Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவர் கூறும் இயல்புடைய மூவர் யார்?


Guru

Status: Offline
Posts: 7387
Date:
திருவள்ளுவர் கூறும் இயல்புடைய மூவர் யார்?
Permalink  
 


 திருவள்ளுவர் கூறும் இயல்புடைய மூவர் யார்?

 
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
 நல்லாற்றின் நின்ற துணை                            (குறள்  41; இல்வாழ்க்கை )

குடும்ப வாழ்க்கையினர்  தன் அறவாழ்க்கையில் வாழ்வின் மற்ற மூன்று நிலைகளான கல்வி பயிலும் மாணவர்,  முதுமையில் மனத் தவநிலையினர் மற்றும் துறவிகள் மூவர்க்கும்  நல்ல நெறியாக  (செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது) வானுலகம் தேடுவோர் நிலைபெற்ற துணையாவார்.
6%2BManak%2BIlvaazkkai%2B01.jpg
 மணக்குடவர் உரை: இல்வாழ்வானென்று சொல்லப்படுபவன் இயல்புடைய மூவர்க்கும் நல்ல வழியின்கண்ணே நின்றவொருதுணை. (தவசி, பிரமச்சாரி, துறவியாகிய மூவர்) என்றது தானமாகிய வில்லறஞ் செய்யுமவன் தவத்தின்பாற்பட்ட விரதங் கொண்டொழுகா நின்ற பிரமச்சாரிக்கும், தவமேற் கொண்டொழுகாநின்ற வானப்பிரஸ்தன் ஸந்நியாசிகளுக்கும், தத்தம் நிலைகுலையாம லுணவு முதலாயின கொடுத்துப் பாதுகாத்தலின் அவர்க்கு நல்லுலகின்கண் செல்லும் நெறியிலே நின்ற வொரு துணையென்று கூறியவாறாயிற்று. துணையென்பது இடையூறு வாராமலுய்த்து விடுவாரை.

திருக்குறள் (மொழியியல் ரீதியாக முழுமையான தொடை அமைப்பு, குறள் வெண்பா இலக்கணம், பல புதிய சொற்கள், செய்வினை - செயப்பாட்டுவினை அமைப்பு எல்லாம் நிலை பெற்ற பின்பு) இயற்றி  ஒரு நூற்றாண்டிற்குள்ளாக எழுந்த பழைய உரை சமணர் மணக்குடவர் உரை, அதில் தொடங்கி 19ம் நுற்றண்டு வரையிலான அனைத்து முக்கிய உரைகளையும் காண்போம்.
q%2Biyalpu%2B01.pngq%2Biyalpu%2B02.png
 
நல்லாற்றின் நின்ற இயல்புடைய மூவர்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை   - என்பதை     சமூகத்தில் உள்ளவர்கள் (குடும்பத்தினர் இல்லை) எனக் கொண்ட போதும் 20ம் நூற்றாண்டில் காலனி ஆதிக்க சிந்த்னையால் எழுந்த அறிஞர்கள் செய்த ஊகங்கள்.
 

 நல்லாறு -வானுலகம் செல்லும் வழி

 
 
 #
உரை கூறியவர்
நல்லுலகின் கண் செல்லும் நெறியிலே  நின்ற வொரு துணை
1
ச தண்டபாணி  தேசிகர்
இளையர், முதியோர், பெண்கள் 
2
நாமக்கல் இராமலிங்கம்
உறவினர், நண்பர், ஏழைகள்
3
மு கோவிந்தசாமி
சைவர், வைணவர், வைதிகர் அல்லது 
  அரசன், ஆசான், ஆன்றோர் 
4
கா அப்பாத்துரை
அறவோர், நீத்தார்,  அந்தணர்
5
சி இலக்குவனார்                     
மாணவர், தொண்டர், அறிவர்
6
வ சுப மாணிக்கம், 
இரா.சாரங்கபாணி, 
குழந்தை
மூவேந்தரான சேர, சோழ, பாண்டிய  மன்னர்கள்
7
திரு வி க  
ஊர் மன்றங்களில் அமரும் மூன்று அறவோர்
8
டாக்டர் பொற்கோ 2013 –உரை 
மிக இளையோர், மிக முதியோர், நோய் ஊனத்தால்  அவதியில் உள்ள நடு வயதினர் 
9
பெருஞ்சித்திரனார்
அடுத்த குறளில் சொன்ன துறந்தார், துவ்வாதவர் & இறந்தார்
10
கிறிஸ்துவ வெறிர் 
தேவநேயப்பாவாணர் 
பார்ப்பான், அரசன், வணிகன் (தொடர்பற்று  ஜாதிகளை திணிக்கும்)
11
பேராயர் அருளப்பா, தெய்வநாய்கம்
பிதா, மகன் , தூய ஆவி
    

பெருஞ்சித்திரனார்அடுத்த குறளில் சொன்ன துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் ஆகியோர் தான் என்கிறார், இப்படி வள்ளுவர் எந்த ஒரு குறளையும் அடுத்த குறளைப் பார்த்து புரியும்படி இயற்றவில்லை என்பதால் இது தவறு.

கிறிஸ்துவர் தேவநேயன் இல்வாழ்வான் எனில் வேளாளர், மூவர் மற்ற மூன்று வர்ணத்தை என்கையில் அவர்களும் இல்வாழ்க்கையினரே, மற்றும் நச்சாக இங்கு வர்ணத்தை ஏன் கொணர்ந்தார்??

பேராயர் மற்றும் பாவாணர் வழி தெய்வநாயகம் கிறிஸ்துவ மத வெறியில் பல உண்மைகளை கொடாது பிதற்றல், தொல்லியல்படி பைபிள் கதை முழுவதும் மனிதக் கற்பனை, சுவிசேஷத் தொன்மக் கதை நாயகன் ஏசு ரோமன் கிரிமினலாக தூக்குமரத்தில் அம்மணமாக செத்தார் அது விவிலியச் சட்ட முறை பலியும் இல்லை,  விவிலியக்கதைப்படி   பூமியில் மரணம் காரணி ஆதாம் பாவம்,  அப்பாவம்   ஏசு மரணத்தால்  போனது என்றால்-  தொடர்ந்து அனைவரும் பூமியில் இறக்கின்றனரே!!! 
 
தமிழர் மரபில் இல்வாழ்க்கை
6%2BManak%2BIlvaazkkai%2B03%2Billaraviya
சமுதாயத்திற்கு உதவிடவே வாழ்வு எனும் நிலை மாறிட 19ம் நூற்றாண்டில் நுழைந்த மேற்கத்திய நுகர்ச்சி வழியில் கிறிஸ்துவ பாவமன்னிப்பு வழி, உன் சுயநலமே வாழ்வு, பாவம் செய்தால் வாராவாரம் மன்னிப்பு கேட்டு சுயநலமோடு வாழ் எனும் நுகர்ச்சி மன்ப்பான்மை
 
நல்லாற்றின் நின்ற இயல்புடைய மூவர் - என்பதில் குடும்ப உறுப்பினர்களை 
 
தாய், தந்தை, தாரம்           வ உ சிதம்பரம், இரா இளங்குமரன்
பெற்றோர், துணைவி, மக்கள் 
 
                          - கு ச ஆனந்தன், நெடுஞ்செழியன், கலைஞர், சுஜாதா.
 
நல்லாற்றின் நின்ற இயல்புடைய மூவர் - என்பதில் குடும்ப உறுப்பினர்களை கொணர்ந்தார் பின்னர் பலவும் அதை - குல்லா கதையில் தொப்பியை முதலில் ஒன்று எரிய அனைவரும் எரிந்தனர் எனு பலரும் செய்கின்றனர் என முனைவர் மோகனராசுவின் பதில் உறுதி செய்கிறது 
q%2Bmohan.jpg

 
நாம் மேலே கண்ட பல அறிஞர்கள் போலே மோகனராசு திருக்குறளை ஆழமாக கற்றவர், தமிழ் இலக்கியத்திலும் மிகுந்த புலமை ஆனால் திராவிட சிந்தனையில் மெய் அறிவை நிராகரிப்பறிப்பவர் இதையே வள்ளுவர்  கூறியது தான். 
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு. குறள் 452:சிற்றினஞ்சேராமை
மோகனராசுவின் பல  செயல்பாடுகள் திருக்குறள் ஆய்வுகளை ஆவணப் படுத்தல், பரப்பும் முயற்சி சிறந்தவை எனிலும் - மெய்யியல் மரபை நிராகரிக்க - இகல் கொண்டு அவர் கட்டுரைகள் பெரும்பாலும் வள்ளுவர் உள்ளத்திற்கு மாறாக அமைகிறது என்பதைக் காண்போம்.
நல்லாற்றின் நின்ற இயல்புடைய மூவர்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை.  துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை    
இரு குறளிலும் இல்வாழ்வான் என்பது முழு குடும்பத்தையுமே குறிக்கிறது எனலாம். இதை நச்சினார்க்கினியர் தொல்காபியம் மெய்ந்நிலை மயக்கத்திற்கு உதாரணமாய் கொடுத்ததும் ஆகும்
 // இல்வாழ்வான் என்பான்’ கு. 41
‘தினைத்துணையும் தேரான் பிறனில் புகல்’ கு. 144
‘படைகுடி...... உடை யான் அரசருள் ஏறு’ கு. 381
‘வறியவன் இளமை போல் வாடிய சினையவாய்’ கலி. 10
என ஒருமைப்பெயர்கள் ஒருமையளவோடு நில்லாது பன்மைப் பெயரையும் சுட்டுதல், மெய்ந்நிலை மயக்கின் ஆகுதலாம். மெய் - பொருள். (தொ. சொ. 449 நச். உரை)
மெய்ந்நிலை மயக்கமாவது பொருள்நிலை மயக்கம் கூறுதல். //
வள்ளுவர் பாயிரத்தில் கடைசியாக அறன் வலியுறுத்தல் வைத்துள்ளது, வள்ளுவத்தின் திரள் பொருளே ஒவ்வொரு செயலிலும் அறம் செய்ய வேண்டும் என்பதற்கு, அதன் பின்பாக இல்வாழ்க்கையை அதாவது மனைவி குழந்தைகளோடு அறம் செய்யவே என வலியுறுத்தவே, நாம் இந்த இல்வாழ்க்கை அதிகாரத்தின் அனைத்து குறட்பாக் காருத்துகளையும் வரிசையாகப் பார்ப்போம்
இல்வாழ்க்கை அதிகார குறட்பாக்களின்  சாரம்  
41 ஆம் குறள் அறம் குடும்பத்திலிருந்து தொடங்குகிறது என்பதைச் சொல்வது. -குடும்பத்தினர் தன் வீடுபேறு( நல்லாற்றின்) வழிக்காய் அறவழியின் இயல்பான மூவருக்கு துணையாவான்.
42  ஆம்குறள் துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்வாழ்வான் துணையாவான்
43 ஆம்குறள் இல்வாழ்பவன் கடமையாக இறந்த முன்னோர், உலகைப் படைத்த இறைவன், விருந்தினர், குடும்பம் பிறகு தான் என்ற வரிசையில் ஓம்பி வாழ்வதே கடமை நெறி 
44 பொருள் தேடும்போது பாவத்திற்குப் பயந்து தேடிய பொருளை உறவோடு பகிர்ந்து உண்ணும் இல்வாழ்பவனின் பரம்பரை ஒருகாலும் அழிவதில்லை.
45 ஆம்குறள் இல்வாழ்வான் குடும்பத்தினருடன் அன்போடு வாழ்வது குடும்பப் பண்பு, சமுதாயத்திற்கு அறம் செய்வது பயன்
46 ஆம்குறள் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?.
47 ஆம் குறள் அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான்.
48 ஆம் குறள் தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, தவம் செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்.
49 ஆம்குறள் சமூகத்திற்கு உதவி மற்றவர் பழிப்புக்கு இடமில்லாத இல்வாழ்க்கை நல்லறம் .
50 ஆவது குறள்  அறநெறியில் முறைப்படி வாழும் இல்வாழ்வான் தெய்வம் உறையும் வானுலகில் இடம் பெறுவான்.
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்ற வள்ளுவர் நல்லாற்றின் என அந்த நல்லாறு என்பது வானுறையும் தெய்வ உலகில் வைக்கப் படுதலே என முடிக்கிறார்

தமிழர் மரபில் இயல்பான நான்கு  வாழ்வு நிலைகள்
இவ்வுலகில் பிறந்த அனைவரும் கல்வி பயிலும் இளமைப் பருவம் - மாணவ நிலை(பிரம்மசரியம்)
திருமணம் செய்து மனைவி குழந்தைகள் என வாழும் குடும்ப வாழ்வு நிலை(க்ருகஸ்தன்)
பொருள் ஈட்டும் காலம் முடிந்து முதுமையில் ஓய்வு பெற்று ஒதுங்கி வாழும் மனத்தவ நிலை(வானப்பிரஸ்தம்)
இல் வாழ்க்கையில் இருந்து விடுபட்டு துறவறம் பூண்ட துறவு நிலை (சந்நியாசம்) - என வாழ்வை 4 இயல்பு நிலையாய் பிரித்து பார்ப்பது மெய்யியல் மரபு.
இதில் பொருள் ஈட்டுபவர் இல்வாழ்பவர் மட்டுமே, மற்ற மூவருக்கும் உதவும் துணையாக இருக்க வேண்டும் என்பதே மரபு

மாணவ நிலை  -கல்வி - மாணவர் எப்படி இருக்க வேண்டும்
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.                   குறள் 395:கல்வி
செல்வர் முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர்.

இல்வாழ்க்கையும் நல்லாறும்   
நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.          குறள் 242: அருளுடைமை
நல்லநெறியில் வாழ்ந்து, நமக்கு உதவும் அறம் எது என ஆய்ந்து, அருளுடன் வாழ்க; எல்லாச் சமய நெறிகளால் ஆய்ந்தாலும் அருளே நமக்குத் துணையாகும்.

 நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி (அதிகாரம்:கொல்லாமை குறள் எண்:324
மணக்குடவர் உரை: நல்ல வழியென்று சொல்லப்படுவது யாதெனின், அது யாதொருயிரையுங் கொல்லாமையைச் சிந்திக்கும் வழி. இது நன்னெறியாவது கொல்லாமை யென்றது.

திருவள்ளுவர் 1330 குறட்பாக்களில் எங்குமே இல்லறம் எனும் சொல்லை பயன்படுத்தவில்லை. இல்வாழ்க்கையில் குடும்பம் காப்பது அன்புச் செயல், ஆனால் நல்லாறு என்பது சமூகத்தில் அறம் செய்வது

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு. குறள் 81:விருந்தோம்பல்
வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவது  எல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்
               
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. குறள் 212: ஒப்புரவறிதல்
 தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்.

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு. குறள் 86: விருந்தோம்பல்
வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்து இருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.          குறள் 231:  புகழ்
எளியோர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.

வள்ளுவர் மனைவி, குழந்தைகள் பேணல் பற்றி தனி அதிகாரங்கள் கொடுத்தவர் இந்த அதிகாரத்தின் எந்த குறட்பாவிலும் குடும்பத்தோர் முக்கியம் என கூறவே இல்லை.

இல்வாழ்வில் உள்ளோர் முதல் கடமை  செய்யும் தகுதியை கணவர் கோவலான் கொலையால் இழந்தேன் என கண்ணகி புலம்புவாள்.
அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னைநும்
பெருமக டன்னொடும் பெரும்பெயர்த் தலைத்தாள்
                                                    6. கொலைக்களக் காதை -சிலப்பதிகாரம்

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை            குறள் 322:  கொல்லாமை
தனக்குள்ளதைப் பலர்க்கும் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களைக் காப்பாற்றுதல் அற நூலோர் தொகுத்துக் கூறிய  அனைத்து அறங்களிலும் எல்லாம் மேலானது.

மெய்யியல் மரபை வடவர் ஆரியர் என கிறிஸ்துவர் பரப்பிய நச்சு ஊகங்கள் எனத் தொல்லியல் மிகத் தெளிவாய் நிருபித்துவிட்டது.
“The [Harappan] religion is so characteristically Indian as hardly to be distinguished from still living Hinduism.... One thing that stands out both at Mohenjo-daro and Harappa is that the civilization hitherto revealed at these two places is not an incipient civilization, but one already age-old and stereotyped on Indian soil, with many millennia of human endeavour behind it...” John Marshall, Mohenjo-daro and the Indus Civilization (London, 1931, 3 vols.), vol. I, p. vi-viii.

ஜான் மார்ஷல்: சிந்து வெளி “[ஹரப்பன்] மதம் இன்னும் சிறப்பான இந்திய இந்து மதத்திலிருந்து வேறுபடுவதைப் போலவே இல்லை .... மொஹென்ஜோ-தாரோ மற்றும் ஹரப்பா ஆகிய இரண்டிலும் தனித்து நிற்கும் ஒரு விஷயம் என்னவென்றால், இந்த இரண்டு இடங்களில் இதுவரை வெளிப்படுத்தப்பட்ட நாகரிகம்  ஒரு ஆரம்ப நிலை நாகரிகம் இல்லை, ஆனால் ஏற்கனவே இந்திய மண்ணில் வயது முதிர்ந்த மற்றும் ஒரே மாதிரியான, பல ஆயிரம் ஆண்டுகளாக மனித முயற்சிகள் பின்னால் உள்ளன ... ”ஜான் மார்ஷல், மொஹென்தாரோ மற்றும் சிந்து நாகரிகம் (லண்டன், 1931, 3 தொகுதிகள்.),  தொகுதி. I, பக்க. vi-viii.

நல்லாற்றின் நின்ற இயல்புடைய மூவர் என்பது மாணவர், மனத் தவநிலை முதியோர் மற்றும் துறவிகள் என்பதே வள்ளுவரின் மனம் என்பது தெளிவாகிறது


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard