Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவரின் காலமும் சமயமும்


Guru

Status: Offline
Posts: 7410
Date:
திருவள்ளுவரின் காலமும் சமயமும்
Permalink  
 


திருவள்ளுவரின் காலமும் சமயமும் 

திருக்குறள் ஒன்றே முக்கால் அடியில் உலகக் கருத்துகளை உள்ளடக்கிய அருமையான நூல் இது. தமிழில் உள்ள அறநூல்களுள் தலை சிறந்ததும் திருக்குறளாகும். ஈரடி வெண்பாகுறள் வெண்பா எனப்படும். அவ்வெண்பாவால் ஆன நூலும் ஆகுபெயராகக் குறள் என்று பெயர் பெற்றது. அதன் சிறப்பு நோக்கித் திரு என்னும் அடைமொழி சேர்த்துத் திருக்குறள் என்று வழங்கி வருகின்றோம்.
val.png

 
சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு என்னும் பெயர் பெற்றன. இவை மொத்தம் பதினெட்டு நூல்களாகும். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் மிகச் சிறந்ததாகப் போற்றப்படுவது திருக்குறள். இந்த நூலை இயற்றியவர் திருவள்ளுவர். 
 
திருக்குறள் மிகவும் எளிமையான நடைஇயற்றப்பட்டு 1250 ஆண்டுகள் பின்பும் இன்றைக்கும் படிப்போர் புரிந்து கொள்ளும் எளிமை.  அதற்கு முந்தைய சங்க இலக்கியம் போல கடுமையான நடைபுரியாத பல சொற்கள் என்று இல்லாமல் குறள் வெண்பாவில் இயற்றப் பட்டது குறள். திருவள்ளுவர்  காலம் தற்போது காலம் 7 - 8ம் நுற்றாண்டு என்பதில் நடுநிலையாளர்களுள் ஒரு கருத்து ஒற்றுமை வருகிறது.
 
திருவள்ளுவர் காலம் பற்றிய ஆய்வு முடிவுகள் நடுநிலையாய் செய்த ஜி.யு.போப் 10ம் நூற்றாண்டு என்பதாய், பேரறிஞர் வையாபுரி பிள்ளைஇவர்  வள்ளுவர் காலம் குறித்ததை600 ஒட்டி என்றார்.
 
திருக்குறளில் உள்ள பல சங்கப்பாடல் தொடர்களை தலைகீழாய் குறளை சங்கப் புலவர்கள் பயன்படுத்தியதாய் கூறித் திரிந்த வள்ளுவரால் பாழ்செய்யும் பல்குழு (குறள் 735) எனும் பிரிவினைவாத சக்திகள் அவரை கடுமையாய் விமர்சித்தனர். 
 
தற்போது பன்னாட்டு பல்கலைக் கழக நெறியில் ஆய்வுகள் திருவள்ளுவர் காலம் பொ.ஆ.800ஐ ஒட்டி என கருத்தொற்றுமை உள்ளது. இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக் கழக பேராசிரியர்  டேவிட் ஷுல்மன் பாண்டியர் - பல்லவர் காலம் இன்னும் பின் தள்ளும்படி குறிப்பு காட்டி உள்ளார்.
 
திருவள்ளுவர் காலத்தை மிகவும் பின் தள்ளியோரின் தரவுகள் என்ன? அவை நடுநிலை அறிஞர்களால் நிராகரிக்கப்பட நேர்மையான காரணங்கள் என்ன
1.முச்சங்கம் இருந்தது என்ற தொனமக் கதை நம்பிக்கை.
மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்தது எனும் ஒரு தொன்மக் கதை  மூன்று கடற்கோள்கள் இறையனார் களவியல் ஆசிரியர் உரையில் புனைந்துள்ளதை இன்று அறிவு சார் ஆய்வுலகம் முழுமையாய் நிராகரித்துவிட்டது. சங்கம் என்ற சொல்லே தமிழ் சொல் இல்லைபுலவர் பட்டியல் எல்லாமே கற்பனைகள் என தூக்கி எறிந்து பல காலம் ஆகிவிட்டது.
 
சங்ககால மன்னர் காலநிலை  வரலாறு-   வி.பி.புருஷோத்தம்;   
அணிந்துரை- சிலம்பொலி செல்லப்பன். இயக்குனர்-உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்.   பாராட்டுரை- பேராசிரியர். சாலை- இளந்திரையன்.
நூலின் ஆய்வின் விஸ்தீரணம் கண்டு இயக்குனர்-உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்- இந்நூலிற்கு தமிழக அரசு சார்பாக வேளியீடு மான்யம் பெற்று தந்தார்.
 
53.png
 
 
தொல்காப்பியம், எட்டுத்தொகை நூல்களை கி.ப். எட்டாம் நூற்றாண்டில் படித்த நீலகண்டன் என்பவரால் விடப்பட்ட கதையே முச்சங்கக் கதையாகும். பாண்டியர்கள் தென்மதுரையிலும் கபாடபுரத்திலும் வாழ்ந்ததாகவோ சங்கப் பாடல்கள் கூறவில்லை.
முச்சங்கக் கதையை நம்பி, சங்ககாலத்தைக் கணிக்க முயல்வது, மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போலாகும். -பக்கம்30 
8ம் நூற்றாண்டில் வரையப்பட்ட இறையனார் அகப்பொருள் உரை- என்னும் நூலில் ஒரே ஒரு பாடல் மட்டும் விடப்பட்ட கதையே முச்சங்கக் கதை. இதில் முதல்- இடைச் சங்கப் புலவர்கள் என உரையில் கூறப்பட்ட புலவர்கள் பெயர்கள் பெரும்பாலும் பாட்டுத்தொகை ஆசிரியர்கள் பெயரே உள்ளது. 
 
இடைச் சங்கம், கடைச் சங்கம், முதல் சங்கம்- இவை எல்லாம் வெறும் ஆரவார புராணம். ஆதாரமில்லாதது.
2. தொல்கப்பியம் பற்றிய பின்னோக்கிய காலம் குறித்தல் -முச்சங்க கதைகளின் தாக்கம்.
தொல்காப்பியத்தில் உள்ள சொல், சொல் தொடரி போன்றவை ஆய்வில், காப்பியர் சங்க இலக்கியத்திற்கு பல நூற்றாண்டு பின்னானவர் என அறிஞர்கள் ஏற்கின்ற்னர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா  பல்கலைக் கழக பேராசிரியர் ஜ்யார்ஜ் ஹார்ட் தன் நூலில் தெளிவாய் சொல்வது  -தொல்காப்பியர் தமிழ் இலக்கணம் அமைக்க சமஸ்கிருத இலக்கணத்தின் பல கூறுகளை எடுத்து பயன் படுத்தி உள்ளதைக் காட்டியும், முன்னால் பேராசிரியர் கமில் செவிலிபில் ஆய்வைக் காட்டியும் , காப்பியர் சங்க இலக்கியத்திற்கு பல நூற்றாண்டு பின்னானவர் எனக் கூறுவார்.
இன்றைய நிலையில் தொல்காப்பியர் காலம் பொ.ஆ. 7ம்  நூற்றாண்டு என்பதில் பெரும் கருத்தொற்றுமை உள்ளது
3.வள்ளுவர் சங்க காலப் புலவர் எனும் நம்பிக்கை.
 
பத்துப் பாட்டு எட்டுத் தொகை நூல்களுள் உள்ள தொடர், பாட்டு கருத்துக்கள் குறளிலும் உள்ளதைக் கொண்டு - திருக்குறளை முன் தள்ளியனர். இத்தோடு முசங்கக் கதை, கீழுள்ள கதைகள் அவற்றிற்கு உதவின
 திருவள்ளுவமாலையில் உள்ள பாடல்களில் திருக்குறளின் ஒவ்வொரு பாலின் உள்ளும் உள்ள இயல்களில் எத்தனை அதிகாரங்கள் என்பதை கூறும் வகையில் பல பாடல்கள் உள்ளன.
4.திருவள்ளுவர் பற்றி உள்ள திருவள்ளுவமாலை மற்றும் கபிலர் அகவலில் உள்ள புனைக் கதைகள்
 
திருக்குறள் எழுதப் பட்ட பின் வரையப்பட்ட முதல் உரை மணக்குடவர் எனும் சமணர் உரை, ஆனல் இவர் உரையில் உள்ள இயல்களினும் உள்ள அதிகார அமைப்பினோடு திருவள்ளுவமாலை பாடல்கள் பொருந்த வில்லை, ஆனால் 13ம் நூற்றாண்டின் பரிமேலழகர் பிரித்துள்ளதோடு பொருந்துகிறது. எனவே நிச்சயமாய் இவை அவற்றிற்கு பிற்பட்டவை
 
 
வள்ளுவர் பற்றிய கதைகளில் பல கிறிஸ்துவப் பாதிரிகள் திணித்தவை எனப் பல ஆய்வுகள் கூறுவதையும் அறிஞர் காட்டி உள்ளனர். 
5. சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை தெளிவாய் திருக்குறளை குறிப்பிடுவதால் 
 
 
சிலப்பதிகாரக் கதையின் சேரன், செங்குட்டுவன் போன்ற அரசர்கள் சங்க காலத்தவர், அதாவது பொ.மு.300 - பொ.ஆ.300 இடையிலானவர், ஆனால் சங்கப் பாடல்கள் பொ.ஆ.6ம் நூற்றாண்டின் முற்பாதி வரை வரையப்பட்டவை. சிலப்பதிகாரமோ கதை மாந்தர்களை சங்க காலத்தினராகக் காட்டினும் அதில் உள்ள செய்திகள், நகர வாழ்வு இவை பிற்காலத்தது, அறிஞர்படி 9ம் அல்லது 12ம் நூற்றாண்டு எனக் குறிக்கின்றனர், தொல்லியலும் கண்ணகி கோவிலின் தொன்மை 9ம் நூற்றாண்டு பின் என்பதால் தெளிவாய் சிலப்பதிகாரம் 9ம் நூற்றாண்டு  இறுதிக்கு முன் வாராது.
 
 
 
 திருவள்ளுவர் காலம் பன்னாட்டு பல்கலைக் கழக முறை ஆய்வுகள் 8ம் நூற்றாண்டு எனக் குறிக்க காரணம் பெருமளவில் மொழியும் திருக்குறள் நடையும் தான்.
 
 திருக்குறளின் மொழி நடை
 
சங்க இலக்கியத்தின் பாடல்கள் பெரும்பாலும் இன்றைக்கு புரியா மொழி நடை, ஆசிர்யப்பாவில் அமைந்தது.
 
திருக்குறளோ வெண்பா, அதிலும் குறள் வேண்பா, சொற்கள் வளர்ச்சியுற்று எளிதில் புரியும் நடை.
 திருக்குறளின் மொழியியல் வழியில் இலக்கண திறனாய்வு நூல்கள் மிகவும் குறைவு. 
 
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் ஈ.சுந்தரமூர்தி அவர்களின்  குறளின் நடையியல் மற்றும், முனைவர் மோகனராசுவின்  -"திருவள்ளுவர் நடைநலைம்". இரணடுமே திருக்குறள் பேராசிரியர் அகத்தியலிங்கம் அவர்கள் நூலும் உண்டு.
 

vals.png

valss.png

இவை நமக்கு தெளிவாய் காட்டுவது, திருக்குறள் பாட்டுத் தொகை நூல்களுக்குப் பிறகான தொல்காஅபியத்திலிருந்து பிற்காலத்தது.
 
 
திருவள்ளுவர் காலம் என்ற பெயரிலேயே ஒரு கட்டுரை பேராசிரியர்.கஸ்தூரி ராஜா அவர்கள்   நூலில் ஒரு கட்டுரையும், முனைவர் மோகனராசுவின் வளர்ச்சி வரலாறு - பகுதி௨ நூலின் பெரும் பகுதியும் 


__________________


Guru

Status: Offline
Posts: 7410
Date:
Permalink  
 

தொல்காப்பியம் 7ம் நூற்றாண்டு இறுதி; திருக்குறள் 9ம் நூற்றாண்டு - பாவணர் சாட்சி

 
 தமிழ் இலக்கணங்கள் எல்லாவற்றுள்ளும் தொல்காப்பியம் தான் மிகப் பழமையானது, காலம் 7ம் நூற்றாண்டு என்பதில் கருத்து ஒற்றுமை நடுநிலையாளரிடம் உண்டு. 
53a.png
அமெரிக்காவின் கலிபோர்னியா  பல்கலைக் கழக பேராசிரியர் ஜ்யார்ஜ் ஹார்ட் தன் நூலில் தெளிவாய் சொல்வது  -தொல்காப்பியர் தமிழ் இலக்கணம் அமைக்க சமஸ்கிருத இலக்கணத்தின் பல கூறுகளை எடுத்து பயன் படுத்தி உள்ளதைக் காட்டியும், முன்னால் பேராசிரியர் கமில் செவிலிபில் ஆய்வைக் காட்டியும் , காப்பியர் சங்க இலக்கியத்திற்கு பல நூற்றாண்டு பின்னானவர் எனக் கூறுவார்.
 
 தொல்காப்பியர் காலம் - தமிழ் கல்வெட்டுகள் எழுத்துக்களின் பரிமாண வளர்ச்சியின்படி வடமொழி எழுத்துக்களை பயன்படுத்த தொடங்கி தமிழ் முழுமையாய் 30 எழுத்துக்களும் தனித் தனி உரு பெற்றது 4ம் நூற்றாண்டு இறுதியில் தான், அதன் பின்னர் புள்ளி மயங்கியல் போன்றவைகளை விளக்கும் தொல்காப்பிய சூத்திரங்கள் உருவாகும் காலம் 7 ஆம் நூற்றாண்டு வாக்கில் தான் என தற்போது பன்னாட்டு பல்கலைக் கழகங்கள் ஏற்கிறது.

தொல்காப்பியம் தமிழ் மெய் எழுத்து வரிசையில் கடைசியில் " ள, ற & ன" உள்ளது - இவை வட மொழியில் இல்லாதவை, இது தெளிவாய் தமிழ் எழுத்துருக்கள் வடமொழி உருவிடம் கடன் வாங்கியது என்பதையும், நிருபித்தன என பேராசிரியர் இன்னாசி தன் எழுத்தியல் நூலில் விளக்கி உள்ளார்
 
கிறிஸ்துவ மதவெறி தேவநேயப் பாவணர் தன்னை ஒரு தமிழ் பற்றாளர் என வேடம் போட்டு ஏமாற்றி தமிழரை ஆரியர் - திராவிடர் என பிரிக்கும் கிறிஸ்த்வ நச்சுப் பொய்யை பராப்பும் ஏஜன்டாய் செயல்பட்டவர்.
தன் பொய்யான மதம் பரப்ப நச்சுக் கருத்தைப் பரப்புவோரை நம்பினால் வள்ளுவரும்  தெளிவாய் சொன்ன்னார்
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை 
தீரா இடும்பை தரும்.                   குறள் 508: 
மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.
கிறிஸ்துவ மதவெறி தேவநேயப் பாவணர்  தொல்காப்பியத்தில் உள்ள பல மொழியியலைவிட குறளின் உள்ள வளர்ச்சியை  காரணம்  காட்டி திருக்குறள் தொல்காப்பியத்திற்கு 500 ஆண்டு பிற்பட்டது  என்கிறார். 
 
Pavanar%2BValvar%2Bdate-.jpg
பேராசிரியர் வையாபுரி பிள்ளை மற்றும் ஐராவதம் மஹாதேவன் போன்றோர் தவிர மற்ற முறையான ஆய்வின்றி தன்னிச்சையாய் காலம் குறிப்போரை பன்னாட்டு பல்கலைக் கழகங்கள் ஏற்பது இல்லை.
 பன்னாட்டு பல்கலைக் கழக தமிழ் அறிஞர்கள் தொல்காப்பியம் மொழிநிலை சங்கத் தொகை நூல்களுக்கு பல நூற்றாண்டு பிற்பட்டது என்பதை திரு.வையாபுரி பிள்ளை காட்டி உள்ளார், இவற்றை  லண்டன் பல்கலை கழக பகுதி நேர ஆசிரியரான திரு.சுவாமிநாதன்  தன் வலையில் என ஐந்து  பாகங்களாய் எழுதியுள்ளார். விளக்கி உள்ளார்.

தொல்காப்பியர் காலம் தவறு  இரண்டு மூன்று நான்கு  ஐந்து

 
கிறிஸ்துவ மதவெறி தேவநேயப் பாவணர் கூற்றுபடியே காப்பியத்திற்கும் - குறளிற்கும் இடையே மொழி நிலை மாற்றம் 5 நூற்றாண்டு என்பது தவறன ஆய்வு; 
சங்க இலக்கியத்திலேயே கலித்தொகை, பரிபாடல் நூல்களுள் தமிழின் நெகிழ்ச்சி காணப் படுகிறது, பெரும்பாலான சங்கத் தொகை நூல்கள் பொ.மு 200 - பொ.ஆ.500 இடையிலானது; கலித்தொகை & பரிபாடல் 5- 6m  நூற்றாண்டை ஒட்டியது, இவற்றில் தான் ஆசிரியப்பாவை விட்டு  நெகிழ்ந்து பரிபாடல், கலிப்பா, வெண்பாவில் பாடல் இயற்றப் படுகிறது. தொல்காப்பியம் இவற்றை கூறுகிறது. 
வட மொழியில் காயத்ரி மற்றும் உஷ்னிக் என்பவர் ஈரடி வெண்பா வகை, இவற்றை வைத்து காப்பியர்  (குறு வெண்பாட்டின் அளவு எழு சீரே - பொருள். செய்யு:158/2) குறு வெண்பா என ஒரு சிறு குறிப்பு மட்டும் தருகிறார். திருக்குறள் என்பது குறு வெண்பா மிகவும் நெகிழ்ச்சி பெற்றபின் உருவானது, 9ம் நூற்றாண்டின் முதற் பாதியைச் சேர்ந்தது.


__________________


Guru

Status: Offline
Posts: 7410
Date:
Permalink  
 

தொல்காப்பியர் காலம்

 

tholkaappiyaree.png

தொல்காப்பியம் தமிழின் மிக முக்கியமான இலக்கண நூல். இதன் மொழி நடை இது சங்க இலக்கியம் எனும் பத்துப் பாட்டு எட்டுத் தொகை நூல்களுக்கு பிற்பட்டது என மொழியியல் தெளிவாய் காட்டுகிறது.
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதிய பாதிரி கால்டுவெல்  பொ.ஆ.-8ம் 13ம் நூற்றாண்டு இடையே என்றார்
அன்றைய  தரவுகளின் அடிப்படையில் பன்னாட்டு  பல்கலைக்கழக ஆய்வுமுறைகள்படி ஆய்வாளர்கள் கூறியது
P.Tசீனிவாசையங்கர் : பொ.ஆ. முதலிரண்டு நூற்றாண்டுகளைச் சார்ந்தவர் History of Tamils P. 70

தெ.பொ.மீ: பொ.ஆ. 2-நூற்றாண்டை ஒட்டிய சங்க நூல்களுக்கு முற்பட்டவர் - சமணத் தமிழ் இலக்கிய வரலாறு பக்-28

பெரிடேல் கீத் : பொ.ஆ. 4-நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் தமிழ்ச்சுடர் மணிகள் பக்-39

எஸ். வையாபுரிப்பிள்ளை : பொ.ஆ.அல்லது 5 நூற்றாண்டில் வாழ்ந்தவர் தமிழ்ச்சுடர் மணி பக்-39
கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி : பொ.ஆ. 5-ம் நூற்றாண்டு
கே.எஸ் சிவராஜபிள்ளை : பொ.ஆ.6-ம் நூற்றாண்டு 
முச்சங்க தொன்மக் கதை
 
மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்தது எனும் ஒரு தொன்மக் கதை  மூன்று கடற்கோள்கள் இறையனார் களவியல் ஆசிரியர் உரையில் புனைந்துள்ளதை இன்று அறிவு சார் ஆய்வுலகம் முழுமையாய் நிராகரித்துவிட்டது. சங்கம் என்ற சொல்லே தமிழ் சொல் இல்லைபுலவர் பட்டியல் எல்லாமே கற்பனைகள் என தூக்கி எறிந்து பல காலம் ஆகிவிட்டது.
 
சங்ககால மன்னர் காலநிலை  வரலாறு-   வி.பி.புருஷோத்தம்;   
அணிந்துரை- சிலம்பொலி செல்லப்பன். இயக்குனர்-உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்.   பாராட்டுரை- பேராசிரியர். சாலை- இளந்திரையன்.
நூலின் ஆய்வின் விஸ்தீரணம் கண்டு இயக்குனர்-உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்- இந்நூலிற்கு தமிழக அரசு சார்பாக வேளியீடு மான்யம் பெற்று தந்தார்.
 
53.png
 
 
தொல்காப்பியம், எட்டுத்தொகை நூல்களை கி.ப். எட்டாம் நூற்றாண்டில் படித்த நீலகண்டன் என்பவரால் விடப்பட்ட கதையே முச்சங்கக் கதையாகும். பாண்டியர்கள் தென்மதுரையிலும் கபாடபுரத்திலும் வாழ்ந்ததாகவோ சங்கப் பாடல்கள் கூறவில்லை.
முச்சங்கக் கதையை நம்பி, சங்ககாலத்தைக் கணிக்க முயல்வது, மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போலாகும். -பக்கம் -30
8ம் நூற்றாண்டில் வரையப்பட்ட இறையனார் அகப்பொருள் உரை- என்னும் நூலில் ஒரே ஒரு பாடல் மட்டும் விடப்பட்ட கதையே முச்சங்கக் கதை. இதில் முதல்- இடைச் சங்கப் புலவர்கள் என உரையில் கூறப்பட்ட புலவர்கள் பெயர்கள் பெரும்பாலும் பாட்டுத்தொகை ஆசிரியர்கள் பெயரே உள்ளது. 
 
இடைச் சங்கம், கடைச் சங்கம், முதல் சங்கம்- இவை எல்லாம் வெறும் ஆரவார புராணம். ஆதாரமில்லாதது.
பன்னாட்டு பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் ஏற்பது என்ன
 
தொல்காப்பியத்தில் உள்ள சொல், சொல் தொடரி போன்றவை ஆய்வில், காப்பியர் சங்க இலக்கியத்திற்கு பல நூற்றாண்டு பின்னானவர் என அறிஞர்கள் ஏற்கின்ற்னர்.
 
ஜப்பானின் ஒசாக்கா பன்னாட்டு புத்த மத பல்கலைக் கழக இந்தியவியல் பேராசிரியரும், திருக்குறளை ஜப்பானிய மொழியில் மொழி பெயர்த்த டகனொபுடகஹஷி   இன்றைய வடிவு 5- 6ம் நூற்றாண்டினது
 
 பென்சில்வேனியா பல்கலைக் கழக மேனாள் பேராசிரியர் V.S.ராஜம்   பொ.ஆ. 5- நூற்றாண்டிற்கு   சற்று முந்தையது
ஹாலந்து  லெய்டன் இந்தியவியல் பேராசிரியரும் ஹெர்மன் டிய்கென்   பொ.ஆ.9ம் நூற்றாண்டினது 
19ம்  ஏ.சி.பர்னெல் பொ.ஆ. 19ம் நூற்றாண்டின் இந்தியவியல் ஆய்வாளர் 8ம் நூற்றாண்டினது முன்பாய் இருக்க இயலாது
  அமெரிக்காவின் கலிபோர்னியா  பல்கலைக் கழக பேராசிரியர் ஜ்யார்ஜ் ஹார்ட் தன் நூலில் தெளிவாய் சொல்வது  -தொல்காப்பியர் தமிழ் இலக்கணம் அமைக்க சமஸ்கிருத இலக்கணத்தின் பல கூறுகளை எடுத்து பயன் படுத்தி உள்ளதைக் காட்டியும், முன்னால் பேராசிரியர் கமில் செவிலிபில் ஆய்வைக் காட்டியும் , காப்பியர் சங்க இலக்கியத்திற்கு பல நூற்றாண்டு பின்னானவர் எனக் கூறுவார்.
53a.png
தொல்காப்பியம் சொல் இலக்கணம் மட்டும் இல்லை, எழுத்து இலக்கணமும் சொல்கிறது. அதாவது
 உயிர் எழுத்து 12 அ - ஔ ;  மற்றும்
 மெய் எழுத்து 18 க் - ன்
இவற்றின் கலப்பே உயிர்மெய் எழுத்து
கல்வெட்டுகளில் 30 எழுத்துகளும் தனி உரு பெறுவது 5ம் பொ.ஆ. 5ம் நூற்றாண்டில் தான். அதாவது  தமிழில்  "ற" "ன" போன்றவை இரண்டு, ஆனால் வடமொழியில் ஒன்று தான்.
உதாரணமாக ராகம் என எழுத்கையில் எழுதும் போது அறம் என எழுதும் போதும்  மாறு படும் ஆனால் 5ம் நூற்றாண்டிற்கு முந்தைய கல்வெட்டுகளில் இரண்டு ஒரே உரு தான், மொழி இடையில் வந்தால் படிப்பவர் மாற்றி  மாற்றி படித்து பொருள் சொல்கின்றனர். 
புள்ளி மயங்கியல்
 
புள்ளி வைத்து எழுதுதல், பின் புள்ளி மயங்கியல் என மெய் எழுத்து சேறும் முறை பற்றியும் தொல்காப்பியத்தில் இலக்கணம் உள்ளது
தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி - அதாவது பிராமியில் தொடங்கி அது வட்டெழுத்தாய் மாற்றம் பெற்றதினை தமிழ் எனப் படித்து வெளிப் படுத்திய பேராசிரியர் கே.வி.ராமன், ஐராவதம் மகாதேவன் போன்றோர் தெளிவாய் தொல்காப்பிய எழுத்து இலக்கணத்தோடு அதை ஒப்பிட்டு அதன் அடிப்படையில் தான் தொல்காப்பியம் இயற்றப் பட்ட காலம் குறிக்க வேண்டும் எனத் தெளிவாய் கூறுகின்றனர். அதன்படி தொல்காப்பியம் 7ம் நூற்றாண்டிலானாது.
 
 
  தொல்காப்பியர் காலம் - தமிழ் கல்வெட்டுகள் எழுத்துக்களின் பரிமாண வளர்ச்சியின்படி வடமொழி எழுத்துக்களை பயன்படுத்த தொடங்கி தமிழ் முழுமையாய் 30 எழுத்துக்களும் தனித் தனி உரு பெற்றது 4ம் நூற்றாண்டு இறுதியில் தான், அதன் பின்னர் புள்ளி மயங்கியல் போன்றவைகளை விளக்கும் தொல்காப்பிய சூத்திரங்கள் உருவாகும் காலம் 7 ஆம் நூற்றாண்டு வாக்கில் தான் என தற்போது பன்னாட்டு பல்கலைக் கழகங்கள் ஏற்கிறது.

தொல்காப்பியம் தமிழ் மெய் எழுத்து வரிசையில் கடைசியில் ளா, ற, ஜ்ன உள்ளது - இவை வட மொழியில் இல்லாதவை, இது தெளிவாய் தமிழ் எழுத்துருக்கள் வடமொழி உருவிடம் கடன் வாங்கியது என்பதையும், நிருபித்தன என பேராசிரியர் இன்னாசி தன் எழுத்தியல் நூலில் விளக்கி உள்ளார்


__________________


Guru

Status: Offline
Posts: 7410
Date:
Permalink  
 

இலக்கியத் திறனாய்வில் வடிவம், கட்டமைப்பு என்ற சொற்கள் நுட்பமான பொருள் வேறுபாட்டுடன் எடுத்தாளப்படுகின்றன. பாடல், உரைநடை ஆகியவற்றைக் குறிப்பிடும்போது பா வடிவம், உரைநடை வடிவம் என்ற சொற்கள் பயன்படுகின்றன. தனி நூல்களின் அமைப்பினைப் பற்றிய ஆய்வுகளில் அமைப்பு அல்லது கட்டமைப்பு என்ற சொற்கள் பயன்படுகின்றன. வடிவம், கட்டமைப்பு, அமைப்பு, உருவம் ஆகிய சொற்கள் பெரும்பான்மையான இடங்களில் எடுத்தாளப்படும் சூழல்களை வைத்துப் பார்க்கும்போது வடிவம் என்ற சொல் பொதுவான ஒரு தொகுதியைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. நூல்களின் தொகுதியையும் ஒரு குறிப்பிட்ட நூலின் கட்டமைப்புக் கூறுகளுடன் இலக்கிய உத்திகள் இணைந்திருக்கும் தொகுதியையும் குறிப்பிடுவதற்கு வடிவம் என்ற சொல் பயன்படுகின்றது. (ம.திருமலை:2017:175)

தமிழ்மொழி வளமான இலக்கியப் பரப்பினைக் கொண்டது. அத்துடன் செறிவான ஆராய்ச்சி மரபினையும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மொழி, இலக்கியங்கள் மீதான ஆராய்ச்சி மரபின் தோற்றுவாயாக இலக்கண உருவாக்கத்தைக் கூறமுடியும். பின்னர்த் தோன்றிய உரைமரபுகள் மூலப் பனுவல்களை அடுத்தகட்ட நகர்விற்குக் கொண்டு சென்றன. சமூக மாற்றமானது எவ்வாறு இலக்கியப் பிரதிகளின் மீது தாக்கத்தினைச் செலுத்தியதோ அவ்வாறே ஆராய்ச்சி மரபிலும் மாற்றத்தினைக் கொண்டுவந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சுக்கருவிகள் பொதுப்புழக்கத்திற்கு வந்த பின்னர் சுவடிமரபிலிருந்து இலக்கியப் பிரதிகள் பல அச்சு நூலாக உருமாற்றம் பெற்றன. புலமைச்சமூகத்தில் அவற்றின் மீதான வாசிப்பு என்பது மேலைத்தேயக் கல்வியோடு இணைந்து தொழிற்பட்டது. பிறமொழி ஆய்வாளர்களின் கவனம் தமிழ்மொழி இலக்கியங்களின் மீது ஏற்பட்டதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. காலனிய காலத்திற்குப் பின்னர் இயக்கம் சார்ந்த வாசிப்பு நிலை உருவானது. பிறகு கோட்பாடுகள் சார்ந்த ஆய்வு; சமூக அரசியல் சார்ந்த ஆய்வு, வட்டார ஆய்வு என ஆய்வுப் புலமானது விரிவினைப் பெற்றது. இந்தப் பின்புலத்தில் ஓர் இலக்கியப் பிரதியானது ஆராய்ச்சி மரபில் கடந்து வந்த பாதைகளைக் கவனப்படுத்துவது அவசியமாகின்றது.

குறிப்பாகச் சங்க இலக்கியம். தமிழ்மொழியின் செவ்வியல் தன்மைக்கு அடிப்படையாக இருப்பவை பாட்டும் தொகையும். இச்சங்க இலக்கியங்கள் கடந்து வந்த ஆராய்ச்சி மரபுகள் குறித்துச் சில கட்டுரைப் பதிவுகள் காணக் கிடைக்கின்றன. அவற்றுள் சு.அமிர்தலிங்கத்தின் ‘சங்க இலக்கியம் செய்தனவும் செய்ய வேண்டியனவும்’ (2001), வீ.அரசுவின் ‘சங்க இலக்கியம் காலந்தோறும் உள்வாங்கல் மற்றும் மறு உருவாக்கம்’ (2012), ப.திருஞானசம்பந்தத்தின் ‘சங்க இலக்கிய ஆராய்ச்சி வரலாறுக் ஆகிய கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. இதுவரை சங்க இலக்கியம் மீது நிகழ்த்தப்பெற்ற ஆய்வுகளையும் இனி நிரப்ப வேண்டியுள்ள இடைவெளிகளையும் கண்டுகாட்டுவதாகச் சு.அமிர்தலிங்கத்தின் கட்டுரை அமைந்துள்ளது. சங்க இலக்கிய ஆராய்ச்சி வரலாறு (2016) என்ற ப.திருஞானசம்பந்தத்தின் கட்டுரை கால ஆராய்ச்சி, பண்பாடு/ தமிழர் - அயலவர், திணை - துறை ஆராய்ச்சி, யாப்பியல் ஆராய்ச்சி, மொழியியல், மொழிபெயர்ப்பியல் ஆராய்ச்சி, தமிழ் இயக்கங்களின் ஆராய்ச்சி, இதழியல் ஆராய்ச்சி என இதுவரை நிகழ்த்தப்பட்டுள்ள ஆய்வுகளைப் பகுத்துப் பேசுகின்றது. பேராசிரியர் வீ.அரசு அவர்களின் கட்டுரை விரிந்த நிலையில் 1940கள் தொடங்கி இன்றுவரை சங்க இலக்கியம் எப்படியெல்லாம் உள்வாங்கப்பட்டது என்பதையும் அதன் மறுஉருவாக்க அரசியலையும் பேசுகின்றது. இதுகுறித்துத் தனி ஆய்வு நூலொன்று எழுதுவதற்குரிய அனைத்துத் தரவுகளையும் கொண்டதாக இக்கட்டுரை உள்ளது.

சங்க இலக்கியம் காலம், மொழி, பண்பாடு, அமைப்பு, அரசியல், நிலவமைப்பு, அயலவர், இயக்கங்கள், கோட்பாடுகள் எனப் பரந்துபட்ட ஆய்வுப்பரப்பில் எவ்வாறெல்லாம் ஊடாடியுள்ளது என்பதனை 16 குறிப்புகளின் வழி விளக்கிச் செல்கின்றது இக்கட்டுரை. வீ.அரசு அவர்கள் கையளித்துள்ள அவர்தம் கட்டுரையின் அமைப்பினை அடிப்படையாகக் கொண்டு சங்க இலக்கியத்தின் வடிவம் சார் ஆய்வுகளை இக்கட்டுரை கவனப்படுத்த முயல்கின்றது.

சங்கப்பனுவல்களின் வடிவம் சார்ந்த ஆய்வுகளைக் கீழ்க்கண்ட நிலைகளில் தொகுக்க முடியும்.

-              குறிப்பிட்டதொரு தொகைப் பனுவலின் வடிவத்தினை முன்னிறுத்தி வெளியான கட்டுரைப்பதிவுகள் அல்லது பொதுநிலையிலான பதிவுகள்

-              தமிழ் இலக்கிய மரபினைப் பற்றிய ஆய்வுகளுக்குள் பகுதியாகச் சங்க இலக்கியத்தின் வடிவத்தினை முன்னிறுத்தும் நிலையிலானவை.

-              சங்க இலக்கிய வடிவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட முனைவர் பட்ட ஆய்வேடுகளும் அவற்றின் நூலாக்கங்களும்

-              பிற மொழி அறிஞர்கள் சங்கப் பனுவல்களின் வடிவம் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளும் கருத்து முடிவுகளும்

கட்டுரைப் பதிவுகளைப் பொறுத்தவரை இதழ்வழிப்பதிவுகள், கருத்தரங்க ஆய்வுக் கோவைகள் என இரண்டு நிலைகளில் அவற்றைத் தொகுக்க முடியும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை வெளியான சில இதழ்கள் சங்க இலக்கியம் குறித்த காத்திரமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளன. அவற்றுள் வடிவம்சார்ந்த கருத்துகளை முன்னெடுத்த கட்டுரைகளும் அடங்கும்.

தி.வீரபத்திர முதலியார் The Light of Truth or Siddanta Deepika  என்னும் ஆங்கில இதழில் எழுதிய The Kalithokai Meters  என்னும் ஆய்வுக் கட்டுரை சங்க இலக்கிய வடிவம் சார் ஆய்வுகளுக்கு முன்னோடித்தன்மை வாய்ந்ததாக உள்ளது. கலிப்பாவின் அடிப்படை உறுப்புகள் குறித்த அறிமுகத்தை மட்டும் கூறிவிட்டுத் தொடர்ந்து கலிவெண்பாவின் வடிவநேர்த்தி குறித்து ஆராய உள்ளதாகத் தி.வீரபத்திரமுதலியார் குறிப்பிட்டுள்ளார் (1898:131). ஆனால் இக்கட்டுரை முழுமையடைய வில்லை. இக்கட்டுரைக்கு அடுத்த நிலையில் 1960 இல் தமிழ்ப்பொழிலில் மூ.இராகிருட்டினன் ‘புறநானூறும் அதன் இலக்கணமும்’ என்ற பொருண்மையில் கட்டுரை பதிவொன்றைச் செய்துள்ளார். புறநானூற்றில் பயின்று வந்துள்ள ஆசிரியத்தின் வகைகள், அகவற்பாடலின் ஈறு குறித்து இக்கட்டுரையில் விவாதிக்கப்பட்டுள்ளது.

தொல்காப்பிய உரைகாரர்களுக்கு அடுத்த நிலையில் புறநானூற்றில் பயின்றுள்ள வஞ்சிப்பாக்களின் எண்ணிக்கையை வரையறுக்கும் முயற்சியினை கட்டுரையாசிரியர் மேற்கொண்டுள்ளார். இருப்பினும் தெளிவான வரையறையினைக் கூறாமல் சில மாறுபாடுகளைக் கொண்டதாகவும் ஒரே பாடல் மூன்று நிலைகளிலும் ஊடாடுவதாகவும் குறித்திருப்பது இவ்வடிவப் பயில்வின் தெளிவின்மையைக் காட்டுகின்றது. கட்டுரைப் பதிவு என்பதால் விரிவான விளக்கங்கள் ஏதும் தரப்படாமல் பாடல் எண்கள் மட்டும் குறிக்கப்பட்டுள்ளன. பிற்காலத்தில் சங்கப் பாவியலில் வஞ்சியின் வகிபாகம் குறித்து விரிவான தனித்த நிலையிலான ஆய்வுகள் தோன்றின; புறநானூற்றில் பயின்றுவந்துள்ள வஞ்சிப்பாக்களின் எண்ணிக்கை விரிவையும் அடைந்தன. இதழ்வழிப் பதிவுகள் என்ற நிலையில் இவ்விரண்டு கட்டுரைகளும் முறையே கலித்தொகை, புறநானூறு ஆகிய பனுவல்களின் வடிவ நேர்த்தி குறித்தவையாக அமைந்துள்ளன.

மொழிநிறுவனங்கள், கல்விப்புலங்களில் நடைபெறுகின்ற சங்க இலக்கியக் கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் பல ஆய்வுக் கோவைகளாக வெளிவந்துள்ளன. 1998 இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நடத்திய ‘சங்க இலக்கியம் கவிதையியல் நோக்கு சிந்தனைப் பின்புல மதிப்பீடு’ என்ற கருத்தரங்கம் குறிப்பிடத்தக்கது. ஆய்வுப்புலத்தில் காத்திரமாகச் செயல்பட்ட ஆளுமைகளின் கட்டுரைகள் இக்கருத்தரங்கில் இடம்பெற்றன. அவை நூலாக்கமும் பெற்றுள்ளன. அவற்றுள் ஐந்து கட்டுரைகள் சங்க இலக்கிய வடிவத்தினை ஆராய்பவை. ‘பத்துப்பாட்டின் கவிதையியல்’ குறித்து கார்த்திகேசு சிவத்தம்பியும் ‘பாடல் மரபு’ என்ற பொருண்மையில் அ.சண்முகதாஸும் கட்டுரை எழுதியுள்ளனர். தி.வே.கோபாலையர் ‘செய்யுளியலும் யாப்பும்’ சோ.ந.கந்தசாமி ‘யாப்பு’, இரா.இளங்குமரன் ‘யாப்பியல் கொடை’ ஆகிய பொருண்மைகளில் கட்டுரைகள் எழுதியுள்ளனர். கா.சிவத்தம்பி, அ.சண்முகதாஸ் ஆகியோரின் கட்டுரைகள் சங்கப் பாடல்களின் தோற்ற மரபு, வடிவத்திற்கும் பொருண்மைக்குமான தொடர்பு ஆகியவற்றை மையமிட்டு அமைகின்றன. சமூகப் பின்புல விரிவு பாடல்களுக்குள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தினை இவ்விரு கட்டுரைகளும் ஆழமாக விவாதிக்கின்றன. பத்துப்பாட்டு பாடல் மரபு குறித்துக் கா.சிவத்தம்பி,

கவிதையியலில் முக்கிய நெகிழ்வைக் காட்டுகின்ற முல்லைப் பாட்டு, நெடுநல்வாடை நேரிசை ஆசிரியத்திலேயே, மரபு ரீதியான யாப்பிலேயே வருகின்றன என்பது முக்கியமாகும். அதே வேளையில், நுண்ணிய புகழ்ச்சிக்கான வஞ்சியிலேயே பட்டினப்பாலையும் மதுரைக்காஞ்சியும் அமைந்துள்ளன என்பதும் முக்கியமாகும். (1999:82)

பத்துப்பாட்டுப் பாடல்களின் நீட்சி, நாளவை, வேந்தவைகளிற் புலவர்களால் பாடல்கள் எடுத்தோதப்படுகின்ற முறைமையிலும் (art of declamation)) வித்தியாசத்தைக் காட்டுகின்றன எனலாம். ஒரே புலவர் இரண்டு வெவ்வேறு நடைகளில் (Styles) பாடுகின்றனர் என்பதும் முக்கியமான ஓர் உண்மையாகும். (1999:82)

ஆகிய கருத்துகளை முன்வைத்துள்ளார். அவ்வாறே பாடல் மரபு கட்டுரையில் சண்முகதாஸ்,

சங்க காலத்திலே ஆசிரியம் பெற்ற வளர்ச்சியின் உச்ச நிலையைப் பத்துப்பாட்டிலே காண்கிறோம். பல பத்துக்களாக விரிந்த ஆசிரியப்பா பல நூறு அடிகளாக விரிவடைகின்றன. இவ்வாறு இப்பா விரைவடைவதற்குரிய தேவை ஆராயற்பாலது. நான்கு அடிகளிலே கூறப்பட்ட அகத்திணைப் பொருள் 187 அடிகள் கொண்ட நெடுநல்வாடையாக விரிவடைந்துள்ளது. அரசியல் பொருளியல் வளர்ச்சி காரணமாக தலைவனுடைய அரண்மனை வளமும் போர்ப்பறையின் பெருக்கமும் கருப்பொருளை விரித்துரைக்க நெடுநல்வாடைப் புலவனுக்கு வாய்ப்பாக இருந்தது. ஒருசில மலர்களைக் கருப்பொருளாகக் கொண்ட புலவன் எண்பதுக்கும் மேற்பட்ட மலர்களை நிரைப்படுத்திக் குறிஞ்சிப் பாட்டைப் பாடினான். (1999:118)

என்று பதிவு செய்துள்ளார். சமூகவியல் வளர்ச்சியானது பாடுபொருளில் மாற்றத்தையும் விரிவையும் கொண்டு வந்தது போலவே கவிதை வடிவிலும் வளர்ச்சியினைக் கொண்டு வந்துள்ளது என்பதனை,

சங்க இலக்கிய பா மரபு வளர்ச்சி பரிபாட்டிலே உச்சமடைகின்றது. எளிமையான இயல்பு நிலையுடைய ஆசிரியப்பாவுடன் தொடங்கிய மரபு பொருள் விரிவுக்கு ஏற்றபடி தனக்கு முன்னெழுந்த பல்வேறு வகையான பாவடிவங்களின் திரட்டாகப் பரிபாட்டு அமைகிறது. (1999:126)

என்ற கருத்தின் மூலம் உணர்த்துகிறார். இவ்விரு கட்டுரைகளின் அடிப்படையிலும் சங்கப் பாவியலை மேலும் நுணுகி ஆராய வேண்டிய தேவையுள்ளது. சமூகம், புவியியல், அரசியல் மாற்றங்கள் இலக்கிய வடிவத்திலும் மாற்றத்தை உருவாக்குகின்றன. அப்புதிய வடிவங்கள் தனக்கான வரையறைகளைத் தேடி நிற்கின்றன. சங்க பாடல்களில் குறிப்பாகப் பத்துப்பாட்டு அதற்கான களத்தை விரிவாகவே கொண்டுள்ளது. இத்தொகுப்பில் குறிப்பிடப்பட்ட பிற மூன்று கட்டுரைகளும் தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டு சங்கப் பாவியலைக் கட்டமைக்கின்றன.

தொல்காப்பியச் செய்யுளியல் குறிப்பிடும் உறுப்புகளோடு சங்கப் பாடல்களைப் பொறுத்திக்காட்டுவதாகத் தி.வே.கோபாலையரின் ‘செய்யுளியலும் யாப்பும்’ கட்டுரை அமைகிறது. சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆசிரிய உரிச்சீர்கள், அடி, தொடை நலன்கள் ஆகியவற்றிற்குச் சங்க இலக்கிய சான்றுகளைக் காட்டி விளக்கிச் செல்கின்றார். அவ்வாறே சோ.ந.கந்தசாமி அவர்களும் சங்க இலக்கியப் பாவடிவங்களை நேரிசை ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா என வகைபடுத்தி அடையாளங் காட்டியுள்ளார். இரா.இளங்குமரனார் தனது ‘யாப்பியல் கொடை’ கட்டுரையில் சங்கப்பாவியல் எவ்வாறு பிற்கால இலக்கிய வடிவ வளர்ச்சிக்கும் இலக்கண ஆக்கங்களுக்கும் அடிப்படையாக அமைந்தது என்பதைச் சில சான்றுகளோடு விளக்கிச் செல்கின்றார். இவ்வரிசையில் முத்துக்கோவை என்ற ஆய்வுக்கோவையில் தமிழண்ணல் எழுதிய ‘சங்க இலக்கியம் பாட்டும் பொருளும் யாப்பும்’ (1981) என்ற கட்டுரையும் குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் வெளியிட்ட பத்தாவது கருத்தரங்க ஆய்வுக்கோவையில் (1978) அ.பிச்சை எழுதிய ‘சங்க கால ஆசிரியப்பா வகைகள்’ கட்டுரை ஆசிரியப்பாவின் வகைகள் சிலவற்றைக் குறித்துள்ளது. மேலும் பதினெட்டாவது ஆய்வுக்கோவையில் அவர் எழுதிய ‘புறநானூற்று வஞ்சிப்பாக்கள் ஒரு மதிப்பீடு’ (1986) என்ற கட்டுரையும் வெளிவந்துள்ளது. பத்தாவது ஆய்வுக்கோவையில் இடம்பெற்றுள்ள தி. செல்வம் எழுதிய ‘நற்றிணையில் எதுகையும் மோனையும்’ என்ற கட்டுரையும் நற்றிணையின் தொடைநலன்கள் சிலவற்றைக் கண்டு காட்டியுள்ளது.

பொதுவாகத் தமிழ்மொழி, இலக்கியங்கள் குறித்த ஆய்வு நூல்களின் ஒரு பகுதியாகச் சங்கப் பாவியல் பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன.1972இல் இரா.சாரங்கபாணி எழுதிய ‘பரிபாடல் திறன்’ என்ற நூல் இந்நிலையில் குறிப்பிடத்தக்கது. பரிபாடலை முழுவதுமாக ஆராய்கின்ற இந்நூலானது பரிபாடலின் யாப்பு குறித்தும் பேசுகின்றது. பரிபாடலின் வடிவம் பற்றிய தொல்காப்பிய கருத்துகள், பொருண்மை மாற்றம், உரையாசிரியர்களின் கருத்துகள் ஆகிய செய்திகள் பேசப்பட்டுள்ளன. பரிபாடலின் வடிவம் குறித்து இக்கட்டுரை தொகுத்துள்ள கருத்துகள் வருமாறு,

-              பரிபாடல் என்பது இசைப்பாட்டு. அது இசைக்கருவிகளினுதவியால் பாடுதற்கேற்றது.

-              பல்வேறு வகைப்பட்ட பாக்களையும் தழுவி நிற்கும் நெடும்பாடலாகும்.

-              அகத்திணை பாடுதற்கே உரியதாக இருந்த அப்பாடல் பிற்காலத்துப் புறத்திணையையும் ஏற்றுக் கொண்டது; சமயநெறியும் அதற்கு விலக்கன்று.

-              பாண்டிநாட்டில் மட்டும் இப்பாடல் வழக்காற்றில் இருந்தது. பாண்டியர்கள் பரிபாடற் புலவர்களை இனிது புரந்தனர்.(1972:36)

பரிபாடல் குறித்த பிற்கால ஆய்வுகளனைத்திற்கும் இக்கருத்துகளே அடிப்படைகளாக அமைந்திருக்கின்றன. 1985இல் வெளியான மு.வரதராசனாரின் ‘காலந்தோறும் தமிழ்’ என்ற நூலில் இடம்பெற்ற ‘சங்க இலக்கிய யாப்பு’ கட்டுரை கவனத்திற்குரியது. இக்கட்டுரை சங்கப் பாவியலுள் கலி, பரிபாட்டு, அகவலோசை, தொடைநலன்கள் ஆகியவை பயின்றுள்ள முறை குறித்த சில குறிப்புகளைத் தருகின்றது. நாட்டார் பாடல்களின் சாயல் சங்கப் பாடல்களில் இருக்கின்ற முறைமையையும் எடுத்துரைக்கின்றது. 1989 இல் வெளிவந்த சோ.ந.கந்தசாமியின் தமிழ் யாப்பியல் தோற்றமும் வளர்ச்சியும் என்ற நூலின் முதல்பாகத்தின் முதல் பகுதி சங்க இலக்கியப் பாவியலை விரிந்த நிலையில் ஆராய்ந்துள்ளது. தொல்காப்பியச் செய்யுள் உறுப்புகளையும் அவற்றின் பொருத்தப் பாடுகளையும் விளக்கியுள்ளது. தனித்தனியாகத் தொகை நூல்கள் ஒவ்வொன்றிலும் இடம்பெற்றிருக்கும் ஆசிரியப்பா வகைகளை நிரல்படுத்தித் தருகின்றது. மேலும் புறநானூறு, பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு ஆகிய தொகுதிகளில் பயின்றிருக்கும் வஞ்சியடிகள், வஞ்சிப்பா குறித்தும் விரிவாக விவாதிக்கின்றது. சங்க இலக்கியத்தின் வடிவம் சார் ஆய்வுகளுள் மொழியியல் அறிஞர்களின் பங்களிப்பும் கவனத்திற்குரியன. செ.வை.சண்முகத்தின் கவிதைக் கட்டமைப்பு(2003), யாப்பும் நோக்கும் (தொல்காப்பியரின் இலக்கியக் கோட்பாடுகள்) (2006) ஆகிய நூல்கள் பகுதிநிலையில் சங்கப் பாவியலை மொழியியல் அணுகுமுறையில் ஆராய்ந்துள்ளன. கவிதைக் கட்டமைப்பில் இடம்பெற்றுள்ள ‘ஔவையாரின் கவிதை மொழி’ கட்டுரை மிகவும் குறிப்பிடத்தக்கது. தொல்காப்பிய உரைகாரர்கள், சங்க இலக்கிய பதிப்பாசிரியர்கள், ஆய்வாளர்கள் பலரால் ஆய்வு செய்யப்பட்டுள்ள புறநானூற்றின் ஔவையார் பாடிய ‘சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே’ என்று தொடங்கும் பாடலின் வடிவமைப்பினை மொழியியல் அடிப்படையில் அடியும் வாக்கியமுமாகப் பகுத்தாராய்ந்துள்ளார். அப்பகுதி வருமாறு,

235ஆம் புறப்பாடலைச் சாமிநாதையர் 20 அடியாகவும் யாப்பருங்கல விருத்தியார் 21 அடியாகவும் யாப்பருங்கலக்காரிகை உரையாசிரியர் 26 அடியாகவும் கொண்டுள்ளார்... இங்குச் சாமிநாதையர் 20 அடி பாடலாகக் கொண்ட வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு அதன் அமைப்பு ஒழுங்கை அறிவதற்கு முயலுவோம்...

சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே

பெரியகட் பெறினே

யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே

சிறுசோற்றானு நனிபல கலத்தன் மன்னே

பெருஞ் சோற்றானு நனிபல கலத்தன் மன்னே (5)

என்பொடு துடிபடு வழியெல்லா மெமக்கீயு மன்னே

அம்பொடு வேனுழை வழியெல்லாந் தானிற்கு மன்னே

நரந்த நாறு தன்கையாற்

புலவு நாறு மென்றலை தைவரு மன்னே

அருந்தலை யிரும்பாண ரகன்மண்டைத் துளையுரீஇ (10)

இரப்போர் கையுளும் போகி

புரப்போர் புன்கண் பாவை சோர

அஞ்சொனுண் டேர்ச்சிப் புலவர் நாவிற்

சென்றுவீழ்ந் தன்றவன்

அருநிறத் தியங்கிய வேலே (15)

ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ

இனிப் பாடுநரு மில்லைப் பாடுநர்க்கென் றீகுநரு                                                                              யில்லை

பனித்துறை பகன்றை நறைக்கொண் மாமலர்

சூடாது வைகியாங்கு பிறாக்கொன்

றீயாது வீயு முயிர்த்தவப் பலவே (20)

பாட்டின் அடியின் பண்பை (சீர் எண்ணிக்கை) அறிந்து கொள்ள முதலில் பாட்டின் தொடரமைப்பையும் சீரமைப்பையும் பொருளையும் தெரிந்து கொள்வது அவசியம். இதில் 11 வாக்கியங்கள் (எளிய வாக்கியங்களும், கலவை வாக்கியங்களும், கூட்டு வாக்கியங்களும்)உள்ளன. எனவே அடிக்கும் வாக்கியத்துக்கும் உள்ள தொடர்பைப் பார்ப்போம்.

முதல் கலவை வாக்கியம் -           1அடி

2வது கலவை வா.   -              2 அடி (2-3 அடிகள்)

3-6 வது எளிய வா.   -              ஒவ்வொரு அடி (4-7)

7வது எளிய வா.       -              2அடி (8-9வது)

8வது கலவை வா.   -              6 அடி

                                                            (10-15) 3வி.எ.தொ

                                                            - 3அடி, ஏ.வே.தொ

9வது எளிய வா.       -              1(16)

10வது கூட்டுவா.      -              1(17)2 வாக்.

11வது கலவைவா.  -              3(18-20)செ.பொ.தொ

                                                            -1,விஎதொ (42-45)

யாப்பு அடிப்படையில் அடிக்கும் சீருக்கும் மொழியியல் அடிப்படையில் வாக்கியத்துக்கும் உள்ள தொடர்பினை இனங்காட்டுவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது. இப்பின்புலத்தில் இதுகுறித்து மேலும் ஆராய்வதற்கான தேவையுள்ளது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7410
Date:
Permalink  
 

தமிழ் யாப்பியல் குறித்த ஆய்வுகளுள் முனைவர் பட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் கணிசமான இடத்தினைப் பெறுகின்றன. தமிழ் யாப்பியல் குறித்து முதன்முதல் மேற்கொள்ளப்பட்ட முனைவர் பட்ட ஆய்வு அ.சிதம்பரநாத செட்டியாரின் ‘Advanced Studies in Tamil Prosody’ (1943) இவ்வாய்வு தமிழில் ‘தமிழ் யாப்பியல் உயராய்வு’ என்று மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. இந்நூலின் ஒருபகுதியாகச் சங்க இலக்கிய வடிவம் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

சங்க மரபு குறித்து மேற்கொள்ளப்பட்ட தமிழண்ணலின் ஆய்வேடு Tradition and Talent in Cankam Poetry  (1969) என்பதாகும். இவ்வாய்வேடு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு 2009இல் நூலாக்கம் பெற்றுள்ளது. இவ்வாய்வேட்டின் ஒரு பகுதி ‘தொல்காப்பியமும் சங்கச் செய்யுள் மரபுகளும்’ என்பது. இப்பகுதியில் தொல்காப்பிய செய்யுள் வடிவ மரபுகளோடு சங்கச் செய்யுள் வடிவ மரபுகளை ஒப்பிட்டு ஆராயப்பட்டுள்ளது. அன்னிதாமசின் Tamil prosody through the ages  (1974) என்னும் பொருண்மையிலான முனைவர் பட்ட ஆய்வேடும் பகுதி நிலையில் சங்கயாப்பியலைப் பேசுகின்றது. இவ்வாய்வேடு நூலாக்கம் பெறவில்லை.

1980இல் சமர்ப்பிக்கப்பட்ட அ.பிச்சை அவர்களின் ‘சங்க இலக்கிய யாப்பியல்’ என்ற முனைவர் பட்ட ஆய்வேடானது முதன்முதல் சங்க இலக்கிய வடிவத்தினை முழுமைநிலையில் ஆராய்ந்துள்ளது. இவ்வாய்வேடு 2011இல் நூலாக்கம் பெற்றது. இவ்வாய்வு யாப்பியல், சங்கப் பாவடிவங்களின் தோற்றம், விளக்கவியல் நோக்கில் சங்கயாப்பு, வரலாற்று நோக்கில் சங்க யாப்பு, ஒப்பியல் நோக்கில் சங்க யாப்பு என ஆய்வியல் அணுகுமுறைகளின் அடிப்படையில் சங்க இலக்கியப் பாவியலைப் பகுத்து ஆராய்ந்துள்ளது. அகவலே தொல் தமிழ்யாப்பு என்ற கருத்தினை இவ்வாய்வு ஆழமாக முன்னெடுக்கின்றது.

சமுதாயப் பின்னணி - பா ஆக்கமுறை - பாடுபொருள் ஆகியவற்றின் அடிப்படையில் பாவடிவங்களை நோக்குவோமானால் முதலில் ஆசிரியமும் இரண்டாவதாக வஞ்சியும் மூன்றாவதாகக் கலிப்பாவும் நான்காவதாக வெண்பாவும் தோன்றியிருக்க வேண்டும். சமய உணர்வும், குழுத்தலைவனை வாழ்த்தும் தன்மையும் கொண்ட இனக்குழுச் சமுதாயத்தில் அகவல்தான் தோன்றியிருக்கக்கூடும். இதுவே பா ஆக்கத்தில் எளிமையானது. எந்தவிதமான அதிகமான கட்டுப்பாடுகள் இல்லாத பா அகவற்பாவாகும். (2011:66)

மேலும் அகவலே தொல் திராவிட யாப்பாக இருப்பதற்கும் வாய்ப்புள்ளது (2011:67) என்கிறார். இக்கருத்து மேலாய்விற்குரியது. 1989 இல் வெளியான பா.வீரப்பனின் ‘சங்க இலக்கிய நடை’ என்னும் முனைவர் பட்ட ஆய்வேட்டின் நூலாக்கமும் குறிப்பிடத்தக்க முயற்சியாக உள்ளது. இந்நூலில் இவர் மேலைநாட்டுப் பின்புலத்தில் வடமொழி நடையியல் கருத்துகளைக் கவனத்தில் கொண்டு தொல்காப்பியர் குறிப்பிடும் உறுப்புகளுடன் பொருத்தி சங்கப் பாவியலின் நடையியலை மூன்றாகக் கட்டமைக்கிறார். அவற்றுள் முதலில் அமைவது ஒலிக்கூறுகள்: யாப்பும் ஒலியும், தொடைக்கூறுகள்: ஓசை, வண்ணம், ஒலிக்குறிப்புச் செய்திகள் என்பதாகும். பத்துப்பாட்டின் தொடைக்கூறுகளை முழுமை நிலையில் ஆராய்ந்துள்ளார். மேலும் பத்துப்பாட்டு, தோல் என்ற தொல்காப்பிய வனப்போடு பொருந்துவதையும் விவரிப்பு நடையில் (Descriptive Style) அமைந்துள்ளதையும் விவாதிக்கிறார்.(1989:42)

2014ஆம் ஆண்டு வெளியான கன்னியம் அ.சதீஷின் ‘தமிழ் யாப்பு மரபுகள் புறநானூற்று யாப்பியல்’என்ற அவர்தம் முனைவர் பட்ட ஆய்வேட்டின் நூல் வடிவம், சங்க இலக்கிய வடிவம் குறித்த ஆய்வுகளில் புதிய வகைமாதிரியை உருவாக்குவதாக அமைந்துள்ளது. முதலில் தமிழ் யாப்பியலின் பண்டைய, பிந்தைய மரபுகளின் வளர்ச்சிகளை ஆராய்ந்து விட்டுப் புறநானூற்று யாப்பியல் பண்டைய இலக்கியத்திற்குச் சான்றாகவும் பிந்தைய வளர்ச்சிக்கான மூலக்கூறாகவும் விளங்குவதனை இவ்வாய்வு எடுத்துக்காட்டுகின்றது. புறநானூற்றுப் பாவியல்: ஆசிரியம், புறநானூற்றுப் பாவியல்: வஞ்சி ஆகிய பதிவுகள் இதுவரை புறநானூற்றுப் பாடல் வடிவங்கள் குறித்து அறிஞர்கள் கூறியுள்ள கருத்துகளையெல்லாம் தொகுத்து அவற்றுள் பொருந்துவனவற்றையும் பொருந்தாதனவற்றையும் சான்றாதாரங்களோடு நிறுவுகின்றது. புறநானூற்றுத் தொடைநலன்கள்: எதுகை, புறநானூற்றுத் தொடைநலன்கள்: மோனை ஆகிய இரண்டு இயல்களும் தொடை இலக்கண வளர்ச்சியில் புறநானூற்றின் இடம் குறித்து விவாதிக்கின்றன. இவ்வாய்வானது இதே அணுகுமுறையில் பிற தொகுப்புப் பனுவல்களை ஆராய்வதற்கு வழிவகை செய்துள்ளது.

புறநானூற்று யாப்பியலைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு வெளியான மு.கஸ்தூரியின் ‘பத்துப்பாட்டு யாப்பியல்’ என்ற அவருடைய முனைவர் பட்ட ஆய்வேட்டின் நூலாக்கமும் குறிப்பிடத்தக்கதொன்று. புறநானூற்று யாப்பியல் ஆய்வினைப் பின்பற்றி பத்துப்பாட்டின் யாப்பியலை மு.கஸ்தூரி ஆய்வுக்குட்படுத்தியுள்ளார். ஆய்வின் தொடக்கம் பண்டைய மரபுகள் என்றில்லாமல் தொல்காப்பிய செய்யுளியலை மையப்படுத்தி ‘தொல்காப்பியச் செய்யுளியலும் பிந்தைய யாப்பு மரபுகளும்’ என்றவாறு அமைக்கப்பட்டுள்ளது. பத்துப்பாட்டின் அசை, சீர், தளை, அடி, தொடை, பா, தூக்கு என அனைத்துக் கூறுகளும் தொல்காப்பிய விதிகளுக்கிணங்க அமைவதனைச் சான்றுகளோடு நிறுவுகின்றார்.

சீர்பிரித்தல் முறையில் பொருளோடு பிரிக்கின்ற முறையே அனைத்து இலக்கணிகளாலும் கைகொள்ளப்பட்டு வந்துள்ளதனை இலக்கண உரைகளின் வழி எடுத்துக்காட்டியுள்ளார். பிற்காலத்தில் பெருவழக்காகக் கடைபிடிக்கப்படும் வகையுளி பிரிப்பினை இலக்கணங்கள் சுட்டவில்லை என்பதனை ஆய்வாளர் தனது ஆய்வு முடிவாக முன்வைத்துள்ளார். மூன்று வகை அசைபிரிப்பு முறைகளை இந்நிலையில் இவர் கைகொள்கிறார். ஒன்று தொல்காப்பியர் வகுத்த நேர், நிரை, நேர்பு, நிரைபு அசைபிரிப்பு, இரண்டாவது காக்கைபாடினிய மரபுவழி வந்த நேர், நிரை அசை பிரிப்பு, மூன்றாவது தற்போது நடைமுறையிலுள்ள வகையுளி அசை பிரிப்பு. இவற்றுள் தொல்காப்பியம் சுட்டியுள்ள அசைவகைபிரிப்பு முறையே பத்துப்பாட்டில் பொருந்துகின்றது என்கிறார் ஆய்வாளர். பொருநராற்றுப்படையில் வஞ்சியடிகளில் பயின்றுள்ள சீர் குறித்து இவர் முன்வைத்துள்ள கருத்துகள் மேற்கொண்டு ஆராயத்தக்கதாக உள்ளன. அக்கருத்துகள் வருமாறு,

பொருநராற்றுப்படையின் வஞ்சியடிகளில் இடம்பெற்றுள்ள நாலசைச்சீரைத் தொல்காப்பிய நெறிப்படி அலகிடுகையில் உகர ஈற்றில் அமைந்த நேர்பு, நிரைபிலான ஆசிரியவுரிச்சீர் வகையிலுள் அடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொல்காப்பிய நெறிப்படி அலகிடும்போதும் நாலசைச்சீராகவே அமையும் அவ்வடிகள் வருமாறு,

நனைஞாழலொடு மரங்குழீஇய (பொருநர்.197)...

இவ்வடிகளில்இடம்பெற்றுள்ள நனைஞாழலொடு (நனை+ஞா+ழ+லொடு)...தொல்காப்பிய நெறியில் அலகிடும்போது நாலசைச்சீராக அமைந்துள்ளது. தொல்காப்பியர் நாலசைச்சீர் பற்றிக் குறிப்பிடாத நிலையில் பிற்கால மரபில் நாலசைச்சீர் பயில்வதற்கு அடிப்படை சான்றாகப் பொருநராற்றுப்படையின் வஞ்சியடிகள் விளங்குவதாகக் குறிப்பிடலாம். வஞ்சியடி முச்சீரானும் வரும் என்று தொல்காப்பியம் குறிப்பிட்டுள்ளதால் இவ்வடிகளை முச்சீராடியாகக் கொள்வதன் மூலம் நாலசைச்சீர் இடம்பெறுவதைத் தவிர்க்கலாம். எனவே இவ்வடிகளை

நனைஞா ழலொடுமரங் குழீஇய (பொருநர்.197)(2016:230-231)

...

பத்துப்பாட்டின் அனைத்துச் சீர்களிலும் பொருளோடு அசைபிரிப்பு முறை பொருந்துகின்ற போது நாலசைச்சீரினைத் தவிர்ப்பதற்காக இவ்விடத்தில் மட்டும் வகையுளி அசைபிரிப்பு முறையினை பொருத்த வேண்டியதன் அவசியம் என்ன? ‘நனைஞாழலொடு’ என்கிற சீரினை ஆய்வாளர் குறித்துள்ள பிந்தைய மரபின்படி அலகிட்டால் (நனை+ஞா+ழ+லொடு) புளிமாந்தண்ணிழல் என்ற வாய்பாட்டில் நான்கசைச் சீராகவே அமைகின்றது. நச்சினார்க்கினியர் தனது உரைப்பகுதியில் இச்சீரினை ‘நனைஞாழ லொடு மரங்குழீஇய’ என்று அசைபிரித்துள்ளமையும் இங்குக் கவனத்திற்குரியது. ஒடு என்பதனை வேற்றுமை உருபாகக் கொண்டு ‘நனைஞாழ(ல்) (ஒ)லொடுமரங் குழீஇய’ என்று அசைபிரிக்கும்போது பொருளும் சிதையாமல் சீர்பிரிக்க முடிகின்றது. எனவே ஆய்வாளர் பயன்படுத்திய வகையுளிப் பிரிப்பினைக் கொள்ளாமல் சீர்பிரித்தல் இங்குச் சாத்தியமாகின்றது. எவ்வாறிருப்பினும் தொல்காப்பிய விதிகளை உரைகாரர்கள் போன்று வலிந்து பொருத்தாமல் பனுவலை அதன் இயல்பிலேயே இயங்கவிடுவதும் அவசியம். எனவே இவ்வடியினை இரண்டு சீர்களாலான வஞ்சியடியாகவும் நனைஞாழலொடு என்பதனை நான்கசைச் சீராகவும் கொள்வதே சிறப்பு.

சங்க இலக்கியம் குறித்த பிறமொழி அறிஞர்களின் ஆய்வுகள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை. 1985இல் வெளியான ஜான் மார் எழுதிய Eight Anthologies, சங்கத்தொகையாக்கம் குறித்து விரிவாகப் பதிவு செய்துள்ளது. Prosody in the Eight Anthologies  என்ற பகுதியில் எட்டுத் தொகை பனுவல்களின் வடிவத்தைச் செய்யுள் உறுப்புகளின் அடிப்படையிலும் பாக்களின் அடிப்படையிலும் ஆராய்ந்துள்ளது. அகவற்பாவின் வடிவநேர்த்தி குறித்து ஜான்மார் முன்வைக்கும் கருத்து தமிழ் யாப்பியலில் குறிப்பிடத்தக்கதாக அமைகின்றது. அக்கருத்து வருமாறு,

In Aciriyam the metre of most of the anthology - poems, it will be found that in most poems there are three feet only. This applies whatever the length of the poem, and it may be suggested that this shortened line gave, in the course of oral recitation, the sign of the approaching end of the poem (1985:446)

எத்தனை அடி பாவாக இருப்பினும் ஈற்றயலடி முச்சீராக அமைவது ஆசிரியப்பாவின் சிறப்பாக இருக்கின்றது. வாய்மொழி மரபின் தாக்கத்தில் பாடல் முடிவடைவதை உணர்த்தவதற்கு இந்த முச்சீரடிகள் உதவுகின்றன என அகவற்பாவின் வடிவ நேர்த்தியினை சிறப்பாக இனங்கண்டுள்ளார்.

1973 இல் கமில் ஸ்வலெபில் எழுதிய The Smile of Murugan on Tamil Literature of South India  நூல் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த நூலாகும். இந்நூலின் ஐந்தாவது இயல் Analyzing Classical Poetry  சங்கப் பாவியல் குறித்துப் பேசுகின்றது. சத்தினாதரின் குறுந்தொகை 119ஆவது பாடலை எடுத்துக்காட்டி அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு பாவடிவம், தொடை நலன்களின் பயில்வு, ஒலிப்பு முறை குறித்துக் கமில்ஸ்வலெபில் விவாதித்துள்ள கருத்துகள் சங்க இலக்கியத்தின் மீது அவர் கொண்டிருந்த ஆழமான வாசிப்பினை உணர்த்துகின்றது. பாடலின் தமிழ் வடிவமும் கமில்ஸ்வலெபிலின் ஆய்வுப்பகுதியும் வருமாறு,

சிறுவெள் ளரவி னவ்வரிக் குருளை

கான யானை யணங்கி யாஅங்

கிளையள் முளைவா ளெயிற்றள்

வளையடைக் கையளெம் மணங்கி யோளே

In Literal translation, this means:

little - white - snake of lovely - striped young body

jungle elephant troubling like

the young girl sprouts brightness toothed female

bangle(s) possessing hand(s) female

In A.K.Ramanujan‚s charming translation:

As a little white snake

with lovely stripes on its young body

troubles the jungle elephant

this slip of a girl

her teeth like sprouts of new rice

her wrists stacked with bangles

troubles me (The Interior Landscape, 1967)

The Prosodic pattern is as follows:

= - / = - / - = / = -

- - / - - / = - / - -

= - / = - / = -

= = / - =/ = - / - -

we observe in this stanza four lines of four reet, the penultimate line has three feet; the metre contains only feet of two metical units (acai) each, of the pattern = -, - =, - - and = =; these feet are called ir acai cir “two - unit - feet”. The metre is therefore akaval or aciriyam.

as for the totai there is e.g.a etukai or consonance between the 3rd and 4th line (i/l/aiyal-/va/l/ai) and there is e.g. a monai or alliteration in the 2nd line: /y/anai /y/ ananki /y/aan(ku).

now for the phonaesthetic analysis: almost all consonants belong to the nasal (so called mellinam) or liquid (itaiyinam) series; the most favoured is the retroflex liquid l which occurs 8 times the occlusive are rare: c occurs only once, there is no t, k as a tense stop occurs only 3 times. This consonantal structure of the stanza results in a soft, mellifluous, liquid effect, like the murmur of a mountain stream.(1973:67)

மெல்லின எழுத்துகளாலும் இடையின எழுத்துகளாலும் ஆன இப்பாடல் மலைச்சாரலின் இனிமையைத் தருவதாகக் கமில்ஸ்வலெபில் குறித்திருப்பது சங்க இலக்கியத்தின் மீதான அவர்தம் ஈடுபாட்டினை உணர்த்துகின்றது. இவருடைய Classical Tamil Prosody: An Introduction  (1989) நூலானது தனித்த நிலையில் சங்கப் பாவியலை அறிமுகப்படுத்துவதாக அமைந்துள்ளது. கட்டுரைப் பதிவுகள் என்று பார்க்கும்போது ஜார்ஜ் எல் ஹார்டின் The Poems of Ancient Tamil: Their Milieu and Sanskrit Counterparts  (1975) நூலின் ஒரு பகுதியாக சங்கப் பாவியல் குறித்த கருத்துகளும் உள்ளன. சங்க இலக்கிய வடிவங்களைச் சமசுகிருத மரபுகளோடு ஒப்பிடுவதாக இவ்வாய்வு அமைந்துள்ளது. ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள இவ்வாய்வுகள் சங்க இலக்கியத்தின் வடிவ நேர்த்தியை பிறமொழி ஆய்வாளர்களுக்குக் கொண்டு சேர்ப்பனவாக இருக்கின்றன. 1995இல் Susumu Ohno â¿Fò Prosody of Sangam and Japanese, Tangain 5-7-5-7-7- syllable meter  என்ற கட்டுரை சங்க யாப்பிற்கும் ஜப்பானிய யாப்பிற்குமான ஒற்றுமைகளை விளக்குவதாக அமைகின்றது.

மேற்குறித்த ஆய்வுகளைத் தொகுத்து நோக்கும்போது சங்க இலக்கிய வடிவம்சார் ஆய்வுகள், வரலாற்று அடிப்படையிலானவை; குறிப்பிட்ட பனுவல் சார்ந்தவை; குறிப்பிட்ட பாவடிவங்களின் பயில்தன்மை சார்ந்தவை;தொடை நலன்களை விவரிப்பவை; ஒப்பீட்டு நோக்கில் சங்கப் பாவியலை பிற மொழி யாப்பியலோடு ஆராய்பவை என்ற நிலையில் அமைகின்றன. ய.மணிகண்டன் அவர்களின் கருத்தோடு இக்கட்டுரையினை நிறைவு செய்யலாம்.

யாப்பாய்வுக் களத்தில் முதன்மையான புள்ளிகளில் தொடர்ந்து ஆய்வுகள் நிகழ்த்தப்பெற்று வந்துள்ளன. எனினும் இசைப்புலமை, மொழியியற் புலமை, பிறமொழிப்புலமை அடிப்படையில் ஆய்வுகள் மேம்பட வேண்டிய நிலையில் யாப்பியற் களம் காட்சிதருகின்றது. இவையன்றியும் தமிழ் யாப்பியல் மேலும் பல முனைகளில் ஆழமான ஆய்வுகள் நிகழ்த்தத்தகு களமாகவே தொடர்ந்து விளங்குகின்றது. (2007:456)

சங்க இலக்கியம் - வடிவம் தொடர்பான ஆய்வுகள், ஆய்வுகளை ஒருபகுதியாகக் கொண்ட நூல்கள், கட்டுரைகள் அடைவு நூல்கள்

1972      இரா.சாரங்கபாணி, பரிபாடல் திறன், மணிவாசகர் நூலகம், சிதம்பரம்.

1973 The Smile of Murugan on Tamil Literature of South India, Leiden, E.J. Brill.

1974 Annie Mrithulakumari Thomas, Tamil prosody through the ages, Ph.D.Dissertation, Kerala University, Trivandrum  (ஆய்வேடு).

1989      சோ.ந.கந்தசாமி, தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும், முதற்பாகம் முதற்பகுதி, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

1989      KamilV.Zvelebil, Classical Tamil Prosody: An Introduction, New era Publication,Madras.

1989      பா.வீரப்பன், சங்க இலக்கிய நடை, பூவழகி பதிப்பகம், சென்னை.

2003      செ.வை.சண்முகம், கவிதைக்கட்டமைப்பு, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.

2006      செ.வை.சண்முகம், யாப்பும் நோக்கும் (தொல்காப்பியரின் இலக்கியக் கோட்பாடுகள்), மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.

2007      கார்த்திகேசு சிவத்தம்பி, தமிழின் கவிதையியல், குமரன்புத்தக இல்லம், கொழும்பு, சென்னை.

2009      அ.சிதம்பரநாதனார், தமிழ் யாப்பியல் உயராய்வு, இராம.குருநாதன் (மொ.ஆ.),விழிகள் பதிப்பகம், சென்னை.

2009      தமிழண்ணல், சங்க மரபு, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை

2009      கார்த்திகேசு சிவத்தம்பி, சங்க இலக்கியக் கவிதையும் கருத்தாக்கமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,சென்னை.

2011      அ.பிச்சை, சங்க இலக்கிய யாப்பியல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

2012      கார்த்திகேசு சிவத்தம்பி, தொல்காப்பியமும் கவிதையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

2014      அ.சதீஷ், தமிழ் யாப்பியல் மரபுகள் புறநானூற்று யாப்பியல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

2016 மு.கஸ்தூரி, பத்துப்பாட்டு யாப்பியல், சந்தியா பதிப்பகம், சென்னை.

கட்டுரைகள்

1898      T.Virabadra Mudaliar, The Kalittokai Metres, The Light of Truth or Siddhanta Deepika, Vol.II.No.6, p.130-131

1960      மூ.இராமகிருட்டினன், புறநானூறும் அதன் இலக்கணமும், தமிழ்ப்பொழில், துணர் 36, மலர் 8.

1974      மா. இளையபெருமாள், புறநானூற்றுப் பாடல்களில் கூன், ஆய்வுத் தொகை, சுப்பிரமணியன், ச.வே., (தொ.ஆ.), கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பழைய மாணவர் மன்ற ஆண்டு வெளியீடு.

1975      George L.Hart III The Poems of Ancient Tamil, University of California Press, London.

1978      தி.செல்வம், நற்றிணையில் எதுகையும் மோனை, பத்தாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, அகத்தியலிங்கம்,ச., ஞானமூர்த்தி,தா.ஏ. (ப-ர்), இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், அண்ணாமலைநகர், சிதம்பரம்.

1981      தமிழண்ணல், சங்க இலக்கியம்: பாட்டு வடிவமும் யாப்பும், முத்துக்கோவை, இளஞ்சேரன், கோவை.(ப.ஆ.), தமிழகப் புலவர் குழு வெளியீடு, திருச்சிராப்பள்ளி.

1983      அ.பிச்சை, சங்க கால ஆசிரியப்பா வகைகள், பதினைந்தாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, அகத்தியலிங்கம்,ச., ஞானமூர்த்தி, தா.ஏ., சண்முகம், செ.வை., சுந்தரம், மெ.(ப-ர்), இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், அண்ணாமலைநகர், சிதம்பரம்.

1985      J.R.Marr, Prosody in the Eight Anthologies, Eight Tamil Anthologies, Institute of Ancient Studies, Chennai

1986      அ.பிச்சை, புறநானூற்று வஞ்சிப்பாக்கள் ஒரு மதிப்பீடு, பதினெட்டாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, அகத்தியலிங்கம்,ச., ஞானமூர்த்தி, தா.ஏ., சண்முகம், செ.வை., சுந்தரம்,(ப-ர்), இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், அண்ணாமலைநகர், சிதம்பரம்.

1995      Ohno,Susumu, Prosody of Sangam and Japanese Tangiain - 5-7-5-7-7 syllable meter,  உயராய்வு, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

1999      தி.வே.கோபாலையர், செய்யுளியலும் யாப்பும், சங்க இலக்கியம் கவிதையியல் நோக்கு - சிந்தனைப்பின்புல மதிப்பீடு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

1999      இரா.இளங்குமரன், யாப்பியல் கொடை, சங்க இலக்கியம் கவிதையியல் நோக்கு - சிந்தனைப்பின்புல மதிப்பீடு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

1999      சோ.ந.கந்தசாமி, யாப்பு, சங்க இலக்கியம் கவிதையியல் நோக்கு - சிந்தனைப்பின்புல மதிப்பீடு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

1999      அ.சண்முகதாஸ், பாடல் மரபு, சங்க இலக்கியம் கவிதையியல் நோக்கு - சிந்தனைப்பின்புல மதிப்பீடு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

2008      தி.வே.கோபாலையர், தொல்காப்பியச் செய்யுளியலும் சங்க இலக்கிய யாப்பும், பண்டித வித்துவான் தி.வே.கோபாலையர் கட்டுரைகள் - 1, தமிழ்மண் பதிப்பகம், சென்னை.

உதவிய நூல்கள்

2007      உயராய்வு (ஆய்விதழ்), வீ.அரசு, ய.மணிகண்டன், கோ.பழனி, ஆ.ஏகாம்பர் (ப-ர்), தமிழ் இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

2012      சங்க இலக்கியம் பன்முக வாசிப்பு, பரிசல் புத்தக நிலையம், சென்னை.

2016      ப.திருஞானசம்பந்தம், ஆய்வுப் பதிவுகள், நெய்தல் பதிப்பகம், சென்னை.

2017      இரா.மோகன் (ப.ஆ.), பேராசிரியர் ம.திருமலையின் ஆய்வுகள், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.

- முனைவர் அ.மோகனா



__________________


Guru

Status: Offline
Posts: 7410
Date:
Permalink  
 

 

“சங்கத் தொகை நூல்களில் ஒன்று புறநானூறு. சங்க இலக்கியங்களில் இது பலராலும் தனித்து வாசிக்கப்பட்ட நூல். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருப்பெற்று வளர்ந்த திராவிட இயக்கம், தன் அடையாளங்களைச் செவ்விலக்கியங்களின் மூலமாகக் கட்டமைக்க முனைந்தது. இச்செயல்பாட்டிற்குப் பெரிதும் உதவியது புறநானூறு. தமிழ்த் தேசிய இனத்தின் அடையாளமாகப் புறநானூறு புரிந்துகொள்ளப்பட்டது” என்கிறார் தமிழறிஞர் முனைவர் வீ. அரசு அவர்கள்.

‘வீர ஊழிக் கால இலக்கியங்களில் தனித்தன்மை வாய்ந்த இலக்கியம் புறநானூறு’ என்பது கலைநிதி க. கைலாசபதி அவர்களின் கருத்து.

சமூகத்தின் வாழ்வியல் ஒருங்குநெறியையே தமிழர் ‘அறம்’ என்றனர். வடமொழியாளர் கூறும் ‘தருமம்’ வேறு; தமிழர் கூறும் ‘அறம்’ வேறு. வடமொழியாளரின் தருமம் வருண நீதிகளுக்கு உட்பட்டது. பிராமணன் கொலைக்குற்றமே புரிந் தாலும் அவனைத் தண்டிக்கக் கூடாது; மொட்டையடித்தால் போதும். ஆனால், ஒரு சூத்திரன் வேதம் ஓதுதலைக் காதால் கேட்டாலும் அவன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்பது வடநூலார் தருமம். மனிதகுலக் கீழ்மைகளின் தொகுப்பு வடநூல் நெறி என்றால், மனிதகுல மேன்மைகளின் தொகுப்பைத் தமிழர் நெறி எனலாம்.

நானூறு பாடல்கள் அடங்கிய புறநானூற்றைப் போர்முறை வாழ்வின் இலக்கியம் எனலாம். போர்க்குணத்தை மெச்சிய புலவர் பலரின் பாடல்களின் தொகுப்பு இது. இந்நூலைப் படிக்கும் போது நம்முள் ஒரு கேள்வி எழும். ‘இந்தப் போர் இலக்கியத்தைச் சுவைத்துப் படிக்கிறோமே. போர் இன்றும் நமக்குத் தேவையா?’

எட்கார்சுனோ என்னும் எழுத்தாளர் சுநன ளுவயச டீஎநச ஊhiயே என்னும் தமது நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். “போர்க்களங்கள் அன்று ஊருக்கு வெளியே தனித்து இருந்தன. இன்று ஒவ்வோர் ஊரும் போர்க்களமாகிவிட்டது. ஒவ்வொரு தெருவும், ஒவ்வொரு வீடும் போர்க்களமாகிவிட்டன.”

அநீதிகள் எல்லா இடங்களிலும் எல்லா மட்டங்களிலும் தலைவிரித்தாடும் போது, போர்க்குணமில்லாமல், போரில் லாமல் நாம் எப்படி வாழமுடியும்? போரின் வடிவங்கள் மாறும்; போரிடுதல் மாறுவதில்லை. அமைதியான வாழ்வை, இணக்கமான வாழ்வை வேண்டுவோர் போராடியே தீரவேண்டும். போர்க்குணத்தை இழப்போர் எல்லாவற்றையும் இழந்து போவர் என்பது திண்ணம். பாவலன் துங் கூறினான், “ஆயு தத்தை ஒழிக்க ஆயுதத்தையே எடு” என்று.

எனவே நம் முன்னோரின் போர்க்குணத்தையே நம் மூத்த வாழ்க்கை அறமாக நாம் புறநானூற்றில் காண்கிறோம். நம் தாய் ஒருத்தி புறநானூற்றில் தன் தோழி யிடம் பேசுகிறாள்.

“சிற்றில் நற்றூண் பற்றி, நின் மகன்

யாண்டுளனோ என வினவுதி, என்மகன்

யாண்டுளன் ஆயினும் அறியேன்! ஓரும்

புலிசேர்ந்து போகிய கல்லளை போல

ஈன்ற வயிறோ இதுவே

தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே”                                                               (புறம் 86) 

‘என் வயிறு புலி தங்கியிருந்த குகை. என் மகன் போர்க்களத்தில்தான் இருப்பான்’ என்று மொழியும் தாயின் சொற்களில் கொப்பளிக்கும் வீரம் எவ்வளவு சூடு மிகுந்தது! புறநானூற்றிலிருந்து நாம் எடுத்துப் பேண வேண்டியது இந்தப் போர்க்குணத்தைத்தான்.

இன்று, சூத்திரரும் பஞ்சமரும் கல்வியைப் பெற்றுவிடக் கூடாதென்று நீட்டென்றும் பூட்டென்றும் போடுபவர்கள், அன்றைக்கே மனுநீதியாகச் சட்டம் வகுத்தார்கள். தாழ்த்தப்பட்டவர்கள், உடல் உழைப்பாளருக்குக் கல்வி இல்லை என்று. இந்த அநீதியை, அன்று தமிழகத்தில் ஆட்சியாளராய் இருந்த மன்னர்களே எதிர்த்தார்கள். பாண்டியன் நெடுஞ்செழியன் கூறு கிறான் : “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் கற்க வேண்டும்; பெற்ற தாயும் கற்றவனையே அதிகம் விரும்புவாள்; குடும்பத்தில் மூத்தவனை அழைக் காமல் கற்றவனையே அரசனும் அழைப்பான்; கீழ்ப்பால் ஒருவன் கற்றிருந்தால் மேல்பால் ஒருவனும் அவனுக்கு அடங்கி நடப்பான்” (புறம் 183).

அறிவாளர், ஆட்சியாளர், வணிகர், உடலுழைப்பாளர் என்பது உலகளாவிய நாற்பால் பகுப்பு. இது பிறவியால் வருவ தன்று. ஆனால் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்பது பிறவியால் கற்பிக்கப்பட்ட நால்வருணம். நல்வருணம் வேறு; நாற்பால் வேறு. நால்வருணத்தில் கீழோன் கல்வி கற்க உரிமை இல்லை. நாற்பால் பகுப்பில் கீழானவன் (உடலுழைப்புச் சமூகத்தைச் சேர்ந்தவனும்) கல்வி கற்க முடியும். எனவே அனைவருக்கும் கல்வியை அரசனே வற்புறுத்துகிறான். அனைவரும் கற்க வேண்டும் என்தே தமிழர் அறம். புறநானூறு புலப்படுத்துவது இதைத் தான்.

ஒரு தேசத்திற்குச் செல்வச் செழிப்பு இன்றியமையாதது. ஆனால், அது ஒரு வரிடம் குவிந்து கிடப்பதால் பயனில்லை. அது பரவலாக்கப்பட வேண்டும். “செல் வத்துப் பயனே ஈதல்” என்று புறநானூறு (189) கூறுவதை இவ்வாறுதான் புரிந்து கொள்ள முடியும். நான் மட்டுமே துய்க்க வேண்டும் என வைத்திருப்பவன் அதனை வீணாக்குகிறான். எனவே செல்வத்தைப் பகிர்ந்து துய்க்க வேண்டும். புறநானூற்றின் 163-ஆம் பாடல் இதனையே வலியுறுத்து கிறது. “இன்னோர்க்கு என்னாது, என் னொடும் சூழாது வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும் எல்லோர்க்கும் கொடுமதி” என்கிறார் புலவர் பெருஞ்சித்திரனார். பகிர்ந்து இன்புறுதல் என்னும் அறத்தைப் புறநானூற்றின் பல பாடல்களில் காணலா கிறோம்.

நீரறம் பேணுதல் சங்க காலத்தில் மக்க ளாலும் மன்னர்களாலும் போற்றப்பட்ட ஒரு பேரறமாக இருந்தது. புறநானூறு 18ஆம் பாடலில் குடபுலவியனார் கூறுகிறார் :

“உயிர்களுக்கு உணவு வேண்டும். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத் தோர். உணவு என்பது நிலத்தொடு கூடிய நீரின் ஆக்கம். எனவே, நிலம் குழியான பகுதிகளில் நீர்நிலைகளை உருவாக்க வேண்டும்; பாசன வசதியைப் பெருக்க வேண்டும். இதற்கு முயல்பவரே முயற்சி யாளர்.”

உழுதொழிலை மேம்படுத்திக் குடிநலம் காத்தல் ஓர் அரசின் தலையாய அறமாக அன்று உணரப்பட்டது. புறநானூற்றின் 35-ஆவது பாடலில் புலவர் வெள்ளைக் குடி நாகனார் இதனைத் தெளிவுபடுத்து கிறார்.

“பகைவர்களை வென்று மன்னர்கள் பெறுகின்ற வெற்றி என்பது,

ஏரினால் நிலத்தில் ஊன்றி, விளைந்த நெல்லின் பயனாகும்.

எனவே, அரசே, எருதுகளின் துணையுடன் பயிர்த்தொழில் புரிந்து

மக்களைக் காக்கும் உழவர் குடிக்கு நீ உதவுவாய் எனில்,

அடங்க மறுக்கும் பகைவரும் அடங்கி வருவர்” என்கிறார்.

இன்று இந்தியாவை வல்லரசாக மாற்ற முனையும் தலைவர்களோ “வேளாண்மையை விட்டு வெளியே வாருங்கள்” என மக்களை அழைக்கிறார்கள். உண்டிகொடுப்பாரை ஒன்றுமில்லாதவராக்கிவிட்டு, இவர்கள் தேசத்தை எப்படி உயர்த்தப் போகிறார் களோ தெரியவில்லை.

புறநானூற்றுச் சான்றோரின் அறநோக் கில் மக்கள் மீதான பரிவும், திட்டமிட்டுச் யெல்பட வலியுறுத்துவதும் முதன்மை பெறுகின்றன. புறம் 184-இல் பிசிராந்தை யார் பாண்டிய மன்னனுக்குக் கூறுகிறார் :

“காய்நெல் அறுத்துக் கவளமாய் யானைக்கு ஊட்டுவதுபோல்

அரசன் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். மக்கள்மீது பரிவு

காட்ட வேண்டும். வரம்புக்கு உட்பட்டு வரிவாங்க வேண்டும்.

அறிவார்ந்த கருத்தாளரையே அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தரமற்ற ஆரவாரக் கூட்டத்தை அணுகவிடக் கூடாது. திட்ட

மிட்டுச் செயல்பட்டால் கோடி ஆக்கச் செயல்களை மேற்

கொள்ளலாம். நாடும் உயர்வடையும்.”

மன்னர்களை அறம் திறம்பாமல் இட்டுச் செல்பவர்களாக அன்றைய புலமைச் சான்றோர்கள் விளங்கினார்கள்.

புறநானூறு 182-ஆம் பாடலில் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற பாண்டிய மன்னன் தன்னலமற்ற பொதுநல வாழ்வை மெச்சுகிறான். பிறர்க்காக வாழ்பவர் உள்ள தால்தான் உலகம் உள்ளது என்கிறான்.

“அமிழ்தமே கிடைத்தாலும் தாமே தனித்து உண்ணாதவர்,

சினம் கொள்ளாதவர், செயலைத் துறந்து உறங்காதவர்,

அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுபவர், புகழ்தரும் செயலுக்கு

உயிரையும் கொடுப்பவர், உலகமே கிடைத்தாலும் பழிச்செயலை

நாடாதவர், சோம்பலை உதறியவர், தமக்கென உழைக்காமல்

காமல் மக்கள் யாவருக்குமாக உழைப்பவர் உள்ளதால்தான்

உலகம் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது”.

சமூக நலத்தையே முதன்மைப்படுத்து கின்ற அறநோக்கு அந்நாளைய தமிழர் பண்பாக இருந்திருக்கிறது என்பதைத் தான் இந்தப் புறநானூற்றுப் பாடல் புலப்படுத்துகின்றது.

எல்லாவற்றுக்கும் மேலாக, ‘உலகம் ஒன்று, மனிதகுலம் ஒரே குலம்’ என்பதுதான் தமிழர் அறநோக்கின் உச்சம் எனலாம், புறநானூற்றின் 192ஆம் பாடல் கணியன் பூங்குன்றனாரின் சிந்தனை ஆக்கம். உலகம் போற்றும் உயர் எண்ணச் செல்வம் இது!

“யாதும் நம் ஊரே! யாவரும் நம் உறவினரே!

தீதும் நன்மையும் பிறர்தர வருவதில்லை!

வருத்தமும் வருத்தம்தணிதலும் பிறரால் வருவன அல்ல!

சாவும் புதியதன்று!

வாழ்க்கை இனியது என்று மகிழ வேண்டியதும் இல்லை!

வெறுப்புற்று, இது துன்பமானது எனக் கூற வேண்டியதும் இல்லை!

மின்னல் இடியோடு வானம் மழை பொழிகிறது!

மலை முகடுகளில் துளிகளாய் வீழ்ந்து அருவியாகிறது!

தரையில் இறங்கி வளம் பொருந்திய பேராறாய் நடந்து செல்கிறது!

ஆற்றில் அடித்துவரப்பட்ட ஒரு மிதவை

ஆற்று நீரோட்டத்தின் வழியே செல்வது போல,

உயிர்களின் வாழ்க்கை

இயற்கையாய் அமைந்த இயங்குநெறிப்படியே செல்லும்!

அறிவாளர்கள் கண்டுரைத்த உண்மைகளால்

இந்தத் தெளிவை நாம் பெற்றோம்.

எனவே,

மாட்சிமை மிக்க பெரியவர்களைப் பார்த்து

நாம் வியப்பதும் இல்லை!

எளியோரை ஒருபோதும் இகழ்ந்துரைப்பதும் இல்லை!”

இந்த அறநோக்குகள் கூடிய மனவளம் வாய்த்துவிட்டால், உலகில் போர் இருக் காது! பூசல் இருக்காது! பரிவும், நேயமும், இணக்கமும், நலன்களும் செழிப்புற்று ஓங்கும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7410
Date:
Permalink  
 

thoolikapium 400இரண்டு உலகப்போர்களின் விளைவாக உலகில் அரசியல், வரலாறு, பொருளாதாரம், தத்துவம் என பல துறைகளில் மாறுதல்கள்  உண்டாயின. அதன் தொடர்ச்சியாகக் கலை, இலக்கிய, புலங்களிலும் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன.  இந்திய/ தமிழ்ச் சிந்தனை மரபிலும் இதன் தாக்கம் ஏற்பட்டது.  மார்க்சியம், அமைப்பியல், நவீனத்துவம், இருத்தலியம், பின் நவீனத்துவம் முதலிய மேலைக் கோட்பாடுகளின் தாக்கம் தமிழாய்வில் ஏற்பட்டன.

சமூக, வரலாற்றியல் ஆய்வுகளும் இலக்கிய ஆய்வுகளும் புதிய உள்ளளிகளுடன் வரத்தொடங்கின.  அத்தகைய போக்கில் தெ.பொ.மீ, தனிநாயக அடிகள், மருதநாயகம் போன்றோரை ஒப்பிலக்கிய ஆய்வுகளிலும் கைலாசபதி, கா.சிவத்தம்பி, வானமாமலை, ஞானி, தமிழவன், மாதையன் போன்றோரைச் சமூகவியல் சார்ந்த இலக்கிய ஆய்வுகளிலும், கோட்பாட்டு ஆய்வுகளிலும் பார்க்க முடியும்.

அந்தவகையில், மார்க்சியத் திறனாய்வு அடிப்படையில் தமிழியல் ஆய்வில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தவர் எனச் சிவத்தம்பியைக் குறிப்பிட முடியும். இவர் இலக்கியத்தைச்  சமூக பொருளாதார அரசியல் கண்ணோட்டத்தில் பார்த்த தோடு அழகியல் கண்ணோட்டமும் அதனுடன் இணைய வேண்டும் என்று செயல்பட்டவர். இந்த நோக்கத்தினை மையமாகக் கொண்டு 2004  சென்னை பல்கலைக்கழகத் தமிழிலக்கியத்துறையில் நடத்திய “தமிழின் கவிதையியல் தேடல்” என்ற சொற்பொழிவின் ஒரு பகுதியாகத் “தொல்காப்பியமும் கவிதையும்” என்ற இந்நூல் 2012இல் வெளிவந்தது.

இந்நூலில், தமிழர் சிந்தனை மரபில் தொல் காப்பியம், பாவும் கவிதையும், பத்துப்பாட்டின் கவிதையியல், தமிழ் கவிதை வரலாற்றிலே தொல் காப்பியக் கவிதையின் சில விளக்கங்களும் சிக்கல்களும் என்று நான்கு கட்டுரைகள் உள்ளன. பின்னிணைப்பாக, தொல்காப்பிய பொருளதிகாரம் பொருளடைவும் தமிழ் கவிதை பற்றிய இலக்கணமயப்படுத்தப்பட்ட நோக்கு களும் தமிழிலக்கியத்தின் உள்ளார்ந்த படைப்பாற்றல் நெகிழ்வுணர்வும் எனும் கட்டுரையும் இடம்பெறு கின்றன.

இந்நூலின் முன்னுரையில் தமிழியல் ஆய்வை உலக, இந்தியச் சிந்தனைப் பின்புலத்திலிருந்து ஆய்ந்து  தமிழுக்கான தனித்த அடையாளத்தினை இனம் காண வேண்டிய அவசியத்தினைக் கூறுகிறார். தமிழ்ப் பண் பாட்டை இனம் காண வேண்டுமாயின் கட்டிடக்கலை, சிற்பக்கலை, வார்ப்புத் திருமேனி, இசைக்கலை, நடனக்கலை, இலக்கியக்கலை இவைகளை ஒருங்கே வைத்து ஒட்டுமொத்தமான அழகியலைத் தேட வேண்டும் என்கிறார். இவ்வாறு தேட முற்படும் பொழுது உலகப் பொதுமையையும் இந்தியச் சிந்தனை மரபையும் நிராகரிக்காது இவற்றையும் கருத்தில் கொண்டு தேட வேண்டும் என்கிறார்.

தமிழ் அழகியல்  தேடல் சங்க இலக்கியத்தில் தொடங்கி, தற்கால  இலக்கியம் வரை உள்ள ஒட்டுமொத்தமான பொதுமைப் பண்பினை இனம் காண வேண்டும். அழகியல் தேடலில் சமூக, பொருளாதார அடிப்படைகளைப் புறந்தள்ளாது  இருக்க வேண்டும் என்கிறார். இதனை “அழகியல் தேடலென்பது சமூகப் பொருளாதார அடிப்படைகளை மறக்கும் முயற்சியன்று. உண்மையில் அது ஆரோகண, அவரோகண கட்டுக்கோப்புக்குள் நின்றுகொண்டு செய்யப்படும் மனோதர்ம ஆலாபனைத் திறனாகும்” என்கிறார். இதற்கான தொடக்கத்தினைத் தொல் காப்பியத்தில் இருந்து தொடங்க வேண்டும். “இலக்கிய விமர்சனம் கலை விமர்சனத்தின் பார்வைகளுடனும் பரிபாஷையுடனும் இணைய வேண்டும்”. இவ்வாறு காணும் பொழுதுதான் ஒட்டு மொத்தமான தமிழ் அழுத்தத்தினை இனம் காண முடியும் என்கிறார்.

தமிழர் சிந்தனை மரபில் தொல்காப்பியம் எனும் முதற்கட்டுரையில், வரலாற்றுச்சூழலில் இருந்து தொல்காப்பியத் தோற்றம் குறித்து ஆய்கிறார். இந்நூல்  தமிழ் மட்டும் தெரிந்த ஒருவருக்கா? வடமொழி தெரிந்த தமிழருக்கா? தமிழ் தெரிந்த வடமொழி மரபினருக்கா?  என்ற வினாக்களை எழுப்பி அதன் தோற்றத்தை விளக்குகிறார். 11,12 ஆம் நூற்றாண்டு களில் பிறமொழி நெருக்கடிச்சூழலில் அதன் பின் புலத்தில் இருந்து வீரசோழியம், யாப்பருங்கலம், பாட்டியல் போன்றனவும்  இதிலிருந்து மாறுபட்டு தமிழ் மரபுப் பின்னணியில் நன்னூலும் தோன்றின. இது மாதிரியான நெருக்கடியால் தொல்காப்பியமும் தோன்றி யிருக்க வேண்டும் என்கிறார். தொல்காப்பியத்தின் அமைப்பு முறைகள், நெளிவு சுழிவுகள், முக்கிய புறநடைகள், சொல்மரபுகள்  இவற்றை நோக்கும் பொழுது  ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தும் ஒருவருக்காக  எழுந்த நூல் என்கிறார்.

பாவும் கவிதையும் ஓர் அறிமுக நோக்கு எனும் இரண்டாம் கட்டுரையில் செய்யுள், பா, கவிஞர், புலவர் முதலிய சொற்களை வரலாற்றுச்சூழலில் ஆய்கிறார். தொல்காப்பியக் காலத்தில் செய்யுள் என்ற சொல்  இலக்கிய வடிவங்கள் அனைத்தையும் குறித்தது. பின்பு படிப்படியாக அது பாடல் வடிவத்தை மட்டும் குறிக்கும் சொல்லாயிற்று. கவிதை என்ற சொல் முதலில் பரிபாடலிலும், கவி என்ற சொல் சிலப்பதிகாரத்திலும், கவிஞர் என்ற சொல் சீவகசிந்தாமணியிலும் வருவதால் இச்சொற்பிரயோகம் சங்க காலத்திற்குப் பிந்தையது எனக் கூறுகிறார்.

புலவு - பரந்த இடம் வயலைக் குறிக்கும் எனவே அறிவுப்பரப்பினை உடையோர் புலவராவர். சங்க இலக்கிய  நிலையில் பாணர்கள், பாடுநர்கள் முதன்மை பெறுகின்றனர். இவர்கள் வீரயுகத்துக்குரிய தொழில் முறை பாடுநர்களாக விளங்கியவர்கள். பாணர்களினின்று  அறிவுடையவர்கள் - புலமையுடையவர்கள் புலவர்கள் என்ற கருத்து நிலையே இருந்தது என்கிறார்.

‘பா’ எனும் சொல்லினை விளக்கும்போது, பாணர்கள், புலவர்களின் ஆக்கங்கள் ‘பாக்கள்’ எனப்பட்டன. ‘பா’ என்பது பரந்துபட்டுச் செல்வதோர் ஓசை. ‘பா’ என்று கூறுவதன் மூலம் பாடப்பெறும் ஓசையமைப்பே முக்கியமானது. ‘பா’ என்பது வாய்மொழி நிலையினைக் குறிக்க, எழுத்து முறைமை வளர வளர பாடலின் உள்ளுருவாக்கம் வளரத் தொடங்குகிறது  என்று கூறுகிறார்.

வாய்மொழி மரபிலிருந்து அதனோடு இணைந்த பாணர் மரபிலிருந்து புலமை மரபிற்கு- புலவர் மரபிற்கு இலக்கிய வடிவம் மாற்றமடைந்ததையே பா, பாட்டு, செய்யுள் முதலிய சொற்பயன்பாடுகள் குறிக்கின்றன எனக் கூறுகிறார்.  

பத்துப்பாட்டின் கவிதையியல் எனும் மூன்றாம் கட்டுரை, பத்துப்பாட்டின் செல்நெறிகளை விளக்குகிறது.

முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப் பாலை இம்மூன்றிலும் அகம்/புறம் இணக்கப்பட்டுள்ள முறையில் நெகிழ்ச்சி உள்ளது எனக் குறிப்பிடுகிறார். முல்லைப்பாட்டில் அகம் /புறம் எதிர்நிலைப்பட்ட முயற்சி நடக்கிறது. நெடுநல்வாடையில்  திணைப் பிறழ்வுக்கவிதை சுவை மிக்கதாகவும் எதிர்முரணாகவும் உள்ளது. பட்டினப்பாலையில் அகமாக்கும் முயற்சி மூன்று வரிகளில் நடைபெறுகிறது எனக்கூறுகிறார்.

தனி இலக்கிய வகையான ஆற்றுப்படையுள் திருமுருகாற்றுப்படையைத் தவிர மற்றைய நான்கும்  காலத்தால் முந்தையது. தொல்காப்பியப் பாடாண் திணை புலவர்களைப் புகழ்வதற்குரிய உத்தி முறையாக இதனைக் கூறுகிறது. மலைபடுகடாம், பெரும்பாணாற்றுப் படை இரண்டிலும் வருணனை முக்கிய கூறாக உள்ளது. மேலும் திணை, துறை முக்கியத்துவத்தை உடைத்து நீட்சியை உருவாக்கும் பண்பினைக் காணமுடிகிறது. பொருநராற்றுப்படையில் வருணனையை விட கரிகால் வளவனது சிறப்பே மேலோங்கி நிற்கிறது.

இறையனார் களவியலின் “இது எந்நுதலிற்றோ வெனின் தமிழ் நுதலிற்று” எனும் கருத்தியல் பின்னணி போல, குறிஞ்சிப்பாட்டின் கொலு அமைப்பினைச் (ஆரிய அரசனுக்குத் தமிழ் அறிவுறுத்தியது) சமூகவியல் நோக்கில் பார்க்க வேண்டுமென்கிறார். குறிஞ்சிப் பாட்டின் திணையமைப்பிலும் மாற்றம் உள்ளது. அதாவது அவ்வத்திணையின் உள்ளாக இல்லாமல் தனியான நாடக அமைப்பில் வருகிறது. புறத்திணை மரபில் கூறப்பட்டனவற்றைக் கருத்து நிலையில்  எதிர்ப்பதாக மதுரைக்காஞ்சி அமைந்துள்ளது. 

பத்துப்பாட்டின் ‘பா’ அமைப்பைக் குறிப்பிடு கையில், சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப் படை, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, மலைபடுகடாம் ஆகியன நேரிசை ஆசிரியத்திலும் பொருநராற்றுப்படை வஞ்சி மயங்கிய ஆசிரியத்திலும்   பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி வஞ்சி மேலோங்கிய ஆசிரியத்திலும் அமைந்துள்ளன என்கிறார்.

இந்த வகையில் பத்துப்பாட்டுப் பாடல்களின் நீட்சி முறைமையமைப்பில் வித்தியாசத்தை ஏற்படுத்தி, புதிய அழகியலுக்கு இட்டுச்சென்று சங்கக் கவிதையில் மேலும் ஒரு நெகிழ்ச்சியை உருவாக்குகிறது. இதன் போக்கை வடிவ, உள்ளடக்க முறையின் மாற்றங்களினடிப் படையில் விளக்கியுள்ளார்.

தமிழ்க்கவிதை வரலாற்றிலே தொல்காப்பியக் கவிதையியல் சில வினாக்களும் சிக்கல்களும் என்ற நான்காம் கட்டுரையில், தமிழ்க் கவிதைப் பண்பாடு என்னவென்பதை அறிவதற்குச் சங்க இலக்கியம், தொல்காப்பியம் இரண்டையும் இணைத்துப் பார்ப்பது அவசியம் என்கிறார். தமிழிற் செய்யுள் உண்டாக்கப் படும் முறைமை பௌதீக, குணம் சார்ந்து இயங்கு கிறது. உலகப் பொதுவான இலக்கிய வகைகளான பாட்டு, உரை, நூல், பிசி, அங்கதம், முதுசொல் இவை தமிழ்நாட்டில் வழங்கும் முறைமையை நோக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு சொல்வழக்கு மரபு களையும், சமூக மரபுகளையும் நோக்க வேண்டிய அவசியம், பா வகைகளின் வளர்ச்சி முறைமை, என்பவைகளை விளக்குகிறார்.

பின்னிணைப்பு இரண்டில், தொல்காப்பியம் முதல் பாட்டியல் நூல்கள் வரை தமிழ்க்கவிதை பற்றி  இலக்கணமயப்படுத்தப்பட்ட நோக்குகள் ஒருநிலையில் இருப்பினும் தமிழிலக்கியத்தின் உள்ளார்ந்த படைப் பாற்றல் நெகிழ்வுமிக்கதாக இருக்கிறது என்பதை முக்கிய விடயமாகக் குறிப்பிடுகிறார். அதாவது தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தினுள் நெகிழ்வு செறிந்து கிடக்கிறது என்கிறார். சங்க இலக்கியத்தில் உள்ள அகம்/புற நெகிழ்வு, பக்தி இலக்கியங்களுக்கான இலக்கிய/கவிதைக் கொள்கை நமது செய்யுளிலக்கண நூல்களில் இல்லாமை, தண்டியலங்கார வழி நிற்கும் காப்பிய மரபை, கம்பராமாயணம், பெரியபுராணம் இவைகளில் காணமுடியாமை போன்றவைகளின் வழியாக இதனை நிறுவுகிறார்.

தமிழின் தனித்தன்மையை நிறுவும் நிலையில் தொல்காப்பியம் சங்க இலக்கிய ஆய்வுகளை உலக/ இந்தியப் பண்பாட்டுப் பின்புலத்தில் ஆராயவேண்டும் என்பதை இந்நூல் முழுவதும் வலியுறுத்துகிறார். ஏனெனில் அத்தகைய நோக்கே தமிழ் அடையாளத்தைத் தனித்தன்மையுடையதாக நிறுவ வழிசெய்யும். தொல் காப்பியம் தொடங்கி, தற்காலம் வரை இலக்கிய, இலக்கணங்களில் தொடரும் தமிழ் மரபின் பொதுமை, தனித்தன்மையைக் கண்டறிய வேண்டுமென்கிறார். அதற்குத்  தொல்காப்பியமே அடிநாதமானது அதாவது பிரதானமானது என்கிறார்.

தமிழியல் ஆய்வு இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் பல்துறை நோக்குடையதாக வளர்ந்தது. சங்க இலக்கிய ஆய்வுக்குச் சிவத்தம்பி புத்தொளியைப் பாய்ச்சினார். அவருக்குப் பின்பு, சமூகவியல் சார்ந்த பார்வைகள் ஆய்வில் பெருமளவு தீவிரம் பெற்றன. இலக்கிய அழகியல் ஆய்வுகளும் சமூகவியல் ஆய்வு களும் ஒன்றோடொன்று இணையாத போக்கே பெருமளவு உள்ளது.  அந்தவகையில் தொல்காப்பியமும் கவிதையும் எனும் இந்த நூல் சமூகவியல் ஆய்வையும் இலக்கிய அழகியல் ஆய்வையும் ஒருங்கிணைத்து உலக/ இந்திய நிலைப்பட்டப் பார்வைப் புலத்தில் காண உறுதுணையாக அமையும் என்பது மிகையல்ல.

தொல்காப்பியமும் கவிதையும்

கார்த்திகேசு சிவத்தம்பி

வெளியீடு:நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41-பிசிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்.,

அம்பத்தூர்சென்னை - 600 098

விலை:ரூ.75.00



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard