Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறளை கிறிஸ்தவம் ஆக்கும் தொடரும் மோசடியின் வரலாறு


Guru

Status: Offline
Posts: 7474
Date:
திருக்குறளை கிறிஸ்தவம் ஆக்கும் தொடரும் மோசடியின் வரலாறு
Permalink  
 


திருதெய்வநாயகம் என்பவர் எழுதிய "மற்ற உரைகள் அனைத்தும் தவறு என தவறானவை என நிலைநாட்டும் -திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்" என்ற நூல் வெளியீட்டு விழா கீழ்ப்பாக்கத்தில் உள்ள இஎஸ்ஐ கிறிஸ்தவயியல் கல்லூரியில் நடைபெற்றது.  திருமாவளவன் 5.11.2021 வெளியிட்டார்.  நூலாசிரியர் தெய்வநாயகம் இயேசுவின் சீடர் தோமோ சென்னை வந்தபோது கிறிஸ்தவராக மதம் மாறி ஞானஸ்தானம் பெற்ற பின் எழுதிய நூலே திருக்குறள் என்ற கருத்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என திருமா பேசியது பிரபலமானது. 

இஎஸ்ஐ சர்ச்சின் தலைவர் எஸ்ரா சற்குணம் முன்னிலையில் மகாபலிபுரத்தில் ஒரு Scripture Union centre-ல் ஆய்வரங்கத்தில் தெய்வநாயகம் தோமோ வந்தது கட்டுக்கதை போர்ச்சுகீசியர் பரப்பியது என்று பேசினார் என அன்றைய கருத்தரங்க நீதிபதிகளில் ஒருவரான திரு சத்திய வேல்முருகன் என்பவர் பதிவு செய்துள்ளார். (27, 28, 29-08-2013 ஆம் நாட்களில் மகாபலிபுரத்தில் ஒரு Scripture Union centre-ல் ஆய்வரங்கம் cut  short to one day as Judges asked questions 

  1. மு.பெ.சத்தியவேல் முருகனார் B.E., M.A., M.Phil. அர்ச்சகர் பயிற்சிப் பேராசிரியர், S.R.M. பல்கலைக் கழகம்
  2. ரெவரண்ட் டாக்டர். ஆர்தர் ஜெயக்குமார் M.Th. Ph.D பேராசிரியர் கிறித்துவ இயல் துறை, சென்னைப் பல்கலைக் கழகம்
  3. முனைவர் சம்சுதீன் M.A. Ph.D பேராசிரியர் அரபி மொழித்துறை, சென்னைப் பல்கலைக் கழகம்
  4. பேராசிரியர் முனைவர் ஆ.ஜீவானந்தம் M.A. Ph.D திராவிடர் விடுதலைக் கழகம்
  5. முனைவர் தங்கையா M.A. Ph. D தமிழ் இலக்கியப் பேரவை, சென்னைப் பேராயம்

https://tamizhthoothu.wordpress.com/2013/10/23/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93/

deiva.jpg

04d0c5c9-7c6d-40fa-b2f0-fda278b2c6ab.jpg

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
RE: திருக்குறளை கிறிஸ்தவம் ஆக்கும் தொடரும் மோசடியின் வரலாறு
Permalink  
 


 திருக்குறள் இயற்றப்பட்ட நாள் முதல் இதுவரை வந்த அத்தனை உரைகளுமே தவறு என்பது அட்டையிலேயே சொல்லப்பட்டதை ஏனோ அதாவது தேவநேயப்பாவாணர் பாரதிதாசன் கருணாநிதி போன்றவர்களுக்கு தமிழ் தெரியவில்லை இந்த நூல் ஆசிரியர் கருத்து என்பது ஆராய்ச்சிக்கு உரியது என திருமா பேசவில்லை

தெய்வநாயகம் பெயரில் கிறிஸ்தவ ஆராய்ச்சி நூல் என்பது இது முதலாவது அல்ல இது 50 ஆண்டுகளுக்கும் மேலாக செய்யப்படும் ஒரு மோசடியின் தொடர்ச்சி என்பதை நாம் காண்போம். 

1969ல் முதல் நூல் “திருவள்ளுவர் கிறித்தவரா?” வெளிவருகிறது அன்றைய முதல்வர் மு.கருணாநிதி அணிந்துரையோடு. தொடர்ந்து மேலும் ஐந்து நூல்கள் எழுதி 1972இல் முரசொலி மற்றும் தினமணி ஸ்பான்சர்(4) செய்ய கிறிஸ்துவ சர்ச் வளாகத்தில் தேவநேயப் பாவாணர்  தலைமையில்  ஒரு மாநாடு நடந்தது.  அந்த மாநாட்டிற்கு வந்த தமிழ் உணர்வு உள்ளவர்கள் எதிர்க்க திருக்குறளுக்கு பழங்காலத்திலேயே கிறிஸ்தவ உரையுடன் ஓலைச்சுவடிகளை தயாரிக்க ஆர்ச் பிஷப் பேராயர்.அருளப்பா(5) ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த திரு ஜான் கணேஷ் ஐயர்(6) என்பவரை ஏற்பாடு செய்து அவருக்கு 15 லட்ச ரூபாய் வரை கொடுத்து பிறகு அது வழக்கு நீதிமன்றத்தில் முடிந்தது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

இந்த தெய்வநாயகம் பெயரில் முத்தம் ஆறு புத்தகங்கள் வெளியே வந்து 36 அறிஞர்கள் தலையில் கலந்துகொண்ட கருத்தரங்க நிகழ்வு முடிவில் திருக்குறளில் கிறிஸ்தவம் இல்லை என்ற முடிவு வந்தது என அந்த மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவர் புலவர் எண்ணி கலைமணி தன்னுடைய நூலில் தெரிவிக்கிறார்,

இதே போல இன்னொரு மாநாடு 2013 இல் மகாபலிபுரத்தில் நடந்த தான் இங்கும் தெய்வநாயகம் எந்த ஆதாரமும் கொடுக்காமல் உளறிக்கொட்டி மாநாட்டை முடித்து வைத்தார் என அந்த மாநாட்டில் நீதிபதிகள் குழுவில் இருந்த திரு சக்திவேல் முருகனார் பதிவு செய்துள்ளார்

திருக்குறளை ஒருமுறை முழுமையாக படிக்கும் யாரும் தெய்வநாயகம் கூறுவதில் சிறிதளவும் உண்மை இல்லை என்பதை ஏற்பார்கள் ஆனால் திருமா போன்றவர்கள் இப்படி மதவாத சக்திகளோடு சேர்ந்து பேசுகிறார் என்றால் அதில் உள்ள பெரும் பணம் கைமாறல் அனைவருக்கும் எளிதாக புரியும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

“‘திருவள்ளுவர் கிறித்தவரா” நூலில்-
வள்ளுவர் காப்பியடித்தார் எனக் கூற எந்தத் தமிழனும் முன் வர மாட்டான். ஆனால் விறுப்பு, வெறுப்பின்றி ஆய்பவர்கள் தங்கள் ஆய்வின் முடிவில் வரும் கருத்துக்களை வெளியிடப் பின் வாங்கினால் அவர்கள் உண்மை ஆய்வாளார் அல்லர். -பக்௧ 131
கிறித்தவமாகிய மலையிலிருந்து எடுக்கப்பட்ட அறமாகிய கருங்கல், தமிழாகிய கங்கையில் நீராட்டப்பட்டு திருக்குறளாம் பேசும் சிற்பம் தோன்றியது. தோமையரின் மூலம் பெற்ற நற்செய்தியாம் அறத்தை தன் அரசியல் பணியிலிருந்து பெற்ற அரசியலறிவாம் பொருளுடன், தன் இல்வாழ்வின் அடித்தளத்தில் விளங்கிய இன்பத்தோடு சேர்த்துத் தமிழ்ச் சூழலில் முப்பாலாக மொழிந்துள்ளார். திருவள்ளுவர் கிறித்தவரா? பக்௧172 &173 
 
 திருக்குறள் கருத்தரங்க மலர் சுப்பு ரெட்டியார்
“ நிற்க. தற்போது ‘தெய்வநாயகம்’ என்ற புலவர் ‘திருவள்ளுவர் கிறித்தவர்’ என்று கூறி, கிறித்தவத்துக்கு முரணாகத் தென்படும் பல குறளுக்குப் புதிய விளக்கம் கூறி வருகிறார். மேலும், 1. ‘திருவள்ளுவர் கிறித்தவரா? 2. ஐந்தவித்தான் யார்? 3. வான் 4. நீத்தார் யார்? 5. சான்றோர் யார்? 6. எழு பிறப்பு 7. மூவர் யார்? 8. அருட்செல்வம் யாது? என்ற பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை ஊன்றிப் படித்தும், அவர் வலியுறுத்தும் கருத்தை நம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ‘திருவள்ளுவர் மறுபிறப்பை ஏற்கவில்லை’ என்றும், ‘ஐந்தவித்தான் என்பான் கிறித்து’ என்றும், ‘வான் என்பது பரிசுத்த ஆவி’ என்றும், நித்தார் என்பவர் கிறித்து பெடுமானார்’ என்றும், ‘சான்றோர் என்பது கிறித்தவர்களைச் சுட்டுகின்றது’ என்றும் பல சான்றுகளால் அவர் எடுத்துரைக்கின்றார்.

இக்கருத்துக்களோ, அவற்றை மெய்ப்பிக்க அவர் கையாளும் பலச் சான்றுகளோ, நமக்கு மனநிறைவு அளிக்கவில்லை. கிறித்துவ மதத்துக்குரிய தனிச்சிறப்பான கொள்கை ஒன்றும் திருக்குறளில் காணப்படவில்லை. கிறித்துபெருமானின், பெயர் கூட வரவில்லை. ஆனால் இந்திரன்(25), திருமால்(அடியளந்தான்-610;அறவாழி-8; தாமரைக் கண்ணான்-103), திருமகள் (செய்யவள்-167; செய்யாள்-84; தாமரையினாள்-617), மூதேவி(தவ்வை-167, மாமுகடி-617), அணங்கு(1081). பேய்(565), அலகை(850), கூற்று(375,765,1050,1083; கூற்றம்-269,1085), காமன் (1197), புத்தேள் (58,234,213,290,966,1322), இமையார்(906), தேவர்(1073), வானோர்(18, 346) முதலிய இந்து மதத் தெய்வங்கள் சுட்டப்படுகின்றன. பக்கம்-92-93- from திருக்குறள் கருத்தரங்கு மலர்-1974,(Thirukural Karuththarangu Malar-1974) Edited by Dr.N.Subbu Reddiyar


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 திருக்குறள் கிறிஸ்தவ நூல் தோமோ வந்தார் பூவினால் இங்கே பக்தி இயக்கம் தோன்றியது என்று என்று எல்லாம் அர்த்தமற்ற கட்டுரைகள் எழுதி மாநாடு நடத்துவது என்பது ஒரு பல கோடி ரூபாய் வர்த்தகம் அதுவும் திமுக ஆட்சி வரும்போதெல்லாம் இது நடக்கும் என்பதை சினிமா கதாசிரியர் மற்றும் மார்க்சிஸ்ட் எழுத்தாளரான ஜெயமோகன் தன் ( தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ் August 12, 2008)  கட்டுரையில் எழுதியுள்ளார்.

//தத்துவ வரலாற்றுப் பரிச்சயமே இல்லாமல் , மிக எளிமையான தர்க்கங்களுடன் , கிட்டத்தட்ட கிறுக்குத்தனமாக உருவாக்கபப்ட்டுள்ள இந்த கருத்தமைப்பு குறித்து ஏன் இத்தனை எழுதவெண்டும் என்றால் இதன் பின்னணியில் உள்ள பணம் மற்றும் அமைப்புபலம்தான். ஜான்சாமுவேல் மற்றும் தெய்வநாயகம் மூளையில் உதித்த இந்தக் கரு இப்போது பலகோடி ரூபாய் புரட்டும் சக்தியுடைய ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது. தமிழ் அறிவுஜீவிகளில் பணத்துக்காகப் பேசாதவர்கள் மிகச்சிலரே.//



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard