Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர்


Guru

Status: Offline
Posts: 7474
Date:
கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர்
Permalink  
 


 

கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவார் அகத்து

(அதிகாரம்:கொல்லாமை குறள் எண்:329)

பொழிப்பு (மு வரதராசன்): கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.

மணக்குடவர் உரை: கொலைத் தொழிலினை யுடையராகிய மாக்கள் பொல்லாமையை யாராய்வாரிடத்துத் தொழிற்புலையராகுவர்.
இவரை உலகத்தர் கன்மசண்டாளரென்று சொல்லுவார்.

பரிமேலழகர் உரை: கொலை வினையர் ஆகிய மாக்கள் - கொலைத் தொழிலையுடையராகிய மாந்தர், புன்மை தெரிவார் அகத்துப் புலைவினையர் - அத்தொழிலின் கீழ்மையை அறியாத நெஞ்சத்தராயினும், அறிவார் நெஞ்சத்துப் புலைத் தொழிலினர்.
(கொலை வினையர் என்றதனான், வேள்விக் கண் கொலையன்மை அறிக. 'புலை வினையர்' என்றது தொழிலால் புலையர் என்றவாறு. இம்மைக்கண் கீழ்மை எய்துவர் என்பதாம்.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: கொலைத்தொழிலின் மிக்க இழிவை உணர்ந்தவரது மனத்திற் கொலைசெய்வார் எக்குலத்தவராயிருப்பினும் புலைத்தொழிலர் ஆகவே கருதப்படுவர்.

பொருள்கோள் வரிஅமைப்பு:
கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவார் அகத்து.

பதவுரை: கொலை-கொல்லுதல்; வினையர்-செயலையுடையவர்; ஆகிய-ஆன; மாக்கள்-பகுத்தறியும் திறனில்லா மாந்தர்; புலை-புலால், இழிவு; வினையர்-தொழிலையுடையவர்; புன்மை-கீழ்மை, இழிவான தன்மை; தெரிவார்-அறிபவர்; அகத்து-உள்ளே.


கொலைவினையர் ஆகிய மாக்கள்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கொலைத் தொழிலினை யுடையராகிய மாக்கள்;
மணக்குடவர் குறிப்புரை: இவரை உலகத்தர் கன்மசண்டாளரென்று சொல்லுவார்.
பரிப்பெருமாள்: கொலைத் தொழிலுடையராகிய மாக்கள்;
பரிப்பெருமாள் குறிப்புரை: இவரை உலகத்தர் (கொலைப்புலையர்) கன்மசண்டாலரென்று சொல்லுவர் என்றது.
பரிதி: கொலை செய்வாரும்;
காலிங்கர்: கொலைத் தொழிலை உடையராகிய மாக்கள்;
பரிமேலழகர்: கொலைத் தொழிலையுடையராகிய மாந்தர்;

'கொலைத் தொழிலினை யுடையராகிய மாக்கள்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கொலைஞனை மிக இழிந்தவனாகக் கருதுவர்', 'கொலைத்தொழில் செய்யும் மாந்தர்', 'கொலை சம்பந்தமான தொழிலைச் செய்கிறவர்கள் சண்டாளத் தனமுள்ள கீழ் மக்களாகக் கருதப்படுவார்கள்', 'கொலைத் தொழிலையுடைய மாந்தர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கொலைத்தொழில் செய்யும் அறிவில்லா மாந்தர் என்பது இப்பகுதியின் பொருள்.

புலைவினையர் புன்மை தெரிவார் அகத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொல்லாமையை யாராய்வாரிடத்துத் தொழிற்புலையராகுவர்.
பரிப்பெருமாள்: பொல்லாமை யாராய்வாரிடத்துத் தொழிற்புலையராகுவர்.
பரிதி: புலையரும் நிகராம்; பாவத்தின் சொரூபமாவது புலையர் என்றவாறு.
காலிங்கர்: 'கடையாய புலையரினும் இவரே புலைத்தொழில் உடையவர்' என்று சொல்லப்படுவார். நூல் முறைமையான நூல்களில் குற்றங்கள் ஆராயும் சான்றோரிடத்து என்றவாறு.
பரிமேலழகர்: அத்தொழிலின் கீழ்மையை அறியாத நெஞ்சத்தராயினும், அறிவார் நெஞ்சத்துப் புலைத் தொழிலினர்.
பரிமேலழகர் குறிப்புரை: கொலை வினையர் என்றதனான், வேள்விக் கண் கொலையன்மை அறிக. 'புலை வினையர்' என்றது தொழிலால் புலையர் என்றவாறு. இம்மைக்கண் கீழ்மை எய்துவர் என்பதாம்.

'குற்றங்கள் ஆராயும் சான்றோரிடத்து, இவரே புலைத்தொழில் உடையவர் என்று சொல்லப்படுவார்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எல்லா இழிவுகளையும் ஆராய்ந்த பெரியவர்', 'அத்தொழிலின் கீழ்மையை அறிவார் நோக்கில் இழிதொழில் புரிவோராவர்', 'ஈனமான காரியம் எதுவென்பதை எண்ணிப்பார்க்கக் கூடியவர்களுடைய மதிப்பில்', 'கொலைத் தொழிலின் கீழ்மையைத் தெரிவாரிடம் புலைத் தொழிலினர் ஆவார்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

கொலைத்தொழிலின் கீழ்மையைத் தெரிந்தவர்க்கு, இழிதொழில் செய்வோராவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கொலைத்தொழில் செய்யும் அறிவில்லா மாந்தர், கொலைத்தொழிலின் கீழ்மையைத் தெரிந்தவர்க்கு, புலைவினையர் ஆவர் என்பது பாடலின் பொருள்.
'புலைவினையர்' யார்?

யார் எவ்விடத்து உயிர்க்கொலை செய்தாலும் அவர்கள் இழிதொழில் புரிபவர்களே.

கொலைச் செயலையுடையவராகிய மனிதர்கள், அத்தொழிலின் இழிவை உணர்ந்தோர்க்கு, புலைத் தொழிலினராகத் தோன்றுவர்.
உயிர்க்கொலை செய்பவர்கள் வெறுக்கத்தக்க இழிதொழிலினரே எனச் சொல்கிறது இப்பாடல். பொருளுக்காகவோ, வேண்டுதலுக்காகவோ, வேள்விக்காகவோ- கொலைஞராக இருந்தால் அவர் இழிந்தவரே. இங்கே கொலைவினையர் என்பது ஆங்கிலத்தில் Butcher என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்லாகக் கொள்ளலாம். கொலைவினையர் என்ற சொல் தின்னுவதற்காகக் கொல்பவன், இறைச்சி வணிகன், இரத்தக்களரிச் செயல்களில் விருப்புள்ளவன், கொலையைத் தொழிலாகக் கொண்டவன் போன்றோரைக் குறிக்கும்.
இக்குறட்பாவில் 'கொலைவினைய ராகிய மக்கள்' என்று கூறாமல் 'மாக்கள்' என்று கூறப்பட்டுள்ளது. மாக்கள் என்ற சொல் பகுத்தறியும் திறனில்லாத மாந்தர் எனப் பொருள்படும். ஆறாமறிவு இல்லாத அவர்களை விலங்குகளுக்கு ஒப்பாவர் எனச் சொல்லி தன் மனக்கசப்பை வெளிப்படுத்துகிறார் வள்ளுவர். கொலைவினையன் என்றால் அருவருப்பான, வெறுக்கத்தக்க, உயிர்களை இரக்கமின்றிக் கொல்லும் கொடிய செயல் புரிபவன் என்று இழித்துக் கூறப்படுகிறது.

'வேள்விக்கண் கொலை கொலையன்மை அறிக' என்று இக்குறளுக்கான சிறப்புரையில் கூறுகிறார் பரிமேலழகர். இவ்விளக்கம் "வேள்விக்கண் செய்யப்படும் கொலை" என்று ஒன்று உள்ளது என்பதை ஒப்புக்கொண்டு அப்படிப்பட்ட கொலை வேள்விக்காக இருந்தால் ஒத்துக் கொள்ளலாம் என்பதாக அமைந்துள்ளது. வேள்விக் கொலையும் வள்ளுவர்க்கு உடன்பாடற்றதுதான். தேவநேயப் பாவாணர் 'வள்ளுவர் கொலைத்தொழிற்கு எவ்வகை விலக்கும் கொடுக்கவில்லை யாதலாலும் அவர் ஆரியவேள்வியை மறுப்பவராதலாலும் இங்குக் "கொலைவினை" என்பது வேள்வியையும் உளப்படுத்தியதே யாகும்' என்பார். மேலும் பாவாணர் 'கொலை வினையைத் தொழிலாகக் கொண்டிருக்கும் பூசாரியரைக் "கொலைவினையர்" என்றார்' எனவும் 'வேள்வி தவிர்த்த பிற உயிர்ப் பலி கொடுத்து வழிபடும் இடங்களான காளிக்கோட்டம் போன்ற கோயில்களும் பேய்த்தெய்வங் கட்குக் காவு கொடுக்கும் இடங்களும் ஆம்' எனவும் சொல்கிறார்.

கொலைத்தொழில் செய்வோரை வீரம் மிகுந்தவர் என்றோ, வழிபாட்டுத் தலங்களில் செய்யப்படும் உயிர்க்கொலை உணவை புனிதப்படையல் என்றோ, எண்ணவேண்டாம் என்று வள்ளுவர் சொல்ல வருகிறார். கொலைத் தொழில் கீழ்மையானது அதைச் செய்பவர் இழிமாந்தர் எனத் தாழ்வுபடுத்தப்படுகிறது இங்கு.

'புலைவினையர்' யார்?

'புலைவினையர்' என்ற தொடர்க்குத் தொழிற்புலையர் (கன்மசண்டாளர்), பாவத்தின் சொரூபமாவது புலையர், கடையாய புலையரினும் இவரே புலைத்தொழில் உடையவர், மிகக் கீழ்ப்பட்ட புலைத்தொழிலினர், உயர்ந்தோராகத் தம்மைக் காட்டிக் கொள்ளினும் புலையரே, இழிந்தவன், இழிதொழில் புரிவோர், சண்டாளத் தனமுள்ள கீழ் மக்கள், புலைத் தொழில் செய்பவர், புலைத்தொழிலர், மிகமிக இழிந்தவர், புலைத்தொழிலோர், மிகத் தாழ்ந்த செயலுடையர் என்றவறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

புலைவினையர் என்ற சொல் இழிவான செயல் அல்லது தொழில் புரிவோர் என்ற பொருள் தரும். மணக்குடவர் பேச்சு வழக்காக உலகத்தார் கன்ம சண்டாளர் என்று புலைவினையரைச் சொல்லுவர் எனக் குறிக்கிறார். பாவத்தின் சொரூபமாவது புலையர் அதாவது தீச்செயலின் உருவம் என்கிறார் பரிதி. பாடலிலுள்ள புன்மை என்ற சொல்லும் 'இழிவு' என்று பொருள் படுவதே.
'புன்மைதெரிவார் அகத்து' என்ற தொடர் 'கொலைத்தொழிலின் கீழ்மையைத் தெரிந்தவர்க்கு' என்று பொருள்படும். உலகில் பலர் எது இழிவான தொழில் எது இழிவற்றது என்று தெரியாதிருக்கிறார்களே என்று வருந்திச் சொல்லப்படுகிற விதத்தில் இத்தொடர் ஆளப்பட்டுள்ளது. சுடுகாட்டில் தொழில்புரியும் பிணம் எரிப்போர், அரசின் சாவுத் தண்டனை நிறைவேற்றும் தொழில்புரிவோர் போன்றோரை இழிதொழில் செய்வோர் எனச் சொல்லியுள்ளனர். இத்தொழில்களில் சமுதாய நன்மைதானே தெரிகிறது. இவற்றில் எங்கே இழிவு உள்ளது? உயிர்க் கொலைசெய்தல், போதைப்பொருள் விற்றல், கலப்படம் செய்தல், கள்ளநோட்டைப் புழக்கத்தில் விடுதல் போன்றவையே இழிதொழில்கள்.
புன்மை தெரிந்து இழிதொழிலைப் புறக்கணியுங்கள்; கொலைஞர் எல்லாம் புலைவினையரே என்கிறார் வள்ளுவர்.

புலைவினையரை புலையர் என்றும் கூறுவர். பரிமேலழகர் தனது உரையில் தொழிலால் புலையர் என்றவாறு என்கிறார் அதாவது சாதியால் அன்று; செய்யும் தொழிலால் எனக் குறிக்கிறார். தொழிலில் இழிவு இருக்கலாம். சாதியில் ஏது இழிவு?

இழிவான தொழில் செய்வோர் புலைவினையர் ஆவர்.

கொலைத்தொழில் செய்யும் அறிவில்லா மாந்தர், கொலைத்தொழிலின் கீழ்மையைத் தெரிந்தவர்க்கு, இழிதொழில் செய்வோராவர் என்பது இக்குறட்கருத்து.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

வள்ளுவர் உயர்ந்த குலம் , தாழ்ந்த குலம் , உயர்ந்த குடி , தாழ்ந்த குடி என்று எப்படி பிரிக்கிறார் என்பதை திருக்குறள் முழுவதையும் ஆய்ந்து விளங்கிக்கொள்ள வேண்டும் திராவிட இயக்கம் இந்தக்கால ஏற்ற தாழ்வுகளை பற்றியது , வள்ளுவர்காலத்தில் குடிப்பிறப்பு என்றால் உழவுக்குடிகள் , அந்தணக்குடிகள் , போர்குடிகள் என்று தொழிற்பிரிவுகள் இருந்திருக்கும் , குலம் என்பது அப்பிரிவிற்குள் உள்ள உட்பிரிவு என்று கருதலாம் இந்த காலத்திலேயே சாதியை வைத்து ஒருவரை ,செய்யும் தொழில் , குணங்கள் வேறுபட்டாலும் எடைபோடும் மூடர்கள் உண்டு , ஆனால் எந்த ஒரு பிரிவையும் குறிப்பிடாமல் எல்லா மக்களுக்கும் பொதுவாக குறள் உள்ளது

கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவார் அகத்து


பொருள்:கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.

இது என்ன சொல்கிறது என்று தெரிகிறதா? உணவின் வழி ஒரு மக்களை குறள் கீழ் என்பது புரிகிறதா?

திருக்குறளின் காலத்தை ஒட்டிய பிற நூல்களில் எல்லாம் குடி என்றால் என்ன? குலம் என்றால் என்ன? குடிப்பிறப்பு என்றால் என்ன?

என்தெல்லாம் தெளிவாக வரைறுக்கப்பட்டுள்ளது..


அந்தணர் குடி,உழவர் குடி என்று தனித்தனியாக குடி உள்ளது..

அதைத்தான் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை என்று சொல்கிறார். .

பிறப்பில் மேலே பிறந்தவன் எப்படி கீழானவன் ஆகிறான். .பிறப்பில் கீழான ஒருவன் எப்படி நடத்தையின் வழி மேலானவன் ஆகிறான் என்று வள்ளுவர் சொல்கிறார். .

அங்கேயும் அது இல்லை என்று அவர் சொல்லவில்லை..

வள்ளுவர் பாப்பானுக்கு பிறப்பாழுக்கம் அதாவது அவன் பிறவியலேயே வேதத்தை கைவிட்டாலும் பின்பற்ற வேண்டிய கர்ம ஒழுக்கம்

 

"வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே"


இது பாண்டியன் நெடுஞ்செழியனின் சங்க செய்யுள். .

நான்கு வேற்றுமை கொண்ட பிரிவுகளில் கீழ்க்குலத்தில் உள்ள ஒருவன் கல்வி கற்றவனாக இருந்தால், மேற்குலத்தில் உள்ள ஒருவன் அவன் வழி நடந்து கற்பான். .என்று தெளிவாக சொல்லப்பட்ட அதே வரிகளைத்தான் சுருக்கமாக சொல்கிறார் வள்ளுவர். .

 

Er Spd Madhukkoor Sundar Raja Cholan வள்ளுவர் காலத்திய தமிழ் சமூகத்தில் குடிகள் , குலம் , இனம் ஆகியவை இருந்திருப்பது புரிகிறது , இருந்தாலும் வள்ளுவர் யாரை உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்று பொதுவாக வகைப்படுத்துகிறார் என்பதுதான் கவனிக்கவேண்டிய முக்கிய அம்சம் இந்த வேறுபாட்டை திராவிட இயக்கம் உட்பட யாரும் ஏற்கும் வகையில் நுட்பமாக விளக்கி உள்ளாரே ! across all sections/divisions of the society a person can be considered lowly or highly irrespective of his birth,division,etc

Sundar Raja Cholan Er Spd Madhukkoor உங்களால் இதை விளங்கிக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ள முடியாததுதான் பிரச்சனை. .

அதுதான் திராவிட மிஷனரி வாதத்தின் பணி. .


எவ்வளவு தூரம் பேசினாலும் நீங்கள் இதையேதான் சொல்வீர்கள் நண்பரே. .

சரி சூத்திரர்-ஷத்திரியர்-வைசியர் என்று பொதுவாகத்தானே சொல்கிறார்கள். .இந்த ஜாதியை சேர்ந்தவன் சூத்திரன்,இந்த ஜாதியை சேர்ந்தவன் ஷத்திரியன் என்று பகவத் கீதையில் சொல்லப்பட்டுள்ளதா?

Er Spd Madhukkoor Sundar Raja Cholan இது புலைவினையர் என்ற கசாப்பு தொழிலை குறிக்கிறது இது இந்த தொழிலின் இழிவை அறிந்தவரை பற்றி சொல்கிறது

Sundar Raja Cholan Er Spd Madhukkoor கொலைத்தொழிலை செய்யும் மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.

இதுதான் அந்த குறளின் பொருள்.


இது தெளிவாக உணவின் வழி,தொழிலின் வழி கீழ் என்று பிரிக்கவில்லையா?

'பார்ப்பான் பிறப்பொழுக்கம்' பற்றி சொல்லுங்கள்.

Er Spd Madhukkoor Sundar Raja Cholan மறை ஓத மறந்தால் கூட பார்ப்பான் குடிப்பிறப்பு ஒன்னும் கெட்டுப்போய்டாது , ஆனால் ஒழுக்கமின்றி வாழ்ந்தால் பார்ப்பான் குடி கெட்டுடும்

குடிப்பிறப்பு ஒழுக்கத்தால் வரையறுக்கப்பட்டது

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 Er Spd Madhukkoor Sundar Raja Cholan

வள்ளுவர் உயர்ந்த குலம் , தாழ்ந்த குலம் , உயர்ந்த குடி , தாழ்ந்த குடி என்று எப்படி பிரிக்கிறார் என்பதை திருக்குறள் முழுவதையும் ஆய்ந்து விளங்கிக்கொள்ள வேண்டும் திராவிட இயக்கம் இந்தக்கால ஏற்ற தாழ்வுகளை பற்றியது , வள்ளுவர்காலத்தில் குடிப்பிறப்பு என்றால் உழவுக்குடிகள் , அந்தணக்குடிகள் , போர்குடிகள் என்று தொழிற்பிரிவுகள் இருந்திருக்கும் , குலம் என்பது அப்பிரிவிற்குள் உள்ள உட்பிரிவு என்று கருதலாம் இந்த காலத்திலேயே சாதியை வைத்து ஒருவரை ,செய்யும் தொழில் , குணங்கள் வேறுபட்டாலும் எடைபோடும் மூடர்கள் உண்டு , ஆனால் எந்த ஒரு பிரிவையும் குறிப்பிடாமல் எல்லா மக்களுக்கும் பொதுவாக குறள் உள்ளது



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

கீழே உள்ள குறள்களை நேர்மையாக வாசித்து நமது திராவிட மிஷனரிவாதிகள் விவாதிக்க தயாரா?

குடிப்பிறப்பு - மேல்குலம் - கீழ்க்குலம் என்று தெளிவாக நேரிடையாக சொல்கிறது திருக்குறள்.இவற்றினை மறைத்துவிட்டு இதைப்பற்றி பேசாமல் தங்கள் கற்பனை கருத்துக்களை பேசிக் கொண்டு குறள் வேத எதிர்ப்பு செய்கிறது,ஜாதி இல்லை என்கிறது என்றெல்லாம் உளறிக் கொண்டிருக்கிறார்கள்..

திருக்குறள் பழைய நீதி சாஸ்த்திரம்,சமூக இயங்கியல் புரிதல்,காம சாஸ்த்திரம் ஆகியவற்றை கற்றறிந்த மாமேதை தெய்வப்புலவர் வள்ளுவரால் மொழியப்பட்டதே.சில குறள்களை கவனிப்போம்.👇

குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை.

பொருள்:ஒருவன் கொள்கை தவறினால் , அத் தவறு அவனுடையக் குடிப் பிறப்பைத் கெடுக்கும், நாணில்லாத தன்மை நிலைப் பெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்து இலர் பாடு.

பொருள்:கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.

பொருள்:ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

பொருள்:பார்ப்பான் கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் அவன் குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.

பொருள்:உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வருகின்றப் பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவார் அகத்து

பொருள்:கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் கட்டே தெளிவு

பொருள்:நற்குடியில் பிறந்து குற்றம் இல்லாமல் பழிக்கு நாணுபவனே நம்பத் தக்கவன்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்
கினத்தியல்ப தாகும் அறிவு

பொருள்:சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னா னெனப்படுஞ் சொல்

பொருள்:மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும், இப்படிப் பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்
கினத்துள தாகும் அறிவு

பொருள்:ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டும்,உண்மையாக நோக்கும் போது அவன் சேர்ந்த இனத்தில் உள்ளது அது.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்
கினநலம் ஏமாப் புடைத்து

பொருள்:மனதின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமையும்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மனநலத்தின் ஆகும் மறுமைமற்று அஃதும்
இனநலத்தின் ஏமாப்பு உடைத்து

பொருள்:மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும்; அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் உறுதிபடும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard