Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழர் வாழ்வியல் நூல் வள்ளுவம்


Guru

Status: Offline
Posts: 7474
Date:
தமிழர் வாழ்வியல் நூல் வள்ளுவம்
Permalink  
 


திருக்குறள் ஒரு அறிமுகம் - Introduction to Thirukural

தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங் களாகிய அறம் அல்லது தர்மம்பொருள்இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல்.

பழந்தமிழ் நூல்களில் நான்கு பெரும் பகுப்புக்கள் உள்ளன.

1.
 பதினென்மேல்கணக்கு
2. பதினென்கீழ்க்கணக்கு
3. ஐம்பெருங்காப்பியங்கள்
4. ஐஞ்சிறு காப்பியங்கள்

ஆகியவை அவை. அவற்றில் பதினென்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு இந்நூல் விளங்குகின்றது. "அறம்பொருள்இன்பம்"ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய ஆகிய இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்துபாடல்களைத் தன்னுள் அடக்கியது.

இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆகிய அக்காலத்திய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான்.
குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.

"
பாயிரம்" என்னும் பகுதியுடன் முதலில் "அறத்துப்பால்" வருகிறது. அதிலும் முதலில் காணப்படுவது , "கடவுள் வாழ்த்து" என்னும் அதிகாரம். தொடர்ந்து, "வான் சிறப்பு", "நீத்தார் பெருமை", "அறன் வலியுறுத்தல்"ஆகிய அதிகாரங்கள். அடுத்துவரும் "இல்லறவியல்" என்னும் இயலில் 25 அதிகாரங்கள்அடுத்துள்ள துறவறவியலில் 13 அதிகாரங்களுடன் முதற்பாலாகிய அறத்துப்பால் பகுதி முடிவுறுகிறது. அடுத்து வரும் "பொருட்பாலி"ல் அரசு இயல்அமைச்சு இயல்ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும்ஒழிபு இயலில் 13 அதிகாரங்களும் உள்ளன.

கடைசிப்பாலாகிய "இன்பத்துப்பால்" அல்லது "காமத்துப்பாலி"ல் இரண்டு இயல்கள்களவியலில் அதிகாரங்களும்கற்பியலில் 18 அதிகாரங்களும் உள்ளன. ஆகமொத்தம் 13 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள்.

திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் வள்ளுவர் பாடியுள்ளார். ஆனால் இவற்றில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.

"
அகரம் முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு...."

என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய "அ" வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய,

"
ஊடுதல் காமத்திற்கின்பம்அதற்கின்பம்,
கூடி முயங்கப்பெறின்"

என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய "ன்" னுடன் முடித்திருக்கிறார்.

வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால்அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள்முப்பால்உத்தரவேதம்தெய்வநூல்பொதுமறைபொய்யாமொழிவாயுறை வாழ்த்துதமிழ் மறைதிருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை.

தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வுஅதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வுஅவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன்மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம்அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டிஅதனைக்கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும். அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச் செய்யவேண்டும். பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது திருக்குறளின் மொத்தமான நோக்கு.

உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

"
இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல்

திருக்குறள் என்பது புகழ் பெற்ற இலக்கியமாகும். உலகபொதுமறை,, பொய்யாமொழி,,வாயுறை வாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது.

இதனை இயற்றியவர் கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி 5 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்த திருவள்ளுவர் என்று அறியப்படுபவர் ஆவார். திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது.

இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புறவாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.

இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும், அழகுடன் இணைத்தும், கோர்த்தும் விளக்குகிறது.945_488970454458876_1304059061_n.jpg?_nc

எதுவிதத்திலும், திருக்குறளை இயற்றியவர் பற்றியும், அது என்ன நூல் என்பது பற்றியும், ஔவையாரால் இயற்றப்பட்டதாகக் கூறப்படும் நல்வழி என்பதன் இறுதிப்பாட்டுப் பின்வருமாறு கூறுகிறது,

இதில் ‘தேவர் குறள்‘ எனக் கூறப்பட்டிருப்பது பற்றியும், குறள், திரு நான்மறை, ஏனையவைகளும் ‘ஒரு வாசகம்‘ எனக் கூறப்பட்டிருப்பது பற்றியும், தமிழ் வித்தகர்கள் தெளிவான விளக்கத்தைக் கொடுக்காத நிலை தொடர்கிறது.

திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்படுகிறது.மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாய், தமிழ்நாட்டில் ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப் படுகின்றது.

திருவள்ளுவர் ஆண்டு என்பது பொது ஆண்டோடு 31 ஆண்டுகள் கூட்ட வேண்டும்.

திருக்குறள் நூலானது வடமொழியில் எழுதப்பட்டவைகளின் அடிப்படையில் இயற்றப்பட்டது என ஒரு சாராரராலும், அது திருவள்ளுவனின் சுயசிந்தனை அடிப்படையில் தமிழ் மொழியில் இயற்றப்பட்டது என மற்றொரு சாராராலும் கருதப்படுகிறது. மேலும், திருக்குறளில் கூறப்பட்டிருப்பவைகள் உலகின் பல்வேறு சமயங்கள் வலியுறுத்துபவையுடன் ஒப்பிடப்பட்டு, அது பல்வேறு சமயங்களுடனும் பொருந்துவதாகப் பல்வேறு சமயத்தாராலும் கருதப்பட்டு வருகிறது.

நூற் பிரிவுகள்

திருக்குறள் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் “முப்பால்” எனப் பெயர் பெற்றது.

முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் “இயல்” என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட எண்ணிக்கையான அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.

இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான்.

குறள் வெண்பாக்களால் ஆனமையால் “குறள்’  என்றும் அதன் உயர்வு கருதி “திரு” என்ற அடைமொழியுடன் “திருக்குறள்” என்றும்

பெயர் பெற்றது.


 

 திருவள்ளுவர் ஆண்டு 2049

இன்று திருவள்ளுவர் பிறந்த நாள்.  திருவள்ளுவர் ஆண்டு தொடக்கம் தை முதல் நாள்.

திருவள்ளுவர் ஆண்டை அறிவித்தவர் மறைமலை அடிகள்.

திருக்குறளுக்கு முதலில் உரை எழுதியவர் மணக்குடவர்.

திருக்குறளுக்கு பத்தாவதாக உரை எழுதியவர் பரிமேலழகர்.

திருக்குறளுக்கு 226 ஆசிரியர்கள் உரை எழுதியுள்ளனர்.

திருக்குறளுக்கு 44 வேறு பெயர்கள் உள்ளன.  திருக்குறளின் முதல் பெயர் முப்பால்.  திருக்குறளின் சிறப்புப் பெயர்கள்
உலகப்பொதுமறை, பொய்யில் புலவன் பொருளுரை. திருக்குறள் 56 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது.

திருக்குறளை இலத்தீனில் வீரமாமுனிவரும், ஆங்கிலத்தில் ஜி.யு.போப்பும் மொழிபெயர்த்துள்ளனர்.

கன்னியாகுமரி கடலிலுள்ள திருவள்ளுவர் சிலையின் உயரம் 133 அடி. இது குறளில் உள்ள  133 அதிகாரத்தை குறிக்கும்
வகையில்  அமைந்துள்ளது.

திருநெல்வேலியிலுள்ள, ஆசியாவின் முதல் ஈரடுக்கு மேம்பாலத்தின் பெயர் திருவள்ளுவர் மேம்பாலம். சென்னை ங்கம்பாக்கத்தில்
உள்ளது வள்ளுவர் கோட்டம்.

உருசியாவிலுள்ள கிரெம்ளின் மாளிகை சுரங்க அறையில் திருக்குறள் வைக்கப்பட்டுள்ளது.

காந்தியடிகளுக்குதிருக்குறளை அறிமுகம் செய்தவர், உருசிய எழுத்தாளர் டால்ஸ்டாய்.  திருக்குறள் தொடர்பான
தங்கக்காசு வெளியிட்டவர் எல்லீசர்.

நரிக்குறவ சமுதாயத்தினர் பேசும் வக்கிரபோலி மொழியில் திருக்குறளை மொழி பெயர்த்தவர் கிட்டு சிரோன்மணி.

திருக்குறளின் பெருமையினை சிறப்பாக எழுதியவர் அறிஞர் ஆல்பிரட் சுவைட்சர்.

வெண்பாபாணியில் பயனுள்ள செய்திகளைத் தருவதால், திருக்குறளை வெள்ளிப் பையில் இட்ட தங்கக்கனி என்பர்.

திருக்குறள் முதன் முதலில் அச்சானது 1812 இல். திருக்குறளை முதலில் அச்சிட்டு வழங்கியவர் ஞானப்பிரகாசன்.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்டதமிழ்நாடு என்று பாராட்டியவர் பாரதியார்.

வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்று திருவள்ளுவரைப் பாராட்டியவர் பாரதிதாசன்.

திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப் பால் என்ற மூன்று பால்களும், 133 அதிகாரங்களும் உள்ளன. திருக்குறளில் 1330 குறள்கள் உள்ளன.

திருக்குறளில் அதிகபட்சமாக நட்பு பற்றி 171 குறள்களும், இதையடுத்து கல்வி பற்றி 51 குறள்களும் உள்ளன.

திருக்குறளில் இல்லாத எழுத்து ஒள.இல்லாத எண் ஒன்பது.

திருவள்ளுவர் கடவுளை இறைவன் என்றே குறிப்பிடுகிறார்.

திருக்குறளில் உயிருக்கும் மேலாக குறிப்பிடப்படுவது ஒழுக்கம்.

திருக்குறளை தமிழ்த்தாயின் உயிர்நிலை என்று கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை போற்றுகிறார்.  திருக்குறளைப்
புகழ்ந்து பேசும் நூல் திருவள்ளுவ மாலை.

திருவள்ளுவரை பொய்யில் புலவர் எனப் போற்றுவர்.

திருக்குறளை மக்களுக்கு முதலில் கற்றுக்கொடுத்தவர் வள்ளலார்.

உழைப்பால் விதியையே மாற்ற முடியும் என வலியுறுத்துகிறார் வள்ளுவர்!

தன்னை வணங்குபவர், வணங்காதவர் என்ற பாகுபாடு கடவுளுக்குக் கிடையாது. அவரது திருவடிகளைச் சரணடைந்தவர்களுக்கு எப்போதும் இன்பமே உண்டாகும். மனம், மொழி, மெய் ஆகிய மூன்றாலும் மனிதன் அடக்கத்துடன் வாழவேண்டும்.
அவ்வாறு இல்லாமல் கர்வத்துடன் வாழ்பவன் துன்பம் அடைவது உறுதி.

கற்ற கல்வியை ஒருவன் மறந்து விட்டாலும், மீண்டும் கற்றுக் கொள்ள முடியும். ஆனால், ஒழுக்கத்தை மறந்து விட்டால்
அதை ஒருநாளும் திரும்பப் பெற முடியாது.

ஒழுக்கமே மனிதனுக்கு சிறப்பினை அளிப்பதால், அதனை உயிர் போல எண்ண வேண்டும்.

சோர்வில்லாமல் ஆர்வத்துடன் உழைப்பவன் விதியைக் கூட மாற்றி அமைக்கும் வலிமையைப் பெறுவான்.

அடக்கம் என்னும் பண்பு அனைவருக்கும் நன்மை அளிப்பதாகும். அதிலும் பணம் படைத்தவர்கள் அடக்கத்துடன் வாழ்ந்தால்
உலகமே அவர்களைப் போற்றி வணங்கும்.

உயிர்களைக் கொல்லாமலும், மாமிசம் சாப்பிடாமலும் இருப்பவரைக் கண்டால், எல்லா உயிர்களும் கை கூப்பி வணங்கும்.

ஒழுக்கம் கொண்டவன், நல்ல சிந்தனையோடு இனிய சொற்களையே பேசுவான். மறந்தும் அவனால் கொடுஞ்சொற்களைப்
பேச முடியாது.

ஊருணியில் நிறைந்திருக்கும் நீர் மக்களின் தேவைக்கு பயன்படுவது போல, நல்லவர்களிடம் உள்ள பணம் எல்லாருக்குமே பயன்
தரும்.

கைமாறு கருதாமல் உலகம் செழிக்க மழை பெய்வது போல, நல்லவர்கள் எதையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவி செய்ய
முன் வருவர்.

தீயிலிட்ட பொன் ஒளிவீசிப் பிரகாசிப்பது போல, பொறுமையை கடைபிடிப்பவன் வாழ்வில் பெருமை பெறுவான்.

தனக்கு நேர்ந்த துன்பத்தைப் பொறுத்துக் கொள்வதும், யாருக்கும் தீங்கு செய்யாமல் வாழ்வதுமே தவ வாழ்விற்குரிய தகுதிகள்.

எந்த நன்றியைமறந்தவருக்கும் மன்னிப்பு உண்டு. ஆனால், செய்த நன்றியை மறந்தவர்களுக்கு மன்னிப்பே  கிடையாது.

தெய்வத்தை வழிபட்டு கூட, ஒரு செயல் நடக்காமல் போகலாம். ஆனால், முயற்சிக்கு தகுந்த பலன் ஒருநாள் கிடைத்தே தீரும்.

தேவையான சமயத்தில் கேட்காமலே செய்யும் உதவிக்கு, வானமும், இந்த பூமியும் கூட ஈடு இணை கிடையாது.

எதை வேண்டுமானாலும் மறந்து விடலாம். ஆனால், வில்லங்கப்பட்ட நேரத்தில்ஒருவர் செய்த உதவியை ஒருபோதும்
மறப்பது கூடாது.

சொல்லில் இனிமையும், செயலில் பணிவும் இருந்து விட்டால், ஒருவனுக்கு வேறு எந்த நகையும் தேவைப்படாது.
அழகு அவனிடம் எப்போதும் குடியிருக்கும்.

வீட்டிற்கு வந்த விருந்தினர்களை முகமலர்ச்சியுடன் வரவேற்கும் பண்பு வேண்டும். அத்தகைய பண்பு இருப்பவனின் வயலில்
விதை விதைக்காமலே, தானாக நெற்பயிர் செழித்து வளர்ந்தோங்கும்.

பெற்றோருக்கு பிள்ளை செய்யும் கடமை, இவன் தந்தை இவனை பிள்ளையாக பெற முற்பிறவியில் என்ன தவம் செய்தானோ?
என்று பிறர் பேசும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும்.

அன்பு கருணை பணிவு உள்ளவன் மனித வடிவில் தெய்வம்.  ஒருவனுக்கு உயிர் இருக்கிறது என்பதற்கு அடையாளமே அன்புதான்.
அன்பு இல்லாதவனின் உடம்பு, எலும்பும் தோலும் போர்த்திய சதைத் தொகுப்பே ஆகும்.

பிறருக்கு நல்ல பயனைக் கொடு. இனியசொல் பேசு. விரும்பத் தகுந்த சிறப்பைக் கொடு. இப்படி செய்தால், நன்மை செய்பவன்,
பெறுபவன் இருவருக்கும் நன்மையாக அமையும்.

ஒருவன் மற்றவரால் பெற்ற எந்த பயனை வேண்டுமானாலும் மறக்கலாம். அதிலிருந்து மீள வழி உண்டு. ஆனால் பிறர் செய்த
நன்றியை மறந்தவர்களுக்கு பரிகாரமே கிடையாது.

ஒருவனுக்கு மேன்மையுண்டாக்குவது நல்ல நடத்தைதான். எனவே, ஒழுக்கத்தை உயிரை விடச் சிறந்ததாக போற்ற
வேண்டும்.

பூரண நற்குணம் உள்ளவன் என்ற பெருமை, ஒருவனை விட்டு நீங்காமலிருக்க வேண்டுமானால், பொறுமையுடன் நடந்து கொள்ள
வேண்டும்.  பொறாமை என்ற பாவம் செல்வத்தை அழித்து விடும். பல தீமைகளிலும் தள்ளி விடும்.

தர்மத்தை உணர்ந்தவர்களிடமும், பிறர் பொருளை அபகரிக்கும் ஆசை இல்லாதவர்களிடமும் திருமகள்  கடாட்சம் தானாகவே வந்து சேரும்.

ஒரு சபையில் உள்ள பலருக்கும் கோபம் உண்டாகும்படி, பயனற்ற வார்த்தைகளைப் பேசுகின்றவன், எல்லாராலும்
இகழப்படுவான். அவமானமும் அடைவான்.

மறந்தும், ஒருவருக்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது. மீறி நினைத்தால், அப்போதே தர்ம தேவதை, கேடு நினைக்கிறவனுக்கு கேடுண்டாக்க நினைத்து விடுவாள்.

செல்வம் இல்லாதவன் இந்த உலகத்தில் முடியாது. அதுபோல் உயிர்களிடம் இரக்கம் இல்லாதவன்,  மேல் உலகத்தில் வாழ்வு பெற முடியாது.

பிறருக்குச் சொந்தமான பொருளைத் திருட வேண்டுமென, மனதில் நினைப்பது கூட தீமையுண்டாக்கும். உடலின்  வெளிப்புறத்தைத் தண்ணீரால் சுத்தப்படுத்தலாம். ஆனால், உடலின் உட்புறமாகிய உள்ளத்தை, உண்மைதான் தூய்மைப்படுத்தும்.

யாரிடத்திலும் கோபம் கொள்ளக்கூடாது. ஏனெனில், தீங்கு செய்யத் தூண்டுகின்ற மனோபாவம் கோபத்தினால்தான்
உண்டாகிறது.

ஒருவர், பிறருக்குச் செய்யும் துன்பங்கள் எல்லாம், செய்தவரையே வந்து சேரும். அதனால், தமக்குத் துன்பம் வரக் கூடாது என்று விரும்புகிறவர்கள், பிறருக்கு துன்பம் செய்யாமல் இருக்க வேண்டும்.

புண்ணிய செயல் எதுவென்றால், உயிர்க்கொலை செய்யாதிருப்பது.
கொலை செய்வது மற்ற எல்லாப் பாவங்களையும் உண்டாக்கும்.

துன்பமற்ற நிலை எதுஎன்றால், இந்த உலகில் பிறக்காமல் இருப்பது தான்.
பிறவா நிலை வேண்டுமானால், ஆசை அழிய வேண்டும்.

அழிவில்லாத செல்வம் கல்வி மட்டும் தான். மற்ற செல்வங்கள் ஒருவரிடம் தங்கியிருப்பதில்லை.
உள்ளத்தை வசப்படுத்தினால் உலகமும் வசமாகும்.


திருக்குறள் கூறும் உயர் அறிவியல் 

அறிவியலுக்கும் உயர் அறிவியலுக்கும் வேறுபாடு இருக்கிறது. கண்ணால் காண்கின்ற செயல்களின் பின்னால் இருக்கும் நுட்பத்தை புரிந்து கொண்டு தொழில் நுட்பத்தை உருவாக்குவது “சாதாரண அறிவியல்”. 

எ.கா பறவையிலிருந்து விமானம் கண்டுபிடித்தது. 

ஆனால் கண்ணிற்கு புலபடாத விடயத்தையோ, அல்லது கண்ணால் காணும் மாயைக்கு பின்னால் இருக்கும் விடயத்தைக் கண்டு பிடிப்பதுதான் “உயர் அறிவியல்” 

எ.கா “பூமி தன்னைத் தானே சுற்றுகிறது என்பதை கண்டுபிடித்தது.

ஒருமுறை  ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம் உயர் அறிவியலை மூன்றே  சொற்களில் சொல்ல முடியுமா என்று கேட்ட போது அவர் கூறிய பதில் “time, space, action” அதாவது காலம், இடம், செயல். அவருடைய காலம் கிபி 20 ஆம் நூற்றாண்டு, ஆனால் கிமு 1 ஆம் நுற்றாண்டிலேயே  திருக்குறளில் இக்கருத்து கூறப்பட்டுள்ளது என்று நினைக்கும் போது  வியப்பாகவே உள்ளது. இதோ அக்குறள்,

“ஞாலம் கருதினும் கைகூடும்
காலம் {time) கருதி இடத்தால்(space) செயின்(action)”

செயலை முடிப்பதற்கு ஏற்ற காலம் அறிந்து உரிய இடத்தோடு செய்தால் உலகமே கைகூடும் என்பது அதன் பொருள்.
வாழ்வியல் நூல் என்று கருதப்படும் திருக்குறளில் “உயர் அறிவியல்” பொதிந்து கிடப்பது உண்மையில் எம்மை மலைக்க
வைக்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறி – நா.தனராசன்

2004 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை.

அனுப்பியவர் சிகாமணிI ⋅ ஒக்டோபர் 5, 2011 – நன்றி

thiruதிருக்குறள் நீதி நூல் மட்டுமன்று அது ஒரு வாழ்வியல் நூல். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதனுக்காக மட்டுமல்ல, இருபத்தோராம் நூற்றாண்டின் புதிய தலைமுறையினர்க்கும் வழிகாட்டும் புரட்சி நூல். வள்ளுவத்தின் பொருண்மை காலந்தோறும் புதிய புதிய கருத்தாக்கங்களைத் தந்து, இனம், மொழி, நாடு என்னும் எல்லைகளைக் கடந்து மனித வாழ்க்கையை வளப்படுத்துகிறது.

பொருண்மைச் சிறப்பு

சங்க காலத்தைத் தொடர்ந்து தமிழுக்கும், தமிழர்க்கும் கிடைத்த அரிய களஞ்சியமான வள்ளுவத்தில் உலகளாவிய சிந்தனைகளும் மனிதனை உயர்த்தும் உயரிய நோக்கும் காணப்படுகிறது. வள்ளுவம் ”தமிழனுக்குரியது” என்னும் நிலையைக் கடந்து உலகத்தவர் அனைவர்க்கும் உரியதாக உள்ளமையை உணர்ந்த பாரதி ”வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”, எனப் புகழ்ந்துரைத்தார். வள்ளுவப் பொருட் சிறப்பை அறிந்த மதுரைத் தமிழ் நாகனார் ”எல்லாப் பொருளும் இதன் பால் உள” என்று தெளிந்துரைத்துள்ளார். இவை வள்ளுவத்தின் காலமும் எல்லையும் கடந்து நுண்பொருட்ச் சிறப்பை உணர்த்துவன.

வாழ்வியல் பதிவு

வள்ளுவம் தான் தோன்றிய காலத்தோடு நின்று விடாமல் இந்த நூற்றாண்டு மனிதனுக்கும் வாழச்சொல்லிக் கொடுக்கிறது. வாழ்க்கையைச் சொல்லிக் கொடுக்கிறது. வள்ளுவம் இலக்கியம் என்னும் நிலையில் நின்று விடாமல் மனித வாழ்வியல் கூறுகளை காட்டும் பதிவுகளாக உள்ளது.இதனை

சராசரி மனிதன் அன்றாட வாழ்க்கையில் ஒழுகவேண்டிய நெறிமுறைகளின் தொகுப்பாகத் திருக்குறள் படைக்கப்பட்டுள்ளது.

என்னும் அறிஞர் கருத்தினால் அறியலாம். வள்ளுவத்தில் உள்ள ஒவ்வொரு குறளும் மனித வாழ்க்கையின் நெறிகளை, வழிமுறைகளைத் தருவன.

மானிடப் பண்பு இயல்புகளுக்கு ஓர் உறைவிடமாய் – வாழ்க்கை, வழி நெறிமுறைகளுக்கான வழிகாட்டியாய் அமைந்துள்ளது திருக்குறள்

என்னும் முத்தமிழ் அறிஞரின் கருத்தும் வள்ளுவம் ஒரு வாழ்வியல் நூல் என்பதை உறுதிப்படுத்துகிறது.

முதன்மைப் பயன்

உயிரினத்தின் உச்சியில் வாழும் இன்றைய மனிதனை, அவனது வாழ்க்கையைப் பகுத்து நோக்கி, அறம், பொருள், இன்பம் ஆகிய முதன்மைப் பயனை அறிய வைத்துப் பயனுடைய வாழ்க்கை வாழ வள்ளுவம் வழி காட்டுகிறது. எதிலும் விரைவும், ஓட்டமும் காட்டும் இந்த நூற்றாண்டு மனிதனுக்கு உள்ளத்தை உறுதிப்படுத்தவும் வாழ்வியல் பொருண்மைத் தெளிவுபெறவும் வள்ளுவர் வாக்கு ஊன்றுகோலாய் இருக்கிறது.

பன்முகப்பார்வை

தனி மனிதநிலை, குடும்ப நிலை, உறவினர் நிலை, சமூக உறுப்பினர் நிலை, குடிமக்கள் நிலை என்னும் தளங்களில் மனிதர்கள் பாதுகாக்க வேண்டிய பண்புகள், ஆற்ற வேண்டிய பணிகள், எனப் பன்முகக் கூறுகளை ஒழுங்குற அமைத்து ஒரு முழுமையான வாழ்வியல் கருத்தாக்கத்தை வள்ளுவம் தந்துள்ளது.

தமிழ்ச் சமுதாயத்தில் காலங்காலமாய் இருந்து வந்த மரபுத்தளைகளை உடைத்து, மனிதப் பழக்க வழக்கங்களை மாற்றித் தனிமனிதத் தூய்மையை உருவாக்க வள்ளுவர் முயன்றுள்ளார்.

மரபுகளைத் தகர்த்தல்

மது அருந்துதலும் புலால் உண்ணுதலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒழுக்கம் என்னும் நிலையை மாற்றி மனித மனத்தினை, வாழ்வின் பயனைத் தடம்மாற்றும் தவறுகள் என வள்ளுவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இலங்கு இழை மகளிர் பொலங் கலத்து ஏந்திய மணம் கமழ் தேறல் மடுப்ப நாளும் மகிழ்ந்து இனிது உறைமதி பெரும எனவும்

சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே பெரியகட் பெறினே யாம்பாடத் தான் மகிழ்ந்தது உண்ணும் மன்னே

என்றும் கள்ளுண்டுகளித்தலையும், கள்ளுண்ணல் பெருமித வாழ்வாக இருந்த மரபுகளையும் பின்பற்றக் கூடிய ஒழுக்கமாய்க் காட்டும் வழக்கினை மாற்றி அதனைச் சமுதாயத் தீமையாக உரைத்தவர் வள்ளுவர்.

”உண்ணற்க கள்ளை” என்றும் அது ”ஈன்றாள் முகத்தேயும் இன்னாதது” எனவும் ”நஞ்சுண்பார் கள் உண்பவர்” என்றெல்லாம் மது அருந்துதலின் தீமையை உணர்த்தித் தனிமனித வாழ்வு சிறக்கும் நெறியைக் காட்டியுள்ளார் வள்ளுவர் எனலாம்.

புலால் உண்பது மனித நெறி அல்ல என்பது வள்ளுவரின் கருத்தாக உள்ளது. இன்றைய மனிதர்களின் உணவு முறையில் சைவ உணவே சிறந்தது என்பதை அறிவியல் ஆய்வுகள் மூலம் மேலைநாட்டு உணவியல் வல்லுனர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். தெய்வப் புலவர் வள்ளுவர் ”புலால் மறுத்தல்” என்னும் அதிகாரத்துள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதனை விளக்கமுறச் செய்துள்ளார்.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்

என்னும் குறட்பா மனிதன் உயர்வதற்கான வழியைக் காட்டுகிறது. இன்றைய தமிழக அரசு உயிர்க்கொலை, உயிர்ப் பலி கூடாது எனச் சட்டம் கொண்டு வந்துள்ள நிகழ்காலச் சூழலில் வள்ளுவரின் வாழ்வியல் நெறி வெற்றி பெற்றுள்ளதாகவே கருதலாம். அன்பு, பண்பு, நட்பு போன்ற வாழ்வியல் இலக்குகளை எளிய முறையில் மனித மனம் ஏற்கும் வகையில் உரைத்துத் தனி மனித வாழ்க்கையை வள்ளுவர் பண்படுத்தியுள்ளார்.

அறநெறிப்பட்ட வாழ்க்கை

மனித வாழ்க்கை ஒரு குறுகிய வட்டத்திற்குள் நின்றுவிடாமல் விரிந்து பரந்து முக்கியத்துவம் மிக்கதாக அமைய வேண்டும். மனித மனங்களை விரிவுபடுத்தி அறவழிப்பட்ட சமுதாயத்தை உருவாக்குவது திருக்குறளின் நோக்காகவும் உள்ளது.

மனமாசின்றி வாழும் வாழ்க்கை சிறப்புடையது. அதுவே அறங்களில் முழுமை. மனித வாழ்க்கை நெறி என்கிறார்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.

என்னும் குறட்பா இதனை உணர்த்துகிறது. அறம் என்பது பற்றிய இலக்கிய மரபுசார் கருத்தாக்கத்தை வள்ளுவர் மாற்றியமைக்கிறார்.

அறமெனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாத இதுகேள் மன்னுயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்

என்னும் காப்பியக் கருத்தினை மறு ஆய்வு செய்து அறத்திற்குப் புதிய விளக்கங்களைத் தந்தவர் வள்ளுவர். மனத்தூய்மை, ஈகை, காதல் என்னும் தூயநெறிகளை வாழ்வியல் அறமாகக் கொள்ள வேண்டியதின் தேவையை உணர்த்தியுள்ளார்.

வாய்மை

திருக்குறள் அன்பு, பண்பு, இன்சொல், நன்றியறிதல் என மனித மாண்புகளை விளக்குகிறது. இவற்றைப் பின்பற்றுவோர் பேற்றினையும் ஒதுக்கியவர் அடையும் இழிவினையும் திறம்படக் காட்டுகிறது. ”வாய்மை” என்பதே தலையாய அறம் என்கிறது வள்ளுவம். பொய்மை கோலோச்சும் இக்கால மனித சமுதாயத்திற்கு வள்ளுவர் கருத்துக்கள் மலர்ச்சியை உண்டாக்கும் மருந்தாகக் கொள்ளலாம். அறங்களில் எல்லாம் வாய்மையே சிறப்புடையது என்பதை

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று
என்னும் குறட்பாவால் அறிய முடிகிறது.

மும்மை அறம்

மனிதர்களின் வாழ்க்கை நெறியை உயர்த்தும் கோட்பாடாக வள்ளுவம் மூன்று அறங்களைப் பின்பற்றுமாறு வலியுறுத்துகிறது.

1. ஆன்மீக அறம்; 2. ஈதல் அறம்; 3. காதல் அறம்

கடவுளை ”அறிவு, ஆற்றல், அப்பாற்பட்ட நிலை” என்றும் கருதுகோள் நிலையில் வைத்து மனித ஒருமைக்கும் சமுதாய அமைதிக்கும் வள்ளுவர் குறள் வழிக் குரல் கொடுத்துள்ளார். முதற் குறட்பாவில் ”உலகு” என நினைவூட்டி உலகளாவிய நேயத்தை மறைமுகமாக உணர்த்தியுள்ளார். கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் சண்டையிட்டுக் கொள்ளும் மனிதனுக்கு, அவனது மனமாற்றத்திற்கு வள்ளுவம் ஒரு புதிய ஆன்மீக அறத்தை தந்துள்ளது. இதனை,

வள்ளுவம் கடவுளை நம்புகிறது. ஆனால் அது ஆணும் அல்ல; பெண்ணுமல்ல. வள்ளுவம், காட்டும் கடவுளுக்குக் கோபுரங்கள், கோட்டைகள் இல்லை. வள்ளுவத்தின் கடவுளுக்குக் கணக்கும் இல்லை; வழக்கும் இல்லை. அது பேரறிவு; தூய்மையான அறிவு; குணங்களின் திருவுரு; இன்பத்தின் திருவுரு; அன்பின் திருவுரு; அறத்தின் அடையாளம்! என்னும் அறிஞர் கருத்தும் இதனைத் தெளிவுபடுத்தும்.

ஈதலறம்

மனிதப் பண்பினை உயர்த்தும் ஒரு நெறி ஈகை. பிறருக்குக் கொடுத்து மகிழும் மனம் பெற்றால் மனிதன் பக்குவம் அடைந்தவனாகிவிடுவான். போட்டியும், பொறாமையும் அடுத்தவர் பொருளைக் கவரும் எண்ணமும் மனிதனை மிருக நிலைக்குக் கொண்டு செல்லும். ஈகைக் குணம் ஒன்றே மனிதனை மாண்புடையவனாக்கும். வள்ளுவர் ஈகைக் குணமே உயிரின் ஊதியம் என்பர்.

ஈதல் இசைபட வாழ்தல்; அதுவல்ல
ஊதியம் இல்லை உயிர்க்கு

கொடுத்துப் புகழடையும் வாழ்க்கையே பயனுடைய வாழ்க்கை என்பதைக் குறள் உணர்த்துகிறது.

காதலறம்

காமத்துப்பால் அறவழிப்பட்ட காதலுறவுகளை எடுத்துரைத்துள்ளது. காதலையும், ஆண்-பெண் உறவையும் வள்ளுவர் நெறிப்படுத்தியுள்ளார். காமத்துப்பாலில் காதல், காதலர் உறவு நிலை ஆகியவற்றை இனிமை பயக்கப் பாடி, அன்பெனும் நெறிக்குள், மனங்களின் சங்கமத்திற்குள், மாசுபடாத வாழ்வியல் படிநிலையை வடித்துத் தந்துள்ளார். களவையும் கற்பையும் வகைப்படுத்தி ”மனிதம்” அடையும் வாழ்க்கை நெறியை வள்ளுவர் தந்துள்ளார்.

பிறன்மனை நயத்தலையும், பரத்தையர் உறவையும், பெருங்குற்றமாகச் சொல்லி அன்புடைய காமத்தைச் சமுதாய அறமாகத் தந்துள்ளார்.

ஆண் – பெண் சமனியம்

ஆண் – பெண் உறவு நிலை, திருமணத்திற்கு முன்னும் பின்னுமாகக் காதல் நிலை ஆகிய செய்திகளைக் குறள் விரிவாகப் பேசுகிறது. ஆண் – பெண் சமத்துவம் வள்ளுவரின் கொள்கையாகக் காணப்படுகிறது.

ஆண் மேலாதிக்க காலத்தில், அதற்கெதிரான, துணிவுடைய சிந்தனைகளை வழங்கியுள்ள வள்ளுவரின் அணுகுமுறை புரட்சிகரமானது. பெண்களின் உரிமைக்காகவும், உலகியல் மாற்றத்திற்காகவும் அவர் பாடுபட்டுள்ளார். பெண் ஆணுக்கு இணையானவள். ஆற்றல் மிக்கவள் என்பதை,

சிறைகாக்கும் காப்பு எவன்செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை என்று ஆற்றலும் அறிவும் நிறையும் மிக்க பெண்களை உலகுக்கு உருவாக்கித் தந்தவர் வள்ளுவர் எனலாம். இத்தகைய வள்ளுவரின் வழிகாட்டல்தான் பிற்காலத்தில் பாவலன் பாரதியை ”வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்” என்று பாட வைத்தது எனலாம.

சமுதாயக் கொடுமைகள்

சாதி, மதத்தின் பெயரால் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் சமுதாயக் கொடுமைகள். இதனை மாற்ற வள்ளுவரின் குறட்பாக்கள் முனைந்துள்ளன. பிறப்பால் இனம் பிரித்த வருணாசிரம முறையை வள்ளுவம் எதிர்க்கிறது. பிறப்பால் அனைவரும் ஒன்றே என ஓங்கி ஒலிக்கிறது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
என்னும் குறட்பா வள்ளுவரை ஒரு சமுதாயப் புரட்சியாளராக அடையாளம் காட்டுகிறது.

பகுத்தறிவு நோக்கு

வள்ளுவரைத் தமிழ்கூறும் உலகில் தோன்றிய முதல் ”பகுத்தறிவாளர்” எனக் கூறலாம். எந்தவொரு கருத்தையும், சிந்தனையையும் உள்ளவாறு ஏற்காமல் பகுத்து நோக்கி, உள்ளத் தெளிவு பெற்று ஏற்க வேண்டும் என்பதே வள்ளுவர் கொள்கை.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

என்னும் குறட்பாக்கள் இதற்குச் சான்றாகும்.

மானுடத்தின் மலர்ச்சி

வள்ளுவரின் நெம்புகோல் அடிகள் மானுடத்தின் மலர்ச்சி எனலாம். மரபுகளைத் தகர்த்துப் புதுமையை நிலை நிறுத்துவது வள்ளுவரின் சமுதாயப் பணியாக இருக்கிறது.
அந்தணர் என்போர் அறவோர்

அன்பின் வழியது உயிர்நிலை
மனநலம் மன்னுயிர்க்குக் காக்கம்
அறத்தால் வருவதே இன்பம்
என்றெல்லாம் உயரிய சிந்தனைகளை வழங்கி மனித வாழ்க்கையை மலர்ச்சியடையச் செய்தவர் வள்ளுவர் ஒருவரே எனலாம்.

அடிக்குறிப்புகள்

1. பாரதியார், பாரதியார் கவிதைகள், வானதி பதிப்பகம், சென்னை, ஐந்தாம் பதிப்பு, 1883, ப. 39.

2. மதுரைத் தமிழ் நாகனார், திருவள்ளுவ மாலை, திருக்குறள் – பரிமேலழகர் உரை, கழக வெளியீடு, சென்னை, 1964, ப. 408.

3. ந. முருகேச பாண்டியன், ”திருவள்ளுவர் என்ற மனிதர்”, வள்ளுவம் இதழ் (வைகாசி – ஆனி) திருக்குறள் பண்பாட்டு ஆய்வு மையம், விருத்தாசலம், மே – 2000.

4. மு. கருணாநிதி, ”திருக்குறள் என் சிந்தனையை நெய்திருக்கும் செந்நூல்”, கோட்டம் முதல் குமரி வரை, குமரி முனை திருவள்ளுவர் சிலை திறப்பு விழா மலர், ப. 8.

5. மாங்குடி மருதனார், மதுரைக் காஞ்சி, கழக வெளியீடு, சென்னை, பாடல் வரிகள், 778-782.

6. புறநானூறு, கழக வெளியீடு, சென்னை, பாடல் எண். 235.

7. சீத்தலைச் சாத்தனார், மணிமேகலை, பாரி நிலையம், சென்னை, எட்டாம் பதிப்பு, 1987, ப. 306.

8. குன்றக்குடி அடிகளார், வள்ளுவத்தின் சமயவியல், வள்ளுவம் இதழ் (பங்குனி – சித்திரை), திருக்குறள் பண்பாட்டு ஆய்வு மையம், விருத்தாசலம், மார்ச் 1999, ப. 11.

முனைவர் நா. தனராசன்
முதுநிலை விரிவுரையாளர் தமிழ்த்துறை
ம.இரா. அரசினர் கலைக் கல்லூரி
மன்னார்குடி – 614 001.
—————-
தமிழர் வாசிக்க வேண்டிய கட்டுரை – அன்பான செம்பருத்தி கோம் வாசகர்களுக்கு சமர்பணம் – போகராஜா குமாரசாமி – தொடரும்



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

திருக்குறள் பிரச்சனை

அருளாளர் ஜெகத்
கஸ்பர் கூறிய

மணியான இரு கருத்துகள் .

திருக்குறள் குறித்து சில நாட்களாக நடந்து வரும் சர்ச்சைகள் மனதைக் கலங்க வைக்கின்றன . திருக்குறளின் சிறப்பை , மேன்மையைக் குலைப்பதாக உள்ளன . வடநாட்டு இந்துத்துவா தலைவர்கள் அதனைப் பாராட்டத் தொடங்கியதுமே எனது மனதில் ஒரு அச்ச உணர்வு தோன்றியது . காரணம் இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள திராவிட இனக் குழுக்களுக்கு நேர்ந்த கதியை நன்கறிந்தவன் நான் . வடுகர் , வடகருநாடகர் , மலையாள மக்களை வீழ்த்திய பிறகும் அசைக்க முடியாத இனப் பண்பாட்டுக் குழுவாக இருந்த தென் திராவிட இனங்களில் மிக அதிக எண்ணிக்கை உடையோர் கோண்டுகளும் , கொண்டவர்களும் இவ்வாறே ஒடுக்கப்பட்டு வருகின்றனர் . அவர்களது பண்பாடு , மொழி அழிக்கப்பட்டு வருகிறது . அரசியல் சக்திகளை வட அதிக ஆதிக்க சக்தியடைய RSS இன்று கார்ப்பரேட் முதலாளித்துவக் கொள்கைகளைக் காப்பர்வர்களாக அவர்கள் ஆதரவில் வருகிறார்கள் . கோண்டுகளின் கோண்டுவானா நிலப்பகுதிகளின் கனிம இயற்கை வளங்களைக் கைப்பற்ற கோண்டுகளை ஒடுக்கியது போல , தமிழகத்து கனிம வளங்களை , இயற்கை வளங்களைக் கைப்பற்ற தமிழர்களை ஒடுக்கும் முயற்சியில் முதலில் சாம் தான ஏற்பாடுகளில் முனைந்துள்ளனர் .
தமிழகத்தில் இதன் முன்னேற்பாடுதான் திருக்குறளையும் , சங்க இலக்கியங்களையும் தமக்குரிமை கோருவது . தமிழர்களோ தமிழைப் பாராட்டினால் புளகாங்கிதப்படுவது , ஆபத்து ஏற்பட்டால் எதிர்கருத்து கூறுவதோடு அமைகின்றனர் . ஆனால் ஏழை எளிய மக்களோ நின்று போராடுகின்றனர் . வெறுமனே பழைமை , பெருமைகளை மட்டுமே பேசி மகிழும் சமுதாயங்கள் ஒருபோதும் மேன்மையடைய முடியாது . இன்னிசை மாற வேண்டும் . இந்துத்துவா இன்று நம்மிடையே சில காலமாக இருந்து வரும் அரசியல் காழ்ப்புணர்ச்சி - அரசியல் தோல்விகளால் ஏற்படும் மனத்தளர்ச்சி - வெறுப்பரசியலைத் நமக்குத் சாதகமாக்கி வளரப் பார்க்கிறது . தமிழர்களோ தாங்கள் எதிர்கொள்ளவிருக்கும் பகையாற்றலை உணராமல் தங்களுக்குள் வார்த்தைகள் போர்நடத்தி வருகின்றனர் . எதிரிக்கு எதிரி நண்பனென்னும் கொள்கையை இந்துத்துவா கையிலெடுத்துள்ளது .
சரி , இதில் இறைபோதகர் ஐயா ஜெகத் கஸ்பார் எங்கு வருகிறார் என்று கேட்கலாம் . கஸ்பார் என்ற மனிதரை விடுத்து அவர் கூறியுள்ள இரண்டு கருத்துகள் மனங்கொள்ளத் தக்கவையாகும் . இன்றையச் சூழலில் தேவையானதாகும் . ஆனால் , இவ்விரு கருத்துகளுமே மனங்கொள்ளத் தக்கனவாகும் . ஆத்தீகர் - நாத்தீகர் , மதவாதிகள் - நடுநிலையாளர்கள் என்று அனைவருமே எண்ணிப் பார்க்க வேண்டியதாகும் . முதல் கருத்து ஒரு தமிழராக அவரது ஆதங்கமும் , இரண்டாவது கருத்தில் ஒரு மதபோதகரின் மனச்சாட்சியின் குரலும் கேட்கிறது . முதல் கருத்து இப்போதும் நமது நுண்கருத்தாய்வுக்கு உட்பட்டிருப்பது . இரண்டாவது கருத்து திருக்குறள் பற்றிய இன்றைய பிரச்சனைகளுக்குக் காரணமானவர்கள் உணர வேண்டியது . என் பார்வையில் அவரது கருத்துகளை வைக்கிறேன் .
( 1 ) நம்மிடையே பல்வேறு வேறுபாடுகள் இருப்பினும் நம்மை ஒன்றிணைக்கும் ஊடிழையாக இருப்பது தமிழ் ; தமிழ் மட்டுமே . மதத்தின் பேரால் பிரிந்தால் மூன்று நான்கு பிரிவுகளாவோம் . சாதியின் பேரால் பிரிவதாயின் பத்திருபது பிரிவுகளாவோம் . தமிழன் சிதைந்து போவான் . ஆனால் தமிழ் ஒன்றே நமது வேற்றுமைகளை நீக்கி இணைக்கக் கூடியது . ஏனவே தமிழ் ஒன்றே நம்மை ஒன்றிணைக்கக் கூடியது .
( 2 ) உலகிலுள்ள மதங்கள் , சமயங்கள் யாவும் குறையுடையன . முழுமைத் தன்மை அற்றவை. அத்தகைய குறைகளை நீக்கி மனிதனை முழுமைப்படுத்தக் கூடியது திருக்குறள் மட்டுமே . அதனை அனைவரும் சாதி , மதம் கடந்து உரிமை கொண்டாடலாம் . ஆனால் , எவரும் அது தமக்கே உரியதென ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பது தவறாகும் .
( கஸ்பர் ஐயாவின் கருத்தைக் கேட்டவாறு நினைவில் உள்ளவாறு பதிவிட்டுள்ளேன் . ஏதேனும் தவறாயின் திருத்திக் கொள்வேன் ) .
மேலும் , அவருடைய கருத்து தனியொருவரது கருத்தாகக் கொள்ள மனம் கருதாததாலும் , அத்தகைய உயர்ந்த கருத்துகள் பல முறை பல் வேறு காரணங்களைக் கூறி தனியொருவர் கருத்தாக அரசியல் , சமய வேறுபாடுகளால் புறந்தள்ளப்படுவது நம்மியல்பாதலாலும் எனது கட்டுரையில் அதனை நான் எடுத்துரைக்கிறேன் . ஒரு காலத்தில் கறளும் புறந்தள்ளப்பட்டு மக்கள் பேராதரவால் பொய் விளக்கங்கள் கூறி ஏற்றுக் கொள்ளப் பட்டதுதான் .
ஆனால் இன்றையச் சூழல் வேறுபட்டது . தமிழுக்கும் , தமிழகத்திற்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை நாம் இன்னும் முழுமையாக உணர்ந்து கொள்ளவில்லை . இந்தியா முழுவதுமுள்ள மக்களினங்கள் , பிற திராவிட இனக் குழுக்களின் இன்றைய நிலையை உணர்ந்தால் மட்டுமே அது இயலும் . கோண்டு மக்களின் இன்றைய நிலையை அறிந்து கொண்டால் நம் நிலையை நம்மால் புரிந்து கொள்ள முடியும் . நாமோ தமிழன் - திராவிடன் , தமிழ் - தமிழன் மையமென்று வாதாடிக் கொண்டிருக்கிறோம் . இது பிளவையும் , பின்னர் ஒற்றுமைப்படுத்துதல் என்ற பெயரில் நம்மை இந்துத்துவாவின் அடிவயிற்றில் கொண்டு சேர்த்து விடும். பல இனங்களுக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பு இதுதான் நடந்தது .
கி பி 3 ஆம் நூற்றாண்டில்கூட சாதவாகனர் , குப்தர்கள் காலத்தில் இத்தகைய நிலை ஏற்பட்டது . அப்போது ஏற்பட்ட பிளவு நமது தமிழ்ப் பண்பாட்டையே காவு வாங்கி விட்டது . பிரிதல் - பிணைதல் - வேறு ஆற்றலாதல் அறிவியல் இயக்க விதிமட்டுமல்ல . சமுக வாழ்விற்கும் இது பொருந்தும் . மூவேந்தர்கள் ஆண்ட போது நிலப்பிரிவுகள் பல்லாயிரம் ஆண்டுகளாக அவர்கள் திட்டத்திலேயே இருந்தன . அவர்களிடையே பகை இருப்பினும் தமிழுணர்வு , கவனிக்கவும் - தமிழுணர்வு மட்டுமே தமிழக மக்களை அதன் வழிபாட்டு , பண்பாட்டு நிலைகளைக் காத்து வந்தது . மூவேந்தர்களது குறுகிய நிலங்களுக்கான போராட்டங்கள்கூட அவற்றைத் தகர்க்க முடியவில்லை . திணைப் பண்பாடு நகர நாகரிகத்திலும் தாக்கம் செலுத்தியது . தொண்டை மண்டல இளந்திரையன் வழிவந்தவர்களானாலும் அப்போதிருந்த வடநாட்டு , தெக்கண மன்னர்களான சாதவாகனர் , குப்தர்களின் அச்சுறுத்தலாலும் , தங்களுக்குள் முரண்பட்டு நின்ற மூவேந்தர்களது துணை , பாதுகாப்பு இன்மையாலும் வடதிசை அரசுகளின் தாக்க்தலுக்கு உள்ளாகி அடிமைப்பட்டனர் . வரிசைப் பண்பாட்டை ஏற்றதுடன் அவர்களின் படையணிகளுடனும் சேர்ந்து விட்டனர் . பின்னர் வரிசை ஆதிக்கம் தகர்ந்தபோது தொண்டை நாடு தனிநாடாயிற்று . தொண்டை நிலம் - பல்லவம் ஆயிற்று ; தொண்டைமான் இளந்திரையன் - பல்லவன் குமார விஷ்ணு ஆனான் ; மள்ளர் மள்ளனாக இருந்த தொண்டைமான் - மாமல்லன் ஆனான் . களப்பிரர் மீதிருந்த வெறுப்பையும் , மூவேந்தரது தளர்ச்சியையும் கொண்டு அவர்களைப் பல்லவர்கள் வென்றனர் .
கி பி 6 ஆம் நூற்றாண்டிற்குள் தமிழகம் முழுமையாகப் பல்லவர் ஆட்சிக்கும் , வரிசைப் பண்பாட்டிற்கும் உட்படுத்தப் பட்டது . கருநாடக , ஆந்திர , வடநாட்டு பிராமணர்களைக் கொண்டு வந்து மனு தர்மம், சமாதானம், சமஸ்கிருதமென்று தமிழ்ப் பண்பாட்டை அழித்து , தமிழர் கலைகள் , இலக்கியங்கள் அனைத்தும் வகித்தனர். நீதிநூல்களைக்கூட எழுதவிடாமல் உலா , தூது போன்ற சிற்றிலக்கியங்களை ( பிரபந்தங்கள் ) உருவாக்கித் தமிழர் - தமிழின் மாண்பைக் கெடுத்தனர் . தமிழகம் தமிழால் ஒன்றுபட்டுவிடுமென்று மனு - சாதன- சமஸ்கிருதத்தைப் புகுத்தி தமிழ்ச் சமுதாயத்தை இரண்டாகப் பிளவுபடுத்தி , சாதிமத வேற்றுமைகளை ஏற்படுத்தினர் . எதிர்த்தவர்களை விளக்கியும், தாழ்த்தியும் கொடுமை செய்தனர் . மீண்டும் தலையெடுக்காதிருக்கக் கொன்றொழித்தனர் .
ஆரிய ஆதரவு மலையாள பிராமணரான ஆதிசங்கரரைக் கொண்டு தமிழகத்தில் சமஸ்கிருத , சாதன, வைதீகக் கருத்துகளைப் புகுத்தி தமிழர் குழுக்களையும், வழிபாட்டையும் அழித்தனர் . முருகர் - சிவ வழிபாட்டைச் சிதைத்து , திரிபுவாதம் செய்தனர் . தமிழரசு பெண்தெய்வங்களை அழிக்க அவர்களை அம்பாள் என்று மாற்றி , அவர்களுக்கு தியாகராசர் அல்லது சுந்தரேஸ்வரர் என்னும் பெயர்களில் ஒருவரை அவர்களின் கணவராக ஏற்படுத்தினர் . பொருளறியாமலே நல்ல தமிழ் ஊர்ப் பெயர்களைப் பொருளற்ற வடமொழிப் பெயர்களாக்கினர் . தமிழன் தனது நாட்டிலேயே விரும்பியவாறு இறைவழிபாடு செய்ய முடியாமலும் தனது வழிபாட்டு முறையைத் தானே கடைப்பிடிக்க முடியாமலும் தடுக்கப்பட்டிருக்கிறான் . அனைத்திலும் சமஸ்கிருதத்தைப் புகுத்தித் தமிழை நீச பாஷை என்று அழைக்கிறார். நாமும் தெரிந்து கொண்டும் தெரியாதது போல் நகைப் பணிக்காக வாழ்கிறோம் .
இன்று பிராமணியம் கார்ப்பரேட் பெருமுதலாளித்துவதின் கொள்கையாக மறுவுயிர்த்துள்ளது . பேரரசு உருவாக்கக் கொள்கையாக இருந்த சனாதன பிராமணீயம் பெருமுதலாளித்துவத்தைக் காக்க மறு அவதாரம் பெற்றுள்ளது . கோண்டு மக்களின் நிலப்பகுதிகளில் அவர்களது கனிம - இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க அவர்களது மொழி - பண்பாடு - வழிபாட்டு முறைகளை அழித்தது போல , அதனினும் வளம் பெற்ற தமிழகத்தின் கனிம - பெற்றொலிய - இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க நம்மை - தமிழர்களை அழிக்க நமது பண்பாட்டுக் களங்களைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் . இப்பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்க நமக்கு ஒரே வழி தமிழால் ஒன்றுபடுவதும் , முழுநிறைக் கொள்கை வழிகாட்டியாகக் கொள்வது மட்டுமே வழியாகும் . முன்பு ஆளும் வருக்கத் துணையுடன் மட்டுமே வந்த பிராமணியம் இன்று அத்துடன் அடியாட்களின் துணையையும் பெற்று வருகிறது . இச்சூழலில் ஐயா ஜெகத் கஸ்பரின் கருத்துகளை நோக்க வேண்டியுள்ளது . உங்கள் கருத்துகளை நான் அறிந்து கொள்ள விரும்புவது தவிர பதிலோ , விளக்கமோ சொல்ல விரும்பவில்லை . நன்றி .



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

திருவள்ளுவர் அறிமுகம் - Thiruvalluvar Introduction:

இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இவருடைய இயற்பெயர் என்ன என்பதுவும் மேற்கொண்ட விபரங்களும் சரிவரத்தெரியவில்லை. இவரைப்பற்றிச் செவிவழிமரபாகச் சில செய்திகள் விளங்குகின்றன. ஆனால் அறுதியான வரலாறு கிடையாது. அந்தச் செய்திகளின் வாயிலாகப்பெறும் தகவல்களின்படிஇவர் வள்ளுவ மரபைச் சேர்ந்தவர் என்றும்மயிலாப்பூரில் வசித்தவர் என்றும் தெரிகிறதுஇவருடைய மனைவியார் வாசுகி அம்மையார்.கற்பியலுக்கு மிகச்சிறந்த இலக்கணமாக விளங்கியவர். வள்ளுவர் தாம் எழுதிய முப்பால் நூலை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும்முடிவில் ஒளவையாரின் துணையோடு அரங்கேற்றியதாகவும் அச்செய்திகள் வாயிலாக அறிகிறோம்.

திருவள்ளுவரை நாயனார்தேவர்தெய்வப்புலவர்பெருநாவலர்பொய்யில் புலவர் என்றும் சில சிறப்புப்பெயர்களால் அழைப்பர். பிற்காலத்தில் திருவள்ளுவர் பெயரால் வேறு சில நூல்களை வேறு சிலர் இயற்றியுள்ளனர். அவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்தவை. திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. கிருஸ்துவ சகாப்தத்தின் முன் பகுதியைச் சேர்ந்ததாகப் பலர் கருதுவர்.

தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வுஅதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வுஅவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன்மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம்அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டிஅதனைக்கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும். அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச் செய்யவேண்டும். பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது திருவள்ளுவரின் மொத்தமான நோக்கு.

உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

"
இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்

 

மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard