Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவர் பிறந்த இடம் எது?


Guru

Status: Offline
Posts: 7329
Date:
திருவள்ளுவர் பிறந்த இடம் எது?
Permalink  
 


திருவள்ளுவர் பிறந்த இடம் எது?

உலக பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு யாருக்கேனும் தெரியுமா?

திருவள்ளுவர் எங்கு பிறந்தார்? அவரின் தாய் தந்தை யார்? அவர் எந்த மொழிகளையெல்லாம் கற்றார்? அவர் எழுதிய நூல் திருக்குறள் ஒன்றுதானா? வேறெவையும் இல்லையா? என்ற வினாக்களுக்கெல்லாம் இதுவரையிலும் சரியான விடை கிடைத்திருப்பதாகத் தெரியவில்லை.

திருவள்ளுவரைப்பற்றி நம்பமுடியாத பலகதைகள் வழங்கி வருகின்றன. திருவள்ளுவர், அகத்திய முனிவரின் மரபில் வந்தவர், இவரது தந்தை பார்பனக்குலத்தவரான பகவான், தாய், கருவூரில் ஒரு புலையனால் வளர்க்கப்பட்ட புலைச்சி; ஆதிக்கும் பகவானுக்கும் பிறந்தவர்கள் ஏழு பேர் அவர்களில் அவ்வை, உப்பை, உருவை, வள்ளி என்னும் பெண்கள் நால்வர்; அதிகமான், கபிலர், திருவள்ளுவர் எனும் ஆண்மக்கள் மூவர்.

இவ்வேழுபோரையும் தாய் ஆதி, பகவானின் கட்டளைப்படி பெற்றெடுத்த இடத்திலேயே விட்டுவிட்டுச் சென்றார்; திருவள்ளுவரின் தலைமாணாக்கன் ஏலேல சிங்கன்; அவரது மனைவி வாசுகி; அவள்தான் கற்பின் வலிமையால் மணலை சோறாக மாற்றினாள், திருவள்ளுவர், மயிலாப்பூரின் புறத்தே நெசவுத்தொழில் செய்து வாழ்ந்தார்; என்று சிலர் கூறுகின்றனர்.
“கபிலர் அகவல்” என்ற நூல், ஆதி என்ற புலைச்சிக்கும் பகவான் என்ற பார்ப்பானுக்கும் திருவள்ளுவர் பிறந்தார் எனக் கூறுகிறது. யாளிதத்தன் என்பானுக்கும் பார்ப்பனி என அவனால் கருதப்பட்ட ஒரு புலைச்சிக்கும் திருவள்ளுவர் பிறந்தார் என “ஞானாமிர்தம்” என்ற நூல் சொல்லுகிறது.
வள்ளுவர் எனும் பெயரைக்கொண்டு இவரை வள்ளுவ குலத்தைச் சார்ந்தவர் என்றும் கூறுகின்றனர். வள்ளுவ குலத்தாரால் வளர்க்கப்பட்டமையால் இவர் ‘வள்ளுவர்’ எனப்பட்டார் என்றும் பேசுகின்றனர் வள்ளுவர் என்பது குலப்பெயரன்று இயற்பெயரே என நம்புகின்றவர்களும் உள்ளனர்.
இவர் பிறந்து வளர்ந்த இடம் தென்மதுரை என்றும் இவர் நெசவுத்தொழில் செய்து வாழ்ந்த ஊர் மயிலாப்பூர் என்றும் தமிழ் நாவலர் சரிதையில் கூறப்பட்டுள்ளது இவையெல்லாம் கற்பனைக்கதைகளே!
திருவள்ளுவரின் உண்மை வரலாற்றை அவர் எழுதிய திருக்குறளின் வாயிலாக அறிய முற்படலாம்.
உழவுத் தொழிலுக்கு பயன்படும் விலங்குகள் பல. அவற்றுள் எருதும் எருமைக்கடாவும் இன்றியமையாதனவாகும்.நிலத்தை உழுவதற்கும் வண்டியை இழுத்துச் செல்வதற்கும் இவை பயன்படுகின்றன.

பாரமேற்றிய வண்டியை பள்ளத்திலும் மேட்டிலும் இழுத்துச்செல்ல தமிழகத்தில் எவை பயன்படுகின்றன? எருதுகள் பயன்படுகின்றன என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் கேரளாவில் பாரவண்டியை இழுத்துச்செல்பவை எருமைக்கடாக்களேயாம். பார வண்டியை இழுத்துச்செல்லும் பொழுது ஏற்றத்தில் ஏறும் பொழுது, பாரத்தை தாங்கமுடியாமல் திணறும் பொழுது, எருதுகள் என்ன செய்யும்? மூச்சடக்கி இழுத்துப்பார்க்கும் முடியவில்லையெனில் சாலையில் படுத்துக்கொள்ளும். பிறகு வண்டியோட்டி அடித்தாலும் உதைத்தாலும் படுத்த இடத்தை விட்டு எழுந்திருக்காது. ஆனால்  எருமைக்கடாக்கள், எருதுகளைப்போல் அல்லாமல், பாரவண்டியை மூச்சடக்கி இழுத்துப்பார்க்கும் முடியவில்லையெனில் வாயைத்தரையில் அழுத்தி இழுத்துப்பார்க்கும் அப்பொழுதும் இழுக்க முடியவில்லையெனில் தரையில் மண்டியிட்டு இழுத்துப்பார்க்கும் இவ்வகையில் வண்டியை இழுத்துச் சென்றுவிடும். எருதுகள் முயன்று பார்க்கும் முடியவில்லையெனில் படுத்துக்கொள்ளும். எருமைக்கடாக்கள் எப்பாடுபட்டேனும் வண்டியை இழுத்துச்சென்றுவிடும்.

இதனை நன்கு கவனித்த திருவள்ளுவர், அக்காட்சியைக் குறள் ஒன்றில் வெளிப்படுத்துகின்றார். இத்தகைய காட்சியைத் தமிழ்நாட்டில் அவரால் கண்டிருக்க முடியாது. சேர நாட்டில் கண்ட காட்சியை

“மருத்தவாய் எல்லாம் பகடு அன்னான் உற்ற
இடுக்கண் இடர்பாடு உடைத்து “- என வருணிக்கின்றார்.

“தடைபட்ட இடங்களில் எல்லாம் வண்டியை இழுத்துச்செல்லும் எருமைக்கடாக்களைப் போல விடாது முயன்று செயலைச்செய்ய வல்லவனை அடைந்த துன்பம் தானே துன்பமடையும்” என்பது இதன் பொருள்.

‘பகடு’ என்ற சொல்லுக்குப் பல பொருட்கள் இருந்தாலும் இவ்விடத்திற்குப் பொருத்தமான பொருள் எருமைக்கடாவே ஆம். சேர நாட்டில் கண்டகாட்சியை இவ்வுவமை வாயிலாக ஆள்வினை உடைமையை விளக்குவதால் திருவள்ளுவர் சேர நாட்டுப்பகுதியைச் சார்ந்தவர் என்பதை உணரலாம்.
கடலிலும் குளத்திலும் கிணற்றிலும் தூண்டில் போட்டு மீன்பிடிக்கும் வழக்கம் பண்டுதொட்டே இருந்து வருகிறது. மீன்பிடிப்பவர்கள் தூண்டிலின் நுனியில் இரும்புக் கொக்கியில் மீனுக்குரிய உணவை வைத்து நீருக்குள் விடுவார்கள் அந்த உணவை மீன் விழுங்கும் பொழுது  தூண்டிலின் இரும்பு கொக்கியில் மீன் மாட்டிக்கொள்ளும் உடனே தூண்டிலை வெளியே இழுத்து மீனைப்பிடித்துக்கொள்வார்கள்.
மீனுக்கு உணவிடும் கொக்கியைத் தமிழ்நாட்டார் ‘இரும்பு முள்’ என்றே வழங்குகின்றனர் ஆனால் சேர நாட்டினரோ அன்றும் சரி இன்றும் சரி தூண்டில் முள்ளை ‘பொன்’ என்றே குறிப்பிடுகின்றனர். தூண்டில்பொன் என்பதும் கேரளாவில் இன்றும் வழக்கத்தில் உள்ளது இதோ அக்குறள்
“வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டில்பொன் மீன்விழுங்கி யற்று”

திருவள்ளுவர் எப்பகுதியில் வாழ்ந்தாரோ அப்பகுதியில் வழங்கிவரும் சொல்லினைப் பயன்படுத்தி உள்ளார்.

பெண்கள் திருமணம் ஆகாமல் கன்னியாய் இருக்கும் பொழுது இறந்துவிட்டால் அவர்களுக்கு நற்கதி கிடைக்காது என்ற நம்பிக்கை இந்தியாவில் பலபகுதிகளில் இன்றும் இருக்கிறது. அவர்களை நற்கதியில் சேர்க்கப்பரிகாரங்கள் செய்து அடக்கம் செய்கின்ற பழக்கமும் இந்துக்களிடம் இருக்கின்றது. அத்தகைய பரிகாரங்களில் ஒன்று, இறந்த பெண்ணைத்தழுவி புணரவைப்பது; கன்னி கழியாமல் செத்த பெண்ணை இருட்டறையில் புணரச்செய்து புதைக்கும் வழக்கம், தமிழ்நாட்டில் எக்காலத்திலும் இருந்ததில்லை எப்பகுதியிலும் இருந்ததில்லை. ஆனால் கேரளாவில் இன்னும் சிலரிடத்தில் வழக்கத்தில் உள்ளது.

நம்பூதிரி பிராமணக்குடும்பங்களில் இத்தகைய இறப்புக்கள் நிகழ்ந்தால் கூலி கொடுத்து ஆடவனை அழைத்து வந்து இருட்டறையில் புணரச்செய்து அடக்கம் செய்யும் வழக்கம் இன்னும் இருப்பதாகச் சொல்லுகிறார்கள். வரைவின் மகளிர் என்ற அதிகாரத்தில் வள்ளுவர் இந்த வழக்கத்தினை உவமை மூலம் சுட்டுகின்றார். வரைவின் மகளிர் என்பவரை பொருட்பெண்டிர், பரத்தையர் என்ற சொற்களால் வள்ளுவர் குறிப்பிடுகின்றார். பொருளுக்காகவே ஆண்களை புணரும் பெண்கள் பொருட்பெண்டிர் ஆவர்.
“பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று” என்பது அக்குறள்.
பொருள் ஒன்றையே விரும்பும் பொது மகளிரது பொய்மையான தழுவல், இருட்டறையில் முன் அறியாத பிணத்தைக் கூலிக்குப் புணர்ந்ததை போன்றது என்பது இதன் பொருளாம்.
சேரநாட்டில் வழக்கத்தில் இருந்த இந்நிகழ்வை வள்ளுவர் தம் குறளில் ஆண்டுள்ளார் ஆகவே அவர் பிறந்து வாழ்ந்த நிலம் சேரநாட்டுப்பகுதியே என்பதை இவற்றால் அறியலாம் மேலும் ஆய்ந்தால் மற்றவற்றையும் தெரிந்துகொள்ள முடியும் எனக்கருதுகிறேன்.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

செம்மொழி மாநாட்டுச் சிந்தனைகள் - திருக்குறள்:
திருவள்ளுவர் பிறப்பைக் குறித்து பார்ப்பனர் நுழைத்த கதை வரலாறு

முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்

திருக்குறள் கிடைத்தது எப்படி? திருவள்ளுவரின் பிறப்பைக் குறித்து அவர் ஆதி, பகவன் என்பவர்களுக்குப் பிறந்தவர்கள், ஆதி தாழ்த்தப் பட்டவர், பகவன் பார்ப்பனன், அவர்களுக்குப் பிறந்த திருவள்ளுவர் வாசுகி என்ற வைசிய குலப் பெண்ணை மணந்தார் எனும் கற்பனைக் கதையை ஆதார-மில்லாமல் அய்யர் ஒருவர் எழுதி வைத்துள்ளார் எனும் உண்மையை உலகுக்கு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சீரும், சிறப்புமாக நடைபெற உள்ள இந்தக் கால வேளையில் தெரிவிக்கும் வரலாற்றுச் சான்று உள்ளது. முதன் முதலில் திருக்குறள்:

திருவள்ளுவரின் திருக்குறள் ஓலைச் சுவடியில் இருந்து முதன் முதலில் அச்சிட்டவர் எல்லிஸ் எனும் ஆங்கி-லேயர். அதுவரையில் ஓலைச் சுவடி-யிலே திருக்குறள் இருந்தது. திருக்குறள் அச்சில் வந்த வரலாறு இது.

1823 இல் சென்னைக்குப் பணியாற்ற இங்கிலாந்தில் இருந்து எல்லிஸ் அய்.சி.எஸ்.வந்தார். வந்தவர் தமிழ் படிக்க விரும்பினார். சென்னையில் தமிழ்ச்-சங்கம் 1825_இல் ஏற்படுத்தினார். இராயப் பேட்டையில் உள்ள பவானி கோயில் கிணற்றில் திருக்குறள் கல்லில் செதுக்கப்-பட்டிருந்ததைக் கண்டு பிடித்தார். திருக்குறள் ஏட்டுச் சுவடி ஒன்றைக் கந்தசாமி என்பவர் தாம் வேலை பார்த்த ஆரிங்டன் துரை வழி எல்லிஸ் துரை-யிடம் சேர்த்தார். கந்தப்பன் என்பது அவர் பெயர் எனவும் கூறுகின்றார். இவர் அயோத்திதாசரின் பாட்டனார் என்று கூறுகின்றார்.

எல்லிசுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்க வந்தவர்கள் பார்ப்பனத் தமிழ் ஆசிரியர்-கள். அவர்களிடம் கந்தசாமி திருக்குறள் கொடுத்த விவரத்தை எல்லிசு கூறினார்.

தீண்டத்தகாதது திருக்குறள்:

தமிழ் கற்றுக் கொடுக்க வந்த பார்ப்-பனர்கள் திருக்குறள் தீண்டத்தகாதது என்று கூறினர். கந்தசாமி தீண்டத்தகாத-வர் எனவும் அவர் கொடுத்த திருக்குறள் தீண்டத் தகாதது எனவும், காரணம் திரு-வள்ளுவர் ஆதி என்னும் புலைச்சியின் மகன் என்றும் கூறினர். இச்செய்தி நம் கற்பனையல்ல. செந்தமிழ்ச் செல்வி இதழில் வெளிவந்து 28.11.2008 விடு-தலையிலும் இடம் பெற்ற செய்திதான்.

ஏன் இப்படிப் பார்ப்பனர்கள் கருதுகிறார்கள் என்று கந்தசாமியை அழைத்து எல்லிஸ் கேட்டிருக்கிறார். அதற்குக் கந்தசாமி, எங்களுக்கும் இவர்களுக்கும் விரோதம். எங்கள் வீதிக்குள் பார்ப்பனர்கள் வந்தால் உங்கள் பாதம் பட்ட இடம் பழுதாகி விடும் என்று சொல்லிக் கொண்டு இவர்-களைத் துரத்தி பார்ப்பனர்கள் வந்த வழியிலும், சென்ற வழியிலும் சாணத்-தைக் கரைத்துத் தெளித்து சாணச்சட்டி-யையும் உடைத்து வருகிறார்கள் என்று கூறினார்.

உண்மையான காரணத்தைப் புரிந்து கொண்ட எல்லிஸ் திருக்குறளை ஆழமாகப் படித்தார்.

திருக்குறள் நூலைப் பிரதி, திருவள்-ளுவ மாலை, நாலடியார் ஆகிய-வற்றைக் கந்தப்பனிடம் பெற்றார். திருக்-குறளைஆங்கிலத்தில் மொழி பெயர்க்-கவும் தொடங்கினார். அவர் திடீரென இறந்ததால் முழுவதும் அவரால் குறளை மொழி பெயர்க்க இயல-வில்லை.

தமிழ் வித்வான் தாண்டவராய முதலியார், மானேஜர் முத்துசாமிப் பிள்ளை ஆகியவர்களை எல்லிஸ் ஓலைச் சுவடியிலிருந்த திருக்குறள் மூலத்தைப் படியெடுக்கச் செய்தார். அதன் பின் அதனை அச்சிட்டார். இவ்-வாறாகவே முதல் திருக்குறள் நூல் அச்சில் வந்தது. எல்லிஸின் திருக்குறள்:

எல்லிஸ் திருக்குறள் பாக்களுக்குச் சில சார்பு நூல்களையும் சேர்த்துத் தம் பெயரால் திருக்குறள் புத்தகத்தை 1834 ஆம் ஆண்டில் அச்சிட்டார். ஆக முதல் திருக்குறள் அச்சுப் பதிப்பு வெளி-வந்த ஆண்டு 1834, அதில் திரு-வள்ளுவர் பிறப்புப் பற்றிய கற்பனைக் கதையெல்லாம் கிடையாது. அதாவது தாழ்த்தப்பட்ட தாய், பார்ப்பனத் தந்தை எனும் புனை சுருட்டெல்லாம் கிடை-யாது.

விசாகப்பெருமாள் அய்யர்:

பிறகு இந்தக் கதை எப்படிப் பிறந்தது. இந்தக் கதையை நுழைத்தவர் ஒரு பார்ப்பனர். அவர் விசாகப் பெரு-மாள் அய்யர் என்பவரின் தம்பி சரவணப் பெருமாள் அய்யர். இவ்வாறு கற்பனைக் கதையை அச்சிட்ட ஆண்டு 1837. இந்த சரவணப் பெரு-மாள் அய்யர் அச்சிட்ட திருக்குறள் புத்தகத்தின் முகப்பில் ஆதியென்றும் பகவனென்றும் பொருத்தினார். அவ் வாக்கியங்களைக் கொண்டு ஆதியெ-னும் தாழ்த்தப்பட்ட பெண்ணும், பகவன் எனும் பார்ப்பனனும் இருந்ததாகவும், முறைகேடான ஒழுக்கத்தால் ஏழு பிள்ளைகளை அவர்கள் பெற்றதாகவும், அவர்களில் ஒருவரான திருவள்ளுவ நாயனார் மயிலாப்பூரில் தங்கி, ஒரு வைசிய குலப் பெண்ணை மணந்து திருக்குறளைப் பாடினார் எனச் சிறிய அகவற் பாவினைப் பாடினார். ஆனால் அந்த அகவற் பாவினைப் பாடியவர் யார் என்று குறிப்பிடாமல் விசாகப் பெருமாளய்யர் அச்சிட்ட புத்தகத்தில் கடைசியில் இடம் பெறச் செய்து தாம் அச்சிட்ட திருக்குறளை வெளியிட்டார்.

பார்ப்பனியம் இப்படித் தன் வேலை-யைக் காட்டியிருக்கிறது. திருக்குறள் வெளியிட்ட பணிக்கு நாம் நன்றி பாராட்டுகிறோம். ஆனால் இத்தகு நஞ்சை விதைத்திருப்பதை 250 ஆண்டுகள் கடந்த பின்னும் நம்மால் சுட்டிக்காட்டாது இருக்க இயலவில்லை.

ஏனென்றால் எல்லிசின் உதவியால் தாண்டவ ராய முதலியாரும், முத்துசாமிப் பிள்ளையும் ஓலைச் சுவடியில் உள்ளதை உள்ளபடி 1831 இல் அச்சிட்ட, திருக்குறள் இரண்டு நூல்களிலும் இல்லாத செய்தி, அதன்பின் அய்யர்வாள் வெளியிட்ட புத்தகங்களில் நுழைந்திருக்கிறது.

விசாகப் பெருமாள் அய்யர் திருக்குறளின் பின்னே இடம் பெறச் செய்த அகவற்பாவில் ஏழு பிள்ளை-கள் ஆதி எனும் பறையர் இனத்த-வருக்கும் பகவன் என்றபார்ப்பனனுக்-கும் பிறந்ததோடு நிறுத்தி விட்டார்.

சரவணப்பெருமாள் அய்யர்:

அவருடைய தம்பி அதற்கு மேலே போய் ஒரு புளுகை கற்பனையை _ அவிழ்த்துவிட்டார். இதுவும் ஓர் அகவற்பாவில் பாடப்பட்டது. சரவணப் பெருமாளய்யரின் நான்காவது அச்சிடப் பெற்ற திருக்குறளில் ஏழு பிள்ளைகளில் ஒவ்வொரு பிள்ளையும் மண்ணில் பிறந்தவுடன் ஒவ்வொரு வெண்பாவைப் பாடியது என ஏழு வெண்பாக்களைச் சேர்த்துவிட்டார்.

விசாகப் பெருமாள் அய்யரின் கற்பனைக் கதை பாருங்கள். அவரு-டைய அகவலில் சோழ நாட்டுள் ஒரு பார்ப்பானுக்கு, தன் பார்ப்பன மனைவியால் பகவன் எனும் மகன் பிறந்து அவன் வளர்ந்து கருவூர் புலை மகள் ஆதி என்பவளை வந்தடுக்க அவளை அடித்துத் துரத்தி விட்டுப் போய் மறுபடியும் வரும் போது அவளைச் சந்தித்து இருவரும் ஏழு பிள்ளைகள் பெற்றனர் என அகவற்பா பாடிவிட்டார்.

முத்துவீரப்பிள்ளை:

விசாகப் பெருமாள் அய்யரும், சரவணப் பெருமாள் அய்யரும் விதைத்த நச்சு விதையை முத்து-வீரப்பிள்ளை என்ற தமிழர்தம் ஆணைப்படி வேதகிரி முதலியார் என்பவர் திருக்குறளைஅச்சிட்டு விதைத்தார். 1847 இல் இந்தத் திருக்குறள் நூல் வெளி வந்தது.

அதில் உள்ள கதை இது. படைப்புக் கடவுள் என்று சொல்லப்-படும் பிரம்மா யாகம் ஒன்று செய்து அதில் கலைமகளை உற்பத்தியாக்கி, அவளையே மணந்து, மறுபடியும்-அகஸ்தியராய்த் தோன்றி சமுத்திரக் கன்னியை மணந்தார்.

இருவருக்கும் பெருஞ்சாகரன் என்பவன் பிறந்தான். பெருஞ்சாகரன் திருவாரூர் புலையர் வகுப்புப் பெண்-ணைக்கூடி பகவன் என்பவனைப் பெற்றானாம். பகவன் வளர்ந்து பிரம்ம வம்சத்தில் தவமணி என்பவரின் அருண்மங்கை என்னும் பார்ப்பனப் பெண்ணைக்கூடி ஒரு பெண்ணைப் பெற்றுவிட்டு விராலிமலைக்குத் தவம் செய்யச் சென்று விட்டாராம்.

அப்பெண் குழந்தையை உறையூர் பெரும் பறையன் ஒருவர் கண்டெடுத்து வளர்த்து வந்தார். அப்போது அச்சேரியிலுள்ளவர்கள் அனைவரும் மண்மாரியால் மாண்டுபோயினர். இந்தப்பெண் ஒருத்தி மட்டுமே பிழைத்து மேலூர் அக்ரகார நீதி அய்யர் என்பவர் வீட்டில் வளர்ந்து வந்தாள். அப்போது பகவன் என்பவருக்கு ஆதி என்ற இப்பெண்ணை நீதிஅய்யர் அய்ந்து நாளையத் திருமணம் செய்து வைக்க, ஏழு பிள்ளைகளைப் பெற்றதாக இவர் ஒரு கதையை எழுதி வைத்து விட்டார். ஏழு பிள்ளைகளின் பெயரும் அவ்வை, உவ்வை, உறுவை, அதியமான், கபிலர், வள்ளி, திருவள்ளுவர் இப்படிப் பார்ப்பனச் சார்புக் கற்பனை தோன்றியது.

ஆயினும் வேறு உண்மை கூறும் ஆதாரம் இல்லாமல் இல்லை. நல்கூர் வேள்வியார், பெருந்தேவனார் முதலான-வர்கள் எழுதியுள்ள பாடல்கள் கிடைத்-துள்ளன.

நல்கூர் வேள்வியார் பாடல்:

உப்பக்க நோக்கி உபகேசி தோண் மணந்து

உத்தர மாமதுரைகச்சனென்ப விப்பக்க

மாதானு பங்கி மறுவில் புலச் செந்நாப் போதார்

புரை கூடற்கச்சு

இதன் பொருள் என்று கூறப்படுவது:

வடமதுரை கச்சனெனும் அரனுக்கும் உபகேசி எனும் ராகினிக்கும் மகவா-யுதித்து, சகல கலைகளும் கற்று, புத்தசர-வணசங்கம் சார்ந்து அரசநீதி,அரண் அமைச்சர் விதி, ஒழுக்கம், சீலம், கன்மபீடம்,சூத்திர பீடம், வினய பீடம், மெய்யறம், மெய்ப்பொருள், மெய்யின்பம், கன்மபாகை அர்த்த பாகைக் கருத்துக்-களைத் தெள்ளென விளக்கிஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாவால், அறத்துப் பால், பொருட்பால், காமத்துப் பால் என வகுத்தெழுதி ஏனைமக்-களுக்கு நல்வழி காட்டினார் திருவள்ளுவர் என்பதாகும்.

எது எப்படியிருப்பினும் திருவள்ளு-வரையும், திருக்குறளையும் போற்றிய-வர்கள், புலவர்கள் பட்டியல் ஏராளம், ஏராளம்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard