Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில்
Permalink  
 


வள்ளுவன்

valluvar%2B14th%2Bcen.jpg
bb5f13_c0639465eb154859be3083cc3b27d279~
 

திருவள்ளுவர் (சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைக்கப்படுகிறார்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
 

திருவள்ளுவர், திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு, மதுரையில் அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது.

 
 

சங்க கால புலவரான ஔவையார், அதியமான் மற்றும் பரணர் மூவரும் சமகாலத்தவராக இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இதன் மூலம் சங்க கால புலவர் மாமூலனாரே முதன் முதலில் திருவள்ளுவரை பற்றிய செய்தியை தருகிறார். ஆகையால் மாமூலனாருக்கு முன்பே ஔவையார் என்ற பெயருடைய மற்றொரு புலவர் இருந்திருக்கலாம் என்றே தெரியவருகிறது. மாமூலனார் கி.மு 4 ஆம் நூற்றாண்டு செய்தியை கூறுவதால், திருவள்ளுவர் கி.மு 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவராக இருக்க வேண்டும். திருவள்ளுவர், அனைத்து தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார்.

 
 

 வாழ்க்கை

  

திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்போதைய சென்னை நகரில் உள்ள, மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. காவிரிப்பக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாகவும் அறியப்படுகிறது.

 
 மா. இராச மாணிக்கனார் தன் கால ஆராய்ச்சி நூலில் பல்வேறு சான்றுகள் மூலம் மணிமேகலை எழுதப்பட்ட காலம் கி. பி இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு என்கிறார். சில ஆராய்ச்சியாளர்களின் கருத்துகளை தக்க சான்றுகளுடன் மறுத்தும் கூறியுள்ளார். சிலப்பதிகாரமும், மணிமேகலையும் வெவ்வேறு காலங்களில் எழுதப்பட்டது என்று பல்வேறு சான்றுகளை தமிழ் ஆர்வள ஆராய்ச்சியாளர்கள் முன் வைக்கின்றனர்.
 
 சிறப்புப் பெயர்கள்
  

திருவள்ளுவர் பல சிறப்புப்பெயர்களாலும் அழைப்படுகிறார். அவை:

 

தேவர்

 

நாயனார்

 

தெய்வப்புலவர்

 

செந்நாப்போதர்

 

பெருநாவலர்

 

பொய்யில் புலவர்

 

பொய்யாமொழிப் புலவர்

 

மாதானுபங்கி

 

முதற்பாவலர்

  

புலவர்களின் பாராட்டுகள்

  

பல புலவர்கள் இணைந்து தொகுத்த, திருவள்ளுவமாலை என்னும் நூலின் மூலமாக இதன் சிறப்பினை அறியலாம்.

 

இவரை,

 "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
 வான்புகழ் கொண்ட தமிழ்நாடு"  என பாரதியாரும்,
  

"வள்ளுவனைப் பெற்றதால்பெற்றதே புகழ் வையகமே"  என பாரதிதாசனும் புகழ்ந்து பாடியுள்ளனர்.

  
 

இயற்றிய நூல்கள்

 திருக்குறள்

இது தவிர மருத்துவம் பற்றிய இரு நூல்களை இவர் வழிவந்த வள்ளுவரால் இயற்றப்பட்டதாக கருதப்படுகிறது. அவரையும் திருவள்ளுவர் என்றே அழைத்தனர். அவை: 

  • ஞான வெட்டியான்

  • பஞ்ச ரத்னம்

 இதற்கான காரணம் இந்த பாடல் வரிகள் தாம்:
 
 "அகமகிழுமம்பிகைப் பெண்ணருளினாலே யவனிதனில் ஞானவெட்டியருள யானும் நிகழ்திருவள்ளுவனயனாருரைத்தவேத நிரஞ்சனமாநிலவுபொழிரவிகாப்பமே"
 இவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்தவை.
 
 இவை போக இன்னமும் சில அற்புதமான நூல்களின் ஆசிரியர் பெயர் வள்ளுவர் இயற்றியது என தெரிய வருகிறது. 
அந்த நூல்களில் முக்கியமானவை:
  • சுந்தர சேகரம்

 இந்த சுந்தர சேகரம் ஒரு முக்கியமான சோதிட (ஜியோதிஷ) நூல் ஆகும். இதில் பாரதத்தின் பண்டைய சோதிட நூல்களும் அதன் சார்ந்து எழுதப்பட்ட நூல்களில் இல்லாத பல அரிய சூத்திரங்கள் உள்ளன


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 

 
 

 

 

திருவள்ளுவரும், சமயமும்

 
 

திருவள்ளுவர் திருக்குறளில் குறிப்பிட்ட கடவுள்கள் குறித்து எந்த கருத்தும் கூறவில்லை. திருக்குறளில் கூறப்பட்டுள்ள அறக் கோட்பாடுகள் சமண சமய நீதி நெறிகளை நெருங்கி உள்ளதால் திருவள்ளுவர் ஒரு சமணராக இருந்திருக்கக் கூடும் என்றே வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள்.(சமண மதம் இறை நம்பிக்கையற்றவர்கள், கொள்கையை வழிபடுபவர்கள்)

 
 

திருவள்ளுவரும், சைவமும்

 
 

திருவள்ளுவரை திருவள்ளுவநாயனார் என சைவர்கள் அழைக்கின்றனர்.இவரை சைவர் என்றும், இவருடைய திருக்குறளை சைவ நூல் என்றும் சைவர்கள் நம்புகிறார்கள். திருவாவடுதுறை ஆதீனமாகிய கொரடாச்சேரி சிவத்திரு வாலையானந்த அடிகள் திருவள்ளுவர் சித்தாந்த சைவர் எனும் நூலை எழுதியுள்ளார். அதில் திருவள்ளுவரின் சமயம் சார்ந்த கருத்துகள் அனைத்தும் சைவ சித்தாந்தத்தினை விளக்குவதைப் பற்றி எழுதியுள்ளார்.

 
 

அழுக்காறாமை எனும் அதிகாரத்திலும், ஆள்வினையுடைமை எனும் அதிகாரத்திலும் திருவள்ளுவர் திருமகளையும் அவளுடைய மூத்தவளான தவ்வையையும் குறிப்பிடுகிறார். இந்த இரண்டுக் குறள்களிலுமே தற்போது வழக்கில் இருக்கும் திருமகளின் தன்மையும், மூதேவியின் தன்மையும் ஒத்துப் போகின்றன.

 

திருவள்ளுவர் கோயில் 

திருவள்ளுவர் மயிலாப்பூரில், பிறந்த இடத்தில் மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் என்பது கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் புகழ்பெற்ற முண்டகக் கண்ணியம்மன் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது.

சான்றுடன் திருவள்ளுவரின் காலம்:
அறை நூற்றாண்டிற்கு முன் வரலாற்று ஆசிரியர்கள் கடைச்சங்க காலத்தை கணிப்பதில் மிகவும் சிரமம் அடைந்தாக தெரிகிறது. சங்க காலங்களில் புலவர்கள் அரசர்களை நேரில் சென்று புகழ்ந்து பாடியே பரிசில் பெற்று வாழ்ந்துள்ளனர். மௌரியர்கள் தமிழகத்தின் மீது போர் செய்தது பற்றி சங்க கால புலவர்கள் மாமூலனார், கள்ளில் ஆத்திரையனார் போன்றோர் பாடியுள்ளனர். மேலும் ஊன் பொதி பசுங்குடையார், இடையன் சேந்தன் கொற்றனார், பாவைக்கொட்டிலார் போன்றோர் அப்போரில் வெற்றி பெற்றவர்கள் தமிழ் அரசர்களே என்றும் ஆயினும் சோழன் இளஞ்சேட் செண்ணி மௌரியர்களை பாளி நகரம் வரை விரட்டிச் சென்று வென்றதாக அவ்வரசனை புகழ்ந்து பாடுகின்றனர். அதாவது இப்போர்கள் அப்புலவர்களின் காலத்தில் நடந்தவை என தெளிவாக தெரிகிறது. இவை அசோகரின் கல்வெட்டு குறிப்பின் மூலமும் தெரிய வருகிறது. மேலும் மாமூலனார் மௌரியர்களுக்கு மூன்பு மகதத்தை ஆண்ட நந்தர்கள் பற்றியும் பாடியுள்ளார். இதன் மூலம் மாமூலனார் காலம் கி.மு 4 ஆம் நூற்றாண்டு. மாமூலனாரால் பாடப்பட்டவர் திருவள்ளுவர். ஆக வள்ளுவர் கி.மு 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர்.
 

மாமூலனாரின் காலம் தெரியாத காலங்களிலேயே வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி ஆரியர்கள் கி.மு 600 வாக்கில் தமிழகத்தில் நுழைந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. மாமூலனார் காலம் கி.மு 4 ஆம் நூற்றாண்டு என கண்டறியப்பட்டது. ஆரியனான விஜயன் என்பவன் பாண்டியன் மகளை திருமணம் செய்த பிறகு கி.மு 543ல் இலங்கையை அடைகிறான்.இவை இலங்கை நூலான மகாவம்சம் மூலம் தெரியவருகிறது. ஆக ஆரியர்கள் கி.மு 700 வாக்கில் தமிழகம் வந்திருக்க வேண்டும். திருவள்ளுவர் திருக்குறளில் 12000 க்கு மேற்பட்ட தமிழ் சொற்களையும், 50க்கு குறைவான வடமொழி சொற்களையும் பயன்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஆயினும் மறைமலை அடிகள்,மொழி ஞாயிறு தேவநேய பாவாணர், பாரதிதாசன் போன்றோர் மேற்கண்ட வார்த்தைகளிலும் தமிழ் வேர் சொற்கள் இருப்பதாக நிரூபிக்கின்றனர்.தேவநேய பாவானர் 16 (வடமொழி) சொற்கள் இருப்பதாகவும் ,சி.இலக்குவனார் 10கு குறைவாக இருப்பதாக கூறுவதும் கவணிக்கத்தக்கது. மேலும் ரிக் வேதத்தில் இந்திரனை பற்றிய குறிப்பும், ஆரியர்கள் தமிழகம் நுழைந்த பிறகு இந்திரனை பற்றிய குறிப்பும் ஒப்பிடுகையில் திருவள்ளுவர் திருக்குறளை ஆரியர்கள் தமிழகம் நுழைவதற்கு முன்பே எழுதி முடித்திருக்க வேண்டும்.இவ்வாறு வள்ளுவரின் குறள்களில் உள்ள கருத்துகள் மற்றும் அர்த்தங்கள் மூலமாகவே பல மறைக்கப்பட்ட உண்மைகள் தெரியவருகிறது. இதன் மூலம் வள்ளுவர் காலம் குறைந்தது கி.மு 8-7 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலமாகவே இருக்க வேண்டும்.

 

வள்ளுவரின் உருவம 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே திருவள்ளுவருக்கு உருவம் கொடுக்கும் முயற்சிகள் துவங்கிவிட்டன. பலர் திருவள்ளுவருக்கு உருவம் கொடுக்கும் செயல்களில் ஈடுபட்டனர். 1950களின் பிற்பகுதியில், தற்போது காணும் வெள்ளுடை தரித்த வள்ளுவரை வரைவதற்கான முயற்சிகள் துவங்கின. இந்த முயற்சியைத் துவங்கியவர் கவிஞர் பாரதிதாசன் ஆவார். அவர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த இராமச்செல்வன் என்பவருடன் சேர்ந்துவந்து, ஓவியர் வேணுகோபால் சர்மாவைச் சந்தித்தார். மூன்று பேரும் சேர்ந்து திருவள்ளுவர் படத்தை உருவாக்க திட்டமிட்டனர். இதற்கான செலவுகளை இராமச்செல்வன் ஏற்றுகொண்டார்.

 

பின்னர் வேணுகோபால் சர்மா தான் வரைந்த படத்தை முடித்த பிறகு, நாகேசுவரபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் இந்தப் படத்தை வைத்தார். அப்போது காமராஜர், கா. ந. அண்ணாதுரை, மு. கருணாநிதி, நெடுஞ்செழியன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களும் இந்தப் படத்தைப் பார்வையிட்டு பாராட்டிச் சென்றனர்.

 

பிறகு இந்தப் படம், 1960இல் கா. ந. அண்ணாதுரையால் காங்கிரஸ் மைதானத்தில் வெளியிடப்பட்டது. பிறகு இதே படம், மத்திய அரசால் தபால் தலையாகவும் வெளியிடப்பட்டது.

 

பின்பு 1964 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில், வேணுகோபால் சர்மா வரைந்த, திருவள்ளுவரின் உருவத்தை அன்றைய துணைக் குடியரசுத் தலைவரான சாகிர் உசேன் திறந்து வைத்தார். வேணுகோபால் சர்மாவுக்கு பொன்னாடை போர்த்தி விருது வழங்கப்பட்டது. தமிழக முதல்வரான அண்ணாதுரை இவருக்கு "ஓவியப் பெருந்தகை" என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார்.

 

நினைவுச் சின்னங்கள்தமிழ்

நாடு அரசு 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை ஒன்று அவரின் நினைவாக நிறுவியுள்ளது. இது முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அமைந்துள்ளது. இந்த சிலையை வடிவமைத்தவர், பிரபல சிற்பி, கணபதி ஸ்தபதி என்பவர்.

சென்னையில் வள்ளுவர் நினைவாக, வள்ளுவர் கோட்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வள்ளுவர் இயற்றிய திருக்குறளின் 1330 குறள்களும், இங்குள்ள குறள் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, கோயில் தேர் போன்ற தோற்றமுடைய நினைவிடமும் உள்ளது.

 

1960இல் இந்திய அரசு திருவள்ளுவரின் நினைவாக ஒரு அஞ்சல் தலை வெளியிட்டது.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

தமிழ் 

இலக்கியம்
சங்க இலக்கிய நூல்கள்
எட்டுத்தொகைபத்துப்பாட்டு
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணைகுறுந்தொகை
ஐங்குறுநூறுபதிற்றுப்பத்து
பரிபாடல்கலித்தொகை
அகநானூறுபுறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படைபொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படைபெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டுமதுரைக்காஞ்சி
நெடுநல்வாடைகுறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலைமலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார்நான்மணிக்கடிகை
இன்னா நாற்பதுஇனியவை நாற்பது
களவழி நாற்பதுகார் நாற்பது
ஐந்திணை ஐம்பதுதிணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபதுதிணைமாலை நூற்றைம்பது
திருக்குறள்திரிகடுகம்
ஆசாரக்கோவைபழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம்முதுமொழிக்காஞ்சி
ஏலாதிகைந்நிலை
சங்கநூல் தரும் செய்திகள்
தமிழ்ச் சங்கம்சங்கம் மருவிய காலம்
சங்க காலப் புலவர்கள்சங்ககால நிலத்திணைகள்
சங்க கால ஊர்கள்சங்க கால மன்னர்கள்
சங்க கால நாட்டுமக்கள்சங்க காலக் கூட்டாளிகள்
சங்ககால விளையாட்டுகள்

 

 

திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகபொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது.[1] இதனை இயற்றியவர் கி.மு. 3 ஆம் நூற்றாண்டுக்கும் கி.மு.1 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்களால் கருதப்படும் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர் ஆவார்.[2] திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. எதுவிதத்திலும், திருக்குறளை இயற்றியவர் பற்றியும், அது என்ன நூல் என்பது பற்றியும், ஔவையாரால் இயற்றப்பட்டதாகக் கூறப்படும் நல்வழி என்பதன் இறுதிப்பாட்டுப் பின்வருமாறு கூறுகிறது:

தேவர் குறளும் திரு நான்மறை முடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒருவாசகம் என்றுணர்

இதில் ‘தேவர் குறள்’ எனக் கூறப்பட்டிருப்பது பற்றியும், குறள், திருநான்மறை, ஏனையவைகளும் ‘ஒரு வாசகம்’ எனக் கூறப்பட்டிருப்பது பற்றியும், தமிழ் வித்தகர்கள் தெளிவான விளக்கத்தைக் கொடுக்காத நிலை தொடர்கிறது.

