Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழர் மெய்யியல்


Guru

Status: Offline
Posts: 7474
Date:
தமிழர் மெய்யியல்
Permalink  
 


 தமிழர் மெய்யியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
 
Jump to navigationJump to search

தமிழ்ச் சூழலில்மரபில்தமிழ் மொழியில் முதன்மையாக உருவான மெய்யியல் தமிழர் மெய்யியல் அல்லது தமிழ் மெய்யியல் ஆகும். இந்த மெய்யியல் தமிழர் எத்தகைய உலகப் பார்வையுடன் அல்லது அணுகுமுறையுடன் உலகை எதிர்நோக்கினார்கள், விளங்கிக் கொண்டார்கள் என்று அறிய உதவுகிறது. தமிழர் மெய்யியலை அறநூற்களில்இலக்கியங்களில் மட்டுமல்லாமல் வாழ்வியலையும் வரலாற்றையும் நோக்கியே புரிந்து கொள்ளமுடியும். யாரும் எக்காலத்துக்கும் ஒரே மெய்யியலை எடுத்தாள்வதில்லை. சூழல் மாறும்பொழுதும், அறிவியல் வளர்ச்சிக்கேற்ற மாதிரியும் மெய்யியல் மாறும். அப்படியே தமிழர் மெய்யியலும் மருவி வந்திருக்கிறது.

அக்கறைகள்[தொகு]

முறையியல்[தொகு]

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

திருக்குறள் - 423

வரலாறு[தொகு]

திணைக் கோட்பாடு[தொகு]

முக்கிய கட்டுரைகள்: திணை விளக்கம்தமிழர் நிலத்திணைகள்

சமய மெய்யியல்கள்[தொகு]

  • இயற்கை வழிபாடு
  • சிவன், முருகன், கண்ணன்
  • வேதம்
  • சமணம்
  • பௌத்தம்

தமிழர் இடையே பௌத்தம் செல்வாக்கு பெற்று மெய்யியல் முதன்மை பெற்றதாகத் திகழ்கிறது.

நாட்டார் மரபு[தொகு]

திராவிடக் கருத்தியல்[தொகு]

திராவிட இயக்கத்தின் தோற்றம் 1891 ஆம் ஆண்டளவில் அயோத்தி தாசர் என்பவரால் தொடங்கப்பட்ட திராவிட மகாஜன சபா என்னும் இயக்கத்தில் இருந்து தொடங்குகிறது.[1][2][3] சுயமரியாதை இயக்கம் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் மனித உரிமைகளை நிலைநிறுத்தப் போராடியது. திராவிட இயக்கம் தற்கால தமிழ்நாட்டு சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியும், தொடர்ந்து செல்வாக்கு செலுத்தியும் வருகிறது. இன்றைய தமிழ்நாட்டின் எழுச்சிக்கு திராவிட கருத்தியல் ஏதுவாக்கியது எனலாம்.[4]

திராவிட கருத்தியல் பகுத்தறிவு, சமுக நீதி, சமத்துவம், சமூக முன்னேற்றம், பெண்ணுரிமை, நாத்திகம், தமிழ் தேசியம், பொருளாதார மேம்பாடு ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. அதிகாரப் பகிர்வு (சுயநிர்ணய அல்லது விரிவான சுதந்திரங்களை உடைய மாநிலங்கள்), இட ஒதிக்கீடுநிலச்சீர்திருத்தம்அனைவருக்கும் இலவசக் கல்விதொழிற்துறை மேம்பாடு ஆகியவற்றை திராவிட இயக்கம் முன்னெடுத்தது.

தலித் இயக்கம்[தொகு]

தாக்கங்களும் மாற்றங்களும்[தொகு]

தமிழர் மற்றைய சமூகங்களோடு சந்தித்துக்கொண்ட போது தமிழரின் மெய்யியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. பிற திராவிட, வட இந்திய, இஸ்லாமிய, ஐரோப்பியத் தொடர்புகள் தமிழர் மெய்யியலை மாற்றியமைத்திருக்கின்றன. தமிழர் இடப்பெயர்வுகளும் தமிழரை ஆபிரிக்கர், மாலாயர், அமெரிக்க முதற்குடியினர் எனப் பலரோடு அறிமுகம் செய்து தமிழர் மெய்யிலை பாதித்து இருக்கின்றன.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

மெய்யியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
 
Jump to navigationJump to search

மெய்யியல் இயற்கைசமுதாயம்சிந்தனை ஆகியவற்றின், வளர்ச்சியின் மீது ஆட்சி செய்யும் மிகப்பொதுவான விதிகளைக் குறித்த அறிவியலே மெய்யியல் எனப்படும். மெய்யியலானது இருப்புஅறிவுவிழுமியம்காரணம்மனம்மொழி தொடர்பான பொதுவானதும், அடிப்படையானதுமான பிரச்சனைகள் பற்றிய படிப்பு என வரையறுக்கப்படுகிறது[1][2][3]

மெய்யறிவு[தொகு]

இயற்கை விஞ்ஞானம் மிக வேகமாய் முன்னேறிச் செல்கிறது. எல்லாத் துறைகளிலும் அவ்வளவு ஆழ்ந்த புரட்சிக் கொந்தளிப்புக்கு உள்ளாகி வருகிறது. அது தத்துவவியல் (Philosophy) அனுமானங்களின்றி இருக்கலாமென நினைக்க முடியவே முடியாது.[4]

மெய் என்ற உடலில் உணர்வு என்ற உண்மையைப் புத்தியால் தேட அறிவு என்ற ஆற்றல் வெளிப்படும் பொழுது தத்துவம் என்ற உண்மை உணர்வை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் கருத்துக்களின் விளக்கதை உணர்வு பூர்வமாக அறியவைப்பது மெய்யறிவு. - (சுபஸ்ரீ ஸ்வாமிகள்)

 
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு." திருவள்ளுவர் (கிமு 200)
 
"ஆராயப்படாத வாழ்வு வாழ்வதற்குப் பெறுமதியற்றது." கிரேக்க மெய்யியலாளர் சாக்ரட்டீசு (கி.மு 470-399)

மெய்யியல் அல்லது மெய்க்கோட்பாட்டு இயல் அல்லது தத்துவம் (philosophy) என்னும் அறிவுத்துறையானது எது உண்மை, எது சரி, எது அறிவு, எது கலை, எது அறம், எது அழகு, கடவுள் என்று ஏதும் உண்டா, என்பது போன்ற அடிப்படையான கேள்விகளைப் பற்றி ஆழ ஆராயும் துறை ஆகும். தத்துவம் என்றால் உண்மை, உள்ளதை உள்ளவாறே அறிவதைப் பற்றிய கொள்கை, இயல் என்று பொருள். மெய்யியல் துறையில் கருத்துக்கள் எவ்வாறு ஏற்கப்படுகின்றன என்பதும், காரணம், ஏரணம், விவாதம் (தருக்கம்) முதலியன யாவை என்றும் கூர்ந்து நோக்கி ஆராயப்படும்.

தற்காலத்தில் அறிவியல் என்று அறியப்படும் துறை சிறப்புற்று வளரும் முன்னர், மெய்யியல் துறைதான் முன்னணியில் இருந்த அறிவுத்துறை ஆகும். 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இந்தியர்களும், சீனர்களும், செருமானியர்களும், கிரேக்கர்களும் பிற உலக மாந்த இனங்களும் பலவாறாக, அடிப்படையாகச் சிந்தித்து தொகுத்து வைத்த கருத்துக்கள்தாம் மெய்யியலின் தொடக்கம். மெய்யியல் என்பது ஆங்கிலத்தில் Philosophy (ஃபிலாசஃபி) என்று கூறப்படுவது. இச்சொல் கிரேக்கச் சொல்லாகிய Φιλοσοφία (philo-sophia) என்பதில் இருந்து பெற்றது. இசொல்லின் பொருள் அறிவின் பால் காதல் (அறிவால் ஈர்க்கபடும் துறை) என்பதாகும்.

மெய்யியல் என்ற துறை சார்ந்த ஆய்வு செருமானியர் தொடக்கம் மேற்குலகிலேயே தொடங்கியது. ஐரோப்பியர்கள் ஆசியாவை காலனித்துவ ஆட்சி செய்த போது அவர்கள் சீன இந்திய சிந்தனைகளில் பலவற்றை மெய்யியல் சிந்தனைகளாக அடையாளப்படுத்தினார்கள். இவ்வாறே பின்னர் ஆப்பிரிக்க, அமெரிக்க முதற்குடிமக்கள் சிந்தனைகளில் இருந்தும் மெய்யியல் கூறுகள் அடையாளம் காணப்பட்டன. பின்னர் காலனித்துவத்துக்கு உட்பட்டவர்களும் தமது சிந்தனைகளை இவ்வாறு அடையாளப்படுத்தியும், இத் துறை சார்ந்தும் செயற்படத் தொடங்கினர்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 

வகைகள்[தொகு]

மெய்யியல் இருவகைப் படுகின்றது. அவையாவன, கிழக்கத்திய மெய்யியல் மற்றும் மேற்கத்திய மெய்யியல் என்பனவாகும். கருத்தளவிலும் விளக்கமுறையிலும் உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் இவ்வாறு வகைப்படுத்தல் நிகழ்கின்றது.

கிழக்கத்திய மெய்யியல்[தொகு]

கிழக்கத்திய மெய்யியல் (Eastern philosophy) என்பது ஆசியா கண்டத்தில் தோன்றி வளர்ந்த சீன மெய்யியல், ஈரானிய/பாரசீக மெய்யியல், சப்பானிய மெய்யியல், இந்திய மெய்யியல், கொரிய மெய்யியல் ஆகியவற்றைக் குறிக்கும் பொதுப்பெயர் ஆகும்.இச்சொல் பாபிலோனிய மெய்யியல் மற்றும் இசுலாமிய மெய்யியலையும் உள்ளடக்குவதாகக் கொள்ளப்படும். ஆயினும் இவை "மேற்கத்திய மெய்யியலாக" கருதப்படுவதும் உண்டு.

கிழக்கத்திய மெய்யியலுக்குள் அரபி மெய்யியல் மற்றும் யூத மெய்யியலையும் சேர்த்துக் கருதுவது உண்டு. இக்கருத்து புவியியல் அடிப்படையை மட்டும் கொண்டிருப்பதில்லை. மாறாக, கருத்தளவிலும் விளக்கமுறையிலும் மேற்கத்திய மரபுக்கும் கிழக்கத்திய மரபுக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன என்னும் அடிப்படையிலும் இவ்வாறு வகைப்படுத்தல் நிகழ்கிறது.

மேற்கத்திய மெய்யியல்[தொகு]

மேற்குலக மெய்யியல் என்பது மேற்குலகத்தின் மெய்யியல் சிந்தனையையும் முறைமையும் குறிக்கும். மேற்குலக மெய்யியலை இந்தியசீன, முதற்குடிமக்கள், இசுலாமிய மெய்யியல்களில் இருந்து ஒப்பிட்டு வேறுபடுத்தலாம். மெய்யியல் என்ற துறை அவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டு வளர்ச்சி பெற்றது மேற்குலகிலேயே ஆகும். இன்று உலகில் செல்வாக்குச் செலுத்தும் பல்வேறு சட்டஅரசியல், சமூகக் கோட்பாடுகள் மேற்குலக மெய்யியல் இருந்தே தோற்றம்பெற்றன. மேற்குலக மெய்யியல் பண்டைக் கிரேக்கத்தில் உருவான கிரேக்க மெய்யியலுடன் தொடங்குகிறது. பின்னர் இது உலகின் பரந்த பகுதிகளையும் தழுவி வளர்ச்சி அடைந்துள்ளது.

அழகியலும் மெய்யியலும்[தொகு]

அழகியல் மெய்யியலின் ஒரு பிரிவாகத் தொன்றுதொட்டு வளர்ச்சியுற்று வந்துள்ளது. கிரேக்க இலக்கியத்தில் உள்ள மெய்யியல் கோட்பாடுகள் அழகியலுக்கு அடிப்படையாக இருக்கின்றன. மகிழ்ச்சியை ஒரு பொருளிலோ, எழுத்திலோ அல்லது ஒலியிலோ சித்திரிப்பது என்பது கலைஞனின் குறிக்கோளாக உள்ளது. பொருள், மனிதன், நிகழ்ச்சிகள் முதலானவற்றை நுட்பமாக உண்மையாகப் படைப்பதற்கு கலை என்று பெயர். இதில் போலச் செய்தலின் கூறுகள் இருந்த போதிலும் ஒரு பொதுவான முழுமையான மெய்யியல் கலையில் இருத்தல் அவசியம். இக்கருத்தையே அரிஸ்டாட்டில் (384-322 BC) வலியுறுத்தி வந்துள்ளார்.

காண்ட் (1724-1804) போன்ற மெய்யியல்வாதிகள்,அழகியலானது பொருள்களால், எழுத்துப் படைப்பால், காட்சியால் மக்கள் உள்ளத்தில் எழுவதாகும். அறிவுக்கும் கற்பனைக்கும் பொருந்தவல்ல பொருள்களே அழகுடையனவாகக் கருதப்பட வேண்டும் என்றனர்.

ஹெகல் முதன்முதலில் ‘அழகியல்’ என்ற சொல்லாட்சியைக் கையாளுவதற்கு முன்னர், காண்ட் ‘அழகியல்’ என்ற இச்சொல்லை ‘புலனறிவு’ என்னும் பொருளிலேயே பயன்படுத்தினார். எனினும், ஹெகல் என்பார் அழகியலைக் கோட்பாட்டுத் தொடர்புடைய ஆழமான கருத்தில் பயன்படுத்தினார்.[5]

காண்ட்டின் மெய்யியல் கோட்பாடுகள் பலவும் அழகியல் வரலாற்றில் இன்றியமையாததாகக் கருதப்படுகின்றன. அவர் தமது ‘தீர்ப்புக்கள் பற்றிய விமர்சனம்’ என்ற புத்தகத்தில் எடுத்துரைக்கும் பல்வேறு கருத்துக்களை மேலும் தெளிவாகவும் ஆழமாகவும் ஹெகல் அதை முன்வைக்கின்றார். உயர்ந்த ரசனைப் பற்றிய கருத்தில் பகுப்பாய்வு, சார்பற்ற அழகு, அகநிலை சார்ந்த பொதுமை, கடந்த நிலைப்பகுப்பாய்வு போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவற்றை ஹெகல் பயன்படுத்திக் கொண்டார். காண்ட்டின் அழகியல் கோட்பாடுகள் அகவயப்பட்ட அனுபவத்தின் பொதுமையாக வெளிப்படும். இருப்பினும், அறிவியல் அல்லது புலச்சார்பற்ற கூறுகளை வெளிப்படுத்துவதிலும் அவர் ஈடுபாடு காட்டினார். ஹெகலோ அதனை ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட இயங்கியல் கொள்கை அடிப்படையில் வெளிப்படுத்தினார். காண்டின் அகவய புலனனுபவ முறையானது ஹெகலின் இயங்கியல் வாத மெய்யியல் அமைப்புக்குள் புறவயக் கருத்தியலாக வெளிப்படுகிறது. அதனுடைய மெய்யியல் அமைப்பின் உள்ளடக்கமாக அழகியல் விளங்குகிறது.

திணையியலும் மெய்யியலும்[தொகு]

தமிழ் மொழியில் தொல்காப்பியர் உலகின் தோற்றத்தை ஐம்பூதங்களின் உறவு என்று குறிப்பிடுகிறார். திணையியலின் மையமாக விளங்கும் பொருளுக்கும் கருத்துக்கும் இடையேயான உறவுநிலையினைத் தொல்காப்பியம் பல இடங்களிலும் சுட்டிக்காட்டி உள்ளது. நிலமும் பொழுதும் உடைய முதற்பொருள் கருப்பொருள்களுடன் உறவுபூண்டு உரிப் பொருளாக மாற்றம் பெறுகிறது. அகத்திற்கும் புறத்திற்கும் உள்ள உறவு வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது எனவும் உயிருக்கும் மெய்க்குமான உறவு இயக்கத்தைத் தீர்மானிக்கிறது எனவும் தொல்காப்பியம் வரையறுத்துள்ளது

‘மெய்யோடு இயையினும் உயிரியல்திரியா’

என்னும் எழுத்ததிகார நூற்பா (10) வில் மெய்யுடன் உயிர் உறவு கொள்வதை நுட்பமாகத் தொல்காப்பியம் வெளிப்படுத்துகிறது.

‘மெய்யின் வழியது உயிர் தோன்று நிலையே’

என்ற வரி (எழுத்.18) களில் மெய்யின் மூலமாக உயிர் தோன்றுவதை விளக்குகிறது. இவ்வாறு உயிருக்கும் மெய்யுக்குமான திணையியல் சார்ந்த மெய்யியல் உறவைத் தொல்காப்பியம் விளக்கியுரைக்கின்றது.[6]

விசேட பிரிவுகள்[தொகு]

  • சட்ட மெய்யியல்
  • உள மெய்யியல்
  • சமய மெய்யியல்
  • விஞ்ஞான மெய்யியல்
  • மெய்யியலின் மெய்யியல்

நாகரிகங்கள் வாரியாக மெய்யியல்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1.  "Strong's Greek Dictionary 5385".
  2.  "Home : Oxford English Dictionary". oed.com.
  3.  "Online Etymology Dictionary". Etymonline.com.
  4.  போர்க்குணம் கொண்ட பொருள்முதல்வாதத்தின் முக்கியத்துவம் குறித்து- வி. இ. லெனின் -முன்னேற்றப் பதிப்பகம்-மாஸ்கோ-1974
  5.  "அழகியல் : ஒரு மெய்யியல் பகுப்பாய்வு". பார்த்த நாள் 15 சூன் 2017.
  6.  "திணையவியல் என்ற மெய்யியல்". பார்த்த நாள் 15 சூன் 2017.

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 36 மெய்யுணர்தல்

மணக்குடவர் - அதிகார உரை

மெய்யுணர்தலாவது எக்காலத்தினும் எவ்விடத்தினும் அழியாதுநிற்கும் பொருள் இதுவென உணர்தல். இது பற்றறத் துறந்தாரது உள்ள நிகழ்ச்சியாதலான், அதன்பின் கூறப்பட்டது.

பரிமேலழகர் - அதிகார உரை

[அஃதாவது,பிறப்பு வீடுகளையும் அவற்றின் காரணங்களையும் விபரீத ஐயங்களானன்றி உண்மையான் உணர்தல். இதனை வடநூலார் 'தத்துவ ஞானம்' என்ப. இதுவும் பற்றற்றான் பற்றினைப் பற்றியவாறு உளதாவது ஆகலின்,அக்காரண ஒற்றுமைபற்றித் துறவின்பின் வைக்கப்பட்டது.]



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard