Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சிதறிக் கிடக்கும் கபாலீசுவரர் கோவில் கல்வெட்டுகள்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
சிதறிக் கிடக்கும் கபாலீசுவரர் கோவில் கல்வெட்டுகள்
Permalink  
 


 

சிதறிக் கிடக்கும் கபாலீசுவரர் கோவில் கல்வெட்டுகள்

  Added : ஏப் 06, 2012 https://www.dinamalar.com/news_detail.asp?id=442587

மயிலாப்பூர் : சென்னை வட்டாரத்தில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் பல விதங்களில் சிறப்புடையது. எனினும், இக்கோவிலின் தொன்மையை அறிய உதவும் கல்வெட்டுகள், பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன. முழுமையாகவும் கிடைக்கவில்லை.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், டாலமி என்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர், மயிலாப்பூரை, மல்லியார்பா என கூறுகிறார்.
கி.பி. 5ம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த ஐயடிகள் காடவர் கோன், திருமங்கையாழ்வார், கி.பி.7ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர், அப்பர் சுவாமிகள் ஆகியோர், மயிலாப்பூரை தங்கள் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.
கடற்கரையில் மயிலாப்பூர்
இவர்களில், அப்பர் சுவாமிகள் இத்தலத்திற்கு தனிப் பதிகம் பாடவில்லை எனினும், வேறு இரு திருப்பதிகங்களில் மயிலாப்பில் எனக் குறிப்பிடுகிறார்.
அதன் பின், அருணகிரிநாதர் இத்தலத்திற்கு, 10 திருப்புகழ்கள் பாடியுள்ளார். இவர் காலம் வரை, கடற்கரையோரம் தான் மயிலாப்பூர் கோவில் இருந்தது. இன்றைய சாந்தோம் பகுதியில், இக்கோவில் இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் பல உண்டு.
புதிய கோவிலில் கல்வெட்டுகள்
கடந்த 1672க்கு முன்பாக, இப்போதைய இடத்தில் இன்றைய கோவில் கட்டப்பட்டது. இடிக்கப்பட்ட கோவில்களின் கற்கள் புதிய கோவில் மற்றும் சர்ச் கட்டப் பயன்படுத்தப்பட்டதாக, வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதை உறுதிப்படுத்தும் விதத்தில், இன்றும் பழைய கபாலீசுவரக் கோவில் கல்வெட்டுகள், பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன. மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில், சுவாமி, அம்மன், சிங்காரவேலர் கருவறை சுவர்களில் ஒரு கல்வெட்டு கூட கிடையாது.
கற்பகாம்பாள் கோவில் பிரகாரச் சுற்றுச்சுவரின் உள் மற்றும் வெளிப்புறச் சுவர்களில், 20க்கும் மேற்பட்ட பழமையான கல்வெட்டுகள் தாறுமாறாக அடுக்கப்பட்டுள்ளன.
அதேபோல், கபாலீசுவரர் கருவறையின் மேற்குச் சுவரின் உள் மற்றும் வெளிப்பக்கமும், கருவறை வாயில் நிலை இடதுபுறக் கல்லிலும், மேற்கு கோபுரத்தின் தரையிலும் சில கல்வெட்டுகள் உள்ளன.
துறைமுக நகர்
இவை தவிர, திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மயிலை விருபாட்சீசுவரர் கோவில், பொன்னேரிக்கு அருகில் உள்ள காட்டூரில் கிடைத்த கல்வெட்டு ஆகியவற்றில், மயிலாப்பூர் பெயர் குறிக்கப்பட்டுள்ளது.
இவற்றில், சில கல்வெட்டுகளில் கடல் வணிகம் செய்யும் நானாதேசிகள் மற்றும் அஞ்சுவண்ணம் வணிகர்களை பற்றியும் குறிப்பு உள்ளது. இதில் இருந்து தொன்மையாகவே, மயிலாப்பூர் துறைமுக நகராக இருந்தது தெரிய வருகிறது.
பூம்பாவையின் பெயர்
திருப்பூம்பாவை என, சிவநேச செட்டியாரின் மகளும், சம்பந்தரால் மீண்டும் உயிர்ப்பிக்கப் பெற்றவருமான பூம்பாவையின் பெயர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் குளத்துப் படிக்கட்டு ஒன்றில் உள்ள கல்வெட்டிலும், பரங்கி மலை தூய அப்போஸ்தல மாடத்தின் உணவருந்தும் அறையின் பக்கத்திலுள்ள மாடிப்படியில் உள்ள ஒரு கல்வெட்டிலும், விருபாட்சீசுவர் கோவில் கருவறையின் தென்புறச் சுவரில் உள்ள ஒரு கல்வெட்டிலும் குறிக்கப்பட்டு, மயிலையில் உள்ள அவரது சன்னிதியில் பூஜைகள் நடத்துவதற்கு செலவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவல்கள் அனைத்தும் சென்னை மாநகர் கல்வெட்டுகள் தொகுப்பிலும், மத்திய அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட கல்வெட்டுகள் தொகுப்பிலும் உள்ளன.
இதில் குறிப்பிடத்தக்கது, எந்த கல்வெட்டும் முழுமையாக கிடைக்கவில்லை என்பது தான். பல கல்வெட்டுகளில் பெரும்பகுதி சிதைந்து போயுள்ளன. எனினும், இக்கல்வெட்டுகள் மூலம், 12, 13ம் நூற்றாண்டுகளில் பலர் மயிலை கபாலீசுவரர் கோவிலுக்கு பல தானங்கள் அளித்துள்ளனர் என்பதை மட்டும் தெரிந்து கொள்ள முடிகிறது.
படிக்கட்டுகளில் கல்வெட்டுகள்
ஒரே ஒரு கல்வெட்டில் மட்டும், திருக்கபாலீசுரமுடைய நாயனார் என, கபாலீசுவரர் குறிப்பிடப்படுகிறார். பிற கல்வெட்டுகளில், திருவான்மியூர், திரிசூலம் போன்ற கோவில்களுக்கு அளிக்கப்பட்ட கொடைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.
கடந்த, 1910ல் துவக்கப்பட்டு, 1925 வரை நடந்த தெப்பக் குள படிக்கட்டு திருப்பணியில் ஈடுபட்டோர்,
தங்கள் பெயர்களை முறையாக கல்லில் செதுக்கி, குளக்கரையில் பதித்தும் வைத்துள்ளனர். இன்றும், அந்த கல்வெட்டுகளை குளக்கரையில் காணலாம்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
RE: சிதறிக் கிடக்கும் கபாலீசுவரர் கோவில் கல்வெட்டுகள்
Permalink  
 


திருமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தல புராணம்

https://shaivam.org/hindu-hub/temples/place/191/thirumylapore-kapaleeswarar-temple

இறைவர் திருப்பெயர்:கபாலீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்:கற்பகவல்லியம்மை.
தல மரம்:

புன்னை.

தீர்த்தம் :கபாலி தீர்த்தம். திருக்குளம்
வழிபட்டோர்:அம்பிகை,இராமர்.

 

thirumylapore temple

தல வரலாறு :

      • இத்தலம் திருமயிலாப்பு என்றும், திருமயிலை என்றும் வழங்கப்படுகிறது.

         

      • உமாதேவி, இறைவனை, மயில் வடிவங்கொண்டு பூஜித்த தலம்; எனவே இப்பெயர் பெற்றது. இத்திருக்கோலம் கோயிலினுள் வெளிச்சுற்றில் புன்னை மரத்தடியில் தனிக்கோயிலாக அமைக்கப்பெற்று வழிபடப்பெறுகிறது.

         

      • கோவில் பெயர் - கபாலீச்சுரம்

         

      • சிவநேசச் செட்டியார் என்ற அன்பரின் மகளாகிய பூம்பாவை, அரவு தீண்டி இறந்துபட, அவள் உடலை எரித்து, எலும்பையும் சாம்பலையும் ஒரு குடத்தில் அவரது தந்தையார் வைத்திருந்தார். அதை, அங்கெழுந்தருளிய சம்பந்தர் முன்வைக்க, அவர் "மட்டிட்ட புன்னை" என்ற பதிகம் பாடிப் பெண்ணுருவாக்கியருளினார்.

         

      • இராமபிரான், வழிபட்டு, ஐப்பசி ஓணநாளில், பிரமோற்சவம் நடத்துவித்தார்.

 

 

 

தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் - மட்டிட்ட புன்னை

 

 

 

 

 

 

 

சிறப்புகள் :

      • இது, வாயிலார் நாயனார் அவதாரஞ்செய்தத் திருப்பதி; "துறைக்கொண்ட செம்பவள இருளகற்றுஞ் சோதித் தொன்மயிலை வாயிலா னடியார்க்கு மடியேன்" என்று பணிவார் சுந்தரமூர்த்தி நாயனார்.

        	அவதாரத் தலம்	: திருமயிலாப்பூர்.
        	வழிபாடு		: இலிங்க வழிபாடு.
        	முத்தித் தலம் 	: மயிலாப்பூர்.
        	குருபூசை நாள் 	: மார்கழி - ரேவதி.
        

         

      • வாயிலார் சந்நிதி கற்பகம்பாள் சந்நிதிக்கு எதிரில் வடக்குப் பார்த்த தனி ஆலயமாக உள்ளது.

         

      • பூம்பாவை குடத்தினின்றும் தோன்றும் திருவுருவமும் பிள்ளையார் பதிகம் பாடும் திருவுருவமும் உடனாகத் தனிக்கோயிலாக வெளிச் சுற்றினுள் மேற்குக் கோபுர வாயிலை அடுத்து வடபுறம் அமைத்து வழிபடப்பட்டு வருவது தரிசிக்க தக்கது.

         

      • பங்குனி மாதத்தில், அறுபத்து மூவரின், திருவிழா, சிறப்பாக நடைபெறுகிறது.

         

      • இத்தல இறைவனை திருஞானசம்பந்தர், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், அருணகிரிநாதர் ஆகியோர் பாடி மகிந்துள்ளனர்.

         

      • இத்தலத்தின் புராணம் வடமொழியில் சைவ மகாபுராணத்து, கோடி ருத்ர ஸம்ஹிதையில், உத்க்ருஷ்ட ச்வக்ஷேத ப்ரகரணத்தில் 11 அத்யாயம் கொண்ட கபாலீச ஸ்தல மாஹாத்ம்யம் கலி 5023-ல் அச்சிடப்பட்டுள்ளது. குன்றக்குடி ஆதீனத்தின் மயிலைக் கிளை மடத்தின் ஸ்ரீமத் அமிர்தலிங்கத் தம்பிரான் சுவாமிகள் இயற்றிய தலபுராணம் கலி 4995-ல் வெளிடப்பட்டது. சமீப காலத்தில் "திருமயிலைத் தலபுராணம்" என்ற பெயரால் மயிலை நாதமுனி முதலியாரால் எழுதப்பட்டுள்ளது. இஃது மொத்தம் 806 செய்யுட்களைக் கொண்டுள்ளது. (இதில் கபாலீச்சுவரம் மட்டுமின்றி, சுற்றிலுமுள்ள வெள்ளீசர், வாலீசர், முண்டகக்கன்னியம்மை, மல்லீசர், காரணீசர், விருபாட்சீசர், தீர்த்தபாலீசர் முதலிய சன்னிதிகளும் கூறப்பட்டுள்ளன.)

மயிலாப்பூர் (பழமையான) கபாலீச்சுவரர் கோயில் பற்றிய குறிப்பு :

      • பழைய கோயில் இப்போது உள்ள Santhome Catherdral Church உள்ள இடத்திலுருந்தது. அருணகிரிநாதர் காலம் வரையில் (கி.பி.1450) கடற்கரையிலுருந்தது. "கடலக் கரைதிரை யருகேசூழ் மயிலைப் பதிதனில் உறைவோனே" என்ற திருப்புகழ்ப் பகுதியால் துலங்கும்.

         

      • கி.பி.1516-ல் மயிலாப்பூர் போர்த்துகீசியர் கையில் சிக்கியது. சில ஆண்டுகளுக்குள் ஆவர்கள் ஆலயத்தைத் தகர்த்துக், கோட்டையும், தங்கள் தொழுகைக்கு இடமும் கட்டிக்கொண்டார்கள். கி.பி.1672-க்கு முன்பு இப்போதுள்ள இடத்தில் இப்போதுள்ள ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது. இவ்வாண்டில் பிரெஞ்சுக்காரருக்கும் மூர் துருக்கருக்கும் நடந்த போரில் பிரெஞ்சு சேனையின் ஒரு பகுதி இப்போதுள்ள ஆலயத்தில் பதுங்கியிருந்த செய்தி, Vestiges of Old Madras என்ற நூலில் Vol.-I, Chap.24, பக்கம் 321, 322-ல் காணப்படுகிறது.

         

      • Santhome Cathedral சுமார் 1910ல் பழுது பார்க்க நிலத்தை அகழ்ந்தபோது பழைய சிவாலயத்தின் கற்களும் கல்வெட்டுக்களும் கிடைத்துள்ளன. அவை அரசாங்கத்தினரால் 215 - 223/1923 என்று குறிக்கப்பட்டுள்ளன. இவற்றுள், "Found on stone excavated below the Cathedral at Santhome" என்பன போன்ற குறிப்புக்கள் காணப்படுகின்றன.

         

      • இப்போதுள்ள ஆலயம் சுமார் 300 ஆண்டுகள் பழமையானது. இதற்கு முன்னிருந்த திருக்கோயில் கடற்கரையில் அமைந்திருந்தது.("ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலை", "மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்" - சம்பந்தர், "கடலக்கரை திரையருகே சூழ் மயிலைப் பதி உறைவோனே" - திருப்புகழ்). பழைய திருக்கோயில் ஐரோப்பியர்களால் இடிக்கப்பட்டு, பள்ளிகளும், சர்ச்ம், கோட்டைகளும் அமைத்துக் கொண்டார்கள். அவ்விடத்தில் தற்போது சாந்தோம் சர்ச் உள்ளது.

         

      • இடித்த பழைய கோயிலின் கற்களைக்கொண்டு புதுக்கோயில் தற்போது இருக்கும் இடத்தில் கட்டப்பட்டது. அப்போது கல்வெட்டுக்களின் அருமையை உணராது அவைகளைத் தாறுமாறாக இணைத்து விட்டார்கள். அப்படிப்பட்ட கல்வெட்டுக்கள் அம்மன் கோயிலில் ஐம்பது வரை இருக்கின்றன. சுவாமி கோயிலில் கல்வெட்டுக்கள் எதுவும் இல்லை.

         

      • அலங்கார மண்டபத்து முன்வாசல் தளத்தில் டச்சு எழுத்துக்கள் கொண்ட சில கற்கள் உள்ளன. பழுது பார்த்தபோது எடுத்த கற்களில் சில கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவைகள் 1923-ம் ஆண்டு 215 முதல் 223 வரை எண்களாக அரசியார் பிரதி எடுத்திருக்கிறார்கள். அவைகளில் தமிழ் கல்வெட்டுக்களில் ஒன்றில் கூத்தாடு தேவர் (நடராஜர்) சன்னிதியில் தீபம் வைப்பதற்குச் செய்த தானமும், மற்றொன்றில் முதல் இராஜராஜன் மெய்க்கீர்த்தியாகிய "திருமகள்போல" என்ற தொடக்கமும், மூன்றாவதில் பூம்பாவை என்ற திருப்பெயரும் குறிக்கப்பட்டுள்ளன.

         

      • இக்கல்வெட்டுக்கள் ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முந்தியவை என அறியலாம்.

         

      • சிவநேசர் திருமயிலை கடற்கரையில் இருந்ததுமன்றி, கடலில் தோணியிலிருந்தே சரக்கு எடுக்கும் வண்ணமாக சரக்கறை கட்டியிருக்க வேண்டும் என்றும், அதற்குப் பின்புறம் அவர் குடியிருக்க வசதி இருந்திருக்க வேண்டும் என்றும் அறியக் கிடக்கின்றது.

         

      • ஈழ நாட்டுத் திருக்கோணமலை, துளுவ நாட்டுக் கோவை (Gova) முதலிய இடங்களில் பரங்கியர்கள் 400 ஆண்டுகளுக்கு முன் செய்த வண்ணமே இம்மயிலையிலும் பரங்கியர்கள் கோயிலையும், மனைகளையும் இடித்துப் பள்ளியும் கோட்டையும் கட்டியிருக்கக் கூடும் என்பது திண்ணம்.

மயிலாப்பூர் பற்றிய சரித்திரக் குறிப்புகள் :

      • H.D. Love என்பவர் எழுதிய சென்னைச் சரித்திரத்தில் 1516 முதல் போர்த்துக்கீசியர், துருக்க மூர்கள் பிரெஞ்சுக்காரர், டச்சுக்காரர் முதலியவர்கள் அடிக்கடி மாறிமாறி இவ்வூரைப் பிடித்துத் தம் வசப்படுத்திக் கொண்டு இருந்தார்கள் என அறியலாம். அந்நூலின்படி (Volume - I பக்கம் 321 - 322) பிரெஞ்சுக்காரருக்கும் துருக்கருக்கும் 1672-ல் ஒரு போர் நடந்தது. அப்போது பிரெஞ்சு சேனையின் ஒரு பகுதி கபாலீஸுவரர் சன்னிதியில் ஒளிந்து கொண்டதாம். ஆகவே, தற்கால கபாலீசுவரம் 1672லேயே இருந்தது எனலாம்.

         

      • 1798-ல் எழுதப்பட்ட சென்னை நகரப் (Map of Chennai) படத்தில் மயிலைத் திருக்குளம் காட்டப்பட்டிருக்கிறது.

         

      •  

        "துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித் தொல்மயிலை...." என்று ஆரூரர் திருவாய் மலர்வதுபோல், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் டாலமி (Ptolemy) என்ற கிரேக்க ஆசிரியர் இயற்றிய பூகோள நூலில் Malliarpha எனப்படுவதே மயிலாப்பூர் என்று Vestiges of Old Madras Vol. - I chapter 23-ல் ஆசிரியர் H.D. Love கூறுகிறார். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் திருவள்ளுவர் வாழ்ந்தது மயிலையிலே. அவர் நண்பர் ஏலேல சிங்கர் கப்பல் வர்த்தகம் செய்ததும் இவ்விடத்தில்தான்.

         

      • 11-வது நூற்றாண்டின் கல்வெட்டு ஒன்றில் (256 / 1912) மயிலார்ப்பில் பல நானாதேசிகள் கூடிச் சில தீர்மானங்கள் செய்தனர் என்று காணப்படுகிறது.

         

      • துறைமுகப் பட்டினமாகிய ஒரு வியாபாரத் தலத்தில்தான், பல தேசத்து மக்கள் கூடுவர். எனவே, டாலமி காலம் முதல் கல்வெட்டுக் காலம் வரையில் மயிலாப்பூர் ஒரு துறைமுகமாக இருந்திருக்கிறது. போர்த்துக்கீசியர் காலத்திலும் இத்துறைமுகம் சிறந்து விளங்கியுள்ளது. இத்துறைமுகத்திற்கும், ஆங்கிலேயர் துறைமுகமாகிய சென்னையின் வடபாதிக்கும் ஓயாமல் வியாபாரப் போட்டியும், கடும்போரும் இருந்து வந்த செய்தி Vestiges of Old Madras Vol. - I என்ற நூலில் நன்கு விளங்கும்.

         

      • சங்க பல்லவன் கம்பவர்மன் காலத்திய கல்வெட்டொன்று (189/1912) மயிலாப்பூரில் அரச குடும்பத்தினர் வசித்ததைக் குறிக்கின்றது.

         

      • மயிலை வாசிகளாயிருந்த பல வியாபாரிகள் வேறு பல தலங்களைத் தரிசித்தபோது சந்தி விளக்கு, நந்தா விளக்குகட்குத் தானம் செய்த வரலாறுகள், பல கல்வெட்டுக்களால் அறியப்படுவதிலிருந்து, அவர்கள் சென்ற இடங்களிலெல்லம் தானம் செய்யக்கூடிய செல்வமும், புண்ணியமும் பெற்றிருந்தனர் என்பது புலனாகும்.

         

      • திருநாவுக்கரசர் தேவாரத்தில் மூன்றிடங்களில் மயிலாப்பு கூறப்பெறுகின்றது. திருவொற்றியூர் திருத்தாண்டகத்து ஆறாவது திருப்பாடலில் "வடிவுடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர்கண்டோம் மயில்லப் புள்ளே" என்ற தொடர் சுவாமிகள் மயிலையிலிருந்தே ஒற்றியூர் சென்றார் என்று சேக்கிழார் கூறுவதற்கு அகச்சான்றாகின்றது. "மங்குன் மதி மாடவீதிமயிலாப்பிலுள்ளார்" (6-2-1) என்று அப்பர் பெருமான் மயிலையின் மாடவீதி அழகைப் புகழ்ந்துப்பாடுகிறார். "மயிலாப்பில் மன்னினார் மன்னி ஏத்தும்" (6-7-12) என்ற இடத்தில் மயிலையைக் காப்புத் தலங்களுள் வைத்துப் பாடுகிறார். மேற்சொன்ன மூன்றிடங்களிலும் அப்பர் பெருமான் மயில்லாப்பூரை மயிலாப்பு என்றே கூறுகிறார். சில கல்வெட்டுக்களிலும் (261/1910, 189/1912) மயிலாப்பில் என்றே காணப்படுகிறது. வேறு சில கல்வெட்டுக்களில் மயிலார்ப்பில் என்று "ரகர" ஒற்றுடன் காணப்படுகிறது(256/1912). டாலமியும்மல்லிஆர்பா என்பதில் "ரகர" ஒற்றுடன் கூறுகிறார்.

 

அமைவிடம் அ/மி. கபாலீசுவரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை - 600 004. தொடர்பு : 044 - 24641670 மாநிலம் : தமிழ் நாடு இது, சென்னையிலேயே அமைந்த தலம். சென்னையின் அனைத்து இடங்களிலிருந்தும், நகரப் பேருந்து வசதி உள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

கபாலீசுவரர் கோயில்

ஜூலை 31, 2016ankaraikrishnan
 
 
 
 
 
 
 
 
 
 
 

பழைய கோயில் இப்போது உள்ள Santhome Catherdral Church உள்ள இடத்திலுருந்தது

அருணகிரிநாதர் காலம் வரையில் (கி.பி.1450) கடற்கரையிலுருந்தது.

“கடலக் கரைதிரை யருகேசூழ் மயிலைப் பதிதனில் உறைவோனே” என்ற திருப்புகழ்ப் பகுதியால் துலங்கும்.
அருணகிரிநாதரின் இந்தத் திருமயிலைத் திருப்புகழ்ப் பாடலையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
கயிலைப் பதியரன் முருகோனே
கடலக்கரைதிரை அருகே – சூழ்
மயிலைப் பதிதனில் உறைவோனே
மகிமைக் கடியவர் பெருமாளே!
அசைக்க முடியாத ஆதாரம் இது. அருணகிரிநாதர் காலத்திற்குப் பின்னர் 1566′ம் ஆண்டு இன்றைய சாந்தோம் இருக்கும் இடத்தில் இருந்த கபாலிச்சுரம் ஆலயம் கிறுத்துவ மதவெறியர்களால் உடைக்கப்பட்டுப் பின்னர் தற்போது இருக்கும் இடத்திற்கு மாற்றப்பட்டது.

  • கி.பி.1516-ல் மயிலாப்பூர் போர்த்துகீசியர் கையில் சிக்கியது. சில ஆண்டுகளுக்குள் ஆவர்கள் ஆலயத்தைத் தகர்த்துக், கோட்டையும், தங்கள் தொழுகைக்கு இடமும் கட்டிக்கொண்டார்கள். கி.பி.1672-க்கு முன்பு இப்போதுள்ள இடத்தில் இப்போதுள்ள ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது. இவ்வாண்டில் பிரெஞ்சுக்காரருக்கும் மூர் துருக்கருக்கும் நடந்த போரில் பிரெஞ்சு சேனையின் ஒரு பகுதி இப்போதுள்ள ஆலயத்தில் பதுங்கியிருந்த செய்தி, Vestiges of Old Madras என்ற நூலில் Vol.-I, Chap.24, பக்கம் 321, 322-ல் காணப்படுகிறது.
  • Santhome Cathedral பழுது பார்க்க நிலத்தை அகழ்ந்தபோது பழைய சிவாலயத்தின் கற்களும் கல்வெட்டுக்களும் கிடைத்துள்ளன. அவை அரசாங்கத்தினரால் 215 – 223/1923 என்று குறிக்கப்பட்டுள்ளன. இவற்றுள், “Found on stone excavated below the Cathedral at Santhome” என்பன போன்ற குறிப்புக்கள் காணப்படுகின்றன.
அவைகளில் தமிழ் கல்வெட்டுக்களில் ஒன்றில் கூத்தாடு தேவர் (நடராஜர்) சன்னிதியில் தீபம் வைப்பதற்குச் செய்த தானமும், 2.மற்றொன்றில் முதல் இராஜராஜன் மெய்க்கீர்த்தியாகிய “திருமகள்போல” என்ற தொடக்கமும், மூன்றாவதில் பூம்பாவை என்ற திருப்பெயரும் குறிக்கப்பட்டுள்ளன.
  • இக்கல்வெட்டுக்கள் ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முந்தியவை என அறியலாம்.
  • ஈழ நாட்டுத் திருக்கோணமலை, துளுவ நாட்டுக் கோவை (Gova) முதலிய இடங்களில் பரங்கியர்கள் 400 ஆண்டுகளுக்கு முன் செய்த வண்ணமே இம்மயிலையிலும் பரங்கியர்கள் கோயிலையும், மனைகளையும் இடித்துப் பள்ளியும் கோட்டையும் கட்டியிருக்கக் கூடும் என்பது திண்ணம்.
  • H.D. Love என்பவர் எழுதிய சென்னைச் சரித்திரத்தில் 1516 முதல் போர்த்துக்கீசியர், துருக்க மூர்கள் பிரெஞ்சுக்காரர், டச்சுக்காரர் முதலியவர்கள் அடிக்கடி மாறிமாறி இவ்வூரைப் பிடித்துத் தம் வசப்படுத்திக் கொண்டு இருந்தார்கள் என அறியலாம். அந்நூலின்படி (Volume – I பக்கம் 321 – 322) பிரெஞ்சுக்காரருக்கும் துருக்கருக்கும் 1672-ல் ஒரு போர் நடந்தது. அப்போது பிரெஞ்சு சேனையின் ஒரு பகுதி கபாலீஸுவரர் சன்னிதியில் ஒளிந்து கொண்டதாம். ஆகவே, தற்கால கபாலீசுவரம் 1672லேயே இருந்தது எனலாம்.
  • “துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித் தொல்மயிலை….” என்று ஆரூரர் திருவாய் மலர்வதுபோல், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் டாலமி (Ptolemy) என்ற கிரேக்க ஆசிரியர் இயற்றிய பூகோள நூலில் Malliarpha எனப்படுவதே மயிலாப்பூர் என்று Vestiges of Old Madras Vol. – I chapter 23-ல் ஆசிரியர் H.D. Love கூறுகிறார். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்
  • 11-வது நூற்றாண்டின் கல்வெட்டு ஒன்றில் (256 / 1912) மயிலார்ப்பில் பல நானாதேசிகள் கூடிச் சில தீர்மானங்கள் செய்தனர் என்று காணப்படுகிறது.
  • துறைமுகப் பட்டினமாகிய ஒரு வியாபாரத் தலத்தில்தான், பல தேசத்து மக்கள் கூடுவர். எனவே, டாலமி காலம் முதல் கல்வெட்டுக் காலம் வரையில் மயிலாப்பூர் ஒரு துறைமுகமாக இருந்திருக்கிறது. போர்த்துக்கீசியர் காலத்திலும் இத்துறைமுகம் சிறந்து விளங்கியுள்ளது. இத்துறைமுகத்திற்கும், ஆங்கிலேயர் துறைமுகமாகிய சென்னையின் வடபாதிக்கும் ஓயாமல் வியாபாரப் போட்டியும், கடும்போரும் இருந்து வந்த செய்தி Vestiges of Old Madras Vol. – I என்ற நூலில் நன்கு விளங்கும்.
  • சங்க பல்லவன் கம்பவர்மன் காலத்திய கல்வெட்டொன்று (189/1912) மயிலாப்பூரில் அரச குடும்பத்தினர் வசித்ததைக் குறிக்கின்றது.
  • மயிலை வாசிகளாயிருந்த பல வியாபாரிகள் வேறு பல தலங்களைத் தரிசித்தபோது சந்தி விளக்கு, நந்தா விளக்குகட்குத் தானம் செய்த வரலாறுகள், பல கல்வெட்டுக்களால் அறியப்படுவதிலிருந்து, அவர்கள் சென்ற இடங்களிலெல்லம் தானம் செய்யக்கூடிய செல்வமும், புண்ணியமும் பெற்றிருந்தனர் என்பது புலனாகும்.
  • திருநாவுக்கரசர் தேவாரத்தில் மூன்றிடங்களில் மயிலாப்பு கூறப்பெறுகின்றது. திருவொற்றியூர் திருத்தாண்டகத்து ஆறாவது திருப்பாடலில் “வடிவுடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர்கண்டோம் மயில்லப் புள்ளே” என்ற தொடர் சுவாமிகள் மயிலையிலிருந்தே ஒற்றியூர் சென்றார் என்று சேக்கிழார் கூறுவதற்கு அகச்சான்றாகின்றது. “மங்குன் மதி மாடவீதி மயிலாப்பிலுள்ளார்” (6-2-1) என்று அப்பர் பெருமான் மயிலையின் மாடவீதி அழகைப் புகழ்ந்துப்பாடுகிறார். மயிலாப்பில்மன்னினார் மன்னி ஏத்தும்” (6-7-12) என்ற இடத்தில் மயிலையைக் காப்புத் தலங்களுள் வைத்துப் பாடுகிறார். மேற்சொன்ன மூன்றிடங்களிலும் அப்பர் பெருமான் மயில்லாப்பூரை மயிலாப்பு என்றே கூறுகிறார். சில கல்வெட்டுக்களிலும் (261/1910, 189/1912) மயிலாப்பில் என்றே காணப்படுகிறது. வேறு சில கல்வெட்டுக்களில்மயிலார்ப்பில் என்று “ரகர” ஒற்றுடன் காணப்படுகிறது(256/1912). டாலமியும் மல்லிஆர்பா என்பதில் “ரகர” ஒற்றுடன் கூறுகிறார்.

மயிலாப்பூர் பற்றிய சரித்திரக் குறிப்புகள் :

  • 1798-ல் எழுதப்பட்ட சென்னை நகரப் (Map of Chennai) படத்தில் மயிலைத் திருக்குளம் காட்டப்பட்டிருக்கிறது.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சாந்தோமில் கண்டெடுத்த புதைபொருள்களிலிருந்து பழைய கோயில்  சாந்தோம் கடற்கரை என எண்ண வேண்டியிருக்கிறது. பழைய கபாலிசுவரர் கோயிலலின் இடிபாடுகள் இப்போதுள்ள கோயிலுக்குச் சிறிது தொலைவில் கிழக்கு திசையில் சாந்தோம் கடற்கரையருகே கண்டு எடுக்கப்பட்டதேஇதற்குக் காரணமாகும்.
1923இல் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் சாந்தோம் கதிட்ரலில் நிகழ்த்திய அகழ்வாராய்ச்சிகளால் கல்வெட்டுகளும், தூண்களும், சிலைகளும் கண்டெடுக்கப்பட்டனகல்வெட்டுகள் சிவன் கோயிலைக் குறிக்கின்றன. கற்றூண்களிலும் கல்வெட்டுகள் காணப்பெறுகின்றன.
மயிலோடு கூடிய முருகர் சிலையும் கண்டெடுக்கப்பட்டது.
1921இல் மறைத்திரு ஹோஸ்டன், சாந்தோம் கதிட்ரலில் கண்டெடுத்த வடமொழிக் கல்வெட்டு “கருவறை உட்பட எல்லாக் கட்டிடங்களும் மயிலாப்பூரிலுள்ள புகழ்பெற்ற சிவனுக்கும் பார்வதிக்கும் உரியவையாகும்” என்று குறிப்பிடுபகிறது.
மற்றொரு தானக் கல்வெட்டில், “திருமயிலாப்பில் பூம்பாவை” என்று குறிப்பிடுப்படுவதாலும், பழைய கபாலிசுவரர் கோயில் கடற்கரையருகே இருந்திருக்க வேண்டும் .
 
இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத்துறை வெளியிட்டசென்னை மாநிலக் கோயில்கள் (Temples of Madas State) என்னும் நூலில் காணப்படும் கருத்துக்கள் :-“கி.பி. 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சாந்தோம் கடற்கரையிலிருந்த கோயில் போர்த்துக்கீசியர்களால் அழிக்கப் பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்நூல் கூறும் புதிய செய்தி,இப்போதுள்ள கபாலிசுவரர் கோயிலும் குளமும் முந்நூறு ஆண்டுகளுக்கு முன், மயிலை நாட்டு முத்தையப்ப முதலியாராலும் அவருடைய வாரிசுகளிலாலும் கட்டப்பட்டது என்பதேயாகும்.” Census of India-1961; Temples of Madras State, 1 Chingleput District and Madras City, P.204
போர்த்துக்கீசியர்கள் இந்துக் கோயில்களை அழித்த செய்தியைக் கேள்விப்பட்டு இராமராயர் கி.பி. 1558இல், சாந்தோம் மீது படை எடுத்துப் போர்த்துக்கீசியரைப் பணிய வைத்துப் பின்னர்ப் பழுதுபட்ட கோயில்களைப் பழுதுபார்க்க ஆணையில்ட்ட செய்தியாலும் பழைய கபாலிசுவரர் கோயில் போர்த்துக்கீசியர்களால் . S.Kalyanasundaram- A Short History of Mylapore page-8) அழிக்கப் பட்டது 
பழைய கபாலிசுவரர் கோயில், கடற்கரையருகே இருந்ததென்பதையும், கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் போர்த்துக்கீசியரால் அழிக்கப் பட்டதென்பதையும், கி.பி. பதினாறாம் நுற்றாண்டில் இப்போதுள்ள இடத்தில் புதிய கோயில், மயிலை நாட்டு நயினியப்ப முத்தையப்ப முதலியார் மகன் முதலியாரால் கட்டப் பெற்றது.

 

de733-mayilai.jpg?w=233&h=320

 

 
போர்ச்சுகீசியர் கிறிஸ்துவ புராண நாயகன் இயேசுவின் சீடர்களில் ஒருவர் எனப்படும் தாமஸ் என்பவர் இந்தியா வந்த்தாகவும் கல்லறை இது என கதை கட்டி முன் கபாலிஸ்வரர் கோயில் இருந்த இடத்தில் சாந்தோம் சர்ச் எனக் கட்டியுள்ளது. பழைய கபாலிசுவரர் கோயில், சாந்தோம்  கடற்கரையருகே இருந்தது.
உதவியவை- http://www.shaivam.org
திருமயிலைத் திருத்தலம்- இலக்கிய, வரலாற்றுப் பார்வை, பேராசிரியர்.Dr.சு.ராஜசேகரன்.,1989,

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்

 

 

தல வரலாறு:  பார்வதிதேவி சிவனிடம், சிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் பொருளை உபதேசிக்கும்படி வேண்டினாள். சிவனும் உபதேசித்தார். அவ்வேளையில் மயில் ஒன்று நடன மாடவே, அதன் அழகில் மயங்கிய அம்பிகை உபதேசத்தை கவனிக்காமல் வேடிக்கை பார்த்தாள். பாடத்தைக் கவனிக்காத மாணவர்களுக்கு குரு தண்டனை கொடுப்பார். இப்போது குருவான சிவன், மாணவியான அம்பிகையை, எதன் அழகில் மயங்கினாயோ அதுவாகவே பிற என்று மயிலாக மாறும்படி செய்து விட்டார். அம்பிகை தன் குற்றத்திற்கு விமோசனம் கேட்டாள். பூலோகத்தில் தன்னை மயில் வடிவில் வழிபட்டுவர விமோசனம் கிடைக்கும் என்றார் சிவன். அதன்படி அம்பிகை மயில் வடிவில் இத்தலம் வந்தாள். சிவனை வணங்கி விமோசனம் பெற்றாள். இருவரும் இங்கேயே கோயில் கொண்டனர். பார்வதி மயில் உருவில் இத்தலத்தில் இறைவனை பூஜை செய்ததால் இத்தலம் இத்தலம் திருமயிலாப்பூர் என்றும், திருமயிலை என்றும் வழங்கப்படுகிறது.
மயிலார்ப்பு என்பதற்கு பொருள் ‘மயிலாதல்’- உமை மயிலாலாக ஆகியதால் மயிலார்ப்பு-ஊர் என்பது மயிலாப்பூர் ஆனது என்பர்.
5ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமழிசை ஆழ்வாரின் நான்முகம் திருவந்தாதியில்
…………………………………….               நீளோ தம்
வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக்கேணியான்
6ம் ஊற்றாண்டில் வாழ்ந்த ஐயட்ட்கள் காடவர் கோன் என்னும் பல்லவ அரசர் பாடிய சிவத்தளி வெண்பாவில்
மயிலைத்
திருப்புன்னை யங்கானல் சிந்தியா யாகில்
இருப்பின்னை யன்காந் திளைத்து                    என இக்கோயிலைப் பாடியுள்ளார். இவரே மூன்றாம் சிம்மவர்மன் என்பர் ஆய்வாளர்.
புன்னைவனம், வேதநகர், சுக்கிரபுரி, பிரம்புரம், சுந்தரபுரி, கபாலீச்சரம், கபாலி மாநகர் போன்ற வேறு பெயர்களால் பாடப்பட்டுள்ளது. பிரம்மதேவன் சிவபெருமானைப் போல தனக்கும் 5 தலைகள் உண்டு என்று செருக்கடைந்த போது அவனுடைய நடு தலையை கிள்ளி கபாலத்தை ஏந்திய காரணத்தால் ஈசுவரன், கபாலீசுவரன் என அழைக்கப்பட்டதாகவும் வரலாறு தெரிவிக்கிறது.
1. இது, வாயிலார் நாயனார் அவதாரஞ்செய்தத் திருப்பதி;
“துறைக்கொண்ட செம்பவள இருளகற்றுஞ் சோதித்
தொன்மயிலை வாயிலா னடியார்க்கு மடியேன்” என்று பணிவார் சுந்தரமூர்த்தி நாயனார்.
வாயிலார் சந்நிதி கற்பகம்பாள் சந்நிதிக்கு எதிரில் வடக்குப் பார்த்த தனி ஆலயமாக உள்ளது.
2. வைஷ்ணவ ச்ரி கருட புராணத்தில், பிருந்தாரண்ய க்ஷேத்திர மகாத்மியத்தில் மயுரபுரி மகாத்மியம் விளக்கப்படுகின்றது
3. இத்தலத்தின் புராணம் வடமொழியில் சைவ மகாபுராணத்து, கோடி ருத்ர ஸம்ஹிதையில், உத்க்ருஷ்ட ச்வக்ஷேத ப்ரகரணத்தில் 11 அத்யாயம் கொண்ட கபாலீச ஸ்தல மாஹாத்ம்யம் கலி 5023-ல் அச்சிடப்பட்டுள்ளது. குன்றக்குடி ஆதீனத்தின் மயிலைக் கிளை மடத்தின் ஸ்ரீமத் அமிர்தலிங்கத் தம்பிரான் சுவாமிகள் இயற்றிய தலபுராணம் கலி 4995-ல் வெளிடப்பட்டது. சமீப காலத்தில் “திருமயிலைத் தலபுராணம்” என்ற பெயரால் மயிலை நாதமுனி முதலியாரால் எழுதப்பட்டுள்ளது
பூம்பாவை திருஞானசம்பந்தர் உயிர்ப்பித்த கோயில்
திருமயிலை தலத்தில் சிவநேசர் எனபவர் வாழ்ந்து வந்தார். சிவபெருமான் மீது அளவு கடந்த பக்தியுடைய அவருக்கு பூம்பாவை என்ற ஒரு மகள் இருந்தாள். திருஞானசம்பந்தரைப் பற்றியும் அவரின் சைவ சமய தொண்டைப் பற்றியும் கேள்விப்பட்ட சிவநேசர் தன் மகள் பூம்பாவையை சம்பந்தருக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தார். அவ்வாறு இருக்கையில் ஒரு சமயம் பூம்பாவை தோட்டத்தில் தன் தோழிகளுடன் மலர் பறித்துக் கொண்டு இருந்த போது பாம்பு தீண்டி இறந்து விடுகிறாள். மகள் இறந்து விட்ட போதிலும் அவள் சம்பந்தருக்கு உரியவள் என்ற எண்ணம் சிவநேசருக்கு வர மகளின் அஸ்தி மற்றும் எலும்புகளை ஒரு குடத்திலிட்டு கன்னி மாடத்தில் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தார்.
திருவொற்றியூர் வந்த சம்பந்தரைச் சந்தித்த சிவநேசர் அவரை வலம் வந்து தொழுதார். கன்னி மாடத்தில் வைத்திருந்த குடத்தைக் கொண்டு வந்து சம்பந்தர் முன் வைத்து பூம்பாவை பற்றிய விபரங்களைச் சொல்லி அழுதார்.
சம்பந்தர் திருமயிலை கபாலீஸ்வரரை தியானித்து “மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை” என்று தொடங்கும் பதிகம் பாடினார். பதிகம் பாடி முடித்ததும் குடத்தை உடைத்துக் கொண்டு வெளியே வந்த பூம்பாவை சம்பந்தரை வணங்கினாள். சிவநேசர் சம்பந்தரை வணங்கி பூம்பாவையை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். விஷம் தீண்டி இறந்த பூம்பாவைக்கு உயிர் கொடுத்ததின் மூலம் அவள் எனக்கு மகள் ஆகின்றாள் என்று கூறிய சம்பந்தர் சிவநேசரின் கோரிக்கையை நிராகரித்து விடுகிறார். பூம்பாவை தன் வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே இருந்து இறைவன் தொண்டு செய்து வந்தாள். இக்கோயில் மேற்கு கோபுரம் அருகில் பூம்பாவைக்கு சந்நிதி இருக்கிறது.
திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. மூவரால் பாடப்பட்ட தேவாரப் பாடல்களில், சுவாமி மற்றும் தலத்தின் பெருமைகளை குறிப்பிட்டுத்தான் பெரும்பாலும் பதிகம் பாடப்பட்டுள்ளது. ஆனால், இத்தலம் வந்த சம்பந்தர், பூம்பாவையை உயிர்ப்பிக்க இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்களின் சிறப்புக்களை குறிப்பிட்டு 11 பதிகங்கள் பாடினார். சம்பந்தர் பாடிய பதிகத்தில் திருமயிலை கோவிலைப் பற்றியும், இங்கு சிறப்பாக நடக்கும் விழாக்களைப் பற்றியும் குறிப்பிட்டு இவைகளை எல்லாம் பார்த்து அனுபவிக்காமல் நீ இறந்து போகலாமா பூம்பாவை என்று தன் பதிகத்தில் பாடுகிறார். இவ்வாறு திருவிழா குறித்து பதிகம் பெற்ற பெருமையுடைய தலம் இது.
சம்பந்தர் தனது பதிகத்தில் 6-வது பாடலில் கடலாட்டு விழாவைப் பற்றியும், பக்தர்கள் கடலாடுவதை இறைவன் பார்த்தபடி இருப்பதையும் குறிப்பிடுவதால் தேவார காலத்தில் இத்தலம் கடலருகே இருந்தது என்பது தெரிய வருகிறது. திருஞானசம்பந்தர் என்பைப் பெண்ணாக்கிய இடமும் கடற்கரை சாந்தோமிலிருந்த கோயில் என்பது அவர் அங்கம் பூம்பாவைப் பாடலிருந்து தெரிகிறது.  சாதாரணமாக குளமும் ஸ்வாமி சன்னதியும் கிழக்கு நோக்கியே இருக்கும். ஆனால், கபாலீஸ்வரர் மேற்கு நோக்கி இருக்கிறார். குளமும் மேற்கே தான்.
ஊர்திரை வேலை உலாவும் உயர் மயிலைக்                                                                                               கூர்தரு வேல் வல்லார் கொற்றங் கொள் சேரிதனில்                                                                                   கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்                                                                                                ஆர்திரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்.
கடலின் அலைகளானது ஊரில் உலாவரும் உயர்ந்த மயிலையில், கூரிய வேல்வல்லவர்களால் காவல் காக்கப்பட்ட பகுதியில், கரிய சோலைகள் சூழ்ந்த திருக்கபாலீச்சரத்து அமர்ந்த பிரானின் ஆதிரைத் திருநாள் காணாது, பூம்பாவையே, போவாயோ!
1. திருவாதிரைத் திருநாளும் புராணங்களிலும் சங்க  இலக்கியங்களிலும் போற்றப்படும் விரதமாகும். இறைவன்  ஆடல் வல்லானாகக் காட்சி அளித்த கருணை கருதி ஆதிரையன் எனத் திருமுறைகள் பலவிடத்தும் விளிக்கும்.அட்ட மாவிரதங்களில் ஒன்றான திருவாதிரைச் சிறப்பு
2. ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலை -திருமயிலாப்பூர்க் கபாலீச்சரம், திருஞானசம்பந்தப் பெருமான் காலத்தில் கடற்கரையிலேயே இருந்தது.  (மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான் – சம்பந்தர்)
3. திரை – அலை; வேலை – கடல்; கொற்றம் – காவல்;சேரி – இருப்பிடம்; கார் – கருமை.
மயிலாப்பூர் (பழமையான) கபாலீச்சுவரர் கோயில் பற்றிய குறிப்பு :
  • பழைய கோயில் இப்போது உள்ள Santhome Catherdral Church உள்ள இடத்திலுருந்தது. அருணகிரிநாதர் காலம் வரையில் (கி.பி.1450) கடற்கரையிலுருந்தது. “கடலக் கரைதிரை யருகேசூழ் மயிலைப் பதிதனில் உறைவோனே” என்ற திருப்புகழ்ப் பகுதியால் துலங்கும்.
  •  அருணகிரிநாதரின் இந்தத் திருமயிலைத் திருப்புகழ்ப் பாடலையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • கயிலைப் பதியரன் முருகோனே
    கடலக்கரைதிரை அருகே – சூழ்
    மயிலைப் பதிதனில் உறைவோனே
    மகிமைக் கடியவர் பெருமாளே!
    அசைக்க முடியாத ஆதாரம் இது. அருணகிரிநாதர் காலத்திற்குப் பின்னர் 1566′ம் ஆண்டு இன்றைய சாந்தோம் இருக்கும் இடத்தில் இருந்த கபாலிச்சுரம் ஆலயம் கிறுத்துவ மதவெறியர்களால் உடைக்கப்பட்டுப் பின்னர் தற்போது இருக்கும் இடத்திற்கு மாற்றப்பட்டது.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

கபாலீசுவரரைப் பற்றிய தினமலரின் திடீர் சரித்திர ஆராய்ச்சி: உண்மையான கோவில் கடற்கரையில் இருந்ததாம்!

 

கபாலீசுவரரைப் பற்றிய தினமலரின் திடீர் சரித்திர ஆராய்ச்சி: உண்மையான கோவில் கடற்கரையில் இருந்ததாம்!

https://thomasmyth.wordpress.com/2012/04/06/original-kapaleswarar-temple-inscriptions-found-disappeared-mutilated/

Inscriptions strewn at Kapeleswarar temple 6-4-2012 DM

தினமலரின் இரட்டை வேடங்கள்: கபாலிசுவர் கோவில் கடற்கரையில் சாந்தோம் சர்ச் இருந்த இடத்தில் இருந்ததாம்: தாமஸ் கட்டுக்கதையைத் தொடர்ந்து பரப்பி வந்த “தினமலர்”, இப்பொழுது என்னமோ திடீரென்று, உண்மையான கபாலீசுவரர்க் கோவில் கடற்கரையில் தான் இருந்தது என்று செய்திகளை வெளியிடுவது வேடிக்கையாக இருக்கிறது. அப்படியென்றால், கிருத்துவர்கள் அக்கோவிலை இடித்தார்கள் என்ற உண்மையைத்தான், தினமலர் இப்பொழுது தெரிந்து கொள்கிறது போலும். பிறகு எப்படி, முரண்பட்ட செய்திகளை மெத்தப் படித்த திரு. ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆசிரியராக இருக்கும் அதே தினமலரில் வெளிவரும்? வாசகர்களை ஏமாளிகள் என்று நினைத்து விட்டார்களா? “தாமஸ் கட்டுக்கதை” என்ற எனது இணைத்தளத்தைப் பார்க்கவும்[1]. அதில் தாமஸ் கட்டுக்க் கதை இந்தியாவில் கிருத்துவர்கள் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர்[2] மற்றும் ஊடகங்களில் தொடர்ந்து அத்தகயைப் பொய்ப்பிரசாரத்தை உண்மைபோல அதுவும் சரித்திரம் போல பரப்பி வருகின்றனர். அதற்கு தினமலர் உதவி வருவது எனக்குத் தெரிய வந்தது[3].

கபாலீஸ்வரர் கோவிலே சொல்கிறதுமுன்புதான் கடற்கரையில் இருந்ததாக! என்ற தலைப்பில் பதிவு செய்தபோது, “கி.பி 1566ல், மைலாப்பூர் போர்ச்சுகீசியர்களில் வீழ்ந்த போது, இந்த கோவில் முழுவதுமாக இடிக்கப் பட்டது. இந்த கோவிலானது 300 வருடங்களுக்கு முன்பு மறுபடியும் (இப்பொழுதுள்ள இடத்தில்) கட்டப் பட்டதாகும். பழைய (முந்தைய கபாலிஸ்வரர்) கோவிலில் இருந்த கல்வெட்டுகள் உடைந்த நிலையில் இந்த கோவிலிலும், செயின்ட் தாமஸ் சர்ச்சிலும் காணலாம்”, என்று எடுத்துக் கட்டியுள்ளேன்[4]. இருப்பினும் சமீக காலத்தில் தெய்வநாயகம், செபாஸ்டியன் சீமான்[5] போன்ற கிருத்துவர்கள் ஏதோ ஆதாயத்திற்காக இக்கட்டுக்கதையை எடுத்துக் கொண்டு குழப்பி வருகின்றனர்[6]. சிறிதும் வெட்கம் இல்லாமல் கருணாநிதி, ஸ்டாலின் கூட இதில் பங்குக் கொண்டு கூத்தாடிகளாக / கைப்பாவைகளாக வேலைசெய்துள்ளனர்[7]. முருகனைப் பிடித்த குரங்கு, ஏசுவைப் பிடித்து விட்டது. ஆமாம், பட்டை விபூதி ஜான் சாமுவேலுக்கு ஏசுபைத்தியம் பிடித்து விட்டது[8]. பாவம் ஜி.ஜே. கந்தப்பன், ராஜமாணிக்கம் ஆத்மாக்கள் சாந்தியடைவதாக! தினமலரின் உபயம் தொடர்ந்து வந்தது[9].

Kapaleswarar teple inscription strewn around DM.2011-1

சிதறிக்கிடக்கும் கபாலீசுவரர் கோவில் கல்வெட்டுகள்இத்தலைப்பில், இன்று தினமலர், ஏதோ புதியதாக கண்டு பிடித்து, இடித்து விட்டால் போல சில விஷயங்களைப் போட்டிருக்கிறது. “சென்னை வட்டாரத்தில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் பல விதங்களில் சிறப்புடையது. எனினும், இக்கோவிலின் தொன்மையை அறிய உதவும் கல்வெட்டுகள், பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன. முழுமையாகவும் கிடைக்கவில்லை[10]. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், டாலமி என்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர், மயிலாப்பூரை, மல்லியார்பா என கூறுகிறார்.

தினமலர் கூறுவது:கி.பி. 5ம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த ஐயடிகள் காடவர் கோன், திருமங்கையாழ்வார், கி.பி.7ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர், அப்பர் சுவாமிகள் ஆகியோர், மயிலாப்பூரை தங்கள் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.கடற்கரையில் மயிலாப்பூர் இவர்களில், அப்பர் சுவாமிகள் இத்தலத்திற்கு தனிப் பதிகம் பாடவில்லை எனினும், வேறு இரு திருப்பதிகங்களில் மயிலாப்பில் எனக் குறிப்பிடுகிறார்.

என்னுடைய விளக்கம்:மயிலார்ப்பு என்பதற்கு பொருள் ‘மயிலாதல்’- உமை மயிலாலாக ஆகியதால் மயிலார்ப்பு-ஊர் என்பது மயிலாப்பூர் ஆனது என்பர். 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமழிசை ஆழ்வாரின் நான்முகம் திருவந்தாதியில்“…………………………………….               நீளோ தம்

வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக்கேணியான்”, என்பதெல்லாம் தெரியவில்லை போலும். 6ம் ஊற்றாண்டில் வாழ்ந்த ஐயடிகள் காடவர் கோன் என்னும் பல்லவ அரசர் பாடிய சிவத்தளி வெண்பாவில், “மயிலைத்திருப்புன்னை யங்கானல் சிந்தியா யாகில் இருப்பின்னை யன்காந் திளைத்து…….”, என இக்கோயிலைப் பாடியுள்ளார்.

திருநாவுக்கரசர் தேவாரத்தில் மூன்றிடங்களில் மயிலாப்பு கூறப்பெறுகின்றது.

  1. திருவொற்றியூர் திருத்தாண்டகத்து ஆறாவது திருப்பாடலில் “வடிவுடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர்கண்டோம் மயில்லப் புள்ளே என்ற தொடர் சுவாமிகள் மயிலையிலிருந்தே ஒற்றியூர் சென்றார் என்று சேக்கிழார் கூறுவதற்கு அகச்சான்றாகின்றது.
  2. “மங்குன் மதி மாடவீதி மயிலாப்பிலுள்ளார்” (6-2-1) என்று அப்பர் பெருமான் மயிலையின் மாடவீதி அழகைப் புகழ்ந்துப்பாடுகிறார்.
  3. மயிலாப்பில்மன்னினார் மன்னி ஏத்தும்” (6-7-12) என்ற இடத்தில் மயிலையைக் காப்புத் தலங்களுள் வைத்துப் பாடுகிறார். மேற்சொன்ன மூன்றிடங்களிலும் அப்பர் பெருமான் மயில்லாப்பூரை மயிலாப்பு என்றே கூறுகிறார். சில கல்வெட்டுக்களிலும் (261/1910, 189/1912) மயிலாப்பில் என்றே காணப்படுகிறது.
அதன் பின், அருணகிரிநாதர் இத்தலத்திற்கு, 10 திருப்புகழ்கள் பாடியுள்ளார். இவர் காலம் வரை, கடற்கரையோரம் தான் மயிலாப்பூர் கோவில் இருந்தது.அருணகிரிநாதரின் திருப்புகழ்ப் பகுதியில், “கடலக் கரைதிரை யருகேசூழ் மயிலைப் பதிதனில் உறைவோனே” என்ற அத்தாட்சியால் தெரியவரும்.
இன்றைய சாந்தோம் பகுதியில், இக்கோவில் இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் பல உண்டு. புதிய கோவிலில் கல்வெட்டுகள் கடந்த 1672க்கு முன்பாக, இப்போதைய இடத்தில் இன்றைய கோவில் கட்டப்பட்டது. இடிக்கப்பட்ட கோவில்களின் கற்கள் புதிய கோவில் மற்றும் சர்ச் கட்டப் பயன்படுத்தப்பட்டதாக, வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சில கல்வெட்டுக்களிலும் (261/1910, 189/1912) மயிலாப்பில் என்றே காணப்படுகிறது. வேறு சில கல்வெட்டுக்களில் மயிலார்ப்பில் என்று “ரகர” ஒற்றுடன் காணப்படுகிறது (256/1912).

இதை உறுதிப்படுத்தும் விதத்தில், இன்றும் பழைய கபாலீசுவரக் கோவில் கல்வெட்டுகள், பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன. மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில், சுவாமி, அம்மன், சிங்காரவேலர் கருவறை சுவர்களில் ஒரு கல்வெட்டு கூட கிடையாது. கற்பகாம்பாள் கோவில் பிரகாரச் சுற்றுச்சுவரின் உள் மற்றும் வெளிப்புறச் சுவர்களில், 20க்கும் மேற்பட்ட பழமையான கல்வெட்டுகள் தாறுமாறாக அடுக்கப்பட்டுள்ளன.  அதேபோல், கபாலீசுவரர் கருவறையின் மேற்குச் சுவரின் உள் மற்றும் வெளிப்பக்கமும், கருவறை வாயில் நிலை இடதுபுறக் கல்லிலும், மேற்கு கோபுரத்தின் தரையிலும் சில கல்வெட்டுகள் உள்ளன.

Kapaleswarar teple inscription strewn around DM.2011-2

துறைமுக நகர்: இவை தவிர, திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மயிலை விருபாட்சீசுவரர் கோவில், பொன்னேரிக்கு அருகில் உள்ள காட்டூரில் கிடைத்த கல்வெட்டு ஆகியவற்றில், மயிலாப்பூர் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. இவற்றில், சில கல்வெட்டுகளில் கடல் வணிகம் செய்யும் நானாதேசிகள் மற்றும் அஞ்சுவண்ணம் வணிகர்களை பற்றியும் குறிப்பு உள்ளது. இதில் இருந்து தொன்மையாகவே, மயிலாப்பூர் துறைமுக நகராக இருந்தது தெரிய வருகிறது. பூம்பாவையின் பெயர் திருப்பூம்பாவை என, சிவநேச செட்டியாரின் மகளும், சம்பந்தரால் மீண்டும் உயிர்ப்பிக்கப் பெற்றவருமான பூம்பாவையின் பெயர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் குளத்துப் படிக்கட்டு ஒன்றில் உள்ள கல்வெட்டிலும், பரங்கி மலை தூய அப்போஸ்தல மாடத்தின் உணவருந்தும் அறையின் பக்கத்திலுள்ள மாடிப்படியில் உள்ள ஒரு கல்வெட்டிலும், விருபாட்சீசுவர் கோவில் கருவறையின் தென்புறச் சுவரில் உள்ள ஒரு கல்வெட்டிலும் குறிக்கப்பட்டு, மயிலையில் உள்ள அவரது சன்னிதியில் பூஜைகள் நடத்துவதற்கு செலவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல்கள் அனைத்தும் சென்னை மாநகர் கல்வெட்டுகள் தொகுப்பிலும், மத்திய அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட கல்வெட்டுகள் தொகுப்பிலும் உள்ளன.

இதில் குறிப்பிடத்தக்கது, எந்த கல்வெட்டும் முழுமையாக கிடைக்கவில்லை என்பது தான் (ஆஹா, என்ன கரிசனம், அக்கரை, முழுமையாக கிடைக்கவில்லை என்றால், என்னவாயிருக்கும் என்று எழுதியவருக்குத் தெரியாதா? அல்லது சொல்லக்கூடாது என்று கட்டளையிட்டுவிட்டார்களா?). பல கல்வெட்டுகளில் பெரும்பகுதி சிதைந்து போயுள்ளன.பிஷப் வளாகத்தில் வைத்துள்ள மியூஷியத்தில் இக்கல்வெட்டுகளை வைத்துள்ளனர். ஆகவே, அவை அழிக்கப்பட்டன என்பது தெரிகிறது. முன்பு இணைத்தளத்தில் வெளியிட்டனர். இப்பொழுது காணப்படவில்லை. இதெல்லாம் உண்மையை, சரித்திரத்தைக் கிருத்துவர்கள் மறைக்கும் வேலைதானே? இதைப் புரிந்து கொள்ள என்ன வேண்டியிருக்கிறது?

எனினும், இக்கல்வெட்டுகள் மூலம், 12, 13ம் நூற்றாண்டுகளில் பலர் மயிலை கபாலீசுவரர் கோவிலுக்கு பல தானங்கள் அளித்துள்ளனர் என்பதை மட்டும் தெரிந்து கொள்ள முடிகிறது. படிக்கட்டுகளில் கல்வெட்டுகள் ஒரே ஒரு கல்வெட்டில் மட்டும், திருக்கபாலீசுரமுடைய நாயனார் என, கபாலீசுவரர் குறிப்பிடப்படுகிறார். பிற கல்வெட்டுகளில், திருவான்மியூர், திரிசூலம் போன்ற கோவில்களுக்கு அளிக்கப்பட்ட கொடைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. கடந்த, 1910ல் துவக்கப்பட்டு, 1925 வரை நடந்த தெப்பக் குள படிக்கட்டு திருப்பணியில் ஈடுபட்டோர், தங்கள் பெயர்களை முறையாக கல்லில் செதுக்கி, குளக்கரையில் பதித்தும் வைத்துள்ளனர். இன்றும், அந்த கல்வெட்டுகளை குளக்கரையில் காணலாம். இப்படி முடித்துள்ளது தினமலர்.

Kapaleswarar teple inscription strewn around DM.2011-3

கோவில் இடிக்கப்பட்டு சர்ச் கட்டப்பட்டதற்கான அத்தாட்சிகள்: 17ம் நூற்றாண்டிலிருந்து  கோவில் வளாகத்தைச் சிறிது சிறிதாக இடித்து சர்ச், பிஷப் இல்லம், பள்ளி முதலியன கட்டப்பட்டன. 18ம் நூற்றாண்டில் இவை கட்டி முடிக்கப் பட்டன. சர்ச் உண்மையில் சிறிதாக  இருந்து பிறகு பலதடவை இடித்து-இடித்துக் கட்டப் பட்டதாகும். அந்நிலையில் தான் கோவில் அத்தாட்சிகள், ஆதாரங்கள் மறைக்கப்பட்டன. .

 

மேலேயுள்ளது, 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த விக்கிரமசோழனின் கல்வெட்டாகும். இரவில் நடராஜருக்கு விளக்கெரிக்க வரியிலா நிலமான்னியம் கொடுக்கப்பட்டதை இக்கல்வெட்டு கூறுகிறது.  இது சர்ச்சின் வராண்டாவில் கிடந்தது. பிறகு தொல்துறைத்துறையினர் கண்டுபிடிதார்களாம். உண்மையில் ஹூஸ்டன் இதனைப் பார்த்து பிற்காகத்தில் தமக்கு சாதகமாக இருக்குமே என்று பக்கங்களை சிதைத்து விட்டான். அப்பொழுதே “மெயிலில்” இந்த ஆளுடைய “அத்தாட்சிகளை அழிப்புத்தன்மையினை” எடுத்துக் காட்டி எழுதப்பட்டது. அத்ற்கும் இந்த ஆள் காட்டமாக பதில் சொல்லியுள்ளான்.

சர்ச்சில் கிடைத்த இன்னொரு தமிழ் கல்வெட்டு. இதுவும் இறையிலியைக் குறிக்கிறது. ஆனால், சிதைந்த நிலையில் காணப்பட்டது.

12ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமஸ்கிருத மொழி கல்வெட்டு, சர்ச்சின் மேற்குப் பகுதியில் கிடந்தது / கிடைததது.

12ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு, சாந்தோம் செமினரியின் பிரதானக் கதவிற்கு செல்லும் கடைசி படிகட்டின் வலதுபுறத்தில் காணப்பட்ட கல்வெட்டு. இப்பொழுது சாந்தோம் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் இருப்பதாகக் கூறுகிறார்கள் ()அதாவது இருந்தது, பிறகு காணவில்லை. இதிலிருந்து, பழைய கபாலீசுவரக் கோவில் ஒரு பெரிய வளகத்தில் இருந்திருக்கிறது என்று தெரிகிறது. மிலேச்சர்கள் / போர்ச்சுகீசியர் அதனை ஆக்கிரமித்துக் கொண்டு இடித்து, உடைக்க ஆரம்பித்த போது, கிடைத்தப் பகுதிகளை, குறிப்பாக விக்கிரங்களை எடுத்து வந்து கோவிலைக் கட்டிக் கொண்டனர்.

இப்படி பற்பல அத்தாட்டிகள், ஆதாரங்கள் கொண்ட “தாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது: இந்துமதத்திற்கு எதிரான கிருத்துவர்களின் சதிகள் ஒரு 120 பக்கங்கள் கொண்ட கட்டுரையைக் கொடுத்தேன். அதனை “இந்துக்கள் / இந்து அபிமானிகள்” என்று சொல்லிக் கொண்டவர்கள் தாம் புத்தகமாக வெளியிடுகிறோம் என்று 2008ல் சிடியில் எடுத்துக் கொண்டு சென்றார்கள் ஆனால், செய்யவில்லை. ஆனால், அதிலுள்ள விஷயங்களை “Breaking of India” என்ற புத்தகத்தில் தாராளமாக உபயோகப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால், ஒரு இடத்தில் கூட, இன்னாரிடத்திலிருந்து எடுத்தாளப்பட்டது / பெறப்பட்டது என்று குறிப்பிடவில்லை. ஏதோ, இவர்களே அந்தந்த இடங்களுக்குச் சென்று, குறிப்பிட்ட நபர்களுடன் பேசி, விஷயங்களைத் தெரிந்து கொண்டது போல எழுதியுள்ளார்கள். ஆனால், உன்மையில் அவர்கள் அங்குச் செல்லவும் இல்லை, அந்த நபர்களுடன் பேசியுதும் இல்லை, என்னுடைய சிடியிலிருந்து எடுத்த விஷயங்களை (தாமஸ் கட்டுக்கதை சம்பந்தமானவை – தெய்வநாயகம், ஒலாஸ்கி முதலியன) அப்படியே போட்டுள்ளர்கள்.

வேதபிரகாஷ்

06-04-2012


[10] தினமலர், சிதறிக்கிடக்கும்கபாலீசுவரர்கோவில்கல்வெட்டுகள்,  ஏப்ரல் 06, 2012, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=442587



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

santh%2B012.jpg santh%2B013.jpg santh%2B014.jpg santh%2B015.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

santh%2B016.jpg santh%2B017.jpg santh%2B018.jpg santh%2B019.jpg 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 santh%2B020.jpg santh%2B021.jpgSanthome%2B1.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Santhome.png Wilson_William_on_CMM%2B-%2BCopy.PNG 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Mave.jpg  Maves.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

santh%2B021.jpg santh%2B023.jpgsanth%2B022.jpgsanth%2B024.jpg106917409_183862833096292_57026969245387 107343099_183862859762956_17873226047229107823858_183862883096287_17678627961743Kabali-granite-plate.jpgJJY%2BArul.png 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

கபாலீசுவரர் கோவில் - சென்னை

தொண்டை நாட்டுத் தலம்.

https://www.tamilvu.org/stream/culgal/html/cg100/cg102/html/cg102t0601.htm

தருமமிகு சென்னை மாநகரின் நடுவண் அமைந்துள்ள மயிலாப்பூரில் கம்பீரமாகக் காட்சி தருவது அ/மி. கபாலீஸ்வரர் திருக்கோயிலாகும். ‘திருமயிலைக் கபாலீச்சரம்’ எனச் சிறப்பிக்கப் பெறும் இத்தலம் அம்பாள்     மயில்வடிவிலிருந்து வழிபட்டமையால் ‘மயிலாப்பூர்’ எனப்பெயர் பெற்றது. மயிலை என்றவுடன் நினைவுக்கு வருவதே இத்திருக்கோயில்தான்.

இறைவன்-

கபாலீஸ்வரர்.

இறைவி-

கற்பகாம்பாள்.

தலமரம்-புன்னை

திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. வாயிலார் நாயனார் அவதரித்த தலம். தெய்வப்புலவர் திருவள்ளுவர் மயிலையில் பிறந்ததாக வரலாறு. திருஞானசம்பந்தர், எலும்பைப் பெண்ணாக்கிய (பூம்பாவை) அற்புதத்தை நிகழ்த்திய அருமையுடைய தலம்.

கோயிலுக்கு முன்பு அழகான, பரந்த திருக்குளம் - தெப்பக்குளம் சுற்றிலும் நாற்புறமும், நன்கமைக்கப்பட்டுள்ள படிகளுடனும் ; நடுவில் நீராழி மண்டபத்துடனும் காட்சி தருகின்றது.

கோயிலை நோக்கிச் செல்லும் நம்மை வரவேற்கும் ராஜகோபுரம் மிக்க அழகுடையது ; மேற்கு நோக்கியுள்ளது. உள்ளே நுழைந்தால் நேர்எதிரே சுவாமி - அ/மி.கபாலீஸ்வரர் சந்நிதி - மேற்கு நோக்கியுள்ளது. எடுப்பான சிவலிங்கத் திருமேனி.

சுவரில் தலப்பதிகமான ‘மட்டிட்ட புன்னை’ என்னும் பதிகம் கல்லில் பொறிக்கப்பட்டுப் பதிக்கப்பட்டுள்ளது. சுவாமி சந்நிதியுள் நுழைந்து வலமாக வரும்போது நடராசப் பெருமான் திருமேனி நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. உருத்திராக்கப் பந்தலில் பெருமான் காட்சி தருகின்றார். உலகெலாம் மலர்சிலம்படியைத் தொழுது நகர்ந்து வள்ளி தெய்வயானையுடன் காட்சி தரும் முருகப் பெருமானைத் தரிசித்து வலம் வரும்போது, சோமாஸ்கந்தர், பிட்சாடனர் முதலான உற்சவத் திருமேனிகளைத் தொழுது வணங்கலாம்.

கோஷ்ட மூர்த்தங்களாகத் துர்க்கை, தட்சிணாமூர்த்தி, விநாயகர் காட்சி தருகின்றனர். அறுபத்துமூவருடைய உற்சவ மேனிகளும் அடுத்துள்ள மூலத்திருமேனிகளும் கண்ணுக்குப் பெரு விருந்தாகும். கால நிலைக்கேற்ப     பல்வேறு     சுவாமிகளின் வண்ணப் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. வலமாக வந்து கபாலீச்சரக் கண்மணிையைக் கண்ணாரத் தொழுது வெளியே வந்து வலப்பால் சென்றால் அம்பாள் சந்நிதியைக் காணலாம். அ/மி. கற்பகாம்பாளின் அருள்வெளி - உள்ளே நுழையும்போதே தெய்வீக மணம். நேரே நின்று, நின்ற கோலத்தில் காட்சி தரும் கற்பகவல்லியைத் தரிசிக்கலாம். உள்ளே வலம் வரும் போது சுவரில் மாட்டப்பட்டிருக்கும் பல தலங்களில் வீற்றிருக்கும் அம்பாளின் வண்ணப் படங்களையும் கண்டு கை தொழலாம். வெளியே வந்து வலப்புறம் திரும்பி வெளிப் பிராகாரத்தில் வரும் நமக்கு கிழக்கு நோக்கி அமைந்துள்ள பூம்பாவை சந்நிதி முதல் தரிசனம் தருகின்றது.விமானத்தின் மேலே எலும்பைப் பெண்ணாக்கிய அற்புதம் சுதையில் செய்யப்பட்டுள்ளது. கண்டு தொழுது வலம் வரும்போது அலுவலக அறையையொட்டி புன்னைமரம் - தலமரம் காட்சி தருகிறது. மயிலாய் அம்பிகை பூசித்த வரலாறு உள்ளது. புன்னைவனநாதர் சந்நிதி -சிவலிங்கத் திருமேனி உள்ளது. அம்பாள் மயில் வடிவில் பூசித்ததால் மயில் உருவமும் சிலா ரூபத்திலுள்ளது. பக்கத்தில் உள்ள கூண்டில் இரு மயில்கள் தேவஸ்தானப் பராமரிப்பில் வளர்கின்றன. அழகான விமானத்துடன் அமைந்துள்ள சனிபகவான் சந்நிதியை வலமாக வந்து நவக்கிரகங்களைத் தொழுது சுந்தரேஸ்வரர் ஜகதீஸ்வரர் சிவலிங்கத் திருமேனிகளைத் தரிசிக்கலாம். அடுத்து நர்த்தன விநாயகர், அண்ணாமலையார் சந்நிதிகள்.

சிங்காரவேலர் சந்நிதி சிறப்பானது. சிறிய நந்தவனம் உள்ளது.
தண்டாயுதபாணி சந்நிதியும், வாயிலார் நாயனார் சந்நிதியும் எதிர்ப்புறத்தில் அமைந்துள்ளன. தேவஸ்தானத்தில் நூலகம் உள்ளது. பதினாறுகால் (அலங்கார) மண்டபமும், நான்கு கால் (சுவாமி எழுந்தருளும்) மண்டபமும் உள்ளன. அருணகிரிநாதரைத் தொழுது, அடுத்து அமைந்துள்ள மயிலைத் திருப்புகழ்க் கல்வெட்டை ஒரு முறை ஊன்றிப் படித்துப் பின்னர் கொடிக் கம்பத்தின் முன்பு வீழ்ந்து வணங்கி, அமரும்போது நெஞ்சில் எழும் நிறைவுக்கு ஈடேது ! கற்பகவல்லியின் பொற்பதமே நமக்கு நற்கதி தரவல்லது. ஆம் ! அவளே நமக்கு விழுத்துணை.

இத்திருக்கோயிலில் நடைபெறும் பங்குனி உத்திரப் பெருவிழா மிக்க சிறப்புடையது. இவ்விழாவில் அறுபத்துமூவர் திருவிழா கண்கொள்ளாக் காட்சியாகும். பிரதோஷம், கிருத்திகை, ஆடிப்பூரம், ஆவணிமூலம், நவராத்திரி, சஷ்டி, திருமுறை விழா முதலியனவும் மார்கழி (தனுர்) மாத வழிபாடுகளும் இக்கோயிலில் சிறப்புடையவை. இத்திருக்கோயில் 300 ஆண்டுகள் பழமையானது. இதற்கு முன்னிருந்த பழைய கோயில் கடற்கரையில் இருந்தது. அது வெள்ளையர்களால் இடிக்கப்பட்டது.
‘ H. D. லோவ்’ என்பவர் எழுதியுள்ள சென்னை சரித்திர நூலில் கி.பி. 1672ல் துருக்கியரோடு நடந்த போரின்போது பிரெஞ்சு சேனைகள் தற்போதுள்ள இக்கோயில் பிராகாரத்தில் ஒளிந்துகொண்டிருந்ததாகக் குறித்துள்ளார். கி.பி. 1798ல் வெளியிடப்பட்டுள்ள நகரப்படத்தில் இக்கோயில் திருக்குளம் காட்டப்பட்டுள்ளது. கடற்கரையில் கோயில் இருந்த இடத்தில் அதை இடித்து வெள்ளையர்கள் கட்டிய வழிபாட்டு இடமே இப்போதுள்ள “சாந்தோம் கதீட்ரல் மாதாகோயில்” உள்ள இடமாகும். தேவாரத்தில் இத்தலம் ‘மயிலாப்பு’ என்று குறிக்கப்படுகிறது. (ஒற்றியூர்-திருத்தாண்-6) அருணகிரிநாதரும் “கடலக்கரை திரையருகே சூழ் மயிலைப் பதி உறைவோனே” என்று பாடுகிறார்.

“மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திரப்பல் கணத்தார்க்கு
அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.”
                 (சம்பந்தர்)

“மண்ணினிற் பிறந்தார் பெரும்பயன் மதிசூடும்
அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல்
கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவு கண்டார்தல்
உண்மையாம் எனின் உலகர்முன் வருகென உரைப்பார்.”
                (பெ.புரா.திருஞான’ புரா)

“குயிலொத்திருள் குஞ்சி கொக்கொத் திருமல்
பயிலப் புகாமுன்னம் நெஞ்சே - மயிலைத்
திருப் புன்னையங்கானல் சிந்தியாயாகில்
இருப் பின்னை அங்காந் திளைத்து.”
             (ஐயடிகள் காடவர்கோன்)

அயிலொத் தெழுமிரு - விழியாலே
    அமுதொத் திடுமரு - மொழியாலே
சயிலத் தெழுதுணை - முலையாலே
    தடையுற் றடியனு - மடிவேனா
கயிலைப் பதியரன் - முருகோனே
    கடலக் கரைதிரை - யருகேசூழ்
மயிலைப் பதிதனி - லுறைவோனே
    மகிமைக் கடியவர் - பெருமாளே.
             - ‘பாற்காட்டும்

ஆர்த்தி பெற்றமாது மயிலாய்ப் பூசித்தார் மயிலைக்
கீர்த்தி பெற்ற நல்வேத கீதமே.
                 (அருட்பா)

அஞ்சல் முகவரி :-
அ/மி. கபாலீஸ்வரர் திருக்கோயில்
மயிலாப்பூர் - சென்னை - 600 004.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard