Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: காட்மேன் வெப் சீரீஸ்


Guru

Status: Offline
Posts: 7467
Date:
காட்மேன் வெப் சீரீஸ்
Permalink  
 


சிறப்புக் கட்டுரை: காட்மேன் வெப் சீரீஸ் எதிர்ப்பும் பாரதிய ஜனதா கட்சியும்

சிறப்புக் கட்டுரை: காட்மேன் வெப் சீரீஸ் எதிர்ப்பும்  பாரதிய ஜனதா கட்சியும்

 

ராஜன் குறை

 

தமிழ் பார்ப்பன சமூகத்தைச் சார்ந்தவர்கள் பாரதிய ஜனதா கட்சியை ஆதரிப்பதிலோ, அந்தக் கட்சி அவர்களை ஆதரிப்பதிலோ என்ன அதிசயம் இருக்க முடியும் என்றும் அந்தக் கட்சியே பார்ப்பனீய இந்துமதத்தை முன்னிறுத்தி செயல்படும் மத அடையாளவாதக் கட்சிதானே என்றும் யாருக்கும் தோன்றும். வரலாற்று ரீதியாக தமிழ் பார்ப்பன சமூகத்தினர் பெரும்பாலோர் பாரதிய ஜனதாவை ஆதரித்தார்கள் என்று கூற முடியாது. ஆனால், மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பெருமளவில் காந்தத்தால் ஈர்க்கப்படும் இரும்புத் துகள்களைப் போல அவர்களில் பலரும் பாரதிய ஜனதாவை நோக்கி சாய்வதும், கண்மூடித்தனமாக அதை ஆதரிப்பதும், மோடி பக்தர்களாக மாறுவதும் அதிகரித்துவருகிறது. ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றவர்கள் இதனால் பெரும் குதூகலம் அடைந்திருப்பதும் தெரிகிறது. துரதிர்ஷ்டவசமாக பார்ப்பனர்கள் தமிழக மக்கள்தொகையில் மூன்று சதவிகிதமோ, அதற்கும் குறைவாகவோதான் இருப்பார்கள். இருபது முதல் இருபத்தைந்து லட்சம் பேர் இருக்கலாம். ஆறு முதல் எட்டு லட்சம் தலைகட்டுகள், அதாவது குடும்பங்கள் இருக்கலாம் (இப்போதெல்லாம் கூட்டுக்குடும்பங்கள் மிகவும் குறைவு). எட்டு கோடி மக்கள்தொகையில் இது ஒரு சிறிய தொகுதிதான். ஆனாலும் இவர்களின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற முடிந்தால் பாரதிய ஜனதா கட்சி மகிழத்தான் செய்யும். ஏனெனில் இந்துத்துவ கருத்தியலின் மூலமான அந்த சமூகம் அதை ஆதரித்து நிற்பதுதானே முறை என்ற எண்ணம்தான். இங்கே ஒரு கேள்வி எழும், ஏன் இது புதிய விஷயம், எப்போதுமே அப்படித்தானே இருந்திருக்க வேண்டும் என்ற கேள்வி எழும். ஆனால் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த நான் எல்லா காலத்திலும் தமிழ் பார்ப்பனர்களில் பெரும்பான்மையானோர் பாரதிய ஜனதாவை ஆதரித்ததாக நினைக்கவில்லை. அது ஒரு புதியதொரு போக்கு, அவர்களுக்குத் தீங்கு தரும் போக்கு என்றுதான் நினைக்கிறேன்.

பார்ப்பனர்களின் அரசியல் அடிப்படைகள்

பார்ப்பன சமூகம் அடிப்படையில் மிகவும் பன்மைப்பட்ட சமூகம். வைணவம், சைவம் பிரிவுகள் மட்டுமன்றி நிறைய உட்சாதிப்பிரிவுகளும், அவைகளுக்குள் கூரிய முரண்களும் உண்டு. அது தவிர நவீன காலத்தில் நுழைந்ததில் முன்னேறியவர்களும், பின் தங்கியவர்களுமாக பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் கடுமையானவை. எனவே ஓர் ஒன்றுபட்ட சமூகமாக இவர்கள், இந்த மூன்று சதவிகிதம் கூட விளங்கியதில்லை. இவர்களின் பொதுவான அரசியல் போக்குகளைத் தொகுத்துக்கொள்ள முனையும்போது இந்த பன்மையையும் மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும்.

அடிப்படையில் பூசகர்களாகவும், அரசு நிர்வாகிகளாகவும், அந்த இரண்டு தொழில்களுடன் இணைந்த கல்வியாளர்களாகவும் இருப்பதுதான் வெகுகாலமாக பார்ப்பனர்கள் ஒரு வர்ணமாகச் செய்து வருவது. இவற்றின் மூலம் பொதுக் கருத்தியல்களை உருவாக்குவது, அதற்கேற்ற சாத்திரங்கள், விதிமுறைகளை உருவாக்குவது போன்றவற்றையும் செய்வார்கள். அரசன் யாராக இருந்தாலும் அரசை ஆதரிப்பார்கள். அவர்களை அரசன் விரோதித்துக்கொண்டால்தான் அவனை எதிர்த்து உள்ளடி வேலைகளைத் தொடங்குவார்கள். அண்ணாவின் “சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்” நாடகம் இதை விரிவாக விளக்கியது. இந்த நாடகம் மராத்திய சிவாஜி மன்னனாக முடி சூடிக்கொள்வதில் பார்ப்பனர்கள் செய்த இடையூறுகளும், பின்னர் காக பட்டர் என்ற காசியைச் சேர்ந்த பார்ப்பனர் சத்ரியனல்லாத சிவாஜிக்கு சத்ரிய அந்தஸ்த்தை சடங்குகள் மூலம் ஏற்படுத்தி முடி சூட உதவியதும், அதற்காக பார்ப்பனர்களுக்கு ஏராளமான சலுகைகளைப் பெற்றதுமான வரலாற்று நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது. வரலாற்றாசிரியர் ஜாதுநாத் சர்க்காரின் நூலின் அடிப்படையில் அண்ணா எழுதிய நாடகம் இது. இவ்வாறு அரசர்களுக்கு ஆதரவாக இருப்பது போல வர்த்தகம், தொழில்களிலும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், கணக்கர்களாகவும் இருப்பார்கள் பார்ப்பனர்கள்.

இந்த வரலாற்றுப் பின்னணியில் சம காலத்திலும் பார்ப்பனர்களுக்கு முக்கியமானது கோயில் வழிபாடும், இந்திய தேசியமும்தான். இரண்டுமே தேசிய அரசுக்கும் முக்கியமானவை என்பதுதான் காரணம். அரசுருவாக்கத்திலும், அரசு நிர்வாகத்தை நிலைபெறச்செய்வதிலும் எப்போதும் கவனத்தைக் குவிப்பதுதான் பார்ப்பனர்கள் வரலாற்று இயல்பு. பார்ப்பனீயத்தை ஏற்றுக்கொள்ளும், பார்ப்பனீயத்தின் கருத்தியல் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளும் தமிழ் தேசியம் என்றால் அதையும் ஆதரிப்பார்கள். ஆனால், அவர்கள் கருத்தியலை எதிர்க்கும் திராவிட அரசியல் என்றால் அவர்களுக்கு நிச்சயம் பிடிக்காது.

சுதந்திர இந்திய வரலாற்றில் தமிழ் பார்ப்பன சமூகத்தின் சார்புகள்

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிர காங்கிரஸ் ஆதரவாளர்களாக பார்ப்பனர்கள் இருந்தார்கள். அவர்களில் கணிசமானோர் காலனீய நிர்வாகத்திலும் பொறுப்பில் இருந்தார்கள். அரசு, அதற்கான மாற்று இரண்டிலுமே இருப்பதும் இயல்பானதுதான். அதில் போலித்தனம் எதுவும் கிடையாது. அவர்கள் ஆங்கிலேயே அரசை ஆதரித்தது அவர்கள் கருத்தியல் மேலாதிக்கத்தைப் பாதுகாத்துக்கொள்ள. காங்கிரஸை ஆதரித்தது எதிர்காலத்தில் கருத்தியல் மேலாதிக்கத்தைப் பாதுகாத்துக்கொள்ள. அவர்கள் கருத்தியல் மேலாதிக்கமே தேச நலன் என்றும் கருதுவார்கள். தமிழகத்தில் கணிசமானோருக்கு ராஜாஜியின் மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது. அவர் காங்கிரஸிலிருந்து விலகி சுதந்திரா கட்சி தொடங்கியபோது அதைப் பலரும் ஆதரித்தார்கள்.

அதனால்தான் மிகவும் சுவாரஸ்யமான ஒரு திருப்பம் ஏற்பட்டது. ராஜாஜி 1967 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்ததால் இவர்களில் பலர் திமுகவுக்கு வாக்களிக்க நேர்ந்ததுடன், திமுக வெறுப்பையும் தளர்த்திக்கொள்ள நேரிட்டது. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு வழக்கமான அரசு ஆதரவுப் போக்கில் சற்றே திமுக ஆதரவும் கலந்து கொண்டது. எம்.ஜி.ஆர் தனிக்கட்சி கண்டபிறகு பலருக்கு அவர் திமுகவுக்கு நல்ல மாற்று என்று அவர்களுக்குத் தோன்றியது. பின்னர் ஜெயலலிதா கட்சிக்கும், ஆட்சிக்கும் வந்த பிறகு பலர் அஇஅதிமுக ஆதரவாளர்களாகவே மாறினார்கள்.

இப்படியான ஒரு வரலாற்றுப் போக்கில் பெரும்பான்மையானோர் ஆர்எஸ்எஸ் பக்கமோ, பாரதிய ஜனதா பக்கமோ போகும் சந்தர்ப்பம் ஏற்படவில்லை. ஓரளவுக்குப் பற்றோ, பிரியமோ இருந்தாலும் பாஜகவுக்கு இந்திய, தமிழக அரசியலில் எந்த முக்கியத்துவமும் இல்லாததால் பெரிதாக அவர்களை ஆதரிக்கும் சந்தர்ப்பமும் ஏற்படவில்லை. காந்தி எதிர்ப்பு என்ற ஆர்எஸ்எஸ் சிந்தனையும் தமிழ் பார்ப்பனர்களில் கணிசமானோருக்கு உடன்பாடனாதல்ல.

சமூகவியல் பரிமாணம்: தலைமுறை மாற்றங்கள்

இன்னொரு முக்கியமான அம்சம், நவீன கல்வி பயிலத்தொடங்கிய இளைய தலைமுறை. சுதந்திரத்துக்கு முன்பே பார்ப்பன இளைஞர்கள் சனாதன, வைதீக மனோபாவத்தை மறுதலிக்கத் தொடங்கினார்கள். எல்லோருமே தீவிர புரட்சியாளர்களாக மாறாவிட்டாலும் கணிசமானோர் சுதந்திரவாத சிந்தனைகளாலும், பொதுவுடமை சிந்தனைகளாலும் கூட கவரப்பட்டார்கள். கலாச்சார அளவில் சாதீய கலாச்சாரத்தை தனிமனித அளவுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும், பொதுவெளியில் கடைப்பிடிக்கக் கூடாது என்று கருதினார்கள். குடுமியிலிருந்து கிராப்புக்கு மாறிய கல்கி கிருஷ்ணமூர்த்தி தலைமுறையில் தொடங்கிய இந்தப் போக்கு, அடுத்தடுத்த தலைமுறைகளில் அதிகரித்தது. நவீன சுதந்திரவாத சிந்தனைகளாலும், கம்யூனிஸ சிந்தனைகளாலும் பலரும் ஈர்க்கப்பட்டனர். 1930 முதல் 1990 வரையிலான மூன்று நான்கு தலைமுறைகளில் இந்த நவீன மனோபாவம் விரைவாக வளர்ந்து வந்தது. இவர்கள் அனைவராலும் ஒரேயடியாகப் புரட்சியாளர்களாக மாற முடியாவிட்டாலும், சனாதன சாதீய சிந்தனைக்கும், பார்ப்பனீய மேட்டிமைக்கும், அரசு ஆதரவு போக்குக்கும் மாற்றாக நவீன, முற்போக்கு சிந்தனைகளை கைக்கொள்ள முடிந்தது. ஒரு சிலர் புரட்சியாளர்களாகவே மாறினர். இடது சாரி இயக்கங்களில், தொழிற்சங்க இயக்கங்களில் முன்னால் நின்றனர். இதற்கு ஏராளமான உதாரணங்களை காண முடியும்.

ஆனால் 90களுக்குப் பிறகு நவதாராளவாத பொருளாதாரமும். உலகமயமாதலும் வலுவடைந்தபோது ஒரு குறிப்பிடத் தகுந்த மாற்றம் நிகழ்ந்தாற்போல தோன்றுகிறது. லட்சிய நோக்குகளும், மாற்று சிந்தனைகளும் குறைந்து பிழைப்புவாதம் மேலோங்கியது. மென்பொருள் தொழில்நுட்பம், அமெரிக்கக் கனவு ஆகியவை பார்ப்பனர்களின் கற்பனைவெளியில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியதும் முந்தைய தலைமுறைகளில் இருந்த கொஞ்ச நஞ்சம் சுயவிமர்சனப் போக்கும் குறைந்தது. இதனால் மெள்ள மெள்ள மீட்புவாதப் போக்குகள் அதிகரித்தன. இந்த நேரத்தில் நிலவுடமை பார்ப்பனரல்லாத சாதிகளுக்கு எதிராக தலித் குரல்கள் உரத்து ஒலிக்கத் தொடங்கியது பார்ப்பனர்களிடையே விசித்திரமான ஒரு மனநிலையை ஏற்படுத்தியது. ஏதோ தீண்டாமையை உருவாக்கியதில் தங்களுக்குப் பங்கே இல்லாதது போலவும், பார்ப்பனரல்லாத நிலவுடமை சாதிகள் செய்வதையெல்லாம் செய்துவிட்டு தங்கள் மேல் பழியை போட்டுவிட்டதாகவும் நம்பத் தொடங்கினர். “நாங்க ஆத்துக்குள்ள விடமாட்டம்னுதானே சொன்னோம்; அவாள எரிச்சமா, வெட்டினமா” என்று தங்களை நியாயப்படுத்திக்கொள்ளும் போக்கு பரவியது. சமீபத்தில் நீலம் புரொடக்ஷன்ஸ் இணையத்தில் வெளியிட்ட “மோடியும், ஒரு பியரும்” (Modi & a Beer) குறும்படம் இந்த மனோநிலையைத் துல்லியமாக படம் பிடிக்கிறது.

இத்தகைய நிலையில் தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சி வலுவடைந்ததும், பின்னர் 2014ஆம் ஆண்டு மோடி தலைமையில் திராவிட கட்சிகள் ஆதரவு இல்லாமலேயே ஆட்சியைப் பிடித்ததும் கணிசமான ஒரு வேகத்தை பார்ப்பனர்களின் மீட்புவாத சிந்தனைக்கு அளித்துள்ளது போலவே தெரிகிறது. அதன் விளைவாக முன்னெப்போதும் இல்லாத அளவில் உரத்த குரலில் தங்களது அடையாள அரசியலை முன்னெடுக்கும் போக்கும் அதிகரித்துள்ளது.

சமீப கால நிகழ்வுகள்

இரண்டாண்டுகளுக்கு முன் வைரமுத்து தன்னுடைய தமிழாற்றுப்படை வரிசையில் ஆண்டாள் குறித்துக் கட்டுரை ஒன்றை தினமணி நாளிதழில் எழுதினார். ஆண்டாளின் கவித்துவத்தை, பக்தியின் மாண்பை வியந்து போற்றி எழுதிய அந்தக் கட்டுரையில் ஆண்டாள் தேவதாசியாக கோயிலில் பணிபுரிந்திருக்கலாம் என சில வரலாற்று ஆசிரியர்கள் கருதியதைச் சுட்டிக்காட்டியிருந்தார். உடனே பாஜகவினர் வைரமுத்து ஆண்டாளை இழிவுபடுத்திவிட்டார், அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், அவரை வெட்டுவோம், கொல்வோம் எனப் பேசத் தொடங்கினர். வைணவ ஜீயர் ஒருவர் நாங்களும் சோடா பாட்டில் வீசுவோம் என்று வீராவேசமாகப் பேசினார். பார்ப்பன சமூகம் மிகுந்த உற்சாகத்துடன் பொதுவெளியில் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டியது.

இதைத் தொடர்ந்து ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் பலவிதமான அடையாளவாத வீராவேச பேச்சுகளும், மீட்புவாத சிந்தனைகளும் தொடர்ந்து உலாவரத் தொடங்கின. ஆடிட்டர் குருமூர்த்தி போன்றவர்கள் முன்மாதிரியாகச் செயல்படத் தலைப்பட்டனர்.

சமீபத்தில் திமுக தலைவர் ஆர்.எஸ்.பாரதி ஒரு கூட்டத்தில் பார்ப்பனர்களைக் கடிந்து பேசினார் என்பதற்காக பார்ப்பனர்கள் கூட்டம் போட்டு அவரை கண்டிக்கும் காணொலிகள் வந்தன. அதில் ஏகப்பட்ட வீராவேச முழக்கங்கள் இடம்பெற்றிருந்தன. தங்கள் சாதி அடையாளத்தை ஓர் அரசியல் சக்தியாக மாற்ற முடியும் என பார்ப்பனர்கள் நம்பத் தொடங்கிவிட்டதுபோலத் தெரிகிறது.

அதன் சமீபத்திய வெளிப்பாடுதான் கடந்த வாரம் காட்மேன் என்ற ஜீ 5 டிவி வெப் சீரிஸின் டீசர் ஒன்றால் உருவான எதிர்ப்பு. தங்கள் சமூகத்தை இழிவு செய்கிறது என்று கூறி அந்த சீரிஸையை இணையத்தில் ஒளிபரப்பக் கூடாது என்றும், அதன் இயக்குநர், தயாரிப்பாளர் மீது குற்றம் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றும் அழுத்தம் கொடுத்து வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தின் பல பகுதிகளிலும் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர் என்று தெரிகிறது. வழக்கம்போல பாஜகவின் ஹெச்.ராஜா இதற்குப் பக்கபலமாக செயல்படுகிறார். கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் இந்த முயற்சி சரியான முன்மாதிரியல்ல. இது சகிப்புத்தன்மையின்மையையே அனைவரிடத்தும் உருவாக்கி பிளவுகளை அதிகரிக்கும்.

இத்தகைய போக்கு பார்ப்பன சமூகத்தின் நலனுக்கு உகந்ததா, இது சரியானதா என்பதை அந்த சமூகத்தினர், அந்த சமூகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் பரிசீலிக்க வேண்டும். சுதந்திரவாத, முற்போக்கு சிந்தனைகளுக்கு முகம்கொடுத்து தங்கள் சாதீய மனோபாவத்தை, சனாதனத்தை, மேட்டிமைவாதத்தை கைவிட்டு மக்களாட்சி விழுமியங்களுக்கு நகர முயன்ற ஒரு சமூகம் இப்படியான ஒரு இந்துத்துவ பாசிச அணியில் ஒன்றுபட்டு அடையாள அரசியலை முன்னெடுப்பது விபரீதமான போக்காகும். இது பார்ப்பனர்களுக்கு எந்தவிதத்திலும் நன்மை பயப்பதல்ல. பார்ப்பனீயத்தை எதிர்ப்பதில் முன் நிற்பதும், தங்கள் அடையாளத்தை அரசியல் மயப்படுத்தாமல் இருப்பதும்தான் பார்ப்பனர்களுக்கு நன்மை பயக்கும். குறுகிய கால பாசிச மயக்கம் நீண்டகால பெருந்தீங்காக மாறிவிடும்.

கட்டுரையாளர் குறிப்பு:

11a.jpg

கட்டுரையாளர் : ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்


 
Save
Share31
 

 

மருதையன்,வினவு,பின்தொடரும் நிழலின் குரல்

அன்புள்ள ஜெ

வினவு தளம் பற்றி எழுதியிருந்தீர்கள்என் பெயர் வேண்டாம்இந்தக் கடிதத்தில் உள்ள பிழைகளை எல்லாம் திருத்திக்கொள்ளுங்கள்நான் மீண்டும் இதைப்படிக்கும் மனநிலையில் இல்லை.

இந்த இடதுசாரிக் குழுக்களின் உண்மையான அரசியல் என்னநான் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவர்களிடமிருந்து விடுதலைபெற்று வெளியே வந்தவன்அதன் அன்றுமுதல் இதைத்தான் யோசித்துக்கொண்டே இருக்கிறேன்என்னைப்போலவே வெளியே வந்தவர்கள் பலர் உண்டுஅவர்களெல்லாம் இவர்கள் அயோக்கியர்கள் என்பார்கள்எனக்கு அப்படிச் சொல்லவும் தோன்றவில்லைஇவர்களை புரிந்துகொள்வது மிகவும் கடினமானது என்று தோன்றுகிறதுஆனால் புரிந்துகொள்ள ஒரு வழி உண்டுஇவர்களை நான்கு குழுக்களாகப் பிரித்துக்கொள்வதுநான்கு வெவ்வேறு வகையான மனிதர்கள் இவர்கள்.

எப்படியென்றால் இவர்களிலே முதல் வகையானவர்களை இப்படியாக அடையாளப்படுத்தலாம்குறைவான கல்வி கொண்டவர்கள்கிராமப்புறங்களில் வளர்ந்தவர்கள்மிகவும் கஷ்டப்பட்ட குடும்பம்அல்லது நடுத்தரக்குடும்பம்கொஞ்சம் படிக்கும் வழக்கமும் கொஞ்சம் நீதியுணர்ச்சியும் கொஞ்சம் அரசியல் ஆர்வமும் இருக்கும்கொஞ்சம் அப்பாவிகளாகவும் இருப்பார்கள்அந்த வயதில் எல்லாவற்றையும் உதறவேண்டும்எல்லாவற்றையும் எதிர்க்கவேண்டும்எல்லாவற்றையும் கடந்துசெல்லவேண்டும் என்றெல்லாம் கனவுகாண்பார்கள்.

இந்த இளைஞர்கள்தான் இந்த அமைப்புக்களில் பெரும்பாலானவர்கள்இவர்களெல்லாம் ஒருவகை வெகுளிகள்இவர்களுக்கு ஒரு பத்து பக்கத்துக்குள் தான் வாசிப்பறிவோ கேட்ட அறிவோ இருக்கும்ஆனால் பயங்கரமான தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள்உலகத்தையே விளக்கிவிடமுடியும் என்று நம்புவார்கள்எல்லாவற்றையும் ஏளனமாக விமர்சனம் செய்வார்கள்எதற்குமே மசியமாட்டார்கள்தர்க்கம் செய்தபடியே இருப்பார்கள்.

உண்மையில் மிகக்கொஞ்சமாக வாசித்தால் தர்க்கம்செய்வது எளிதுநமக்கு குழப்பமே இருக்காதுநம்முடைய கருத்துடன் முரண்படுபவர்களை எல்லாம் நம் எதிரிகள் என்று சொல்லவேண்டும்எதிரிகளை எதிர்க்க நமக்குச் சில கொள்கைகள் இருக்கும்சில சதிக்கோட்பாடுகள் இருக்கும்எதிரி என்ன சொன்னாலும் நாம் நமக்குத்தெரிந்த பதில்களை ஆணித்தரமாகச் சொல்லி ஓட ஓடவிரட்டலாம்இதெல்லாமே நானும் செய்தவன்தான். ஆரம்பநிலை மார்க்ஸிஸ்டுகளிடம் இருக்கும் தன்னம்பிக்கைக்குச் சமானமான தன்னம்பிக்கையை வேறெங்குமே பார்க்கமுடியாது.

இந்த தன்முனைப்புக்காகவே இதில் இருக்கிறார்கள் இந்த இளைஞர்கள்இதற்காகவே வாழ்க்கையை தொலைக்கிறார்கள்இவர்களை இந்த ஆணவத்தை வைத்துத்தான் வீழ்த்துவார்கள்தோழர் நீங்களெல்லாம் சாதாரணமாக வேலை வெட்டி குடும்பம் குட்டி என்று போனால் நாடு என்னாகிறதுசேவை படியுங்க என்று ஆரம்பித்தால் நானும் ஒரு சேசாதாரண ஆள் இல்லை என இவன் கற்பனைசெய்ய ஆரம்பிப்பான்அங்கேதான் தூண்டிலில் கடிப்பான். [இந்த உத்தி இப்படியே அச்சு அசலாக பின் தொடரும் நிழலின் குரலில் உள்ளதுவாசித்து அதிர்ச்சி ஆகிவிட்டேன்]

இன்னொரு வகையினர் உண்டுரொம்ப கிராமப்புறத்தான்கள்படிப்பு இருக்காதுஇன்னும் அப்பாவிகள்ஒன்றுமே தெரியாதுஆனால் நேர்மையானவர்கள்நல்ல நோக்கம் கொண்டவர்கள்ஊருக்கு நல்லது செய்பவர்கள்இவர்கள் ஏதேனும் பிரச்சினையில் சிக்கிக் கொள்வார்கள்அப்போது சென்று தூண்டில்போட்டு பிடித்துவிடுவார்கள்இவர்களுக்கு இவர்களை தலைவர்கள் சமானமாக நடத்தினாலே போதும் கண்கலங்கி அடிமைமாதிரி ஆகிவிடுவார்கள்

இன்னொரு கூட்டம் உண்டுஅவர்கள் அறிவுஜீவிகள்நிறையப்படிப்பார்கள்படிப்பு என்பது இவர்களுக்கு மேற்கோள்களை ஞாபகம் வைத்திருப்பதுதான்படிப்பு அதிலிருந்து வரும் அகங்காரம்அவ்வளவுதான் .இவர்களைப்பற்றித்தான் நீங்கள் சொல்கிறீர்கள்அகங்காரம்தான் முக்கியம்கொள்கை முக்கியமே கிடையாதுகொள்கையை ஐந்தாண்டுக்கு ஒருமுறை நேர்தலைகீழாக மாற்றிக்கொள்வார்கள்ஒரே கொள்கை கொண்டவராக இருந்தாலும் தன்னுடைய ஆணவத்தைச் சீண்டிவிட்டால் கொதித்துக் கிளம்பிவிடுவார்கள்வசைதான்அவதூறுதான்கொலை செய்ய தைரியம் இருக்காது

நான்காவது கூட்டம் தலைவர்கள்இவர்கள் யார் என்றே நமக்குத் தெரியாதுஇவர்களில் சிலர் பணக்காரர்கள்அதிகாரப்பதவிகளில் இருந்தவர்பா.செயப்பிரகாசம் போன்ற சாதிவெறிகொண்ட அரசாங்க உயரதிகாரியெல்லாம் இங்கே இடதுசாரிக்குழுவின் தலைவராக புனைபெயரில் இருந்திருக்கிறார்சூரியதீபன் என்றபேரில்இதெல்லாம் எந்த ஊர் பித்தலாட்டம்இதெல்லாம்கூட தெரியாததா நம்மூர் உளவுத்துறைஇந்த தலைமையை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது.

இதுதான் இங்கே இடதுசாரி அரசியல்இதிலிருந்து வெளிவருவது கஷ்டம்முதலில் நாம் ஒன்றும் பெரிய புரட்சியாளர்கள் இல்லை என்று நாமே நினைக்கவேண்டும்முதல்கஷ்டமே அதுதான்அப்படி நினைத்து வெளியே வந்துவிட்டால் தப்பினோம்அதன்பிறகு நினைத்து நினைத்து சிரிக்கவேண்டியதுதான்ஸ்கூல் டிராமாவில் நடித்ததுபோல இருக்கும்ஆனால் நாலைந்து வருஷங்கள் ஓடிச்சென்றிருக்கும்நானெல்லாம் தப்பியவன்நல்லவேளை படிப்பை முடித்தேன்ஆகவே பட்டினி இல்லாமல் வாழ்கிறேன்.



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

பா. செயப்பிரகாசம் மீது வழக்கு: ஜெயமோகன் அறிவிப்பு

பா. செயப்பிரகாசம் மீது வழக்கு: ஜெயமோகன் அறிவிப்பு

எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் மீது வழக்குத் தொடுக்க இருப்பதாக எழுத்தாளர் ஜெயமோகன் இன்று (ஜூன் 9) அறிவித்திருக்கிறார்.

கடந்த மே 29ஆம் தேதி ஜெயமோகனின் வலைதளத்தில் வாசகர் கடிதம் என்ற பகுதியில், பெயர் குறிப்பிடாமல் 'ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்' என்ற தலைப்பில் ஒரு கடிதம் வெளியானது. அதில், இடதுசாரிகள் குறித்த முன்னாள் இடதுசாரியின் பார்வையும், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் மீதான விமர்சனமும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஜெயமோகனுக்கு பலரும் பதிலளித்து தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர். பா. செயப்பிரகாசமும் காட்டமாக பதிலளித்திருந்தார். இந்நிலையில்,

ஜெயமோகன் இன்று தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“இணையத்தில் செயப்பிரகாசம் அவர்கள் என் மேல் அவதூறும் வசையும் பொழிந்து எழுதியிருக்கும் பக்கங்களை நகல் எடுத்துவிட்டோம். அவருக்கு ஆதரவாக ஒரு கண்டன அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. இது அச்சு ஊடகங்களுக்கும் அனுப்பப் பட்டுள்ளது. நேரடியான கீழ்த்தரமான அவதூறு என்பது அந்தக் கண்டன அறிக்கையில் உள்ள என்னைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் வரிகள்தான். ஒரு கும்பல் கூடி ஓர் எழுத்தாளனைப் பற்றி என்னவேண்டுமென்றாலும் சொல்லி பத்திரிகைகளுக்கு அனுப்பமுடியும் என்பதுதான் அவதூறுநடவடிக்கை.

என் வழக்கறிஞர் நண்பர்கள் ஈரோட்டில் கூடிப்பேசியதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. செயப்பிரகாசம் மீது அவதூறு வழக்கு தொடரப்படும். அந்தக் கண்டன அறிக்கையில் கையெழுத்திட்டவர்களில் முக்கியமான அனைவர் மீதும் தனித்தனியாக அவதூறு வழக்குகள் தொடரப்படும். குறிப்பாக அரசுப்பணியில் இருப்பவர்கள் மீது அவதூறுவழக்கும் துறைரீதியான புகார்களும் அளிக்கப்படும். அவர்கள் செயப்பிரகாசம் வழக்கிலும் சாட்சியாக நீதிமன்றத்திற்கு அழைக்கப்படுவார்கள். அவர்களின் மொழியைக்கொண்டே வழக்கை நடத்துகிறோம்

இதைச் செய்யவேண்டிய கட்டாயம் இன்று உருவாகிவிட்டது. நான் எப்போதுமே வசைகளையும் அவதூறுகளையும் பொருட்டாக நினைத்தவன் அல்ல. யமுனா ராஜேந்திரன் போன்றவர்கள் நேரடியாகப் பெயர்சுட்டி எழுதிக்கொண்டிருக்கும் சாக்கடைப் பதிவுகளைக்கூட கருத்தில் கொண்டதில்லை.

ஏனென்றால் கருத்துச்செயல்பாட்டில் தன்னிச்சையான வெளிப்பாடு என்பது ஓர் அம்சம். நீதிமன்றத்தில் நிரூபிக்கத்தக்க கருத்துக்களையே கருத்து விவாதங்களில் சொல்லவேண்டும் என்றால் அதன்பின் கருத்துவிவாதமே இல்லை. சென்ற சில ஆண்டுகளாகவே இடதுசாரிகள் என்பவர்கள் கும்பல்கூடி இந்தப்போக்கை முன்னெடுத்து நீதிமன்றத்தை ஒரு மிரட்டல்கருவியாக மாற்றி அறிவியக்கத்தைச் சீரழித்துவருகிறார்கள்.

அமைப்புக்கு ஆதரவானவர்கள் என்று முத்திரைகுத்தப்படும் எவரும் இங்கே நீதிமன்றத்தை அணுகியதில்லை. அமைப்புக்கு எதிரான புரட்சியாளர்களாக தங்களை சொல்லிக்கொண்டு அத்தனைபேர் மீதும் அவதூறு கக்குபவர்கள்தான் அவர்கள்மேல் சிறு விமர்சனம் வந்தால்கூட நீதிமன்றத்தை அணுகிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் போக்கு தொடர்ந்தால் இங்கே எழுதும்போதே எச்சரிக்கை உணர்வு உருவாகும். கைகள் தயங்கும். அது நிகழக்கூடாது. முறையான நடவடிக்கைகளுக்கு சென்னையிலும் நண்பர்குழு ஒன்று கூடுவதாக உள்ளோம்” என்று ஜெயமோகன் அறிவித்துள்ளார்.

-வேந்தன்



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

 பா.செயப்பிரகாசம் பற்றி


 
Save
Share19
 

ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள கடிதம் இன்று வந்தது. அக்கண்டனக்கடிதம் எனக்கு இப்படித்தான் வந்து சேர்ந்தது. ஏற்கனவே முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கலையிலக்கியப் பெருமன்றம் ஆகியவை கண்டனங்கள் தெரிவித்திருப்பதை வாசித்தேன்.

தீவிர இடதுசாரி இயக்கங்களைப் பற்றிய என்னுடைய முந்தைய கட்டுரை ஒன்றுக்கு வந்த எதிர்வினை அது. நான் சிறுகதைகளை எழுதத் தொடங்கியமையால் அதை அப்போது வெளியிடவில்லை. அந்த தொடர் முடிந்ததும் கடிதம் வெளியாகியது

வழக்கம்போல கடிதத்தை வாசித்தேன் என்றாலும் இந்த வரியை கவனிக்கவில்லை. நான் பெயரில்லா கடிதங்களை வெளியிடுவதுண்டு- ஆனால் மின்னஞ்சலில் முழுமுகவரி இருக்கவேண்டும். பெயர் தேவையில்லை என்ற விண்ணப்பமும் இருக்கவேண்டும்

ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் ஒன்றை தெளிவுறுத்த விரும்புகிறேன். ஒன்று நான் மிகமிக கடுமையாக கண்டிப்பது இந்த கண்டனத்தில் பா.செயப்பிரகாசம் அவர்கள் ஒரு பொருட்படுத்தத் தக்க சிறுகதையாசிரியர் என்று சந்தடி சாக்கில் சொல்லி வைத்திருப்பதைத்தான். அதை இதில் கையெழுத்திட்டிருக்கும் எழுத்தாளர்கள் எவரேனும் ஏற்பார்கள் என்றால் அவர்கள் மேற்கொண்டு இலக்கியம் பேசாமலிருப்பதே நன்று.

அத்தனை முற்போக்கு எழுத்தாளர்களையும் அங்கிகரித்து அவர்களின் எழுத்துக்களை கவனப்படுத்திய விமர்சகனாகிய என் பார்வையில் மிகச்செயற்கையான, மிகமிக மேலோட்டமான முதிரா எழுத்துக்கள் பா.செயப்பிரகாசம் எழுதியவை. வானம்பாடிக் கவிதைகளின் கதைவடிவம் என்று சொல்லலாம்.அவர் அவ்வெழுத்துக்களுடன் இன்று சாகித்ய அக்காதமி போன்ற விருதுகளுக்கான எதிர்பார்ப்புடன் முயல்கிறார் என்று கேள்விப்படுகிறேன். இந்த கண்டனக்கடிதத்தை அதற்கான முயற்சிகளில் ஒன்றாக, அணிதிரட்டலாக பயன்படுத்துகிறார் என்றால் அது கண்டிக்கத்தக்கது.

பா.செயப்பிரகாசம் சென்ற முப்பதாண்டுகளில் தமிழ்ச்சூழலில் அரசியல் பேசுபவர்கள் பொதுவாக என்னென்ன பேசுவார்களோ அதையெல்லாம் பேசியவர், அவ்வளவுதான். பார்ப்பனிய எதிர்ப்பு ,முதலாளித்துவ எதிர்ப்பு ,அமெரிக்க எதிர்ப்பு  ,ஒட்டுமொத்தமாக அரசுஎதிர்ப்பு. ஆனால் அரசின் செய்தித்தொடர்பாளராக பணியாற்றினார்.

அந்தக் கடிதத்தில் உள்ள நேரடியான அப்பட்டமான கேள்வி இதுதான். இந்தி எதிர்ப்புப் போராட்டவீரர் என்ற அங்கீகாரத்துடன் அரசுப்பணியில் நுழைந்து மக்கள்தொடர்புத்துறையின் தலைமை அதிகாரியாக இருந்த அவர் எப்படி ஒரு தீவிர இடதுசாரிக் குழுவுக்கு தலைமை வகிக்கமுடியும் என்பது. அதிலுள்ள அபத்தம். அந்தக்குழுவில் இருந்த ஒவ்வொருவரும் காவல்துறைச் சிக்கல்கள் உட்பட பல்வேறு வகையில் சீரழிந்தபோது இவர் எப்படி பாதுகாப்பாக இருந்தார் என்பது. அந்த மோசடியைத்தான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பா.செயப்பிரகாசத்தை நான் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கவில்லை. ஒரு காலத்தில் அவர் ஒரு இடதுசாரி என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் இடதுசாரி தீவிரக்குழுக்கள் முதல் அதிமுக வரை தொடர்புகள் கொண்ட  ‘லாபியிஸ்ட்’ மட்டுமே என்ற தெளிவை பின்னர் அடைந்தேன்.அரசு உயரதிகாரியான இவரால் தலைமை தாங்கப்பட்ட பழைய  ‘நக்சலைட்’ குழுவில் சேர்ந்து வாழ்க்கையை இழந்து, போலீஸ் வழக்குகளில் சிக்கிய நண்பர்கள் சிலரின் மீள்வாழ்வுக்காக தொண்ணூறுகளில் நான் நிதிதிரட்டியிருக்கிறேன். நண்பர்களுக்குத் தெரியும். அவர்கள் வழியாக இவரையும் நன்றாகவே தெரியும்

தமிழக அரசில் மக்கள்தொடர்புத்துறை அதிகாரி என்பது முழுக்கமுழுக்க அரசியல் நியமனம். அதில் லாபியிஸ்ட் அல்லாத ஒருவர் பணிபெறமுடியுமா ? இதைக்கூட தெரியாமலிருக்கும் கள்ளம்கபடமற்றவர்களா நம்மூர் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள்? அந்த பணியே லாபியிங் செய்வதற்கான சூழலை உருவாக்கும் கடமைகொண்டது.

பா.செயப்பிரகாசம் தான் சார்ந்த சாதியக் குழுக்களுடன் நெருக்கமானவர், அரசியல் சார்ந்து அவற்றை பயன்படுத்திக்கொண்டவர் என்பது அவர்மேல் பொதுவாக அனைவருமே முன்வைக்கும் குற்றச்சாட்டு. இன்றுவரை தனிப்பேச்சுகளில் எவருமே அதை மறுத்து நான் கேட்டதில்லை. இந்த கையெழுத்தாளர் பட்டியலிலேயே சிலர் என்னிடம் சொன்னதுண்டு- இப்போது அவர்கள் மறுக்கலாம். இப்போது இந்த சர்ச்சை வந்ததனால் தெளிவாகவே சொல்கிறேன் நான் பா.செயப்பிரகாசம் பற்றிய அக்குற்றச்சாட்டை உறுதியாக  நம்புகிறேன்.

அவருடைய சாதிய  ‘லாபியிங்குக்கு’ சிறந்த உதாரணம் ஜி.வி.மார்க்கண்டேயன்  [முன்னாள்  அ.தி.மு.க எம்.எல்.ஏ] என்பவரின் கண்டனம். அவருக்கு இங்கே என்ன நடந்தது என்றே தெரியவில்லை. நான் பா.செயப்பிரகாசம் பற்றி ஒன்றும் சொல்லவே இல்லை என்றுகூட தெரியவில்லை.  அவருக்கு எவரோ தகவல் சொல்லியிருக்கிறார்கள், அவ்வளவுதான். ஆனால் ஆதரவுக்கு எழுகிறார். கண்டன அறிக்கை வருகிறது.

ஒரே ஒரு வரிக்காக உடனடியாக மிரட்டலுடன் எழும் இந்த ஆதரவுப் பின்புலம் வேறெந்த தமிழ் எழுத்தாளனுக்கு இருக்கிறது? இதற்குமுன் எந்த இலக்கியச் சர்ச்சைகளில் இவ்வாறு ஒரு குரல் எழுந்தது? இப்படி ஓர் ஆதரவுப்பின்புலத்துடன் செயல்படுபவர் எப்படி இடதுசாரியாக ஆவார்?எந்தப் பின்புலத்தில் இருந்து இந்தக் குரல் எழுகிறது என்று தெரியாத அளவு கள்ளமற்றவர்களா இங்கே பேசிக்கொண்டிருக்கும் நாம்? நான் சுட்டிக்காட்டுவது மிகச்சரியாக இதை மட்டுமே.

இப்படி நம்ப எனக்கு உரிமை உண்டா? இல்லை என்றால், அது அவதூறு என்றால் ஒன்றுதான் கேட்பேன். மௌனி முதல் அசோகமித்திரன் வரை அத்தனைபேர் மேலும் நீங்கள் எல்லாம் சாதியமுத்திரை குத்தி சென்ற ஆண்டுகளில் எழுதிக் குவித்த பக்கங்களுக்கு என்ன பொருள்? எத்தனை கீழ்மைநிறைந்த குற்றச்சாட்டுக்கள், எவ்வளவு வசைகள். அது தொற்றுநோய் இல்லையா? அப்போதெல்லாம் நீங்கள் என்ன ஆரோக்கியமாகவா இருந்தீர்கள்?

இந்த கண்டனங்களில் பெரும்பாலானவற்றில் ‘புளிச்சமாவு’ என்ற சொல் இருக்கிறது. தங்களை சமூகப்போராளிகள் என்று சொல்லிக்கொள்பவர்களின் வரிகளில்கூட. நான் எவரைப்பற்றியும் இப்படி ஒரு சொல்லை பயன்படுத்துவதில்லை. எவர் மீதான வன்முறையிலும் இப்படி மகிழ்வதுமில்லை. இவர்களின் நாகரீக அளவுகோல்கள் இவ்வளவுதான்

இதில் கையெழுத்துபோட்டுள்ள எழுத்தாளர்கள் எதிர்காலத்திலாவது இங்குள்ள இலக்கியமேதைகள் மீது சாதியக் காழ்ப்பு முத்திரைகள் குத்தப்படும்போது இதேபோல எதிர்வினைகள் ஆற்ற அணிதிரள்வார்கள் என எதிர்பார்க்கிறேன். இதுவரை மௌனமாக இருந்தார்கள், பரவாயில்லை, இப்போது மனம்திருந்தியிருக்கலாம்.

பா.செயப்பிரகாசம் என்ற போலி இலக்கியவாதி பற்றி நான்கு பத்திகள் என்னை எழுதவைத்ததும் கிட்டத்தட்ட ஐம்பது புதிய எழுத்தாளர்களின் பெயர்களை தெரிந்துகொள்ளச் செய்ததும் மட்டுமே இந்த அறிக்கைகளின் அறுதிவெற்றி

ஜெ

 

அன்புள்ள ஜெ

உங்களுக்கு வந்திருக்கும் கண்டன அறிக்கை பெருமாள் முருகன் முகப்பித்தக்கத்திலிருந்து

 

எழுத்தாளர் பா. செயப்பிரகாசத்திற்கு எதிரான ஜெயமோகனின் அவதூறுக்கு 

அனைத்து தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்களின் கண்டன அறிக்கை.

 

தமிழின் முதுபெரும் எழுத்தாளர்  பா. செயப்பிரகாசம் மீது தனது இணையப் பக்கத்தில் ஜெயமோகன் செய்துள்ள துல்லியத் தாக்குதல் மிக மோசமானது, உள்நோக்கமுடையது. தமிழின் கலை இலக்கியப் பண்பாட்டுச் சூழலில் காத்திரமான பங்களிப்பு செய்துள்ள அவரை, ஒரு அநாமதேயக் கடிதம் மூலம் அவதூறு செய்யவும், சிறுமைப்படுத்தவும் ஜெயமோகன் மேற்கொண்டுள்ள இழிசெயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கரிசல் இலக்கியத்தில் வேர்பதித்து எழுத்தைத் தொடங்கினாலும், எல்லைகள் கடந்த சமதர்ம சமுதாயம் நோக்கி கிளை பரப்பியவர் பா. செயப்பிரகாசம்.  ஏறத்தாழ 135 சிறுகதைகள், பள்ளிக்கூடம், மணல் என்னும்  இரு நாவல்கள், மூன்று குறு நாவல்கள், இரு கவிதைத் தொகுப்புகள், பதினான்கு கட்டுரை நூல்கள், இலக்கிய, சமுதாய அரங்குகளில் உரைகள் எனத் தொடர்ந்து இயங்கி வருகிறவர்.   சமீபத்திய‌ அவருடைய மணல் நாவல் வரை அவருடைய எந்த ஒரு எழுத்தும், உரையும்  செயல்பாடுகளும் சாதிய உணர்வைத் தூண்டியதாக சின்னனஞ்சிறு கறுப்புப் புள்ளி அடையாளமும் கொண்டதில்லை;  ஆனால் சாதிக்கொடுமைகளைச் சாடிய அவருடைய    எழுத்துகள் கணக்கற்றவை. அவருடைய பள்ளிக்கூடம், மணல் ஆகிய இருநாவல்களுக்கும் சாதியத்தை எதிர்த்த    அடிநாதம்தான் பேசுபொருள்.  பொருளியல், வாழ்வியல்  ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுத்தும் சிறுமைகள் பேசும் அவருடைய கதைகளின் ஆற்றலை எந்த ஒரு தேர்ந்த வாசகனும் உணர்ந்து கொள்ளமுடியும். அவர் தனது எழுத்துகளை என்றும் வணிகமாக்கியதில்லை.

1965- இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில்  மாணவப் போராளியாய் முன்னின்று, தமிழகம் முழுமையும் போராட்டத்தை எடுத்துச் சென்றதால்,  இந்திய தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிருந்த பத்து மாணவர் தலைவர்களில் ஒருவர். தமிழ்த் தேசியம், ஈழம், மார்கசீயம், பெரியாரியம், அம்பேத்காரியம்   குறித்த எழுத்துகளில்  சமரசம் இல்லாப் போராளி.  இலக்கியம்,  களப்போராட்டம் எனத் தொடர்ந்து  பல தளங்களிலும் இயங்கி வருபவர். இப்படிப்பட்ட தமிழ் ஆளுமை மீது ஜெயமோகன் கோபப்படுவதும், பழி தூற்றுவதும் நமக்கு ஒன்றும் ஆச்சரியம் அளிக்கவில்லை. தொடர்ந்த தனது  பேச்சுகளின் மூலமாக, எழுத்துகளின் மூலமாக சர்ச்சைகளை உருவாக்கி, தமிழ் அறிவுச்சூழலில்    தான் ஒரு பேசுபொருளாக  இருக்கவேண்டும் என்ற முனைப்பில் தனது பிம்பத்தைக் கட்டமைத்துக் கொண்டு வருகிறவர் ஜெயமோகன்.

தமிழ் அறிவுச்சூழலுக்கு மிகவும் அபாயகரமானது இந்தத் தொற்று நோய், இந்தப் போக்கு   என்னும் ஒட்டுவாரொட்டி நோய் தமிழ் இலக்கிய, அறிவுச் சூழலில்   கேடு பயப்பதும் கூட‌. ஜெயமோகனின்  சமதர்மச் சிந்தனை எதிர்க்குரல்,  மார்க்சிய எதிர்ப்பு என்பது நாம் அறிந்த ஒன்று. அதற்கான எதிர்வினையைப்  பல்வேறு தளங்களில் மிக அமைதியாக ஆற்றி வருகிறோம். எந்த ஆதாரங்களுமில்லாது, ஒரு அநாமதேயம் எழுதியதாக தனிநபர்   மீதான வன்மம், அவதூறு  என்பவை நாம் அனைவரும் ஒன்று  சேர்ந்து கண்டனம் செய்யப்படவேண்டிய ஒன்று.   அது  சமூக அக்கறையுள்ள கலை, இலக்கிய, அறிவுச் சூழல், இடதுசாரிச் சிந்தனைகள்,  இயக்கங்கள், எழுத்துகள், செயற்பாடுகள் அனைத்தின் மீதான அவதூறு என்பதால்      ஜெயமோகனுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்.

கண்டன அறிக்கைக்கு ஒப்புதல் தெரிவித்திருக்கும் எழுத்தாள‌ர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் :

 

எஸ்.வி. ராஜதுரை, எழுத்தாளர்

பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன்

தோழர் தியாகு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

இரவிக்குமார்,எழுத்தாளர், நாடாளுமன்ற உறுப்பினர்,

ச. தமிழ்ச்செல்வன், கௌரவத் தலைவர், த.மு.எ.க.ச.

ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர், த.மு.எ.க.ச

சு.ராமச்சந்திரன், மாநிலப்  பொருளாளர்,  த.மு.எ.க.ச.

சி.சொக்கலிங்கம், மாநிலத் தலைவர், க.இ.பெருமன்றம்,

இரா. காமராசு, பொதுச்செயலாளர், . க.இ. பெருமன்றம்

ப.பா.ரமணி, மாநிலப் பொருளாளர், க.இ. பெருமன்றம்

எல்லை சிவகுமார், க.இ.பெருமன்றம், புதுச்சேரி,

பேராசிரியர் வீ.அரசு

மீ. தா. பாண்டியன், தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம்

பொதியவெற்பன், எழுத்தாளர்,

கண.குறிஞ்சி, சமூகச் செயற்பாட்டாளர்,

செ.சண்முகசுந்தரம், தஞ்சை இலக்கியவட்டம்

பொ.வேல்சாமி, ஆய்வாளர், எழுத்தாளர்

பேராசிரியர் சரஸ்வதி

பேராசிசிரியர்  கல்விமணி,  சமூகச்செயற்பாட்டாளர்

பேராசிரியர் சிவகுமார்

பேராசிரியர் கோச்சடை

பேராசிரியர் க. பஞ்சாங்கம்

பேராசிரியர் பிரேம்

பேராசிரியர் பா. மதிவாணன்

பேராசிரியர் அரச முருகுபாண்டியன்

பேராசிரியர் சு.மாதவன்

பேராசிரியர் பி. பாலசுப்பிரமணியம்

யமுனா ராஜேந்திரன், விமர்சகர், எழுத்தாளர்

கண்ணன், காலச்சுவடு பதிப்பகம்

சைலஜா, வம்சி பதிப்பகம், எழுத்தாளர்

மு.வேடியப்பன்,டிஸ்கவரி புக் பேலஸ்,

பிரளயன், நாடகவியலாளர்

பேரா.பார்த்திப ராஜா, நாடகவியலாளர்

பெருமாள் முருகன், எழுத்தாளர்

நா. விச்வநாதன், எழுத்தாளர்

ஆயிஷா நடராஜன், எழுத்தாளர்

பசு. கவுதமன், எழுத்தாளர்

அமரந்தா, எழுத்தாளர்

சுகுமாரன், ஆசிரியர், காலச்சுவடு

களந்தை பீர்முகமது, இணை ஆசிரியர், காலச்சுவடு,

வி.முத்தையா, ஆசிரியர், காக்கைச் சிறகினிலே,

க.சந்திரசேகரன், பொறுப்பசிரியர், காக்கைச் சிறகினிலே,

இரா.எட்வின், எழுத்தாளர், காக்கைச் சிறகினிலே,

கவிஞர் அறிவுமதி

மயிலை பாலு, ஊடகவியலாளர்

பி.என்.எஸ். பாண்டியன்,  ஊடகவியலாளர்

மகேஷ், ஊடகவியலாளர்

மு.பாலசுப்ரமணியம், துணைத்தலைவர்,

புதுவைத் தமிழ்ச் சங்கம்.

அழகியபெரியவன், எழுத்தாளர்

அன்பாதவன், எழுத்தாளர்

எஸ்.வி.வேணுகோபால்,  சமூகச் செயற்பாட்டாளர்,

பி.எஸ். அஜிதா, வழக்குரைஞர்

வாசுகி பெரியார், சமூகச் செயற்பாட்டாளர்,

கவிஞர் மாலதிமைத்ரி

கவிஞர் சுகிர்தராணி,

கவின்மலர், எழுத்தாளர்

திருமிகு. மணிமொழி, எழுத்தாளர், வழக்குரைஞர்

ம. ஆ. சிநேகா, வழக்குரைஞர், சமூகச் செயற்பாட்டாளர்

நவீனா, எழுத்தாளர்

ஜமாலன், எழுத்தாளர்

புஷ்பராணி, எழுத்தாளர்

இரா. முருகவேள், எழுத்தாளர்,

லஷ்மி சரவணக்குமார், எழுத்தாளர்

அப்பணசாமி, எழுத்தாளர்

இரா. மோகன்ராஜன், எழுத்தாளர்

பாட்டாளி, எழுத்தாளர்

சுதீர் செந்தில், ஆசிரியர் உயிர் எழுத்து

முகுந்தன் கந்தையா, எழுத்தாளர், பாரீஸ்,பிரான்ஸ்,

சண். தவராஜா, எழுத்தாளர், சுவிட்சர்லாந்து,

குணா கவியழகன், எழுத்தாளர்,நெதர்லேந்து,

ரூபன் சிவராஜா, எழுத்தாளர், நோர்வே

கலா மோகன், எழுத்தாளர், பாரீஸ்,பிரான்ஸ்,

கார்வண்ணன், எழுத்தாளர், பாரீஸ், பிரான்ஸ்,

ச. மிக்கேல்தாஸ்,

தென்மோடிக்  கூத்துக் கலைஞர்,கனடா,

ச.ஜெயராஜா, தென்மோடிக் கூத்துக் கலைஞர், நோர்வே,

கவிஞர்இரா.தெ. முத்து, எழுத்தாளர்

நாறும்பூநாதன், எழுத்தாளர்

மணிமாறன், எழுத்தாளர்

செங்கதிர், ஆசிரியர், மானுடம் வெல்லும்

மு.பிரகாஷ், ஆசிரியர், உழைப்பவர் உலகம்,

நீலகண்டன், கருப்புப் பிரதிகள்

பாரதிநாதன், எழுத்தாளர்

புலியூர் முருகேசன், எழுத்தாளர்

தளவாய் சுந்தரம், ஊடகவியலாளர்

சுகுணா திவாகர், ஊடகவியலாளர்

மரு. ஆமினா இன்குலாப், இன்குலாப் அறக்கட்டளை

எஸ். கே. கங்கா, எழுத்தாளர்

கடங்கநேரியான், கவிஞர்

சம்சுதீன் ஹீரா, எழுத்தாளர்

எச். பீர்முகம்மது, எழுத்தாளர்

வி. உ. இளவேனில், கவிஞர்

ஏர் மகராசன், எழுத்தாளர்

கருப்பு கருணா, எழுத்தாளர்,

கருப்பு அன்பரசன், எழுத்தாளர்,

சுந்தர், பதிப்பாளர்

லஷ்மி சிவக்குமார், எழுத்தாளர்

அண்டனூர் சுரா, எழுத்தாளர்

மு.சிவகுருநாதன், கல்வியாளர்,

அகிலா கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர்

களப்பிரன், கவிஞர்

துவாரகா சாமிநாதன், கவிஞர்

முஜிபுர் ரஹ்மான், எழுத்தாளர்

துரை குணா, எழுத்தாளர்

குமரன்தாஸ், எழுத்தாளர்

புதியமாதவி சங்கரன், எழுத்தாளர்

கதிர்நம்பி, தொ.ப வாசகர் வட்டம்

வே.சங்கர்ராம் , நாடகவியலாளர்.

கவிஞர் நந்தலாலா.

திருப்பூர் குணா, பொன்னுலகம் பதிப்பகம்

உமா மோகன், எழுத்தாளர்.

 

செ.சண்முகசுந்தரம்

வழியாக.

 

பி.ராஜீவ்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard