Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கலித்தொகை 99 Darma sasthras


Guru

Status: Offline
Posts: 7474
Date:
கலித்தொகை 99 Darma sasthras
Permalink  
 


99
மருதன் இளநாகனார், மருதம், மன்னனிடம் அவன் மனைவியின் தோழி சொன்னது
நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும் அவை எடுத்து,
அற வினை இன்புறூஉம் அந்தணர் இருவரும்
திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது,
குழவியைப் பார்த்து உறூஉம் தாய் போல், உலகத்து
மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும் 5
பிழையாது வருதல் நின் செம்மையின் தர, வாய்ந்த
இழை அணி கொடித் திண் தேர் இன மணி யானையாய்!

அறன் நிழல் எனக் கொண்டாய் ஆய் குடை; அக் குடை
புற நிழல் கீழ்ப்பட்டாளோ இவள்? இவள் காண்டிகா,
பிறை நுதல் பசப்பு ஊரப் பெரு விதுப்பு உற்றாளை! 10

பொய்யாமை நுவலும் நின் செங்கோல் அச் செங்கோலின்
செய் தொழில் கீழ்ப்பட்டாளோ இவள்? இவள் காண்டிகா,
காம நோய் கடைக்கூட்ட வாழும் நாள் முனிந்தாளை!

ஏமம் என்று இரங்கும் நின் எறி முரசம் அம் முரசின்
ஏமத்து இகந்தாளோ இவள? இவள் காண்டிகா, 15
வேய் நலம் இழந்த தோள் கவின் வாட இழப்பாளை!
ஆங்கு,
நெடிது சேண் இகந்தவை காணினும், தான் உற்ற
வடுக் காட்டக் கண் காணாதற்று ஆக, என் தோழி
தொடி கொட்ப நீத்த கொடுமையைக் 20
கடிது என உணராமை கடிந்ததோ நினக்கே?

99
Maruthan Ilanākanār, Marutham, What the queen’s friend said to the king

O king with a sturdy chariot with banners
and many jingling bells, decorations and
elephants, who is righteous like the unfailing
rains that fall on earth nurturing its citizens,
like a mother who feeds and cares for her child
like the two Brahmins who do not stray
from righteousness protecting both groups,
those who do not drink liquor and those
who drink it!

You are righteous in offering shade under
your beautiful umbrella. Is she one who is
outside of that umbrella shade? Look at her,
who trembles in fear. Pallor has spread on
her crescent-moon forehead.

Your scepter proclaims truthfulness. Is she one
who does not deserve the protection of your
scepter? Look at the one attacked by affliction
who hates living.

Your drum roars offering protection to all. Is she
one who does not get the protection of your drums?
Look at her who is sad, who has lost the beauty of
her bamboo-like arms.

Even when they see what is far away, the eyes are
not able to see their own scars. Is it hard for you to
know your harshness, abandoning my friend and
letting her bangles become loose?

Meanings:  நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும் – those who removed drinking liquor and those who did not remove drinking liquor, அவை எடுத்து அற வினை – who show what is righteous to both, இன்புறூஉம் – with happiness, அந்தணர் இருவரும் – two Brahmins – Viyālan and Velli, திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது – not failing from fairness according to the holy books to those different from each other, குழவியைப் பார்த்து உறூஉம் தாய் போல் – like a mother who who feeds and enjoys her child (உறூஉம் – இன்னிசை அளபெடை), உலகத்து மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும் பிழையாது வருதல் நின் செம்மையின் தர வாய்ந்த – giving due to your righteous nature like the unfailing rain that falls and protects everyone on earth, இழை அணி – decorated with ornaments, கொடித் திண் தேர் – sturdy chariots with flags, இன மணி – with clusters of bells, many bells, யானையாய் – O one with elephants,

அறன் நிழல் எனக் கொண்டாய் – you are righteous in offering shade (அறன் – அறம் என்பதன் போலி), ஆய் குடை – beautiful umbrella, அக் குடை புற நிழல் கீழ்ப்பட்டாளோ இவள் – is she one outside of that umbrella shade, இவள் காண்டிகா – look at her (காண்டிகா – காண்டி’ என்னும் முன்னிலை வினையொடு ‘கா’ என்னும் அசைநிலை இடைச்சொல் நின்றது, an expletive of the second person), பிறை நுதல் பசப்பு ஊரப் பெரு விதுப்பு உற்றாளை – the woman who is very fearful as pallor spreads on her crescent-moon like forehead,

பொய்யாமை நுவலும் நின் செங்கோல் – your scepter proclaims truthfulness, அச் செங்கோலின் செய் தொழில் கீழ்ப்பட்டாளோ இவள் – is she one who does not deserve your just scepter, இவள் காண்டிகா – look at her (காண்டிகா – காண்டி’ என்னும் முன்னிலை வினையொடு ‘கா’ என்னும் அசைநிலை இடைச்சொல் நின்றது, an expletive of the second person), காம நோய் கடைக்கூட்ட வாழும் நாள் முனிந்தாளை – the woman who ended up with love affliction who hates to live,

ஏமம் என்று இரங்கும் நின் எறி முரசம் – your drum roars that it will protect, அம் முரசின் ஏமத்து இகந்தாளோ இவள் – is she one who does not get the protection of your drums (இகந்தாளோ – ஓகாரம் எதிர்மறை), இவள் காண்டிகா – look at her (காண்டிகா – காண்டி’ என்னும் முன்னிலை வினையொடு ‘கா’ என்னும் அசைநிலை இடைச்சொல் நின்றது, an expletive of the second person), வேய் நலம் இழந்த தோள் கவின் வாட இழப்பாளை – the woman who is sad who lost her the beauty of her bamboo-like arms,

ஆங்கு – அசை நிலை, an expletive, நெடிது சேண் இகந்தவை காணினும் – even if they are able to see what is far away, தான் உற்ற வடுக் காட்டக் கண் காணாதற்று – eyes will not be able to see the scars on themselves, ஆக என் தோழி தொடி கொட்ப – as my friend’s bangles whirled (loose), நீத்த கொடுமையை – the cruelty of abandoning her, கடிது என உணராமை – not realizing that it is harsh, கடிந்ததோ நினக்கே – is it hard



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

கலித்தொகை 99 Kalitogai 99

 
Magic_Mermaid_Redhead_436742.jpg
அவள்
சான்றோர் கூற்று

நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும், அவை எடுத்து,
அற வினை இன்புறூஉம் அந்தணர் இருவரும்
திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது,
குழவியைப் பார்த்து உறூஉம் தாய் போல், உலகத்து
மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும்  5
பிழையாது வருதல் நின் செம்மையின் தர, வாய்ந்த
இழை அணி கொடித் திண் தேர், இன மணி யானையாய்!

கள் உண்ணக் கூடாது என விலக்கிக்கொண்டு வாழ்பவருக்கும், கள் உண்டு வாழ்பவருக்கும் அறச் செயல் இது என எடுத்துரைப்பவர் அந்தணர். அந்தணர் இரு வகைப் படுவர். வேதம் ஓதுபவர் ஒரு வகை. மக்களை வழிப்படுத்துபவர் மற்றொரு வகை. இவர்கள் இருவருமே மக்களுக்கு அறிவுரை வழங்கி நெறிப்படுத்துவர். நூல் நெறி பிழையாமல் வாழ்ந்து காட்டுவர். குழந்தையை வளர்க்கும் தாய் போல், மக்களுக்கு உதவுவர். இவர்களின் நன்னடத்தையால் உலகத்தில் மழை சுரந்து பொழியும். அதனால் உலகத்துக்கு நல்லூழி அமையும். அறம் பிழையாது. செம்மை மாறாது. இப்படி உலகம் இயங்க உதவும் மற்றோருவர் ஆளும் அரசன். இப்படி ஆளும் அரசனே! அழகு செய்யப்பட்ட தேரில் வருபவனே! மணிகள் பல ஒலிக்கும் யானை மேல் வருபவனே!

அறன் நிழல் எனக் கொண்டாய், ஆய் குடை; அக் குடைப்
புற நிழற்கீழ்ப் பட்டாளோ, இவள்? இவண் காண்டிகா

உன் வெண்கொற்றக் குடை அறநெறியை நிழலாகத் தருகிறது. அப்படிப்பட்ட குடை நிழலுக்கு வெளியே இவள் கிடக்கிறாளோ? இவளைப் பார். தன் கணவன் அறநெறி பிறந்து மற்றொருத்தியிடம் இருக்க இவள் துன்புற்றுக்கொண்டிருக்கிறாள். 

பிறை நுதல் பசப்பு ஊரப் பெரு விதுப்பு உற்றாளை!   10
பொய்யாமை நுவலும், நின் செங்கோல்; அச் செங்கோலின்
செய் தொழில் கீழ்ப் பட்டாளோ, இவள்? இவண் காண்டிகா

இவளைப் பார். பிறை போன்ற நெற்றியில் பசப்பு நோய் ஏறி அவளது கணவன் வரவுக்காக ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறாள். உன் செங்கோல் ஆளுகைக்குள் அழுத்தப்பட்டு மூழ்கிக் கிடக்கிறாளா?

காம நோய் கடைக்கூட்ட வாழும் நாள் முனிந்தாளை!
ஏமம் என்று இரங்கும், நின் எறி முரசம்; அம் முரசின்
ஏமத்து இகந்தாளோ, இவள்? இவண் காண்டிகா   15
வேய் நலம் இழந்த தோள் கவின் வாட இழப்பாளை!

இவளைப் பார். காம நோய் இவளை வருத்துகிறது. தான் வாழும் நாளையே இவள் நொந்துகொண்டிருக்கிறாள். "பாதுகாவல் தருவேன்" என்று உன் முரசு முழங்குகிறது. அந்த முரசின் பாதுகாவலில் இவள் இல்லையா? மூங்கில் போன்ற இவளது தோள் வாடிக் கிடக்கிறதே! 

ஆங்கு

நெடிது சேண் இகந்தவை காணினும், தான் உற்ற
வடுக் காட்ட, கண் காணாதற்றாக, என் தோழி
தொடி கொட்ப நீத்த கொடுமையைக்   20
கடிது என உணராமை கடிந்ததோ, நினக்கே?

இப்படியெல்லாம் நேர்ந்துள்ளது. இவள் கணவன் இவளை விட்டுவிட்டு நீண்ட காலம் வெளியில் தங்கிவிட்டான். இவளோ அவன் குற்றத்தைக் காட்டினாலும் காணாமல் அவனுக்காகவே ஏங்குகிறாள். அவளது வளையல்கள் கழன்று விழுகின்றன. இந்தக் கொடுமையை ஆளும் அரசனாகிய நீ கண்டுகொள்ளவில்லை. இது உனக்குத் தகுமா?

அரசன் தலைவனாயவன் தலைவியை நீங்கி இருந்ததற்குத் தலைவி புலவி நீட்டித்துஆற்றாளாய வழி, அவட்கு நிகழ்ந்த காமத்து மிகு திறத்தை அவ் அரசனை நோக்கிச் சான்றோர் கூறியது. இது பெருந்திணை.

தரவு - அடி வளர்ந்து நின்ற தாழிசை 3 - தனிச்சொல் - சுரிதகம் என அமைந்த நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா

கலித்தொகை – மருதக் கலி
பாடியவர் – மருதன் இளநாகனார்
திணை - மருதம்
கி.மு. காலத்துப் பாடல்


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard