மன்னார்கோவில்
திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் வடமேற்காக இவ்வூர் அமைந்து உள்ளது. பொதிகை மலையின் பின்புலத்தில் உள்ள பல பாறைகளில் இராசாப் பாறை, நிலப்பாறை ஆகிய குன்றுகளில் இரு தமிழி கல்வெட்டுகள் உள்ளன.
கல்வெட்டு 30:1
இராசப் பாறைக் குகையின் உட்கூரைப் பகுதியில் மூன்று வரிகளில் பொறிக்கப்பட்டு உள்ளது.
வ 1. பள்ளி செய்வித்தான்
வ 2. கடிகை (கோ) வின் மகன்
வ 3. பெருங்கூற்றன்
கோ ஊகித்துக் கொள்ளப்பட்ட எழுத்து. கடிகைக் கோவிற்கு மகனான பெருங்கூற்றன் என்பான் இந்த கற்படுக்கையை செய்வித்துக் கொடுத்தான் என்பது இதன் பொருள். மெய் எழுத்துகள் புள்ளி இன்றி எழுதப்பட்டு உள்ளன. ஈரானின் தென்மேற்கு பகுதியில் அமைந்த ஈலம் நாகரிகத்தில் கூற்றன் என்ற பெயர் கொண்ட அரசர்கள் உண்டு
கல்வெட்டு.30:2
நிலாப் பாறையின் திறந்த வெளிப் பகுதியில் வெட்டப்பட்ட கற்படுக்கை மீது இரு வரிகளில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது.
வ 1. குணாவின் ளங்கோ
வ 2. செய்பித பளிஇ
குணா என்னும் ஊரின் இளங்கோ செய்வித்த படுக்கை என்பது இதன் பொருள். உயிர் எழுத்து இகரம் எழுதப்படவில்லை ஆதலின் இகரம இட்டு இளங்கொ என படிக்க வேண்டும். தகர மெய் சேர்த்து செய்பித்தென படிக்க வேணடும்.
மேற்சொன்ன தமிழி கல்வெடகள் தமிழ் பிராமி கல்வெட்டுகள் எனும் நூலிலை மேற்கோளாகக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டது. பார்கக் பக்கம் 85 முதல் 90வரை