Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பண்டிட் க. அயோத்திதாஸ் -பௌத்த அர்ஹத்கள்தான் - பிராமணர்கள்


Guru

Status: Offline
Posts: 7387
Date:
பண்டிட் க. அயோத்திதாஸ் -பௌத்த அர்ஹத்கள்தான் - பிராமணர்கள்
Permalink  
 


 Badri Seshadri

10ம.நே  · 
 
புத்த மதம், இந்து மதம் ஆகியவை குறித்துத் தமிழில் எழுதும்போது, தொடர்ந்துவரும் ஒரு பெயர் பண்டிட் க. அயோத்திதாஸ் (அப்படித்தான் அவர் தன் பெயரை எழுதுகிறார்). அவருடைய முதன்மைக் கருத்தாக்கம், தொடக்கத்தில் இந்தியா முழுதும் பௌத்த மதம் மட்டுமே இருந்தது என்பதே. அதன்பின் பாரசீகத்திலிருந்து (புருசீக தேசத்திலிருந்து) சில மிலேச்சர்கள் (அவருடைய வார்த்தை) இந்தியா வந்தனர். வந்து சிறிது சிறிதாக இந்தியாவை அழித்தனர். இதனைத்தான் அயோத்திதாஸ், தன் 'இந்திரர் தேச சரித்திரம்' என்ற நூலில் விளக்கமாக எழுதியுள்ளார்.
பௌத்த அர்ஹத்கள்தான் - அனைத்தையும் விட்டொழித்து ஞானம் பெற்றவர்கள் - உண்மையான பிராமணர்கள். இவர்கள் சகட மொழியான சமஸ்கிருதத்தில் பிராமணர்கள் என்றும் திராவிட மொழியான தமிழில் அந்தணர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். ஆனால் இந்த புருசீக மிலேச்சர்கள், மேற்சொன்ன பௌத்த பிராமணர்களைப்போல கபடமாக நடந்துகொண்டு (எனவே அவர்கள் வேஷ பிராமணர்கள்) சிறிது சிறிதாக இந்தியா முழுமையையும் தங்கள் கைக்குள் கொண்டுவருகிறார்கள்.
இதனைத் தனக்கே உரிய நடையில் அயோத்திதாஸ் விரித்துரைக்கிறார். இந்தப் புத்தகம் சான்றுகள் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. இது புராண மறு உருவாக்கம். தனக்குப் பிடித்ததையெல்லாம் மிக அழகாக, சரளமாக, கதையாக்குகிறார் அயோத்திதாஸ்.
சித்தார்த்த புத்தர்தான் கிட்டத்தட்ட இந்தியாவின் ஆரம்பம். அவர்தான் இந்திரன். அவர் பெயரால்தான் இந்திர தேசம், இந்திய தேசம் என்ற பெயர் இந்தியாவுக்கு. அவருடைய இன்னொரு பெயரால்தான் பாரதம் என்ற பெயரும் இந்தியாவுக்கு. புத்தருடைய சீடர்கள் சிலர் உருவாக்கியதுதான் சாங்கியம், நையாயிகம், வைசேஷிகம், மீமாம்சை போன்ற அறுமத தரிசனங்கள்.
ஜகத்குரு சங்கராச்சாரியார் என்பது வேறு யாரும் அல்ல. சங்க அறத்தைப் போதித்த புத்தர்தாம் சங்க-அறர் அதாவது சங்கரர். புருசீக வேஷப் பார்ப்பனர்கள் இந்தப் பெயரைத் தமதாக்கி, ஒரு ஆளை ஜோடித்து அவரைப் பல்லக்கில் வைத்து ஊரெல்லாம் கொண்டுபோய் பிச்சை வாங்கி உண்டு மகிழ்ந்திருந்தனர். அவரையே ஜகத்குரு என்றும் சங்கரர் என்றும் கூறலாயினர்.
சரி, இராமானுஜரை விட்டாரா என்றால் இல்லை. இந்த "இராமாநுடாச்சாரி என்பவன்" ஒரு ஆரியவேஷ பிராமணன். இவன் "விட்டுணு என்னும் கற்சிலை தெய்வாதாரத்தைக் கொண்டு புத்தரது சரித்திரத்தை அநுசரித்த ஓர் கூட்டத்தை ஏற்படுத்தி அதனால் சீவிக்க ஆரம்பித்துக்கொண்டான்."
சங்கரருக்கு மாற்றாக நீலகண்ட சிவாச்சாரி என்பவரும் வருகிறார். அவருக்கும் ஒரு வாங்கு கொடுக்கப்படுகிறது.