திருக்குறள் நூலானது வடமொழியில் எழுதப்பட்டவைகளின் அடிப்படையில் இயற்றப்பட்டது என ஒரு சாராராலும், அது திருவள்ளுவனின் சுய சிந்தனை அடிப்படையில் தமிழ் மொழியில் இயற்றப்பட்டது என மற்றொரு சாராராலும் கருதப்படுகிறது. மேலும், திருக்குறளில் கூறப்பட்டிருப்பவைகள் உலகின் பல்வேறு சமயங்கள் வலியுறுத்துபவையுடன் ஒப்பிடப்பட்டு, அது பல்வேறு சமயங்களுடனும் பொருந்துவதாகப் பல்வேறு சமயத்தாராலும் கருதப்பட்டு வருகிறது.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்படுகிறது. மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாய், தமிழ்நாட்டில் ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப் படுகின்றது. இதன் அடிப்படையில், “திருவள்ளுவர் ஆண்டு” என்பது பொது ஆண்டோடு 31 ஆண்டுகள் கூட்ட வேண்டும்.[3]

பெயர்க்காரணம்தொகு

 

இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் “குறள்’ என்றும் அதன் உயர்வு கருதி “திரு” என்ற அடைமொழியுடன் “திருக்குறள்” என்றும் பெயர் பெறுகிறது.

எதுவித்திலும், ”குறள்” என்ற தமிழ்ச் சொல்லின் பொருள்கள் எவை என்பதை இன்றுவரை தமிழ் வித்தகர்கள் அறியவில்லை. இதற்குக் காரணம், முன்னைய, இன்றைய தமிழ் வித்தகர்கள் தொல்காப்பியன் உரியிலில் குறிப்பிட்ட ”மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா” எனக் கூறிய சூத்திரத்தையும், அதற்கு நச்சினார்க்கினியர், சேனாவரையர் எழுதியிருந்த உரைகளையும் சரியாக விளங்கி, ஒர தமி்ச் சொல் எக்கடிப் பொருள் உணர்த்துகிறது என்பதைச் சரியாக விளங்கிக்கொள்ளவில்லை.

குறளானது ஈரடிகளில் உலகத் தத்துவங்களை சொன்னதால், இது ‘ஈரடி நூல்’ என்றும், அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டதால், ‘முப்பால்’ என்றும் அழைக்கப்படுகிறது.

பிற பெயர்கள்தொகு

  1. உத்தரவேதம்
  2. பொய்யாமொழி
  3. வாயுரை வாழ்த்து
  4. தெய்வநூல்
  5. பொதுமறை
  6. முப்பால்
  7. தமிழ் மறை
  8. ஈரடி நூல்
  9. வான்மறை

நூலின் அமைப்புதொகு

 

இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும், அழகுடன் இணைத்தும், கோர்த்தும் விளக்குகிறது.

நூற் பிரிவுகள்தொகு

திருக்குறள் அறம்பொருள்இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் “முப்பால்” எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் “இயல்” என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட எண்ணிக்கையான அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.ஆனால், குறளின் அதிகாரங்கள் ஊன் 10 குறள்களைக் கொண்டுள்ளன என்பதற்கான விளக்கத்தினை இன்றைய ஆய்வாளர்கள் அறியவில்லை.

திருக்குறளில் “பாயிரம்” என்னும் இயலில் நான்கு அதிகாரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் முதலாவது , “கடவுள் வாழ்த்து” என்னும் அதிகாரம். அதைத்தொடர்ந்து, “வான் சிறப்பு”, “நீத்தார் பெருமை”, “அறன் வலியுறுத்தல்” ஆகிய அதிகாரங்கள்.

அறத்துப்பால்தொகு

திருக்குறளின் அறத்துப்பாலில் பாயிரவியலைத் தொடர்ந்து முதலாவதாக 20 அதிகாரங்களுடன் “இல்லறவியல்” அடுத்து 13 அதிகாரங்ள் கொண்ட துறவறவியல் இறுதியில் “ஊழ்” என்னும் ஒரே அதிகாரம் கொண்ட “ஊழியல்” என வகைபடுத்தப் பட்டுள்ளது. திருக்குறளில் ஒரே ஒரு அதிகாரம் உடைய இயல் “ஊழியல்” மட்டுமே. முதற்பாலாகிய அறத்துப்பாலில் மொத்தம் 38 அதிகாரங்கள்.

பொருட்பால்தொகு

அடுத்து வரும் பொருட்பாலில் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களுமாக மொத்தம் 70 அதிகாரங்கள் உள்ளன.

காமத்துப்பால்தொகு

கடைசிப்பாலாகிய “இன்பத்துப்பால்” அல்லது “காமத்துப்பாலில்” களவியல் மற்றும் கற்பியல் என இரண்டு இயல்கள். களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களுமாக மொத்தம் 25 அதிகாரங்கள் உள்ளன. ஆகமொத்தம் 9 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள். திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் திருவள்ளுவர் பாடியுள்ளார்.

திருக்குறள் நூலமைப்பைப் பொறுத்தமட்டில், அது மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. பாயிரத்தில் வைக்கப்பட்டுள்ள நான்கு அதிகாரங்களுள் கடவுள் வாழ்த்து, அறன் வலியுறுத்தல், நீத்தார் பெருமை என்பவை மக்களின் முழு கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதாகவும், வான் சிறப்பு மட்டும் மக்களின் முழு கட்டுப்பாட்டிற்கு அப்பாற்ப்பட்டதாகவும் உள்ளது.

திருக்குறளும் எண் குறித்த தகவல்களும்தொகு

திருக்குறளின் மூன்று பால்களும், ஒவ்வொன்றிலும் 34 (பாயிரவியல் நீக்கி) , 70, 25 என்ற எண்ணிக்கையான அதிகாரங்கள் உள்ளதாக அமைக்கப்பட்டு, அந்த எண்களின் இலக்கங்களைக் கூட்டினால் 7 என்ற கூட்டெண் வரும் விதத்திலும் நூல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒட்டு மொத்த அதிகாரங்களான 133 இன் எண்களைக் கூட்டினாலும், கூட்டெண் 7ஆக வரும் விதத்திலேயே நூல் அமைக்கப்பட்டு்ள்ளது. ஒட்டு மொத்தத்தில், திருக்குறளின் நூலமைப்பானது 7 என்ற எண்ணுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், திருக்குறளின் நூலமைப்பானது 3, 4, 9, 10 என்ற எண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தே அமைக்கப்பட்டுள்ளது. இவை தற்செயலாக நடைபெற்றதா? இல்லையா? என்பது பற்றியும், இவ்வெண்கள் எங்கேனும் தமிழரின் வாழ்வியலில் நெறிமுறைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளனவா? இல்லையா? என்பது பற்றியும், இந்த எண்கள் ஒரு குறிப்பிட்ட போதனையில் முக்கியத்துவம் பெறுவதாக இருந்தால், அது எது என்பதையும் இன்றுவரை ஆய்வாளர்கள் ஆராய்ந்து, எதனையும் கூறவில்லை.

மற்றைய புறத்தில், திருக்குறளின் ஆரம்பத்தில் வைக்கப்பட்டுள்ள நான்கு அதிகாரங்களும் என்ன அடிப்படையில் வைக்கப்பட்டுள்ளன, அவைகள் ஏதாவது போதனை அடிப்படையில்தான் வைக்கப்பட்டுள்ளனவா, இல்லையா என்பது பற்றியும் ஆய்வாளர்களால் ஆராயப்பட்டு, சரியான முடிவுக்கு வரப்படவில்லை.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 மயிலாப்பூரில் திருவள்ளுவருக்கு 1935ல் கோவில் உருவானதாக அங்கிருக்கும் கல்வெட்டு சொல்கிறது.

27/04/1973ல் முதல் அமைச்சர் கருணாநிதி கோவில் திருப்பணியை தொடங்கி வைத்திருக்கிறார். நெடுஞ்செழியன், கண்ணப்பன் ஆகியோர் முன்னிலை வகிக்க குன்றக்குடி அடிகள் தலைமையில் திருப்பணி குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது.

இதெல்லாம் கல்வெட்டு விபரங்கள்.

திருவள்ளுவர்-வாசுகி சிலைகள் இருந்தாலும் கூடவே ஏகாம்பரேசுவரர் உடனுறை காமாட்சி அம்மன் கருமாரி அம்மன், நவக்ரகம், சனீஸ்வரர் சந்நிதிகளும் இருக்கின்றன.

இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த கோவிலுக்கு குருக்கள் நியமிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதில் தெரியும் உண்மை என்ன?

கலைஞர் ஏமாந்தாரா? வள்ளுவரை இந்து என்று ஒப்புக் கொண்டாரா?

வள்ளுவரை யார் எப்படி போற்றினாலும் திருக்குறளை யாரும் மாற்ற முடியாதல்லவா?

உலகப் பொதுமறை என்று எல்லாரும் ஒப்புக் கொள்ளும் திருக்குறள் எல்லா மதத்தினருக்கும் பொதுவானது.

வள்ளுவம் பார்ப்பனீயத்திற்கு எதிரானது என்பதால் அதை கபளீகரம் செய்ய பார்பனீயம் செய்யும் முயற்சிகளில் ஒன்றுதான் இந்த கோவில் விவகாரமும்.

எதை பார்ப்பனீயம் விழுங்கவில்லை.?

உலகம் முழுதும் பரவியிருக்கும் பௌத்தம், தான் பிறந்த இந்தியாவில் செல்வாக்கற்றுப் போனதற்கு பார்ப்பனீயம் செய்த தந்திரங்கள்தான் காரணம்.

பார்ப்பநீயத்திற்கு இரையான மதங்கள் ஜைனம், சீக்கியம் என்றும் சொல்லலாம்.    தன்னை ஏற்றுக் கொள்ளாத தத்துவத்தை உறவாடி அழிப்பதே பார்ப்பனீயத்தின் இயல்பு.

அந்த வகையில் உருவானதுதான் இந்த வள்ளுவர் கோவில் பிரச்னையும். தமிழர்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் தமிழகம்  முழுதும் வள்ளுவர் கோவில்கள் பரவி இருக்குமே? அவர்கள் உண்மை அறிவார்கள்.

பார்ப்பனர்கள் வள்ளுவரை தனதாக்கிக் கொள்ள செய்த சூழ்ச்சிகள் ஆயிரம். அவைகள் ஏன் எடுபடவில்லை என்றால் அவர்களுக்கு உண்மையில் அதில் ஈடுபாடு இல்லை. நாடகத்துக்கு ஒரு கோவில் கட்டினால் அதை உண்மையாக பரப்ப அவனுக்கு என்ன பைத்தியமா ?

அது மட்டுமல்ல. முன்னோர்களை நடுகல் நாட்டி வழிபடுவது தமிழர் மரபு. அந்த வகையில் கூட வள்ளுவருக்கு கோவில் அமைந்ததாக கொள்ளலாம். 

இந்த ஒன்றை சான்றாக காட்டி வள்ளுவரை இந்துவாக மத மாற்றம் செய்யும் சங்கப் பரிவாரங்களின் முயற்சி ஒருபோதும் வெற்றி அடையப் போவதில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

வள்ளுவரின் உருவம்

1960இல் இந்திய அரசு வெளியிட்ட, திருவள்ளுவர் நினைவு அஞ்சல் தலை
1960இல் இந்திய அரசு வெளியிட்ட, திருவள்ளுவர் நினைவு அஞ்சல் தலை

பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே திருவள்ளுவருக்கு உருவம் கொடுக்கும் முயற்சிகள் துவங்கிவிட்டன. பலர் திருவள்ளுவருக்கு உருவம் கொடுக்கும் செயல்களில் ஈடுபட்டனர். 1950களின் பிற்பகுதியில், தற்போது காணும் வெள்ளுடை தரித்த வள்ளுவரை வரைவதற்கான முயற்சிகள் துவங்கின. இந்த முயற்சியைத் துவங்கியவர் கவிஞர் பாரதிதாசன் ஆவார். அவர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த இராமச்செல்வன் என்பவருடன் சேர்ந்துவந்து, ஓவியர் வேணுகோபால் சர்மாவைச் சந்தித்தார். மூன்று பேரும் சேர்ந்து திருவள்ளுவர் படத்தை உருவாக்க திட்டமிட்டனர். இதற்கான செலவுகளை இராமச்செல்வன் ஏற்றுகொண்டார்.[16]

பின்னர் வேணுகோபால் சர்மா தான் வரைந்த படத்தை முடித்த பிறகு, நாகேசுவரபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் இந்தப் படத்தை வைத்தார். அப்போது காமராஜர்கா. ந. அண்ணாதுரைமு. கருணாநிதிநெடுஞ்செழியன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களும் இந்தப் படத்தைப் பார்வையிட்டு பாராட்டிச் சென்றனர்.

பிறகு இந்தப் படம், 1960இல் கா. ந. அண்ணாதுரையால் காங்கிரஸ் மைதானத்தில் வெளியிடப்பட்டது. பிறகு இதே படம், மத்திய அரசால் தபால் தலையாகவும் வெளியிடப்பட்டது.

பின்பு 1964 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில், வேணுகோபால் சர்மா வரைந்த, திருவள்ளுவரின் உருவத்தை அன்றைய துணைக் குடியரசுத் தலைவரான சாகிர் உசேன் திறந்து வைத்தார். வேணுகோபால் சர்மாவுக்கு பொன்னாடை போர்த்தி விருது வழங்கப்பட்டது. தமிழக முதல்வரான அண்ணாதுரை இவருக்கு "ஓவியப் பெருந்தகை" என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார்.

 

நினைவுச் சின்னங்கள்

இந்தியாவின் தென் கோடியில் தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை
இந்தியாவின் தென் கோடியில் தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை

தமிழ்நாடு அரசு 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை ஒன்று அவரின் நினைவாக நிறுவியுள்ளது. இது முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அமைந்துள்ளது. இந்த சிலையை வடிவமைத்தவர், பிரபல சிற்பி, கணபதி ஸ்தபதி என்பவர்.

சென்னையில் வள்ளுவர் நினைவாக, வள்ளுவர் கோட்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வள்ளுவர் இயற்றிய திருக்குறளின் 1330 குறள்களும், இங்குள்ள குறள் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, கோயில் தேர் போன்ற தோற்றமுடைய நினைவிடமும் உள்ளது.

1960இல் இந்திய அரசு திருவள்ளுவரின் நினைவாக ஒரு அஞ்சல் தலை வெளியிட்டது.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1.  "Dalithmurasu – Children – Education – Study – Sports". www.keetru.com.
  2.  "மாமூலனார் பாடல்கள் 30: சி.இலக்குவனார்".
  3. ↑ 3.0 3.1 The Tamil Plutach: containing a summary account of the lives of the poets and poetesses of southern India and Ceylon from the earliest to the present times, with select specimens of their compositions, Page 102, Simon Casie Chitty – January 1, 1859. Ripley & Strong, printers – Publisher
  4. https://www.udumalai.com/thiruvalluvar-aruliya-sothida-sunthara-sekaram.htm
  5. https://www.nhm.in/shop/1000000015495.html
  6. http://www.noolulagam.com/product/?pid=24226
  7.  http://marinabooks.com/detailed?id=4+1383
  8.  சைவ நற்சிந்தனைகள் - பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
  9.  பெரியார். "keetru.com". www.keetru.com.
  10.  அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும். பொருள்: பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.
  11.  மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் தாளுளான் தாமரையி னாள். பொருள்: ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.
  12.  ValaiTamil. "அருள்மிகு திருவள்ளுவர் திருக்கோவில் Thiruvalluvar Temple Mylapore, சென்னை, Chennai distcit name and temple, temple name in tamil, temple name in english, Temple Contact numbers". ValaiTamil.
  13.  "மாமூலனார் பாடல்கள் 30: சி.இலக்குவனார்".
  14.  திருவள்ளுவமாலை ஒரு போலிநூல். ஒருவரே பலர் பெயரில் எழுதி உருவாக்கப்பட்ட நூல் (மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு 15 ஆம் நூற்றாண்டு, பதிப்பு 2005, பக்கம் 85)
  15.  "திருக்குறள் தமிழ் மக்களின் வாழ்க்கைச் சட்டம் – புலவர் குழந்தை".
  16.  "திருவள்ளுவரின் உருவம் உருவானது எப்படி? இதுவரை எத்தனை உருவங்களில் அவர் வரையப்பட்டுள்ளார்?". பிபிசி தமிழ் (நவம்பர் 06, 2019)


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

இன்று திருவள்ளுவர் தினம். உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றி தமிழுக்கு பார் முழுதும் பெருமை சேர்த்தவர் திருவள்ளுவர். அவரை கௌரவிக்கும் பொருட்டு அன்னை  தமிழுக்கும் அணி சேர்க்கும் விதமாக தமிழக அரசால் பொங்கலுக்கு மறு தினம்  திருவள்ளுவர் தினமாக அறிவிக்கப்பட்டு பல ஆண்டு காலமாக இது கொண்டாடப்பட்டு வருகிறது.

உலக அளவில் அதிகம் மொழி பெயர்க்கப்பட்ட தமிழ் நூல் என்ற பெருமை திருக்குறளுக்கு  உண்டு. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய  அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல்.

வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல  பெயர்களால் அழைப்பர். திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை.

தனிமனிதனுக்கு தேவையானது இன்பவாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது பொருள் சார்ந்த  வாழ்வு. அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன்; திருக்குறளின் மையக்கருத்து இது தான்.

காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார் திருவள்ளுவர் பற்றி குறிப்பிடும்போது வேதங்களை படைத்த பிரம்மனே பாமர மக்களும் அதை புரிந்து கொள்ளு ம்போருட்டு வள்ளுவனாக வந்து 133 அதிகாரம் தந்தான் என்று குறிப்பிடுகிறார்.

உக்கிரப் பொருவழுதியார் “நான்முகன் திருவள்ளுவனாக மாறித் தன் நான்மறையை முப்பொருளாய்ச் சொன்னான்.” என்று சொல்கிறார்.

ஆலங்குடி வங்கனார் என்னும் பெரியவர் “அமுதம் சுவைத்தவர் தேவர் மட்டுமே. திருக்குறளை மக்களும் சுவைக்கின்றனர். எனவை திருக்குறள் அமிழ்தத்தினும் சிறந்தது.” என்று கூறுகிறார்.

பெருஞ்சித்திரனார் “வேதம் தன்னைத் தானே திருக்குறளாகப் பிறப்பித்துக்கொண்டது” என்று கூறுகிறார்.

மாங்குடி மருதனார் என்பவரோ வேதப்பொருளாக விளங்கும் திருக்குறள் ஓதுவதற்கு எளிது, உணர்வதற்கு அரிது, உள்ளுந்தோறும் உள்ளுந்தோறும் உள்ளம் உருக்கும்.

பாரதம் பாடிய பெருந்தேவனார் பாரதமும், இராம கதையும் திருக்குறளுக்கு இணை ஆகா என்று தீர்ப்பே கூறிவிட்டார்.

இப்படி திருக்குறளின் பெருமையை சொல்லிக்கொண்டே போகலாம் எனும்போது அதை படைத்த திருவள்ளுவரின் பெருமையை எவ்வளவு சொல்லலாம்…?

அதை உணர்ந்து தான் ஐயன் வள்ளுவருக்கு கோவில் ஒன்றை அந்தக் காலத்திலேயே எழுப்பிவிட்டார்களோ….?

என்ன வள்ளுவனுக்கு கோவிலா? எங்கே? எப்போது? என்று தானே கேட்கிறீர்கள்?

மூவுலகையும் திருமால் தனது மூன்றடியால் அளந்தார் என்றால், இரண்டே அடியில் அளந்து நம்மை வியக்க வைத்தவர் திருவள்ளுவர். அவருக்கென்றே உள்ள ஒரு தனிச் சிறப்பு வாய்ந்த திருக்கோவில் பற்றி ஒரே பதிவில் எழுதி நம்மால் எழுதிவிட முடியுமா?

இந்த தனிச் சிறப்பு வாய்ந்த கோவில் பற்றியும் அதில் புதைந்து கிடக்கும் அற்புதங்கள் மற்றும் அருள் பற்றியும் இரண்டு மூன்று பதிவுகளாக வெளியிடுவதே பொருத்தம் என்று கருதுகிறேன்.

ஆகம விதிகளின் படி கட்டப்பட்ட பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சென்னையில் உள்ள திருவள்ளுவர் திருக்கோவிலுக்கு நம் தள வாசகர்களை அழைத்துச் செல்வதென முடிவு செய்து உடனடியாக களமிறங்கினோம். நண்பர்கள் பலர் தைத் திருநாளை முன்னிட்டு அவரவர் சொந்த ஊருக்கு சென்றுவிட, நண்பர்கள் ராஜா, மாரீஸ், தள  வாசகர் ரெங்கராஜன், ஆகிய மூவருடன் திருவள்ளுவர் திருக்கோவிலுக்கு செல்ல தயாரானோம்.

திருவள்ளுவர் சென்னையில் உள்ள திருமயிலையில் பிறந்தார் என்பது பலருக்கு தெரிந்திருந்தாலும் அதே திருமயிலையில் திருக்கோவில் ஒன்று உள்ளது பலருக்கு தெரியாது.திருவள்ளுவர் பிறந்த இடம் தற்போது மயிலாப்பூர் என்று வழங்கப்படும் திருமயிலை ஆகும். மயிலையில் அவர் அவதரித்த இடத்திலேயே வள்ளுவருக்கு தனிக் கோயில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே எழுப்பப்பட்டுள்ளது.

கோவில் இருப்பது எங்கே?

ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் லஸ் கார்னருக்கு சற்று முன்பாக (சமஸ்கிருத கல்லூரி அருகே) திருவள்ளுவர் சிலையில் இருந்து (ஆஞ்சநேயர் கோவில் பின்புறம்) 200 மீட்டர் தொலைவில் இரண்டு மூன்று தெருக்களுக்கு அப்பால் அமைந்துள்ளது திருவள்ளுவர் 

திருக்கோவில்.

முகவரி  : திருவள்ளுவர் திருக்கோவில், முண்டகக்கண்ணியம்மன் கோவில் தெரு, திருமயிலை, சென்னை – 600004.

குடியிருப்பு பகுதியின் நடுவே அமைந்திருப்பதால் இப்படி ஒரு கோவில் இங்கே இருக்கிறது என்பதே வெளியே அதிகம் பேருக்கு தெரியவில்லை.

கோவிலின் வெளிப்புற ஆர்ச்சை தாண்டி உள்ளே சென்றால் விசாலமான இட வசதி உண்டு. நமது டூ-வீலரையோ காரையோ தாரளமாக பார்க் செய்யலாம்.

உள்ளே சென்றால் தியான மண்டபம் காணப்படுகிறது. அமைதியாக எவர் தொந்தரவும் இன்றி தியானம் செய்ய ஏற்ற ஒரு சூழ்நிலை. நேரிதிரே நுழைவாயிலை பார்த்தவாறு அமைந்துள்ளது 

கருவறை. கருவறையில் ஐயன் திருவள்ளுவர் மற்ற ஆலயங்களைப் போலவே கருங்கல்லினால் ஆன மூர்த்தமாக எழுந்தருளியுள்ளார்.

அதற்கு முன்பாக வள்ளுவர் மற்றும் வாசுகி ஆகியோரின் உலோகத்தினால் ஆனா உற்சவ மூர்த்தங்களும் உண்டு.

அருகில் பக்கவாட்டில் வள்ளுவரின் துணைவி வாசுகி அன்னைக்கும் தனி சன்னதி எழுப்பப்பட்டுள்ளது. கிழக்கு பார்த்தபடி தான் இரண்டு மூர்த்தங்களும் உள்ளன.

பரம்பரை பரம்பரையாக பல நூறாண்டுகளுக்கும் மேல் தனியாரிடம் இருந்தது இந்த கோவில். பல ஆண்டுகாலம் தினசரி பூஜைகள் நடைபெற்றுவந்துள்ளது. சுதந்திரத்துக்கு பிறகு தான் இந்து அறநிலையத் துறையின் கீழ் வந்தது.

வள்ளுவருக்கு உருவம் கொடுக்கும் முயற்சியை அறிஞர் அண்ணாதுரையின் அரசு தான் மேற்கொண்டது. ஆனால் அதற்கும் முன்பாகவே இந்த கோவிலும் இதில் உள்ள திருவள்ளுவர் விக்கிரகமும் பல நூற்றாண்டுகாலமாக இருந்து வந்துள்ளது. அரசு இப்படி ஒரு முயற்சி எடுப்பது அந்த காலத்தில் அப்போது தகவல்-தொடர்பு வசதிகள் இருந்த சூழ்நிலையில் எவருக்குமே தெரியவில்லை. இப்படி ஒரு கோவில் இங்கே இருக்கிறது… வள்ளுவர் இப்படித் தான் இருப்பார் என்று எடுத்து கூறுவதற்கு கூட எவரும் இருக்கவில்லை. ஆனாலும் அதிசயமாக அரசு கொடுத்த உருவமும் இந்த கோவிலில் உள்ள சிலையின் உருவமும் அச்சு அசல் ஒரே ஒரே மாதிரி வந்திருப்பது வள்ளுவரின் திருவருளே அன்றி வேறு என்னவாக இருக்கமுடியும்?

இக்கோயிலின் முதல் திருப்பணி கடந்த 27.4.1973-ல் முதல்வர் கருணாநிதி தலைமையில் தொடங்கியது. திருப்பணிகளுக்கான புரவலராகவும் கருணாநிதியே பொறுப்பேற்றார். அப்போதைய அறநிலையத் துறை அமைச்சர் மு. கண்ணப்பன், கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் இவ்விழாவில் பங்கேற்றனர் என்பது கோவிலில் காணப்படும் கல்வெட்டு மூலம் தெரியவருகிறது.

 பகுத்தறிவு முதல்வர் துவக்கிய திருப்பணி என்பதால் ஆலயம் என்ற சொல்லை தவிர்த்து நினைவாலயம் என்று பொறித்திருக்கிறார்கள் என்பதை அறியமுடிகிறது. ஆனால் நினைவாலயத்திற்கு எதற்கு குடமுழுக்கும் கும்பாபிஷேகமும்? இதிலிருந்தே ளிவாகிறது 

இது ஆகம விதிகளின் படி பிரம்மனின் அவதாரமான திருவள்ளுவருக்கு எழுப்பப்பட்டுள்ள கோவில் என்று.

இக்கோயிலின் மைய மண்டபம் அருகே வள்ளுவர் பிறந்த இடத்தில் இருந்த இலுப்பை மரம் இன்றும் “தல விருட்சமாக’ உள்ளது. இந்த இடத்தை பாதுக்காக்க வேண்டி இந்த மரத்தைச் சுற்றி கடந்த 6.5.1935-ல் மேடை அமைக்கப்பட்டு, செப்புத் தகடு கவசமாகப் பூணப்பட்டது. 

எம்.கே. கன்னியப்பநாயகர், டி. சுப்பிரமணிய செட்டியார் ஆகியோர் இந்த மேடையை அமைத்ததாக தெரியவந்துள்ளது. காலப்போக்கில் அந்த செப்புத் தகடு விஷமிகளால் களவாடப்படுவது தொடரவே, இறுதியில் அதை சுற்றிலும் கம்பிகளுடன் பாதுகாப்பு சுவர் எழுப்பி பூட்டி வைத்துவிட்டார்கள்.

வள்ளுவர் அவதரித்த இலுப்பை மரத்தடி மேடையில் தனது பெற்றோரான ஆதி-பகவனின் திருக்கரங்களில் மழலையாக உள்ளது போல சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வள்ளுவரும் அவர் துணைவி வாசுகியும் இனிய இல்லறம் நடத்தி உதாரணத் தம்பதிகளாக வாழ்ந்தனர். ஒரு முறை வாசுகி அம்மையார் நீர் இறைக்கும்போது வள்ளுவர் அழைக்க, அப்படியே ராட்டினத்தின் கயிற்றை அவர் விட்டுவிட்டு வர, அவர் மீண்டும் வரும் வரை அந்த கயிறு அப்படியே அந்தரத்தில் நின்றதாம். அந்தளவு கருப்புகரசியாக திகழ்ந்தவர் வாசுகி அம்மையார்.

வாசுகி அவர்கள் நீர் இறைத்ததாக கூறப்படும் புண்ணிய தீர்த்தம் வழங்கிய கிணறு அருகே காணப்படுகிறது. ஆனால் அது நீரின்றி குப்பைக் கூளங்கள் சூழ்ந்து வறண்டு காணப்படுகிறது.

தமிழ் இருக்கும் இடத்தில் சிவ பெருமானுக்கு இடமில்லாமல் இருக்குமா? முத்தமிழ் சங்கத்தின் தலைவன் ஆயிற்றே எங்கள் ஆடலரசன். எனவே இந்த ஆலயத்திற்குள் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியும், காமாட்சியம்மன் சன்னதியும் இருப்பதில் வியப்பில்லை. தவிர நவக் கிரகங்களுக்கும் தனி சன்னதி உண்டு.

திருக்குறள் வாழ்வு வாழ்பவர்களை எந்நாளும் நாங்கள் தொல்லை செய்ய மாட்டோம் என்று அந்த நவக்கிரகங்களும் ஆணையிட்டு சொல்வது போலுள்ளது.

இந்த ஏகாம்பரேஸ்வரர் சன்னதியை உருவமற்ற நவ நாத சித்தர்கள் என்பவர்கள் பிரதிஷ்டை செய்தததாக அறியமுடிகிறது.

ஸ்ரீகாமாட்சி- ஏகாம்பரநாதர் கோயில் திருப்பணியும் நடைபெற்றுள்ளது. திருப்பணிக் குழுத் தலைவராக குன்றக்குடி அடிகளார் இருந்துள்ளார். திருப்பணிகள் நிறைவேற்றப்பட்ட பின், கடந்த 23.01.2001-ல் திருவள்ளுவர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. இதில் அப்போதைய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு.தமிழ்க்குடிமகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றதாக கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இந்த கோவில் தற்போது மயிலாப்பூர் ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மன் கோயிலின் சார்புக் கோயிலாக அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ளது.

கோயிலின் வெளிப்புறத்தில் 2 தோரண வாயில்கள் வள்ளுவர்-வாசுகியின் சிற்பங்களுடன் அமைக்கப்பட்டிருந்தும், சுண்ணாம்புப் பூச்சு கண்டு ஆண்டுக் கணக்கில் ஆனது போல பொலிவிழந்துள்ளது. தற்போது கோவிலுக்கு வர்ணம் அடிக்கும் பணி நடைபெற்றுவருகிறது. கோவிலின் அர்ச்சகர் திரு.ஆறுமுகம் குருக்களிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டோம். நம்மை கீழே அமரவைத்து கோவிலின் வரலாற்றை, அதன் சிறப்புக்களை விரிவாக நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அவர் கூறிய விஷயங்கள் ஒவ்வொன்றும் சிலிர்ப்பை தரக்கூடியவை.

ஒவ்வொரு பாகமாக நமக்கு அழைத்து சென்று சுற்றிக் காண்பித்தார். திருக்குறள் பொறிக்கப்பட்டுள்ள நமது தளத்தின் காலண்டரை அவருக்கு பரிசளித்தோம். கோவிலின் கருவறையில் அது மாட்டப்பட்டுள்ளது. இதை விட நமக்கு பெருமை வேறு என்ன வேண்டும்?

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை

 மாற்றுவார் ஆற்றலின் பின். குறள் 225

விளக்கம் : பசியை பொறுத்துக்கொள்ளும் நோன்பை கடைப்பிடிப்பதவிட பிறரின் பசியை போக்குவது தலை சிறந்தது.

இன்றைக்கு திருவள்ளுவர் தினம் என்பதால் கோவிலுக்கு வருபவர்களுக்கு நமது சார்பில் மதியம் இன்று அன்னதானம் நடைபெறுகிறது. இது பற்றிய எண்ணம் நமக்கு உதித்தவுடன், நம்முடன் வந்திருந்த நண்பர்கள் அதற்க்கு ஆகும் செலவை நால்வரும் சமமாக பங்கிட்டுக்கொள்ளலாம் என்று கூறிவிட்டனர். இதுவும் ஐயனின் திருவுள்ளம் தான்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

தமிழறிஞர்களின் கோரிக்கையை ஏற்றுத் திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்ற வேண்டும் என்று 1971-ம் ஆண்டு அரசிதழில் வெளியிட்டு 1972-ம் ஆண்டில் அதை நடைமுறைப்படுத்தியவர் மு.கருணாநிதி.

திருவள்ளுவரின் அவதாரத் தலமாகக் கருதப்படும் மயிலைத் திருவள்ளுவர் கோயிலைத் திருப்பணி செய்தவர். 1973-ல் தொடங்கிய கோயில் திருப்பணிக்குப் புரவலராகப் பொறுப்பேற்றுதிருப்பணியைச் சிறப்பாக செய்து முடித்தவர்இதுதற்போது மயிலாப்பூர் ஸ்ரீ முண்டகக்கன்னியம்மன் கோயிலின் சார்புக் கோயிலாகஇந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

திருக்குறளைப் படித்து அது போதிக்கும் நெறியைப் பின்பற்றுபவர்கள்வாழ்வில் தலை நிமிர்ந்து வாழ்வார்கள்



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 Thiruvalluvar birth anniversary celebrations: Time to correct historical wrong - I

 
 
 
 
 

BJP Member of Parliament Tarun Vijay has been advocating pan-India recognition for the Tamil language. Greatly influenced by Thirukkural, considered a “Universal Veda” on Humanity, he spoke about the greatness of Sage Thiruvalluvar and his monumental work Thirukkural in Parliament and urged that the birth anniversary of the sage be celebrated nationwide. The demand was immediately welcomed by members cutting across political lines and Human Resource Development Minister Smriti Irani said the government would officially announce the celebration of the divine poet’s birth anniversary. 

 

At the BJP Parliamentary Party meeting, attended by Prime Minister Narendra Modi and party president Amit Shah, it was decided to celebrate Thiruvalluvar’s birth anniversary across the country by holding seminars and symposiums highlighting the great Tamil savant’s contribution. Tarun Vijay also evinced interest in the great poet and freedom fighter Subramania Bharatiyar by approaching the union government to make the poet’s house in Varanasi a national heritage monument. Smriti Irani said the government would also celebrate the birth anniversary of Bharatiyar.

 

While expressing our thanks and appreciations to Tarun Vijay and Smriti Irani from the bottom of our hearts, we would like to draw the attention of the Union Government to the existence of an anomaly - a historical blunder - behind the celebration of Thiruvalluvar’s birth anniversary, which needs to be corrected immediately. With this in mind, we submit this Research Paper urging the Central Government to kindly take it up with the State Government and do the needful at the earliest, so that the Indian people in general and Tamils in particular all over the world can celebrate the divine poet’s birth anniversary on the correct and most appropriate day.  

 

Monumental Blunder by Karunanidhi Government   

 

The Tamil Nadu government has been celebrating Thiruvalluvar’s birth anniversary for more than three decades. But in 1971, the Karunanidhi-led DMK government declared January 15 (second day of Tamil month ‘Thai’) as the birth day of the divine poet on the basis of “Resolutions” passed by a Conference of Tamil Scholars led by Maraimalai Adigal alias Swami Vedachalam in 1921. 

 

As the Dravidian Movement was inimical to the usage of traditional Tamil Years, which have a 60-year cycle, Karunanidhi pushed in a system of “Thiruvalluvar Year” in the guise of bringing “continuity”. Quoting Maraimalai Adigal’s conclusive research that Thiruvalluvar was born in 31 BC, Karunanidhi declared that Thiruvalluvar’s birth year would be officially considered as Tamil Year.

 

However, for his own reasons, Karunanidhi conveniently forgot to take the day (Anusham star of Vaikaasi month) specifically mentioned by Maraimalai Adigal as the birth day of Sage Thiruvalluvar. Without citing any evidence, he declared Thai-1 (first day of Tamil month ‘Thai’) as birth day of Thiruvalluvar, and later, again for his own reasons, changed it to Thai-2 (second day of Thai). Due to the prevailing political climate then and also for the sake of having continuity in accounting the years, the people of Tamil Nadu including scholars, remained silent over the declaration by the DMK government.

 

In 2008, the then Karunanidhi government, again for its own reasons, declared the first day of Thai (Thai-1) as “Tamil New Year Day”. Here again, he mentioned the “resolutions” passed in the same “1921 Conference” led by Maraimalai Adigal alias Swami Vedachalam. It must be noted that Karunanidhi did not mention the day and month when the said conference was held in 1921.     

 

When we delved deep into the archives, we found no such conference was held in 1921! Hence, we created awareness among the public through various media houses and also filed a writ petition against the Karunanidhi government’s declaration of Thai-1 as Tamil New Year. While the proceedings were going on in the Madras High Court, the AIADMK government led by Jayalalitha changed the Tamil New Year back to the traditional Chithirai-1 (first day of Tamil month Chithirai) to the great relief of the Tamil community.  

 

Conference held by Thiruvalluvar Day Forum

 

As we researched various evidences in the archives, we found many details with regards to a Conference of Hundreds of Great Tamil Scholars held on 18-19 May, 1935 at Pachayapas College under the aegis of the Thiruvalluvar Day Forum (Thiruvalluvar Thirunal Kazhakam), in Chennai.

 

This conference, led by Maraimalai Adigal, was attended by many eminent scholars such as K Namachivaya Mudaliyar, V Kalyanasuntharanar, TP Meenakshi Sundaram, Koteeswara Mudaliyar, S Sachidanandam Pillai, B Dawood Shah, ET Rajeswari Ammal, P Kannappa Mudaliyar, T Sengalvarayan, Siva Arunagiri Mudaliyar, M Balasubramania Mudaliyar, Siva Muthukumarasami Mudaliyar, T Sengalvaraya Pillai, Kaazhi Siva Kannusami Pillai, RS Sambasiva Sharma, V Subbaiya Pillai, TP Gopalaratnam, MV Venugopal Pillai, Ninrai Thangavelu Mudaliyar, Minister in Madras Presidency S Muthaiya Mudaliyar, Deivanayakam Pillai, S Vaiyapuri Pillai and A Balakrishna Pillai, et al. More than a thousand persons attended the conference.             

 

In his presidential address, Maraimalai Adigal mentioned that he had arrived at the conclusion that the birth day of Thiruvalluvar was the day on which Anusham star falls in the Tamil month of Vaikaasi. This conclusion was based on the Tamil, indeed Bharatiya tradition, of celebrating anniversaries based on Nakshatra and Thithi (star and day). It could not be a coincidence that May 18, 1935, the day the Conference was inaugurated, was also Vaikaasi Anusham!

 

During the conference proceedings, Maraimalai Adigal never forced the delegates to accept his conclusion. The Conference never mentioned Thiruvalluvar’s birth year as a benchmark for ‘continuity’. The conference didn’t pass any resolution at all – as claimed by Karunanidhi. In fact, Karunanidhi for his own reasons had misled the people by saying that the Conference was held in 1921, when it was actually held in 1935. The Conference had a nine-point agenda and neither “Tamil New Year” nor “Continuity of Years” figured among them. The main purpose was to celebrate Vaikaasi-Anusham as the birth anniversary of Thiruvalluvar every year and feeding the poor people through annadanam on that day.

 

Authentic evidences for Vaikaasi-Anusham

 

We feel that both the Central and State Governments must utilize this God given opportunity to correct the historical wrong committed by the Karunanidhi regime. The doubts and uncertainties over the birth anniversary of Sage Thiruvalluvar must be cleared and settled once and for all. We have collated the following authentic evidences, apart from the above mentioned conference.

 

-        Marai. Thirunavukkarasu, son of Maraimalai Adigal, who wrote his father’s biography, mentions that he had accompanied his father on a trip to Sri Lanka in 1921 and that his father had addressed a seminar on the first day of Thai in Jaffna. Thus, Karunanidhi’s claim falls to pieces. Moreover, Karunanidhi, himself being a Tamil scholar, could not have missed this biography, leave alone the other evidences of the said Conference.

 

-        Following the 1935 Conference, Thiruvalluvar Day Forum celebrated the divine poet’s birth anniversary on the day of Vaikaasi-Anusham under the presidentship of Sri UV Swaminatha Iyer in 1936.

 

-        Francis Whyte Ellis, a civil servant in Madras Presidency during the British period, was a scholar of Tamil and Sanskrit. He documented that Thiruvalluvar was a divine poet and that his birth anniversary was celebrated in the Thiruvalluvar Temple in Mylapore.

 

-        Scholar Thiruthanikai Saravana Perumal Iyer had published Thirukkural in 1837, wherein he noted a proclamation made by the British government announcing Vaikaasi-Anusham as the birth day of Thiruvalluvar.

 

-        The Thiruvalluvar Temple in Mylapore has been celebrating Thiruvalluvar’s birth anniversary every year, right from the beginning to till date, on Vaikaasi-Anusham. Scholar and epigraphist S Ramachandran opines that the Temple must have been built during the 13th century. He says he has seen the original sculpture of Thiruvalluvar, which was unearthed from inside the temple complex in 1974, when the then Karunanidhi government arranged for the renovation of the temple. He added that the sculpture could not be consecrated as it was slightly damaged.  Even today, the old Iluppai tree is there inside the temple, as a remembrance of his place of birth. The hut which was beside the tree was replaced by the temple in which is ensconced a replica of the sage. Maraimalai Adigal made a mention of this fact.

 

-        Periyar EV Ramasami Naicker, who is adored by Dravidian politicians including Karunanidhi as Thanthai (father), has also documented Vaikaasi-Anusham as the birth day of Thiruvalluvar.

 

-        CN Annadurai, former Chief Minister and founder of DMK, had once led the celebration of Thiruvalluvar Day on Vaikaasi-Anusham at Seven Wells area in Chennai.

 

-        Pandit KP Ratnam, a great Tamil scholar from Colombo, founded the Tamil Marai Kazhakam (Tamil Vedic Forum) and through it spread the message worldwide that Thiruvalluvar’s birth anniversary must be celebrated on the auspicious day of Vaikaasi-Anusham. Tamil scholars across the world accepted his message and followed it in letter and spirit.

 

-        On Vaikaasi Anusham on 2 June 1966, during the Congress regime, the then President Dr S Radhakrishnan unveiled the statue of Thiruvalluvar in Mylapore in the presence of the then Chief Minister of Tamil Nadu Bhaktavatsalam and the then Mayor of Chennai Mr Minor Moses. Bhaktavatsalam also declared Vaikaasi-Anusham as a holiday to mark the birth anniversary of the sage.

 

-        We have also, via an RTI application, obtained information from the HR&CE Department of Tamil Nadu government confirming that the Thiruvalluvar Temple in Mylapore, which is under its administration, has been celebrating Vaikaasi-Anusham as the birth day of Thiruvalluvar.

 

Therefore, the mistake committed by the then Tamil Nadu government must be undone. The present Central and State Governments should put this opportunity to good use.

(To be continued…)

Professor Sami Thiagarajan is President of the Dravidian Intellectual Forum, Chennai; BR Gauthaman is Director of the Vedic Science Research Center, Chennai

Translation: R Sudarshan & BR Haran   



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

முரசொலி 2.8.09 வந்த செய்தி
"மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் - வாசுகி கோயில் பல ஆண்டுகளாகப் பராமரிக்கப் படாததால் பொலிவை இழந்து வருகிறது" என்று தினமணி நாளேடு கவலையுடன் ஒரு செய்தி விமர்சனக் கட்டுரையை இரண்டாம் பக்கத்தில் புகைப்படங்களுடன் வெளியிட்டிருக்கிறது.

அது மட்டுமா?

"மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் குறித்து இளைய தலைமுறையினருக்கு எவ்விதத் தகவலும் கிடைக்க இயலாத நிலை உள்ளது. அறநிலையத்துறையின் பராமரிப்பில் உள்ள இக்கோயிலுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு எதுவும் இதுவரை இல்லை. அறநிலையத் துறை மற்றும் சுற்றுலாத் துறையின் வரைபடங்கள், விளக்கக் கையேடுகள், மற்றும் இணையதளங்களில்கூட வள்ளுவர் திருக்கோயில் பற்றிய விவரங்கள், படங்கள் எதிலும் இடம் பெறவில்லை" என்று அக்கறை பொங்கிட குறைகள் என்று ஒரு பட்டியலையும் வெளியிட்டு

புறக்கணிக்கப்படுகிறதா?

- என்று ஒரு கேள்வியையும் எழுப்பியிருக்கிறது தினமணி.

***

சாலை வசதி இல்லை - குடிதண்ணீர் வழங்கப்படவில்லை - என்றெல்லாம் பத்திரிகைகளில் வாசகர்கள் கடிதம் எழுதுவது - பத்திரிகைகளே இதுபோன்ற குறைகளைக் களையும் வகையில் சிறப்புக் கட்டுரைகள் எழுதுவது என்பதெல்லாம் புதிதல்ல - பத்திரிகைகள் சுட்டிக்காட்டும் குறைகளை - உடனுக்குடன் அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதும் வழக்கமான ஒன்றே!

‘தினமணி’க்கு திடீரென்று திருவள்ளுவர் கோயில் பற்றி இவ்வளவு கவலையும் - அக்கறையும் ஏற்பட்டிருக்கிறதே; என்ன காரணம்?

குறைகளை சுட்டிக்காட்டி - உரிய பரிகாரம் காணவேண்டும் என்ற நல்லெண்ணமா?

பெங்களூருவில் 18 ஆண்டுகளாய் திறக்கப்பட முடியாமல் கோணிப்பைகளால் மூடிவைக்கப்பட்டிருந்த அய்யன் திருவள்ளுவர் சிலையை - ஆகஸ்ட் 9ந் தேதி குறளுக்கு உரையும் - குறளோவியமும் எழுதி - வள்ளுவர் கோட்டம் அமைத்து - கன்னியாகுமரி கடலில் அய்யன் திருவள்ளுவருக்கு திருவுருவச் சிலை அமைத்த முதல்வர் கலைஞர் திறந்து வைக்கவிருக்கிறார்.

இது - கலைஞரைப் பிடிக்காதவர்கள்- தி.மு.க. எதிர்ப்பாளர்கள் சிலருக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதிலே -

‘தினமணி’க்கு ஒரு பங்களிப்பு வேண்டாமா? அதனால்தான்,

திடீரென்று தினமணி - மயிலாப்பூர் திருவள்ளுவர் ஆலயம் பராமரிப்பில்லாமல் பொலிவு இழந்து வருவதாகவும் - அது புறக்கணிப்போ என்ற சந்தேகம் எழுவதாகவும் - புழுதி கிளப்பி கலைஞர் எதிர்ப்பாளர் - தி.மு.க. துவேஷிகளுக்குத் தீனி போடும் வகையில் செய்தி வெளியிட்டு வழக்கமான தனது சொந்த வயிற்றெரிச்சலையும் அதன்மூலம் கொட்டித் தீர்த்திருக்கிறது! அவாளுக்கே உரிய சாமர்த்தியத்தையும் நிலைநாட்டி இருக்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

திருவள்ளுவர் திருநாள் அளித்த நாவலர் சோமசுந்தர பாரதியார்

 

 

navalar_bharathi_seated.jpg

Navalar Somasundara Bharathiyar (with Chozhavandan R. Srinivasavaradan and Madurai V. G. Srinivasan. Photo courtesy: R. A. Padmanabhan, Chithira Bharathi, Publisher: Pollachi N. Mahalingam).
http://nganesan.blogspot.com/2012/06/tiruvalluvar-tirunaal-navalar.html

In Tamil Nadu, there is a raging controversy between Jayalalitha and M. Karunanidhi about Tiruvalluvar AaNDu. I wrote a piece in Vallamai e-zine giving some details on who gave the Thai Pongal date:
http://www.vallamai.com/literature/articles/19155/
Subsequently it was printed in Tamil Nadu in Viduthalai, a magzaine started by Periyar EVR, and Kalaignar M. Karunanidhi read the essay and quoted it in Kalaignar TV & he mentioned about it also in his daily letter to UdanpiRappu in Murasoli paper (22-April-2012).

After the Vallamai article, "TiruvaLLuvar tirunAL tanta Naavalar Somasundara Bharathiyar" I wrote another in the series for Vadakkuvaasal, a print magazine from Delhi, suggesting a compromise: Tiruvalluvar TirunaaL on Pongal day, and Tolkaappiyar TirunaaL on Chitthirai 1 (traditional Tamil New Year day). Note that I mention extensively Jaina contributions to Tamil, and the North-South megalithic expansion into sites like KoDumaNam & Porunthal (Kongu), Adichanalluur (Porunai) etc.,

Next article I'm writing is about the Tamil month name, தை (tai) which is a word of pure Tamil/Dravidian origins. and is not a Sanskrit word as evidenced from Sangam literature.

Any learned comments welcome,
N. Ganesan


navalar_somasundara_bharathi.jpg
திருவள்ளுவர் பிறந்தநாள் தேர்வில் நாவலர் பாரதியார் பங்கு: தனித்தமிழ் இயக்கத்தைப் படைத்தவர்களில் இரு தமிழ்ப் பேராசிரியர்கள் முக்கியமானவர்கள். அவர்களில் முதல்வர் சென்னையில் வாழ்ந்த மறைமலை அடிகளார். இரண்டாமவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராய் வீற்றிருந்த பேராசிரியர் நாவலர் சோமசுந்தர பாரதியார் (1879 – 1959). நாவலர் பாரதியாரும், பாவலர் சுப்பிரமணிய பாரதியாரும் பள்ளித் தோழர்களாய் எட்டயபுரத்தில் வளர்ந்தபோது இருவருக்கும் பாரதி என்ற பட்டத்தை ஈழப்புலவர் வழங்கினார். கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரிடம் தூத்துக்குடியில் பணிபுரிந்து காந்தியடிகளைத் தென்தமிழ்நாட்டுக்கு அழைத்துவந்து சொற்பொழிவு நிகழ்த்தியவர் நாவலர். நெல்லையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகித்தார். ஆனால், இராஜாஜி அரசாங்கம் 1937-ல் பள்ளிகளில் இந்தியைப் புகுத்தியபோது காங்கிரசை விட்டு விலகி இந்தி எதிர்ப்புப் போருக்குத் தலைவரானார். சென்னையில் 1937-ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டிற்கு நாவலர் பாரதியார் தலைமை தாங்கினார். பரிதிமாற்கலைஞர், மறைமலையடிகள் இவருக்கு ஆசிரியர். எனவே, தனித்தமிழில் அழகிய நூல்கள் பல எழுதினார், தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்துக்குப் புத்துரையும், கம்பன் திறனாய்விலும் புகழ்பெற்றவர். அறிஞர் அண்ணா கம்பன் காப்பியத்தை எரிக்க வேண்டும் என்றபோது அதை மறுதலித்து சேலத்தில் வாதாடியவர் நாவலரே. ’கம்பனிற் சிறந்த கவி தமிழில் இல்லை’ என்ற கொள்கையுடைய தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் சோமசுந்தர பாரதி ஆவார். ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் மன்றம் 1944-ல் நாவலர் என்ற பட்டத்தை வழங்கியது. ஈழத்துப் புலவர் சங்கத்தாரால் பாராட்டப்பெற்ற தமிழ்நாட்டுப் புலவர் முனைவர் சோமசுந்தர பாரதி ஒருவரே.
திருவள்ளுவர் தொடராண்டு தை முதல் நாள் என்றும், திருவள்ளுவர் பிறந்தநாள் எனத் தை இரண்டாம் தேதி என தமிழ்நாடு அரசாங்கம் 1971-லிருந்து செயல்படுத்தக் காரணம் நாவலர் சோமசுந்தர பாரதியாரின் தலைமையில் தனித்தமிழ் இயக்கத்தின் தமிழறிஞர்கள் முன்னெடுத்த முயற்சிகள் ஆகும். 1981-ல் எம்ஜிஆர் மதுரை உலகத் தமிழ் மாநாட்டின்போது அரசின் எல்லா அலுவல்களிலும் திருவள்ளுவர் ஆண்டைப் பயன்படுத்த ஆணையிட்டார். 2003-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பொங்கல் வாழ்த்துச் செய்தியிலும் திருவள்ளுவர் திருநாள் இடம்பெறுகிறது:
“உழுவார் உலகத்தாருக்கு அச்சாணி என்பது உலக பொதுமறை தந்த வள்ளுவப் பெருமானின் வாக்கு. வள்ளுவரின் வாக்குக்கிணங்க உலகுக்கு உணவூட்டும் உன்னத தொழிலாம் உழவுத் தொழிலின் மேன்மையை உணர்ந்த தமிழ் மக்கள் திருவள்ளுவர் திருநாளையும், உழவர் திருநாளையும் ஒன்றன்பின் ஒன்றாக உவப்புடன் கொண்டாடி வருகிறார்கள். தை முதல் நாளை பொங்கல் திருநாளாகவும், தை 2-ம் நாளை திருவள்ளுவர் திருநாளாகவும், தை 3-ம் நாளை உழவர் திருநாளாகவும் கொண்டாடுகின்ற மரபு பொருள் பொதிந்த மரபாக விளங்குகின்றது. இந்த பொங்கல் திருநாளில் காவிரி நீரில் நமக்குரிய பங்கை நாம் பெற்றே தீருவோம் என உறுதி ஏற்போம்.”
”மறைமலை அடிகளார் தை மாதம் பற்றியோ, தமிழ்ப் புத்தாண்டைப் பற்றியோ குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. 1935-ல் இந்தக் கூட்டத்தில், திரு.வி.க. உட்பட மிகப் பெரிய தமிழ் சான்றோர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் எடுத்த முடிவு, திருவள்ளுவர் தினம் வைகாசி அனுஷம் என்பதுதான்.” என தமிழறிஞர்களைப் பாராட்டி விருதளித்த 2012 தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். வரலாறு.காம், தமிழ்ஹிந்து (பால. கௌதமன்) வானியல், பழந்தமிழ், கல்வெட்டுக்கள் துணையுடன் இணையதளங்களில் எது தமிழ்ப் புத்தாண்டு? என்ற வாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ”வள்ளுவர் பிறந்த மாதமாக மறைமலையடிகள் குறித்த வைகாசியை, திருவள்ளுவர் திருநாட்கழகத்தினர் கொண்டாடிய வைகாசியை, பக்தவத்சலம் தலைமையிலான தமிழக அரசு அறிவித்த வைகாசியை, அண்ணா உடன்பட்ட வைகாசியைக் கருணாநிதி மாற்றி, திருவள்ளுவர் தினமாகத் தை இரண்டாம் நாளை 1971-ஆம் ஆண்டு அறிவித்தார். கிறிஸ்துவுக்கு 31 ஆண்டுகள் முந்திப் பிறந்தவர் திருவள்ளுவர் என மறைமலையடிகள் சொல்லிய ஆண்டை மாற்றாத கருணாநிதி, அடிகள் குறித்த வைகாசி மாதத்தை மட்டும் மாற்றித் தை என அறிவித்தார்.” (சாமி. தியாகராசன், திராவிடச் சான்றோர் பேரவையின் தலைவர் கட்டுரை, தினமணி, 14 ஏப்ரல் 2012).[1]
ஆனால், தைப் புத்தாண்டு, திருவள்ளுவர் திருநாள் 20-ஆம் நூற்றாண்டுத் தேர்வில் நாவலர் பாரதியார் போன்ற தனித்தமிழ் இயக்கப் புலவர்களின் பங்களிப்பையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கம் மறைமலை அடிகள் தந்தார். 1935-ல் அடிகள் திருவள்ளுவர் திருநாள் கழக மாநாட்டின் தமது தலைமை உரையில் “கிறித்துப் பிறப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்து கண்ட முடிவாகும்” எனக் குறிப்பிடுகின்றார். “தமிழர்க்கெனத் தனி ஆண்டுமுறை வேண்டும் என்றும், அவ்வாண்டு முறை உலகம் போற்றும் ஒப்பற்ற மறை நூலை ஆக்கிய தமிழ்ப் பேராசிரியர் திருவள்ளுவர் பெயரால் அமைதல் வேண்டும் என்று ஆராய்ந்த அடிகள் அதன் காலத்தை கி.மு. 31 எனத் தீர்மானித்தார். திருவள்ளுவர் திருநாள் வைகாசித்திங்கள் பனை (அனுஷம்) நாள் எனவும் திடப்படுத்தினார்” (அடிகளின் மகன் எழுதிய மறைமலை அடிகள் வரலாறு). இரண்டு ஆண்டுகள் கழிந்தபின்னர் 1937-ல் திருச்சியில் நடந்த மாநாட்டில் அடிகளின் மாணவர் ஆன நாவலர் சோமசுந்தர பாரதியார் திருவள்ளுவர் பிறந்தநாளையும், தொடராண்டின் முதல்நாளையும் தைப் பொங்கலுக்கு மாற்றுகிறார் என்பது இருக்கும் சான்றாதாரங்களால் தெரிய வருகிறது. நாவலர் மறைவின் பின் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் திருவள்ளுவர் ஆண்டு, திருவள்ளுவர் பிறந்தநாளாகத் தை இரண்டாம் நாள் தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டிய புலவர்களுள் தலைமை வகித்தவராய் விளங்குகின்றார்.
திருவள்ளுவர் பிறந்தநாள், திருவள்ளுவர் ஆண்டாகத் தைப் பொங்கல் ஆன 20-ஆம் நூற்றாண்டுச் சரிதம்: 1937 டிசம்பர் 26-இல் திருச்சியில் ‘அகில இந்தியத் தமிழர் மாநாடு’ நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடியது. அதே ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நாவலர் பாரதியார் தலைமையில் சென்னையில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடந்தது நினைவுகூரலாம். திருச்சி மாநாட்டில் பெரியார் ஈவேரா, கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் உமா மகேசுவரனார், பேரா. கா. சுப்பிரமணியம், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், திரு.வி.க. மறைமலை அடிகளார், மதுரை பி.டி. இராசன், ஆர்க்காடு இராமசாமி முதலியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பட்டுக் கோட்டை அழகிரி உட்படப் பலரும் பங்கேற்றனர். மறைமலை அடிகளார் போன்றோர் கொண்ட தமிழறிஞர் அவையில் தை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு என்றும், திருவள்ளுவர் திருநாள் என மாட்டுப்பொங்கல் தினத்தைக் கொண்டாடவும் நாவலர் விழாவின் தலைமை உரையில் வலியுறுத்தினார். 1949 தைப் பொங்கலின் போது சென்னையில் திருக்குறள் மாநாடு பல தமிழறிஞர்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடந்துள்ளது. திருவள்ளுவருடன் தைப்பொங்கல் பெரிய அளவில் தமிழறிஞர்களால் இணைக்கப்படுவது 1949-ஆம் ஆண்டிலேதான் தொடங்குகிறது [2]. பள்ளிக் கல்வி இல்லாத தமிழர்களுக்கும் தனித்தமிழ் இயக்கத் தேர்வாகிய தைப்பொங்கலுடன் திருவள்ளுவரைச் சேர்த்தலை 1949-ஆம் ஆண்டுப் பொங்கலின் திருக்குறள் மாநாடு ஆரம்பித்தது என்று கருதலாம்.
சங்க இலக்கியங்களை அழிவில் இருந்து காத்து அருமையாக அச்சிட்ட உ. வே. சாமிநாதய்யர் அவர்களும் தமிழ்ப் பேராசிரியர் நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களின் திருவள்ளுவர் வரலாற்றாராய்ச்சியைப் பாராட்டிய நிகழ்ச்சி 1939-ல் நடந்திருக்கிறது. அதைப் பற்றி விளக்கமாகப் பதிவு செய்துள்ளவர் கி. ஆ. பெ. விசுவநாதம் ஆவார். கோயம்புத்தூரில் ’திருவள்ளுவர் படிப்பகம்’ என்ற அமைப்பு அவரை அழைத்து நீண்ட சொற்பொழிவை பிப்ரவரி 1953 ஏற்பாடு செய்தனர். பிரபல விஞ்ஞானி ஜி. டி. நாயுடு அவ்விழாவில் முத்தமிழ்க் காவலரின் பேச்சை ஒலிநாடாக்கருவி (spool tape recorder) கொண்டு பதிவுசெய்துள்ளார். அப்பேச்சை ஒலிநாடாவில் கேட்டு எழுதி 1953 நவம்பரில் திருவள்ளுவர் படிப்பகத்தார் கோவை மாநகரில் அச்சுப் புத்தகமாகப் பிரசுரித்தனர். அது பின்னர் பாரி நிலையத்தாரால் பல பதிப்புகளாய் வெளியாயின. வள்ளுவர் திருநாள், ஆண்டு உருவாக்கத்தில் நாவலர் பாரதியாரின் பெரும்பங்கு இந்நூலால் பெரிதும் தெரிய வருகிறது. 2012-ல் நூற்றாண்டு காணும் மு.வ.வும், ஔவை துரைசாமிப் பிள்ளையும் நூலுக்கு முன்னுரை அளித்துள்ளனர். எனவே, விரிவாக கி. ஆ. பெ. விசுவநாதம், வள்ளுவரும் குறளும், (கோவை, 1953) இங்கே பதிவு செய்வதில் மகிழ்வெய்துகிறேன்:
வள்ளுவரும், குறளும் (முதற்பதிப்பு: 1953, கோவை. 8-ஆம் பதிப்பு 1966, சென்னை பாரிநிலையம்)
 
முதற்பதிப்புரை:
வள்ளுவன் வாய்மொழி குறளோடு நிற்கின்றது. அது வாழ்வோடு ஒன்ற வேண்டும் என்பது எங்கள் கருத்து. அறம் வளர, அமைதி நிலவ, இன்பம் பெருக, குறள்நெறி தழைக்க வேண்டும். வள்ளுவர் படிப்பகம் அதற்கென்றே தொண்டு செய்து வருகின்றது.
“வள்ளுவரும் குறளும்” என்ற இந்நூல் படிப்பகத்தின் ஆண்டுவிழாவில் அறிஞர் கி. ஆ. பெ. விசுவநாதம் பேசியது. அது ஓர் சிறந்த நூலாக அமைந்திருக்கிறது. சிறியர், பெரியர், செல்வர், வறியர், ஆண், பெண் ஆகிய அனைவருடைய வாழ்வுக்கும் வேண்டிய செய்திகள் பல இந்நூலில் குவிந்து கிடக்கின்றன. ஆண்டு விழாவுக்கு வந்திருந்து, விழாவைச் சிறப்பித்து, இப்பேச்சினை ஒலிப்பதிவு செய்து அச்சிட்டு வழங்கிய வள்ளல் தமிழகத்தின் அறிஞர், உலக விஞ்ஞானி, உயர்திரு. G. D. நாயுடு அவர்களின் அருந்தொண்டிற்கு எங்கள் அன்பு கலந்த நன்றி.
அணிந்துரையும் முன்னுரையும் வழங்கிய அறிஞர் பெருமக்களுக்கு வணக்கம்.
 
கோவை -                                                                                                                                                              தங்கள்,
1-11-1953 –                                                                                                                    திருவள்ளுவர் படிப்பகத்தார்
வள்ளுவரும் குறளும்
 
அன்பும் பிரியமும் உள்ள தாய்மார்களே! பெரியோர்களே! அன்பர்களே!
உங்கள் அனைவருக்கும் இந்த நல்ல நாளிலே எனது தாழ்மையான வணக்கம். கோவை அனுப்பர்பாளையம் திருவள்ளுவர் படிப்பகத்தின் மூன்றாவது ஆண்டு விழா, பெரியோர்களாகிய உங்கள் முன்பு இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விழாவிலே பங்குபெறும் பேறு எனக்குக் கிடைத்தமைக்காக உள்ளபடியே நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த விழாவில் நான் கலந்து கொள்வதை ஒரு பெரும் பேறாகவும் கருதுகின்றேன். திருவள்ளுவர் படிப்பகம் மூன்று ஆண்டுகளாக இந்நகரில் நடந்து வருவதும், ஆங்கிலம் படித்து அலுவல்களிலே இருக்கின்ற நல்ல தமிழ் இளைஞர்கள் இதிற்பங்கு பெற்றுத் திருக்குறள் வகுப்பை நடத்தி அதிற் படித்து வருவதும், எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் மகிழ்ச்சியளிக்கக் கூடிய செய்திகளாகும்.
திருவள்ளுவர் படிப்பகத்தையும், திருவாளர்கள் சி. கே. சுப்பிரமணிய முதலியார், சி. எம். இராமச்சந்திரன் செட்டியார், அ. கந்தசாமிப் பிள்ளை போன்ற பழம்பெரும் புலவர்களையும் கொண்டது இந்த நகரம். சிறந்த புலவர்களைக் கொண்டு திருக்குறள் வகுப்பை நடத்திக் கொண்டு வருகின்ற கழகத்தைச் சேர்ந்த நீங்கள் திருவள்ளுவரைப் பற்றியும் திருக்குறளைப் பற்றியும் தெரிந்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன் என்றாலும் என்னை அழைத்து இதைச் சொல்லும்படி செய்ததைவிட, ஒரு புலவரை யழைத்துச் சொல்லச் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து. மற்றும் என்னை ஏன் அழைத்துச் சொல்லச் சொன்னீர்களென்றால், திருக்குறள் புலவர்களுக்கு மட்டுமே சொந்தமல்ல, புகையிலை வியாபாரிகளுக்கும் சொந்தம் என்று காட்டுவதற்காக அழைத்திருக்கின்றீர்கள் என்றே நான் கருதினேன். அது உண்மையானால், புலவர்களிடத்திலிருந்து திருக்குறளைக் கொள்முதல்செய்து பொதுமக்களிடம் விற்பதுதான் வியாபாரிகளின் கடமையாக இருக்கும்.
நான் அறிந்த மட்டில் சில ஆண்டுகள் ஆராய்ந்து கண்டுபிடித்த சில செய்திகளைக்கொண்டு எனது கருத்தை உங்கள் முன்பு கொட்டிக் குவிக்கலாம் என்று எண்ணுகிறேன். இங்கு பேச்சாளர் பலரைப் போடவில்லை. “பலரைப் போட்டால் ஒருவரிடமும் ஒன்றாவது சரியாகக் கேட்க முடிவதில்லை. ஆகவே, ஒருவன் தான் பேச வேண்டும். அதுவும் நெடுந்நேரம் பேசவேண்டும்” என்று படிப்பகத்தின் தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். அதன்படியே பேச ஒப்புகிறேன், பேச்சு முடிகிற நேரம் எதுவென்று எனக்குத் தெரியாது. யாராகிலும் ஒருவர் இருவர் அப்படி எழுந்திருந்து போகத் தலைகாட்டுவதுதான் நான் பேச்சை நிறுத்தும் நேரம் என்று முன்னதாகவே இப்பொழுது உங்களிடம் சொல்லிக் கொள்ளுகிறேன். பேச்சின் தலைப்பு “வள்ளுவரும் குறளும்” என்பது. பேச்சின் குறிக்கோள் ‘நீங்கள் அனைவரும் திருக்குறளைப் படிக்க வேண்டுமென்பது. பேசுவதின் கருத்து ‘வள்ளுவர் உயர்ந்தவர், குறள் சிறந்தது’ என்பது. பேச்சினுடைய பலன் இனிமேல் உங்களிடத்திலே நாங்களெல்லாம் கண்டு மகிழப் போவது.
முதலில் பேசவேண்டுவது வள்ளுவரைப்பற்றி. அவரைப்பற்றிச் சொல்லவேண்டியது சில சொற்கள்தான். வள்ளுவர் பலர்; திரு சேர்ந்த வள்ளுவர் ஒருவர். குறள் பல; ஆனால், திரு சேர்ந்த குறள் ஒன்றுதான் உண்டு. திரு அடைமொழியாகச் சேர்ந்து தனிச்சிறப்பை யளிக்கின்ற பெயர்கள் தமிழ் நாட்டிலே பல உள. பல கோவை உண்டு நூல்களிலே. திரு சேர்ந்த கோவை ஒன்றே ஒன்றுதான். அது திருக்கோவை. பதிகள் பல உண்டு தமிழ்நாட்டிலே; ஆனால் திரு சேர்ந்த பதி திருப்பதி ஒன்றுதான். வாசகம் பல; ஆனால் திரு சேர்ந்த வாசகம் ஒன்றே ஒன்று. அது திருவாசகம். வள்ளுவர் என்று சாதியாலும் பெயராலும் பலர் இருந்தார்கள். வள்ளுவர் என்றால் பலரைக் குறிக்கும். திரு சேர்ந்த அந்தப் பெயருக்கு உரியவர் ஒருவர்தான். ‘திரு’ தனிச் சிறப்பு. அதைப் பெற்ற வள்ளுவர் திருவள்ளுவர்.
அவர் நமது நாட்டிலே கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர். இன்று (15-2-1953) கிறிஸ்து பிறந்து ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பத்து மூன்று ஆண்டுகளாயின. அதற்கு முன்னே பிறந்தவர் வள்ளுவர். அவர் பிறந்து 1984 ஆண்டுகளாயின. அவரைப் பற்றிய கதைகள் தமிழ்நாட்டிலே பல. அவையனைத்தும் அறிஞர்களாலே வெறுத்து ஒதுக்கப் பெற்றவைகள். திருவள்ளுவரைப் பற்றித் தமிழ்நாட்டில் வழங்குகின்ற கதைகள் கணக்கற்றவை. மயிலாப்பூரில் பிறந்தார் என்பது ஒரு கதை; ஆதி என்ற புலைக்குடி மகளுக்கும் பகவன் என்ற உயர்குடி மகனுக்கும் பிறந்தார் என்பது மற்றொரு கதை. ஏலேலசிங்கனாலே எடுத்து வளர்க்கப் பெற்றார் என்பது இன்னொரு கதை. அவர் மயிலாப்பூரில் கோயில் கொண்டார் என்பது வேறொரு கதை. அவர் வாசுகி என்ற ஒரு பெண்ணை மணந்தார்; அந்த அம்மாள் கிணற்றிலே தண்ணீரை இறைத்தார்கள்;‘அடி!’ என்பார். குடத்தை விட்டுவிட்டு ஓடி வருவார்கள்; திரும்பிப் போய்த்தான் பாதியில் தொங்கும் குடத்தை இழுப்பார்கள் என்பது இன்னொரு கதை. எத்தனையோ கதைகளைத் தமிழ்நாட்டில் புகுத்தி வைத்தார்கள். இந்தக் கதைகளால் உங்களுக்கும் நமக்கும் ஆவதென்ன? “உண்மையான வரலாறு எது?” என்ற ஐயப்பாடு தமிழ்நாட்டிலே உள்ள புலவர் பெருமக்களுக்குத் தோன்றியது.
“வள்ளுவர் வரலாறு எது?” என்று அறியப் புலவர்கள் அனைவரும் கூடினார்கள். கூடிய நகரம் சென்னை; கூடிய இடம் பச்சையப்பன் கல்லூரி; கூடிய நாள் 1939 மார்ச் 31. தலைமை வகித்தவர் மகாம்கோபாத்தியாய உ. வே. சாமிநாதய்யர். வந்திருந்த புலவர்கள் 530-க்கு மேற்பட்டவர்கள். பேசியவர் 11 பேர். 10 பேர் பேசியும் கூட எவரும் சரி என்று ஒப்பவில்லை. பதினொன்றாவதாகப் பேசியவருடைய பேச்சுதான் வள்ளுவருடைய உண்மையான வரலாறாக இருக்கவேண்டுமென்று கூட்டத்தினர் ஒப்பினர். கூட்டத்தினர் என்ன? தலைமை வகித்திருந்த உ.வே. சாமிநாதய்யர் அவர்களே எழுந்திருந்து ‘இது தான் சரி’ என்று பேசியவரை நெஞ்சோடு நெஞ்சம் இறுகத் தழுவிக் கட்டிக்கொண்டு மக்களுக்கு அறிவித்தார். அப்புறம் வசிஷ்டரே இராஜரிஷி என்று ஒப்புக்கொண்ட பிறகு உங்களுக்கும் நமக்கும் அதிலே கருத்து வேறுபாடு எதுவும் இருக்க முடியுமா? ஒப்ப வேண்டியதுதான். அப்படிப் பேசிய பெருமகன் பசுமலைப் பேராசிரியர் சோமசுந்தர பாரதி. அந்தப் பேச்சினை, உடனே மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் குறித்துக்கொண்டு, மதுரைக்குச் சென்று அச்சடித்து வழங்கினார்கள். உரிமையைப் பெற்றுக் கொண்டுவிட்டார்கள். விலை நான்கணா விதிக்கப் பெற்றது. இப்படிச் சொன்னதனாலேயே நீங்கள் ஒரு கடிதம் எழுதிப் போட்டுவிடாதீர்கள், புத்தகம் வேண்டுமென்று. பதிலே வராது. நேரிலே போய்க் கேட்கலாம் என்று துணிந்து போனால் புத்தகம் அங்கு இருக்காது. நாங்கள் அச்சடிக்கிறோம் என்று கேட்டாலும் அச்சடிக்கிற உரிமையும் கொடுக்கமாட்டார்கள். இது இன்று அவர்கள் செய்யும் நல்ல தமிழ்த்தொண்டு!
அவ் வரலாற்றினுடைய தொகுப்பு இதுதான். “வள்ளுவர் ஒரு சிறந்த தமிழ் மகன். நல்ல வேளாண்குடி மரபினர். அவர் பிறந்தது, வாழ்ந்தது, இறந்தது அனைத்தும் மதுரை. அவர் பாண்டிய மன்னனுக்கு அரசனது உள்படு கருமத் தலைவராக (Private Secretary) இருந்தவர். அதாவது, அரசனது கருத்தை மக்களுக்கு அறிவிக்கும் தொழிலைப் பெற்றிருந்தவர். இந்தத் தொழில் காரணமாகவே வள்ளுவர் என்ற பட்டத்தைப் பாண்டியனால் பெற்றவர். நல்ல வேளாண்குடி மகளை மனைவியாய்ப் பெற்றவர். உலகத்தை நோக்கி ஒரே நூலை நன்றாகச் செய்து கொடுத்து நம்மை விட்டு மறைந்தவர்.” இதுதான் அந்நூலின் தொகுப்புக் கருத்து. வள்ளுவரைப்பற்றி அறிய இது போதும்.”'
 
————————————————————————————————————————————————————————–
நாவலர் 1959-ல் மறைந்துவிட்டார். அவர் தலைமையில் தனித்தமிழ் இயக்கத்தவர் திருவள்ளுவர் தொடராண்டு என எடுத்த முடிவுகளைக் கி. ஆ.பெ. விசுவநாதம், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், பேரா. கா. சு. பிள்ளை, டாக்டர் மு.வ., முனைவர் சி. இலக்குவனார் போன்றோர் பரப்புரை இடையறாது 1960களில் செய்துவந்தனர். 49 தமிழ் அறிஞர்களும் புலவர்களும் சான்றோர்களும் [3] கொண்ட தமிழகப் புலவர் குழு 9.5.1971இல் திருச்சியில் நடந்த கி.ஆ.பெ. விசுவநாதம் தலைமையில் குழுவின் முப்பதாம் கூட்டத்தில் பொங்கல் பெருநாள் ஒரு வாரம் முழுதும் விழாவாகக் கொண்டாடல் வேண்டும் என்று முடிவு செய்தது. அதன்படி பொங்கல் பெருநாள். தமிழர் திருநாள் -பொங்கல் பெருநாள்: மார்கழி இறுதி நாள் : போகி விழா, தை 1 : தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா, தை 2 : திருவள்ளுவர் விழா, தை 3: உழவர் விழா, தை 4 : இயல்தமிழ் விழா, தை 5: இசைத்தமிழ் விழா, தை 6 : நாடகத் தமிழ் விழா.
1971-ல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பில் திருவள்ளுவராண்டு செயல்படத் தொடங்கியது. தமிழறிஞர் பலர் பாராட்டினர். டாக்டர் மு. வ. அவர்கள் புதிதாக பொங்கலில் பிறக்கும் திருவள்ளுவர் ஆண்டுப் புத்தாண்டு பற்றி எழுதினார்: ”இன்று பொங்கல் என்று திருவிழாவைக் கொண்டாடுகிறார்களே! என்ன காரணம் தெரியுமா? ஒருவாறு தெரியும். அறுவடை யெல்லாம் முடிந்துவிட்டது. இத்தனை மாதமாகப் பாடுபட்டு உழைத்த பயன் கிடைத்து விட்டது. வீடுகளில் தானியங்கள் நிரம்பிவிட்டன. புது வெல்லம், புதுக் காய்கறிகள் முதலானவை கிடைக்கின்றன. இவ்வளவு நன்மைக்குக் காரணம் யார்? சூரியனே அல்லவா? சூரியன் இல்லாவிட்டால் மழை ஏது? பசுமை ஏது? புல் ஏது? தழை ஏது? எல்லா அளியும், நிறமும், வளர்ச்சியும் சூரியனால்தானே உண்டாகின்றன.
சூரியனே பயிர்களுக்கு உயிர் கொடுத்து வளர்ப்பவன். குடியானவர்கள் வாழ்வுக்கே சூரியன்தான் முதல் காரணம். அவர்கள் சூரியனே கண்கண்ட தெய்வம் என்று கொண்டாடுகிறார்கள். சூரியனால் கிடைத்த புதிய பொருள்களைப் பொங்கிச் சமைத்து உண்பதற்கு முன், சூரியன் செய்த நன்றியை மறக்காமல் பொங்கல் விழாவாகக் கொண்டாடுகிறார்கள். நகரங்களிலும் பொங்கல் விழா செய்கிறார்களே; அது ஏன்? உழவுத் தொழில் செய்யும் கிராம மக்கள் நன்றாக வாழ்ந்தால்தான் நகரங்களில் இருப்பவர்களும் வாழமுடியும். ஆகையால், அவர்களும் பொங்கல் விழா கொண்டாடுகிறார்கள்.
இன்னொரு காரணமும் உண்டு. முன் காலத்தில் வருடப் பிறப்புச் சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல் நாள்தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள். அந்த நாள் முதல் எல்லோருடைய வாழ்வும் பல வகையிலும் புதிய வாழ்வாக இருக்க வேண்டும் என்று ஏற்படுத்தினார்கள். உண்ணுவதில் புதுமை, உடுப்பதில் புதுமை, வீட்டில் புதுமை, தெருவில் புதுமை, ஊரெல்லாம் புதுமை, மனத்திலும் புதுமை. புதிய பச்சரிசியைப் பொங்குகிறார்கள். புதிய காய்கறிகளைச் சமைக்கிறார்கள். புதிய ஆடைகளை வாங்கி உடுக்கிறார்கள். வீட்டுக்கு வெள்ளை அடித்து அழகு செய்கிறார்கள். தெருவில் புதுமண் போட்டு, செம்மண் இட்டு ஒழுங்கு செய்கிறார்கள். ஊரெல்லாம் திருவிழா நடத்துகிறார்கள். மனதைத் தூய்மையாக வைத்துக் கொள்கிறார்கள். எல்லாரோடும் அன்பாகக் கலந்து பேசுகிறார்கள்; மகிழ்கிறார்கள். இப்படி நகரங்களில் புது ஆண்டுப் பிறப்பாகப் பொங்கல் கொண்டாடுகிறார்கள்.” (1988 ஆம் ஆண்டு கோலாலம்பூர் பொங்கல் சிறப்பு மலர்).
 
ஆய்வு உசாத்துணை:
[1] 2003-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் பொங்கல் வாழ்த்துச் செய்தி:
 
[2] 1949-ல் பொங்கலின் போது நடந்த திருக்குறள் மாநாடும், பங்கேற்ற தமிழறிஞர்களின் சொற்பொழிவுச் சுருக்கங்களும்:
 
[3] சங்கத் தமிழ்ப் புலவர்கள் 49 பேர் என்பது இடைக்காலச் சைவ இலக்கிய மரபு. முதலில் இம் மரபை திருவள்ளுவமாலையில் காண்கிறோம். 49 என்னும் எண் வடமொழியின் எழுத்தெண்ணிக்கை ஆகும். இந்த எண்ணைக் கொண்டு கற்பனையான புலவர் பெயர்களைத் தருகிறது திருவள்ளுவமாலை. இப் புராணக்கதையின் வளர்ச்சியைத் திருவிளையாடல் புராணத்தில் ‘சங்கப் பலகை அளித்த படலம்’ அழகாகப் பாடுகிறது. ந. மு. வேங்கடசாமி நாட்டார் ஐயா உரையுடன் மேலும் ஆராய விரும்புவோருக்காக என் வலைப்பதிவில் தந்துள்ளேன் – நா. கணேசன்


--------------

வல்லமை இணைய இதழிலும், பெரியார் தோற்றுவித்த விடுதலை (சென்னை) இதழிலும் அச்சான கட்டுரை.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

வைகாசி அனுஷம் - திருவள்ளுவர் பிறந்த தினம்

 
WhatsApp%2BImage%2B2018-05-25%2Bat%2B10.
முருகன் பிறந்த நாள் வைகாசி விசாகம் வரும் திங்கட்க்கிழமை - 28.05.2018. 
 
அதற்கு அடுத்த நாள் வைகாசி அனுஷம் (29.05.2018). அது திருவள்ளுவரின் பிறந்தநாளாகும். பலருக்கும் இது புதிய தகவலாக இருக்கலாம், ஏதோ நான் தவறாக கூறுவதாக நினைக்கலாம். ஆனால் அதுவே உண்மை.
 
1971ம் ஆண்டு வரை வைகாசி அனுஷம் அன்றே திருவள்ளுவரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வந்தது. எவ்வித காரணமுமின்றி தை 1 தான் வள்ளுவர் பிறந்த நாள் என்று முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர் தை 1 இல்லை தை 2 வள்ளுவர் பிறந்தநாள் என்றும் மாற்றப்பட்டது.
 
இன்றைக்கும் மயிலாப்பூர் திருவள்ளுவர் திருக்கோயில், சென்னைத் திருவள்ளுவர் மன்றம், தேவகோட்டை திருவள்ளுவர் சங்கம், மதுரை திருவள்ளுவர் கழகம்உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைகாசி அனுஷம் அன்றே, வள்ளுவரின் பிறந்தநாள் அனுசரிக்கப்படுகிறது. 
 
வள்ளுவரின் பிறந்தநாள் தை 2 என்று வாதிடுபவர்கள் மிகவும் பின்னோக்கி எல்லாம் செல்ல வேண்டாம், ஒரு 80 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களை தெரிந்துக்கொண்டாலே போதும்.
 
1935 மே மாதம்18 ஆம் நாள், அனுஷநட்சத்திர நாள். அன்றைய தினம்
திருவள்ளுவர் திருநாட்கழகத்தினர் வள்ளுவர் உருவப்படத்துடனும்,  திருக்குறள் சுவடியுடனும்  ஊர்வலமாகச் சென்று  மயிலைத் திருவள்ளுவர் கோயிலை அடைந்துதிருவள்ளுவர் திருமேனிக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்து வழிபட்டனர்.அன்றைய தினம் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற வள்ளுவர் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
 
மறைமலை அடிகள், கா. நமச்சிவாய முதலியார், பா.கண்ணப்ப முதலியார், திரு. வி. கலியாணசுந்தர முதலியார், T.செங்கல்வராயன் உள்ளிட்ட பல அறிஞர்கள் இதில் பங்கேற்றனர். 
 
அடுத்த ஆண்டு வைகாசி அனுஷம் அன்று நடைபெற்ற வள்ளுவர் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு தலைமயேற்றவர் தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர். சுவாமி சித்பவானந்தா,கி.வா. ஜகந்நாதன், அமரர் கல்கி உள்ளிட்ட எண்ணற்ற தமிழ் அறிஞர்களும் வள்ளுவர் பிறந்த தினம் வைகாசி அனுஷம் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர். 
 
இன்னும் சொல்லப்போனால் முன்னாள்  முதல்வர் அண்ணா, பெரியார் ஆகியோரும் கூட வைகாசி அனுஷம் வள்ளுவர் பிறந்த தினம் என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் கூட 2012ம் ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இதை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 திருக்குறளைக் கொண்டாடிய பெரியார்; விளக்க உரைகள் வழங்கிய திராவிட இயக்கங்கள்! முழு பார்வை

முதலமைச்சர் கருணாநிதியின் நேரடியான கண்காணிப்பின் பலனாக 1999 அக்டோபரில் வள்ளுவர் சிலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்தன.

திருக்குறளைக் கொண்டாடிய பெரியார்; விளக்க உரைகள் வழங்கிய திராவிட இயக்கங்கள்! முழு பார்வைதிருவள்ளுவர்

NEWS18  LAST UPDATED: NOVEMBER 6, 2019, 9:59 PM IST  ஆர்.முத்துக்குமார்

திருக்குறளுக்கும் திராவிட இயக்கத்துக்கும் என்ன சம்பந்தம்? திருவள்ளுவரின் வரலாற்றை மாற்றி எழுதியதா திராவிட இயக்கம்? திருக்குறளும் திருவள்ளுவரும் திராவிட இயக்கத்தினருக்கு மட்டுமே சொந்தமா? என்பன போன்ற கேள்விகளோடு, இன்னும் பல கேள்விகளும் திருக்குறள், திருவள்ளுவர், திராவிட இயக்கம் ஆகிய மூன்றைச் சுற்றியும் எழுப்பப்படுகின்றன. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைதேடும் ஒருகட்டுரைதான் இது.

திராவிட இயக்கத்துக்கும் திருக்குறளுக்குமான உறவு உரைகளின் வழியாகத்தான் ஆரம்பமானது. ஆம், திருக்குறளுக்குப் பரிமேலழகரின் உரையே பொருத்தமானது என்ற கருத்துகள் மேலோங்கி எழுந்து, ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த காலகட்டத்தில், அந்த உரைக்கு மாற்றாகவே, திருக்குறளுக்கான விளக்கமாக திராவிட இயக்கத்தினர் திருக்குறளுக்கு புதிய உரைகளை எழுதத் தொடங்கினர்.

பரிமேலழகரின் உரை பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், அதை மறுத்தோ, அல்லது அதற்கு மாற்றாகவோ வேறு உரைகளை திராவிட இயக்கத்தினர் எழுத வேண்டிய அவசியம் எங்கிருந்து எழுந்தது என்ற கேள்வி எழலாம். அதற்கு திராவிட இயக்கத்தினர் கொடுத்த பதில்களின் ஒற்றைவரிச் சாரம், பரிமேலழகர் திருக்குறளை மனுதர்மத்தின் பார்வையில் இருந்து அணுகினார் என்பதுதான்.

வடமொழி வல்லுநரான பரிமேலழகர், திருக்குறளை வடமொழி இலக்கியமாகவே பார்த்தார். வடமொழி வேதத்தின் பிரதியாகவே அணுகினார். வர்ணாசிரமத்தை வலியுறுத்தும் நூலாகவே அதனைப் பிரசாரம் செய்தார் என்பதே திராவிட இயக்கத்தினரின் விமர்சனம். அதனால்தான் வள்ளுவத்தின் வேரை, விளக்கம் என்ற வாள்கொண்டு அறுத்தெறிந்தார் பரிமேலழகர் என்றார் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர்.

அந்த அளவுக்கு பரிமேலழகரை நிராகரித்ததற்கு முக்கியமான காரணம், அறம் என்ற சொல்லுக்கு மனுவே அறம் என்கிற பரிமேலழகரின் விளக்கம்தான். அதேபோல, ஆரிருள் என்ற சொல்லுக்கு நரகம் என்று பொருள் சொன்ன பரிமேலழகர், செய்தொழில் என்பதற்கு வர்ணம்தோறும் வேறுபடும் தொழில் என்று விளக்கம் தந்தார். முக்கியமாக, மறைமொழி என்ற சொல்லுக்கு மந்திரம் என்று அர்த்தம் சொன்னார். இவை எல்லாமே வைதீகப் பார்வை என்பது திராவிட இயக்கத்தினரின் கருத்து.

வள்ளுவத்தின் உண்மையை உள்ளபடி சொல்லாமல், வடமொழிச் சிந்தனையையும் வடநாட்டுப் பண்பாட்டுக் கூறுகளையும் வர்ண தர்மத்தையும் திருக்குறளில் மீது வலுக்கட்டாயமாகத் திணித்திருக்கிறார் பரிமேலழகர் என்ற விமர்சனத்தை முன்வைத்த திராவிட இயக்கத்தினர், வெறுமனே விமர்சனத்தோடு ஒதுங்கவில்லை. மாறாக, தங்கள் பார்வையிலிருந்து திருக்குறளுக்குப் புதிய உரைகளை எழுதினர்.

அந்த உரைகள் அனைத்தும் பரிமேலழகரின் பார்வையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில், புதிய கோணத்தில், எழுதப்பட்டன. அந்த வரிசையில் திருக்குறளுக்கு உருவான முதல் திராவிட இயக்க உரையை எழுதியவர் புலவர் குழந்தை. அதற்கு வித்திட்டவர், திருக்குறளைக் கடுமையாக விமர்சித்தவர் என்று சொல்லப்பட்ட பெரியார் என்பதுதான் இங்கே கவனிக்கத்தக்க அம்சம்.

பெரியார் புராணங்களை விமர்சித்தார். அவற்றின் தெய்வீகத்தன்மையை ஏற்கவில்லை. ராமாயணம், மகாபாரத்தை முற்றாக நிராகரித்தார். புராதன இலக்கியங்களில் புரட்டுகள் நிறைந்திருப்பதாகச் சொல்லி அவற்றை நிராகரிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார். அந்த வரிசையில்தான் கடவுள், பாவம், புண்ணியம், இம்மை, மறுமை, தேவலோகம், நரகலோகம், பெண்ணடிமை, மன்னராட்சி போன்றவற்றைத் தூக்கிப்பிடித்த குறள்களை எல்லாம் கடுமையாக விமர்சித்தார் பெரியார்.

அதேசமயம், பெரியார் திருக்குறளை முற்றுமுழுதாக நிராகரிக்கவில்லை. திருக்குறளின் இன்னபிற முற்போக்கு, பகுத்தறிவுச் சிந்தனைகளை எல்லாம் பெரியார் ஆதரிக்கவே செய்தார். குறிப்பாக, நாவலர் சோமசுந்தரபாரதியாரின் திருக்குறள் பற்றிய பேச்சுகளை அறிந்தபிறகு திருக்குறளைப் பரப்பவேண்டியதன் அவசியத்தை தான் உணர்ந்ததாக பெரியாரே பதிவுசெய்திருக்கிறார். பா.வே.மாணிக்க நாயக்கரும் திருக்குறள் பற்றி பெரியாருடன் உரையாடியவர்களில் முக்கியமானவர்.

அதன் நீட்சியாகவே பல இடங்களில் திருக்குறள் மாநாடுகள் நடத்திய பெரியார், திருக்குறளுக்குப் புதிய உரை எழுதவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பெரியாரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலேயே திருக்குறளுக்கு உரை எழுதினார் புலவர் குழந்தை. ஆம், ராவண காவியத்தின் வழியாகப் புகழ்பெற்ற அதே புலவர் குழந்தைதான் திருக்குறளுக்கு முதல் திராவிட இயக்க உரையை எழுதியவர்.

1949-ம் ஆண்டு நடந்த குறள் மாநாட்டில் பேசிய பெரியார், திருக்குறள் அதிக அளவிலான மக்களுக்குப் போய்ச்சேரவேண்டும் என்பது முக்கியம். அதற்கு அதன் உண்மையான விளக்கம் சொல்லவேண்டியது மிக முக்கியம் என்ற கருத்தை முன்வைத்ததோடு, திருக்குறளுக்குப் புத்துரைகள் எழுதுமாறு தமிழ் அறிஞர்களுக்கு அழைப்புவிடுத்தார். அதே வேகத்தில் திரு.வி.கலியாணசுந்தரனார் தலைமையில் திருக்குறள் உரைக்கான குழு ஒன்றையும் அமைத்தார். அந்தக் குழுவில் இடம்பெற்றவர்களில் நெடுஞ்செழியனும் ஒருவர்.

பெரியார் விடுத்த அழைப்பைத் தனக்கான அழைப்பாக ஏற்றுக்கொண்ட திருக்குறள் ஆர்வலரான புலவர் குழந்தை, தனது நுட்பமான தமிழாற்றலைக் கொண்டு திருக்குறளுக்கு உரை எழுதினார். புலவர் குழந்தை எழுதிய திருக்குறள் உரையின் முக்கியமான அம்சம், வள்ளுவர் பயன்படுத்திய சொற்களுக்கு பரிமேலழகர் கொடுத்த வைதீகப் பொருள்களுக்கு மாற்றாக, பகுத்தறிவுச் சொற்களைப் பயன்படுத்தியதுதான். திருக்குறளுக்கான மதச்சார்பு உரைகளுக்குத் தோற்றுவாய் பரிமேலழகர் உரை என்றால், பகுத்தறிவு உரைகளுக்கான ஆரம்பப்புள்ளியை வைத்தது புலவர் குழந்தையின் திருக்குறள் உரைதான்.

புலவர் குழந்தையைத் தொடர்ந்து பாரதிதாசன், நெடுஞ்செழியன், கு.ச.ஆனந்தன், கருணாநிதி உள்ளிட்ட திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள் பலரும் வெவ்வேறு காலகட்டங்களில் திருக்குறளுக்கு உரை எழுதினர். குறிப்பாக, திருக்குறள் உண்மைப்பொருள் என்ற தலைப்பில் கு.ச. ஆனந்தன் திருக்குறளுக்கு உரை எழுதினார். 1986-ல் வெளியான ஆனந்தனின் நூலில் அறத்துப்பால், பொருட்பாலுக்கு மட்டும் உரை இடம்பெற்றன. இன்பத்துப்பாலைத் தவிர்த்துவிட்டார் கு.ச.ஆனந்தன்.

திருக்குறளின் மூன்றாவது திராவிட இயக்க உரையை எழுதியவர் நெடுஞ்செழியன். குறளுக்கு உரை எழுத பெரியாரால் அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்ற நெடுஞ்செழியன், 1991-ல் திருக்குறள் தெளிவுரை என்ற பெயரில் திருக்குறளுக்கு உரையெழுதி இருந்தார். அந்த உரை வெளியான அடுத்த ஆண்டே பாரதிதாசன் முன்னரே எழுதிய உரை 1992-ல் வெளியானது.

உண்மையில், 1330 குறள்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 85 குறள்களுக்கான விளக்கத்தை வள்ளுவர் உள்ளம் என்ற தலைப்பில் தன்னுடைய குயில் ஏட்டில் எழுதியிருந்தார் பாரதிதாசன். அதுவே பின்னர் நூலாகத் தொகுக்கப்பட்டு வெளியானது. அதன்பிறகு வெவ்வேறு காலகட்டங்களில் மா.அர்த்தனாரி, அரிமதி தென்னகனார். இரா. இளங்குமரனார், இறையரசன், கடவூர் மணிமாறன், நா.சி.கமலநாதன், மாவண்கிள்ளி என்று பலரும் திராவிட இயக்கப் பார்வையிலிருந்து திருக்குறளுக்கு உரைகள் எழுதினர்.

அந்த வரிசையில் வெளியான முக்கியமான திருக்குறள் திராவிட இயக்க உரை என்று கருணாநிதி எழுதிய திருக்குறள் உரையைச் சொல்லவேண்டும். திருக்குறளின் ஆகப்பெரிய ஆர்வலர்கள் பட்டியலில் கருணாநிதி முக்கியமானவர். ஓர் எழுத்தாளராக, பத்திரிகையாளராக, அரசியல்வாதியாக, தலைவராக, ஆட்சியாளராக என்று தனக்குக் கிடைத்த அத்தனை வாய்ப்புகளிலும் திருக்குறளைக் கொண்டாடி, திருக்குறளைப் போற்றிப் பரப்பியவர். திருக்குறளுக்கு எழுத்துவடிவில் கருணாநிதி செய்த முதல் காரியம், குறளோவியம் எழுதியதுதான். திருக்குறளின் பெருமையை, திருக்குறளின் முக்கியத்துவத்தைக் கவிதை வடிவில் வெளிப்படுத்தும் வகையில் கருணாநிதி எழுதிய நூல், குறளோவியம். அதில் கருணாநிதியின் கவிதை, அதற்குப் பொருத்தமான ஓவியம், குறளைப் பற்றிய கருணாநிதியின் கருத்துரை என்று குறளோவியம் உருவாக்கப்படிருந்தது. அதன்பிறகுதான் திருக்குறள் கருணாநிதி உரை வெளியானது.

தெய்வம் என்று வள்ளுவர் பயன்படுத்திய சொல்லுக்கு வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வம் என்று விளக்கம் கொடுத்து, தான் பகுத்தறிவாளராக இருப்பினும், தனது கருத்தை வள்ளுவத்தின் மீது திணிப்பதைத் தவிர்த்திருப்பார் கருணாநிதி. அந்த வகையில், கருணாநிதி எழுதிய உரை திருக்குறளுக்கான பொழிப்புரையாகவே பார்க்கப்பட்டது. முக்கியமாக, எளிய மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்ட உரை என்று கருணாநிதி உரை மதிப்பிடப்பட்டது.

புலவர் குழந்தை தொடங்கி கருணாநிதி வரை பலரும் திருக்குறளுக்கு உரை எழுதினர். அவர்களுக்குப் பிறகும் பல திராவிட இயக்க உரைகள் திருக்குறளுக்கு எழுதப்பட்டன. உண்மைப் பொருளுரை, தெளிவுரை, புதிய உரை, பகுத்தறிவு உரை, மனிதநேய உரை, வாழ்வியல் உரை என்று வெவ்வேறு தலைப்புகளில் வெளியான உரைகள் ஒவ்வொன்றும் திருக்குறளை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டுசெல்லும் பணியைத் தொடர்ச்சியாகச் செய்துகொண்டிருக்கின்றன.

உண்மையில், திருக்குறளையும் வள்ளுவரையும் மக்களிடம் கொண்டுசேர்க்கும் பணியில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு என்பது வெறுமனே உரை எழுதி வெளியிட்டதோடு நின்றுவிடவில்லை. பெரியார் காலத்தில் தொடங்கிய திருக்குறள் பரப்புரை இன்றும் தொடர்கிறது. ஆம், திருக்குறளைப் பரப்பும் பணியை பெரியார் தொடங்கியது 1927-ம் ஆண்டு என்பது இன்றைய தலைமுறைக்கு நம்பமுடியாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. காங்கிரஸிலிருந்து விலகி, சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்த கையோடே திருக்குறளைப் பரப்பும் பணியைத் தொடங்கிவிட்டார் பெரியார்.

திருக்குறள் மன்றங்கள் நடத்துகின்ற கூட்டங்களில் பங்கேற்று திருக்குறள் பற்றிப் பேசிய பெரியார், பல இடங்களைத் தேர்வுசெய்து குறள் மாநாடுகளை நடத்தினார். அதற்கான விளம்பரங்களையும் விரிவான அளவில் செய்தார் பெரியார். திருக்குறள் மாநாடுகளில் பங்கேற்க விரும்புவோர் கட்டணம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். முக்கியமாக, திருக்குறள் மாநாடு ஏன் நடத்தப்படுகிறது என்பதை தன்னுடைய விடுதலை ஏட்டில் எழுதினார் பெரியார். அந்தக் காரணங்களே பெரியார் எந்த அளவுக்குத் திருக்குறளை நேசித்தார் என்பதை விளக்கப் போதுமானவை.

திராவிடர்களுக்கு ஒழுக்க நீதி நூல் எதுவும் கிடையாது என்ற கருத்தை உடைக்கவேண்டும், ராமாயணமும் மகாபாரதமும்தான் ஒழுக்க நீதி நூல்கள் என்ற மாயை விலகவேண்டும், மதத்தின் பெயரால் மக்களிடம் உருவான மூடநம்பிக்கைகளை அழித்தொழிக்கவேண்டும், சுயமரியாதை இயக்கத்தினர் இலக்கியங்களை அழிக்கிறார்கள் என்ற பிரசாரத்தை முறியடிக்கவேண்டும், நல்ல நெறிகளைத் திருக்குறள்தான் போதிக்கிறதே தவிர ராமாயணமோ, மகாபாரதமோ, பெரிய புராணமோ, திருவிளையாடற்புராணமோ போதிக்கவில்லை என்பதை நிரூபிக்கவும் திருக்குறள் மாநாடுகள் அவசியம் என்று அழுத்தமாக எழுதினார் பெரியார். ஆம், திருக்குறளைப் பரப்புவதற்கு பெரியாரிடம் திட்டவட்டமான காரணங்கள் இருந்தன.

பெரியார் ஏற்பாடு செய்த திருக்குறள் மாநாட்டில் திரு.வி.கலியாண சுந்தரனார், தெ.பொ.மீனாட்சி சுந்தரம், திருக்குறள் வி.முனுசாமி, அண்ணா, சி.இலக்குவனார், நெடுஞ்செழியன், டி.எஸ்.கந்தசாமி முதலியார், சோமசுந்தர பாரதியார், அப்பாதுரையார், புலவர் குழந்தை, என்.எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்ட அறிஞர்களும் தலைவர்களும் பங்கேற்றனர்.

மாணவர்கள் திருக்குறளை முழுமையாகப் படிப்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். ஆட்சி மன்றங்கள் முதல் கல்வி மன்றங்கள் வரை உயர் பொறுப்பில் இருப்பவர்கள் திருக்குறளில் புலமை பெற்றவர்களாக இருக்கவேண்டும். திருவள்ளுவர் நாள் என்ற ஒன்றைத் தேர்வுசெய்து அறிவித்து, அன்றைய நாள் முழுக்க திருக்குறளையும் வள்ளுவரையும் பரப்பவேண்டும், திருக்குறள் விழா உள்ளிட்ட செய்திகள் வானொலி வழியாக அனைத்து மக்களுக்கும் விளம்பரப்படுத்தப்படவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் பெரியார் நடத்திய திருக்குறள் மாநாடுகளில் நிறைவேற்றப்பட்டன.

அந்தத் தீர்மானங்களின் முக்கியத்துவம் பற்றி பல மேடைகளில் பேசினார் பெரியார். குறிப்பாக, சைதாப்பேட்டை திருவள்ளுவர் மன்ற விழா, பெங்களூரு வள்ளுவர் கழக ஆண்டுவிழா, நாகர்கோவில் திருவள்ளுவர் வாலிபர் கழக ஆண்டு விழா, முக்கூடல் வள்ளுவர் கழக ஆண்டு விழா, தனிக்கோட்டை வள்ளுவர் கழக ஆண்டுவிழா என்று பல மேடைகளில் திருக்குறளைப் போற்றிப் பேசினார் பெரியார்.

திருவள்ளுவருக்கென்று சிறப்பு நாள் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாடவேண்டும் என்பது பெரியாரின் விருப்பம். அதற்கான தீர்மானம் ஒன்றை தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் புலவர் கோவிந்தன் சட்டமன்றத்தில் கொண்டுவரவே, அதனை முதலமைச்சராக இருந்த கருணாநிதி ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கலுக்கு மறுநாள் திருவள்ளுவர் நாளாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்து, பெரியாரின் விருப்பத்தைப் பூர்த்திசெய்தார் கருணாநிதி. அந்த நாளை அரசு அலுவலகங்களிலும் கொண்டாட உத்தரவிட்டார் பின்னாளில் முதலமைச்சரான எம்.ஜி.ஆர்.

மறைமலை அடிகள் தலைமையிலான குழு வள்ளுவருக்கான காலத்தை கி.மு 31 என்று வரையறுத்து அறிவித்தது. அதன் நீட்சியாக, 1971 முதல் அரசு நாட்குறிப்புகளிலும் 1972 முதல் அரசிதழிலும், 1981 முதல் அரசு அலுவலகங்களிலும் திருவள்ளுவராண்டு பயன்படுத்தப்பட்டுவருகிறது.

இன்று இருக்கும் வள்ளுவரின் உருவம் கற்பனையானது. உலகப்பொதுமறை தந்த வள்ளுவருக்கு ஓர் உருவம் கொடுக்கவேண்டும் என்பது பாரதி தாசன், அண்ணா உள்ளிட்ட பலரது விருப்பம். அந்த விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் பொறுப்பை அப்போதைய முதலமைச்சர் காமராஜர் ஏற்றுக்கொண்டார். அவருடைய உத்தரவின்படி ஓவியர் வேணுகோபால் சர்மா வரைந்த திருவள்ளுவர் ஓவியம் அதிகாரபூர்வ வள்ளுவர் ஓவியமாக 1959-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அந்த ஓவியத்தை உருவாக்குவதற்கு முதலமைச்சர் காமராஜர், அமைச்சர் பக்தவத்சலம், பாரதிதாசன், அண்ணா உள்ளிட்டோர் காட்டிய ஆர்வமும் முனைப்பும் மிக முக்கியமானவை.

திருவள்ளுவருக்கு காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது உருவம் கொடுக்கப்பட்டது போலவே, வள்ளுவருக்குச் சிலை வைக்கவேண்டும் என்ற கோரிக்கையை தி.மு.கவின் சார்பில் கருணாநிதி முன்வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட சென்னை மாநகராட்சி, திருவள்ளுவர் பிறந்த ஊராக நம்பப்படும் மயிலாப்பூரில் திருவள்ளுவருக்குச் சிலை அமைத்தது. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். அப்போது தமிழக முதலமைச்சராக இருந்தவர் பெரியவர் எம்.பக்தவத்சலம்.

காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோது திருக்குறளைக் கொண்டாடும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டாலும், தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு கொண்டாட்டத்தின் வேகம் அதிகரித்தது. தமிழ்நாடு சட்டமன்றம் ஒவ்வொரு நாள் கூடும்போதும் ஒரு திருக்குறளை வாசித்துத் தொடங்கிவைக்கும் பழக்கத்தை அப்போதைய சபாநாயகர் சி.பா.ஆதித்தனார் தொடங்கிவைத்தார். அந்த மரபு இன்றும் தொடர்கிறது. அதேபோல, இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின்போது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அன்பளிப்பு கொடுத்த வள்ளுவர் சிலை திறக்கப்பட்டது.

திருக்குறள் சாமானியர்களுக்கும் சென்றுசேரவேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலேயே அண்ணா ஆட்சிக்கு வந்த கையோடு அரசுப் பேருந்துகளில் திருக்குறள் பொறிக்கப்பட்டது. பின்னர் அரசினர் தங்கும் விடுதிகளிலும் திருக்குறள் பொறிக்கப்பட்டது. இப்படி, கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் திருவள்ளுவருக்கும் திருக்குறளுக்கும் பெருமை சேர்க்கும் காரியங்கள் பலவும் நடைபெற்றன. அவற்றில் சென்னையில் உருவாக்கப்பட்ட வள்ளுவர் கோட்டமும் கன்னியாகுமரியில் அமைக்கப்பட்ட வள்ளுவர் சிலையும் முக்கியமானவை.

திருவள்ளுவருக்குச் சிலை அமைப்பது, கோட்டம் அமைப்பது என்ற இருபெரும் காரியங்களுமே எழுபதுகளின் தொடக்கத்திலேயே ஆரம்பமாகிவிட்டன. ஆனால் வள்ளுவர் கோட்டம்தான் முதலில் அமைந்தது. அதன்பிறகு கால் நூற்றாண்டு கழித்தே வள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது. இங்கே கவனிக்கவேண்டிய செய்தி என்னவென்றால், திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் பெருமை சேர்க்க வள்ளுவர் கோட்டம் கட்டிய அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அதன் திறப்புவிழாவில் பங்கேற்கவில்லை. காரணம், டெல்லிக்கும் தமிழகத்துக்கும் இடையே நடத்த அரசியல் மோதல் விளையாட்டு.

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் ஐந்து ஏக்கர் பரப்பில் நிலம் தேர்வு செய்யப்பட்டது. முதலமைச்சர் கருணாநிதியின் நேரடி மேற்பார்வையில் தோரண வாயில், அரங்க மண்டபம், கருங்கல் தேர், குறள் மணி மாடம், மாடித்தோட்டம், ஆராய்ச்சி நிலையம். தேர்க்கோபுரம், தேர்க்கலசம் ஆகியவற்றைக் கொண்ட வள்ளுவர் கோட்டம் உருவானது. நெருக்கடி நிலைக்கு முன்பு கட்டிமுடிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம், நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது திறந்துவைக்கப்பட்டது. அப்போது தமிழகத்திலிருந்த கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசை இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு கலைத்திருந்தது. ஆகவே, திறப்புவிழாவில் பங்கேற்க முடியாத கருணாநிதி, அதன்பிறகு 1989-ம் ஆண்டு மீண்டும் முதலமைச்சரானபோது தனக்கான பதவியேற்பு விழாவை வள்ளுவர் கோட்டத்தில் வைத்து நடத்தினார்.

வள்ளுவர் கோட்டம் போலவே வள்ளுவருக்கு குமரி முனையில் பிரம்மாண்ட சிலை அமைக்கவேண்டும் என்ற விருப்பத்தை முதலமைச்சர் கருணாநிதி அதிகாரபூர்வமாக அறிவித்தது 1975 ஆம் ஆண்டு இறுதியில்தான். ஆனால் அந்த விருப்பத்தை நிறைவேற்றுவதற்குள் கருணாநிதி ஆட்சி கலைக்கப்படவே, வள்ளுவர் சிலை உருவாக்கும் பணி நின்றுபோனது. பிறகு எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்தபிறகும் வள்ளுவர் சிலைக்கான பணிகள் வேகமெடுக்கவில்லை. பிறகு திமுக கொடுத்த அழுத்தம் காரணமாக 1979 ஏப்ரலில் குமரி முனையில் வள்ளுவர் சிலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

அடிக்கல் நாட்டப்பட்டு, ஆய்வுப்பணிகளுக்கான குழு அமைக்கப்பட்டபோது வள்ளுவர் சிலை பணிகள் நின்றுபோயின. பிறகு 1989-ல் ஆட்சிக்கு வந்தபிறகு வள்ளுவர் சிலைக்கான பணிகளை மீண்டும் தொடங்கினார் முதலமைச்சர் கருணாநிதி. சிலையை வடிவமைக்கும் பொறுப்பு கணபதி ஸ்தபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அந்தப் பணிகள் முடிவதற்குள் மீண்டும் கருணாநிதி அரசு கலைக்கப்பட்டது. பிறகு 1996-ல் ஆட்சிக்கு வந்தபிறகுதான் வள்ளுவர் சிலை அமைக்கும் பணிகள் மீண்டும் ஆரம்பமாகின.

முதலமைச்சர் கருணாநிதியின் நேரடியான கண்காணிப்பின் பலனாக 1999 அக்டோபரில் வள்ளுவர் சிலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்தன. அதனைத் தொடர்ந்து 31 டிசம்பர் 1999 தொடங்கி 1 ஜனவரி 2000 வரை இரண்டு நாள்களுக்கு சிறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டு, 133 அடி உயர வள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது. அதற்காக அமைக்கப்பட்ட கல்வெட்டில் அறிவிப்பை வெளியிட்ட தன்னுடைய பெயர் மட்டுமின்றி, அடிக்கல் நாட்டிய எம்ஜிஆர் பெயர் வரை எல்லாவற்றையும் விரிவாகப் பதிவுசெய்திருந்தார் முதலமைச்சர் கருணாநிதி.

கன்னியாகுமரி வள்ளுவர் சிலை போல கர்நாடகத்தின் அல்சூரில் வள்ளுவருக்குச் சிலை வைக்க ஏற்பாடுகள் செய்தார் முதலமைச்சர் கருணாநிதி. அந்தச் சிலையை கர்நாடக முதல்வர் பங்காரப்பா திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால் அதற்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பவே, சிலை திறப்பு விழா தள்ளிப் போனது. பிறகு கன்னட அறிஞர் சர்வக்ஞர் சிலை தமிழகத்தில் திறக்கப்படும் என்ற உறுதிமொழியைக் கொடுத்து, வள்ளுவர் சிலையைத் திறந்துவைக்க முயற்சி எடுத்தார் முதலமைச்சர் கருணாநிதி. அதன்படியே கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி வள்ளுவர் சிலையைத் திறந்துவைத்தார். அதேபோன்று தமிழகத்தில் சர்வக்ஞர் சிலை திறக்கப்பட்டது.

இப்படி, பெரியாரில் தொடங்கி கருணாநிதி வரை திராவிட இயக்கத்தினர் வள்ளுவரையும் திருக்குறளையும் கொண்டாடியதற்கு நீண்ட நெடிய வரலாற்றுப் பாரம்பரியம் இருக்கிறது.

ஆர்.முத்துகுமார்



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

71940730.jpg 71940731.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

71940733.jpg71940735.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

71940736.jpg 71940737.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

71940738.jpg 

71940739.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

71940741.jpg 71940748.jpg 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 71940753.jpg



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard