ஒரே பிறப்பில் விடு எங்கோ இசைத்த சிலம்பின் தலைவியாகிய மாபத் தினி - கண்ணகியைப்பற்றி எத்துணையோ கருத்துகள் பேசப்பெற்று உள்ளன. கற்புக் கடம் பூண்ட அத் தெய்வத்தைப் பற்றிப்பல்வேறு கோணங்களிலிருந்து ஆராய்ச்சிகள் நடைபெற்று உள்ளன. எனினும், கண்ணகி பிறக்கும்பொழுதே தெய்வத் தன்மையோடு பிறந்தவரா? அன்றி, ஏனைய மாந்தரைப்போலவே பிறந்து, தம்முடைய உறுதிப்பாடு காரணமாகத் தெய்வத் தன்மையை எய்தியவரா என்பதுபற்றிச் சிந்திப்பதில் தவறு இல்லை என்றே தோன்றுகிறது. -
சிலப்பதிகார ஆசிரியர் எந்தச் சமயத்தைச் சேர்ந்தவர் என்பது பற்றி முதல் கட்டுரையில் பேசப்பட்டுள்ளது. காப்பியத் தலைவனாகிய கோவலன் சமண சமயத்தைச் சேர்ந்தவன் அல்லன் என்பதும் முதல் கட்டுரையில் கூறியுள்ளோம். சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்”(கொலை 18-19 அடிகள்) என்ற அடியைத் தவிர, அந்தக் கருனை மறவனின் சமயம் யாது என்பதை விளக்கும் சான்றுக்ள் இருப்பதாகத் தெரியவில்லை. என்றாலும், இத் தமிழ் நாட்டில் பண்டு தொட்டுப் பயின்று வருவனவாகிய சைவ, வைணவக் கொள்கைகளின் அடிப் படையில் இக் காப்பியத் தலைவியின் வளர்ச்சியை ஆராய்வதில் தவறு ஒன்றுமில்லை.
'யான், எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்” என்று தமிழ் மறையும் அற்றது பற்று எனில் உற்றது விடு” என்று வைணவ மறையும் அறுதியிட்டுக் கூறுகின்றன. எனவே, பற்றற்ற நிலையில், அகங்காரம் எனப்பெறு வதாகிய யானும், மமகாரம் எனப்பெறுவதாகிய எனதும் அழிந்த நிலையில், வீடு கைமேற் கிடைக்கும் என்ற கருத்தை அறி கின்றோம். மிகப் பழமையானதாகிய தமிழ் மறையும், இடைக் காலத்ததாகிய வைணவ மறையும் இந்த ஒரே கருத்தை வலி யுறுத்திச் சொல்கின்றமையால் இக் கருத்து, மிகப் பழைய காலந்தொட்டுத் தமிழ் நாட்டில் வழங்கிவந்த ஒன்று என்று நினைப்பதில் தவறில்லை.
ஒருவன் எத்துணைச் சிறப்புடையவனாயினும் அவன் பிறப்போடு ஒன்றியுள்ள அகங்காரத்தை அறவே அறுத்து அகற்றினாலொழிய, வீடுபேற்றைக் காணுமாறு இல்லை. செம்பில் இயல்பாகவே கூடியுள்ள களிம்பைப்போல ஆன்மாவைப் பற்றி நிற்கின்ற இந்த ஆணவம் அல்லது அகங்காரம் என்னும் களிம்பு எளிதில் போக்கக்கூடியது அன்று புளி முதலியன கொண்டு வேறு ஒரு கர்த்தா முன்னின்று நீக்கும்பொழுது செம்பில் உள்ள களிம்பு நீங்குவதுபோல, ஆன்மாவைப் பற்றியுள்ள அகங்கார மாகிய களிம்பும், விஞ்ஞானம் அல்லது அறிவு விளக்கம் என்னும் புளி கொண்டு பிறிதொரு கர்த்தாவால் நீக்கப்பெறும்பொழுது தான் நீங்குகிறது.
மனிதனிடத்திலுள்ள பிற குற்றங்களைக் களைவதைவிட இந்த ஆணவமாகிய குற்றத்தைக் களைதல் மிகமிகக் கடின மானதாகும். ஒருசில குற்றங்கள்களையப்பெற்றவுடன் அறுதியாக நீங்கிவிடுகின்றன. இன்னும் சில குற்றங்களைக் களைய முயன் றால், உள்ளேயே அடங்கி நின்று தலைகாட்டாமல் அடங்கி விடு கின்றன. இன்னும் சில குற்றங்கள் ஒயாது போக்கினாலொழிய இறுதிவரை போவதே இல்லை. இவை அனைத்தையும் காட்டிலும் நான்காவதாக உள்ள ஆணவம் என்னும் குற்றம் மிக முயன்று போக்கப்பெற்ற பொழுதும் போய்விட்டதுபோலக் காட்சியளித்து பிறகு மற்றோர் இடத்தில் மற்றொரு வடிவில் காட்சியளிக்கக் காண்கின்றோம். உடம்பில் தோன்றியுள்ள நச்சுக் கட்டியை அறுவை மருத்துவத்தின்மூலம் போக்கி, அதில் மகிழ்ச்சியடை கின்ற அதே நேரத்தில் உடம்பின் மற்றொரு பகுதியில் மற்றொரு வடிவில் அக்கட்டி வெளிப்படுமாறு போல, மனிதனிடத்திலுள்ள அகங்காரமும் ஒரு நிலையில் போக்கப்பெற்றால் மற்றொரு நிலையில், மற்றொரு வடிவில் தலைதூக்கி நிற்கக் காண் கின்றோம்.
இக் கருத்தை வலியுறுத்த வந்த சைவ சமயத்தினர் இந்த ஆணவமாகிய மலத்தை (குற்றத்தை) ஒருசேர அழித்துவிட முடியாது என்றும், அதனை அடக்கி வைத்திருப்பதே ஒல்லும் என்றும் கூறியுள்ளனர். அம்மட்டோடு இல்லாமல், உயிர்களைச் சகலர்'என்றும் பிரளயாகலர்'என்றும் விஞ்ஞானகலர்'என்றும் மூன்று பகுப்பாகப் பிரித்து, ஆணவம் கன்மம், மாயை' என்ற மூன்று மலங்களையும் உடையவர் சகலர்' என்றும், ஆணவம்,' மாயை' என்ற இரண்டைமட்டும் பெற்றவர் பிரளயாகலர்' என்றும், ஆணவத்தை மட்டும் பெற்றவர் விஞ்ஞானகலர்' என்றும் கூறுவர். இப் பிறவியின் சிறப்பு என்னவென்றால், மானிட உயிர் வளர்ச்சியில் மிக உயர்ந்த நிலையை அடை கின்றபொழுதுகூட, ஆணவத்திலிருந்து மனிதன் நீங்குமாறு இல்லை. எனவே, அழிக்க முடியாத அந்தக் குற்றத்தை உள்ளவாறு உணர்ந்து ஒரு மனிதன் அதனை அடக்கி ஒடுக்கிக் கொள்ளக் கூடுமேயானால் அவன் முழுத் தன்மை பெற்ற மகாத்மாவாக ஆகிவிடுகின்றான்.
ஆணவத்தை எத்துணை முறைகள் போக்கினாலும் அது தலைதூக்கி எழும் என்பதையும் மெய்யுணர்வு என்னும் ஆயுதத்தைப் பயன்படுத்தினால் தான் இறுதியாக அதனை வெல்ல முடியும் என்பதனையும் கந்தபுராண வரலாறு காட்டி நிற்கின்றது. சூரபதுமனுடையதலை (அகங்காரமே சூரபதுமனாக உருவகிக்கப் பெற்றான்) பன்முறை வெட்டப்பட்டும் மீண்டும் மீண்டும் முளைத்து எழுந்தது என்றும் இறுதியாக முருகனுடைய ஞானவேவின் மூலமாக அழிந்தது என்றும் கதை கூறுகிறது. அந்த வேலாயுதம்கூட ஆணவத்தின் வடிவாகிய சூரபது மனை ஒருசேர அழிக்காமல், மயிலாகவும் கோழியாகவும் ஆகுமாறு செய்தது என்றும் அதே கதை கூறிச் செல்கிறது. எனவே, அகங்காரத்தை அடக்க வேண்டுமானால் மெய் உணர்வு என்னும் ஞானவேலினால்தான் முடியும் என்பதும், அந்த ஞானவேலுங்கூட அகங்காரத்தை அழிக்காமல் மயில் என்ற விந்துத் தத்துவமாகவும், கோழி என்ற நாதத்' தத்துவமாகவும் மாறச் செய்கின்றது என்பதும் நன்கு விளங்கும்.
இவ்வுலகம் முழுவதுமே நாதம், விந்து என்ற இரண்டு தத்துவங்களின் கூட்டுதான் எனின் ஆணவம் (குரன்) மறைந்து நாதம் (கோழி, விந்து (மயில்) தத்துவங்களாக ஆயிற்று என்றால் - அதன் அடிப்படையை நன்கு விளங்கிக்கொள்ளவேண்டும். தான் என்ற அகங்காரம் மறைந்தால் உலகம் என்ற பன்மைதான் அங்குத் தோன்ற முடியும். தன்னலம் என்பது அழியும்பொழுது பிறநலம் என்பது வெளிப்படுவதுபோல அகங்காரம் மறையும் பொழுது, அங்கே உலகம் (நாதமும் விந்துவும் அல்லது கோழியும் மயிலும்) தோன்றக் காண்கிறோம். தான் என்ற ஒன்றைத் தனியே நிறுத்திக் காண்பது அகங்காரமாகும். உலகம் முழுவதிலும் இறைவனைக் காண்பவன் அஃதாவது ஆன்ம வெளிப் பாட்டையே காண்பவன் அகங்காரமற்றவனாகிறான்.
இந்த அடிப்படையை மனத்திற்கொண்டு பார்த்தால், சாதாரண மனிதராகப் பிறந்தோரும் மெள்ள வளர்ச்சி அடைந்து, தெய்விகத் தன்மையைப் பெற முடியும் என்பதை நன்கு அறி கிறோம். எனினும், இத் துறையில் முன்னேறுகின்ற ஒருவனுக்கு எதிரியாக நிற்கின்ற தடை, மூன்றாவது மலமாகிய ஆனவமே என்பது நன்கு விளங்கும். சைவ சமயத்திற்குரிய தனிப்பட்ட கருத்து என்று இதனைக் கொள்ளாமல், பொதுவாக இத் தமிழ் நாட்டில் பண்டைக் காலத்தில் வழங்கி வந்த தத்துவக் கொள்கை என்பதை மனத்திற்கொண்டு கண்ணகியின் வரலாற்றைக் காண்போமாக.
தொடக்கத்திலிருந்தே அப் பெருமாட்டி நற்பண்புகள் அனைத்திற்கும் உறைவிடமாகத் திகழ்கின்றார். வடிவாலும் அக அழகாலும் சிறந்து நிற்கின்ற அவரை "போதிலார் திருவினாள் புகழுடை வடிவு” உடையாள் என்று மக்கள் போற்றுகின்றார்கள். அவரை, மாசறு பொன்னே, வலம்புரி முத்தே, மலையிடைப் பிறவா மணியே, யாழிடைப் பிறவா இசையே” என்றெல்லாம் கணவன் பாராட்டுகின்றான். காட்டில் வரிக் கூத்தில் ஈடுபட்டுள்ள வேடுவர்கள், கணவனோடிருந்த மனமலி கூந்தலையுடையவளாகிய அப் பெருமாட்டியைக் கண்டு, இவளோ, கொங்கச் செல்வி, குடமலையாட்டி, தென்தமிழ்ப் பாவை செய்த தவக் கொழுந்து, ஒருமா மணியாய் உலகிற்கு ஓங்கியதிருமாமணி”என்று போற்றுகின்றனர். முற்றத் துறந்த கவுந்தி அடிகளோ எனில், “கற்புக்கடம் பூண்ட இத் தெய்வம் அல்லது பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலம்"என்று புகழ்கிறார்.
தாம் பிறந்து வளர்ந்த ஊராகிய காவிரிப் பூம்பட்டினத்து மகளிராலும், மணஞ் செய்துகொண்ட கணவனாலும், கற்றறி வில்லாதவர்களாயினும் வஞ்சகம் இல்லாமல், பொருளைக் கண்டு மனத்துட்பட்டதை அஞ்சாது வெளியிடும் இயல்பு வாய்ந்த வேடுவர்களாலும், முற்றத்துறந்த முனிவராகிய கவுந்தி அடி களாலும் ஒருசேரப் புகழப்பெறும் இயல்புடையார் இத் தேவியார்.
அவருடைய வாய்மொழியைக்கொண்டே அவருடைய உள்ளப்பாங்கை அறிய வேண்டுமானால், அதற்கும் சில வாய்ப்புகள் இருக்கின்றன. முற்பகுதி முழுவதிலும், கணவனை பன்றி வேறொரு தெய்வத்தைக் கனவிலும் கருதாதவராய் வாழ்ந்தார் என்று அறிகிறோம். மன்மதன் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டுமென்று கூறிய தோழியை நோக்கி, 'பீடு அன்று” என்று கூறுவதால் இதனை அறிகின்றோம். கணவன் தான் செய்த குற்றங்களையெல்லாம் வரிசைப் படுத்தி எண்ணி, இறுதியில் தான் அனைவருக்கும் இடுக் கண் செய்ததை உணர்ந்து வருந்துகிறான். மதுரையில் தான் கணவனும் மனைவியும் இரண்டாம் முறையாகத் தனித்துப் பேசும் வாய்ப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் கோவலன் அவளுடைய மென்மையைப் பாராட்டிவிட்டுத் தன் தவறு களையும் வரிசைப்படுத்திப் பார்த்து இறுதியில் தான் அழைத்தவுடன் மறுப்பு ஒன்றும் கூறாமல் கண்ணகி மதுரைக்குப் புறப்பட்ட அருமையை நினைந்து எழுக என எழுந்தாய், என் செய்தனை?" (1670) என்று பேசுகிறான்.
கோவலன் மனம் மாசு நீங்கி ஒளிவிடும் இந் நிலையில் கண்ணகியின் மனம் ஒரளவு அகங்காரத்தில் அமிழத் தொடங்குகிறது. என் செய்தனை? என்ற வினாவிற்கு அப்பெருமாட்டி தந்த விடையை,
“அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஒம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும்தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலு மிழந்த வென்னை’ (16 : 71) என்ற அடிகளால் அறிகின்றோம்.
இவ்விரண்டு பகுதிகளிலிருந்தும், இதனையடுத்துக் கோவலனை நோக்கி, மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின், ஏற்று எழுந்தனன்யான்”என்று கூறுகிற பகுதியிலிருந்தும் முன்பு சொல்லப் பெற்ற மாயை, கன்மம் என்ற இரு குற்றங்களையும் ஒருவாறு போக்கி வாழ்பவராகவே காட்சியளிக்கின்றார். ஆண்டான், அடிமைத்திறத்தில், தலைவனாகிய கோவலனிடத்து முற்றும் தன்னைச் சரணாகதியில் அமிழ்த்துவிட்ட இப்பெருமாட்டி, இவ்விரு குற்றங்களிலும் அகப்படக் காரணம் இல்லை என்றாலும் விடை சிறப்புடைய தாயினும் விடை கூறியவர் மனநிலையைக் காட்டாமற் போகவில்லை. இதுவரை அவள் அடக்கி வைத்திருந்த சினம் மெல்லத் தலை தூக்குகிறது. உள்ளடங்கிய சினமாகவின் சுடு சொற்களால் வெளிப்படாமல் மனத்திலுள்ள கசப்பை மட்டும் எடுத்துக் காட்டுவதாக அமைந்துவிடக் காண்கிறோம். உயிர்க் காதலன் பிரிவால் அவள் கவலையுறவில்லை; ஆனால், கடமைகளை நிறைவேற்ற முடியாமைக்காக வருந்தியதுபோல அவ்விடை அறிவிக்கிறது. அகங்காரம் மெல்லத் தலை தூக்கித் தன் இருப்பை அறிவிக் கிறது.
இதனையடுத்துக் கோவலன் வெட்டுண்ட பின்னர்ப் பாண்டியன் அவைக்களத்தை நோக்கிச் செல்லும்பொழுது, ? "முறையில் அரசன் தன் ஊர் இருந்து வாழும் நிறையுடைப் பத்தினிப் பெண்டிர்காள்” (195) என்று விளித்துப் பேசுவதும், “கொண்ட கொழுநர் உறுகுறை தாங்குறுஉம் பெண்டிரும் உண்டுகொல்” என்றும், சான்றோரும் உண்டுகொல்” என்றும் விளித்துப் பேசுவதும் கொஞ்சம் வியப்பை அளிக்கின்றன: பண்பாடே வடிவமாகக் காட்சியளித்த கண்னகியா இங்ங்ணம் பேசுகின்றார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. அவரே கூறகின்றபபடி, பட்டேன்படாததொரு துயரம்'என்றே வைத்துக் கொண்டாலும், தனிப்பட்ட தனக்கு நேர்ந்த அவலம் காரணமாக, ஒரு நாட்டையே, மக்களையே இழித்துப் பேசுவது முறையோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது. தனிப்பட்ட தன்துயரத்தை மிகப் பெரிதாகக்கொண்டு அதனால் உலகம் முழுவதையும் தவறுடையதாகக் கருதும் ஒர் அவல மன நிலையையே இங்குக் காண்கிறோம். இந் நிலையில் அந்த அகங்காரம் ஒரளவு வலுப்பெறுகின்றது.
இது காரணமாகத்தான் போலும், காவிரிப்பூம் பட்டினத்தில் தாமரையில் வாழும் இலக்குமியாகவும், வேடர்கள் வாழும் காட்டில் தென்தமிழ்ப்பாவை செய்த தவக்கொழுந்தாகவும், உலகிற்கு ஒரு திருமாமணியாகவும் காட்சியளித்த அதே பெருமாட்டி, பாண்டியன் வாயிலில், அடர்த்தெழு குருதி யடங்காப் பசுந்துணிப் பிடர்த்தல்ைப் பீட மேறிய மடக்கொடி’ ஆகவும், -
"வெற்றிவேற் றடக்கைக் கொற்றவை” ஆகவும்,
"அறுவர்க் கிளைய நங்கை யிறைவனை
ஆடல்கண் டருளிய அணங்கு” ஆகவும்,
“சூருடைக் கானக முகந்த காளி” ஆகவும்,
"தாருகன் பேருரங் கிழித்தபெண்” ஆகவும்
வாயிற் காப்போனுக்குக் காட்சி அளிக்கும் நிலையில் இருக்கின்றார்.
தகைசால் பூங்கொடியாய், மலரிடைத் தோன்றும் இலக்குமி யாய்க் காட்சியளித்த ஒரு பெருமாட்டி, இத்தகைய கொடுமை நிறைந்த காட்சியை எங்ங்ணம் நல்க முடியும்? நோக்கினால் அவருடைய மனத்தில் நேர்ந்த மாறுபாடு காரணமாகவே இத்தகைய மாற்றம் நிகழ்ந்ததோ என்று ஐயுறவேண்டியுள்ளது. கதிரவனை விளித்ததும், மானிடப் பெண்ணாகிய அவளுக்குச் செங்கதிர்ச் செல்வன் விடை இறுத்ததும் இந்த ஆணவம் வலுப் பெற்று வெளிப்படக் காரணமாயிற்று போலும், எல்லையற்ற துயரத்தின் காரணமாக இதுவரை அமிழ்ந்திருந்த ஆணவமலம் வெளிப்பட்டதனால் இக் கொடுங்காட்சியை நல்கினார் போலும், இனி மட்டார்குழலார் பிறந்த பதிப்பிறந்தேன் பட்டாங்கு யானும் ஒர் பத்தினியே யாமாகில், ஒட்டேன்; அரசோடு ஒழிப்பென் மதுரையும் என்பட்டிமையும் காண்குறுவாய் நீ”(21:35) என்று பேசும் பேச்சும் இக் குற்றம் மீதுTர்ந்து நின்ற நிலையை அறிவுறுத்துகிறதோ என்று நினைக்கவேண்டியிருக்கிறது.
மதுரை எரியத் தொடங்குகையில் மாயத்தினியின் சினம் ஒருவாறு தணிந்துவிடக் காண்கிறோம். அன்றியும், தீக் கடவுள் அவர் முன் தோன்றி, மாயத்தினி நின்னை மானப் பிழைத்த நாள், பாய் எரி இந்தப் பதியூட்டப் பண்டே ஓர் ஏவல் உடை யேனால்”(21:50) என்று கூறினவுடன், மதுரைநகரைத்தண்டிக்க வேண்டிய பொறுப்புத் தம்முடையதென்று கூறிக் கொண்டிருந்த பெருமாட்டிக்கு ஒரு புதிய அதிர்ச்சி ஏற்பட்டதுபோலும்! மதுரையை நானே அழிப்பேன் என்று தொடங்கிய அத் தேவியின் முன்னர், அவ்வாறு அழியவேண்டிய நியதி பண்டே ஏற்பட்டுள்ளதென்று அக்கினித் தெய்வம் கூறியது, தம் சக்தியை ஒரளவு விரித்துக் கண்ட கண்ணகியாருக்கு எதிர்மறையாக அமையக் காண்கிறோம். அக்கினிக் கடவுளின் கூற்றால் ஒருண்மை புலப்பட்டேதிரும். அதாவது : மதுரை எரியுண்டது என்றால் அது மாயத்தினியால் அன்று அவர் ஒரு துணைக் காரணமாக அமைந்தாரேயன்றி முதற் காரணமல்லர் என்பதே அது. எனவே, துணைக் காரணமாகி நிற்கின்ற அவர் தம்மை முதற்காரணம் என்று நினைத்து "மதுரையை அரசோடு ஒழிப்பென்” என்று கூறியது, ஒரளவு பொருத்தமிலாக் கூற்று என்பதை நாமே அறிய முடிகிறதாதலின், இதனை, அப் பெரு மாட்டி எளிதில் அறிந்திருப்பார் என்பதில் ஐயமில்லை.
இதனையடுத்து, மதுராபதித் தெய்வம், ஒரு முலை குறைத்த திருமா பத்தினியின் பின்னர் வந்து ‘கேட்டிசின் வாழி நங்கை என் குறை” (23:17) என்று பேசும்பொழுது வழக்குரைத்த குழ்நிலையிலோ அன்றி அழற்படுத்த சூழ்நிலை யிலோ உள்ள கண்ணகியை நாம் காணவில்லை. அதன் எதிராக, அடக்கமே உருவான பழைய கண்ணகியை, ஒரளவு அவலம் நிறைந்த துயரம் நிறைந்த கண்ணகியைக் காண் கின்றோம். ஆதலால்தான் என்பின்னர் வருகின்ற நியார்? என் துயரத்தை அறிவையோ?” என்ற பொருளில்,
“வாட்டிய திருமுகம் வலவயின் கோட்டி,
யாரைநீ, என்பின் வருவோய்? என்னுடை
ஆர்அஞர் எவ்வம் அறிதியோ? (23:20)
என்று கேட்கின்றார். அடுக்கி வருகின்ற துன்பங்கள் மக்களை இரு வகையாகப் பாதித்தலைக் காண்கின்றோம். சாதாரண மக்கட்குத் துன்பம் நேர்கையில் அவர்களைக் காழ்ப்புடையவர் களாகவும் கொடுமை நிறைந்தவர்களாகவும் மாற்றக் காண் கிறோம். பண்பாடுடையாருக்கு வரும் துன்பங்கள் பொன்னைக் காய்ச்சப் பயன்படும் நெருப்புப் போன்றவை, நெருப்பு, பொன்னை மாசு நீக்கி ஒளியுறச் செய்வதுபோல இத் துன்பங்கள் யாரைப் பாதிக்கின்றனவோ அவர்களுடைய மாசைத் துடைத்து ஒளிவிடச் செய்யப் பயன்படுகின்றன.
இதனை அடுத்து, மதுரை எரியக் காரணம் "...வெள்ளி வாரத்து ஒள் எரியுண்ண உரைசால் மதுரையோடு அரைசு கேடுறும் எனும் உரையும் உண்டே நிரைதொடி"(23:135)என்று மதுராபதித் தெய்வம் கூறியதனால், மதுரையின் அழிவுக்கும் பாண்டியன் இறப்புக்குங்கூடத் தாம் நேரான காரணமல்லர், துணைக் காரணமே என்பதைக் கண்ணகித் தெய்வம் நன்கு அறிகின்றார்.
எனவே, மதுரையை அரசோடு ஒழிப்பேன்'என்று வஞ்சினம் கூறிய பெருமாட்டி, அவை இரண்டையும் தாம் செய்வதற்குத் தேவையே இல்லையென்பதையும், இந்த அண்டத்தின் சட்டத்தில், அறிவுக்கு அப்பாற்பட்ட இயக்கத்தில், ஏனைய உயிர்களைப் போலத் தாமும் ஒரு சிற்றுயிரே என்பதையும், நிகழ்ச்சிகள் நிகழப் பிற உயிர்கள் துனைக் காரணமாக அமைவது போலத் தாமும், பாண்டியன் மரணம், மதுரையின் அழிவு ஆகிய மாபெரும் நிகழ்ச்சிகட்குத் துணைக் காரணமாகவே அமைய நேர்ந்தது என்பதையும் அறிந்தார் போலும், பிற குற்றங்களிலிருந்து இயல் பாகவே நீங்கி, இறுதியாக நிற்கின்ற ஆணவமலத்தால் மட்டும் ஒரளவு கட்டுண்டு நின்ற இப் பெருமாட்டி, அங்கியம் கடவுளும் மதுராபதித் தெய்வமும் மிக நுண்மையான முறையில் அறிவு கொளுத்தியவுடன், அந்த ஆணவமலமும் நீங்கப் பெற்றுச் சுடர்விடும் பொன்னாக ஆகிவிடுகிறார்.
முன்னர்க் கூறியபடி, அகங்காரம் முற்றிலும் மறையும் பொழுது, உலகம் முழுவதையும் ஒன்றாகக் காணும் நற்காட்சி விரிகின்றது. அதன் பயனாகப் போலும், அரசை ஒழிப்பேன்’ என்று கூறிய அதே கண்ணகியார், கடவுட் கோலம் கொண்டு 'தென்னவன் தீது இலன், தேவர்கோன்தன்கோயில் நல்விருந்தா யினான்; நான் அவன்தன் மகள்” (29:10) என்று பேசக் கேட்கின்றோம்.
ஆணவ மலத்தால் கட்டுண்டிருந்தகாலை, மன்னவனும் கோநகரும் தவறு இழைத்ததாகவும், தாம் தவறு இழைக்கப் பெற்றதாகவும் கருதி, தவறு இழைத்த அவர்கள் இருவருக்கும், தவறு இழைக்கப் பெற்ற தாம் தண்டனை தருவது முறையே என்றும் கூறிய அதே கண்ணகியார், அந்தக் குற்றம் நீங்கியவுடன் தென்னவன்மாட்டும் மதுரைமாட்டும் திதில்லை என்பதைக் காண்கின்றார்.
கோயில் வாயிலில் வளையலை உடைத்துவிட்டு கொடிமாடச் செங்குன்று வரை தான்மட்டும் தனியே செல்கிறார் கண்ணகியார் இந்த இடைக் காலத்தில் அவருடைய அகங்காரம் முற்றிலுமாக மறைந்து விட்டது என்பதை அடிகள் எடுத்துக் காட்டுகிறார். தீ வினை யாட்டியேன்” என்ற சொல் அகங்காரம் உடையார் வாயில் வருதற்கில்லை. எனவே அகந்தைக் கிழங்கை அகழ்ந்து எடுத்துவிட்ட அவர் திருமாயத்தினி என்பதையும் அடிகள் காட்டுகிறார். இவ்வளவு நடைபெற்ற நிலையில் அவர் கணவனோடு வானவூர்தி ஏறிச் செல்லும் தகுதியைப் பெற்று விட்டார் என்பதில் ஐயமில்லை என்றாலும் இளங்கோவின் கூற்றுப்படி கண்ணகியின் வளர்ச்சியில் மிக நுண்மையானதும் எளிதில் அறிவுக்குப் புலப்படாததும் ஆகிய ஒரு குறை இருப் பதை அறியமுடியும், ஊர்குழ் வரியில் தொடங்கி வழக்குரை காதை முடிய கண்ணகியினிடத்து அகங்காரம் விஸ்வரூபம் எடுக்கிறது என்பதை அறிகிறோம். அதற்கும் மேலாக அவளுடைய ஆழ்மனத்தில் தவறிழைத்த மன்னவன்மேல் ஒர் ஆழமான காழ்ப் புணர்ச்சி (Malice) பதிந்து விட்டதை அறிய முடிகின்றது. மதுரை அழிவதற்குத் தான் காரணமல்லள் என்பதை அறிந்ததால் அகங்காரம் அழிந்த பொழுதே ஆழ்மனத்தில் தோன்றிய காழ்ப் புணர்ச்சியும் போயிற்று என்று கூறுவதற்கில்லை. தனக்கு ஊறு இழைத்தவர்களை முழுமனத்தோடு மன்னித்தாலொழிய மனத் திலுள்ள காழ்ப்புணர்ச்சி நீங்கிற்று என்று கூறுவதற்கில்லை. மனவியலின் இந்த நுண்மையான தத்துவத்தை நன்கு உணர்ந்து கொண்ட அடிகளார், மனத்திலுள்ள காழ்ப்புணர்ச்சியோடு கண்ணகி வீடுபேற்றை அடையமுடியாது என்பதை மனத்துட் கொண்டே வாழ்த்துக் காதையில், -
தென்னவன் தீது இலன்;
தேவர்கோன் - தன்கோயில்
நல்விருந்து ஆயினான்
நான் அவன் - தன்மகள் (30-12) என்று பாடியுள்ளார் இவ்வாறு கூறுவதால் கண்ணகி மனத்தில் இறுதியாக தங்கி இருந்த காழ்ப்புணர்ச்சி என்ற மாசும் நீக்கப்பட்டு விடுகிறது.
“கீழ்த்திசை வாயில் கணவனொடு புகுந்தேன்
மேல்திசை வாயில் வறியேன் பெயர்கு” (23:182)
என்று அத் தேவியார் கூறிக்கொண்டு கொற்றவை வாயிலில் தம் வளையல்களை உடைத்த அந்த நேரத்தில் முற்றிலும் ஆணவ மலத்தில் இருந்த விடுபட்டு விடுகிறார் வறியேன்
பெயர்கு'என்று கூறும் பொழுதே அந்த ஆன்மா முழு விடுதலை பெற்று விட்டதைக் குறிப்பால் பெற வைக்கின்றார் ஆசிரியர் மாசு நீங்கிய பொன்னாக அப் பெருமாட்டி ஆயினார் என்பதை அவருடைய சொற்களிலிருந்தேகூட அறிய முடிகிறது. குன்றத்துக் குறவர்கள் வள்ளி போல்வீர்! யாவிரோ?” (24.4) என்று கேட்டவினாவிற்கு அத் தேவியார் ஒரு சிறிதும் முனியாமல் 'மன மதுரையோடு அரசு கேடுற வல்வினை வந்து உறுத்த காலைக் கணவனை அங்கு இழந்துபோந்த கடுவினை யேன்யான்” என்று கூறுகிறார். கணவன் இறப்பு, அரசன் மரணம், மதுரை அழிவு ஆகிய அனைத்துக்கும் வல்வினையே காரணம் என்று உணர்ந்துகொண்டார். இந்நிலையில், மதுரை, அரசு இரண்டும் கேடு உற என்றமையின் அக் கேட்டுக்குத் தாம் எவ்வாற்றானும் காரனர் அல்லர் என்பதையும், கணவனை இழந்ததற்கும் வல்வினை காரணம் என்றமையின் பாண்டியன் அல்லன் என்பதையும் உணர்ந்து பேசினாராகலின் அகங்கார, மமகாரங்களிலிருந்து முழு விடுதலை பெறுகிறார். அந்த நினைவு வந்தவுடன் "வானவரும் நெடுமாரி மலர் பொழிந்து. கொண்டு போயினார்” எனக் காப்பியம் பேசுகிறது. .