சரி, இந்த நால்வருண அமைப்பு உண்மையா? ஆம் என்கிறார் அயோத்திதாஸ். புத்தர்தான் பிரம்மா. அவருடைய முகத்திலிருந்து வந்தவர்கள்தான் பிராமணர்கள் - அதாவது பௌத்த அர்ஹத்கள். தோளிலிருந்து வந்தவர்கள் சத்திரியர்கள். தொடையிலிருந்து வந்தவர்கள் வைசியர்கள். காலிலிருந்து வந்தவர்கள் சூஸ்திரர்கள் அல்லது சூத்திரர்கள் அல்லது வேளாளர்கள். அதாவது உண்மையிலேயே அப்படி வந்தவர்களாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இது ஒரு குறியீடுதான். ஆனால் இந்தப் பிரிவுகளை வர்ணத்திலிருந்து சாதிகளாக மாற்றியவர்கள் வேஷ பிராமணர்கள்.
சமணர்கள் கழுவேற்றம் உண்மையா? ஆம் உண்மையே. ஆனால் நீங்கள் நினைப்பதுபோல சமணர்கள், மகாவீரரைப் பின்பற்றுவோர் அன்று. அவர்களும் பௌத்தர்கள்தாம். வேஷ பிராமணர்கள் ஓரு அரசரின் முத்துமாலையைக் கவர்ந்து அதனைச் சமணர்களின் பொருள்களுக்கிடையே கொண்டுவைத்துவிட்டார்கள். அரசன் முத்துமாலையைத் தேட, அது எங்கு கிடைக்கும் என்பதை வேஷ பிராமணர்கள் அரசனிடம் சொல்ல, அது சமணர்களிடம் கிடைக்க, உடனே அரசன், அந்த சமணர்களைக் கழுவிலேற்றிக் கொல்லுமாறு ஆணையிடுகிறான். அப்படித்தான் சமணர் கழுவேற்றம் நடைபெறுகிறது.
இராமன் யார், கிருஷ்ணன் யார் (மிக அற்புதமான கதை இது)? விநாயகர் யார், கார்த்திகேயன் யார்? சிவலிங்க வழிபாடு என்பது எப்படித் தோன்றியது? இரணியகசிபு (அவன் உண்மையில் இரணிய காசியபன் என்ற காஞ்சி நகரை ஆண்ட அரசன்) எப்படி வஞ்சகமாக வேஷ பிராமணர்களால் கொல்லப்படுகிறான்? வேதங்கள் எப்படி உருவாக்கப்பட்டன? இந்தியாவில் சாதிகள் எப்படி உருவாகின? மநு தர்மசாத்திரம் உருவாக்கப்பட்ட வரலாறு. பறையர்கள் யார்? சண்டாளர்கள் யார்? சூஸ்திரம் என்றால் என்ன? பிரம்மா யார்?
இந்தப் புருசீக வேஷ பிராமணர்களைக் கண்டவிடமெல்லாம் பௌத்தர்கள் அடித்துத் துரத்தி, சாணியைக் கரைத்து ஊற்றிக் கேவலப்படுத்துகிறார்கள். பௌத்தர்களைக் கண்டாலே வேஷ பிராமணர்கள் அஞ்சி நடுங்கி பம்மி ஓடிவிடுவார்களாம்.
ஆனாலும், என்ன நடக்கிறது என்றால், கொஞ்சம் கொஞ்சமாக இந்திய (அதாவது இந்திர) நாட்டில் உள்ள மக்கள் பலரும் இந்த புருசீக வேஷ பிராமணர்களைப் போலவே வேஷம் கட்டி, தாங்களும் வேஷ பிராமணர்களாக ஆகின்றனர். இவர்கள் ஆந்திர வேஷ பிராமணர்களாக, மராஷ்டிக (அதாவது மகாராஷ்டிர) வேஷ பிராமணர்களாக, கன்னட வேஷ பிராமணர்களாக, திராவிட/தமிழ் வேஷ பிராமணர்களாக உலா வருகின்றன. ஒருவரோடு ஒருவர் அடித்துக்கொள்ளவும் செய்கின்றனர். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக ஒன்றும் தெரியாத அபலை மக்களையும் மன்னர்களையும் பௌத்தத்திலிருந்து வெளியேற்றிவிடுகின்றனர்.
இறுதியில் பௌத்தர்கள் எல்லோரும் பறையர்களாகவும் சண்டாளர்களாகவும் (சாண் ஆளர் என்னும் உயரிய குழு, சண்டாளர்களாகக் கீழிறக்கப்படுகிறது) ஆக்கப்பட்டு, தாழ்ந்த சாதியினர் என்று சொல்லப்பட்டு, வேஷ பிராமணர்களால் தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாகின்றனர்.
இவ்வாறாக ஒட்டுமொத்த இந்தியாவின் முழுமையான அரசியல், சமூக, பொருளாதார, மத, தத்துவ வரலாற்றை வெறும் 160 பக்கங்களில் பண்டிட் அயோத்திதாஸ் அளிக்கிறார். பக்கத்துக்குப் பக்கம் பகீர் திருப்பங்கள் நிறைந்த புத்தகம். இதில் இஸ்லாமியப் படையெடுப்பு குறித்தும் ஒருசில வார்த்தைகள் வருகின்றன. வெள்ளைக்காரர்கள் குறித்தும் வருகிறது.
+++
இதனைத்தான் ஆதாரமாக வைத்துக்கொண்டு நாம் தமிழ்நாட்டில் பௌத்த-இந்து சமயப் போராட்டங்களை ஆராயவேண்டியிருக்கிறது.
இப்படிக்கு,
ஒரு புருசீக-ஆரிய வேஷ பிராமணன்!
 


__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
RE: பண்டிட் க. அயோத்திதாஸ் -பௌத்த அர்ஹத்கள்தான் - பிராமணர்கள்
Permalink  
 


அயோத்திதாசரின் சூத்திரம் ஜார்ஜ் ஆர்வெல்லின் விலங்குப்பண்ணையில் வரும், 'நாலு கால் நல்லது;ரெண்டுகால் கெட்டது' போல ஒன்று. 'நல்லதெல்லாம் பௌத்தம்;கெட்டதெல்லாம் இந்து மதம்'.
5
 
 
  • விரும்பு
  •  · 
    பதிலளி
  •  · 1ம.நே
  •  · 
    திருத்தப்பட்டது
  •  
    Suresh Venkatadri
     இவர்தான் அயோத்திதாச பண்டிதரா?


__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

 உண்மையில் திருமாவளவன் கேட்டது நியாயமான கேள்வி..சும்மா தமிழ் கடவுள்,தெலுங்கு கடவுள் என்பதெல்லாம் அயோக்கியத்தனமான புழுகு..ஹிந்து கடவுள்கள் என்பதுதான் சரி.ஹிந்து மதத்தை வெறுக்கிறோம்,சடங்குகளை வெறுக்கிறோம் என்றால் சங்க இலக்கியம்,தேவாரம்,திருவாசகம், திவ்ய பிரபந்தம் என எல்லாவற்றையும் விட்டு விலகி நிற்க வேண்டும்.இதைத்தான் பெரியார் செய்தார்.அந்த வகையில் அவருக்கு நேர்மை இருந்தது..
இந்த அடிப்படை நேர்மை கூட தமிழன் வேறு ஹிந்துக்கள் வேறு என்று சொல்லிக் கொண்டு திரிபவர்களுக்கு இல்லை.தமிழர்களின் பெருமை என்று சொல்லப்படுகிற கோவில்கள்,இலக்கியங்கள், பண்பாடு விழுமியம் எல்லாம் வேண்டும்.ஆனால் தமிழனுக்கு மதமில்லை என்ற உருட்டும் வேண்டும் என்றால் இது ஒரு மோசடிவாதமில்லையா?
ஆரிய கடவுள் வேறு,திராவிட கடவுள் வேறு என்றெல்லாம் சப்பரம் இழுத்துக் கொண்டிருந்த கோமாளி கூத்து காலமெல்லாம் முடிந்துவிட்டது.இன்று எல்லாமே வெளிப்படையாக இருக்கிறது.சங்க இலக்கியங்களை விரும்புகிற யாரும் அதை திறந்து வாசிக்க முடியும்..சங்கப்பாடலில் சொல்கிற தெய்வங்களுக்கும் வேதக் கடவுளர்கள் என்று சொல்லப்படுபவர்களுக்கும் Iconography ல் என்ன வேறுபாடு உள்ளது? கீழே உள்ள குறுந்தொகை கடவுள் வாழ்த்துப்பாடலை கவனியுங்கள்..👇
|| தாமரை புரையும் காமர் சேவடிப்,
பவழத்து அன்ன மேனித், திகழ் ஒளிக்,
குன்றி ஏய்க்கும் உடுக்கைக், குன்றின்
நெஞ்சு பகவெறிந்த அம் சுடர் நெடுவேல்
சேவலங்கொடியோன் காப்ப
ஏம வைகல் எய்தின்றால் உலகே..||
- பாரதம் பாடிய பெருந்தேவனார்
இதன் பொருள் தாமரை மலர் போன்ற அழகிய செம்மையான திருவடிகளையும்,பவழத்தை ஒத்த சிவந்த நிறம் கொண்ட திருமேனியையும், எத்திசையிலும் விளங்கும் பேரொளியையும், குன்றிமணியை விட சிவந்த ஆடையையும்,கிரவுஞ்ச மலையின் நெஞ்சு பிளக்கும் படி எறிந்த அழகும் ஒளியும் உடைய நீண்ட நெடிய வேற்படையும் கொண்ட சேவலைக் கொடியாகக் கொண்ட திருமுருகன் இந்த உலகத்தைக் காப்பதால் உலகத்தில் இருக்கும் உயிர்கள் எல்லாம் எந்தக் குறையும் இன்றி நாள்தோறும் வாழ்கின்றன.
எவ்வளவு தெளிவாக முருகன் பவழம் போல சிவந்தவன்,வேல் படையை உடையவன்,தாரக வதமான கிரவுஞ்ச மலையை எறிந்தது என வரிசையாக கந்தபுராணத்தையே பாடிவிட்டார்கள்?
------------------------------------------------------------------------------------------------------------------------------------
|| நீல மேனி வாலிழை பாகத்து
ஒருவன் இரு தாள் நிழல் கீழ்
மூவகை உலகு முகிழ்த்தன முறையே || - ஐங்குறுநூறு
நீல மேனியும் தூய்மையான ஒளி பொருந்திய அணிகலன்களை அணிந்த உமாதேவியை தன் மேனியின் ஒரு பாகத்துக் கொண்ட ஒருவன் சிவபெருமான். அவனது திருவடிகளின் நிழலின் கீழ் மூவகை உலகங்களும் முறையே முகிழ்த்தன என்று அர்த்தநாரீஸ்வரர் தத்துவத்தையே சொல்லிவிட்டது சங்கப்பாடல்.ஆலமர்செல்வன், முக்கண் முதல்வன் என்றெல்லாம் தெளிவாக சிவனைப் பற்றி ஆகமங்களும் புராணங்களும் போற்றும் உருவத்தையே ஒப்பிடுகிறது சங்கப்பாடலும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
|| ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை,
மாற்று அருங் கணிச்சி, மணி மிடற்றோனும்;
கடல் வளர் புரி வளை புரையும் மேனி,
அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்;
மண்ணுறு திரு மணி புரையும் மேனி,
விண் உயர் புள் கொடி, விறல் வெய்யோனும்,
மணி மயில் உயரிய மாறா வென்றி,
பிணிமுக ஊர்தி, ஒண் செய்யோனும் என
ஞாலம் காக்கும் கால முன்பின்,
தோலா நல் இசை,நால்வருள்ளும்,
கூற்று ஒத்தீயே,மாற்று அருஞ் சீற்றம்;
வலி ஒத்தீயே,வாலியோனை;
புகழ் ஒத்தீயே, இகழுநர் அடுநனை;
முருகு ஒத்தீயே, முன்னியது முடித்தலின் || - புறநானூறு 56
மேலே கண்ட புறப்பாடல் தெளிவாக தெய்வ அடையாளங்களை சொல்கிறது.மதுரை கணக்காயனார் மகன் நக்கீரன் பாண்டியன் இலவந்திகை பள்ளித் துஞ்சிய நன்மாறனை பற்றி புகழ்ந்து பாடியது.இந்த பொயு 2 ம் நூற்றாண்டு என்கிறார்கள்.
அதாவது,அந்தப் பாடலின் பொருளானது பாண்டியனை இப்படிப் புகழ்கிறது."காளைமாட்டு ஊர்தி,
தீ போன்று விரிந்த செஞ்சடை,
கையில் கணிச்சி ஆயுதப் படை,
கழுத்தில் நீலநிற நஞ்சுமணி
ஆகியவற்றை உடைய சிவபெருமான்
இவன் கூற்றுவன் போல் சினம் கொண்டவன்.
கடலில் வளரும் சுழல்சங்கு போன்ற வெண்ணிற மேனி,கலப்பை ஆயுதப் படை,பனைமரக் கொடி
ஆகியவற்றை உடைய பலராமன் போல் வலிமை கொண்டவன்..
கழுவிய மணிக்கல் போன்ற நீலநிற மேனி,கருடப்பறவைக் கொடி
ஆகியவற்றை உடைய திருமால்
திருமால் போல் இகழ்வாரை அழிக்கும் புகழ் கொண்டவன்..
மயில் கொடி,பிணிமுகம் என்ற யானையை ஊர்தியாகக் கொண்டு
வெற்றியாளனாக விளங்கும் முருகன் போல் எண்ணியதை முடிக்கும் திறனாளன்.."
------------------------------------------------------------------------------------------------------------------------------------
தெளிவாகவே மேலே கண்ட பாடலும் இன்று நாம் கோவில்களில் வணங்கும் கடவுளர்களுக்கும் என்ன வித்தியாஸம்? இந்தியா முழுக்க இதைத்தான் ஹிந்து கடவுள் என்று வழிபாடுகிறார்கள்.Iconography ல் எந்த மாற்றத்தையும் இது சொல்லவில்லை என்பதை வாசித்தாலே புரியும்.
இதில் பிணிமுகம் என்ற முருகனின் வாகனமான யானை பற்றிய தகவல் நமது புராணத்திலேயே உண்டு.முருகன் சூரனை வதம் செய்வதற்கு முன்னர் அவருடைய வாகனங்களில் ஒன்று பிணிமுகம் என்கிற யானை.
இதன் உட்பொருள் யானையும் மயிலும் பிரணவ சொரூபம்.மயில் மீது வருவதற்கும் பிணிமுகத்தின் மீது வருவதற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில்,தோகை விரித்த மயில் மீது முருகன் வீற்றிருப்பது பிரணவத்தின் உட்பொருளாக முருகன் உள்ளான் என்பதையும், பிணிமுகத்தில் அமரும்போது பிரணவத்தை இயக்குபவனாக இருந்து முருகன் அதனைச் செலுத்துகிறான் எனப் பொருள்படும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
பதிற்றுப்பத்தில் நெடுஞ்சேரலாதனை குமட்டூர் கண்ணனார் புகழும் இரண்டாம் பத்து பாடலில் தெளிவாகவே முருகனின் புராண செய்தி வருகிறது.
|| அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும்
சூருடை முழுமுதல் தடிந்த பேர் இசை
கடுஞ் சின விறல் வேள் களிறு ஊர்ந்தாங்கு ||
துன்பம் செய்யும் அரக்கர்கள் இரவு பகல் பாதுகாப்பாகக் காக்கும்,சூரனுடைய வீரத்தின் உருவான மாமரத்தை அறுத்த பெரும் புகழையுடைய,கடும் கோபமும் வீரமும் கொண்ட முருகப்பெருமான் தன் வாகனமாகிய யானையில் ஏறி ஊர்ந்து வந்ததைப் போல என்று நெடுஞ்சேரலாதனின் போர் பரணியை பாடுகிறார் புலவர்.
இதில் நேரடியாகவே சூரன் மாமரமாக ஆகியிருந்ததையும் அவனை அறுத்தெறிந்த சூரசம்ஹாரத்தையுமே விளக்கிவிட்டார்கள்.இதில் கஜவாகனனாக முருகன் உவமை செய்யப்படுகிறார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
"உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும்" என கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பாடுகிற புகழ்பெற்ற பாடல் சொல்வது என்ன?
இந்திரர் என்றால் தேவர்கள் என்று பொருள்.அமிர்தம் என்பது தேவர்களுக்கு கிடைத்தது,அவர்கள் பருகுவது என்பதே ஹிந்து தொன்மங்கள் சொல்வது.அதை நேரிடையாக குறிப்பிடுகிறது மேற்கண்ட பாடல்.
|| திண்தேர் இரவலர்க்கு ஈத்த தண்தார்
அண்டிரன் வரூஉம் என்ன ஒண்தொடி
வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்
போர்ப்புறு முரசும் கறங்க
ஆர்ப்புஎழுந் தன்றால் விசும்பினானே ||
- புறநானூறு 241
வலிய தேர்களை இரவலர்க்கு அளித்த, குளிர்ந்த மாலையணிந்த ஆய் அண்டிரன் வருகிறான் என்று, ஒளி பொருந்திய வளையல்களையும், வஜ்ஜிரம் என்னும் ஆயுதத்தையும்,பெரிய கையையும் உடைய இந்திரனின் கோயிலில் போர்த்தப்பட்ட முரசுகள் முழங்கப்பட்டன.அந்த ஒலி வானத்தில் ஒலித்தது.
வீரசுவர்க்கம் புகுந்த ஆய் அண்டிரனை இந்திரன் வரவேற்றான் என உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடுகிறார்.இதில் இந்திரன் வஜ்ஜிராயுதத்தை உடையவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.சொர்க்கத்தின் அதிபதி என்பதும் தெரிய வருகிறது.பிறகு இந்த இந்த இந்திரன் வேறு அந்த இந்திரன் வேறு என்றெல்லாம் உளருவதை சகிக்க முடியவில்லை.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
"இட்டெண்ணி தலைகொடுக்கும் எயினர் "என்று கொற்றவைக்கு முன்னால் தலையைக் கொடுக்கும் சிலை இன்று வரை எல்லா சிவன் கோவிலிலும் துர்க்கைக்கு அருகே அதே வடிவத்தோடு நிற்கிறது.இத்தனை சாட்சிகள் தொடர் சாட்சியாய்,சாஸ்வத தர்மமாக இங்கே வீற்றிருக்கிறது..ஆனால் இத்தனையையும் மறைத்துவிட்டு தமிழ் கடவுள்,தெலுங்கு கடவுள் என்று சொல்லி ஹிந்துக்கடவுள் என்ற உண்மையை மறைக்கிறது ஒரு திருட்டுக் கூட்டம்.
ஆகவே,சிவனின் ஒரு மகன் மராட்டியனாகவும் இன்னொரு மகன் தமிழனாகவும் இருக்க முடியாது.எனவே இவர்கள் மொத்தமாகவே ஹிந்து கடவுள்கள் என்பதை ஆணி அடித்தது போல எடுத்துச் சொன்ன திரு.திருமாவளவன் MPக்கு நன்றி.


__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

கடந்து *போகாதீர்* படித்து விட்டு அனைவருக்கும் பகிருங்கள்....
ஆயிரக்கணக்கான வருடங்கள் முஸ்லீம்களும், கிறித்தவர்கள் ஆட்சி செய்த போது அழியாத இந்து மதம் திமுக ஆட்சிக்கு வந்தால் மட்டும் அழிந்து விடுமா?
என்று அருமையாக பதில் கூறும் உடன்பிறப்புகளே
வெள்ளையனும் , துலுக்கனும் நமது நாட்டிக்கு நமது செல்வங்களை கொள்ளையடித்து தங்களுடைய மதங்களை பரப்பவே
எதிரிகளாக நமது நாட்டிற்க்குள் வந்தனர்.
அதனால் அவர்களை அவர்களை எளிதாக அடையாளம் கண்டு முழு எதிரியாக பாவித்து நமது முன்னோர்கள் வீர தீரத்துடன் எதிர்த்து நமது இந்துமதம் தொடர்பான கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை கட்டிக்காத்தனர் அதுவும் நீண்ட நாள் போராட்டத்திற்க்கு பிறகு
ஏன் பல நூறு வருடங்களாக நாம் அவர்களை எதிர்த்து வெற்றி கொள்ள முடியவில்லை தெரியுமா?
நம்மிடையே உள்ள திமுக போன்ற காசு, பணம், சொத்து, சுகத்திற்கும், கோழைகளும், உயிருக்கு பயந்த பேடிப்பயல்களும் காட்டிக் கொடுக்கும் எட்டப்பனாக மாறியதே
காரணம்.
சரி இதற்க்கும் திமுக விற்கும் என்ன தொடர்பு?
வெளியில் இருந்து எதிரிகள் வந்தால் எளிதில் அடையாளம் தெரிந்து நாம் வெற்றி பெற எவ்வளவு முயற்சி செய்வோமோ அவ்வளவும் செய்வோம்
ஆனால் நமக்குள்ளேயே எதிரி இருந்தால் நாம் வெற்றி பெறுவது மிகச் சிரமமான காரியம் திமுக அந்த எட்டப்பன் வேலையை மிகச் சரியாக திட்டமிட்டு நடத்தி வருகிறது.
இந்தத் திருட்டு திமுக திருமாவளவன், வீரமணி, சுப வீரபாண்டியன், திருமுருகன் காந்தி, நடுநிலை நக்கி போர்வையில் திரியும் கார்த்திகேய சிவசேனாதிபதி , பியூஸ் மானுஸ் போன்ற சில்லலை பயல்களை மறைமுகமாக தூண்டி விடுகிறது....
என்னை கடிக்கும் நாயை தான் நான் அடிக்க முடியும்..
என்று சொல்லுகிற திரு மாமா
பொதுவெளியில் ஒரு மதமும் வீட்டிற்குள் ஒரு மதமும் ஆக வாழ்ந்து கொண்டு வெளிப்பார்வைக்கு காட்டிக் கொண்டிருக்கிற இந்துமதத்தை கேவலப்படுத்துகிறார்கள்... நம்மிடையே இருந்து கொண்டு நமக்காக வாழ்கிறோம் என்ற போர்வையில் கூடவே இருக்கும் இனத் துரோகிகளை அடையாளம் கான்பது மிகச் சிரமம்.
நேருக்கு நேர் மோதுபவனை கூட எளிதில் வெற்றி பெற்று விடலாம் ஆனால் திமுக போன்ற கட்சிகளை நம்பினால் சொந்த காசிலேயே நாம் சூன்யம் வைத்து நம்மை நாமே அழித்துக் கொள்வதற்க்கு சமம்.
மே 17 என்ற இயக்கம் நடத்தும் திருட்டு முருகன் காந்தி என்பவன் ஈழ தமிழர்கள் அழிவிற்க்கு முழு காரணம் அன்று ஆட்சியில் இருந்து கொண்டு எதிர்த்து குரல் கொடுக்காத திமுகவை பற்றி ஒரு நாளாவது பேசியிறுப்பானா ...
அது போல் ஜல்லிக்கட்டு தடைக்கு காரணம் அன்று ஆட்சியில் இருந்த காங்கிரஸ், திருட்டு திமுகதான் ஒரு நாளாவது இந்த கார்த்திகேய சிவ சேனாதிபதி எதிர்த்து பேசியிறுப்பானா?
இந்த கிறித்துவ சைமன் செபஸ்டியன் (எ) சீமான் தி மு க வை எதிர்த்து பேசுவது போல் நடித்துக் கொண்டு தமிழர்கள் எல்லோருக்குமே தெரியும் அழகென்ற சொல்லுக்கு முருகன் என்று அப்பேர்பட்ட முருகனையே தோட்ட காவலாளியாக மாற்றி நமது இறை வழிபாட்டின் அடையாளத்தையே மாற்ற முயற்ச்சி செய்து கொண்டும் தமிழ் தேசியம் என்ற பெயரில் தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து தனிமை படுத்து முயச்சியை இளைஞர்களிடம் கச்சிதமாக செய்து கொண்டு உள்ளான் இந்த பிரிவினைவாதி சைமன் .
திக வைபற்றி சொல் தேவையில்லை அவனின் முழு நேர வேலையே இந்து மதத்தை எதிர்ப்பது தான்.
இன்றைய இந்தியாவில்
காஷ்மீர், கேரளா, நாகலாந்து, கோவா, மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, போன்ற மாநிலங்களில் இந்துக்கள் மைனாரிட்டி
அது போல் மேற்கு வங்கம் , டெல்லி ,அசாம், போன்ற மநிலங்கள் அபாய கட்டத்தை நெருங்கிக் கொண்டு இருக்கிறது.
இதில் தமிழ்நாடு மட்டும் என்ன விதிவிலக்கா?
ஆம்பூர், இராமநாதபுரம், அரவக்குறிச்சி, பள்ளபட்டி, நெல்லை மேலப்பாளையம், உக்கடம் கண்ணியாகுமரி, நாகபட்டிணம் ,நாகர்கோவில்தஞ்சாவூர் , நாலுமாவடி போன்ற ஊர்களில் மிக அதிக அளவில் பெருகிவிட்டனர்.
இதைவிட பெரிய விசயம் திராவிட திமுகவின் ஆட்சியில் தமிழகம் முழுவதும்
சிறிய, பெரிய அளவில் எந்தனை சர்ச்களும், மசூதிகளும் புதிதாக உருவாகியுள்ளதை நீங்கள் கண்கூட பார்க்கலாம்.
ஆனால் நமது முன்னோர்கள் அரும்பாடுபட்டு உலகத்திற்கே எடுத்துக் காட்டான கட்டிட கலையில் தமிழர்கள் கட்டிய கோவில்களில் ஒரு வேளை பூஜைக்கு கூட வழியில்லாமல் இடிந்து சிதிலமடைந்து வருவதை அதிகமாக பார்கலாம்.
மிச்சம் மீதி இருக்கும் சொத்துக்களையும் அறநிலையத்துறை ஆணையர் என்ற பதவியால் அதையும் திருடி தின்கிறார்கள்
திராவிட திமுகவை ஆதரிப்பது நம்மை நாமே அழித்துக் கொள்வதற்க்கு சமம்.
இந்த ஜனநாயக நாட்டில் யாரும் எந்த மதத்தையும் பின்பற்றலாம் என்று அரசியல் சட்டம் சொல்கிறது
அடுத்த மதத்தின் மேல் துவேஷம் இல்லாமல் அவரவர் மதத்தை அவரவர் கடைபிடியுங்கள்
அடுத்தவர்கள் வந்து குற்றம் சொல்லும் அளவிலோ சுட்டிக் காட்டக்கூடிய அளவிலும் இந்துமதம் மோசமாக இல்லை கோடிக்கணக்கான இந்துக்கள் சனாதன தர்மத்தை பின்பற்றுகிறார்கள் அவர்கள் மனதை புண்படுத்தாமல் அரசியல்வாதிகள் அரசியல் மட்டுமே செய்யுங்கள்...
அரசியலுக்குள் மதத்தை புகுத்த வேண்டாம் என்பதுதான் நமது நிலைப்பாடு...
இனிமேலாவது
விழித்துக் கொள்ளுங்கள் தமிழர்களே....
இறுதியாக...
இந்து சொந்தங்களே நமது வாழ்கையில் காசு, பணம், சொத்து, சுகம், ஆடம்பரம் போன்றவற்றை எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்து உருவாக்கி கொள்ள முடியும். ஆனால் நமது இந்து மதம் தொடர்பான கலாச்சாரம், பண்பாடு, இறை வழிபாடு போன்றவற்றை மறந்து விட்டாலோ அல்லது அழித்து விட்டாலே மீண்டும் அதை திரும்ப பெற கனவிலும் கூட நினைக்க முடியாது தயவுசெய்து திமுக போன்ற நம்மிடையே இருந்து கொண்டு நம்மையே அழிக்கும் கட்சிகளுக்கு ஒரு போதும் துணை போகாதீர்..


__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

 
தோழர் திருமாவளவன் அவர்களுக்கு சமூகநீதிக்கான வீரமணி விருது அளிக்கப்பட்ட மேடையில் அவர் பேசும்போது.
"முருகனைத் தனித் தமிழர் கடவுளாக ஏற்றுக் கொண்டு விட்டால் சனாதன சறுக்குப் பாறையில் கால்வைப்பதற்குச் சமம். மேலும், முருகனின் உடன் பிறந்த அண்ணன் விநாயகன் என்றால் விநாயகனும் தமிழ்க் கடவுள்தானே" என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தோழர் திருமாவளவன் இவற்றுக்கு சான்றாக சிவாஜி, நாகேஷ் நடித்த திருவிளையாடல் திரைப்படத்தை சான்றாக சுட்டிக்காட்டுகிறார்.
கற்றறிந்த, பிஎச்டி பட்டம் பெற்ற ஆய்வுக் கல்வியாளரான தோழர் திருமாவளவன் அவர்கள் ஒரு திரைப்படத்தை சான்றாக எடுத்துக் கொள்வது வியப்பளிக்கிறது.
விநாயகன் முருகனின் அண்ணன் என்று தமிழர் ஆவணங்கள் எவற்றிலும் உண்டா?
வேழ முகத்தோன் என்பது யானை வழிபாட்டின் அடையாளம்.
விலங்குகளிலேயே அதி நுட்ப அறிவை அதுவும் நேர்மறை அறிவைக் கொண்டது யானை மட்டுமே.
உயிர்ச் சூழலின் மிக முக்கிய அங்கம் யானை. யானை ஒரு இயற்கை விவசாயி.
அவனது உணவுக் கழிவில் இருந்து விழும் விதைகள் மரங்களாகின்றன, காடுகளாகின்றன.
எனவே யானை முகம் வழிபடு கடவுளானது.
அது மனிதக் குடும்பத்தின் உறுப்பினராக்கப்பட்டது.
யானை மட்டுமல்ல, காளை, மயில், பாம்பு ஆகியவையும் கடவுளர் உருவங்களோடு இணைக்கப்பட்டன.
முருகன் மூத்த தமிழ்க் கடவுள்.
அந்த அடையாளத்தையும் சனாதனத்திடம் இழந்துவிட்டு அம்மணமாக நில் என்று தமிழர்களுக்கு அறைகூவல் விடுப்பது எந்த விதத்தில் தமிழர் நலன் சார்ந்ததாக இருக்கும் எனும் கேள்வி எழுகிறது.
சனாதனத்திடம் இருந்து தமிழர் அடையாளங்களைப் பிரித்து மீட்கத்தான் வேண்டும். தொடர் பரப்புரைகள், விளக்கங்கள் மூலமாக.
அதைச் செய்ய வேண்டிய கடமை தமிழ்த் தேசிய அரசியலுக்கு முழுக்க முழுக்க உண்டு.
அதைவிடுத்து "தமிழர்களே முருகனும் உங்களுடையது அல்ல" என்று கூறித் தமிழர்களை முருகனிடமும் இருந்து பிரித்துவிடும் பெரியார் திடலின் வியாபாரத் திட்டத்தின் நீட்சியாகவே உங்கள் இந்தக் கருத்து இருப்பதாகத் தோன்றுகிறது.
ஏனென்றால் "தமிழ் காட்டு மிராண்டி மொழி. எனவே ஆங்கிலம் கற்றுக் கொள்ளுங்கள். வீட்டில் வேலைக்காரியிடமும் ஆங்கிலத்தில் பேசுங்கள்" என்று தொடர் பரப்புரை செய்த பெரியார், தமிழர்களிடமிருந்து முதலில் தமிழைப் பிரித்தார்.
கோயில்கள் பிராமணர்கள் / பார்ப்பனர்கள் கூடம். அங்கே போகாதே என்று கூறித் தமிழர்களைக் கோயில் வழிபாட்டில் இருந்தும் பிரித்தார். (செய்திருக்க வேண்டியது பார்ப்பனர்களைக் கோயில்களிடமிருந்து பிரித்திருக்க வேண்டும்)
திருக்குறள் தொடங்கி தமிழர் இலக்கியங்கள் அனைத்தும் பொய், பார்ப்பனர்களின் இலக்கியங்கள் என்று தமிழர்களைத் தமிழ் இலக்கியங்களிடமிருந்து அழகாக, நேர்த்தியாகப் பிரித்தார்.
தமிழர்களின் அடையாளமே மொழி, இலக்கியம், இலக்கணம், இறையியல், மெய்யியல்,
இவற்றைப் பிராமணர் / பர்ப்பனர் பெயரைச் சொல்லி மிக லாவகமாகக் கையாண்டு தமிழர்களைப் பிரித்துத் தனி மரமாக்கிவிட்டுத் தன் கடைசி 1972 ம் ஆண்டு உரையில் "தமிழர்களை சூத்திரர்களாக (வேசி மகன்களாக) விட்டுச் செல்கிறேனே என்பதுதான் கவலையாக இருக்கிறது" என்று முதலைக் கண்ணீர் வடித்தார் ஈ.வே.ரா பெரியார். (செய்திருக்க வேண்டியது - பிராமணர் / பார்ப்பனர் அல்லாதவர்களும் உயர்ந்த மானுட குலமே என்று தமது இறுதிப் பேச்சிலும் நிறுவியிருக்க வேண்டும்)
இன்று அவரின் பணியை நீங்கள் சிரமேற்கொண்டு சிறப்பாகச் செய்து செயல்படுகிறீர்கள் தோழர்.
காரணம், சமீப ஆண்டுகளாக தமிழ்க்கடவுள் முருகன் தமிழர்களின் அடையாளமாக மாறி வருவது பல மதமாற்ற ஏஜென்சிகளுக்கு இடையூறாகத்தான் ஆகிவிட்டன. மேலும், சனாதனர்களுக்கும் இது பெரும் தலைவலியாகிவிட்டது.
எனவே இதை அனுமதிப்பது பெரியார் திடலின் வாழ்நாள் பணித் திட்டங்களுக்கு எதிரானதாகிவிடும்.
சாதி ஏற்றத் தாழ்வற்ற சமுதாயத்தைக் கற்றுக் கொடுத்துக் கட்டமைப்பது, சனாதனத்திடம் இருந்து தமிழை, தமிழரை. தமிழர் பண்பாட்டை மீட்டுத் தமிழரிடம் தருவது தமிழ்த் தேசியமா? அல்லது தமிழரை மீண்டும் அடையாளமற்ற அம்மண அநாதைகளாக்குவதுதான் தங்களின் தமிழ்த் தேசியக் கோட்பாடா? என்று மனதில் எழும் கேள்வியையும் தடுக்க இயலவில்லை தோழர்.
பகிர்வு...
நன்றி
- வளர்மெய்யறிவான்


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard