Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சினிமா நடிகை ஜோஅதிகா பேச்சு விஷநச்சு


Guru

Status: Offline
Posts: 7474
Date:
சினிமா நடிகை ஜோஅதிகா பேச்சு விஷநச்சு
Permalink  
 


சர்ச்சையைக் கிளப்பிய ஜோதிகாவின் பேச்சு - பிரகதீஸ்வரர் கோயிலைப் பற்றி என்ன பேசினார்?

https://tamil.news18.com/news/entertainment/cinema-jyothika-thanjai-periya-kovil-speech-msb-281321.html

 
சர்ச்சையைக் கிளப்பிய ஜோதிகாவின் பேச்சு - பிரகதீஸ்வரர் கோயிலைப் பற்றி என்ன பேசினார்?
ஜோதிகா
 
  • SHARE THIS:
பிரகதீஸ்வரர் கோயிலுக்கு எதிராக நடிகை ஜோதிகா பேசியதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற விருது விழா ஒன்றை தனியார் சேனல் சமீபத்தில் ஒளிபரப்பியது. அந்த வீடியோவின் சில பகுதிகளை சமூகவலைதளத்தில் வெளியிட்டு ஜோதிகாவின் பேச்சுக்கு எதிராக பலர் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வீடியோவில் ஜோதிகா பேசியிருப்பதாவது, பிரகதீஸ்வரர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது, அழகாக இருக்கும். கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் ஏற்கெனவே பார்த்துள்ளேன். மிகவும் அழகாக உள்ளது. உதய்பூரில் உள்ள அரண்மனைகள் மாதிரி நன்கு பராமரித்து வருகிறார்கள்.


அடுத்த நாள் என்னுடைய படப்பிடிப்பு மருத்துவமனையில் இருந்தது. அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் கண்டதை என் வாயால் சொல்ல முடியாது. எல்லோருக்கும் ஒரு கோரிக்கை. ‘ராட்சசி’ படத்தில் இதை இயக்குநர் கௌதம் ராஜ் சொல்லியிருக்கிறார்.

கோயிலுக்காக அதிகம் காசு கொடுக்கிறீர்கள். வண்ணம் பூசி பராமரிக்கிறீர்கள். தயவு செய்து அதே தொகையை  பள்ளிகளுக்கு கொடுங்கள். மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள். இது மிகவும் முக்கியம். எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.

நான் கோவிலுக்குள் போகவில்லை. அந்த மருத்துவமனையைப் பார்த்த பிறகு போகவில்லை. மருத்துவமனைகளும், பள்ளிகளும் அந்த அளவுக்கு முக்கியம். எனவே அவற்றுக்கும் நிதியுதவி செய்வோம் என்று கூறியுள்ளார்.ஜோதிகாவின் இந்தப் பேச்சை பதிவிட்டு கருத்து தெரிவித்திருக்கும் நடிகர் எஸ்.வி.சேகர், ஜோதிகா 100 % மெச்சூரிட்டி இல்லாத பேச்சு .கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா. ஆலயம் தொழுவது (உங்களுக்கு பிடிக்குமே) சாலவும் நன்று.
இதெல்லாம் கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க. சுத்தமான ஹாஸ்பிடல் நல்ல பள்ளிகள் அவசியம். கோயிலுக்கு பதில் இதச்செய்யுனு சொல்லுவது அயோக்கியத்தனம். உங்கள் மாமனாரிடம் கேளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

ஜோதிகா பேசியது தேவையான பேச்சு.. உங்களுக்கு ஏன் வலிக்கிறது என்றால்..? பிரபல தயாரிப்பாளர் அறிக்கை!

By Raj| Published: Friday, April 24, 2020, 16:03 [IST]

சென்னை: எந்தக் கோவில்களைப் பற்றியும் அவதூறு செய்யாத வகையில்தான் ஜோதிகா பேசியிருக்கிறார் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

ஜோதிகாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. வரிந்து கட்டும் நெட்டிசன்ஸ்!

நடிகை ஜோதிகா கடந்த சில மாதங்களுக்கு முன், விருது விழா ஒன்றில் பேசிய பேச்சை, சேனல் ஒன்று சமீபத்தில் ஒளிபரப்பியது. அதில் அவர் பேசும்போது, தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் மிகவும் புகழ்பெற்றது. ஒரு முறை அங்கு ஷூட்டிங் சென்றபோது, கண்டிப்பாக அதைப் பாருங்கள் என்றார்கள். பார்த்தேன். பிரமாண்டமாக இருந்தது. அப்போது எனக்கு அங்குள்ள மருத்துவமனையில் ஷூட்டிங். அங்கு சென்றபோது அது சரியாக பராமரிக்கப்பட்டாமல் இருந்ததைப் பார்த்தேன்.
Read more at: https://tamil.filmibeat.com/news/suresh-kamatchi-supports-jyothika-speech-070246.html



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

ஜோதிகாவின் பேச்சை விமர்சனம் செய்வது தேவையற்றது.. வரிந்துக்கட்டியதால் வாங்கிக்கட்டிய இயக்குநர்! By Bahanya| Updated: Saturday, April 25, 2020, 9:37 [IST] சென்னை: தற்போதைய சூழலில் ஜோதிகாவின் பேச்சை விமர்சனம் செய்வது தேவையற்றது என வரிந்துக்கட்டிய இயக்குநரை நெட்டிசன்கள் உண்டு இல்லை என செய்துள்ளனர். ஜோதிகாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. வரிந்து கட்டும் நெட்டிசன்ஸ்! கடந்த ஒரு வாரமாக அதிகமாக செய்திகளில் அடிபட்டு வருகிறார் நடிகை ஜோதிகா. ஜோதிகா தஞ்சை பெரிய கோவில் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த விருது விழாவில் பங்கேற்ற ஜோதிகா, தஞ்சை பெருவுடையார் கோவிலை குறிப்பிட்டு பேசினார். கூடவே அங்குள்ள மருத்துவமனை பற்றியும் பேசினார். சினி தரவரிசை 2020 - ஆம் ஆண்டில் அதிக டி.ஆர்.பி ரேட்டிங் பெற்ற படங்களின் பட்டியல் தல அஜித் நிராகரித்த பிளாக் பஸ்டர் தமிழ் திரைப்படங்கள் தல அஜித்குமார் படங்களின் சிறந்த பின்னணி இசை பட்டியல் சிறந்த நண்பர்களாக தமிழ் திரைப்படங்களில் புகழ் பெற்ற கதாபாத்திரங்கள் தல அஜித் குமாரின் சிறந்த திரைப்படங்கள் நடிகர் விஜய் குரலில் ரசிகர்களின் மனம் கவர்ந்த 15 பாடல்கள் மக்களிடம் "தொற்றுநோய் பரவல்" திரைக்கதையில் பிரபலமான தென்னிந்திய படங்கள் தமிழ் படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகைகள் மாபெரும் தோல்வியை சந்தித்த தல அஜித் குமாரின் திரைப்படங்கள் 2020 - ஆம் ஆண்டில் அதிக டி.ஆர்.பி ரேட்டிங் பெற்ற படங்களின் பட்டியல் தல அஜித் நிராகரித்த பிளாக் பஸ்டர் தமிழ் திரைப்படங்கள் தல அஜித்குமார் படங்களின் சிறந்த பின்னணி இசை பட்டியல் சிறந்த நண்பர்களாக தமிழ் திரைப்படங்களில் புகழ் பெற்ற கதாபாத்திரங்கள் தல அஜித் குமாரின் சிறந்த திரைப்படங்கள் நடிகர் விஜய் குரலில் ரசிகர்களின் மனம் கவர்ந்த 15 பாடல்கள் மக்களிடம் "தொற்றுநோய் பரவல்" திரைக்கதையில் பிரபலமான தென்னிந்திய படங்கள் தமிழ் படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகைகள் மாபெரும் தோல்வியை சந்தித்த தல அஜித் குமாரின் திரைப்படங்கள் 2020 - ஆம் ஆண்டில் அதிக டி.ஆர்.பி ரேட்டிங் பெற்ற படங்களின் பட்டியல் PrevNext நடிகை ஜோதிகாவின் படத்தை அமேசான் பிரைமில் வெளியிடுவதா..? தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு! Sponsored Data Science Course in Chennai Might Be Easier Than… Data Science Courses | Search… Sponsored AirtelTamil Tamil.asianetnews.com பள்ளிகளுக்கு கொடுக்க வேண்டும் அங்கிருந்த மருத்துவமனைகள் மிகவும் மோசமாக இருந்தது. எந்த பராமரிப்பும் இன்றி இருந்ததால் அதன் பிறகு நான் கோவிலுக்கே போகவில்லை. கோவில்களுக்கு செலவு செய்யும் பணத்தையும் அவற்றை பராமரிக்கும் பணத்தையும் உண்டியலில் போடும் பணத்தையும் மக்கள் பள்ளிக்கூடங்களை கட்ட கொடுக்க வேண்டும் என்றார். கடும் கண்டனம் ஜோதிகா இவ்வாறு பேசிய அந்த நிகழ்ச்சி அண்மையில் டிவி சேனல் ஒன்றில் ஒளிபரப்பானது. இதனால் செம கடுப்பானார்கள் நெட்டிசன்கள். தமிழ் அமைப்பினரும் இந்து அமைப்புகளும் ஜோதிகாவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். Sponsored Buying a Life Insurance? Here’s all you need to know. SBI Life Insurance Sponsored Work From Home Jobs in the USA May Pay More Than You… do-intl-online-jobs-in-usa-ok… இயக்குநர் ஆதரவு ஜோதிகாவின் பேச்சுக்கு ஒரு பக்கம் எதிர்ப்பு எழுந்தாலும் மற்றொரு பக்கம் ஆதரவும் இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகை ஜோதிகாவுக்கு ஆதரவாக கருத்து கூறியிருக்கிறார் இயக்குநர் பேரரசு. நடிகை ஜோதிகாவை பற்றி இப்போது பேசுவது தேவையற்றது என கூறியுள்ளார். நாகரிகமற்றது இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், இருக்கும் சூழலில் ஜோதிகா அவர்களின் பேச்சை விமர்சனம் செய்வது தேவையற்றது! அவர் ஒரு இந்துவைக் கல்யாணம் செய்த பிறகும் அவரை மதக்கண்ணோட்டத்தில் பார்ப்பது நாகரிகமற்றது! ஒரு கருத்தை பொதுவாக பேசியதை இவ்வளவு பெரிதாக்குவதும் சரியல்ல! இப்போ மாஸ்க் ரொம்ப அவசியம்! என்று கூறியுள்ளார். Sponsored Do you have $200 to invest in Amazon? Register now for a… Vici Marketing Sponsored I’ll lose my only son if he doesn’t get a liver transplant Ketto திராணி இருக்கிறதா பேரரசுவின் இந்த பதிவை பார்த்த இந்த நெட்டிசன், ஜோதிகாவிற்கு, என் படத்தையோ என் கணவர் படத்தையோ திரையரங்கு வந்து பணம் கொடுத்து பார்ப்பதற்கு பதில், அந்த பணத்தை ம௫த்துவமனை மற்றும் கல்விக்கு செலவிடுங்கள் என்று சொல்லுவதற்கு திராணி இ௫க்கின்றதா.. என கேட்டுள்ளார். நம்பவே முடியல ஜோதிகா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்த நெட்டிசன், பொதுவா பேசறதை பொது இடத்துல பேசக்கூடாது என தெரிவித்துள்ளார். பேரரசுவின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன், அடடா நம்ம பேரரசா பேசுறிங்க நம்பவே முடியல என அதிருப்தி தெரிவித்துள்ளார். Sponsored In a deserted Venice, animals take back the canals while… France 24 Sponsored Uvaani’s heart will fail without an urgent heart transplant Ketto Getting a Job in Dubai might be easier than you think. Sponsored Results | Dubai Jobs தவறுதலாக பேசியுள்ளார் ஜோதிகா பேசியது தவறு தானே என்று கேட்ட நெட்டிசனுக்கு, இயக்குநர் பேரரசு பதிலளித்துள்ளார். அதாவது, தவறாக பேசுவது வேறு.. தவறுதலாக பேசுவது வேறு.. ஜோ தவறுதலாகப் பேசியுள்ளார்! அது மன்னிக்க கூடியதுதான்! என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

Read more at: https://tamil.filmibeat.com/news/director-perarasu-supports-actress-jyothika-070271.html



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

“நடிகைகளை கேவலமாக காட்டாதீர்கள்”படவிழாவில், நடிகை ஜோதிகா பேச்சு

“நடிகைகளை கேவலமாக காட்டாதீர்கள்”படவிழாவில், நடிகை ஜோதிகா பேச்சு
‘நடிகைகளை கேவலமான காட்சிகளில் நடிக்க வைக் காமல் டைரக்டர்கள் சமூக பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும்” என்று படவிழாவில் நடிகை ஜோதிகா கேட்டுக்கொண்டார்.
பதிவு: ஏப்ரல் 25,  2017 05:15 AM
சென்னை,

ஜோதிகா நடித்துள்ள புதிய படம் ‘மகளிர் மட்டும்.’ நாசர், லிவிங்ஸ்டன், ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். பிரம்மா டைரக்டு செய்துள்ளார். நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் நடிகை ஜோதிகா கலந்து கொண்டு பேசியதாவது:-


“எனக்கு திருமணம் முடிந்து 10 வருடங்களுக்கு பிறகு ஒரு தடவைதான் சூர்யாவுக்கு தோசை சுட்டு கொடுத்து இருக்கிறேன். மீண்டும் நடிப்பதற்கும் இந்த இடத்தில் நின்று பேசுவதற்கும் சூர்யாதான் காரணம். எனக்கு உதவியாக இருக்கும் நடிகர் சிவகுமார் குடும்பத்தின் அத்தனை ஆண்களுக்கும் நன்றி. எனக்கு இந்த படத்தில் சிறந்த கதாபாத்திரம் தந்து இளமையாக காட்டி இருக்கிறார், இயக்குனர் பிரம்மா.

30 வயது நடிகைகள்

பொதுவாக 30 வயதை தாண்டிய நடிகைகளை இயக்குனர்கள் கதாநாயகியாக அங்கீகரிக்காமல் தாய், அண்ணி கதாபாத்திரங்கள் என்று ஒதுக்கி வைப்பார்கள். கதாநாயகர்களைத்தான் வயதான பிறகும் இளமையாக காட்டுவார்கள். இந்த படத்தில் கதாநாயகர்களுக்கு இணையாக எனக்கு முக்கியத்துவம் தரப்பட்டு உள்ளது.

இது பெண்கள் பற்றிய படம் ஊர்வசி, சரண்யா பொண்வண்ணன், பானுப்ரியா ஆகியோரும் என்னுடன் இணைந்து சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். சரண்யா பொன்வண்ணனின் இரண்டு மகள்கள் மருத்துவம் படிக்கிறார்கள். எனக்கும் இரண்டு குழந்தைகள் படிக்கிறார்கள். அவர்களை கவனித்துக்கொள்ளும் பொறுப்புகளுக்கு மத்தியில் இந்த படத்தில், ஈடுபாட்டுடன் நடித்து இருக்கிறோம்.

டைரக்டர்கள்

டைரக்டர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். உங்கள் படங்களில் நடிகைகளை கண்ணியமாக காட்டுங்கள். வீட்டில் அம்மா, தங்கை என்று உங்களை சுற்றி இருக்கும் பெண்களை மனதில் வைத்து கதாபாத்திரங்களை உருவாக்குங்கள். கதாநாயகர்களுக்குத்தான் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். நடிகைகளுக்கு அப்படி இல்லை. சினிமா இளைஞர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.

எனவே நடிகைகளுக்கு வீட்டில் இருக்கும் பெண்களைப்போல் ஆடைகள் உடுத்தி அவர்களை அறிவாளிகளாக படத்தில் காட்டுங்கள். சில படங்களில் நடிகைகளை அறிமுக காட்சிகளில் கேவலமாக காட்டுகிறார்கள். இரட்டை அர்த்த வசனம் பேசுகிறார்கள். கதாநாயகனை சுற்றி ஓட வேண்டும். காதலிக்க வேண்டும் என்கிறார்கள். முன்பெல்லாம் ஒரு கதாநாயகனுக்கு ஒரு கதாநாயகி இருந்தார். அதன்பிறகு இரண்டு மூன்று கதா நாயகிகளாகி, இப்போது 4 கதாநாயகிகள் என்று போகிறது.

சமூக பொறுப்பு

டைரக்டர்கள் சமூக பொறுப் புணர்வோடு நடந்து நல்ல படத்தை தாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு ஜோதிகா பேசினார்.

விழாவில் நடிகர் சூர்யா பேசும்போது, “ஜோதிகா சொன்ன கருத்தை ஏற்றுக்கொண்டு என்னுடைய அடுத்தடுத்த படங்களில் பின்பற்றுவேன். நான் தயாரிக்கும் படங்களை பொறுப்புணர்வோடு எடுப்பேன். நான் இதுவரை தயாரித்த படங்களில் மகளிர் மட்டும் படத்தை சிறப்பான படமாக கருதுகிறேன்” என்றார்.

விழாவில் நடிகர்கள் சிவகுமார், கார்த்தி, லிவிங்ஸ்டன், நடிகை நக்மா, டைரக்டர்கள் தரணி, பாண்டிராஜ், தயாரிப்பாளர்கள் கே.ஈ.ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரபு, ராஜசேகர், கிறிஸ்டி சிலுவப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

ஜோதிகா பேச்சு சர்ச்சை: ’மதங்கள் கடந்து மனிதமே முக்கியம்’ - சூர்யா விளக்கம்

ஜோதிகாபடத்தின் காப்புரிமைராட்சசி திரைப்படம்

நடிகை ஜோதிகா விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஷயம் சில நாட்களாக சமூகவலைதளங்களில் பல விமர்சனங்களுக்கு உள்ளானது. அவர் பேசியதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வந்தன. இந்நிலையில் நடிகர் சூர்யா இந்தப் பிரச்சனை குறித்து 'அன்பை விதைப்போம்' என ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

என்ன பேசினார் ஜோதிகா?

கடந்த வாரம் தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அந்த நிகழ்வில் விருது பெற்ற நடிகை ஜோதிகா, "பிரகதீஸ்வரர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. கண்டிப்பாக அதைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் ஏற்கெனவே பார்த்துள்ளேன். மிகவும் அழகாக உள்ளது. உதய்பூரில் உள்ள அரண்மனைகள் போன்று ஆலயத்தை நன்கு பராமரித்து வருகிறார்கள். அடுத்தநாள் என்னுடைய படப்பிடிப்பு மருத்துவமனை ஒன்றில் நடந்தது. அந்த மருத்துவமனை சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் அங்கே பார்த்தவற்றை என் வாயால் சொல்ல முடியாது. எல்லோருக்கும் ஒரு கோரிக்கை. 'ராட்சசி' படத்தில் இதை இயக்குநர் கௌதம் ராஜ் சொல்லியிருக்கிறார். கோவிலுக்காக அதிகம் காசு கொடுக்கிறீர்கள். வண்ணம் அடித்து பராமரிக்கிறீர்கள். கோவில் உண்டியலில் அவ்வளவு பணம் போடுகிறீர்கள். அதே பணத்தை தயவு செய்து பள்ளிகளுக்குக் கொடுங்கள். மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள். இது மிகவும் முக்கியம். அந்த மருத்துவமனையைப் பார்த்த பிறகு நான் கோவிலுக்குப் போகவில்லை. மருத்துவமனைகளும், பள்ளிகளும் மிகவும் முக்கியம். அவற்றிற்கு நிதியுதவி அளிப்போம்." என்று கூறியிருந்தார்.

சூர்யாவின் அறிக்கை

சூர்யாபடத்தின் காப்புரிமைFACEBOOK

ஜோதிகாவின் இந்த பேச்சு குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில்,

அது தொடர்பாக அவரின் கணவரும், நடிகருமான சூர்யா இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை என்கிற கருத்து சமூக ஊடக விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும். ஒரு விருது வழங்கும் விழாவில் எப்போதோ ஜோதிகா அவர்கள் பேசியது, இப்போது ஊடகங்களில் செய்தியாகவும், சமூக ஊடகங்களில் விவாதமாகவும் மாறி இருக்கிறது,"

"கோவில்களைப் போலவே பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை 'சிலர்' குற்றமாக பார்க்கிறார்கள். இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மீகப் பெரியவர்களே சொல்லியிருக்கிறார்கள். மக்களுக்கு உதவினால், அது கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கை' என்பது 'திருமூலர்' காலத்து சிந்தனை. நல்லோர் சிந்தனைகளைப் படிக்காத, காதுகொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை,"

"பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும் என்கிற கருத்தை, எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் வரவேற்கவே செய்கின்றனர். கொரோனாதொற்று காரணமாக இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலும், எங்களுக்கு கிடைத்த பேராதரவு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளித்தது," என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "அறிஞர்கள், ஆன்மீகப் பெரியவர்களின் எண்ணங்களைப் பின்பற்றி வெளிப்படுத்திய அந்தக் கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம். 'மதங்களைக் கடந்து மனிதமே முக்கியம்' என்பதையே எங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லித்தர விரும்புகிறோம்." என்று நடிகர் சூர்யா தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

சூர்யாவின் அறக்கட்டளை மூலம் எத்தனை பேர் படிக்குறாங்க தெரியுமா?
அந்த பேமிலியை பற்றி சங்கிகள் பேசக்கூடாது.
தமிழக ஆன்லைன் சமுக ஆர்வலர்கள் சத்தம் அடிக்கடி கேட்க்கும்.

நியாயமாக பார்த்தால் சங்கிகள் மட்டும் தான் பேசவே தகுதி இருக்கு.
காரணம்?

நீங்க சங்கி சங்கின்னு சொல்லும்,
வித்யா பாரதி மூலம் நடத்தப்படும், முறைசார் பள்ளிகள் எண்ணிக்கை
தமிழகத்தில் மட்டும் - 227
நாடு முழுவதும் − 13,067
மாணவர் எண்ணிக்கை 35 லட்சம்.!!

இப்போது
'என்ன இருந்தாலும் ஈ.வே.ரா இல்லைன்னா பட்டியல்சாதியினர் படிச்சிருக்க மாட்டான்'னு ஒரு சோற்றுக்கு செத்த குரூப் வருவானுங்க

வித்யா பாரதி மூலம் இயங்கும்,
பழங்குடியியினர், மலைவாழ் மக்கள், ஆதிவாசிகளுக்கான முறைசாரா பள்ளிகள் − 9636
மாணவர் எண்ணிக்கை 2.5 லட்சம்

நாடு முழுவதும் மொத்த பள்ளிகள் 22,703 ,
மொத்த மாணவர் எண்ணிக்கை 37.5 லட்சம்

இப்போது,
என்ன சொன்னாலும் கிறித்தவ பள்ளியில் இருக்கும் ஒழுக்கம் வருமா?ன்னு நடுநிலை ஹிந்து கேள்வி கேட்பான்.

நாட்டிலேயே ஒழுக்கம்ன்னா முதலில் நினைவுக்கு வருவது ராணுவம் மட்டும் தான்.
நாட்டிலேயே முதன்முறையாக ராணுவ அதிகாரிகள், வீரர்களை உருவாக்கும் வகையில் ராணுவ பள்ளி ஒன்றை ஆர்.எஸ்.எஸ்-ன் கல்விப் பிரிவான வித்யா பாரதி நடத்தி வருகிறது.
இதெல்லாம் திரைத்துறை கருப்பு பணத்துக்கு கணக்கெழுத உருவான அறக்கட்டளையோ...,
அந்த அறக்கட்டளை மூலம் உதவி பெற்ற மாணவர்களை டிவியில் அழவைத்து, அடுத்த படத்துக்கு விளம்பரம் தேடும் யுக்தியோ,
மிஷனரி பள்ளிகள் போன்று மதமாற்றம் செய்யும் மானங்கெட்டத்தனமோ இங்கு கிடையாது.

இவ்வளவு பண்ணியும்
ஏன் வெளியே விளம்பரப்படுத்துறதில்லைன்னு சந்தேகம் வரலாம்.
ஓலைப்பாயில் ஒண்ணுக்கடிக்க இது வியாபாரமல்ல சேவை மட்டுமே!



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

ஜோதிகா பேச்சு விளம்பரத்திற்கு தான் உதவும்... ஒரே போடாய் போட்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ...! By Kanimozh...

Read more at: https://tamil.asianetnews.com/cinema/minister-kadambur-raju-react-actress-jyothika-temple-issue-speech-q9jz62



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

ஜோதிகா பேச்சு வெட்கக் கேடானது !! ஜோதிகாவை வம்புக்கு இழுக்கும் காயத்ரி ரகுராம்

 
 | 
97638238e3568e4972a85cee630268e7.jpg
 

நடிகை ஜோதிகா சமீபத்தில் விருது விழா ஒன்றில் பேசும்போது, தஞ்சாவூரில் படப்பிடிப்புக்காக சென்றிருந்தேன். அங்குள்ளவர்கள் தஞ்சை கோவிலின் பெருமையை கூறினார்கள். அங்கு செல்ல வேண்டும் என்றார்கள். நான் ஏற்கனவே பார்த்துள்ளேன் என்றேன். மறுநாள் படப்பிடிப்புக்காக கோவில் அருகே உள்ள மருத்துவமனைக்கு சென்றோம். அந்த மருத்துவமனையை பார்த்து விட்டு இந்த கோவிலுக்கு செல்ல மனம் வரவில்லை. கோவிலில் காசு போடாதீர்கள். கோவில்களை பராமரிப்பது போன்று மருத்துவமனை, பள்ளிக்கூடங்களை பராமரியுங்கள் என்றார்.

Gayathri Raguramm@gayathriraguram
 

Prashanth Kishore 380 crore is this the best you can do? DMK why spend 380 crs for fake Id edited interview is this ur startegy lol? DMK doesn’t have strategy plans on own? Why can’t spend it for government hospitals and government schools? Till today DMK dint do will never do.

Gayathri Raguramm@gayathriraguram
 

They will only troll hindu temples and all to hide their failures. Jing chak for Jyothika for her talk against Hindus and temples.

 
53 people are talking about this
 

ஜோதிகாவின் இந்த பேச்சுக்கு ஹிந்து மத தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் டுவிட்டரில், நடிகர்களுக்கு கோவில் கட்டுபவர்களுக்கு அவ்வளவு தான் அறிவு. இவர்களிடம் சனாதன தர்மத்தை எதிர்பார்க்க முடியாது. தி.மு.க, தி.க., நாம் தமிழர் உள்ளிட்ட சில கட்சிகளில் கைக்கூலிகளாக இருப்பவர்கள் ஆதாரமற்ற கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஜோதிகா பேச்சை நியாயப்படுத்துவது வெட்கக் கேடானது. கண்டிப்பாக ஜோதிகா தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். அவரின் பேச்சில் சமத்துவம் இல்லை. அவர் பேசும்போது கோவில்களுடன் தேவாலயம், மசூதியை உள்ளடக்கியிருக்க வேண்டும். ஜோதிகாவின் பேச்சை திமுக., உள்ளிட்ட சில கட்சிகள் பிற மதத்தை கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என தெரிவித்துள்ளார்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 

ஆர்.கே.நகர் - பொருட்படுத்தத் தகாத ஒரு படம். முழுமையாகப் பார்ப்பதே பெரிய கொடுமை. இப்படிப் படம் எடுக்கும் லட்சணத்தில் நம் இயக்குநர்களுக்குத் தங்கள் திரைப்படங்களில் குறியீட்டை வைக்கவும், அரசியலைக் கிண்டல் செய்யவும் மட்டும் ஆசை வந்துவிடுகிறது. மனசாட்சியைக் கழற்றி வைத்துவிட்டுக் கதை வசனம் எழுதுகிறார்கள்.

ஆர்.கே. நகர் என்ற பெயரே நமக்குச் சொல்லும், இது அரசியல் படமாக இருந்தால் எதைப் பற்றிப் பேசவேண்டும், எந்தக் கட்சிகளைப் பற்றிப் பேசவேண்டும் என்று. இந்தப் படத்தில் அதைப் பற்றிய மூச்சே இல்லை. பின்னணியாகப் பள்ளி சிறுவர்களின் சீரழிவே கதை. ஆனால் காட்டப்படும் காட்சிகள் எல்லாம் அரசியல் தொடர்பானவை. சந்தான பாரதி ஒரு கவுன்சிலர். செல்வாக்கு மிக்க கவுன்சிலர். தமிழ்நாட்டில் செல்வாக்கு மிக்க கவுசின்லர், அடிதடி கவுன்சிலர், ரௌடி கவுன்சிலர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருக்கமுடியும்? அதைக்கூட விடுங்கள். எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக நிச்சயம் இருக்க முடியாது? பாஜக காரராக இருக்க வாய்ப்பில்லைதானே? இந்தப் படத்தில் வரும் சந்தான பாரதி நெற்றியில் குங்குமத் திலகமிட்டு வருகிறார். காவி வேட்டி கட்டி வருகிறார். எந்தக் கழக அரசியல்வாதி காவி வேட்டி கட்டிக் கொண்டு திரிகிறார்? இவர்களுக்குக் கழக அரசியல்வாதிகளைக் காண்பிக்க பயம்.

அத்தோடு நிற்கவில்லை. சந்தான பாரதியும் வாஜ்பேயியும் இருக்கும் ஒரு புகைப்படம் ஒரு காட்சியில் பின்னணியில் வருகிறது. குறியீடாம்! இதிலும் திருப்தி அடையவில்லை இயக்குநர் சரவணன் ராஜன். இந்த சந்தான பாரதி கோவில் நிலத்தை ஆட்டையைப் போடுகிறார். தமிழ்நாட்டில் யார் கோவில் இடத்தை ஆட்டையைப் போட்டிருப்பவர்கள்? யார் தொடர்ந்து 50 வருடங்களாக ஆட்சியில் இருப்பவர்கள்? இயக்குநர் பச்சைக் குழந்தை என்பதால் இதெல்லாம் தெரியாது. கைச்சூப்பிக்கொண்டு, அப்படியே மக்களும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் இப்படத்தை எடுத்திருக்கிறார். அப்படியும் திருப்தி வரவில்லை குழந்தை இயக்குநருக்கு. கோவில் சொத்தை ஆட்டையைப் போடுவதைத் தடுக்கும் ஒரு கட்சியின் உதவிக்குப் போகிறார் கோவில் பட்டர். அவருக்கு உதவுபவர்கள் பக்தியில் நம்பிக்கையில்லாத ஆனால் நல்லவர்களாம்!

இந்த இயக்குநருக்கும் இதன் தயாரிப்பாளரான வெங்கட் பிரபுவுக்கும் ஏன் ரஜினி மேல் இத்தனை காண்டு, வெறுப்பு எனத் தெரியவில்லை. சந்தான பாரதியை ரஜினியின் கதாபாத்திரமாக்கி திட்டித் தீர்க்கிறார்கள். போர் வரும்போது வருவேன் என்ற வசனத்தை சந்தான பாரதி சொல்கிறார். சந்தான பாரதி கவுன்சிலர் என்றால் ரஜினியை எப்படித் திட்டுவது என்பதற்காகவே சந்தான பாரதியை ஒரு நடிகர் என்று காட்டி இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் என்று காட்டினால் கவுன்சிலராகக் காட்ட முடியாதே என்பதற்காக சின்ன நடிகர் என்று காட்டிவிட்டார்கள். எவ்வளவு கற்பனைப் பஞ்சம் பாருங்கள். அதாவது வசனமும் காட்சிகளும் மட்டும் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகருக்கானவை! அவரோ ஒரு கவுன்சிலர்! ஒரு காட்சியில் சந்தான பாரதி ரஜினியுடன் இருக்கும் படம் வருகிறது. அதாவது சந்தான பாரதியும் வாஜ்பேயியும் புகைப்படத்தில் வரும் அதே காட்சியில் இந்த சந்தானபாரதி - ரஜினி படமும் அதற்கு இணையாக வருகிறது. குறியீட்டுக்குள் குறியீட்டுக்குள் குறியீடாம். இதில் சந்தான பாரதியை எந்திரன் போல கிராஃபிக்ஸ் செய்து ஃப்ளக்ஸ் எல்லாம் பின்னணியில் குறியீடாக வருகிறது. இரண்டு முறை ‘நீ என்ன எம்ஜியாரா?’ என்ற வசனம் வருகிறது.

ஒழுங்காக ஒரு படம் எடுக்க முடியவில்லை. ஆக்ரோஷமான அரசியல் சட்டையர் எடுக்க வக்கில்லை. தமிழ்நாட்டில் கோலோச்சும் கட்சிகளை விமர்சித்து, தாக்கி, தீவிரமான அரசியல் படம் எடுக்க துணிவில்லை. ஆனால் வாய் மட்டும் இருக்கிறது இவர்களுக்கு.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard