Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மாங்குளம்


Guru

Status: Offline
Posts: 7478
Date:
மாங்குளம்
Permalink  
 


மாங்குளம் TB%2B02.jpg


மதுரைக்கு வடக்கில் மேலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கத்தப்பட்டி என்ற கிராமத்தில் பிரிந்து வடமேற்கு நோக்கிச் சென்றால் மாங்குளத்தை அடையலாம். இவ் ஊரினை அண்டி மீனாட்சிபுரம் என்ற ஊரை ஒட்டி தெற்கு வடக்காக  'ஓவாமலைஎன்றும் 'கழுகுமலை' என்றும் மக்களால் அழைக்கப்படும் இரு குன்றுகள் உள்ளன. இதன் உச்சியில் கிழக்குப பகுதியில் கிழக்கு முகமாய் ஐந்து குகைகள் இயற்கையாய் அமைந்துள்ளன. இவற்றில் கற்படுகைகளும், நீர்வடி விளிம்புகளும் வெட்டப்பட்டு வதிவிடங்களாக மாற்றி அமைத்துள்ளனர். இதில் நான்கில் பட்டிப்புரோலு எழுத்து முறையில் ஆறு கலவெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.



__________________


Guru

Status: Offline
Posts: 7478
Date:
Permalink  
 

கல்வெட்டு 1:1

மாங்குளம் மலை மீதினில் சென்றதும் உள்ள முதல் குகைத் தளத்தில் இரு கலவெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.அவை பாறை முகப்பில் அமைந்த நீர்வடி விளிம்பின் கீழ் உள்ளனமுதற்கல்வெட்டு ஒரே வரியில் உள்ளது.

கணிய் நந்த அஸிரிய்ஈ குவ் அன்கே தம்மம்
இத்தாஅ நெடுஞ்சழியன் பணஅன் கடல்அன்
வழுத்திய் கொட்டுபித்தஅ பளிஇய்

கணிநந்த ஸிரிய்குவ்அன் என்பவனுக்கு தருமமாய் நெடுஞ்செழியன் அலுவலனான கடலன் வழுதி என்பான் இப்பள்ளியை உருவாக்கித் தந்தனன் என்பது இதன் பொருள்பணஅன் என்பதற்கு அரசனின் அலுவலன் எனபது பொருள்.
இக்கல்வெட்டுப் பொறிப்பில் ஏராளமான எழுத்துப் பிழைகள் உள்ளனஅத்துடன் அன் ஆண்பால் ஒருமை ஈறு பணவன்கடலன் என தனியே பிரித்து காட்டப்பட்டுள்ளது. சிந்து முத்திரைகளிலும் அன் ஈறு தனிப்பட காட்டப்பட்டு உள்ளது.

கல்வெட்டு 1:2

முதற் கல்வெட்டு உள்ள இடத்திலேயே இக்கலவெட்டு உள்ளது.

கணிய் நத்திய் கொடிய்அவன்

டகர மெய் சேர்த்து கொட்டியவன் என படிக்க வேண்டும்மேற் சொன்ன கல்வெட்டை  கணி நந்தி கொட்டினான் என்பது பொருள்.



__________________


Guru

Status: Offline
Posts: 7478
Date:
Permalink  
 

கலவெட்டு 1:3

TB%2B03.jpg

முன் இரண்டு கல்வெட்டுகளின் குகைக்கு வடக்கே கீழ்ப்புறம் உள்ள  குகையின் வெளிப்பாறைச் சுவரில் வரே வரியில்பொறிக்கப்பட்டுள்ளது.

கணிய் நந்தஸிரிய் குஅன் தமம் ஈதா நெடுஞ்சழியன்
ஸாலகன் இளஞ்சடிகன் தந்தைய் சடிகன் சேஇய் பளிய்

கணி நந்தஸிரியனுக்கு தர்ம்மாக் பள்ளி  அமைத்துக் கொடுத்தவன் நெடுஞ்சழியனின் சகலையாகிய இளஞ்சடிகனின் தந்தை சடிகன் என்பது இதன் பொருள்சடிகன் சேய் என்பது போல் சேய் சிந்து முத்திரைகளிலும்  காணப்படுகின்றது..

கல்வெட்டு 1:4

மேற்கண்ட குகைத்தளத்தின் மேல் மற்றொரு குகைத்தளத்தில் நீண்ட ஒரு வரிக் கல்வெடடு இது.

கணிஇ நதஸிரிய் குவ(ன்) -- -- வெள்அறைய் நிகமது காவதிஇய்
காழிதிக அந்தை அஸுதன் பிணஉ கொடுபிதோன்

வெள்ளறை நிகமத்துக் காவிதியான கழிதிகன் அந்தையின் மகன்அஸிதன் என்பவன் கணி நந்தஸிரிக்குவனுக்கு அமைத்துக் கொடுத்த உறைவிடம் என பொருள். ககர மெய் என்பதை தகர மெய் என தவறாக் குறித்து விட்டேன்ககர மெய் சேர்த்தால் கழிதிக்க என்றாகும்தெலுங்கில் திக்கண்ணா என்றொரு புலவர் உண்டு.



__________________


Guru

Status: Offline
Posts: 7478
Date:
Permalink  
 

 கல்வெட்டு 1:5

TB%2B04.jpg
நான்காவது கல்வெட்டு உள்ள குகைத்தளத்திற்கு தெற்கே இரு சிறிய கல்வெட்டுகள் உள்ளனஅதில் முதலாவது

சந்தரிதன் கொடுபிதோன்

சந்தரிதன் இவ் வதிவிடம் அமைத்துக் கொடுத்தான் என்பது இதன் பொருள்டகர மெய் சேர்த்து கொட்டுபிதோன் என படிக்க வேண்டும்இதற்கு செதுக்கி அமைத்தவன் என பொருள் கொள்ளவேண்டும்

கல்வெட்டு 1:6

 
1:5 அமைந்த குகைத் தளத்திலேயே இக்கல்வெட்டும் அமைந்துள்ளது.

வெள்அறை திகமதோர் கொடிஓர்

வெள்ளறை என்ற ஊரின் வணிகக் குழுவினர் (நிகமத்தோர்இக்குகைத் தளத்தை அமைத்துக் கொடுத்தனர் என்பது பொருள்நிகமதோரில் தகர மெய் சேர்க்க வேண்டும்டகர மெய் சேர்த்து கொட்டியோர் என்று படிக்க வேணடும்.

மேற்சொன்ன கலவெட்டுகளில் உள்ள எழுத்துப் பிழைகளை நோக்க சங்கம் வளர்த்த மதுரையில் இவ்வாறான பிழைகள் தோன்றுவது வழக்கத்திற்கு மாறானதுஎனவே இக் கல்வெட்டுகளை தமிழ் இலக்கண அறிவு அற்ற கருநாடக சமண முனிவர்களே பொறித்துள்ளனர் எனக் கொள்வதே தக்கதுஅக்கால் கருநாடகத்தில் வழங்கிய பேச்சுத் தமிழ் அல்லது வட்டாரத் தமிழ் மட்டுமே அவர்கள் அறிந்திருந்தனர் என்பதற்கு சான்றாக  தமிழின் நான்காம் வேற்றுமையான "கு"  வருவதற்கு மாறாக "கே"  பயன்படுத்தப்பட்டு உள்ளதுகாட்டாக , குவ்வனுக்கு என்பதை குவ்வன்கே என 1:1 ல் பொறித்துள்ளனர்இன்றும் கன்னடத்தில் நாலாம் வேற்றுமை "கே"  என்றே வழங்குகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 7478
Date:
Permalink  
 

IMG-20191130-WA0040.jpg 

IMG-20191130-WA0041.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7478
Date:
Permalink  
 

IMG-20191130-WA0053.jpg IMG-20191130-WA0054.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7478
Date:
Permalink  
 

IMG-20191130-WA0055.jpg

IMG-20191130-WA0068.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7478
Date:
Permalink  
 

IMG-20191130-WA0082.jpg IMG-20191130-WA0086.jpg 



__________________


Guru

Status: Offline
Posts: 7478
Date:
Permalink  
 

IMG-20191130-WA0087.jpg IMG-20191130-WA0089.jpg IMG-20191130-WA0097.jpg 



__________________


Guru

Status: Offline
Posts: 7478
Date:
Permalink  
 

 மாங்குளம் (அ) மீனாட்சிபுரம் கல்வெட்டுக்கள்....

தொல்லியல் துறையும், தமிழ்நாடு பாடத்துறையும் சொல்லும் “மாங்குளம் கல்வெட்டுக்களைக்” காணச் செல்லும்வரை, அங்கு எனக்கு நிறைய ஆச்சரியங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன என்பது தெரியாது.
முதல் ஆச்சரியம். கல்வெட்டுக்கள் இருக்கும் ஊரின் பெயர் “மீனாட்சி புரம்”. மாங்குளம் கிடையாது. 1906 -இல் இங்கு சில “ கிறுக்கல்கள்” இருப்பதாக ஆடு மேய்க்கும் சிறுவர்கள் சொல்லக் கேட்டு இங்கு வந்த தொல்லியலில் ஆர்வம் உள்ள ஆங்கிலேயர் சிலர், மீனாட்சிபுரத்திற்கு, முறையான சாலை வசதி இல்லாதலால், அருகில் உள்ள மாங்குளம் வழியாக இந்த ஊரை வந்தடைந்துள்ளனர். எனவே, அவர்கள் வைத்த பெயர்தான் “ மாங்குளம் கல்வெட்டுக்கள்”. இன்று,மீனாட்சிபுரம் அனைத்து வசதிகளும் கொண்ட, அருமையான தார் ரோடு கொண்ட அழகிய சிறு கிராமம். ஆனாலும், “ மாங்குளம் கல்வெட்டுக்கள்” என்ற பெயரை மட்டும் இன்னும் யாரும் மாற்றவில்லை.
நல்லவேளை, அன்று மாங்குளத்திலாவது ரோடு இருந்திருக்கிறது. இல்லாவிட்டால், அதை “ மேலூர் கல்வெட்டுக்கள்” என்றோ “ திருப்பத்தூர் கல்வெட்டுக்கள்” என்றோ அழைத்திருப்பர் ( இவையிரண்டும் மதுரையைத் தாண்டியுள்ள பெரிய ஊர்கள்).
நாங்கள் மீனாட்சிபுரத்தை அடைந்து, அங்கிருந்த ஒரு பெண்மணியிடம் கல்வெட்டுக்கள் பற்றி விசாரித்தோம். அந்தப் பெண்ணுக்கு “ கல் குவாரி” என்று காதில் கேட்டிருக்கிறது. அவர் ப்ராப்பராக அருகில் உள்ள கல்குவாரிக்கு செல்லும் வழியைச் சொன்னார். ஒரு கிராமத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, “ சுத்திச் சுத்தி வந்தீக” பாட்டை மௌத் ஆர்கனில் வாசித்துக் கொண்டே எண்ட்ரி கொடுப்பாரே சூப்பர் ஸ்டார், அது போல மெதுவாக எண்ட்ரி கொடுத்தார் நண்பர் பாண்டித்துரை.
“அக்கா, அவங்க கல்வெட்டுக்குப் போற வழியைக் கேட்டா, நீ கல்குவாரிக்கு போற வழியைச் சொல்ற? “ என்று சொல்லிக் கொண்டே, “வாங்க சார் நான் கூட்டிப் போகிறேன்” என்றார். “எதுக்குங்க உங்களுக்கு சிரமம் ? வழியைச் சொல்லுங்க , நாங்களே போய்க் கொள்கிறோம்” என்றேன். அவர் மட்டும் “சரிங்க” என்று சொல்லி விட்டு எங்களுடன் வராமலிருந்தால் எங்கள் பாடு படு திண்டாட்டமாகப் போயிருந்திருக்கும்.
காரணம், மீனாட்சிபுரத்தில் உள்ள தமிழிக் கல்வெட்டுக்கள் இருக்கும் “ஒவ்வாமலை”யில் உள்ள புல் பூண்டுக்குக் கூட பாண்டியைத் தெரிந்திருக்கிறது. “பாண்டி அண்ணே சௌக்கியமா” என்ற விசாரிப்பை அடிக்கடி அவைகளிடமிருந்து கேட்க முடிந்தது.
மலையின் அடிவாரம் வரை கார் செல்கிறது. காரை பார்க் பண்ணி விட்டு நண்பர் பாண்டியை பின் தொடர்ந்து மலை ஏறினோம். வழக்கமான “தமிழி உள்ள குன்றுகள்” போலவே, சில இடங்களில் முறையான படிகளும், சில இடங்களில் பாதை கரடு முரடாகவும் இருந்தது. ஆனால், மிகவும் கடினமெல்லாம் இல்லை. ஏறி விடலாம்.
நான் கேட்பதற்கு முன்னரே, பாண்டியே, கல்வெட்டு இருக்கும் இடத்திற்குச் செல்வதற்கு முன்னால், மேலே உள்ள சங்க காலக் கட்டிடத்தின் எச்சங்களைப் பார்த்து விட்டு மேலே செல்வோம் சார் என்றார் (“கண்ணா லட்டு திங்க ஆசையா ? “) .
சொல்லி விட்டு அவரே, ஒரு கட்டிடம் இல்லை. இரண்டு கட்டிடம் என்றார் ( கண்ணா இன்னொரு லட்டு திங்க ஆசையா ?).
நமது தமிழ்நாடு தொல்லியல் துறை 2006ம் ஆண்டில், சில பானை ஓடுகள், பெரிய சைஸ் செங்கற்கள் இருப்பதைக் கேள்விப்பட்டு, மூன்று நான்கு இடங்களில் அகழாய்வு செய்ததில், தமிழிக் கல்வெட்டுக்கள் இருக்கும் குகைகளுக்குச்செல்லும் வெளியில் திறந்த வெளியில் இரண்டு சங்ககாலக் கட்டிடங்களைக் கண்டு பிடித்துள்ளனர்.
இங்குள்ள தமிழிக் கல்வெட்டுக்களை 100 வருடங்களுக்கு முன்னரே கண்டு பிடித்து விட்டதாலும், 1970 களில் அதை மறு ஆய்வு செய்து, அங்கிருந்தவர்கள் சமணர்கள்தான் என்று ஆவணப்படுத்திவிட்டதாலும், இந்த கட்டிடங்களில் ஒன்று சமணர்கள் கல்வி கற்றுக் கொடுத்த பள்ளியென்றும், மற்றொன்று சமையல்கூடமாக இருக்கலாம் என்று அறிக்கை தாக்கல் செய்து விட்டு ஃபைலையும் தோண்டிய குழிகளையும் மூடி விட்டது போல் தெரிகிறது.
ஆனால், இங்கு வாழ்ந்த துறவியர்களில் முதன்மைத் துறவியின் அல்லது தலைமைத் துறவியின் பெயர் “கணி நந்தஶ்ரீ குவன்” என்பது இங்குள்ள கல்வெட்டுக்களிலிருந்து புலனாகிறது ( இதனை “கணி நந்தாசிரிய இயக்கன்" என்று அர்த்தம் கொள்ளச் சொல்கிறார் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்கள்).
இந்த “ கணி” என்ற வார்த்தை, வானிலை ஆராய்ச்சி செய்தவரையே குறிக்கும் என்பது பெரும்பாலான அறிஞர்களின் கூற்று – கணியன் பூங்குன்றனார் போல.
அப்படிப் பார்த்தால், இந்த கணி நந்தனும் இங்கு தங்கி வானிலை சம்பந்தமான ஏதோவொரு ஆராய்ச்சியில்தான் ஈடுபட்டிருக்க வேண்டும் என்கிறார் ஆசீவகம் பற்றி ஆராய்ந்து, கட்டுரைகள் வெளியிட்டு வரும் முனைவர். க. நெடுஞ்செழியன் அவர்கள்.
இந்தக் “கணி நந்தன்” வானிலை சம்பந்தமான ஆராய்ச்சிதான் செய்தார் என்பது உண்மையானால், இந்தக் கட்டிடம் கூட வானிலை சம்பந்தப்பட்ட ஒரு பள்ளிக் கூடமாகவோ அல்லது ஆராய்ச்சி மையமாகவோ இருந்திருக்க வேண்டும் என்பது என் கணிப்பு.
காரணம், இங்குள்ள கல்வெட்டுக்களைப் பொறித்தது “ கணி நத்தி” என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது. அதாவது, இன்னொரு “ கணி” – இன்னொரு வானிலை ஆராய்ச்சியாளர்.
எனவே, இங்கு தங்கியவர்கள் வானிலை ஆராய்ச்சியேதும் மேற்கொண்டிருக்கலாம். அல்லது, “ கணி நந்தன்” வானிலை ஆராய்ச்சி பற்றி மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கலாம்.
இதே இடத்தில், சங்க காலத்தைய நிறைய மண் பானைகளும், மண் பாத்திரங்களும் கிடைத்திருப்பதால், இங்குள்ள இரண்டாவது கட்டிடம் சமையற்கூடமாக இருந்திருக்கவே வாய்ப்புகள் உள்ளது என்ற தொல்லியல் துறையின் கூற்றை ஒத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
இன்றும், இந்த மலையின் மீது நிறைய செங்கற்கள், பானை ஓடுகள், கூரை ஓடுகள் கொட்டிக் கிடக்கின்றன.
செங்கற்கள் ஒவ்வொன்றும் மிகப் பெரிதாக உள்ளன ( 35x18x7 செ.மீ). கிட்டத்தட்ட இன்றைய செங்கற்களை விட இரண்டு மடங்கு பெரிது ( நான் எடுத்த படத்தை இங்கு பதிவிட்டுள்ளேன்).
இதே போன்ற செங்கல்லை, பூம்புகாரில் உள்ள கண்காட்சியகத்திலும் காணலாம் ( அங்கும் நான் எடுத்த படத்தை இங்கு பதிவிட்டுள்ளேன்).
ஓடு....ஏதோ ஒரு ஸ்பெஷல் மண்ணை உபயோகப்படுத்தியது போல் தெரிகிறது. கையில் தூக்கிப் பார்த்தால் காற்று போல் உள்ளது. அவ்வளவு லேசாக உள்ள ஓடு காற்றில் பறந்து விடக்கூடாது என்பதற்காக சுண்டு விரலால் ஒரு பக்கமும், மோதிர விரலால் மறு பக்கமும் ஓட்டை போட்டு, இன்று நாம் செய்யும் Countersunk Hole போல உருவாக்கியுள்ள அதிசயத்தை என்னவென்று சொல்வது ( நான் எடுத்த அந்த ஓட்டின் படத்தையும், இன்று நாம் செய்யும் Countersunk Hole இன் படத்தையும் இணைத்துள்ளேன்). அந்த ஓட்டையில் ஆணியை உபயோக்கித்து அடியில் உள்ள மரச் சட்டத்தில் அந்த ஓட்டை இணைத்திருக்க வேண்டும். 2500 வருடத்திற்கு முன்னாலேயே Simple & Amazing Technology.
அதே போல், கீழடியில் கண்டெடுக்கப்பட்டது போல கருப்பு சிவப்பு பானை ஓடுகள், பானைகளின் விளிப்புகளில் கைகளினாலேயே செய்த டிசைன்கள் என்று ஒவ்வா மலை முழுவதும் அதிசயங்கள் கொட்டிக் கிடக்கின்றன.
மலையின் மேலேயே இரண்டு இயற்கைச் சுனைகள் வருடம் முழுவதும் அந்த விஞ்ஞானிகளுக்கு தண்ணீரை வழங்கியுள்ளன. அதில் ஒரு சுனை அந்த சமையற்கூடத்திற்கு மிகவும் அருகிலேயே இருப்பது – அவர்கள் இந்த இடத்தை தேர்ந்தெடுத்ததற்கு ஒரு காரணமாய் இருந்திருக்க வேண்டும் ( ஒரு சுனையின் படம் இங்கு இணைத்துள்ளேன்).
சரி...கல்வெட்டுகளுக்கு வருவோம்.
இங்கு மொத்தம் 6 கல்வெட்டுக்கள் உள்ளன.
கல்வெட்டு: 1
கல்வெட்டு வாசகம் :
“கணிய் நந்த அஸிரிய்இ குவ் அன்கே தம்மம்
இத்தாஅ நெடுஞ்சழியன் பணஅன் கடல்அன்
வழுத்திய் கொட்டுபித்தஅ பளிஇய்”
அர்த்தம்:
கணி நந்தஶ்ரீ குவன் என்பவருக்கு நெடுஞ்செழியனின் அலுவலனாக விளங்கிய கடலன் வழுதி என்பவன் இப்பள்ளியை (கற்படுக்கையை) உருவாக்கிக் கொடுத்தான்.
இந்தக் கல்வெட்டின் காலம் பொ.ஆ.மு. (கி.மு) இரண்டாம் நூற்றாண்டு என்று சொல்லப்படுகிறது. நெடுஞ்செழியனின் பெயர் குறிப்பிடப்படும் முதல் கல்வெட்டு.
கல்வெட்டு : 2
முதல் கல்வெட்டு இருக்கும் இடத்திலேயே இந்தக் கல்வெட்டும் இருப்பதால் இதுவும் அந்தக் கல்வெட்டின் தொடர்ச்சிதான் எனவும், இதன் காலமும் பொ.ஆ.மு.2ம் நூற்றாண்டுதான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது
கல்வெட்டு வாசகம்:
“கணிய் நத்திய் கொடிய்அவன்”
அர்த்தம் : ( முதலில் உள்ள நீண்ட கல்வெட்டை) “கணி நத்தி” என்பவன் பொறித்துக் கொடுத்துள்ளான்.
இன்றைக்கும் கிராமப் புறங்களில், கல்லில் பொறிப்பதை “ கொட்டுதல்” அல்லது “கொத்துதல்” என்றுதான் அழைக்கிறார்கள் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
அதேபோல், இதில் வரும் “ கணி” நத்தி, சாதாரண பாறை கொத்துபவன் போலத் தெரியவில்லை. “கணி” (வானிலை ஆராய்ச்சியாளன்) என்று வருவதால், இவன் “கணி நந்தனின்” மாணாக்கனாக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
 


__________________


Guru

Status: Offline
Posts: 7478
Date:
Permalink  
 

கல்வெட்டு : 3
மு̀தல் இரண்டு கல்வெட்டுக்கள் இருக்கும் பாறைக்கு அடுத்து இருக்கும் பாறையிலும் இரண்டு கல்வெட்டுக்கள் தனித்தனியே உள்ளன.
அதில் முதல் கல்வெட்டு :
“சந்தரிதன் கொடுபிதோன்”
அர்த்தம் : இந்த உறைவிடத்தை சந்தரிதன் என்பவன் அமைத்துக் கொடுத்தான்.
இதில் உள்ள “கொடுபிதோனி” ல் “ப்” மற்றும் “ த்” என்ற மெய்யெழுத்துக்கள் விடுபட்டுள்ளன. அதாவது “ கொடுப்பித்தோன்” என்ற அர்த்தத்தில் வெட்டப்பட்டுள்ளது. இதே வார்த்தையை , இதே போல் மெய்யெழுத்துக்கள் விடுபட்டுள்ள கல்வெட்டுக்களை நிறைய இடங்களில் காண முடிகிறது.
கல்வெட்டு: 4
மேலே உள்ள அதே பாறையில் உள்ள இரண்டாவது கல்வெட்டு:
கல்வெட்டு வாசகம் :
“ வெள்அறை நிகமதோர் கொடிஓர்”
அர்த்தம் : வெள்ளறை என்னும் ஊரைச் சேர்ந்த ஒரு வணிகக் குழு இந்த குகைத் தளத்தைச் செதுக்கி அமைத்தனர்.
இதில் வரும் “கொடிஓர்” ல் “ட்” என்ற மெய்யெழுத்து விடுபட்டுள்ளது. அதைச் சேர்த்து வாசித்தால் “ கொட்டியோர்”என்று வருகிறது.
இதில் வரும் “வெள்ளறை”, இன்றைக்கு மீனாட்சிபுரத்திற்கு அருகில் உள்ள “வெள்ளரிப்பட்டி”யாக இருக்கலாம் என்கிறது நமது தமிழ்நாடு தொல்லியல் துறை.
கல்வெட்டு: 5
மூன்றாவது பாறையை விட்டு விட்டு நான்காவது பாறையில் நீண்ட கல்வெட்டு உள்ளது.
கல்வெட்டு வாசகம்:
“கணிஇ நதஸிரிய் குவ…. வெள் அறைய் நிகமது காவிதிஇய்
காழிதிக அந்தை அஸூதன் பிணஉ கொடுபிதோன்”
அர்த்தம் :
கணி நந்தஶ்ரீ குவ(ன்) என்பவருக்கு வெள்ளறை என்ற கிராமத்தைச் சார்ந்த உழவு சம்பந்தமான வணிகம் செய்யும் காழிதிக அந்தை அஸூதன் இந்த உறைவிடத்தை அமைத்துக் கொடுத்தான்.
இதில் “குவ” என்னும் எழுத்திற்கு அடுத்துள்ள எழுத்து(க்கள்) அழிந்துள்ளன. எனவே இது “குவன்” ஆக இருக்க வாய்ப்பு உள்ளது.
இந்தக் கல்வெட்டிலும் ஸி, ஸூ போன்ற பிராகிருத வட மொழிச் சொற்கள் இருப்பது கவனிக்கத்தக்கது.
கல்வெட்டு : 6
இந்த ஆறாவது கல்வெட்டு இருக்கும் இடம்தான் கொஞ்சம் ஆட்டம் காண்பிக்கும். ஆனால், நண்பர் பாண்டி இருந்ததால், மிகவும் ஈசியாக அந்த இடத்திற்கும் சென்று விட்டோம்.
மேலே உள்ள பாறைகளுக்கு நேர் கீழே, கொஞ்சம் தாழ்வாக திறந்தவெளி சுரங்கம் போல் ஒரு பாதை செல்கிறது. அதில் போனால், கீழே ஒரு பெரிய பாறையும், அதனுள்ளே மிகப் பெரிய குகை ஒன்றும், அதில் ஏராளமான படுகைகளும், இடையில் ஒரு நீண்ட வடி நீர்க் கால்வாயும் உள்ளது. அந்தப் பாறையின் வெளிப்புறத்தில்தான் இந்தக் கடைசிக் கல்வெட்டு உள்ளது.
6 வது கல்வெட்டின் வாசகம்:
“கணிய் நந்தஸிரிய் குஅன் தமம் ஈதா நெடுஞ்சழியன்
ஸாலகன் இளஞ்சடிகன் தந்தைய் சடிகன் சேஇய் பளிய்”
இந்தக் கல்வெட்டில் சில எழுத்துப் பிழைகள் இருப்பதால், அதைத் திருத்தி மேலே உள்ள வாசகம் கொடுக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டின் அர்த்தம் :
கணி நந்தஶ்ரீ குவன் என்பவருக்கு நெடுஞ்செழியனின் சகலையான இளஞ்சடிகன் என்பவனின் தந்தை சடிகன் என்பவன் இந்தப் பள்ளியை (உறைவிடத்தை) அமைத்துக் கொடுத்தான்.
இந்தக் கல்வெட்டில் உள்ள இரு முக்கியமான விஷயங்கள்
  1. நெடுஞ்செழியன் என்பவனின் பெயர் உள்ள இரண்டாவது கல்வெட்டு. இது மன்னன் நெடுஞ்செழியனாகத்தான் இருக்க வேண்டும் என்று அனைத்து அறிஞர்களும் கருதுகின்றனர். இந்தக் கல்வெட்டின் காலம் பொ.ஆ.மு.இரண்டாம் நூற்றாண்டு என்பதால், சங்க இலக்கியங்களில் வரும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் மற்றும் தலையாலங்கானத்து நெடுஞ்செழியன் என்ற இருவருக்கும் முந்தைய நெடுஞ்செழியன் இவன் என்பது தெளிவு.
  2. சகலை என்ற அர்த்ததில் வரும் “ஸாலகன்” என்ற சொல் வரும் ஒரே கல்வெட்டு இதுதான்.
மீனாட்சிபுரத்திற்குச் செல்லும் வழி:
மதுரையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், ஒத்தக் கடையைத் தாண்டி வரும் முதல் சுங்கச் சாவடிக்கு முன்னரே இடது கைப் பக்கம், “மீனாட்சி புரம் “ என்ற வாசகம் இருக்கும் ஒரு பெயர்ப் பலகையுடன் ஒரு சாலை திரும்பும். அதில் ஒரு மூன்று கிலோமீட்டர் சென்றால் மீனாட்சி புரம் வந்து விடும். அங்கு சென்று ஒவ்வா மலை என்று கேட்டால் வழி சொல்லி விடுவார்கள்.
நண்பர் பாண்டித் துரைக்கு ஃபோன் பண்ணினால், அவரால் இயன்ற அனைத்து உதவிகளையும் மகிழ்ச்சியோடு செய்வார். நீங்கள் வழி தவறும் பட்சத்தில், அவருக்கு உடனே ஒரு ஃபோன் பண்ணி விடுங்கள்.
பாண்டித் துரையின் எண்கள் : 95007 82838 & 89460 00391
டிப்ஸ்: மீனாட்சி புரம் சிறிய ஊர் என்பதால், சாப்பிட உணவு விடுதிகள் ஒன்றும் கிடையாது. முடிந்தால், தண்ணீர், சாப்பாடு கைவசம் வைத்துக் கொள்ளுதல் நலம்.
சீக்கிரம் பார்த்து விட்டீர்களானால், ஒரு ஐந்து அல்லது ஆறு கிலோமீட்டர் தூரத்தில் மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் A2B மற்றும் டெம்பிள் சிட்டி உணவங்கள் உள்ளன. இரண்டுமே உயர்தர சைவ உணவங்கள்.
பிறகென்ன...யோசிக்காம கிளம்பி வாங்க மக்கா....
வெ.பாலமுரளி
7695954933


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard