Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வாழ்


Guru

Status: Offline
Posts: 7474
Date:
வாழ்
Permalink  
 


வாழ் (1)
வீழ் நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃது ஒருவன்
  வாழ் நாள் வழி அடைக்கும் கல் - குறள் 4:8

 முதல்

 
 வாழ்க்கை (11)
பழி அஞ்சி பாத்து ஊண் உடைத்து ஆயின் வாழ்க்கை
  வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல் - குறள் 5:4
மனை தக்க மாண்பு உடையள் ஆகி தன் கொண்டான்
  வளத்தக்காள் வாழ்க்கை_துணை - குறள் 6:1
மணை மாட்சி இல்லாள்-கண் இல் ஆயின் வாழ்க்கை
  எனை மாட்சித்து ஆயினும் இல் - குறள் 6:2
அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை வன்பால்-கண்
  வற்றல் மரம் தளிர்த்த அற்று - குறள் 8:8
வரு விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
  பருவந்து பாழ்படுதல் இன்று - குறள் 9:3
வரும் முன்னர் காவாதான் வாழ்க்கை எரி முன்னர்
  வைத்தூறு போல கெடும் - குறள் 44:5
அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உள போல
  இல்லாகி தோன்றா கெடும் - குறள் 48:9
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குள வளா
  கோடு இன்றி நீர் நிறைந்து அற்று - குறள் 53:3
இகலின் மிக இனிது என்பவன் வாழ்க்கை
  தவலும் கெடலும் நணித்து - குறள் 86:6
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
  பாம்பொடு உடன் உறைந்த அற்று - குறள் 89:10
மருந்தோ மற்று ஊன் ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
  பீடு அழிய வந்த இடத்து - குறள் 97:8

 முதல்

 
 வாழ்க்கை_துணை (1)
மனை தக்க மாண்பு உடையள் ஆகி தன் கொண்டான்
  வளத்தக்காள் வாழ்க்கை_துணை - குறள் 6:1

 முதல்

 
 வாழ்க்கையவர் (1)
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
  செல்லா தீ வாழ்க்கையவர் - குறள் 33:10

 முதல்

 
 வாழ்க்கையும் (1)
வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என் ஆம்
  தகை மாண்ட தக்கார் செறின் - குறள் 90:7

 முதல்

 
 வாழ்க (1)
ஊடி இருந்தேமா தும்மினார் யாம் தம்மை
  நீடு வாழ்க என்பார்க்கு அறிந்து - குறள் 132:2

 முதல்

 
 வாழ்தல் (4)
ஈதல் இசை பட வாழ்தல் அது அல்லது
  ஊதியம் இல்லை உயிர்க்கு - குறள் 24:1
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
  கெடுக உலகு இயற்றியான் - குறள் 107:2
வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆய்_இழை சாதல்
  அதற்கு அன்னள் நீங்கும் இடத்து - குறள் 113:4
இன்னாது இனன் இல் ஊர் வாழ்தல் அதனினும்
  இன்னாது இனியார் பிரிவு - குறள் 116:8

 முதல்

 
 வாழ்தலின் (2)
புறம் கூறி பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல்
  அறம் கூறும் ஆக்கம் தரும் - குறள் 19:3
ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் அ நிலையே
  கெட்டான் எனப்படுதல் நன்று - குறள் 97:7

 முதல்

 
 வாழ்தும் (2)
சலம் பற்றி சால்பு இல செய்யார் மாசு அற்ற
  குலம் பற்றி வாழ்தும் என்பார் - குறள் 96:6
ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை இளி ஒருவற்கு
  அஃது இறந்து வாழ்தும் எனல் - குறள் 98:1

 முதல்

 
 வாழ்நாள் (1)
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல்
  செல்லாது உயிர் உண்ணும் கூற்று - குறள் 33:6

 முதல்

 
 வாழ்பவன் (2)
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
  முயல்வாருள் எல்லாம் தலை - குறள் 5:7
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
  தெய்வத்துள் வைக்கப்படும் - குறள் 5:10

 முதல்

 
 வாழ்வது (2)
இருந்து ஓம்பி இல் வாழ்வது எல்லாம் விருந்து ஓம்பி
  வேளாண்மை செய்தல் பொருட்டு - குறள் 9:1
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
  கோடியும் அல்ல பல - குறள் 34:7

 முதல்

 
 வாழ்வதோர் (1)
ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம்-கொல்
  நன்று எய்தி வாழ்வதோர் ஆறு - குறள் 94:2

 முதல்

 
 வாழ்வாங்கு (1)
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
  தெய்வத்துள் வைக்கப்படும் - குறள் 5:10

 முதல்

 
 வாழ்வார் (6)
மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்
  நில மிசை நீடு வாழ்வார் - குறள் 1:3
பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க
  நெறி நின்றார் நீடு வாழ்வார் - குறள் 1:6
வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசை ஒழிய
  வாழ்வாரே வாழாதவர் - குறள் 24:10
பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
  அது நோக்கி வாழ்வார் பலர் - குறள் 53:8
உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் மற்று எல்லாம்
  தொழுது உண்டு பின் செல்பவர் - குறள் 104:3
அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கி பிரிவு ஆற்றி
  பின் இருந்து வாழ்வார் பலர் - குறள் 116:10

 முதல்

 
 வாழ்வார்க்கு (2)
செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்று நின்
  வல் வரவு வாழ்வார்க்கு உரை - குறள் 116:1
வாழ்வார்க்கு வானம் பயந்து அற்றால் வீழ்வார்க்கு
  வீழ்வார் அளிக்கும் அளி - குறள் 120:2

 முதல்

 
 வாழ்வாரின் (2)
நெஞ்சின் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து
  வாழ்வாரின் வன்கணார் இல் - குறள் 28:6
வீழ்வாரின் இன் சொல் பெறாஅது உலகத்து
  வாழ்வாரின் வன்கணார் இல் - குறள் 120:8

 முதல்

 
 வாழ்வாரே (3)
வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசை ஒழிய
  வாழ்வாரே வாழாதவர் - குறள் 24:10
உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் மற்று எல்லாம்
  தொழுது உண்டு பின் செல்பவர் - குறள் 104:3

 முதல்

 
 வாழ்வான் (1)
ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
  செத்தாருள் வைக்கப்படும் - குறள் 22:4

 முதல்

 
 வாழ்வானை (1)
குற்றம் இலனாய் குடி செய்து வாழ்வானை
  சுற்றமா சுற்றும் உலகு - குறள் 103:5

 முதல்

 
 வாழா (1)
மயிர் நீப்பின் வாழா கவரிமா அன்னார்
  உயிர் நீப்பர் மானம் வரின் - குறள் 97:9

 முதல்

 
 வாழாத (1)
இளி வரின் வாழாத மானம் உடையார்
  ஒளி தொழுது ஏத்தும் உலகு - குறள் 97:10

 முதல்

 
 வாழாதவர் (1)
வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசை ஒழிய
  வாழ்வாரே வாழாதவர் - குறள் 24:10

 முதல்

 
 வாழாதார் (1)
புகழ் பட வாழாதார் தம் நோவார் தம்மை
  இகழ்வாரை நோவது எவன் - குறள் 24:7

 முதல்

 
 வாழாதான் (1)
அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உள போல
  இல்லாகி தோன்றா கெடும் - குறள் 48:9


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard