Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறள் சமணச் சமயம் இல்லயே -பா.வீரமணி

Guru

Status: Offline
Posts: 7329
Date:
திருக்குறள் சமணச் சமயம் இல்லயே -பா.வீரமணி
Permalink  
 
திருக்குறள் சமணச் சமயம் இல்லயே -பா.வீரமணி

சிறந்த ஆய்வாளர்களுள் சிலர் திருக்குறளைச் சமணம் சார்ந்த நூலென்றும், சமணச் சிந்தனைகளே திருக்குறளில் இடம் பெற்றிருக்கின்றன வென்றும் கூறியுள்ளனர். இவர்களுள் தமிழ்த்தென்றல் திரு.வி.க, பேராசிரியர் வையாபுரி பிள்ளை மயிலை. சீனி வேங்கடசாமி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுள்ளும், திருக்குறளிலுள்ள சமணக் கருத்துகளைச் சற்று விரிவாக எழுதியவர் மயிலையாரேவர். ஆதலால் மயிலையாரின் கருத்துகளையும், சமணத்தின் சில அடிப்படைக் கொள்கைகளையும் திருக்குறளுடன் ஒப்பிட்டு நோக்குவதும் இக்கட்டுரையின் நோக்கமாகும். அவற்றைச் சுருங்க நோக்குவோம்.

‘சமணர் மட்டும் தமது அருகக் கடவுளின் திருவடியைக் கூறும்போதெல்லாம் மலர் போன்ற திருவடி என்று கூறுவது மட்டுமன்றி, மலர்மேல் நடந்த திருவடி என்றும் யாண்டும் கூறியிருக்கின்றனர். ஜைன சமய நூல்களிலிருந்து எடுத்துக்காட்டிய மேற்கோள்களால் ~மலர்மிசை ஏகினான் என்று திருவள்ளுவர் கூறியது, அருகக் கடவுளையே என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாக விளங்குகிறது.

‘அறவாழி அந்தணன் என்பவர் யார்? அவர் எந்தக் கடவுள் என்பதை ஆராய்வோம். அறக்கடவுளாகிய அந்தணன் என்று பொருள் கொள்வதைவிட தரும சக்கரத்தையுடைய அந்தணன் என்று பொருள் கொள்வது சிறப்புடையதாகத் தோன்றுகிறது. நூல்களிலே ஜைனருடைய அருகக் கடவுள் அறவாழியை உடையவர் என்று கூறப்படுகிறார். ஆகவே அறவாழி அந்தணன் என்று குறிக்கப்படுவர் ஜைனருடைய அருகக் கடவுள் எனக் கொள்ளத்தகும்”.

மயிலையாரின் இந்தக் கட்டுரை வெளிவருவதற்கு முப்பதாண்டுகளுக்கு முன்பே இலங்கைப் பெரும்புலவரான புலோலி. தில்லைநாத நாவலர், மேற்கண்ட தொடர்களைக் கொண்டு வள்ளுவரைச் சமணரெனக் கொள்வதைத் திறம்பட மறுத்துள்ளார்.

மலர்மிசையெழு தருபொருள் நியதமு முணர்பவர்”--என்று திருஞான சம்பந்த மூர்த்திகளும்,

எரி ஆய தாமரை மேலியங்கினாரும் இடைமருது மேவிய ஈசனாரே”-என்று திருநாவுக்கரசு நாயனாரும்,

போதகந்தோறும் புரிசடையானடி”  -என்று திருமூலர் திருமந்திரத்தானும்,

மனைகமலமற மலர்மிசை யெழுதரும்”--எனத் திருவாய் மொழியில் சடகோபர் கூறுதலானும்,

இம்மூர்த்திகளை யெல்லாம் விடுத்து ‘மலர்மிசை ஏகினான்” என நாயனார் அருகனைக் கூறினார் என்றால் அஞ்ஞான விருத்தியே என்க.”

மேலும் அருகனுக்கு அறவாழி வேந்தன் என்பதன்றி ~அறவாழி அந்தணன்| என்பது பெயரின்மையானும், வேந்தனுக்கும் அந்தணனுக்கும் தம்முள் வேற்றுமை பெரியதாகலானும் அறவாழிவேந்தன் என்பது தரும சக்கரத்தையுடைய அரசன் என்னும் பொருட்டாகலின் சக்ரம் வேந்தனுக்கன்றி, அந்தணனுக்கியைதல் சிறப்பின்றாகலானும், நாயனார் அறக்கடவுளெனும் உருவகப் பொருட்டாகவன்றி, அறச்சக்கரமென்னும் பொருட்டாகக் கூறாமையானும், அருகனுக்கும் அறவாழி அந்தணனுக்கும் வெகுதூரம் என்க” என்று மிக நுட்பாகத் தில்லை. நாத நாவலர் மறுக்கிறார். இம்மறுப்பின் வழி மயிலையாரின் முடிவு சரியன்று என்பதை உணரலாம்.

மற்றும் வள்ளுவர் கடவுள் வாழ்த்தில் வாலறிவன், வேண்டுதல் வேண்டாமைஇலான், தனக்குவமை இல்லாதான், எண்குணத்தான்| என்று பலவிடங்களில் இறைவனின் பண்புகளை பேசுகிறாரேயன்றி, அவனின் உருவத்தையோ, ஆயுதத்தையோ எங்கும் குறிப்பிட்டார் அல்லர். எனவே, தரும சக்கரம் உடைய அந்தணன் எனக்கொண்டு அது சமணக் கடவுளைத்தான் குறிக்குமெனவும் ‘ மலர்மிசை ஏகினான்” என்பதும் அருகனைக் குறிக்குமென்பதும் பொருந்தா என்பதே உண்மை.

திருக்குறளில் உள்ள இத்தொடர்களைக் கொண்டு வள்ளுவரின் சமயத்தை ஆய்வதைக் காட்டிலும், சமணத்தின் அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டு ஆய்வதே சிறந்தது, ஏற்றது.

சமணச் சமயம் கடவுளை ஏற்பதில்லை. உயிர்களுக்குக் கன்ம பலன்களைப் (வினைகளை) புசிக்க வைக்கக் கடவுள் தேவையில்லை என்றும், கன்மங்கள் தாமாகவே தத்தம் பலன்களைத் தரும் என்றும் சமணம் கூறுகிறது. ஆனால் வள்ளுவம் இதற்கு முற்றிலும் மாறுபட்டது. மக்கள் இறைநெறியில் நின்றால் தான் துன்பங்களையும், விளைகளையும் கடக்க முடியும் என்று அது வலியுறுத்துகிறது. உயிர்களுக்குக் கன்மங்கள் தாமாகவே (கடவுள் துணை இல்லாமல்) பலன்களை விளைவிக்கும் என்பதை வள்ளுவர் சிறிதும் ஏற்கவில்லை என்பதைக் கீழுள்ள குறட்பாக்களினால் நன்கு உணரலாம்.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்

வகுத்தான் வகுத்த வகையல்லர்

என்றும் கூறியிருப்பதால் ஊழை வகுப்பவன் இறைவன் என்பதே அவர் கருத்தாகும். வகுத்தான்| என்பது ஊழைக் குறிப்பதாயினும் ஈங்கு இறைவன் என்று பொருள் கொள்வதே ஏற்புடைத்து.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு – 4 என்றும்,
இருள்சேர் இருவினையும் சேரா – 5 என்றும்,

அறவாழி அந்தணன் தாள் சோந்தார்க் கல்லால் – 8 என்றும்,
பிறவிப் பெருங்கடல் நீத்துவர் – 10 என்றும்,

பற்றுக பற்றற்றான் பற்றினை – 350 என்றும்,

திரும்பத்திரும்ப எல்லாவற்றிற்கும் மூலமுதல்வன் இறைவன் எனறே அவர் கூறுவதால், இங்கு வகுத்தான்| என்று கூறியிருப்பதை இறைவன் என்று பொருள் கோடலே ஏற்றது. வினையை வகுத்து ஊட்டும் முதல்வன் இறைவனேயென்று வள்ளுவம் கூறுவது சமணத்துக்கு நேர்மாறானது. இறைவனை மறுக்கும் சமணம் எங்கே? இறைவனை ஏற்கும் வள்ளுவம் எங்கே? இ•து அடிப்படை மாறுபடன்றோ!

மேலும், ஊழைக் காட்டிலும் வலிமையுடையது வேறொன்று இல்லை என்றும், வினைப்பயனை யாராலும் தவிர்க்க முடியாது என்று வலியுறுத்துவது சமணம். ஆனால், வள்ளுவம் ஊழை ஏற்றுக் கொண்டாலும் அதனை உலையா உழைப்பினால் புறம் தள்ளலாம் என்பது அதன் துணிபு. இதுவும் சமணத்துக்கும் வள்ளுவத்துக்கும் அடிப்படையிலுள்ள முரணாகும். வள்ளுவர் ஊழுக்கெதிராக ஆள்வினையுடைமையை வகுத்திருப்பது இந்தியச் சிந்தனை மரபில் ஒரு புதிய அத்தியாயம் ஆகும். பெளத்தம் கூட, ஊழை வெல்ல வேண்டுமெனக் கூறியிருந்தாலும், யாமறிந்த வரையில் மனித முயற்சிக்கு (ஆள்வினைக்கு) வள்ளுவம் தந்த அழுத்தத்தை அது தரவில்லை என்பதே உண்மையாகும்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் (குறள்.619) என்றும்,

ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர் -(குறள் 620) ; என்றும்

வள்ளுவம் பெரிதும் வலியுறுத்துவது, சமணத்துக்கு முற்றிலும் மாறானது.இக்கூற்று இந்தியத் தத்துவ மரபுக்கே சிறப்புத் தருவது.

சமணத்தின் உயிர்க்கொள்கை துறவறமேயாகும்.

சமணர் என்றாலே துறவி என்றே பொருளாகும். துறவு பூண்டோரே வீடுபேறு அடைவர் என்பது சமணக் கொள்கை. சமணத்தைப் போன்று பெளத்தம் அத்துணைக் கடுமையாகத் துறவறத்தைக் கூறாவிடினும், ஆய்வாளர்கள் இரண்டு சமயங்களையும் துறவறச் சமயங்களென்றே கூறுவர். வள்ளுவம் துறவறத்தை மேற்கொள்வது உண்டு. வள்ளுவர் அனைத்துப் பகுதியினர்க்கும் அறம் கூற விழைந்தவராதலின், அவர் துறவறத்துக்கும் ஓரளவு இடம் தந்தார். எனினும் இல்லறத்தையே பரிதும் போற்றினார்.

அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற்
போஓய்ப் பெறுவது எவன் (குறள் – 46)

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் (குறள் – 159)
இன்னாச் சொல் நோற்கிற்பவர்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்டும் (குறள் – 50)

இக்குறட்பாக்களின் வழித் துறவறத்தைத் தவிர்த்து இல்லறத்தை எப்படிப் போற்றி வலியுறுத்துகிறார் என்பதை நன்கு தெளியலாம். இவையாவும் சமணத்துக்கு மாறானவையாகும்.

அறத்துப்பாலிலுள்ள 38 அதிகாரங்களில் துறவறத்துக்கு 15 அதிகாரங்களும், 22 அதிகாரங்கள் இல்லறத்தார்க்கும், ஓர் அதிகாரத்தை இரு அறத்தார்க்கும் கூறியுள்ளார். ஏனைய பொருட் பாலிலும், காமத்துப் பாலிலும் உள்ள அதிகாரங்கள் யாருக்கு உரியன என்பதைப் பற்றிக் கூறவேண்டுவதில்லை. இவற்றிலிருந்து வள்ளுவரின் சமணத்துக்கு மாறான இல்லறக் கோட்பாட்டை நன்கு உணரலாம்.

சமணம், அச்சமயத் துறவிகளுக்கு ஏழு தர்மங்களை விதித்தது.  அவர்கள் யதிதர்மம் என்றார். அவை உலோசம், திகம்பரம். நீராடாமை, தரையிற் படுத்தல் பல் தேய்க்காமை, நின்று உண்ணல், ஏக புக்தம் என்பர்.

வள்ளுவம் இவற்றிற்கு மாறானது.உலோசம் என்பது தலையிலிருந்து மயிரைக் களைவதாகும். . வள்ளுவரோ மழித்தலும் நீட்டலும் வேண்டா – 280 என்று கூறியிருப்பதால் உலோசத்தை அவர் ஏற்கவில்லை என்பதை உணரலாம்.

திகம்பரம் என்பது ஆடையின்றி இருப்பதை குறிக்கும். வள்ளுவரோ ‘ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல – 1012 என்றும் ‘உடுக்கை இழந்தவன் கைபோலும் – 788 என்றும், உடையின் இன்றியமையாமையைக் கூறுவதால் வள்ளுவர் திகம்பரத்துக்கு மாறானவர் என்பதை அறியலாம். மற்றும் அவர் புறந்தூய்மை நீரான் அமையும் – 298 என்று கூறுவதால் சமணம் கூறும் நீராடாமையை ஏற்கவில்லை என்பதை உணரலாம். மென்தோள் துயிலின் இனிது கொல் – 1191 என்று அவர் கூறுவதாலும், தரையிற் படுத்தலை எங்கும் கூறாததாலும், அதற்கு அவர் மாறானவர் என்றும் தெளியப்படும். நின்று உண்ணல், ஏக புக்தம் (ஒரு வேளை மட்டும் உண்ணல்) இவற்றை வள்ளுவர் துறவறத்திலோ, மருந்து அதிகாரத்திலோ குறிப்பிட்டார் அல்லர். . அகத்தூய்மையும், புறத்தூய்மையையும் வலியுறுத்தும் அவர், பல் தேய்க்காமையை விரும்புவாரா? மாட்டார். ‘பணிமொழி வாலெயீறு ஊறியநீர் 1121 என்ற குறட்பாவிலுனுள்ள “வாலெயிறு” என்பது தூய்மையான பற்களையே குறிக்கும். இதிலிருந்து பல்தேய்க்காமையை அவர் சிறிதும் விரும்பாதவர் என்பதை உணரலாம்.

சமணர் இரத்தன திரயத்தை முக்கியக் கோட்பாடாய் கூறுவர். இரத்தன திரயம் என்பது நன்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம் கியவையாகும். இவற்றைச் சமணர் நோக்கிலோ, இரத்தன திரயப் பொருளிலோ அவர் எங்கும் விளக்கினார் அல்லர். வள்ளுவம் கூறும் கூடாவொழுக்கம், அவா அறுத்தல், மெய்யுணர்வு கியவை இரத்தன திரயத்திற்கு வேறானவை. இரத்தன திரயத்துக்கு மாற்றாக வள்ளுவர்.

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய் -(குறள் 360)     என்பவற்றைக் குறிப்பிடுவதால் அவர் மாற்றுக் கொள்கையுடையவர் எனக் கூறலாம்.

சமணர் இன்னா செய்யாமையை, எல்லை கடந்து அதீத உணர்வில் வலியுறுத்தினர். மூக்கின்வழி காற்றை உட்கொண்டால், காற்றிலுள்ள நுண்ணுயிர்கள் அழிந்து விடும் என்பதற்காக மூக்கில் துணியைக் கொண்டு மூடிக் கொண்டனர். மரங்களைச் செதுக்குவதாலும், கொளுத்துவதாலும், மரத்திலுள்ள நுண்ணுயிர்கள் அழிந்துவிடும் என்பதற்காகத் தச்சுத் தொழிலை அவர்கள் தடை செய்தனர். இதனால், பூமியை உழுதால், மண்ணிலுள்ள புழு பூச்சிகள் அழிந்துவிடும் என்பதற்காக உழவுத் தெழிலில் சமணர்கள் ஈடுபடக்கூடாதென அவர்கள் விதித்தனர். மனுநீதியோ உழவுத்தொழிலை இழிந்தோர் தொழில் என்றது.

உழவுத்தொழிலை மனுநீதி மறுத்தற்கும், சமணம் மறுத்ததற்கும் வேறுபாடு உண்டு. சமூகத்தில் சமநீதி ஏற்படாமல் இருக்க மனுநீதி அதனை இகழ்ந்தது. சமணமோ, வரம்பு கடந்த இரக்கத்தை முன்னிட்டு மறுத்தது. னால், வள்ளுவமோ உலகியல் நடப்பைக் கொண்டு உழவுத் தொழிலைப் போற்றியது.

சுழற்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை (குறள் – 1031)

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர் (குறள் – 1033)

-இக்குறட்பாக்களின் மூலம் வள்ளுவம் சமணத்துடன் எத்துணை மாறானது என்பது பெறப்படும்.

மேலும், சமணம் பெண்களைத் தாழ்ந்த பிறவியாகக் கருதியது. பாவம் செய்தவரே பெண்ணாகப் பிறக்கின்றனர் என்றும் கூறியது. பெண் வீடுபேறு அடைய வேண்டுமாயின், அடுத்த பிறவியில் ஆணாகப் பிறந்தால்தான் முடியும் என்றது. இவை போன்ற கருத்துகளைச் சீவகசிந்தாமணி, வளையாபதி போன்ற சமண நூல்களிலும் காணலம். வள்ளுவம் இவற்றிற்கு முற்றிலும் மாறானது.

வள்ளுவம், பெண்களின சிறப்பை எண்ணி ‘வாழ்க்கைத் துணைநலம்” என்ற அதிகாரத்தை வகுத்து ‘பெண்ணின் பெருந்தக்க யாவுள -54 என்றும், வேறொரு அதிகாரத்திலும் ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொணடொழுகின் உண்டு -974 என்றும், மதித்துப் போற்றியது. சமணம் காமத்தை இகழ்ந்து கடிந்தது. வள்ளுவமோ, இருபத்தைந்து அதிகாரங்களை வகுத்துக் காமத்தின் இன்றியமையாமையைப் புலப்படுத்தியது. இவ்வாறு, பல்லாற்றான அடிப்படையில் சமணத்துக்கு மாறான கருத்துகளை வள்ளுவம் வலியுறுத்தியிருக்க, மயிலையார் போன்றோர் வள்ளுவத்தில் சமணக் கருத்துகளே மிகுந்து தோன்றுகின்றன. என்று கூறியிருப்பது ஏற்க முடியாததேயாகும்.

பா.வீரமணி

__________________

Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 
திருக்குறள் புத்த மதம் இல்லையே - புலவர் பா.வீரமணி

வள்ளுவம் பௌத்தமும்:
சைவர் மற்றும் வைணவரைப் போலவே, சிலர் திருக்குறளைப் பௌத்த நூலென்றும் கூறிவருகின்றனர். அதனையும் ஆய வேண்டுமன்றோ! கடவுள் வாழ்த்திலுள்ள ~மலர்மிசை| ஏகினான் - 3 - என்ற தொடரும் ~பொறி வாயில் ஐந்தவித்தான் -6- என்ற தொடரும் புத்தனையே குறிக்கும் என்பர். மற்றுஞ் சிலர் இவ்விரு தொடர்களும் சமண முனிவரான ரிஷப தேவரைக் குறிக்கும் என்பர். புத்த சமயம் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்ற காலத்தில் வள்ளுவர் திருக்குறளை யாத்திருக்கலாம்
மற்றும் ஏனைய சமயங்களைக் காட்டிலும், புத்தம் முற்போக்குச் சிந்தனையை உடையதாக இருந்தாலும், இத்தொடர்களுக்குரிய கருத்து வள்ளுவரைக் கவர்ந்திருந்தாலும் வள்ளுவர் அத்தொடர்களைப் பயன் படுத்தி -யிருக்கலாம். இத்தொடர்களைக் கொண்டு மட்டும் அந்நூலைப் பௌத்த நூலென்று கூறிவிட முடியாது.அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டுதான், ஒரு நூலை ஒரு சமயத்திற்குரிய நூலாகக் கூற முடியும். பௌத்தம் அடிப்படையில் கடவுட் கொள்கையை மறுப்பது. திருக்குறளோ அதற்கு முற்றிலும் மாறானது. வள்ளுவர் நூல் தொடக்கத்திலேயே,
அகர முதல எழுத்தெல்லாம ஆதிபகவன் முதற்றே உலகு (குறள்.1)

என்றார் அதாவது, எழுத்துகளுக்கெல்லாம் அகரம் முதன்மையாகவும் காரணமாகவும் இருத்தல் போல, கடவுள் உலகிற்கு முதன்மையாகவும் அடிப்படையாகவும் உள்ளார் என்கிறார். ஓர் அதிகாரம் முழுமையும் கடவுளின் பண்பையும், அவனை வழிபடுவதால் அடையும் பயனையும் வள்ளுவம் முனைப்புடன் அறிவுறுத்துகிறது. கடவுளைச் சிறிதும் ஏற்காத பௌத்தத்திற்கு இது முற்றிலும் மாறானது. மேலும், தொடக்கக் காலப் பௌத்தமான ஈனயானம் புலாலை மறுக்கவில்லை. தாமே ஓர் உயிரைக் கொன்று உண்ணக் கூடாதேயன்றிப் பிறர் கொன்ற விலங்கின் இறைச்சியை உண்ணலாம் என்பது அதன் கொள்கை. ஆனால் வள்ளுவமோ இதற்கு மாறானது.
அருள்ல்லது யாதெனின் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல்(குறள்.237)
கொல்லாமையே உண்மையான அருள் என்கிறார் வள்ளுவர். கொல்லுதலும், கொன்ற ஊனை, உண்ணலும் சிறுமை என்கிறார். மற்றும் தொடக்கக் காலப் பௌத்தத்தை மறுப்பது போன்றே,

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்

விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்(குறள்.256)
என்கிறார். அதாவது உயிர்க்கொலை பெருகுவதற்கே காரணம், ஊன் உண்பவர் பெருகுவதேயாகும் என்கிறார். மற்றும், புத்த சங்கத்தைப் பற்றியோ, பிக்குகளைப் பற்றியோ பிக்குணிகளைப் பற்றியோ திருக்குறளில் சிறு குறிப்பும் இல்லை. பௌத்த கொள்கைகளை மக்களிடத்துப் பரப்பச் சங்கம் மிக இன்றியமையாதது என்றார் புத்தர்.
திருக்குறளில் அது காணப்படவில்லை. பௌத்த சமயத்தின் முக்கியக் கோட்பாடுகளான (Major Principle) அட்டாங்க மார்க்கத்தைப் பற்றியும் (நன்னம்பிக்கை, நல்லூற்றம், நல்வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்சிந்தனை, நல்லொறுத்தல் எங்கும் அவர் குறிப்பிடவில்லை. இவையெல்லாம் பௌத்தத்தின் மிக அடிப்படையான கொள்கைகள். இக்கொள்கைகளை நோக்காமல், வெறும் தொடர்களைக் கொண்டு வள்ளுவத்தைப் பௌத்த நூலெனப்புகல்வது உண்மை ஆராய்ச்சியாகாது. ஈங்கு மற்றொன்றையும் நோக்கல் வேண்டும். புத்தர் தம் பிக்குகளைப் பிச்சை எடுத்தே உண்ணல் வேண்டுமென்று பணித்தார். காரணம் அவர்களுக்கு ஆசையின் பொருட்டுச் சிறிது சிறிதாகச் சொத்துச் சேர்க்கும் எண்ணம் வந்துவிடக் கூடாதென்பதற்கும், அர்பபணிப்புணர்வு குன்றிவிடும் என்பதற்கும் அவர் அவ்வாறு கூறினார். அக்கூற்று அவர் காலத்துக்கு ஏற்றதாக இருக்கலாம். ஆனால் அஃது எக்காலத்துக்கும் பொருத்துமா என்பது ஐயமே வள்ளுவர் எதனையும், எவர் கூறினாலும், அதனை ஆழ்ந்து நோக்கி, அது காலா காலத்துக்கும், பொருத்துமா என்பதை எண்ணிப் பார்த்தவர்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காணப தறிவு(குறள்:423)
என்றார் புத்தர் பிக்குகளைப் பிச்சையெடுக்கப் பணித்தார். அப்பழக்கம் அவர் காலத்துக்குப் பின் நின்றுவிட்டது. பிற்காலத்தில் பிக்குகள் ஆடம்பரத்தில் மூழ்கி,விலையுயர்ந்த பொருட்களும், இருக்கைகளும் குவியும் இடமாகச் சங்கத்தை ஆக்கிவிட்டதாகப் பௌத்த பேரறிஞர் கோசாம்பி கூறியுள்ளார்.4

பிச்சை எடுத்தல், பிக்குகளிடம் குறைந்ததற்குக் காரணம் மன்னர், செல்வர், மற்றும் மக்கள் வழங்கிய கொடைகள் குறைந்தது பெருங் காரணமாக இருந்தாலும், அடிப்படைக் காரணம், பிற்காலத்தில் மக்களின் ஆதரவு பிக்குகளுககு இல்லாமற்போனதேயாகும். இதற்குப் பல்வேறு பொருளியல் சமுக சமயக் காரணங்கள் உண்டு. அவற்றை விரிப்பின் கட்டுரை விரியும். எனினும், ஒரு முக்கியக் காரணத்தைச் சுட்டுவது ஈங்குப் பெரிதும் பொருத்தமுடைத்து. பிற்காலத்தில் பிக்குகளுக்கு மக்கள் ஆதரவு குன்றியதால் பிச்சை எடுப்பதில் மானம் குறுக்கிட்டு விட்டது. மற்றொன்றும் இங்கு குறிப்பிடத்தக்கது. மக்கள் ஆதரவு இருந்திருப்பினும், நாளடைவில் பிக்குகளுக்குப் பிச்சையெடுப்பதில் மானப்பிரச்சனை தோன்றியே இருக்கும். மக்கள் மனத்திலும், பிக்குகளின் மனத்திலும், சமுதாயச் சூழ்நிலையால், பிற்காலத்தில் பிச்சை எடுப்பதில் மாற்றம் நிகழும் என்பதைப் பௌத்த சமயத்தினர் எப்படியோ அறியத் தவறினர். மாற்றத்தை ஓர் அரிய கோட்பாடாகக் (கணபங்கவாதம் -Theory of Momentariness) கொண்ட புத்தர் இதில் எப்படியோ தவறியுள்ளார். ஆனால், வள்ளுவர் இதனைப் பல நிலையில் ஆய்ந்துள்ளாரென்று எண்ணத்தோன்றுகிறது. அதனாற்றான் அவர்,
' நல்லாறு எனினும் கொளல்தீது" - 222 என்றார்.
பிக்குகளின் பிச்சையெடுத்தலை நயத்தக்க நாகரிகத்துடன் மறுக்க வேண்டியே ~நல்லாறு| எனக் குறிப்பிட்டார். இரவு, இரவு அச்சம் ஆகிய அதிகாரங்களில் வறுமையால் பிச்சையெடுப்பதையே கூறுகிறார். ஆனால், இங்கு ~நல்லாறு எனக்குறிப்பிட்டிருப்பது பௌத்த சமயக் கோட்பாட்டையேயாகும். பொதுநத்துக்காக ஒருவன் உயிரைப் போக்கவும் துணியலாம். அஃது இயற்கையே ஆகும். காட்டாக, நம்நாட்டு விடுதலைப் போராட்டத்தின் போது, பலர் தத்தம் உயிரைத் துச்சமாகப் போக்கினர்.
பொதுநலத்துக்காக உயிரை இழக்கத் துணியும் ஒருவர் மானத்தை இழக்க ஒருப்படார்.இந்த மானப்பிரச்சனை குறுக்கிட்டதால்தான் நாளடைவில் பிக்குகளும் பிச்சை எடுத்தலை விட்டனர் எனலாம். மானப்பிரச்சனையை உளவியல் அடிப்படையிலும் நோக்கியதால்தான் அதனை வள்ளுவர் மறுத்துரைத்தார்.
அதனாற்றான் அவர்,
கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி யுறும (குறள் - 1061) என்றும்,

ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல் (குறள் - 1066) என்றும் கூறினார்.
பொருளை மறைக்காது உளம் மகிழ்ந்து ஈயுபவரிடத்தும் இரக்கக் கூடாதென்றும், மற்றும் இறக்கும் நிலையிலுள்ள ஆவைக் காப்பாற்ற வேண்டியும் இரக்கக் கூடாதென்றும் அவர் கூறுகிறார். இதிலிருந்து மானத்தை எத்துணை நுட்பமாக அவர் உணர்த்தியுள்ளார் என்பதை நன்கு உணரலாம்.

அவ்விரவான் மானந்தீராதென்னுந் துணையல்லாது அதற்கு மிகுதி கூடாமையின் வல்லதோர் முயற்சியான உயிரோம்பலே நல்லதென்பது கருத்து, 5 என்று பல்கலைக் குரிசல் பரிமேலழகர் கூறியிருப்பதும் ஈங்கு ஊன்றி ஊன்றி உன்னத்தக்கது. மெலும் ~மானம்| என்ற அதிகாரத்தை வகுத்து, ~உயிர் நீப்பர் மானம் வரின் -969 என்று அவர் உணர்த்துவதால் மானத்தை எத்துணை உயர்வாக மதித்துள்ளார் என்பதையும் தௌ;ளிதின் உணரலாம்.
மேலும், சமணமும், பௌத்தமும் துறவுக்கே முதலிடம் தந்தன. சமணத்தைப் போன்று கடுந்துறவைப் பௌத்தம் கூறாவிடினும், பௌத்தம் கூறிய துறவம் சற்றுக் கடுமையானதே. வள்ளுவரோ இவற்றிற்கு மாறானவர். அவர் கருந்துறவைப் போதிக்கவில்லை. மற்றும் துறவறத்தைக் காட்டிலும் இல்லறத்துக்கே அவர் முதலிடம் தந்தார். இதனை

ஆற்றின் ஒழுக்கி அறனிமுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து (குறள்.48) என்று வலிவாக உணர்த்துவதன் மூலம் உணரலாம்.
இதுகாறும்விளக்கியவற்றால் வள்ளுவர்,அடிப்படையான பௌத்த கோட்பாடுகளுக்கு எத்துணை மாறானவர் என்பதை நன்கு அறியலாம். 

__________________

Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 
%25E0%25AE%2589%25E0%25AE%25B0%25E0%25AF %25E0%25AE%2589%25E0%25AE%25B0%25E0%25AF %25E0%25AE%2589%25E0%25AE%25B0%25E0%25AF %25E0%25AE%2589%25E0%25AE%25B0%25E0%25AF 

__________________

Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 
 %25E0%25AE%2589%25E0%25AE%25B0%25E0%25AF %25E0%25AE%2589%25E0%25AE%25B0%25E0%25AF 

%25E0%25AE%2589%25E0%25AE%25B0%25E0%25AF  %25E0%25AE%2589%25E0%25AE%25B0%25E0%25AF

__________________

Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 
%25E0%25AE%2589%25E0%25AE%25B0%25E0%25AF %25E0%25AE%2589%25E0%25AE%25B0%25E0%25AF %25E0%25AE%2589%25E0%25AE%25B0%25E0%25AF

__________________

Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 
 I take from Madurai Kamarajar University’s Kural Peedam established by

Dr. Mu.Varadarajanar, and Peedam selected Lecturer. Selvi.Kamatchi Sinivasan, who was born in a Saivite family in Srilanka, came to India, served various collages before Joining the Kural Peedam. She had converted to Christianity also. She was of highest repute for integrity, and Peedam asked her to bring Books 

1. குறள் கூறும் சமுதாயம்

2. திருகுறளும் விவிலியமும் (Tirukural and Bible)

3. குறள் கூறும் சமயம் ( Religion of Tirukural) and One more also.

The books were published by Peetam after the death of the Author, i.e., the views represented edited by A team of Experts who made final Edition.

The Author was selected for Her Strict Integrity, being a Christian Convert- as that was the time Deivanayagam was making with the political support of DMK rule and Pavanar links that Tiruvalluvar was Christian and Tirukural is a book based on Bible. The end result was that the Author Madam lost her beliefs on Christianity on researching Bible. Now let me come to the references of Anthanar in this.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான். 30

 The author of the book analysises the Relligious situation in Tholkappiyam to and takes all references of every song in Sangam Literature, Tholkappiyam, Silapathikaram and Manimekhalai and confirms the research view.

 I QUOTE:

அந்தணர் நு¡ற்கும் அறத்திற்கும் தியாய்

நின்றது மன்னவன் கோல். 543

 அந்தணர் என்னும் சொற்கு எவ்வுயிர்கும் செந்தண்மை பூண்டொழுகுவோர் என வள்ளுவர் கூறினாராயினும் இங்கு அச்சொல் பிரமாணரைக் குறிப்பதாகக் கொள்வதெ பொருந்தும். அந்தணர் நூல் என்பதும் வேதம் முதலிய சமயனூல்களையே எனலாம். இவ்வாறே பழைய உரையாசிரியர்கள் அனைவரும் பொருள் கொண்டனர்.

அறுதொழிலோர் என சிரியர் குறிபிட்டதும் பிரமாணர்களையே யாதால் வேண்டும். ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல் ஏற்றல் என்னும் று தொழில்கள் அவர்க்குரிய என்பது சங்க காலத்தில் முன்பெ வகுக்கப்பட்டது. இவ்வாறு தொழில்கள் பதிற்றுபத்தினுள்ளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

 ஓதல் வேட்டல் அவைபிறர்ச் செய்தல்

ஈதல் ஏற்றல் என்று றுபுரிந்து ஒழுகும்

அறம் புரி அந்தணர் .. .. பதிற்றுபத்தது 24.

தொல்காப்பியரும் 

“ அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் சொல்-75 

எனப் பார்ப்பனரின் அறுதொழிலைக் குறிப்பிட்டார். வேதம் முதலிய சமயநூல்களைக் கற்பது சிறப்பாக அந்தணர் (பிரமாணர்) கடமை என அக்காலத்து நிலவிய கருத்தை வள்ளுவரும் ஏற்றுக் கொண்டார் போலும். 

ஓதுவித்தலும் அவர்கள் தொழில் கையினால் அந்தணர் அல்லாத பிறர்க்கும் 

(மன்னவர் வணிகர் குலத்தவரா?) வேதம் முதலிய நூல்களைக் கற்பித்த்வர் எனக் கருதலாம்.

 பயன் குன்றும் அறுதொழிலோர் நு¡ல்மறப்பர்

காவலன் காவான் எனின். 560

 மக்கள் வாழ்க்கையில் வேதம் முதலிய சமையநூற்கல்விக்கு இடம் உண்டு, அவை மக்கட்கு நன்மை பயப்பன என்ற கருத்து ஏற்றுக் கொள்ளப் படுவதனாலேயே அவற்றை தரிப்பது மன்னனின் கடமையாயிற்று.

காவலன் காவானெனின் அறுதொழிலோர் நு¡ல்மறப்பர் என எச்சரிக்கப் படுவதும் சமய நூல்கள் மறக்கப் படுதல் சமுதாயத்திற்கு கேடு எனக் கருதப் படுவதனாலேயே.

 மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். 134

 இக்குறள் பார்ப்பாரையும் அவர் ஓதும் வேதத்தையுமே குறிக்கிறதென்பது தெளிவு. “மறப்பினும் ஓத்துக் கொளலாகும்” (134) என்ற தொடரும் பார்ப்பான் ஓத்தை(வேதம் ஓதக்கற்றதை) மறத்தலாகாது. ஒருகால் மறப்பினும் விரைவில் திரும்ப ஓதிக் கற்றுக் கொள்ளல் வேண்டும் என்ற் கருத்தைத் தரும்  பக்கம்-194,195.

On Kural which was interpreted as Valluvar being against Vedas, the Peedam Author again confirms

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத் துண்ணாமை நன்று. 259

தீ மூட்டி செய்யப் படும் வேள்வியைக் ரிய வழிபாடு முறையையே குறிப்பிடப் படுகின்றது. தேவர்களுக்கு உணவாகத் தீயிலிடபடும் பொருளையே வடமொழியில் ஹவிஸ் என்பர், அதுவே தமிழில் “அவி” யாயிற்று, .. அவிப்பொருள்களை நெருப்பில் சொரிந்து யிரம் வேள்வி செய்வதை விட ஒன்றின் உயிர் செகுத்து அதன் ஊனை உண்ணாமை நன்று என வள்ளுவர் இங்கு கூறினார். இதனால் வேள்வி தீயது என வள்ளுவர் கருதினார் எனல் குமா? வேள்வியையும் நல்லதாகக் கருதித்தானே வேள்வி செய்தலை விடக் கொல்லாமை நன்று என்றார். .. .. ரிய வேள்விக்களத்திலுமே உயிர்க்கொலையும் விலங்குபலியும் இல்லை. பசுயாகம் எனப்படும் சில வேள்விகளில் மட்டுமே விலங்குபலியளிப்பர். நெய், பால், தானியங்கள் தானியங்களினால் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் கியவற்றை நெருப்பிலிட்டும் வேள்விகள் செய்வர் ( Author quotes this from " INDIA OF THE AGE OF THE BRAMANAS" book-iii, CHAP-2, The forms of Sacrifice- by Basu, Dr.Jogiraj.). எனவே உயிர்க் கொலையின்றி இவ்வாறு செய்யப்படும் வேள்விகள் வள்ளுவர்க்கு உடன்பாடு என்றே கொள்ளலாம். பக்கம் - 192,193.//

From Page-14 

I further add

நாம் எல்லா நூல்களை படித்து ஓதி கற்கிறோம். ஆனால் வேதங்கள் ஏட்டில் எழுத்ப்படுவது கிடையாது. இது ஏன் எனில், bce 5000 -bce 1000 இடையே எழுத்ப்பட்டவை வேத உபநிஷதங்கள். வால்மிகி இராமாயணம் bce1000, மகாபாரதம் bce 600 வாக்கில், இதன் பின் வரையப்பட்ட பாணினியின் அஷ்டாத்யாயி மேலுள்ள இதிகாசங்களை அதில் அடக்கினார், ஆனால் இதன் வரைமுறையில் வேதங்கள் இல்லை, எனவே குரு பரம்பரையாக வாய்வழியே சொல்லித்தர இவை ஓதப்படும்.

ஓதாமல் ஒத்து சொல்லி தருவதாலும் பலரும் சேர்ந்து ஒத்து இவற்றை ஓதுவதாலும் வேதங்கள் ஓத்து என்னும் அற்புதமான தமிழ்பெயர் கொண்டது.

நாட்டிற்கு மழையின்மையை விட அறுதொழிலர் நூல்-வேதங்களை மறப்பர் எனவும் வள்ளுவர் தமிழர் மேன்மைக் கூற எதற்காக இப்படி பல தேவையற்ற பொருந்தாத விளக்கங்கள்

Certainnly Casteism in Hinduism is not a Pleasant one and I quote GILBERT Slater- who gives from Maxmuller, and I Quote from Tamil Translation by PanmozhiPulavar Appadurai. 

மனுவில் குறிக்கப்பட்டு இன்று வழக்கிலுள்ள சாதி முறை வேதங்களின் மிகப் பழமையான சமயத் தத்துவங்களில் இடம் பெறுகிறதா? "இல்லை" என்ற ஒரேசொல்லில் நாம் அதை அழுத்தமாக மறுட்துவிடலாம். பெருஞ்சிக்கல் வாய்ந்த சாதி அமைப்பு முறைத் திட்டத்துக்கு வேத சூக்தங்களில் எத்தகைய தரமும் இல்லை. அது போலவே சூத்திரரின் இழிதகை நிலைமைக்கு தாரமோ; பல்வேறு வகுப்பினர் ஒருங்கே குழுமி வாழ, ஒருங்கே உண்ணப் பருகத் தடை விதிக்கும் எந்தச் சட்டமோ; பல்வேறு சாதியினர் தம்முள் ஒருவருக்கொருவர் மண உறவு கொள்வதைத் தடுக்கும் முறைமையோ; அத்தகைய மண உறவால் வரும் பிள்ளைகளுக்கு விலக்க முடியாத தீக்குறியிட்டுட் தீண்ல்த்தகாதவராக ஒதுக்கி வைக்கும் கட்டுப்பாடோ; எதுவும் அவற்றில் இல்லை. அத்துடன் சிவன், காளி கியவர்களின் அச்சந் தரும் செயல் முறைகளைப் பற்றீயோ; கண்ணனின் சிற்றின்பக் களியாட்டம் பற்றியோ; .. ... வேத்த்தில் ஒரு சுவடு கூடக் கிடையாது. கடவுளுக்குரிய மதிப்பைத் தமெதெனக் கொண்டு பழிசூழும் ஒரு குருமார் குழுவின் வீம்புரிமைகள், மனித இனத்தின் இல்லங்களை விலங்கினங்களினும் கிழாக இழிவு படுத்தும் முறை கியவற்றை தரிக்கும் எந்தச் சட்டமும் அவற்றில் இல்லை. குழந்தை மணத்திற்கு தரவோ, குழந்தை விதவைகள் மணத்தைத் தடைசெய்யவோ கணவன் பிணத்துடன் உயிருள்ள கைம்பெண்ணின் உடலையும் வைத்தெரிக்கும் பொல்லாப் பழக்கத்தை தரிவிக்கவோ அதில் ஒரு வாசகங் கூடக் கிடையாது. இவை யாவும் வேதத்தின் சொல்லுக்கும் பொருளுக்குமே மாறுபட்டவை." Quote frm Maxmuler “இந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்பு”- கில்பர்ட் சிலேட்டர், தமிழ் கா.அப்பாதுரை. பக்கம் 40,41.

Now Tholkapiyam has in depth of Varna System. It denies Education to the Fourth, Fourth cannot enter trade at any time etc., Sangam Literature names many Sub-castes even such as “ Irular, Villiar, Pallar, Vettuvar, Aayar, barathavar, maravar, kuravar etc., Sangam Lit. mentions even Many Gotras of Brahmins such as “Kasiyaba, Vathula, Aathreya, Koutinya, Kousika” etc, and as per Vedic practice calling them “Twice Born” etc.,

Bible has extensive Racism even practiced by Jesus, but that is not discussed always but ..
We have a Pratice of Telling our Problems to Religion and Missionaries have taught like that Barathiyar condemens it in his Short ARTICLE called மதிப்பு 
இந்தியாவை வெளியுலகத்தார் பாமரதேசம் என்று நினைக்கும்படி செய்த முதற் குற்றம் நம்முடையது. புறக்கருவிக ள் பல. முதலாவது, கிறிஸ்துவப் பாதிரி. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சில கிறிஸ்துவப் பாதிரிகள், தங்கள் மத விஷயமான பிரசாரத்தை உத்தேசித்து நம்மைக் குறித்துப் பெரிய பெரிய பொய்கள் சொல்லி, இப்படிட் தாழ்ந்து போய் மகட்தான அநாகரிக நிலையில் இருக்கும் ஜனங்களைக் கிறிஸ்து மடத்திலே சேர்த்து மேன்மைப்படுத்தும் புண்ணியத்டைச் செய்வதாகச் சொல்லுகிறகள். இந்துக்கள் குழந்தைகளை நதியிலே போடுகிறார்கள் என்றும், ஸ்த்ரிகளை (முக்கியமாக, அநாதைகளாய்ப் புருஷர்களை இழந்து கதியில்லாமல் இருக்கும் கைம்பெண்களை) நாய்களைப் போல நடத்துகிறர்கள் என்றும் பலவிதமான அபவாதங்கள் சொல்லுகிறார்கள். நம்முடைய ஜாதிப் பிரிவுகளிலெ இருக்கும் குற்றங்களையெல்லாம் பூதக்கண்ணாடி வைத்துக் காட்டுகிறார்கள். இந்தக் கிறிஸ்துவப் பாதிரிகளாலே நமக்கு நேர்ந்த அவமானம் அளவில்லை. Barathiyar, கட்டுரை- மதிப்பு

So Vedas which as per Panmozi Arignanar Jaggannatha Raja- in his Book “Tamilum Pragiruthamum” published by TN Govts. International Tamil Studies- dated 5000-1000BCE, has much superior Science and Maths etc., is ignored.// 
quoted from http://www.mayyam.com/talk/showthrea...-on-veda/page5

Let us value Literaure for its positives please.

__________________

Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 
 பேராசிரியர் சாமி சிதம்பரனார் மாபெரும் தமிழறிஞர். பெரியாரின் வரலாற்றை முதன் முதலில் பெரியார் உயிருடன் இருந்தபோது எழுதி, பெரியரால் சரிபார்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. அந்த அளவிற்கு பெரியாருக்கும் - அவரது இயக்கத்தோடும் தொடர்ந்த செயல்பூர்வமான தொடர்பை வைத்திருந்தவர்.

இறுதியில் பெரியாரின் திராவிட இயக்கத்தில் இருந்து வெளியேறி பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். தமிழகத்தில் இவரது வரலாறும் - இவர் எழுதிய பல புத்தகங்களும் மறைக்கப்பட்டும் - மறக்கப்பட்டும் வருகிறது. இவரது எழுத்துக்கள் மிக எளிமையானது. இலக்கியம் அறியாதவர்கள் கூட, மிக எளிமையாக இவரது எழுத்தின்பால் கவர்வர். அந்த அளவிற்கு இவரது எழுத்திற்கு வலிமையுள்ளது.

“தமிழர்களைப் பற்றித் தமிழ் இலக்கிய உண்மைகளை உணராதவர்களால் எழுதப்பட்ட வரலாறுகளே இன்று மலிந்து கிடக்கின்றன. தமிழர் வரலாற்றைப் பற்றி வெளிநாட்டினர் பலவாறு கூறுகின்றனர். பழந்தமிழ் இலக்கியங்களிலே பயிற்சியில்லாத சரித்திரக்காரர்கள் என்னென்னவோ சொல்கின்றனர். இவர்கள் கூறுவதைவிடப் பழந்தமிழ் நூல்களைக் கொண்டு தமிழர் நாகரிகத்தை ஆராய்ந்தறிவதே சிறந்த முறையாகும்.”

“தொல்காப்பியர் காலத்துத் தமிழர் வாழ்வைப்பற்றி அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். குறிப்பாகத் தமிழ்மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இதனால் பழந்தமிழர் வாழ்வைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்; பழந்தமிழர் வரலாறு, நாகரிகம் ஆகியவைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம். தமிழ் இலக்கியத்தின் சிறப்பைப் பற்றியும், வளர்ச்சியைப் பற்றியும் புரிந்துகொள்ள முடியும். இதுவே இந்நூலை எழுதியதின் நோக்கம்.”

“தமிழகத்திலே இன்று இனவெறுப்பு தலைவிரித்தாடுகிறது. மொழிவெறுப்பு முறுக்கேறி நிற்கின்றது. நாகரிக வெறுப்பு நடனமாடுகின்றது. வரலாறு, நாகரிகம், பண்பாடு என்ற பெயர்களைச் சொல்லித் தமிழ்மக்களிடையே கலகத்தீயை மூட்டிவிடுகின்றனர் சிலர். இத்தகைய வெறுப்புத்தீ அணைக்கப்பட வேண்டும். அப்போதுதான் தமிழர் முன்னேற்றமடைவர்; தமிழ்மொழி வளர்ச்சியடையும்.”

“இன்று நடப்பது விஞ்ஞான யுகம். விஞ்ஞானவளர்ச்சி காரணமாகப் பண்டைய பழக்கங்கள் சிலவற்றைத் தவறு என்று சொல்லுகின்றோம். பண்டைய மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் சிலவற்றை மூடநம்பிக்கைகள் என்று மொழிகின்றோம். விஞ்ஞான அறிவுக்கு ஒத்துவராத சில பழக்கங்களும் நம்பிக்கைகளும் பண்டைக்கால மக்களிடம் இருந்தன. நாகரிகம் பெற்ற எல்லா இனத்தினரிடமும் இவைகள் இருந்தன. தமிழர்களிடமும் இத்தகைய பழக்கங்களும், நம்பிக்கைகளும் இருந்தன என்பதில் வியப்பில்லை.”

“தமிழ் இலக்கியங்கள் நன்றாகக் கற்றவர்களுக்கு இவ்வுண்மை தெரியும். இவ்வுண்மையை உணர்ந்த புலவர்களில் கூடச் சிலர் இதை மறைக்கின்றனர். 'தமிழர்களிடம் எவ்விதமான பொருந்தாப் பழக்கமும் இருந்ததில்லை. எந்தக் குருட்டு நம்பிக்கையும் இருந்ததில்லை. இன்றைய விஞ்ஞான அறிவுபெற்ற பகுத்தறிவாளர்களைப் போலவே அன்றும் வாழ்ந்தனர். தமிழ்நாட்டிலே புகுந்த ஆரியர்கள்தாம் பொருந்தாப் பழக்கவழக்கங்களையும், குருட்டு நம்பிக்கைகளையும் தமிழர்களிடம் புகுத்தினர் ' என்று கூறுகின்றனர். இவர்கள் கூற்று வெறுப்பையே அடிப்படையாகக் கொண்டது. இவர்கள் வடமொழியில் கொண்டிருக்கும் வெறுப்பும் இதற்கொரு காரணம்.”

“ஆரியர்கள்தாம் பொருந்தாப் பழக்கவழக்கங்களையும் மூடநம்பிக்கைகளையும் தமிழரிடையே புகுத்தினர் என்பது உண்மையன்று.”

“தொல்காப்பியர் காலத்திலேயே தமிழர்களிடையே இருந்த நாகரிகம் தமிழர் நாகரிகம் என்றுதான் எண்ண வேண்டும். அந்த நாகரிகம் ஆரியருக்கும், தமிழருக்கும் ஒத்த நாகரிகமாகத்தான் காணப்படுகின்றது. தொல்காப்பியத்தில் ஆரியர் என்ற பெயரோ, திராவிடர் என்ற பெயரோ காணப்படவில்லை.”

சாமி சிதம்பரனார் மேலும் சொல்கிறார்:

“இந்தியாவின் அடிப்படை நாகரிகம் ஒன்றுதான் என்று கூறும் சரித்திராசிரியர்கள் உண்டு. 'இந்தியமக்கள் வணங்கும் தெய்வங்கள், பிறப்பு, இறப்பு பற்றிய நம்பிக்கைகள், நீதி, அநீதி இவைகளைப் பற்றிய முடிவுகள், பாவபுண்ணியம், மோட்சம், நரகம் பற்றிய கொள்கைகள் இவைகள் எல்லாம் ஒன்றாகவே இருக்கின்றன. இந்திய மக்கள் அனைவருக்கும் இவைகளைப் பற்றிய கருத்து ஒன்றுதான். இவைகள்தாம் பண்பாட்டுக்கு அடிப்படையானவை. அவரவர்கள் வாழும் இடத்தைப் பொறுத்து நடை, உடை, பாவனைகளும், மொழிகளும் வேறுபட்டிருக்கலாம். இதனால் இந்தியமக்களின் பண்பாடு வெவ்வேறு என்று சொல்லிவிட முடியாது ' என்பதே இச்சரித்திராசிரியர்களின் கொள்கை. இந்தக் கொள்கைக்குத் தொல்காப்பியம் ஆதரவளிக்கிறது.”

“இந்த நூலில் விளக்கப்படும் செய்திகள் கற்பனையோ, ஊகமோ அன்று. ஒவ்வொரு செய்தியும், தொல்காப்பியச் சூத்திரத்தின் மேற்கோளுடன் எழுதப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சூத்திரத்தின் இறுதியிலும் அச்சூத்திரத்தின் எண், அதிகாரம், இயல் ஆகியவை குறிக்கப்பட்டிருக்கின்றன.” - என்றும் முன்னுரையின் இறுதியில் அழுத்தமாய்க் குறிப்பிடுகிறார் சாமி சிதம்பரனார்.

இந்த நூலில் திராவிடஸ்தான் அரசியல்வியாதிகள் காலம்காலமாய் அப்பாவித் தமிழ்மக்களை ஏமாற்றி ஏய்ப்பதற்குச் சொல்லிவரும் பல பொய்கள் உடைத்தெறியப்பட்டுள்ளன.

1. நால்வகை வகுப்புப்பிரிவுகள் வெளிநாட்டினர் கொண்டுவந்ததல்ல என்ற உண்மையை புறத்திணை இயல்சூத்திர ஆதாரத்தைக் கொண்டு நிரூபிக்கிறார் ஆசிரியர். (பக்கம் - 55,56)
2. தொல்காப்பியர் 'அந்தணர் மறைத்தே ' என்று குறித்திருப்பதும், எட்டுவகை (கந்தருவம் உள்ளிட்ட) மணங்களைக் குறிப்பிட்டிருப்பதும் அவை (தொல்காப்பியர் சொல்லும் மறை என்பது) வடமொழி வேதங்கள்தாம் என்பதற்குப் போதுமான சான்றாகும். அவை தமிழ்வேதங்கள் என்பது பொருந்தாது. (பக்கம் - 81-84)
3. தொல்காப்பியம் கடவுளையும் வேறுபல தெய்வங்களையும் மறுக்கவில்லை. தொல்காப்பியர் கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்று துணிந்து கூறலாம். (பக்கம் - 86)
4. தொல்காப்பியர் காலத்திலே திருமால், சேயோன், வருணன், வேந்தன், கொற்றவை, சூரியன், சந்திரன், அக்கினி முதலிய தெய்வங்கள் வணங்கப்பட்டன. இன்னும் கூற்றுவன், தேவர்கள், பேய்பிசாசுகளும் இருப்பதாகவும் தமிழர்கள் நம்பினர். தெய்வ வணக்கம் தமிழ்நாட்டிலிருந்தது. தமிழர்கள் பல தெய்வங்களை வணங்கி வந்தனர் என்பதற்கு இவை போன்ற பல ஆதரவுகள் தொல்காப்பியத்திலே காணப்படுகின்றன. இவ்வழக்கம் தமிழர்களிடம் இயற்கையாகவே தோன்றியதாகும். வேறு எவராலும் புகுத்தப்பட்டதும் அன்று. போதிக்கப் பட்டதும் அன்று. (பக்கம் - பக்கம் 92,93)
5. 'பண்டைத் தமிழகத்திலே உருவ வணக்கம் இருந்ததில்லை; அது இந்நாட்டிலே குடிபுகுந்த ஆரியரால் புகுத்தப்பட்ட வழக்கம் ' என்று சிலர் சொல்லுகின்றனர். இதற்கு ஆதரவு ஒன்றுமில்லை. இது வெறுப்பைத் தூண்டும் வீணான கூற்று. உருவ வணக்கமுறை எல்லா நாடுகளிலும் இருந்தது. பழைய பைபிளைப் படிப்போர் இதைக் காணலாம். பல நாட்டு வரலாறுகளிலும் இதைக் காணலாம். தமிழ்நாட்டிலும் உருவ வணக்கமுறை தொன்றுதொட்டே ஏற்பட்டிருந்தது என்பதைத் தொல்காப்பியத்தால் அறியலாம். (பக்கம் - 94)
6. தமிழ்மொழி தொல்காப்பியத்துக்கு முன்பாகவே பிறமொழிச் சொற்களை ஏற்று வளர்ந்து வந்திருக்கிறது என்பதையும் ஆதாரத்துடன் காட்டுகிறார்: பழந்தமிழ்ச் செல்வமாகிய தொல்காப்பியத்திலேயே பல வடசொற்கள் கலந்திருப்பதைக் காணலாம். திசை, பூதம், பிண்டம், ஏது (ஹேது), பயம், மந்திரம், நிமித்தம், தாபதம், அவிப்பலி, அமரர், மங்கலம், மாயம், காரணம், கருமம், கரணம், அந்தம், அந்தரம், புதல்வன், வதுவை, பதி, மாத்திரை, படலம், அதிகாரம், வைசிகள் இவைகள் எல்லாம் வடசொற்கள் என்று கருதப்படுகின்றன. இன்னும் பல வடசொற்களும் தொல்காப்பியத்தில் பலவிடங்களில் காணப்படுகின்றன. இன்றுள்ள தமிழ்நூல்களிலே தலைமையான நூல் என்று எண்ணப்படும் தொல்காப்பியத்திலேயே இவ்வாறு வடசொற்கள் கலந்திருப்பது குறிப்பிடத்தக்கது. (பக்கம் - 130)

இறுதியாய் இன்றைய தமிழர்களுக்கு சாமி சிதம்பரனார் மிகுந்த வருத்ததுடன் கூறுவது:

“இன்று குறிக்கோளைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் அடுக்குச் சொற்களைச் சேர்த்து எழுதுவதையே இலக்கியம் என்று எண்ணுகின்றனர். மற்றொரு சாரார் மறுமலர்ச்சி இலக்கியங்கள் என்ற பெயரில் எழுதும் வெறும் காமவிகாரத்தை வளர்க்கும் கட்டுக்கதைகளே இப்பொழுது மலிந்து வருகின்றன. தமிழர் நாகரிகம், தமிழர் பண்பாடு என்று எதை எதையோ எழுதிக் குவித்து வருகின்றனர். தனித்தமிழ் அன்பர்களும், காதல் வெறியர்களும் எழுதி வெளியிடும் புத்தகங்களிலே பெரும்பாலானவை தமிழையோ, தமிழ் இலக்கியங்களையோ வளர்ப்பதற்கு வழிகாட்டவேயில்லை. இவைகளிலே பெரும்பாலான புத்தகங்கள் மொழிவெறி, சாதிவெறி, இனவெறி இவைகளையே அடிப்படையாக வைத்துக்கொண்டு எழுதப்படுவன. மக்களிடம் இன்று வேரோடியிருக்கும் இத்தகைய வெறிகள் எல்லாம் அழிந்துபட வேண்டும் என்னும் ஆர்வத்தில் எழுதப்படும் புத்தகங்கள் மிகச்சிலதான்.

இதே போன்று இவர் சிலப்பதிகாரக் காலத்து தமிழ் நாடு என்ற நுல்லையும் எழுதியுள்ளார். அதிலும் இது போன்ற கருத்துக்களை அழுத்தமாகச் சொல்லியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நூல் வெளியீடு:

தொல்காப்பியத் தமிழர் - சாமி சிதம்பரனார்,
நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை - 600 098.

__________________

Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 
1.3 திருக்குறளும் சமயமும் 

 https://www.tamilvu.org/courses/diploma/c031/c0313/html/c0313103.htm

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’, ‘யாதும்     ஊரே
யாவரும்கேளிர்’ என்பன போன்ற உயர்ந்த சிந்தனைகள்
யாரிடமிருந்து வெளிப்படும்? எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல்,
மனித நேயத்துடன் சிந்திக்கும் உயர்ந்த நோக்கம் கொண்ட,
சிறந்த     பண்பும்,     பரந்த     மனப்பான்மையும்
கொண்டவர்களிடமிருந்தே வெளிப்படும். இத்தகைய சிறந்த
சிந்தனையாளர்களின் பாரம்பரியத்தைச் சார்ந்தவர் திருவள்ளுவர்.

உலகிலுள்ள மனிதர் அனைவரையும் ஒரு குடும்பமாகக் கருதியவர்
வள்ளுவர். வேறுபாடற்ற சமுதாயத்தைக் காண விழைந்தவர்
வள்ளுவர். எனவே திருக்குறளில் அவர் கூறிய கருத்துகள்
அனைத்தும்     பொதுத்தன்மை     கொண்டவை. எல்லாச்
சமயத்தவருக்கும் பொருந்துகின்றவை. இதனால், திருக்குறளை
எல்லாச் சமயத்தவரும் போற்றுகின்றனர். சமயம், கடவுள்
முதலியன பற்றி குறளில் இடம் பெற்றிருக்கும் கருத்துகளைக்
கற்றால் இவ்வுண்மை வெளிப்படும்.

1.3.1 கடவுள் கொள்கையும் குறளும்

‘கடவுள்’ என்ற தமிழ்ச் சொல்லுக்கு எல்லாம் ‘கடந்தவர்’ (கடவு =
கடத்தல்) என்று பொருள் கூறுவர். எல்லாம் கடந்தவர் என்றால்,
பற்று, பாசம் முதலிய எல்லாவற்றையும் கடந்த ஒரு நிலை.
இதைத் திருக்குறள் ‘பற்றற்றார்’ என்று குறிப்பிடுகிறது. யாரை
வழிபாடு செய்ய வேண்டும்? என்று கேட்பார்க்கு, பற்றை
முற்றிலும் விட்டு விடுகின்ற, பற்று இல்லாதவர்களை வணங்குங்கள் என்கிறதுதிருக்குறள்.

பற்றுக பற்றுஅற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

c03131au.gif
(குறள்:350)

(அற்றான் = இல்லான்)

இந்த உலகிலுள்ள பற்றிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வதற்கு
உரிய ஒரே வழி, எந்தப் பற்றும் இல்லாதவனாகிய இறைவனைப்
பற்றவேண்டும் என்பதே.

• பற்று

இந்தக்     குறளில் ‘பற்று     அற்றான்’ என்ற சொல்
கையாளப்பட்டுள்ளது. இது யாரைச் சுட்டும்? கடவுளைச் சுட்டும்.
எவ்வாறு? உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் ஏதாவது
ஒன்றின் மீது பற்றுக் கொண்டிருக்கும். இல்லற வாழ்க்கையைத்
துறந்து வாழும் துறவிக்குக் கூட, துறவறத்தின் மீது ஒரு பற்று
வருகிறது. எனவே எந்தவிதப் பற்றும் இல்லாத ஒருவன்
இறைவனே. அவனைப் பற்றுங்கள் - வழிபடுங்கள் என்று
குறிப்பிடுகிறது திருக்குறள்.

• பொதுமை

மேலும், கடவுளைப் பற்றி விளக்கும்போது, கடவுள் விருப்பு
வெறுப்பிற்கு    அப்பாற்பட்டவன் என்பதனையும் திருக்குறள்
குறிப்பிடுகிறது. நல்வினை, தீவினை என்ற இரண்டும் இல்லாதவன்
என்று குறிப்பிடுகிறது. இவை எல்லாம் ஒரு குறிப்பிட்ட
சமயத்திற்கு உரியனவா? இல்லையே! எந்த ஒரு சமயத்தோடும்,
அல்லது எல்லா கடவுளோடும் பொருந்தும் பொதுத்தன்மை
உடையன. இவ்வாறு எந்த ஒரு சார்பும் இல்லாமல் கடவுளைப்
பற்றிய விளக்கம் பல இடங்களில் இடம் பெற்றுள்ளன. இவை
எல்லாச் சமயத்திற்கும் பொதுவானவை. எனவே, குறள் கூறும்
‘கடவுள்’ கொள்கை, எல்லாச் சமயத்தினரும் ஏற்றுக்
கொள்ளுகின்ற ஒன்று. எனவே, திருக்குறள் ஒரு பொதுமறை
என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

• சார்பு இல்லாதது

பொதுவாகக் ‘கடவுள்’ என்பது பற்றிய கருத்துகள் திருக்குறளில்
கூறப்படுகின்றன. ஆனால் அதில் எந்தச் சமயச்சார்பும் இல்லை.

மனிதன் கல்வி கற்று அறிவைப் பெருக்கிக் கொள்கிறான்.
கல்வியும் அறிவும் எவ்வளவு வளர்ந்தாலும் மனிதன் அந்தத்
துறைகளில் முழுத்தூய்மை பெறுவது இல்லை. மனித அளவில்
மூன்று குறைகள் குறிப்பிடத்தக்கனவாக உள்ளன.

அறிவு பெருகப் பெருக அறியாமையும் நிழல்போல்
தொடருகிறது. அறிவுப் பெருகப் பெருக ஐயமும் விடாமல்
தொடருகிறது. அறிவு பெருகப் பெருக ஒன்றை வேறொன்றாகக்
கொள்ளும் மருட்சி தோன்றுகிறது. இவற்றைக் குறள், இருள்,
ஐயம், மருள், என்று குறிப்பிடுகிறது. எனவே, இருள், ஐயம்,
மருள் ஆகிய மூன்றும் நீங்கிய ஒருவன் இறைவன். அவன்
‘வாலறிவன்’ என்று சுட்டப்படுகிறது.

இவ்வாறு எந்த ஒரு சார்பும் இல்லாமல், கடவுளைப் பற்றிய
விளக்கம் குறளில் பல இடங்களில் இடம் பெற்றுள்ளன.

1.3.2 இம்மையில் வீடுபேறு

சமய ஞானிகள், இந்த உலகம் துன்பம் நிறைந்தது. இது நிலை
இல்லாதது, பொய்யானது, மாயமானது என்று கூறுவார்கள்.
துன்பம் இல்லாத, இன்பம் நிறைந்த, சொர்க்கமே
நிலையானது, உண்மையானது என்பர். எனவே உலக வாழ்வில்
எந்தவிதப் பற்றும் இல்லாமல் இருக்கவேண்டும் என்பர்.

ஆனால் திருவள்ளுவர், இந்த உலக வாழ்க்கையைக் கண்டு
அஞ்ச வேண்டாம். இங்கு இன்பம் உண்டு. அமைதி உண்டு
என்று கூறுகிறார். நல்ல நெறியை - நல்ல ஒழுக்கத்தைப்
பின்பற்றினால், துன்பம் இல்லை. வாழ்வில் முழுமை கிடைக்கும்.
வீடுபேறு எனும் சொர்க்க இன்பம் இங்கேயே கிடைக்கும்.
இவ்வுலகிலேயே இறைவனை அடைய வழி செய்யும் இந்தக்
கருத்துகளைக் கீழே குறிப்பிடும், குறள் வெளிப்படுத்துகிறது.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்

c03131au.gif
(குறள்:50)

‘வையம்’ என்றால் இந்த உலகம், ‘வாழ்வாங்கு’ என்பதற்கு
வாழவேண்டிய நல்ல வழியில் வாழ்வது என்பது பொருள். ‘வான்’
என்றால் வீடுபேறு அல்லது சொர்க்கம். ‘உறைதல்’ என்றால்
தங்குதல் என்று பொருள்.

இந்த உலகத்தில், வாழவேண்டிய முறையில் ஒழுக்கமாக
வாழ்ந்தால், மேல் உலகம் எனும் வீடுபேற்றில் எத்தகைய
சிறப்பு, இன்பம் முதலியன கிடைக்கும் என்று நம்புகிறோமோ
அவை இந்த உலகத்திலேயே கிடைக்கும். எனவே இந்த உலக
வாழ்வை வெறுக்காதீர். இந்த உலகிலும் பற்றுக் கொள்ளுங்கள்
என்று கூறுகிறார் வள்ளுவர். இவ்வாறு சமயவாதிகளுக்கும்
மாறுபட்ட கருத்தை வழங்குகிறார் வள்ளுவர்.

__________________

Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தா றோம்பல் தலை' - குறள் 43.

தென்புலத்தார் என்பவர் காலம்சென்ற முன்னோர்கள் என்று பொருள் படும், தெய்வம், விருந்தினர், சுற்றம், தன்னுடைய குடும்பம் இவை அனைத்தையும் புறப்பது ஒரு மனிதனின் தலையாய கடமையாகும் என்று திருக்குறள் கூறுகிறது. இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்தல், தர்ப்பணம் செய்தல் போன்றவற்றை வேறு எந்த மதம் சொல்கிறது என்று கூறினால் உதவியாய் இருக்கும். எந்த லட்சணத்தில் திருக்குறள் சமண நூல் என்று கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. பித்ருக்கள் தென் திசையில் உறைவதாக ஐதீகம் தென்புலத்தார் என்று அதனால் தான் அவர்கள் அழைக்கப்படுகிறார்கள் இதை பல சங்க பாடல்களும் சொல்கின்றன. சமணத்தில் ஏது பித்ரு தர்ப்பணம். ' அதிதி தேவோ பவ' என்கிற தைத்ரிய உபநிஷத்தில் வரும் ஸ்லோகத்தை தான் விருந்தினரை ஓம்புதல் என்கிற முதன்மையான ஐந்து செயல்கள் என்று திருக்குறள் கூறுகிறது.

'ஆவும் ஆன் இயல் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடையீரும் பேணித்
தென் புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும்
எம் அம்பு கடி விடுதும் நும் அரண் சேர்மின் ' -புறம் 9, பாடியவர் நெட்டிமையார், பாடப்பட்டோன் பல்யாக சாலை முதுகுடுமி பெருவழுதி.

பசுக்களும், பசு அனைய பார்ப்பனர்களும் , பெண்களும், நோய்வாய்பட்டவர்களும், தென்புலம் சேர்ந்த முன்னோர்களுக்கு பித்ருக்கடன் செய்ய பிள்ளைகள் பெறாதவர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விடுக நான் அம்பு செலுத்த போகிறேன் என்கிற அடிப்படையில் அமைந்த சங்க பாடல், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. ஆக தென்புலத்தார் என்பவர் வைதீகத்தில் குறிப்பிடப்படும் பித்ருலோகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெளிவு இந்த முன்னோர்களை புரக்க வேண்டிய குறிப்பு அவர்களுக்கான நீத்தார் கடன்களை செய்ய வேண்டிய கடமை ஆகியவற்றை இந்த குறள் தெளிவுபட சொல்கிறது. அதோடு தெய்வத்திற்கு செய்யவேண்டிய பூஜை புனஸ்கரங்களை தெளிவாக செய்யவேண்டும் என்றும் இந்த குறள் கூறுகிறது. இது எந்த சமண மார்க்கத்தில் இருக்கிறது என்று தெரியவில்லை.

'அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்'. - குறள் 167

மனத்தின்கண் மாசு உடையவனை விட்டு திருமகளான லட்சுமி நீங்கி விடுவாள் அவளுக்கு பதில் அவளின் தமக்கையான மூதேவி பற்றிக்கொள்ளுவாள் என்கிறது இந்த குறள். சமணத்தில் ஏது ஸ்ரீதேவி மூதேவி எல்லாம் இன்று லட்சுமி பூஜை மேற்கொள்ளும் சமண வணிகர் கூட அதை ஹிந்து மதத்தில் இருந்தே பெற்றுக்கொண்டிருக்கிறார்கள் அதுவும் சமீப காலங்களில் தான். பிறப்பு இறப்பு மீண்டும் பிறப்பு என்கிற இந்த சுழற்சி பாரதத்தில் தோன்றிய அனைத்து சமயங்களுக்கும் பொதுவாக இருந்தாலும் செயலூக்கம், பக்தி, சேவை போன்றவற்றால் அந்த தலையை அறுக்க முடியும் என்று இந்து மதம் தான் சொல்கிறது அதை குறள் தெளிவாகவே காட்டி விடுகிறது. வேறு எதையாவது வேறு சமயத்திலிருந்து எடுத்துக்கொண்டதா என்றால் மேலோர் கீழோர் என்கிற சமூக அடிப்படையில் அமைந்த பாகுபாட்டை வேண்டுமானால் சமணத்திலிருந்து திருக்குறள் கைக்கொண்டது என்று கூறலாம்.

 'ஊழில் பெருவலி யாவுள' என்று பேசுவது ஆசீவக கருத்து என்று சொன்னால்.
'தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.' என்பது நேர்மறையாக அல்லவா சொல்கிறது அது ஆசீவக கருத்து அல்லவே. தெய்வத்தால் அனைத்தும் முடியும் அத்தகைய வல்லமை படைத்த தெய்வத்த
ால் முடியவில்லை என்றாலும் கூட முயற்சி திருவினையாக்கும் என்று தானே வருகிறது இது அசீவகத்தை சேர்ந்தது இல்லையே. நான் ஆராய்ச்சியாளன் அல்ல எனக்கு மனதிற் பட்டதை தெரிவிக்கிறேன் உங்களை போன்ற ஆராய்ச்சியாளர்கள் அதை முன்னெடுத்தால் மகிழ்ச்சியே.

உலகை உருவாக்கிய இறைவன் பிச்சை எடுத்து தான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்கிற நிலையை ஏற்படுத்தியிருந்தால் அவனும் பிச்சை எடுத்து வாழட்டும் என்கிற கருத்து சமணமோ ஆசீவகமோ அல்ல உலகை இறைவன் படைத்தான் அதை காக்கிறான் என்கிற கருத்துரு அவர்களுக்கு கிடையா.

பசுவிற்கு நீர்வேண்டும் என்று கேட்டாலும் கூட ஒருவரிடம் இரப்பது இழிந்து தான் என்று கூறுகிறார். எனக்கு அல்ல என்னிலும் உயர்ந்த பசுவிற்கு என்னும் போது அவர் பசுவின் மதிப்பை தெளிவாகவே பேசுகிறார் இது நேரடியான அன்றைய ஹிந்து சமய கருத்துக்களை கொண்ட நூல் தான்

 "ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின்." மன்னன் தன் கடமையை மறந்தான் என்றால் பசுக்கள் பால் தராது அறுதொழிலான வேதம் ஓதுதல் ஓதுவித்தல், யாகம் செய்தல் செய்வித்தல், தானம் வழங்குதல் ஏற்றல் என்கிறவற்றை கொண்ட அந்தணர்கள் தங்கள் வேதத்தையும் 
சாஸ்திர நூல்களையும் மறந்து விடுவர் இது எந்த கருத்து. திருக்குறளை இன்னது என்று ஒரு குடுவையில் அடைக்க முடியாது அது தன்னிலும் மாறுபட்ட கருத்துக்களை சொல்லும் ஒரு தொகைநூல் தான்.

ஆவும் ஆன் இயல் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடையீரும் பேணித்
தென் புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும்
எம் அம்பு கடி விடுதும் நும் அரண் சேர்மின் ' -புறம் 9, பாடியவர் நெட்டிமையார், பாடப்பட்டோன் பல்யாக சாலை முதுகுடுமி பெருவழுதி.

பசுக்களும், பசு அனைய பார்ப்பனர்களும் , பெண்களும், நோய்வாய்பட்டவர்களும், தென்புலம் சேர்ந்த முன்னோர்களுக்கு பித்ருக்கடன் செய்ய பிள்ளைகள் பெறாதவர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விடுக நான் அம்பு செலுத்த போகிறேன் என்கிற அடிப்படையில் அமைந்த சங்க பாடல், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. ஆக தென்புலத்தார் என்பவர் வைதீகத்தில் குறிப்பிடப்படும் பித்ருலோகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெளிவு இந்த முன்னோர்களை புரக்க வேண்டிய குறிப்பு அவர்களுக்கான நீத்தார் கடன்களை செய்ய வேண்டிய கடமை ஆகியவற்றை இந்த குறள் தெளிவுபட சொல்கிறது. அதோடு தெய்வத்திற்கு செய்யவேண்டிய பூஜை புனஸ்கரங்களை தெளிவாக செய்யவேண்டும் என்றும் இந்த குறள் கூறுகிறது. இது எந்த சமண மார்க்கத்தில் இருக்கிறது என்று தெரியவில்லை.

__________________

Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 
 3இடங்களில் வள்ளுவர் தம் திகைப்பை வெளிப்படுத்தியுள்ளார். இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்;அறத்தாறிதுவென வேண்டா சிவி கை பொறுத்தா னோ

பொறுத்தானோடூர்ந்தானிடை;அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப்படும்-போட்டுமுடிக்கப் பட்ட பாதையில் பயணம் செய்பவராக இல்லாமல் பாதையைச் செப்பனிடவும் மாற்றியமைக்கவும் செய்ததோடு நான் சொல்கிறேன் என்பதால் நம்பிவிட வேண்டாம்;நீயாக யோசித்துப் புரிந்து கொள்ளமுயல் என்றும்(புத்தர் சொன்னதைப் போல்) சொல்ல வருகிறார் போலும்

 திருக்குறள் பொதுவான வாழ்க்கையை பற்றி பேசுகிறது பக்தி அல்ல அதை விட நாலடியார் அவர்களுக்கு ஏற்றது அதில் தெய்வம் தேவர்கள் எல்லாம் இல்லை. ஆனாலும் பெரும் பகுதி கள்ளுண்ணாமை, புலால் மறுப்பு, கற்பு என்ற அடிப்படையில் பெண்களை கணவனுக்கு அடிமைப்படுத்துவது, பிறப்பின் அடிப்படையில் அமைந்த சிறப்பை பற்றி பேசுவது ஆகியவை திராவிட கருத்துக்களுக்கு ஏற்றது அல்ல.

குறள் ஒரு நீதிநூல், அது துதி நூலன்று. பெரிதாகக் கடவுளைக் கொண்டாட இடமில்லை.

'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்' என்பதே திருக்குறளின் இறைசிறப்பை விளக்க போதுமானது.
'தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.' தாமரை கண்ணனான திருமாலின் வைகுண்டத்தை விட என் காதலியின் மென்தோள்கள் இனிது என்கிறார் சிறந்த ஒன்றை இன்னோன்றுடன் ஒப்பிடுவது, இதை விட தாழ்ந்தது வேண்டாம் என்று வேறொன்றை ஒப்பிடுவதுமே குறளின் மொழி.

__________________

Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 
நீதி, தர்மம், திருவள்ளுவர், சமணம்

பிப்ரவரி 7, 2008 திண்ணை இதழில் ஜெயமோகன் எழுதியிருக்கும் “நீதியும் நாட்டார் விவேகமும் ....“ என்ற கட்டுரை குறித்து சில விமரிசனங்கள்.

// ஜெ.மோ: இவற்றில் உச்சம் திருவள்ளுவர் என்றும் சமண மரபில் ஆச்சாரிய குந்தகுந்தர் என்றும் குறிப்பிடப்படும் சமண முனிவரால் எழுதப்பட்ட 'திருக்குறள்' //

திருவள்ளுவரின் சமயப் பார்வை பற்றிய ஆய்வுகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அவர் சைவம், வைணவம் இவற்றை உள்ளடக்கிய (இன்று இந்துமதம் என்றழைக்கப் படும்) வேத சமயத்தினர், சமணர் அல்லது பௌத்தர் ஆகிய மூன்று தரப்பிற்கும் பல்வேறு வலுவான ஆதாரங்கள் வைக்கப் படுகின்றன. இந்நிலையில் முடிந்த முடிபாக இவ்வாறு ஜெயமோகன் எழுதியிருப்பது சரியானதன்று. சமண மறுமலர்ச்சி பற்றி முழங்கும் தருண் சாகர் போன்ற ஜைன ஆசாரியர்கள் தான் தங்கள் பிரசார மேடைகளில் எல்லாம் “குந்தகுந்தர் தான் திருவள்ளுவர்” என்று பேசி வருகிறார்கள். சமீப காலங்களில் இந்த rhetoric அதிகமாகியுள்ளது என்பதும் புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால் ஆய்வு நோக்குள்ள ஒரு எழுத்தாளரின் இத்தகைய நிலைப்பாடு வியப்பூட்டுகிறது.

நீதி என்ற கருத்தியல் அடிப்படையை மட்டுமே கொண்டு திருவள்ளுவரின் “சமணத்” தன்மையை ஜெயமோகன் முன்னிறுத்துவதாகத் தெரிகிறது. ஆனால் திருவள்ளுவர் கண்டிப்பாக ஏன் சமணராகவும் (பௌத்தராகவும்) இருந்திருக்கவே முடியாது, அவர் இந்து/வேத சமயத்தினராக மட்டுமே இருந்திருக்க வேண்டும் என்பதற்கான ஆதாரங்கள் கருத்தியல் மட்டுல்ல, குறள் நேரிடையாகக் குறிப்பிடும் பருப்பொருள் உண்மைகள், உவமானங்கள், கூறுபொருள்கள் இவை அனைத்தின் மூலமும் உறுதி செய்யப் படுகின்றன.

இது குறித்து யுகமாயினி என்ற இலக்கிய சிற்றிதழில் ஜாவா குமார் எழுதிய கட்டுரையை இதன் இறுதியில் பிற்சேர்க்கையாக இணைத்துள்ளேன். இந்தக் கட்டுரை இத்தகைய முக்கிய ஆதாரங்களை சுருக்கமாகத் தொட்டுக் காண்பிக்கின்றது. .

// ஜெ.மோ: சமணர்களால் உருவாக்கப்பட்ட நீதி அதுவரை இந்திய சமூகத்தில் இல்லாதிருந்த பல முக்கியமான அம்சங்களைக் கொண்டிருந்தது. ஒன்று அதற்கு மானுடமளாவிய ஒரு நோக்கு இருந்தது. அடிப்படை விழுமியங்களையாவது அனைத்துமானுடருக்கும் சமமாக வைக்க அதனால் இயன்றது. இரண்டு, வன்முறை சாராமல் மனிதனின் கருணையையும் அகச்சான்றையும் நம்பியே பேசும் நீதியை அவை முன்வைத்தன. //

நீதி என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு இட்டுச் செல்லுவது, வழிநடத்துவது என்று பொருள். அதனால் தான் நீதி நூல்கள் தத்துவ விவாதங்களாகவோ அல்லது தேடல்களாகவோ அல்லாமல் வெளிப்படையான அறவுரைகளாவும், இதைச் செய், இதைச் செய்யாதே என்று கட்டளையிடும் உபதேசங்களாகவும் உள்ளன. ஆனால், இந்த நீதியின் ஊற்றுக் கண்ணாக தர்மம் என்கிற கோட்பாடு (principle) உள்ளது. நீதிகளை (morals, ethics) உருவாக்குபவர்கள் அவற்றின் உண்மைத் தன்மையை தர்மம் என்ற உரைகல்லில் உரைத்தே உறுதி செய்ய வேண்டும். தர்மம் என்கிற மாறாத உண்மையின் கனி தான் நீதி என்பது.

இந்த தர்மம், மானுட அறம் என்கிற கோட்பாடு வேத ரிஷிகளாலேயே முதன்முதலில் எடுத்துரைக்கப் பட்டது. ரிக்வேத சம்ஹிதைகளிலேயே உலகின் மாறாத நியதி தர்மம் என்ற கருத்து உள்ளது. உபநிஷதங்கள் இதனை தங்கள் தத்துவப் பின்புலத்தில் வளர்த்தெடுக்கின்றன. உதாரணமாக, பிரகதாரண்ய உபநிஷத்தில் தர்மம் பற்றிய மிக விரிவான உரையாடல்கள் உள்ளன. பின்னர் இதிகாசங்கள் வாழ்க்கைச் சம்பவங்கள், கதைகள் மூலம் அறம் பற்றிய பல பரிமாணங்களை வெளிக் கொணர்கின்றன.

ந வை ராஜ்யம் ந ச ராஜா ஆஸீத், ந ச தண்டோ ந தாண்டிக:
தர்மேணைவ ப்ரஜா: ஸர்வே ரக்ஷந்தி ஸ்ம பரஸ்பரம்

“அரசும் இல்லை அரசனும் இல்லை; தண்டனைகளும் இல்லை, தண்டிப்பவனும் இல்லை.
மனிதர்கள் அனைவரும் தர்மத்தினாலேயே தங்களை பரஸ்பரம் பாதுகாத்துக் கொண்டனர்”

என்கிற மகாபாரத சுலோகம் குறள் கூறும் “அறம்” என்ற கருத்துடன் முழுதும் ஒன்றுபடுகிறது. “என்பிலதனை வெயில் போலக் காயுமே அன்பிலதனை அறம்” என்று வள்ளுவர் கூறுவது நீதி என்ற கருத்தாக்கத்திற்கும் அப்பாற்பட்ட உலகின் இருத்தலுக்குக் காரணமாகிய இந்த தர்மம் பற்றியே, இதனையே, “ஜகத ஸ்திதி காரணம்” (உலகின் இருத்தலுக்குக் காரணமாகிய தர்மம்) என்று சங்கரர் தன் உரையில் கூறுகிறார்.

இந்து மதம், பௌத்தம், சமணம் ஆகிய மூன்று மதங்களும் தர்மம் என்கிற இந்த அடிப்படைக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்பவை தான். அதனோடு கூட, ஒவ்வொரு மதத்தின் இறையியலிலும் இந்த சொல்லுக்கான சிறப்புப் பொருள்களும், விளக்கங்களும் அளிக்கப் படுகின்றன. அதனால் தான் இப்போது தலாய் லாமா உள்ளிட்ட பல சமயத் தலைவர்கள் இந்த மூன்று மதங்களையும் பொதுவாகக் குறிக்க கிழக்கத்திய மதங்கள் (eastern religions) என்பதற்குப் பதிலாக தர்ம மதங்கள் (Dharmic religions) என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.

எனவே சமணம் தான் மானுடம் அளாவிய அறக் கோட்பாட்டையே “உருவாக்கியது” என்பது முற்றிலும் பிழைபட்ட புரிதல்.

// பேராரசுக்குரிய நீதி எப்போதும் தண்டனைகளால் அடிக்குறிப்பிடப்பட்டது. வாளால் பரப்பபடுவது, ரத்தத்தால் நிறுவப்படுவது.
வணிகநீதி இந்திய நிலப்பகுதியில் இரு பெரும் மதங்களின் குரலாக ஒலித்தது. பௌத்தம் சமணம் இரண்டுமே அடிப்படையில் வைசியர்களின் மதங்கள். பின்னர் தொழில்செய்யும் சூத்திரர்களின் மதங்களாக அவை வளர்ந்தன. பௌத்தமும் சமணமும் வணிகத்திற்கு இன்றியமையாத அடிப்படை நெறிகளை இந்திய நிலப்பகுதி முழுக்கக் கொண்டு சென்றன. //

“தண்டோ தமயதாமஸ்மி நீதிரஸ்மி ஜிகீஷதாம்” (அடக்குபவைகளில் தண்டனையாகவும், வெற்றியை நாடுபவர்களிடத்தில் நீதியாகவும் நான் இருக்கிறேன்) என்று கீதையில் (10.38) கிருஷ்ணன் கூறுகிறார்.

வணிக நெறி என்பது அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு அரசனால் நிர்வகிக்கப் பட்ட ஒன்றாகவே இருந்ததே அன்றி அதற்கு எதிரான, மாற்றான ஒன்றாக இல்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். தங்கள் பயணங்களில் கொள்ளைக் காரர்களாலும், வழிப்பறிகளாலும் தாக்கப் பட்ட இந்திய வணிகர்கள் அவர்களை எதிர்த்துப் போராடவுமில்லை, கருணையினால் மன்னித்து விட்டுவிடவும் இல்லை. மாறாக தங்களைக் காக்க வேண்டி மன்னனிடமே சென்று முறையிட்டனர். சம்ஸ்கிருத நாடகங்களிலும், சங்க இலக்கியத்திலும் இதற்கான சான்றுகள் பல உள்ளன. சட்டமும், தண்டனைகளும் நீதியின் ஒரு முக்கியமான அங்கம் என்பதை அவர்கள் தெளிவாகவே உணர்ந்திருந்தனர்.

திருக்குறளில் வணிகம் என்று ஒரே ஒரு அதிகாரம் உள்ளது, ஆனால் மன்னனைப் பற்றியும் அரசாட்சி பற்றியும் பற்பல அதிகாரங்கள் உள்ளன. “ஒறுத்தல்” (தண்டனை) என்கிற சொல் பல இடங்களில் புழங்குகிறது - “கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ் களைகட்டதனொடு நேர்” என்பதில் உள்ளது போல.

முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப் படும்.

வானோக்கி வாழும் பயிர் என்ப மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி.

அந்தணர் நூற்கும், *அறத்திற்கும்* ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.

இப்படி மன்னனே சமுதாய நலனுக்கு அச்சாணி என்று அறுதியிடும் குறட்பாக்களை சொல்லிக் கொண்டே போகலாம். இந்த வகையில் குறள் மகாபாரதம் கூறும் அதே நீதிக் கருத்துக்களை, விவாதப் பின்புலங்கள் தவிர்த்து அவற்றின் சுருக்கமான வடிவில் வைக்கிறது என்பதே சரியான முடிவாக இருக்கும். அதன் பார்வை எந்த சமண நூலையும் விட மகாபாரதத்திற்குத் தான் மிக நெருக்கத்தில் உள்ளது.

“சொல்லக் கொடாத சுயோதனன் பின் ஏன்
கொல்லக் கொடுத்தான் குமரேசா - மெல்லவே
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்பு போல்
கொல்லப் பயன்படும் கீழ்”

என்பது குமரேச வெண்பா என்னும் நூலில் உள்ள ஒரு பாடல். முதல் இரண்டு அடிகளில் ஒரு உதாரணம், சம்பவம் அல்லது கதையையும் (இவை பெரும்பாலும் இதிகாச, புரானங்களில் இருந்தே இருக்கும்) அடுத்த இரண்டு அடிகளில் குறட்பாவின் மூல வடிவையும் கொண்டு அமைந்த நூல் இது. இதே போன்று சிவசிவ வெண்பா என்றும் ஒரு நூல் இருக்கிறது. குறட்கருத்துக்களுக்கு வாழும் உதாரணங்களாக இந்த நூலாசிரியர்கள் காட்டுவது இந்து புராணங்களையும், கதையாடல்களையும் தான், சமணத்தில் பல குறட்பாக்களுக்கு உதாரணமே கிடைத்திருக்காது.

மேலும் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று வாழ்க்கைப் பயன்களையும் (த்ரிவர்கம்) ஒருங்கே பேசும் குறள் எப்படி வாழ்க்கையை நிராகரிக்கும் சமண அறவியலின், பொருளை மையமாகக் கொண்ட வணிக நீதியின் குரலாக மட்டும் இருக்க முடியும்? இந்தியப் பண்பாட்டின் முக்கிய அம்சமான இந்த பரந்து பட்ட அறக்கோட்பாட்டையும், அதனை எடுத்தோதும் திருக்குறளையும் இப்படிக் குறுக்குவதே செயற்கையானதும், ஒற்றைப் படை சிந்தனைப் போக்கும் ஆகும்.

பிற்சேர்க்கை:

யுகமாயினி : டிசம்பர் 2007 இதழ் (பக்கங்கள் 20-24): ஜாவா குமார் எழுதியுள்ள கட்டுரை.

அன்புள்ள யுகமாயினி ஆசிரியருக்கு,
தங்களின் சமீபத்திய இதழில் திரு.இந்திராபார்த்தசாரதியின் கட்டுரை ஒன்றில் கீழ்க்காணும் இந்தப்பகுதி என் கவனத்தை ஈர்க்க இதை எழுதுகிறேன்.
" இன்னொரு வகையான வன்முறையும் உண்டு. புத்த ஜாதகத்தில் வழங்கிய ராமாயணக்கதை, ஹிந்து மதத்துப் புனித காவியம் ஆவதுபோல, சமணத் துறவியாக வள்ளுவருக்கு, ஜடா முடியை அணிவித்து, திருமேனி முழுவதும் திருநீற்றைப் பூசியிருப்பது போல், தமிழில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சீவக சிந்தாமணியும் பல நூல்களும் தப்பித்திருப்பது, அவை செய்த அதிர்ஷம் என்றுதான் சொல்லவேண்டும். இன்னொரு சமணராகிய தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியத்தை வைதிக மதத்துச் சட்ட திட்டங்களுக்குள் கொண்டுவர உரையாசிரியர்கள் எவ்வாறு முயல்கிறார்கள் என்பது கருத்து வன்முறையின் வேறொரு முகம். "

மேலே திரு.இபா சொல்ல முனைவது 'வைதிகமதத்தினர் (அது என்ன மதம் என்று தெரியவில்லை) சமணரான திருவள்ளுவரை சைவராக வலிந்தேற்றித் திருநீற்றைப் பூசி விட்டனர்' என்று கொள்கிறேன்.

திருநீறுதான் திரு.இபாவின் பிரச்னை என்றால், வைணவமரபில் வந்த பரிமேலழகரே (இவரை காஞ்சி உலகளந்தபெருமாள் கோயில் பட்டரென்பர்) கடவுள்வாழ்த்துப் பகுதியில் வரும் 'எண்குணத்தான்' என்ற குறிப்புக்கு உரையெழுதுகையில் 'சிவாகமங்களில் குறிப்பிடப்படுவது போல' என்று சொல்வதால் வள்ளுவருக்குத் திருமண்ணைவிட திருநீறு பொருத்தமே. எனவே இங்கே வைணவமரபினர்தாம் வள்ளுவருக்குத் திருநீறு பூசினர் என்று திரு.இபா சொல்லியிருந்தால் தெளிவாயிருக்கும்.

அது கிடக்கட்டும். விஷயத்துக்கு வருகிறேன்.

திருக்குறளை வைத்து வள்ளுவரைச் சமணரென்பதற்கு யாதொரு அடிப்படையும் இல்லை. ஆய்ந்து நோக்கின் திருக்குறள் பெயரிலாப் பெருவழியான இந்துஞானமரபின் அறநூலே! இத்திறக்கில் அடியேன் கடந்த சில வருடங்களாக இணையத்தில் பல குழுமங்களில் பல சமண அறிஞர்களுடனும் வாதிட்டு இக்கருத்தை நிறுவியுள்ளேன். விரிவஞ்சி விடுத்து சாரமான சில சான்றுகளை மட்டும் கீழே தருகிறேன்.

1. அத்திநாத்தி வாதம் என்ற சமணர்தம் ஆதாரக் கோட்பாட்டினைச் சுட்டும் ஒரு பாவினைக் கூட திருக்குறள் நெடுகத் தேடினாலும் கிட்டாது. மேலும் நாயன்மார்களும் ஆழ்வார்களும் 'உளது இலது' என்று முரண்படும் இந்த ஆதார நம்பிக்கையைத் தாக்கினரே அன்றி சாதாரணச் சமணர்களை அல்ல.

2. பொதுவாய் சமணத்திற்குச் சான்றாய்ச் சுட்டப்படும் 'அவிசொரிந்தாயிரம் வேட்டலின் ஒன்றின் உயிர் செகுத்து உண்ணாமை நன்று' என்ற (குறள் 259) குறளில் வேட்டலை உயர்வுநவிர்ச்சியிலே குறிப்பிட்டிருக்கிறாரே அன்றி சமணர் ஏற்காத வேள்விகளைச் சாடவில்லை என்பது பிறிதோரிடம் (குறள் 413) 'செவியுணவிற் கேள்வி உடையார் அவியுணவின் ஆன்றோரொடு ஒப்பர் நிலத்து' என்று சொல்வதன் மூலம் அறியலாம். 'அவியுணவின் ஆன்றோர்' (Havis consuming celestials) என்ற சொல்லாட்சியும் இங்கே உயர்வுநவிர்ச்சியிலே சொல்லப்பட்டிருப்பதன் மூலம் வள்ளுவர் வேதவேள்விகளுக்கு எதிரானவர் அல்ல என்றும் தெளியலாம்.

3. மேலும் சிறுதெய்வங்களுக்குப் படையல் வைப்பதும், மூதாதைகளுக்குப் படையல் வைப்பதும் (குறள் 43) சமணத்திற்கு ஏற்புடையது அல்ல.

4. குறள் 550 -ல் 'கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களை கட்டதனோடு நேர்' என்று மரணதண்டனையை நியாயப்படுத்துவது எவ்வகையிலும் அஹிம்சை போற்றும் சமணத்திற்குப் பொருந்தாது. சமண அறநூல்களில் மரணதண்டனை தீர்ப்பாகச் சொல்லப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

5. மன்னன் முறைதவறினால் அந்தணர் கடமைகளான வேட்டல் வேட்பித்தல், கற்றல், கற்பித்தல், இரத்தல், புரத்தல் ஆகிய அறுதொழில் நலியும் என்றும் அவர்தம் நூலையே மறப்பர் என்றும், வேள்விக்கும் ஆலயவழிபாட்டிற்கும் அவசியமான ஆபயன் (பஞ்சகவ்யம்) குன்றும் என்றும் (குறள் 134, 560) வள்ளுவர் வலியுறுத்துவதையும் நோக்கினால் வள்ளுவத்தின் அடிநாதம் சமணம் அல்ல என்று தெளியலாம்.

6. கடவுள் வாழ்த்திலே 'மலர்மிசை ஏகினான்' என்பதை சமணர்தம் ஆதிநாதர் மலரிலே நடந்தவர் என்பதால் சொல்கிறார் என்று சிலர் சொல்வதுபோல் பொருள் கொண்டால் அதன் தொடர்ச்சியாய் அவன் அடிசேர்ந்தார் 'நிலமிசை நீடுவாழ்தல்' எவ்வகையிலும் பொருந்தாது. 'நிலமிசை நீடுவாழ்தல்' (மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் - சம்பந்தர் தேவாரம்) என்பதே சமணத்திற்குப் புறம்பானது. இது போலவே இதர கடவுள்வாழ்த்துப் பாக்களுக்கும் சமணர்தம் அத்திநாத்திய சியாத்வாதக் கோட்பாட்டிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை.

7. பல குறட்பாக்கள் பதஞ்சலி யோகசூத்திரம் மற்றும் திருமந்திரப் பாக்களை ஒத்திருப்பதைக் காணலாம். 'பகவன், அறவாழி அந்தணன், எண்குணத்தான்' போன்ற விளிகள் சமணருக்குச் சொந்தமானதல்ல. காட்டாய்:

பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
மறவா அருள்தந்த மாதவன் நந்தி
*அறவாழி அந்தணன்* ஆதிப் பராபரன்
உறவாகி வந்தென் உளம் புகுந் தானே!
திருமந்திரம் - 1803

பல்லூழி பண்பன் பகலோன் இறையவன்
நல்லூழி ஐந்தினுள் ளேநின்றவூழிகள்
செல்லூழி யண்டத்துச் சென்றவ் வூழியுள்
அவ்வூழி யுச்சியு ளொன்றிற் *பகவனே*.
திருமந்திரம் - 2533

கொல்லான் பொய்கூறான் களவிலன் *எண்குணம்*
நல்லான் அடக்கமுடையான் நடுச்செய
வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் இயமத்து இடையில் நின்றானே.
திருமந்திரம் - 554

இங்கே சிவாகமங்கள் சுட்டும் எண்குணங்கள் ஆவன: தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை மற்றும் வரம்பில் இன்பமுடைமை.

'எட்டுகொலாம் அவர் ஈறில் பெருங்குணம்' என்று அப்பர் பெருமானும், 'எண்குணம் செய்த ஈசனே' என்று மாணிக்கவாசகரும் பாடுவர்.
அதனாற்றான் சிவாகமங்களில் சுட்டியபடி என்று பரிமேலகரும் உரையெழுதுகிறார்.

8. மேலும் எளிதில் பொருள்விளங்கா பல அதிநுட்பமான குறட்பாக்களுக்கு வேதாந்த சைவசித்தாந்த அடிப்படையில் மட்டுமே மெய்ப்பொருள் கொள்ளமுடியும். காட்டாய்:

'அல்லல் அருள் ஆள்வார்க்கில்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி' (குறள் 245)

என்ற குறளில், அருள் ஆள்பவர்க்கும் வளிக்கும் உள்ள தொடர்பை சித்தாந்தரீதியில் அணுகினால் ஒழிய பொருள் விளங்காது.
இதன் சூக்குமத்தை

'வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாந்
தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
வளியினும் வேட்டு வளியனு மாமே'

என்ற திருமந்திரத்தின் துணை கொண்டும் தெளியலாம்.
அது போலவே

'குடம்பை தனித்தொழிய புள் பறந்தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு'

என்ற குறளில் (338) ஆன்மாவின் இயல்பைச் சுட்டுவதும் அத்திநாத்தியத்திற்கு ஒவ்வாதது. இது வேதாந்தக் கோட்பாடு. அவ்வண்ணமே வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகுதலும்.

9. சைவசித்தாந்த சாத்திர நூல்களில் திருக்களிற்றுப்படியார் என்ற நூல் முதன்மையானது. இதில் இரண்டு குறட்பாக்கள் நேராகச் சுட்டப்பட்டுகின்றன:

சார்புணர்ந்து சார்பு கெடவொழுகி னென்றமையாற்
சார்புணர்த றானே தியானமுமாஞ் - சார்பு
கெடவொழுகி னல்ல சமாதியுமாங் கேதப்
படவருவ தில்லைவினைப் பற்று. (34)

* குறள்: மெய்யுணர்தல்

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை யென்றமையால்
வேண்டினதொன்றுமே வேண்டுவது - வேண்டினது
வேண்டாமை வேண்டவரு மென்றமையால் வேண்டிடுக
வேண்டாமை வேண்டுமவன் பால். (40)

*குறள்: அவாவறுத்தல்

சமணக்கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு சைவசித்தாந்த சாத்திரநூல் பாடப்பட்டது என்பது நகைமுரணாகும்.

அவ்வண்ணமே சைவத்திருமுறையிலே சேரமான்பெருமாள் நாயனார் கயிலையில் சிவனார்தம் ஆசிகொண்டு பாடிய 'திருக்கயிலாய உலா' என்ற நூலில் திருக்குறள் ஒன்று தெளிவாய்க் குறிப்பிடப்படுகிறது:

'கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உளவென்று - பண்டையோர் கட்டுரையை..' (173/174)

10. இறுதியாய் ஒன்று. அஹிம்சை என்பது சமணர்க்கு மட்டுமே குறிக்கோள், ஆதாரக்கோட்பாடு என்பதும் பிழை. யோகமார்க்கத்தில் அஹிம்சையை இந்துசமய நூல்கள் அனைத்துமே வலியுறுத்துகின்றன. ஆயின் சமணத்தைப் போலன்றி அதை முக்திக்கு ஒரே வழியாக வைக்கவில்லை. 'யோகியர் பெறும் பேற்றினையே சாங்கியரும் பெறுவர்' என்ற கண்ணபிரானின் கீதைப்பேருரைக்குச் சான்றாய் வேடர் கண்ணப்பரையும், மீனவர் அதிபத்தரையும் அவர் போன்ற எண்ணற்ற மகான்களையும் காண்கிறோம். வள்ளுவரும் புலால் மறுத்தலை அனைவருக்கும் வலியுறுத்திச் சொல்ல்லவில்லை.

புலால் மறுத்தலை வலியுறுத்துவது யாரிடம்?

'துறவியலில்', யோகத்திலாழ்ந்து தவம் மேற்கொள்வோர்க்கு, நோற்பார்க்கு மட்டுமே. அது அமணர்க்கு மட்டுமின்றி அனைவர்க்கும் பொதுவானது. 'சமாதி'யில் (semedi) அமைய வேண்டி, ஒரு மண்டலம் நோன்பிருக்கும், மரக்கறி உணவே பழகாத ஜாவானியர் கூட அந்த நாற்பது நாள்களில் புலால் (முட்டை கூட) உண்பதில்லை.

புலால் மறுத்தலை வேறெங்காவது சொல்கிறாரா?
குடியியலில் ஓரிடத்தில் சுட்டுகிறார்.

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு. (984)

ஆக, கொல்லாமை என்பது நோற்பார் மட்டுமே கொளத்தகும். ஆயின் அவர் பெரும்பான்மையினரா? என்றுமில்லை. அவரே சொல்கிறார்:

இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர். (270)

வள்ளுவம் சமணத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தால் 'கொல்லாவிரதம்' அனைத்துத் தரப்பினர்க்கும், 'துறவியல்' மட்டுமின்றி பிற அதிகாரங்களிலும் எங்காவது ஓரிடத்திலாவது வலியுறுத்தப் பட்டிருக்கும்.
அப்படி அமையவில்லை என்பதை ஓர்க!

பொதுவில் பெரும்பான்மைக்கு, குறிப்பாய் நட்பியலில், 'மருந்து' (அதிகாரம் 95) எது என்று குறிப்பிடுகையில், 'செரித்தது கண்டு, அளவறிந்து உண்க' என்று பல பாக்களில் சொல்லிப் போகிறாரே அன்றி ஓரிடத்திலும் 'புலால் மறுத்தலே சிறந்த மருந்து, உடல்நலத்திற்கு ஏற்றது' என்று சொல்வதில்லை.
தமிழர் உணவுப்பழக்கத்தில் புலால் தவிர்க்க முடியாத அம்சமாய் இருப்பதை தொன்றுதொட்டுக் காண்கிறோம்.

ஓரிடம் நிணத்தைத் தீயிலிட்டு வாட்டுவதைக் காண்கிறார் வள்ளுவர். கண்டிக்கவில்லை; கலங்கவுமில்லை. மாறாய் நின்று ரசிக்கிறார். புசித்துமிருக்கலாம். எப்படியோ, சமணராய் வெறுத்து ஒதுக்கி ஓடியிருந்தால் அதனை ஓர் உவமையாய்க் குறளில் (that too approvingly) அமைத்திருக்க மாட்டார் என்பது திண்ணம்.

காமத்தீயில் நிறையழிந்து நிற்கும் பெண்மைக்கு அதைச் சுட்டுகிறார் இங்கு:

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்? (1260)

அன்புடன், ஜாவா குமார்

__________________

Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 
நீதி, தர்மம், திருவள்ளுவர், சமணம்

பிப்ரவரி 7, 2008 திண்ணை இதழில் ஜெயமோகன் எழுதியிருக்கும் “நீதியும் நாட்டார் விவேகமும் ....“ என்ற கட்டுரை குறித்து சில விமரிசனங்கள்.

// ஜெ.மோ: இவற்றில் உச்சம் திருவள்ளுவர் என்றும் சமண மரபில் ஆச்சாரிய குந்தகுந்தர் என்றும் குறிப்பிடப்படும் சமண முனிவரால் எழுதப்பட்ட 'திருக்குறள்' //

திருவள்ளுவரின் சமயப் பார்வை பற்றிய ஆய்வுகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அவர் சைவம், வைணவம் இவற்றை உள்ளடக்கிய (இன்று இந்துமதம் என்றழைக்கப் படும்) வேத சமயத்தினர், சமணர் அல்லது பௌத்தர் ஆகிய மூன்று தரப்பிற்கும் பல்வேறு வலுவான ஆதாரங்கள் வைக்கப் படுகின்றன. இந்நிலையில் முடிந்த முடிபாக இவ்வாறு ஜெயமோகன் எழுதியிருப்பது சரியானதன்று. சமண மறுமலர்ச்சி பற்றி முழங்கும் தருண் சாகர் போன்ற ஜைன ஆசாரியர்கள் தான் தங்கள் பிரசார மேடைகளில் எல்லாம் “குந்தகுந்தர் தான் திருவள்ளுவர்” என்று பேசி வருகிறார்கள். சமீப காலங்களில் இந்த rhetoric அதிகமாகியுள்ளது என்பதும் புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால் ஆய்வு நோக்குள்ள ஒரு எழுத்தாளரின் இத்தகைய நிலைப்பாடு வியப்பூட்டுகிறது.

tiruvalluvar.jpg

நீதி என்ற கருத்தியல் அடிப்படையை மட்டுமே கொண்டு திருவள்ளுவரின் “சமணத்” தன்மையை ஜெயமோகன் முன்னிறுத்துவதாகத் தெரிகிறது. ஆனால் திருவள்ளுவர் கண்டிப்பாக ஏன் சமணராகவும் (பௌத்தராகவும்) இருந்திருக்கவே முடியாது, அவர் இந்து/வேத சமயத்தினராக மட்டுமே இருந்திருக்க வேண்டும் என்பதற்கான ஆதாரங்கள் கருத்தியல் மட்டுல்ல, குறள் நேரிடையாகக் குறிப்பிடும் பருப்பொருள் உண்மைகள், உவமானங்கள், கூறுபொருள்கள் இவை அனைத்தின் மூலமும் உறுதி செய்யப் படுகின்றன.

இது குறித்து யுகமாயினி என்ற இலக்கிய சிற்றிதழில் ஜாவா குமார் என்பவர் எழுதிய கட்டுரையை இதன் இறுதியில் பிற்சேர்க்கையாக இணைத்துள்ளேன். இந்தக் கட்டுரை இத்தகைய முக்கிய ஆதாரங்களை சுருக்கமாகத் தொட்டுக் காண்பிக்கின்றது. .

// ஜெ.மோ: சமணர்களால் உருவாக்கப்பட்ட நீதி அதுவரை இந்திய சமூகத்தில் இல்லாதிருந்த பல முக்கியமான அம்சங்களைக் கொண்டிருந்தது. ஒன்று அதற்கு மானுடமளாவிய ஒரு நோக்கு இருந்தது. அடிப்படை விழுமியங்களையாவது அனைத்துமானுடருக்கும் சமமாக வைக்க அதனால் இயன்றது. இரண்டு, வன்முறை சாராமல் மனிதனின் கருணையையும் அகச்சான்றையும் நம்பியே பேசும் நீதியை அவை முன்வைத்தன. //

நீதி என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு இட்டுச் செல்லுவது, வழிநடத்துவது என்று பொருள். அதனால் தான் நீதி நூல்கள் தத்துவ விவாதங்களாகவோ அல்லது தேடல்களாகவோ அல்லாமல் வெளிப்படையான அறவுரைகளாவும், இதைச் செய், இதைச் செய்யாதே என்று கட்டளையிடும் உபதேசங்களாகவும் உள்ளன. ஆனால், இந்த நீதியின் ஊற்றுக் கண்ணாக தர்மம் என்கிற கோட்பாடு (principle) உள்ளது. நீதிகளை (morals, ethics) உருவாக்குபவர்கள் அவற்றின் உண்மைத் தன்மையை தர்மம் என்ற உரைகல்லில் உரைத்தே உறுதி செய்ய வேண்டும். தர்மம் என்கிற மாறாத உண்மையின் கனி தான் நீதி என்பது.

இந்த தர்மம், மானுட அறம் என்கிற கோட்பாடு வேத ரிஷிகளாலேயே முதன்முதலில் எடுத்துரைக்கப் பட்டது. ரிக்வேத சம்ஹிதைகளிலேயே உலகின் மாறாத நியதி தர்மம் என்ற கருத்து உள்ளது. உபநிஷதங்கள் இதனை தங்கள் தத்துவப் பின்புலத்தில் வளர்த்தெடுக்கின்றன. உதாரணமாக, பிரகதாரண்ய உபநிஷத்தில் தர்மம் பற்றிய மிக விரிவான உரையாடல்கள் உள்ளன. பின்னர் இதிகாசங்கள் வாழ்க்கைச் சம்பவங்கள், கதைகள் மூலம் அறம் பற்றிய பல பரிமாணங்களை வெளிக் கொணர்கின்றன.

ந வை ராஜ்யம் ந ச ராஜா ஆஸீத், ந ச தண்டோ ந தாண்டிக:
தர்மேணைவ ப்ரஜா: ஸர்வே ரக்ஷந்தி ஸ்ம பரஸ்பரம் 

“அரசும் இல்லை அரசனும் இல்லை; தண்டனைகளும் இல்லை, தண்டிப்பவனும் இல்லை.
மனிதர்கள் அனைவரும் தர்மத்தினாலேயே தங்களை பரஸ்பரம் பாதுகாத்துக் கொண்டனர்”

என்கிற மகாபாரத சுலோகம் குறள் கூறும் “அறம்” என்ற கருத்துடன் முழுதும் ஒன்றுபடுகிறது. “என்பிலதனை வெயில் போலக் காயுமே அன்பிலதனை அறம்” என்று வள்ளுவர் கூறுவது நீதி என்ற கருத்தாக்கத்திற்கும் அப்பாற்பட்ட உலகின் இருத்தலுக்குக் காரணமாகிய இந்த தர்மம் பற்றியே, இதனையே, “ஜகத ஸ்திதி காரணம்” (உலகின் இருத்தலுக்குக் காரணமாகிய தர்மம்) என்று சங்கரர் தன் உரை ஒன்றில் கூறுகிறார்.

1176546492_vhp.jpg
தர்மோ ரக்ஷதி ரக்ஷித: (தர்மத்தைக் காப்பவரை தர்மம் காக்கும்) - விசுவ ஹிந்து பரிஷத் சின்னம்

இந்து மதம், பௌத்தம், சமணம் ஆகிய மூன்று மதங்களும் தர்மம் என்கிற இந்த அடிப்படைக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்பவை தான். அதனோடு கூட, ஒவ்வொரு மதத்தின் இறையியலிலும் இந்த சொல்லுக்கான சிறப்புப் பொருள்களும், விளக்கங்களும் அளிக்கப் படுகின்றன. அதனால் தான் இப்போது தலாய் லாமா உள்ளிட்ட பல சமயத் தலைவர்கள் இந்த மூன்று மதங்களையும் பொதுவாகக் குறிக்க கிழக்கத்திய மதங்கள் (eastern religions) என்பதற்குப் பதிலாக தர்ம மதங்கள் (Dharmic religions) என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.

எனவே சமணம் தான் மானுடம் அளாவிய அறக் கோட்பாட்டையே “உருவாக்கியது” என்பது முற்றிலும் பிழைபட்ட புரிதல்.

// பேராரசுக்குரிய நீதி எப்போதும் தண்டனைகளால் அடிக்குறிப்பிடப்பட்டது. வாளால் பரப்பபடுவது, ரத்தத்தால் நிறுவப்படுவது.
வணிகநீதி இந்திய நிலப்பகுதியில் இரு பெரும் மதங்களின் குரலாக ஒலித்தது. பௌத்தம் சமணம் இரண்டுமே அடிப்படையில் வைசியர்களின் மதங்கள். பின்னர் தொழில்செய்யும் சூத்திரர்களின் மதங்களாக அவை வளர்ந்தன. பௌத்தமும் சமணமும் வணிகத்திற்கு இன்றியமையாத அடிப்படை நெறிகளை இந்திய நிலப்பகுதி முழுக்கக் கொண்டு சென்றன. //

“தண்டோ தமயதாமஸ்மி நீதிரஸ்மி ஜிகீஷதாம்” (அடக்குபவைகளில் தண்டனையாகவும், வெற்றியை நாடுபவர்களிடத்தில் நீதியாகவும் நான் இருக்கிறேன்) என்று கீதையில் (10.38) கிருஷ்ணன் கூறுகிறார்.

வணிக நெறி என்பது அரசிற்குக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு அரசனால் நிர்வகிக்கப் பட்ட ஒன்றாகவே இருந்ததே அன்றி அதற்கு எதிரான, மாற்றான ஒன்றாக இல்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். தங்கள் பயணங்களில் கொள்ளைக் காரர்களாலும், வழிப்பறிகளாலும் தாக்கப் பட்ட இந்திய வணிகர்கள் அவர்களை எதிர்த்துப் போராடவுமில்லை, கருணையினால் மன்னித்து விட்டுவிடவும் இல்லை. மாறாக தங்களைக் காக்க வேண்டி மன்னனிடமே சென்று முறையிட்டனர். சம்ஸ்கிருத நாடகங்களிலும், சங்க இலக்கியத்திலும் இதற்கான சான்றுகள் பல உள்ளன. சட்டமும், தண்டனைகளும் நீதியின் ஒரு முக்கியமான அங்கம் என்பதை அவர்கள் தெளிவாகவே உணர்ந்திருந்தனர்.

திருக்குறளில் வணிகம் என்று ஒரே ஒரு அதிகாரம் உள்ளது, ஆனால் மன்னனைப் பற்றியும் அரசாட்சி பற்றியும் பற்பல அதிகாரங்கள் உள்ளன. “ஒறுத்தல்” (தண்டனை) என்கிற சொல் பல இடங்களில் புழங்குகிறது - “கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ் களைகட்டதனொடு நேர்” என்பதில் உள்ளது போல.

முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு 
இறை என்று வைக்கப் படும். 

வானோக்கி வாழும் பயிர் என்ப மன்னவன் 
கோல்நோக்கி வாழும் குடி.

அந்தணர் நூற்கும், *அறத்திற்கும்* ஆதியாய் 
நின்றது மன்னவன் கோல்.

இப்படி மன்னனே சமுதாய நலனுக்கு அச்சாணி என்று அறுதியிடும் குறட்பாக்களை சொல்லிக் கொண்டே போகலாம். இந்த வகையில் குறள் மகாபாரதம் கூறும் அதே நீதிக் கருத்துக்களை, விவாதப் பின்புலங்கள் தவிர்த்து அவற்றின் சுருக்கமான வடிவில் வைக்கிறது என்பதே சரியான முடிவாக இருக்கும். அதன் பார்வை எந்த சமண நூலையும் விட மகாபாரதத்திற்குத் தான் மிக நெருக்கத்தில் உள்ளது.

“சொல்லக் கொடாத சுயோதனன் பின் ஏன்
கொல்லக் கொடுத்தான் குமரேசா - மெல்லவே
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்பு போல்
கொல்லப் பயன்படும் கீழ்”

என்பது குமரேச வெண்பா என்னும் நூலில் உள்ள ஒரு பாடல். முதல் இரண்டு அடிகளில் ஒரு உதாரணம், சம்பவம் அல்லது கதையையும் (இவை பெரும்பாலும் இதிகாச, புரானங்களில் இருந்தே இருக்கும்) அடுத்த இரண்டு அடிகளில் குறட்பாவின் மூல வடிவையும் கொண்டு அமைந்த நூல் இது. இதே போன்று சிவசிவ வெண்பா என்றும் ஒரு நூல் இருக்கிறது. குறட்கருத்துக்களுக்கு வாழும் உதாரணங்களாக இந்த நூலாசிரியர்கள் காட்டுவது இந்து புராணங்களையும், கதையாடல்களையும் தான், சமணத்தில் பல குறட்பாக்களுக்கு உதாரணமே கிடைத்திருக்காது.

மேலும் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று வாழ்க்கைப் பயன்களையும் (த்ரிவர்கம்) ஒருங்கே பேசும் குறள் எப்படி வாழ்க்கையை நிராகரிக்கும் சமண அறவியலின், பொருளை மையமாகக் கொண்ட வணிக நீதியின் குரலாக மட்டும் இருக்க முடியும்? இந்தியப் பண்பாட்டின் முக்கிய அம்சமான இந்த பரந்து பட்ட அறக்கோட்பாட்டையும், அதனை எடுத்தோதும் திருக்குறளையும் இப்படிக் குறுக்குவதே செயற்கையானதும், ஒற்றைப் படை சிந்தனைப் போக்கும் ஆகும்.

பிற்சேர்க்கை: 
யுகமாயினி : டிசம்பர் 2007 இதழ் (பக்கங்கள் 20-24): ஜாவா குமார் எழுதியுள்ள கட்டுரை.

அன்புள்ள யுகமாயினி ஆசிரியருக்கு,
தங்களின் சமீபத்திய இதழில் திரு.இந்திராபார்த்தசாரதியின் கட்டுரை ஒன்றில் கீழ்க்காணும் இந்தப்பகுதி என் கவனத்தை ஈர்க்க இதை எழுதுகிறேன்.
" இன்னொரு வகையான வன்முறையும் உண்டு. புத்த ஜாதகத்தில் வழங்கிய ராமாயணக்கதை, ஹிந்து மதத்துப் புனித காவியம் ஆவதுபோல, சமணத் துறவியாக வள்ளுவருக்கு, ஜடா முடியை அணிவித்து, திருமேனி முழுவதும் திருநீற்றைப் பூசியிருப்பது போல், தமிழில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சீவக சிந்தாமணியும் பல நூல்களும் தப்பித்திருப்பது, அவை செய்த அதிர்ஷம் என்றுதான் சொல்லவேண்டும். இன்னொரு சமணராகிய தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியத்தை வைதிக மதத்துச் சட்ட திட்டங்களுக்குள் கொண்டுவர உரையாசிரியர்கள் எவ்வாறு முயல்கிறார்கள் என்பது கருத்து வன்முறையின் வேறொரு முகம். "

மேலே திரு.இபா சொல்ல முனைவது 'வைதிகமதத்தினர் (அது என்ன மதம் என்று தெரியவில்லை) சமணரான திருவள்ளுவரை சைவராக வலிந்தேற்றித் திருநீற்றைப் பூசி விட்டனர்' என்று கொள்கிறேன்.

திருநீறுதான் திரு.இபாவின் பிரச்னை என்றால், வைணவமரபில் வந்த பரிமேலழகரே (இவரை காஞ்சி உலகளந்தபெருமாள் கோயில் பட்டரென்பர்) கடவுள்வாழ்த்துப் பகுதியில் வரும் 'எண்குணத்தான்' என்ற குறிப்புக்கு உரையெழுதுகையில் 'சிவாகமங்களில் குறிப்பிடப்படுவது போல' என்று சொல்வதால் வள்ளுவருக்குத் திருமண்ணைவிட திருநீறு பொருத்தமே. எனவே இங்கே வைணவமரபினர்தாம் வள்ளுவருக்குத் திருநீறு பூசினர் என்று திரு.இபா சொல்லியிருந்தால் தெளிவாயிருக்கும்.

அது கிடக்கட்டும். விஷயத்துக்கு வருகிறேன்.

திருக்குறளை வைத்து வள்ளுவரைச் சமணரென்பதற்கு யாதொரு அடிப்படையும் இல்லை. ஆய்ந்து நோக்கின் திருக்குறள் பெயரிலாப் பெருவழியான இந்துஞானமரபின் அறநூலே! இத்திறக்கில் அடியேன் கடந்த சில வருடங்களாக இணையத்தில் பல குழுமங்களில் பல சமண அறிஞர்களுடனும் வாதிட்டு இக்கருத்தை நிறுவியுள்ளேன். விரிவஞ்சி விடுத்து சாரமான சில சான்றுகளை மட்டும் கீழே தருகிறேன்.

1. அத்திநாத்தி வாதம் என்ற சமணர்தம் ஆதாரக் கோட்பாட்டினைச் சுட்டும் ஒரு பாவினைக் கூட திருக்குறள் நெடுகத் தேடினாலும் கிட்டாது. மேலும் நாயன்மார்களும் ஆழ்வார்களும் 'உளது இலது' என்று முரண்படும் இந்த ஆதார நம்பிக்கையைத் தாக்கினரே அன்றி சாதாரணச் சமணர்களை அல்ல.

2. பொதுவாய் சமணத்திற்குச் சான்றாய்ச் சுட்டப்படும் 'அவிசொரிந்தாயிரம் வேட்டலின் ஒன்றின் உயிர் செகுத்து உண்ணாமை நன்று' என்ற (குறள் 259) குறளில் வேட்டலை உயர்வுநவிர்ச்சியிலே குறிப்பிட்டிருக்கிறாரே அன்றி சமணர் ஏற்காத வேள்விகளைச் சாடவில்லை என்பது பிறிதோரிடம் (குறள் 413) 'செவியுணவிற் கேள்வி உடையார் அவியுணவின் ஆன்றோரொடு ஒப்பர் நிலத்து' என்று சொல்வதன் மூலம் அறியலாம். 'அவியுணவின் ஆன்றோர்' (Havis consuming celestials) என்ற சொல்லாட்சியும் இங்கே உயர்வுநவிர்ச்சியிலே சொல்லப்பட்டிருப்பதன் மூலம் வள்ளுவர் வேதவேள்விகளுக்கு எதிரானவர் அல்ல என்றும் தெளியலாம்.

yagna.jpg

3. மேலும் சிறுதெய்வங்களுக்குப் படையல் வைப்பதும், மூதாதைகளுக்குப் படையல் வைப்பதும் (குறள் 43) சமணத்திற்கு ஏற்புடையது அல்ல.

4. குறள் 550 -ல் 'கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களை கட்டதனோடு நேர்' என்று மரணதண்டனையை நியாயப்படுத்துவது எவ்வகையிலும் அஹிம்சை போற்றும் சமணத்திற்குப் பொருந்தாது. சமண அறநூல்களில் மரணதண்டனை தீர்ப்பாகச் சொல்லப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

5. மன்னன் முறைதவறினால் அந்தணர் கடமைகளான வேட்டல் வேட்பித்தல், கற்றல், கற்பித்தல், இரத்தல், புரத்தல் ஆகிய அறுதொழில் நலியும் என்றும் அவர்தம் நூலையே மறப்பர் என்றும், வேள்விக்கும் ஆலயவழிபாட்டிற்கும் அவசியமான ஆபயன் (பஞ்சகவ்யம்) குன்றும் என்றும் (குறள் 134, 560) வள்ளுவர் வலியுறுத்துவதையும் நோக்கினால் வள்ளுவத்தின் அடிநாதம் சமணம் அல்ல என்று தெளியலாம்.

6. கடவுள் வாழ்த்திலே 'மலர்மிசை ஏகினான்' என்பதை சமணர்தம் ஆதிநாதர் மலரிலே நடந்தவர் என்பதால் சொல்கிறார் என்று சிலர் சொல்வதுபோல் பொருள் கொண்டால் அதன் தொடர்ச்சியாய் அவன் அடிசேர்ந்தார் 'நிலமிசை நீடுவாழ்தல்' எவ்வகையிலும் பொருந்தாது. 'நிலமிசை நீடுவாழ்தல்' (மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் - சம்பந்தர் தேவாரம்) என்பதே சமணத்திற்குப் புறம்பானது. இது போலவே இதர கடவுள்வாழ்த்துப் பாக்களுக்கும் சமணர்தம் அத்திநாத்திய சியாத்வாதக் கோட்பாட்டிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை.

7. பல குறட்பாக்கள் பதஞ்சலி யோகசூத்திரம் மற்றும் திருமந்திரப் பாக்களை ஒத்திருப்பதைக் காணலாம். 'பகவன், அறவாழி அந்தணன், எண்குணத்தான்' போன்ற விளிகள் சமணருக்குச் சொந்தமானதல்ல. காட்டாய்:

பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
மறவா அருள்தந்த மாதவன் நந்தி
*அறவாழி அந்தணன்* ஆதிப் பராபரன்
உறவாகி வந்தென் உளம் புகுந் தானே!
திருமந்திரம் - 1803

பல்லூழி பண்பன் பகலோன் இறையவன்
நல்லூழி ஐந்தினுள் ளேநின்றவூழிகள்
செல்லூழி யண்டத்துச் சென்றவ் வூழியுள்
அவ்வூழி யுச்சியு ளொன்றிற் *பகவனே*.
திருமந்திரம் - 2533

கொல்லான் பொய்கூறான் களவிலன் *எண்குணம்*
நல்லான் அடக்கமுடையான் நடுச்செய
வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் இயமத்து இடையில் நின்றானே.
திருமந்திரம் - 554

இங்கே சிவாகமங்கள் சுட்டும் எண்குணங்கள் ஆவன: தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை மற்றும் வரம்பில் இன்பமுடைமை.

'எட்டுகொலாம் அவர் ஈறில் பெருங்குணம்' என்று அப்பர் பெருமானும், 'எண்குணம் செய்த ஈசனே' என்று மாணிக்கவாசகரும் பாடுவர்.
அதனாற்றான் சிவாகமங்களில் சுட்டியபடி என்று பரிமேலகரும் உரையெழுதுகிறார்.

8. மேலும் எளிதில் பொருள்விளங்கா பல அதிநுட்பமான குறட்பாக்களுக்கு வேதாந்த சைவசித்தாந்த அடிப்படையில் மட்டுமே மெய்ப்பொருள் கொள்ளமுடியும். காட்டாய்:

'அல்லல் அருள் ஆள்வார்க்கில்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி' (குறள் 245)

என்ற குறளில், அருள் ஆள்பவர்க்கும் வளிக்கும் உள்ள தொடர்பை சித்தாந்தரீதியில் அணுகினால் ஒழிய பொருள் விளங்காது.
இதன் சூக்குமத்தை

'வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாந்
தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
வளியினும் வேட்டு வளியனு மாமே'

என்ற திருமந்திரத்தின் துணை கொண்டும் தெளியலாம்.
அது போலவே

'குடம்பை தனித்தொழிய புள் பறந்தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு'

என்ற குறளில் (338) ஆன்மாவின் இயல்பைச் சுட்டுவதும் அத்திநாத்தியத்திற்கு ஒவ்வாதது. இது வேதாந்தக் கோட்பாடு. அவ்வண்ணமே வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகுதலும்.

9. சைவசித்தாந்த சாத்திர நூல்களில் திருக்களிற்றுப்படியார் என்ற நூல் முதன்மையானது. இதில் இரண்டு குறட்பாக்கள் நேராகச் சுட்டப்பட்டுகின்றன:

சார்புணர்ந்து சார்பு கெடவொழுகி னென்றமையாற்
சார்புணர்த றானே தியானமுமாஞ் - சார்பு
கெடவொழுகி னல்ல சமாதியுமாங் கேதப்
படவருவ தில்லைவினைப் பற்று. (34)
* குறள்: மெய்யுணர்தல்

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை யென்றமையால்
வேண்டின� தொன்றுமே வேண்டுவது - வேண்டினது
வேண்டாமை வேண்டவரு மென்றமையால் வேண்டிடுக
வேண்டாமை வேண்டுமவன் பால். (40)
*குறள்: அவாவறுத்தல்

சமணக்கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு சைவசித்தாந்த சாத்திரநூல் பாடப்பட்டது என்பது நகைமுரணாகும்.

அவ்வண்ணமே சைவத்திருமுறையிலே சேரமான்பெருமாள் நாயனார் கயிலையில் சிவனார்தம் ஆசிகொண்டு பாடிய 'திருக்கயிலாய உலா' என்ற நூலில் திருக்குறள் ஒன்று தெளிவாய்க் குறிப்பிடப்படுகிறது:

'கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உளவென்று - பண்டையோர் கட்டுரையை..' (173/174)

10. இறுதியாய் ஒன்று. அஹிம்சை என்பது சமணர்க்கு மட்டுமே குறிக்கோள், ஆதாரக்கோட்பாடு என்பதும் பிழை. யோகமார்க்கத்தில் அஹிம்சையை இந்துசமய நூல்கள் அனைத்துமே வலியுறுத்துகின்றன. ஆயின் சமணத்தைப் போலன்றி அதை முக்திக்கு ஒரே வழியாக வைக்கவில்லை. 'யோகியர் பெறும் பேற்றினையே சாங்கியரும் பெறுவர்' என்ற கண்ணபிரானின் கீதைப்பேருரைக்குச் சான்றாய் வேடர் கண்ணப்பரையும், மீனவர் அதிபத்தரையும் அவர் போன்ற எண்ணற்ற மகான்களையும் காண்கிறோம். வள்ளுவரும் புலால் மறுத்தலை அனைவருக்கும் வலியுறுத்திச் சொல்ல்லவில்லை.

புலால் மறுத்தலை வலியுறுத்துவது யாரிடம்?

'துறவியலில்', யோகத்திலாழ்ந்து தவம் மேற்கொள்வோர்க்கு, நோற்பார்க்கு மட்டுமே. அது அமணர்க்கு மட்டுமின்றி அனைவர்க்கும் பொதுவானது. 'சமாதி'யில் (semedi) அமைய வேண்டி, ஒரு மண்டலம் நோன்பிருக்கும், மரக்கறி உணவே பழகாத ஜாவானியர் கூட அந்த நாற்பது நாள்களில் புலால் (முட்டை கூட) உண்பதில்லை.

புலால் மறுத்தலை வேறெங்காவது சொல்கிறாரா?
குடியியலில் ஓரிடத்தில் சுட்டுகிறார்.

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு. (984)

ஆக, கொல்லாமை என்பது நோற்பார் மட்டுமே கொளத்தகும். ஆயின் அவர் பெரும்பான்மையினரா? என்றுமில்லை. அவரே சொல்கிறார்:

இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர். (270)

வள்ளுவம் சமணத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தால் 'கொல்லாவிரதம்' அனைத்துத் தரப்பினர்க்கும், 'துறவியல்' மட்டுமின்றி பிற அதிகாரங்களிலும் எங்காவது ஓரிடத்திலாவது வலியுறுத்தப் பட்டிருக்கும்.
அப்படி அமையவில்லை என்பதை ஓர்க!

பொதுவில் பெரும்பான்மைக்கு, குறிப்பாய் நட்பியலில், 'மருந்து' (அதிகாரம் 95) எது என்று குறிப்பிடுகையில், 'செரித்தது கண்டு, அளவறிந்து உண்க' என்று பல பாக்களில் சொல்லிப் போகிறாரே அன்றி ஓரிடத்திலும் 'புலால் மறுத்தலே சிறந்த மருந்து, உடல்நலத்திற்கு ஏற்றது' என்று சொல்வதில்லை.
தமிழர் உணவுப்பழக்கத்தில் புலால் தவிர்க்க முடியாத அம்சமாய் இருப்பதை தொன்றுதொட்டுக் காண்கிறோம்.

ஓரிடம் நிணத்தைத் தீயிலிட்டு வாட்டுவதைக் காண்கிறார் வள்ளுவர். கண்டிக்கவில்லை; கலங்கவுமில்லை. மாறாய் நின்று ரசிக்கிறார். புசித்துமிருக்கலாம். எப்படியோ, சமணராய் வெறுத்து ஒதுக்கி ஓடியிருந்தால் அதனை ஓர் உவமையாய்க் குறளில் (that too approvingly) அமைத்திருக்க மாட்டார் என்பது திண்ணம்.

காமத்தீயில் நிறையழிந்து நிற்கும் பெண்மைக்கு அதைச் சுட்டுகிறார் இங்கு:

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்? (1260)

அன்புடன், ஜாவா குமார்

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard