Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்க இலக்கியம் அந்தணர் இராவணன் கைலாய மலையைத் தூக்கும் சிற்பம் - 8ம் நூற்றாண்டு


Guru

Status: Offline
Posts: 7329
Date:
சங்க இலக்கியம் அந்தணர் இராவணன் கைலாய மலையைத் தூக்கும் சிற்பம் - 8ம் நூற்றாண்டு
Permalink  
 


சங்க இலக்கியம் அந்தணர் இராவணன் கைலாய மலையைத் தூக்கும் சிற்பம் - 8ம் நூற்றாண்டு

 

சங்க இலக்கியம் காட்டும் காட்சி அந்தணர் இராவணன், சிவபெருமானோடு கைலாய மலையைத் தூக்கிய சிற்பம் - 8ம் நூற்றாண்டு

 படம் - கயிலாயத்தைத் தூக்க முயலும் ராவணன் விருபாக்ஷர் கோவில் கர்நாடகா!

Sculpture of Ravana lifting Mount Kailash on pillar of Virupaksha Temple, Pattadakal, Karnataka!

RAVANA LIFTING MOUNT KAILASH

Lord Shiva and Parvati as ‘Ravananugrahamurti’ (form showing favour to Ravana) seated at the Top. Expressions of various animals and ganas were beautifully depicted..

Pillar relief at Virupaksha Temple, Pattadakal, #Karnataka.

Built by Lokhama Devi, senior queen of Chalukya Vikramaditya-II (733-744 CE)

https://en.wikipedia.org/wiki/Pattadakal

 Pattakadal.jpg

 
 பூணூல் அணிந்திருந்த அந்தணர் ராவணன்!
கலித்தொகை 38
கபிலர், குறிஞ்சி, தோழி தலைவியிடம் சொன்னது
“இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக,
ஐ இரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல, 5
உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்
கறுவு கொண்டு அதன் முதல் குத்திய மத யானை
நீடு இரு விடர் அகம் சிலம்பக் கூய்த் தன்
கோடு புய்க்கல்லாது உழக்கும் நாட! கேள்!
இமய மலையை வில்லாக்கி வளைத்தவன் சிவபெருமான், அவன் கங்கை ஆறு பாயும் ஈரச் சடையை உடையவன். அவன் தன் மனைவி உமையாளோடு சேர்ந்து இமயமலை மேல் அமர்ந்திருந்தான். 10 தலை கொண்டவனான அரக்கர் தலைவன் இராவணன் தொடி அணிந்திருந்த தன் கையை இமய மலைக்கு அடியில் புகுத்தி அந்த மலையை எடுக்க முயன்றான். எடுக்க முடியாமல் துன்புற்றான். அதுபோல ஒரு நிகழ்வு. வேங்ககை மரம் பூத்திருந்தது. அது புலி போல் தோன்றியது. அதன் மீது சினம் கொண்டு மதம் கொண்ட யானை வேங்கை அடிமரத்தில் குத்தியது. குத்திய கொம்பை அதனால் பிடுங்க முடியவில்லை. மலையின் குகைகளில் எதிரொலி கேட்கும்படி முழங்கியது. இப்படி யானை முழங்கும் நாட்டை உடையவன் நீ. நாட! கேள்.
ravana-lifting-mount-kailash--ellora.jpgdownload%20(38).jpg
Ravana lifting Mount Kailash - Ellora
நீல் நிறக் குன்றின் நெடிது உறத் தாழ்ந்த நீத்த வெள் அருவியின் நிமிர்ந்த
பால் நிறப் பட்டின் மாலை உத்தரியம் பண்புற, பசும்பொன் ஆரத்தின்
மால் நிற மணிகள் இடை உறப் பிறழ்ந்து வளர் கதிர் இள வெயில் பொருவ,
சூல் நிறக் கொண்மூக் கிழித்து இடை துடிக்கும் மின் என,மார்பில் நூல்துளங்க
- சுந்தர காண்டம், கம்பராமாயணம்
நீலநிற மலையில் தவழ்ந்து வரும் வெள்ளருவி போன்ற மேலாடையும், தங்க மாலையிலே அடர்நிற மணிகள் கோர்ந்த அணியும், கார் மேகத்தினூடே தோன்றும் வெள்ளை மின்னல் போன்று கரிய மேனியில் பூணூலை அணிந்தவனான ராவணன் வந்தான்!
800px-Mahabharata_Inscription_.jpg 285557151_3455337331362942_3356814745085


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard