Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சொற்கம் நரகம்


Guru

Status: Offline
Posts: 7474
Date:
சொற்கம் நரகம்
Permalink  
 


ஒருமைச்செயலாற்றும்பேதைஎழுமையும்
தான்புக்கழுந்தும்அளறு. குறள் 835: பேதைமை.
மணக்குடவர் உரை:பேதை ஒருபிறப்பின்கண் செய்யும் செயலாலே செய்ய வல்லவன், எழுபிறப்பினும் தான் புக்கழுந்தும் நரகத்தை. புக்கழுந்தல்- ஒருகால் நரகத்திலே பிறந்தால் அவ்வுடம்பு நீங்கினாலும் அதனுள்ளே பிறத்தல்.

வரைவின்மகளிர். குறள் 919:

வரைவிலாமாணிழையார்மென்தோள்புரையிலாப்
பூரியர்கள்ஆழும்அளறு.
மணக்குடவர் உரை:முயக்கத்தில் வரைவில்லாத மாணிழையாரது மெல்லிய தோளாவது, உயர்வில்லாத கயவர் அழுந்தும் நரகம். இஃது இழிந்தார் சார்வரென்றது.

மு. கருணாநிதி உரை:விலைமகளை விரும்பி அவள் பின்னால் போவதற்கும் நரகம் எனச் சொல்லப்படும் சகதியில் விழுவதற்கும் வேறுபாடே இல்லை.
சாலமன் பாப்பையா உரை: வேறுபாடு கருதாது பொருள் தருவார் எவரையும் தழுவும் பாலியல் தொழிலாளரின் மெல்லிய தோள்கள், அறிவற்ற கீழ்மக்கள் புகுந்து மூழ்கும் நரகம் ஆகும்.


உண்ணாமைஉள்ளதுஉயிர்நிலைஊனுண்ண
அண்ணாத்தல்செய்யாதுஅளறு. குறள் 255: புலான்மறுத்தல்.
மணக்குடவர் உரை:புலாலை யுண்ணாமை வேண்டும். அது பிறிதொன்றின் புண். ஆதலால் அதனை அவ்வாறு காண்பாருண்டாயின். இது புலால் மறுத்தல் வேண்டுமென்பதூஉம், அது தூயதாமென்பதூஉங் கூறிற்று



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும். குறள் 121: அடக்கமுடைமை.

மணக்குடவர்உரை:மன மொழி மெய்களை யடக்கி யொழுக அவ்வடக்கம் தேவரிடத்தே கொண்டு செலுத்தும்: அவற்றை யடக்காதொழிய அவ்வடங்காமை தானே நரகத்திடைக் கொண்டு செலுத்திவிடும். மேல் பலவாகப் பயன் கூறினாராயினும், ஈண்டு அடக்கத்திற்கும் அடங்காமைக்கு மிதுவே பயனென்று தொகுத்துக் கூறினார்.

சாலமன்பாப்பையாஉரை: அடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும்.

 

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னாஉலகம்புகல். குறள் 243: அருளுடைமை.
மணக்குடவர் உரை:அருளைப் பொருந்தின நெஞ்சினையுடைவர்க்கு இருளைப் பொருந்தின நரகலோகம் புகுதலில்லை. இது நரகம் புகாரென்றது.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

அழுக்காறு என ஒரு பாவி திரு செற்று
  தீ உழி உய்த்துவிடும் - குறள் 168 அழுக்காறாமை.

சாலமன் பாப்பையா உரை:பொறாமை எனப்படும் ஒப்பில்லாத பாவி எவனிடம் இருக்கிறதோ, அவனது செல்வத்தை அழிப்பதோடு, அவனை நரகத்திலும் அது சேர்க்கும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 அமிழ்தம்

வான் நின்று உலகம் வழங்கி வருதலான்

  தான் அமிழ்தம் என்று உணர்தல் பாற்று - குறள் 2:1

 

உறு-தொறு உயிர் தளிர்ப்ப தீண்டலான் பேதைக்கு

  அமிழ்தின் இயன்றன தோள் - குறள் 111:6

 

அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள்

  சிறு கை அளாவிய கூழ் - குறள் 7:4

 

அங்கணத்துள் உக்க அமிழ்து அற்றால் தம் கணத்தர்

  அல்லார் முன் கோட்டி கொளல் - குறள் 72:10

 

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. குறள் 82: விருந்தோம்பல்.

மணக்குடவர் உரை:விருந்தினர் இற்புறத்தாராகத் தானே யுண்டல், சாவாமைக்கு உண்ணும் மருந்தாயினும் வேண்டும் பகுதி யுடைத்தன்று.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

அமரர்

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லா மா அன்னார்
  தமரின் தனிமை தலை - குறள் 82:4
 
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
  ஆர் இருள் உய்த்துவிடும் - குறள் 13:1
 
தமர் ஆகி தன் துறந்தார் சுற்றம் அமராமை

  காரணம் இன்றி வரும் - குறள் 53:9



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

புத்தேள் உலகு

புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிதே

  ஒப்புரவின் நல்ல பிற - குறள் 22:3

நில வரை நீள் புகழ் ஆற்றின் புலவரை

  போற்றாது புத்தேள் உலகு - குறள் 24:4

கள்வார்க்கு தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்கு

  தள்ளாது புத்தேள் உலகு - குறள் 29:10

புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என் மற்று

  இகழ்வார் பின் சென்று நிலை - குறள் 97:6

புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ நிலத்தொடு

  நீர் இயைந்து அன்னார் அகத்து - குறள் 133:3

பெற்றாள் பெறின் பெறுவர் பெண்டிர் பெரும் சிறப்பு

  புத்தேளிர் வாழும் உலகு - குறள் 6:8



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

வான் நின்று உலகம் வழங்கி வருதலான்

  தான் அமிழ்தம் என்று உணர்தல் பாற்று - குறள் 2:1

உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான்

  வான்என்னும்வைப்பிற்குஓர்வித்து - குறள் 3:4

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

  தெய்வத்துள் வைக்கப்படும் - குறள் 5:10

வான்உயர்தோற்றம் எவன் செய்யும் தன் நெஞ்சம்

  தான் அறி குற்றப்படின் - குறள் 28:2

ஒளியார் முன் ஒள்ளியர் ஆதல் வெளியார் முன்

  வான்சுதைவண்ணம் கொளல் - குறள் 72:4

வகை மாண்ட வாழ்க்கையும் வான்பொருளும்என்ஆம்

  தகை மாண்ட தக்கார் செறின் - குறள் 90:7

 

 வானகமும் (1)

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

  வானகமும்ஆற்றல்அரிது - குறள் 11:1

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 வானத்தவர்க்கு (1)

செல் விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்திருப்பான்

  நல்விருந்துவானத்தவர்க்கு - குறள் 9:6

 

வானம் (5)

சிறப்பொடுபூசனை செல்லாது வானம்

  வறக்குமேல் வானோர்க்கும்ஈண்டு - குறள் 2:8

தானம்தவம்இரண்டும்தங்காவியன்உலகம்

  வானம்வழங்காதுஎனின் - குறள் 2:9

ஐயத்தின் நீங்கி தெளிந்தார்க்கு வையத்தின்

  வானம்நணியதுஉடைத்து - குறள் 36:3

வாழ்வார்க்கு வானம் பயந்து அற்றால் வீழ்வார்க்கு

  வீழ்வார் அளிக்கும் அளி - குறள் 120:2

 

 யான் எனது என்னும் செருக்கு அறுப்பான்வானோர்க்கு

  உயர்ந்த உலகம் புகும் குறள் 35:6



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard