Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்க இலக்கியத்தில் சிந்து சமவெளித் தொடர்பு


Guru

Status: Offline
Posts: 7329
Date:
சங்க இலக்கியத்தில் சிந்து சமவெளித் தொடர்பு
Permalink  
 


சங்க இலக்கியத்தில் சிந்து சமவெளித் தொடர்பு

- ஆர்.பாலகிருஷ்ணன், அய்.ஏ.எஸ்

http://www.unmaionline.com/new/images/magazine/2013/jun/16-30/14.jpg

எழுதுபவன் மதுரைக் கவிஞன். அவன் அங்கு ஒட்டகத்தைப் பார்த்தான்.

நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
குவளை பைஞ்சுனை பருகி, அயல
தகரத் தண்ணிழல் பிணையொடு வதியும்,
வடதிசை அதுவே! வான்தோய் இமயம்

 

தென்திசை ஆஅய் குடி இன்றாயின், பிறழ்வது மன்னோ இம்மலர்தலை உலகே. - புறநானூறு, 132ஆவது பாடல் சங்க இலக்கியத்தில் மூன்று இடங்களில் கவரி பற்றி வரும். கவரி என்ற ஒரு விலங்கைப் பற்றி _ நிறையப் பேர் இதைக் கவரிமான் என்று சொல்லி, கவரிமான் என்று படமெல்லாம் எடுத்துட்டாங்க. இது உண்மையிலேயே ஒரு மான் கிடையாது. திருவள்ளுவர்கூட மயிர்நீப்பின் உயிர்வாழா கவரிமா அன்னார் என்று சொல்கிறார். மா என்பது விலங்கு. கவரி மா-_ன்னுதான் சொல்வார். கவரிமான் என்று சொல்லவில்லை. உரை எழுதியவர்கள் எல்லாம் அதை ஒரு மான் ஆக்கிவிட்டார்கள். ஆனால், அதற்குப் பின்னால் பரவலாக ஆராய்ச்சி செய்து இது கண்டுபிடிக்கப்படுகிறது. கவரி மா என்பது சங்க இலக்கியத்தில் கவரி உச்சி என்பது ஒரு இடத்தில் வரும். கவரி உச்சி என்றால், சவரி முடி என்று சொல்கிறோம் அல்லவா? பெண்கள் வைத்துக்கொள்கிற அந்த சவரி முடிதான் கவரி _ ககரம் _ சகரம் மாற்றமாகும். கவரி _ முடிதான் _சவரிமுடி. கவரி _ உச்சி என்பது பெண்கள் அணிந்த சவரி உச்சி. இந்த வகையில் கவரி என்பது யாக் என்று சொல்லப்படுகிற ஒரு மிருகத்திலிருந்து எடுக்கப்படுகிற அதில்தான் கவரி வீசுதல், சவரி வீசுதல், வெண்சாமரம் வீசுதல், இதெல்லாம் சவரியில் இருந்து வந்தது. இந்த கவரி என்பது இமய மலையில் மட்டுமே இருக்கக்கூடிய ஒரு மிருகம். இந்த மிருகம் புல்லைச் சாப்பிடும். ஒரு வகையான வாசனைப் புல்லைத் தேடித்தேடிச் சாப்பிடும்.

அந்த நறும்புல்லினுடைய பெயர் நரந்தை. இது தொடர்பாக நான் காஷ்மீர் தேர்தலின்போது லடாக், லே பகுதிகளுக்கு பலமுறை பயணம் செய்திருக்கும்போது  என்னுடைய ஆராய்ச்சியையும் இதில் சேர்த்துக் கொண்டேன்.

நான் அங்கே இருக்கக்கூடிய _ இது சம்பந்தப்பட்ட ஆட்களிடம் பேசினேன். திபெத் பண்பாட்டு மய்யத்திற்குப்  போய் அங்கு இருக்கக்கூடிய புத்தகங்களை எடுத்துப் படித்துப் பார்த்தேன். சீனாவில் திபெத் போகிறீர்களேயானால், யாக் பிராக்ரண்டி என்ற டீ விற்பார்கள். டீ விற்கிற கடையில் யாக் பாலினுடைய வாசனைத் தேநீர் என்று ஒரு விளம்பரப் பலகை, இணையத்தில் பார்த்தால் கூட தெரியும். ``தேநீர்ல நாங்கள் எந்த வாசனையும் சேர்க்கல. இந்த யாக் வந்து இருக்கக்கூடிய புல்லிலேயே ஒரு குறிப்பிட்ட வாசனைப் புல்லைத் தேடித் தேடிப்போய்ச் சாப்பிடும். அதைச் சாப்பிடுறதனால் அந்த வாசனை அதனுடைய பாலில் இறங்கி அந்தப் பாலில் இந்த டீயைப் போடுவதனால் இது வாசனை டீ என்று சீனாவில் விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போதும், இந்த இலையை, புல்லை வாசனைப் புல்லைத் தேடித் தின்னும் அப்படிங்கிற விஷயம் இருக்கிறதைப் பார்த்தீர்களேயானால், நரந்தை என்ற அந்தப் புல்லைக் கண்டுபிடித்த திபெத், வான்கோ இமயம் என்று இமயத்தில் மூன்று வகையான பகுதிகள் உண்டு.

1.    பிஹ்மீக்ஷீ ஸிவீநீலீணீமீக்ஷீ ஷீயீ பிவீனீணீறீணீஹ்ணீ (வான்கோ இமயம் என்று பெயர்)

2. விவீபீபீறீமீ பிவீனீணீறீணீஹ்ணீ நடு இமாலயா.

3. கீழ் அடிவாரப்பகுதி, அதற்குப் பெயர் சிபா விக்கில்ஸ் என்று பெயர். இந்த மூன்று வகைகளாக இமயமலை பிரிக்கப்படுகிறது.

இதில் திரும்பத் திரும்ப சங்க இலக்கியத்தில் கவரி பதிவு செய்யப்படுகிற இடமெல்லாம் வான்தோ இமயம் என்ற சொல் வரும்.

இமயம் _ வானைத் தொடுகிற இடத்தில் அப்படிப்பட்ட உச்சியில் இந்தக் கவரி ஒரு குறிப்பிட்ட உயரத்தைவிட்டு இறங்கி வந்ததுன்னா. பனியில்லாத பகுதியில் இறங்கி வந்தால் செத்துப் போய்விடும். இது உயிர் வாழ்வதே மலையினுடைய உச்சிப் பகுதியில்தான் உயிர்வாழ முடியும். நடுப்பகுதியில்கூட வாழ இயலாது. உச்சிப் பகுதியில் இருக்கக்கூடிய ஒரு வகைப் புல்லைத் தேடித்தேடி உண்ணும்.

ஒரு கவிதையில் என்ன சொல்கிறார்கள் என்றால், நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
குவளை பைஞ்சுனை பருகி

தன்னுடைய இணையோடு போய் ஆண் கவரியும், பெண் கவரியும் இந்த நரந்தை நறும்புல்லைச் சாப்பிட்டு, தகரம் என்று சொல்லப்படுகிற நிழல் கொடுக்கும் மரத்தினுடைய கிளையில் படுத்து, இன்றைக்குச் சாப்பிட்டது மாதிரி நாளைக்கும் போய் அந்தப் புல்லைச் சாப்பிடலாம் என்ற கனவோடு அந்தக் கவரி தூங்கிக் கொண்டு இருக்கிறது என்ற இலக்கியப் பதிவை சங்க இலக்கியம் பதிவு செய்கிறது.

இது வடமொழி இலக்கியங்களிலும்,  இந்திய இலக்கியங்கள் எதிலுமே யாக் பற்றி பேசப்படுகிறது. யாக்கினுடைய முடியைப் பற்றி காளிதாசனுடைய குமார சம்பவம் இலக்கியம் பேசுகிறது. அதில் பார்வதி கவரியினுடைய முடியின் அழகைப் பார்த்து _ பார்வதியினுடைய கூந்தலைப் பார்த்து இந்த கவரி வெட்கப்படுகிறது. இவ்வளவு நாளா நம் கூந்தல்தான் நல்லா இருக்கு என்று நினைத்துக் கொண்டிருந்தோம். வாலு, இதைவிட அழகா இருக்குன்னு சொல்லி காளிதாசர் எழுதுகிறார்.

இந்த மிருகம் ஒரு முடியைக் கூட  இழக்க விரும்பாது. ஒரு வேடன் அடித்து செத்தா கூட சாகுமே தவிர அந்த முடியை விட்டுட்டு அது போகாது. அப்படிங்கிற ஒரு விஷயத்தையும் அங்கு இருக்கக்கூடியவர்கள் பதிவு செய்கிறார்கள். ஆனால் இதனுடைய உணவுப் பழக்கத்தை இந்தப் புல்லைச் சாப்பிடும் என்ற விஷயத்தை சங்க இலக்கியம் பதிவு செய்வதைப் போல இந்திய இலக்கியங்கள் எதுவும் பதிவு செய்யவில்லை. ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சங்க இலக்கியத்தினுடைய மிகப்பெரிய சாதனையே, அது ஒரு சமயம் சாராத இலக்கியம். ஒரு ஆவணப் பதிவு. இயற்கையோடு இயைந்த இலக்கியம். எந்தவிதமான மிகையான கற்பனைகளையும் செய்வதில்லை. மு.வரதராசனாருடைய ஜிக்ஷீமீணீனீமீஸீ ஷீயீ ழிணீக்ஷீமீ - ஷிணீஸீரீணீனீ ஜிமீஜ். அதே மாதிரி வா.சுப. மாணிக்கத்தினுடைய ஜிக்ஷீமீணீனீமீஸீ ஷீயீ லிஷீஸ்மீ வீஸீ ஷிணீஸீரீணீனீ ஜிமீஜ் என்ற இரண்டு நூல்களையும் நீங்கள் படித்தீர்களேயானால் தெரியும். ஒரு வார்த்தைகூட ணிஜ்க்ஷீணீ இருக்காது.

நெடுஞ்செவி குறும்முயல் ஒவ்வொன்றையும் தெளிவாக எழுதப்படுகிற ஒரு இலக்கியத்தில் இந்த இரண்டு மிருகங்களுமே இந்த மண்ணிற்குச் சொந்தமான மிருகங்கள் அல்ல.

மரபணுவியல் தரும் புது வெளிச்சம்

கேப்போ குருப்பியல் இது எம்_20 பிச்சப்பன் மதுரை பல்கலைக்கழகத்தில் இருக்கு. அவரோடு நான் நெருங்கிய சில ஆய்வுப் பணிகளை செய்து கொண்டிருக்கிறேன். ஒரிசா மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் எந்த பழங்குடி மக்களுடைய மரபணு சோதனையைச் செய்தால் இந்த விஷயங்கள் வெளிச்சத்துக்கு வரும் என்பதை அவ்வப்போது என்னிடம் ஆலோசனை செய்துகொள்வார். அதன்படி வடமாநிலங்களில் பழங்குடிகளிடம் தொடர்ந்து செய்து வருகிறோம்.
அந்த சான்றுத் தடயங்களை எடுப்பதற்கான கிராமங்களை எனது ஊர், பெயர் ஆய்வின் மூலமாக தேர்ந்தெடுக்கிறோம் என்பதைக் கூற விரும்புகிறேன்.
எம்_20 தொல் திராவிட மரபுக்கூறு. எம்_168லிருந்து எம்_89, எம்_90 (கேப்லோ)  ஜிலீமீ சிணீஜீறீஷீ நிக்ஷீஷீஜீ என்று சொல்லப்படுகிற சீ_குரோமோசோம். புதிய கற்காலத்து புலப்பெயர்கள் த புரோப்போ எலமோ டிராவிடியன் எம்_172. இது புதிய கற்காலத்தில் நடைபெறுகிற புலப்பெயர்களோடு தொடர்புடையது.

கடற்கரையோர புலப்பெயர்வு, நிலவெளி வேளாண்மை. வேளாண்மை சார்ந்த புலப்பெயர்வுகளுக்கான மரபணு ஆய்வுச் சான்றுகள் உள்ளன. இவர்களெல்லாம் செங்குந்தர். 28 சதவிகிதம் பிராகுயி மொழியைப் பேசக்கூடிய இந்த மக்களுடைய மரபணுவில் எம்_172 என்று சொல்லப்படுகிற திராவிட மரபுக்கூறுகள் இருப்பது நிறுவப்பட்டிருக்கிறது. அவர்கள் பேசுவது மட்டுமல்ல வீஸீ றிணீளீவீணீஸீ னீ-172 ணீநீநீஷீஸீ யீஷீக்ஷீ லீமீ 11.9 ஜீமீக்ஷீநீமீஸீ ஷீயீ ணீறீறீ சீ-குரோமோசோம் ஷிணீனீஜீறீமீ.
பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட சீ-குரோமோசோம்களின் மாதிரிகளை வைத்துப் பார்க்கும்போது 5000 ஆண்டுகளுக்குப் பின்னாலும், வேளாண்மைப் பெருக்கத்திற்கும் திராவிடர்களின் புலப்பெயர்வு மற்றும் பரவலுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வருகிறது.
இதனடிப்படையில் அடுத்தகட்ட எனது ஆய்வை எடுத்துச் செல்வதற்காக இனிவரும்  காலம் மனிதர்களை மய்யமாகக் கொண்ட வரலாறு. வரலாறு என்பது மண்ணைப் பற்றியதாக இருப்பதைவிட அது மனிதர்களைப் பற்றியதாக இருக்க வேண்டும். ஏனென்றால், மனிதர்களே வரலாற்றின் சொந்தக்காரர்கள். அவர்களே அந்த வரலாற்றைத் தூக்கிச் சுமப்பவர்கள். அவர்களே தங்களது வாய்மொழி மரபின் மூலமாக மீள் நினைவுகளைத் தக்கவைத்துக் கொண்டிருப்பவர்கள்.  புவியமைப்பை விடவும், சுற்றுச்சூழலை விடவும், புவியைவிடவும் முக்கியமானவன் அந்த நினைவுகளைச் சுமந்துகொண்டிருக்கிற மனிதன். தமிழ் மண்ணினுடைய வரலாற்றிற்கும், தமிழர்களுடைய வரலாற்றிற்கும் உள்ள இந்த நுட்பமான வேறுபாட்டை நாம் புரிந்துகொள்ள வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் நமக்கு இருக்கிறது.

வடவேங்கடம் -_ தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்தான் தமிழ்நாட்டினுடைய சங்ககாலத் தமிழகம் என்றால், துளு நாடு பற்றிய குறிப்புகளும் அந்தத் துளு நாட்டின் பின்னணியில் பேசப்படுகிற தமிழ் குறுநிலத் தலைவர்களும் பொன்படு _ கண்ணானத்தினுடைய பின்னணியில் பேசப்படுகிற நன்னனும் யார்? கோசர்கள் யார்? என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. இதனுடைய அடிப்படையில் மனிதர்களை மய்யப்படுத்த வேண்டும் என்பதற்காக இரண்டு குடிமக்களை நான் தமிழ்நாட்டின் மாதிரி ஆய்வுக்காக தேர்ந்தெடுத்தேன். கொங்குப் பகுதியில் இருக்கக் கூடிய தமிழ் வேளாளர்கள், நாட்டுக்கோட்டை நகரத்தார். இந்த இரண்டையும் நான் தேர்ந்தெடுக்கக் காரணம், ஒன்று வேளாண்மைக் குடி. இரண்டு வணிகக் குடி. இந்த இரண்டுமே சிந்துவெளியினுடைய அடையாளங்கள்.

சிந்துவெளியில் ஒரு சிறந்த வேளாண்மையினுடைய பின்னணி இல்லாமல் ஒரு நாகரிகம் தோன்ற முடியாது. அதே போன்ற வணிக மரபு இல்லாமல் அப்படிப்பட்ட ஒரு கடல் வணிகத்தைச் செய்து இருக்க முடியாது. இந்த அடிப்படையில்தான் இரண்டு பகுதிகளும். இந்த இரண்டு பகுதிகளிலும் காங்கேயம் காளை பற்றி ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் நாங்கள் ஒரு வரைபடத்தைத் தயார் செய்தோம். இந்த வரைபடத்தில் கொங்கு பகுதியில் இருக்கக்கூடிய வரைபடம் வேறு எங்குமே இல்லை. இந்த வரைபடத்தைச் சில நாட்களுக்கு முன்னால் தயாரித்தோம். கொங்கு பகுதியை அட்சரேகை _ தீர்க்கரேகை அடிப்படையில் இந்தப் பெயர்களைப் பதிவு செய்திருக்கிறோம். தொப்பூர் இது இப்ப இருக்கக்கூடிய மலைகள். அந்தப் பகுதியில் அட்சரேகை _ தீர்க்க ரேகைகளோடு கடல்மட்டத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதை நாங்கள் பதிவு செய்திருக்கிறோம்.

தப்பூர், நாமக், சோவக், கொங்கர், பன்றி, பழனி, கபில், இப்படி கொங்குப் பகுதியில் இருக்கக்கூடிய மலைகளினுடைய பெயர்கள் எல்லாம் அட்சரேகை _ தீர்க்கரேகை மற்றும் கடல் மட்டத்தின் உயரத்தோடு பதிவு செய்து இந்த வரைபடத்தைத் தயாரித்து இருக்கிறேன்.

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அழகுமலை வெண்ணமலை, ஊதியூர் மலை, தொப்பூர் மலை இப்படி ஒரு வித்யாசமான பெயர்கள் எல்லாம் இந்த மலைகள்தான். இப்படி மலைகளை, மலைகளோடும், காடுகளை, காடுகளோடும், ஊர்களை, ஊர்களோடும் ஒப்பிட்டு இப்போது இருக்கக்கூடிய மக்கள் அதனுடைய புலப்பெயர் கொங்கு நாடே 24 நாடுகளாக பிரித்து இருப்பார்கள். கோவாக்க நாடு, வாரக்க நாடு, தலைய நாடு, மண்ணி நாடு என்று 24 நாடுகள் கொங்கு மண்டல சதகம். அதேமாதிரி கானியூர் என்று இருக்கிறது. தமிழ்வேளாளர் முதன்முதலில் கானியை ஏற்படுத்திய பகுதிக்கு கானியூர் என்று பெயர். 150, 160 கூட்டம் இருக்கிறது. ஒவ்வொரு கூட்டத்திற்கு இந்தக் கானி, இந்தக் கானி இந்த நாட்டுல இருக்கும். அப்படின்னு சொல்லி ஒரு நாட்டிலிருந்து கானி -_ கானியிலிருந்து கூட்டத்தைக் கண்டுபிடிக்கலாம்.

இந்த முழு மரபினுடைய சான்றுகளையும் நம் ஊர்களிலேயும் பார்வையிட்டு இருக்கிறோம். சிந்துவெளிப் பகுதிகளில்,  வேளாண்மைப் பகுதிகளில் இந்தக் கூட்டங்களின் பெயர்களும், மலைகளின் பெயர்களும், கானிகளின் பெயர்களும் காணப்படும். வித்தியாசமான பெயர்கள் தமிழ்நாட்டினுடைய ஊர்ப்பெயர்கள் அனைத்தையும் அந்த இடத்தில் பதிவு செய்திருக்கிறேன். இப்படிப்பட்ட தமிழ்த் தொன்மங்களை மீட்டெடுக்கும்போது நமக்கு இரண்டு வாய்ப்பு. 1. சிந்துவெளிப் பண்பாடு ஒரு திராவிடர் நாகரிகம். அது பழந்தமிழ்த் தொன்மங்களோடு தொடர்புடைய பண்பாடு என்பதை நிறுவுவதில் கிடைக்கிற ஒரு பெருமை, ஒரு பெருமிதம். ஏனென்றால், சங்க இலக்கியம் தோன்றும்போது வித்தியாசமான வகையில் வெளிப்படுகிறது.

சங்க இலக்கியத்தில் இருக்கக் கூடிய கடற்கோள் மரபுகளில் பாண்டியர்கள் மட்டும்தான் கடல்கோள்களோடு தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். சோழர்கள் இருந்த உறையூர் அழிந்ததுதான். உறையூர் அழிந்தது மண் மாரி பொழிந்ததனால்.இந்த மண்மாரி பொழிந்து ஒரு நகரமே காணாமல் போவது தமிழ்நாட்டினுடைய நிலை. எல்லையில் நடக்க முடியாது. அதே போலவே கடல்கோள் மரபுகள் தொடர்புடையது பாண்டியர்களோடு மட்டும்தான். இது சேரர்களுடைய மரபாலும் சோழர்களுடைய மரபாலும் வரவில்லை. தமிழ்ச்சங்க மரபுகள் பாண்டியர்களுடன் மட்டும் தொடர்புடையதாக இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு நீண்ட நெடும் மரபுக்குச் சொந்தக்காரராகத்தான் சங்க இலக்கியம் வருகிறது. அந்தச் சங்க இலக்கியம் வரும்போது மீள் நினைவுகளில் பாண்டிய மன்னன் கடல்கோளினால் நகரம் அழிந்ததனால் தனது கூட்டங்களை அழைத்துக் கொண்டு இன்னொரு நகரத்தை அமைப்பதற்கு வருகிறான். அவன் மணலூர் என்கிற இடத்தில் முகாமிட்டுத் தங்குகிறான். மணலூர் என்கிற ஊர் கொங்கு நாடு என்றாலும் சரி, ஆதிச்சநல்லுர் பக்கத்திலே இருக்கக் கூடிய கொற்கையாக இருந்தாலும்  சரி, எங்கெங்கு பழைய தமிழ் மரபுகள் இருக்கிறதோ கொற்கை போன்ற ஊர்கள் எங்கெல்லாம் வருகிறதோ அங்கெங்கெல்லாம் அதற்குப் பின்னால் ஒரு மணல் ஊர் இருக்கும். அது சிந்துவெளி நாகரிகம் உட்பட.அதுதான் உண்மை.

5000 ஆண்டுகளுக்கு முன்னால் இன்றைக்கு நியூயார்க்கில் இருக்கக்கூடிய மண்காட்டன் என்ற பகுதியைத்தான் உலகத்தில் உள்ள நாகரிகத்தினுடைய கட்டமைப்பு அதுதான் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட 5000 ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்த மண்காட்டன் மொகஞ்சதாரோதான். அப்போது உலகத்தில் வேறு எங்கும் அப்படிப்பட்ட நாகரிகங்கள் இல்லை. அப்படிப்பட்ட நகர அமைப்பு இல்லை. அப்படிப்பட்ட நகர நாகரிகத்திற்குச் சொந்தமான ஒரு இலக்கியம். அந்த மன்னன் தப்பித்துப் பிழைத்து கடல்கோளில் இருந்து வந்ததாகச் சொல்லும்போது அவன் புலவர்கள் புடைசூழ நூல்களை அள்ளிக்கொண்டு வந்தார்கள் என்றுதான் மரபுகள் சொல்கிறது. பாண்டிய மன்னன் கடல்கோளில் தப்பித்து வரும்போது அவனுடன் கூட வந்தவர்கள் புலவர்கள். ஒரு மரபினுடைய தொடக்கமே ஒரு எலக்ட் சொசைட்டி. கற்றுத் தேர்ந்த ஒரு சமூகம். அதனால்தான் சங்க இலக்கியத்தில் பார்த்தீர்களேயானால் சாதாரண கணக்காயனார், வணிகர்கள், அரசர்கள், இளவரசர்கள் அரசியல் இப்படி எல்லோரும் பெண்கள். சங்க இலக்கியத்தில் 32 பெண் கவிஞர்கள். 2000 ஆண்டுகளுக்கு முன்னால் அப்படிப்பட்ட ஒரு கல்விப் பரவலைச் சாதித்த ஒரு சமூகம் திடீரென்-று தோன்றியிருக்க முடியாது. அந்த நாகரிகத்திற்குப் பின்னால் ஒரு மிகச்சிறந்த தொன்மை மரபுகள் இருக்கும். அந்தத் தொன்மை நாகரிகத்தோடு சிந்துவெளி நாகரிகத்தைத் தொடர்புப்படுத்த முடியும் என்பது எனது ஆய்வு. ஆனால், அப்படிப்பட்ட ஆராய்ச்சியானது நாம் நம்பிக்கொண்டிருக்கிற லெமூரியா கண்டம் என்று சொல்லப்படுகிற அந்தக் கருதுகோளில் இருந்து மாறுபடும். ஏனென்று சொன்னால் இந்த இரண்டு கருதுகோள்களும் ஒரே திசையில் பயணிக்க முடியாது. அதுதான் உண்மை. 45,000, 50,000 ஆண்டுகளுக்கு முன்னால் பழங்கற்காலக் கருவிகள் தமிழ்நாட்டில் இருந்திருக்கின்றன. இங்கு மனிதர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஆனால், சங்க இலக்கியத்தை எழுதியவர்கள், சங்க இலக்கியத்தினுடைய உரிமை கோருகிறவர்கள் மீள் நினைவாகக் கொண்டு அந்த நாகரிகத்திற்கான வரலாற்றுத் தடயங்கள், சிந்துவெளி நாகரிகத்தோடு தொடர்புடையதாய் இருக்கின்றன. அதற்குச் சான்றாக இந்த இடப்பெயர் ஆய்வுகள் இருக்கின்றன. இந்த இடப்பெயர்கள் விபத்தாக ஏற்பட்டிருக்க முடியாது. அதற்கு  மாறான ஒரு கருதுகோளை ஏற்படுத்த வேண்டும் என்று சொன்னால் மரபணுக்களின் துணையோடு, தொல்பொருள்  ஆராய்ச்சிகளின் துணையோடு, வேறு ஒரு வடிவத்தை, ஒரு திசையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் தேவைப்படும். இந்த அளவில் சிந்துவெளி நாகரிகத்திறகும் பழந்தமிழ்த் தொன்மங்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதை இந்தத் தொன்மங்கள் நிறுவுகின்றன என்பது ஒரு சிந்தனை.

(முற்றும்)

 

- தொகுப்பு: அ.பிரபாகரன்



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
RE: சங்க இலக்கியத்தில் சிந்து சமவெளித் தொடர்பு
Permalink  
 


சிந்துவெளி ஆய்வால் தமிழக வரலாறு தலைகீழாகும்!'

 Added : மே 20, 2016  கருத்துகள் (5)
addthis-share.jpg
 
 
 
 
சிந்துவெளி ஆய்வால் தமிழக வரலாறு தலைகீழாகும்!'
 


இலக்கியங்கள் வெறும் புனைவுகள் அல்ல; காலத்தின் கண்ணாடி, வரலாற்றின் திறவுகோல். அவற்றை அறிவியல் உள்ளிட்ட துறைகளோடு ஒப்பு நோக்கி ஆய்வு செய்தால்,
ஆச்சரியங்கள் மட்டுமல்ல, அதிசயங்களும் வெளிப்படலாம் என்பதற்கு, நிகழ்கால சாட்சி ஆர்.பாலகிருஷ்ணன், 57, ஐ.ஏ.எஸ்.,சின் ஆய்வுகள்.
மதுரை நத்தத்தில் பிறந்து வளர்ந்த அவர், உயர்கல்வியில் தங்கப் பதக்கங்கள் பெற்றதோடு, தமிழ் இலக்கிய கல்வியை நிறுத்திக் கொள்ளாமல், பத்திரிகையாளராகி, 1984ல், முதல் தேர்விலேயே, ஐ.ஏ.எஸ்., ஆகவும் தேர்ச்சி பெற்று, பல துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்.
என்றாலும், சங்கத் தமிழ் இலக்கிய தரவுகளை கொண்டு, சிந்து சமவெளியை, இடப்பெயர் ஆய்வு முறையில் வேறு திசைக்கு எடுத்துச் சென்று, ஆய்வாளர்களின் புருவங்களை உயர வைத்துள்ளார்.
அவரது சமீபத்திய ஆய்வு நுால், 'சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்' என்பதாகும்.அவர், நமது நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
உங்களின் இடப்பெயர் ஆய்வு, சிந்துவெளி பக்கம் திரும்பியது எப்படி?
ஒடிசா, சத்திஸ்கர் மாநிலங்களில் பணியாற்றிய போது, அங்குள்ள பழங்குடிகளின் காதல், பாடல், செவிலித்தாய் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள், குறிஞ்சித் திணை பாடல்களோடும், தமிழ் வார்த்தைகளோடும் ஒத்துப்போவதை காண முடிந்தது.
பழங்குடிகளில் பல்வேறு குழுக்கள் உள்ளன. ஒரு குழுவில் உள்ள ஆண், அதே குழுவில் உள்ள பெண்ணை காதலிப்பதில்லை. மாறாக, வேறு ஒரு குழுவில் உள்ள பெண்ணைக் காதலிப்பான். அவளுக்கு பிடித்தாற்போல் நடந்து கொள்வான். பரிசு கொடுப்பான். கொடுக்க முடியவில்லை என்றால், அந்த பெண்ணின் வீட்டில் வேலை பார்த்து, அந்த வீட்டாரின் நன்மதிப்பை பெற்று, பின் மணம் புரிவான்.
அதேபோல், இளம்பெண்கள், இளம் ஆண்கள் தனித்தனியாக கூட்டமாக இருப்பர். இளம்பெண்களுக்கு செவிலித் தாய் காவலாகவும், துணையாகவும் இருப்பாள். பெண்ணுக்கு காதலனை பிடித்தால், தோழி உடன்போக்குக்கு உதவுவாள். இவை எல்லாம், தமிழ்
இலக்கியங்களில் உள்ளன. ஆனால் இவை இன்று, தமிழக பழங்குடிகளிடையே கூட இல்லை. இந்த பழக்கங்கள் தான், என்னை இதுகுறித்து ஆய்வு செய்யத் துாண்டின. கடந்த, 25 ஆண்டுகளாக, சங்கத்தமிழ் ஊர்ப் பெயர்களுக்கும், வட மாநில ஊர்ப்பெயர்களுக்கும் உள்ள ஒற்றுமை பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருந்த என்னை, சிந்துவெளி மற்றும் ஹரப்பா பக்கம் திரும்பும் படி கூறியவர், சிந்துவெளி ஆய்வறிஞர் ஐராவதம் மகாதேவன்.
பழந்தமிழ் இலக்கியங்கள் கொண்டாடும், கொற்கை, வஞ்சி, தொண்டி போன்ற ஊர்ப்பெயர்கள், சிந்துவெளி நாகரிகம் பரவியிருந்த, வடமேற்கு இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் உள்ளதை கண்டேன். அங்குள்ள பழங்குடிகளின் பிராகுயி மொழிக்கும், திராவிட மொழிக்கும் தொடர்பு உள்ளது அனைவரும் அறிந்ததே.
பழந்தமிழ் இலக்கியம் சார்ந்த அறிவு மட்டும், ஒரு வரலாற்று ஆய்வுக்கு போதுமானதா? பொதுவாக வரலாறு, மரபுக்கதைகள் ஆகியவற்றை, அறிவியல் உண்மையை போல துாக்கி வைத்து கொண்டாடுவது அல்லது அவற்றில் ஒன்றுமே இல்லை என்பதை போல துாக்கி வீசுவது என்னும் இருவேறுபட்ட நடைமுறை, நம் இலக்கிய வாதிகள் உள்ளிட்டோரிடம் நிலவுகிறது. இந்த இரண்டு துருவங்களுக்குள் நின்று கொண்டு தான், நாம் உண்மையை ஆராய வேண்டி உள்ளது.
ஆய்வு என்பது இலக்கியம், புவியியல், வரலாறு, மானிடவியல், நாணயவியல், மொழியியல், தொழில்நுட்பம் போன்ற பல்துறை அறிவு சம்பந்தப்பட்ட விஷயம்.
அதே போல், ஆய்வாளன் ஏற்கனவே எடுத்த முடிவோ அல்லது அவனுக்கு சரி என்று காட்டப்பட்ட வழியோ அல்லது அவன் உணர்ச்சியோ அவனுக்கு வழிகாட்டக் கூடாது.மேலும், ஏற்கனவே அவன் செய்த ஆராய்ச்சி முடிவுக்கு முரணான தகவல்கள், மறு ஆராய்ச்சியில் கிடைத்தால், அதையும் பரிசீலித்து, முடிவுகள் எடுக்கக் கூடிய தெளிந்த மனநிலை வரவேண்டும். அதற்கு உள்நோக்கம் இல்லாதவனாக ஆய்வாளன் இருக்க வேண்டும்.
ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி, இதுபோன்ற ஆய்வுகளில் ஈடுபடுவது சாத்தியமா?
என் ஆட்சிப்பணி, எனக்கான வாழ்வாதாரம். அதற்கு உண்மையாக இருக்க வேண்டும். அதேநேரம், என் விருப்பம் சார்ந்த விஷயங்களையும் விடக்கூடாது. அதனால், நான், தேர்தல் நடத்துவது, பட்ஜெட் போடுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு இடையில், ஞாயிற்றுக்கிழமை, அரசு விடுமுறை நாட்களில் கூட, நுாலகங்களுக்கு செல்வேன். அதற்கு, பதவி கூடுதல் பலம் அளித்தது. பல்வேறு இடங்களுக்கு சென்று வருதல், மக்களோடு பழகுதல், தொழில்நுட்ப வல்லுனர்களை சந்தித்தல் உள்ளிட்ட வாய்ப்புகளை, பதவியால் உருவாக்கி கொள்ள முடிந்தது. ஆராய்ச்சி என்பது, என் தொழிலாகவோ, வாழ்வாதாரமாகவோ இல்லாமல், விருப்பம் சார்ந்த தேடலாக இருப்பதால், ஒரு சுதந்திரத்தை அளிக்கிறது.
சிந்துவெளி நாகரிகத்திற்கும், தமிழ் இலக்கியங்களுக்கும், 1,500 ஆண்டு காலமும், 2,000 கி.மீ., துாரமும் இடைவெளியாக இருக்கின்றனவா?
தமிழர் வரலாறு என்பது, உண்மையில் ஒரு மாநிலத்தின் வரலாறு அல்ல; அது ஒரு நாகரிகத்தின் வரலாறு. சிந்துவெளி விட்ட இடமும், சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே. சிந்துவெளி நாகரிகம் எப்படி முடிவுக்கு வந்தது என்ற கேள்வியும், தமிழர் தொன்மங்களின் பின்னணி எது என்ற கேள்வியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
மனிதனின் வரலாறு என்பது, உண்மையில் பயணங்களின் வரலாறு. பயணங்களால் பட்டை தீட்டப்பட்ட பட்டறிவு, பகுத்தறிவின் வெளிப்பாடே, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற உன்னதமான புரிதல். உணர்ச்சிவசப்படாத, அரசியல் கலப்பற்ற ஆய்வுகளே, இந்திய வரலாற்றின் புதிர்முடிச்சுகளை அவிழ்க்க முடியும். அதை எடுத்துச் செல்வது நமது கடமை. இதை உணர்ந்து தான் என் முடிவுகளை மேற்கொள்கிறேன். காலமும் துாரமும் இடைவெளியே அல்ல.
சிந்துவெளியில் தற்போதும் காணப்படும் சேவற்சண்டை, தமிழகத்தின் முக்கியமான பண்பாட்டு அடையாளமாக உள்ளது. சிந்துவெளி முத்திரைகளிலும், காளை, சண்டை சேவல்கள் இடம்பெற்றுள்ளன. தமிழகத்திலும், மேற்சேரி, கீழ்ச்சேரி நடுகல், யானையை வெல்லும் சேவலுடன் கூடிய கோழியூர் சிற்பம் போன்றவை பண்பாட்டு தொடர்ச்சியாக இருக்க வாய்ப்பு உண்டு.
சிந்துவெளி பற்றிய கருதுகோள்களில் முக்கியமானவை எவை?
பல கருத்தியல்கள் அர்த்தமற்றவையாக இருந்த போதிலும், சிந்துவெளி நாகரிகம் திராவிட, ஆரிய நாகரிகமாக இருக்க வாய்ப்புள்ளதாகவே பலரும் கூறுகின்றனர். அங்கே, மண்ணுக்குள் கிடைத்த காட்சிகளுக்கான, சாட்சிகளாக ஆரிய இலக்கியங்களில் ஏதும் இல்லை. தமிழில், இலக்கியங்களில் இருக்கும் காட்சிகளுக்கு,
மண்ணுக்குள் சாட்சிகள் தோண்டப்படவில்லை.
மானிடவியல் கருத்துப்படி, மனிதனுக்கு ஒரு குணம் உண்டு. ஓரிடத்திலோ, ஒருவரிடத்திலோ பற்று கொண்டு, பிரியும் போது, அவற்றின் நினைவாக சென்ற இடத்தில், அந்த பெயர்களை சூட்டிக்கொள்வதே அது.
நீலகிரிக்கு வந்த ஆங்கிலேயரால் வெல்லிங்டன், துாத்துக்குடிக்கு வந்த பாதிரியாரால் நாசரேத் போன்ற ஊர்கள் வந்தது போலவே, திருமலை நாயக்கர்பட்டினம், சரபோஜி மங்கலம் உள்ளிட்ட எண்ணற்ற இடப்பெயர்வின் சாட்சிகளாக உள்ளன. எனினும், அடுத்தடுத்து ஏற்படும் ஆட்சி மாற்றங்களில், அரசியல், வருவாய் சார்ந்த தலைநகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு விடும். ஆனால், முக்கியத்துவம் இல்லாத கிராமங்கள் அப்படியே விடப்பட்டிருக்கும். அப்படி விடப்பட்டவையாக, ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட வடமேற்கு நாடுகளில் உள்ள கொற்கை, வஞ்சி, தொண்டி, கண்ணகி, கரிகாலன், அதியமான் உள்ளிட்ட ஊர்கள், தமிழ் இலக்கியம் கொண்டாடும் ஊர்களாக இருக்கலாம்.
இடப்பெயர் மட்டும் இன்றி, உங்கள் ஆய்வு முன்வைக்கும் கருத்துக்களில் முக்கியமானவை எவை?
மேல் - மேற்கு, கீழ் - கிழக்கு என்ற கோட்பாடு.
அதாவது, சிந்துவெளி மக்கள் மேற்கில் மேடாக அமைத்திருந்தனர். அங்கே, தலைவன் இருந்ததற்கு சாட்சியாக நீச்சல் குளம், மதிற்சுவர் உள்ளிட்டவற்றை அமைத்தனர்.
கிழக்கில், கீழ் நிலையில் உள்ள குடிகள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவை இருந்தன. இதேபோல், அனைத்து இடங்களிலும், மேன்மக்கள் மேற்கிலும், மேட்டிலும் இருந்தனர்.
தமிழில், மேல் என்பதும், மேற்கு என்பதும் ஒரே சொல்லில் பல இடங்களில் வருவதை இலக்கியங்களும் ஊர்ப்பெயர்களும் உணர்த்துகின்றன. திராவிட மொழிக்குடும்பத்தில் இதே பெயர்கள், இதே பொருளில் வருகின்றன.
அங்கு காணப்படும், தாய்த் தெய்வ வழிபாட்டுக்கு இணையாக, கிராமங்களில் காவல் தெய்வங்களாக பெண்களே உள்ளனர். மேலும், மலைகளில் உள்ளோரை மேன்மையானவராகவும், கீழிறங்கியோரை கீழோராகவும் வர்ணிக்கும் மரபு பழங்குடிகளிடம் உண்டு. மலை தெய்வமான பழனிமலை முருகனை மேற்கு நோக்கியே அமைத்துள்ளனர். மலேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும், மலையின் மீதே, முருகனை வடிவமைத்தனர்.
தமிழகத்தில், உள்ள மேல் - மேற்கு, கீழ் - கிழக்கு எனும் பெயரில் உள்ள இணையான, 168 ஊர்களை, அட்ச, தீர்க்க ரேகை கொண்டு, புவியியல் முறையில் ஆராய்ந்ததில், 121 ஊர்கள், மேல் - மேற்குக்கும், 30 ஊர்கள் கீழ் - கிழக்கிற்கும், ஏழு ஊர்கள், மேல் என்பது கிழக்காகவும், 10 ஊர்கள் பொருந்தாமலும் இருந்தன.
ஆனால், ஆரிய மொழிக் குடும்பத்தில், மேன்மைக்கு கிழக்கும், கீழ்மைக்கு மேற்குமே குறிக்கப்பட்டுள்ளன.மேலும், சிந்துவெளி மக்கள் பயன்படுத்திய செம்புக்கும், தமிழன் இலக்கியம் சொல்லும் செம்மை குறித்த ஆய்வுகளும், சில முக்கிய ஆய்வுகளும் நடந்து
கொண்டிருக்கின்றன.
அப்படி என்றால், வரலாறு மாறும் அல்லவா?
ஆம். 1924ல், மார்க்ஸ் முல்லர், சிந்துவெளி பற்றிய கட்டுரை வெளியிடுவதற்கு முன், இந்திய வரலாற்றை, வேத காலத்தில் இருந்து துவக்கி, காப்பியங்கள், புத்தர், அசோகர், கலிங்கப் போர், குப்தன், ஹர்ஷன், அலெக்சாண்டர், இரண்டாம் புலிகேசி உள்ளிட்டவற்றை சொல்லி விட்டு, ஒரு கிளைக் கதையாக, தென்னிந்திய வரலாறு, சேர, சோழ, பாண்டியர், கரிகாலன், இடைக்கால பாண்டியர்,
திருமலை நாயக்கர், சரபோஜி மன்னர்கள் என, சிறிதாக சொல்லி முடித்தனர். பின், வரலாறு பின்னோக்கி சென்றது.
சங்க இலக்கியங்களும், சிந்துவெளி ஒப்பீடும் தமிழக வரலாற்றை திருத்தி அமைக்கும். அதற்கு, திராவிட நாகரிகத்தின் வேர்கள் உள்ள இடங்களில் ஆய்வுகள் செய்ய வேண்டும். அதுதான் சரி.
சுனித்குமார் சாட்டர்ஜி, அஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன் உள்ளிட்டோர், சிந்துவெளி நாகரிகம், திராவிட நாகரிகம் என்கின்றனர். என், ஆய்வு முடிவுகளும், அதைத் தான் வலுவாக முன்வைக்கின்றன.
நகரம், வணிகம், பெண் தெய்வ வழிபாடு, இலக்கிய சான்றுகள் உள்ளிட்டவை, தமிழில் தான் கிடைக்கின்றன. சிந்துவெளி தொல்பொருட்களும், அதையே தான் கூறுகின்றன. இதுவரை எழுதப்பட்டுள்ள சமஸ்கிருத வேதங்களில், அவை இல்லை. வரலாறு நிச்சயம் மாறும். அது, சிந்துவெளி மக்கள் பேசிய மொழி பற்றிய புரிதலை ஏற்படுத்தும்.
- நடுவூர் சிவா -



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 

'சிந்துச் சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே'

முரளிதரன் காசிவிஸ்வநாதன்பிபிசி தமிழ்
"சிந்துச் சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே"படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஹரப்பா, மொஹஞ்சதரோ இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டு, அந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டு (செப்டம்பர் 20, 1924) 94 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், சிந்துச் சமவெளிப் பகுதியிலும் தமிழக பகுதிகளிலும் கிடைத்த பானை ஓடுகளில் உள்ள ஒற்றுமைகளை வைத்து சிந்துவெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகமே என்பதை நிறுவ முடியும் என்கிறார் ஒடிஷா மாநில கூடுதல் தலைமைச் செயலரும் ஆய்வாளருமான ஆர். பாலகிருஷ்ணன்.

சென்னையில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் The Pot Route: from Indus to Vaigai என்ற தலைப்பில் வியாழக்கிழமையன்று இது தொடர்பாக உரை நிகழ்த்திய ஆர்.பாலகிருஷ்ணன், தன் உரைக்குப் பிறகு பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் பேசினார். அதிலிருந்து.

கே. சிந்துச் சமவெளி ஆய்வு முடிவுகள் வெளியாகி 94 ஆண்டுகள் கடந்திருக்கின்றன. அந்த ஆய்வு முடிவென்பது தமிழ் வரலாற்று ஆய்வில் எவ்வளவு முக்கியமானது?

ப. 1924 செப்டம்பர் 20 என்பது வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். இந்த நாகரிகம் குறித்த செய்திகள் வரும் முன்பாக நம்முடைய புரிதல் வேறு மாதிரி இருந்தது. இப்படி ஒரு நாகரிகம் இருந்ததே தெரியாது. அது தெரிந்த பிறகுதான் இந்திய வரலாற்றை வேறு மாதிரி பார்க்கும் பழக்கமே ஏற்பட்டது. ஆய்வு முடிவு வெளிவந்தபோதே இது திராவிட நாகரிகமாக இருக்கும் வாய்ப்பு இருக்கிறதென அப்போதே சொல்லப்பட்டது. அதற்குப் பிறகும் பலரும் இது குறித்துப் பேசியிருக்கிறார்கள். சாட்டர்ஜி, கிராஸ் பாதிரியார், அஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன் போன்ற பல ஆய்வாளர்கள் இதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள்.

ஆர். பாலகிருஷ்ணன். Image captionஆர். பாலகிருஷ்ணன்

இப்போது பல்துறைகளைச் சேர்ந்த ஆய்வுகள், அதில் கிடைத்த தரவுகள் மூலமாக இது ஒரு திராவிட நாகரீகமாக இருக்கக்கூடும் என்ற சாத்தியக்கூறு உண்டு என்று சொல்வதையெல்லாம் தாண்டி, இது ஒரு திராவிட நாகரிகமே என்று சொல்லக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளது.

கே. இந்த ஆய்வு முடிவு வெளியாகும் முன்பாக இந்திய வரலாற்றைப் பார்ப்பது எப்படி இருந்தது, இந்த நாகரிகம் குறித்த முடிவுகள் வெளியான பிறகு எப்படி மாறியது?

ப. தரைக்குள் இப்படி ஒன்று இருந்தது தெரியாத காலகட்டதில் நம் நாகரிகத்தைப் பற்றிச் சொல்ல இலக்கியங்கள் மட்டுமே இருந்தன. அப்போது வெளிநாட்டு ஆய்வாளர்களால் படிக்கக்கூடிய வகையில் இருந்தது வடமொழி இலக்கியங்கள்தான். அதனால், இந்தியப் பண்பாட்டின் துவக்கத்தை வேதத்திலிருந்து துவங்கும் பழக்கம் இருந்தது. வேதகால நாகரிகத்திற்கு முன்பாக வசித்தவர்கள் பண்பாடற்றறவர்கள் போலவும் அதற்குப் பிறகுதான் பண்பாடு வந்ததுபோலவுமே வரலாறு அணுகப்பட்டது. ஆனால், 4,500 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு மிகப் பெரிய நகரம் இருந்தது, அது தரையில் புதைந்து கிடந்தது என்பது தெரிந்த பிறகு எல்லாமே மாறிவிட்டது.


  Presentational grey line

கே. பானை ஓடுகளை வைத்து சிந்துவெளி நாகரிகம் குறித்து சில முடிவுகளுக்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். என்ன முடிவு அது?

ப. யானை சென்ற பாதையைவைத்து யானைத் தடத்தைக் கண்டுபிடிப்பதுபோல, இது பானைத் தடம். Silk route, Spice route என்றெல்லாம் இருப்பதைப் போல இது Pot Route என்பதை நாங்கள் முன்வைக்கிறோம். ஹரப்பாவில் கிடைத்த பானை வகைகளில் பெரும்பாலானவை கறுப்பு - சிவப்பு வண்ணம் கொண்டவை. ஆனால், கங்கைச் சமவெளிப் பகுதிகளில் கிடைத்தவை வண்ணம் தீட்டப்பட்ட பழுப்பு நிற மண் பாண்டங்கள். ஆனால், ஹரப்பாவுக்கு தென்பகுதியில் குஜராத், மகாராஷ்டிரா பகுதிகளில் கிடைப்பது எல்லாமே கறுப்பு - சிவப்பு வண்ணம் கொண்டவைதான். ஆனால், வரலாற்றாளர்கள், இதனை முதுமக்கள் தாழியோடு தொடர்புபடுத்தி பெருங்கற்கால மட்பாண்டங்கள் என்று ஒதுக்கிவைத்துவிடுகிறார்கள். அதற்கு மேல் ஏதும் நடப்பதில்லை. இப்போது நாங்கள் முதல் முறையாக ஒரு மேப்பை தயார் செய்து, painted greyware என்ற பழுப்பு நிற பானை ஓடுகள் கிடைத்த கங்கைச் சமவெளியைச் சுற்றி, கறுப்பு - சிவப்பு வண்ண பானைகளைப் பயன்படுத்தும் கலாசாரம்தான் சூழ்ந்திருந்தது; ஆகவே இந்த கறுப்பு - சிவப்பு வண்ணப் பானைகளைப் பயன்படுத்தும் கலாச்சாரத்தின் தொடர்ச்சியை ஆராய வேண்டுமென்ற கருத்தை முன்வைத்த்திருக்கிறோம்.

கே. பானை ஓடுகளை வைத்து சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என எப்படி நிறுவுவீர்கள்?

ப. முன்பு சொன்னதைப் போல இதுவும் ஒரு பல்துறை ஆய்வுதான். சிந்துவெளி நாகரிகத்தில் கிடைத்ததைப் போன்ற பானை ஓடுகள் கீழடியிலும் கிடைத்திருக்கின்றன. பானைகள் புலம் பெயர்ந்து வந்திருக்க முடியுமா? ஒவ்வொரு பானைக்கு பின்னாலும் ஒரு பானை செய்பவர் இருக்கிறார். அவருடைய சமூகப் பின்புலத்தை ஆராய வேண்டும். சிந்துச் சமவெளி நாகரீகத்தில் பானை செய்பவர் என்னவாக அழைக்கப்பட்டிருப்பார் என்பது தெரியவில்லை. ஆனால், அவருடைய இடம் முக்கியமானதாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இம்மாதிரி ஒரு நகரத்தில் செங்கல் சூளை வைத்திருந்தவர்கள், பானை செய்பவர்கள் ஆகியோருக்குத்தான் முக்கியத்துவம் இருந்திருக்கும். அதுபோன்ற ஒரு முக்கியத்துவத்தை பானை செய்பவர்களுக்குக் கொடுத்த இலக்கியம் சங்க இலக்கியம்தான்.

"சிந்துச் சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே"படத்தின் காப்புரிமைGETTY IMAGES

சங்க இலக்கியத்தில் பானை செய்யும் குயவனை முதுவாய்க்குயவ என்று அழைக்கிறார்கள். அதாவது நீண்டகால அறிவைக் கொண்ட குயவர் என்று பொருள். இந்த நீண்டகால அறிவு என்பது எதைக் குறிக்கிறது? அதுதான் அந்த நாகரிகத்தின் ஆழம். அதேபோல முதுமக்கள் தாழி செய்யும் குயவரை கலம்செய் கோவே என்கிறார்கள். அதாவது பானை செய்பவரை தலைவன் என்று அழைக்கும் சமூகப் பண்பாடு அப்போது இருந்திருக்கிறது. இந்த சமூகப் பண்பை நாம் மறுக்க முடியாது. இந்த சமூகப் பண்பு வட மாநிலங்களில் உள்ள சமூகப் பண்புக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.

குயவர்களுக்கு இருக்கக்கூடிய குலப் பெயர்கள், வம்சாவழிப் பெயர்கள், குடிப் பெயர்கள், சாமி பெயர்கள், கோவில் பெயர்கள் எல்லாமே அந்தப் பாதை நெடுக இருக்கிறது. பானை என்பது அந்தப் பானை மட்டுமல்ல. அந்த பானை, அதைச் செய்பவர் சார்ந்த சமூகம்.

கே. சிந்துச் சமவெளியில் கிடைத்த பானை ஓடுகளில் இருந்த எழுத்துகளுக்கும் தமிழ்நாட்டில் கிடைத்த பானை ஓடுகளில் இருந்த எழுத்துகளுக்கும் ஏதாவது ஒற்றுமை இருந்திருக்கிறதா?

ப. நிறைய இடங்களில் இருந்திருக்கிறது. ஆங்கிலத்தில் grafitti என்பார்கள். அதாவது பானைகளில் இருக்கக்கூடிய கீறல்கள். இந்தக் கீறல்கள் எழுத்துகளாக மாறியிருக்கின்றன. இந்த எழுத்துக் கீறல் உள்ள பானை என்று சொன்னால், இந்தியாவில் கிடைத்த பானைகளில் 80 சதவீதம் தமிழ்நாட்டில்தான் கிடைத்திருக்கிறது. எழுத்துகள் எழுதப்பட ஆரம்பித்ததே பானைகளிலாகத்தான் இருக்க முடியும். கஷ்டப்பட்டு கற்களில் எழுதியிருக்கலாம். ஆக, எழுத்து வரிவடிவம் ஆகியவை ஆரம்பித்ததே பானைகளில்தான். இம்மாதிரி எழுதுவது சிந்துச் சமவெளியிலும் தமிழகத்திலும் அதிகமாக இருக்கிறது. சங்க இலக்கியத்தில் இது குறிப்பிடப்படுகிறது. பீடும் பெயரும் எழுதி என்று குறிப்பிடுகிறார்கள். இப்படியாக பானைகளில் எழுதியது நமக்கு அதிகமாகக் கிடைக்கிறது. அதற்குப் பிறகு தமிழ் பிராமி எழுத்துகளில் எழுதியது கிடைக்கிறது. இது ஒரு தொடர்ச்சியாக நடந்திருக்கிறது. இதைத்தான் நான் சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே என்று சொல்கிறேன். சிந்துவெளி எப்போது இல்லாமல் போகிறதோ அப்போது சங்க இலக்கியம் பேச ஆரம்பிக்கிறது. சங்க இலக்கியம் பேசும் நிகழ்வுகள் எல்லாம் அப்போதைய நிகழ்கால நிகழ்ச்சிகள் அல்ல.

Presentational grey line Presentational grey line

அவர்கள் கேள்விப்பட்ட நிகழ்ச்சிகளை, ஆயிரம் ஆண்டுகளாக தம் சமூகத்திற்குள் கேட்டுவந்த கதைகளைத்தான் அவர்கள் கவிதையாக மாற்றுகிறார்கள். அதில் பேசப்படும் விஷயம் எல்லாம் பழைய விஷயம். அது பழைய நகரங்களோடு தொடர்புடையதாக இருக்கு. ஹரப்பாவுக்கென ஒரு இலக்கியம் இருந்தால் அது இப்படித்தான் இருக்கும்.

கே. ஹரப்பா, மொஹஞ்ச - தாரோ பகுதிகள் இந்தியாவின் வட மேற்கில் இருக்கின்றன. சங்க இலக்கியம் தென்னிந்தியாவில் தோன்றியது. இடைப்பட்ட நிலப்பரப்பில் என்ன நடந்தது?

ப. கலாசாரம் நிலங்களைக் கடந்து பயணிக்கும். ஆஃப்கானிஸ்தானில் சார்த்துகை என்று ஒரு இடம் இருக்கிறது. அந்த இடம் மொஹஞ்ச-தரோவிலிருந்து வட மேற்கில் 1900 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. செல்வதற்கான பாதையே மிகக் கடினமான பாதை. அந்த சார்த்துகையில் லாபஸ் லாஜுலி என்ற விலை உயர்ந்த கற்கள் கிடைக்கும். அவற்றை வைத்து அணிகலன்களைச் செய்வதற்காக சிலர் அங்கே குடியேறினார்கள். அங்கேயும் இதேபோல பானைகளைச் செய்தார்கள். அதை இப்போது ஹரப்பிய நாகரிகம் என ஒப்புக்கொள்கிறோம். மொஹஞ்ச-தரோவுக்கும் கீழடிக்கும் இடையில் கிட்டத்தட்ட அவ்வளவு தூரம்தான் இருக்கும். இந்த இரு நிலப்பரப்பிற்கும் இடையில் தொடர்ச்சி இருக்கிறது.

மகாராஷ்டிரா, குஜராத் குயவர்களுடைய வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் தென்னிந்திய குயவர்களோடு தொடர்புடையதாக இருக்கிறது. ஆக பழக்க-வழக்க தொடர்பு இருக்கிறது, இலக்கியத் தொடர்பு இருக்கிறது. இவற்றைத் தனித்தனியாகப் பார்க்கக்கூடாது.

கே. சிந்துவெளி நாகரிகத்தில் பானை செய்பவர்கள் உயர்ந்த இடத்தில் இருந்ததாகச் சொன்னீர்கள். அவர்கள் சமூகத்தில் அடைந்த வீழ்ச்சியும் வேதகால நாகரிகத்தின் எழுச்சியும் சந்திக்கும் புள்ளி ஒன்றாக இருந்ததா?

ப. அப்படித்தான் தெரிகிறது. கன்வர்ஸ் என்ற ஆய்வறிஞர் இந்த கறுப்பு - சிவப்பு பானை செய்பவர்களும் பழுப்பு நிற பானை செய்பவர்களும் கங்கைச் சமவெளியில் சில நூறு கி.மீ. தூரத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு வாழ்ந்திருந்தாலும் அவர்களுக்கு இடையில் எந்தப் பரிமாற்றமும் இருக்கவில்லை. ஐநூறு, அறநூறு ஆண்டுகளுக்குப் பிறகே இரு பண்பாடுகளும் சந்தித்துக்கொண்டன. ஒரு பக்கம் ஹரப்பா நாகரிகத்தில் பானை, செங்கல் செய்பவர்கள் உயர்ந்த இடத்தில் இருந்திருப்பார்கள் என்று யூகிப்பதற்கு அங்கு கிடைத்த தொல்பொருள் தடயங்கள் ஆதாரமாக இருக்கின்றன. அவர்கள் உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றப்பட்டார்கள். அவர்களே விழாக்களை அறிவித்தார்கள். அவர்களே பூசாரிகளாக இருந்தார்கள். அவர்களே தலைவன் என அறிவிக்கப்பட்டார்கள். இதற்கெல்லாம் சங்க இலக்கியத்திலும் நம்முடைய மட்பாண்டக் கீறல்களிலும் தடயங்கள் இருக்கின்றன. ஏதோ உயர்ந்த இடத்திலிருந்து கீழே வந்துவிட்டோம் என்ற உணர்வு இந்தியாவில் உள்ள எல்லாக் குயவர்கள் மத்தியிலும் இருக்கிறது.

"சிந்துச் சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே"படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் தோற்றம், எழுச்சி, சரிவு, வீழ்ச்சி ஆகியவையும் பானை செய்வோரின் தோற்றம், எழுச்சி, சரிவு, வீழ்ச்சி ஆகியவையும் இணையாக நடந்திருக்கின்றன. எப்போதுமே ஒரு வருத்தம், இழந்தது குறித்த கோபம், மனத்தாங்களல் அவர்களுடைய வாய்மொழி மரபில் இருந்துகொண்டேயிருக்கிறது. இது ஒரு கூட்டு மனப்பான்மையாக இருக்கிறது. இதை அவர்கள் காலம்காலமாக கடத்திவந்திருக்கிறார்கள். இதை ஆராய வேண்டியிருக்கிறது. தொல்லியல் என்பது கிடைக்கும் பொருட்கள் சம்பந்தப்பட்டது. ஆனால் இம்மாதிரியான வரலாற்று ஆய்வு எல்லாத் துறைகளையும் சேர்ந்ததாக இருக்க வேண்டும்.

கே. சிந்துவெளிக்கு அருகில் இருப்பது கங்கைச் சமவெளி. நீங்கள் குறிப்பிடும் வைகைச் சமவெளி வெகுதூரத்தில் இருக்கிறது. சிந்துவெளி நாகரிகம் ஏன் கங்கைச் சமவெளிக்குப் பரவவில்லை?

ப. சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சியைச் சந்திக்க ஆரம்பித்தபோது எல்லோருமே அங்கிருந்து தெற்கு நோக்கி வந்துவிட்டார்கள் என்று சொல்ல முடியாது. சிலர் அங்கேயே தங்கிவிட்டார்கள். சிலர் கிழக்கு நோக்கி நகர்ந்து கங்கைச் சமவெளியை அடைந்தார்கள். அங்கிருந்த நாகரிகத்தின் மீது அவர்கள் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். அதேபோல கங்கைச் சமவெளி நாகரிகத்தின் தாக்கம் அவர்களிடமும் இருந்திருக்கும். புதிய மொழியையும் கலாச்சாரத்தையும் கற்றுக்கொண்டிருந்திருப்பார்கள். பண்பாட்டுத் தாக்கம் இருந்திருக்கும்.

ஆனால், தமிழ்நாடு மிகவும் வெளியில் இருப்பதால் அவர்கள் தங்கள் பண்பாட்டுக் கூறுகளைத் தக்கவைத்திருப்பார்கள். மற்ற இடங்களில் அது குறைவாக இருந்திருக்கும். அதனால் அடையாளம் காண்பது சிரமமாக இருக்கும். இந்தியாவில் யாரைச் சுரண்டிப் பார்த்தாலும் ஹரப்பாவின் கூறு ஏதாவது இருக்கும். யாரிடம் அதிகம் இருக்கும் என்பது விவாதத்திற்குரியது.

"சிந்துச் சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே"படத்தின் காப்புரிமைNASA/USGS Image captionசிந்து நாகரிகத்தின் நகர்ப்புற குடியேற்றங்கள் தற்போதைய வடமேற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பரவியுள்ளன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நாம் பெரிதாக அகழ்வாய்வுகளைச் செய்யவில்லை. திராவிடக் கருதுகோள்களின் அடிப்படையில் நாம் ஆய்வுகளைச் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. அந்த ஆய்வை குஜராத், மகாராஷ்டிரா, சிந்து, கங்கைச் சமவெளி, வைகைச் சமவெளி என எல்லா இடங்களிலும் செய்ய வேண்டும்.

கே. வைகைக் கரையில் ஏற்கனவே கீழடியில் அகழ்வு செய்யப்பட்டிருக்கிறது. வேறு எங்கு செய்ய வேண்டும்?

ப. வைகைக் கரையை ஒட்டிய 200 இடங்கள் அகழ்வாய்வு தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்தவை. நான் ஏற்கனவே கீழ் - மேல் என்பது குறித்து சொல்லியிருக்கிறேன் (அதாவது கீழ் என்பது எப்போதும் கிழக்குப் பகுதியிலும் மேல் என்பது மேற்குப் பகுதியிலும் இருப்பதோடு, உயர்வானதாகவும் கருதப்படும். சிந்துவெளியிலும் இப்படித்தான் இருந்தது என்பது பாலகிருஷ்ணனின் வாதம்). இந்த இடங்களில் கீழ்-மேல் விகுதிகளோடு உள்ள இடங்கள், வைகைக் கரையோரமாக இருக்கும் அகழாய்வு சாத்தியமுள்ள இடங்களை நிச்சயம் ஆய்வுசெய்ய வேண்டும்.

இதில் இடங்களின் பெயர்கள் மிக முக்கியமானவை. அவை சாகாவரம் பெற்றவை. அவை நாகரிகத்தின் துவக்கத்திற்கும் மலர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் சாட்சியமாக இருக்கின்றன. அவை சாவதில்லை.

கே. உங்களுடைய முந்தைய ஆய்வு சிந்துவெளியின் இடப்பெயர்கள் பற்றியது. அதில் நீங்கள் சொல்லியிருப்பது என்ன?

ப. மனிதன் தொடர்ந்து இடம் மாறிக்கொண்டேயிருப்பவன். இப்படி புலம்பெயர்வது என்பது மனிதனின் அடிப்படைகளில் ஒன்று. இப்படிப் புலம்பெயரும்போது அவன் எதை எடுத்துச்செல்ல முடியும்? அவன் தன் பூமியைத் தோண்டி எடுத்துச்செல்ல முடியாது. நினைவுகளைத்தான் எடுத்துச்செல்ல முடியும். தான் செல்லும் புதிய இடத்தில் அவன் தன் பழைய இடத்தை மீள் உருவாக்கம் செய்வான். அப்படிச் செய்யும்போது தன் பழைய ஊர்ப் பெயரை எடுத்துச் செல்வான். கடவுள் நம்பிக்கையை எடுத்துச்செல்வான். இப்படிப் புலம் பெயர்பவர்களோடு, இடப்பெயர்களும் புலம்பெயரும். அப்படி தமிழகத்திலும் சிந்துச்சமவெளியிலும் இருந்த இடப் பெயர்களை நான் என் ஆய்வில் ஒப்பிட்டிருக்கிறேன்.

கே. தற்போது வெளியாகியிருக்கும் ராகிகடி மரபணு ஆய்வு முடிவுகள், சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்று சுட்டிக்காட்டுவதைப்போல இருப்பதாகச் சொல்கிறது...

ப. ராகிகடி ஆய்வு முடிவுகள் இப்போதுதான் வெளியாகத் துவங்கியிருக்கின்றன. முறைப்படி இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. ஆனால், இந்த முடிவு தனிப்பட்ட முறையில் எனக்கு வியப்பு எதையும் தரவில்லை. கிட்டத்தட்ட எதிர்பார்த்த விஷயம்தான். முழுமையான முடிவை நானும் அவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.

https://www.bbc.com/tamil/india-45615010



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard