Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 12. பெய்யெனப் பெய்யும் மழை.


Guru

Status: Offline
Posts: 7329
Date:
12. பெய்யெனப் பெய்யும் மழை.
Permalink  
 


 12. பெய்யெனப் பெய்யும் மழை.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை. (திருக்குறள், 55)
வள்ளுவரின் இந்தக் குறள் பெரிதும் அறியப்பட்ட ஒன்றாகும்.
மணக்குடவர் உரை:
தெய்வத்தைத் தெய்வமென்று தொழாளாய், எல்லாத் தெய்வமுந் தன்கணவனென்றே கருதி, அவனை நாடோறுந் தொழுதெழுமவள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும்.
பரிமேலழகர் உரை:
பிற தெய்வம் தொழாது தன் தெய்வம் ஆகிய கொழுநனைத் தொழாநின்று துயிலெழுவாள் 'பெய்' என்று சொல்ல; மழை பெய்யும்
தெய்வம் தொழுதற்கு மனம் தெளிவது துயிலெழும் காலத்தாகலின், 'தொழுது எழுவாள்' என்றார். 'தொழாநின்று' என்பது, 'தொழுது' எனத் திரிந்து நின்றது. தெய்வம்ந்தான் ஏவல் செய்யும் என்பதாகும். இதனால் கற்புடையவளது ஆற்றல் கூறப்பட்டது.

இந்தக் குறளிற்கான விளக்கத்தைப் பலரும் “வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!” என்ற பொருள் படவே கூறிவருகின்றார்கள். உண்மையிலேயே கணவனைக் கடவுளிலும் மேலாக வழிபடச்சொல்லும் ஒரு பெண் அடிமைத்தனக் குறளாகவா இக் குறள் உள்ளது எனப் பார்ப்போம்.
வள்ளுவர் கணவனை வழிபடச்சொல்லுகின்றார் என வைத்தாலும் ஏன் கடவுளைக் கும்பிட வேண்டாம் என்கின்றார்? ஒருவேளை கடவுளையே கும்பிடவேண்டாம் எனப் பகுத்தறிவு பேசுகின்றார் என்றால், அந்தப் பகுத்தறிவு பெண் அடிமைத்தனத்தை வலியுறுத்துமா? போன்ற நியாயமான கேள்விகள் எழுகின்றன. பிறப்பால் எல்லோரும் சமன் (பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்) என்று கூறிய வள்ளுவர் எவ்வாறு பிறப்பினடிப்படையிலான பால் வேறுபாட்டினை நியாயப்படுத்துவார்? மேற்கூறிய காரணங்களால், குறித்த இக் குறளிற்கு ஏற்கனவே பலர் கூறிய விளக்கம் பொருத்தமற்றது எனத் துணிந்து கூறலாம்.
எனவேதான் இக் குறளிற்கான விளக்கத்தினை வேறு வகையில் பார்க்கவேண்டியுள்ளது. இக் குறளினை எளிமை கருதி மூன்று பகுதிகளாப் பிரித்துப் பொருள் கண்டு, பின்னர் முழுமையாகப் பார்ப்போம்.
“தெய்வம் தொழாஅள் ; கொழுநன் தொழுதெழுவாள் ;
பெய்யெனப் பெய்யும் மழை.” (55)
இந்த மூன்றுபகுதிகளிற்குமான பொருளைப் பின்னிருந்து முன்னாகப் பார்ப்போம்
பெய்யெனப் பெய்யும் மழை :
“பெய் எனப் பெய்யும்” மழை என்பதற்கு “மனைவி ஆணையிட மழை பெய்யும்” என்பது போன்றே இதுவரைப் பலராலும் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிற்குப் பொருந்தாத “மந்திரம் ஓத மாங்காய் வரும்” போன்ற கருத்தை வள்ளுவர் வேறு எங்குமே கூறாதபோது, இந்த விளக்கம் பொருத்தமில்லை என்பதே எனது கருத்து. பொதுவாக இன்றும் பெரு மழை பெய்யும்போது பேச்சுவழக்கில் “மழை பெய்யோ பெய் எனப் பெய்தது” என்கின்றோம். இங்கு பெய் என்று கூறியவுடன் பெய்கின்றது என்ற பொருள் அல்லவே. அதுபோன்றே இங்கும் ‘’பெய் எனப் பெய்யும்’’ என்பதனைத் தேவைப்படும்போது பெய்யும் மழை என்றே கொள்ள வேண்டும். மழை பொதுவாக நன்மை தருவது என்றாலும், பொருத்தமற்ற நேரங்களில் பெய்யும் மழையால் உழவர்களுக்கு அழிவும் ஏற்படலாம். எனவேதான் பொருத்தமான நேரத்தில் பெய்யும் மழை முதன்மை பெறுகின்றது. இன்னும் விளக்கமாகச் சொன்னால், உழவர் மழை பெய்ய வேண்டும் என நினைக்கும்போது மழை பெய்தால், அதுவே சிறப்பானது, அத்தகைய மழையினையே வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.
திருக்குறள் இடம்பெறும் பதினெண் கீழ் கணக்கு நூல்கள் எனும் அதே தொகுதியினுள் இடம்பெறும் இன்னொரு நூலான நல்லாதனார் எழுதிய திரிகடுகம் நூலிலும் ‘’பெய் எனப் பெய்யும் மழை’’ என்ற தொடர் உள்ளது (இவ்விரு நூல்களுமே காலத்தால் ஏறக்குறைய சமனானவை).
கொண்டான் குறிப்பு அறிவாள் பெண்டாட்டி; கொண்டன
செய் வகை செய்வான் தவசி; கொடிது ஒரீஇ
நல்லவை செய்வான் அரசன்; இவர் மூவர்
பெய் எனப் பெய்யும் மழை’’ (திரிகடுகம், 96)
இங்கு அன்பால், அறிவால் ஆளும் பெண்டாட்டி (பெண்டு + ஆட்டி = பெண்டாட்டி), தவசி (தன் நெறிக்கு உண்டான நோன்புகளை, முறைப்படி செய்து முடிப்பான் தவசி), மக்களுக்கு வரும் கொடுமைகளை நீக்கி நல்லது செய்யும் அரசன் ஆகிய மூவரும் எந்தவித பயனும் கருதாமல் தேவைப்படும் போது பெய்யும் மழைக்குச் சமனானவர்கள் என்ற பொருளிலேயே பாடல் இடம்பெற்றுள்ளது (இங்கு தவசியோ அல்லது அரசனோ கணவனை வழிபடுபவர்கள் அல்ல). எனவே, இதே விளக்கத்தினையே நாம் குறளில் இடம்பெறும் பெய் எனப் பெய்யும் மழைக்கும் கொடுக்கலாம்.
வேத மோதிய வேதியர்க் கோர் மழை
நீதி மன்னர் நெறியினுக் கோர் மழை
மாதர் கற்புடைய மங்கயர்க் கோர் மழை
மாத மூன்று மழையெனப் பெய்யுமே…
(விவேக சிந்தாமணி 26)

மதம் மும்மாரி என்பது யார் யார் பொருட்டு பெய்கின்றது என்று கூற வந்த விவேக சிந்தாமணி ஆசிரியர் அதில் கற்புடை மகளிரையும் சேர்த்துச் சொல்கிறார்.
கொழுநன் தொழுதெழுவாள்:
இத்தொடரில் கொழுநன், தொழு, எழுவாள் ஆகிய மூன்று சொற்களின் பொருள்களைப் பார்ப்போம். இங்கு கொழுநன் என்பது கணவனையும், எழுதல் என்பது படுக்கையிலிருந்து எழுந்திருத்தல் என்பதையும் குறிக்கும் என்பது பல உரையாசிரியர்கள் கூறியது போன்று சரியானவையே. எஞ்சியிருக்கும் ‘’தொழு’’ என்ற வினைச்சொல்லிற்கான பொருளிலேயே இக் குறளின் விளக்கத்திற்கான திறவுகோலே உண்டு. ‘’தொழு’’ என்ற சொல்லினை ‘’வழிபடு’’ என்றே பலரும் கருதியிருந்தனர். இங்கு அச் சொல்லிற்கு வேறு பொருள் இருக்கின்றதா? எனப் பார்ப்போம். தொழு என்ற வினைச்சொல்லிற்கு பல்வேறு வகைகளில் பொருள் கொள்ளலாம் எனினும், இங்கு பொருத்தமாக வருவது சேர்தல் / இணைதல் என்பதாகும். இதனைச் சற்று விரிவாகவே பார்ப்போம்.
இன்று பொதுவாகப் பயன்படுத்தப்படும் தொகுதி (கூட்டம்) என்ற சொல் தொழுதி என்ற சொல்லின் மருவிய வடிவமேயாகும். ‘’பைங்கால் கொக்கின் மென் பறைத் தொழுதி’’ என்ற பாடலில் (நெடுநல்வாடை-15) மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் கூறும் தொழுதி என்ற சொல்லும், ‘’பருவத் தேனசைஇப் பல்பறைத் தொழுதி’’ (குறுந்தொகை-175) என்ற பாடலிலும் இச் சொல்லின் பயன்பாட்டினைக் காணலாம். இவற்றில் தொழுதி என்ற சொல் கூட்டம் (இணைந்து வாழுமிடம்) என்ற பொருளிலேயே இடம்பெற்றுள்ளது. பெயர்ச்சொற்கள் எல்லாம் வினைச்சொல் அடியினை ஒட்டியே பிறக்கின்றன என்ற தமிழறிஞர்களின் கருத்துப்படி, இங்கு தொழுதி என்ற சொல்லிற்கு அடிப்படையாக அமைந்த வினைச்சொல் ‘’தொழு’’ (சேரல்) என்பதேயாகும். இன்றும் மாடுகள் வாழுமிடத்தை ‘’தொழுவம்’’ என்று அழைக்கின்றோம்.

‘’தொழு’’ என்ற சொல் கணவன்-மனைவி சேர்ந்து வாழ்வதனைக் குறிக்கும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு சீவக சிந்தாமணியில் உள்ளது.
தொழுவில் தோன்றிய தோமறு கேவலக்
கிழவன் மூது எயில் போல் கிளர்வுற்றத ( சீவக சிந்தாமணி-856)
இப் பாடலில் ‘’தொழுவில் தோன்றிய’’ என்பதற்கு ‘’இல் வாழ்வில் உண்டான’’ என்ற பொருளே கொள்ளப்படுகின்றது (இங்கு தொழு = இல்வாழ்வுச் சேரல்). இதனைக் கொண்டு தொழுதல் என்பதனைச் சேரல் (புணர்தல்) எனவும் கூறலாம்.
இந்த ‘’தொழு’’ என்ற சொல் இப்போது என்னவாயிற்று என்ற கேள்வி எழலாம். இப்போது ‘’தொழு’’ என்ற அந்த வினைச்சொல் ‘’தொகு’’ என்ற வினைச்சொல்லாக மருவியுள்ளது (மழவு – மகவு, முழை – முகை போன்று மருவியுள்ளது). இன்றும் ‘’தொகு’’ என்ற சொல்லிற்கு சேர்த்தல் என்ற பொருள் உள்ளபோதும், மனிதர்களின் இல்லறச் சேரலை அச்சொல் இப்போது குறிப்பதில்லை. அதே போன்று ‘’தொழு’’ என்றால் இப்போது ‘’வழிபடு’’ என்ற பொருளே பெருமளவிற்குப் பயன்படுத்தப்படுவதாலேயே, குறளிற்கான விளக்கத்தில் குளறுபடி நடந்துவிட்டது. உண்மையில் குறளின் விளக்கத்தினை நாம் அந்தக்காலப் பொருளிலேயே (இல்வாழ்வுச் சேரல்) கொள்ளவேண்டும்.
மேற்கூறிய விளக்கங்களின்படி, ‘’கொழுநன் தொழுதெழுவாள்’’ என்பது கணவனுடன் சேர்த்து படுக்கையிலிருந்து துயில் எழுபவள் என்ற பொருளே கொள்ளவேண்டும்.

தெய்வம் தொழாஅள்:
இப்போது குறளின் மூன்றாவது பகுதிக்கு வந்தால், இங்கு ‘’தொழாஅள்’’ என்பது ‘’சேர மாட்டாள்’’ என்ற பொருளில் (நாம் ஏற்கனவே பார்த்த விளக்கத்தின்படி) வரும். இங்கு நாம் பொருள் காண வேண்டியது `தெய்வம்` என்ற சொல்லிற்கே ஆகும். தெய்வம் என்னும் சொல் திருக்குறளில் ஆறு இடங்களில் பயின்றுவருகிறது. இங்கு நாம் முதன்மையாகப் பார்க்கும் ‘’தெய்வம் தொழாஅள்’’ என்ற குறள் தவிர்த்த ஏனைய ஐந்து குறள்களையும், அவற்றில் தெய்வம் என்ற சொல்லினை என்ன பொருளில் பயன்படுத்துகின்றார் எனவும் பார்ப்போம்.
“தெய்வத்தால் ஆகா(து) எனினும்
முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்” – (குறள்: 619)
{தெய்வம் = ஊழ்}
“குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.” – (குறள்: 1023)
{தெய்வம் = ஊழ்}
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.” (குறள்: 50)
{தெய்வம் = வாழ்வாங்கு வாழ்ந்தோர்}
“தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை” (குறள்: 43)
{தெய்வம் = வாழ்வாங்கு வாழ்வோர்}
“ஐயப் படாஅ(து), அகத்த(து) உணர்வானைத்,
தெய்வத்தோ(டு) ஒப்பக் கொளல்” (குறள்: 702)
{ தெய்வம் = ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்ல மனிதன்}
மேலே ‘’தெய்வம்’’ என்ற சொல் இடம்பெறும் ஐந்து குறள்களிலும், அச் சொல்லானது வெவ்வேறு பொருள்களில் இடம்பெற்றுள்ளது என்பதனைக் காணலாம். இந்த வகையில் ஆறாவது குறளான இந்தக் குறளிலும் (குறள்: 55) தெய்வம் என்ற சொல் வேறொரு பொருள் கொள்ளலாம் என்பது தெளிவாகின்றது.
"வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது, நீணில் வேந்தர் கொற்றம் குறையாது, பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு.',
'பத்தினி மகளிர் பெய்யெனப் பெய்யும் மழை என்பதூஉம்.' (சிலப்பதிகாரம், 15: 147-7, பதிகம், 89, என்று இளங்கோவடிகளும்,

நாடும் ஊரும் நனிபுகழ்ந் தேத்தலும், பீடு றும்மழை பெய்கெனப் பெய்தலும், கூட லாற்றவர் நல்லது கூறுங்கால், பாடு சான்மிகு பத்தினிக் காவதே.'
என்று வளையாபதி ஆசிரியரும்,
"மாதரார், கற்பின் நின்றன அறங்கள் அன்னவர், கற்பின் நின்றன காலமாரியே. (நாட்டுப் படலம், 59)
என்று கம்பரும்,
'தெய்வம் தொழா அள் கொழுநற் றொழுதெழுவாள், பெய்யெனப் பெய்யும் பெருமழை என்ற அப், பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்."
(மணிமேகலை, 22: 59-61) என்று சீத்தலைச் சாத்தனாரும் பாடியவற்றைக் காண்க.

ரிக் வேத கருத்து தமிழ் மண்ணை வந்துசேர்ந்த காலத்திலேயே திருக்குறள் எழுதப்படுகின்றது. எனவே, வள்ளுவர் இந்தத் திருக்குறளில் (குறள்: 55) குறிப்பிடும் தெய்வம் வேதம் குறிப்பிடும் வைதீகத் தெய்வமே ஆகும் என்ற கருத்தினை நாத்திகச் சாயல் படிந்த ஆசிரியர்கள் பலரும் கொண்டிருக்கின்றனர்.. எவ்வாறு முன்னைய குறள்களில் ஆசீவகக் கருத்தான ஊழ் என்பதனை தெய்வமாகவும், வேறு இடங்களில் தமிழரின் நீத்தார் வழிபாட்டுத் தலைவர்களை (வாழ்வாங்கு வாழ்ந்து நீத்தார்) தெய்வமாகவும் கொண்டாரோ, அதேபோன்று இங்கு வைதீகத் தெய்வத்தினைக் குறிப்பிடுகின்றார் (இத்தகைய வெவ்வேறு தெய்வங்கள் எல்லாம் தமிழர்களிடையே அன்று காணப்பட்டமையாலேயே, அத்தகைய வெவ்வேறான தெய்வங்களை வெவ்வேறு குறள்களில் வள்ளுவர் கையாளுகின்றார்). சரி, அந்த வைதீக தெய்வம் யாதென வேதத்தின் வழியே பார்ப்போம்.
இந்த வைதீக தெய்வத்திற்கும், ‘’தொழாஅள்’’ என்பதற்கும் என்ன தொடர்பு? இதற்கு இன்றும் திருமணங்களில் ஓதப்படும் வடமொழி மந்திரமான “ஸோம: ப்ரதமோ…” என்பதனை அறியவேண்டும். இந்த மந்திரமானது ரிக் வேதத்தில் (Rig veda 10, 7:85) இருந்து தொகுக்கப்பட்டதாகும்.
சோமப் பிரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர
த்ருத்யோ அக்நிஷ்டே பதி: சதுர்யஸ்தே மனுஷ்யஜா

சோமன் முதலிலும், பிறகு கந்தர்வனும், மூன்றாவதாக அக்னியும் உனக்குப் பதியானார்கள். நான்காவதாக இந்த மானிடன் உனக்குப் பதியாகப் போகிறான்.

இங்கே பதி என்ற சொல்லை கணவன் என்று எடுத்துக் கொண்டு இதற்கு முன் நீ மூன்று தேவர்களுக்கு மனைவியாக இருந்தாய், இப்போது இந்த மானிடனுக்கு நான்காவதாய் வாழ்க்கைப்படப் போகிறாய் என்று குதர்க்கமாக நாத்திகர்கள் வாதிடுவார்கள்.

பதியென்றால் கணவன் என்று ஒரு பொருள்., மற்றொரு பொருள் தலைவன் என்பதாகும். அதாவது பாதுகாப்பாளர் . பதி – பசு – பாசம் என்ற சைவ சித்தந்தக் கொள்கையில் தலைவன் அல்லது பாதுகாக்கின்ற இறைவன் என்றே பொருள் வரும்.

இம்மந்திரத்தின் உண்மையான பொருள் என்னவென்றால்,.

பெண்ணே! குழந்தைப் பருவத்தில் சோமன் உனக்குப் பாதுகாவலாக இருந்தான், பால பருவத்தில் கந்தர்வன் உனக்குத் துணையாக இருந்தான், வாலைப் பருவத்திலே உன்னை அக்னி பகவான் பாதுகாத்தார். இனிமேல் உன்னை இந்த மானிடனாகிய மணமகன் பாதுகாப்பான் என்பதே இந்த மந்திரத்தின் உண்மையான் உட்பொருள். ஆகையினால் ஒரு மனைவியானவள் மேற்கூறிய தெய்வங்களை இனித் தொழவேண்டியதில்லை என்ற கருத்து பெறப்படுகிரது.
திருவள்ளுவர் காலத்தில் எல்லா மனைவிமார்களும் கணவனைச் சார்ந்தே வாழ்ந்துவந்தார்கள். கணவனே மனைவிக்குப் பாதுகாவலன்.
இரவில் கணவனுடன் சேர்ந்து படுத்துத் தூங்கிய பெண் காலையில் எழும்போது தன்னுடைய உடற்தூய்மை கருதித் தெய்வத்தைத் தொழமுடியாத நிலையில் இருப்பாள். எனவே, தெய்வத்திற்கு அடுத்தநிலையில் உள்ள தன் கணவனைத் தொழுது எழுவாள் என்ர கருத்தும் இங்கே நோக்கற்பாலது..

உயிரினும் சிறந்தன்று நாணே, நாணினும்
செயிர்தீர் காட்சிக்கற்புச் சிறந்தன்று (தொல் 1050)
என்று தொல்காப்பியரும் தமிழர்தம் வாழ்வியல் நெறியைப் பதிவு செய்கிறார்.
அதனாலன்றோ நாணம், எழில், மடம் போன்ற பன்னிரண்டு பொருள்களில் கற்பையும் சேர்த்து அவற்றைக் ‘காட்டலாகப் பொருள்’ என்றார் தொல்காப்பியர்.

இக்குறளில் வரும் செய்தியை ஒட்டியே வால்மீகி இராமாயணம் கூறுவதையும் கேட்போம்.

பர்த்ரு: சுஷ்ருஷயா நாரி லபதே ஸ்வர்க்கமுத்தமம்
அபி யா நிர்நமஸ்காரா நிவ்ருத்தா தேவ பூஜனாம். (அயோ. கா. 4:26)

பொருள்: மனைவி தெய்வங்களைத் தொழுவதில் விருப்பம் இல்லாதவளாகவும், பெரியோர்களை அடிபணிந்து வணங்காதவளாகவும் இருந்தாலும், கணவனுக்கு மனமுவந்து சேவை செய்பவளாயின் அம்மனைவி உயர்ந்த உலகங்களை அடைவாள்.

மனுநீதியில் சொல்லப்படுவதையும் கவனிக்க வேண்டும்.
நாஸ்தி ஸ்த்ரீனாம் ப்ருதயக்ஞா ந வ்ரதம் நாப்யுபோஷணம்
பதிம் சுஷ்ருதே யேன தேன ஸ்வர்கே மஹீயதே (மனு 5:155)

பொருள்: கற்புடை மகளிர்க்குத் தனியாக யாகம், தவம், விரதம் எதுவும் விதிக்கப்படவில்லை.கணவனுக்குச் சேவை செய்வதலேயே அவள் வானுலகில் போற்றப்படுகிறாள்.




__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

இது ஒரு புறமிருக்க, கற்பு என்ற சொல்லே பெண்ணுக்கென்று தனி மனமோ, உணர்வுகளோ, உரிமைகளோ இருக்கக் கூடாது என்று கருதி பெண்களை அடக்கி ஆள விழைந்த ஆணாதிக்க சமுதாயத்தின் கண்டுபிடிப்பு என்று சொல்லும் போக்கு மிகுந்து வருகிறது. பொருளுக்காக ஒரு ஆண்மகனைச் சார்ந்து நிற்கவேண்டியிருந்த சமுதாயச் சூழலில் அவளைச் சுற்றி வளைத்துப் போட்ட இரும்பு வேலிதான் கற்பு என்பது தற்காலப் பகுத்தறிவுச் சிந்தனையாளர்களின் கருத்து.
கற்பு என்பது சான்றோர்களால் கற்பிக்கப்பட்ட ஒழுக்கம் என்பதால் இது கற்பு எனப்பட்டது. இது இயற்கை ஒழுக்கமன்று, செயற்கை ஒழுக்கமே. கற்பு இல்லாத கட்டுப்பாடற்ற உறவில் குடும்பம் என்னும் தனி அமைப்பு உருவாகாது. உறவுகளைத் தெளிவாகப் பிரித்தறியமுடியாமல் போகும். குழந்தைகளை யார் பேணுவது என்னும் குழப்பமும் நிலவும். பலர் உறவில் ஒரு பெண்ணிடம் பிறந்த குழந்தைகளை எந்த ஆண்மகனும் பொறுப்புடன் நின்று பேண்மாட்டான். பெண்களின் காரணமாகப் போட்டியும் பூசல்களும் நிறைந்த வாழ்வையே எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இவ்வகையான ஒரு சமுதாய வளர்ச்சியின் கால கட்டத்தில் சான்றோர்களால் கற்பிக்கப்பட்டதே ஒருத்திக்கு ஒருவன் என்னும் கற்பு நெறி.

'கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி, பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக்கொள்பவள் ஆவாள்' எனக் கலைஞர் ஒரு பொருத்தம் இல்லாத உரையை எழுதியுள்ளார். கணவனுக்கு சேவை செய்வதே பத்தினிப் பெண்ணின் இலக்கணமாகக் கூறப்பட்டதை மாற்றி அது அடிமைத்தனத்தின் வெளிப்பாடு என்கிறார் அப்படியானால் மனைவி என்பவள் என்ன செய்யவேண்டும் என்று எங்கேயும் சொல்லவில்லை முத்தமிழ்க் காவலர்?
ஆனால் பெண்ணினத்தின் விடுதலைப் பாதைக்கு வித்திட்ட தந்தை பெரியார் பெண்களின் கற்பைப் பற்றித் தன் கருத்தைச் சொல்லியிருக்கிறார். பெண் மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது, மேல் சாதிக்காரன் கீழ் சாதிக்காரனை நடத்துவதைவிட, பணக்காரன் ஏழையை நடத்துவதைவிட, எசமான் அடிமையை நடத்துவதைவிட மோசமானதாகும் என்று சொல்கிறார்.. இது பெரியார் 1936ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி ஈரோட்டில் ஆற்றிய உரையின் சிறு துளி.
கற்பு என்பது ஒரு பெண்ணை அடிமைப்படுத்தவே உருவாக்கப்பட்டது , உண்மையில் அப்படி ஒன்றும் இல்லை. அது ஒரு கற்பமையே. அப்படியே இருந்தாலும் அது ஏன் ஆண்களுக்கில்லை? ஏன் எந்த இலக்கிய புராணங்களும் ஆணின் கற்பை சோதிக்கவில்லை? கொண்டாடவில்லை?. கற்புக்காகப் புருஷனின் மிருகச் செயலைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டுமென்கின்ற கொடுமையான மதங்கள், சட்டங்கள் மாய வேண்டும். கற்புக்காக மனத்துள் தோன்றும் உண்மையான அன்பை, காதலை மறைத்துக்கொண்டு - காதலும், அன்புமில்லாதவனுடன் இருக்க வேண்டும் என்கின்ற சமூகக் கொடுமையும் அழிய வேண்டும் என்று மேலும் அவர் கூறுகிறார்.

வள்ளுவர் இன்னொரு இடத்தில் மழையைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பாருங்கள்.

கெடுப்பதூ உம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூ உம் எல்லாம் மழை (15)

அதாவது வள்ளுவப் பெருந்தகை இரண்டு மழைகளைப் பற்றிப் பேசுகிறார். ஒன்று கொடுக்கும் மழை இன்னொன்று கெடுக்கும் மழை. நிலத்தைப் பண் படுத்தி, ஆழமாக ஏர் உழுது விதைகளை விதைத்திருப்பான் விவசாயி. அன்று இரவு மழை பெய்தால் பரவாயில்லையே என்று ஏங்கி வேண்டுவான். அப்படியே பெய்தால் அது கொடுக்கும் மழை. அதாவது பயிர்களை வாழ வைக்கும் மழை.

பயிர் நன்றாக விளைந்து முற்றித் தலை கவிழ்ந்து அறுவடைக்குத் தயாராக நிற்கும். அடுத்த நாள் விடியற்காலையில் அறுவடை. பணியாட்களும் அறுப்புக்கு வந்தாயிற்று. அன்று இரவு மழை கொட்டோ கொட்டென்று கொட்டி விளைந்து நின்ற பயிர்களை நாசம் செய்தால் அது கெடுக்கும் மழை.

ஒரு மழை, பெய்யாதா என்று ஆசைப் படும் போது பெய்யும் மழை. இன்னொன்று பெய்யக் கூடாதே என்று வேண்டும் போது பெய்து நாசம் விளைவிக்கும் மழை. இதில் பத்தினி என்பவள் எப்படிப் பட்டவள்? அவள் பெய்யென பெய்யும் மழைக்கு சமமானவள். அதாவது மழை பெய்தால் தேவலையே என்று விவசாயிகள் ஏங்கிக் கொண்டிருக்கும் போது பெய்யும் மாமழை போன்றவள்.

இப்போது குறளின் விளக்கம் தெளிவாகும். கணவனுடன் சேர்ந்து ‘தற்காத்துத் தற்கொண்டான் பேணி’ வாழ்ந்து, துயில் எழும் மனைவியானவள் தேவைப்படும்போது பெய்யும் மழை போன்றவள், அவள் தெய்வத்தைத் தொழவேண்டியதில்லை என்பதே இக்குறளின் விளக்கமாகும்.
:கணவனையே தெய்வமாய் நெஞ்சில் நிறைத்திருக்கும் மனைவி தன் கணவனுக்குத் தேவை அறிந்து பெய்யும் பருவ மழையாய்த் திகழ்வாள். என்பதே கருத்து.
தண்டலையார் சதகம் எனும் செய்யுள் தொகையில படிக்காசுப் புலவர் கற்புடைய பெண்களைப் பற்றி ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.

முக்கணர்தண் டலைநாட்டிற் கற்புடைமங்
கையர்மகி மைமொழியப் போமோ
ஒக்குமெரி குளிரவைத்தாள் ஒருத்திவில்வே
டனைஎரித்தாள் ஒருத்தி மூவர்
பக்கமுற அமுதளித்தாள் ஒருத்திஎழு
பரிதடுத்தாள் ஒருத்தி பண்டு
கொக்கெனவே நினைத்தனையோ கொங்கணவா
என்றொருத்தி கூறி னாளே!
இப்பாடலின் பொருள்:
இராமனின் சுடுசொற்கள் தாங்காது சீதை தீக்குளிக்க முயன்றும் தேவியின் கற்பின் மாண்புணர்ந்து அக்னி பகவான் அவளைச் சுடாது குளிர்ந்து நின்றான்.

காட்டில் நளனை விட்டுப் பிரிந்த தமயந்தி, பிரிந்து தவிக்கையில் வேடனொருவன் அவளைக் கற்பழிக்க நெருங்கியதுபோது அவள் அவனைத் தன் கற்பின் சக்தி கொண்டு உற்று நோக்கியதில் அவன் எரிந்து கீழே விழுந்தான்.

அனுசூயையினுடைய கற்பின் மாண்பைச் சோதிக்க விரும்பிய மும்மூர்த்திகளான, பிரம்மா, திருமால் மற்றும் சிவனும் அவளிடத்தே துறவி வேடத்தில் சென்று, தமக்கு ஆடையின்று வந்து உணவளிக்க வேண்டினர். அவள் அவர்களை அதிதிகளாக வரவேற்று, மூவரையும் தன் கற்பின் சக்தியால் சிறு குழந்தைகளாக்கிக் கிடத்தி, பின் ஆடையின்றி வந்து பாலூட்டினாள். பின்னர் அவர்கள், அவளது கற்பின் மாண்பை வியந்து பாராட்டினர்.

நளாயினி, தன் கணவனை கூடையில் வைத்து அவன் விரும்பிய தாசி வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கையில், மரக்கிளையில் அமர்ந்து கால்களைத் தொங்க இட்டுக்கொண்டு தியானத்தில் இருந்த மாண்டவிய ரிஷியின் காலில் அக்கூடை இடித்துவிட, அவர் கோபமுற்று விடிவதற்குள் நளாயினி தாலி இழப்பாள் எனச் சாபமிட்டார். நளாயினியோ, விடியவே கூடாது என சூரியனை வேண்டிக்கொள்ள, அவளது கற்பின் மகிமையால், ஏழு குதிரைகள் பூட்டிய இரதத்திலே வருகின்ற சூரியன் தோன்றவே இல்லை. பின்னர், தேவர்கள் தலையிட்டு மாண்டவியரின் சாபத்தை திரும்பப் பெறச் செய்தனர்.

மகாபாரதத்தில் கொங்கண நாட்டைச் சார்ந்த கௌசிகன் என்ற முனிவர் தவம் புரிந்து கொண்டிருந்தார். நண்பகலிலே ஊருக்குள் சென்று உணவு வாங்கி உண்பது அவர் வழக்கம். அப்படியாக, அவர் ஊருக்குள் சென்று கொண்டிருக்கும் போது மரத்தின் மேலிருந்த கொக்கு ஒன்றின் எச்சம் அவரது மேலே விழவும், அவர் அதைக் கோபத்தில் உற்று நோக்கவும், அவரது தவவலிமையால் அந்தக் கொக்கானது எரிந்து சாம்பலாகி விழுந்தது. ஊருக்குள் சென்ற அவர் ஒரு வீட்டிலே யாசகம் கேட்கவும், அவ்வீட்டின் இல்லத்தரசி, அவரைக் காத்திருக்கும்படி சொல்லிவிட்டு , தன் கணவனுக்குப் பணிவிடைகள் செய்து முடித்த பின்பே வெளியில் வந்தாள். வெகுநேரம் காத்திருந்த கொங்கண முனி சினமுற்று சிவந்த விழிகளோடு அவளை உற்றுப் பார்த்தான். அது கண்ட கற்பில் சிறந்த அப்பெண்மணி , ‘எம்மை கொக்கென்று நினைத்தனையோ கொங்கணவா?’ என எள்ளியபடி வினவினார். முனிவர் அதிர்ந்து போய் அவளுடைய கற்பின் வலிமையை உணர்ந்து மன்னிப்பு கோரினார்.

சாதாரணமாக மக்களின் பேச்சுவழக்கில் ”அவரு எங்கண்ணனா, அல்லது கொக்கா?” என வினவும் போது, அண்ணன் ஆனவன் கொக்கைப் போன்ற அற்பன் அல்ல, கற்புடைய பெண்ணைப் போன்ற வலியவன் எனும் உயர்வு நவிற்சி வெளிப்படுகிறது. இதுவே புழக்கத்தில் வல்லமையைக் குறிக்கும் சொலவடையாக ஆகிப் போனது.
ஆகவே கற்புடைய மகளிரை சமுதாயம் மிக உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றுவது என்பது காலமும், இனமும், மொழியும் கடந்த ஒரு சீரிய பண்பாடு ஆகும்.

வள்ளுவரும்,
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின். (54) என்று கூறியிருக்கிறார்.

ஒருவன் எய்தும் பொருள்களுள் இல்லாளைவிட மேம்பட்ட பொருள் யாவுள., அவ்வில்லாளின் மாட்டு கற்பு என்னும் திடமான தன்மை உண்டாகப் பெறின்.

பெண் அடிமைத்தனத்தை வலியுறுத்தும் ஒரு பிற்போக்குத்தனமான குறள் என்று இதுநாள் வரை நாம் கருதியிருந்த ஒரு குறளானது, உண்மையில் எவ்வளவு முற்போக்குக் கருத்துக்களைக் கொண்டிருக்கிறது என்பதைப் பார்க்க



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard