Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பூஜ்ஜியத்தை


Guru

Status: Offline
Posts: 7387
Date:
பூஜ்ஜியத்தை
Permalink  
 


பூஜ்ஜியத்தை இந்த உலகிற்கு வழங்கியவர்கள் தமிழர்கள் என நாம் பொருமைப் பட்டுக் கொள்கிறோம். ஆனால் நாம்தான் முதலில் பயன்படுத்தினோம் என்பதற்கு சான்று என்ன, என்ன பெயரில் பயன்படுத்தப் பட்டது..?

பொதுவா ஆக்ஸ்போர்ட் அகராதியில் ஒரு வார்த்தை குறித்த விளக்கம் கொடுக்கும்போது அந்த வார்த்தை முதன்முதலில் எங்கே எவ்வாறு பயன்படுத்தப் பட்டது என்று இலக்கியச் சான்றாக விளக்குவார்கள்.

அந்த விதத்தில் “0” என்பது ஒன்றும் இல்லை என்பதற்கான அர்த்தத்திலும், மேலும் மொத்தமுள்ள 10 இலக்கங்களுடன் வரிசைப்படுத்திப் பாடிய சங்கப் பாடலே முதல் ஆதாரமாக விளங்குகிறது. அதற்கும் முன்பாக எந்த வித சான்றும் உலகில் எங்கேயும் கிடைக்கவில்லை என்பது ஆய்வாளர் கருத்து.

சங்க இலக்கியப் பாடல்களில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடல் மொத்தம் 70 பாடல்களைக் கொண்டது. அவற்றில் 22 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளது.

கீரந்தையார், கடுவன் இளவெயினனார் என மொத்தம் 13 புலவர்கள் பாடியது.
அதிலே கடுவன் இளவெயினனார் இன்றைய மதுரை அழகர்கோவில் திருமாலிருங்குன்றத்து திருமாலைப் போற்றி பாடிய துதிப் பாடல் மூன்றாவதில் இறைவன் எவ்வாரெல்லாம் வியாபித்து இருக்கிறார் என எண்களாக வரிசைப்படுத்துகிறார்.

“பாழெனக் காலெனப் பாகென ஒன்றென
இரண்டென மூன்றென நான்கென ஐந்தென
ஆரென ஏழென எட்டென தொண்டென
நால்வகை ஊழிஎண் நவிற்றும் சிறப்பினை”

இதில் பாழ் என்பது ஒன்றும் இல்லாத “0” என்பது தொடங்கி காலென 1/4. பாகென 1/2, 1,2,3,4,5,6,7,8,9 என எண்களை குறித்து பேசுகிறார்.

கடைச் சங்க காலப் பாடலான இதுவே எண்களில் “0” குறித்து பதியப்பட்ட முதல் சான்று.

மற்ற எண்கள் மற்றும் அதன் மடங்குகள் உலகின் எல்லா நாகரீகங்களிலும் பயன்பட்டு வந்திருந்தாலும் முதன் முதலில் பூஜ்ஜியத்திற்கு அதன் முழு அர்த்ததுடனான ஒரு பெயரிட்டு உலகிற்கு வழங்கியது தமிழே..!!

-ஆனந்தன் சன்னாசி, 4-12-2019



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard