Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 08 அன்புடைமை அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7478
Date:
08 அன்புடைமை அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
அன்புடைமை 
தொடர்புடையார்மேல் செல்வதாகிய உள்ள நெகிழ்ச்சி
குறள் திறன்-0071 குறள் திறன்-0072 குறள் திறன்-0073 குறள் திறன்-0074 குறள் திறன்-0075
குறள் திறன்-0076 குறள் திறன்-0077 குறள் திறன்-0078 குறள் திறன்-0079 குறள் திறன்-0080

openQuotes.jpgமனைவியும் மக்களும் பிறருமாகத் தம்மொடு தொடர்புடையார்கண் காதலுடையனாதல். தொடர்புபற்றி எழும் இவ்வன்பு சேய்க்கும் தாய்க்குமிடையே சிறந்து தோன்றுதலின் இதனை மக்கட்பேற்றின்பின் தொடர வைத்தார். இல்லறம் இனிது நடத்தற்கும் பிற உயிர்களின்மேல் அருள் பிறத்தற்கும் காரணம் அன்பாதலின் இது வேண்டப்பட்டது.
- நாகை சொ தண்டபாணியார்:

 

இல்வாழ்வார்க்கு அமைய வேண்டிய இன்றியமையாத குணம் அன்பு. இது அகத்தே உணரப்படும் மென்மையான உணர்வு; இதற்குப் புறவடிவம் இல்லை. மணமான ஆண்-பெண் தாங்கள் ஒருவருக்காக ஒருவர் உள்ளதாக உணருவது அன்பின் முதல்படியாக அமையும். காமத்தில் தோன்றிய, தன்னலம் சார்ந்த அன்பு பின்னர் அதனைக் கடந்து பிள்ளைகள், உற்றார், உறவினர், நட்பினர் என்று, தன்னலம் மறைந்து, பரந்து விரிகிறது. அன்புமுதிர்ந்து ஆர்வம் என்ற அடுத்த நிலைக்கு உயர்கிறது. ஆர்வம் இன்னும் உயர்ந்த நிலையான நண்பைத் தருகிறது. அன்புடைமைதான் மனிதனை மனிதனாக்குகிறது என்கிறது இவ்வதிகாரம். உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு அன்புதான். அன்பு இல்லாவிட்டால் உண்டாகும் குற்றங்களும் பேசப்படுகின்றன. .

அன்புடைமை

இவ்வதிகாரம் தொடக்கத்துத் தொடர்புடையார் மாட்டுள்ள அன்பைப் பேசுகிறது. அதாவது இல்லத்திலுள்ளோரிடம் அன்பு செலுத்துவது பற்றியும் அன்பு காட்டாவிட்டால் உண்டாகும் குற்றங்கள் பற்றியும் கூறுகிறது.
முதற்குறடபா அன்பின் வெளிப்பாடு பற்றிக் கூறுகின்றது. இரண்டு முதல் ஆறு வரையுள்ள குறட்பாக்கள் அன்பின் இயல்பையும் சிறப்பையும் கூறுவன. அன்பின்மையின் கொடுமையையும் இழிவையும் கடைசி நான்கு பாக்கள் குறிக்கின்றன. அருள் பிறத்தற்கும் அன்பே காரணமாகும் என்பதையும் சுட்டிச் செல்கிறது.. (இல்லறத்திலுள்ள அன்புடைமை அதிகாரத்துக்கு ஒத்த கருத்துடைய துறவற அதிகாரம் அருளுடைமை ஆகும்.)

உடல், உயிர். அன்பு இவற்றிற்கு இடையேயான தொடர்பு பேசப்டுகிறது.

அன்பில்லாதார் என்று சொல்லப்படுபவர் குடும்ப உறுப்பினர்களைபற்றி அக்கறை இல்லாமலும், பொறுப்பில்லாமலும் இருப்பவர்களைக் குறிப்பதாகக் கொள்ளலாம். காட்டாக கணவன் -மனைவி உறவில் காம இச்சை ஒன்றையே கருதியும் ஒருவரையொருவர் அஞ்சியோ ஏவல் செய்தோ வாழ்தலும் அன்பற்ற நிலையைக் குறிக்கும். தலைவன் தலைவியிடம் அக்கறையின்றி இருப்பதும் மனைவி கணவனை வெறுத்து ஒதுக்குவதும் அன்பின்மையாகும். மக்கள் முதிய பெற்றோரைப் புறக்கணிப்பதும் அன்பற்ற தன்மையைக் காட்டும். இறைவன் ஒறுத்தல் என்பது குறளில் அரிதாகக் காணப்படுவது - அன்பில்லாதவர்களை அறக்கடவுள் ஒறுக்கும் என இவ்வதிகாரத்துள்ள ஒரு குறள் கூறுகிறது. அன்பற்றவர்கள் உயிரற்றவர்கள் எனக் கூறுகிறது இன்னொரு பாடல். அவர்கள் புறத்துறுப்புக்களால் அழகுநலன் பெற்று விளங்கினாலும் அன்பில்லையென்றால் இல்லறம் எப்படிச் சிறக்கும் எனக் கேட்கிறது மற்றொரு பாடல். அவர்கள் நடைப்பிணங்களே என்று கடைசிப் பாடல் சாடுகிறது.

 

 

அன்புடைமை அதிகாரப் பாடல்களின் சாரம்:

 

  • 71 ஆம்குறள் அன்பு செய்யப்பட்டார் துன்பம் உறுதலைப் பொறுக்கமாட்டாமல் அன்புடையார் கண்ணீரும் கம்பலையுமாய் ஆகிவிடுவர் என்கிறது.
  • 72 ஆம்குறள் அன்புள்ளம் கொண்டவர் தன்னலம் கருதாதவராயிருப்பர் என்பது.
  • 73 ஆம்குறள் உடலுக்கும் உயிருக்கும் தொடர்பு உண்டாக்குவது அன்புதான் என்பதைச் சொல்கிறது.
  • 74 ஆம்குறள் அன்பு எப்படி மனிதநண்பாக வளர்ச்சி பெறுகிறது என்பதைச் சொல்வது.
  • 75 ஆம்குறள் அன்புடையார் இன்பச் சிறப்பு அடைகின்றனர் என்கிறது.
  • 76 ஆம்குறள் அறசெயல்கள் மட்டுமன்றி மறச்செயல்களும் அன்பின் ஆட்சியாலேயே நடைபெறுகின்றன எனக் கூறுகிறது.
  • 77 ஆம்குறள் அன்பில்லாதவனை அறம் ஒறுக்கும் என்று சொல்கிறது.
  • 78 ஆம்குறள் அன்பில்லாதவர் உயிரற்றுக் காட்சியளிப்பர் எனச் சொல்வது.
  • 79 ஆம்குறள் அன்பு என்ற உறுப்பே இல்லற வாழ்வைப் பயனுள்ளதாக்கும் என்று குறிக்கிறது.
  • 80 ஆவதுகுறள் அன்பில்லாத உடம்பு உயிரற்றது ஆகிறது எனச் சாடுகிறது.

 

அன்புடைமை அதிகாரச் சிறப்பியல்புகள்

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்.. (குறள் 71)என்ற பாடல் அன்பிற்குரியோர் இவ்வுலகத்திலிருந்து மறையும் போது உண்டாகும் கண்ணீரையும் கமபலையும் நம் முன்னே கொண்டு வருகிறது.

அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்; மறத்திற்கும் அஃதே துணை. (குறள் 76) 'அன்பின் துணையாலேயே மறச்செயலும் நிகழ்கிறது' என்ற கருத்து அன்பைப் புதிய கோணத்தில் பார்க்கப்பட்ட சிந்தனைக்கு விருந்தாகும் குறள்.

என்பில்லாத புழுக்களை வெயில் காய்வது ,(குறள் 77) என்ற உவமை அணி அழகுற அமைந்துள்Kளது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard