Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கொட்டிபிரோலு அகழ்வாராய்ச்சி


Guru

Status: Offline
Posts: 7467
Date:
கொட்டிபிரோலு அகழ்வாராய்ச்சி
Permalink  
 


பிபிசி முரளியைக் குறித்து கடுமையாக எழுதத் தயக்கமாக இருக்கிறது. எழுதினால் வருத்தப்படுகிறார். இப்போது ஆந்திரத்தின் கொட்டிபிரோலு அகழ்வாராய்ச்சியைக் குறிப்பிட்டு அவர் செய்திருக்கும் பதிவு பெரியாரிய, திராவிட தனித்தமிழ் தற்குறிகளுக்குக் கூடப் பெருமை தராது.

"...கீழடி ஆய்வுகள் தொடர்பாக கேட்டது போன்ற கேள்விகளை இங்கே கேட்டுக் கொண்டிருக்கக்கூடாது. அது சரியல்ல." என்று அவர் எழுதியிருக்கிறார். அதற்கு முன்னால் மத்தியத் தொல்லியல் துறையின் உற்சாகத்தைக் குறித்து கிண்டல் வேறு.

ஏன் கேள்வி கேட்கக் கூடாது? நிச்சயம் கேட்க வேண்டும். ஆனால் கேள்வி கேட்பதற்குக் குறைந்த பட்ச அறிவு இருக்க வேண்டும். புரிதல் இருக்க வேண்டும்.

1. முதலில் கொட்டிபிரோலு ஆந்திரத்தில் இருந்தாலும் அது சென்னையிலிருந்து நூறு கிலோமீட்டர் தொலைவில்தான் இருக்கிறது. தமிழ் நாகரிகத்திற்கும் அதற்கும் தொடர்பு இருக்கிறது என்று மத்தியத் தொல்லியல் தொடர்புத்துறையே சொல்லியிருக்கிறது: Further the entire seacoast on the east is dotted with various forms of antiquarian remains extending from Tamil Nadu and culturally linked with each other. எனவே இங்கு கிடைப்பதற்கும் தமிழர்களுக்கும் தொடர்பு இருக்க முடியாது என்று கருதுவது மூடத்தனம். இது தமிழர் நாகரிகமாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

2. செங்கலை வைத்துக் காலத்தை நிர்ணயிக்கிறார்கள் என்று கேலி செய்திருக்கிறார். இதுவும் அரைகுறைகள் மட்டுமே செய்யக் கூடியது. சதவாகன, இக்ஷ்வாகு காலத்தியச் செங்கல்கள் மிகப் பெரியவை. தனித்தன்மை வாய்ந்தவை. அதே மாதிரிச் செங்கல்கள் கொண்ட கட்டுமானங்கள் கிடைத்திருப்பதால் அவர்கள் காலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னால் இருக்கலாம் என்று சொல்கிறார்கள். சதவாகனர்கள், இக்ஷ்வாகுக்களின் காலம் கிமு இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கிபி மூன்றாம் நூற்றாண்டு வரை. மேலும் அவர்கள் செங்கற்களை மட்டும் வைத்துச் சொல்லவில்லை. The available brick sizes (43 - 48 cms) are comparable with the Satavahana / Ikshvaku period structures in Krishna valley i.e. Amaravati and Nagarjunakonda. On the basis of the brick size and associated findings they can be placed anywhere between 2nd – 1st century BCE or little later (nearly 2000 years old). அது என்ன 'தொடர்புடைய கண்டுபிடிப்புகள்' என்று கேட்பது நியாயம். அதைத்தான் அறிவுள்ளவர்கள் செய்வார்கள்.

3. இங்கு கிடைத்திருப்பது செங்கற்களால் ஆன சுவர்கள். 74 மீட்டர்கள் நீளம். 3.5 மீட்டர்கள் அகலம் கிட்டத்தட்ட இரண்டு மீட்டர்கள் உயரம். இது முக்கியமான கண்டுபிடிப்பு.

4. இதையும் அவர்கள் சொல்கிறார்கள். The findings of assorted stone tools of Palaeolithic and Neolithic
periods from secondary contexts suggest that prehistoric people also occupied this area. Further studies are being carried out through geological, chemical analysis of the site/samples.

5. அவர்கள் இவ்விடத்தை ஒரு வணிகர்கள் மையம் என்றுதான் சொல்கிறார்கள். பெரிய மதிற்சுவர்கள், அகழியின் தடங்கள், சிறிய செங்கற் தண்ணீர் சேமிக்கும் அமைப்பு போன்றவை கிடைத்தும் நகர நாகரிகம் என்று குதிக்கவில்லை. The proximity of the site to the seacoast suggests that the site could have served as a strategic settlement involved in maritime trade. Further research will reveal interesting facts about the site as trade centre.

6. மத்திய தொல்லியல் துறை உற்சாகத்தோடு இருக்கலாம். ஆனால் இந்திய வரலாறையே இக்கண்டுபிடிப்பு புரட்டிப் போடும் என்று சொல்லவில்லை. இந்தியாவில் எழுத்துருவை கண்டுபிடித்தது தமிழர் என்பதற்குக் கரித்துண்டு ஆதாரம் என்று பிதற்றவில்லை. அமர்நாத் ராமகிருஷ்ணா, சிவானந்தம் போன்று அரை உண்மைகளை அடுக்கவில்லை. தனிப்பட்ட முறையில் எந்த அகழ்வாராய்ச்சியாளரும் முன்னுக்கு வந்து இதன் தந்தை நான் அல்லது தாய் நான் என்று பேசவில்லை. எனக்குத் தெரிந்து இதுவரை ஆந்திராவின் எந்த அரசியல்வாதியும் கொட்டிபிரோலு ஆந்திரர்களின் தாய்மடி என்று சொல்லவில்லை.

7. கீழடிக்கு ஆதாரம் கேட்கிறீர்களே என்ற கேள்வியையே அரைகுறைகளாலும் பெரியாரிய நாசி இனவெறி முட்டாள்களாலும் மட்டுமே எழுப்ப முடியும். இதற்கு ஆதாரம் வேண்டும். கீழடிக்கும் ஆதாரம் வேண்டும். ஆனால் கீழடியைப் பற்றிச் சொல்லப்படுபவை அசாதாரணமானவை.
அவற்றிற்கு அசாதாரணமான ஆதாரம் வேண்டும்.
Extraordinary claims need extraordinary proof.



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

ஆந்திராவில் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள Gottiproluவில் நடத்தப்பட்ட அகழாய்வில் வரலாற்றுத் துவக்க காலத்தைச்சேர்ந்த அதாவது 2000 ஆண்டுகளுக்கு முந்தைய செங்கல் கட்டடங்கள் கிடைத்திருக்கின்றன என ஏஎஸ்ஐ தனது ஃபேஸ்புக் பக்கத்தில்தெரிவித்திருக்கிறது.

செங்கல்களின் அளவை வைத்தே சாதவானகர்/இஷ்வாகு காலத்தைச் சேர்ந்தவை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

கூடவே ஒரு விஷ்ணு சிலை கிடைத்ததாகவும் ஏஎஸ்ஐ கூறியிருக்கிறது. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படும் இந்தச் சிலையில் பெயிண்டால் நாமம் போடப்பட்டிருக்கிறது.

இங்கேயும் டெரகோட்டா குழாய்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்திருக்கிறது.

கீழடி அகழாய்வில் எழுத்துகள் கிடைத்தது என்ற அறிவிப்பிற்குப் பிறகு இந்தியத் தொல்லியல் துறையில்தான் எவ்வளவு உற்சாகம்!!

கிருஷ்ணரும் அர்ஜுனரும் தேரில் உள்ள வரைபடம் நேபாளத்தில் உள்ள கிடைக்கிறது.. அவர்கள் ஓட்டியதைப் போன்ற சாரட் சனௌலியில் கிடைக்கிறது..

ஆனால், கீழடி ஆய்வுகள் தொடர்பாக கேட்டது போன்ற கேள்விகளை இங்கே கேட்டுக் கொண்டிருக்கக்கூடாது. அது சரியல்ல.



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

8NOV2019

EXCAVATION IN GOTTIPROLU(ANDHRA PRADESH) BY ASI2 MIN READ

TagsHISTORY, PIB
 
 

Source: Press Information Bureau

Recently the 1st phase of excavation by a team of Archaeological Survey of India at Gottiprolu near Naidupeta in Nellore (now renamed as Sri Potti Sri Ramulu) district, Andhra Pradesh has discovered the remains of a huge settlement surrounded by a massive brick enclosure.

About the Site  and findings 

  • The site of Gottiprolu lies on the right bank of a distributary of river Swarnamukhi about seventeen kilometers east of Naidupet and eighty kilometers from Tirupati and Nellore.
  • The excavation revealed the presence of brick-built structures in different sizes and forms.

 

 

 

 

 

 

  • On the basis of the brick size and associated findings they can be placed anywhere between 2nd – 1st century BCE or little later (nearly 2000 years old).
  • The most outstanding discovery is of a massive sized brick enclosure wall at the southern part of the mound. This structure is of baked bricks
  • Another interesting find is the small rectangular brick tank exposed near the inner lining of the curved brick structure.

 

 

 

 

 

About Stone Vishnu Idol

Apart from the excavated remains, one of the most major find was the discovery of a buried Vishnu sculpture from the western part of the village.

 

 

 

 

 

 

 

 

 

 

Subsequent excavations conducted around the image revealed it to be a life-size image of Vishnu measuring about 2 meters in height. It displays a four-armed Vishnu standing over a pedestal carrying chakra and conch in his upper right and left hands respectively. The lower right is in the bestowing boon and the left hand in katihastha (resting on the hip) posture.  The iconographical feature like the elaborate headgear, thick holy thread, and decorative drapery dates it to the Pallava period (circa 8th cent. CE).

Terracotta Female Figurine

Other interesting antiquity retrieved is the molded female terracotta figurine with two hands lifted upwards.

 Pottery & Conical Jars

Interesting pottery finds are the base of conical jars placed at the eastern side of the structure. Such conical jars are widely distributed in Tamil Nadu and considered to be imitated variety of Roman Amphorae jars.

Drainage system

A series of broken terracotta pipes fitted into one another revealed about the civic amenities maintained by the occupants of this site. The drainage system pattern is understood by the exposed remains of the drainage at the site.

Other major retrieved antiquities unearthed are copper and lead coins, iron spearhead, stone celts, terracotta beads, ear stud in semi-precious stone and hopscotches. The ceramic assemblage of the site consisted of fine quality black and redware collected from the lower levels, conical jars, rouletted sherds, russet coated ware, etc. 

Significance of the site

  • The findings of assorted stone tools of Palaeolithic and Neolithic periods from secondary contexts suggest that prehistoric people also occupied this area
  • These settlements could have been an important trade centre as indicated by the presence of imitated amphorae wares that were mostly used to transport liquid commodities. 
  • The proximity of the site to the seacoast suggests that the site could have served as a strategic settlement involved in maritime trade. 
  • The two fortified townships within the gap of 15kms during early historic times indicates the significant strategic location was preferred by the early historic people for trade in the region keeping in view of proximity of the sea, River and Lake (Pulicat


__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

https://www.thenewsminute.com/article/excavations-suggest-andhras-gottiprolu-was-trade-centre-early-historic-period-111553



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard