Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருமுருகாற்றுப்படையில் தெய்வானை


Guru

Status: Offline
Posts: 7329
Date:
திருமுருகாற்றுப்படையில் தெய்வானை
Permalink  
 


திராவிட,தமிழ் தேசியம் பேசுபவர்களுக்கு தமிழின் அடிப்படையோடே பரிச்சயம் கிடையாது என்பதில் எனக்கு இருவேறு கருத்தே கிடையாது.என் குடும்பம் தொடங்கி நண்பர்கள்,புதியவர்கள் என எல்லா தரப்பிலும் விரவிக் கிடக்கிறார்கள்.எனக்கு பரிச்சயமான இவர்கள் ஒருவருக்கு கூட எந்த தமிழ் மூல நூலோடும் அறிமுகமே இருந்ததில்லை.

இவர்களுடைய வாழ்நாளே எப்படி கழியும் என்றால்? யாரோ ஒருவரின் மேடைப்பேச்சும்,மேற்கோளும்தான்.
ஆய்வு என்பதை பலவற்றை கற்றவன் செய்ய வேண்டியது ஆனால் இங்கே அதை ஒரு தற்குறி செய்கிறான் அதுதான் பிரச்சனை.

தமிழிலக்கியத்தை ஆராய முதலில் சம்ஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் ஏனென்றால்,நமது இலக்கியங்கள் மகாபாரதம் துவங்கி பல வடமொழி இலக்கிய மேற்கோள்களை விரவி வைத்துள்ளது தனக்குள் அது.வடமொழி இலக்கியங்களை ஆய்வு செய்பவனுக்கும் இந்திய மொழிகள் தெரிந்திருக்க வேண்டும் குறிப்பாக தமிழ்.ஏனென்றால் அவற்றின் நீட்சி இங்கே உள்ளது.

ஆனால்,தமிழ்நாட்டில் மைக்கை பிடித்துவிட்டால் மானுடவியல்,மொழியியல் அறிஞர்தான் எல்லோரும்.திராவிடத்தால் ஏற்பட்ட மிகப்பெரிய கலாச்சார சீரழிவுகளில் தலையாயது இதுதான் என்னை பொறுத்த வரை.நிற்க.

திருமுருகாற்றுப்படையில் தெய்வானை இல்லை,சிவனுக்கு முருகன் மகனே இல்லை இதுவெல்லாம் ஆரியத்திணிப்பு என்பதுதான் இவர்களளது கூற்று.அவற்றைப் பற்றி பார்ப்போம்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

|| "பாம்பு பட புடைக்கும் பல் வரி கொடும் சிறை
புள் அணி நீள் கொடி செல்வனும்" - (திருமுருகாற்றுப்படை)

பொருள்: - பாம்புகள் அழியும்படி அதை அடிக்கும் பல வரிகளிருக்கும் சிறகினையுடைய
கருடக் கொடியினையுடைய திருமாலும்

"வெள் ஏறு
வல வயின் உயரிய பலர் புகழ் திணி தோள்
உமை அமர்ந்து விளங்கும் இமையா மு கண்
மூவெயில் முருக்கிய முரண் மிகு செல்வனும்" - (திரு...)

பொருள்: - தூய வெண் காளையை
வலப்பக்கத்தே வெற்றிக்கொடியாக உயர்த்தியவரும்,பலரும் புகழ்கின்ற திண்ணிய தோள்களையும்,உமாதேவியை ஒரு பக்கம் இருத்தியவரும், இமையாத மூன்று கண்களையும் உடைய,
முப்புரத்தை எரித்த,வலிமையான ருத்ரனான சிவனும்.

"நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறு பல்
வேள்வி முற்றிய வென்று அடு கொற்றத்து
ஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடை
தாழ் பெரும் தட கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திரு கிளர் செல்வனும்" - (திரு...)

பொருள்: - ஆயிரம் கண்களையும்,நூற்றுக்கணக்கான பல தரப்பட்ட வேள்விகளை செய்து முடித்த வெற்றியினையும் உடையனாய் ஐராவதத்தில் அமர்ந்திருக்கும் இந்திரனும் ||

மேலே உள்ள இந்த மூன்று கடவுளர்களோடு இணைந்து நாற்பெரும் தெய்வமாக நகரத்தில் முருகனும் நிறுவப்படுவதாக நக்கீரர் சொல்கிறார்.ஆக இந்த தெய்வங்கள் அத்தனையும் தமிழ் நகரங்களில் தமிழர்களால் வழிபடப்பட்டது என்பது உறுதி.அடுத்தது👇

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

|| நெடும் பெரும் சிமையத்து நீல பைம் சுனை
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ
ஆல் கெழு கடவுள் புதல்வ மால் வரை
மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே
வெற்றி வெல் போர் கொற்றவை சிறுவ
இழை அணி சிறப்பின் பழையோள் குழவி
வானோர் வணங்கு வில் தானை தலைவ || (திரு...)

அதாவது,முருகனின் பிறப்பை பற்றிய புராணங்கள் சொல்வது சிவபெருமான் மன்மதனை எரித்த அந்த ஆறு தீப்பொறிகள் சரவண பொய்கைக்கு அக்னி பகவானால் கொண்டு செல்லப்பட்டன‌.அங்கு அந்த ஆறு தீப்பொறிகளும் அழகிய ஆறு குழந்தைகளாக வடிவம் பெற்றிருந்தன. அந்த ஆறு குழந்தைகளும் ஆறு கார்த்திகை பெண்களின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டன என்பதே.அதையே மேற்கண்ட பாடலில் நக்கீரரும் சொல்கிறார்👇

இமயமலையில்
நீலம் பூத்திருக்கும் சுனையாகிய சரவண பொய்கையில்,
ஐவருள் ஒருவராகிய அக்னி
தன் உள்ளங்கையில் ஏற்றுக்கொள்ள,
முருகன் பிறந்தான்.
ஆறு கார்த்திகைப் பெண்களும் அவனைப் பெற்ற ஆறு தாய்மார் ஆயினர்..

அங்கு எழுந்தருளியுள்ள கடவுளாகிய ஆலமர் செல்வனாகிய சிவபெருமானின் புதல்வனே !
மலைமகளின் மைந்தனே !
பகைவர்களின் கூற்றுவனே !
வெற்றி தரும் கொற்றவையின் சிறுவனே !
அணிச் சிறப்பினைக் கொண்ட பழையோளின் குழந்தையே !
வானோர் வணங்கும் விற்படையின் தலைவனே !

இப்படியெல்லாம் முருகன் யாரென்று நக்கீரரே தெளிவாக சொல்விட்டார்.முருகன் சிவனின் மைந்தன்,பார்வதியின் மகனென்று அட்சர சுத்தமாக சொன்னதோடில்லாமல் கொற்றவை வேறு உமையவள் வேறு என்பதையும் அடித்து நொறுக்கிவிட்டார்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சூரனை வென்றழித்த பிறகு திருப்பரங்குன்றத்தில் இந்திரன் மகள் தெய்வயானையை மண முடித்து வைத்தார்கள் முருகப் பெருமானுக்கு என்பதுதான் புராணம்.திருமுருக்காற்றுப்படை திருப்பரங்குன்றத்தில் இருந்தே துவங்குகிறது.

அதில் நேரடியாக தெய்வயானையை குறிப்பிடவில்லை என்றாலும்,"மறு இல் கற்பின் வாணுதல் கணவன்" என்கிறார்.அதாவது,மாசற்ற கற்பினையும் ஒளி பொருந்திய நெற்றியையும் உடையவளின் கணவன் என்று முருகப் பெருமானை குறிப்பிடுகிறார்.

எல்லோருமே இதை ஏன் வள்ளியோடு இணைக்கக்கூடாது? அவளுக்கு கற்பில்லையா? என்கிறார்கள்.இவர்களுக்கு தமிழறிவும் கிடையாது,புராண அறிவும் கிடையாது என்பதை நிறுவிட முடியும்.தொல்காப்பிய விதியை கவனியுங்கள் 👇

|| கற்பெனப்படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபிற் கிழவன், கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே ||

முறைப்படி கன்னிகாதானம் அதாவது மகட்கொடையை செய்து கொடுத்து நடக்கும் திருமணத்தையே கற்பு மணம் என்று வரையறுக்கிறார்கள்.

|| காமப் புணர்ச்சியும் இடந்தலைப் படலும்
பாங்கோடு தழாலும் தோழியிற் புணர்வுமென்று
ஆங்கநால் வகையினும் அடைந்த சார்போடு
மறையென மொழிதல் மறையோர் ஆறே ||

மணம் ஒத்த இரு திறத்தார் பெற்றோர் சம்மதமின்றி கூடுவதையே களவு மணம் என்று வரையறுக்கிறது தொல்காப்பியம்.இப்படி சில வகைப்பட்ட மண முறைகள் தெளிவாகவே பாரத தத்துவத்தில் உதித்தது.அதையே தொல்காப்பியரும் சொல்கிறார்.ஆக கற்பு என்பதை வெறுமனே பலபேரிடம் காதல் கொள்ளாமை என்று மட்டும் சுருக்கிப் பார்க்க முடியாது.களவு மணமும் ஒழுக்கத்தின் அடிப்படையில் நிகழ்வதே.

இப்படி முருகனுக்கு தெய்வயானையோடு நடந்தது கற்பு மணம்,சூரனை அழித்ததால் தேவர்களின் தலைவன் இந்திரன் மகட்கொடைக்குரியவனாக ஆகி தெய்வானையை கற்புமணம் செய்து வைக்கிறான்.வள்ளியோடு முருகனுக்கு நடந்தது களவு காதல் மணமாகும்.அதனால்தான் தன் ஆசை முகத்தில் ஒன்றை வள்ளியோடு பகிர்ந்துகொள்வதாக நக்கீரர் சொல்கிறார்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அடுத்தது,இந்திரன் மருதநில திணை தெய்வம் அவனுடைய மகள் தெய்வானையை குறிஞ்சி நிலத்தலைவன் முருகனுக்கு மணமுடித்து வைப்பதில் எப்படி வரும் ஆரியத் திணிப்பு? புரியவில்லை.

முருகனின் ஆறு முகத்தில் ஒன்றை பற்றி நக்கீரர் சொல்கிறார்.

|| ஒரு முகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே ||

வேத விதியின்படி சம்பிரதாயம் பிறழாமல் நடக்கும் அந்தணர்களுடைய வேள்வி சிறக்க வைக்கும் ஒரு முகம் என்கிறார்."ஸ்தோம ரட்சகன்" என்ற வேள்விக்காவலன் என்றே நக்கீரரும் சொல்கிறார்."அந்தண்மறை வேள்வி காவற்கார" என்று அருணகிரிநாதன் சொன்னதும் இதைத்தான்.

திருமுருகாற்றுப்படையில் நக்கீரரே முருகனின் ஒரு முகம் வேத வேள்வியை போற்றும் முகம் என்று சொன்ன பிறகு ஆரியத்திணிப்பு என்று பேசுவதெல்லாம் என்ன வாதம்?

சிவன் | பார்வதியின் புத்திரனே முருகப்பெருமான்.அவரை வளர்த்தது ஆறு கார்த்திகைப் பெண்கள்.அவர் "சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி
போர் மிகு பொருந குருசில்" அதாவது,சூரபத்மனின் குலத்தை சர்வநாசமாக்கிய வலிமையுடைய,போர் வெறி பெற்ற தலைவன் என்று எல்லோரும் போற்றும் விதம் சூரசம்ஹாரம் செய்தவரே முருகன்.இதுதான் நக்கீரரின் திருமுருகாற்றுப்படை சொல்வது.

எனவே,நாத்திகம் - வேத எதிர்ப்பு - சம்ஸ்கிருத எதிர்ப்பு - ஹிந்து வெறுப்பு இது போல பேச மொத்தமாக ஏற்கனவே பெரியார் ஒரு கடையை திறந்து வைத்துள்ளாரே? அந்த கடையிலேயே நீங்கள் வியாபாரம் செய்தால் என்ன? தயவு செய்து தமிழையும்,ஹிந்துக்களையும் விட்டுவிடுங்கள் புண்ணியமாகப் போகும்.__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

திருமுருகாற்றுப்படையில் தெய்வானை எனும் பாத்திரம் இல்லையாம். ஆனால் அதற்கு அடுத்த வரியில் அது இடைச்செருகல் என்று ஒரு வரியை இணைத்துள்ளார். அதாவது தெய்வானை பற்றி இல்லை எனில் இடைச்செருகல் என்ற வார்த்தைக்கு அவசியம் என்ன என்பதை அண்ணன் விளக்க வேண்டும்.....!

அதாவது இல்லை என்று சொல்லிக்கொண்டு போய்ருக்கலாம். ஆனால் இடைச்செருகல் என்று கூறியதால் திருமுருகாற்றுப்படையிலும் தெய்வானை பற்றி உள்ளது என்பதை அவர் அறிந்திருக்கிறார் போலும். ஆக உளறலின் உச்சகட்டம் இது....!

ஆச்சா😊👇

அடுத்து சிவனின் மகன் முருகன் என்பது ஆரியத்தின் கட்டுக்கதையாம். இங்கே தான் அண்ணன் வசமாக மாட்டிக்கொண்டார்.

அதாவது "#ஆல்கெழு_கடவுட்_புதல்வ என்று ஆலமரத்தின் அடியிலே வீற்றிருக்கும் சிவபெருமானின் திருமகனே என்கிறது திருமுருகாற்றுப்படை.....!

அதோடு

"ஞாயிற்றேர் நிறத்த கை நளினத்துப் பிறவியைக் காஅய் கடவுட் சேஎய் செவ்வேள்"

என்பது திருமுருகாற்றுப்படைக்கும் முன்னதான #பரிபாடலின் வரிகள். இதுவும் முருகன் சிவனின் மகன் என்று கூறுகிறது....!

கூடுதல் விளக்கங்களுக்கு இந்த விலாசத்தை அணுகவும் 👇👇👇

https://m.facebook.com/groups/457194128421352?view=permalink&id=655036835303746

அடுத்ததாக திருமுருகாற்றுப்படையில் #தெய்வானை👇👇👇

"உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு
ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி
உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள்
செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை
மறுவில் கற்பின் வாணுதற் கணவன்"

இங்கு "கற்பின் வாணுதற் கணவன்" (கற்பு மணம்) என்பது ஏன் வள்ளியை குறிக்காது என்பது சிலரின் வாதம். அதாவது
கற்பு மணம், களவு மணம் என்ற இரு வகையான மணங்களைப் பற்றி தொல்காப்பியரும் மற்ற சங்க நூல்களும் பேசுகின்றன. அவ்வகையில் தெய்வயானையை மணந்தது கற்பு மணம் என்றும் வள்ளியை மணந்தது களவு மணம் என்றும் திருமுருகாற்றுப்படை தெளிவாக விளக்குகிறது.....!

"தா இல் கொள்கை மடந்தையொடு சின்னாள் ஆவினன்குடி அசைதலும் உரியன்"

அதாவது இடையீடில்லாத அருட்கற்பினது கோட்பாட்டையுடைய தெய்வயானையாருடனே சின்னாள்[சித்தன் வாழ்வென்னும்] ஆவினன்குடி என்னும் திருப்பதியிலே தங்குதலும் உரியன் என்றும்,

"மென்தோள் பல்பிணை தழீஇத் தலைத் தந்து"

மெல்லிய தோள்களையுடைய பலவாகிய மான்பிணைகள் போலும் மெய்தீண்டி விளையாடுதற்குரிய "தெய்வமகளிரோடு" தழுவிக்கொண்டு அவர்கள் களவறிந்து அவர்கட்கு இருப்பிடம் கொடுத்து என்றும்,

"ஒருமுகம் குறவர் மடமகள் கொடிபோல் நுகப்பின் மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே"

இங்கு ஆறுமுகங்களிலே #ஒரு_முகம் வள்ளியோடு மகிழ்ச்சி பொருந்த இயைந்தாலும், எனச் சொல்லி அடுத்த வரிகளில், பன்னிரு கைகளைப் பற்றிச் சொல்ல வருகையில்👇

"ஒருகை வான் அரமகளிர்க்கு வதுவைச் சூட்ட" எனச் சொல்லி
ஒரு கையானது தேவருலகத்தில் தேவமகளிராகிய தெய்வயானையர்க்கு மணமாலையைப் புனைய
எனவும் உடன் வருகிறது......!

இதன் மூலம், முருகனுக்கு இருமனைவியர், அவர்கள் தெய்வயானையும், வள்ளியும் என்ற கூற்றினை நக்கீரரும் சொல்லியிருக்கிறார் என்பது தெளிவாகும்.....!

அடுத்ததாக👇

"மங்கையர் கணவ"

என்ற வரிகளின் மூலம் தெய்வயானையார்க்கும், வள்ளி தேவிக்கும் கணவனே!
என்னும் பொருள்படவும் பாடுகிறார்......!

ஆனால் திருமுருகாற்றுப்படைக்கும் முன்னதான #பரிபாடலில் தெய்வானை பற்றிய குறிப்புகள் அதிகமாகவே வருகிறது. விரும்புவோர் இந்த விலாசத்தை அணுகவும் 👇👇👇

https://m.facebook.com/groups/457194128421352?view=permalink&id=513875136086584

இடைச்செருகல் என்றும் கட்டுக்கதை என்றும் பிதற்றுவோர் பிதற்றட்டும் நடுநிலைகளாவது உண்மை நிலையை உணர வேண்டும்.அதோடு
திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, திருவிடைக்கழி, கந்தன்குடி, திருப்போரூர் ஆகிய திருத்தலங்களில் உள்ள முருகனோடு தெய்வானை தேவியின் அருளும் பெற்று செல்ல வேண்டும் என்பது எனது எண்ணமாகும்.....__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

முருகன் விநாயகர் சிவனின் மைந்தர்கள் என்பது மூடர்களின் வாதமாம்...!

ஒரு நடுநிலைவாதியின் அதாவது திடீர் தமிழர்களின் பிதற்றல்.....!👇👇👇

https://m.facebook.com/groups/200161857138459…

அதிகமாக பேச விரும்பவில்லை ஆனால் உங்கள் முப்பாட்டன் நக்கீரர் எழுதிய இந்த பாடலுக்கு மட்டுமாவது விளக்கம் சொல் #நடுநிலைவியாதியே👇

"முருகனே! செந்தில்முதல்வனே! மாயோன் மருகனே! ஈசன் மகனே! ஒருகை முகன் தம்பியே! நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்"
#திருமுருகாற்றுப்படை.

இதற்கு மட்டும் விளக்கம் சொல்லிவிட்டு நகர்ந்தால் அடுத்ததாக👇👇👇

"ஆறு முகத்தில் அதிபதி நானென்றும்
கூறு சமயக் குருபரன் நான்னென்றும்
தேறினர் தெற்குத் திருவம் பலத்துள்ளே
வேறின்றி அண்ணல் விளங்கி நின்றானே"

என்று ஆசான் திருமூலர் பாடுகிறார். அதாவது சிவனும், முருகனும் வேறுபாடின்றி விளங்கினர் எனத் தெளிவாக எடுத்துக் கூறினார்.....! அதோடு👇

"உந்திக் கமலத்து உதிக்தெழும் சோதியை அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிகிலர்
அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிந்தபின்
#தந்தைக்கு_முன்னே_மகன்_பிறந்தானே. என்றும்....!

"எந்தை பிரானுக்கு இருமூன்று வட்டமாய்த்
தந்தைதன் முன்னே சண்முகம் தோன்றலால்
கந்தன் சுவாமி கலந்தங் கிருத்தலால்
மைந்தன் இவன் என்று மாட்டிக் கொள்வீரே"

என்றும் தந்தைக்கே முன்னவனாக பாவித்து கூடுகிறார் திருமூலர்....!

"ஆல் கெழு கடவுட் புதல்வ"

என்று #திருமுருகாற்றுப்படை முருகனைச் சிவனின் மகனாகக் கூறுகிறது....!

"ஞாயிற்றேர் நிறத்த கை நளினத்துப் பிறவியைக்
காஅய் கடவுட் சேஎய் செவ்வேள்"

என்பது திருமுருகாற்றுப்படைக்கும் முன்னதான #பரிபாடலின் வரிகள். இதுவும் முருகன் சிவனின் மகன் என்று கூறுகிறது.....!

இவர்களுக்கெல்லாம் விளக்கம் சொல்லி சமையத்தை களைய வேண்டாம் என்று தோன்றும் இருந்தாலும் நடுநிலைகளுக்காக இதை கூற கடமைப்படட்டுள்ளேன்...!

முருகன் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு👇👇👇

https://m.facebook.com/groups/457194128421352?view=permalink&id=543061366501294

விநாயகர் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு👇👇👇

https://m.facebook.com/groups/457194128421352?view=permalink&id=521950001945764

இவற்றை எல்லாம் பார்க்கும்போது இவர்களின் முப்பாட்டன் பெரும்பாட்டன் ஆதிப்பாட்டன் என்ற பிரிவினைகளால் இந்துக்களின் இறை நம்பிக்கைகளை குறைத்து ஏக இறை என்ற பெயரில் மிலேச்ச மதங்களை புகுத்த நினைக்கின்றனரோ என்ற ஐயமும் எழுகிறது....!

சிந்தித்து செயல்படுங்கள் 🙏....!__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

விநாயகர்:

விநாயகர் #பிரணவ_வடிவனர்.

(ஓம் பிரணவானன தேவாய நம)

என்பது அவரது மந்திரங்களில் ஒன்று. #ஓம் எனும் பிரணவத்தின் வரி வடிவமே விநாயகர்.

கணபதி திருவருவை வலது காது முதல் தொடங்கி தலையை சுற்றி வளைத்து இடது காது வரை கொண்டு வந்து தொங்கும் தும்பிக்கை வரை நீட்டிக்கொண்டு கழித்தால் ஓம் என்ற பிரணவ வடிவம் புலப்படும்.

#விநாயகர்_வடிவத்தின்_தத்துவம்:

விநாயகருடைய வடிவம் விந்தையானது. யானைத் தலையும் பெருவயிறும் மனித உடலும் ஐந்து திருக்கைகளும் கூடிய வடிவமும் இடையின் கீழே மனித உடம்பும் இடைக்குமேல் கழுத்துவரை தேவ உடம்பும். மேலே விலங்கின் தலை (யானைத்தலை) பூதப்பெருவயிறு. ஒரு பக்கம் கொம்பு – ஆண் தன்மைஇ மற்றொரு பக்கம் பெண் தண்மை. அஃறிணைஇ உயர்திணை அம்சங்கள் பொருந்திய இந்நிலையை உற்று நோக்கின் விநாயகப் பெருமான் –
#தேவராய்
#மனிதராய்
#பூதராய்
#விலங்காய்
#ஆணாய் #பெண்ணாய் #எல்லாமாய்த் திகழ்கிறார் என்பது புலனாகும்.

#பிள்ளையார்சுழியின்_பொருள்:

பிள்ளையார்சுழி என்பது
#அகரம்
#உகரம்
#மகரம்
(அ உ ம) ஆகிய மூன்றையும் அடக்கியுள்ள நாதப்பிரமமாகிய ஓம் என்னும் பிரணவத்தின் ஆரம்ப வடிவம்.

அதில் உள்ள வட்ட வடிவம் #சிவசக்தி பீடம்.

கோடு #சிவலிங்கம் என்றும் சொல்லப்படும். எழுதத் தொடங்குமுன் பிள்ளையார் சுழியை எழுதுவதுஇ எழுத மேற்கொள்ளும் செயல் இடையூறின்றி முடிய ஸ்ரீ மஹா கணபதியை நிறுத்தி வழிபடுவதைப் போன்றதாகும்.

#கணபதி_வழிபாடு_தத்துவம்:
உயிர்களின் உடம்பில் உள்ள ஆறு ஆதரங்களில் மூலாதாரத்தில் சுருண்டு கிடக்கும் குண்டலினி சக்தியின் மூலக்கனலை எழுப்பி பிரம்மத்துடன் ஆக்ஞையில் ஒன்றிடச் செய்வது.

(யானை – பிரணவ வடிவம்) பிள்ளையாரின் மூல வடிவம் ஓம். ஓம்கார வடிவம். ஓம் என்பது தெய்வீக ஒளிவடிவம். வாழ்க்கை என்பதே தெய்வீக ஒளிவடிவில் அடங்கும் விஷயம்தான் என்பதை அறிந்துகொள் என்ற அறிவுரை.

#தோப்புக்கரணம்:

தோப்புக்கரணம் என்பது குண்டலினி யோகத்தின் ஒரு அங்கமாகும். அந்தக்கரணமாகிய #மனம்
#புத்தி
#சித்தம்
#அகங்காரம்
என்ற நான்கும் புறக்கரணமாகிய

#கை
#கால்
#கண்
முதலியன தூண்டப்பட்டு மனித உடலில் அடிவயிற்றின் கீழ் ஓங்கார வடிவத்தில் அமைந்து இருக்கும் சுஷீம்னா நாடி ஒட்டி எழுப்பப்படுகிறது. (மூலாதார சக்தியை சகஸ்ர தளத்தில் பாய்ச்சுவது.)......!

#மேற்கோள்கள்:

#ஔவையார் இயற்றிய ஒரு #தமிழ்_நீதி_நூல். மக்கள் வாழ்க்கையில் பின் பற்றவேண்டிய நல்வழிகளை இந்நூல் எடுத்துரைப்பதால் இப்பெயர் ஏற்பட்டது.

இந்நூலின் கடவுள் வாழ்த்துப்
பாடல்:

"பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும்
இவை நான்கும் கலந்து உனக்கு நான்
தருவேன் கோலம் செய் துங்க கரிமுகத்து
தூமணியே நீ எனக்கு சங்க தமிழ் மூன்றும் தா"!

#பொருள்: பாலையும், கலப்படம் அற்ற தெளிந்த தேனையும், சர்க்கரை கலந்த பாகையும், வேக வைத்த கடலை பருப்பையும் கலந்து ஒரு சுவையான கலவையாக உனக்கு நான் நைவேத்தியமாக அர்ப்பணிக்கிறேன். கோலமிகுந்த (அழகு மிகுந்த) துங்க (துதிக்கை அமைந்த) கரிமுகத்து (யானை முகம் படைத்த) தூமணியே (தூய்மை ஆன மணி போன்ற பொக்கிஷமே) நீ எனக்கு இயல் (உரைநடை), இசை (பாடல் நடை), நாடகம் (உணர்ச்சி நடை) என முப்பரிமாணத்தில் மிளரும் தமிழ் பொழியை அருள்வாயாக.

இதில் குறிப்பிடப்படும் “#கரிமுகத்துத்_தூமணி” என்பது பிள்ளையார் ஆவார்.......!

மற்றும் #அருணகிரிநாதர் பிள்ளையாரை குறிப்பிடுகையில்.....!

"கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக னடிபேணி"

#விளக்கம்:

கரதலத்தில் நிறைந்துள்ள பழம், அப்பம்,
அவல், பொரி (இவைகளை) வாரி உண்ணும் யானை முகக் கடவுளின்
திருவடிகளை விரும்பி,

என்று #திருப்புகழில் போற்றுகிறார்.........!

#சங்க_இலக்கியத்தில் #பரிபாடலில் கன்னிமை அடைந்த பெண்கள் திருமணம் நடக்க கோவில் #யானைக்கு பூஜைகள் செய்வது விவரிக்கப்பட்டுள்ளது.

"கன்னிமை கனிந்தாரும் மணமான மகளிரும் தாம் செய்யும் பூசையில் யானையின் மிச்சிலை உண்ணுதல்

நின யானைச் சென்னிநிறம் குங்குமத்தால்
புனையா, பூநீர் ஊட்டி, புனை கவரி சார்த்தா,
பொற்பவழப் பூங்காம்பின் பொற்குடை ஏற்றி,
மலிவுடை உள்ளத்தான் வந்துசெய் வேள்வியுள்;
பல்மணம் மன்னு பின் இருங் கூந்தலர்.
கன்னிமை கனிந்த காலத்தார், நின்
கொடி ஏற்று வாரணம் கொள் கவழ மிச்சில்
மறு அற்ற மைந்தர் தோள் எய்தார்; மணந்தார்
முறுவல் தலையளி எய்தார் – நின் குன்றம்
குறுகிச் சிறப்பு உணாக்கால்"…..!

திருப்பரங்குன்ற காட்சி இது. இங்கு முருகனின் கோவிலில் யானை உள்ளது.

அந்த யானையை மகளிர் பூசிக்கின்றனர். இந்த யானைப் பூசையில் நடக்கும் செயல்கள் கூறப்பட்டுள்ளன. அதன் மத்தகத்தில் குங்குமம் சார்த்தப்படும். அதன் மேல் பூநீர் சொரியப்படும். செவிகளில் வெண்சாமரம் வைக்கப்பட்டு அதன் மேல் பவள பொற்குடை எடுக்கப்படும். அது திருக்கோவிலை வலம் வரும். அந்த யானைக்கு சோற்றுக் கவளம் அளிக்கப்படும். அது உண்டு மீந்த பின்னர் பிரசாதமாக மகளிரால் உண்ணப்படும். இப்பூசனை செய்யாவிடில் மகளிர்தம் காதலரையும் அவர் அன்பையையும் அடையார் என கூறுகிறது பரிபாடல்.

பெண்கள் மட்டுமா கணபதியை காதல் கைக் கூட வணங்குகிறார்கள்?

அந்த திருப்பரங்குன்ற முருகனே காதல் கைக் கூட கணபதியிடம் அல்லவா சரண் புகுந்தார்! அருணகிரிநாதர் நம் அனைவருக்கும் அதனை அழகு இசைத் தமிழில் அளித்துவிட்டார்.

"அத்துயர் அது கொடு சுப்பிரமணி படும் அப்புனம்
அதனிடை இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கணம் மணம் அருள் பெருமாளே"

இங்கு இபமாகி குறமகளை முருகனுக்கு மணம் முடித்த விநாயகப் பெருமான் பரிபாடலில் கஜமாகவே இக வாழ்வை மகளிர் மனம் குளிர அளித்திருக்கிறார். பரிபாடலில் பூசனை செய்யப்படும் யானைக்கு செவிகளில் கவரி செய்யும் ஒப்பனையை அப்படியே கச்சியப்ப சிவாச்சாரிய சுவாமிகள் நம் விநாயகருக்கு அளிப்பதை காணலாம்....!

"கணபதி ராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம்
குணமுயர்ந்திடவே விடுதலை கூடி மகிழ்ந்திடவே"

என்று பாரதியாரும் தனது பாட்டில் விடுதலை வேட்கைக்கு பிள்ளையார் சுழி போடுகிறார்....!

#திருஞானசம்பந்தர்

"பிடியதன் உருவுமை கொள மிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடி கணபதி வர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே"

என்று பாடுகிறார். இக்கதையே காஞ்சிப்புராணம் கந்தபுராணம் ஆகியவற்றிலும் காணலாம்.....!

பெரியபுராணம் பாடிய சேக்கிழார் பெருமான்

‘எடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய்
நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத்
தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நிள்முடிக்
கடக்களிற்றினைக் கருத்துள் இருத்துவாம்’

என்று விநாயகர் வணக்கம் செய்கிறார். அருணகிரியாரின் திருப்புகழில் ஐந்து பாடல்கள் பிள்ளையாருக்குரியன......!

#திருமூலர் #திருமந்திரத்தில்.....!

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

#பொழிப்புரை:
ஐந்து கைகளையும், யானை முகத்தையும், சந்திரனது இளமை நிலையாகிய பிறைபோலும் தந்தத்தையும் உடையவரும், சிவபிரானுக்குப் புதல்வரும், ஞானத்தின் முடி நிலையாய் உள்ளவரும் ஆகிய விநாயகப் பெருமானை உள்ளத்தில் வைத்து, அவரது திருவடிகளைத் துதிக்கின்றேன்.

ஆற்றங்கரைகளில், அரசமரத்தடிகளில் பிள்ளையாரை வைத்து வழிபாடாற்றுவது தமிழர் மரபு. சிதறு தேங்காய் உடைத்து பிள்ளையாரை மகிழ்வித்து வழிபடுவதும் இங்கு முக்கியமானது. வயலில் உழுதுண்டு வாழும் விவசாயப் பெருங்குடியினர் தமது பயிர்களுக்குப் பாதுகாப்பாக நம்பிக்கைப் பிள்ளையாரை வேண்டிக் கொள்வர். பின் அறுவடை நிறைவு பெற்றதும் பிள்ளையாருக்குப் பூஜை செய்வர்.

ஏற்றப்பாடல் ஒன்று

‘பிள்ளையாரே வாரும் பிழை வராமல் காரும்
மழை வரக்கண் பாரும் மாதேவனே எமைப் பாரும்’

இப்படிச் செல்கிறது. இவை எவ்வளவு தூரம் நம் சமூகத்தில் பிள்ளையார் வணக்கம் பரவியிருக்கிறது என்பதற்கு ஆதாரங்களாயுள்ளன. அவர் கரத்தில் நெற்கதிர்களைக் கொடத்து வழிபடும் வழக்கமும் உண்டு. எனவே, அவர் காக்கும் தெய்வமாயும் விவசாயிகளின் தெய்வமாகவும் இருக்கிறார்..........!

உண்மை இவ்வாறு இருக்க இங்கு இருக்கும் பிரிவினை கும்பல்கள் வடநாட்டு கடவுள் தென்னாட்டு கடவுள் என்று பேதம் கண்டு அவரவர் பசியை ஆற்றி வருகின்றனர்‌.......!

இன்னும் அவர்களின் பொய் புரட்டுகள் செயல்படாது என்பதை உரைக்கவே இப்பதிவு.

இந்த இனிய நன்னாளில் விநாய பெருமானின் நல்லாசி கிடைக்க அனைவருக்கும் இனிய #விநாயகர்_சதூர்த்தி நல்வாழ்த்துக்கள்.__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 "திருமுருகாற்றுப்படை" - நக்கீரர் அருளியது!


ஜி.ரா. எழுதிய பதிவைப் படித்ததும் இல்லம் சென்று என்னிடம் இருக்கும் திருமுருகாற்றுப்படை நூலைப் புரட்டினேன்.

நா. சந்திரசேகரன் என்பவர் திறம்பட எழுதிய நூல் இது.

கங்கை புத்தக நிலையம், வானதி பதிப்பகத்தின் துணையோடு வெளியிட்ட நூல்.

இதில் தெய்வயானை பற்றிய குறிப்புகள் கீழே!

வரி6. "மறு இல் கற்பின் வாணுதல் கணவன்":

குற்றமில்லாத அ[ற]க்கற்பையுடைய இந்திரன் மகள் தெய்வயானையார் கணவன்.

வரி 175-176. "தா இல் கொள்கை மடந்தையொடு சின்னாள் ஆவினன்குடி அசைதலும் உரியன்":

இடையீடில்லாத அருட்கற்பினது கோட்பாட்டையுடைய தெய்வயானையாருடனே சின்னாள்[சித்தன் வாழ்வென்னும்] ஆவினன்குடி என்னும் திருப்பதியிலே தங்குதலும் உரியன்.

வரி 216. "மென்தோள் பல்பிணை தழீஇத் தலைத் தந்து":

மெல்லிய தோள்களையுடைய பலவாகிய மான்பிணைகள் போலும் மெய்தீண்டி விளையாடுதற்குரிய "தெய்வமகளிரோடு" தழுவிக்கொண்டு அவர்கள் களவறிந்து அவர்கட்கு இருப்பிடம் கொடுத்து....

இது தவிர 'வள்ளி' பற்றிய குறிப்பு ஒரே ஒரு இடத்தில்தான் வருகிறது.
வரி 100-102. "ஒருமுகம் குறவர் மடமகள் கொடிபோல் நுகப்பின் மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே"

ஆறுமுகங்களிலே ஒரு முகம் வள்ளியொடு மகிழ்ச்சி பொருந்த இயைந்தாலும், எனச் சொல்லி,

அடுத்து வரும் வரிகளில், பன்னிரு கைகளைப் பற்றிச் சொல்ல வருகையில்,

[வரி 116-117]"ஒருகை வான் அரமகளிர்க்கு வதுவைச் சூட்ட"

எனச் சொல்லி,

ஒரு கையானது தேவருலகத்தில் தேவமகளிராகிய தெய்வயானையர்க்கு மணமாலையைப் புனைய எனவும் உடன் வருகிறது.

இதன் மூலம், முருகனுக்கு இருமனைவியர், அவர்கள் தெய்வயானையும், வள்ளியும் என்ற கூற்றினை நக்கீரரும் சொல்லியிருக்கிறார் என்பது தெளிவாகும்.

வாரியார் ஸ்வாமிகள் சொல்லுவது போல,

இகம் வள்ளி,
பரம் தெய்வயானை.
முகம் வள்ளியைப் பார்க்க, கைகள் தெய்வானைக்கு மணமாலை சூடுகிறது.
இகபர விநோதன் அவன் என உணரலாம்.

அடுத்து, வரி 264-ல்,"மங்கையர் கணவ"

தெய்வயானையார்க்கும், வள்ளி நாய்ச்சியாருக்கும் கணவனே!

என்னும் பொருள்படவும் பாடுகிறார்.

திருமுருகாற்றுப்படை என்ன சொல்கிறது?

பாணன் ஒருவன் பரிசில் பெற்று வருகிறான்.
அவனை எதிர்கொள்லும் இன்னொரு பாணன் விவரம் கேட்கிறான், ... 'எவரிடமிருந்து இப்பரிசில் பெற்றாய்?'.... என.

அவனுக்கு மறுமொழியிடும் வண்னமாக முதல் பாணன் உரைக்கிறான்.

"இத்தன்மையெனச் சொல்லப்படவொண்ணா ஒளியையும்[3],

தாளையும்[4],

கையையும் [5], உடையனாகித்

தெய்வயானைக்குக் கணவனாகி[6],

மாலை அசையும் மார்பனாகிக்[11],

காந்தள் மாலையைச் சூடிய திருமுடியை உடையனாகிய[44],

சேயினது திருவடியிலே செல்ல வேணும் என்கிற மனத்தோடு[62],

அவன் தங்குமிடத்துக்கு[63],

வழியை விரும்பினையாகில்[64],

உன்னுடைய ஆசைப்படியே[65],

இப்போது பெறுவாய் நீ நினைகருமம்[66],

இதற்கு அவன் உறையும் இடம் திருப்பரங்குன்றிலே அமர்ந்திருத்தலும் உரியன்[77],

அதுவன்றி அலைவாயெனும் திருச்செந்தூரிலெ எழுந்தருளுதலும் நிலையுடைய குணம்[125],

அதுவன்றி, ஆவினன்குடியிலே தங்குதலும் உரியன்[176],

அதுவன்றி ஏரகத்துறைதலும் உரியன்[189],

அதுவன்றி, மலைகள்தோறும் சென்று விளையாடுதலும் நிலைபெற்ற குணம்[217],

அதுவன்றி, விழாவின் கண்ணும்[220],

அன்பர் ஏத்தப் பொருந்தும் இடங்களிலும்[221],

வெறியாடும் இடங்களிலும்[222],

காடும், சோலையும் முதலாகச் சொல்லப்பட்ட அவ்விடங்களீலும் உறைதற்குரியன்[249],

இம்முறையாக யான் அறிந்த வழி: அவ்விடங்களிலே ஆயினுமாக, பிற இடங்களிலே ஆயினுமாக[250],

முற்படக் கண்ட போதே முகமலர்ந்து துதித்துப் பரவி வாழ்த்தி வணங்கி[252],

ஆறு வடிவைப் பொருந்திய செல்வனே![255],

கல்லாலின் கீழ் இருந்த கடவுள் புதல்வனே![256],

என்று துடங்கிக் குரிசில் அளவாக[276],

நினக்குக் கூறிய அளவால் ஏத்தி ஒழியாதே துதித்து[277],

நின் திருவடியைப் பெறவேணும் என்று கருதி வந்தேன் என்று நீ கருதிய அதனைச் சொல்வதன் முன்னே[281],

பிள்ளையாரைச் சேவித்து நிற்பவர் தோன்றி[283],

அறிவு முதிர்ந்த வாயையுடைய புலவன் வந்தான் நின் புகழைக் கேட்ட்டு என்று கூற[285],

தெய்வத்தன்மையால் நின்ற நிலைமை உள்ளடக்கித் தனது இணைய அழகைக் காட்டி[290],

"அஞ்சவேண்டாம் புலவரே[291],

நின் வரவு யாம் அறிந்தோம்" என்று அன்புடனே நல்வார்த்தை அருளிச் செய்து[292],

உலகத்தில் நீ ஒப்பிடமுடியாத அளவுக்கு வீட்டின்பத்தைத் தருவான்[295],

அருவியையும் சோலைகளையும் உடைய மலைக்குரியோன்[317],

என்று எதிர் வந்த பாணனுக்கு உரைத்தான் இவன்.

முருகனிடத்திலே செல்ல வழிப்படுத்துதலே திருமுருகாற்றுப்படை!
[நன்றி: திரு. நா.சந்திரசேகரன்]


"யாமோதிய கல்வி அவன் தந்தது" அவன் புகழ் பாடவே!

முருகனருள் முன்னிற்கும்!__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard