Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: செண்பகப்பெருமாள் அவர்களின் "யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்" என்ற புத்தகத்துக்கு


Guru

Status: Offline
Posts: 7387
Date:
செண்பகப்பெருமாள் அவர்களின் "யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்" என்ற புத்தகத்துக்கு
Permalink  
 


 செண்பகப்பெருமாளின் பொய்களும் இயேசுவின் வெற்றியும் – பாகம் 1: அறிமுகம்

செண்பகப்பெருமாள் அவர்களின் "யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்" என்ற புத்தகத்துக்கு மறுப்புக்கள் 

 

இரண்டு வாரங்களுக்கு முன்பு என்னுடைய நண்பர் ஒருவர் ஒரு புத்தகத்தை எனக்கு அனுப்பினார். அந்தப் புத்தகத்தின் பெயர் "யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்" என்பதாகும். இதனை எழுதியவர் திரு எஸ். செண்பகப்பெருமாள் ஆவார். இப்புத்தகம் இவ்வருடம் (2019) ஜனவரி மாதம் வெளியானது. நானும் இந்த புத்தகத்தை ஆர்வமாக படிக்க ஆரம்பித்தேன். 

அப்படி என்னதான் இவர் எழுதி இருக்கிறார்?  பைபிளை விமர்சிக்கும் நாத்திகர்கள் மற்றும் முஸ்லிம்கள் முன்வைக்காத வேறு ஏதாவது விமர்சனங்களை இவர் முன்வைத்திருக்கிறாரா? என்பதை அறிய நான் மிகவும் ஆர்வமாக படிக்க ஆரம்பித்தேன். மேலும் இந்தப் புத்தகத்தை எழுதியவர் எந்த‌ பின்னணியில் இருந்து இந்த விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார் என்பதை அறிய நான் கூர்ந்து படிக்க ஆரம்பித்தேன்.

 

மேற்கத்திய நாத்திகர்களும் ஆய்வாளர்களும் இதுவரையில் பைபிளை மிகவும் ஆழமாக விமர்சித்திருக்கிறார்கள். ஒருவேளை செண்பகப்பெருமாள் அவர்கள் ஒரு படி மேலே சென்று, சாரி, பல அடிகள் ஆழமாகச் சென்று ஆய்வு செய்து இருப்பாரோ என்ற கேள்வி எழுந்தது.  ஒரு புதிய பென்சிலை சீவிக்கொண்டு, ஒரு நோட்புக்கையும்,  கமகம என்று வாசனை வீசும் ஆவிபறக்கும் ஃபில்டர் காஃபியையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு, நிதானமாக படிக்க ஆரம்பித்தேன். ஆனால், ஃபில்டர் காஃபியின் ஆவி அடங்குவதற்கு முன்பாகவே, திரு செண்பகப்பெருமாள் அவர்களின் ஆய்வின் இலட்சணம்  வெளிப்பட்டுவிட்டது.  இப்புத்தகத்தின் வாழ்த்துரையையும், முகவுரையையும் படிக்கும் போதே, இவரின் ஆய்வு இவ்வளவு தானா? என்று என்னை நானே கேள்வி கேட்டுக்கொண்டேன்.  அதாவது, இவரின் ஆய்வு அரைகுறையானது என்பதை இப்புத்தகத்தின் வாழ்த்துரையும், முகவுரையும் ஆரம்பத்திலேயே ஒப்புக்கொண்டு விட்டன.

ஆய்வு என்ற பெயரில் தன் மனதில் தோன்றியவைகளையெல்லாம் இவர் புத்தகமாக எழுதியுள்ளார். இவர் தம்முடைய ஆய்வை நேர்மையான முறையில் செய்யவில்லை, மனதிலே ஏதோ ஒன்றை வைத்துக் கொண்டு இந்த புத்தகத்தை எழுதி இருக்கிறார். ஒரு நாத்திகர் பைபிளை விமர்சித்தால் எப்படி விமர்சிப்பார் என்று எனக்கு நன்றாக தெரியும்? அதேபோல ஒரு இஸ்லாமியர் பைபிளை விமர்சிக்கும்போது அவருடைய வரிகள் மற்றும் ஆய்வு எப்படி இருக்கும் என்றும் எனக்குத்தெரியும்.  மேலும் எந்த மதத்தையும் சாராமல், பைபிளை சமநிலையிலிருந்துக்கொண்டு பொதுவாக விமர்சிப்பவர்கள் எப்படி எழுதுவார்கள் என்றும் நான் நன்கு அறிவேன். ஆனால் இவருடைய வரிகளில் இறைமறுப்பு தெரியவில்லை, மதசார்பின்மையும் தெரியவில்லை, அதே நேரத்தில் எந்த நிலைப்பாட்டில் இருக்கிறோம் அல்லது என்ன மார்க்கத்தைப் பின்பற்றி கொண்டு இந்த விமர்சனத்தை முன் வைக்கிறோம் என்பதை வேண்டுமென்றே மறைத்துக்கொண்டு இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறார். ஆனால், இவரின் பின்னணி என்னவென்பதை ஆரம்பத்திலேயே நான் கண்டுபிடித்துவிட்டேன்.

 

ஒரு விமர்சனத்தை முன் வைப்பவர் யாராக இருந்தால் நமக்கு என்ன? அவருடைய விமர்சங்களுக்கு பதில்கள் சொல்வது தான் நம் கடமை. திரு செண்பகப்பெருமாள் அவர்களின் உண்மை முகத்தை அல்லது நிலைப்பாட்டை இந்தப் புத்தகத்திற்கு கொடுக்கும் பதில்களில் ஆங்காங்கு வெளிப்படும் என்பது மட்டும் நிச்சயம். அதனை இப்போது நான் சொல்ல விரும்பவில்லை.

 

பைபிள் மீது அவர் முன்வைக்கும் விமர்சனங்கள் அனைத்தும் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக முன் வைக்கப்பட்டுள்ளது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. காரணம் எதுவாக இருந்தாலும், இப்படிப்பட்ட விமர்சனங்களை வைப்பவர்களுக்கு தகுந்த ஆதாரங்களோடு பதில்க‌ள் தர வேண்டியது கிறிஸ்தவர்களின் கடமையாக இருக்கிறது. எனவே அவரின் இந்த புத்தகத்திற்கு தொடர்ச்சியாக பதில்களை தரலாம் என்று கர்த்தருக்குள் நிச்சயித்திருக்கிறேன்.

இன்று தான் அவருடைய புத்தகத்தை முழுவதுமாக படித்து முடித்தேன். திரு செண்பகப்பெருமாள் அவர்கள் முன்வைத்த விமர்சனங்கள், கேள்விகள் சந்தேகங்கள் அனைத்தையும் கீழ்கண்ட தலைப்புகளில் நாம் அடக்கிவிடலாம். 

 

1) அவர் தம் ஆய்வை நேர்மையான முறையில் செய்யவில்லை

2) செண்பகப்பெருமாள் அவர்களுக்கு காலவரிசையை புரிந்துக்கொள்வதில் பிரச்சனையுள்ளது

3) வசன பின்னணிகளை வேண்டுமென்றே மறைத்துவிட்டு விமர்சனம் செய்துள்ளார்

4) தெரிந்தே பல பொய்களை சொல்லியுள்ளார்

5) மேசியா மற்றும் கிறிஸ்து என்ற வார்த்தைகள் இவரை தூங்கவிடாமல் செய்துள்ளன

6) பைபிள் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்

7) பைபிளின் தேவன் யூதர்களுக்கு மட்டும்தான் என்ற தன் சொந்த கருத்தை நிலைநாட்ட முயன்றுள்ளார்

8) இயேசு யூதர்களுக்காக மட்டுமே வந்தார் என்பதை நிரூபிக்க பல உண்மைகளை மறைத்துள்ளார்

9) பைபிளின் அடிப்படை கோட்பாடுகளை தவறாக புரிந்து கொண்டுள்ளார்

10) பவுலடியார் தான் இயேசுவை கிறிஸ்துவாக அடையாளம் காட்டினார் என்று பொய்க் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்

 

இவருடைய இந்த புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும்போது, இவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை மேற்கண்ட தலைப்புகளில் அடக்கி பதில் அளிக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், இவருடைய அறியாமையும் மடமையும் பக்கத்துக்கு பக்கம் அதிகரித்துக் கொண்டே சென்று கொண்டிருந்ததை கவனித்தேன். எனவே மொத்தமாக பதில் கொடுக்காமல் இவர் எழுதிய ஒவ்வொரு பக்கத்துக்கும் வரிசைப்படி தொடர்ச்சியாக பதில்களை கொடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.

 

பரிசுத்த வேதாகமத்திற்கு எதிராக இவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு, கொடுக்கப்படும் பதில்கள் அவரிடம் சென்றடைய வேண்டும். அவர்  இவைகளுக்கு என்ன பதில் சொல்லுவார் என்பதை பார்க்க வேண்டும். திரு செண்பகப்பெருமாள் அவர்களே, உங்கள் புத்தகத்துக்கு ஒரு இலவச விளம்பரம் கிடைத்துவிட்டது.  (கிறிஸ்தவ நண்பர்கள் மற்றும் வாசகர்கள் இந்த தொடர் பதில்களை பிரிண்ட் எடுத்து அவருக்கு அனுப்புவீர்களா? அல்லது அவரது மெயில் ஐடி கிடைத்தால் எனக்கு தெரிவிப்பீர்களா?). 

 

இந்த மறுப்புக்கள் மூலமாக, இயேசுவின் போதனைகளும், இரட்சிப்பும் செண்பகப்பெருமாள் போன்றவர்களை சந்திக்கவேண்டும், அவர்களை சிந்திக்கச்செய்யவேண்டும் என்பது என் ஆசை.

 

செண்பகப்பெருமாள் அவர்களின் பொய்களும் இயேசுவின் வெற்றியும்” என்ற‌ தலைப்பில் இந்த தொடர் மறுப்புக்கள் எழுதப்படுகின்றன. 

இந்த புத்தகத்தின் முதலாவது வேடிக்கை என்னதெரியுமா?  

 

செண்பகப்பெருமாள் அவர்களின் இந்த புத்தகத்திற்கு "Rev. Dr. S. Joel Chellathurai" அவர்கள் வாழ்த்துரை எழுதியது தான். எனவே, வாங்க‌ முதலாவது, வாழ்த்துரையிலிருந்து ஆரம்பிக்கலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
RE: செண்பகப்பெருமாள் அவர்களின் "யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்" என்ற புத்தகத்துக்க
Permalink  
 


பாகம் 2 - ரெவரெண்டு செல்லத்துரை ஆய்வாளரா (அ) சிறந்த ஆய்வாளரா?

(“யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்“ என்ற புத்தகத்துக்கு கொடுக்கப்பட்ட முந்தைய பதிலை படிக்க இங்கு சொடுக்கவும்)

யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும், பக்கம் 7 - வாழ்த்துரை:

முந்தைய  கட்டுரையில், திரு செண்பகப்பெருமாள் அவர்கள் எழுதிய புத்தகம் பற்றிய ஒரு சுருக்கத்தை எழுதியிருந்தேன். அவர் பரிசுத்த வேதாகமத்தின் மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புக்களை எழுதப்போவதாகச் சொன்னேன். அதன் ஆரம்பமாக, அப்புத்தகத்திற்கு  வாழ்த்துரை எழுதிய "Rev. Dr. S. Joel Chellathurai (அருட்திரு முனைவர் எஸ். ஜோயல் செல்லத்துரை)" அவர்களின் வரிகளை சிறிது ஆய்வு செய்வோம்.

அருட்திரு அல்லது ரெவரெண்டு என்றால் என்ன?

ரெவரெண்டு(Reverend) என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்று தேடும் போது, கீழ்கண்ட பதில் கிடைத்தது.

அருட்திரு, 

(பெயரடை) போற்றுதலுக்கு உரிய

வயது வகையில் மதிப்பிற்குரிய

ஆள் வகையில் பண்புமதிப்பார்ந்த

இடவகையில் அருந்தொடர்புகள் கொண்ட

பழக்கவகையில் பழமை நலம்வாய்ந்த

சமய குருமாருக்கு உகந்த

சமயகுருநிலை வாய்ந்த.

 

ரெவரெண்டு என்ற வார்த்தைக்கு, மதிப்பிற்குரிய, போற்றுதலுக்குரிய போன்ற அர்த்தங்கள் கொடுக்கப்படுகின்றன. முக்கியமாக இவ்வார்த்தை கிறிஸ்தவ குருமார்களை அவர்களின் இறையியல் படிப்பு மற்றும் தகுதியின் அடிப்படையில் பெரும்பான்மையாக கிறிஸ்தவ வட்டாரங்களில்  பயன்படுத்துகிறார்கள். 

இதே பொருளில் தான், நாம் ஆய்வு செய்துக்கொண்டு இருக்கும் புத்தகத்திற்கு வாழ்த்துரை எழுதிய ஜோயல் செல்லத்துரை அவர்களும் "Rev." என்ற பட்டப்பெயரை தன் பெயருக்கு  முன்பாக எழுதியுள்ளார் என்று நான் கருதுகிறேன்.

 

நான் முனைவர் செல்லத்துரை அவர்களிடம் கேட்கவிரும்பும் கேள்விகள்:

1) நீங்கள், செண்பகப்பெருமாள் அவர்களின் புத்தகம் முழுவதையும் படித்த பிறகு தான் உங்கள் வாழ்த்துரையை எழுதினீர்களா? அல்லது தம்பி செண்பகம் உங்களுக்கு ஒரு ஜிகிரி தோஸ்த் (உயிர் நண்பர்) என்பதால், அவர் சரியாகத் தான் எழுதியிருப்பார் என்ற நம்பிக்கையில் வாழ்த்துரையை எழுதி கொடுத்துவிட்டீர்களா?

2) “நான் புத்தகம் முழுவதையும் படித்து தான் வாழ்த்துரையை எழுதிக்கொடுத்தேன்” என்று நீங்கள் சொல்வதாக  இருந்தால், உங்கள் பெயருக்கு முன்பாக  ஏன் அந்த "ரெவரெண்டு" என்ற பட்டப்பெயரை சேர்த்து பதித்தீர்கள்?

3) அருட்திரு அல்லது ரெவெண்டு என்ற பட்டம், உங்கள் வயதுக்கு கொடுக்கப்பட்டது என்றுச் சொல்வீர்களானால், எந்த  பிரச்சனையும் இல்லை. வயதில் மூத்தவர்கள் அனைவரும் மதிப்பிற்குரியவர்கள் (Reverend) தான். ஆனால், கிறிஸ்தவ குருமார்களுக்கு தகுதியின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட பட்டம் தான் இது என்று நீங்கள் சொல்வதாக இருந்தால், வாழ்த்துரை எழுதுவதற்கு முன்பாக, அந்த ரெவரெண்டு அல்லது அருட்திரு என்ற சொல்லை நீக்கியல்லவா நீங்கள் எழுதியிருக்கவேண்டும்?

(இதனை படித்துக்கொண்டு இருக்கும் கிறிஸ்தவரல்லாத‌ வாசகர்களுக்கு  நான் சொல்லவருவது என்னவென்று இன்னும் சரியாக‌ புரியவில்லை என்று நினைக்கிறேன், மேற்கொண்டு படியுங்கள், எல்லாம் தெளிவாக புரியும்)

4) பைபிளை குற்றம்சாட்டி, அதன் கோட்பாடுகளை பொய்யாக்கமுயலும் ஒரு புத்தகத்திற்கு, ரெவரெண்டு என்ற பட்டம் உள்ள உங்களுக்கு  எப்படி வாழ்த்துரை எழுத  மனது  வந்தது? நீங்கள் உண்மையாளராக இருந்திருந்தால், செண்பகப்பெருமாள் அவர்கள் சொன்னதை ஏற்றுக்கொள்வதாக இருந்தால், உங்கள் நிலைப்பாட்டிற்காக  ஏன், அந்த பொய்யான  'அருட்திரு அல்லது  ரெவரெண்டு' என்ற  பட்டத்தை நீங்கள் நீக்கியிருந்திருக்கக்கூடாது?

5) நீங்கள் முனைவர் பட்டம் போட்டுக்கொண்டீர்கள், அது பிரச்சனை இல்லை ஏனென்றால், எதன் மீதும் ஆய்வு செய்யலாம், அந்த ஆய்வின் அடிப்படையில் முனைவர் பட்டம் தரப்படுகின்றது.

6) உங்கள் மனதைத் தொட்டு நேர்மையான முறையில் சொல்லுங்கள், கிறிஸ்தவ இறையியலை சாடும் புத்தகத்துக்கு வாழ்த்துரை சொன்ன உங்களுக்கு, கிறிஸ்தவ  பட்டமாகிய  'அருட்திரு' எதற்கு? அதை நீங்கள் நீக்கியிருந்திருந்தால், உங்களுக்கு ஒரு  பெரிய  'சபாஷ்' போட்டு இருந்திருப்பேன். ஒரு விஷயத்தை  நாம் நம்பினால், அதில் வைராக்கியமாக இருக்கவேண்டும். அதற்கு எதிரான ஒன்றையும் ('அருட்திரு') நாம் வைத்துக் கொள்ளக்கூடாது. கிறிஸ்தவம் உங்களுக்கு தேவையில்லாத ஒன்றாக மாறியிருக்கும் போது, அதன் பட்டம் மட்டும் உங்களுக்கு எதற்கு?

உங்கள் பெயருக்கு முன்பாக  போட்டுக்கொண்ட ரெவரெண்டு என்ற பட்டப்பெயரின் பின்னணியை நீங்கள் தமிழ் உலகிற்கு தெரிவிப்பீர்கள் என்று நம்புகிறேன். முக்கியமாக, உங்கள் வாழ்த்துரையை படித்து, அந்த புத்தகத்தை படித்த/படிக்கவிருக்கும் என்னைப்போன்ற வாசகர்களுக்காகவாவது, அதன் இரகசியத்தைச் சொல்வீர்கள் என்று நம்புகிறேன்.

 

இப்போது உங்கள் வாழ்த்துரையில் உள்ள சில வரிகளை அலசுவோம், வாருங்கள், முனைவர் செல்லத்துரை அவர்களே!

 

'அனைத்து சமய நட்புறவு இயக்கம்':

உங்கள் தம்பி 'செண்பகம்' அவர்களை நீங்கள் 1977ல் சந்தித்ததாகவும் மற்றும் அவர் 'அனைத்து சமய நட்புறவு இயக்கம்' என்ற இயக்கத்தை நடத்தி வந்ததாகவும் எழுதியிருக்கிறீர்கள்.

இந்த இயக்கத்தின் நோக்கமென்ன?  இதன் செயல்பாடுகள் என்னென்ன? நீங்களாவது அல்லது உங்கள் தம்பி செண்பகமாவது சொல்வார்களா?  "அனைத்து சமய நட்புறவு" என்ற பெயரில் ஒரு  இயக்கத்தை அவர் உண்மையாக  நடத்தியிருந்திருந்தால், அதாவது அனைத்து சமய மக்களுக்கு மத்தியில் நட்புறவை உருவாக்க அவர் விரும்பியிருந்தால், என்னைப் போன்றவர்கள் அவருக்கு இப்போது பதிலை கொடுத்துக்கொண்டு இருந்திருக்கமாட்டோம். நேரடியாக புரியும் படி சொல்லவேண்டுமென்றால், அவர் இந்த புத்தகத்தை எழுதியிருந்திருக்கமாட்டார்.

 

திரு செண்பகப்பெருமாள் அவர்களின் புத்தகத்தை முழுவதுமாக படித்தபிறகு, அவரின் மேற்கண்ட இயக்கம் என்பது பெயரளவிற்குத் தான் என்பதும், அதன் செயல்பாடுகள் அனைத்தும், நட்புறவுக்கு  வித்திடாமல், வெறுப்புணர்வுக்கு வித்திட்டுள்ளது என்பதைத் தான் புரிந்துக் கொள்ளமுடிகின்றது.

சிறந்த ஆய்வாளர்:

அதன் பிறகு நீங்களும், அவரும் பைபிள் கற்கத் தொடங்கினீர்கள் என்று எழுதியுள்ளீர்கள். இவரோடு சேர்ந்தா நீங்கள் பைபிளைக் கற்றீர்கள்? அல்லது உங்களோடு சேர்ந்தா அவர் பைபிளைக் கற்றார்? எது எப்படியோ, உங்களுக்கு ஒரு  ரெவரெண்டு பட்டமும் கிடைத்துவிட்டது, அவர் ஒரு சிறந்த ஆய்வாளர் என்ற பட்டத்தையும் நீங்கள் வாழ்த்துரையில்  அவருக்கு கொடுத்துவிட்டீர்கள்.

என்னை மன்னிக்கவேண்டும் ஐயா! உங்களுக்கு சரியாக மனிதர்களை எடைப்போடத் தெரியவில்லை. ஒரு மட்டரகமான  ஆய்வைச் செய்து, பல  பொய்களை தெரிந்தே சொன்ன செண்பகப்பெருமாளையா நீங்கள் 'சிறந்த ஆய்வாளர்' என்றுச் சொல்கிறீர்கள்? அவரின் இந்த புத்தகத்தை ஒருமுறை படித்துப்பாருங்கள்! ப்ளீஸ்! உங்களை கெஞ்சி கேட்கிறேன். 119 பக்கங்கள் கொண்ட சிறிய புத்தகத்தை படிக்க ரெவரெண்டுகளுக்கு அதிக நேரம் பிடிக்காது என்று நான் விசுவாசிக்கிறேன்.

 

பைபிள் கருத்தரங்குகள் நடத்தும் செண்பகப்பெருமாள்:

உங்களை எப்படி கடிந்துக்கொள்வது என்று தான் எனக்கு புரியவில்லை. நீங்கள் பெரியவர் ஆகிவிட்டீர்கள், இதில் 'ரெவரெண்டு' என்ற பட்டமும் கூட இருப்பதால், நான் உங்களை கடிந்துக்கொள்ள‌மாட்டேன் (மனதில் கூட). 

 

கீழ்கண்ட உங்களின் வரிகளின் அர்த்தமென்ன? கொஞ்சம் தெளிவாகச் சொல்லமுடியுமா? அவரைப்போல  நீங்களும் ஆட்டுத்தோலை உடுத்தியுள்ள நரியா? என்ற சந்தேகம் வருகிறது:

"இப்போதும் பல இடங்களில் விவிலியக் கருத்தரங்குகள் நிகழ்த்தியுள்ளார். எங்கள் மெய்யியல் கல்வி மையமும் கணபதிபுரம்  தர்மபரிபாலன இயக்கமும் இணைந்து நிகழ்த்தும் நிகழ்வில் தொடர் பைபிள் வகுப்புக்கள் நிகழ்த்துகின்றார். அங்கு பகவத் கீதை வகுப்புக்களும் நடந்தன. அதில் பல கிறிஸ்தவ போதகர்களும்  கிறிஸ்தவர் அல்லாதவர்களும் கலந்துள்ளனர். இறையியல் கல்லூரியில் அவரது நிகழ்ச்சியில் நானும் கல்ந்திருக்கின்றேன்" (பக்கம் 7, வாழ்த்துரை)

மேற்கண்ட வரிகளை படிக்கும் வாசகர்கள் என்ன நினைப்பார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? 

 

செண்பகப்பெருமாள் அவர்கள் பல பைபிள் கருத்தரங்குகளை நடத்தியுள்ளார்! பைபிள் வகுப்புகளை எடுத்துள்ளார்! என்று வாசகர்கள் நினைப்பார்கள். ஆனால், அந்த கருத்தரங்குகளில் அவர் என்ன பேசினார்? பைபிளை விமர்சித்துப்பேசினாரா (இந்த புத்தகத்தில் உள்ளது போல) அல்லது ஆதரித்து பேசினாரா? என்பதை நீங்கள் சொல்ல மறந்துவிட்டீர்கள்! இல்லை இல்லை மறைத்துவிட்டீர்கள்! ரெவரெண்டு அவர்களே!

 

நீங்கள் நேர்மையானவராக இருந்திருந்தால், அவர் எவைகளை பேசினார் என்பதை ஒருவரியில் சொல்லியிருப்பீர்கள். ஆனால், ஆட்டுத்தோலை போர்த்துக்கொண்டு வரும் நரிகளிடம் உண்மையை எதிர்ப்பார்க்கமுடியுமா என்ன?

 

என்னுடைய சந்தேகம் சரியாக இருந்தால், அவரும் சரி நீங்களும் சரி, உங்களின் அரைகுறை ஆய்வின் மூலமாக சமைக்கப்பட்ட ஆரோக்கியமற்ற உணவை, சராசரி கிறிஸ்தவர்களுக்கு உண்ணக்கொடுத்து, அவர்களின் ஆன்மீக வாழ்வை கெடுத்து இருந்திருப்பீர்கள். அதன் தொடர்ச்சியாகத் தான் இந்த புத்தகத்தையும் அவர் எழுதியுள்ளார் என்பதும் நிச்சயமே!

 

தம்பி செண்பகத்தின் கருத்து உங்கள் கருத்தாகாதோ!

உங்கள் வாழ்த்துரையின் கடைசி 5 பத்திகளில் நீங்கள் எழுதியவைகளின் மூலம், உங்களுக்கு  பைபிளின் மீதும், கிறிஸ்தவத்தின் மீதும் நம்பிக்கை அற்றுப்போய் உள்ளது என்பதை அறியமுடிகின்றது. விஷயம் இப்படி இருக்க, எதனால் இன்னும் 'அருட்திரு/ரெவரெண்டு' என்ற பட்டத்தை சுமந்துக்கொண்டு திறிகிறீர்கள் என்பது தான் எனக்கு புரியாத புதிராக உள்ளது.  (ஒருவேளை இந்த புத்தகத்தை அடுத்த பதிப்பு பிரிண்ட் செய்தால், உங்கள் பெயருக்கு முன்னால் வேண்டாத பிள்ளையாக உங்களுக்கு பாரமாக‌ இருக்கும், அந்த பட்டத்தை தூக்கி வீசச்சொல்லுங்கள், உங்கள் தம்பியிடம்).

யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும், பக்கம் 8 - வாழ்த்துரை:

 

உங்கள் வாழ்த்துரையில் (பக்கம் 8ல்), "பைபிள், எபிரேய இஸ்ரயேல், யூத இனத்தின் விடுதலை வரலாறு என்பது அவரது கருத்தாகும்" என்று எழுதியுள்ளீர்கள். அப்படியானால், உங்கள் கருத்து என்ன? நீங்கள் உங்கள் தம்பியின் கருத்தை ஆமோதிக்கிறீர்களா? அல்லது எதிர்க்கிறீர்களா? உங்கள் வரிகளை கவனிக்கும் போது, தம்பி(செண்பகம்)  எவ்வழியோ அண்ணனும் (செல்லத்துரையும்) அவ்வழி என்பது போல  தெரிகிறது. மேலும், "பைபிள்" என்ற வார்த்தையை “எதை கருத்தில்” கொண்டு எழுதினீர்கள்? இங்கு பழைய ஏற்பாட்டை மட்டுமே குறிப்பிடுகின்றீர்களா? அல்லது புதிய ஏற்பாட்டையும் சேர்த்தே "பைபிள்" என்று சொல்கிறீர்களா?

உங்கள் தம்பி மற்றும் உங்கள் கண்களுக்கு பழைய ஏற்பாட்டில் "வெறும் யூத விடுதலை மட்டுமே" தென்படுகின்றதா? உலக இரட்சிப்பு பற்றி வேறு எதுவும் தென்படவில்லையா? அல்லது படிக்கவில்லையா?

ஆதியாகமம் 12:3. உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.

 

ஆபிரகாம் என்ற ஒரு நபரை “உலக இரட்சிப்பின் திட்டத்திற்கு” ஆரம்பமாக தெரிந்துக்கொள்வதற்கு முன்பாக, உலகமனைத்தையும் ஒரே பிரிவாக கர்த்தர் பார்க்கவில்லையா?  ஆதாம் தொடங்கி நோவா வரைக்கும் பழைய ஏற்பாடு பேசும் போது, அது எபிரேய மக்கள் பற்றி பேசியது என்று உங்கள் தம்பியின் ஆய்வும், உங்களின் ஆய்வும் தெரிவிக்கின்றதா? 

ஆபிரகாமின் சந்ததி மூலமாக மேசியாவை அனுப்பி, அதன் மூலமாக உலக  இரட்சிப்பிற்கு வித்திட்ட பழைய ஏற்பாட்டு கையக்கருத்தை புரிந்துக் கொள்ளக்கூடாத அளவுக்கு உங்கள் மனதும் சிந்தையும் மங்கியுள்ளதா, ரெவரெண்டு அவர்களே!

“நினிவே” என்ற அந்நிய ஜனங்களின் இரட்சிப்பு பற்றி அக்கரைக்கொண்டு, ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார் தேவன், அதற்காக ஒரு புத்தகத்தையே பைபிளில் வைத்திருக்கிறார் தேவன். உங்கள் தம்பியின் ஆய்வின் படி, பைபிள் என்பது வெறும் இஸ்ரேல் மக்களின் விடுதலை மட்டுமே என்றால், நினிவேயின் இரட்சிப்பின் சரித்திரம் ஏன் பழைய ஏற்பாட்டில் உள்ளது? சிறிது ஆய்வு செய்து சொல்லமுடியுமா?

 

செண்பகம் அவர்களின் கருத்துக்கள் பற்றி இன்னும் ஆழமான பதிலை, இதர மறுப்புக்களில் தகுந்த இடங்களில் காண்போம்.

 

இரண்டாவதாக, "கிறிஸ்தவம் ஒரு நம்பிக்கை மார்க்கம் என்பார் அவர்" என்று எழுதியுள்ளீர்கள். இது எப்படி உள்ளதென்றால், "என் தாய் ஒரு விபச்சாரி என்று என் நண்பன் சொல்கிறான்" என்று அந்த தாய் பெற்ற மகன் சிறிதும் சலனமில்லாமல் சொல்வது போல உள்ளது. 

அருட்திரு செல்லத்துரை அவர்களிடம் தமிழ் கிறிஸ்தவர்கள் கேட்கின்ற கேள்வி என்னவென்றால், "மற்றவர்கள் சொல்வது ஒரு பக்கம் இருக்கட்டும், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்பது தான். கிறிஸ்தவம் ஒரு நம்பிக்கை மார்க்கம் என்று சொல்வதிலிருந்து, செண்பகம் என்ன சொல்லவருகின்றார், அதன் உள்ளார்ந்த  கருத்து என்னவென்று உங்களுக்கு புரிகின்றதா? அல்லது புரியவில்லையா? இதுவும் புரியாமல் நீங்கள் எப்படி "அருட்திரு" ஆகிவிட்டீர்கள் என்பது தான் எனக்கு சந்தேகமாக உள்ளது. செண்பகப்பெருமாள் அவர்களின் இந்த புத்தகத்துக்கு கொடுக்கவிருக்கும் பதில்களிலிருந்து, உங்கள் தம்பியின் கருத்தும், உங்கள் கருத்தும் பொய்யானவை என்பது தெளிவாக விளங்கும், அதுவரைக்கும் சிறிது காத்திருக்கவேண்டும். உங்கள் இருவரின் முகமுடி கிழிக்கப்பட்டு, உள்ளே என்ன உள்ளது என்பதை தெளிவாக காட்டிவிடும் என் மறுப்புக்கள்.  



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

 மூன்றாவதாக, "பைபிளில் சில முரண்பாடுகள் இருந்தாலும். . ." என்ற வரிகளை எழுதிய பிறகும் உங்களுக்கு "ரெவரெண்டு/அருட்திரு" என்ற பட்டப்பெயர்கள் தேவையா?  

வாழ்த்துரை எழுதிய நம் மதிப்பிற்குரிய "அருட்திரு முனைவர் எஸ் ஜோயல் செல்லத்துரை" அவர்கள் இன்னும் 'கிறிஸ்தவ ஊழியங்களில்' உள்ளாரா? என்று யாராவது கண்டுபிடித்து எனக்கு தெரிவிப்பார்களா? ஏனென்றால், இவர் சார்ந்துள்ள ஊழிய ஸ்தாபனத்தோடு தொடர்பு கொண்டு, இவரின் சந்தேகங்களை தீர்த்துவிடுங்கள் என்று கேட்டுக்கொள்ள வேண்டியுள்ளது. இவர் முரண்பாடுகள் என்றுச் சொல்கிறாரே! அவைகள் என்னவென்று இவரிடம் கேட்டு அதனை தீர்க்க உங்களால் முடிய‌வில்லையா? என்று அந்த ஸ்தாபனத்திடம்/குழுவிடம் கேட்கவேண்டும்.

 

நான்காவதாக, "ஆனால், இயேசுவுக்கு பின் எழுந்த பவுல், கிரேக்கரின் பணியாளர் என்பதை மிகவும் தெளிவாக, வரலாற்று பின்னணியுடன் விளக்குகிறார் ஆசிரியர் செண்பகப்பெருமாள் அவர்கள்" என்று எழுதியதிலிருந்து, உங்கள் உள்ளத்தில் ஒளிந்துள்ள நம்பிக்கை என்னவென்று எனக்கு புரிந்துவிட்டது. நீங்கள் கிறிஸ்தவத்தை கைகழுவி பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதும், உங்களுக்கும் கிறிஸ்தவ ஊழியத்திற்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை என்பதும் இப்போது கிறிஸ்தவர்கள் புரிந்துக் கொள்வார்கள். 

இப்புத்தகத்தின் நம்பகத்தன்மைக்கு எதிராக, பிழைகளுக்கு எதிராக நான் முன் வைக்கப்போகும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லவேண்டிய கடமை, உங்கள் தம்பி செண்பகப்பெருமாள் உடையது மட்டுமல்ல, அது உங்களுக்கும்  கடமையாக உள்ளது. வேறு வகையில் சொல்வதென்றால், அவர் விதைத்த விதைக்கான அறுவடையை அவரோடு சேர்ந்தே நீங்களும் அறுக்கவேண்டும். பவுலடியார் குறித்து உங்கள் தம்பி எழுதிய ஒவ்வொரு வரிக்கும் பதில் கிறிஸ்தவத்திடம் உள்ளது, அதனை அடுத்தடுத்த மறுப்புக்களில் காண்போம், அப்போது தான் உங்கள் ஆய்வின் தரம் புரியும்.

 

ஐந்தாவதாக, "புற இனத்தவர் என்கின்ற கிரேக்கருக்கு இயேசுவைக் கொண்டுசென்ற பவுல் ஒரு பொய் கூறினார் என்பது அவரது கருத்து" என்று எழுதியுள்ளீர்கள். 

மறுபடியும் அதே கேள்வி தான், "உங்கள் கருத்தென்ன?" பவுலடியார் பொய் சொன்னார் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா? எதை சொன்னாலும், "தம் தம்பி கருதுகிறார், நம்புகிறார்" என்றுச் சொல்லி தப்பித்துக்கொள்ள பார்க்கிறீர்களா! நீங்கள் என்ன நம்புகிறீர்கள் என்று சொல்லவே இல்லையே!

ரோமர் 3:5-8 வரையிலான வசனங்களின் பொருளை அறியாதவரா "ரெவரெண்டு"? அய்யோ பாவம்! 1977லிருந்து பைபிளை செண்பகப்பெருமாள் அவர்களோடு சேர்ந்து கற்கும் இவ்விருவருக்கும், இந்த நாங்கு வசனங்களின்(ரோமர் 3:5-8) பொருளை சொல்லித்தர தமிழ் நாட்டில் எந்த ஒரு போதரும், ஊழியரும் இல்லையா! அல்லது சொல்லப்பட்ட பதிலை இவர்கள் புறக்கணித்துவிட்டார்களா?

ரோமர் 3: 5. நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன்; நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப்பண்ணினால் என்ன சொல்லுவோம்? கோபாக்கினையைச் செலுத்துகிற தேவன் அநீதராயிருக்கிறார் என்று சொல்லலாமா?

 

6. அப்படிச் சொல்லக்கூடாது; சொல்லக்கூடுமானால், தேவன் உலகத்தை நியாயந்தீர்ப்பதெப்படி?

 

7. அன்றியும், என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்?

 

8. நன்மை வரும்படிக்குத் தீமைசெய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா? நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்களென்றும் சிலர் எங்களைத் தூஷித்துச் சொல்லுகிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள் மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும்.

 

கடைசியாக, "இந்த நூல் மதம் கடந்த ஆன்மீகத்துக்குப் பயன்படும் என்பது என் கருத்து, சமூக நல்லிணக்கம் சார்ந்த தம்பியின் நல்முயற்சிக்கு என் பாராட்டு கலந்த நல்வாழ்த்துக்கள்" என்று எழுதியுள்ளீர்கள்.

இப்போதாவது உங்கள் "கருத்தைச்" சொன்னதற்காக மிக்க நன்றி. 

 

"மதம் கடந்த ஆன்மீகம்" என்றால் என்னவென்று சிறிது விளக்கமுடியுமா? 

மதம் கடந்த ஆன்மீகம் என்பது நாத்தீகமா? அல்லது இந்துத்துவமா?

உங்கள் தம்பியின்  முயற்சி "சமூக நல்லிணக்கம் சார்ந்த" முயற்சியா? இது எப்படி? உங்கள் தம்பி எழுதிய இந்த புத்தகத்தின் சாரத்திற்கு நீங்கள் கொடுக்கும் தலைப்பு "சமூக நல்லிணக்கம்" அடேங்கப்பா! என்னே ஒரு பாராட்டு!

 

இந்த புத்தகத்தை படிக்கும் கிறிஸ்தவர்களுக்கு எப்படி சமூக நல்லிணக்கம் உண்டாகும்? தங்கள் நம்பிக்கையை கேலி செய்து, அரைகுறையாக ஆய்வு செய்து விமர்சனம் செய்து, கிறிஸ்தவர்களின் மனதை துக்கப்படுத்தும் படி செண்பகம் அவர்கள் புத்தகம் எழுதினால், இதனால் கிறிஸ்தவர்களுக்கு எப்படி நல்லிணக்கம் உண்டாகும்? யரோடு நல்லிணக்கம் உண்டாகும்? அவரது புத்தகத்தில் நல்லிணக்கம் உண்டாக்கும் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பது என்பது தான் உண்மை, இதனை சவாலாக நான் உங்கள் முன் வைக்கமுடியும்? இந்த சவாலை ஏற்க நீங்கள் தயாரா? 

 

இது ஒரு புறமிருக்கட்டும், உங்கள் கருத்துப்படி "இந்த புத்தகத்தினால் யாருக்கு யாரோடு நல்லிணக்கம் உண்டாகும்"? என்று உங்களால் விவரிக்கமுடியுமா?

 

இப்புத்தகத்தை கிறிஸ்தவர்களும், இந்துக்களும், முஸ்லிம்களும் படித்தால், இவர்களில் யாருக்கு இடையில் நல்லிணக்கம் உண்டாகும்?  சிறிது கடினமான வார்த்தைகளை இங்கு பயன்படுத்தப்போவதற்காக உங்களிடமும், வாசகர்களிடமும் மன்னிப்பை கோருகிறேன். ரெவரெண்டு முனைவர் எஸ் ஜோயல் செல்லத்துரை அவர்களே, நீங்கள் ஒரு பொய்யர், ஏமாற்றுக்காரர், யாருக்காகவோ மறைமுகமாக வேலை செய்ய உங்களை விற்றுப்போட்ட ஒரு வியாபாரி என்பது என் குற்றச்சாட்டு. இந்த புத்தகத்தை ஒரு கிறிஸ்தவரும், இந்துவும் சேர்ந்து படித்தால், இவர்கள் மத்தியில் நல்லிணக்கம் எப்படி உண்டாகும்? இந்த புத்தகத்தினால், அந்த இந்து பைபிளையும், கிறிஸ்தவத்தையும் கேலி செய்ய ஆரம்பிப்பான், அல்லவா! இப்படி இருக்க அந்த கிறிஸ்தவர் மற்றும் இந்துவின் இடையில் இது எப்படி நல்லிணக்கம் உண்டாக உதவும்? ஆட்டுத்தோலை போர்த்திய நரியாக அல்லவா நீங்கள் மாறி எழுதுகிறீர்கள்! 

செல்லத்துரை அவர்களே, உங்களை விட நாத்தீகர்கள் மீது எனக்கு கௌரவம் அதிகம், ஏனென்றால் அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படையாகச் சொல்லிவிடுகிறார்கள். நீங்களோ, உங்கள் நிலைப்பாட்டை ம‌றைக்கிறீர்கள்! ஏன்? நேரடியாகச் சொல்லவேண்டியது தானே “எனக்கு பைபிள் மீது நம்பிக்கை இல்லை, நான் ஒரு நாத்தீகன், அல்லது ஒரு இந்துத்துவவாதி அல்லது xyz. . ." என்று சொல்லி விமர்சித்தால், உங்கள் மீது கிறிஸ்தவர்களின் கௌரவம் உயரும்.

உங்கள் தம்பி செண்பகப்பெருமாள் அவர்களுக்கு கொடுக்கவிருக்கும் பதில்கள் அனைத்தும் உங்களுக்கும் கொடுப்பட்டது என்பதை அறியுங்கள். உங்களால் முடிந்தால் என் கேள்விகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் பதில் சொல்ல முயலுங்கள்.

 

கடைசியாக, ஒரு கேள்வி, அது எப்படி செண்பகம் அவர்கள் 'தொடர் பைபிள் வகுப்புக்கள் நிகழ்த்துகின்றார்' என்று எழுதிவிட்டு, 'அங்கு பகவத்கீதை வகுப்புக்களும் நடந்தன (பக்கம் 7) ' என்று உங்களால் எழுதமுடிந்தது? 

 

பைபிளுக்கும் பகவத்கீதைக்கும் என்ன சம்மந்தம்? இவ்விரு புத்தகங்களின் “அடிப்படை கோட்பாடுகளை” காற்றில்  பறக்க‌  விட்டுவிட்டு, உங்கள் கள்ளத்தனமான‌ நோக்கத்திற்காக, மேலோட்டமாக இவ்விரு புத்தகங்களில் வகுப்புக்கள் நடத்தி, ஏதோ ஒன்றை நீங்களும் உங்கள் தம்பியும் அடையமுயலுகிறீர்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

 “இரண்டு எஜமான்களுக்கு உங்களால் நேர்மையாக ஊழியம் செய்யமுடியாது” என்று இயேசு கூறினார். முக்கியமாக, இந்த இரண்டு எஜமான்களும் தங்கள் அடிப்படை கோட்பாடுகளில் ஒன்றை ஒன்று எதிர்க்கிறவர்களாக இருந்தால், நிச்சயம் இரண்டு பேருக்கு (பைபிள், மற்றும் பகவத்கீதை) ஊழியம் செய்ய உங்களால் முடியாது.

மத்தேயு  6:24. இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து ஒருவனைச் சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.

 

நீங்களும் உங்கள் தம்பியும், உங்கள் வகுப்புக்களில் பைபிள் மற்றும் பகவத்கீதையை கற்கவந்தவர்களை மறைமுகமாக ஏமாற்றியிருக்கிறீர்கள்! அல்லது உங்கள் தம்பி, அவரது தற்போதைய புத்தகத்தில் எழுதியது போன்று, பைபிளை குற்றப்படுத்தி, அதன் தெய்வீகத்தன்மைக்கு எதிராக போதித்து, பகவத்கீதையை உயர்த்தி பிடித்து இருந்திருக்கவேண்டும். பைபிளும் பகவத்கீதையும் நல்லிணக்கத்திற்காக செண்பகப்பெருமாள் அவர்களால் அந்த வகுப்புக்களில் போதிக்கப்பட்டதா? காலம் இதற்கு பதில் சொல்லும், தேவையில்லை நானே பதில் சொல்லுவேன், காத்திருங்கள் பதில் கிடைக்கும்.

 

எந்த புத்தகமும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதன்று:

உலகத்தில் உள்ள எந்த புத்தகமும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதல்ல என்பது என் கருத்து. அதாவது, பைபிள், குர்‍ஆன், பகவத்கீதை இன்னும் வேறு எந்த புத்தகமாக இருந்தாலும் சரி, அதனை மக்கள் ஆய்வு செய்து தங்கள் கருத்தைச் சொல்ல அவர்களுக்கு உரிமை உண்டு. உண்மையாக ஆய்வு செய்து கடுமையாக விமர்சித்தாலும் சரி, மறு ஆய்வு செய்து அதற்கு தகுந்த பதில்களை சொல்லவேண்டியது, அந்த புத்தகத்தை நம்பும் மக்களுடைய கடமையாகும். ஆனால், செண்பகப்பெருமாள் போன்று அரைகுறை ஆய்வு செய்து, பொய்யான விமர்சனங்களை முன்வைப்பார்களேயானால், அதற்கு தகுந்த மறுப்பு கொடுக்கப்படவேண்டும். இதுவும் உலக மக்களுக்கு அனுமதிக்கப்பட்டதே! 

“விமர்சனங்களை” உலகத்திலிருந்து எடுத்துவிட்டால், அடுத்த நிமிடத்திலிருந்து உலகத்தில் “கருத்தியல் முன்னேற்றம்” இல்லாமல் போகும், மனிதன் பல கோணங்களில் சிந்திப்பது நின்றுவிடும், இந்த நிலை மிகவும் ஆபத்தானது. ஆகையால் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன, அதே வேளையில் அவைகள் உண்மையானவைகளாக இருக்கவேண்டும், தெரிந்தே ஏமாற்றக்கூடாது.

 

எஸ் செண்பகப்பெருமாள் அவர்களுக்கு அவருடைய ஆய்வுக்காக‌ என்னுடைய வாழ்த்துக்கள். இவரின் விமர்சனங்கள் மூலமாகத் தான் பைபிளின் சத்தியத்தை இன்னும் ஆழமாக கற்கும் வாய்ப்பு நமக்கு கிடைக்கப்போகிறது (மேற்கத்திய நாடுகளில் பல்லாண்டுகாலமாக ஆய்வு செய்து விமர்சனங்கள் வைத்தவண்ணமாக உள்ளன, அவைகளுக்கு நிகராக பதில்களும் மறுப்புக்களும் முன்வைக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. இப்போது தான் இந்தியாவில் பைபிளை விமர்சிக்க ஆரம்பித்துள்ளார். இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள தமிழ் கிறிஸ்தவர்கள் தயங்கக்கூடாது).

 

கிறிஸ்தவர்களுக்கு வேண்டுகோள்: 

அன்பான சகோதர சகோதரிகளே! நீங்கள் செண்பகப்பெருமாள் அவர்களின் தற்போதைய புத்தகத்தை வாங்கி படியுங்கள். உங்களைப்போன்ற சத்தியம் அறிந்தவர்கள் அமைதியாக இருப்பதினால் தான் அரைவேக்காடுகள் பைபிளை படித்து, தங்கள் அறியாமையையும் முட்டாள்தனமான வாதங்களையும் பரப்பிக்கொண்டு வருகிறார்கள். எனவே, நீங்கள் இப்புத்தகத்தை படியுங்கள், நான் நிச்சயமாகச் சொல்லமுடியும், நீங்கள் படிக்கும் போது, செண்பகப்பெருமாளின் அறியாமை உள்ளங்கை நெல்லிக்கனிபோல தெரியும், உடனே ஆடியோ, வீடியோ மற்றும் எழுத்து மூலமாக  பதில்களை கொடுங்கள். என் கடமையை நான் செய்கிறேன், உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். 

 

கிறிஸ்தவ சமுதாயம் "சிந்திக்கும்" சமுதாயம் என்பதை  நாம் மற்றவர்களுக்கு உணர்த்தவேண்டும். கட்டுக்கதைகளையும், மூடபழக்கவழக்கங்களைக் கொண்ட இதர மார்க்கங்களை பின்பற்றுபவர்கள் போல  அல்லாமல், நம்முடைய நம்பிக்கை "உண்மையான மார்க்கத்தின்" மீது சார்ந்துள்ளது என்பதை உலகிற்கு உணர்ந்த வேண்டும்.

 

II பேதுரு 1:16 நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகியஇயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்.

 

அன்றைக்கு அப்போஸ்தவர்கள், இயேசுவின் மகத்துவத்தை கண்ணாரக்கண்டு சாட்சி சொன்னார்கள், நாம் நம்முன் இருக்கும் சரித்திரத்தை, வரலாற்றை, பரிசுத்த வேதாகமத்தின் மீது செய்யப்பட்ட  ஆய்வுகளை படித்து புரிந்துக்கொண்டு, செண்பகப்பெருமாள் மற்றும் முனைவர் ஜோயல் செல்லத்துரை போன்றவர்களின் முட்டாள்தனமான வாதங்களுக்கு பதில்களைத் தரவேண்டும்.

(செண்பகப்பெருமாள் அவர்களுக்கு ஒரு நற்செய்தி, அதாவது அவரது புத்தகத்திற்கு ஒரு இலவச விளம்பரத்தை நான் கொடுத்துள்ளேன். இனி இப்புத்தகத்தின் விற்பனை சூடுபிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஒரு சிக்கல் என்னவென்றால், இப்புத்தகத்தை வாங்கி படிக்கும்  கிறிஸ்தவர்களில் சிலர் அவருக்கு பதில்களை பல வகைகளில் கொடுப்பார்கள் என்பதையும் மனதில் வைக்கவும்)

 

இப்போதைக்கு ரெவரெண்டு முனைவர் எஸ் ஜோயல் செல்லத்துரை அவர்களை விட்டுவிட்டு, திரு எஸ் செண்பகப்பெருமாள் அவர்களின் “முகவுரையை” ஆய்வு செய்ய தொடங்குவோம்.  



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

 இயேசுவின் வெற்றியும்: மதம்சாராத ஆன்மீகம் - ஒரு மெகா ஃபிராடு!

(“யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்“ என்ற புத்தகத்துக்கு கொடுக்கப்பட்ட முந்தைய பதிலை [பாகம் 2] படிக்க இங்கு சொடுக்கவும்)

முன்னுரை:

கடந்த தொடரில், செண்பகப்பெருமாள் அவர்களின் புத்தகத்திற்கு “வாழ்த்துரை” எழுதிய செல்லதுரை அவர்களின் வரிகளை ஆராய்ந்தோம். வாழ்த்துரையை உண்மையாகவே 'ரெவரெண்டு செல்லதுரை" அவர்கள் தான் எழுதினாரா அல்லது திரு செண்பகபெருமாள் அவர்களே சுயமாக வாழ்த்துரையை எழுதிக்கொண்டு, ரெவரெண்டு செல்லதுரை அவர்களின் பெயரை பயன்படுத்திக்கொண்டாரா என்பது தான் சந்தேகம்.  குறைந்தபட்சம் புத்தக வெளியீட்டு விழாவில், புத்தகத்தின் ஒரு பிரதியை திரு செண்பகப்பெருமாள் அவர்கள் 'ரெவரெண்டு செல்லத்துரை' அவர்களிடம் கொடுத்து இருந்திருப்பார் என்று நாம் நம்பலாம். இவ்விருவரில் யாரிடமாவது நேரிலோ அல்லது தொலைபேசியிலோ பேசும் வாய்ப்பு கிடைத்தால், மேற்கண்ட கேள்வியை நிச்சயம் கேட்கவேண்டும். (வெளியீட்டு விழா என்றால் பிரமாண்டமாக செய்யவேண்டியதில்லை, நண்பர்கள் 4 பேர் ஒரு அறையில் சந்தித்து, டி காபி குடித்து, பிஸ்கட்டுகளை சாப்பிட்டு, புத்தகத்தை அறிமுகப்படுத்தினாலும், அது வெளியீட்டு விழா தான்).

இப்போது, நம் கதாநாயகன் “எஸ் செண்பகப்பெருமாள்” அவர்களின் பக்கம் நம் கவனத்தை மொத்தமாகச் செலுத்துவோம். அவர் எழுதிய முகவுரையின் முதலாவது பத்தியை பார்ப்போம்.  

 

யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும், பக்கம் 9 - முகவுரை:

வரிக்கு வரி அப்படியே மேற்கோள் காட்டாமல், அவர் எழுதியவைகளின் சுருக்கத்தை இங்கு தருகிறேன்.

1) அவர் எழுதிய புத்தகம், மதம் சார்ந்த முயற்சிக்கு உட்பட்டது இல்லையாம்.

2) மதம் என்பது கடவுள் பற்றி பேசும் ஒரு கொள்கையாம்

3) ஆன்மீகம் என்பது மதங்களிலிருந்து வேறுபட்டது, அது ஆன்மாவைப் பற்றியது. அதில் உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஆண், பெண், மனிதன் மற்றும் இதர ஜீவராசிகள் என்று வித்தியாசப்படுத்தும் கொள்கை இருக்காதாம்.

4) மேற்கண்ட பண்புகள், எந்த ஒரு மதத்திற்கும் இல்லையாம்.

5) மதவாதிகள் அனைவரும் தம் மதம் உயர்ந்தது, மற்றவை பொய்யானவை என்ற அகங்கார உணர்வு கொண்டவர்களாக இருப்பார்களாம்.

 

மூன்று வகையான மதவாதிகள்:

மேற்கண்ட ஐந்து பாயிண்டுகளை படிக்கும் போது, உடல் சிலிர்க்கிறமாதிரி இருக்கின்றதா உங்களுக்கு? அப்படியானால், நீங்கள் சரியாக குழம்பி இருக்கிறீர்கள் என்று அர்த்தம். மதங்களை பக்கத்தில் தள்ளிவிட்டு, நான் ஆன்மீகத்தை சொல்லித்தருகிறேன் என்று ஒருவர் சொன்னால், அவரை நம்புவதைக் காட்டிலும், காட்டில் நம் எதிரே நிற்கும் கரடியை நம்புவது நல்லது.

மதவாதிகள் மற்றும் ஆன்மீக வாதிகளை மூன்று  வகையாக பிரிக்கலாம்.

முதல் வகை:

“நான் இந்த மதத்தை பின்பற்றுகிறேன், உன் மதத்தை ஏற்கமாட்டேன்" என்று நம் முகத்துக்கு நேராக நின்று யாராவது சொன்னால்,  மேலும் சண்டைக்கு வந்தாலும் சரி, அவனை நாம் நம்பலாம். ஏனென்றால், அவன் தன் நிலைப்பாட்டை (நம்பிக்கையை மறைக்காமல்) சொல்லிவிட்டான், மேலும் நம் நெஞ்சில் வாள் பாய்ச்ச வந்தாலும், நம் வலிமையின் அடிப்படையில் அவனோடு நாம் போராடலாம் / ஜெயிக்கலாம் / தப்பிக்கலாம். ஒரு வேளை நம் நெஞ்சில் குத்திவிட்டாலுல், நம் உடல் மண்ணில் சாய்வதற்கு முன்பு நம்மை குத்தியவன் யார் என்ற உண்மையை அறிந்து  நாம் மடியலாம்.  இவன் முதல் வகை.

இரண்டாவது வகை:

இந்த வகை மனிதன், “அனைத்து மதங்களையும் ஒன்றாகவே பார்ப்பேன்” என்றுச்சொல்லி நம்மோடு தோளோடு தோள் சேர்த்து நடப்பான். ஆனால், உள்ளத்தில் ஒரு மதத்தையே சார்ந்து நிற்பான், வாய்ப்பு கிடைக்கும் போது, நம் முதுகில் குத்திவிடுவான்.

இவன் சிறிது ஆபத்தானவன். இவனோடு போராட நாம் தயாராக இல்லாத நிலையில் நம் முதுகில் கத்தியால் குத்திவிடுவான். இவனையும் ஒரு வகையில் நாம் பொறுத்துக்கொள்ளலாம், ஏனென்றால், அவனோடு உண்டு, படுத்து, பல ஆண்டுகளாக‌ நட்புக்கொண்டும், அவனை புரிந்துக் கொள்ளாதது நம் தவறு தான். ஆனால், நம்மை குத்தியது யார் என்று திரும்பி பார்த்து அவனை அடயாளம் காணலாம். ஒரு நம்பிக்கை துரோகியை இத்தனை நாட்கள் கூடவே வைத்துக்கொண்டோமே!  என்று துக்கப்படலாம். குறைந்தபட்சம் மண்ணில் சாய்வதற்கு முன்பாக, நம் எதிரி யார் என்று தெரிந்துக்கொண்டு மண்ணில் சாயலாம்.

மூன்றாவது வகை:

இந்த வகையைச் சார்ந்தவன், மேற்கண்ட இரண்டு வகையானவர்களைக் காட்டிலும் மிகவும் ஆபத்தானவன்.  மேற்கண்ட மக்கள், தங்கள் நிலைப்பாட்டைச் சொல்லி வாழ்வார்கள். ஆனால், இவனோ, “எனக்கு எந்த மதமும் வேண்டாம், மதங்களை கடந்தவன் நான், மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளை காட்டும் மதம் நமக்கு வேண்டாம்” என்பான். இவன் ஒரு  புதிய ஆன்மீகக் கொள்கையை மக்களிடம் பரப்புவான்.

 

நம்முடைய மக்கள் மேற்கண்ட இரண்டு பேரை பின்பற்றுவதைக் காட்டிலும் இப்படிப்பட்ட ஆன்மீக வா(ந்)தியை அதிகமாக நம்பி ஏமாறுவார்கள். இவனை நம்புபவர்களுக்கு தங்கள் எதிரி யார் என்று மரிக்கும்வரைக்கும் தெரியாமல் போகும்.

இவன் நம்மோடு ஒரே பாயில்  படுப்பான், ஒரே இலையில் சாப்பிடுவான் (தட்டு இல்லை, இலை). நீங்களும் அவனும் ஒரே இலையில் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது, சில நிமிடங்களில் விஷம் வைத்த உணவை சாப்பிட்டதால் உங்கள் கண்களுக்கு முன்பாக அவன் துடிதுடித்து சாவான்,  அவன் உங்கள் கண்களுக்கு முன்பாக மரிப்பதைப் பார்த்து நீங்கள் சுதாரித்துக்கொள்வதற்கு முன்பாகவே, நீங்களும் துடிதுடித்து சாவீர்கள். ஏனென்றால், ஒரே இலையில் இருவரும் பிசைந்து சாப்பிட்ட உணவாயிற்றே, விஷம் இருவரின் உயிரையும் குடிக்குமே!

 

யார் விஷம் வைத்தான் என்று உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் செத்துவிடுவீர்கள். இவன் மட்டும் ஐந்து நிமிடங்களுக்கு பிறகு தன் நடிப்பை முடித்துக்கொண்டு, எழுந்து நின்று உங்களைப் பார்த்து ஏளனமாக சிரித்துவிட்டு, அடுத்த நபரிடம் தன் 'மதம் சாராத ஆன்மா' கொள்கையை கொண்டுச் செல்வான்.

 

இப்படிப்பட்டவர் தான் 'திரு செண்பகப்பெருமாள்' அவர்கள்.  

  • மதம் உண்டு என்றுச் சொல்பவனை நம்பலாம். 
  • எல்லா மதமும் சமமானதே என்றுச் சொல்பவனையும் நம்பலாம். 
  • ஆனால், மதங்களைக் கடந்த 'ஆன்மீகத்தை'ச் சொல்கிறேன் என்றுச் சொல்பனை நம்பவே கூடாது.

உதாரணத்திற்குச் சொல்வதானால், சத்குரு ஜக்கி வாசுதேவ் என்ற ஆன்மீகவாதியின் பேச்சுக்களை கேட்டுப்பாருங்கள். நான் எந்த மதத்தையும் சார்ந்தவன் அல்ல என்றுச் சொல்லுவார். ஆனால் ஆன்மீகம் பேசுவார்.  இந்து தெய்வங்களே இல்லை என்பார், அல்லது அவர்களும் மனிதர்களே என்பார். தன் பேச்சுத்திறமையால் அனைவரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வார். அனைவரும் இவருடைய பேச்சில் மயங்குவார்கள்(இவர் சொல்லும் ஆன்மீகம் என்னவென்று புரியாமல் அமைதியாக இருப்பார்கள்). ஆனால், தன் ஆசிரமத்தில் பெரிய சாமியின் சிலையை வைத்துக்கொண்டு, இந்துக்களின் சடங்குகள் விரதங்கள், பூஜைகள் என்றுச் சொல்லக்கூடியவைகளைச் செய்வார். இருந்தபோதிலும் நான் ஒரு இந்து இல்லை என்பார். மதம் சாராத ஆன்மீகம் என்றுச் சொல்லி, ஒரு மதத்தை மறைமுகமாக யாருக்குமே தெரியாமல் பரப்பிக்கொண்டு இருப்பார். 

நான் இந்துத்துவத்தை பின்பற்றுகிறேன் என்றுச் சொல்லும் உத்திரபிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத்தைக் காட்டிலும், ஆபத்தானவர் சத்குரு ஜக்கி வாசுதேவ் என்ற ஆன்மீகவாதி. 

 

இதே போலத்தான், திரு செண்பகப்பெருமாளும், மதங்கள் சாராத ஆன்மீகம் என்று பேசிக்கொண்டு இருக்கிறார், இவர் ஆபத்தானவர்.

 

அடுத்ததாக, செண்பகப்பெருமாள் அவர்கள் கீழ்கண்ட குற்றச்சாட்டை முன்வைக்கிறார்:

“மதவாதிகள் அனைவரும் தம் மதம் உயர்ந்தது, மற்றவை பொய்யானவை என்ற அகங்கார உணர்வு கொண்டவர்களாக இருப்பார்க‌ள்.”

இப்படி இவர் சொன்னதிலிருந்து, இவரும் மதவாதிகளில் ஒருவராக ஆகிவிட்டார் அல்லவா? தான் குற்றப்படுத்தும் ஒன்றை, “தானே” செய்துவிட்டார் இல்லையா! மதவாதிகளுக்கு இருக்கும் அகங்காரம் இவருக்கும் உள்ளது என்று அர்த்தமாகின்றதல்லவா? ஏனென்றால், மற்றவர்களின் கொள்கைகள் உண்மையில்லை, நான் சொல்லும் மதம்சாராத ஆன்மீகம் தான் சிறந்தது என்று சொல்கிறாரே, இது மதவாதமே அல்லாமல் வேறு என்ன?

 

மதங்கள் அனைத்தும் போதிப்பது ஒரே கொள்கையைத் தானே! ஏன் மனிதன் தான் பின்பற்றுவது தான் உண்மையானது என்கின்றான்?

 

எல்லா மதங்களும் ஒன்றையே போதிக்கின்றன என்று சொல்வது தவறான கருத்தாகும். மேலோட்டமாகப் பார்த்தால் எல்லா மதங்களும் ஒன்று போலவே தென்படும், ஆனால் அடிப்படையில் ஒவ்வொரு மதமும் மற்ற மதங்களை புறக்கணிக்கின்றன என்பது தான் உண்மை.

 

மதங்களை பயன்படுத்தி, ஆன்மீக‌ வியாபாரம் செய்ய வேண்டும் என்று நினைக்கும் மனிதர்கள், “எல்லா மதங்களும் சொல்வது ஒன்றுதான், எம்மதமும் சம்மதம்” என்று சொல்லி மக்களை கவர்ந்து தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்வார்கள். இப்படித்தான் பல ஆன்மீகவாதிகள் நம் இந்தியாவில் உலாவிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி சொல்கிறேன் என்று என் மீது கோபம் கொள்ள வேண்டாம். இது தான் உண்மை. என் மார்க்கம் தான் உண்மையானது, வேறு மார்க்கங்கள் பொய்யானவை என்று வெளிப்படையாகச் சொல்லும், இந்து ஆன்மீகவாதிகள் யாராவது இருக்கிறார்களா? கவனித்துப்பாருங்கள். அப்படி சொன்னால், அவர்களின் வியாபாரம் முன்னேறாது.

 

எல்லா மதங்களையும் மேலோட்டமாகப் பார்த்தால் “நன்மை செய்யுங்கள் தீயவை செய்யாதீர்கள்” என்ற பொதுவான கருத்தை சொல்கின்றன! எனவே எல்லா மதங்களும் இறைவனடி சேர்வதற்கு வழிகாட்டுகின்றன என்று இவர்கள் கூறுவார்கள். ஆறுகள் அனைத்தும் கடைசியாக கடலில் சென்று சேர்வது போல மதங்கள் அனைத்தும் கடைசியாக அந்த இறைவனிடம் சேர்க்க நமக்கு உதவி செய்கின்றன என்று இப்படிப்பட்ட மத வியாபாரிகள் அல்லது ஆன்மீக குருக்கள் சொல்லி, மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு அடிப்படைக் கோட்பாடு உண்டு அதனை அம்மதத்தின் புத்தகங்களில் காணலாம். அவைகளை மறைத்துவிட்டு, பணத்திற்காகவும் புகழுக்காகவும் ஆன்மீக குருக்கள்  பொய்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

 

மனிதர்களை நாம் பார்க்கும் போது பொதுவாக எல்லோரும் ஒரே மாதிரியாக காணப்படுவார்கள் (இங்கு தோற்றத்தைச் சொல்லவில்லை), அதாவது மனிதர்கள் அனைவருக்கும் கண்கள், காதுகள் மூக்கு, கை, கால்கள் இருக்கின்றன. இதனால் எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியாக சிந்திப்பார்கள் என்றும், ஒரே குணநலன்களை உடையவர்களாக இருப்பார்கள் என்றும் சொல்வது மடமையாகும். மேலோட்டமாகப் பார்க்கும்போது எல்லா மனிதர்களும் ஒன்று போல தென்பட்டாலும், ஒவ்வொருவரின் சிந்தனையும் செயல்பாடும் வெவ்வேறு விதமாக இருக்கும். அதுபோல மேலோட்டமாகப் பார்க்கும்போது எல்லா மதங்களும் “நன்மையை செய்யுங்கள், தீமையை செய்யாதிருங்கள், பக்தி உள்ளவர்களாக இருங்கள், தர்மம் செய்யுங்கள்” என்று சொல்வதை வைத்துக்கொண்டு, மதங்கள் அனைத்தும் இறைவனிடம் சேர்க்க நமக்கு உதவும் என்று சொல்வது சரியான கருத்து அல்ல.

 

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

பகவத் கீதை:

 

உதாரணத்திற்கு பகவத் கீதையை எடுத்துக்கொள்வோம். கீழ்க்கண்ட மூன்று ஸ்லோகங்களை (வசனங்களை) படித்துப்பாருங்கள்.

7.10 பிருதாவின் மகனே, எல்லா உயிரினங்களின் மூல விதையும், புத்திசாலிகளின் புத்தியும், பலசாலிகளின் பலமும் நானே என்பதை அறிவாயாக.

9.17 இந்த அகிலத்தின் தந்தையும் தாயும் காப்பவனும் பாட்டனாரும் நானே. அறியப்பட வேண்டிய பொருளும், தூய்மைப்படுத்தும் பொருளும், 'ஓம் என்னும் மந்திரமும் நானே. ரிக், ஸாம, யஜுர் வேதங்களும் நானே.

10.8 ஜட, ஆன்மீக உலகங்கள் அனைத்திற்கும் மூலம் நானே. எல்லாம் என்னிடமிருந்தே தோன்றுகின்றன. இதனை நன்றாக அறிந்த அறிஞர்கள், எனது பக்தித் தொண்டில் ஈடுபட்டு, இதயப்பூர்வமாக என்னை வழிபடுகின்றனர்.

மேற்கண்ட வசனங்களில் உலகத்தின் மற்றும் உயிர்களின் மூலம் நான் தான் என்று கிருஷ்ணர் தெளிவாக கூறுகின்றார். (இல்லை, இந்த அர்த்தத்தில் கிருஷணர் அல்லது பகவத்கீதை ஆக்கியோன் சொல்லவில்லை என்று யாராவது சொன்னால், நம்பாதீர்கள். முதலாவது அவ்வார்த்தைகளை எழுதியவர் எந்த பொருளில் எழுதினார் என்பதை பாருங்கள், உங்கள் சொந்த கருத்தை இங்கு நுழைக்கமுயலாதீர்கள்).

 

இவ்வசனங்கள் “வேறு ஒரு இறைவன் இருப்பதையும், வேறு மதங்கள் இருப்பதையும் புறக்கணிக்கின்றன” அல்லவா? பகவத் கீதையை நம்பி, அதனைப் படித்து விசுவாசிக்கின்ற ஒரு ஆன்மீகவாதி “இதர மதங்களும் உண்டு, இதர தெய்வங்களும் உண்டு, இவைகள் அனைத்தும் இறைவனை அடையும் வழிகள்” என்று சொன்னால், அவன் பொய் சொல்கிறான் என்று அர்த்தம். அவன் பகவத்கீதைக்கு நம்பிக்கை துரோகம் செய்கின்றான் என்று அர்த்தம்.  எனவே, பகவத்கீதையை நம்புகிறவர்கள் மற்ற மதங்களை புறக்கணிக்கிறார்கள், இது அவர்களுடைய தவறு அல்ல, அவர்கள்  நம்புகின்ற புத்தகமும் அப்படி சொல்கின்றது அவ்வளவுதான். 

 

ஆக ஒரு இந்து தன் மார்க்கம் தான் உண்மையானது என்று "நம்புவதில்" தவறில்லை.

பகவத் கீதை என்பது உண்மையான வேதமா? கிருஷ்ணர் இறைவனா? உண்மையாகவே மகாபாரதம் நடந்த சரித்திரமா? போன்ற கேள்விகள் ஆராய்ச்சிக்கு உரியது, அது வேறு விஷயம், அந்த ஆராய்ச்சிப் பற்றி நான் இங்கு கூறவில்லை. மேற்கோள் காட்டிய வசனங்களை மட்டும் அடிப்படையாகக்கொண்டு எடைபோடாமல், முழு புத்தகத்தையும் ஆய்வு செய்து தான் முடிவு எடுக்கமுடியும். அந்த முடிவையும் அனைவரும் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகம் தான்.  பகவத் கீதையை வேதம் என்று கருதினால், அது இப்படித்தான் சொல்கிறது  என்று நம்புகிறவன் தான் உண்மையான பக்தன். கீதை ஒன்றைச் சொல்ல, அதனை மாற்றி பக்தன் வேறுவகையாகச் சொன்னால், அதை ஏற்றுக்கொள்ளமுடியுமா?

 

பகவத்கீதை இப்படி சொல்லியிருக்கும் போது, பல ஆன்மீகவாதிகள் “எம்மதமும் சம்மதம்” என்று சொல்லி ஆசிரமங்கள் நடத்துகிறார்கள். இது அவர்களுக்கு வியாபாரம் அவ்வளவுதான். உண்மையில் அவர்கள் பகவத்கீதைக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்று அர்த்தம்.

 

அடுத்ததாக குர்ஆனுக்கு செல்வோம்

 

குர்ஆன்:

 

குர்ஆனில் இருந்து இரண்டு வசனங்களைப் பார்ப்போம்:

47:19. (நபியே!) நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத் திற்குரிய வேறொரு இறைவன் இல்லை என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொண்டு, நீங்கள் உங்களுடைய தவறுகளை மன்னிக்கக் கோருவதுடன், நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்க ளுக்கும் மன்னிப்பு கோருங்கள்! (நம்பிக்கையாளர்களே!) உங்களுடைய நடமாட்டத்தையும் நீங்கள் தங்கும் இடங்களையும் அல்லாஹ் நன்கறிவான் 

57:3. அவனே முதலானவன்; அவனே இறுதியானவன்; அவனே வெளிப்படையானவன்; அவனே மறைவானவன்; அவனே ஒவ்வொன்றையும் நன்கறிந்தவன். (அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்)

"அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை, அவன் தான் ஆரம்பம், அவன் தான் முடிவு" என்பதுதான் இவ்வசனங்களின் பொருள். குர்ஆன் இப்படி சொல்லிவிட்ட பிறகும் குர்ஆனை நம்புகிற முஸ்லிம், எம்மதமும் சம்மதம் என்று சொன்னால், அவன் ஒரு ஏமாற்றுக்காரன் அவன் எதோ தன் வியாபாரத்திற்காக மக்களை ஏமாற்றுகிறான் என்று அர்த்தம். எனவே தான் முஸ்லிம்கள் இஸ்லாமை அங்கீகரித்து மற்ற மார்க்கங்களை புறக்கணிக்கிறார்க‌ள். இதில் அவர்களின் தவறு ஒன்றும் இல்லை.

 

குர்ஆன் உண்மையான இறைவேதமா? அல்லாஹ் உண்மையான இறைவனா? போன்ற கேள்விகள் எல்லாம் ஆராய்ச்சிக்கு உரியது. மேற்கோள் காட்டிய வசனங்களை மட்டும் அடிப்படையாகக்கொண்டு எடைபோடாமல், முழு புத்தகத்தையும் ஆய்வு செய்து தான் முடிவு எடுக்கமுடியும். அந்த முடிவையும் அனைவரும் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகம் தான். அடிப்படையில் பார்க்கும்போது குர்ஆன் வேறு ஒரு மார்க்கத்தை அங்கீகரிப்பதில்லை, கீதையின் மேற்கண்ட வசனங்களும் வேறு மார்க்கத்தை அங்கீகரிக்காத வசனங்கள் தான். 

 

இப்பொழுது பைபிளுக்கு செல்லுவோம்.

 

பைபிள்: பைபிளில் இருந்து இரண்டு வசனங்களைப் பார்ப்போம்.

ஆதியாகமம் 1:1 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.

பைபிளின் முதல் புத்தகம் முதல் வசனம் மேற்கண்ட விதமாக தொடங்குகிறது. இந்த வசனத்தின்படி பைபிளில் சொல்லப்படுகிற தெய்வம், “வானத்தையும் பூமியையும் படைத்தார்” என்று அர்த்தமாகின்றதல்லவா? இந்த வசனம் வேறு தெய்வங்களை புறக்கணிக்கிறது.

 

பைபிளை நம்புகிற ஒரு கிறிஸ்தவன் அல்லது ஒரு போதகர், எல்லா மதமும் சம்மதம் என்றோ, எல்லா மதங்களும் இறைவனை அடையும் வழிகள் தான் என்று  சொல்வானானால், அவன் மிகப் பெரிய பொய்யன். அவன் பைபிளின் வசனங்களை நம்பவில்லை என்று அர்த்தம். 

 

இயேசு சொன்ன ஒரு வசனத்தை பார்ப்போம்:

யோவான்  14: 6. அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

இறைவனை அடைவதற்கு என்னைத் தவிர வேறு வழி இல்லை என்று இயேசு தெளிவாகச் சொல்கிறார். இதுவும் இதர மதங்களை புறக்கணிக்கின்ற வசனம் தான். “நானும் ஒரு வழி” என்று சொல்லவில்லை, “நானே வழி” என்றுச் சொல்கிறார். இதோடு நிற்காமல், “என்னைத்தவிர வேறு வழி இல்லை பிதாவை அடைவதற்கு” என்றுச் சொல்லி, இதர மார்க்கங்களின் கதவை அடைத்துவிட்டார் இயேசு.

 

இயேசுவின் இந்த வசனங்களையும் படித்து நம்புகின்ற ஒரு கிறிஸ்தவர், எல்லா மதங்களும் உண்மை தான், அவைகள் எல்லாம் இறைவனை அடையும் வழி தான், என்று சொன்னால், அவனை விட மிகப் பெரிய பொய்யன் யார் இருக்க முடியும்?

 

பைபிள் உண்மையான வேதமா? இயேசு இறைவனா? அவர் மட்டும்தான் வழியா? போன்ற கேள்விகள் எல்லாம் ஆய்வுக்கு உரியது. மேற்கோள் காட்டிய வசனங்களை மட்டும் அடிப்படையாகக்கொண்டு எடைபோடாமல், முழு புத்தகத்தையும் ஆய்வு செய்து தான் முடிவு எடுக்கமுடியும். அந்த முடிவையும் அனைவரும் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகம் தான். ஆனால் பைபிளை பொருத்தமட்டில், அது வேறு மார்க்கத்திற்கு இடம் தரவில்லை.

 

பகவத் கீதை நம்புகின்ற ஒரு இந்துவோ, குர்ஆனை நம்புகின்ற ஒரு முஸ்லிமோ, பைபிளை நம்புகின்ற ஒரு கிறிஸ்தவனோ, தன் மார்க்கம் தான் உண்மையான மார்க்கம், மற்ற மதங்கள் பொய்யானவை என்று நம்புவதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. ஏனென்றால் அவனவன் வேதம் என்று கருதுகின்ற புத்தகங்கள் அப்படித்தான் சொல்கின்றன.

 

எல்லா மக்களையும் நேசியுங்கள்” என்று இயேசு கட்டளையிட்டுள்ளாரா? என்ற கேள்வி எழுப்பப்பட்டால் “ஆம்” என்பது தான் பதில், ஆம் பைபிள் அப்படித்தான் சொல்கிறது. ஆனால் அதே பைபிள் “எல்லா மதங்களும் சமம், மதங்களுக்கு இடையில் வேறுபாடு காட்ட வேண்டாம்” என்று சொல்கிறதா என்று கேட்டால் “இல்லை” என்பதுதான் சரியான பதில். 

 

ஆகையால், மேலோட்டமாக மதங்களை பார்க்கும்போது அவைகள் ஒன்று போலத் தென்படும், ஆனால் அடிப்படையில் ஒவ்வொரு மதமும் மற்றொரு மதத்தை புறக்கணிக்கின்றது என்பதுதான் உண்மை. கிருஷ்ணர் அல்லாஹ்வையும், இயேசுவையும் புறக்கணிக்கிறார். அல்லாஹ் கிருஷ்ணரையும் இயேசுவையும் மறுக்கிறார். இயேசு அல்லாஹ்வையும் கிருஷ்ணரையும் புறக்கணிக்கிறார். இவர்களில் யார் உண்மையான தெய்வம் என்பதை அறிவது மனிதர்களின் கடமை.

 

வெளிநாடுகளில், ஒரு கத்தோலிக்க சபை, இந்துக்களை அழைத்துக்கொண்டு வந்து பகவத் கீதையை படிக்க அனுமதித்தார்கள் என்ற செய்தியை கேட்டு ஆச்சரியப்பட்டேன். முஸ்லிம்களை அழைத்துக் கொண்டு வந்து, குர்ஆனை படிக்கச் சொன்னார்கள் என்று கேள்விப்பட்டேன். இவைகளெல்லாம் ஏமாற்று வேலைகள், பைபிளின் படி, தேவனுக்கு எதிராக செய்யும் நம்பிக்கை துரோகங்கள். பகவத்கீதையில் நான் தான் கடவுள் என்று கிருஷ்ணர் சொல்கின்றார், அதனைக் கொண்டு வந்து திருச்சபையில் வாசித்தால், பைபிளில் 'நான் தான் கடவுள்' என்றுச் சொன்ன தேவனை கேலிசெய்வது  போல ஆகாதா? ஒரு அடிப்படை புத்தி நமக்கு வேண்டுமல்லவா?  மக்களோடு நல்லிணக்கம்வேண்டுமென்பது வேறு விஷயம். மதங்களோடு நல்லிணக்கம் தேவையில்லை. கிறிஸ்தவர்கள் இந்துக்களை நேசிக்கவேண்டும், முஸ்லிம்களை நேசிக்கவேண்டும், அவர்களுக்காக ஜெபிக்கவேண்டும், அவர்களுக்கு உதவி செய்யவேண்டும், மருத்துவம் செய்யவேண்டும், சமூகத்தில் நடக்கும் கேடுகளை எல்லோரும் கைகோர்த்து சேர்ந்து களைய  முயலவேண்டும். இப்படி மக்களிடையே நல்லிணக்கம் உண்டாக்கவேண்டுமே ஒழிய, அவர்களின் வேத நூல்களை கொண்டு வந்து நம் சபைகளில் தேவசமூகத்தில் வாசித்தால், அவர்களுக்கும் அது அவமானம், நமக்கும் அவமானம். ஒரு ஏழை இந்துவின் முஸ்லிமின் மருத்துவ செலவிற்காக, உன் திருச்சபையை விற்று கூட நீ செலவு செய்யலாம், அதனை இயேசு  மெச்சிக்கொள்வார், ஏனென்றால் நீ மனிதனுக்கு உதவி செய்தாய். ஆனால், மற்ற மதங்களின் வேதங்களை கொண்டு வந்து தேவ சமூகத்தில் வாசித்து, விசுவாசிகளை குழப்புவது மிகப்பெரிய தவறாகும்.

“மதவாதிகள் அகங்காரம் கொண்டவர்களாக, தன் மதம் தான் சரியானது மற்றவைகள் பொய்யானவைகள் என்று சொல்லுகிறார்கள்” என்று  திரு செண்பக‌ப்பெருமாள்  குற்றம் சாட்டுகிறார். இதில் மக்களின் தவறு ஒன்றும் இல்லை,  அவர்களின் வேதம் அப்படித்தானே சொல்லுகிறது. அது பகவத் கீதையாக இருக்கட்டும், குர்ஆனாக இருக்கட்டும், அல்லது பைபிளாக இருக்கட்டும் அந்தந்த புத்தகம் சொல்லுகிறபடி தானே செய்ய வேண்டும்.

 

இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை கூற விரும்புகிறேன், தன் மதம் தான் உண்மையானது என நம்புகின்ற ஒரு கிறிஸ்தவர், ஒரு ஹிந்து, அல்லது ஒரு முஸ்லிம் மற்ற மதங்களை நம்புகிறவர்களை துன்பப்படுத்த கூடாது, கட்டாயப்படுத்தக்கூடாது. இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். இதை செய்யாத போது, மக்கள் நம்மை தீவிரவாதி என்றும் பயங்கரவாதி என்றும் பட்டம்  சூட்டுவார்கள். பைபிளின் படி, நற்செய்தி உலகிற்கு எடுத்துச்செல்லவேண்டும், அதனை ஏற்றுக்கொள்ளாதவர்களை நாம் ஒன்றுமே செய்யக்கூடாது. நம் வேலை நற்செய்தி அறிவிப்பது அவ்வளவு தான். அவர்கள் ஏற்கவில்லையென்றுச் சொல்லி, கத்தியை எடுத்து கழுத்தில் வைத்து, ஏற்கிறாயா? இல்லையா? என்று கட்டாயப்படுத்தினால், அதனைத் தான் "பயங்கரவாதமென்றும், தீவிரவாதமென்றும்" உலகம் அழைக்கிறது.

கடைசியாக, சுருக்கத்தை சொல்லவேண்டுமென்றால் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒவ்வொரு மதமும் இதர மதங்களை புறக்கணிக்கின்றது. மேலோட்டமாகப் பார்க்கும்போது அவைகள் ஒன்று போல  தென்படும். இதனைப் பயன்படுத்தி பல ஆன்மிகவா(ந்)திகள், மக்களை ஒன்று படுத்துகிறேன், மதநல்லிணக்கத்தை உண்டாக்குகிறேன், எல்லா மதமும் சமம் தான், ஆறுகள் அனைத்தும் கடலில் சென்று முடிவடைவது போல, எல்லா மதங்களும் இறைவனை சென்றடையும் மார்கங்கள் தான் என்று பொய்யாக சொல்லிக்கொண்டு, தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களைத் தான் மக்கள் அதிகமாக நம்புகிறார்கள். நான் தெளிவாகவும் வெளிப்படையாகவும் மதங்களின் நிலைப்பாட்டை சொல்லியுள்ளேன். எந்த மதம் சொல்வது உண்மை என்று ஆய்வு செய்ய வேண்டியது மக்களுடைய கடமையாகும். ஒவ்வொரு வேதமும் தன்னைப்பற்றி பெருமையாகத் தான் சொல்லிக் கொள்ளும், ஆனால் அது உண்மையா இல்லையா என்பதை ஆய்வுதான் முடிவு எடுக்கும், பகவத்கீதைக்கும் குர்ஆனுக்கும் பைபிளுக்கும் மற்றும் வேறு எந்த மார்க்கத்தின் புத்தகத்துக்கும் இது பொருந்தும். அவ்வளவு ஏன், மதவாதிகள் மீது குற்றம்சாட்டிய  திரு செண்பகப்பெருமாள் அவர்களின் புத்தகத்திற்கும் பொருந்தும், அதனால் தான் அந்த புத்தகத்தை ஆய்வு செய்துக்கொண்டு இருக்கிறோம்.

 

மதம்சாரா ஆன்மீகத்தை கைகழுவி, பைபிளை மட்டுமே விமர்சித்த செண்பகப்பெருமாள்:

வாசகர்கள் இவரின் முதலாவது பத்தியை படித்த பிறகு, இந்த புத்தகத்தில் ஒரு புதிய வகையான ஆன்மீகம் பற்றி இவர் பேசுவார் என்று எதிர்ப்பார்த்து தேடினால், புத்தகம் முடியும் வரைக்கும் 'இவரது மதம்சாரா ஆன்மீகம்' பற்றி வேறு ஒரு இடத்திலும் இவர் சொல்லவேயில்லை என்பதை அறிந்துக்கொள்வார்கள்.  பைபிளை விமர்சிக்கிறேன் என்ற நோக்கில், புத்தகம் முழுவதும் தன் அரைகுறை குற்றச்சாட்டுக்களையும், அறியாமையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

 

இவரின் முதல் புத்தகம் 'குற்றவாளிக்கூண்டில் மநு?':

 

நாம் அடுத்த கட்டுரையை தொடங்குவதற்கு முன்பாக, இவரது முதலாவது புத்தகம் பற்றி, தற்போதய புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள சில வரிகளை பார்க்கவேண்டும். அப்போது தான் இவரது ஆன்மீகம் எது என்பது நமக்கு புரியும்.

யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும், முதல் பக்கம்:

எஸ. செண்பகப்பெருமாள்

ஓய்வு பெற்ற ஆசிரியர். இறையியல் கல்லூரிகளில் பைபிள் குறித்த வகுப்புக்கள் எடுத்துள்ளார். தமிழகம் முழுவதிலும் பைபிள் குறித்தும் இந்திய ஆன்மீகம் குறித்தும் பேசி வருகிறார். ஜாதி-சமய எல்லைகளைக் கடந்து சமூக நல்லிணக்கத்தை பேணும் விதமாக பணியாற்றி வருகிறார். இவருடைய முதல் புத்தகம் “குற்றவாளிக்கூண்டில் மநு?” இந்நூல் இவருடைய இரண்டாவது புத்தகம் ஆகும்.

 

வாசகர்களுக்கு இப்போது புரிந்திருக்கும், இவர் சொன்ன அந்த "மதம் சாராத ஆன்மீகம்" என்பது எதுவென்று. இந்த புத்தகத்தை வெளியிட்ட ‘கிழக்கு பதிப்பகத்தார்கள்' கொடுத்த ஒரு அறிமுகம் தான் மேலே கொடுக்கப்பட்ட பத்தி.  இவர் போதிப்பது 'இந்திய ஆன்மீகமாம்', அப்படியானால் அது என்ன ஆன்மீகம் என்று உங்களுக்குத் தெரிகின்றதா? 

கிழக்கு பதிப்பகத்தார்களுக்கு ஒரு சவாலை இங்கு முன்வைக்கவேண்டும், அதாவது "நீங்கள் பிரிண்ட் செய்த அவரது இரண்டாவது புத்தகமாகிய இந்த புத்தகம், எந்த வகையில் ஜாதி சமயங்களை கடந்து சமூக நல்லிணக்கத்தை பேணும் என்பதை நிருபியுங்கள், உங்களுக்கு நான் ரூபாய் 10,000 (பத்தாயிரம்) பரிசு தருகிறேன்".

இறையியல் கல்லூரிகளில் அவர் பைபிள் வகுப்புக்கள் எடுத்துள்ளார் என்பதெல்லாம் சுத்தப்பொய். அவர் பைபிள் கல்லூரிகளில் சென்று, சிலரோடு தன் அரைகுறை ஆய்வுபற்றி கேள்வி கேட்டு விவாதம் புரிந்திருப்பாரே தவிர, இவருக்கு பைபிள் வகுப்புக்கள் எடுக்கும் அளவிற்கு அறிவும் இல்லை, தகுதியும் இல்லை என்பது தான் உண்மை. 

எந்த பைபிள் இறையியல் கல்லூரியில், பைபிளை அரைகுறையாக விமர்சிக்கும் இப்படிப்பட்டவர்களை அழைத்து வகுப்பு எடுக்கச் சொல்வார்கள்? இவர் என்ன உலக தரம் வாய்ந்த ஆராய்ச்சிகளை செய்த மிகப்பெரிய அறிஞரா? அல்லது ஐநா சபையில் அடிக்கடி சென்று சோற்பொழிவாற்றும் அறிஞரா? ஏதோ, அவர் தன்னைப் பற்றி பொய்யாய்ச் சொன்னதை, மெய்யென்று நம்பி கிழக்கு பதிப்பகத்தார் பிரிண்ட் செய்துள்ளார்கள்.

 

முடிவுரை:

ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்றிக்கொண்டு, அதே நேரத்தில் 'நான் மதங்களுக்கு அப்பாற்பட்டவன்' என்று சொல்பவர்களை நம்பவேண்டாம். இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.

1) செண்பகப்பெருமாள் சொல்கிறார், “நான் மதம் சாராத ஆன்மீகத்தை போதிக்கிறேன்” என்று,

2) கிழக்கு பதிப்பகத்தார்கள் எழுதுகிறார்கள் "இவர் இந்திய ஆன்மீகம்" போதிக்கிறார் என்று!

3) இவரது முதலாவது புத்தகம் “மனு” என்ற நூலுக்கு வக்காளத்து வாங்கும் வகையில் எழுதப்பட்டு இருக்கிறது.

அப்படியானால், இவருடைய  பின்னணி என்னவென்று அறிவது கடினமா?[1]

 

இவர் தன் முகவுரையில் இரண்டாவது பத்தியில் நேரடியாக 'பவுலடியார் மீதும் பைபிள் மீதும் குற்றம் சாட்ட ஆரம்பித்துவிட்டார்', அடுத்த தொடரிலிருந்து இவரது ஆராய்ச்சியின் ஆழமும் அகலமும் உயரமும் நீளமும் என்னவென்பதை பார்ப்போம். பைபிள் மீது இவர் சாட்டும் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் மறுப்பை பார்ப்போம்.

 

அடிக்குறிப்புக்கள்:

[1] குற்றவாளிக்கூண்டில்-மநு – Amazon.in - இந்த புத்தகத்தில் என்ன எழுதப்பட்டு இருக்கிறது? என்பதை அறிய அமேஜான் தொடுப்பில் கொடுக்கப்பட்ட சுருக்கத்தை (Product Description) இங்கு கீழே தருகிறேன் படித்துக்கொள்ளுங்கள்.  

இந்த புத்தகத்தை வாங்கி படித்த ஒரு வாசகர் "Awesome rebuttal of the fraudulent stories built by the Christian British..." என்று பின்னூட்டமிட்டுள்ளார். அப்படியானால், இந்த புத்தகத்திற்குள் என்ன எழுதப்பட்டு இருக்கும் என்று ஓரளவிற்கு கணிக்கமுடிகின்றதா?  வாசகர்கள் வாங்கி படியுங்களேன்! வெறும் 90 ரூபாய் தான். தற்போதைய புத்தகத்துக்கு மறுப்பை கொடுத்துவிட்டு, நான் இந்த புத்தகத்துக்கு வருவேன்.

 

 குற்றவாளிக்கூண்டில்-மநு – Amazon.in (Product Description)

இந்திய ஆன்மிகம் ஒருபக்கம் புகழப்படும் அதே நேரம், இந்தியச் சமூகத்தில் நிலவும் சாதிப் பிரிவினைகள், தீண்டாமை ஆகியவை குறித்துக் கடுமையான விமர்சனங்கள் இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவிலும்கூட இருப்பதைக் காண முடியும்.

 

சாதி ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை, இந்தியச் சமூகத்தில் பெண்களின் நிலை என்று எதனை எடுத்துக்கொண்டாலும் ‘மநு’ என்ற பெயர் உடனே விவாதத்துக்கு வந்துவிடும். மநு தர்மசாஸ்திரம் என்பது இந்தியாவில் ஒரு காலகட்டத்தில் புழக்கத்தில் இருந்த சட்டவிதிகளின் தொகுப்பாகும். இந்தியாவின் இன்றைய சமூகப் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் மநு என்பது இன்றைய அரசியல்வாதிகள் பலரின் கருத்து. இந்தியச்சமூகம், ’மநுவாதி’ சமூகம் என்று ‘இகழப்படுகிறது’.

 

உண்மை என்ன? மநு தர்மசாஸ்திரம் என்பதுதான் இந்தியாவின் ஒற்றைச் சட்டப் புத்தகமாக இருந்ததா? மநு தர்மசாஸ்திரம் உண்மையில் சாதிகள் பற்றி என்னதான் சொல்கிறது? மநு தர்மசாஸ்திரம் எழுதப்பட்டதன் காரணம் என்ன? சாதிகளுக்கும் வர்ணத்துக்குமான வித்தியாசங்கள் என்னென்ன? மநு குறித்து டாக்டர் அம்பேத்கர் என்னவெல்லாம் சொல்லியிருக்கிறார்? தீண்டாமைப் பிரச்சினைக்குக் காரணம் மநுவா? மநு தர்மசாஸ்திரம் என்பது ஒற்றை நூலா அல்லது பல்வேறு காலகட்டங்களில் பலர் புதிது புதிதாக எழுதிச் சேர்த்த ஒரு கலவை நூலா? பிராமணர்கள் என்போர் யார்? சூத்திரர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டதா? வர்ணங்களிலிருந்து சாதிகள் தோன்ற யார் காரணமாக இருந்திருக்க முடியும்? பெண்களின் நிலை அக்காலத்தில் நிஜமாகவே மோசமாக இருந்ததா? மநு தர்மசாஸ்திரத்தில் இடைச்செருகல்கள் இருந்திருக்கக்கூடுமா? மநு தர்மசாஸ்திரம் ‘ஆபத்துக் காலம்’ என்ற பெயரில் குறிப்பிடும் காலகட்டம் எது? இந்தியச் சமூகத்துக்கு நிகழ்ந்த பெரும் ஆபத்து யாது? அந்தச் சமயத்தில் இந்தியச் சமூகத்தைக் காக்க என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன?

 

இதுபோன்ற பல ஆழமான கேள்விகளை நூலாசிரியர் செண்பகப்பெருமாள் ஆராய்கிறார். சில தெளிவான பதில்கள் கிடைக்கின்றன. நூலாசிரியர், இந்திய வேதாந்தம், மநு தர்மசாஸ்திரம், பைபிள் ஆகிய நூல்களில் ஆழ்ந்த புலமை கொண்டவர். அவை குறித்துப் பல பயிலரங்குகள், கருத்தரங்குகள் நடத்திவருபவர். ஓய்வுபெற்ற ஆசிரியர்.



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

 

பைபிள் பற்றிய‌ ஆய்விற்காக செண்பகப்பெருமாள் பயன்படுத்திய நூல்கள் எவை?

(செண்பகப்பெருமாளின் பொய்களும் இயேசுவின் வெற்றியும்)

 

(“யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்“ என்ற புத்தகத்துக்கு கொடுக்கப்பட்ட முந்தைய பதில்களை படிக்க இங்கு சொடுக்கவும்)

 

செண்பகப்பெருமாள் அவர்கள் தம்முடைய புத்தகத்தின் முகவுரையில் எழுதிய முதல் பத்திக்கு முந்தைய கட்டுரையில் மறுப்பைக்கண்டோம். இந்த கட்டுரையில், அவர் தம்முடைய புத்தகத்திற்காக ஆய்வு செய்த நூல்களைப் பற்றிய‌ ஒரு சிறு குறிப்பைக் காண்போம்.

ஆய்வுகளுக்காக பயன்படும் நூல்கள்:

ஒருவர் ஒரு புதினத்தையோ(Novel) அல்லது  கற்பனைக் கதையையோ எழுதவிரும்பினால் அதற்காக அவருக்கு ஆராய்ச்சி நூல்கள் பெரும்பான்மையாக‌ தேவைப்படாது. வாசகர்களின் ருசிக்கு ஏற்றாற்போல் சுவாரசியமாக கதையை கொண்டுச் சென்றால் போதுமானது. ஆனால், ஒரு ஆய்வுப்புத்தகம் என்றுச் சொல்லி, ஒரு மார்க்கத்தின் வேதத்தை விமர்சிக்க விரும்பும் எந்த ஒரு அறிஞரும், தன்னுடைய கருத்துக்கு வலுசேர்க்கும் வண்ணம் பல நூல்களை படித்து, அவைகளை புரிந்துக்கொண்டு, அவைகளிலிருந்து ஆதாரங்களை சேரித்துக்கொண்டு, அதன் அடிப்படையில், தன்னுடைய விமர்சனத்தை மக்களின் முன்பு கொண்டுவருவார். இப்படிப்பட்ட ஆய்வு செய்து, பல நூல்களின் மேற்கோள்களோடு ஒரு புத்தகம் எழுதப்பட்டால், அவரை சிறந்த ஆய்வாளர் என்று உலகம் போற்றும். இது தான் படித்தவர்கள், ஆய்வாளர்கள் பொதுவாக‌ செய்யும் அடிப்படையான செயல். 

திரு செண்பகப்பெருமாள் தன் ஆய்விற்காக எத்தனை நூல்களை பயன்படுத்தியுள்ளார், மேற்கோள் காட்டியுள்ளார்?

தற்போது உலகத்தின் அதிக ஜனத்தொகைக் கொண்ட மதமாக திகழும் கிறிஸ்தவத்தின் புனித நூலை ஒருவர் விமர்சிக்கிறார் என்றால், அவர் வெறுமனே விமர்சிப்பாரா?  பைபிளின் பழைய ஏற்பாட்டையும், புதிய ஏற்பாட்டையும் அவர் விமர்சிப்பதினால், எபிரேய மற்றும் கிரேக்க மொழி அகராதிகளையும், சரித்திரங்களையும அவர் படித்து தன் விமர்சனத்தை முன்வைத்து இருப்பார் என்று நாம் நம்பலாம். அவர் பல பைபிள் விளக்கவுரைகளை படித்து இருந்திருக்கவேண்டும்? அப்போது தான் பைபிள் மீது ஒரு சிறந்த விமர்சனத்தை முன்வைக்கமுடியும்! மேலும் கிறிஸ்தவத்திற்கு வெளியே மதசார்ப்பற்ற நூலாசிரியர்கள், சரித்திர நூல்கள், பைபிளின் அகழ்வாராச்சி நூல்கள் என்றுச் சொல்லி, பல நூல்களை படித்து ஒருவர் விமர்சனம் செய்வாரானால், அடேங்கப்பா! எவ்வளவு வரவேற்பு கிடைக்கும்! எப்படிப்பட்ட மேன்மை அவருக்கு கிட்டும் தெரியுமா? அதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஒரு ஆய்வாளர் தன் கருத்தைச் சொல்லும் போது, இன்னொரு ஆய்வாளர் அவரின் கருத்துகளை விமர்சித்து, மேலதிக விவரங்களோடு பதில்களைத தருவார். இது பொதுவாக நடப்பது தான்.

மேற்கண்ட எதிர்ப்பார்ப்புக்கள் ஒரு ஆய்வு புத்தகத்திற்கு தேவை என்பதை நான் அறிந்திருக்கின்றபடியினால், திரு செண்பகப்பெருமாள் அவர்களின் நூலை வாங்கியவுடன், அதன் முதல் பக்கம் தொடங்கி கடைசி பக்கம் வரை ஒரு ஸ்கேன் செய்துப்பார்த்தேன். எனக்கு தெரிந்த ஆய்வு நூல்களின் பெயர்களோ அல்லது  ஆசிரியர்களின் பெயர்களோ தென்படுமா என்று தேடிப்பார்த்தேன். அதாவது, இந்த ஆசிரியர் எந்தெந்த நூல்களை தன்னுடைய ஆய்விற்காக பயன்படுத்தியுள்ளார் என்பதை அறிய "நூற்பட்டியல் அல்லது பிப்லியோகிராபியை(Bibliography)" தேடிப்பார்த்தேன். ஆனால், அப்படிப்பட்ட ஒன்று உண்டு என்று இந்த ஆசிரியருக்கு  தெரிந்திருக்கவில்லை என்பதை அறிந்துக் கொண்டேன்! உடனே எனக்கு புரிந்துவிட்டது, அதாவது திரு செண்பகப்பெருமாள் என்பவர் ஒரு அரைகுறை ஆள், தான் சாப்பிட்டத்தில் ஜீரணமாகாதவைகளை இந்த புத்தகத்தில் வாந்தி எடுத்திருப்பார் என்பதை மட்டும் உணர்ந்துக் கொண்டேன், எனவே இவருடைய புத்தகம் படிப்பதற்கு தகுதியற்றது என்பதை உணர்ந்தேன்.

ஆனாலும், அவர் தன் அரைகுறை ஆய்வை ஒரு புத்தகமாக வெளியிட்டுவிட்டதால், அதனை படிக்கும் வாசகர்கள் இடறுவார்களே என்பதால், அவருக்கு அவரின் அறியாமையையும், மடமையையும் புரியவைக்கவேண்டும் என்பதற்காக, அவருக்கு பதிலை கொடுக்க தொடங்கினேன். (அறியாமை & மடமை - இவ்விரு வார்த்தைகளுக்கு இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது).

 

பிப்லியொகிராபி என்றால் என்னவென்று அனைவருக்கும் தெரிந்திருக்கும், இருந்தபோதிலும், ஆங்கிலத்தில் சில வரிகளை கிழேதருகிறேன்.

What's a Bibliography? (Source)

A bibliography is a list of all of the sources you have used (whether referenced or not) in the process of researching your work. In general, a bibliography should include:

  • the authors' names
  • the titles of the works
  • the names and locations of the companies that published your copies of the sources
  • the dates your copies were published
  • the page numbers of your sources (if they are part of multi-source volumes)

சரி, போகட்டும், திரு செண்பகப்பெருமாள் அவர்கள் பிப்லியோகிராபியை கொடுக்கவில்லை, குறைந்தபட்சம் புத்தகத்தில் ஆங்காங்கே பல மேற்கோள்களையும், எபிரேய கிரேக்க வார்த்தைகளையும், பல ஆங்கில மற்றும் தமிழ் விளக்கவுரைகளையும் படித்து மேற்கோள்கள் காட்டியிருப்பார் என்ற ஆசையால், புத்தகம் முழுவதையும் படித்து முடித்தேன். அவர் என்னை ஆச்சரியப்படுத்தினாரா? இல்லையா? தொடர்ந்து படியுங்கள்.

 

இப்போது, அவர் மேற்கோள் காட்டிய புத்தகங்களின் பட்டியலை, சரசரவென்று பட்டியலிடப்போகிறேன். அவைகள் எத்தனை பக்கங்கள் நீண்டுக்கொண்டுச் செல்லுமோ! அதனை நீங்களே பாருங்கள்! 

திரு செண்பகப்பெருமாள் அவர்கள் தன் ஆய்விற்காக பயன்படுத்திய இதர நூல்கள்:

  1. The Story of Faith by William Alva Gifford (Amazon link)
  2. Harper’s Bible Dictionary (Amazon link)
  3. “விவிலியத்தில் புனித பவுலின் திருமுகங்கள்”, ஆசிரியர் தியாகு
  4. “கிறிஸ்தவம் நடந்து வந்த பாதை”, ஆசிரியர் டாக்டர் ஐவி பீட்டர்
  5. “வழி, வாய்மை, வாழ்வு - யோவானின் நற்செய்தி நூல் விளக்கம்”, ஆசிரியர் ஞான  ராபின்சன்
 

மேற்கண்ட ஐந்து நூல்களிலிருந்து தான் அவர் சில  மேற்கோள்களைக் காட்டியுள்ளார். அதிகபட்சமாக 11 அல்லது 12 மேற்கோள்களைக் காட்டியுள்ளார். (இப்புத்தகங்களை வாங்க விரும்புபவர்களுக்கு பயன்படும் என்பதற்காக, அமேஜான் தொடுப்பை நான் மேலே கொடுத்துள்ளேன், தமிழ் புத்தகங்களுக்கு தொடுப்பு கிடைக்கவில்லை).

மேற்கோள் காட்டியது ஒன்று, அதனை விளக்கியது இன்னொன்று:

முக்கியமாக, மேற்கண்ட நூல்களில் "The Story of Faith" என்ற நூலிலிருந்து ஒரு மேற்கோளை காட்டிவிட்டு, அதன் ஆசிரியர் என்ன சொன்னாரோ அதற்கு எதிர்மாறாக விளக்கமளித்துள்ளார் நம் மேதாவி திரு செண்பகப்பெருமாள் அவர்கள். அதன் ஆசிரியர் (William Alva Gifford) "தான் ஆதரித்து எழுதிய வரிகளை" இவர் மேற்கோள் காட்டிவிட்டு, அவ்வரிகள் சொல்வதற்கு எதிராக விளக்கமளித்துள்ளார். ஒரு பத்தியை கூட‌ ஆங்கிலத்தில் படித்து புரிந்துக்கொள்ளாத நிலையில் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று இவர் நினைத்துவிட்டாரோ என்னவோ? என்ன ஒரு நயவஞ்சக‌ம்! 

ஒருவேளை திரு செண்பகப்பெருமாள் அவர்களுக்கு, ஆங்கிலம் கூட சரியாக படித்து புரிந்துக்கொள்ள தெரியவில்லையோ! என்ற சந்தேகம் தான் வந்தது. இந்த தொடர் கட்டுரைகளில் இவரின் ஒவ்வொரு வரியும் நெருப்பில் போட்டு புடமிடப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நெருப்பின் சோதனைக்கு இவரின் வரிகள் தாக்குபிடிக்குமா? அல்லது சாம்பலாகுமா என்பதை பொருத்திருந்து பார்க்கவேண்டும் வாசகர்கள்.

அடுத்ததாக, “Harper’s Bible Dictionary” என்ற‌ நூலை சில வார்த்தைகளின் பொருளை மேற்கோள் காட்ட பயன்படுத்தியுள்ளார். தேவையான இடங்களில் இவைகளை காண்போம். இந்த அகராதி அவரது ஆய்விற்கு அதிகமாக உதவவில்லை என்பது என் கருத்து. தேவையான இடங்களில் அதன் மேற்கோள்களைக் காண்போம்.

 

பைபிள் சம்மந்தப்பட்ட இதர‌ ஆய்வு நூல்களை, எபிரேய, கிரேக்க அகராதிகளை, இன்ன பிற சரித்திர நூல்களை இவர் பயன்படுத்தவே இல்லை. இப்படிப்பட்ட நூல்களை பயன்படுத்தினால், தன்னுடைய வெறுப்பை காட்டமுடியாமல் போகும் என்பதாலோ, அல்லது இவ்வித‌ புத்தகங்களை படித்து புரிந்துக்கொள்ளக்கூடிய ஞானம் தனக்கு இல்லை என்பதாலோ தெரியவில்லை, அவர் அந்த பக்கமே தலைவைத்து “படுக்கவில்லை”, சாரி “படிக்கவில்லை”.

 

நீ எந்தெந்த நூல்களை பயன்படுத்தப்போகிறாய்?

 

இவரது இப்புத்தகத்திற்கு பதில்  சொல்லும் நீ எந்தெந்த ஆய்வு நூல்களை பயன்படுத்தப்போகிறாய்? என்று சிலர் என்னிடம் கேட்கலாம்.

1) New International Bible Commentary Hardcover - F.F. Bruce

என்னிடத்தில் F.F. Bruce அவர்களின் பைபிள் விளக்கவுரை புத்தகம் உள்ளது, இதனை நான் அடிக்கடி என் கட்டுரைகளை எழுதுவதற்கு பயன்படுத்துகிறேன் (Amazon Link)

2) தமிழில் தானியேல் ரெஃபரன்ஸ் வேதாகமம் உள்ளது (Link)

3) எபிரேய கிரேக்க பைபிள் மூல மொழி வேதாகமம்: இணையத்தில் எபிரேய, கிரேக்க மொழியில் வேதம் கிடைக்கிறது, அவைகளை தேவைப்படும் போது பயன்படுத்துகிறேன். ஒவ்வொரு எபிரேய மற்றும் கிரேக்க வார்த்தை வேதாகமத்தில் எங்கெங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை சுலபமாக தேடி கண்டுபிடிக்கலாம். அவைகளின் அர்த்தங்களையும், இலக்கண விவரங்களையும் தெரிந்துக்கொள்ளலாம் (Link1Link2Link3 ...).

4) யூத சரித்திரத்தை எழுதிய கி.பி. முதல் நூற்றாண்டு சரித்திர ஆசிரியர் ஜோசபஸ் என்பவரின் அனைத்து நூல்களையும் தேவைப்ப‌படும் போது நான் பயன்படுத்துகிறேன்(Flavius Josephus)

5) சவக்கடல் பற்றிய ஆய்வு நூல்கள்

6) பைபிள் கல்லூரிகளில் எபிரேய மற்றும் கிரேக்க மொழி பேராசிரியர்களோடு தொடர்பு கொண்டு, சில  கேள்விகள் பற்றி ஆலோசனை பெறவும் எனக்கு என் நண்பர்கள் மூலம் வாய்ப்புக்கள் உள்ளது.

7) புதிய மற்றும் பழைய  ஏற்பாட்டின் கையெழுத்துப் பிரதிகளின் புகைப்படங்களை, சில வேளைகளில் இணையத்தின் உதவி கொண்டு ஆய்வுக்காக பயன்படுத்தமுடியும்.

8) பைபிள் ஆங்கில விளக்கவுரைகள் என்று வந்தால், இணையத்தில் பல சிறந்த விளக்கவுரைகள் கிடைக்கின்றன, அவைகளை பயன்படுத்துவேன் (https://www.biblestudytools.com/commentaries/)

9)  யூதர்கள் பழைய ஏற்பாட்டிற்காக எழுதிய  விளக்கவுரைகளையும், சரித்திர விளக்கவுரைகளையும் பயன்படுத்திக்கொள்வேன் (Chabad Link & this Link)

10) இன்னும் அனேக நூல்கள் என் தனிப்பட்ட தொகுப்பில் என் வீட்டில் உள்ளன

இப்படி பல நூல்களை சொல்லிக்கொண்டே போகலாம். இந்த இணைய காலத்தில் ஆய்வு செய்ய விருப்பமும், நேரமும் இருக்கவேண்டுமே தவிர, வீட்டில் உட்கார்ந்துக்கொண்டே, உலகின் பல  சிறந்த நூலகங்களில் கிடைக்கும் பல அறிய  ஆய்வு நூல்களை  படித்து புரிந்துக்கொள்ளலாம். ஆக, ஆய்வு புத்தகம் எழுதுகிறேன் என்றுச் சொல்லி, பைபிள் மீது விமர்சனம் வைக்கிறேன் என்றுச்  சொல்லி, அரைகுறையாக யாராவது எழுதினால், அவர்களுக்கு பதில்களை எழுதுவது தற்காலத்தில் மிகவும் சுலபம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

பெருமைக்காக அல்ல, உண்மையைச் சொல்கிறேன், ஆய்வு என்று வந்துவிட்டால், கிறிஸ்தவர்களும், யூதர்களும் கொஞ்சம் அதிகமாகவே ஆழமாக இறங்கிவிடுகிறார்கள் என்பது என் தாழ்மையான கருத்து. ஆகையால், பைபிளை விமர்சிக்கும் போது,  100 முறை அல்ல, 1000 முறை மறுபரிசீலனைச் செய்வது நல்லது. 

சரி, இப்போது நாம் முடிவுரைக்குச் செல்வோம்.

 

முடிவுரை:

இவ்வளவு கேவலமாக ஆய்வு செய்த இவருக்கு ஏன் பதில் அளிக்க‌வேண்டும்? இவரையும் இவரது புத்தகத்தையும் புறக்கணிக்கவேண்டியது தானே! ஏன் இதற்காக உன் நேரத்தை செலவழிக்கவேண்டும் என்ற கேள்விகள் வாசகர்களுக்கு எழலாம்! ஆனால், இவர் எழுதியவைகளில் எத்தனை தவறுகள் உள்ளன? எத்தனை நியாயமில்லாத குற்றச்சாட்டுக்கள் உள்ளன? எத்தனை தவறான புரிதல்கள் உள்ளன? என்று எத்தனை பேருக்குத் தெரியும்!

இப்படிபட்ட அரைகுறை ஆய்வுகளுக்கு நாம் பதில்  சொல்லவில்லையானால், எதிர்காலத்தில் இவரைப்போன்று அனேக அரைவேக்காடுகள்  ஆன்மீக‌ வியாபாரிகளாக தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு, அறியாமையில் இருக்கும் மக்களை ஏமாற்றுவார்க‌ள் குழப்புவார்க‌ள் என்பதால், இப்படிப்பட்ட பதில்கள் தரப்படவேண்டும், சின்ன சின்ன குற்றச்சாட்டுகளுக்கும் பதில்கள் சொல்லப்படவேண்டும். பைபிளின் சத்தியத்தையும், புனிதத்தையும் உலகிற்கு சொல்ல வேண்டியது நம் கடமையாக இருக்கிறது.

 

திரு செண்பகப்பெருமாள் அவர்களின் முகவுரையை இன்னும் ஆழமாக தோண்டுவோம்...



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

இயேசுவை காப்பாற்றி, கிறிஸ்துவை சிலுவையில் அறைய முயலும் செண்பகப்பெருமாள்!

திரு செண்பகப்பெருமாள் அவர்களின் "யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்" என்ற புத்தகத்துக்கு கொடுத்த முந்தைய பதில்களை படிக்க இங்கு சொடுக்கவும்.

இவர் முகவுரையில் எழுதிய 2 - 5 வரையுள்ள  பத்திக‌ளுக்கு இந்த கட்டுரையில் பதிலைக் காண்போம்.

இவர் தன் புத்தகத்தை மூன்று பகுதிகளாக‌ பிரித்து தன் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்:

  1. பைபிளின் பழைய ஏற்பாடு
  2. பைபிளின் புதிய ஏற்பாடு
  3. பைபிளின் கருத்துக்கள் - ஓர் அலசல்

இவர் புதிய ஏற்பாடு மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கு, இவரது இரண்டாவது பாகத்தில் பதிலைத் தரலாம். ஆனால், முகவுரையிலேயே   புதிய ஏற்பாடு மீது  இவர் நேரடியாக‌ தன் குற்றச்சாட்டுகளை வைக்க  தொடங்கியதால், அவைகளுக்கு பதிலைச் சொல்லவேண்டியுள்ளது.

திரு செண்பகப்பெருமாள் அவர்கள் எழுதியவைகள்:
இவர் எழுதிய பத்திகளை அப்படியே மேற்கோள் காட்டாமல், அவைகளிலிருந்து முக்கிய விவரங்களை எடுத்து கீழே பாயிண்டுகளாக தருகிறேன்.

முகவுரை, பக்கம் 9 & 10 (யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்):

  • பவுல் மதம் என்னும் அந்தஸ்தில் இருந்த யூதத்தை அதிலிருந்து வேறோர் நிலைக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.
  • கி.பி. 49ல் பைபிளின் நடைமுறை கொள்கையில் மாற்றம் கொண்டு வர முயன்றார்
  • மதங்களை விட மாறுபட்ட ஒன்றை 'கிறிஸ்து (Christ)' என்ற ஒற்றைச் சொல்லை அறிமுகப்படுத்தினார்
  • இந்தச் சொல் மனிதர்களிடையே பேதம் காட்டுதல் கூடாது என்னும் பொருள் கொண்டதாக இருந்தது.
  • பவுலின் இக்கொள்கை  இஸ்ரேலிய யூத சமூகத்துக்கு புதிது
  • கிறிஸ்து என்ற சொல்லும், அதில் பொதிந்துள்ள பொருளும் பைபிள் மரபுக்கு உரியதல்ல.
  • கொலோசேயர் 1:25-27 யூதர்களிடம் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது இக்கொள்கை, புறஜாதியாரிடம் ஏற்கனவே நடைமுறையில் இருந்துவந்தது என்று பவுல் கூறியதாக குறிப்பிடுகிறார்.
  • பவுல் தம் புதிய ஏற்பாட்டு நூல்களில் மதம் சார்பற்ற கடவுளாக 'கிறிஸ்து' என்ற சொல்லைக்கொண்டு அறிமுகம் செய்கிறார்.
  • பிற்காலத்தில் பல மொழிகளில் மொழியாக்கம் செய்தவர்கள், 'இயேசு' என்ற பெயருக்கு முன்னாலும், பின்னாலும் 'கிறிஸ்து' என்பதை சேர்த்துக்கொண்டார்கள்.
  • இதனால், மேரியின் மகன் இயேசுவிற்கும், கிறிஸ்துவுக்கும் வேறுபாடு காட்ட‌முடியாமல் போகும் நிலை ஏற்பட்டது
  • பவுல் இயேசுவையும் கிறிஸ்துவையும் வேறுபடுத்திக்காட்டினார், ஆக, உயிரோடு இருந்த காலத்தில் இயேசு ஒரு மேசியா மட்டுமே, அவர் சிலுவையில் மரித்த பின்னர் தான் கடவுளின் ஆவி அவர் மீது இறங்கியது, அதனாலே அவர் உயிரோடு எழுப்பப்பட்டார், அதன் பின்பு தான் அவர் கிறிஸ்து என்னும் கடவுளின் மகன் ஆனார் (ரோமர் 1:2-5)

என்று முகவுரையின் இரண்டாவது பத்தியிலிருந்து பல குற்றச்சாட்டுகளை வைக்க தொடங்கியுள்ளார் திரு செண்பகப்பெருமாள். மேற்கண்ட கருத்துக்களில் பல அடிப்படையான தவறுகளை செண்பகப்பெருமாள் செய்துள்ளார். அவைகளின் உண்மை நிலையையும், செண்பகப்பெருமாளின் அறியாமையையும், பைபிளின் நம்பகத்தன்மையையும் இப்போது பதிலாக காண்போம்.


1)    அந்த மூன்று ஆண்டுகள்!


கிறிஸ்தவத்தை விமர்சிக்கும் செண்பகப் பெருமாள் போன்றவர்கள் பெரும்பான்மையாக செய்யும் தவறு என்னவென்றால், இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு நடந்த 3 ஆண்டு நிகழ்ச்சிகளை ஆய்வு செய்ய விட்டுவிடுவதுதான். கிபி 30ல் இயேசு மரணித்து உயிர்த்தெழுகிறார், அதன் பிறகு இயேசுவின் சீடர்கள் எருசலேம் நகரில் இருந்து கொண்டு இயேசு சொல்லியபடி ஊழியம் செய்து கொண்டிருந்தார்கள். யூதர்கள் இவர்களுக்கு எதிராக பல கட்டுப்பாடுகளை விதித்தார்கள், இயேசுவை பற்றி பிரசங்கம் செய்யக்கூடாது என்று கட்டளையிட்டார்கள். கிறிஸ்தவ சபையை துன்புறுத்தி, ஸ்டீபன் என்ற சீடரை யூதர்கள் கல்லெறிந்து கொன்றார்கள். இந்த கொலைக்கு உதவியாக சவுல் என்ற யூதரும் இருந்தார்.

மூன்றாண்டுகளுக்குப் பிறகு, அதாவது இயேசு மரித்து உயிர்த்தெழுந்த விட்ட பிறகு, மூன்றாண்டுகள் கழித்து சவுல் என்பவரை இயேசு சந்தித்து அவர் மனம் திரும்பும்படி செய்தார்.

கிறிஸ்துவத்தில் காணப்படும் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எல்லாம் சவுல் தான் காரணம் என்று திரு செண்பகம் பெருமாள் போன்றவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால் சவுலுக்கு/பவுலுக்கு முன்பு மூன்று ஆண்டுகள் இயேசுவின் சீடர்கள் எவைகளை போதித்துக் கொண்டிருந்தார்கள்? இந்த கேள்விக்கு செண்பகப் பெருமாள் போன்றவர்கள் பதில் சொல்ல முன்வருவதில்லை! ஏனென்றால் இவர்களுடைய எல்லா குற்றச்சாட்டுகளுக்கும், பவுல் மீது இவர்கள் வைக்கும் அனேக காரணமில்லாத குற்றச்சாட்டுகளுக்கும் இந்த மூன்று ஆண்டுகள் பதில் சொல்லிவிடும். இந்த மூன்று ஆண்டுகளை ஆய்வு செய்பவர், பவுலின் மீது குற்றம் சுமத்தமாட்டார்.

எனவே இந்த மூன்று ஆண்டுகளில் நடந்தவைகளை பேசாமல் அதற்குப் பின்பு நடந்தவைகளை மட்டுமே இப்படிப்பட்ட ஆய்வாளர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்களின் வஞ்சகத்தை படம் போட்டு காட்டுகிறது. முஸ்லிம் அறிஞர்கள் செய்வதும் இதே தவறைத்தான்.

இயேசுவிற்கு பிறகு சீடர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? தாங்கள் முன்பு செய்துக்கொண்டிருந்த மீன் பிடிக்கும் வேலைக்கு சீடர்கள் சென்றுவிட்டார்கள்! ஆனாலும் இயேசு அவர்களை சந்தித்து, மேசியாவாகிய தாம் இவ்வுலகத்தில் வந்த முழு நோக்கத்தையும், அவர் விட்டுச் சென்ற ஊழியத்தையும், எப்படி செய்யவேண்டும் என்று சீடர்களுக்கு விவரமாக சொல்லிவிட்டு சென்றார். பவுல் என்பவர் கிறிஸ்தவ‌ சரித்திரத்தில் ஒரு நல்ல‌ பாத்திரமாக மாறுவதற்கு முன்பு, அவர் ஒரு வில்லனாக இருந்தார். அவர் ஏன் வில்லனாக இருந்தார்? அவரை வில்லனாக மாற்றியது யார்? கிறிஸ்துவத்தின் எந்த‌ கோட்பாடு, அவர் கிறிஸ்தவர்களை கொலை செய்யத் தூண்டியது? போன்றவைகளை ஆய்வு செய்தால், செண்பகபெருமாளின் ஆய்வுகள் அனைத்தும், ஒன்றுமில்லாமல் போய்விடும். அவருக்கு நெஞ்சில் உறமிருந்தால், நேர்மையிருந்தால் மேற்கண்ட கேள்விகளுக்கு பதில்களை ஆய்வு செய்து கொடுக்கட்டும்!

கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் ஏன் யூதர்களை கோபப்படுத்தினது என்று? ஆய்வு செய்தாலே, செண்பக பெருமாளின்  புத்தகத்திற்கான பதில் கிடைத்து விடும். பவுலடியார் ஒரு நல்லடியாராக மாறி சொல்லியவைகளை குற்றப்படுத்தும் செண்பகப்பெருமாள், அதே பவுலடியார் ஒரு வில்லனாக இருந்தபோது நடத்திக்காட்டிய‌ அவரின் செயல்பாடுகளை ஆய்வு செய்து இருந்தால்  இப்படிப்பட்ட அரைகுறை புத்தகங்களை எழுத வேண்டிய அவசியம் அவருக்கு இருந்திருக்காது.

ஆக, கிறிஸ்தவத்தின் முதல் மூன்றாண்டுகளில் , கிறிஸ்துவத்தின் அஸ்திபாரங்கள் மிகவும் ஆழமாக போடப்பட்டன. இயேசுவின் நேரடி சீடர்களால், அவரை கண்டவர்களால், அவரைத் தொட்டு பேசியவர்களால்,  இயேசுவின் அற்புதங்களை கண்களால் கண்ட சீடர்களால் கிறிஸ்துவத்தின் அடிப்படை கோட்பாடுகள் முன்மொழியப்பட்டன.

  • இயேசுக் கிறிஸ்து யார்?
  • இயேசுவிற்கும் பழைய ஏற்பாட்டுக்கும் சம்மந்தம் என்ன?
  • கிறிஸ்தவ‌ சபை எப்போது ஆரம்பிக்கப்பட்டது? அதன் நோக்கமென்ன?
  • ஏன் சீடர்கள் இயேசுவுக்காக தங்கள் உயிரையும் தியாகம் செய்ய விரும்பினார்கள்?
  • போன்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் அந்த முதல் மூன்று ஆண்டுகளில் கிடைத்துவிடும். இந்த மூன்று ஆண்டுகளை ஆய்வு செய்யாதவர்கள், அடுத்த 30 ஆண்டுகள் பற்றி ஆய்வு செய்து என்ன பயன்?

செண்பகப்பெருமாள் செய்த முதல் தவறு, இயேசுவிற்கு பிறகு முதல் மூன்று ஆண்டுகளை, இயேசுவின் நேரடி சீடர்களை சரியாகப் புரிந்து கொள்ளாதது ஆகும். அதனால் தான் இப்படிப்பட்ட அரைகுறையான ஆய்வுகளை அவர் செய்து கொண்டு இருக்கிறார்.


கி.பி. 49 இல் பைபிளின் நடைமுறை கொள்கையில் மாற்றம் கொண்டுவர பவுல் விரும்பினார் என்று குற்றம் சாட்டுகிறார் திரு செண்பகப்பெருமாள். இவரிடம் நாம் கேட்க வேண்டிய கேள்விக‌ள்:

  • முதல் மூன்று ஆண்டுகளில் பைபிளின் நடைமுறை கொள்கை என்னவாக இருந்தது என்று உங்களால் விளக்க முடியுமா?
  • கி.பி. 49 காலகட்டத்தில் "பைபிளின் நடைமுறை கொள்கை" என்று நீங்கள் சொல்கிறீர்களே! இங்கு பைபிள் என்று எதனை குறிக்கிறீர்கள்? பழைய ஏற்பாட்டையா? பழைய ஏற்பாட்டின் நடைமுறை கொள்கை என்னவென்று உங்களுக்குத்தெரியுமா?
  • இயேசுவிற்கு பிறகு 19 ஆண்டுகளுக்கு பின்னால் நடந்தது என்ன என்று சொல்ல வந்துவிட்டீர்கள். முதல் மூன்று ஆண்டுகள் என்ன நடந்தது என்று உங்களால் சொல்ல முடியுமா?
  • கிறிஸ்தவம் என்ற இயக்கம் அல்லது மார்க்கம் ஏன் ஆரம்பிக்கப்பட்டது?
  • இயேசுவிற்கு பிறகு அந்த 11 சீடர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு இயக்கத்தை தொடங்க‌ வேண்டும் என்ற எண்ணம் எப்படி தோன்றியது?
  • அவர்கள் கிறிஸ்தவத்தை ஏதோ ஒரு லாபத்திற்காக தொடங்கியிருந்தால், அதற்காக ஏன் தங்கள் உயிர்களை அவர்கள் தியாகம் செய்தார்கள்?
  • ஏன் ஆதி கிறிஸ்தவர்கள், சீடர்கள் தங்கள் உயிர்களைக் காட்டிலும், தங்கள் கோட்பாடுதான் முக்கியம் என்று கருதினார்கள்? இயேசு தெய்வமில்லை என்று அவர்கள் நம்பியிருந்தால், ஏன் உயிரை இயேசுவிற்காக துச்சமாக மதித்தார்கள்?

போன்ற கேள்விகளுக்கு செண்பகப்பெருமாள் போன்றவர்களால் பதில் சொல்ல முடியாது. முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள், உண்மை புரியும், இவைகள் எல்லாம் பவுலடியார்  வில்லனாக இருந்த போது நடந்தவைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் என்னுடைய முதல் கட்டுரையில் சொன்னது போல, செண்பகப் பெருமாள் அவர்களுக்கு காலவரிசை குழப்பம் மிகவும் அதிகமாக உள்ளது. அவர் வேண்டுமென்றே காலங்களை வருடங்களைக் குழப்பி தன் குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டிருக்கிறார். இவருடைய இப்படிப்பட்ட வஞ்சகமான செயல்களை கிறிஸ்தவர்கள் சீக்கிரமாக கண்டு கொள்வார்கள்.

இவர் இன்னும் என்னவெல்லாம் எழுதி இருக்கிறார் என்பது குறித்து இப்போது பார்ப்போம்.


 



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

2) செண்பக பெருமாளின் ஆய்வை கிழித்தெறியும் கிறிஸ்து என்ற சொல்


மதம் என்ற அந்தஸ்தில் இருந்த யூதத்தை அதிலிருந்து வேறொரு நிலைக்கு மாற்றும் முயற்சியில் பவுல் ஈடுபட்டார் என்று இவர் குற்றம் சாட்டுகிறார். இவரது  வரியிலிருந்து நமக்கு புரிவது என்னவென்றால் இவருக்கு கிறிஸ்தவ சரித்திரம் தெரியவில்லை என்பதாகும். இயேசுவிற்கு பிறகு, சீடர்கள் யூத மதத்தை பின்பற்ற வில்லை, அப்படி அவர்கள் பின்பற்றி இருந்தால் அவர்களை ஏன் யூத மதத் தலைவர்கள் கொலை செய்வார்கள்? சீடர்களை ஏன் அவர்கள் ஊர் ஊராகத் துரத்துவார்கள்? பவுல் போன்றவர்கள் ஏன் ஒவ்வொரு திருச்சபையாக சென்று அவர்களைக் கொடுமைப் படுத்திக் கொண்டிருந்தார்கள்? இந்த அடிப்படை அறிவு அல்லது வித்தியாசத்தைக் கூட தெரிந்துக்கொள்ளக்கூடிய அளவிற்கு செண்பகப்பெருமாளின் மேதாவித்தனம் இடம்தரவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.


செண்பகப்பெருமாள் அவர்களே! தன் யூத‌மார்க்கத்தில் மிகவும் தீவிரமாக இருந்த சவுல் என்பவர், கிறிஸ்தவர்களும் அதே யூதமார்க்கத்தை பின்பற்றி இருந்திருந்தால், அவர்களை தன்  தலையில் வைத்துக் கொண்டாடி இருந்திருப்பாரே தவிர, அவர்களின் தலையை சீவ வாளை தூக்கி இருந்திருக்கமாட்டார்!

அதுவும் இயேசுவுக்கு பிறகு 19 ஆண்டுகள் கழித்து யூத மார்க்கத்தை வேறு ஒரு நிலைக்கு கொண்டுச் செல்ல முயன்றார் என்று நீங்கள் சொல்வது முட்டாள்தனமான வாதமாகும்.

கிறிஸ்து என்ற சொல்


அடுத்தபடியாக கிறிஸ்து என்ற சொல்லை குறித்து செண்பகப் பெருமாள் அவர்கள் வைத்த குற்றச்சாட்டுகளை காண்போம். இதனைக் குறித்து இன்னும் விவரமாக அவருடைய புத்தகத்தில் அவர் எழுதிய இரண்டாம் பாகத்திற்கான பதில்களில் காண்போம். ஆனால் இப்போது அதனை அவர் குறிப்பிட்டு இருக்கின்றபடியால், அது குறித்து ஒரு சுருக்கமான‌ பதிலைக் காண்போம்.


“மதங்களை விட மாறுபட்ட ஒன்றை கிறிஸ்து என்ற ஒரு சொல் மூலமாக பவுல் அறிமுகப்படுத்தினார்”, என்று செண்பகப் பெருமாள் எழுதுவது அறியாமையின் உச்சக்கட்டம் ஆகும்.  இந்த சொல்லுக்கு மக்களிடையே பேதங்கள் காட்டக்கூடாது என்ற‌ பொருள் இருந்ததாம். இந்தக் கொள்கை அல்லது இந்த வார்த்தை இஸ்ரேலிய யூத சமூகத்துக்கு புதிதான வார்த்தையாம்.


இவைகள் எல்லாம் படிக்கும்போது, செண்பகப் பெருமாள் அவர்கள் மீது பரிதாபம் கொள்ளாமல் இருக்க முடியாது. ஏனென்றால் இவைகளெல்லாம் அவருடைய சொந்தக் கற்பனைகள், அவர் வேண்டுமென்றே சொல்லும் பொய்கள்.


எபிரேய‌ மொழிக்கும் கிரேக்க மொழிக்கும் வித்தியாசம் தெரியாத நபராக செண்பகப் பெருமாள் காணப்படுகிறார். எபிரேய மொழியில் “மேசியா” என்ற வார்த்தை கிரேக்க மொழியில் “கிறிஸ்து” என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த அடிப்படை அறிவு இல்லாத இவர் எப்படி இப்படிப்பட்ட விமர்சனங்களை முன் வைக்கிறார் என்று தெரியவில்லை.

மேசியா அல்லது கிறிஸ்து என்ற வார்த்தைக்கு அபிஷேகம் செய்யப்பட்டவர் என்று பொருள். இயேசுவின் காலத்திலேயே இவ்வார்த்தையின் பொருளை பல நூற்றாண்டுகளாக யூதர்கள் நன்றாக அறிந்திருந்தார்கள். ஆனால் செண்பகப் பெருமாள், தான் கி.மு. காலத்திலேயும் கி.பி. காலத்திலேயும் யூதர்களோடு இருந்தவர் போன்று எழுதிக் கொண்டிருக்கிறார், என்ன ஒரு முட்டாள்தனம்! என்ன ஒரு வஞ்சக மன‌தைரியம்!


இந்த வார்த்தை இஸ்ரேலிய யூத சமூகத்துக்கு புதிது? என்று எழுதிய இந்த வார்த்தைகளில் இருந்தே இவருடைய ஆய்வுகளின் இலட்சனம் வெளிப்பட்டு விட்டது! இயேசு வாழ்ந்த கி.பி. 30க்குள் ஒரு யூதனிடம் சென்று, உனக்கு கிறிஸ்து என்ற வார்த்தை தெரியாது என்று யாராவது சொன்னால், அவன் முகத்தின் மீது அந்த யூதன் உமிழ்வான்.

கிறிஸ்து என்ற வார்த்தை யூதர்களுக்கு புதிதல்ல

இயேசுவிற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே “மேசியா” என்ற வார்த்தையும், அதன் கிரேக்க மொழியாக்கமாகிய "கிறிஸ்தோஸ்" என்ற வார்த்தையும் யூதர்களுக்கு அறிமுகம் செய்தாகிவிட்டது. இரண்டாம் சங்கீதத்திலும், ஏசாயா புத்தகத்திலும், தானியேல் புத்தகத்திலும்  பயன்படுத்தப்பட்டுள்ளது. இயேசுவுக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே, எபிரேய மொழியிலிருந்து கிரேக்க மொழிக்கு பைபிளின் பழைய ஏற்பாட்டு நூல்கள் மொழியாக்கம் செய்யப்பட்டுவிட்டன‌. அந்த மொழியாக்கத்தை செப்டாஜிண்ட்(Septuagint) என்று கூறுவார்கள், அதில் மேசியா என்ற வார்த்தை, கிறிஸ்து என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.  இந்த விவரம் செண்பகப்பெருமாளின் ஆய்விற்கு மரண அடியாகும்.

கி.மு. 2ம் நூற்றாண்டில் செய்யப்பட்ட கிரேக்க மொழியாக்கத்திலிருந்து(செப்டாஜிண்ட்டின்) சில உதாரணங்கள்:

ஏசாயா 45:1


மூலம்: Septuagint - Isaiah 45:1 (Greek Transliteration in English)

மூலம்: Isaiah 45:1 – Septuagint - Greek (Transliteration)

தானியேல் 9:26

 

 

மூலம்: Daniel 9:26 – Septuagint - Greek

சங்கீதம் 2:2

மூலம்: Psalms 2:2 – Septuagint - Greek

விக்கிபீடியா கிறிஸ்தோஸ் கிரேக்க வார்த்தை

மூலம்: Wikipedia – Greek - Christos

கிரேக்க அகராதி

Greek Strong - studybible.info/strongs/G5547

கிறிஸ்து என்ற வார்த்தை இயேசுவிற்கு முன்பு இன்னும் சிலருக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் யூத மதத் தலைவர்கள், யோவான் ஸ்நானகனிடம் வந்து, “நீ மேசியாவா?” என்று கேட்டார்கள் அதாவது “நீ கிறிஸ்துவா?” என்று கேள்வி கேட்டார்கள். இதன்படி பார்த்தால் மேசியா அல்லது கிறிஸ்து என்ற வார்த்தை, யூதர்கள் நன்கு அறிந்த வார்த்தையாகும். செண்பகப் பெருமாள் சொல்வதெல்லாம் சுத்த பொய்யான குற்றச்சாட்டுக்கள் ஆகும்.

இன்னொரு கேள்வி: கிறிஸ்து என்ற வார்த்தை மதம் சாராத வார்த்தை என்று உங்களுக்கு சொன்னவர் யார்? எப்படி இதனை அறிந்துக்கொண்டீர்கள்?

“கிறிஸ்து” என்ற வார்த்தையை பவுல் தான் அறிமுகம் செய்தார், இது அதற்கு முன்பு யூதர்கள் அறியாத வார்த்தை என்று செண்பகப்பெருமாள் சொல்வது, படித்தறிந்த அறிஞர்களை ஏமாற்ற  முயலும் செயலாகும் என்பதை வாசகர்கள் அறியவேண்டும். இந்திய மக்களின் காதுகளில் பூ வைக்க செண்பகப்பெருமாள் போன்று அனேகர் கிளம்பி இருக்கிறார்கள்.


3) கிறிஸ்து என்ற வார்த்தை மொழியாக்கங்களில் மேலதிகமாக சேர்க்கப்பட்டதா?


பைபிள் மொழியாக்கம் செய்தவர்கள் கிறிஸ்து என்ற வார்த்தையை மேலதிகமாக சேர்த்தார்கள் என்று செண்பகப்பெருமாள் குற்றம் சாட்டுகின்றார்.


செண்பகப்பெருமாள் எழுதியவைகள்:
•    பிற்காலத்தில் பல மொழிகளில் மொழியாக்கம் செய்தவர்கள், 'இயேசு' என்ற பெயருக்கு முன்னாலும், பின்னாலும் 'கிறிஸ்து' என்பதை சேர்த்துக்கொண்டார்கள்.
•    இதனால், மேரியின் மகன் இயேசுவிற்கும், கிறிஸ்துவுக்கும் வேறுபாடு காட்ட‌முடியாமல் போகும் நிலை ஏற்பட்டது


இவர் எவ்வளவு பெரிய  வஞ்சகர் என்பதை துள்ளியமாக உணர்த்தும் விவரம் இது. அதாவது, புதிய ஏற்பாட்டை கிரேக்க மொழியிலிருந்து மற்ற மொழிகளில் மொழியாக்கம் செய்பவர்கள் மீது இந்த குற்றச்சாட்டை சொல்பவராகிய இவர் என்ன செய்திருக்கவேண்டும்?


தன் குற்றச்சாட்டை நிருபிக்கும் வண்ணமாக இவர் கீழ்கண்ட ஆதாரங்களை முன் வைத்திருக்கவேண்டும்:


1)    கிரேக்க மூல வசனங்களில் எங்கேயெல்லாம் "இயேசு" என்று மட்டும் வருகிறது என்பதை பட்டியலிடவேண்டும்.
2)    அடுத்த படியாக, எந்தெந்த மொழியாக்கங்களில் "கிறிஸ்து" என்ற வார்த்தை "இயேசு" என்ற வார்த்தையோடு தேவையில்லாமல், மொழியாக்கம் செய்தவர்கள் சேர்த்துள்ளார்கள் என்று பட்டியலிடவேண்டும்.


இவ்விரண்டையும் செண்பகபெருமாள் செய்யவில்லை.


இவர் தம்முடைய புத்தகத்தில் எந்த ஒரு இடத்திலும், மேற்கண்ட ஆதாரங்களை கொடுக்கவில்லை. ஒரே ஒரு வசனத்தை கூட இதற்காக இவர் மூல மொழியோடு சேர்த்து ஆதாரம் காட்டவில்லை. திரு செண்பகப்பெருமாள் அவர்களே, உங்கள் முகமூடி கொஞ்சம் கொஞ்சமாக கிழிக்கப்படுகிறது. இனியும் இப்படி ஆதாரமற்ற விவரங்களைச் சொல்லி பைபிளை குற்றப்படுத்த முயன்றால், அதைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க, கிறிஸ்தவர்கள் பாமர மக்கள் அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். (2007ம் ஆண்டிலிருந்து  தமிழ் கிறிஸ்தவர்கள் எப்படியெல்லாம் இஸ்லாமியர்களின் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு பதில்களை கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை தமிழ் நாட்டின் புகழ்பெற்ற முஸ்லிம் அறிஞர்களை கொஞ்சம் கேட்டுப்பாருங்கள், அப்போது உங்களுக்கு தமிழ் கிறிஸ்தவர்களின் பதில் சொல்லும் பாணியும், திறமையும் உங்களுக்கு புரியும்).


செண்பகபெருமாள் கேள்வி எழுப்பிய “கொலோசேயர் 1:25-27   & ரோமர் 1:2-5” வசனங்களுக்கு அடுத்தடுத்த பதில்களில் தேவையான இடத்தில் பதில்களைப் பார்ப்போம்.

முடிவுரை:


இதுவரை, செண்பகப்பெருமாள் அவர்கள் எழுதிய புத்தகத்தின்  முகவுரையின் சில பத்திகளுக்கு (2-5) பதில்களைக் கண்டோம். திரு செண்பகப்பெருமாள் ஒரு பொய்யார், மக்களை தன் வஞ்சகமான வார்த்தைகளால் ஏமாற்ற முயலும் ஒரு கள்ள உபதேசம் செய்பவர். “மதம் சாரா ஆன்மீகம்” என்ற பெயரில் கிறிஸ்தவத்தை குற்றப்படுத்த முயலும் ஒரு குழப்பவாதி. இவரது குற்றச்சாட்டுகளில் நேர்மையில்லை, இவர் ஒரு அரைகுறை ஆய்வாளர் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. இவரது பொய்யான  குற்றச்சாட்டுக்களுக்கு சரியான பதில்களைச் சொல்வது ஒரு கிறிஸ்தவனாக என்னுடைய கடமையாக உள்ளது.


நம்முடைய அடுத்த பதிலில், செண்பகப்பெருமாள் அவர்களுக்கு ஒரு ஆங்கில பத்தியை கூட சரியாக படித்து புரிந்துக்கொள்ளக்கூடிய அளவுக்கு அறிவு இல்லை என்பதை நிருபிக்கப்போகிறோம்.

கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவிற்கு மகிமையாக இத்தொடர் பதில்கள் அமையவும், மக்களின் அறியாமை அகலவும், செண்பகப்பெருமாள் போன்றவர்களின் வஞ்சக வலையில் மக்கள் விழாமல் இருக்கவும் வேண்டிக்கொள்கிறேன். சத்தியம் ஜெயிக்கும், பொய்கள் அழிந்துப்போகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

 

கீழைத்தேச (இந்திய‌) ஞானம் பைபிளுக்கு சென்றடைந்ததா? "தவறான விளக்க சிகாமணி செண்பகப்பெருமாள்"

திரு செண்பகப்பெருமாள் அவர்களின் "யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்" என்ற புத்தகத்துக்கு கொடுத்த முந்தைய பதில்களை படிக்க இங்கு சொடுக்கவும்.

இந்த தற்போதைய‌ கட்டுரையில் செண்பகப்பெருமாள் அவர்கள் முகவுரையில் எழுதிய இன்னொரு முக்கியமான விஷயத்திற்கு பதிலைக் காண்போம். 

திரு செண்பகப்பெருமாள் அவர்கள் 1947 இல் எழுதப்பட்ட ஒரு ஆங்கில‌ புத்தகத்தில் இருந்து மேற்கோள் காட்டுகிறார். அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் சொல்வதை மாற்றி விளக்கம் அளிக்கிறார். ஆங்கிலத்தில் மேற்கோளை காட்டிவிட்டு, தமிழில் அதற்கு விளக்கம் அளிக்கும்போது தனக்கு தேவையான வகையில் விளக்கம் அளிக்கிறார். 

திரு செண்பகப்பெருமாள் அவர்கள் எழுதியவைகள்:

முகவுரை, பக்கம் 10 & 11 (யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்):

//கி.மு. 326-ல் கிரேக்க மன்னர் அலெக்சாண்டர் இந்தியாவரை தன் படைகளுடன் வந்து போர் புரிந்தார். பல்வேறு நாடுகளின் இலக்கியங்களை அவர் அப்போது சேகரித்தார். தமது நூலகத்தில் அவற்றை பேணிக் காத்திட ஏற்பாடு செய்தார். இவையெல்லாம் வரலாற்று செய்திகள்.  இந்தியா போன்ற கீழை நாடுகளிலிருந்து ஆன்மீக ஞானம் பைபிளுக்குச் சென்ற விதம் குறித்து William Alva Gifford  என்ற ஆசிரியர் தன் புத்தகம் The Story of Faith பக்கம் 159ல் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

The Church was less hospitable to another movement in the Graeco-Roman world, the movement called Gnosticism. It was one aspect of the Orientalism that was first introduced into Europe through the conquest of the Near East by Alexander the Great. Orientalism seriously influenced Greek thought in Stoicism, an influence later revived in Neo-Platonism. It influenced Judaism next, in those world-renouncing  desert-dwellers, the Essenes, to whom John the Baptist may have belonged. It reached Christianity, under the name of Gnosticism, through certain false teachers of Colossae. There are echoes in the New Testament of disturbances caused by the doctrine that Christ and Jesus are not the same, that Christ did not have a true human body, and therefore did not die on the cross.  From the early second century such doctrines were openly proclaimed in the churches, and won a considerable following among Gentile Christians.

இவ்வாறு கடவுள் பற்றியே கீழைத்தேச ஞானம் பல்வேறு தரப்பினருக்கும் சென்று இறுதியாகக் கிறிஸ்தவர்களைச்  சென்றடைந்தது.// formats are mine

திரு செண்பகப்பெருமாள் அவர்களுக்கு பதில்:

இவர் மேலே எழுதிய முதலாவது பத்தியில், தான் எவைகளை வஞ்சனையாக‌ சொல்லவேண்டுமென்று விரும்பினாரோ அதனை வேறு ஒருவரின் பெயரைக்கொண்டு சொல்லியுள்ளார். 

//இந்தியா போன்ற கீழை நாடுகளிலிருந்து ஆன்மீக ஞானம் பைபிளுக்குச் சென்ற விதம் குறித்து William Alva Gifford என்ற ஆசிரியர் தன் புத்தகம் The Story of Faith பக்கம் 159ல் இவ்வாறு குறிப்பிடுகிறார்.//

செண்பகப்பெருமாள் அவர்களின் வஞ்சக நோக்கம் இந்த வரிகளில் காணப்படுகிறது. கீழை தேசத்து ஆன்மிகம் சம்பந்தப்பட்ட ஞானமானது பைபிளுக்கு வந்து சேர்ந்தது என்று இவர் உண்மையை மாற்றி சொல்லுகிறார். தன்னுடைய கருத்தை ஆங்கில ஆசிரியர் மீது திணிக்கிறார். இப்பொழுது நாம் என்ன செய்யப் போகிறோம் என்றால், இவர் மேற்கோள் காட்டிய அந்த ஆங்கில ஆசிரியர் வில்லியம் ஆல்வா கிஃபொர்டு (William Alva Gifford) எழுதிய ஆங்கில வரிகளில், இவர் சொன்ன விவரம் (பைபிளுக்கு வந்து சேர்ந்தது என்ற விவரம்) உள்ளதா என்பதை பார்ப்போம். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சில வரிகளை சரியாக புரிந்து கொள்ள முடியாத‌ நிலையில் செண்பகப்பெருமாள் இருக்கிறார் என்று நினைக்கும் போது அவர் மீது பரிதாபமாக உள்ளது.

கீழை நாடுகளிலிருந்து ஆன்மீக ஞானம் பைபிளுக்குச் சென்ற விதம்” என்று முதல் பத்தியில் சொல்லிவிட்டு, கடைசி பத்தியில் "கீழைத்தேச ஞானம் பல்வேறு தரப்பினருக்கும் சென்று இறுதியாகக் கிறிஸ்தவர்களைச்  சென்றடைந்தது" என்றுச் சொல்கிறார். இவ்விரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அவரது புத்தகத்தை படிப்பவர்கள் புரிந்துக் கொள்ளமாட்டார்கள் என்று எண்ணிவிட்டார் போலும் செண்பகப்பெருமாள். "ஒரு விஷயம் பைபிளுக்கு சென்றடைந்தது" என்றுச் சொல்வது வேறு, "அதே விஷயம் கிறிஸ்தவர்களைச் சென்றடைந்தது" என்றுச் சொல்வது வேறு. திரு செண்பகபெருமாள் அவர்களே! எவ்வளவு தான் நஞ்சை நீங்கள் பாலில் கலக்கப்பார்த்தாலும், அதனை வேறுபிரித்துக் காட்டும் அறிவு கிறிஸ்தவர்களுக்கு உண்டு என்பதை மிகவும் தாழ்மையாக தெரிவித்துக்கொள்கிறேன். பைபிளுக்கு சென்றடைந்துவிட்டது என்றுச் சொல்லி மக்களை நம்பவைத்துவிட்டால், உங்கள் வேலை சுலபமாக முடிந்துவிடும் என்று நினைத்துவிட்டீர்களா?

இப்போது நாம், அவர் மேற்கோள் காட்டிய ஆங்கில வரிகளில் உள்ள உண்மையை பார்ப்போம்:

a) ஆங்கில மேற்கோளின் முதல் வரி:  புதிய கோட்பாடுகளை அங்கீகரிக்காத திருச்சபை:

//The Church was less hospitable to another movement in the Graeco-Roman world, the movement called Gnosticism.//

இந்த வரியில் ஆசிரியர் என்ன சொல்ல வருகிறார்? 

கிறிஸ்துவ திருச்சபையானது வேறு ஒரு இயக்கத்தையோ / கோட்பாட்டையோ (another movement) சீக்கிரமாக ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலையில் இல்லை (less hospitable) என்று சொல்லுகிறார்.  புதிய கோட்பாடுகளை திருச்சபை ஏற்றுக்கொள்ளவில்லை என்றுச் சொல்கிறார். “less hospitable” என்ற இரண்டு வார்த்தைகளின் பொருள் என்னவென்று திரு செண்பகப்பெருமாள் அவர்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும்.

கிறிஸ்தவ சபை வேறு ஒரு புதிய கோட்பாட்டை அல்லது இயக்கத்தை எதிர்க்கிறது அல்லது அதனை ஏற்றுக்கொள்ளும் நிலையில் அது இல்லை என்பதை அந்த ஆசிரியர் சொல்லி இருக்கும் போது, அதனை மாற்றி கீழை தேசத்து ஞானம் பைபிளில் புகுந்துவிட்டது என்று பொய்களை அள்ளி வீசுவது எவ்வளவு முட்டாள்தனம். 

b) சில தவறான போதகர்களால் கிறிஸ்தவத்தை தாக்க முயன்ற நாஸ்டிஸிச‌ம்:

அடுத்தபடியாக, அந்த ஆங்கில மேற்கோளில் கீழ்க்கண்ட வரி முக்கியமானதாக‌ காணப்படுகிறது:

//It reached Christianity, under the name of Gnosticism, through certain false teachers of Colossae.//

சில தவறான போதகர்களால் நாஸ்டிஸிச‌ம் என்ற ஒரு கோட்பாடு கிறிஸ்தவ சபையை நோக்கி வந்தது என்று ஆசிரியர் சொல்கிறார். இந்த வரி செண்பகபெருமாளுக்கு புரிந்ததா?  

இந்த வரியில் ஆங்கில ஆசிரியர்: 

  • கிறிஸ்தவ சபை புதிய கோட்பாட்டை ஏற்றுக்கொண்டது என்று சொல்கிறாரா? இல்லை.
  • கிறிஸ்தவ சபையை நோக்கி வந்த கீழை தேசத்து கோட்பாடுகள், பைபிளுக்குள் சென்றடைந்து விட்டது, பைபிளின் வசனங்களாக  மாறிவிட்டது என்று சொல்கிறாரா? இல்லை அப்படி சொல்லவில்லை? 

இப்படி இருக்கும் போது, செண்பகப்பெருமாளுக்கு மட்டும் ஏன் எதைப் பார்த்தாலும் மஞ்சலாகத் தெரிகின்றது?

அந்த ஆங்கில ஆசிரியரின் கருத்து, செண்பகபெருமாளின் கருத்துக்கு முரணாக இருக்கிறது. அதாவது “certain false teachers” என்று அவர் சொல்வதிலிருந்து, பைபிளின் போதனைகளுக்கு எதிரான தவறான போதனைத் தான் அது என்று ஆசிரியர் வில்லியம் தெள்ளத்தெளிவாக சொல்லவருகிறார்.  இதனை செண்பகப்பெருமாள் அவர்கள் கவனிக்கவில்லை என்று தெரிகின்றது. இதனை கவனிக்கக்கூடாது என்று முடிவு செய்து தானே அவர் பொய்யான தகவல்களை சொல்லிக்கொண்டு இருக்கிறார்.  அவரால் இவைகளை எப்படி கவனிக்கமுடியும்? ஒருவேளை செண்பகப்பெருமாளுக்கு ஆங்கிலம் கொஞ்சம் பிரச்சனையோ!

c) இந்த கோட்பாட்டை எதிர்க்கும் புதிய ஏற்பாட்டு வசனங்கள்:

ஆங்கில மேற்கோளின் அடுத்த வரிகள் இவைகள் ஆகும்:

//There are echoes in the New Testament of disturbances caused by the doctrine that Christ and Jesus are not the same, that Christ did not have a true human body, and therefore did not die on the cross.//

புதிய ஏற்பாட்டு கால அப்போஸ்தலர்கள் நம்பிக்கொண்டு இருந்த சத்தியத்திற்கு எதிராக வந்த தவறான போதனைகள் பற்றிய எச்சரிப்புச் செய்திகளை புதிய ஏற்பாட்டில் காணமுடியும் என்று ஆசிரியர் வில்லியம் மேற்கண்ட வரிகளில் சொல்கிறார். 

There are echoes in the New Testament of disturbances caused by the doctrine”  என்ற சொற்றொடரின் பொருள் செண்பகப்பெருமாள் அவர்களுக்கு புரிந்ததா?  ஆதி கிறிஸ்தவர்கள் (முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள்) நம்பிக்கொண்டு இருந்த கோட்பாடுகளுக்கு எதிராக வந்த புதிய கோட்பாடுகளினால் உண்டான பிரச்சனைகளை எப்படி சமாளிக்கவேண்டும் என்று புதிய ஏற்பாட்டில் சொல்லியிருக்கிறது. அவைகளை எதிர்த்து எச்சரிக்கை செய்கின்றது என்று ஆசிரியர் வில்லியம் கூறுகிறார். 

இதனை மாற்றி செண்பகப்பெருமாள் அவர்கள் "இந்தியா போன்ற கீழை நாடுகளிலிருந்து ஆன்மீக ஞானம் பைபிளுக்குச் சென்ற விதம்" என்று பொய் சொல்கிறார். உண்மையில் பைபிளுக்குள் சென்றது என்று வில்லியம் கூறுகின்றாரா? 'சொல்லாதவைகளை எப்படி சொன்னதாக' கற்பனை செய்கிறீர்கள் செண்பகப்பெருமாள் அவர்களே!?!

ஆங்கிலம் தெரிந்தவர்கள், மேற்கண்ட வரிகளை படித்துப் பாருங்கள். பைபிள் அதனை எதிர்க்கிறது என்று ஆசிரியர் சொல்லியிருக்கிறார். புதிய கோட்பாடுகள் சபைக்குள் வரும் போது சிலர் அதனால் குழப்பமடையும் போது, அதைப் பற்றிய  எச்சரிக்கைகள் புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கின்றன என்று ஆசிரியர் வில்லியம் சொல்லியுள்ளார். இதனை வஞ்சகமாக மாற்றிச் சொல்கிறார் நம்முடைய கீழைத் தேசத்து மதம் சாரா ஆன்மீகத்தைச் சொல்லவந்த ஆன்மீகவாதி திரு செண்பகப்பெருமாள் அவர்கள்.

நாஸ்டிஸிசத்துக்கு எதிரான வசனங்களை இப்போது புதிய ஏற்பாட்டிலிருந்து சிலவற்றை மட்டும் காண்போம்.  இவைகளைப் பற்றித் தான் ஆசிரியர் வில்லியம் குறிப்பிட்டு இருந்தார்.

இயேசுவின் சீடர் யோவான் கீழ்கண்டவிதமாக நாஸ்டிஸிசம் என்ற பொய்யான போதகத்தை பற்றி எச்சரித்துள்ளார்.

I யோவான் 2:22-26

22. இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து. 23. குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவை உடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான். 24. ஆகையால் ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருக்கக்கடவது; ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருந்தால், நீங்களும் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள். 25. நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம். 26. உங்களை வஞ்சிக்கிறவர்களைக் குறித்து இவைகளை உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.

I யோவான் 4:3

மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.

பவுலடியாரும் இதைப் பற்றி எச்சரிக்கைச் செய்துள்ளார்:

I தீமோத்தேயு 6: 20-21

20. ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு. 21. சிலர் அதைப் பாராட்டி, விசுவாசத்தைவிட்டு வழுவிப்போனார்கள். கிருபையானது உன்னோடேகூட இருப்பதாக. ஆமென்.

வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்திலும் இயேசு இப்படிப்பட்ட போதனை செய்பவர்களை எச்சரித்துள்ளார்.

வெளி 2:6,15

6. நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்திலுண்டு. 15. அப்படியே நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு; அதை நான் வெறுக்கிறேன்.

நற்செய்தி நூல்களில் கூட, “இயேசு மாமிசத்தில் வந்த இறைவன்” என்பதை தெளிவாக யோவான் குறிப்பிடுகிறார்.

யோவான் 1:1-3, 14

1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. 2. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். 3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. 14. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

நாஸ்டிஸிசத்தின் படி, இறைவனாகிய வார்த்தை, மனிதனாக வந்ததை ஏற்பதில்லை, அதனை யோவானின் இந்த வசனம் முழுவதுமாக மறுக்கிறது என்பதை கவனிக்கவும். பொய் உபதேசமாகிய நாஸ்டிஸிச‌த்தின் அடிப்படை கோட்பாட்டை எதிர்க்கின்ற வண்ணமாக புதிய ஏற்பாட்டு வசனங்கள் இருக்கும் போது, 'கீழை தேசத்து ஞானம் பைபிளுக்கு சேர்ந்த விதம்' என்று எப்படி செண்பகப்பெருமாள் சொல்கிறார்?

இப்படிப்பட்ட வசனங்களை திரு செண்பகப்பெருமாள் படித்து இருந்திருப்பார். இருந்தபோதிலும் தம் வஞ்சகமான போதனைகள் மூலமாக பொய்களை பரப்பிக்கொண்டு வருகிறார். மேற்கண்ட வசனங்களில் 'வஞ்சகர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்' என்று சொல்வது, செண்பகப்பெருமாள் போன்றவர்களைப் பற்றித்தான்.

தேவைப்படும் போது அடுத்தடுத்த கட்டுரைகளில், பைபிளின் கருத்துக்கள் எப்படி நாஸ்டிஸசத்திற்கு எதிராக உள்ளன என்பதை காண்போம்.

d) இரண்டாம் நூற்றாண்டிலிருந்து இக்கருத்துக்களுக்கு குறிப்பிட்ட அளவிற்கு ஆதரவு கிடைத்தது:

கடைசியாக, கீழ்கண்ட வரிகளோடு அவருடைய மேற்கோள் முடிகின்றது.

//From the early second century such doctrines were openly proclaimed in the churches, and won a considerable following among Gentile Christians.//

புதிய ஏற்பாடு, முதல் நூற்றாண்டு கடைசிக்குள்  எழுதி முடித்தாகிவிட்டது. இயேசுவின் சீடர்கள் இருந்தபோதே அது முற்றுப்பெற்றுவிட்டது. மேலும், வஞ்சகமான போதனைகள் வரும் என்றும், அவைகளுக்கு எச்சரிக்கையாக இருங்கள் என்றும், அப்படிப்பட்ட போதனைகள் செய்பவரை இயேசு வெறுக்கிறார் என்றும் வெளிப்படுத்தின விசேஷம் தெளிவாக சொல்லியாகிவிட்டது.

இதன் பிறகு இரண்டாம் நூற்றாண்டிலிருந்து, இந்த போதனையை சிலர் ஏற்கவும் செய்தார்கள் என்று சொல்வதினால் எந்த பயனுமில்லை. நாஸ்டிஸிசம் சொல்லும் போதனையை புதிய எற்பாடு எதிர்க்கிறது என்பதை வசன ஆதாரங்களோடு விளக்கினேன்.   

முடிவுரை:

இதுவரை திரு செண்பகப்பெருமாள் அவர்கள் மேற்கோள் காட்டிய ஆங்கில வரிகளை ஆய்வு செய்தோம். ஆங்கிலத்தில் சில வரிகளை படித்து, தவறாக பொருள் கூறும் இவர் எப்படி ஆய்வாளர் ஆகிவிட்டார் என்று புரியவில்லை.  முக்கியமாக, இவர் மேற்கோள் காட்டிய ஆசிரியர் எதனை சொல்லவந்தாரோ அதற்கு எதிர்மாறாக விளக்கமளிக்கிறார். 

நாஸ்டிஸிசம் என்றுச் சொல்லக்கூடிய "அறிவு நெறிக்கோட்பாடு" பற்றிய அடிப்படை அறிவு இவருக்கு இருந்திருந்தால், பைபிளின் வரிகளுக்கிடையில் இவர் தம் அறிவை தொலைத்து இருந்திருக்கமாட்டார்.

அடுத்தடுத்த கட்டுரையில் இன்னும் இவரது தவறான வரிகளுக்கு பதில்களைக் காண்போம்.

அடிக்குறிப்புக்கள்:

1) The Story Of The Faith - A Survey Of Christian History For The Undogmatic By William Alva Gilford - https://www.amazon.com/story-faith-Christian-history-undogmatic/dp/B0007I8UVQ

தேதி: 24th July 2019



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard