் ஒரு மாணவனுக்கும் கூட இந்த விஷயம் தெரிந்திருக்கவே வேண்டும், இதைப் பற்றி உளறிக்கொட்டுவதற்கெல்லாம் மன்னிப்பே கிடையாது! ஏனெனில்,. பத்தாங்க்ளாஸ் பாடம்தான் இது!

(இது குறித்த ஒரு தமிழ் யூட்யூப் வீடியோ)

-0-0-0-0-0-

யோசிக்கிறேன்.

தம் தொழிலின், அதனுடைய முக்கியமான ஒரு கருவி/கருதுகோள் குறித்த அடிப்படைப் புரிதல் கூட இல்லாத ஒருவர், கண்டமேனிக்கும் அனடோலியா கினடொலியா ஏஎன்ஐ ஏஎஸ்ஐ என்று அட்ச்சிவுட்டு, பிறருக்கு அதுவும் மதிக்கத்தக்க சான்றோர்களுக்கு, நகைக்கத்தக்க அறிவுரைகளைக் கொடுக்கிறார். நக்கல் செய்கிறார். கைதட்டல் வாங்குகிறார்.

எதனை எப்படிச் செய்தால் முன்னேறலாம் எனச் சரியாகவே புரிந்துகொண்டு, ஆட்டக்காய்களை நகர்த்திச் சதுரங்கக் கபடியாடுகிறார். (இவருக்கென்ன, தமிழலக்கியப் பிதாமகர் என்ற நினைப்பா?)

நல்ல சகதமிழர்கள். நம் நல்லதமிழர்களுக்கேற்ற இப்படியாப்பட்ட  நல்ல துறைவல்லுநத் துரைமார்கள்.

தனக்கும் ஒரு எழவும் சரியாகத் தெரியவில்லை; தெரிந்தவர்களிடம் பவ்வியமாகக் கற்றுக்கொள்ளாமல், அவர்கள் மீது கல்விட்டெறியும் திராவிட தடித்தனம்… ஒரு தரம்வாய்ந்த ஆராய்ச்சியாளராக, பாரத அரசுவேலை செய்யும், போற்றத்தக்க தொழில் செய்பவனுக்கு இருக்கவேண்டிய பக்குவத்துடன் பேசாமல், தெருமூலை திராவிட ரவுடிபோல ‘வொங்க ரிக்வேதம்’ வகைப் பேச்சு!

ஒரு தொழில்முறை அகழ்வாராய்ச்சிக்காரரான இவரே இப்படி “ஒரு(!) கரி அழிவதற்கான காலம் 5560 ஆண்டுகள் + /- 50 ஆண்டுகள்” என டமாலென்று அட்ச்சிவுட்டால், சகதிராவிடர்கள் இதனுடன் திராவிட உதயத்தையே 5560 ஆண்டுகள் + /- 50 ஆண்டுகள் என முன்னே ட்ரியோ ட்ரியோ என மாட்டை ஓட்டுவதைப் ஓட்டிச்சென்று டுமீல் திகில் கதைகளைப் பரவவிடமாட்டார்களா என்ன?

நல்லா வெளங்கிடும்டா டமிளகம்! 

இன்னொரு விஷயம்: தற்போதைய ஃபாஸ்ஸில் எரிபொருட்கள் எரிக்கப்படும் தீவிரத்தினால், இந்த கார்பன்14 வகை கால அனுமானமும் அடிபடப் போகிறது எனத்தான் ஆராய்ச்சியாளர்கள் (நம் அமர்நாத் போன்றவர்கள் அல்லர் இவர்கள்!) கருதுகிறார்கள்…  (அதற்கான ஸ்க்ரீன்ஷாட்கள் கீழே; இவற்றை இந்த சுட்டியிலிருந்து எடுத்திருக்கிறேன். இன்னமும் சிலபல இருக்கின்றன; விரும்புபவர்கள்  அல்லது அவை தேவைப்படுபவர்கள் மின்னஞ்சல் அனுப்பலாம், நன்றி!)

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
RE: அமர்நாத் ராமகிருஷ்ணா, அகழ்வாராய்ச்சி(!), அறிவியல்(!!), அறிவு(!!!) – சோகக் குறிப்புகள்
Permalink  
 


I thought Mr Amarnath Ramakrishna was a professional but I was seriously wrong. His recent speech in which he chose to calumniate me and Mr Nagaswamy will cause shame even to amateurs dabbling in the subject. I am not competent to comment on his archaeological skills but his knowledge of science and history is pathetic. These are the list of some grave mistakes he made in a ten-minute question-answer session.

1. He said that I was questioning the accuracy of carbon-dating. I did no such thing. I have, on the other hand, been crying hoarse that it was the most accurate method available as of now. I have only been saying that carbon-dating of one artefact doesn’t mean other artefacts that lay buried alongside it would also from the same date, though it is very much possible. We require other methods to assess their age.
2. While I was being accused by Mr Amarnath for complaining that there were no skeletons found in Keeladi I have all along been saying that the site is unlikely to have human skeletons as it was not a burial place. My point is only that no human remains have been found so far and that a clear picture will emerge only after such findings are made.

3. His explanation of what Carbon-dating is has been ripped apart by Othisaivu Ramaswamy. A person who doesn’t know the difference between ‘half-life’ and’ life’ is unfit to speak about the subject.
4. His statement about Max Muller is astounding. Max Muller, as Nirad Chaudhury says, was a scholar extra-ordinary. It is obvious that Amarnath hasn’t read a single history book dealing with the date of the Vedas. It is not only Max Muller, but every historian and Vedic scholar who wrote on that period dates the Rig Veda around 1500 BC. The list includes Romila Thapar, Upinder Singh, R C Sharma, Frits Stall, Irfan Habib and scores of others, many of them leftist historians. In any case, Rig Veda and other Vedas were written before the arrival of Buddha in the 5th century BC. If Amarnath has any theory to the contrary he should announce it in front of historians.
5..His statement that the periods of Egyptian and Sumerian civilizations could not have been assessed without carbon-dating is also strange. These civilizations were dated much before carbon-dating was invented. The same was the case with Indus Valley Civilization.
s7. He kept on saying the Reich and others had established that the Rakhigarhi skeleton was ASI (Ancestral South Indian). They did no such thing. One has to be completely innocent of what is going on in the field of science to make such a statement.
8. The final evidence of his astounding ignorance is that he kept insisting that graffiti have phonetic values and the Indus Valley writings were pictorial. No scholar worth his salt will make such a statement. This is Mahadevan quoting an expert: "In the present state of our knowledge, it seems best to assume that the pottery graffiti do not constitute a writing system with phonetic values, but may be regarded as mnemonic or representational devices derived from pictorial art and belonging to the category of forerunners of writing (I.J. Gelb 1963)." Even the encyclopedia of India Archaeology says that it has not been possible to ascribe phonetic, syllabic or alphabetic values to graffiti. As regards the Indus Valley symbols, the general consensus is that they are logophonetic. Most of the logophonetic systems are logosyllabic, meaning that their phonetic signs mostly denote syllables.
A person who can commit such grave errors in a ten-minute interaction has serious limitations. I will continue to expose them.
Periyarists are not known for honesty, barring a few exceptions. But there are several other neutral, educated and unbiased persons in Tamil Nadu. If they agree with me they may like to share my post widely.



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

Sahasranamam Padmanabhan அகழ்வாய்வில் இருக்கும் ஆர்வம் அறிவியலைக் கற்றுக் கொள்வதிலும் இவர்களுக்கு இருந்திருக்க வேண்டும். ராஜவேலுவும், அமர்நாத்தும் அறிவியல் தெரிய வேண்டியதில்லை என்று நினைத்துப் பேசுகிறார்கள் அல்லது இவர்கள் பேசுவதைக் கேட்பவர்களுக்கு அறிவியல் தெரியாது என்று நினைத்துப் பேசுகிறார்கள்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard