Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறளில் கடவுள் தெய்வங்கள்


Guru

Status: Offline
Posts: 7713
Date:
திருக்குறளில் கடவுள் தெய்வங்கள்
Permalink  
 


 அறக்கடவுள்

என்பிலதனைவெயில்போலக்காயுமே
அன்பிலதனைஅறம். குறள் 77: அன்புடைமை.

மணக்குடவர்உரை:என்பிலாத சீவனை வெயில் சுடுமாறு போற் சுடும்: அன்பிலாதவுயிரினை அறம்.

சாலமன்பாப்பையாஉரை:எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும்

கதங்காத்துக்கற்றடங்கல்ஆற்றுவான்செவ்வி
அறம்பார்க்கும்ஆற்றின்நுழைந்து. குறள் 130: அடக்கமுடைமை

மணக்குடவர்உரை:வெகுளியும் அடக்கிக் கல்வியுமுடையனாய் அதனால் வரும் பெருமிதமும் அடக்கவல்லவன்மாட்டு, அறமானது நெறியானே வருந்தித் தானே வருதற்குக் காலம் பார்க்கும். இஃது அடக்கமுடையார்க்கு அறமுண்டாமென்றது. 

மறந்தும்பிறன்கேடுசூழற்கசூழின்
அறஞ்சூழம்சூழ்ந்தவன்கேடு. தீவினையச்சம். குறள் 204:

மணக்குடவர் உரை:பிறனுக்குக் கேட்டை மறந்துஞ் சூழாதொழிக: சூழ்வனாயின் அவனாற் சூழப்பட்டவன் அதற்கு மாறாகக் கேடு சூழ்வதன்முன்னே சூழ்ந்தவனுக்குக் கேட்டைத் தீமை செய்தார்க்குத் தீமை பயக்கும் அறந்தானே சூழும். இது தீமை நினையினுங் கேடு தருமென்றது.

சாலமன் பாப்பையா உரை:றந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும். 

உலகியற்றியான்
இரந்தும்உயிர்வாழ்தல்வேண்டின்பரந்து
கெடுகஉலகியற்றியான். இரவச்சம். குறள் 1062:

மணக்குடவர் உரை:துப்புரவு இல்லாக்கால் இறந்துபடாதே பிறர்மாட்டு இரந்து கொண்டும் உயிர் வாழ்தல் வேண்டுமாயின், உலக நடையை இவ்வாறாகக் கற்பித்த முதல்வன் மிகக் கெடுவானாக வேண்டும். இஃது இரக்குமதனின் இறத்தல் அமையு மென்றது.

சாலமன் பாப்பையா உரை:பிச்சை எடுத்துத்தான் உயிர்வாழ வேண்டும் என்ற நிலை இருந்தால், இந்த உலகைப் படைத்தவன் அங்கும் இங்கும் அலைந்து கெடுவானாக. 



__________________


Guru

Status: Offline
Posts: 7713
Date:
Permalink  
 

இந்திரன் 

ஐந்தவித்தான்ஆற்றல்அகல்விசும்புளார் கோமான்
இந்திரனேசாலுங்கரி.             குறள் 25: நீத்தார் பெருமை.
மணக்குடவர்உரை:நுகர்ச்சியாகிய வைந்தினையுந் துறந்தானது வலிக்கு அகன்ற விசும்பிலுள்ளார்க்கு நாயகனாகிய இந்திரனே யமையுஞ் சான்று. இந்திரன் சான்றென்றது இவ்வுலகின்கண் மிகத் தவஞ் செய்வாருளரானால் அவன் தன்பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலான். இது தேவரினும் வலியனென்றது.

 

சாலமன்பாப்பையாஉரை: அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்.



__________________


Guru

Status: Offline
Posts: 7713
Date:
Permalink  
 

                         தாமரையினாள்.  

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.                 ஆள்வினையுடைமை. குறள் 617:

மணக்குடவர் உரை:வினை செய்யுங்கால் அதனைச் செய்யாது சோம்பியிருப்பானது சோம்பலின்கண்ணே மூதேவி உறைவள்; அதனைச் சோம்பலின்றி முயலுபவன் முயற்சியின்கண்ணே திருமகள் உறைவளென்று சொல்லுவர். இது வினையை மடியின்றிச் செய்யவேண்டுமென்பது கூறிற்று.

மு. கருணாநிதி உரை:திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டிப் பயன்படுவனவாகும்.

சாலமன் பாப்பையா உரை:சோம்பி இருப்பவனிடம் மூதேவி தங்குவான். சோம்பாதவனின் முயற்சியில் திருமகள் தங்குவாள் என்பர்.



__________________


Guru

Status: Offline
Posts: 7713
Date:
Permalink  
 

                            முகடி

அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்.                    சூது. குறள் 936:
மணக்குடவர் உரை: தமக்கு உள்ளதாகிய இந்திரியங்களும் மனமும் இன்புற்று நிறையப்பெறார்; அதுவேயன்றி அல்லற்படுவதும் செய்வர்; சூதாகிய மூதேவியாலே மறைக்கப்பட்டார். மறைத்தல்- நற்குணங்களைத் தோன்றாமல் மறைத்தல்.             

சாலமன் பாப்பையா உரை:சூதாட்டம் என்னும் மூதேவியால் மூடப்பட்டவர் வயிறும் நிறையாமல், துன்பத்தையும் அனுபவிப்பர்.



__________________


Guru

Status: Offline
Posts: 7713
Date:
Permalink  
 

 செய்யவள்  தவ்வை

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.                அழுக்காறாமை. குறள் 167:
மணக்குடவர் உரை:அழுக்காறுடையானைத் திருமகள் தானும் அழுக்காறு செய்து, தன் தவ்வையாகிய மூதேவிக்குக் காட்டி இவன்பாற் செல்லென்று போம், இது நல்குரவிற்குக் காரணங் கூறிற்று.

மு. கருணாநிதிஉரை:செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்.
சாலமன்பாப்பையாஉரை:பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள்.

                           திரு

இருமனப்பெண்டிரும்கள்ளும்கவறும்

திருநீக்கப்பட்டார்தொடர்பு. வரைவின்மகளிர். குறள் 920:

மணக்குடவர் உரை:கவர்த்த மனத்தையுடைய பெண்டிரும், கள்ளும், கவறும் திருமகளால் கடியப்பட்டாரது நட்பு. இது நல்குரவாவார் சார்வரென்றது.

சாலமன் பாப்பையா உரை:உள்ளம் ஓரிடமும், உடம்பு ஓரிடமுமாக இருமனம் கொண்ட பாலிய் தொழிலாளர், கள், சூதாட்டம் இவை எல்லாம் திருமகளால் விலக்கப்பட்டவருக்கு நட்பாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7713
Date:
Permalink  
 

                                             செய்யாள்

அகனமர்ந்துசெய்யாள்உறையும்முகனமர்ந்து
நல்விருந்துஓம்புவான்இல். குறள் 84: விருந்தோம்பல்.
மணக்குடவர்உரை:திருவினாள் மனம்பொருந்தி உறையும்: நல்ல விருந்தினரை முகம் பொருந்திப் போற்றுவானது மனையின்கண். இது கேடின்மையன்றிச் செல்வமுமுண்டா மென்றது.           சாலமன்பாப்பையாஉரை: இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள்.

                              நிலமென்னும் நல்லாள்

 

இலமென்றுஅசைஇஇருப்பாரைக்காணின்
நிலமென்னும்நல்லாள்நகும்.              குறள் 1040: உழவு.
மணக்குடவர் உரை:பொருளிலோமென்று சோம்பி இரப்பாரைக் கண்டால் நிலமாகிய நல்லாள் இகழ்ந்து நகும். இது நிலம் மடியில்லாதார்க்கு வேண்டியது கொடுக்குமென்றது.

மு. கருணாநிதி உரை: வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள்.
சாலமன் பாப்பையா உரை:நிலமகள் என்னும் நல்ல பெண், நாம் ஏதும் இல்லாத ஏழை என்று சோம்பி இருப்பவரைக் கண்டால் தனக்குள் ஏளனமாய்ச் சிரிப்பாள்.

                                                                                நாண்என்னும் நல்லாள்

நாண்என்னும்நல்லாள்புறங்கொடுக்கும்கள்ளென்னும்
பேணாப்பெருங்குற்றத்தார்க்கு.                குறள் 924: கள்ளுண்ணாமை.
மணக்குடவர் உரை:நாணமென்று சொல்லப்படுகின்ற நன்மடந்தை பின்பு காட்டிப்போம்; கள்ளுண்டலாகிய பிறரால் விரும்பப்படாத பெரிய குற்றத்தினையுடையார்க்கு. இது நாணம் போமென்றது.

மு. வரதராசன் உரை:நாணம் என்று சொல்லப்படும் நல்லவள், கள் என்று சொல்லப்படும் விரும்பத்தகாத பெருங்குற்றம் உடையவர்க்கு எதிரே நிற்காமல் செல்வாள்.



__________________


Guru

Status: Offline
Posts: 7713
Date:
Permalink  
 

                                                        அடியளந்தான்

மடியிலாமன்னவன்எய்தும்அடியளந்தான்
தாஅயதெல்லாம்ஒருங்கு. மடியின்மை. குறள் 610:
மணக்குடவர் உரை:மடியில்லாத மன்னவன் எய்துவன், அடியினால் அளந்தானால் கடக்கப்பட்ட வுலகமெல்லாம் ஒருங்கே. இது மடியின்மையால் வரும் பயன் கூறிற்று.

சாலமன் பாப்பையா உரை:தன் அடியால் எல்லா உலகையும் அளந்தவன் கடந்த உலகம் முழுவதையும், சோம்பல் இல்லாத அரசு முழுமையாக அடையும்.

                                         நஞ்சுண் டமைவர் 

பெயக்கண்டும்நஞ்சுண்டமைவர்நயத்தக்க
நாகரிகம்வேண்டுபவர்.     குறள் 580: கண்ணோட்டம் 

மு. வரதராசன் உரை:யாவராலும் விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர், பழகியவர் தமக்கு நஞ்சு இடக்கண்டும் அதை உண்டு அமைவர்.

                                    என்பும் உரியர் பிறர்க்கு.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
.             குறள் 72: அன்புடைமை.
மணக்குடவர் உரை:அன்பிலாதார் எல்லாப் பொருளையுந் தமக்கு உரிமையாக வுடையர்: அன்புடையார் பொருளேயன்றித் தம்முடம்புக்கு அங்கமாகிய வெலும்பினையும் பிறர்க்கு உரிமையாக வுடையர். அன்புடையார்க்கல்லது அறஞ்செய்த லரிதென்றாயிற்று



-- Edited by admin on Saturday 15th of May 2021 04:41:02 AM

__________________


Guru

Status: Offline
Posts: 7713
Date:
Permalink  
 

                                                           காமன்

பருவரலும்பைதலும்காணான்கொல்காமன்
ஒருவர்கண்நின்றொழுகுவான்          . குறள் 1197: . தனிப்படர்மிகுதி
மணக்குடவர் உரை: தான் ஒருவர் பக்கமாகநின்று ஒழுகித் துன்பஞ்செய்கின்ற காமதேவன் நமது தடுமாற்றமும் நாம் உறுகின்ற துன்பமும் காணானோ? காண்பானாயின் நம்மை வருத்தானே, தெய்வமாகலான்.

மு. கருணாநிதி உரை:காமன், ஒரு பக்கமாக மட்டும் இருப்பதால், என்னைக் காதல் நோய் வருத்துவதையும், என் மேனியில் பசலை படர்வதையும் கண்டு கொள்ளமாட்டான் போலும்!.
சாலமன் பாப்பையா உரை:ஆண், பெண் இருவரிடமும் இருந்து செயல் ஆற்றாமல் ஒருவரிடம் மட்டுமே போரிடும் காமன், இன்னொருவரின் மேனி நிற வேறுபாட்டால் வரும் துன்பத்தையும் வருத்தத்தையும் அறிய மாட்டானோ?

                                                             தாமரைக் கண்ணான் உலகு.

தாம்வீழ்வார்மென்றோள்துயிலின்இனிதுகொல்
தாமரைக்கண்ணான்உலகு.புணர்ச்சிமகிழ்தல். குறள் 1103:

மணக்குடவர் உரை:தம்மால் விரும்பப்படுவாரது மெல்லிய தோளின்கண் துயிலுந் துயிலினும் இனிதோ? இந்திரனது சுவர்க்கம். இது சுவர்க்கத்தின்பமும் இதுதானே யென்று கூறியது.

 

சாலமன் பாப்பையா உரை: தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?

 



__________________


Guru

Status: Offline
Posts: 7713
Date:
Permalink  
 

                                                       ராகு கேது பாம்புகள் கிரகணம்

கண்டதுமன்னும்ஒருநாள்அலர்மன்னும்
திங்களைப்பாம்புகொண்டற்று.  அலரறிவுறுத்தல். குறள் 1146:
மணக்குடவர் உரை:யான் கண்ணுற்றது ஒருநாள்; அக்காட்சி திங்களைப் பாம்பு கொண்டாற்போல, எல்லாரானும் அறியப்பட்டு அலராகா நின்றது.

மு. கருணாநிதி உரை:காதலர் சந்தித்துக் கொண்டது ஒருநாள்தான் என்றாலும், சந்திரனைப் பாம்பு விழுங்குவதாகக் கற்பனையாகக் கூறப்படும் யயகிரகணம்(( எனும் நிகழ்ச்சியைப் போல அந்தச் சந்திப்பு ஊர் முழுவதும் அலராகப் பரவியது.
சாலமன் பாப்பையா உரை:நான் அவரைப் பார்த்ததும் பேசியதும் கொஞ்சமே! ஆனால் இந்த ஊரார் பேச்சோ நிலவைப் பாம்பு பிடித்ததுபோல் ஊர் முழுக்கப் பரவிவிட்டதே!.

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard