Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மருத்துவர் சைமனின் உடலை மீண்டும் வேறு இடத்தில் புதைப்பது பாதுகாப்பானது அல்ல:


Guru

Status: Offline
Posts: 7474
Date:
மருத்துவர் சைமனின் உடலை மீண்டும் வேறு இடத்தில் புதைப்பது பாதுகாப்பானது அல்ல:
Permalink  
 


மருத்துவர் சைமனின் உடலை மீண்டும் வேறு இடத்தில் புதைப்பது பாதுகாப்பானது அல்ல: மனைவியின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை மாநகராட்சி

it-is-not-safe-for-the-doctor-to-bury-the-body-again-the-madras-corporation-rejected-his-wife-s-request

 

https://www.hindutamil.in/news/tamilnadu/551300-it-is-not-safe-for-the-doctor-to-bury-the-body-again-the-madras-corporation-rejected-his-wife-s-request.html 

சென்னையில் கரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர் உடலைப் புதைப்பதில் ஏற்பட்ட எதிர்ப்பின் காரணமாக, வேறு மத மயான பூமியில் புதைக்கப்பட்டது. அவரது உடலைத் தோண்டி எடுத்து தங்கள் மதம் சார்ந்த கல்லறையில் புதைக்க அனுமதி கேட்டு மருத்துவரின் மனைவி முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் பாதுகாப்பைக் காரணம் காட்டி அக்கோரிக்கையை சென்னை மாநகராட்சி மறுத்துள்ளது.

சென்னையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த பிரபல மருத்துவர் சைமன், கரோனா தொற்றால் உயிரிழந்தார். அவரது உடலைப் புதைக்க எடுத்துச் செல்லும்போது அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அவரது உடல் மாநகராட்சி மயான பூமியில் புதைக்கப்பட்டது. இந்த விவகாரம் இந்தியா முழுதுவம் பேசுபொருளானது.

தனது கணவரி கடைசி ஆசைப்படி அவரது உடலைத் தோண்டி தங்கள் மதம் சார்ந்த கல்லறையில் அடக்கம் செய்ய உதவும்படி முதல்வரிடம் மருத்துவரின் மனைவி ஆனந்தி சைமன் கோரிக்கை வைத்தார். இந்நிலையில் அவரது கோரிக்கையை சென்னை மாநகராட்சி நிராகரித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு:

“மருத்துவர் சைமன் ஹெர்குலில்ஸ் என்பவர் நுங்கம்பாக்கம் கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு அவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு தொடர் சிகிச்சைக்குப் பின்னர் சிகிச்சை பலனின்றி ஏப்.19 அன்று இயற்கை எய்தினார்.

அன்று மாலை 6 மணி அளவில் அவர் மரணம் அடைந்ததாக மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மரணமடைந்த மருத்துவரை நல்லடக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அவரது மனைவியிடம் தெரிவித்தபோது அவர் குடும்பத்திற்கு என்று கீழ்ப்பாக்கம் சிமெட்ரிஸ் போர்டு என்கிற தனியார் இடத்தில் அடக்கம் செய்ய இடம் உள்ளதாகவும், அங்கு அடக்கம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

சென்னை மாநகராட்சி சார்பில் சிமெட்ரி போர்டு நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவர் குடும்பத்தார் மூலமாகவும் தெரிவிக்கப்பட்டது. சிமெட்ரி நிர்வாகத்தினர் மருத்துவர் உடலை 19/4 இரவு குடும்பத்திற்கு அடக்கம் செய்ய வாய்ப்பில்லை எனத் தெரிவித்தனர். இத்தகவல் உடனடியாக அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மருத்துவர் சைமனின் குடும்பத்தாருக்குத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது மருத்துவர் குடும்பத்தினர் அன்று இரவுக்குள் மருத்துவர் உடலை வேறு ஏதேனும் கல்லறையில் நல்லடக்கம் செய்து கொடுக்கும்படி கேட்டுக் கொண்டனர். அதன்படி கீழ்ப்பாக்கம் மாநகராட்சியால் பராமரிக்கப்படும் கிறித்தவக் கல்லறையில் அடக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.

மருத்துவர் குடும்பத்தாரின் சம்மதத்துடன் ஏப்.19 இரவு 10 மணி அளவில் நல்லடக்கம் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதே நேரத்தில் அடக்கம் தொடர்பான தகவல்கள் கீழ்ப்பாக்கம் காவல் உதவி ஆய்வாளருக்கு இரவு 8 மணிக்குத் தெரிவிக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டது.

அதன்படி கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் தலைமையிலான குழுவினரால் பாதுகாப்பு அவ்விடத்தில் வழங்கப்பட்டது. மரணமடைந்த உடலை நல்லடக்கம் செய்யத் தேவையான பணிகள் தொடங்கிய நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 400க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றுசேர்ந்து கரோனா நோய்த் தோற்று பாதித்து உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்புத் தெரிவித்தனர்.

எதிர்ப்புத் தெரிவித்த பொதுமக்களிடம் அண்ணா நகர் காவல் துணை ஆணையரும், கீழ்ப்பாக்கம் துணை ஆணையரும் மருத்துவர் உடலை அடக்கம் செய்வதால் மருத்துவரீதியாக எந்தப் பாதிப்பும் இல்லை என எடுத்துக் கூறியும் பொதுமக்கள் ஏற்கவில்லை. மேற்கண்ட சூழ்நிலை காரணமாக மருத்துவர் உடலை அவரது குடும்பத்தார் சம்மதத்துடன் 101-வது வார்டில் அமைந்துள்ள வேலங்காடு மயான பூமியில் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அண்ணா நகர் காவல் உதவி ஆணையருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு மரணம் அடைந்தவரின் உடல் வேலங்காடு மயான பூமிக்குக் கொண்டு வரப்பட்டது. நள்ளிரவு 12 மணி அளவில் மருத்துவமனையிலிருந்து உடல் அடக்கத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு வந்த அவரது குடும்பத்தார் மதம் சார்ந்த சடங்குகளைச் செய்து முடித்தனர்.

எதிர்பாராதவிதமாக மயான பூமிக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றுகூடி மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தாக்கினர். ஆம்புலன்ஸை சேதப்படுத்தினர். இந்த அசாதாரண சூழ்நிலை ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த மருத்துவர் உடல் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

காவல் துறையினரால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின் காவல் துறையினரின் அறிவுறுத்தலின்படி மரணமடைந்த மருத்துவரின் குடும்பத்தாரின் ஒப்புதலுடன் இறந்தவரின் உடல் வேலங்காடு மயானத்தில் நல்லடக்கம் செய்யத் திரும்பக் கொண்டு வரப்பட்டது .

மரணமடைந்த மருத்துவரின் சக மருத்துவர் பிரதீப் முன்னிலையில் மரணமடைந்தவரின் உடல் முழு மரியாதையுடன், மதச் சடங்குகளின் படியும், நோய்த் தொற்று பாதிப்பு மரணமடைந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்கான சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலின் படியும் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மருத்துவரின் மனைவி ஆனந்தி சைமன் நல்லடக்கம் செய்யப்பட்ட தனது கணவரின் உடலை மீண்டும் தோண்டி எடுத்துக் கொள்ளப் கீழ்ப்பாக்கம் சிமெட்ரி போர்டு கல்லறையில் அடக்கம் செய்ய சென்னை மாநகராட்சியிடம் கடந்த 22-ம் தேதி வேண்டுகோள் வைத்துள்ளார். இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை வல்லுநர்கள் அடங்கிய குழுவின் அறிக்கை கோரப்பட்டது.

அவர்கள் அறிக்கையின்படி கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக மரணமடைந்த நபரின் உடல் பாதுகாப்பான முறைப்படி அடக்கம் செய்யப்பட்ட பின் மீண்டும் வெளியில் எடுத்து வேறு இடத்தில் அடக்கம் செய்வது பாதுகாப்பானது அல்ல என தெரிவித்துள்ளதால் ஆனந்தி சைமனின் கோரிக்கையை ஏற்பது சாத்தியமில்லை என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது”.

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
RE: மருத்துவர் சைமனின் உடலை மீண்டும் வேறு இடத்தில் புதைப்பது பாதுகாப்பானது அல்ல:
Permalink  
 


பிணத்தை கீழ்ப்பாக்கம் கல்லறையில் புதைக்க டாக்டரின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தால் விசாரணை - ஐகோர்ட்டு உத்தரவு

பிணத்தை கீழ்ப்பாக்கம் கல்லறையில் புதைக்க டாக்டரின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தால் விசாரணை - ஐகோர்ட்டு உத்தரவு
பிணத்தை கீழ்ப்பாக்கம் கல்லறையில் புதைக்க டாக்டரின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பதிவு: மே 02,  2020 01:37 AM
சென்னை, 
 
கொரோனா வைரஸ் தாக்கியதில் மரணமடைந்த டாக்டர் சைமன் ஹெர்குலஸ் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய அப்பகுதியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டனர். 
 
இதனால் டாக்டரின் உடல், வேலங்காடு சுடுகாட்டில் புதைக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த உடலை அங்கிருந்து தொண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்க செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் சத்தியநாராயணன் செல்வானந்தன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் நீதிபதிகள், உடலை வேலங்காடு சுடுகாட்டில் இருந்து எடுத்து கீழ்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யவேண்டும் என்று டாக்டர் சைமனின் மனைவி கோரிக்கை விடுத்தார். 
 
அந்த கோரிக்கையை சாத்தியம் இல்லை என்று கூறி மாநகராட்சி நிராகரித்து விட்டதாக, கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால் கூறினார். ஏற்கனவே மாநகராட்சி நிர்வாகம் கோரிக்கையை நிராகரித்து விட்ட நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. தள்ளுபடி செய்கிறோம். ஒருவேளை மாநகராட்சி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து டாக்டர் சைமனின் குடும்ப உறுப்பினர் வழக்கு தொடர்ந்தால், அது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்‘ என்று உத்தரவிட்டனர்.


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

கிறிஸ்தவ மிஷனரி மோசடி அம்பலம்

அரசு அறிவித்த பணத்தை பெற நடத்தப்பட்ட நாடகம்.

RC கிறிஸ்தவ ரை புதைக்க CSI கல்லறை கொண்டு போனதன் நோக்கம் இந்த செய்தி மீடியாவுக்கு ச் சேர 1/26


2 வது ஒரு நபர் டாக்டர் பிணத்துடன் இரவு முழுவதும் இருந்ததாக வீடியோவை வெளியே விட்டு மக்கள் அனுதாபம் பெற்றாச்சு. 2/26
3 வது டாக்டர் மனைவி பிணத்தை தோண்டி RC கல்லறை யில் வைக்க வேண்டும் என்றவுடன் தமிழக முதல்வர் போனில் அந்த அம்மாவிடம் பேசி 10 லட்சம் 50 லட்சம் ஆகி விட்டது. 3/26
4. உண்மையில் அவர் அரசின் இழப்பீடு வாங்க தகுதியற்றவர். 4/26
5. இதே போல ஒரு இந்து டாக்டர் என்றால் அரசின் இழப்பீடு கிடைக்காது. 5/26
6. இழப்பீடு கொடுக்க அரசின் விதிகள் பொருந்த வில்லை என்றால் 50 லட்சம் கொடுக்க கூடாது.

டாக்டர் சைமனின் மனைவி தனது கணவரின் உடலை கீழ்பாக்கம் கல்லறையில் மத வழக்கப்படி புதைக்க அரசு உதவ வேண்டும் என கண்ணீரும் கம்பலையுமாக ஒரு வீடியோ வெளியிட்டதும்,

வீட்டில் வெட்டிப் 6/26
பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கும் சில, பல போராளி தலைவர்கள் கண்களில் அந்த வீடியோ பட்டதும் வீறுகொண்டு எழுந்து,

டாக்டர் சைமன் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என அரசியல் துக்கடா கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதில் கவனிக்க 7/26
வேண்டிய விசயம் என்னவென்றால் டாக்டர் சைமனுக்கு அரசின் உச்சபட்ச மரியாதையான அரசு மரியாதை அளிக்கப்பட வேண்டுமா?

அதற்கு முன் சில நிகழ்வுகளைப் பார்ப்போம்;

சென்னையில் உள்ள நியூ ஹோப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும் நரம்பியல் நிபுணருமான மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ் கொரோனாவால் 8/26
பாதிக்கப்பட்டு, ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை வானகரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ஏப்ரல் மாதத் துவக்கத்தில் கொரோனா அறிகுறிகளுடன் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அவருக்கு அந்தத் தொற்று எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தெளிவில்லை.
9/26
அவர் நரம்பியல் நிபுணர் என்பதால் வழக்கமான காய்ச்சல், தலைவலி போன்ற உடல்நலப் பிரச்சனைகளுடன் வருபவர்களுக்கு அவர் சிகிச்சை அளிப்பதில்லை.

சமீப காலத்தில் அவர் வெளிநாடு ஏதும் செல்லாத நிலையில், மார்ச் மாதத் துவக்கத்தில் அவர் கொல்கத்தாவுக்குச் சென்றுவந்தார். அது மட்டுமே சமீபத்தில் 10/26


சைமன் மேற்கொண்ட பயணம். சிகிச்சை பலனின்றி அவர் ஞாயிற்றுக் கிழமையன்று உயிரிழந்துவிட்டார்.

இதன் மூலம் நமக்குத் தெரிய வருவது, 11/26
1) டாக்டர் சைமன் அரசு மருத்துவமனையில் வேலை பார்த்த அரசு மருத்துவரல்ல. 12/26
2) அவர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து அதனால் கொரோனா தொற்று ஏற்பட்ட நபரும் அல்ல. 13/26
3) சராசரி வாழ்க்கையில் கூட சாதாரண நோயாளிகளுக்கு அவர் மருத்துவம் பார்த்ததில்லை. 14/26
4) கொரோனா தொற்று ஏற்பட்டதும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளவில்லை. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து தனியார் மருத்துவமனையிலேயே இறந்திருக்கிறார்.

5) தன் வாழ்நாளில் அவர் குறைந்தபட்சம் கொரோனா பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ததாகக் கூட ஆதாரங்கள் இல்லை. 15/26
6) மருத்துவர் என்கிற பட்டத்தை எடுத்துவிட்டுப் பார்த்தால் அவர் சாதாரண நோயாளியே!

உண்மை இவ்வாறாக இருக்க எதன் அடிப்படையில் டாக்டர் சைமனுக்கு அரசு மரியாதை தரவேண்டும் என ஆப்பாயில் 16/26
அரசியல்வாதிகள் கேட்கிறார்கள் என்பது புரியவில்லை. ஒருவேளை அவர் கிறிஸ்தவர் என்பதால் இருக்குமோ?

இத்தனை விஷயங்களும் டாக்டர் சைமனின் மனைவிக்கு தெரியும். ஆனால் அவர் வீடியோ பேட்டியில் அழுதுகொண்டே இறந்துபோன டாக்டர் சைமன் அவருடன் வீடியோ காலில் பேசியதாகவும் தன்னுடைய மரணம் எவ்வாறு 17/26
இருக்கும் என்றும்,
மரணத்துக்குப் பிறகு அவர் எவ்வாறு அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் அவரே கூறியதாக அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு புளுகுகிறார்.

நுரையீரலை வைரஸ் கிருமி தாக்கி சுவாசிப்பதற்கே பெரும்பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஒரு நோயாளி வீடியோ காலில் தனது மரணம் குறித்தும், 18/26
இறுதி சடங்கு குறித்தும் பேசினார் என்பது அறிவுடைய எவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய சங்கதி அல்ல.

தவிர அந்த வீடியோ கால் எந்த நாளில் எவ்வளவு நேரம் எங்கிருந்து பேசப்பட்டது என்பது குறித்தும், அந்த வீடியோ கால் ஆதாரத்தையும் டாக்டரின் மனைவி வெளியிடாதது ஏன்?

உண்மையிலேயே டாக்டரின் 19/26
மனைவி மனசாட்சியுள்ள மனிதராக இருந்தால் அரசு டாக்டர் மரணத்திற்க்கு கொடுத்திருக்கும் அத்தனை சலுகைகளையும் எதன் அடிப்படையில் பெற்றுக் கொண்டு இருக்கின்றார் என்பதற்கு தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

கொரோனா நோயாளியை ஒரு முறை அடக்கம் செய்வதற்கே பெரும் பாடுபட வேண்டும். இந்நிலையில் 20/26
ஏற்கனவே அடக்கம் செய்த அந்த உடல் கொரோனா வைரஸ்யுடன் சேர்ந்து அழுக ஆரம்பித்து இப்போது புது புது வைரஸ் கிருமிகளை தன்வசம் வைத்திருக்கும்.

அந்த உடலை மீண்டும் தோண்டி வெளியில் எடுத்தால் புதுப்புது நோய்கள் உருவாகாதா? அவ்வாறு உயிரைப் பணையம் வைத்து அந்த உடலை மீண்டும் தோண்டி 21/26
எடுப்பதற்கு யார் வாழ்க்கையை தியாகம் செய்வது? எதற்காக செய்ய வேண்டும்? வெட்டி வேலை பார்த்து வெட்டியாக உயிரை விடுகின்ற அளவிற்கு மனித உயிர்கள் என்ன அவ்வளவு மலிவாகப் போய்விட்டதா டாக்டர் சைமனின் மனைவி போன்ற பணக்காரர்களுக்கு?

அரசு மருத்துவமனையில் எந்த அடிப்படை வசதியும் இல்லாத 22/26
நிலையில் கொரோனா நோயாளிகளைக் காப்பாற்ற வைரஸூடன் உயிரைப் பணையம் வைத்துப் போராடி வேலை பார்க்கும் செவிலியர்களின் மனித சேவைகளுக்கு முன் டாக்டர் சைமன் ஒன்றுமே இல்லை.

ஒன்றுமே இல்லாத இந்த ஒன்றில் இருந்து ஏதாவது ஒன்றைக் கொண்டுவர வேண்டுமென டாக்டரின் மனைவி கருதுவதும், எரிகிற 23/26
வீட்டில் பிடுங்கிய மட்டும் லாபம் எனக் கருதி மதத்தை முன் வைத்து அரசிடமிருந்து மேலும் பிடுங்க நினைப்பதும், அதற்கு அரைவேக்காடு அரசியல்வாதிகள் குரல் கொடுப்பதும் அந்த கர்த்தருக்கே பொறுக்காது.

அரசு இந்த கொடூர கோமாளி கூட்டத்திற்கு செவி குடுத்து எந்த வகையிலும் கொரோனா ஒழிப்பு 24/26
போராட்டத்தில் பங்கெடுக்காத, தன் மருத்துவத்தால் தன்னைக் கூட காக்க முடியாமல் மரித்துப் போன டாக்டர் சைமனின் உடலை கீழ்பாக்கம் கல்லறைக்கு மாற்றினால்...

கொரோனா ஒழிப்பு போரில் உண்மையிலேயே பங்கெடுத்து அதனால் இறக்கும் ஒவ்வொரு சாமான்யனுக்கும் மெரினா கடற்கரையில் அரசு தனித்தனியாக 25/26
மணிமண்டபம் கட்ட வேண்டும்.

எழுத்தாளர்: அரிசி ஸ்ரீ ராம் 26/26



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard