Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழ் எழுத்தின் வடிவம் அதாவது தொல்காப்பியர் காலம் 8ம் நூற்றாண்டு

Guru

Status: Offline
Posts: 7329
Date:
தமிழ் எழுத்தின் வடிவம் அதாவது தொல்காப்பியர் காலம் 8ம் நூற்றாண்டு
Permalink  
 
தமிழ் எழுத்தின் வடிவம் அதாவது தொல்காப்பியர் காலம் 8ம் நூற்றாண்டு

தமிழ் எழுத்தின் வடிவத்தைத் தெளிவாக முதன் முதலில் பல்லவ மன்னன் 
சிம்மவர்மனுடைய பள்ளன் கோயில் செப்பேட்டில்தான் காண முடிகிறது
தமிழ் எழுத்துரு அதாவது உயிர் 12; மெய் 18 என தனித் தனியாய் உள்ளது 8ம் நூற்றாண்டில் தான், அதாவது தொல்காப்பியர் காலம் ஆகும்

Tamil%2Bezuththu.jpg

Tamil%2Bezuththus.jpg

Tamil%2Bezuththuss.jpg
Tamil%2B.jpg

__________________

Guru

Status: Offline
Posts: 7329
Date:
RE: தமிழ் எழுத்தின் வடிவம் அதாவது தொல்காப்பியர் காலம் 8ம் நூற்றாண்டு
Permalink  
 
தொல்காப்பியர் காலம்

tholkaappiyaree.png

தொல்காப்பியம் தமிழின் மிக முக்கியமான இலக்கண நூல். இதன் மொழி நடை இது சங்க இலக்கியம் எனும் பத்துப் பாட்டு எட்டுத் தொகை நூல்களுக்கு பிற்பட்டது என மொழியியல் தெளிவாய் காட்டுகிறது.
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதிய பாதிரி கால்டுவெல்  பொ.ஆ.-8ம் 13ம் நூற்றாண்டு இடையே என்றார்
அன்றைய  தரவுகளின் அடிப்படையில் பன்னாட்டு  பல்கலைக்கழக ஆய்வுமுறைகள்படி ஆய்வாளர்கள் கூறியது
P.Tசீனிவாசையங்கர் : பொ.ஆ. முதலிரண்டு நூற்றாண்டுகளைச் சார்ந்தவர் History of Tamils P. 70

தெ.பொ.மீ: பொ.ஆ. 2-நூற்றாண்டை ஒட்டிய சங்க நூல்களுக்கு முற்பட்டவர் - சமணத் தமிழ் இலக்கிய வரலாறு பக்-28

பெரிடேல் கீத் : பொ.ஆ. 4-நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் தமிழ்ச்சுடர் மணிகள் பக்-39

எஸ். வையாபுரிப்பிள்ளை : பொ.ஆ.அல்லது 5 நூற்றாண்டில் வாழ்ந்தவர் தமிழ்ச்சுடர் மணி பக்-39
கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி : பொ.ஆ. 5-ம் நூற்றாண்டு
கே.எஸ் சிவராஜபிள்ளை : பொ.ஆ.6-ம் நூற்றாண்டு 
முச்சங்க தொன்மக் கதை
 
மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்தது எனும் ஒரு தொன்மக் கதை  மூன்று கடற்கோள்கள் இறையனார் களவியல் ஆசிரியர் உரையில் புனைந்துள்ளதை இன்று அறிவு சார் ஆய்வுலகம் முழுமையாய் நிராகரித்துவிட்டது. சங்கம் என்ற சொல்லே தமிழ் சொல் இல்லைபுலவர் பட்டியல் எல்லாமே கற்பனைகள் என தூக்கி எறிந்து பல காலம் ஆகிவிட்டது.
 
சங்ககால மன்னர் காலநிலை  வரலாறு-   வி.பி.புருஷோத்தம்;   
அணிந்துரை- சிலம்பொலி செல்லப்பன். இயக்குனர்-உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்.   பாராட்டுரை- பேராசிரியர். சாலை- இளந்திரையன்.
நூலின் ஆய்வின் விஸ்தீரணம் கண்டு இயக்குனர்-உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்- இந்நூலிற்கு தமிழக அரசு சார்பாக வேளியீடு மான்யம் பெற்று தந்தார்.
 
53.png
 
தொல்காப்பியம், எட்டுத்தொகை நூல்களை கி.ப். எட்டாம் நூற்றாண்டில் படித்த நீலகண்டன் என்பவரால் விடப்பட்ட கதையே முச்சங்கக் கதையாகும். பாண்டியர்கள் தென்மதுரையிலும் கபாடபுரத்திலும் வாழ்ந்ததாகவோ சங்கப் பாடல்கள் கூறவில்லை.
முச்சங்கக் கதையை நம்பி, சங்ககாலத்தைக் கணிக்க முயல்வது, மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போலாகும். -பக்கம் -30
8ம் நூற்றாண்டில் வரையப்பட்ட இறையனார் அகப்பொருள் உரை- என்னும் நூலில் ஒரே ஒரு பாடல் மட்டும் விடப்பட்ட கதையே முச்சங்கக் கதை. இதில் முதல்- இடைச் சங்கப் புலவர்கள் என உரையில் கூறப்பட்ட புலவர்கள் பெயர்கள் பெரும்பாலும் பாட்டுத்தொகை ஆசிரியர்கள் பெயரே உள்ளது. 
 
இடைச் சங்கம், கடைச் சங்கம், முதல் சங்கம்- இவை எல்லாம் வெறும் ஆரவார புராணம். ஆதாரமில்லாதது.
பன்னாட்டு பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் ஏற்பது என்ன
 
தொல்காப்பியத்தில் உள்ள சொல், சொல் தொடரி போன்றவை ஆய்வில், காப்பியர் சங்க இலக்கியத்திற்கு பல நூற்றாண்டு பின்னானவர் என அறிஞர்கள் ஏற்கின்ற்னர்.
 
ஜப்பானின் ஒசாக்கா பன்னாட்டு புத்த மத பல்கலைக் கழக இந்தியவியல் பேராசிரியரும், திருக்குறளை ஜப்பானிய மொழியில் மொழி பெயர்த்த டகனொபுடகஹஷி   இன்றைய வடிவு 5- 6ம் நூற்றாண்டினது
 
 பென்சில்வேனியா பல்கலைக் கழக மேனாள் பேராசிரியர் V.S.ராஜம்   பொ.ஆ. 5- நூற்றாண்டிற்கு   சற்று முந்தையது
ஹாலந்து  லெய்டன் இந்தியவியல் பேராசிரியரும் ஹெர்மன் டிய்கென்   பொ.ஆ.9ம் நூற்றாண்டினது 
19ம்  ஏ.சி.பர்னெல் பொ.ஆ. 19ம் நூற்றாண்டின் இந்தியவியல் ஆய்வாளர் 8ம் நூற்றாண்டினது முன்பாய் இருக்க இயலாது
  அமெரிக்காவின் கலிபோர்னியா  பல்கலைக் கழக பேராசிரியர் ஜ்யார்ஜ் ஹார்ட் தன் நூலில் தெளிவாய் சொல்வது  -தொல்காப்பியர் தமிழ் இலக்கணம் அமைக்க சமஸ்கிருத இலக்கணத்தின் பல கூறுகளை எடுத்து பயன் படுத்தி உள்ளதைக் காட்டியும், முன்னால் பேராசிரியர் கமில் செவிலிபில் ஆய்வைக் காட்டியும் , காப்பியர் சங்க இலக்கியத்திற்கு பல நூற்றாண்டு பின்னானவர் எனக் கூறுவார்.
53a.png
தொல்காப்பியம் சொல் இலக்கணம் மட்டும் இல்லை, எழுத்து இலக்கணமும் சொல்கிறது. அதாவது
 உயிர் எழுத்து 12 அ - ஔ ;  மற்றும்
 மெய் எழுத்து 18 க் - ன்
இவற்றின் கலப்பே உயிர்மெய் எழுத்து
கல்வெட்டுகளில் 30 எழுத்துகளும் தனி உரு பெறுவது 5ம் பொ.ஆ. 5ம் நூற்றாண்டில் தான். அதாவது  தமிழில்  "ற" "ன" போன்றவை இரண்டு, ஆனால் வடமொழியில் ஒன்று தான்.
உதாரணமாக ராகம் என எழுத்கையில் எழுதும் போது அறம் என எழுதும் போதும்  மாறு படும் ஆனால் 5ம் நூற்றாண்டிற்கு முந்தைய கல்வெட்டுகளில் இரண்டு ஒரே உரு தான், மொழி இடையில் வந்தால் படிப்பவர் மாற்றி  மாற்றி படித்து பொருள் சொல்கின்றனர். 
புள்ளி மயங்கியல்
 
புள்ளி வைத்து எழுதுதல், பின் புள்ளி மயங்கியல் என மெய் எழுத்து சேறும் முறை பற்றியும் தொல்காப்பியத்தில் இலக்கணம் உள்ளது
தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி - அதாவது பிராமியில் தொடங்கி அது வட்டெழுத்தாய் மாற்றம் பெற்றதினை தமிழ் எனப் படித்து வெளிப் படுத்திய பேராசிரியர் கே.வி.ராமன், ஐராவதம் மகாதேவன் போன்றோர் தெளிவாய் தொல்காப்பிய எழுத்து இலக்கணத்தோடு அதை ஒப்பிட்டு அதன் அடிப்படையில் தான் தொல்காப்பியம் இயற்றப் பட்ட காலம் குறிக்க வேண்டும் எனத் தெளிவாய் கூறுகின்றனர். அதன்படி தொல்காப்பியம் 7ம் நூற்றாண்டிலானாது.
 
  தொல்காப்பியர் காலம் - தமிழ் கல்வெட்டுகள் எழுத்துக்களின் பரிமாண வளர்ச்சியின்படி வடமொழி எழுத்துக்களை பயன்படுத்த தொடங்கி தமிழ் முழுமையாய் 30 எழுத்துக்களும் தனித் தனி உரு பெற்றது 4ம் நூற்றாண்டு இறுதியில் தான், அதன் பின்னர் புள்ளி மயங்கியல் போன்றவைகளை விளக்கும் தொல்காப்பிய சூத்திரங்கள் உருவாகும் காலம் 7 ஆம் நூற்றாண்டு வாக்கில் தான் என தற்போது பன்னாட்டு பல்கலைக் கழகங்கள் ஏற்கிறது.

தொல்காப்பியம் தமிழ் மெய் எழுத்து வரிசையில் கடைசியில் ளா, ற, ஜ்ன உள்ளது - இவை வட மொழியில் இல்லாதவை, இது தெளிவாய் தமிழ் எழுத்துருக்கள் வடமொழி உருவிடம் கடன் வாங்கியது என்பதையும், நிருபித்தன என பேராசிரியர் இன்னாசி தன் எழுத்தியல் நூலில் விளக்கி உள்ளார்

__________________

Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 
தொல்காப்பியம் 7ம் நூற்றாண்டு இறுதி; திருக்குறள் 9ம் நூற்றாண்டு - பாவணர் சாட்சி

 தமிழ் இலக்கணங்கள் எல்லாவற்றுள்ளும் தொல்காப்பியம் தான் மிகப் பழமையானது, காலம் 7ம் நூற்றாண்டு என்பதில் கருத்து ஒற்றுமை நடுநிலையாளரிடம் உண்டு. 
53a.png
அமெரிக்காவின் கலிபோர்னியா  பல்கலைக் கழக பேராசிரியர் ஜ்யார்ஜ் ஹார்ட் தன் நூலில் தெளிவாய் சொல்வது  -தொல்காப்பியர் தமிழ் இலக்கணம் அமைக்க சமஸ்கிருத இலக்கணத்தின் பல கூறுகளை எடுத்து பயன் படுத்தி உள்ளதைக் காட்டியும், முன்னால் பேராசிரியர் கமில் செவிலிபில் ஆய்வைக் காட்டியும் , காப்பியர் சங்க இலக்கியத்திற்கு பல நூற்றாண்டு பின்னானவர் எனக் கூறுவார்.
 
 தொல்காப்பியர் காலம் - தமிழ் கல்வெட்டுகள் எழுத்துக்களின் பரிமாண வளர்ச்சியின்படி வடமொழி எழுத்துக்களை பயன்படுத்த தொடங்கி தமிழ் முழுமையாய் 30 எழுத்துக்களும் தனித் தனி உரு பெற்றது 4ம் நூற்றாண்டு இறுதியில் தான், அதன் பின்னர் புள்ளி மயங்கியல் போன்றவைகளை விளக்கும் தொல்காப்பிய சூத்திரங்கள் உருவாகும் காலம் 7 ஆம் நூற்றாண்டு வாக்கில் தான் என தற்போது பன்னாட்டு பல்கலைக் கழகங்கள் ஏற்கிறது.

தொல்காப்பியம் தமிழ் மெய் எழுத்து வரிசையில் கடைசியில் " ள, ற & ன" உள்ளது - இவை வட மொழியில் இல்லாதவை, இது தெளிவாய் தமிழ் எழுத்துருக்கள் வடமொழி உருவிடம் கடன் வாங்கியது என்பதையும், நிருபித்தன என பேராசிரியர் இன்னாசி தன் எழுத்தியல் நூலில் விளக்கி உள்ளார்
 
கிறிஸ்துவ மதவெறி தேவநேயப் பாவணர் தன்னை ஒரு தமிழ் பற்றாளர் என வேடம் போட்டு ஏமாற்றி தமிழரை ஆரியர் - திராவிடர் என பிரிக்கும் கிறிஸ்த்வ நச்சுப் பொய்யை பராப்பும் ஏஜன்டாய் செயல்பட்டவர்.
தன் பொய்யான மதம் பரப்ப நச்சுக் கருத்தைப் பரப்புவோரை நம்பினால் வள்ளுவரும்  தெளிவாய் சொன்ன்னார்
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை 
தீரா இடும்பை தரும்.                   குறள் 508: 
மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.
கிறிஸ்துவ மதவெறி தேவநேயப் பாவணர்  தொல்காப்பியத்தில் உள்ள பல மொழியியலைவிட குறளின் உள்ள வளர்ச்சியை  காரணம்  காட்டி திருக்குறள் தொல்காப்பியத்திற்கு 500 ஆண்டு பிற்பட்டது  என்கிறார். 
 
Pavanar%2BValvar%2Bdate-.jpg
பேராசிரியர் வையாபுரி பிள்ளை மற்றும் ஐராவதம் மஹாதேவன் போன்றோர் தவிர மற்ற முறையான ஆய்வின்றி தன்னிச்சையாய் காலம் குறிப்போரை பன்னாட்டு பல்கலைக் கழகங்கள் ஏற்பது இல்லை.
 பன்னாட்டு பல்கலைக் கழக தமிழ் அறிஞர்கள் தொல்காப்பியம் மொழிநிலை சங்கத் தொகை நூல்களுக்கு பல நூற்றாண்டு பிற்பட்டது என்பதை திரு.வையாபுரி பிள்ளை காட்டி உள்ளார், இவற்றை  லண்டன் பல்கலை கழக பகுதி நேர ஆசிரியரான திரு.சுவாமிநாதன்  தன் வலையில் என ஐந்து  பாகங்களாய் எழுதியுள்ளார். விளக்கி உள்ளார்.

தொல்காப்பியர் காலம் தவறு  இரண்டு மூன்று நான்கு  ஐந்து

கிறிஸ்துவ மதவெறி தேவநேயப் பாவணர் கூற்றுபடியே காப்பியத்திற்கும் - குறளிற்கும் இடையே மொழி நிலை மாற்றம் 5 நூற்றாண்டு என்பது தவறன ஆய்வு; 
சங்க இலக்கியத்திலேயே கலித்தொகை, பரிபாடல் நூல்களுள் தமிழின் நெகிழ்ச்சி காணப் படுகிறது, பெரும்பாலான சங்கத் தொகை நூல்கள் பொ.மு 200 - பொ.ஆ.500 இடையிலானது; கலித்தொகை & பரிபாடல் 5- 6m  நூற்றாண்டை ஒட்டியது, இவற்றில் தான் ஆசிரியப்பாவை விட்டு  நெகிழ்ந்து பரிபாடல், கலிப்பா, வெண்பாவில் பாடல் இயற்றப் படுகிறது. தொல்காப்பியம் இவற்றை கூறுகிறது. 
வட மொழியில் காயத்ரி மற்றும் உஷ்னிக் என்பவர் ஈரடி வெண்பா வகை, இவற்றை வைத்து காப்பியர்  (குறு வெண்பாட்டின் அளவு எழு சீரே - பொருள். செய்யு:158/2)குறு வெண்பா என ஒரு சிறு குறிப்பு மட்டும் தருகிறார். திருக்குறள் என்பது குறு வெண்பா மிகவும் நெகிழ்ச்சி பெற்றபின் உருவானது, 9ம் நூற்றாண்டின் முதற் பாதியைச் சேர்ந்தது.

 தொல்காப்பியமும் தமிழ் எழுத்துக்களும் வடமொழியும்

தொல்காப்பியர் காலம் - தமிழ் கல்வெட்டுகள் எழுத்துக்களின் பரிணாம வளர்ச்சியின்படி தமிழ் முழுமையாய் 30 எழுத்துக்களும் தனித் தனி உரு பெற்றது 4ம் நூற்றாண்டு இறுதியில் தான், அதன் பின்னர் புள்ளி மயங்கியல் போன்றவைகளை விளக்கும் தொல்காப்பிய சூத்திரங்கள் உருவாகும் காலம் 7 ஆம் நூற்றாண்டு வாக்கில் தான் என தற்போது பன்னாட்டு பல்கலைக் கழகங்கள் ஏற்கிறது.
பெர்கிலியின் கொலம்பியா பல்கலை கழக பேராசிரியர் திரு.ஜியார்ஜ் ஹார்டு மற்றும் இஸ்ரேலின் ஜெருசலேம் ஹீப்ரு பல்கலை கழக பேராசிரியர் திரு.டேவிட் ஷுல்மன்; இருவரும் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் புலமை உள்ளவர்கள்; இருவருமே சங்க இலக்கியம் முதல் இன்றுவரை தமிழ் இலக்கியம சமஸ்கிருதத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டு பெற்றும் கொடுத்தும் வளர்ந்து வந்துள்ளது, தொல்காப்பியம் சமஸ்கிருத இலக்கணத்தை பல இடங்களில் பயன்படுத்தி உள்ளது என்பர்
9780674059924.jpg53a.png
 
தமிழ் மெய் எழுத்துகளிலும், பின்னர் உயிர் மெய்யிலும் சிறப்பு எழுத்துக்கள் "ள" "ற" "ன"; இவை வட மொழியில் கிடையாது, எனவே தான் தமிழுக்கே தனியாய் இவை பீனர் உருவாகியவை ஆதலால் கடைசி எழுத்துக்களாய் சேர்த்தார் தொல்காப்பியர் என பல அறிஞர்கள் கூறியதை பேராசிரியர் சு.இன்னாசி அவர்கள் தன் எழுத்தியல் நூலில் கூறுவார்.
ezuthu%2B-.jpg
தமிழ் உணர்வாளர்களால் தமிழ் எழுத்துக்கள் வடமொழி எழுத்திலிருந்து தான் உரு பெற்றது என்பதை ஏற்க இயலாமல் போக, கே.பி.அறவாணன் ஒரு போலி ஆய்வு கட்டுரை படித்தார், ஆனால் ஆய்வுலகம் ஏற்கவில்லை என்கிறார் பேராசிரியர்.
(வடமொழி என்கையில் சமஸ்கிருதம் என்பதைவிட அதன் பேச்சு வழக்கு மொழியான ப்ராகிர்தத்தையே குறிக்கும்)
 
Permalink
 Reply Quote 
More 
 
Here I Give the details on developments of Tamil Writings and how Brahmi was dechiphered,and
 all this are the views of Iravatham Mahadevan.

//* 1906
ஆம் வருடத்தில் கல்வெட்டுகளை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த வெங்கய்யா
 என்பவர்மேட்டுப்பட்டி என்னுமிடத்தில் கிடைத்த கல்வெட்டுகளைப் பார்த்துவிட்டு இதில்
 எழுதப்பட்டிருப்பது 'பிராக்ரித்மொழியாக இருக்குமோ என்று நினைத்தார்.

பின்னர் அவரது மாணவரான கிருஷ்ண சாஸ்திரி, 1919 வாக்கில் இந்தக் கல்வெட்டுகளில்
 திராவிட மொழிகளின் தாக்கம் இருக்கிறதுஒருவேளை தமிழாக இருக்கலாம் என்று சொன்னார்.

* 1924
இல் சுப்பிரமணிய அய்யர் தன் ஆராய்ச்சியின் முடிவாக இந்தக் கல்வெட்டுகள்
பிராக்ரித் ஆக இருக்க முடியாதுஏனெனில் இவற்றில் '', '', '', 'போன்ற எழுத்துக்கள்
 காணக்கிடைக்கின்றனநாகரி/பிராக்ரித் மொழியில் வரும் இரண்டாவது/மூன்றாவது/நான்காவது
 '', 'க்கள் (झ போன்றவை) இல்லை என்று கண்டுபிடித்தார். ஆனால் அதே
 நேரத்தில் 'தந்தைஎன்னும் சொல் 'தாநதய' (?) என்று எழுதப்பட்டிருந்தது என்றும் கண்டார்.

பின்னர்பட்டிப்ரோலு (ஆந்திரம்) என்னுமிடத்தில் கிடைத்த கல்வெட்டுகளைப் படிக்கையில்
 மெய் எழுத்துகள்அகரஆகார மெய்கள் ஆகியவற்றைக் குறிக்க நீட்டல் கொம்புகள்
 பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிந்தனர். [படமில்லாமல் இதனை விளக்குதல் கடினம்ஆனால்
அந்தப் படங்களை இப்பொழுது இங்கு வரைய முடியாத நிலையில் உள்ளேன்.]

* K.G. 
கிருஷ்ணன் என்பவர் 1960களில் அரச்சாளூர் கல்வெட்டுகளைப் படிக்கையில் அங்கு
புள்ளி வைத்த மெய் எழுத்துகள் இருப்பதைக் கண்டுபிடித்தார். இந்தக் கல்வெட்டுகள்
 கி.பி ஒன்றாம் நூற்றாண்டின் இறுதியைச் சேர்ந்தவை என்று கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாம்.
 இந்தக் கல்வெட்டுகள் புள்ளி இல்லாத மெய்யெழுத்துகள் உள்ள மேற்சொன்ன கல்வெட்டுகளுக்குப் பிந்தைய காலமாக கண்டறியப்பட்டுள்ளன.

சாதவாகன காசுகள் ஒரு பக்கம் பிராக்ரித் மொழியிலும்மற்றொரு பக்கத்தில் தமிழ்
 (புள்ளி எழுத்துக்களுடனும்) இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் காசுகள்
வழங்கப்பட்டது கி.பி. 1-3 நூற்றாண்டுகளுக்குட்பட்டவை.

இந்த ஆரம்பகால வரிவடிவங்கள் அசோகர் காலத்து பிராமி வரிவடிவங்களைப்
 பின்பற்றியுள்ளன. ஆனால் பிராக்ரித்தில் இருந்ததமிழில் இல்லாத வரிவடிவங்கள்
விலக்கப்பட்டுபிராக்ரித்தில் இல்லாத '', '', '', 'ஆகிய எழுத்துகளுக்கான புது
வரிவடிவங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அப்படிப் புது வரிவடிவங்கள் சேர்க்கப்படும்போதும்,
ஏற்கனவே இருக்கும் '', '', 'ஆகியவற்றின் குறியீடுகளை எடுத்துஅவற்றினை நீட்டித்தது
போல் உள்ளது. //
//- 
அசோகன் பிராமி வரிவடிவத்தைப் பின்பற்றியே தமிழ் பிராமி வரிவடிவம்
 உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை சமண முனிவர்கள்மதுரை அரசனின் (பாண்டியன்) ஏற்பாட்டின் பேரில்
 செய்துள்ளனர் என்று சொல்லலாம். அதிகபட்சமான கல்வெட்டுகள் மதுரையைச்
 சுற்றிக் கிடைத்துள்ளன. சமணர் குகைகள் என்று கருதப்படும் இடங்களில் கிடைத்துள்ளன.
 இந்தக் கல்வெட்டுகளுக்கும்காஞ்சி/பிறவிடங்களில் கிடைக்கும் கல்வெட்டுகளில்
 காணப்படும் வரிவடிவத்திற்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. (இரண்டு வேறுபட்ட
வரிவடிவங்கள் தமிழ்க் கல்வெட்டுகளில் காணக் கிடைக்கின்றன.)

அசோகன் பிராமி தமிழுக்கு வந்தது போலவேதேவநாகரியாக மாறியுள்ளது.

அசோகன் பிராமிதக்காணப் பிராமியாக மாறிஅதிலிருந்து கன்னடதெலுங்கு
 வரிவடிவங்கள் உருவாகியுள்ளன.

தமிழ் பிராமிகிட்டத்தட்ட கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் வட்டெழுத்தாக மாற்றம்
 அடைந்துள்ளது. அப்பொழுதுதான் பனையோலையில்இரும்பு எழுத்தாணி கொண்டு
 எழுதப்பட்டது.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பல்லவர்கள் தமிழகத்தை ஆளுகைக்குள் கொண்டுவந்தபோது,
 கிரந்த எழுத்தாக மாறிய தக்காணப் பிராமியைக் கொண்டுவந்தனர். சோழர்கள்,
 பல்லவர்களுக்குக் கீழ் இருந்து தமிழகம் முழுவதையும் ஆட்சி செய்தபோது இந்த கிரந்த
வழித் தமிழெழுத்துவட்டெழுத்தை முழுவதுமாக அழித்து விட்டு கோலோச்ச ஆரம்பித்தது.
அதன் வழியே (பின்னர் வீரமாமுனிவர் வழியாக மாற்றத்துடன்) இன்று நம்மிடையே உலவி
வருகிறது.

கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டில் வட்டெழுத்து முற்றிலுமாய் அழிந்துவிட்டது.

கி.பி. பதினாலாம் நூற்றாண்டில் கிரந்த எழுத்துமலையாள எழுத்தாக மாற்றம் கொண்டது.

வரிவடிவங்கள் மாறினாலும்மொழி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதே தொடர்போடு
 உள்ளது. இந்தக் கல்வெட்டுகளில் கிட்டத்தட்ட 75% சொற்களை இன்றைய தமிழர்களால்
 புரிந்து கொள்ள முடியும். (சில கல்வெட்டுகளைப் படித்துக் காட்டினார்.) மீதமுள்ள 25%
சொற்கள் பிராக்ரித் தழுவலாக உள்ளது.

கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகுபிராக்ரித்துக்குப் பதில் சமஸ்கிருதக் கலவை
அதிகமாக வருகிறது. [அரையர்/அரசர் என்பது பிராக்ரித வழிச் சொல் என்றும்இராசர்/ராஜன்
 என்பது சமஸ்கிருத வழிச்சொல் என்றும் குறிப்பிடுகிறார்.]

குகைக் கல்வெட்டுகளில் சமணர்களைப் பற்றியே காணப்படுவதாகவும்புத்தர்கள்,
ஆஜீவகர்கள் பற்றி எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை என்றும் சொன்னார்.

ஒருசில தமிழ்க் காசுகள் எகிப்துஅலெக்சாண்டிரியா போன்ற இடங்களில்
(அமெரிக்கத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்குக்) கிடைத்துள்ளது என்றும்
 அவற்றின் தேதி கி.பி. ஒன்றாம் நூற்றாண்டு என்றும்அதில் காணப்படும் எழுத்துகள்
 தமிழ் பிராமி என்றும் ஆதாரங்கள் உள்ளன என்றார்.

தொல்காப்பியத்தில் மிகத் தெளிவாகப் புள்ளி எழுத்துகள் (மெய்)தமிழ் எழுத்துகள்
 12+18=30 என்று சொல்லப்படுவதாலும்இது பல காலமாக இருக்கிறது என்று
அழுத்தமாகச் சொல்வதாலும் தொல்காப்பியத்தின் காலம் கி.பி. 2-3ஆம் நூற்றாண்டு என்று
 தான் கருதுவதாகச் சொன்னார்.

இப்படிப்பட்ட கூற்றைத் தமிழ் அறிஞர்கள் விரும்பமாட்டார்கள் என்றும்ஆனால்
 தன்னுடைய கண்டுபிடிப்பு கல்வெட்டியலை மட்டுமே சார்ந்திருப்பதாகவும்இதுவரை
 கிடைத்துள்ள ஆதாரங்கள் தன் கூற்றை நிரூபிப்பதாகவும் சொன்னார்.

அசோகன் பிராமி எழுத்துக் கல்வெட்டுகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை
என்றும்அதற்கு முந்தைய கல்வெட்டுகள் எதுவும் இந்தியாவில் இதுவரை கிடைக்கவில்லை
 என்றும்அசோகருக்கு முந்தைய காலத்தில் கல்வெட்டுகள் இல்லாமல் துணியில்
எழுதியிருக்கலாம் (அதாவது அசோகர் காலத்தைய பிராமி வடிவம் அதற்கு முந்தையதாக
 இருந்திருக்கலாம்ஆனால் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை...)அழிந்துபோயிருக்கலாம்
 என்றும் சொன்னார்.

கல்வெட்டுகளில் கிடைக்கும் செய்திகளைக் கொண்டு பதிற்றுப்பத்தின் காலம்
கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்று கொள்ளலாம்.

- "
சத்தியபுத்தோ அதியமான் நெடுமான் அஞ்சி" (ஔவையாரின் நண்பர்தகடூர் அரசர்,
நெல்லிக்காய் வள்ளல்) என்று ஒரு கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இதில்
சத்தியபுத்தோ என்னும் பாலி மொழி யாரைக் குறிக்கும் என்று ஒரு புதிர் பல நாட்கள்
 இருந்ததாகவும்அது அதியமானையே குறிக்கும் [சத்திய புத்தோ -சத்திய புத்திரன் ->
 சத்திய மகன் -அதிய மான்] என்றும் சொன்னார்.

__________________

Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 
தொல்காப்பியர் காலம் -வையாபுரிபிள்ளை கட்டுரை

Vai%2B0.png  Vai%2B1.png

__________________

Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 
 Vai%2B1a.png  Vai%2B1ab.png

__________________

Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 
Vai%2B1ac.png

__________________

Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 
தொல்காப்பியர் காலம் தவறு-1 

ஒல்காப் புகழ் தொல்காப்பியன் என்று கற்றோரும் மற்றோரும் போற்றும் தமிழ் அறிஞனின் உண்மைக் காலம் எது என்பது பலருக்கும் புரியாத புதிராக இருந்து வருகிறது. இதனால் ஒரே ஆசிரியரே அவரை கி.மு. முதல் நூற்றாண்டு என்றும் கி.மு.ஆயிரம் ஆண்டு என்றும் எழுதிக் குழம்புவதையும், மற்றோரைக் குழப்புவதையும் காணலாம். மற்றும் பலர் மொழி இயலின் அடிப்படைக் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு 20,000 ஆண்டுகளுக்கு முந்தியவர் என்று பிதற்றுவதையும் பார்க்கலாம். தமிழின் மீது தீராக் காதல் கொண்டவர்கள், தொல்காப்பியன் காலம் எதுவானாலும் சரி—அவர் பாணிணிக்கு முந்தியவர் என்று சொன்னால் போதும் என்று வட மொழி வெறுப்பில் தவிப்பதையும் காணலாம்.
 
உலகமே வியக்கும் வண்ணம் முதல் இலக்கண நூலை எழுதிய பாணினியைக் குருவாகக் கொண்டே தொல்காப்பியர் நூலை எழுதினார் என்பதை இரு மொழியும் அறிந்தவர்கள் அறிவர். பி.எஸ்.சுப்ரமண்ய சாஸ்திரி, வையாபுரிப் பிள்ளை போன்றோருக்கு இது புரியும். தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் இரு கண்களாகக் கருதுவோருக்கு இது விளங்கும். ஒல்காப் புகழ் தொல்காப்பியனுக்கும் இது தெரிந்தே உளது என்பதை கட்டுரையில் போகப் போகக் காண்பீர்கள்.
 
அதனால்தான் தொல்காப்பியரின் புகழைப் பாட மறந்த பாரதியும் கூட பாணினியின் புகழைப் பாட மறக்கவில்லை:
“ நம்பருந்திறலோடு ஒரு பாணினி
ஞாலம் மீதில் இலக்கணம் கண்டதும்” என்று பாடினான்.
 
வையாபுரிப் பிள்ளை போன்றோரின் கருத்துக்களை முன்வைப்பதற்கு முன் என் கருத்துக்களை முன்வைக்கிறேன்.
 
1610= தொல்காப்பிய சூத்திரங்கள் 1610
3999= மொத்த அடிகள் 5630
5630= சொல் வடிவங்கள் 5630
13708= தொடை விகற்பம் 13,708
பிரிவுகள் 3: எழுத்து, சொல், பொருள் அதிகாரங்கள்
என்று நாம் எல்லோரும் படித்திருக்கிறோம்.
 
பெரிய பெரிய புதிர்
 
தொல்காப்பியர் ஏன் வேத கால தெய்வங்களான இந்திரனையும் வருணனையும் தமிழ்க் கடவுள் என்று கூறினார்?
 
தொல்காப்பியர் சிவன், கணபதி போன்ற தெய்வங்களைக் குறிப்பிடாதது ஏன்?
 
வள்ளுவர், இளங்கோ போலவே அதிகாரம் என்ற சொல்லை நூலில் புகுத்தியது ஏன்?
 
வள்ளுவர் போலவே அறம், பொருள், இன்பம், (வீடு) (தர்ம அர்த்த காம (மோட்ச) என்ற வேத வழி முறையை வலியுறுத்துவது ஏன்?
 
பலராமனின் கொடியான பனைக் கொடியைக் குறிப்பிடுவது ஏன்?
 
தொல்காப்பியர் நான்மறை முற்றிய பிராமணன் அதங்கோட்டு ஆசார்யார் (ஆசான்) தலைமையில் நூலை நிறவேற்றியது ஏன்?
 
த்ருண தூமாக்கினி என்பதே இவருடைய ‘ஒரிஜினல்’ பெயர் என்றும் பாணினி ‘ஸ்டைலில்’ பாணினீயம் என்று பெயர் வைத்தது போலவே தொன்மையான காப்பியக் குடியில் வந்தவர் தொல்காப்பியர் என்றும் அதன் மூலம் நூலுக்கு தொல்காப்பியம் என்று பெயரிட்டதாகவும் நச்சினார்க்கினியர் முதலியோர் கூறுவது ஏன்?
 
சங்க கால இலக்கியத்துக்குப் பின்னர் வந்த சொற்களை மூன்று அதிகாரங்களிலும் பயன்படுத்துவது ஏன்?
 
இதுவரை எந்த தமிழ் அறிஞரும் இந்த சொற் பிறப்பியல் விஷயத்தை அலசாமல் மறைத்தது ஏன்?
 
மொழியியலில் எல்லோரும் ஒத்துக் கொண்ட கொள்கைகளை தொல்.ஐ மதிப்பிடும்போது மட்டும் “அறிஞர்கள்” கண்டு கொள்ளாதது ஏன்?
 
தொல். ஆய்த எழுத்து  ( ஃ ) பற்றிப் பேசுவதால் முதல் நூற்றாண்டுக்கு முன்னர் வைக்க முடியாது என்று பல அறிஞர்கள் வாதிடுவது ஏன்?
ஏதேனும் சிறிது இசகு பிசகு வந்தால், இது எல்லாம் இடைச் செருகல் என்று சொல்லி சில “தமிழ் அறிஞர்கள்” தப்பிக்க முயல்வது ஏன்?
பொருள் அதிகாரம் பிற்காலச் சேர்க்கை என்று வெளி நாட்டு அறிஞர் பலரும் கூறுவது ஏன்?
 
இதற்கெல்லாம் விடை காண்போம். சுருக்கமான விடை:- தொல். உடைய காலம் நாலாவது அல்லது ஐந்தாவது நூற்றண்டுதான். ஆனால் அவர் கூறும் விதிகளோ அவருக்கு 1000 ஆண்டுக்கு முந்திய தமிழ் மொழியின் பழைய விதிகள்.
 
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடியின் விதிகளை அவர் தொகுத்தளித்தமைக்கு தமிழ் கூறு நல் உலகம் அவருக்கு என்றும் கடப்பாடு உடையதே.
 
தொல்காப்பியரை ஐந்தாம் நூற்றாண்டில் வைக்க அவருடைய சொற்களே சாட்சி.
1.தொல்காப்பியத்தில் கடவுள் வாழ்த்து இல்லை. இதை அடுத்து வந்த குறள், சிலப்பதிகாரத்தில் மங்கல வாழ்த்தோ கடவுள் வாழ்த்தோ உண்டு. ஐந்தாம் நூற்றாண்டில் சிதறிக்கிடந்த பாடல்களை எல்லாம்-- வியாச மாமுனிவன் வேதத்தைத் தொகுத்தது போல ---பாரதம் பாடிய பெருந்தேவனார் முதலியோர் தொகுத்தபோது அதில் கடவுள் வாழ்த்தை இணைத்தனர். தொல்காப்பியர் அதற்கு ஒரு நூற்றாண்டு முந்தியவராக இருக்கலாம்.
 
2.இந்த நூலை ஒட்டி வளர்ந்த சொற்களான சூத்திரம், காப்பியம், அதிகாரம் ஆகியன வட மொழிச் சொற்கள். சங்க இலக்கியத்தில் 27,000+ வரிகளில் காண முடியாதவை. புலவர் பெயரில் மட்டும் ‘காப்பிய’ உண்டு. ஏனெனில் அவர்கள் காப்பிய (உஷனஸ் மஹா கவியின் காவ்ய கோத்திரம்) கோத்திரத்தைச் சேர்ந்த பிராமணர்கள்.
 
3.ஒல்காப் புகழ் தொல்காப்பியன் என்று பிற்காலத்தில் புகழப்பட்ட பேரறிஞரைப் பற்றி சங்க இலக்கியத்தில் ஒரு குறிப்பும் இல்லாதது ஏன்? இவருக்கு முன் இலக்கியம் இருந்தால் அவை யாவை? அழிந்த நூல்கள் பட்டியலில் நூல்கள் பெயர்களில் சம்ஸ்கிருதச் சொற்கள் அல்லவா இருக்கின்றன! மேலும் தொல்காப்பியர் காலத்தவராகக் கருதப்படும் பனம்பாரனார் போன்றோரின் தமிழ், எளிய தற்காலத் தமிழாக இருக்கிறதே! மொழி இயல் ரீதியில் இவர்களை மிகவும் முன் போட முடியாதே. மேலும் முதல், இடைச் சங்க புலவர் பாடல்களும் சங்க இலக்கியத் தொகுப்பில் இருக்கின்றன. அவைகளின் நடையைப் பார்க்கையில் மூன்று தமிச் சங்கங்களும் 200  அல்லது 300 ஆண்டுகளுக்குள்தான் இருந்திருக்க வேண்டும்.
 
(எனது ‘ 3 தமிழ் சங்கங்கள் உண்மையா கட்டுக் கதையா?’ Three Tamil Sangams: Myth and Reality என்ற கட்டுரையில் மேல் விவரம் காண்க)
 
4. தொல்காப்பியனாரின் ஒரு சாலை மாணாக்கரான பனம்பாரனார் பாட்டிலும் ஆதிரையாரின் சிறப்புப் பாயிரத்திலும் வடமொழி சொற்களும் (அவையம், உலகம்), பிற்காலக் கருத்துகளும் இருக்கின்றன. தமிழ் கூறும் நல் உலகம் வேங்கட மலைக்குள் சுருங்கி விட்டதை மாமுலனார் போன்ற புலவர்களும் வேங்கடத்துக்கு அப்பால் உள்ள நாடுகளை ‘மொழி பெயர் தேசம்’ என்று குறிப்பிடுவர். ஆகையால் ஏறத் தாழ ஒரே காலத்தைப் பற்றி அல்லது மாமுலனாருக்குப் பிந்திய காலத்தைப் பற்றியே சிந்திக்க வேண்டி இருக்கிறது.
 
5. தொல்காப்பியர் 68 இடங்களில் பயன்படுத்தும் “என்மனார்” முதலிய சொற்கள் சங்கச் சொல்லடைவில் இல்லை என்பதோடு ‘ஆர்’ விகுதி பிற்கால விகுதியாகும். வினைச் சொற்கள் ஆன், ஆய், ஆர் என்று நெடிலில் முடிவது கலித்தொகை, பரிபாடலில் அதிகம் வரும். இவை பரிபாடல், கலித்தொகை காலத்தைச் சேர்ந்தவை. இந்த இரு நூல்கள் பற்றிய குறிப்பும் தொல். இல் உண்டு. இதற்கு முந்திய பரிபாடல், கலித்தொகை பற்றிய சான்றுகள் இழந்த நூற்பட்டியலிலும் இல்லை.
 
6. தொல். பயன்படுத்தும் இலக்கணம் ,வணிகன், காரணம் போன்ற வடமொழிச் சொற்கள் சங்க கால நூல்களில் இல்லை.
 
7. தொல்காப்பியர் காலப் பாண்டியனை வழுதி, மாறன், செழியன் என்று சொல்லாமல் பாண்டியன் என்று மட்டும் அழைப்பதையும் கருத்திற் கொள்க. அகம், புறம் முதலிய பாடல்களில் இச் சொல் உண்டு என்றாலும் அவைகளின் காலம் சங்க கால இறுதிக் கட்டமா என்பதை ஆராய வேண்டும்.
 
8.தர்ம, அர்த்த, காம, (மோட்சம்)= அறம், பொருள், இன்பம், (வீடு) என்ற வடமொழி வரிசை திருக்குறள் காலத்தில் தோன்றி பதினென் கீழ்க்கனக்கு நூல்களில் பெருகுவதைக் காணலாம். புறம் 28, 31 பாடல்களில் காணப்படும் இந்த இந்து மதக்கருத்துக்கள் தொல். இல் 1363, 1038 சூத்திரங்களிலும் காணக்கிடக்கிறது.
 
9.பரைத்தமை: பரத்தையிற் பிரிவு என்பது தலைவனின் ஒழுக்கக் கேட்டிற்கு அடையாளம். சங்க நூல்கள் இவைகளை அன்றாட வாழ்வியல் நிகழ்ச்சியாகப் பேசும். ஆனால் திருக்குறள் காலத்திலிருந்து இதைக் கண்டனப் பார்வையில் காண்கின்றனர். தொல்காப்பியர் இதை ஒரு பிரிவாக இலக்கணத்திற் சொல்ல மனமில்லாமல் ஒதுக்கிவிட்டது போலத் தோன்றுகிறது. அதாவது காலத்தின் தாக்கம். பிற்கால இறையனார் களவியல் இதை ஒரு சூத்திரமாக வைத்து நூல் செய்துள்ளார். ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக பலர் சந்தேகிக்கும் சிலப்பதிகாரத்தில் பரத்தையர் வாழும் வீதியை இளங்கோ அடிகள் 22 வரிகளில் வருணிக்கிறார்.
 
10.எதுகை:- குறளைப் போல, அதிகம் காணப்படுகிறது. ஆய்த எழுத்துப் பிரயோகமும் சங்க நூல்களை விட அதிகம்.
 
11.ஒட்டகம்: தொல்காப்பியர் ஒட்டகம், குதிரை முதலிய சொற்களைப் பயன்படுத்துவதும் இவரது காலத்தைக் காடுகிறது. சங்க காலத்தின் இறுதிகட்டத்தில் வந்த சிறுபாணாற்றுபடையிலும் அகம் 245லும் மட்டுமே ஒட்டகம் வருகிறது.
 
12.தொல்காப்பியர் 287 இடங்களில் தனக்கு முந்தி இருந்தவர்கள் கூறியது என்று பல விதிகளைக் கூறுகிறார். அவருக்கு முந்திய அத்தனை பேரின் நூல்களில் ஒரு சில கிடைத்திருந்தாலும் கூட, இந்தக் கட்டுரைக்குத் தேவையே எழுந்திராது. ஆக அவர் கூறுவது நாமறிந்த சங்க காலப் புலவர்கள் என்றே கருதவேண்டும்.
 
13. தொல்காப்பியர் பயன்படுத்தும் சம்ஸ்கிருதச் சொற்கள் பட்டியல் மிக மிக நீண்டது; கீழே காண்க:
 
எழுத்து அதிகாரம்: உவமம், காலம், காரம், காயம், திசை, பூதம், பூதன், மதி, ஆசிரியர், இமை, உரு, உருவு, துணி (12)
சொல் அதிகாரம்: அத்தம், ஆனை, இலக்கணம், உவமம், கருமம், களம், காரணம், திசை, தெய்வம், பூதம், சுண்ணம், வண்ணம் (12)
பொருள் அதிகாரம்: அத்தம், அந்தரம், அம்போதரங்கம், அமரர், அமுதம், அவை, ஆரம், உலகம், உவமம், உரு, ஏது, கபிலை, கரகம், கருமம், கரணம், காமம், காயம், காரணம், காலம், குணம், குஞ்சரம், சிந்தை, சின்னம், சூதர், தாரம், திசை, தூது, தெய்வம், நாடகம், நிமித்தம், பழி, பருவம், பலி, பூதம், மங்கலம், மண்டிலம், மந்திரம், மதி, மாயம், மானம், முகம், முரசு, வருணன், வள்ளி, வாணிகம் (46)
கீழ்கண்ட வார்த்தைகள் பிராக்ருதம் மூலமாக நுழைந்த சம்ஸ்கிருதச் சொற்கள்: அரசன், அரணம், அவை, ஆசான், ஆசிரியர், ஆணை, இமை, இலக்கணம், உரு, ஏமம், ஐயர், கவரி, சுண்ணம், தாமதம், தூணி, தேயம், நிச்சம், பக்கம், பண்ணத்தி, பார்ப்பனன், பையுள், மாராயம், வண்ணம்.
 
சில சொற்கள் மீண்டும் வந்த போதும் திருப்பிக் கொடுத்தமைக்குக் காரணம் தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களும் ஒரே காலத்தவை அல்லது ஒரே காலத்தில் இருவேறு ஆசிரியர்களால் எழுதப்பட்டவை எனபதைக் காட்டவே..

__________________

Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 
லண்டன் சுவாமிநாதன் swami_48@yahoo.com

தொல்காப்பியத்தின் துவக்க வரியே நெருடலாக இருக்கிறது. “எழுத்தெனப்படுவது” என்று செயப்பாட்டு (வினை) பொருளில் –Pseudo Passive voice–துவக்குகிறார். இதை பொருளதிகாரத்திலும் காண்கிறோம்.உலகத்தில் எந்த நூலும் இப்படி துவங்குவது இல்லை.

சொல்லப்/ பட்டன/ படும்/ பட்ட (3-564-1, 651-1; 3-63-22, 68-8, 253-2,). இது போல மணிமேகலை-24,30. திருக்குறளிலும் ‘கொல்லப்படு’ என்ற சொல் வருகிறது. இதுவும் தொல்காப்பியத்தின் காலத்தைக் காட்டுவதோடு மூன்று அதிகாரங்களும் ஒரே காலத்தவை என்பதையும் காட்டும். புரிதல், புரிந்தோள் என்பன தொல்காப்பியத்தோடு சிலப்பதிகாரம், மணிமேகலையில் மட்டூமே வரும்.

ஆகும்: இந்தச் சொல் மூன்று அதிக்கரங்களிலும் நிறைய இடங்களில் வரும். மேலும் சம அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரே ஆசிரியர் மூன்று அதிகரங்களையும் எழுதாவிடில் இப்படி இருக்கமுடியாது. புறநானூற்றில் மூன்றே இடங்களில் மட்டுமே வருகிறது.

எண்ணுங்காலும்: இது தொல். இல் 2-47-1 ல் உள்ளது. இதைத் தவிர திணைமாலை ஐம்பதில் (150-2) மட்டுமே வருகிறது. இப்படிக் ‘கால்’ விகுதியுடன் வருவது சங்க காலத்தில் மிகமிகக் குறைவு. கலி., குறள் போன்ற நூல்களில்தான் அதிகம்.

எப்பொருள்: இது சொல் அதிகாரத்துக்குப் பின்னர் குறள் முதலான பிற்கால நூல்களில் மட்டுமே உள்ளது. மேலும் ‘எப்’ துவக்கத்துடன் சங்க இலக்கியத்தில் சொற்களே இல்லை.

என்ப: தொல்காப்பியருக்கு மிகவும் பிடித்த இச்சொல் மூன்று அதிகாரங்களிலும் பரவலாகக் காணப்படுவதால் ஒரே ஆசிரியர், ஒரே காலத்தில் எழுதியதே என்பதைக் காட்டும்.

என்மனார்: முன்னர் குறிப்பிட்டது போல 60–க்கும் மேலான இடத்தில் வரும் இச்சொல்லும் 3 அதிகாரங்களிலும் காணப்படுகிறது. இது தவிர கலித்தொகை, குறுந்தொகையில் இரண்டே இடங்களில்தான் வருகிறது.

என்றா: இந்தச் சொல்லும் 3 அதிகாரங்களைத் தவிர வேறு எங்கும் இல்லை.

ஏனை, ஏனவை: ஏனவை என்ற சொல்லை 1, 3 அதிகாரங்களைத் தவிர வேறு எங்கும் காண முடியாது. ஏனை, என்ற சொல் குறிஞ்சிப்பாட்டில் ஒரு இடத்தில் மட்டுமே வரும். தொல். இல் எல்லா அதிகாரங்களிலும் காணப்படுகிறது.

எண்கள்: ஐந்து, எட்டு, ஐம்பது, ஐயீர் ஆயிரம் போன்ற எண்களை 3 அதிகாரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார். உயிர் எழுத்துக்களில் துவங்கும் சொற்களில் இருந்து மட்டுமே எடுத்துகாட்டுகளைக் கொடுத்தேன். ஏணையவற்றைக் கொடுத்தால் கட்டுரை நீளும்.

எள்: தொல்காப்பியர் காலமும் கலித்தொகை- பரிபாடல் காலமும் ஒன்றே என்பதற்கும் பல சான்றுகள் உள்ளன.

எள் என்ற வித்தைக் கொண்டு பல வினைச் சொற்கள் உருவாக்கப்பட்டன. இவை புற நானூற்றில் குறைவாகவும், பிற்காலத்தில் அதிகமாகவும் புழக்கத்தில் உள்ளன.எள்ளின், எள்ளாமை, எள்ளாது— குறள் முதலிய நூல்களில் மட்டுமே வரும். எள்ளின் என்ற சொல் தொல். 3-109-7 தவிர குறள், கலி. மணி.யில் மட்டுமே வருகிறது.

‘இன்’– னில் முடியும் சொற்கள் ஒன்றின், நுவலின், நீங்கின், மறுப்பின், மறைப்பின் முதலியன தொல். தவிர குறள், சிலம்பு முதலிய சங்கம் மருவிய கால நூல்களிலேயே காணலாம்.

தொல்காப்பியத்துக்கு முந்திய அகத்தியம், ஐந்திரம், காதந்திரம் ஆகியனவும் வடமொழி நிபுணர்களால் எழுதப்பட்டது என்பதை நினைவிற்கொண்டு தொல்காப்பியர் காலத்தைக் கணக்கிட வேண்டும்.

தொல்காப்பியத்தில் வடமொழி, மறை (வேதம்), ஐயர் முதலியன இருப்பதையும் கவனத்திற் கொள்ளவேண்டும். தமிழ் நாட்டில் வேத நெறி தழைத்தோங்கி இருந்ததால்தான் நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசான் தலைமையில் காப்பியம் அரங்கேறியது.

தொல்காப்பியர் கடவுள் பற்றி நிறைய இடங்களில் குறிப்பிடுகிறார். ஒரு இலக்கண நூலில் இவ்வளவு இடங்களில் தெய்வம் பற்றிப் பேசியதையும் நோக்கவேண்டும் (கடவுள் பற்றி பொருள். 5, 88, 18, 57, 93, 115 சூத்திரங்களிலும் அறம் பொருள் இன்பம் பற்றி பொருள் 92, 418 சூத்திரங்களிலும் வருகிறது)

தொல்காப்பியத்தின் காலத்தைப் பின்போடுவதால் தமிழின் பெருமைக்கும் பழமைக்கும் எந்த இழுக்கும் வராது. தமிழ் மொழி தொல்காப்பியருக்கு குறைந்தது 500 முதல் 1000 ஆண்டுக்கு முன்  தமிழகத்தில் பேசப்பட்டிருக்கவேண்டும். இவர் இலக்கணம் வகுத்தவர் என்பதைவிட முன்னோரின் இலக்கணத்தைத் தொகுத்தவர் என்பதே சாலப் பொருந்தும்.

தொல்காப்பியர் 38 உவம உருபுகளைத் தருகிறார். இவற்றில் 14 சங்க இலக்கியத்தில் காணப்படவில்லை. ஆனால் வேறு 28 புதிய உவம உருபுகளை சங்கப் புலவர்கள் பயன்படுத்துகின்றனர். ஒரு சிலர் இதை வைத்தே கால இடைவெளி அதிகம் இருந்தால் தானே இப்படி நடக்கமுடியும், ஆகையால் தொல்காப்பியர் காலத்தால் முற்பட்டவர் என்று வாதாட முயல்வர். ஆனால் தொல்காப்பியர் தனக்கு முன்னால் இருந்த விதிகளை அப்படியே கிளிப்பிள்ளை போல ஒப்புவித்தார் என்றே சொல்லவேண்டி இருக்கிறது. இப்படி நான் சொல்லக் காரணம், அவர் பயன்படுத்திய சொற்கள் சிலப்பதிகாரத்திலும் பதினென்கீழ்க்கணக்கு நூல்களிலுமே அதிகம் காணப் படுகின்றன.

நாம் கம்ப்யூட்டர் யுகத்தில் வாழ்கிறோம்.  தொல்காப்பியர் பயன்படுத்திய சொற்களை கம்ப்யூட்டரில் போட்டு பிற்காலச் சொற்களுடன் ஒப்பிட்டால் உண்மை புலப்படும் கம்ப்யூட்டர் வசதி இல்லாத காலத்திலேயே வையாபுரிப் பிள்ளை போன்றோர் தக்க சான்றுகளுடன் காலத்தைக் கணித்தனர். ஆனால் நான் சொல்லும் முறை எல்லா சொற் பிரயோகத்தையும் ஆராய்ந்து விகிதாசாரக் கணக்கில் புள்ளி விவரங்களைக் கொடுத்துவிடும்.

அவர் பயன்படுத்தும் குற்றம், குடிமை, குன்றும் போன்ற சில சொற்களே இதை நிரூபித்துவிடும்

தமிழ் சுடர் மணிகள் என்ற நூலில் 40 பக்கங்களுக்கு தொல்காப்பியரையும் தொல்காப்பியத்தையும் திரு. வையாபுரிப்பிள்ளை அலசி ஆராய்ந்து விட்டார். அதற்கு வெள்ளைவாரனார், இலக்குவனார் போன்றோர் கொடுத்த பதிலகள் திருப்தியாக இல்லை. வ. சுப. மாணிக்கம் போன்றோர் தொல்காப்பியத்தின் புகழ் பாடுவதை நாம் ஏற்கலாம். ஆனால் காலக் கணக்கீடு என்று வரும்போது அவரை எங்கே வைப்பது என்பதை மறு பரிசீலனை செய்யவேண்டும் எனபதே கட்டுரையின் நோக்கம்.

இது காறும் நான் கொடுத்த எடுத்துக் காட்டுகள் காலத்தை உறுதி செய்கிறதோ இல்லையோ. ஆனால் மூன்று அதிகாரங்களையும் எழுதியவர் ஒருவரே அல்லது மூன்று அதிகாரங்களும் ஒரே கலத்தவையே என்பதை உறுதி செய்துவிட்டது. நேரம் கிடைக்கும்போது திரு. வையாபுரிப் பிள்ளையாரின் 40 பக்க வாதங்களைச் சுருக்கி வரைகிறேன்.

தொடர்பு கொள்ள: லண்டன் சுவாமிநாதன் swami_48@yahoo.com

__________________

Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 
 தொல்காப்பியர் பயன்படுத்திய மேலும் பல சொற்களைக் கீழே கொடுத்துள்ளேன். இவை சங்க இலக்கிய நூல்களைவிட பிற்கால நூல்களிலேயே அதிகம் வருகின்றன. சங்க இலக்கியச் சொல்லடைவு, தொல்காப்பியச் சொல்லடைவு, பதினெண்கீxக்கணக்கு நூல்களின் சொல்லடைவு ஆகியவற்றைக் கொண்டு ஒப்பிட்டால் நான் சொல்லுவது நன்கு விளங்கும் ஒரு சில சொற்களை வைத்து மட்டும் இப்படி முடிவு செய்யவில்லை. நூற்றுக் கணக்கான சொற்களை ஆராய்ந்தே இந்த முடிவுக்கு வந்தேன்.

முதல் நாலு பகுதிகளையும் படித்துவிட்டு இப்பகுதியைப் படிக்க வேண்டுகிறேன்.

அரில்தப (குற்றமற) : அரிஷ்ட என்ற சம்ஸ்கிருதச் சொல்லில் இருந்து வந்தது. இதைப் பாயிரத்திலும், நூலிலும் காணலாம்

உயிர்த்தல்: இச் சொல் தொல்.(1-33, 3-104-3, 14) தவிர, கலி.யில் (54-11) மட்டுமே வரும்.

என்பதனால்: இது தொல். (3-145-23), கலி.(39-5) மற்றும் நாலடியார், ஐந்திணை எழுபது போன்ற பிற்கால நூல்களில் மட்டுமே உள்ளன.

‘வை’ யில் முடியும் சொற்கள்: அனையவை, என்றவை, மறைந்தவை போன்ற சொற்கள் பிற்கால நூல்களில் மட்டுமே அதிகம் உள்ளன.

நூறாயிரம், நுனி, நுவலுக்காலை,புணருங்காலை,நீட்டம், நீட்டல் ஆகியனவும் பிற்கால வழக்கில் அதிகம்.

மை—இல் முடியும் சொற்கள்: இவ்வகைச் சொற்கள் குறளில் பரவலாக உள்ளன. புறநானூற்றில் ஓரிடத்தை தவிர தொல். (3-138-1) மற்றும் பிற்கால வழக்கில் அதிகம்.

முதலில், முடிவினது, முடிவு, முடிபு ஆகியனவும் இப்படிபட்டவை.

மானம்: இது தொல். இல் 3 அதிகாரங்களிலும் பரவலாக உள்ளது. இது தவிர பிற்கால நூல்களில் மட்டுமே காணமுடியும்.

மறுதலை, விழைவு, கொற்றவை நிலை, பல்லவை, பல்முறை, பல்வகை, புரிதல், புல்லா, புல்லாது, பெருநெறி, பாங்கன், மடிமை, மடன்மா, வரைதல், கொள்ப ஆகிய சொற்களையும் காண்க.

குறிலும் நெடிலும்

சங்க இலக்கியத்தில் குறில் ஒலியுடன் வரும் சொற்கள் நமது காலத்தில் நெடில் ஒலியுடன் வழக்கத்தில் உள்ளன. பழங்காலத்தில் வந்தனன், வந்தனர், வந்தனள் என்றால் இப்பொழுது நாம் வந்தான், வந்தார்கள், வந்தாள் என்று நீட்டு முழங்குவோம். அதாவது ஆன், ஆர், ஆள் விகுதி பிற்காலத்தில் அதிகம். இதை தொல். இல் நிறைய காணலாம்.

விழிப்ப, பொச்சாப்பு, பெருமிதம், மூவகை இவைகளும் தொல். இல் 3 அதிகாரங்களிலும் பரவலாக உள்ளன. இது தவிர பிற்கால நூல்களில் மட்டுமே காணமுடியும்.

சிவண: இந்த ஒலி தொல்காப்பியரின் முத்திரை. சிவணல், சிவணிய, சிவணி, சிவணாது, சிவணும் போன்று 20க்கும் மேலாக இருக்கின்றன. சங்க இலக்கியத்தில் 27000 வரிகளில் மூன்று இடத்தில் மட்டுமே காணலாம். ஆக மூன்று அதிகாரங்களும் ஒரே காலத்தவை அல்லது ஒரு கைப்பட எழுதியவை என்பதற்கு வேறு சான்றே தேவை இல்லை.

இதே போல காரணம், கருமம், வெறுப்பு, கல்வி போன்ற சொல் வழக்குகளும் குறளிலும் பிற்பட்ட நூல்களில்ம் மட்டுமே உள்ளதால் தொல்காப்பியரையும் அவர்களோடு வைத்தே காணவேண்டும்.

தொல். கூறும் ஔ, ஃ முதலியன சங்க இலக்கியத்திலும் பழைய கல்வெட்டிலும் இல்லை அல்லது குறைவு. இதுவும் அவரது காலத்தை கணக்கிட உதவும். தொடர்பு கொள்ள: swami_48@yahoo.com

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard