Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஒழுக்கம்


Guru

Status: Offline
Posts: 7474
Date:
ஒழுக்கம்
Permalink  
 


ஒழுக்க (1)
பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க
  நெறி நின்றார் நீடு வாழ்வார் - குறள் 1:6

 முதல்

 
 ஒழுக்கத்தின் (2)
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
  ஏதம் படுபாக்கு அறிந்து - குறள் 14:6
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
  எய்துவர் எய்தா பழி - குறள் 14:7

 முதல்

 
 ஒழுக்கத்து (1)
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
  வேண்டும் பனுவல் துணிவு - குறள் 3:1

 முதல்

 
 ஒழுக்கம் (12)
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
  உயிரினும் ஓம்பப்படும் - குறள் 14:1
பரிந்து ஓம்பி காக்க ஒழுக்கம் தெரிந்து ஓம்பி
  தேரினும் அஃதே துணை - குறள் 14:2
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
  இழிந்த பிறப்பு ஆய்விடும் - குறள் 14:3
மறப்பினும் ஓத்து கொளல் ஆகும் பார்ப்பான்
  பிறப்பு ஒழுக்கம் குன்ற கெடும் - குறள் 14:4
அழுக்காறு உடையான்-கண் ஆக்கம் போன்று இல்லை
  ஒழுக்கம் இலான்-கண் உயர்வு - குறள் 14:5
நன்றிக்கு வித்து ஆகும் நல் ஒழுக்கம் தீ ஒழுக்கம்
  என்றும் இடும்பை தரும் - குறள் 14:8
ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
  வழுக்கியும் வாயால் சொலல் - குறள் 14:9
வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் பூதங்கள்
  ஐந்தும் அகத்தே நகும் - குறள் 28:1
பற்று அற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம் எற்றுஎற்று என்று
  ஏதம் பலவும் தரும் - குறள் 28:5
இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்றே
  ஒழுக்கம் உடையார் வாய் சொல் - குறள் 42:5

 முதல்

 
 ஒழுக்கமும் (1)
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இ மூன்றும்
  இழுக்கார் குடி பிறந்தார் - குறள் 96:2

 முதல்

 
 ஒழுக்கி (1)
ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை
  நோற்பாரின் நோன்மை உடைத்து - குறள் 5:8

 முதல்

 
 ஒழுக்கு (3)
நீர் இன்று அமையாது உலகு எனின் யார் யார்க்கும்
  வான் இன்று அமையாது ஒழுக்கு - குறள் 2:10
பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை சான்றோர்க்கு
  அறன் அன்றோ ஆன்ற ஒழுக்கு - குறள் 15:8
ஒழுக்கு ஆறா கொள்க ஒருவன் தன் நெஞ்சத்து
  அழுக்காறு இலாத இயல்பு - குறள் 17:1

 முதல்

 
 ஒழுக (3)
தகுதி என ஒன்றும் நன்றே பகுதியான்
  பாற்பட்டு ஒழுக பெறின் - குறள் 12:1
தக்கார் இனத்தனாய் தான் ஒழுக வல்லனை
  செற்றார் செயக்கிடந்தது இல் - குறள் 45:6
இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை யாரே
  மிகல் ஊக்கும் தன்மையவர் - குறள் 86:5

 முதல்

 
 ஒழுகப்படும் (2)
நிறை உடைமை நீங்காமை வேண்டின் பொறை உடைமை
  போற்றி ஒழுகப்படும் - குறள் 16:4
இளையர் இன முறையர் என்று இகழார் நின்ற
  ஒளியொடு ஒழுகப்படும் - குறள் 70:8

 முதல்

 
 ஒழுகல் (6)
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்
  கல்லார் அறிவிலாதார் - குறள் 14:10
பருவத்தொடு ஒட்ட ஒழுகல் திருவினை
  தீராமை ஆர்க்கும் கயிறு - குறள் 49:2
சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வம் தான்
  பெற்றத்தால் பெற்ற பயன் - குறள் 53:4
மடியை மடியா ஒழுகல் குடியை
  குடியாக வேண்டுபவர் - குறள் 61:2
செவி சொல்லும் சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல்
  ஆன்ற பெரியார் அகத்து - குறள் 70:4
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடு அற
  வல்லதூஉம் ஐயம் தரும் - குறள் 85:5

 முதல்

 
 ஒழுகலாற்றார் (1)
அளவின்-கண் நின்று ஒழுகலாற்றார் களவின்-கண்
  கன்றிய காதலவர் - குறள் 29:6

 முதல்

 
 ஒழுகலான் (3)
அந்தணர் என்போர் அறவோர் மற்று எ உயிர்க்கும்
  செம் தண்மை பூண்டு ஒழுகலான் - குறள் 3:10
சூழ்வார் கண் ஆக ஒழுகலான் மன்னவன்
  சூழ்வாரை சூழ்ந்து கொளல் - குறள் 45:5
தேவர் அனையர் கயவர் அவரும் தாம்
  மேவன செய்து ஒழுகலான் - குறள் 108:3

 முதல்

 
 ஒழுகான் (1)
அமைந்து ஆங்கு ஒழுகான் அளவு அறியான் தன்னை
  வியந்தான் விரைந்து கெடும் - குறள் 48:4

 முதல்

 
 ஒழுகின் (4)
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
  உள்ளத்துள் எல்லாம் உளன் - குறள் 30:4
சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்று அழித்து
  சார்தரா சார்தரும் நோய் - குறள் 36:9
பெரியாரை பேணாது ஒழுகின் பெரியாரால்
  பேரா இடும்பை தரும் - குறள் 90:2
ஒருமை மகளிரே போல பெருமையும்
  தன்னை தான் கொண்டு ஒழுகின் உண்டு - குறள் 98:4

 முதல்

 
 ஒழுகுதல் (1)
தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்
  வன்மையுள் எல்லாம் தலை - குறள் 45:4

 முதல்

 
 ஒழுகுபவர் (1)
நட்டார் குறை முடியார் நன்று ஆற்றார் நன் நுதலாள்
  பெட்டு ஆங்கு ஒழுகுபவர் - குறள் 91:8

 முதல்

 
 ஒழுகும் (7)
பிறன் பொருளான் பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து
  அறம் பொருள் கண்டார்-கண் இல் - குறள் 15:1
மனத்தது மாசு ஆக மாண்டார் நீர் ஆடி
  மறைந்து ஒழுகும் மாந்தர் பலர் - குறள் 28:8
கொலை மேற்கொண்டாரின் கொடிதே அலை மேற்கொண்டு
  அல்லவை செய்து ஒழுகும் வேந்து - குறள் 56:1
வெருவந்த செய்து ஒழுகும் வெம் கோலன் ஆயின்
  ஒருவந்தம் ஒல்லை கெடும் - குறள் 57:3
மடி மடி கொண்டு ஒழுகும் பேதை பிறந்த
  குடி மடியும் தன்னினும் முந்து - குறள் 61:3
பகை நட்பா கொண்டு ஒழுகும் பண்பு உடையாளன்
  தகைமை-கண் தங்கிற்று உலகு - குறள் 88:4
பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின் நாண் உடை
  பெண்ணே பெருமை உடைத்து - குறள் 91:7

 முதல்

 
 ஒழுகுவார் (5)
விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற தெளிந்தார் இல்
  தீமை புரிந்து ஒழுகுவார் - குறள் 15:3
பொருள் நீங்கி பொச்சாந்தார் என்பர் அருள் நீங்கி
  அல்லவை செய்து ஒழுகுவார் - குறள் 25:6
அகலாது அணுகாது தீ காய்வார் போல்க
  இகல் வேந்தர் சேர்ந்து ஒழுகுவார் - குறள் 70:1
எரியான் சுடப்படினும் உய்வு உண்டாம் உய்யார்
  பெரியார் பிழைத்து ஒழுகுவார் - குறள் 90:6
உட்க படாஅர் ஒளி இழப்பர் எஞ்ஞான்றும்
  கள் காதல் கொண்டு ஒழுகுவார் - குறள் 93:1

 முதல்

 
 ஒழுகுவான் (2)
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல்
  செல்லாது உயிர் உண்ணும் கூற்று - குறள் 33:6
பருவரலும் பைதலும் காணான்-கொல் காமன்
  ஒருவர்-கண் நின்று ஒழுகுவான் - குறள் 120:7


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard