Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருமுருகாற்றுப்படை காட்டும் முருகன் வழிபாடு


Guru

Status: Offline
Posts: 7474
Date:
திருமுருகாற்றுப்படை காட்டும் முருகன் வழிபாடு
Permalink  
 


எங்காவது பார்ப்பனர்கள் முருகனுக்கு வேல் குத்தி, காவடி எடுத்தது உண்டா? - திருமாவளவன்

தற்குறிகளுக்கும், மதமாற்ற தரகர்களுக்கும் சங்க இலக்கியங்கள் பற்றிய அறிவு இருக்க வாய்பு இல்லை.

அதிலும் காலத்தில் முற்பட்ட திருமுருகாற்றுப்படை பற்றி திருமாவளவன் தெரிந்திருக்க வாய்பு நிச்சயம் இல்லை.

நமது தர்மம் மேற்கு மதங்களைப் போல் monolithic religion எனப்படும் ஒற்றைத் தண்மை கொண்ட சமயம் இல்லை, அவை அரசனை ஏவி மக்களை உருட்டியும் மிரட்டியும், வலுக்கட்டாயமாக ஒருவர் சமயக் கூற்றை மற்றவர் மேல் தினிப்பது.

நாமே பண்முகத் தன்மை கொண்ட சமய வழிமுறை கொண்டவர்கள். அதாவது கொலையும், கள்ளும் தீமையே அது வழிபாடாக இருந்தாலும் சரி, என்றாலும் வற்புறுத்தல் இல்லை, இதோ நல்லதும் இருக்கிறது விரும்பினால் ஏற்கலாம் என்பதே நமது வழி, இதுவே நம் சிறப்பும் பலமும் கூட.

இங்கு வெறும் உணர்சிகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் ஊற்றாகவும் வடிகாலாகவும் அமையும் ஆட்டம் பாட்டம், பலி, கூத்து போன்றவை கொண்ட வழிப்பாடுகள் இருந்த அதே நேரத்தில்

தேடல், ஞானம், முதிர்ச்சி, தியாகம், ஒழுக்கம், கொல்லாமை, பக்தி, யோகம், வேள்வி போன்ற உயர்ந்த வழிப்பாட்டு நெறிகளும் இருந்தது.

உதாரணமாக வேடுவர்கள் முருகனுக்கு சிறு தினை அரிசியை பூக்களுடன் கலந்து ஆட்டுக்கிடாயை அறுத்து அதன் உதிரத்தோடு கலந்து சிறுபலியாக தங்கள் ஊர்களில் இருக்கும் முச்சந்தி, நாற்சந்தி, மரங்களின் கீழும் போட்டும், ஊர் ஊராக கோழிக் கொடி நிறுத்தி, வேலன் வெறியாட்டம் ஆடி வழிப்பட்டதை

--------

"சிறுதினை மலரொடு விரைஇ மறி அறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ
ஊரு ர் கொண்ட சீர்கெழு விழவினும்

வேலன் தைஇய வெறியயர் களனும்
காடுங் காவுங் கவின்பெறு துருத்தியும்
யாறுங் குளனும் வேறுபல் வைப்பும்
சதுக்கமுஞ் சந்தியும் புதுப்பூங் கடம்பும்"

--------

என்று காட்டும் திருமுருகாற்றுப்படை,
அதே முருகனை

ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல் மற்றும் ஏற்றலாகிய 6 வாழ்வியல் முறை வழுவாமல்

உலகத்தார் மதிக்கும் தொல்குடியில் பிறந்து, 48 ஆண்டுகள் இளமையை துறந்து பிரம்மச்சாரிய நெறியேற்று, எப்போதும் அறத்தையே நவின்று

கார்ஹபதேயம், தக்‌ஷினாக்னீ , ஆஹவானீயம் என்ற மூவகை அக்னிகாரியங்கள் செய்யும் இருப்பிறப்பாளர்கள், ஒன்பது இழைகளைக் கொண்ட முப்புரி நூல்களை ஒன்றாக மார்பில் அணிந்தும், தக்க காலம் மற்றும் நேரம் அறிந்து, ஈர ஆடையுடன் ஆறெழுத்து மந்திரம் சொல்லி, உச்சியில் கைக் கூப்பி மலர்கள் இட்டு வழிப்பட்டதையும் சொல்கிறது.

--------

"இருமூன் றெய்திய இயல்பினின் வழாஅ
திருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான் கிரட்டி இளமை நல்லியாண்
டாறினிற் கழிப்பிய அறனவில் கொள்கை

மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்
திருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர உ டீஇ
உ ச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து

ஆறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி
நாவியன் மருங்கின் நவிலப் பாடி
விறையுறு நறுமலர் ஏந்திப் பெரிதுவந்
தேரகத் துறைதலும் உ ரியன் அதா அன்று"

--------

ஆகையால் இதோ பார் பார்ப்னர்களும் வேலும் அழகும் குத்தி காவடி எடுக்கிறார்கள் என்று நிறுவ வேண்டியது இல்லை.

வேல் குத்தி காவடி எடுப்பதும், வேதம் நவின்று வணங்கி நிற்பவர்களும் நம்மவர்களே என்றாலும், மேல் நோக்கிய பரிணாம வளர்ச்சியே நல்லது.

இது எதுவும் புரியாவிட்டால், "சைவம்" என்ற திரைப்படத்தையாவது பார்க்கவும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
RE: திருமுருகாற்றுப்படை காட்டும் முருகன் வழிபாடு
Permalink  
 


# 9 செவ்வேள்
இரு நிலம் துளங்காமை வட-வயின் நிவந்து ஓங்கி
அரு நிலை உயர் தெய்வத்து அணங்கு சால் தலை காக்கும்
உருமு சூழ் சேண் சிமை உயர்ந்தவர் உடம்பட
எரி மலர் தாமரை இறை வீழ்த்த பெரு வாரி
விரி சடை பொறை ஊழ்த்து விழு நிகர் மலர் ஏய்ப்ப	5
தணிவு-உற தாங்கிய தனி நிலை சலதாரி
மணி மிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்தோய் நீ
மை இரு நூற்று இமை உண்கண் மான் மறி தோள் மணந்த ஞான்று
ஐ_இருநூற்று மெய் நயனத்தவன் மகள் மலர் உண்கண்

மணி மழை தலைஇ என மா வேனில் கார் ஏற்று	10	
தணி மழை தலையின்று தண் பரங்குன்று
நான்மறை விரித்து நல் இசை விளக்கும்
வாய்மொழி புலவீர் கேண்-மின் சிறந்தது
காதல் காமம் காமத்து சிறந்தது
விருப்போர் ஒத்து மெய்யுறு புணர்ச்சி		15
புலத்தலின் சிறந்தது கற்பே அது தான்
இரத்தலும் ஈதலும் இவை உள்ளீடா
பரத்தை உள்ளதுவே பண்புறு கழறல்
தோள் புதிது உண்ட பரத்தை இல் சிவப்பு-உற

நாள் அணிந்து உவக்கும் சுணங்கறையதுவே		20
கேள் அணங்கு உற மனை கிளந்து உள சுணங்கறை
சுணங்கறை பயனும் ஊடல் உள்ளதுவே
அதனால் அகறல் அறியா அணி இழை நல்லார்
இகல் தலைக்கொண்டு துனிக்கும் தவறு இலர் இ
தள்ளா பொருள் இயல்பின் தண் தமிழ் ஆய்வந்திலார்	25
கொள்ளார் இ குன்று பயன்
ஊழ் ஆரத்து ஓய் கரை நூக்கி புனல் தந்த
காழ் ஆரத்து அம் புகை சுற்றிய தார் மார்பின்
கேழ் ஆரம் பொற்ப வருவானை தொழாஅ

வாழிய மாயா நின் தவறு இலை எம் போலும்	30
கேழ் இலார் மாண் நலம் உண்கோ திரு உடையார்
மென் தோள் மேல் அல்கி நல்கலும் இன்று
வை எயிற்று எய்யா மகளிர் திறம் இனி
பெய்ய உழக்கும் மழை கா மற்று ஐய
கரையா வெம் நோக்கத்தான் கை சுட்டி பெண்டின்	35
இகலின் இகந்தாளை அ வேள் தலை கண்ணி
திருந்து அடி தோய திறை கொடுப்பானை
வருந்தல் என அவற்கு மார்பு அளிப்பாளை
குறுகல் என்று ஒள் இழை கோதை கோல் ஆக

இறுகிறுக யாத்து புடைப்ப			40
ஒருவர் மயில் ஒருவர் ஒண் மயிலோடு ஏல
இருவர் வான் கிளி ஏற்பில் மழலை
செறி கொண்டை மேல் வண்டு சென்று பாய்ந்தன்றே
வெறி கொண்டான் குன்றத்து வண்டு
தார் தார் பிணக்குவார் கண்ணி ஓச்சி தடுமாறுவார்	45
மார்பு அணி கொங்கை வார் மத்திகையா புடைப்பார்
கோதை வரி பந்து கொண்டு எறிவார்
பேதை மட நோக்கம் பிறிது ஆக ஊத
நுடங்கு நொசி நுசுப்பார் நூழில் தலைக்கொள்ள

கயம் படு கமழ் சென்னி களிற்று இயல் கைம்மாறுவார்	50
வயம் படு பரி புரவி மார்க்கம் வருவார்
தேர் அணி அணி கயிறு தெரிபு வருவார்
வரி சிலை வளைய மார்பு உற வாங்குவார்
வாளி வாளிகள் நிலைபெற மறலுவார்
தோள் வளை ஆழி சுழற்றுவார்			55
மென் சீர் மயில் இயலவர்
வாள் மிகு வய மொய்ம்பின்
வரை அகலத்தவனை வானவன் மகள்
மாண் எழில் மலர் உண்கண்

மட மொழியவர் உடன் சுற்றி			60
கடி சுனையுள் குளித்து ஆடுநரும்
அறை அணிந்த அரும் சுனையான்
நற உண் வண்டாய் நரம்பு உளர்நரும்
சிகை மயிலாய் தோகை விரித்து ஆடுநரும்
கோகுலமாய் கூவுநரும்			65
ஆகுலம் ஆகுநரும்
குறிஞ்சி குன்றவர் மறம் கெழு வள்ளி தமர்
வித்தக தும்பை விளைத்தலான் வென் வேலாற்கு
ஒத்தன்று தண் பரங்குன்று

கடும் சூர் மா முதல் தடிந்து அறுத்த வேல்		70
அடும் போராள நின் குன்றின் மிசை
ஆடல் நவின்றோர் அவர் போர் செறுப்பவும்
பாடல் பயின்றோரை பாணர் செறுப்பவும்
வல்லாரை வல்லார் செறுப்பவும்
அல்லாரை அல்லார் செறுப்பவும் ஓர் சொல்லாய்	75
செம்மை புது புனல்
தடாகம் ஏற்ற தண் சுனை பாங்கர்
படாகை நின்றன்று
மேஎ எஃகினவை

வென்று உயர்த்த கொடி விறல் சான்றவை		80
கற்பு இணை நெறியூடு அற்பு இணை கிழமை
நய_தகு மரபின் விய_தகு குமர
வாழ்த்தினேம் பரவுதும் தாழ்த்து தலை நினை யாம்
நயத்தலின் சிறந்த எம் அடியுறை
பயத்தலின் சிறக்க நாள்-தொறும் பொலிந்தே		85


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

# 9 செவ்வேள்
பெரிய இந்த நிலவுலகம் அசையாமல் இருக்கும்படி, வடக்கில் உயர்ந்து ஓங்கி
ஏறுவதற்கரிய நிலையையுடையதும், உயரிய தெய்வத்தன்மை வாய்ந்த அணங்குகள் சிறப்பாகப் பேணிக் காப்பதும்,
இடியேறுகள் சூழ்ந்திருப்பதுமான மிக உயரமான சிகரத்தில்,  தம் கணவராகிய உயர்ந்த முனிவர்கள் இசைவு தெரிவிக்க,
தீயைப் போன்று மலர்ந்திருக்கும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமதேவன் விழச்செய்த பெரு வெள்ளத்தைத்
தன் விரித்த சடையினில் பாரமாக, மலர்ந்து விழும் புதிய மலரைத் தாங்குவது போன்று,
விழுகின்ற வேகம் தணியும்படியாகத் தாங்கிய ஒப்பற்ற நிலையையுடைய சலதாரி என்னும் பெயர்கொண்ட
நீல நிறக் கழுத்தினையுடைய சிவபெருமானுக்கு, மதிப்பு வாய்ந்த கார்த்திகை மகளிரிடத்தில் பிறந்தவனே! நீ
மையாகிய கரிய இழுதினைப் பூசிய, இமைக்கின்ற, மையுண்ட கண்களையுடைய மான்குட்டியாகிய வள்ளியை மணந்தபோது
ஆயிரம் கண்களை உடலில் கொண்ட இந்திரனின் மகளாகிய தேவயானியின் மலர் போன்ற மையுண்ட கண்கள் 

மணி போன்ற கண்ணீர் மழையைச் சொரிந்தனவாக, முதிர்ந்த வேனிற்காலத்திலும் கார்கால மேகங்கள் திரண்டெழுந்து,
மிகுந்த மழையினைப் பெய்யத்தொடங்கிற்று தண்ணிய பரங்குன்றத்தில்;
வேதங்களை விரித்துரைத்து அவற்றின் நல்ல புகழை உலகுக்கு விளக்கும்
மெய்யான மொழியினையுடைய புலவர்களே! கேளுங்கள் சிறந்ததொன்றை;
காதலோடு கூடிப் பெறுகின்ற காம இன்பமே, காம இன்பங்களுள் சிறந்தது,
அது விருப்பமுடையவர் இருவர் மனமொத்துப் பெறுகின்ற உடற்சேர்க்கையே!
ஊடலினால் சிறப்புறுவது கற்புக்காமம்; அதுதான்
தலைவன் இரந்து வேண்டலும், தலைவி மனமிரங்கி தன்னை அவனுக்கு அளித்தலும் ஆகிய இவற்றை உட்பொருளாகக் கொண்டு
தலைவனின் பரத்தை உறவினால் உண்டாவதாகும்; தலைவியின் பூப்பினை அறிவிக்கும் பண்புறு கழறல் என்பது
தோள்நலத்தைப் புதிதாக உண்ட பரத்தையின் இல்லத்தில் தலைவன் இருக்கும்போது, தோழி சிவந்த அணிகலன்களை

நாள்காலையில் அணிந்து தலைவனுக்கு அறிவிக்க, தலைவன் வீடுவந்து தலைவியுடன் கூடி உவக்கும் புணர்ச்சிக்கண் உள்ளது;
தலைவியின் தோழியர் கேட்டு வருத்தமுறும்படி பரத்தை தன் வீட்டில் பழிச்சொல் கூறுவதில் உள்ளது அந்தப் புணர்ச்சிகள்;
அந்தப் புணர்ச்சியின் பயனும் ஊடல் செய்வதில் உள்ளது;
அதனால், தம் துணைவர் தம்மைவிட்டு அகன்றிருத்தலையே அறியாத அழகிய அணிகலன் அணிந்த மகளிர்
தம் கணவருடன் மனவேறுபாடு கொண்டு அவரை வருத்தும் தவறினைச் செய்யமாட்டார்;
இத்தகைய தள்ளிவிடமுடியாத அகப்பொருளின் இயல்புகளையுடைய தண்ணிய தமிழ்ப் பண்பாட்டை ஆராயாத மகளிர்
கொள்ளமாட்டார்கள் இந்தத் திருப்பரங்குன்றத்தில் எந்தப் பயனையும்;
கொஞ்சம் கொஞ்சமாக உடைந்துவிழும் கரையிலிருந்து சந்தன மரங்களை அசைத்து வெள்ளம் அடித்துக்கொண்டுவந்த
வயிரம் பாய்ந்த சந்தனக் கட்டையின் அழகிய புகை சூழ்ந்ததும், மாலையினையுடையதுமான மார்பில்
நிறம் பொருந்திய முத்துமாலை அழகுசெய்ய தன் பக்கத்தே வரும் முருகப்பெருமானைத் தொழுது,

தேவசேனை எதிர்கொண்டு, "வாழ்க, வஞ்சனே! உன் தவறு இல்லை, எம்மைப் போன்று
பிரிவால் நிறம் கெட்டவர் உனது மாட்சிமைப்பட்ட நலத்தை நுகர்வோமோ, உன்னை அடையும் பேறு பெற்றோரின்
மென்மையான தோளின்மேல் எழுந்தருளி அவர்க்கு அருள்செய்வதுவும் உனக்கு இல்லை,
கூர்மையான பற்களையுடைய, உன் மையலில் அகப்பட்ட மகளிரின் தன்மை, இனி
மழை பெய்ய வேண்டி வருந்திநிற்கும் சோலையைப் போன்றது, உரைப்பாயாக, ஐயனே!" என்று
வெறித்த பார்வையுடன் கையால் சுட்டிச் சொல்லி, வள்ளி காரணமாக
ஊடிச் செல்லும் தேவசேனையை, அந்த முருகவேள் தன் தலைமாலை
அவளின் திருத்தமான அடிகளில் படும்படியாகப் பணிந்து அவளுக்குத் தன் வணக்கமாகிய திறைப்பொருளைக் கொடுக்க,
"வருந்தவேண்டாம்" என்று என்று ஆறுதல் கூறி அவனுக்குத் தன் மார்பினைத் தேவசேனை கொடுக்க,
"அவளிடம் நெருங்கிச் செல்லாதே" என்று ஒளிரும் அணிகலன்களையுடைய வள்ளி, தன் மாலையையே கோலாகக் கொண்டு

முருகனின் கைகளை மிகவும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டு, அடிக்க, 
ஒருவரின் மயில் ஒருவரின் மயிலோடு போர்தொடங்க,
அந்த இருவருடைய உயர்ந்த கிளிகளும் தம் மழலைக் குரலால் ஏசத்தொடங்க,
தேவசேனையின் செறிவான கொண்டையின்மேல் இருக்கும் வண்டின்மேல் பாய்ந்தது
வெறியாட்டினை உவந்து ஏற்கும் முருகப்பெருமானின் திருப்பரங்குன்றத்து வள்ளியின் வண்டு;
மாலையோடு மாலையை வீசிப் பின்னுவார், தம் தலைமாலையை எடுத்து ஓங்கித் தடுமாறுவார்,
மார்பினை அழகுசெய்யும் தம் கொங்கைகளின் கச்சினையே சாட்டையாகக் கொண்டு அடித்துக்கொள்வார்,
தமது மாலைகளையும், வரியினையுடைய பந்துகளையும் ஒருவர்மேல் ஒருவர் எறிவார்,
அந்தப் பேதையரின் மென்மையான பார்வை சினத்தால் மாறுபட, வாயில் ஊதினாலும்
வளைந்து மடங்கும் நுண்ணிய இடுப்பினையுடையவர் போரினை மேற்கொள்ள,

துதிக்கையைத்தூக்கிக் குளத்தில் நீராடும், மதநீர் கமழும் தலையுடைய யானைகளைப் போலத் தம் கைகளை வளைத்துப் போரிடுவார்,
வெற்றிக்குக் காரணமான ஓட்டத்தையுடைய குதிரைகளின் நடையினைக் கொண்டனர்,
தேருக்கு அழகுசெய்யும் அழகிய கயிற்றைப் பிடிக்கும் முறையினைத் தெரிந்தாற்போல சடைகளைப் பற்றிக்கொண்டு போரிடுவார்,
நன்கு கட்டமைந்த வில்லினை வளைப்பது போல மற்றவர் உடலை இழுத்து மார்புற வளைப்பார்,
ஒருவரின் கண்களாகிய அம்புகள் மற்றவரின் கண்களாகிய அம்புகள் மேல் நிலைத்து நிற்குமாறு எதிர்த்து நோக்குவார்,
தம் தோள்வளைகளைக் கழற்றிச் சக்கரப் படைபோல் சுழற்றுவார்,
மென்மைத்தன்மை வாய்ந்த மயிலின் சாயலைக் கொண்ட அந்த இருவரின் தோழிமார்;
ஒளி மிக்கதும், வெற்றியாற்றலையுடையதும் ஆன
மலை போன்ற மார்பினையுடைய முருகப்பெருமானை, இந்திரன் மகளான தேவசேனையின்
மாட்சிமை கொண்ட அழகால் மலர் போன்ற மையுண்ட கண்களையும்

மடப்பமுடைய மொழியினையும் உடைய தோழியர் ஒன்றுசேர்ந்து சூழ்ந்துகொண்டு
வள்ளியின் தோழியருக்கு அஞ்சி, மணங்கமழும் சுனையில் குளித்து ஆடுவோரும்,
பாறைகள் அழகுசெய்யும் அரிய சுனையில்
தேனை உண்ணும் வண்டுகளாக யாழினை இசைப்போரும்,
தம் கூந்தலையே மயிலின் தோகைபோல் விரித்து ஆடுபவர்களும்,
குயில்களாகக் கூவுபவரும்,
துன்பங்களை நுகர்வாரும் ஆகி நிற்க,
குறிஞ்சி நிலத்துக் குறவரின் வீரம் பொருந்திய மகளாகிய வள்ளியின் தோழிமார்
திறமையோடு போரிட்டு வெற்றியை விளைத்ததால் வெற்றியையுடைய வேலவனுக்குப்
பெரிதும் பொருந்துவதாயிற்று தண்ணிய பரங்குன்றம்;

கடிய சூரபதுமன் என்னும் மாமரத்தினை அடியோடு வெட்டி அறுத்த வேற்படையினையுடைய
பகைவரை வெல்லும் போரினையுடையவனே! உன்னுடைய திருப்பரங்குன்றத்தில்,
கூத்தினைப் பயின்றோரை அவரைப் போன்றோர் போரில் வெல்லவும்,
பாடல் பயின்றவரை அவரைப் போன்ற பாடல் பயின்றவர் போரில் வெல்லவும்,
வலிமையுடையவர்களை வலிமையுடையவர்கள் போரில் வெல்லவும்,
அவ்வாறு அல்லாதவர்களை அப்படிப்போன்றோரே வெல்லவும், இவ்வாறு எப்பக்கமும் போர் என்ற ஒரே சொல்லாய்ப் பரந்து,
செம்மையான புதிய நீரால் நிறைந்த
தடாகத்தைப் போன்ற குளிர்ந்த சுனையின் பக்கத்தில்
கொடி உயர்ந்து நின்றது;
அன்பர் விரும்பும் வேற்படையினை உடையாய்!

உன் பகைவரை வென்று உயர்த்திய கொடி உன் வெற்றிக்குச் சான்று பகரும்,
கற்பு மணத்தால் இணையும் நெறியுடன், அன்பினாலும் இணையும் உரிமையினையுடைய
விரும்பத்தகுந்த பண்பினையுடைய வியக்கத்தக்க குமரவேளே!
உன்னை வாழ்த்துகின்றோம்! புகழ்கின்றோம்! தலைகளைத் தாழ்த்தியவராய் உன்னை நாம்
விரும்புதலினால் சிறப்புற்று விழங்கும் எமது அடியுறை வாழ்வானது
நீ எமக்கு அருள்செய்வதனால் சிறந்து விளங்கட்டும் நாள்தோறும் மேலும் மேலும் அழகுபெற்று.


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

9.   Murukan

Poet:  Kundrampoothanār, Composer:  Maruthuvan Nallachuthanār, Melody:  Pālai Yāzhl

முருகவேளை வாழ்த்துதல் 

இரு நிலம் துளங்காமை வட வயின் நிவந்து ஓங்கி,
அரு நிலை உயர் தெய்வத்து அணங்கு சால் தலைகாக்கும்,
உருமுச் சூழ் சேண் சிமை உயர்ந்தவர் உடம்பட,
எரி மலர்த் தாமரை இறை வீழ்த்த பெரு வாரி
விரி சடைப் பொறை ஊழ்த்து விழு நிகர் மலர் ஏய்ப்ப, 5

தணிவுறத் தாங்கிய தனி நிலைச் சலதாரி
மணி மிடற்று அண்ணற்கு, மதி ஆரல் பிறந்தோய்! நீ
மை இரு நூற்று இமை உண்கண் மான் மறி தோள் மணந்த ஞான்று,
ஐ இருநூற்று மெய்ந் நயனத்தவன் மகள் மலர் உண்கண்,
மணி மழை தலைஇ என, மா வேனில் கார் ஏற்று, 10

தணி மழை தலையின்று தண் பரங்குன்று.

Praising Murukan 

On the lofty northern mountain that maintains

the stability of the vast earth, its tall peaks difficult to

scale, surrounded by thunder, protected by Indiran,

the lord of fierce deities with divine nature, Brahman

who appeared on a flame-like lotus blossom sent

down the huge mountain stream that was borne by Sivan

on his matted, spread hair to slow down, appearing like

bright flowers that mature and drop down.

O Lord!  You were born to the noble lord Sivan who was

called Salathāri, the one with a sapphire colored neck,

through six respected Karthikai women upon acceptance

by their husbands who were sages.

On the day you united with Valli with dark eyes decorated

with powdered kohl, daughter of a deer, Thēvasēnai, the

daughter of Indiran with a thousand eyes, shed tears from

her flower-like, kohl-lined eyes that appeared like rains

from sapphire-colored clouds,

and clouds surrounding cool Thirupparankundram came

down as rains even though it was summer, to pacify her.

Notes:  மை இரு நூற்று இமை உண்கண் மான் மறி (9) – மையாகிய கரிய துகளால் அணியப்பட்ட உண்கண்.  நூறு நுண்ணிதாக நறுக்கிய துகள்.  மானிட மகள் என்பது தோன்ற ‘இமை உண்கண்’ என்றும் வள்ளிக்கிழங்கு அகழ்ந்த குழியில் மானாலே ஈயப்பட்ட மகள் என்பது தோன்ற ‘மான்மறி ‘ என்றார்.  ‘மான்குட்டி’ என்றவாறு.   ஐ இருநூற்று (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஐ இருநூறு என மாற்றுக.  இலக்கணம்:  மழை – ஆகுபெயர் முகிலுக்கு.  தலைஇ – சொல்லிசை அளபெடை.

Meanings:  இரு நிலம் – vast land, துளங்காமை – with stability, not moving, வட வயின் நிவந்து – high on the north, ஓங்கி – tall, அரு நிலை உயர் தெய்வத்து அணங்கு சால் தலை காக்கும்– protected by the lord (leader) of the fierce deities in the tall difficult mountain – Indiran, உருமுச் சூழ் சேண் சிமை– lofty mountain peaks surrounded by thunder, உயர்ந்தவர் உடம்பட – there are superior people who accept, எரி மலர்த் தாமரை இறை – the god who appeared on the flame-like lotus flower – Brahman, வீழ்த்த பெரு வாரி– brought down the large river (Gangai), விரி சடைப் பொறை – appearing  on Sivan’s matted/spread hair with the burden (of the river), ஊழ்த்து விழு நிகர் மலர் ஏய்ப்ப– like bright flowers that mature and fall down, தணிவுற – causing it to slow down, தாங்கிய தனி நிலைச் சலதாரி – the one who was called Salathāri who bore the river (on his head), மணி மிடற்று அண்ணற்கு – to the noble one with sapphire color neck, மதி ஆரல் பிறந்தோய் – you were born to the respected Karthikai women, நீ மை இரு நூற்று இமை உண்கண் மான் மறி தோள் மணந்த ஞான்று – on the day when you embraced the shoulders of Valli (united with her in kalavu) who is the daughter of a deer, who has dark eyes with lids, that are decorated with kohl that was powdered finely (நூறு – நுண்ணிதாக நறுக்கிய துகள்), ஐ இருநூற்று மெய்ந் நயனத்தவன் மகள் – daughter of the one with a thousand eyes on his body- Indiran (நயனம் – கண்), மலர் உண்கண் மணி மழை தலைஇ என– since she shed tears with her flower-like kohl-lined eyes like rain from sapphire-colored clouds, மா வேனில் கார் ஏற்று – like rain in intense summer, தணி மழை தலையின்று தண் பரங்குன்று – cool clouds came down as rains on your cool Thirupparankundram

தமிழது சிறப்பிற்குக் காரணம் 

நான்மறை விரித்து, நல் இசை விளக்கும்
வாய்மொழிப் புலவீர்! கேண்மின் சிறந்தது!
காதற் காமம், காமத்துச் சிறந்தது;
விருப்போர் ஒத்து மெய்யுறு புணர்ச்சி  15

புலத்தலின் சிறந்தது, கற்பே; அது தான்
இரத்தலும் ஈதலும் இவை உள்ளீடாப்
பரத்தை உள்ளதுவே; பண்புறு கழறல்,
தோள் புதிது உண்ட பரத்தை இல் சிவப்புற
நாள் அணிந்து, உவக்கும் சுணங்கறையதுவே;    20

கேள் அணங்குற மனைக் கிளந்து உள சுணங்கறை
சுணங்கறைப் பயனும் ஊடலுள்ளதுவே
அதனால், அகறல் அறியா அணியிழை நல்லார்
இகல் தலைக்கொண்டு துனிக்கும் தவறு இலர்; இத்
தள்ளாப் பொருள் இயல்பின் தண் தமிழ் ஆய் வந்திலார் 25

கொள்ளார், இக்குன்று பயன்.

Greatness of Secret Love of the Thamizh people

O scholars with fine tongues who recite and

explain the fine fame of the four Vēdās!  Listen

to this truth!  Passion with mutual love is the best

love!  The physical passion that follows love is the

greatest!

Virtue of married love is pleading and giving in

after sulking, when the husband returns to the marital

house from his concubine.

The friend wears red garments and gives the husband

the firm news that his wife is ready for union when he

is in the house of his new paramour whose arms he enjoys.  

He rushes back to his house and enjoys making love

to his wife, their union called sunangarai.  The concubine,

upset, slanders the couple in her house, as the friends of

the heroine get distressed.

Sulking gives the benefit of sexual union.  So pretty

women in secret love, whose lovers don’t leave them, do

not make the mistake of getting upset.   Of the two kinds

of love, secret love and married love, the former is

superior by the ancient Thamizh texts.  Only those who have

not analyzed cool Thamizh grammar of love, will not accept

this secret love of the mountains.

Notes:  இலக்கணம்:  கேண்மின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person.  உள்ளதுவே – ஏகாரம் அசைநிலை, an expletive.  சுணங்கறையதுவே – ஏகாரம் அசைநிலை, an expletive.  ஊடலுள்ளதுவே – ஏகாரம் அசைநிலை, an expletive.

Meanings:  நான்மறை விரித்து நல் இசை விளக்கும் வாய்மொழிப் புலவீர் – scholars with fine tongues who recite and explain the four Vēdās, கேண்மின் சிறந்தது – listen to the best/the truth, காதற் காமம் காமத்துச் சிறந்தது – love passion is the best passion, விருப்போர் ஒத்து மெய்யுறு புணர்ச்சி – when lovers unite with mutual love, புலத்தலின் சிறந்தது – best due to sulking, கற்பே அது தான் – that is virtue, இரத்தலும் ஈதலும் – pleading and giving in, இவை உள்ளீடாப் பரத்தை உள்ளதுவே – this is because of him going to a concubine, பண்புறு கழறல்– utters the firm news (கழறல் – அறத்தொடு பொருந்திய உறுதிச் சொல்), தோள் புதிது உண்ட பரத்தை இல் – enjoys newly the arms of a concubine in her house, சிவப்புற நாள் அணிந்து– wearing red ornaments/garments in the morning, உவக்கும் சுணங்கறையதுவே  – he enjoys sexual union with her, கேள் அணங்குற – making her friends sad, மனைக் கிளந்து உள சுணங்கறை– the concubine slanders the couple in her house, சுணங்கறைப் பயனும் ஊடலுள்ளதுவே – sulking gives the benefit of sexual union, அதனால் – so, அகறல் அறியா – not knowing leaving of their lovers, அணி இழை நல்லார் – fine women who wear pretty jewels, இகல் தலைக்கொண்டு துனிக்கும் தவறு இலர்– they don’t make the mistake of being angry, இத் தள்ளாப் பொருள் இயல்பின் – with the nature of the not reduced convention (that praises secret love as being better than married love), தண் தமிழ் ஆய் வந்திலார்– those who have not analyzed cool Thamizh, கொள்ளார் இக்குன்று பயன் – they do not accept this mountain/kurinji conventions

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 தேவசேனையும் வள்ளியும் முருகனும் 


ஊழ் ஆரத்து தேய் கரை நூக்கி, புனல் தந்த
காழ் ஆரத்து அம் புகை சுற்றிய தார் மார்பின்,
கேழ் ஆரம் பொற்ப வருவானைத் தொழாஅ,
வாழிய மாயா! நின் தவறு இலை; எம் போலும் 30

கேழ் இலார் மாண் நலம் உண்கோ திரு உடையார்
மென்தோள் மேல் அல்கி நல்கலம் இன்று?
வை எயிற்று எய்யா மகளிர் திறம் இனிப்
பெய்ய உழக்கும் மழைக் கா; மற்று ஐய!
கரையா வெந்நோக்கத்தால் கை சுட்டி, பெண்டின் 35

இகலின் இகந்தாளை, அவ் வேள் தலைக் கண்ணி
திருந்து அடி தோயத் திறை கொடுப்பானை,
வருந்தல் என அவற்கு மார்பு அளிப்பாளை,
குறுகல் என்று ஒள்ளிழை கோதை கோலாக
இறுக இறுக யாத்துப் புடைப்ப;    40

ஒருவர் மயில் ஒருவர் ஒண் மயிலோடு ஏல,
இருவர் வான் கிளி ஏற்பில் மழலை,
செறி கொண்டை மேல் வண்டு சென்று பாய்ந்தன்றே,
வெறி கொண்டான் குன்றத்து வண்டு.

Valli, Thēvasēnai and Murukan

The flood waters of the Vaiyai river attacked the

eroding shores and brought down mature, hard-core

sandal trees that grew there.  Lord Murukan came to the

aid of Thēvasēnai, donning a garland and a pearl strand

that made him look splendid.  She worshipped him and

said, pointing her hand in great rage, “O Lord of deception! 

May you live long!  You are not at fault!  Those like me are

hurt, beautiful women ruined by you.  You do not shower

your graces on pretty women with delicate arms and sharp

teeth, who do not know your nature, whose plight is like

parched groves that look up to the sky for water.  I will not

enjoy your beauty!”

Murukan prostrated to her in submission, she who put down

Valli, his head strand touching her feet, and to comfort him

she offered him her breasts saying “Do not feel sad”.

“Do not go near her”, roared angry Valli wearing bright jewels.

She tied his hands tightly together and beat him using her

garland as a stick.

Fight erupted.  The pea****s of the consorts fought with

each other.  Their fine parrots fought exchanging angry

prattle, Valli’s honey bees living in Thirupparankundram

where veriyāttam is performed for Murukan, leapt

and attacked the honey bees on Thēvasēna’s tight hair knot.

Notes:  ஊழ் (27) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – முறை, மழை பெய்யுந்தோறும் நீர் பெருகுந்தோறும் முறை முறையாகத் தேய்ந்த கரை.  ஊழ் தேய் கரை ஆறாம் நோக்கி என மாறுக.  வெறி கொண்டான் (44) – வெறியாடலை உவந்து ஏற்றுக் கொண்டவனாகிய முருகன்.  குன்றத்து வண்டு (44) – குறமகளாதலின் வள்ளியின் வண்டைக் குன்றத்து வண்டு என்றார்.   இலக்கணம்:  தொழாஅ – தொழுது என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  இசை நிறை அளபெடை.  இலை – இல்லை என்பதன் விகாரம்.  உண்கோ – உண்கு – தன்மை ஒருமை, first person singular, ஓ -அசைநிலை, an expletive.  கரையா – கரைந்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  ஒள்ளிழை – அன்மொழித்தொகை.  வை – வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91).

Meanings:  ஊழ் – procedural, regular, ஆரத்து – of the sandal trees, தேய் கரை – the eroding shores, நூக்கி – pushed down, புனல் தந்த காழ் ஆரத்து – the hard-core sandal trees brought by the floods, அம் புகை சுற்றிய – surrounded by beautiful smoke, தார் மார்பின்– with a chest with a garland, கேழ் ஆரம் – bright pearl strand, பொற்ப – making him beautiful, வருவானைத் தொழாஅ– worshipped Murukan who came, வாழிய மாயா – long live O lord of deception, நின் தவறு இலை– you are not at fault, எம் போலும்– like me, கேழ் இலார்– those without color, மாண் நலம் உண்கோ– will I enjoy your great beauty, திரு உடையார் – those with beauty,  மென் தோள் மேல் அல்கி நல்கலம் இன்று– you do not rise up and shower graces on women with delicate arms, வை எயிற்று – with sharp teeth, எய்யா மகளிர் திறம் – women who do not know your nature, இனிப் பெய்ய உழக்கும் மழைக் கா – like groves which are suffering without rain,  மற்று ஐய– also Sir, கரையா – uttering words, வெந்நோக்கத்தால் – with looks with great rage, கை சுட்டி– pointing with her fingers, பெண்டின் இகலின் இகந்தாளை– the woman who sulked and left because of another woman – Valli, அவ் வேள் தலைக் கண்ணி திருந்து அடி தோயத் திறை கொடுப்பானை– Murukan put his head on Thevāsēna’s feet his head flower strand touching them and gave her gifts, வருந்தல் – do not feel sad, என – thus, அவற்கு – to him, மார்பு அளிப்பாளை– the woman her who offered her breasts, குறுகல் என்று – that you do not go near her, ஒள்ளிழை – Valli wearing bright jewels (அன்மொழித்தொகை), கோதை – garland, கோலாக – as a stick, இறுக இறுக யாத்துப் புடைப்ப – hitting him tying tightly and tightly, ஒருவர் மயில் ஒருவர் ஒண் மயிலோடு ஏல– their bright pea****s fought matching, இருவர் வான் கிளி ஏற்பில் மழலை– their superior/fine parrots prattled in anger, செறி கொண்டைமேல் வண்டு சென்று பாய்ந்தன்றே– honey bees attacked the tight hair knot of Thevānai, வெறி கொண்டான் குன்றத்து வண்டு – the honeybees that lived in Thirupparankundram of Murukan for whom veriyāttam is performed

வள்ளியின் பாங்கியரும் தேவசேனையின் பாங்கியரும் இகழ்தல்  

தார் தார் பிணக்குவார்; கண்ணி ஓச்சித் தடுமாறுவார்;    45

மார்பு அணி கொங்கை வார் மத்திகையாப் புடைப்பார்;
கோதை வரிப் பந்து கொண்டு எறிவார்;
பேதை மட நோக்கம் பிறிதாக, ஊத
நுடங்கு நொசி நுசுப்பார், நூழில் தலைக்கொள்ள;
கயம்படு கமழ் சென்னிக் களிற்று இயல் கைம்மாறுவார்;    50

வயம்படு பரிப் புரவி மார்க்கம் வருவார்;
தேர் அணி அணி கயிறு தெரிபு வருவார்;
வரி சிலை வளைய மார்பு உற வாங்குவார்;
வாளி வாளிகள் நிலைபெற மறலுவார்;
தோள் வளை ஆழி சுழற்றுவார்; 55

மென் சீர் மயில் இயலவர்
வாள் மிகு வய மொய்ம்பின்
வரை அகலத்தவனை, வானவன் மகள்
மாண் எழில் மலர் உண்கண்
மட மொழியவர் உடன் சுற்றி, 60

கடி சுனையுள் குளித்து ஆடுநரும்,
அறை அணிந்த அருஞ் சுனையான்
நற உண் வண்டாய் நரம்பு உளர்நரும்,
சிகை மயிலாய்த் தோகை விரித்து ஆடுநரும்,
கோகுலமாய்க் கூவுநரும், 65

ஆகுலம் ஆகுநரும்
குறிஞ்சிக் குன்றவர் மறம் கெழு வள்ளி தமர்
வித்தகத் தும்பை விளைத்தலான், வென் வேலாற்கு
ஒத்தன்று தண் பரங்குன்று.

Fights Between Friends of Valli and Thēvasēnai

Women with waists so delicate that sway when

air is blown with the mouth, their delicate looks

changed to ire, beat each other with their garlands,

tangling them.  They threw flowers from their

strands at each other.  Removing their breast garment,

they lashed them like long whips.  They threw their garlands

and striped balls at each other.  Starting their fight, they

became enraged like rutting elephants with tender heads.

They charged rapidly like trotting victorious horses.

They came like those knowing to use

beautiful bridle ropes on chariots. They bent their tightly tied

bows placing them on their chests and shot arrows.  They

acquired the nature of angry warriors with swords and whirled

their arm bracelets, the delicate women of pea**** nature.

The daughter of Indiran along with her friends of soft

words, kohl in their flower-like pretty eyes, surrounded

Lord Murukan with a bright, mighty, mountain-like chest.

Some women jumped into a guarded pond.  Some strummed

their musical instruments that sounded like humming of

bees that drink honey from flowers in a precious spring

with rocks.  Some danced like crested pea****s.  Some

sang like cuckoos.  Some suffered in pain.  Since the friends of

Valli, brave daughters of mountain dwellers, won a perfect

battle, cool Thirupparankundram is the fitting place for the god

with a victorious spear,

Notes:  வரிப் பந்து –நற்றிணை 12 – வரி புனை பந்தொடு – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை, ஒளவை துரைசாமி உரை – வரிந்து புனையப்பட்ட பந்தொடு, திருமுருகாற்றுப்படை 68 – வரிப் புனை பந்தொடு – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தும், நச்சினார்க்கினியர் உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தும், வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி  உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தோடு, கலித்தொகை 51 – வரிப் பந்து – நச்சினார்க்கினியர் உரை – வரியினையுடைய பந்து, பரிபாடல் 9 – வரிப் பந்து – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வரியினையுடைய பந்து, பெரும்பாணாற்றுப்படை 333 – வரிப்பந்து – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நூலால் வரியப்பட்ட பந்து.  இலக்கணம்:  மத்திகை – மத்திகையாக எனற்பாலது ஈறு கெட்டு நின்றது.  வாள் – ஆகுபெயர் தழும்பிற்கு.  நொசிவு – நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை (தொல்காப்பியம் உரியியல் 78).  கய – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), கய என் கிளவி மென்மையும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 26). வேலாற்கு (68) – பொ.வே. சோமசுந்தரனார் உரை – இவ்வாறு அவனைப் படர்க்கையாக்கி இவை கூறிப் பின்னும் எதிர்முகமாக்கி வாழ்த்துகின்றனர்.

Meanings:  தார் தார் பிணக்குவார் – they fought with their garlands tangling them, கண்ணி ஓச்சித் தடுமாறுவார்– they threw their strands at each other and were mentally confused, மார்பு அணி கொங்கை வார் மத்திகையாப் புடைப்பார் – they hit each other with long whips made with the cloth covering their beautiful breasts, கோதை வரிப் பந்து கொண்டு எறிவார் – they throw their garlands and beautiful/striped balls at each other, பேதை மட நோக்கம் பிறிதாக – their delicate nature change their outlook to something different – anger, ஊத நுடங்கு –  blowing air with the mouth make them to sway, நொசி நுசுப்பார்– ones with delicate waists, நூழில் தலைக்கொள்ள – started to fight,  கயம்படு கமழ் சென்னிக் களிற்று இயல் கைம்மாறுவார் – they acquire the nature of male elephants with tender heads (due to goads piercing, கயம்படு – மென்மைப்பட்ட) that are fragrant (due to the musth), they acquire the nature of male elephants with huge heads that are fragrant,  வயம்படு பரிப் புரவி மார்க்கம் வருவார் – they come with the movement of rapid victorious horses, தேர் அணி – on chariots, அணி கயிறு – pretty ropes, தெரிபு வருவார் – they come knowing, வரி சிலை வளைய – bending their tightly tied bows, மார்பு உற – placing on their chests, வாங்குவார்– they pull them, they bend it, வாளி – arrows, வாளிகள் –நிலைபெற மறலுவார் – they are angry with the nature of warriors with swords, தோள் வளை ஆழி சுழற்றுவார் – they whirled and threw their arm bracelets, மென் சீர் மயில் இயலவர் – women with the nature of pretty pea****s, வாள் மிகு – scars of swords, very bright, வய மொய்ம்பின் வரை அகலத்தவனை – Murukan with a very strong chest that is like a mountain, வானவன் மகள் – daughter of the celestial Indiran, மாண் எழில் மலர் உண்கண் – beautiful flower-like eyes decorated with kohl, மட மொழியவர் – ones with delicate words, உடன் சுற்றி – surrounded, கடி சுனையுள் – in the fragrant/protected ponds, குளித்து ஆடுநரும் – some bathe and play, அறை அணிந்த அருஞ் சுனையான் – in the precious spring/pond with rocks, நற உண் வண்டாய் நரம்பு உளர்நரும் – some strum their lutes sounding like honey-drinking bees, சிகை மயிலாய்த் தோகை விரித்து ஆடுநரும் – some dance like crested pea****s with spread plumes, கோகுலமாய்க் கூவுநரும் – some call out like kuyils in a flock, ஆகுலம் ஆகுநரும் – some suffered in pain,  குறிஞ்சிக் குன்றவர் – mountain dweller, மறம் கெழு வள்ளி தமர் – brave friends of Valli, வித்தகத் தும்பை விளைத்தலான் – since they win a perfect battle, வென் வேலாற்கு ஒத்தன்று தண் பரங்குன்று – cool Thirupparankundram  is fitting for the god with a victorious spear

வாழ்த்தி வேண்டல் 

கடுஞ் சூர் மா முதல் தடிந்து அறுத்த வேல் 70

அடும் போராள நின் குன்றின் மிசை
ஆடல் நவின்றோர் அவர் போர் செறுப்பவும்,
பாடல் பயின்றோரைப் பாணர் செறுப்பவும்,
வல்லாரை வல்லார் செறுப்பவும்,
அல்லாரை அல்லார் செறுப்பவும், ஓர் சொல்லாய், 75

செம்மைப் புதுப் புனற்
தடாகம் ஏற்ற தண் சுனைப் பாங்கர்,
படாகை நின்றன்று;
மேஎ எஃகினவை;
வென்று உயர்த்த கொடி விறல் சான்றவை;    80

கற்பு இணை நெறியூடு அற்பு இணைக் கிழமை
நயத்தகு மரபின் வியத்தகு குமர!
வாழ்த்தினேம் பரவுதும் தாழ்த்துத் தலை நினை யாம்
நயத்தலின் சிறந்த எம் அடியுறை,
பயத்தலின் சிறக்க, நாள்தொறும் பொலிந்தே.   85

Offering Praises

O warrior who fights with his spear, who chopped

fully the mango tree of harsh Sooran!  In your mountain,

expert dancers beat other dancers, bards vanquish

trained singers, experts beat experts, others beat

those in their fields.

There is a flag, a symbol of matchless flame near the cool

spring which resembles a fine pond into which fresh water

flows.   There is a tall flag that proves your victory over

your enemies, with your spear.

O Lord of admirable traits!  Your virtuous consorts have love

that rises from sulking rights.  We praise you!  We place

our heads at your feet and pray to you with love!  Grant us

our request that we may live in the shadow of your feet and

flourish and prosper every day!

Notes:  இலக்கணம்:  மேஎ – இன்னிசை அளபெடை.  வாழ்த்தினேம் – முற்றெச்சம், வாழ்த்தி என்க, எஃகினவை – சான்றவை, எஃகினவை – முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்றுக்கள்.  பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 86).

Meanings:  கடுஞ் சூர் மா முதல் தடிந்து அறுத்த வேல் அடும் போராள – O warrior who chopped off the mango tree trunk killing harsh Sooran, நின் குன்றின் மிசை – on your mountain top, ஆடல் நவின்றோர் அவர் போர் செறுப்பவும்– expert dancers excel over other dancers, பாடல் பயின்றோரைப் பாணர் செறுப்பவும் – bards vanquish trained singers, வல்லாரை வல்லார் செறுப்பவும்– experts beat experts, அல்லாரை அல்லார் செறுப்பவும்– others beat those in their fields, ஓர் சொல்லாய்–with matchless fame, செம்மைப் புதுப் புனற் தடாகம் ஏற்ற – like a pond where perfect fresh water flows in, like a pond that accepted fresh water, தண் சுனைப் பாங்கர்– near the cool spring/pond, படாகை – flag, நின்றன்று– stood, மேஎ எஃகினவை– you are one with a spear (மேஎ – பொருத்திய), வென்று உயர்த்த கொடி விறல் சான்றவை– you are one with a flag that proves your victory over your enemies, கற்பு இணை நெறி – with a virtuous path (your consorts), ஊடு அற்பு இணைக் கிழமை– love that arises from sulking rights (அற்பு – அன்பு, வலித்தல் விகாரம்), நயத்தகு மரபின் வியத்தகு குமர – O Lord with admirable awesome traits, வாழ்த்தினேம் – praising you (முற்றெச்சம், வாழ்த்தி எனக), பரவுதும் – we pray to you, தாழ்த்துத் தலை– with lowered heads, with our heads at your feet, நினை யாம் நயத்தலின் – since we pray to you with love, சிறந்த எம் அடியுறை பயத்தலின் – along with granting us our request to live in the shadow of your feet, சிறக்க – to flourish,  நாள்தொறும் பொலிந்தே – to prosper every day



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

பரிபாடலில் முருகன் வரலாறு

முனைவர் பூ.மு.அன்புசிவா


'பரிபாடல் என்பது மிகவும் முக்கியமான அதேவேளையில் ஓர் அசாதாரணமான தொகுதியாகவும் காணப்படுகிறது. முதலாவது, இது ஒரு இசைப்பாடல்; இலக்கிய வகை அல்ல. இது முற்றிலும் நிகழ்த்துகை, ஆற்றுகை சார்ந்த ஒரு வடிவம். அதிலே யார் பாட்டு இயற்றினார்கள்? யார் இசையமைத்தார்கள்? என்கின்ற தரவுகள் தரப்பட்டுள்ளன. இசைத்தமிழ் நூல் ஒன்று இங்கு இலக்கியமாகக் கொள்ளப்படுகிறது.' எட்டுத்தொகை இலக்கியங்களுள் 'ஓங்கு பரிபாடல்' என அடைமொழியால் சிறப்பிக்கப்படும் இலக்கியமாகப் பரிபாடல் விளங்குகிறது, பரிபாடல் என்னும் ஒருவகைப் பாவால் இயன்ற நூலாதலால் இது பரிபாடல் எனப்பெயர் பெற்றது. பரிபாடல் பாடிய புலவர்கள் பதின்மூவர். அவற்றிற்கு இசை வகுத்தோர் பதின்மர் ஆவர். 'பரிபாடல் மதுரை மாநகரையும் மதுரை நகருக்கு வளமும் வனப்பும் காப்பும் தந்த வையை ஆற்றையும் மதுரையைச் சார்ந்த திருப்பரங்குன்றத்துச் செவ்வேளாகிய திருமுருகனையும் மதுரையை அடுத்துள்ள திருமாலிருங்குன்றத்து நெடுவேளாகிய மாயோனையும் கொற்றவைத் தெய்வத்தையும் பாடுவதாக அமைந்துள்ளது. பிறதொகை நூற்களைப் போலன்றித் தமிழ்நாட்டின் பகுதிகளையெல்லாம் கொண்டு எழுந்த செய்யுளாக இல்லாமல் மதுரை நகரையும் மதுரையையொட்டி ஓடுகின்ற வையை ஆற்றையும், திருப்பரங்குன்றத்தையும், திருமாலிருங்குன்றத்தையும் பாடுபொருளாகக் கொண்டு பரிபாடல் எழுந்துள்ளது என்பதால் இந்நூலினை மதுரையைப் பற்றி எழுந்த நூல் எனக் கூறுவர். செவ்வேளைப் பற்றிய எட்டுப்பாடல்கள் 612 அடிகளைக் கொண்டவையாக அமைந்துள்ளன.

கந்தவேளின் பெயர்கள்

முருகன் என்னும் பெயர் பரிபாடல் உள்ளிட்ட எல்லாச் சங்க இலக்கியங்களிலும் பயின்றுவந்துள்ளது. (முருகு:269, அகம்.158, பரி., 5;50, புறம்.,53, ஐங்குறு., 249) 'விழைவு' எனப் பொருள்படும். 'வேள்' (8:61), என்னும் சொல் அடைமொழி சேர்ந்து நெடுவேள்(3:37) வெல்வேள்(18:36), செவ்வேள்(5:13) எனப் பரிபாடலில் காணப்படுகிறது. கந்தவேளைக் குறிக்கும் செவ்வேள் எனும் பெயர் பரிபாடலில் மட்டும் தான்இடம்பெற்றுள்ளது. அதனால்தான் முருகனைப் பற்றிய பாடல்களைச் 'செவ்வேள்' எனும் தலைப்பில் பரிபாடலில் அமைத்தனர் எனலாம்.

வையை வரவும் வளமும்

'வளி பொரு மின்னொடு வான் இருள் பரப்பி
விளிவு இன்று, கிளையொடு மேல் மலை முற்றி,
தளி பொழி சாரல் ததர் மலர் தாஅய்;
ஒளி திகழ் உத்தி உருகெழு நாகம்,
அகரு வழை, ஞெமை, ஆரம், இனைய,
தகரமும் ஞாழலும் தாரமும் தாங்கி
நளி கடல் முன்னியது போலும், தீம் நீர்
வளி வரல் வையை வரவ
ு' (பரி. 12: 1-8)

என்று வையையில் கடல்போல் நீர் பெருகி வந்த காட்சி சொல்லப்படுகிறது. மண்ணிலுள்ள நீர் ஆவியாகி மேகமாகத் திரண்டு மழையாகப் பொழிகிறது. மின்னலும் இருளுமாக மாறிமாறித் தோன்றி சைய மலையில் பெய்த மழை வையை ஆற்றில் காற்றினால் உதிர்ந்த மலர்களைப் பரப்பியும்; நாகம், அகில், சுரபுன்னை, ஞெமை, சந்தனம் ஆகிய மரங்கள் வருந்துமாறும் தகரம், ஞாழல், தேவதாரம் ஆகிய மரங்களைச் சாய்த்து அடித்துக்கொண்டு வந்தது. இவ்வாறு வருகின்ற வையையானது பெரிய கடல் பொங்கி வருவதைப்போல இருந்தது என புலவர் வையையின் வரவைக் குறிக்கின்றார்.

கந்தவேளைக் குறிக்கும் பழைய சொல்லான 'சேயோன்' என்பதனைத் தொல்காப்பியத்தில் காணலாம். இச்சொல் விகுதியயின்றி, 'சேய்' எனப் பரிபாடலில்(6:69, 5:54) வந்துள்ளது. நச்சினார்க்கினியர், 'செய்யவன்' என்பதே 'சேயோன்' என நீண்டிருக்கவேண்டும் எனக் கருதுவர். (முருகு. 61, நச்சர்.,உரை), 'சேஎய்' என்பது, 'காஅய் கடவுட்சேய்'(5:13) என, 'மகன்' என்ற பொருளிலும் 'சேஎய்குன்றம்' (6:69) என, 'செம்மை' என்ற பொருளிலும் வந்து வழங்குகின்றது.

'வேள்' என்னும் சொல், 'மன்மதன்', 'முருகன்' இருவருக்கும் பொருவாக இருந்ததால் முறையே 'கருவேள்'(மன்மதன்), 'செவ்வேள்'(முருகன்) என்றும் அடைமொழி கொடுத்துக் குறிப்பிட்டனர். இளமையாய் இருத்தலின், 'குமரன்' என்றும்(9:82) திருமாலுக்கு மருமகனாய் இருத்தலின், 'மாஅல்மருகன்' (19:57) முருகனுக்குப் பல பெயர்கள் உண்டு. 'வெறிகொண்டான்' (9:44) என்றும் முருகன் அழைக்கப்பெற்றார்.

கந்தவேள் பிறப்பு

செவ்வேளைப் பற்றி பாடிய புலவர்களுள் கடுவனிளவெயினனாரே கந்தவேளின் பிறப்பை விரிவாகக் கூறியுள்ளார். திரிபுரத்தை அழலால் எரித்தபின்பு சிவபெருமான் உமையோடு சேர்ந்திருந்தான்.இந்திரன் சிவபெருமானிடத்து ஒரு வரம் பெற்று இச்சேர்க்கையால் தோன்றிய கருவை அழிப்பாயாக என வேண்டினான். சிவபெருமான் இந்திரனுக்குக் கொடுத்த வரத்தின்படி அக்கருவினைச் சிதைத்தான். சிதைக்கப்பட்டகரு அமரர் சேனைக்குத் தலைவனாகும் என ஞானத்தால் உணர்ந்த தெய்வ முனிவர்கள் எழுவரும் இந்திரனுக்கு ஊறு வாராதென உறுதி கூறி அவனிடமிருந்து அச்சிதைந்த கருவை ஏற்றுச் சென்றனர். அதனை அம்மாதவர் வேள்வியின்கண் இட்டனர். பின்னர் அதனை அந்ததி நீங்கலாக கார்த்திகை மகளிர் அறுவர்க்கும் வழங்கினர். இவ்வறுவரும் அதனை உண்டு சூழுற்றுப் பின் இமயமலையிலுள்ள சரவணப் பொய்கையில் தாமரைப் பூவாகிய பாயலில் குழந்தையை ஈன்றனர். ஈன்ற அப்பொழுதே இந்திரன் இகல்கொண்டு முனிவர்களுக்குத் தான் கொடுத்த வரத்தை மீறி வச்சிரப்படையால் அவற்றை வெட்னொன்.

அவை ஆறு துண்டமாகச் சிதைந்தன. ஆறு துண்டமும் ஆறு குழந்தைகளாகிப் பின் ஒன்றாயின. குழந்தைப் பருவத்திலேயே முருகனிடம் இந்திரம் தோல்வியுற்றதால், முருகனுடைய இவ்வாற்லைக் கண்ட அக்னிதேவன் (அனலன்) தன்மெய்யிற் பரித்துக் கோழியை முருகனுக்குப் பரிசாகக் கொடுத்தான். இந்திரன் மயிலை அளித்தான். எமன் வெள்ளாடு நல்கினான் (5:12, 14:25-26).

முருகனைக் கார்த்திகை மகளிர் உமையம்மை இருவருக்கும் மகனெனப் பரிபாடல் கூறுகிறது (8:127,128) விட்டான் மனைவியான அருந்ததி, சிவன், முருகன் என்னும் கடவுளரைவிடப் பெருமை வாய்ந்தவள் என்பதை நிறுவவே முருகன் பிறப்புப் பற்றிக் கதைகட்டிவிடப்பட்டுள்ளது என மறைமலையடிகளால் கருதுவர்(மறைமலையடிகளார், தமிழர் மதம், ப.,207).

முருகனின் திருவிளையாடல்

முருகப்பெருமானின் திருவிளையாடல்கள் பல பரிபாடலில் காணக்கிடக்கின்றன. பல பரிபாடல்கள் முருகன் சூரபதுமனை மாய்த்ததைக் குறிப்பிட்டுள்ளன. புராணக் கதைகளை விரித்துரைக்கும் கடுவனிளவெயினனார் சூரபதுமன் அழிவினையும் விரிவாகப் பாடியுள்ளார். முருகன் தன் 'பிணிமுகம்'என்னும் யானை மீதமர்ந்து சூரன்தங்கி வாழும் கடலுக்குச் சென்றார்; அவன்மா மரமாகுவும் மலையாகவும் மாற்ருருக் கொண்டு மறைந்தனன். கந்தவேள் தன்னுடைய வேலை எரிந்து மாவினை அழித்தார். மலையினையும் அழித்தார்; சூரனின் சுற்றத்தாரையும் அழித்தார் (பரி. 5:12-14, 5:7, 9:70, 14:18, 18:4, 19:10-103, 21:8-9).

பரிபாடலில் மொத்தமாக ஒன்பது வையைப்பாடல்கள் உள்ளன. அவற்றில் ஏழு பாடல்கள் முழுமையாகவும் ஒருபாடல் சிதைவடைந்த நிலையிலும் மற்றையது திரட்டுக்களில் இருந்து பெற்றுக்கொண்ட தனிப்பாடல்களுமாகும். இவற்றில் அகத்திணைச் செய்திகளே பெரிதும் பயின்றுள்ளன. இவை எல்லாவற்றையும் அகப்பாடல்களாகக் கருதியே துறை வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், பாண்டியனின் ஆட்சிச்சிறப்பு, கொடைச்சிறப்பு, மதுரையின் சிறப்புக்கள் கூறப்படும் பகுதிகளில் புறத்திணைக்குரிய பண்புகள் உள்ளன. வையையின் வரவும் வளமும், நீராடுவோர் இயல்புகள், நீர்ப்பண்பாடுகள், அகப்பொருள் - புறப்பொருள் தழுவிய செய்திகள், வையையை வாழ்த்துதல் ஆகியன வையைப் பாடல்களின் பொதுவான அமைப்பாக அமைந்துள்ளன. அப்பாடல்களை இயற்றிய புலவர், இசை வகுத்தவர், பண் ஆகிய குறிப்புக்களை நோக்குவோம். கிரௌஞ்கசிரி என்ற வடமொழிப் பெயர் பரிபாடலில் இடம்பெறவில்லை. கிரௌஞ்சம் என்பது அன்றிற்பறவையினைக் குறிக்குமாதலால் அம்மலையை பறவையின் பெயர்பெற்ற மலை, 'புள்ளொடு பெயாய பொருப்பு'(பரி. 21:9, 5:9) எனத் தமிழுணர்வுடன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். கந்தவேள் விண்ணக மடந்தை தேவசேனையை மணந்தது போலவே, மண்ணக மடந்தை வள்ளியையும் மணந்தமையால் விண்ணுலகும் மண்ணுலகும் முருகனால்இன்புற்றன (பரி-19:171,14:21-22).

தலை, கைகள்

ஆறு தலைகளையும் இளங்கதிர் மண்டிலம் போன்ற முகத்தினையும் உடையவர்கந்தவேள்( பரி., 5:10) கந்தவேள் தன் பன்னிருகைகளிலும் பன்னிருபடைகளைக் கொண்டுள்ளார் (பரி.-5:63-68) அவர்தம் முந்நான்கு தோளும் முழவினை ஒக்கும் (பரி., 5:11) முருகனது பேரறிவையும், பேராற்றலையும் புலப்படுத்தவே அறுதலைகளையும், பன்னிருகை களையும் உடையவராகஅவரை உருவகஞ்செய்துள்ளனர் என்பர். (மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் தொகுதி, 2,ப.,487).

மார்பும் அடியும்

மலைபோன்ற ஆற்றலும் அகலமும் கொண்டது செவ்வேளின் மார்பு. அதன்கண் வாளால் வெட்டப்பட்ட வெற்றித் தழும்புகள்நிறைய உள்ளன(பரி., 9:27-28). சந்தனம் முதலிய நறுமணப் புகைகமழ மலர்மாலையும் முத்துமாலையும் கந்தவேள் மார்பினை அணிசெய்கின்றன (பரி.,9:28-29) தன் திருவடியில்தோலாலாகிய செருப்பினைக் கந்தவேள் அணிந்துள்ளான்(பரி., 21:3-7) மிதியடியைப் புனைந்துரைத்தல் நல்லச்சுதனார் பாடல்ஒன்றிலேதான் காணப்படுகின்றது.

ஆடையும் மாலையும்

முருகனது ஆடை செந்நிறமானது. பசும் பூணினையும், முத்தாரத்தினையும் அவர் அணிந்துள்ளார். கடப்பந்தாரும் முத்துமாலையும் அவர்தம் மார்பினுக்கு அழகு செய்கின்றன (பரி:19:97). கந்தவேளுக்கு உரியது கடம்பு ஆதலின், பெரும்பாலான புலவர்கள் அவரைக் கடப்பந்தார் சூடியவராகவே பாடியுள்ளனர்(பரி., 5:81, 21:10-11).

படைகள், கொடி, ஊர்தி

செவ்வேளைப் பற்றிப் பாடிய புலவர்கள் அனைவரும் முருகனது படைகள், கொடிடூ ஊர்தி பற்றிய சிறப்புகளை அழகுற எடுத்தியம்புகின்றனர்.

கந்தவேளைப் பாடிய புலவரெல்லாம் அவர்தம் வேற்படையினையும், சூரபதுமனை அழித்ததையும் தவறாது குறிப்பிட்டுள்ளனர். வேல் பரிபாடலில், 'சுடர்ப் படை (14-18) ஏந்திலை(17-2), எ·கு(9-79) எனப் பலபெயரால் வழங்கப்பெறுகிறது. பலதேவர்கள் வழங்கிய பதினோரு படைகளும் முருகனிடம் இருந்தன (பரி., 5:63-68) சேவலும் மயிலும் எழுதிய கொடிகளே முருகனுக்குரியன(பரி.,17-48) யானையையும்,மயிலையும் ஊர்தியாக உடையவர் செவ்வேள்(பரி., 19:28, 8-67) கடுவனிளவெயினனாரும், நல்லழிசியாரும் பாடிய பாடல்களால் முருகனுடைய யானை ஊர்தியின் பெயர், 'பிணிமுகம்' என்பதனை அறியலாம்.

வெறியாட்டு


வெறியாட்டத்தைப் பரிபாடல் விரவாகக் கூறவில்லை. கந்தவேளைப் பாடிப் பரவும் வேலனைப் பற்றிக் கூறும்போது சொல்லளவில், 'வெறியாட்டம்' பற்றிய குறிப்பு காணப்படுகிறது (பரி., 5:13-15, 9:44).

பரிபாடலும் முருகாற்றுப்படையும்

பரிபாடலின் முதற்பாடலே திருமாலைப் பற்றியதாதலின் அதற்கெனத் தனிக்கடவுள் வாழ்த்தில்லை. அதுபோன்றே பத்துப்பாட்டின் முதற்பாட்டு முருகனைப் பற்றியதாதலின் அதற்கும் தனியாகக் கடவுள் வாழ்த்தில்லை.

பரிபாடல் பாண்டிய நாட்டை மட்டும் சிறப்பித்துக் கூறுகிறது. ஆனால் முருகாற்றுப்படை தமிழகத்திலுள்ள முருகனுடைய ஆறுபடைவீகளையும் பாடிப் புகழ்ந்துள்ளது. முருகாற்றுப்படை பழமுதிர்ச்சோலையை முருகனுக்குரியது என்று விளம்பும். பரிபாடலோ அதனைத் திருமாலுக்குரியதாகக் கூறும். முருகனது பிறப்பு அவனது சிறப்புகள் முதலியவற்றை இருநூல்களும் கருத்தொப்புமையுடன் எடுத்தியம்புகின்றன. வெறியாட்டு பற்றிய செய்திகளை முருகாற்றுப்படையில் (முருகு.,218-244) விரிவாகக் காணலாம். முருகாற்றுப்படையை விட பரிபாடலே கந்தவேளினது பிறப்பை விரிவாகக் கூறியுள்ளது. முருகனின் ஊர்திகளுள் ஆடும் ஒன்றென முருகாற்றுப்படை கூறுகிறது (முருகு-210).

திருமால், சிவன், அயன் முதலிய கடவுளர்கள் பரங்குன்றத்திற்கு முருகனை வணங்கச்சென்றனர் என்று பரிபாடல் கூறும். முருகனால் சிறைப்படுத்தப்பட்ட நான்முகனைச் சிறைவீடு செய்யவே சிவன் மால், இந்திரன் முதலிய தேவர்கள் சென்றனர் என்று முருகாற்றுப்படை கூறுகிறது. முருகாற்றுப்படை மட்டுமே முருகனின் ஆறு தலைகளும், பன்னிருகைகளும் புரியும் பணிகளை விரிவாகக் கூறுகிறது. பரிபாடலுக்குப் பண் வகுக்கப்பட்டுள்ளது. முருகாற்றுப்படைக்குப் பண் வகுக்கப்படவில்லை.

பரிபாடலும் கந்தபுராணமும்

பரிபாடலும் கந்தபுராணமும் முருகனைச் சிவபெருமானின் மகன் எனக் கூறினும் முருகன் பிறந்த கதையைக் கூறுவதில் கந்தபுராணம் பரிபாடலிலிருந்து வேறுபடுகிறது. பிரமனும் தேவர்களும் கைலாயம் சென்று சிவனைக் கண்டு தம்மைச் சூரபதுமனின் கொடுமைகளினின்றும் விடுவிக்க வேண்டுமென வேண்டினர். ஐம்முகமுடைய சிவபெருமான், மேலும் ஒருமுகத்தைப் படைத்துக்கொண்டு தம் ஆறுமுகங்களிலிருந்தும் ஆறு தீப்பொறிகளை உண்டாக்கினார். பின்னர் தீக்கடவுளையும், வாயுதேவனையும் நோக்கி இப்பொறிகளைக் கங்கயிற் கொண்டு சேர்க்குமாற கூறினார். அவர்கள் சேர்க்கவே கங்கை அவற்றைச் சரவணப் பொய்கையில் சேர்த்தது. அங்கு அவ்வாறு தீப்பொறியும் ஆறுகுழந்தைகளாக மாறின.

திருமால் உள்ளிட்ட தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்க கார்த்திகை மகளிர் அறுவரும் அக்குழந்தைகளை வளர்த்தனர், உமையம்மை சரவணப் பொய்கை சென்று ஆறு குழந்தைகளையும் ஒருசேரத்தழுவியவுடன் அவை ஆறுதலையும் பன்னிருகைகளுமுடைய ஒரு குழந்தையாயின. இதுவே முருகன் பிறப்புப் பற்றிய கந்தபுராணக்கதையாகும்.

தொகுப்புரை:

  • சங்க இலக்கியங்களில் தனித்துவமாக விளங்கும் பரிபாடலின் வையைப்பாடல்களின் ஊடாக தனியே 'புனலாடல்' மட்டுமல்லாமல் அக்கால சமுதாயத்தின் வாழ்க்கைக் கோலங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக பரிபாடல் என்ற இலக்கியமும் அதன் தோற்றத்துக்கான பிரதான காரணியும் தமிழ்நாட்டின் தொன்மையான வாழ்க்கையினையும் வரலாற்றையும் பதிவுசெய்யப்படுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. நான்முகனைச் சிறைப்படுத்திய குறிப்பு பரிபாடலில் இல்லை. ஆனால் பிரணவப் பொருளை நான்முகன் அறியாததால் முருகன் அவரைச் சிறை வைத்ததாகக் கந்தபுராணம் கூறுகிறது.
     

  • சூரபதுமனைக் கொன்ற வரலாறு பரிபாடலில் காணப்படுவது போன்று கந்தபுராணத்தில் காணப்படவில்லை. முருகனது வேல் சூரனது மார்பை இருகூறாக்கியதெனவும், ஒரு கூறு மயிலாகவும், மற்றொன்று சேவலாகவும் மாறின என்றும் அவற்றை முருகன் ஊர்தியாகவும், கொடியாகவும் கொண்டான் எனவும் கந்தகபுராணம் கூறுகிறது. இச்செய்தி பரிபாடலுள் வேறாகக் காணப்படுகிறது. கந்தவேளின் ஊர்தியாக ஆடு நாரதர் செய்த வேள்ளியினின்றும் வந்தது எனக் கந்தபுராணம் கூறுகிறது.யமன் ஆட்டினை முருகப்பெருமானுக்குப் பரிசளித்தததாகப் பரிபாடல் கூறுகிறது. கந்தபுராணம் மிகப்பெரிய நூலாகும். அது வீரவாகுவின் வரலாறு, சூரபதுமனினன் தம்பி தராசுரன் பற்றிய கதை சூரனினன் பிறப்பு அவன் வேள்ளிவியில்மறைந்தது பின்னர் உடனே தோன்றியது, சுவர்க்கம், சத்தியவுலகம், வைகுந்தம் என்னும் உலகங்களுக்குச் சென்றது முருகனுக்கும், சூரனுக்கும் நிகழ்ந்த பெரும் போர் முருகன், வள்ளி, தேவசேனையாரை மணந்தது முதலியவற்றைக் கற்பனையுடன் விரித்துரைக்கும்.
     

  • சங்கஇலக்கியங்களில் மற்ற நூல்களைக் காட்டிலும் பரிபாடலிலேயே கந்தவேளைப் பற்றிய செய்திகள் மிகுதியாகக் காண்ப்படுகின்றன. பரிபாடலில் கந்தவேளைப் பற்றிய செய்திகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. பரிபாடலில் கந்தவேள் அனைவருக்கும் அருளும் தெய்வமாகவும், சூரனையழித்த தேவசேனாபதியாகவும் சித்தரிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. பரிபாடலில் பரங்குன்றம் மட்டும் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. கந்தபுராணம் கூறும் முருகனது பிறப்பு வரலாறு பரிபாடலிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகக் காணப்படுகிறது.

     

முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத்தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
கோயம்புத்தூர்- 641 035



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

சங்க இலக்கியங்களில் முருகன் பழங்குடி இன வெறியாட்டு வழிபாடு

எம். சண்முகம் பிள்ளை

 

எம். சண்முகம் பிள்ளை, 1998 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-30 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற ஸ்கந்த முருகன் முதலாம் கருத்தரங்கில் வெளியிட்டது இந்த அறிக்கை. இந்தக் கட்டுரை 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 'ஜர்னல் ஆப் தி இன்ஸ்டிடியூட் ஆப் ஏஷியன் ஸ்டடீஸ்' என்ற பத்திரிகையில் வெளியாயிற்று.

  1. பொருளடக்கம்
  2. பழங்குடியினர் வழிபாட்டு முறை
  3. முருகனின் பிறப்பு
  4. முருகனின் திருமணம்
  5. முருகனின் ஆலயங்கள்
  6. முருக வழிபாட்டின் பரிமாண வளர்ச்சி

சங்க காலத்தை சேர்ந்த மலைப்பகுதிகளில் வசித்து வந்த குறவ என்ற இனத்தவர் முருகன் என்ற பெயரே அவர்களுடைய கன்னிப் பெண்களைக் தொல்லைப்படுத்தியது (Kurinci: 174-175, Nar 288:10, Aka. 98:9-10) என்பதினால் அந்த நிலையில் இருந்து அவர்களை வெளியில் கொண்டுவர வெறியாட்டு என்ற நிகழ்ச்சி அல்லது விழா என்பதைக் கொண்டாடினார்கள். இதைப் பற்றியக் குறிப்பு அணங்குடை முருகன் (Puram: 299:6); அணங்கு பெண்கள் , நெடுவேல் அணங்குறு மகளிர் (Kurincip: 174-175) போன்ற பல இலக்கியங்களில் உள்ளன. முருகனை வேண்டி செய்யப்படும் அப்படிப்பட்ட வழிபாடுகளை முருகு ஆற்றுப்படுத்தல் (Aka. 22:11); முருகு அயர்தல் (Kurunci: 362:1); வெறி (Ain. 243:2; Nar. 273:4-5; Pari. 5:15); வெறியயார்டல் (Aka. 182:17-18); வெறியாட்டு (Tol. 63,109). என்பார்கள். ஐந்குருண்ணூறு என்பதில் நூறு செய்யுட் பத்திகளில் பத்து செய்யுட் பத்திகளில் வெறியாடலைக் குறித்து கூறப்பட்டு உள்ளது. அதைப் பற்றியும், வேலனைப் பற்றியும் நற்றிணை , குறுந்தொகை , அகநானுறு , முருகாற்றுப்படை போன்ற சங்க இலக்கியங்களிலும் கூறப்பட்டு உள்ளன.

வெறியாட்டில் ஆலய பூசாரியே வேலன் என்பவராக உள்ளார். அவர் முருகனின் வேலினை கையில் கொண்டு இருப்பார். நச்சினார்க்கினியர் என்ற பெயரில் வர்ணனை தரும் வர்ணனையாளர் கூறுவார்'' பிள்ளையின் வேலை ஒரு சின்னமாக எடுத்துக் கொண்டு வருவதினால் அவரே வேலன்''.

கழுத்தில் பச்சை நிற இலைகளினால் ஆன மாலை, நாரை, காட்டு மல்லிகை மற்றும் வெண்தழை அதாவது வெள்ளை இலைகளையும் மாலைப் போல அணிந்து கொண்டு அவர் மீது முருகன் ஆக்ரமித்துக் கொண்டு உள்ளது போல சாமியாடி நடனம் ஆடுவார். அவருடைய மார்பு முழுவதும் சந்தானம் பூசப்பட்டு இருக்கும் (Muruku. 190-193). அப்படி சாமி ஆடுபவரை படிமட்டன் என்பார்கள். அந்த விழாவைக் கொண்டாடும் இடத்தை வெறியார்களம் (Muruku. 222; Kurunci 53:3; 360:1; Aka. 98:18-19;114: 1-2) என்பார்கள். அந்த விழா நடு இரவில் வீடுகளில் உள்ள முற்றம், அதாவது வீடுகளுக்குள் உள்ள திறந்த வெளிக் கூடத்தில் நடக்கும். அதில் ஒருபுறத்தில் கடல் மண்ணைக் கொண்டு வந்து கொட்டி அலங்கரித்து இருப்பார்கள் (C Aka. 138:10; Narr. 268:8-9).

அதன் ஒரு பக்கத்தில் சேவல் கொடி நடப்பட்டு இருக்கும். அந்தக் கொடி மரத்தின் மீது மலர் மாலைகளினால் அலங்கரித்து, மணம் மிக்க ஊதுபத்திகளையும் ஏற்றி வைத்து இருப்பார்கள். அது முருகனை வரவேற்று அமரச் செய்யும் இடம் ஆகும். அவருடைய வாஹனம் மற்றும் அவரது யானையையும் சேர்த்து போற்றி புகழ்ந்து இசைகள் இசைக்கப்படும். - கடம்பு அமர் நெடுவேல் (Perum.75), புலவரை அறியட புகழ் புட்ட கடம்பு அமர்ந்து (Pari. 19.2).

அங்குள்ள மரத்தில் கட்டப்பட்டு உள்ள ஆட்டை வெட்டி அதன் ரத்தத்தை தினை என்ற தானியத்துடன் கலந்து, அதை பரப்பி வைத்து, பலி எனும் பெயரில் மாமிசத்தைப் படைப்பார்கள். பாடல்களை பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் முருகனைப் போற்றி பாடுவார்கள். மலர்களைத் தூவியும் அவரை வணங்குவார்கள் (Narr. 47:9-10: 173:1-4;322:10-12; Aka. 22:8-11; 98:18-19114:1-3; 138:7-13; 187:17-18).

குறவாப் பெண்கள் நடத்தும் வெறியாட்டு நிகழ்ச்சியைப் பற்றி விரிவாக முருகாற்றுப்படையில் கூறப்பட்டு உள்ளது. அவற்றைத் தவிர மேலும் சில விளக்கங்களும் அதில் தரப்பட்டு உள்ளன. அந்த நிகழ்ச்சி நடைபெறும் இடமோ அச்சம் தரும் வகையில் இருக்கும். முருகனை அழைக்கும்போது அந்த இடத்தை நன்கு அலங்கரித்து வைத்தும், பல விதமான உணவுகளைக் கொடுத்தும், இசைகளை இசைத்தும் வழிபாடுகள் நடைபெறுகின்றன். சம்பிரதாயமாக சேவல் கொடி ஏற்றப்படுகிறது, அதன் மீது நெய்யும், வெள்ளை எள்ளையும் கொண்டு திலகம் இடுகிறார்கள், மந்திரங்களை கூறிக் கொண்டே பூக்களால் அர்ச்சனை செய்கிறார்கள்.

ஒவ்வொருவரும் இரண்டு வண்ண உடைகளை ஒன்றன் மீது ஒன்றாக அணிந்து கொள்கிறார்கள். கை மணிக்கட்டில் காப்பு எனப்படும் சிவப்பு நூல்களை கட்டிக் கொள்வார்கள். இரண்டு கொழுத்த ஆடுகளை வெட்டிய ரத்தத்தை புதிதாக சமைத்த அரிசி உணவுடன் கலந்து அதை பலி எனும் பெயரில் படைப்பார்கள். அதைத் தவிர பல்வேறு வகைகளான அரிசி உணவையும் தருவார்கள். செய்வரளி மற்றும் நல்ல மணமுள்ள பூக்களைக் கொண்டு பின்னிய மாலையை அனைத்து இடங்களிலும் கட்டித் தொங்க விடுவார்கள். அந்த மலைப் பகுதியில் உள்ளவர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும், பசி பட்டினி இல்லாமல், எந்த விதமான நோய்களும் இல்லாமல் இருக்க வேண்டும், நல்ல மழை பெய்ய வேண்டும், நிலவளம் செழுமையாக இருக்க வேண்டும் என்றெல்லாம் அவரிடம் வேண்டிக் கொள்வார்கள்.

ஒரு பக்கத்தில் நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே கொட்டும் நீரின் ஓசை கேட்டபடி இருக்க, இசைக் கருவிகளைக் கொண்டு இசைக்கப்படும் பாடலும் சேர்ந்து அந்த இடத்தை ரம்யமான சூழ்நிலைக்கு கொண்டு செல்லும். அவரோடு சேர்த்து பிணிமுகம் எனப்படும் யானை, மற்றும் அவருடைய வாகனமான மயிலையும் வணங்குவார்கள்.

வேலனும் அந்தக் குறவாக்கள் மற்றும் , அங்குள்ள இளம் பெண்களுடனும் சேர்ந்து நடனம் ஆடுவார். அவர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு அங்குள்ள வேங்கை மர அடிக்கு அழைத்துச் சென்று, அங்கும் கள்ளைக் குடித்து விட்டு ஆடுவார். அங்குள்ள ஆண்களும் பெண்களின் கையைப் பிடித்துக் கொண்டு தோண்டக பறை என்ற மத்தள இசைக்கு ஏற்ப ஆடுவார்கள் (Muruku. 197). குரவை நடனம் குறித்து பல இடங்களிலும் கூறப்பட்டு உள்ளது (Muruku. 190-197; Malaipatu. 318-322; Narri. 276:8-10; Puram.129:1-3). அங்குள்ளப் பெண்களுடன் பாறைகள் மீது சென்று நடனம் ஆடுவது முருகனுக்கு பிடித்தமானது. (Muruku.190-217).

மேலே குறிப்பிட்டுள்ள முறையில் செய்யப்படும் வழிபாடு முருகனை மலைவாழ் மக்கள் வணங்கிய விதத்தை எடுத்துக் காட்டுகிறது. மற்ற சமயங்களை சேர்ந்தவர்களும் முருகனை அங்கு வந்து வணங்குவார்கள். அவர்கள் அவருக்கு தினை , மலர்கள், பலியாடுகள் போன்றவற்றைத் தந்து சேவல் கொடி ஏற்றி அதை முருகனுக்கு அற்பணிப்பார்கள்.

சமிஸ்கிருத வழிமுறையான பிராமண வழிபாட்டு

உடலில் உடுத்திய ஈரத் துணியுடன், இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டு, கும்பிட்டவாறு, ஆறு அட்ஷர மந்திரத்தை உச்சரித்தபடி வாசனை மலர்களை தூவி முருகனை பிராமணர்கள் வழிபட்டார்கள். (Muruku. 184-189). மேரு மலைப் போல உள்ள திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் பாண்டிய மன்னனும் தனது சுற்றார் மற்றும் பிற மக்களுடன் வந்து முருகனை வணங்குவார். முருகனின் ஆலயத்தைக் கோட்டம் என்று, அதாவது முருகன் கோட்டம் என்று கூறுவார்கள் (Puram. 299:6).

மதுரையில் இருந்து பரம்குன்றத்துக்குச் செல்பவர்கள் பூஜைக்கான அனைத்துப் பொருட்களையும்- சந்தனம், ஊதுபத்தி, காற்றினால் அணையாமல் இருக்கும் தீபம், மணமுள்ள மலர்கள், முளவம் , மணி , கயிறு , மயில் , கோடரி , பிணிமுகம் போன்றவற்றை தம்முடன் எடுத்துச் செல்வார்கள் (Paripatal.17:1-8). பரிபாடலில் உள்ள பதினேழாம் செய்யுள் முருகன் அமர்ந்துள்ள மரமாக கருதப்படும் கடம்பு மரத்தையும் அவர்கள் வணங்குவார்கள் என்று கூறி உள்ளது (Kurinci. 176-177). காற்றோடு சேர்ந்து வரும் ஊதுபத்தி மற்றும் மலர்களின் ரம்யமான வாசனை முருகன் எங்கெல்லாம் உள்ளாரோ அங்கெல்லாம் அவரை தொடர்ந்து சென்று கொண்டிருக்கும் (Paripatal.14:19-20; 18:52-53; 21:50-51). பக்தர்கள் அவருடைய பல அவதார மகிமைகளைப் போற்றிப் பாடுவார்கள். தலைக்கு மேல் கைகளைக் தூக்கி கூப்பி வணங்குவதும், குனிந்து அவர் பாதங்களைத் தொட்டும், அவருக்கு முன்னால் பூமியில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவதும், அவரை வார்த்தைகளால் போற்றி துதித்தபடிம் வணங்குவார்கள். அவர்கள் கூறும் மந்திரங்களை முருகாற்றுப் படையில் குறிப்பிட்டு உள்ளார்கள் (253-276).

பலரும் அவர் ஆலயங்களுக்கு சென்று கொண்டு இருந்தாலும், அனைவருமே முருக பக்தர்கள் என்று கூற முடியாது. கோபமுள்ளவர்கள், தீய எண்ணம் கொண்டவர்கள், நல்ல பாதையில் செல்லாதவர்கள், தம்முடைய சுகத்தையே பார்த்துக் கொள்பவர்கள், மற்றவர்களைப் பற்றிக் கவலைப் படாதவர்கள் போன்றவர்களினால் அவர் அருகில் செல்ல முடியாது. உண்மையான பக்தர்கள் அவருடைய அருளை மட்டுமே எதிர்பார்ப்பார்கள்.

முருகனின் பிறப்பு

சங்க இலக்கியத்தில் முருகன் பிறப்பைக் குறித்து சிறிதளவே செய்திகள் உள்ளன. பரிபாடல் மட்டுமே முருகனின் பிறப்பைக் குறித்து விவரமான செய்தியை வெளியிட்டு உள்ளது (Paripatal. 5:21-54). சிவபெருமான் உமையுடன் உறவு கொண்டபோது, அவரது விந்து வெளியில் விழுந்து ஆறு பொறிகளாக விழுந்து, இந்திரனின் முயற்சியினால் ஆறு முனிவர்களின் உயிர் நிலையில் சென்று கலந்து , அவர்களுடைய ஆறு மனைவிகளின் கருவில் தங்கியது. அதன் பின் அந்த ஆறு பெண்களும் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்து அவற்றை ஆறு தாமரை மலர்களில் வைத்து இமயமலையில் இருந்த தாடகத்தில் கொண்டு போய் வைத்தார்கள். இந்த செய்தியை சங்க இலக்கியங்கள் சிலவற்றில் காண முடிகின்றது (Muruku. 253-255; Puram. 458-459; Kali. 81-9).

முருகன் பிறந்த அன்றே இந்திரன் முருகனுக்கு எதிராக மாறி அவற்றைக் கொல்வதற்கு தனது வஜ்ராயுதத்தை ஏவினார். அவ்வளவுதான் அந்த ஆறு குழந்தைகளும் உடனே ஒன்றாகி ஆறு முகங்களும், பன்னிரண்டு கைகளையும் கொண்டவராகியது. இந்திரனுக்கு எதிராக ஒன்று சேர்ந்த தேவர்கள் அந்த குழந்தைக்கு தமது உடலின் ஒரு பாகத்தை எடுத்து ஆயுதமாக்கிக் கொடுத்தார்கள். அவையே ஆடு, மயில், சேவல், வில், வாள், மரன், வேல்கம்பு, கோடரி, மறு, கண்நாழி, பூக்கள், மற்றும் மணிகள் என ஆயின. அவற்றை தம்முடைய பன்னிரண்டு கைகளிலும் ஏந்திக் கொண்ட முருகன் கம்பீரமாகக் காட்சி தந்தார் (Paripatal.5:55-70).

தேவர்களின் படைத்தலைவரான முருகன், தேவர்களுக்கு தொல்லைக் கொடுத்து வந்த அனைத்து அசுரர்களையும் அழித்தார் (Kurun.1-2; Muruku. 59-60; Paripatal.1:25-28;5:7). அவர்களில் சூரனை அழித்ததையே அனைவரும் உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள். சூரன் தன்னை ஒரு மாமரமாக மாற்றிக் கொண்டு கடலுக்குள் போய் ஒளிந்து கொண்டு முருகனுடன் சண்டைப் போட்டான். ஆனால் முருகனோ அந்தக் கடலுக்குள் புகுந்து அவனை அங்கேயே அழித்தார் (Muruku.45-46; 50-60; 275). சூரனை அழித்த விவரம் புறம் (23:3-7), பட்டிருப்பட்டு (11:56), பெரும்பனாறுப்படை (456-460), குறுந்தொகை (1:2); கலித்தொகை (27:15-16; 93:25-27; 104:13-14), பரிபாடல் (1:5; 9:70; 14:18; 18:3-4; 19:101; 21:8;28-29) போன்றவற்றில் உள்ளது. அடுத்து குறிப்பிட வேண்டியது முருகன் தனது வேலினால் அழித்த குருஞ்சா எனும் மலையின் கதை ஆகும் (Muruku. 266; Paripatal.8:29; 19:29; 19:26, 102-103). அந்த காலங்களில் மலைகள் பறந்து திறந்துள்ளதாம். அப்படி பறந்து கொண்டு இருந்த இந்த மலை நாவலன்டிவு என்ற இடத்தின் மீது சென்று கொண்டு இருந்தபோது முருகன் அதை தன்னுடைய வேலினால் குத்தி கீழே விழ வைத்தார்.

முருகனின் திருமணம்

தேவர்களை துன்புறத்தி வந்த சூரனையும், குருஞ்சா எனும் மலையும் முருகன் அழித்ததினால், அவருக்கு தனது மகளான தெய்வானையை இந்திரன் மணம் செய்து கொடுத்தார் (Muruku. 6,175; Paripatal. 9.9, 58). அவளை தேவசேனை என்றும் அழைத்தார்கள். ஆகவேதான் முருகனை மருவில்கர்பின் வனுடல் கணவன் (Muruku. 6) என்கிறார்கள். அதன் பின் அவர் பரம்குன்றத்தில் வள்ளிநாச்சியாரையும் மணந்து கொண்டார் (Muruku. 101-102; Paripatal. 8:69; 9:67; 14:21-22; 19:95). அந்த இரண்டுமே இரு வகைகளிலான திருமணம். முதலாவது நடந்தது சமிஸ்கிருத முறையிலான (பிராமண முறை) திருமணம். இரண்டாவதோ பண்டைய கால திராவிட இன - களவு மற்றும் கற்பு எனும் தமிழ்த் திருமணம். தமிழர்களில் களவு மற்றும் கற்பு என்பது நிலை மாற்றத்தினால் ஏற்பட்ட நிச்சயிக்கப்பட்ட திருமணத்தைக் குறிக்கின்றதோ? இங்கு குறிப்பிடப்பட்டு உள்ள களவு எனும் நிலை சற்று வித்யாசமானது. அது பற்றி சங்க இலக்கியங்களில் நிறைய விளக்கம் தரப்பட்டு உள்ளது. அந்த திருமணத்தை ஏற்க முடியாமல் போன தேவசேனை தாங்க முடியாமல் அழுதாள். அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் வெள்ளம் அப்போது மழையாக பரங்குன்றம் முழுவதும் பெய்ததாம் (Paripatal. 9:8-11).

முருகனின் ஆலயம் உள்ள இடங்கள்

சங்க இலக்கியங்களில் முருகனின் முக்கியமான ஆலயங்கள் உள்ள இடங்களும் குறிப்பிடப்பட்டு உள்ளன. அவை : திருப்பரங்குன்றம் , திருச்சிரளைவாய் , திருவாவினன்குடி , திருவேரகம் , குன்றுதோன்றல் மற்றும் பழமுதிர்சோலை போன்றவை. முருகாற்றுப்படையில் முருகனின் புகழ்பெற்ற படைவீடுகளைப் பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த ஆறு படைவீடுகளில் குன்றுதோன்றல் மற்றும் பழமுதிர்சோலை என்பன எந்த இடம் எனக் கூறவில்லை. ஆனால் அவை உள்ளப் பகுதியில் உள்ள அனைத்து தோப்புக்கள் மற்றும் பாறைகள் போன்ற இடங்களில் முருகன் அமர்ந்திருந்ததாகவே குறிப்பிடுகின்றன. அந்த இரு பகுதிகளிலும் இருந்த அனைத்து இடங்களும் அவர் இருந்த இடங்களே என்று கூறி காடும் காவும் என்று அந்த இடங்களைப் பற்றிக் குறிப்பிட்டு கூறி உள்ளன (Muruku.223). இந்த இடங்களில் மலைகளில் இருந்து இயற்கையாகக் கொட்டிய நீர்வீழ்ச்சியின் சப்தத்தோடு இணைந்து குருவா இனத்துப் பெண்களுடன் முருகன் வெறியாட்டு என்ற நடனத்தை ஆடினார்.முருகன் நிரந்தரமாக உள்ள இடங்கள் முருகு அமர் மாமலை (Ain. 306:4); செய்குன்றம் (kurun.1-3); பிராங்கு மலை மிமிசைக் கடவுள் (Kurinci. 208-209) போன்றவை.

முருகாற்றுப்படயைத் தவிர திருப்பரம்குன்றம், திருச்சிரளைவாய் என்ற இரண்டையும் பற்றி பல சங்க இலக்கியங்களில் கூறப்பட்டு உள்ளன. திருப்பரம்குன்ற ஆலயம், அதன் திருவிழாக்கள் மற்றும் பிற செய்திகள் என அனைத்தும் பரிபாடலில் கூறப்பட்டு உள்ளன (Paripatal. 6:69-75; 95; 8:11-16; 21:15; Paritirattu 17:1-2;). அதை எழுதிய நலன்துவனாதர் என்ற புலவர் அந்த மலையின் பெருமையை கூறி மகிழ்கிறார் (Paripatal. 6, 8, 11 ,20).

மதுரை மருதநீலகண்டனார் கீழ் உள்ளவாறு கூறி உள்ளார் (Akan. 59: 10-12)

&சுர்மருங்கு அற்ற சுடரிலை நெடுவேல் சினம்மிகு முருகன் தன்பரன் குன்றத்து ஆண்டவன் பாடிய கண்டு கேளு நெடுவரை .

அகநானுறு (59: 10-12) மற்றும் கலித்தொகை (Kalittokai. 27:16) இதை வேலன் குன்று எனக் கூறி உள்ளன.

திருச்சிரளைவாய் பற்றியக் குறிப்பு அகநானுறு (Akam. 266:20-21) மற்றும் புறநானுறு (Puram. 55:17-21) போன்றவற்றில் உள்ளன.

சிறுபாணார்படை வேலூர் என்பது வேல் முருகன் என்பதில் இருந்தே வந்தது என்று கூறி உள்ளது.

திறல் வேல் நுடியில் கேனி
விரல் வேல் வென்றி வேலூர்
இதன் அர்த்தம்:
''ஈட்டி முனைப் போல, தாடகத்தில் மலர் இருக்க, வல்லமை வாய்ந்த ஈட்டியும் வெற்றியுமான வேலூர்'' (சிறுபாணார்படை: 172-173)

நச்சினார்கினியர் என்பவர் இந்த நகருக்கு இந்தப் பெயர் வந்ததின் காரணத்தை ஒரு கிராமியக் கதை மூலம் கூறி உள்ளார்.

முருகன் கையில் வலியுடனையாக்கிய வேலின்ஈட்டி போலே கேனி பூக்கப்பட்ட வெற்றியையுடைய வேலாலே வெற்றியையுடைய வேலூர் என்றது ; இதன் அர்த்தம்: முருகனின் கையில் உள்ள வலிமையான ஆயுதமான வேலைப் போலவே அந்த தாடகத்தில் பூத்த மலரும், அந்த ஊருக்கு வெற்றியைத் தர, அந்த வேலின் பெயராலேயே வேலூர் என்றாயிற்று.

நல்லியக்கோடன் தன் பகைமிகுடிக்கு அஞ்சி முருகனை வளிப்பட்டவழி அவன் இக்கேனியிர் புவி வங்கிப் பகைவரை எரி என்று கானநீர்குறி அதிர்ப்புவைத்தான் வேலாக நிருமிட்டதொரு கதை கூறிறு இதனாலே வேலூர் என்று பெயராயிற்று .

மேல் உள்ளத்தின் கதை இது: ஒருமுறை நல்லியக்கோடன் தனது எதிரிப் படையினரைக் கண்டு துக்கசாகரத்தில் முழுகி முருகனின் அபயக் கரத்தைக் கேட்டான். அவன் கனவில் தோன்றிய முருகன் அங்குள்ள குளத்தில் இருந்து ஒரு மலரைப் பறித்து அதை எதிரிகள் மீது வீசி அவர்களை அழிக்குமாறு கூறினார். அந்த மலரே முருகனின் வேல்கம்பாயிற்று. அதனால்தான் அந்த ஊருக்கு வேல் + ஊரு =வேலூரு என்றப பெயர் வந்தது.

மூன்று நிலைகளில் வளர்ச்சியுற்ற முருக பக்தி

சங்க இலக்கியத்தில் மூன்று நிலைகளில் படிப்படியாக வளர்ச்சியுற்ற முருக வழிபாடு பற்றி விவரித்து உள்ளார்கள். அப்போது முருகனை வேலன் என அழைத்தார்கள். அவர் அசைவ உணவை உட்கொண்டவர்களின் கடவுள். ஆட்டு ரத்தத்துடன் கலந்த தினை எனப்பட்ட தானியத்தை அவருக்கு படைத்தார்கள். அவருக்கு நிலையான ஆலயமோ இல்லை வழிபாட்டு இடமோ இல்லாமல் இருந்தது. மலைகளிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் அதாவது குன்று மற்றும் பழமுதிர்சோலைப் போன்ற பகுதிகளில் வசித்து வந்த குரவா எனப்பட்ட இனத்தவரின் குடும்பங்கள், தமது வயது வந்த பெண்ணின் அனக்கு என்ற காதல் எண்ணத்தினால் ஏற்படும் உடல் மெலிவு வியாதியைத் தணிக்க, வெறியாட்டு என்ற வழிபாட்டு விழாவை நடத்தி வந்தார்கள். இரண்டாவது வளர்ச்சி திருமுருகாற்றுப் படையில் கூறி உள்ளதைப் போன்ற ஆறுபடை வீடுகள் என்ற பெயரில் இருந்த ஆலயங்கள் முருகனின் தங்கும் இடமாக அமைத்தது . அப்படி அமைந்த ஆலயங்களில் பிராமணர்களும் வந்து வணங்கத் துவங்க அவர்களது செல்வாக்குகளினால் மேலும் மேலும் பலரும், பல இடங்களிலும் இருந்தும் வந்து முருகனை வழிபடத் துவங்கினார்கள். மூன்றாவது பரிமாண வளர்ச்சி பரிபாடலைப் போன்றது. அதில் வெறியாட்டு போன்ற விழாக்கள் தவிர்க்கப்பட்டு முற்றிலும் சமிஸ்கிருத்த மொழியிலான மந்திரங்களை ஓதி செய்யப்பட்ட பூஜை முறைகள் துவங்கி, முருகனை சைவ உணவு உட்கொள்ளும் பக்த நிலைக்கு ஆளாக்கியது.

ஆனால் இன்றும் தமிழ்நாட்டு கிராமப்புறங்களில் உள்ள கிராம தேவதைகளின் ஆலயங்களில் முன்னர் இருந்த வெறியாட்டு போன்ற விழாக்கள் நடைபெற்று வருகின்றன. முன்னர் ஒரு குடும்ப விழாவாக நடைபெற்ற வெறியாட்டு விழாக்கள் கிராம தேவதை விழாவாக கடைபிடிக்கப்பட்டாலும் பல இனத்தவரும் தாம் வணங்கும் தத்தம் தெய்வங்களை வழிபாட்டு அதற்கு எடுக்கும் விழாவாக அதை நடத்துகிறார்கள். அந்த கிராம தேவதை விழாக்களை நடத்துபவர்கள் பெரும்பாலும் அசைவ உணவை உண்பவர்கள் என்பதினால் அந்த விழாக்களில் ஆடு மாடுகளின் பலியும் தரப்படுகின்றது. ஆடுகளின் ரத்தம் கலந்த உணவுகளும் நெய்வித்தியமாக அங்கு படைக்கப்படுகின்றது. அந்த விழாக்களில் தேவதைகளை ஆடம்பரமாக வண்ண வண்ண உடைகளில் அலங்கரித்து, ஆலய முகப்பில் பெரிய பந்தல்களை அமைத்து, மாலைகளைப் போட்டு விழா எடுப்பார்கள். அந்த விழா வெறியாடலைப் போலவே இருக்கும். கிராமிய தேவதைகளின் கைகளில் பல விதமான ஆயுதங்கள் முக்கியமாக வேல் மற்றும் திருசூலம் போன்றவைக் காணப்படும். கொமரட்டடி எனப்படுபவர் விசேஷமான கச்சை மற்றும் மணிகளைக் கோர்த்த கலால் போன்றவற்றை உடுத்திக் கொண்டு நடனம் ஆடும்போது (Muruku. 208: Kaccinan kalalinan) சாமியாடியாகிறார். கொமரட்டடி எனப்படுபவர் வெறியாடலில் உள்ள வேலனைப் போன்றவர். சுற்றி உள்ள கூட்டத்தினர் எழுப்பும் இசைக் கருவிகள் மற்றும் அவர்கள் பாடும் பாடலுக்கு ஏற்ப நடனம் ஆடுவார். அப்போது சாமி ஏறும் அவர் பெரியவர், சிறியவர் என்ற பேதம் இன்றி அனைவருக்கும் ஆரூடம் கூறியும், ஆசிர்வாதம் செய்தும், திருநீறு கொடுத்தான் தமது சாமி ஏறிய நிலையைக் காட்டுகிறார்.

திருமுருகாற்றுப் படையில் கூறப்பட்டு உள்ள இரண்டாவது சடங்கு சற்று மாறுதலானது. அதை இயற்றிய நக்கீரர் புதிய இலக்கிய நடையான ஆறுபடை-திருமுருகாற்றுப் படை என்பதைக் காட்டி உள்ளார். ஆறுபடை என்பது முருகனின் ஆறு வழிபாட்டுத் தலங்கள் . ஆகவே நக்கீரர் அவரவருக்கு பிடித்த அந்த தலங்களுக்குச் செல்ல வழிகாட்டி உள்ளார். உண்மையில் முருகன் நிலையாக தங்கும் இடங்கள் அந்த ஆறு வீடுகளில் நான்கில் மட்டுமே. திருப்பரங்குன்றம் , திருச்சிரளைவாய் , திருவாவினன்குடி மற்றும் திருவேரகம் என்பன அவை. குன்றுடோரடல் மற்றும் பழமுதிர்சோலை அதாவது அந்த இரண்டு இடங்களை சுற்றி உள்ள மலையும், அதை சார்ந்த இடங்களிலும் இருந்த சோலைகள் மற்றும் பாறைப் பகுதிகள் வெறியாடல்கள் நடைப்பெற்ற இடங்கள் ஆகும். ஆராய்ச்சியாளர்கள் முருகன் எந்த இடத்தில் எப்படிப்பட்ட தன்மையில் நடனம் ஆடினார் என்பதைக் கண்டறிய முயல்கிறார்கள். அவர் ஒவ்வொரு முகபாவத்தோடும் முருகன் ஆடிய வெறியாட்டு சோலைகள், பாறைகள் என பலவும் பல இடங்களிலும் உள்ளன.

மூன்றாவது வழிபாட்டு முறை முற்றிலும் சமிஸ்கிருத மொழியில் நடைபெறுவது. தேவர்களை துன்புறுத்தி வந்த சூரனை அழித்து, பறந்து வந்து கொண்டிருந்த குறுன்ச்சா மலையையும் தனது வேலினால் உடைத்து தேவர்களை முருகன் காப்பாற்றினார். அதுவே சமிஸ்கிருத மொழியிலான வழிபாட்டு நிலைக்கு முருக வழிபாட்டு முறையைக் கொண்டு சென்றக் கட்டம். அந்த வெற்றியைக் கொண்டாட இந்திரன் தனது மகளான தெய்வானையை முருகனுக்கு மணமுடித்துத் தந்தார். அதற்குப் பின்னரே முருகனின் வாழ்வில் வள்ளி வந்தாள். ஆனால் தெய்வானையினால் வள்ளியின் திருமணத்தை ஏற்க முடியவில்லை என்பதினால் திருமண மண்டபத்தின் மேல் கூரையை கிழித்து பரம்குன்றத்தில் பெரும் மழையைப் பொழிவித்தாள். பரிபாடலில் வெறியாடலைக் குறித்து எந்த செய்தியும் இல்லை. தமிழர்கள் தெய்வானையின் திருமணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால் பண்டைய தமிழர்கள் கலாச்சார முறையில் நடைபெற்ற வள்ளி- முருகனின் களவு மற்றும் கற்பு எனும் திருமணமே பெரிதும் போற்றப்பட்டு வந்துள்ளது. இன்றைக்கும் அந்த கருத்தைக் கொண்டு நடைபெறும் நாடகங்கள்- சங்கரதாஸ் ஸ்வாமிகள் என்பவர் துவக்கி வைத்தது- தமிழ்நாட்டில் பல இடங்களிலும் பெரும் வரவேற்புடன் நடைபெறுகின்றன. ஆனால் சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளதைப் போன்றக் காட்சியில் களவு காட்சிகள் அமைந்திருக்கவில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

Murugan and Valli

by Kamil V. Zvelebil

from Tiru Murugan (Madras: International Institute of Tamil Studies, 1981) p. 40-46

The story of Murugan's courtship and his union with the daughter of the hunters, Valli, is the most important of all Tamil myths of the second marriage of a god. In the Sanskrit tradition, Skanda is either an eternal brahmacārin (bachelor) or the husband of a rather colourless deity, Devasena, the Army of the Gods. In Tamil, in contrast, the earliest reference to a bride of Murugan is to Valli and there can be no doubt whatsoever that Valli is the more popular and more important of Murugan's two brides. Hence, I do regard the lovely myth of Murugan and Valli as an indigenous-autochthonous myth, a Dravidian myth; it also contains some of the oldest indigenous fragments of myth to survive, and some of the most ancient conceptual and ideological apparatus of the Tamils.

The standard version, considered by Tamil devotees of Murugan as canonical and definitive (although not the only one current!), is found as the very last (24th) canto of the sixth book of Kacciyappa's Kantapuranam (composed around 1350 AD in Kanchipuram); entitled Valliyammai tirumanappasalam, it has 267 stanzas. Here is its brief summary:

There is a mountain called Valli Malai or Valli Verpu, not far from the village of Merpati, in the Tontainatu country. In a village beneath the hill lived a hunter called Nampi; all his children being boys, he longed for a little girl. On the mountain slope, an ascetic by name of Śivamuni was engaged in austerities. One day a gazelle went by, and the ascetic was aroused by its lovely shape; his lascivious thoughts made the gazelle pregnant. The daughter of Mal incarnated in the embryo.

In due time, the gazelle gave birth to a girl in a pit dug out by the women of the hunter-tribe when they searched for the tubers of edible yam (valli). The female deer, having round out that she had given birth to a strange being, abandoned the child which was discovered by the hunter-chief Nampi and his wife. Overwhelmed with joy, they took the little girl to their hut and named her Valli.

Murugan assumed the form of a hunter and, as soon as he arrived at Valli's field, he addressed the lovely girl
Murugan assumed the form of a hunter and, as soon as he arrived at Valli's field, he addressed the lovely girl.

When Valli reached the age of twelve, she was sent to the millet field - in agreement with the custom of the hillmen – to guard the crop against parrots and other birds, sitting in an elevated platform called itanam (paran), and chasing the birds and other beasts away. The sage Narada, who visited Valli-malai and saw the girl, went to Tanikai to informed god Murugan about Valli's exceptional beauty and her devotion to the god of the hunters.

Murugan assumed the form of a hunter and, as soon as he arrived at Valli's field, he addressed the lovely girl enquiring after her home and family. However, at that moment Nampi and his hunters brought some food for Valli (honey, millet flour, valli roots, mangoes, milk of the wild cow) and Murugan assumed the form of a tree (venkai, Pterocarpus bilobus).

Old rogue Murugan

When Nampi and his company disappeared, the god reappeared in human form, approached Valli and told her that he would like to love her. Valli was shocked, lowered her head, and answered that it was improper for him to love a woman from the low tribe of the hunters. At that moment they heard the sound of approaching drumming and music. Valli warned Murugan that the hunters are wild and angry men, and the god transformed into an old Saiva devotee. Nampi and his hunter's took his blessings and returned home.

The old man asked Valli for food, and she gave him some millet flour mixed with honey. Then she took him to a small forest pond, where she quenched his thirst from the palms of her hands. Then he told her, "Now that you have satisfied my hunger and my thirst, do satisfy my love for you." Valli reproached him, and wanted to return to her field.

At that moment, Murugan invoked the help of his brother Vināyaka who appeared behind Valli in the shape of a frightening elephant. The terror-stricken girl rushed into the arms of the Saiva ascetic for protection; he dragged her into a thicket and while embracing her revealed his real form, with six heads, twelve arms, and seated on his pea****.

Old Man Murugan 'saves' Valli from rogue elephant Ganapati
At that moment, Murugan invoked the help of his brother Vināyaka who appeared behind Valli in the shape of a frightening elephant. The terror-stricken girl rushed into the arms of the elderly ascetic for protection. Painting from Tiruttani Devasthanam.

 

Carried away by this vision of her favourite god, Valli worshipped him and he told her that she was, in fact, the daughter of Tirumal. Valli complied with his wish, and they loved each other.

A female companion of Valli questioned the girl about her absence and the striking change in her appearance, but Valli answered evasively. Soon after that, Murugan, again in the shape of a hunter, appeared in front of the two girls, and the companion observed that Valli and the hunter exchanged amorous looks. Therefore, she demanded that the hunter remove himself. He then admitted his love for Valli and he warned the companion that, if she would not help them to meet and enjoy their love, he would resort to the old custom of matal or riding the toy-horse in the village itself. The companion agreed to Murugan's request.

As the harvesting time approached, the tribesmen called Valli back to the hamlet and the lovemaking was over. With a heavy heart she returned to the house of Nampi. Her clandestine love affair (kalavu) with the god ended. Her mother noticed Valli's unhappiness and invited soothsaying women who stated that Valli was possessed by the cūr of the slopes and that a ceremony in honour of god Murugan should be organized.

Murugan went to the millet field and, not finding Valli there, he came, at midnight, to the hamlet, and with the aid of her companion, Valli and her divine lover eloped.

Next morning Nambi's wife discovered Valli's disappearance. The furious hunter-chief organized a party of hillmen in pursuit of the fugitives. When they reached them, they discharged their arrows at Murugan, but the divine **** of the god crowed and the hunters fell dead. Valli lamented their death, but Murugan took her along. On their way they met Narada who explained to Murugan that he should have obtained the consent of the parents. The god therefore returned and ordered Valli to resuscitate the hunters which she gladly did. Murugan then assumed his true divine shape. Amazed and awed, the hunters worshipped him and begged him to return to the hamlet to be married in accordance with the custom of the tribe.

The whole village rejoiced. The young pair was seated on a tiger-skin. Nampi placed the hand of Valli into the hand of Murugan and declared them married while Nārada assisted. At that moment, the gods appeared in the air and blessed everyone. Nampi then offered a feast - plenty of honey, millet flour and jungle fruits. After a short stay at Ceruttani (Tiruttani), Murugan and Valli returned to Skandagiri where they were welcomed by Devasena.

What is so very thrilling in this story is the fact that almost step by step its structural slots and their fillers are derived from elements of the oldest Tamil tradition. It is the classical Sangam age all over: the heroine born among the hillmen; at the age of twelve, sent to guard the millet field sitting in the paran; the appearance of the god -- i.e. the talaivan, the hero, and his attempts at immediate, clandestine love-making (kalavu); the role of the toli -- the companion of the heroine; the motif of riding the matal-horse; the kaamanoy -- love sickness of Valli due to separation; the soothesaying women, and the veri dance of the velan, arranged to appease Murugan and dispell cūr; the motif of elopment of lovers. It is quite obvious that this story is purely and totally Tamil.

I share fully the view that religious phenomena can be best understood on their own plane of reference, that they deserve to be interpreted in religious terms, and that the most fruitful approach to the study of a deity and its myths should be phenomenological and structural: an attempt to apprehend a vision of reality that persists throughout the history of a deity. However, any religious phenomenon is also a psychological, social, and historical phenomenon. A historical-evolutionary study, even a historical-evolutionary interpretation of a deity and its myths is necessary, too, at least at some preliminary stage of its investigation.

Valli

First then, the name of Valli. The Tamil etymology is a simple and straightforward Dravidian derivation. According to an ancient and persistent tradition, the name of the person is derived from the name of the plant, valli DED 4351, found in Ta. Ma. Ka. Kod. Tu. and Te. and a number of tribal languages. The creeper belongs to the Dioscoreaceae. It has a 'winged' stem, and both wild and cultivated varieties; the cultivated varieties have edible bulbous roots. It is mentioned in the glossary of the 99 plants typical for the kurinci region found in Kurincippattu ascribed to Kapilar (ca. 140-200 AD).

In the earliest Tamil texts, the term valli in its meaning of this creeping plant occurs at least 18 times. The Skt. valli, also valli 'creeper, creeping plant' is almost without doubt derived from Dravidian, since the Sanskrit term oc curs relatively late, has no plausible Aryan etymology, and refers to a plant typical for tropical India.

In Dravidian, the item is found in relatively 'distant' languages like Tamil and Telugu, and in early records, referring to a plant used almost prehistorical tropical forest cultivation. According to the myth, Valli the person was so called because she was found in a pit dug out while gathering the edible tubers of the valli-plant. Valli as a plant is mentioned in Akam 52.1 and 286.2, Puram 316.9, Nar. 269.7 and Parip. 21.10. The roots (kilanku) of valli are mentioned explicitly in Puc. 109.6 and Kal. 39.12. In Ainkur. 250 a vague but probably significant connection is mentioned between the worship of Murugan and the valli plant.

The earliest references to Valli the person, the beloved and consort of Murugan, are relatively few, though increasingly important. In their probable time sequence they are found in Nar. 82.4, Tirumuruk. 102, Parip. 8.69, 9.8, 9.67, 14.22 and Cilap. 24.3. Thus we have all in all only seven relatively early (i.e. pre-bhakti, pre-sixth Cent. AD pre-Pallava) references to Valli as the god's beloved and/or spouse.

One of the references belongs to the earliest strata of Tamil texts: Narrinai 82.4. The poem belongs to the kurinci sub-type of akam poetry and may be dated to the 2nd-3rd Cent. AD. It says: niye/ennul varutiyo nalnataik koticci murukupunarntu iyanra valli pola "Oh you, girl of the mountain tribe whose gait is beautiful, will you come to me like Valli who had gladly agreed to join Muruku?"

The erotic association is clear: the hero invites the girl to join him as Tamil term punar in murukupuaarntu valli means to reunite, particularly sexually, to cohabit'. It is therefore clear that in the 2nd or 3rd Cent. AD the story of Valli and Murugan -- i.e. the nucleus of the myth narrated above in the sense of Valli being the beloved and sexual partner of Murugan -- was sufficiently well-known to provide a divine model for human behaviour and a material for the poet to draw a simile from. It is worthwhile noticing that at the time when this story was obviously well-known in Tamil India, and hence must have been known there even before the 2nd. Cent., nothing at all is heard yet of a Valli in any Sanskrit or North Indian source.

Tirumurukarruppatai

The Tirumurukarruppatai is a text qualitatively different from almost all other so-called Sangam poetic texts, not in that it would be much later in time but that it is different in character and purpose. Unlike the other bardic poems, it is a religious text par excellence, a text devoted (for the first time in the development of Tamil textual tradition) exclusively to the worship of a deity -- Murugan. From the point of view of its attitude towards the process broadly termed Sanskritization, Tirumurukarruppatai is certainly integrative and syncretistic. The god's consort Valli is mentioned once as the 'innocent daughter of the mountain-tribe with creeper-like waist, at whom one of the six faces of Murugan smiles in serenity'.

 

Tirumurukarruppatai is also probably the earliest Tamil text which, in agreement with its syncretistic-integrative tendency, mentions for the first time, the northern, imported, consort of Skanda-Murugan -- if not by name than at least by allusion. The term karpu in line 6 of the poem (Skt. kalpaa?) by which Devasena is alluded to means 'fundamental duty, rule, chastity'. It refers to a form of marriage which is according to the rules of the Brahminic order; and indeed Devasena alias Tevayanai has become the symbol of the regular Hindu marriage performed according to Brahminic Hindu rites while Valli, as is clear mainly from the Paripatal, obviously was considered the symbol of kalavu, love-relationship based on katal 'love affection' and of marriage performed according to pre-Aryan, non-Brahminic rites. In fact -- and this is the important conclusion of this talk -- Murugan and Valli are mythic exemplars of the ancient and indigenous Tamil motif of kalavu -- the pre-marital union of lovers.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard