Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பண்டைய இந்தியாவில் பஞ்சம் இருந்ததா?


Guru

Status: Offline
Posts: 7471
Date:
பண்டைய இந்தியாவில் பஞ்சம் இருந்ததா?
Permalink  
 


 

பண்டைய இந்தியாவில் பஞ்சம் இருந்ததா?

இந்தியாவில் கட்ச்,ராஜஸ்தான் போன்ற வடமேற்குபகுதிகள், மத்தியதக்காணப்பகுதி ஆகிய இரு நிலங்களும் அடிக்கடி மழைபொய்க்கக்கூடியவை. ஆகவே அங்கே பஞ்சங்கள் வருவது இயல்பே. ஆனால் அங்கே ஒருபோதும் லட்சக்கணக்கான மக்கள் மடியமுடியாது. இதை இன்று இப்பகுதிகளில் பயணம்செய்தால்கூட நீங்கள் பார்க்கலாம். இன்றும் மிக மிகக் குறைவான மக்கள்பரவல் கொண்ட நிலங்கள் இவை. இன்றும்கூட இங்குள்ள மக்களில்பெரும்பாலானவர்கள் எளிதில் இடம்பெயரும் பண்பாடு கொண்டவர்கள். ஆகவே பஞ்சங்களில் கிராமங்களே ஒட்டுமொத்தமாக இடம்பெயர்வது பிராந்தியங்களே காலியாவது மிகச்சாதாரணம். எனவே அவர்கள் பஞ்சங்களில் கூட்டம் கூட்டமாகச் சாவதில்லை. அவர்களில் ஒருபகுதியினர் சென்ற இடங்களில் தங்கிவிடுவார்கள், கணிசமானவர்கள் திரும்பி வருவார்கள். திரும்பத் திரும்ப கிராமங்கள் கைவிடப்பட்டு மீண்டும் முளைத்தெழும்.

இதற்கெல்லாம் விரிவான இலக்கியப்பதிவுகள் உள்ளன. இரு உதாரணங்கள், வெங்கடேஷ் மாட்கூல்கரின் பங்கர் வாடி, பன்னலால் பட்டேலின் வாழ்க்கை ஒரு நாடகம். இரண்டுமே தமிழில் கிடைக்கின்றன. பஞ்சங்களில் மக்கள் ஒட்டுமொத்தமாக கிராமங்களை உதறிச் சென்றுவிடுவதன் கதைகள் இவை.

3308067, Getty Images /Hulton Archive

ஆனால் 1770 முதல் பிரிட்டிஷ் ஆட்சியில் உருவான பஞ்சங்கள் அப்படிப்பட்டவை அல்ல. அவை மக்கள்செறிந்து வாழக்கூடிய வளமான வேளாண்நிலப்பகுதிகளில் வந்த பஞ்சங்கள். பஞ்சம் வந்தால் மக்கள் எந்த நிலம் நோக்கி வருவார்களோ அந்த நிலங்களிலேயே பஞ்சம்.ஆகவேதான் கூட்டம் கூட்டமாக மக்கள் செத்தொழிந்தார்கள். அதற்கு முழுக்க முழுக்க பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் அதிகாரிவற்கத்தின் பொறுப்பின்மையும், மையப்படுத்தப்பட்ட ஊழல்மிக்க நிர்வாகமும், அப்பட்டமான சுரண்டலும்தான் காரணம். இது ஒன்றும் என்னுடைய கண்டுபிடிப்பு அல்ல. பல்வேறு குளறுபடிகள், அநீதிகள் குறித்து பல்லாயிரம் பக்கங்கள் இந்தியப் வேளாண் ஆய்வாளர்களால் எழுதித்தள்ளப்பட்டுள்ளன. நான் அவற்றில் இருந்து எடுத்த எளிய மனப்பதிவை மட்டுமே சொன்னேன். [ குறைந்தபட்சம் காலச்சுவடு இதழில் தொடர்ந்து வெளிவரும் சங்கீதா ஸ்ரீராம் எழுதும் கட்டுரைகளை வாசித்தாலே போதும்

http://www.kalachuvadu.com/issue-103/page60.asp

]

பிரிட்டிஷ் ஆட்சி செய்தது என்ன? ஒன்று இந்தியாவில் நீர்நிர்வாகமும் பொதுநில நிர்வாகமும் வட்டார நிர்வாக அமைப்புகளாகன கிராமசபைகளின் கைகளில் இருந்தன. அவற்றை கைப்பற்றி தங்கள் மைய நிர்வாகத்துக்குக் கொண்டுவந்தார்கள். நிர்வாகம் சிவப்புநாடாவுக்குள் சிக்கியது. விளைவாக நீர்நிலைகளும் பாசனவழிகளும் அழிந்தன. கிராமங்களில் இருந்த உபரி நிதி முழுக்க கடுமையான வரிவசூல் மூலம் உறிஞ்சப்பட்டது. ஆகவே கிராமசபைகள் செயலற்றன. பஞ்சம் வந்தபோது பஞ்சம் தாங்கும் அமைப்புகள் செயலிழந்தன.

கொடும் பஞ்சங்களின்போதுகூட நிர்வாகத்தை குறுநிலமன்னர்களிடமும் ஜமீந்தார்களிடமும் விட்டுவிட்டு வாளாவிருந்தது பிரிட்டிஷ் அரசு. ஏன் பஞ்சத்தில் மக்கள் செத்துக் குவிந்துகொண்டிருந்தபோது தானியங்களை கப்பல் கப்பலாகக் கைப்பற்றி ஏற்றுமதி செய்தது. இதெல்லாமே இன்று ஆய்வாளர்களால் விரிவாக எழுதப்பட்டுவிட்டன. ஆகவேதான் லட்சக்கணக்கான மக்கள் செத்தார்கள். அடிமைகளாக வேற்று நாடுகளுக்கு இடம்பெயர்ந்தார்கள்.

ஐம்பதுகளுக்குப் பின்னர்தான் பின்காலனிய ஆய்வுகள் பிரிட்டிஷாரின் சுரண்டலையும் அதன் மூலம் உருவான பேரழிவுகளையும் விரிவாகப் பதிவுசெய்ய ஆரம்பித்தன. பிரிட்டிஷ் காலனியாதிக்க வரலாற்றாசிரியர்களால் மீண்டும் மீண்டும் பதிவுசெய்யப்பட்ட ஒரு வரலாற்றுக் கோணம் உண்டு. அதாவது மைய ஆட்சி இல்லாமல் போரினாலும் அராஜகத்தாலும் அழிந்துகொண்டிருந்த இந்தியாவுக்கு பிரிட்டிஷாரின் வரவு மூலமே உறுதியான மைய அரசும் சட்டத்தின் ஆட்சியும் கிடைத்தது என்பதுதான் அது.

அது ஓர் எல்லை வரை உண்மையும் கூட. முகலாய ஆட்சி வீழ்ச்சி அடைந்தபின்  அவர்களின் உதிரி தளகர்த்தர்களால் சூறையாடப்பட்ட இந்திய நிலத்தில்தான் பிரிட்டிஷார் வந்து ஒருங்கிணைக்கப்பட்ட ஆட்சியை அளித்தனர். அவர்கள் அளித்த அந்த நிலையான நீதி நிர்வாகத்தை இந்திய மக்கள் ஏற்றுக்கொண்டமையால்தான் அவர்களால் இந்தியாவை ஆளவும் முடிந்தது. அவர்கள் செய்த சுரண்டலைக்கூட இந்திய மக்கள் ஏற்றுக்கொண்டுதான் இருந்தார்கள். இந்தியா இந்தியாவை காலனியாதிக்கத்துக்கு ஆளாக்கியதை நியாயப்படுத்த காலனியாதிக்கவாதிகளால் சொல்லப்பட்ட ஒரே நியாயம் இதுதான்.

ஆனால் பஞ்சங்களைப்பற்றிய தகவல்கள் வெளிவர வெளிவர இந்த நியாயப்படுத்தல் வலுவிழந்தது. ஆகவேதான் வங்காளப்பஞ்சங்களுக்கு முன்னரும் லட்சக்கணக்கானவர்கள் இறந்த பெரும்பஞ்சங்கள் இந்தியாவில் நிகழ்ந்திருந்தன என்ற சித்திரங்கள் காலனியவரலாற்றாசிரியர்களால் வலுவாக உருவாக்கப்பட்டன. இவற்றில் பஞ்சங்கள் குறித்த தகவல்கள் பல்வேறு முகலாய ஆவணங்களில் இருந்து திரட்டப்பட்டன. பெரும்பாலும் இவை வலிந்து உருவாக்கப்பட்டன. பிராந்திய வரிவசூல் விவரங்கள் டெல்லிக்குத்தெரிவிக்கப்படும்போது பஞ்சங்கள் அறிக்கையிடப்படும். அவற்றில் கிராமங்கள் அழிந்து விட்டன,அங்கே மக்களே இல்லை போன்ற வரிகள் இருந்தால் பலலட்சம்பேர் இறந்தார்கள் என்று அது இவர்களால் பொருள்கொள்ளப்பட்டது.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்துக்கு முன்னரே பெரும்பஞ்சங்கள் வந்தன என்று சொல்லவரும் காலனிய வரலாற்றாசிரியர்கள்கூட அப்பஞ்சங்கள் எல்லாமே அந்தந்த பிராந்திய எல்லைக்குள் மட்டுமே நிகழ்ந்தன என்றும் தேசமளாவ நிகழ்ந்தவை அல்ல என்றும்தான் சொல்லவேண்டியிருக்கிறது. ஏனென்றால் முகலாய ஆவணங்கள் அவ்வாறே காட்டுகின்றன. இது பஞ்சங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்தார்களே ஒழிய லட்சக்கணக்கில் செத்திருக்க வாய்ப்பில்லை என்ற கொள்கைக்குத்தான் ஆதரவாக இருக்கிறது.

உதிரித்தகவல்களைத் திரட்டியும் திரித்தும் 14 பஞ்சங்கள் 11 ஆம் நூற்றாண்டு முதல் நிகழ்ந்தன என்று சொல்கிறார்கள் இவர்கள். பல்வேறு திரிபுகள் செய்யப்பட்டும்கூட இந்தியாவின் வரலாற்றில் 1770 களுக்கு முன்னர் நிகழ்ந்த பெரும் பஞ்சங்கள் என எதையும் இவர்களால் உறுதியாகச் சுட்டமுடியவில்லை என்பதே உண்மை.  முகலாயர் ஆட்சிக்காலம் தெளிவான வரலாற்றுப்பதிவுகள் கொண்டது என்பதையும் இணைத்துப்பார்க்கவேண்டும். இன்று இந்திய வரலாற்றில் மேலைநாட்டு நிதி பெறக்கூடிய ஆய்வுநிறுவனங்களே அளவிலதிகம். இந்த அமைப்புகள் வழியாக மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டும்கூட இன்றுவரை நிறுவப்படாத கருத்தாகவே இந்தியாவின் பழங்காலப்பஞ்சங்களைப் பற்றிய கருத்துக்கள் உள்ளன.

மிக எளிமையாகப் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம்தான் நான் என் உரையில் சொன்னது. ராமநாத புரத்தில் பஞ்சம் வரும், மக்கள் இடம்பெயர்வார்கள், திரும்பிவருவார்கள். தஞ்சாவூரில் பஞ்சம் வந்தால்தான் பல்லாயிரம்பேர் சாவார்கள். இந்தியாவில் மகாபாரதக் காலம் முதல் வந்த எல்லா பஞ்சங்களும் பஞ்சம் வரக்கூடிய இடங்களில் வந்தவை. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்துப்பஞ்சம் சுரண்டல்மூலம் வளமான நிலங்களில் வந்த செயற்கையான பஞ்சம். என்னுடைய உரையில் மிகத்திட்டவட்டமாக வெளிப்படையாகச் சொல்லப்பட்டிருக்கும் கருத்து இதுதான். இன்று ஏராளமான ஆய்வாளர்களால் மீளமீளச் சொல்லப்பட்டுவரும் சாதாரணமான விஷயம் இது.



__________________


Guru

Status: Offline
Posts: 7471
Date:
Permalink  
 

சர்ச்சில் – ‘’ வெள்ளைத் திமிர் ‘’ உருவாக்கிய வங்காள உணவுப் பஞ்சம்
( இந்தப் பதிவு , திருமதி மதுஸ்ரீ முகர்ஜி ( Madhusree Mukerjee ) அவர்களின் Churchill’s Secret War – The British Empire and the Ravaging of India during World War II என்ற ஆய்வு நூல் குறித்த ஒரு மதிப்பீடு )
1939 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி , ஜெர்மனி ( Germany ) போலந்து ( Poland ) நாட்டின் மீது படை எடுத்து ஆக்ரமிப்பு செய்தது . அடுத்த செப்டம்பர் 3 ஆம் தேதி இங்கிலாந்து நாடு ஜெர்மனி மீது போர் அறிவிப்பு பிரகடனம் செய்து இரண்டாவது உலக மஹா யுத்தத்தை ( World War II ) தொடங்கி வைத்தது . அந்த சமயத்தில் இங்கிலாந்து நாட்டின் காலனி ( Colony) என்ற வகையில் இந்தியாவும் , நேச நாடுகளின் கூட்டணியில் ( Allied States ) கட்டாயமாக சேர்க்கப்பட்டது . இந்தப் போர் ஏகாதிபத்திய நாடுகளுக்கு ( Imperial States ) இடையே உள்ள நாடு பிடிக்கும் போர் வெறியாகவும் , காலனிய மக்களை துயரத்தில் ஆழ்த்தி அவர்தம் நாட்டு வளங்களை , இந்த போர் வெறிக்கு பயன்படுத்திக் கொண்ட செயலாகவும் தான் இருந்தன , எனப் பின்னர் நடந்த நிகழ்ச்சிகள் உறுதிப்படுத்தின !
சர்ச்சில் (Sir Winston Leonard Spencer-Churchill (30 November 1874 – 24 January 1965 ) இங்கிலாந்து ( United Kingdom ) நாட்டின் இரு உலகப் போர்களின் போதும் அந்த நாட்டின் பிரதமாராக இருந்தவர் .
சர்ச்சில் , 1940 ஆம் ஆண்டு மே ( May ) திங்கள் 10 ஆம் நாள் , இங்கிலாந்து நாட்டின் யுத்தகால பிரதமராக பொறுபேற்றுக் கொண்டார் . அவர் இந்தப் போரில் , இந்தியாவின் வளங்களை கட்டாயமாக எடுத்து , இந்த நாட்டின் மக்கள் அழிவைப் பற்றி சிறிதும் , கவலைபடாமல் ஈடுபட்டார் . போர்த்தேவைக்காக , இந்தியாவில் விளைந்த உணவுப்பொருட்களை , இங்குள்ள மக்களின் தேவைகளைப் பற்றி யோசிக்காமல் ஏற்றுமதி செய்தார் . இந்த விளைவு , இந்தியாவில் , குறிப்பாக , வங்காளத்தில் பெரும் உணவுப் பஞ்சம் வந்தது . இந்த பஞ்சம் நிகழ்ந்த இடம் வரைபடத்தில் உள்ளது (https://upload.wikimedia.org/.../Map_of_Bengal_districts... )
இந்தப் பஞ்சம் காரணமாக சுமார் 30 இலட்சம் இந்தியர்கள் உணவின்றி , பட்டினியால் மாண்டு போனார்கள் .
நமது பாரத நாட்டில் தொன்று தொட்டு , நெடுங்காலமாகவே உணவுப் பஞ்சம் வந்தால் அதனை சமாளிக்கும் அமைப்புகள் இருந்து வந்தன . மத்திய காலத்தில் ஊர்க் கிராமப் பஞ்சாயத்துகள் , பேரரசுகளை நம்பி இராமல் , தன்னளவில் , இந்தக் கிராமப் பஞ்சாயத்துகள் செயல் ஆற்றி வந்தன. இந்தப் பேரசுகள் ஆட்சிகள் காலம் முடிந்த பிறகு , முகாலயர் ஆட்சிகாலம் வரையிலும் சிறப்பாக செயல் பட்டன . இந்த அமைப்புகளை அழித்தவர்கள் , அந்நியர்களான , நாடு பிடிக்க வந்த காலனிய ஆட்சி அரசுகள்தான் !
இரண்டாவது உலக மஹா யுத்தம் 1939 ஆண்டு முதல் 1945 ஆண்டு வரை , தொடர்ந்து நடை பெற்றது . இங்கிலாந்து நாட்டின் போர்த் தேவைகளுக்கு ஏற்ப , பாரதத்தின் உணவுப் பொருட்கள் பிரதமர் சர்ச்சிலின் உத்தரவின் பேரில் , தொடர்ந்து ஏற்றுமதி செய்யபட்டு வந்தன . இந்த நிலையில் 1942 ஆம் ஆண்டில் , வங்கத்தில் இயற்கைப் பேரழிவுகள் நடந்தன – நோயினால் பயிர் உற்பத்தி பாதிப்பு , சூறாவளி காற்று , பேய்மழை என மக்களை வாட்டி வதைத்தன . அடுத்து வந்த 1943 ஆம் ஆண்டு , முன்னர் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவுகளினால் உணவு உற்பத்தி குறைந்து பஞ்சம் தலை விரித்து ஆட்டம் போட்டது .
இம்மாதிரியான ஒரு பஞ்ச காலத்தில் ஒரு மக்கள் நலன் நாடும் அரசு , மற்ற இடங்களில் இருந்த உணவுப் பொருட்களை , பஞ்சப் பகுதிக்கு கொண்டு சென்று , மக்கள் நிவாரணப் பணிக்கு முன்னுரிமை கொடுத்திருக்கும் , ஆனால் அன்று இருந்தது , போர்வெறி மிக்க ஏகாதிபத்திய இனவெறி பிடித்த பிரதமர் சர்ச்சிலின் ஆட்சியின் கீழ் அல்லவா எங்கள் அருமை மிக்க பாரத நாடு அடிமைப் பட்டுக் கிடந்தது ?
வங்காளத்தில் மக்கள் பஞ்சம் காரணமாக , கும்பல் கும்பலாக மடிகிறார்கள் என்று செய்தி சர்ச்சிலுக்கு தெரியாமல் இல்லை . அன்று இந்தியாவுக்கான அமைச்சர் அமெரி ( Leopold S Amery – Secretary of State for India ) , இந்திய வைஸ்ராய் லின்லித்கோவ் ( Victor Alexander John Hope, 2nd Marquess of Linlithgow ) ஆகிய இந்த மூவருக்கு இடையில் இருந்த கடிதப் போக்குவரத்தை ( கடிதங்கள் , தந்திகள் ) நோக்கும் பொழுது – வங்காளத்தின் பஞ்சம் குறித்து சர்ச்சிலுக்கு நன்கு தெரியும் என்பது புலனாகிறது . சர்ச்சில் இது பற்றி கவலை கொள்ளவில்லை . யுத்தப் பணிக்கு தேவைபடும் அனைத்து உணவு வகைகளையும் இங்கிருத்து ஏற்றமதி செய்ய உத்தரவிட்டுக்கொண்டே இருந்தார் . மேலும் அந்த சமயத்தில் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள் தங்கள் வசம் உள்ள மிகையான அரிசியை , இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய முன்வந்தன , ஆனால் இவற்றை கொண்டு செல்ல கப்பல்களை இங்கிலாந்து ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரின . இந்த வேண்டுகோளை சர்ச்சில் நிராகரித்தார் . நம வங்கம் தந்த சிங்கம் “ நேதாஜி ” சுபாஷ்சந்திர போஸ் அவர்களும் சுமார் 1 லட்சம் டன் ( 1 lahk MT ) வரை வெளிநாட்டில் இருந்து இந்தியா கொண்டு வர அனுமதி கோரினார் . இந்த அனுமதியும் மறுக்குபட்டது !
சர்ச்சில்லுக்கு ஏன் இந்தியர்கள் மீதான இத்தகு வெறுப்பு ?
இரண்டு விதமான காரணங்களை யூகிக்கலாம் :
ஒன்று – சர்ச்சிலின் குடும்பம் அந்த நாட்டின் புகழ் பெற்ற ஒரு பிரபுக் குலக் குடும்பம் ( Dukes of Marlborough, ) . அவரது தந்தையும் , பாட்டனாரும் பாரளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் . சர்ச்சில் இளமையிலேயே ஓர் உயர் ஆங்கிலேய வாழ்க்கை முறையில் (British Aristocracy ) வளர்ந்து , அவர் இறக்கும் வரையிலும் , ஓர் ஏகாதிபத்திய ( Imperialist ) மன நிலையில் இருந்தவர் . “ வெள்ளைத் திமிர் ” என நான் மேலே குறிப்பிட்டது இதைத்தான் . அவர் ஓர் இனவெறியர் .
சர்ச்சிலின் இந்த இனவெறி குறித்து சில தகவல்கள் :
// Churchill exclaimed “ I hate Indians . They are a beastly people with a beastly Religion ” - Mansergh , The Transfer of Power – Vol III , 3
// The Prime Minster ‘ hates India and everything to do with it ‘ Wavell observed in his diary on 27th Jul , after witnessing an outburst in the War Cabinet // Schofield , Wavell : Soldier & Statesman , 286 (Field Marshal Archibald Percival Wavell, 1st Earl Wavell – Viceroy and Governor General )
காந்தி குறித்து // Gandhi came to represent Hindu guile - a malignant subversive fanatic – a thoroughly evil force // Churchill , India , 95
இரண்டு – இனவெறி மற்றும் நிறவெறி இவற்றின் ஊடாக இருக்கும் சமய வெறுப்பு . சர்ச்சில் , தனது ஆழந்த கிறித்துவ சமய நம்பிக்கைகளின் எதிரான இந்து மத நம்பிக்கைகளை கொண்டு இருந்த அன்றைய இந்தியர்களின் மீதான வெறுப்பும் , அவரது இந்த மனநிலைக்கு ஓர் காரணம் என இன்று நாம் ஊகிக்க வேண்டி உள்ளது . கீழ்காணும் ஒரு சம்பவத்தை பார்க்கலாம் :
// Back in London , Churchill told his private secretary that ‘ the Hindus were a foul race “ protected by their mere pullulation from the doom that is their due ” ( Pullalation means rapid breeding ) . He wished that Air Chief Marshall Arthur Harris , the head of the British bomber command , could ‘ send some of his surplus bombers to destroy them ‘ // Colville , The Fringes of Power , Vol II , 203
நூலாசிரியர் திருமதி மதுஸ்ரீ முகர்ஜி , இந்த நூலினை பலவிதமான ஆவணகளின் சான்றுகளோடு இந்த வங்காளப் பஞ்சம் பற்றி எழுதி உள்ளபோதிலும் , அன்று 1943ஆம் ஆண்டு பஞ்சத்தில் சிக்கி பின்னர் தெய்வாதீனமாக , உயிர் பிழைத்து , இன்று முதியவர்களான சில வங்காளிகளை நேர்காணல் செய்தும் , அந்தக் குறிப்புகளை இந்த நூலில் பதிவு செய்து உள்ளது , மிக சிறப்பான ஓர் காரியம் . அந்த நேர்காணல் குறிப்புகளை நாம் இன்று வாசித்தால் கூட , நம் கண்களில் கண்ணீர் பெருகும் என்பது உண்மை . ஒரு காலத்தின் ஓர் உயரிய பண்பாடு , காலனிய ஆட்சிக் கொடூரங்களினால் , இந்தக் கேவல நிலையை எப்படி அடைந்து என்பதே நம் முன் நிற்கும் வினா !
அந்த பஞ்ச காட்சிகளை , நூலாசிரியர் வரிகளில் சில பார்போம்
- // A man with a female child requested everybody he met to buy the baby . As nobody agreed to his proposal , the man threw the baby into the well and fled away //
- // Gyanenranath Panda of Chongra village , having become crazed with hunger , slew his father , mother , grandmother , grandfather , wife , son , daughter – everyone in the house //
- // A schoolteacher in Mosisadal reported seeing children picking and eating undigested grains out of a beggar’s diarrhoeal discharge //
நம் நாடு பல இடர்பாடுகள் கடந்து , நம் பாரத நாட்டின் மக்களும் பல இன்னல்களைக் களைந்து , இந்த 2018 ஆண்டில் , தேசப்பற்று ஒன்றினையே தன் உயிர் மூச்சு எனக் கருதும் , அனவரதமும் மக்கள் நலன் நாடும் ஒரு தலைவர் , நம் பாரத பிரதமாராக இன்று இருப்பது நம் நல்ஊழ் என்றுதான் சொல்லவேண்டும் , ஏனென்றால் , எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு , நம் பாரத நாட்டின் பொருளாதாரம் இங்கிலாந்து நாட்டின் பொருளாதாரத்தை பின்னுக்கு தள்ளி உலக அரங்கில் 5 அவது இடத்தை அடையும் என செய்திகள் தெரிவிகின்றன (https://www.news18.com/.../in-2019-india-will-pip-britain... )
மேலே சொன்ன செய்தியை கேட்ட பிறகு , நம் நாட்டை இனரீதியாகவும் , மத ரீதியாவும் வெறுத்த சர்ச்சிலின் ஆன்மா என்ன நினைக்கும் ?
யாருக்கு தெரியும் – Churchill will be turning in his grave !


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard