Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஏசு கிறிஸ்து ஒரு கற்பனை - ஜோசப்_இடமருகு


Guru

Status: Offline
Posts: 7409
Date:
ஏசு கிறிஸ்து ஒரு கற்பனை - ஜோசப்_இடமருகு
Permalink  
 


*கவனமாக படியுங்கள், உங்கள் குழந்தைகளுக்கு புரிய வையுங்கள்*

*ஏசு கிறிஸ்து ஒரு கற்பனை*! *அப்படி ஒருவர் இல்லை! இல்லவே இல்லை!*
- *ஜோசப் இடமருகு*

நான் ஜோசப் இடமருகு பேசுகிறேன். *இந்திய பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவரும். உலக நாத்திக சங்கத்தின் துணைத் தலைவருமான* ஜோசப் இடமருகுதான் பேசுகிறேன்.1934 செப்டம்பர் 7ஆம் தேதி கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் பிறந்தேன்.

*இளமைக்காலத்தில் கிறித்துவைத் தெய்வமாக நம்பி. அம்மத நூல்கள் அனைத்தையும் தீவிரமாகப் படித்தேன்.* வயது வளர்ந்தது, எனது பகுத்தறிவு வலிமை பெற்றது. விமர்சன கண்ணோட்டத்தோடு மூடநம்பிக்கையை ஓரம்கட்டி வைத்துவிட்டு, பைபிளைப் படிக்கத் தொடங்கிய பிறகுதான் அதில் உள்ள குறைபாடுகள் தெரியவந்தன.

*19ஆவது வயதில் எனது ஆராய்ச்சிப்படி கிறித்து ஒரு* *மனிதனாக வேண்டுமானால்* *இருக்கலாம் நிச்சயம் கடவுளாக இருக்க* *வாய்ப்பில்லை என்று*
எழுதினேன்.
இது கிறித்துவர்கள் மத்தியில் பெரும் புயலைக் கிளப்பியது.நான் அஞ்சவில்லை. என்னைக் கிறித்துவ மதத்திலிருந்து நீக்கினர். நான் மகிழ்ச்சியடைந்தேன்.

அதன்பிறகுதான் எனது ஆராய்ச்சி தீவிரமானது. *ஏசுவினுடைய வாழ்க்கையில் நேரடித் தொடர்புடைய இடங்களை நேரில்* சென்று காணவேண்டும் என்ற ஆசை பிறந்தது.

*பாலஸ்தீனத்திற்குச் சென்றேன். அங்கு நான் கண்ட காட்சிகள் கிறித்துவம் என்பது ஒரு ஏமாற்று வேலை* என்பதை எனக்குத் தெளிவாக எடுத்துக்காட்டியது. உதாரணமாக *ஏசு சுமந்த சிலுவையின் துண்டுகள் என்று மரத்துண்டுகளை விற்றுக் கொண்டிருந்தனர். இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒரே ஒரு சிலுவையின் துண்டுகளை விற்றுக் கொண்டிருக்கிறீர்களே, அது இன்னும் விற்றுத் தீரவில்லையா?* அது முழுமையாக விற்றுத் தீருவதற்கு இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் தேவைப்படும்? என்று வினவினேன்.

“தங்கள் பிழைப்பில் மண்ணைப்போட இந்தியாவில் இருந்து ஒருவன் வந்துவிட்டான்” எனக்கருதி என்னைச் சூழ்ந்து கொண்டு கிறித்துவர்கள் தாக்க முற்பட்டனர்.வந்த இடத்தில் அறிவு பூர்வமாகப் பேசி வம்பில் மாட்டிக் கொண்டு விட்டோமோ? என்று ஒரு கனம் சிந்தித்து அமைதியானேன்.

*நூறுடாலரும் இருநூறு டாலரும் கொடுத்து அதனைச் சிலர் வாங்கிக்கொண்டு போன போதுதான் எனக்குத் தெரிந்து, கிறித்துவம் முட்டாள்களையும் மூடநம்பிக்கையாளர்களையும் நம்பித்தான் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறதென்று!* கேரளத்தில் *தாமஸின் மண்டை ஓடு இதுதான் என்று ஆறு ஏழு இடங்களில் வைத்து வணங்குவதைப் பார்த்துள்ளேன்*. கிறித்துவ மூடத்தனம் உலகம் முழுவதும் ஒரே மாதிரிதான் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன்.

*ஏசுவைச் சிலுவையில் அறைந்த கல்வாரி மலை கல்லும், முள்ளும், பாறைகளும் நிறைந்த மாபெரும் மலை என்று கிறித்துவ பாதிரிமார்கள் கூறிய* வார்த்தைகளைக் கேட்டு வளர்ந்த எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. *சுமார் 15அடி உயரத்திற்குமேல் இல்லாத ஒரு மேடை*. அதுவும் ஒரு ஜெப ஆலயத்திற்கு உள்ளேயே இருக்கிறது. இதனைத்தான் அவர்கள் மாபெரும் கல்வாரி மலை என்று கதையளந்து கொண்டிருந்தனர்.

எவ்வளவு தூரம் நம்மை முட்டாளாக்கி இருக்கிறார்கள் இந்தப் பாதிரிகள் என்று எண்ணிப் பார்த்தேன். எனக்கு கோபம் கோபமாக வந்தது. ஏசுவின் வாழ்க்கையில் நடந்ததாகப் பாதிரியார்கள் கூறும் சமபவங்கள், நடந்த இடங்கள் எவை எவை என்று தேடித்தேடிச் சென்று விசாரித்தேன். *அவர்கள் காட்டிய இடங்களும் சொன்ன கதைகளும் கொஞ்சம் கூட அறிவிக்குப் பொறுந்துவதாக இல்லை.*

எதையாவது சொல்லி பணத்தைப் பிடுங்குவதிலேயே குறியாக இருந்த அங்குள்ள பாதிரியார்களின் பணத்தாசை என்னை மிகவும் ஆச்சிரியப்பட வைத்தது.

கிறித்துவப் பாதிரியார்களை விட்டுவிட்டுச் *சாதாரண மனிதர்களிடம் சென்று பேசினேன். அவர்களில் பலர் பாதிரியார்களின் ஒழுக்கக்குறைவுகளைப் பற்றி கதைகதையாகக் கூறினர்*. உள்ளூர் மக்களுக்குக் கிறித்துவத்தின் மீது நம்பிக்கையோ ஈடுபாடோ அவ்வளவாக இல்லை என்பதை உணர்ந்தேன். அவர்களில் பலர் ஏசுவின் கதையை உண்மை என்று ஏற்க மறுக்கின்றனர்.

உள்ளூரில் சலித்துப் போன சரக்கைப் “புதியது” எனக் கூறி மற்ற நாடுகளில் விற்பனைச் செய்ய கிறித்துவம் முயலுவதை அறிந்தேன். உள்ளூர் மக்களே ஒப்புக் கொள்ள மறுக்கும் ஒரு கதை எப்படி உண்மையாக இருக்கும் என்று என் மனம்

சந்தேகம் கொண்டது.அதன் விளைவாக விரிவான ஆராய்ச்சியில் இறங்கினேன். *கிறித்துவம் தோன்றுவதற்கு முன்பிருந்தே உலகில் நிலவிவரும் பழம்பெரும் மதங்கள் பலவற்றின் நூல்களைத் தேடிப்பிடித்துப் படித்தேன். ஒரு உண்மை விளங்கியது*.

ஏசு கிறிஸ்து குறித்து கூறப்படும் செய்திகள் அனைத்தும் கற்பனையானவை. அப்படி ஒருவர் பிறக்கவே இல்லை. *உலகை மதரீதியாக ஆதிக்கம் செய்ய நினைத்த ஒரு கூட்டம் இந்துமதம் மற்றும் புத்தமதம் ஆகியவற்றிலிருந்து திருடப்பட்ட கருத்துகளைக் கொண்டு கற்பனையாய் படைத்து உலவவிட்ட ஒரு கதாபாத்திரம்தான் ஏசுகிறிஸ்து* என்பது மிகத் தெளிவாக தெரிந்தது. அதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அவற்றுள் சிலவற்றை இங்கே தருகிறேன்.

*கிருஷ்ணனின் கதையிலிருந்துதான் கிறித்துவின் கதை* தயாரிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணனிலிருந்து தோன்றிய கிறிஸ்து

கிருஷ்ணன் மகாபாரதக் கதையில் ஒரு பாத்திரமாக வரக்கூடியவர். மகாபாரதம் நடந்து முடிந்து சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. கிருஷ்ணர் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டவர்.இயேசு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவர். எனவே, கிருஷ்ணனின் கதையிலிருந்து கிறித்துவின் கதை வந்தது என்பதை உறுதியாக நம்பலாம். இதோ அவற்றிற்கான ஆதாரங்கள்.

*கிருஷ்ணன் யது வம்சத்தில் பிறந்தார். இதை கொஞ்சம் மாற்றி கிறிஸ்து யூத வம்சத்தில் பிறந்தார் என்றனர்*.

2. *கிருஷ்ணன் பிறப்பதற்கு முன்பே அசரீரி அறிவித்தது.அதைக் கொஞ்சம் கூட மாற்றாமல் கிறிஸ்துவின் வருகையை அசரீரி* அறிவித்தது என்று எழுதி வைத்தார்கள்.

கிருஷ்ணன் அரச குடும்பத்தில் பிறந்தார். அதனையே அச்சு மாறாமல் தாவீது என்னும் அரச வம்சத்தில் பிறந்ததாகக் கூறிக் கொண்டனர்.
*தேவகி கணவனுடன் சேராமலேயே கர்ப்பம் தரித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. மேரியும் அப்படித்தான் கர்ப்பம் தரித்தாள் என்று கதை எழுதினர்*.

கிருஷ்ணன் பிறக்கும் போது *நட்சத்திரம் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. ஏசு பிறந்தபோதும் நட்சத்திரம் தோன்றியதாக* தங்கள் கதையைப் பலப்படுத்தினர்.

கிருஷ்ணன் பிறக்கும் போது தேவலோகம் கொண்டாடியது. ஏசு பிறந்தபோதும் அப்படித்தான் தேவலோகம் மகிழ்ச்சியுற்றது என்று எழுதிவைத்தனர்.

*குழந்தையாகிய கிருஷ்ணனை மாட்டு இடையர்கள் கண்டுகளித்ததாகப் புரயணங்களில் வருகிறது. அதனைக் கொஞ்சம் மாற்றி ஏசுவை ஆட்டு இடையர்கள்* தரிசித்தனர் என்று கூறிக் கொண்டனர்.

குழந்தை *கிருஷ்ணனை நாரதர் உள்ளிட்ட முனிவர்கள் கண்டு வணங்கியதாகப் புராணம் கூறுகிறது. குழந்தை ஏசுவையும் கிழக்கிலிருந்து வந்த அறிஞர்கள் கண்டு வணங்கியதாகப் பைபிளில் எழுதி வைத்தனர்*.

கிருஷ்ணனால் *தனக்கு ஆபத்து என்று கம்சன் கருதினான், அதையே கொஞ்சம் மாற்றி கிறித்துவால் தனக்கு ஆபத்து என்று “ஏரோது” மன்னன்* கருதியதாக எழுதிக் கொண்டனர்.
*கிருஷ்ணனை யமுனை நதிக்கு அப்பால் கொண்டுபோய் ஆயர்பாடியில் தலைமறைவாக வளர்த்து வந்தனர். அதனைப் பின்பற்றி ஏசுவை எகிப்துக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக* வளர்த்து வந்ததாக கதைப்படுத்தினர்.

கிருஷ்ணனின் அவதாரத்தை அறிந்து *இரண்டு வயதிற்குட்பட்ட எல்லா குழந்தைகளையும் கொல்வதற்குக் கம்சன் உத்தரவிட்டான் இதே போன்றதொரு உத்தரவை ஏசுவைத் தேடிய ஏரோது மன்னனும் இட்டதாகச் சொல்லி வைத்தனர்*.
*கிருஷ்ணனுடைய தலமாகப் போற்றப்படுவது மதுரா. ஏசு வளர்க்கப்பட்டதாகக் கிறித்துவர்கள் கூறிக்கொள்ளும் ஊர் மதூரியா*.

கிருஷ்ணனுடைய *தாயார் தேவகிக்கு மாயாதேவி என்ற ஒரு பெயரும் உண்டு. ஏசுவினுடைய தாயார் மேரி என்றனர். மாயா-மேரி பெயர் ஒற்றுமை காண்க.*

கிருஷ்ணனுடைய தாயாருக்கு நந்தரின் மனைவி தோழி. மேரிக்கும் ஒரு தோழியைத் தயார் செய்தனர் கிறித்துவர்கள்.

கிருஷ்ணனுக்குப் *பலராமன் அண்ணனாக இருந்ததைப் பார்த்து ஏசுவுக்கு அண்ணனாக யோவானைப் படைத்துக்* கொண்டனர்.
*கிருஷ்ணன் வாதத்தில் அறிஞர்களை வென்றதை அறிந்து ஏசுவும் மதகுருமார்களை வென்றதாக* எழுதிவைத்தனர்.

கிருஷ்ணன் *காட்டிற்குச் சென்று தவம் இருந்ததைப் படித்துவிட்டு ஏசு பாலைவனத்திற்குச்* சென்று தவம் இருந்ததாக எழுதினர்.

இந்து மதத்தில் காணப்படும் *மும்மூர்த்திகளில் இரண்டாவது மூர்த்தி விஷ்ணு. அதனை அப்படியே பின்பற்றி கிறித்துவத்தின் மும்மூர்த்தி தத்துவத்தில் கிறித்துவை இரண்டாவதாக வைத்தனர்*.
தர்மத்தை நிலைநாட்டி நல்லோர்களைப் பாதுகாக்க ஏற்பட்டது கிருஷ்ணாவதாரம். இதனை அப்படியே பின்பற்றி ஏசுவும் அதற்காகத்தான் தோன்றினார் என்று எழுதிவைக்கப் பட்டுள்ளது.
கிருஷ்ணன் *காளிங்கனான நாகத்தை அழித்ததாக வரலாறு. ஏசுவும் ஒரு நாகத்தை அழித்ததாகப்* பைபிளில் எழுதிவைத்தனர்.

கிருஷ்ணனை “பரமாத்மா” என்கிறது இந்துமதம். அதனை அப்படியே ஏற்று கிறிஸ்துவை பாவமற்றவர் என்கிறது கிறித்துவம்.
கிருஷ்ணன் நிறைவான மனிதனாகவும் தெய்வமாகவும் திகழழ்ந்தான் என்கிறது புராணம். ஏசுவும் அப்படித்தான் இருந்தார் என்று எழுதி வைக்கப்பட்டது.

கிருஷ்ணன் ஏராளமான *அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார் என்பதைப் படித்துவிட்டு ஏசுவும் அவற்றைச் செய்ததாக எழுதி வைத்தனர்*.
கிருஷ்ணன் முதன்முதலில் குஷ்டரோகியைக் குணப்படுத்தினார் என்கிறது இந்துமதம். ஏசுவும் அப்படித்தான் என்று எழுதிக் கொண்டது கிறித்துவ மதம்.

25.கிருஷ்ணன் இறந்தவர்களை உயிர் பெறச் செய்தார் என்று இந்துமதம் கூறுகிறது.ஏசுவும் அவ்வாறே செய்ததாக கிறித்துவர்கள் எழுதிவைத்தனர்.

*மரத்தின் மேல் படுத்திருந்த கிருஷ்ணனை வேடன் அம்பு எய்து கொன்றான் என்பது வரலாறு. இதனைப் பார்த்து மரச்சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த கிறித்துவை ஒரு வீரன் ஈட்டியால் குத்தினான் என்கிறது கிறித்துவம்*.

கிருஷ்ணன் முக்தி பெற்றபோது துர்நிமித்தங்கள் உண்டாயின. சந்திரனில் கரியவட்டம் காணப்பட்டது. சூரியன் இருண்டு போனது. வானிலிருந்து நெருப்பும் சாம்பலும் மழைபோல் பொழிந்தது என்கிறது இந்துமதம்.

இதனை பின்பற்றி ஏசு இறந்த போதும் நாடு இருளில் மூழ்கியது. தேவாலயத்தின் திரைச்சீலை கிழிந்து தொங்கியது என்றும் எழுதி வைத்தனர்.

28.கிருஷ்ணனுடைய மரணத்திற்குப்பின் யாதவ வம்சம் அழிவுற்றது என்கிறது

இந்துமதம்.கிறித்துவின் காலத்திற்கு பின் யூத வம்சமும் அழிவைத் தான் சந்தித்தது என்று எழுதிவைத்தார்கள் கிறித்துவர்கள்.

கிருஷ்ணன் போர்க்களத்தில் உபதேசம் செய்தார். கொஞ்சம் மாற்றி மலைப்பிரதேசத்தில் ஏசு உபதேசம் செய்தார் என்று எழுதி வைத்தனர் கிறித்துவர்கள்.

*பதினாறு வயதான போது தனது போதனைகளை உலகெங்கும் பரப்புமாறு சீடர்களை அனுப்புகிறார் கிருஷ்ணன். இதனை அப்படியே பின்பற்றி ஏசுவும் தனது சீடர்களை அனுப்பியதாக எழுதி* வைத்தனர் கிறித்துவர்கள்.

இவ்வாறு கிருஷ்ணரின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை யெல்லாம் இந்தியாவிலிருந்து வாணிகத்திற்காக வந்தவர்களிடம் தெளிவாகக் கேட்டு தெரிந்து கொண்டு அதனையே கொஞ்சம் கூட்டியும் குறைத்தும் எழுதித் தொகுத்தது தான் கிறித்துவின் கதை!

பௌத்தத்தை தழுவிய பைபிள்

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றிய புத்த, சமண நூல்கள் பல உன்னதமான கொள்கைகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கின. அவற்றை அப்படியே அபகரித்துக் கொண்டுதான் கிறித்துவம் வளர்ந்துள்ளது.

ஏசு போதித்ததாகக் கிறித்துவர்கள் கூறும் பல கருத்துகளின் மூலத்தை புத்தரிடம் காணலாம். *“லலிதாவிஸ்தாரா” என்ற சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ள புத்தமத நூலில் உள்ள கருத்துகளைத்தான் பைபிள் கருத்துகள் என்று* காப்பியடித்து எழுதிக்கொண்டுள்ளனர் கிறித்துவர்கள்.

“என்னை நம்பி விசுவாசம் செய்வோர் ஆனந்தம் அடைவர் ” என்பது தொடங்கி “அழிவை நேக்கிச் செல்லும் ஆடுகளைத் திசைதிருப்பும் ஞபானமுள்ள மேய்ப்பன் நான்” என்பதுவரை *அனைத்தும் லலிதாவிஸ்தாராவில் இருந்து திருடப்பட்டவைதான்*.

புத்தர் தனது சீடர்களுக்கு அனைத்தையும் துறந்துவிட்டு வருமாறு அறிவுறுத்தியதைக் காப்பியடித்து ஏசு கூறியதாக எழுதிக் கொண்டனர்.

“ஒரு குருடன் இன்னொரு குருடனுக்கு வழி காடட்டினால் இருவருமே குழியில் விழுவர்” என்கிற கருத்து புத்த நூலில் உள்ளது. அதனை அப்படியே கிறித்துவர்கள் களவாடிக் கொண்டு பைபிளில் எழுதிக் வைத்தனர்.

இப்படி பைபிளில் உள்ள எல்லா வசனங்களுக்கும் புத்தமத நூல்களில் இருந்து ஆதாரம் காட்ட முடியும். அதனை விரிவாகக் கூறிப் படிப்போரைச் சலிப்படைய செய்திட நான் விரும்பவில்லை. ஆனால் வலுவான ஆதாரமாக விளங்கும் ஒரு கதையைப் பற்றி நான் சொல்லித்தான் ஆகவேண்டும்.

அந்தக்கதை இதோ:

*புத்தகுரு ஒருவர் பொதுமக்களிடம் காணிக்கை கோருகிறார். பணக்காரர்கள் அள்ளிக்கொடுத்தனர். ஒருவிதவை இரண்டு நாணயங்களை மட்டும் கொடுத்தார்.அப்போது குரு “எல்லோரும் தனக்குத் தேவையானதை வைத்துக் கொண்டு மீதியைத் தானமாகக் கொடுத்தனர்.ஆனால் இந்த விதவைப் பெண்மனியோ தனக்கென்று எதையுமே வைத்துக் கொள்ளாமல் தன்னிடமிருந்த இரண்டு நாணயங்களையும் கொடுத்து விட்டார். எனவே, இவர் கொடுத்தது தான் மற்றெல்லாவற்றையும் விட மேலானது*.” என்று கூறி பாராட்டினார்.

இந்தக் கதையை *அப்படியே திருடி பைபிளில்* சேர்த்துவிட்டனர். “புத்தகுரு” என்பதற்குப் பதிலாக “ஏசு” என்று மாற்றி போட்டு எழுதிவைத்துக் கொண்டனர். புத்த நூலில் இந்தக் கதையை படித்துவிட்டு இதே கதையை அச்சுமாறாமல் பைபிளில் படிக்க நேரும் யாவரும் கிறித்துவர்களின் கதைத் திருட்டை எளிதாக அறியலாம்.

இதையெல்லாம் யார் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கப் போகிறார்கள் என்ற எண்ணத்தில் *வார்த்தைகளைக்கூட மாற்றாமல் அப்படியே எடுத்துப் போட்டு “எங்கப்பன் குதிருக்குள் இல்லை”* என்று உளறிய முட்டாளைப் போல் கிறித்துவர்கள் மாட்டிக் கொண்டனர்.

டிசம்பர் 25 பிறத்தல், 3ஆம் நாள் உயிர்த்தெழுதல், 12 சீடர்கள்

டிசம்பர் 25ல் பிறந்தது, 3ஆம் நாள் உயிர்த்தெழுந்தது, 12 சீடர்கள், ஆகிய அனைத்தும் ஏற்கனவே பலநாட்டுக் கதைகளில் உள்ள கற்பனைச் செய்திகள் தான். அதனை அப்படியே களவாடிக் கற்பனைக் கதாபாத்திரமான ஏசுவுக்குப் பொருத்திவிட்டனர்.

இதோ, கிறித்துவத்திற்கு முன்னாள் உள்ள பழைய கதைகளில் உள்ள ஆதாரங்கள்.

கிரேக்க தெய்வம் ஹர்குலிஸ் இறந்தபின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாக ஒரு கதை உள்ளது.
எகிப்தின் ஒஸிரிஸ் தெய்வம் டிசம்பர் 25ல் பிறந்து வெள்ளிக் கிழமையில் இறந்து மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்ததாகவும் ஒரு கதை உண்டு.
டயோனியஸஸ் என்ற கடவுள் டிசம்பர் 25ல் பிறந்து, துன்பப்பட்டு இறந்து பிறகு மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்ததாகவும் அவருக்கு 12 சீடர்கள் இருந்ததாகவும் ஒரு கதை காணப்படுகிறது.

ரோமாபுரியில் மித்ரா என்னும் தெய்வம் ஒரு கன்னியின் வயிற்றில் டிசம்பர் 25 ஆம் தேதி பிறந்ததாகவும் அப்போதுஇடையர்கள் சூழ்ந்து இருந்ததாகவும்,அத்தெய்வத்திற்கு 12 சீடர்கள் இருந்ததாகவும்,அத்தெய்வம் சீடர்களிடம் தன்னுடைய மரணத்திற்குப்பிறகுத் தனது உடலைத் தின்று இரத்தத்தைக் குடிக்கும் படியாகக் கூறியதாகவும், கல்லறையிலிருந்து மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்ததாகவும் ஒரு கதை கூறப்படுகிறது. சதையைத் தின்று ரத்தத்தைக் குடிக்கும் தத்துவத்தை இங்கிருந்து தான் கிறித்துவர்கள் களவாடினர்.

இக்கதைகள் அனைத்திலும், டிசம்பர் 25ஆம் தேதி பிறத்தல், 12 சீடர்கள், மூன்றாம் நாள் உயிர்த்தெழுதல் ஆகியன ஒரே மாதிரியாக இருக்கக் காணலாம்.

கிறித்துவ மதம் தோன்றுவதற்கு முன்பே வழங்கி வந்த தொன்மையான கதைகளைத் திருடி அதை ஏசுவின் சரித்திரம் என போலியாக ஒரு கதையைத் தயாரித்தனர்.

*இப்பொழுது கூட்டிப் பாருங்கள் கணக்கு சரியாக வரும்*,

*கிரேக்க,எகிப்து நாடோடி கதைகள்+கிருஷ்ண வரலாறு+பௌத்த தத்துவங்கள் = கிறித்துவும்*, கிறித்துவ மதமும்

கிறித்துவும், கிறித்துவ மதமும் *கற்பனையாகக் கட்டியமைக்கப் பட்டவை என்பதை ஆய்வு செய்து நீரூபித்தற்காக என்னைக் கிறித்துவ மதத்தை விட்டு வெளியேற்றி விட்டார்கள்*. அதன் பிறகு தான் பகுத்தறிவு மிக்க மனிதனானேன். என்னை மூடநம்பிக்கையிலிருந்து வெளியேற்றிய கிறித்துவர்களுக்கு நன்றி!

இப்படிக்கு,
ஜோசப்_இடமருகு
இந்திய பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர்
(தற்போது) புதுதில்லி



__________________


Guru

Status: Offline
Posts: 7409
Date:
Permalink  
 

இயேசுவின் வரலாற்றுத்தன்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
 
Jump to navigationJump to search
 
பேதுரு இயேசுவைப் பின்தொடர்தல்

இயேசுவின் வரலாற்றுத்தன்மை என்பது இயேசு கிறிஸ்துவைப் பற்றி எழுதப்பட்டுள்ள வரலாற்று ஆவணங்களை மையப்படுத்தி தெளிவு பெறுகிறது. இயேசு உலக வரலாற்றில் வாழ்ந்த உண்மையான நபர் என்பதற்கும், அவரது வாழ்வுக்கும், சிலுவை மரணத்திற்கும், உயிர்ப்புக்கும் பின்வரும் ஆவணங்கள் சான்று பகர்கின்றன.[1]

பொருளடக்கம்

நற்செய்திகளில்[தொகு]

ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் பெயர் மரியா. வானதூதர் அவரிடம், 'தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்' என்றார்." - லூக்கா 1:26,27,35.

"இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார்." - மத்தேயு 1:18.

"அவர்கள் பெத்லகேமில் இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தபோது, தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்." - லூக்கா 2:6,7,21.

"இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர். விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். மூன்று நாள்களுக்குப்பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்." - லூக்கா 2:42-43,46,52.

"அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்." - மாற்கு 1:9.

"இயேசு கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்; அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்." - மத்தேயு 4:23.

"தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்." - யோவான் 3:16-17.

"இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள். தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்; அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார்." - மாற்கு 3:13-15.

"குழந்தைகளை இயேசு தொடவேண்டும் என்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். இதைக் கண்ட சீடர் அவர்களை அதட்டினர். ஆனால் இயேசு அவர்களைத் தம்மிடம் வரழைத்து, 'சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. இறையாட்சியைச் சிறு பிள்ளையைப் போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்பட மாட்டார் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்று சீடர்களிடம் கூறினார்." - லூக்கா 18:15-17.

"விண்ணரசு பற்றிய செய்திகளையெல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை." - மத்தேயு 13:34

"விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்." - யோவான் 6:52,55-56.

"அவர்கள் உணவருந்திக்கொண்டிருந்தபொழுது, இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி, அதைப் பிட்டுச் சீடருக்குக் கொடுத்து, 'இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல்' என்றார். பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து, 'இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்; ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்' என்றார்." - மத்தேயு 26:26-28.

"பிலாத்து யூதர்களிடம், 'இவனிடம் குற்றம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை' என்றான். யூதர்கள் அவரைப் பார்த்து, 'எங்களுக்கு ஒரு சட்டம் உண்டு. அச்சட்டத்தின்படி இவன் சாகவேண்டும். ஏனெனில் இவன் தன்னையே இறைமகன் என உரிமைகொண்டாடுகிறான்' என்றனர்." - யோவான் 19:6-7.

"அப்போது பிலாத்து பரபாவை அவர்கள் விருப்பத்திற்கிணங்க விடுதலை செய்தான்; இயேசுவைக் கசையால் அடித்துச் சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான்." - மத்தேயு 27:26.

"அவர்கள் 'மண்டைஓட்டு இடம்' எனப்பொருள்படும் 'கொல்கொதா'வுக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள்; அங்கே அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்." - மாற்கு 15:22,24.

"யோசேப்பு பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். அவர் அவரது உடலை இறக்கி, மெல்லிய துணியால் சுற்றிப் பாறையில் குடைந்திருந்த கல்லறையில் வைத்தார்." - லூக்கா 23:52-53.

"அப்பொழுது வானதூதர் அப்பெண்களைப் பார்த்து, 'நீங்கள் அஞ்சாதீர்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத் தெரியும். அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார்' என்றார்." - மத்தேயு 28:5-6.

"பதினொருவரும் பந்தியில் அமர்ந்திருந்தபொழுது அவர்களுக்கு இயேசு தோன்றினார்." - மாற்கு 16:14.

"இயேசு சீடர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர் அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார்." - லூக்கா 24:51.



__________________


Guru

Status: Offline
Posts: 7409
Date:
Permalink  
 

 

திருமுகங்களில்[தொகு]

தலைமை திருத்தூதர் பேதுரு[தொகு]

"உங்களுக்கென்றிருந்த அருளைப் பற்றிதான் இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்தனர்; (இயேசு கிறிஸ்துவின் வழியாக கிடைத்த) இந்த மீட்பைக் குறித்துத் துருவித் துருவி ஆய்ந்தனர்." - 1 பேதுரு 1:10.

"நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் பற்றி நாங்கள் உங்களுக்குத் தெரிவித்தபோது சூழ்ச்சியாகப் புனைந்த கதைகளை ஆதாரமாகக் கொண்டு பேசவில்லை. நாங்கள் அவரது மாண்பை நேரில் கண்டவர்கள். என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் என்று மாட்சிமிகு விண்ணகத்திலிருந்து அவரைப்பற்றிய குரல் ஒலித்தபோது, தந்தையாகிய கடவுளிடமிருந்து மதிப்பும் மாட்சியும் பெற்றார். தூய மலையில் அவரோடு இருந்தபோது விண்ணிலிருந்து வந்த இக்குரலொலியை நாங்களே கேட்டோம்." - 2 பேதுரு 1:16-18.

பிறஇனத்தாரின் திருத்தூதர் பவுல்[தொகு]

"நற்செய்தியைத் தருவதாகக் கடவுள் தம் இறைவாக்கினர் வழியாக ஏற்கெனவே திருமறை நூலில் வாக்களித்திருந்தார். இந்த நற்செய்தி அவருடைய மகனைப் பற்றியதாகும். இவர் மனிதர் என்னும் முறையில் தாவீதின் வழி மரபினர்; தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில் வல்லமையுள்ள இறைமகன். இவர் இறந்து உயிர்த்தெழுந்ததால் இந்த உண்மை நிலைநாட்டப்பட்டது. இவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார். நாம் கடவுளுக்குப் பகைவர்களாயிருந்தும் அவருடைய மகன் நமக்காக உயிரைக் கொடுத்ததால் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம். அப்படி யானால் ஒப்புரவாக்கப்பட்டுள்ள நாம், வாழும் அவர் மகன் வழியாகவே மீட்கப் படுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ!" - உரோமையர் 1:2-4, 5:8,10.

"சிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை. நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல் லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது. ஆனால் அழைக்கப் பட்டவர்கள், யூதரானாலும் கிரேக்கரானாலும், அவர்களுக்குக் கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார்." - 1 கொரிந்தியர் 1:18,23-24.

அன்பு திருத்தூதர் யோவான்[தொகு]

"தொடக்க முதல் இருந்த வாழ்வு அளிக்கும் வாக்கை நாங்கள் கேட்டோம்: கண்ணால் கண்டோம்; உற்று நோக்கினோம்; கையால் தொட்டுணர்ந்தோம். வெளிப் படுத்தப்பட்ட அந்த வாழ்வை நாங்கள் கண்டோம். அதற்குச் சான்று பகர்கிறோம். தந்தையோடு இருந்ததும் எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதுமான அந்த நிலை வாழ்வு பற்றி உங்களுக்கு அறிவிக்கிறோம். தந்தையுடனும் அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவுடனும் நாங்கள் கொண்டுள்ள நட்புறவை நீங்களும் கொண்டிருக் குமாறு நாங்கள் கண்டதை, நாங்கள் கேட்டதை உங்களுக்கு அறிவிக்கிறோம். கடவுள் ஒளியில் இருப்பதுபோல் நாம் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம். மேலும் அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும்." - 1 யோவான் 1:1-3,7.

மறைவு நூல்களில்[தொகு]

வாலன்ட்டினஸ் எழுதிய உண்மையின் நற்செய்தி (கி.பி.135-160)[தொகு]

"கடவுளின் மகன் உடலெடுத்து வந்தார்; மேலும் 'வார்த்தை நம்மிடையே வந்து மனிதரானார்.' அவர் மனித உருவில் தோன்றினார். அவர்கள் அவரைக் கண்டு, அவரது வார்த்தைகளைக் கேட்டபோது, அன்பு மகனாகிய அவர், அவர்கள் தன்னை சுவைக்கவும், முகரவும், தொடவும் அனுமதித்தார். அவர் தோன்றியபோது, அவர்களுக்கு தந்தையைப் பற்றி அறிவித்தார்."

"தனது மரணம் பலருக்கு வாழ்வளிக்கும் என்பதை அவர் உணர்ந்திருந்ததால், இயேசு துன்பங்களை ஏற்றுக்கொள்வதில் பொறுமையாக இருந்தார். அவர் (சிலுவை) மரத்தில் அறையப்பட்டார்; சிலுவையில் தந்தையின் சாசனத்தை வெளியிட்டார். வாழ்வின் வழியாக தன்னையே தாழ்த்தி சாவுக்கு கையளித்தார். அழியக்கூடிய ஆடைகளை தன்னிடமிருந்து களைந்து, அவரிடமிருந்து யாராலும் பறிக்க முடியாத அழிவில்லாதவற்றை அணிந்துகொண்டார்; முடிவின்மை அவரை உடுத்தியது."

ரெஜினோசுக்கு எழுதப்பட்ட உயிர்ப்பின் மீதான விவாதம் (கி.பி.2ஆம் நூற்றாண்டு)[தொகு]

"உடலெடுத்து வந்த ஆண்டவர், தன்னை கடவுளின் மகனாக வெளிப்படுத்தினார். இப்பொழுது இறைமகன் மானிடமகன் ஆகியுள்ளார். மனிதத்தன்மையிலும் இறைத் தன்மையிலும் அவர் அவர்களைத் தழுவினார். ஒரு பக்கம் இறைமகனாக அவர் மரணத்தை வெற்றிகொள்ள வேண்டும், மறு பக்கம் மானிடமகனாக ஆன்மீக உலகைப் புதுப்பிக்க வேண்டும். ஏனெனில் இந்த பிரபஞ்சம் வடிவம் பெறும் முன்பே இருந்த அவர், உண்மையின் வித்தாக மேலிருந்து வந்தவர்."

"மானிடமகனை நாம் அறிந்திருப்பதால், அவர் இறந்தோரிடம் இருந்து உயிர்த்தெழுந்ததை நாம் நம்புகிறோம். 'அவர்கள் நம்பிக்கை கொண்ட சிறந்தவராகிய அவர் சாவுக்கு அழிவானார்' என்று நாம் கூறுகிறோம். நம்புவோர் பேறுபெற்றோர். மீட்பர் சாவை விழுங்கிவிட்டார். அவர் தன்னையே அழிவற்ற யுகமாக உருமாற்றி, தன்னை மேலே உயர்த்தி, காணக்கூடியவற்றை காணமுடியாதவற்றால் மூடி விட்டார்; மேலும், நமக்கு முடிவற்ற வாழ்வை வழங்கினார்."

"உயிர்ப்பை ஒரு மாயத்தோற்றம் என்று நினைக்கவேண்டாம், மாறாக அது உண்மை. உலகின் மாயத்தோற்றத்தைவிட நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு உண்மையானது என உறுதியாக கூறலாம்."

பழங்கால கிறிஸ்தவ பதிவுகளில்[தொகு]

திருத்தந்தை கிளமென்ட் கொரிந்தியருக்கு எழுதிய திருமுகம் (கி.பி.95)[தொகு]

"ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் இருந்து திருத்தூதர்கள் நற்செய்தியை நமக்காக பெற்றுக்கொண்டார்கள்; இயேசு கிறிஸ்து கடவுளால் அனுப்பப்பட்டவர். இரண்டும் இறைத் திருவுளத்தின் நியமன வரிசைப்படி வந்தன. எனவே அவர்கள் பொறுப்பை பெற்றுக்கொண்டு, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பில் நிலைத்திருந்து, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியால் கடவுளின் வார்த்தையில் உறுதிபடுத்தப்பட்டு, இறையரசின் வருகைக்காக மகிழ்ச்சி அலைகளோடு புறப்பட்டு சென்றார்கள்; நாடுகளிலும் நகரங்களிலும் போதித்து, ஆவியால் நிரூபிக்கப்பட்ட நம்பிக்கைக்குரிய முதற்கனியானவர்களை ஆயர்களாகவும் திருத்தொண்டர்களாகவும் நியமித்தார்கள்."

அந்தியோக் ஆயர் இக்னேசியஸ் ட்ராலியருக்கு எழுதிய கடிதம் (கி.பி.110-115)[தொகு]

"தாவீது குலத்தவராகவும் மரியாவின் மகனாகவும் உண்மையிலேயே பிறந்து, உண்டு, குடித்த இயேசு கிறிஸ்து, போன்சியு பிலாத்துவின் அதிகாரத்தில் உண்மையிலேயே சிலுவையில் அறையப்பட்டு, விண்ணுலகோர், மண்ணுலகோர், கீழுலகோர் கண்கள் முன்பாக இறந்தார்; மேலும் உண்மையிலேயே இறந்தோரிடம் இருந்து உயித்தெழுந்தார். அவரது தந்தை அவரை உயிரோடு எழுப்பினார்; அவ்வாறே, அவரில் நம்பிக்கை கொள்வோர் அனைவரும் உயிரோடு எழுப்பப்படுவர்."

அந்தியோக் ஆயர் இக்னேசியஸ் ஸ்மைர்னியருக்கு எழுதிய கடிதம் (கி.பி.110-115)[தொகு]

"எனக்கு தெரிந்த நம்பிக்கைப்படி, அவர் உயிர்த்த பிறகும் உடலோடு இருந்தார்; மேலும் அவர் பேதுரு மற்றும் தோழர்களிடம் வந்தபோது, 'என்னைத் தொட்டுப் பாருங்கள், நான் உடலற்ற பூதமல்ல' என்றார். மேலும் அவர்கள் அவரை நேரடியாகத் தொட்டார்கள், நம்பினார்கள், அவரது உடலிலும் இரத்தத்திலும் பங்கு கொண்டார்கள். இருந்தாலும் மரணத்தை இகழ்ந்த காரணத்தால், அவர்கள் மரணத்துக்கு மேற்பட்டவர்களாக இல்லை. மேலும் அவரது உயிர்ப்புக்கு பின், அவர் அவர்களோடு உண்டு குடித்தார்."

அந்தியோக் ஆயர் இக்னேசியஸ் மக்னேசியருக்கு எழுதிய கடிதம் (கி.பி.110-115)[தொகு]

"நமது நம்பிக்கையான இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, போன்சியு பிலாத்துவின் ஆட்சி காலத்தில் நிகழ்ந்த அவரது திருப்பாடுகள், உயிர்ப்பு ஆகியவை உண்மையானவை."

குவாட்ராட்டஸ் பேரரசன் ஹாட்ரியனுக்கு எழுதியது (கி.பி.125)[தொகு]

"எப்பொழுதும் உங்கள் முன் இருக்கும் நமது மீட்பரின் செயல்கள், உண்மையான அற்புதங்கள்; யாரெல்லாம் குணமடைந்தார்களோ, யாரெல்லாம் உயிரோடு எழுப்பப்பட்டார்களோ, யாரெல்லாம் பார்த்தார்களோ, அவர்கள் அப்பொழுது மட்டுமின்றி, எப்பொழுதும் இருந்தார்கள். அவர்கள் நம் ஆண்டவர் உலகில் வாழ்ந்த காலத்தில் மட்டுமின்றி, அவர் உலகத்தை விட்டு சென்ற பிறகும் நீண்ட காலம் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். சிலர் நாம் வாழும் இக்காலத்திலும் வாழ்ந்தார்கள்."

(புனைவு) பர்னபாஸ் எழுதியது (கி.பி.130-138)[தொகு]

"இயேசு உடலுருவில் தோன்றுவது தேவையாக இருந்தது. அவர் இஸ்ரயேலில் போதித்து, பல அதிசயங்களையும், அற்புதங்களையும் செய்தார்; மேலும் அவர் அவர்களை அதிகமாக அன்பு செய்தார். தனது நற்செய்தியை போதிக்க தனக்கென்று திருத்தூதர்களை தேர்வு செய்தார். ஆனால் அவர் தன்னையே துன்பத்திற்கு உட்படுத்த மிகவும் விரும்பினார்; அதற்காக அவர் (சிலுவை) மரத்தில் துன்புறுவது அவசியமாக இருந்தது."

மறைசாட்சி ஜஸ்டின் பேரரசன் அன்ட்டோனினஸ்க்கு எழுதியது (கி.பி.130-138)[தொகு]

"இயேசுவுக்கு சிலுவையில் அறையப்பட்டபோது, அவருக்கு நெருக்கமானவர்கள் அனைவரும் அவரை மறுதலித்து, கைவிட்டனர்; அதன்பின், அவர் உயித்தெழுந்து அவர்களுக்கு காட்சி அளித்து, நிகழ்ந்தவற்றைப் பற்றி இறைவாக்குகள் முன்னறி வித்ததை அவர்களுக்கு கற்பித்து, அவர்கள் பார்த்துக்கொண்டிருந்த போதே விண்ணகம் ஏறிச் சென்றார். அதனால் நம்பிக்கை கொண்ட அவர்கள், அவர் அனுப்பிய வல்லமையைப் பெற்றுக்கொண்டு, எல்லா மக்கள் இனத்தாரிடமும் சென்று, இவற்றைக் கற்பித்தார்கள்; அவர்கள் திருத்தூதர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்."

மறைசாட்சி ஜஸ்டின் ட்ரைபோவுடனான உரையாடல் (கி.பி.150)[தொகு]

"இயேசுவை அவர்கள் சிலுவையில் அறைந்தபோது, அவரது கைகளையும் கால்களையும் ஆணிகளால் துளைத்தார்கள்; மேலும், அவரது ஆடைகள் மேல் சீட்டுப்போட்டுத் தங்களிடையே பகிர்ந்துகொண்டார்கள். ஆண்டவர் மாலைவேளை வரை (சிலுவை) மரத்தில் தொங்கினார்; சூரியன் மறையும் நேரத்தில் அவரை அடக்கம் செய்தார்கள்; பின்பு மூன்றாம் நாள் அவர் மீண்டும் உயித்தெழுந்தார்."



__________________


Guru

Status: Offline
Posts: 7409
Date:
Permalink  
 

மற்ற பழங்கால பதிவுகளில்[தொகு]

யூத வரலாற்று ஆசிரியர் ப்ளாவியஸ் ஜோசப்பஸ் (கி.பி.37-97)[தொகு]

"இக்காலத்தில் இயேசு என்று அழைக்கப்பட்ட ஞானமுள்ள ஒரு மனிதர் இருந்தார். அவரது நடத்தை நல்லதாக இருந்தது; அவர் குற்றமற்றவராக இருந்தார். யூதர்களி லும், மற்ற நாடுகளிலும் பெரும்பாலான மக்கள் அவரது சீடர்களானார்கள். அவரை சிலுவையில் அறைந்து கொல்லுமாறு, பிலாத்து அவருக்கு மரண தண்டனை வழங்கினார். அவரைப் பின்பற்றியவர்கள் தங்கள் சீடத்துவத்தை விட்டுவிடவில்லை. இயேசு சிலுவையில் இறந்த மூன்று நாட்களுக்குப் பின் மீண்டும் உயிருடன் வந்து தங்களுக்கு காட்சி அளித்ததாக அவர்கள் அறிவித்தார்கள்; அதன்படி, இறைவாக்கினர்களால் முன்னறிவிக்கப்பட்ட மெசியா அவராகத்தான் இருக்க வேண்டும்."

ஜூலியஸ் ஆப்ரிக்கானஸ் சுட்டிக்காட்டுவது (கி.பி.221)[தொகு]

"(கி.பி.52ல்) தாலஸ் எழுதிய (மத்திய கிழக்கின்) வரலாறுகளின் மூன்றாவது நூலில், (இயேசுவின் மரணத்தின்போது சூழ்ந்த) காரிருளை சூரிய கிரகணம் என்று குறிப்பிடுவது காரணமற்றதாகத் தெரிகிறது." [பாஸ்கா விழா கொண்டாடப்படும் முழுநிலவு நாளில் சூரிய கிரகணம் நிகழ்வது சாத்தியமற்றது.]

ரோமின் வரலாற்று ஆசிரியர் கொர்னேலியஸ் தாசித்துஸ் (கி.பி.55-120)[தொகு]

"கிறிஸ்து திபேரியசு ஆட்சிக் காலத்தில், நமது ஆளுநர்களில் ஒருவரான பிலாத்துவின் கரங்களில் துன்புற்று மரண தண்டனை அடைந்தார்."

யூத போதனை நூல் (கி.பி.70-200)[தொகு]

"பாஸ்கா விழாவுக்கு முன்தினம் மாலையில், இயேசு (சிலுவையில்) கொலையுண்டார். அதற்கு நாற்பது நாட்கள் முன்பாக, 'அவர் மாயவித்தைகள் (அற்புதங்கள்) வழியாக இஸ்ரயேலை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதால், கல்லால் எறிந்து கொல்லப்பட இருக்கிறார். அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க விரும்புவோர் முன்வந்து, அவருக்காக பரிந்து பேசலாம்' என்று அறிவிக்கப்பட்டது. அவருக்கு ஆதரவாக யாரும் வராததால் அவர் கொல்லப்பட்டார்."

கிரேக்க கேலிப்பேச்சாளர் லூசியன் (கி.பி.2ஆம் நூற்றாண்டு)[தொகு]

"சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட ஒரு தனிப்பட்ட மனிதரை (இயேசுவை), கிறிஸ்தவர்கள் இன்றளவும் வழிபட்டு வருகிறார்கள்."

சிரியாவைச் சார்ந்த மாரா பார்-செரப்பியன் எழுதியது (கி.பி.70-200)[தொகு]

"யூதர்கள் தங்கள் ஞானமுள்ள அரசரை (இயேசுவை) கொன்றதால் என்ன இலாபம் அடைந்தார்கள்? அதன்பிறகு அவர்களின் அரசு அழிக்கப்பட்டது. இந்த ஞானமுள்ள அரசர் நன்மைக்காக இறந்தார்; அவரது போதனைகளின்படியே அவர் வாழ்ந்து காட்டினார்."

ஆதாரங்கள்[தொகு]

  1.  Wayne Grudem, Systematic Theology (Leicester: Inter-Varsity Press, 1994); pages 90-91
(1991), v. 1, The Roots of the Problem and the PersonISBN 0-385-26425-9
(1994), v. 2, Mentor, Message, and MiraclesISBN 0-385-46992-6
(2001), v. 3, Companions and CompetitorsISBN 0-385-46993-4
(2009), v. 4, Law and LoveISBN 978-0300140965

வெளி இணைப்புகள்[தொகு]



__________________


Guru

Status: Offline
Posts: 7409
Date:
Permalink  
 

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை ஓர் இணையற்ற வரலாறு

 

குறிப்பு:வரலாற்று உண்மைகளைச் சரிவர ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாத சில நண்பர்கள், இயேசு கிறிஸ்து என்று ஒருவர் பிறந்தது கூட இல்லையென இந்நாட்களில் பத்திரிகைகளிலும் புத்தகங்களிலும் எழுதி, உலகத்தை ஏமாற்றப் பார்க்கின்றனர்.
“இயேசு கிறிஸ்து பிறந்ததாகக் கூறப்படும் காலத்திலும், வரலாற்று ஆசிரியர்கள் (Historians) வாழ்ந்திருந்தார்களே, அவர்களில் யாராவது இயேசு கிறிஸ்துவைப் பற்றி யாதேனும் எழுதியதுண்டா?” என்பதே அவர்கள் கேட்கும் குதர்க்கமான கேள்வி. இக்கேள்விக்குப் பதிலளிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்)

ரோமப் பேரரசரான ஜூலியஸ் சீஸர், கால் (Gaul) நாட்டின் மீது படையெடுத்த வரலாற்றினை விளக்கும் மூலப்பிரதிகள் பத்திற்கும் குறைவானவை. அவற்றுள் மிகப் பழமையான பிரதி, சீஸர் இறந்து 900 ஆண்டுகளுக்குப் பின்னரே எழுதப்பட்டது. ஆயினும் இவை வரலாற்றிற்கு அடிப்படையான ஆதாரங்களாகவே கருதப்படுகின்றன.

இந்திய வரலாற்றில் இடம்பெற்றுள்ள எத்தனையோ முக்கிய நிகழ்ச்சிகளுக்குக் கூட அடிப்படையான ஆதாரங்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. அத்துடன் சில மன்னர்கள் வாழ்ந்த காலம், அவர்களது வரிசை ஆகியவற்றை நிர்ணயிப்பதிலும் பல சிக்கல்களும் சிரமங்களும் ஏற்படுகின்றன.

அரும்பெரும் ஆதாரங்கள் :
இயேசு கிறிஸ்துவின் வரலாறு நூற்றுக்கு நூறு உண்மையானது என்பதற்கு எழுந்த ஆதாரங்கள் எண்ணில் அடங்கா.

இயேசு கிறிஸ்துவின் அற்புத வாழ்க்கையைச் சுமந்து நிற்கும் புதிய ஏற்பாட்டின் முதல் பக்கமே அவரது வம்ச வரலாற்றை வரிசை தவறாமல் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

இயேசு கிறிஸ்து தாமே உலக வரலாற்றைக் கிறிஸ்துவுக்கு முன் என்றும், கிறிஸ்துவுக்குப் பின் என்றும் இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்து, ஒருபோதும் அணையாத ஒளிவிளக்காய்த் திகழ்கின்றார்.

நாம் இன்று நமது இல்லங்களிலும், அலுவலகங்களிலும் பயன்படுத்தும் நாட்காட்டியும் (Calander) அவரது பிறப்பிற்கோர் ஆதாரமாகவே அமைந்துள்ளது.

அருள்நாதர் இயேசு கிறிஸ்துவின் வரலாற்றை, அவர் வாழ்ந்த அதே நூற்றாண்டைச் சார்ந்தவர்களும், அவரோடு நெருங்கிப் பழகியவர்களுமான அவருடைய சீடர்களும், சுவிசேஷகர்களுமே எழுதி உலகிற்கு அளித்துள்ளனர். அவரைப் பற்றி விளக்கமாய்க் கூறும் புதிய ஏற்பாட்டிற்கு (New Testament) முக்கிய அடிப்படையாய் நமது கரங்களிலிருக்கும் மூலப்பிரதிகள் 5000-க்கும் அதிகமானவை. இவை மூல மொழியான கிரேக்க மொழியில் எழுதப்பட்டவை. நமக்குக் கிடைக்கப்பட்ட இப்பிரதிகள் கி.பி.2-ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் இருந்து எழுதப்பட்டவை.

மேற்கூறிய மூலப்பிரதிகளைத் தவிர ஆயிரக்கணக்கான பழமை மிக்க பல மொழித் திருப்புதல் பிரதிகளும் (Ancient versions) கி.பி.1-ஆம் நூற்றாண்டிலும் அதற்குச் சற்று பின்னரும் வாழ்ந்த இக்னாசியஸ், பபியாஸ், பர்னபாஸ், டாட்டியன், ஜஸ்டின் மார்ட்டியர், இரானியஸ், யூசிபியஸ், ஆரிஜன் போன்ற பல திருச்சபைப் பிதாக்கள் இயேசுவைப் பற்றியும் திருச்சபையைப் பற்றியும் எழுதிய ஆதாரக் குறிப்புகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இஸ்ரேல் நாட்டில் ஒவ்வொரு நாளிலும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பார்த்துப் பரவசமடையும் இயேசு நாதரின் திறக்கப்பட்ட கல்லறையும், அவரது சரித்திரம் உண்மையானதென்பதற்கொரு சாட்சியாய் இருக்கிறது.

மேலும் ஆரம்ப நூற்றாண்டுகளில் வாழ்ந்து வந்த புற மதத்தைச் சார்ந்த வரலாற்று ஆசிரியர்களும், கிறிஸ்து மார்க்கத்திற்கு எதிராக எழுந்த தேசத் தலைவர்களும் கூட இயேசு நாதரின் வாழ்க்கைச் சரித்திரம் மெய்யென்பதற்குரிய ஆதாரங்கள் பலவற்றைத் தந்துள்ளனர், அவற்றில் சிலவற்றைக் கீழே காணலாம்.

1.பிளினி (Pliny):
இவர் பிதினியா நாட்டின் (சின்ன ஆசியா) அதிபர். இவர் கி.பி.110-ல் டிராஜன் (Trajan) மன்னனுக்கு எழுதிய கடிதத்தில், கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவை மறுதலிக்கும் பொருட்டுத் தாம் கையாடிய கொடுஞ்செயல்களை விளக்கி எழுதியுள்ளார். (Colin Chapman எழுதிய Christianity on Trial, பக்கம் 422,423)

2.டாசிட்டஸ் (Tacitus):
இவர் ரோம வரலாற்று ஆசிரியர். இவர் கி.பி.115-ஆம் ஆண்டில் தாம் எழுதிய வரலாற்று நூலில் (Annals), நீரோ மன்னன் கிறிஸ்தவர்களை கொன்று குவித்ததைக் குறித்து தெளிவாக எழுதியுள்ளார். மேலும், கிறிஸ்துவைப் பின்பற்றியவர்களே கிறிஸ்தவர்களென்றும், டைபீரியஸ் மன்னனின் ஆட்சியில், பொந்திப் பிலாத்து என்னும் ஆளுநரால் கிறிஸ்து கொலை செய்யப்பட்டார் என்றும் இவர் குறிப்பிட்டுள்ளார். Christus, from whom their (Charistians`) name is derived was executed at the hands of the Procurator Pontius Pilate in the reign of Tiberius" (Christianity on Trial பக்கம் 423,424)

3.சூட்டோனியஸ் (Suetonius):
இவர் ஒரு ரோம சரித்திர ஆசிரியர். கி.பி.120-ஆம் ஆண்டில் தாம் எழுதிய “கிளாடியஸ் மன்னனின் வாழ்க்கை வரலாறு” என்னும் நூலில், இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றிய கிறிஸ்தவர்கள் கிளாடியஸ் மன்னரால் ஏன் ரோமாபுரியிலிருந்து நாடுகடத்தப்பட்டனர் என்பதற்குரிய விளக்கம் அளித்துள்ளார். (Christianity on Trial, பக்கம் 424)

4.ஜோசபஸ் (Josephus):
இவர் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த யூத வரலாற்று ஆசிரியர். இவர் கி.பி.93 ஆம் ஆண்டில், “யூதரின் தொன்மை” (The Antiquities of the Jews) என்னும் நூலில், இயேசு நாதர் ஞானமிக்கவர் என்றும் அற்புதங்கள் பல புரிந்தார் என்றும், மக்களுக்குப் பல போதனைகள் அளித்தார் என்றும், பல புறமதத்தவரையும், யூதரையும் தம்பால் இழுத்துக்கொண்டார் என்றும், அவரைப் பிலாத்து சிலுவை மரணத்துக்கு ஒப்புக்கொடுத்தார் என்றும், அதன்பின் அவர் மூன்றாம் நாளில் தம்மிடம் அன்பு செலுத்தியவருக்கு உயிருடன் காட்சியளித்தார் என்றும் எழுதியுள்ளார். (Christianity on Trial,பக்கம் 424,425)




யாரிந்த லூவோலேஸ்? (Lew Wallace)
இவர் இங்கர்சால் என்னும் நாத்திகரின் உற்ற நண்பர். ஆளுநராய் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் இயேசு கிறிஸ்துஎன்று ஒருவர் வாழ்ந்ததே இல்லை என்று எழுதத் துணிந்தார். அதற்கு போதுமான ஆதாரங்கள் திரட்ட தமது செல்வத்தில் பெரும்பகுதியைச் செலவளித்தார். புத்தகத்தை எழுதத் தொடங்கினார். ஆனால் ஒரு சில வரிகளுக்கு மேல் அவரால் எழுதவே
முடியவில்லை.ஏனெனில் அவருக்கு கிடைத்த ஆதாரங்கள் அனைத்துமே இயேசு கிறிஸ்து பிறந்தது,வாழ்ந்த்து அற்புதங்கள் புரிந்தது, சிலுவையில் மாண்டது, மூன்றாம் நாள் உயிரோடெழுந்தது ஆகிய அனைத்தும் உண்மையென்றே உரைத்தன. இவர் மனந்திரும்பி, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனிதனை மீட்க மனிதனாய்ப் பிறந்து, பாவமற்றப் புனிதராய் வாழ்ந்தார் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்ட “பென்ஹர்” (Ben Hur) என்னும் சிறந்த நூலை இயற்றினார்.

யாரிந்த கில்பர்ட்? (Gilbert)
இவர் மேல்நாட்டைச் சார்ந்த ஒரு வேதவிரோதி. லார்ட் லிட்டில் டன் (1709-1773) (Lord Little Ton) என்பவரோடு சேர்ந்து இவர் இயேசு கிறிஸ்து உயிரோடெழுந்தது ஒரு கட்டுக்கதை என்றார். தம்மால் அதை நிரூபித்துகாட்ட முடியும் என்று நீதி மன்றத்தில் சவால் விடுத்தார். எனவே நீதிமன்றம் அதற்கென நாளொன்றை தீர்மானித்தது. குறிப்பிட்ட அந்த நாள் வந்தபோது இவ்விருவரும் நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்டனர். அங்கே அவர்கள், தங்களுக்குக் கிடைத்த ஆதாரங்கள் அனைத்தையும் ஆராய்ந்ததின் விளைவாகத் தாங்கள் இயேசு கிறிஸ்து உயிரோடெழும்பியது உண்மை என்று கண்டுகொண்டதாக அறிக்கையிட்டனர்.

தீர்க்கதரிசிகள்:
இவர்கள் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கும் பல நூற்றாண்டுகளுக்க் முன்னரே, அவர் யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் சிற்றூரில் ஒரு கன்னியின் வயிற்றில் பரிசுத்த ஆவியினால் உற்பவித்துத் தோன்றுவார் என்று மொழிந்தனர்.மேலும் அவரது தூயவாழ்க்கை, பாடு, மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றைக் குறித்தும் தீர்க்கதரிசிகள் முன்னுரைத்தவற்றை வேதத்தில் காணலாம். அவையாவும் ஆண்டவரது அற்புத வாழ்க்கையில் அப்படியே நிறைவேறின.

எனக்கு மிகவும் பிரியமானவர்களே,
இந்த இயேசு கிறிஸ்துவைப் போல் வேறொருவரை நாம் இந்த உலகில் காணமுடியுமா? இவரே உயிர்த்தெழுந்த உண்மையான தெய்வம்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard