Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அறிவு


Guru

Status: Offline
Posts: 7474
Date:
அறிவு
Permalink  
 


அறி (3)
இடன்_இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
  கடன் அறி காட்சியவர் - குறள் 22:8
வான் உயர் தோற்றம் எவன் செய்யும் தன் நெஞ்சம்
  தான் அறி குற்றப்படின் - குறள் 28:2
அறி கொன்று அறியான் எனினும் உறுதி
  உழை இருந்தான் கூறல் கடன் - குறள் 64:8

 முதல்

 
 அறி-தொறு (1)
அறி-தொறு அறியாமை கண்டு அற்றால் காமம்
  செறி-தோறும் சே_இழை மாட்டு - குறள் 111:10

 முதல்

 
 அறிக (2)
கேதுவல் யான் என்பது அறிக தன் நெஞ்சம்
  நடுவு ஒரீஇ அல்ல செயின் - குறள் 12:6
அரும் கேடன் என்பது அறிக மருங்கு ஓடி
  தீவினை செய்யான் எனின் - குறள் 21:10

 முதல்

 
 அறிகல்லாதவர் (1)
அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
  அஃது அறிகல்லாதவர் - குறள் 43:7

 முதல்

 
 அறிகிலார் (1)
அறிகிலார் எல்லாரும் என்றே என் காமம்
  மறுகில் மறுகும் மருண்டு - குறள் 114:9

 முதல்

 
 அறிதல் (1)
வன்கண் குடிகாத்தல் கற்று அறிதல் ஆள்வினையோடு
  ஐந்துடன் மாண்டது அமைச்சு - குறள் 64:2

 முதல்

 
 அறிந்த (5)
பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த
  மக்கள் பேறு அல்ல பிற - குறள் 7:1
செயற்கை அறிந்த கடைத்தும் உலகத்து
  இயற்கை அறிந்து செயல் - குறள் 64:7
அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
  தொகை அறிந்த தூய்மையவர் - குறள் 72:1
வகை அறிந்து வல் அவை வாய்சோரார் சொல்லின்
  தொகை அறிந்த தூய்மையவர் - குறள் 73:1
உறாஅதோ ஊர் அறிந்த கௌவை அதனை
  பெறாஅது பெற்று அன்ன நீர்த்து - குறள் 115:3

 முதல்

 
 அறிந்தது (1)
மாலை நோய் செய்தல் மணந்தார் அகலாத
  காலை அறிந்தது இலேன் - குறள் 123:6

 முதல்

 
 அறிந்தவை (1)
மறைந்தவை கேட்க வற்று ஆகி அறிந்தவை
  ஐயப்பாடு இல்லதே ஒற்று - குறள் 59:7

 முதல்

 
 அறிந்தார் (4)
அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும்
  களவு அறிந்தார் நெஞ்சில் கரவு - குறள் 29:8
தாம் இன்புறுவது உலகு இன்புற கண்டு
  காமுறுவர் கற்று அறிந்தார் - குறள் 40:9
கற்று அறிந்தார் கல்வி விளங்கும் கசடு அற
  சொல் தெரிதல் வல்லார் அகத்து - குறள் 72:7

 முதல்

 
 அறிந்தான் (1)
அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் எஞ்ஞான்றும்
  திறன் அறிந்தான் தேர்ச்சி துணை - குறள் 64:5

 முதல்

 
 அறிந்து (39)
செறிவு அறிந்து சீர்மை பயக்கும் அறிவு அறிந்து
  ஆற்றின் அடங்க பெறின் - குறள் 13:3
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
  ஏதம் படுபாக்கு அறிந்து - குறள் 14:6
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்கு ஆற்றின்
  ஏதம் படு பாக்கு அறிந்து - குறள் 17:4
அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் சேரும்
  திறன் அறிந்து ஆங்கே திரு - குறள் 18:9
அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
  திறன் அறிந்து தேர்ந்து கொளல் - குறள் 45:1
நன்று ஆற்றலுள்ளும் தவறு உண்டு அவரவர்
  பண்பு அறிந்து ஆற்றா-கடை - குறள் 47:9
ஒல்வது அறிவது அறிந்து அதன்-கண் தங்கி
  செல்வார்க்கு செல்லாதது இல் - குறள் 48:2
ஆற்றின் அளவு அறிந்து ஈக அது பொருள்
  போற்றி வழங்கும் நெறி - குறள் 48:7
அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உள போல
  இல்லாகி தோன்றா கெடும் - குறள் 48:9
அரு வினை என்ப உளவோ கருவியான்
  காலம் அறிந்து செயின் - குறள் 49:3
ஆற்றாரும் ஆற்றி அடுப இடன் அறிந்து
  போற்றார்-கண் போற்றி செயின் - குறள் 50:3
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன் அறிந்து
  துன்னியார் துன்னி செயின் - குறள் 50:4
அறிந்து ஆற்றி செய்கிற்பாற்கு அல்லால் வினை தான்
  சிறந்தான் என்று ஏவல்-பாற்று அன்று - குறள் 52:5
பொறி இன்மை யார்க்கும் பழி அன்று அறிவு அறிந்து
  ஆள்வினை இன்மை பழி - குறள் 62:8
அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் எஞ்ஞான்றும்
  திறன் அறிந்தான் தேர்ச்சி துணை - குறள் 64:5
செயற்கை அறிந்த கடைத்தும் உலகத்து
  இயற்கை அறிந்து செயல் - குறள் 64:7
திறன் அறிந்து சொல்லுக சொல்லை அறனும்
  பொருளும் அதனின் ஊங்கு இல் - குறள் 65:4
சொல்லுக சொல்லை பிறிது ஓர் சொல் அ சொல்லை
  வெல்லும் சொல் இன்மை அறிந்து - குறள் 65:5
கடன் அறிந்து காலம் கருதி இடன் அறிந்து
  எண்ணி உரைப்பான் தலை - குறள் 69:7
குறிப்பு அறிந்து காலம் கருதி வெறுப்பு இல
  வேண்டுப வேட்ப சொலல் - குறள் 70:6
அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
  தொகை அறிந்த தூய்மையவர் - குறள் 72:1
வகை அறிந்து வல் அவை வாய்சோரார் சொல்லின்
  தொகை அறிந்த தூய்மையவர் - குறள் 73:1
ஆற்றின் அளவு அறிந்து கற்க அவை அஞ்சா
  மாற்றம் கொடுத்தல் பொருட்டு - குறள் 73:5
அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து
  தீது இன்றி வந்த பொருள் - குறள் 76:4
தார் தாங்கி செல்வது தானை தலைவந்த
  போர் தாங்கும் தன்மை அறிந்து - குறள் 77:7
வகை அறிந்து தன் செய்து தன் காப்ப மாயும்
  பகைவர்-கண் பட்ட செருக்கு - குறள் 88:8
அற்றால் அளவு அறிந்து உண்க அஃது உடம்பு
  பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு - குறள் 95:3
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறு அல்ல
  துய்க்க துவர பசித்து - குறள் 95:4
இழிவு அறிந்து உண்பான்-கண் இன்பம் போல் நிற்கும்
  கழி பேர் இரையான்-கண் நோய் - குறள் 95:6
கடன் என்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து
  சான்றாண்மை மேற்கொள்பவற்கு - குறள் 99:1
கண் உள்ளார் காதலவராக கண்ணும்
  எழுதேம் கரப்பாக்கு அறிந்து - குறள் 113:7
நெஞ்சத்தார் காதலவராக வெய்து உண்டல்
  அஞ்சுதும் வேபாக்கு அறிந்து - குறள் 113:8
உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல்
  பொய்த்தல் அறிந்து என் புலந்து - குறள் 129:7
ஊடி இருந்தேமா தும்மினார் யாம் தம்மை
  நீடு வாழ்க என்பார்க்கு அறிந்து - குறள் 132:2

 முதல்

 
 அறிந்தும் (1)
கல்லாதவரின் கடை என்ப கற்று அறிந்தும்
  நல்லார் அவை அஞ்சுவார் - குறள் 73:9

 முதல்

 
 அறிந்தேன் (1)
பண்டு அறியேன் கூற்று என்பதனை இனி அறிந்தேன்
  பெண் தகையான் பேர் அமர் கட்டு - குறள் 109:3

 முதல்

 
 அறிய (2)
சிறப்பு அறிய ஒற்றின்-கண் செய்யற்க செய்யின்
  புறப்படுத்தான் ஆகும் மறை - குறள் 59:10
அழ சொல்லி அல்லது இடித்து வழக்கு அறிய
  வல்லார் நட்பு ஆய்ந்து கொளல் - குறள் 80:5

 முதல்

 
 அறியலம் (1)
நாண் என ஒன்றோ அறியலம் காமத்தான்
  பேணியார் பெட்ப செயின் - குறள் 126:7

 முதல்

 
 அறியா (3)
கேடு அறியா கெட்ட இடத்தும் வளம் குன்றா
  நாடு என்ப நாட்டின் தலை - குறள் 74:6
பொய்படும் ஒன்றோ புனை பூணும் கை அறியா
  பேதை வினை மேற்கொளின் - குறள் 84:6
மதியும் மடந்தை முகனும் அறியா
  பதியின் கலங்கிய மீன் - குறள் 112:6

 முதல்

 
 அறியாது (1)
மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது
  அலர் எமக்கு ஈந்தது இ ஊர் - குறள் 115:2

 முதல்

 
 அறியாமை (4)
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
  ஏதில ஏதிலார் நூல் - குறள் 44:10
கை அறியாமை உடைத்தே பொருள் கொடுத்து
  மெய் அறியாமை கொளல் - குறள் 93:5
அறி-தொறு அறியாமை கண்டு அற்றால் காமம்
  செறி-தோறும் சே_இழை மாட்டு - குறள் 111:10

 முதல்

 
 அறியார் (7)
அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார்
  மறத்திற்கும் அஃதே துணை - குறள் 8:6
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
  கோடியும் அல்ல பல - குறள் 34:7
உடை தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி
  இடை-கண் முரிந்தார் பலர் - குறள் 48:3
காதன்மை கந்தா அறிவு அறியார் தேறுதல்
  பேதைமை எல்லாம் தரும் - குறள் 51:7
அவை அறியார் சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின்
  வகை அறியார் வல்லதூஉம் இல் - குறள் 72:3
அலர் எழ ஆர் உயிர் நிற்கும் அதனை
  பலர் அறியார் பாக்கியத்தால் - குறள் 115:1

 முதல்

 
 அறியார்-கொல் (1)
ஈத்து உவக்கும் இன்பம் அறியார்-கொல் தாம் உடைமை
  வைத்து இழக்கும் வன்கணவர் - குறள் 23:8

 முதல்

 
 அறியார்க்கு (1)
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
  மென்மை பகைவர் அகத்து - குறள் 88:7

 முதல்

 
 அறியான் (3)
அமைந்து ஆங்கு ஒழுகான் அளவு அறியான் தன்னை
  வியந்தான் விரைந்து கெடும் - குறள் 48:4
அறி கொன்று அறியான் எனினும் உறுதி
  உழை இருந்தான் கூறல் கடன் - குறள் 64:8
அஞ்சும் அறியான் அமைவு இலன் ஈகலான்
  தஞ்சம் எளியன் பகைக்கு - குறள் 87:3

 முதல்

 
 அறியும் (2)
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்
  ஒண்_தொடி கண்ணே உள - குறள் 111:1
நோதல் எவன் மற்று நொந்தார் என்று அஃது அறியும்
  காதலர் இல்லா வழி - குறள் 131:8

 முதல்

 
 அறியேன் (4)
களித்து அறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
  ஒளித்ததூஉம் ஆங்கே மிகும் - குறள் 93:8
பண்டு அறியேன் கூற்று என்பதனை இனி அறிந்தேன்
  பெண் தகையான் பேர் அமர் கட்டு - குறள் 109:3
உள்ளுவன்-மன் யான் மறப்பின் மறப்பு அறியேன்
  ஒள் அமர் கண்ணாள் குணம் - குறள் 113:5
மறப்பின் எவன் ஆவன்-மன்-கொல் மறப்பு அறியேன்
  உள்ளினும் உள்ளம் சுடும் - குறள் 121:7

 முதல்

 
 அறிவது (5)
பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த
  மக்கள் பேறு அல்ல பிற - குறள் 7:1
தன் நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்த பின்
  தன் நெஞ்சே தன்னை சுடும் - குறள் 30:3
ஒல்வது அறிவது அறிந்து அதன்-கண் தங்கி
  செல்வார்க்கு செல்லாதது இல் - குறள் 48:2
கற்று கண் அஞ்சான் செல சொல்லி காலத்தால்
  தக்கது அறிவது ஆம் தூது - குறள் 69:6
செற்றார் பின் செல்லா பெருந்தகைமை காம நோய்
  உற்றார் அறிவது ஒன்று அன்று - குறள் 126:5

 முதல்

 
 அறிவல் (1)
இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
  ஏதிலர் என்னும் இ ஊர் - குறள் 113:9

 முதல்

 
 அறிவன் (1)
கற்றதனால் ஆய பயன் என்-கொல் வால்_அறிவன்
  நல் தாள் தொழாஅர் எனின் - குறள் 1:2

 முதல்

 
 அறிவாம் (1)
அன்று அறிவாம் என்னாது அறம் செய்க மற்று அது
  பொன்றும்-கால் பொன்றா துணை - குறள் 4:6

 முதல்

 
 அறிவார் (4)
அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
  அஃது அறிகல்லாதவர் - குறள் 43:7
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
  அஞ்சல் அறிவார் தொழில் - குறள் 43:8
நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
  பண்பு உள பாடு அறிவார் மாட்டு - குறள் 100:5
கரப்பு இலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று
  இரப்பும் ஓர் ஏஎர் உடைத்து - குறள் 106:3

 முதல்

 
 அறிவாரின் (1)
நன்று அறிவாரின் கயவர் திரு உடையர்
  நெஞ்சத்து அவலம் இலர் - குறள் 108:2

 முதல்

 
 அறிவாளன் (1)
ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகு அவாம்
  பேர் அறிவாளன் திரு - குறள் 22:5

 முதல்

 
 அறிவான் (4)
ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
  செத்தாருள் வைக்கப்படும் - குறள் 22:4
தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் என்-கொலோ
  மன் உயிர்க்கு இன்னா செயல் - குறள் 32:8
செய்வினை செய்வான் செயல் முறை அ வினை
  உள் அறிவான் உள்ளம் கொளல் - குறள் 68:7
கூறாமை நோக்கி குறிப்பு அறிவான் எஞ்ஞான்றும்
  மாறா நீர் வையக்கு அணி - குறள் 71:1

 முதல்

 
 அறிவிப்ப (1)
தணந்தமை சால அறிவிப்ப போலும்
  மணந்த நாள் வீங்கிய தோள் - குறள் 124:3

 முதல்

 
 அறிவில்லார் (1)
யாம் கண்ணின் காண நகுப அறிவில்லார்
  யாம் பட்ட தாம் படாவாறு - குறள் 114:10

 முதல்

 
 அறிவிலா (1)
செறுவார்க்கு சேண் இகவா இன்பம் அறிவிலா
  அஞ்சும் பகைவர் பெறின் - குறள் 87:9

 முதல்

 
 அறிவிலாதார் (1)
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்
  கல்லார் அறிவிலாதார் - குறள் 14:10

 முதல்

 
 அறிவிலார் (3)
அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
  அஃது அறிகல்லாதவர் - குறள் 43:7
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
  என் உடையரேனும் இலர் - குறள் 43:10
அறிவிலார் தாம் தம்மை பீழிக்கும் பீழை
  செறுவார்க்கும் செய்தல் அரிது - குறள் 85:3

 முதல்

 
 அறிவிலான் (2)
அறிவிலான் நெஞ்சு உவந்து ஈதல் பிறிது யாதும்
  இல்லை பெறுவான் தவம் - குறள் 85:2
அரு மறை சோரும் அறிவிலான் செய்யும்
  பெரு மிறை தானே தமக்கு - குறள் 85:7

 முதல்

 
 அறிவின்மை (1)
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிது இன்மை
  இன்மையா வையாது உலகு - குறள் 85:1

 முதல்

 
 அறிவினர் (1)
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப
  மாய மகளிர் முயக்கு - குறள் 92:8

 முதல்

 
 அறிவினவர் (3)
மிகல் மேவல் மெய் பொருள் காணார் இகல் மேவல்
  இன்னா அறிவினவர் - குறள் 86:7
பொருள்_பொருளார் புன் நலம் தோயார் அருள் பொருள்
  ஆயும் அறிவினவர் - குறள் 92:4
பொது நலத்தார் புன் நலம் தோயார் மதி நலத்தின்
  மாண்ட அறிவினவர் - குறள் 92:5

 முதல்

 
 அறிவினார் (1)
அரும் பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
  பெரும் பயன் இல்லாத சொல் - குறள் 20:8

 முதல்

 
 அறிவினார்க்கு (1)
எதிரதா காக்கும் அறிவினார்க்கு இல்லை
  அதிர வருவதோர் நோய் - குறள் 43:9

 முதல்

 
 அறிவினான் (1)
அறிவினான் ஆவது உண்டோ பிறிதின் நோய்
  தம் நோய் போல் போற்றா-கடை - குறள் 32:5

 முதல்

 
 அறிவினுள் (1)
அறிவினுள் எல்லாம் தலை என்ப தீய
  செறுவார்க்கும் செய்யா விடல் - குறள் 21:3

 முதல்

 
 அறிவினை (1)
பொச்சாப்பு கொல்லும் புகழை அறிவினை
  நிச்சம் நிரப்பு கொன்று ஆங்கு - குறள் 54:2

 முதல்

 
 அறிவு (22)
பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த
  மக்கள் பேறு அல்ல பிற - குறள் 7:1
செறிவு அறிந்து சீர்மை பயக்கும் அறிவு அறிந்து
  ஆற்றின் அடங்க பெறின் - குறள் 13:3
அஃகி அகன்ற அறிவு என் ஆம் யார் மாட்டும்
  வெஃகி வெறிய செயின் - குறள் 18:5
களவு என்னும் கார் அறிவு ஆண்மை அளவு என்னும்
  ஆற்றல் புரிந்தார்-கண் இல் - குறள் 29:7
எ பொருள் எ தன்மைத்து ஆயினும் அ பொருள்
  மெய் பொருள் காண்பது அறிவு - குறள் 36:5
பிறப்பு என்னும் பேதைமை நீங்க சிறப்பு என்னும்
  செம் பொருள் காண்பது அறிவு - குறள் 36:8
பேதை படுக்கும் இழவு_ஊழ் அறிவு அகற்றும்
  ஆகல்_ஊழ் உற்ற-கடை - குறள் 38:2
அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இ நான்கும்
  எஞ்சாமை வேந்தற்கு இயல்பு - குறள் 39:2
தொட்டு அனைத்து ஊறும் மணல் கேணி மாந்தர்க்கு
  கற்று அனைத்து ஊறும் அறிவு - குறள் 40:6
அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
  உள் அழிக்கல் ஆகா அரண் - குறள் 43:1
சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ
  நன்றின்-பால் உய்ப்பது அறிவு - குறள் 43:2
எ பொருள் யார் யார் வாய் கேட்பினும் அ பொருள்
  மெய் பொருள் காண்பது அறிவு - குறள் 43:3
எண் பொருள ஆக செல சொல்லி தான் பிறர்வாய்
  நுண் பொருள் காண்பது அறிவு - குறள் 43:4
உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
  கூம்பலும் இல்லது அறிவு - குறள் 43:5
எவ்வது உறைவது உலகம் உலகத்தொடு
  அவ்வது உறைவது அறிவு - குறள் 43:6
நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்று ஆகும் மாந்தர்க்கு
  இனத்து இயல்பது ஆகும் அறிவு - குறள் 46:2
மனத்து உளது போல காட்டி ஒருவற்கு
  இனத்து உளது ஆகும் அறிவு - குறள் 46:4
காதன்மை கந்தா அறிவு அறியார் தேறுதல்
  பேதைமை எல்லாம் தரும் - குறள் 51:7
அன்பு அறிவு தேற்றம் அவா இன்மை இ நான்கும்
  நன்கு உடையான்-கட்டே தெளிவு - குறள் 52:3
பொறி இன்மை யார்க்கும் பழி அன்று அறிவு அறிந்து
  ஆள்வினை இன்மை பழி - குறள் 62:8
அன்பு அறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூது உரைப்பார்க்கு
  இன்றியமையாத மூன்று - குறள் 69:2
அறிவு உரு ஆராய்ந்த கல்வி இ மூன்றன்
  செறிவு உடையான் செல்க வினைக்கு - குறள் 69:4

 முதல்

 
 அறிவுடைமை (1)
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து
  மன் உயிர்க்கு எல்லாம் இனிது - குறள் 7:8

 முதல்

 
 அறிவுடையார் (8)
அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் சேரும்
  திறன் அறிந்து ஆங்கே திரு - குறள் 18:9
கல்லாதான் ஒட்பம் கழிய நன்று ஆயினும்
  கொள்ளார் அறிவுடையார் - குறள் 41:4
அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
  அஃது அறிகல்லாதவர் - குறள் 43:7
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
  என் உடையரேனும் இலர் - குறள் 43:10
அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
  திறன் அறிந்து தேர்ந்து கொளல் - குறள் 45:1
ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய் வினை
  ஊக்கார் அறிவுடையார் - குறள் 47:3
பேதை பெரும் கெழீஇ நட்பின் அறிவுடையார்
  ஏது இன்மை கோடி உறும் - குறள் 82:6
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
  பிரிவு ஓர் இடத்து உண்மையான் - குறள் 116:3

 முதல்

 
 அறிவுடையான் (1)
வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான்
  உள்ளத்தின் உள்ள கெடும் - குறள் 63:2

 முதல்

 
 அறிவும் (1)
ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின்
  நீள் வினையான் நீளும் குடி - குறள் 103:2

 முதல்

 
 அறிவே (1)
நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன்
  உண்மை அறிவே மிகும் - குறள் 38:3

 முதல்

 
 அறின் (1)
உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பு இலார் கேண்மை
  பெறினும் இழப்பினும் என் - குறள் 82:2


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard