திருக்குறள் மனிதன் பிறப்பிலிருந்து வாழ்க்கை முழுவதும் அறம் செய்து மீண்ட்மும் பிறந்து வாழும் நிலையிலிருந்து வீடுபேறு அடைய வழிகாட்டும் நூல் ஆகும். பண்டை தமிழில் காணப்படும் தொன்மை சொற்கள் பெரிதுமின்றியும். நல்ல நெகிழ்வு பெற்று, யாப்பு இலக்கணம் வளர்ந்த பின்பு குறள் வெண்பா என இரண்டடியில் திருக்குறள் இயற்றப்பட்ட உயர்ந்த நூல். குறளில் உள்ள சொல் மாற்றங்கள், இலக்கண உத்திகள் இவை அடிப்படையில் திருக்குறள் இயற்றப்பட்டு ஒரு நூறு ஆண்டுக்குள் எழுந்ததே தமிழ் சமணரான மணக்குடவர் எழுதிய உரை. குறள் தமிழிலே பண்டை காலம் தொட்டே அதிக உரைகள் பெற்றும் பெரிதும் போற்றப்பட்டு வரும் அற நூல் ஆகும்.
இப்பாடல்கள் அனைத்துமே, குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. அக்காலத்தில், இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும், ஒரே நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால், "குறள்" என்றும் அதன் உயர்வு கருதி "திரு" என்ற அடைமொழியுடன் "திருக்குறள்" என்றும் பெயர் பெறுகிறது. 'குறுகிய செய்யுள்' என்பதே "குறள்" .
பண்டை தமிழ் இலக்கிய நூல்கள்
மிகவும் தொன்மையான தமிழ் நூல்கள் பதிநெண் மேல் கணக்கு நூல்கள் எனும் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை நூல்கள் 18 ஆகும். இவை சங்க இலக்கியம் எனவும் அழைக்கப்படும். இதன் பின்பு இவற்றின் அடிப்படை கொண்டு தொல்காப்பிய இலக்கண நூல் எழுந்தது.
இந்த நூல்களுக்கு பின்பாக எழுந்த 18 நூல்கள் பதிநெண் கீழ்கணக்கு என அழைக்கப்புடும், இவற்றில் பெரும்பாலும் நீதி நெறி நூல்கள், வெண்பா யாப்பில் பாடப்பட்டவை.
முப்பால் -நூற் பிரிவுகள்
திருக்குறள் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட எண்ணிக்கையான அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.
அறத்துவழிப் படூஉந் தோற்றம் போல (புற. 31) என்று புறநானூறும் கூறுகின்றன.
அறத்துப்பால் -"பாயிரவியல்" 4 அதிகாரங்களும், 20 அதிகாரங்களுடன் "இல்லறவியல்", 13 அதிகாரங்கள் கொண்ட துறவறவியல், இறுதியில் "ஊழ்" என்னும் ஒரே அதிகாரம் கொண்ட "ஊழியல்", என வகைபடுத்தப்பட்டுள்ளது.
அடுத்து வரும் பொருட்பாலில் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களுமாக மொத்தம் 70 அதிகாரங்கள் உள்ளன.
காமத்துப்பால்
கடைசிப்பாலாகிய "இன்பத்துப்பால்" அல்லது "காமத்துப்பாலில்" களவியல் மற்றும் கற்பியல் என இரண்டு இயல்கள். களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களுமாக மொத்தம் 25 அதிகாரங்கள் உள்ளன. ஆகமொத்தம் 9 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள். திருக்குறளை மொத்தம் 14000 சொற்களில் திருவள்ளுவர் பாடியுள்ளார்.முப்பாலான அறத்தில் 38 அதிகாரங்கள்
பொருள் 70 அதிகாரங்கள்
இன்பம் - 25
அறமும் பொருளும் இன்பமு மூன்றும்
ஆற்றும் பெருமநின் செல்வம் (புற. 28)
சிறப்புடை மரபிற் பொருளு மின்பமும்
அறத்துவழிப் படூஉந் தோற்றம் போல (புற. 31) என்று புறநானூறும் கூறுகின்றன.
மணக்குடவர் உரை: அறத்தையும் தரும்: இன்பதையும் தரும்: பொருள் வருந்திறமறிந்து பிறர்க்குத் தீமை பயத்தலின்றி வந்த பொருள். இது பொருளால் கொள்ளும் பயன் அறஞ்செய்தலும் இன்பம் நுகர்தலும் அன்றே: அவ்விரண்டினையும் பயப்பது நியாயமாகத் தேடியபொருளாமாதலின் என்றது.
சிறுமேதாவியார் 20. வீடொன்று பாயிர நான்கு விளங்கற நாடிய முப்பத்து மூன்றென்றூழ்-கூடுபொரு ளெள்ளி லெழுப திருபதிற் றைந்தின்பம் வள்ளுவர் சொன்னவகை. விளக்கவுரை : திருக்குறள் அதிகாரத்தொகை: வீடு ஒன்று, பாயிரம் நான்கு; அறத்துப்பால் முப்பத்து மூன்று; ஊழ் ஒன்று; பொருட்பால் எழுபது; இன்பத்துப்பால் இருபத்தைந்து. இந்தப் பாடல் 134 அதிகாரம் எனக் காட்டும் என்பதற்கு எந்த உரையிலும் அவ்வாறான அதிகாரம் இல்லை
தொடித்தலை விழுத்தண்டினார் 22. அறநான் கறிபொரு ளேழொன்று காமத் திறமூன் றெனப்பகுதி செய்து-பெறலரிய நாலு மொழிந்தபெரு நாவலரே நன்குணர்வார் போலு மொழிந்த பொருள். விளக்கவுரை :அறத்தைப் பாயிரம், இல்லறம், துறவறம், ஊழ் என நான்காகவும், பொருளை அரசு. அமைச்சு, அரண், கூழ், படை, நட்பு, குடி என ஏழாகவும், இன்பத்தை ஆண்பாற் கூற்று, பெண்பாற்கூற்று, இருபாற்கூற்று என மூன்றாகவும் வகுத்து, நாற்பொருளையுங் கூறிய திருவள்ளுவரே வேருபொருளிருப்பினும் அதையறிவார் போலும்! நாடு அரணுள் அடக்கப்பட்டது.
போக்கியார்
26. அரசிய லையைந் தமைச்சிய லீரைந்
துருவல் லரணிரண்டொன் றொண்கூ - ழிருவியல்
திண்படை நட்புப் பதினேழ் குடிபதின்மூன்
றெண்பொரு ளேழா மிவை.
விளக்கவுரை :திருக்குறளின் பொருட்பால், அரசியல் இருபத்தைந் ததிகாரமும், அமைச்சியல் பத்ததிகாரமும், அரணியல் ஈரதிகாரமும் பொருளியல் ஓரதிகாரமும், படையியல் ஈரதிகாரமும் நட்பியல் பதினேழதிகாரமும்; குடியியல் பதின்மூன்றதிகாரமுமாக ஏழுபகுதிகளையுடையதாம்
நாம் இன்று திருக்குறள் என அழைத்தாலும் அது வள்ளுவரால் முப்பால் என்ற அமைப்பு, பெயரில் தான் இயற்றப்பட்டது எனலாம். மனித வாழ்வின் தேவை மூன்று உறுதிப் பொருளாய் காணும் மரபில் -அதாவது அறம், பொருள் மற்றும் இன்பம்.
பின்னாளில் இந்த இன்பம் சிற்றின்பம், பேரின்பம் என அதாவது பேடின்பம் என்பது மீண்டும் மீண்டும் பிறந்து வாழும் பிறவிப் பெருங்கடலில் இருந்து நீந்தி இறைவனோடு இணைவது என ஆனது. வள்ளுவரும் பேரின்பம் ஆகிய வீட்டை தனிப் பாலாக வைக்கவில்லை
தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனிதர்களின் வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல்.
ஆசிரியர் குறிப்பு
இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இவருடைய இயற்பெயர் என்ன என்பதும் மேற்கொண்ட விவரங்களும் சரிவரத் தெரியவில்லை. இவரைப்பற்றிச் செவிவழி மரபாகச் சில செய்திகள் விளங்குகின்றன. ஆனால் உறுதியான வரலாறு கிடையாது. அந்தச் செய்திகளின் வாயிலாகப்பெறும் தகவல்களின்படி, இவர் வள்ளுவ மரபைச்சேர்ந்தவர் என்றும், மயிலாப்பூரில் வசித்தவர் என்றும் தெரிகிறது; இவருடைய மனைவியார் வாசுகி அம்மையார் கற்பியலுக்கு மிகச்சிறந்த இலக்கணமாக விளங்கியவர். வள்ளுவர் தாம் எழுதிய முப்பால் நூலை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு அரங்கேற்றியதாகவும் அச்செய்திகள் வாயிலாக அறிகிறோம்.
இவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர் என்றும் சில சிறப்புப்பெயர்களால் அழைப்பர். பிற்காலத்தில் திருவள்ளுவர் பெயரால் வேறு சில நூல்களை வேறு சிலர் இயற்றியுள்ளனர். அவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்தவை. திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. கிருஸ்துவ சகாப்தத்தின் முன் (கிமுமுன்) பகுதியைச் சேர்ந்ததாகப் பலர் கருதுவர்.
பழந்தமிழ் நூல்களின் நான்கு பெரும் பகுப்புக்கள்
1. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவை அடங்கிய பதினென்மேல்கணக்கு
2. பதினென்கீழ்க்கணக்கு
3. ஐம்பெருங்காப்பியங்கள்
4. ஐஞ்சிறு காப்பியங்கள் ஆகியவை அவை.
அவற்றில் பதினென்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு இந்நூல் விளங்குகின்றது. "அறம், பொருள், இன்பம்", ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்துபாடல்களைத் தன்னுள் அடக்கியது. இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆகிய அக்காலத்திய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.
முப்பால்
"பாயிரம்" என்னும் பகுதியுடன் முதலில் "அறத்துப்பால்" வருகிறது. அதிலும் முதலில் காணப்படுவது, "கடவுள் வாழ்த்து" என்னும் அதிகாரம். தொடர்ந்து, "வான் சிறப்பு", "நீத்தார் பெருமை", "அறன் வலியுறுத்தல்", ஆகிய அதிகாரங்கள். அடுத்துவரும் "இல்லறவியல்" என்னும் இயலில் 25 அதிகாரங்கள்; அடுத்துள்ள துறவறவியலில் 13 அதிகாரங்களுடன் முதற்பாலாகிய அறத்துப்பால் பகுதி முடிவுறுகிறது.
அடுத்து வரும் "பொருட்பாலி"ல் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களும் உள்ளன.
கடைசிப்பாலாகிய "இன்பத்துப்பால்" அல்லது "காமத்துப்பாலி"ல் இரண்டு இயல்கள்; களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களும் உள்ளன.
ஆகமொத்தம் 7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள். திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் வள்ளுவர் பாடியுள்ளார். ஆனால் இவற்றில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.
"அகரம் முதல வெழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே யுலகு" என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய "அ" வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய, "ஊடுதல் காமத்திற்கின்பம்; அதற்கின்பம், கூடி முயங்கப்பெறின்" என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய "ன்" னுடன் முடித்திருக்கிறார்.
திருக்குறள் - சிறப்பு
வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை.
பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் தற்சமயம் சிறப்பாகக் கருதப் படுவது திருக்குறள் முனுசாமியின் உரை. தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு; அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன்; மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம்; அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி, அதனைக் கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும். அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச் செய்யவேண்டும். பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது திருக்குறளின் மொத்தமான நோக்கு.
உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம் மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"
திருக்குறளின் அறத்துப்பாலில் பாயிரவியலைத் தொடர்ந்து முதலாவதாக 20 அதிகாரங்களுடன் "இல்லறவியல்" அடுத்து 13 அதிகாரங்ள் கொண்ட துறவறவியல் இறுதியில் "ஊழ்" என்னும் ஒரே அதிகாரம் கொண்ட "ஊழியல்" என வகைபடுத்தப் பட்டுள்ளது. திருக்குறளில் ஒரே ஒரு அதிகாரம் உடைய இயல் "ஊழியல்" மட்டுமே. முதற்பாலாகிய அறத்துப்பாலில் மொத்தம் 38 அதிகாரங்கள்.
பொருட்பால்
அடுத்து வரும் பொருட்பாலில் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களுமாக மொத்தம் 70 அதிகாரங்கள் உள்ளன.
காமத்துப்பால்
கடைசிப்பாலாகிய "இன்பத்துப்பால்" அல்லது "காமத்துப்பாலில்" களவியல் மற்றும் கற்பியல் என இரண்டு இயல்கள். களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களுமாக மொத்தம் 25 அதிகாரங்கள் உள்ளன. ஆகமொத்தம் 9 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள். திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் திருவள்ளுவர் பாடியுள்ளார்.
திருக்குறளின் வாழ்வியல் நெறிகள் எக்காலத்திற்கும் ஏற்புடையதாய் அமைந்திருக்கும். திருக்குறள் உலகமொழிகள் பலவற்றுள் மொழிபெயர்கப்பட்டுள்ளது. திருக்குறள் மனிதனின் அகவாழ்வும், புறவாழ்வும், எவ்வாறு வாழவேண்டும் என்பதற்க்கு சிறந்த வழிகாட்டியாய் திகழும்