Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவ மாலை


Guru

Status: Offline
Posts: 7474
Date:
திருவள்ளுவ மாலை
Permalink  
 


திருவள்ளுவ மாலை

 

(இது திருக்குறளின்‌ சிறப்பைப்‌ பாராட்டிக்‌ கூறுவது;

சங்கப்‌ புலவர்களின்‌ பெயரால்‌ அமைந்த 55 வெண்பாக்களை

உடையது.)

 

1. திருத்தகு தெய்வத்‌ திருவள்‌ ஞூவரோடு

உருத்தகு நற்பலகை ஒக்க - இருக்க

உருத்திர சன்மர்‌; என உரைத்து வானில்‌,

ஒருக்கஓ என்றதுஓர்‌ சொல்‌, (அசரீரி)

(குறிப்பு உரை) உருத்தகு- உருவிலே சிறந்த. நல்பலகை-

நல்ல சங்கப்பலகையிலே. “உருத்திர சன்மர்‌ ஒக்க இருக்க”

உருத்திரசன்மர்‌; முருகன்‌ அவதாரமாகிய ஒரு புலவர்‌. ஒருக்க-

ஒன்றுபடும்படி. ஓஎன்றது-ஓவென்று ஓலித்தது.

2. நாடா, முதல்நான்‌ மறை, நான்‌ முகன்நாவில்‌

பாடா, இடைப்பா ரதம்‌ பகர்ந்தேன்‌; - கூடாரை

எள்ளிய வென்றி இலங்கு இலைவேல்‌ மாறு பின்‌

வள்ளுவன்‌ வாயதுஎன்‌ வாக்கு. (நாமகள்‌)

(கு-௨) “கூடாரை எள்ளிய வென்றி இலங்கு இலைவேல்‌

மாற்‌ என்பதை முதலில்‌ வைத்துப்‌ பொருள்‌ காண்க. கூடார்‌-

பசைவர்‌. இலங்கு- விளங்குகின்ற. மாற- பாண்டியனே. நாடா-

நாடி; ஆராய்ந்து. நாவில்‌- நாவிலிருந்துகொண்டு. பாடா- பாடி.

'இடை- இடைக்காலத்தில்‌.

3. என்றும்‌ புலராது, யாணர்நாள்‌ செல்லுகினும்‌

நின்று அலர்ந்து தேன்பிலிற்றும்‌ நீர்மையதாய்க்‌ குன்றாத

செந்தளிர்க்‌ கற்பகத்தின்‌ தெய்வத்‌ திருமலர்‌ போன்ம்‌;

மன்புலவன்‌ வள்ளுவன்வாய்ச்‌ சொல்‌. (இறையனார்‌)

 

திருக்குறள்‌ பொருள்‌ விளக்கம்‌ 375

 

 

 

(கு-௨) மன்புலவன்‌ வள்ளுவன்‌ வாய்ச்சொல்‌. என்றும்‌

புலராது- எக்காலத்திலும்‌ வாடாமல்‌. யாணர்‌ நாள்‌- நெடுங்‌

காலம்‌. பிலிற்றும்‌- சிந்தும்‌. போன்ம்‌- போலும்‌.

 

4, நான்மறையின்‌ மெய்ப்பொருளை முப்பொருளா நான்‌

 

முகத்தோன்‌

தான்மறைந்து; வள்ளுவனாய்த்‌ தந்து ரைத்த நூல்முறையை

வந்திக்க சென்னி; வாய்‌ வாழ்த்துக; நல்நெஞ்சம்‌

சிந்திக்க; கேட்க செவி. (உக்கிரப்‌ பெருவழுதியார்‌)

 

(கு- ௨) முப்பொருள்‌ - அறம்‌, பொருள்‌, இன்பம்‌. நூல்‌

முறையை- நூலின்‌ சிறப்பை. வந்திக்க- வணங்கு. சென்னி- தலை.

வள்ளுவர்‌ பிரம்மாவின்‌ அவதாரம்‌ என்று கூறுகிறது இச்‌

செய்யுள்‌. 28-வது வெண்பாவிலும்‌ இக்‌ கருத்தைக்‌ காணலாம்‌.

 

5. தினைஅளவு போதாச்‌ சிறுபுல்நீர்‌; நீண்ட

பனைஅளவு காட்டும்‌ படித்தால்‌; - மனை அளகு

வள்ளைக்கு உறங்கும்‌ வளநாட! வள்ளுவனார்‌

வெள்ளைக்‌ குறள்பா விரி. (கபிலர்‌)

 

(கு-௨) மனை அளகு- மனையில்‌ உள்ள பறவைகள்‌.

வள்ளைக்கு- உலக்கைப்‌ பாட்டைக்‌ கேட்டு. வெள்ளைக்‌

குறள்பா- வெண்பாவாகிய குறள்‌ பாட்டில்‌ உள்ள. விரி- விரிந்த

பொருள்‌. சிறு புல்‌ நீர்‌- சிறிய புல்‌ நுனியில்‌ உள்ள நீர்‌. பனை

அளவு- பனையின்‌ உருவை. படித்து ஆல்‌- தன்மையை உடையது.

முன்‌ இரண்டடிகளையும்‌ பின்‌ வைத்துப்‌ பொருள்‌ கொள்க.

 

6. மாலும்‌ குறளாய்‌ வளர்ந்து, இரண்டு மாண்‌அடியால்‌

ஞாலம்‌ முழுதும்‌ நயந்துஅளந்தான்‌;- வால்‌ அறிவின்‌

வள்ளுவரும்‌, தம்குறள்ரவெண்‌ பாஅடியால்‌, வையத்தார்‌

உள்ளுவஎல்‌ லாம்‌ அளந்தார்‌ ஓர்ந்து. (பரணர்‌)

 

(கு-௨) மாலும்‌- திருமாலும்‌. குறளாய்‌- வாமனனாய்‌ வந்து.

வளர்ந்து- திரிவிக்கிரமனாய்‌ வளர்ந்து. வால்‌ அறிவின்‌- மெய்யறி

வையுடைய. உள்ளுவ எல்லாம்‌- நினைப்பவைகளை எல்லாம்‌.

 

7. தானே முழுதுஉணர்ந்து, தண்தமிழின்‌ வெண்குறளால்‌

ஆனா அறம்முதலா அந்நான்கும்‌ - ஏனோருக்கு



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

876 சாமி.சிதம்பரனார்‌ நூற்‌ களஞ்சியம்‌ - 4

 

 

 

ஊழின்‌ உரைத்தார்க்கும்‌, ஒள்நீர்‌ முகிலுக்கும்‌,

வாழி! உலகுஎன்‌ ஆற்றும்‌ மற்று. (நக்கீரனார்‌)

(கு-௨) முழுது உணர்ந்து- எல்லா நூற்பொருள்களையும்‌

அறிந்து. ஆனா- அழியாத அறம்‌, பொருள்‌, இன்பம்‌, வீடு

என்பன நான்கு. ஏனோருக்கு- மற்றவர்களுக்கு. ஊழின்‌-

முறைப்படி. மேகமும்‌ வள்ளுவரும்‌ ஒப்பாவர்‌. * “வாழி” என்னும்‌

சொல்லை இறுதியில்‌ வைத்துப்‌ பொருள்‌ கொள்க.

 

8. அறம்‌, பொருள்‌, இன்பம்‌, வீடு என்னும்‌ அந்நான்கின்‌

திறம்தெரிந்து செப்பிய தேவை- மறந்தேயும்‌

“வள்ளுவன்‌” என்பான்‌ஓர்‌ பேதை; அவன்வாய்ச்‌ சொல்‌

கொள்ளார்‌ அறிவுடை யார்‌. (மாமூலனார்‌!

 

(கு-௨) திறம்‌ தெரிந்து- வகைகளை ஆறிந்து. தேவை-

 

தேவரை; தேவர்‌ என்பது வள்ளுவர்க்கு ஓரு பெயர்‌. வள்ளுவன்‌

என்பான்‌- வள்ளுவன்தானே என்று இகழ்ந்து பேசுவோன்‌.

 

9, ஒன்றே பொருள்‌எனின்‌, வேறுஎன்ப; வேறுஎனின்‌,

அன்றுஎன்ப; ஆறு சமயத்தார்‌;- நன்றுஎன

எப்பா லவரும்‌ இயைபவே; வள்ளுவனார்‌

முப்பால்‌ மொழிந்த மொழி. (கல்லாடனார்‌)

 

(கு-௨) அறுவகைச்‌ சமயம்‌- வியாச மதம்‌, சைமினி மதம்‌,

 

பதஞ்சலி மதம்‌, கபில மதம்‌, கணாத மதம்‌, அக்கபாத மதம்‌

என்பன. எப்பாலவரும்‌- எவ்வகைப்‌ பிரிவினரும்‌. இயைபவே-

ஓத்துக்கொள்ளுவார்கள்‌.

 

10. மும்மலையும்‌, முந்நாடும்‌, முந்நதியும்‌, முப்பதியும்‌,

மும்முரசம்‌, முத்தமிழும்‌, முக்கொடியும்‌, - மும்மாவும்‌.

தாம்‌உடைய மன்னர்‌ தடமுடிமேல்‌ தார்‌அுன்றோ?

பாமுறைதேர்‌ வள்ளுவர்முப்‌ பால்‌.

 

(சீத்தலைச்‌ சாத்தனார்‌)

 

(கு-௨) மும்மலை- கொல்லிமலை, நேரிமலை, பொதிய

 

மலை. முந்நாடு- சேர, சோழ, பாண்டியநாடு. முந்ததி- தாமிர

பரணி, காவிரி, வையை. முப்பதி- வஞ்சி, புகார்‌ மதுரை.

 

மும்முரசு- மங்கலமுரசு, வெற்றிமுரசு, கொடைமுரச. முத்தமிழ்‌-

இயல்‌, இசை, நாடகம்‌. முக்கொடி- வில்‌, புலி, மீன்‌. மும்மா-

 

திருக்குறள்‌ பொருள்‌ விளக்கம்‌ ரா

 

 

 

கனவட்டம்‌, பாடலம்‌, கோரம்‌ என்னும்‌ குதிரைகள்‌. மன்னர்‌-

மூவேந்தர்கள்‌. தார்‌- மாலை.

 

11. சீந்திநீர்க்‌, கண்டம்‌ தெறிசுக்குத்‌ தேன்‌ அளாய்‌

மோந்தபின்‌ யார்க்கும்‌ தலைக்குத்துஇல்‌;- காந்தி

மலைக்குத்து மால்யானை! வள்ளுவர்முப்‌ பாலால்‌

தலைக்குந்துத்‌ தீர்வுசாத்‌ தற்கு.

 

(மருத்துவன்‌ தாமோதரனார்‌)

 

(கு-௨) சிந்தி நீர்‌- சந்தி என்னும்‌ கொடியின்‌ சாற்றில்‌ எடுத்த

 

சர்க்கரை. கண்டம்‌ தெரிசக்கு- துண்டாடிப்‌ பொடி செய்த சுக்கு.

தேன்‌ அளாய்‌- தேன்‌ கலந்து. தலைக்‌ குத்து- தலைவலி. காந்தி-

சினந்து. மால்‌ யானை- பெரிய யானையை உடையவனே.

சாத்தற்கு தலைக்குத்து தீர்வு. சாத்தன்‌- சீத்தலைச்‌ சாத்தனார்‌.

தீர்வு: தீர்ந்தது.

 

12. தாள்‌ஆர்‌ மலர்ப்பொய்கை தாம்குடைவார்‌, தண்ணீரை

பேளாது ஒழிதல்‌ வியப்புதன்று; - வாளா தாம்‌

அப்பால்‌ ஒருபாவை ஆய்பவோ? வள்ளுவனார்‌

முப்பால்‌ மொழிழூழ்கு வார்‌. (நாகன்‌ தேவனார்‌)

 

(கு-௨) தாள்‌ ஆர்‌- கொடி அமைந்த. தண்ணீரை- வேறு

 

தண்ணீரை. வேளாது ஓழிதல்‌- விரும்பாமை. வாளா- வீணாக.

“வள்ளுவனார்‌ முப்பால்‌ மொழி மூழ்குவார்‌ வாளாதாம்‌

அப்பால்‌ ஒருபாவை ஆய்பவோ” முப்பால்‌ மொழி: திருக்குறள்‌.

அப்பால்‌- அதன்பின்‌.

 

13, பரந்த பொருள்‌ எல்லாம்‌ பார்அறிய, வேறு

தெரிந்து, திறம்தொறும்‌ சேரச்‌ - சுருங்கிய

சொல்லால்‌ விரித்துப்‌ பொருள்விளங்கச்‌ சொல்லுதல்‌

வல்லார்‌ஆர்‌ வள்ளுவர்‌ அல்லால்‌, (அரிசில்கிழார்‌)

(கு-௨) பார்‌ அறிய- உலகில்‌ உள்ளோர்‌ அறியும்படி. வேறு

தெரிந்து- வெவ்வேறாக ஆராய்ந்து. திறந்தொறும்‌ சேர- வகை

வகையாகத்‌ தொகுத்து. “வள்ளுவர்‌ அல்லால்‌ வல்லார்‌ ஆர்‌”

வல்லார்‌- வல்லவர்‌.

14, கான்றின்ற தொங்கலாய்‌| காசிபனார்‌ தந்ததுமுன்‌

கூறின்று அளந்த குறள்‌என்ப; -நூல்முறையால்‌



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

878 சாமி.சிதம்பரனார்‌ நூற்‌ களஞ்சியம்‌ - 4

 

 

 

வான்நின்று மண்றின்று அளந்ததே, வள்ளுவனார்‌

தாம்நின்று அளந்த குறள்‌. (பொன்முடியார்‌)

(கு-௨) கான்‌ நின்ற- மணம்பொருந்திய. தொங்கல்‌- மாலை.

காசிபனார்‌- காசிப முனிவர்‌. கூநின்று - பூமியில்‌ நின்று. கு- பூமி.

குறள்‌- வாமனம்‌.

 

15. ஆற்றல்‌ அழியும்‌ என்று, அந்தணர்கள்‌ நான்‌ மறையைப்‌

போற்றி உரைத்து, ஏட்டின்‌ புறத்து எழுதார்‌- ஏட்டுஎழுதி

வல்லுநரும்‌, வல்லாரும்‌, வள்ளுவனார்‌ முப்பாலைச்‌

சொல்லிடினும்‌, ஆற்றல்சோர்வு இன்று.  (கோதமனார்‌)

 

(கு-௨) போற்றி உரைத்து- வாய்ப்பாடமாகப்‌ பாதுகாத்துக்‌

 

கூறி. “வள்ளுவனார்‌ முப்பாலை ஏட்டு எழுதி வல்லுநரும்‌,

வல்லாரும்‌ சொல்லிடினும்‌ ஆற்றல்‌ சோர்வு இன்று.” வல்லுநர்‌-

வல்லமையுள்ளவர்‌. வல்லார்‌- வல்லமையற்றவர்‌. ஆற்றல்‌-

வலிமை. சோர்வு- குறைதல்‌.

 

16. ஆயிரத்து முந்நூற்று முப்பது அரும்குறளும்‌

பாயிரத்தி னோடு பகர்ந்ததன்பின்‌- போய்‌ ஒருத்தர்‌

வாய்க்கேட்க நூல்‌உளவோ? மன்னு தமிழ்ப்புலவர்‌

ஆய்க்கேட்க வீற்றிருக்க லாம்‌. (நத்தத்தனார்‌)

 

(கு-௨) “பாயிரத்தினோடு ஆயிரத்து முந்நூற்று முப்பது

 

அரும்‌ குறளும்‌” என்று பொருள்‌ கொள்க. பகர்ந்ததன்பின்‌-

கூறியபின்‌. கேட்க- பிறர்‌ தம்மிடம்‌ வந்து கேட்க. இப்பாடல்‌

திருக்குறளின்‌ எண்ணிக்கையைக்‌ குறித்தது.

 

17. உள்ளுதல்‌ உள்ளி உரைத்தல்‌, உரைத்ததனைத்‌

தெள்ளுதல்‌ அன்றே செயல்பால;- வள்ளுவனார்‌

முப்பாலின்‌ மிக்க மொழிஉண்டு எனப்பகர்வார்‌,

எப்பா வலரினும்‌ இல்‌.

 

(முகையலூர்ச்‌ சிறுகருந்தும்பியார்‌)

 

(கு-௨) உள்ளுதல்‌- நினைத்தல்‌. உள்ளி உரைத்தல்‌-

 

நினைத்துப்‌ பிறர்க்குக்‌ கூறுதல்‌. உரைத்ததனைத்‌ தெள்ளுதல்‌-

பிறர்‌ கூறியதை ஆராய்தல்‌. மிக்க- சிறந்த. எப்பாவலரினும்‌-

எவ்வகைப்பட்ட புலவரிலும்‌.

 

திருக்குறள்‌ பொருள்‌ விளக்கம்‌ 39

 

 

 

18. சாற்றிய பல்கலையும்‌, தப்பா அருமறையும்‌

போற்றி உரைத்த பொருள்‌எல்லாம்‌ - தோற்றவே

முப்பால்‌ மொழிந்த முதல்பா வலர்‌ ஒப்பார்‌

எப்பா வலரினும்‌ இல்‌, (ஆசிரியர்‌ நல்லந்துவனார்‌)

 

(கு-௨) சாற்றிய- சொல்லப்பட்ட. தப்பா- தவறாத.

 

தோற்றவே- காணும்படி. முப்பால்‌ மொழிந்த- திருக்குறளைக்‌

கூறிய. முதற்பாவலர்‌ என்பது வள்ளுவர்க்கு ஒரு பெயர்‌.

 

19. தப்பா முதற்பாவால்‌ தாம்மாண்ட பாடலினால்‌

முப்பாலின்‌ நாற்பால்‌ மொழிந்தவர்‌, - எப்பாலும்‌

வைவைத்த கூர்வேல்‌ வழுதி, மனம்மகிழத்‌

தெய்வத்‌ திருவள்‌ ளுவர்‌. (கீரந்தையார்‌)

 

(கு-௨) “எப்பாலும்‌ வைவைத்த கூர்வேல்‌ வழுதி மனம்‌

 

மகிழ தப்பா...மொழிந்தவர்‌ தெய்வத்‌ திருவள்ளுவர்‌” என்று

மாற்றிப்‌ பொருள்‌ கொள்க. வைவைத்த- கூர்மையாகச்‌ செய்து

வைத்த. வழுதி- பாண்டியன்‌. முதற்பா- குறள்வெண்பா.

முப்பாலின்‌- மூன்று பகுதியில்‌. நாற்பால்‌- நான்கு பகுதிகளையும்‌.

மூன்று: அறத்துப்பால்‌, பொருட்பால்‌, காமத்துப்பால்‌. நான்கு

பகுதி- அறம்‌, பொருள்‌, இன்பம்‌, வீடு.

 

20. வீடுஒன்று பாயிரம்‌ நான்கு; விளங்குஅறம்‌

நாடிய முப்பத்துமூன்று; ஒன்றுஊழ்‌ - கூடுபொருள்‌

எள்ளில்‌ எழுபது; இருபதிற்று ஐந்துஇன்பம்‌;

வள்ளுவர்‌ சொன்ன வகை. (சிறுமேதாவியார்‌)

 

(கு-௨) இது திருக்குறளை வள்ளுவர்‌ எவ்வாறு வகுத்துக்‌

 

கூறினார்‌ என்பதை உரைத்தது. வீடு ஒன்று; வீடுபெறும்‌ தன்மை

பொருந்திய பாயிரம்‌ நான்கு; அதிகாரம்‌ - அறத்துப்பால்‌

முப்பத்து மூன்று அதிகாரம்‌; ஊழ்‌ ஒரு அதிகாரம்‌; பொருட்பால்‌

எழுபது அதிகாரம்‌; காமத்துப்பால்‌ இருபத்தைந்து அதிகாரம்‌.

இவை இப்பாடலில்‌ காண்பவை.

 

21. உப்பக்கம்‌ நோக்கி உபகேசி தோள்மணந்தான்‌

உத்தர மாமதுரைக்கு அச்சஎன்ப- இப்பக்கம்‌

மாதாநு பங்கி, மறுவில்‌ புலச்செந்நாப்‌

 

போதார்‌, புனல்கூடற்கு அச்ச. (நல்கூர்‌ வேள்‌ வியார்‌)



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 880. சாமி.சிதம்பரனார்‌ நூற்‌ களஞ்சியம்‌ - 4

 

 

 

(கு-௨) உப்பக்கம்‌ நோக்கி- வடக்கு நோக்கி. உபகேசி-

நப்பின்னைப்‌ பிராட்டி. தோள்‌ மணந்தான்‌- தோளைத்‌ தழுவிய

கண்ணன்‌. உத்தர மாமதுரை- வட மதுரை. அச்சு- ஆதரவு.

மாதாநு பங்கி, செந்நாப்‌ போதார்‌; வள்ளுவர்‌ பெயர்கள்‌.

மறுஇல்‌ புலம்‌- குற்றமற்ற அறிவினையுடைய. கூடல்‌- மதுரை.

 

22, அறம்நான்கு; அறிபொருள்‌ ஏழ்‌; ஒன்று காமத்‌

திறம்மூன்று; எனப்பகுதி செய்து - பெறல்‌அரிய

நாலும்‌ மொழிந்தபெரு நாவலரே நன்கு உணர்வார்‌

போலும்‌ ஒழிந்த பொருள்‌.

(தொடித்தலை விழுத்தண்டினார்‌)

 

(கு-௨) அறம்‌ நான்கு- அறத்துப்பால்‌ பாயிரம்‌, இல்லறவியல்‌,

துறவியல்‌, ஊழ்‌ இயல்‌ என்ற நான்கு பகுதியை உடையது.

அறிபொருள்‌- அறியத்தக்க பொருட்பால்‌ ஏழ்‌- அரசியல்‌,

அமைச்சியல்‌, அரண்‌ இயல்‌, கூழியல்‌, படையியல்‌, நட்பியல்‌,

ஓழிபியல்‌ என ஏழு பகுதிகளையுடையது. காமத்திறம்‌ மூன்று-

காமத்துப்‌ பாலின்‌ வகை மூன்று. அவை, ஆண்பால்‌ கூற்று,

பெண்பால்‌ கூற்று, இருபால்கூற்று என்பன. நாலும்‌- அறம்‌,

பொருள்‌, இன்பம்‌, வீடு ஆகிய நான்கையும்‌.

 

23. செய்யா மொழிக்கும்‌, திருவள்ளுவர்‌ மொழிந்த

 

பொய்யா மொழிக்கும்‌ பொருள்‌ஒன்றே;- செய்யா

அதற்குரியர்‌ அந்தணரே, ஆராயின்‌, ஏனை

இதற்குரியர்‌ அல்லாதார்‌ இல்‌. (வெள்ளி வீதியார்‌)

 

(கு-௨ செய்யாமொழி- வேதம்‌. பொய்யாமொழி: திருக்குறள்‌.

செய்யா அதற்கு- வேதத்துக்கு. வேதம்‌ அந்தணர்க்கு உரியது;

குறள்‌ எல்லோர்க்கும்‌ பொது. வேதப்பொருளும்‌, திருக்குறட்‌

பொருளும்‌ ஓன்றே என்றது இச்செய்யுள்‌.

 

24, ஓதற்கு எளிதாய்‌ உணர்தற்கு அரிதுஆசி,

 

பேதப்‌ பொருளாய்‌ மிகவிளங்கித்‌ - தீதுஅற்றோர்‌

உள்ளுதொறும்‌ உள்ளுதொறும்‌ உள்ளம்‌ உருக்குமே

வள்ளுவர்‌ வாய்மொழி மாண்பு. (மாங்குடி மருதனார்‌)

 

(கு-௨) இது திருக்குறளின்‌ சிறப்பை உரைக்கின்றது. ஓதற்கு-

படிப்பதற்கு. அரிது ஆகி- அரிய பொருள்களை உடையதாகி.

உள்ளுதொறும்‌- நினைக்குந்‌ தோறும்‌.

 

திருக்குறள்‌ பொருள்‌ விளக்கம்‌ 881

 

 

 

25. பாயிரம்‌ நான்கு; இல்‌ லறம்‌ இருபான்‌; பன்மூன்றே

தூயதுறவறம்‌; ஒன்றுனழ்‌; ஆக- ஆய

அறத்துப்பால்‌ நால்வகையா ஆய்ந்து உரைத்தார்‌ நூலின்‌

திறத்துப்பால்‌ வள்ளுவனார்‌ தேர்ந்து.

(எறிச்சலூர்‌ மலாடனார்‌)

(கு-௨) இது அறத்துப்பாலின்‌ பிரிவைப்பற்றிக்‌ கூறுகின்றது.

வள்ளுவனார்‌ நூலில்‌ திறத்து- திருவள்ளுவர்‌ தமது நூலின்கண்‌.

பால்‌ தேர்ந்து- பகுக்கவேண்டிய முறையை ஆராய்ந்து. பாயிரம்‌

நான்கு- பாயிரம்‌ நான்கு அதிகாரம்‌. இல்லறம்‌ இருபான்‌-

இல்லறவியல்‌ இருபது அதிகாரம்‌. துறவறம்‌ பன்மூன்று -

துறவறவியல்‌ பதின்மூன்று அதிகாரம்‌. ஊழ்ஓன்று- ஊழ்‌இயல்‌

ஒரு அதிகாரம்‌.

26. அரசியல்‌ ஐஜந்து; அமைச்சியல்‌ ஈர்ஐந்து:

உருவல்‌ அரண்‌ இரண்டு; ஒன்றுஒண்கூழ்‌ - இருவியல்‌

திண்படை; நட்புப்‌ பதினேழ்‌; குடிபதின்மூன்று

எண்பொருள்‌ ஏழாம்‌ இவை. (போக்கியார்‌)

(கு-௨) இது பொருட்பாலின்‌ பிரிவை உணர்த்துகின்றது.

அரசியல்‌ ஐஜந்து- அரசியல்‌ இருபத்தைந்து அதிகாரம்‌.

அமைச்சியல்‌ ஈர்ஐந்து- அமைச்சியல்‌ பத்து அதிகாரம்‌. உருவல்‌

அரண்‌ இரண்டு- சிறந்த வலிய அரண்‌ இயல்‌ இரண்ட திகாரம்‌.

ஒன்று ஓண்கூழ்‌- கூழ்‌ இயல்‌ ஓரு அதிகாரம்‌. இருஇயல்‌

திண்படை- படை இயல்‌ இரண்டு அதிகாரம்‌. நட்பு பதினேழ்‌-

நட்பியல்‌ பதினேழு அதிகாரம்‌. குடி. பதின்மூன்று- ஓழிபுஇயல்‌

பதின்மூன்று அதிகாரம்‌. எண்பொருள்‌ ஏழாம்‌ இவை- எண்ணப்‌

பட்ட பொருட்பாலின்‌ பகுதி ஏழாகிய இவைகள்‌.

27. கூண்பால்‌ ஏழ்‌ கறு இரண்டு பென்பால்‌: குடுத்து

பூண்பால்‌ இருபால்‌ஓர்‌ ஆறாக; - மாண்பாய

காமத்தின்‌ பக்கம்‌ ஒரு மூன்றுகக்‌ கட்டுரைத்தார்‌

நாமத்தின்‌ வள்ளுவனார்‌ நன்கு. (மோசிகீரனார்‌)

(கு-௨) இது காமத்துப்பாலின்‌ பகுதிகளைக்‌ கூறுகின்றது.

ஆண்பால்‌ ஏழ்‌- ஆண்பால்‌ இயல்‌ ஏழு அதிகாரம்‌. ஆறு இரண்டு

பெண்பால்‌- பெண்பால்‌ இயல்‌ பன்னிரண்டு அதிகாரம்‌. அடுத்து

அன்பு பூண்பால்‌- ஓருவரை ஒருவர்‌ நெருங்கி அன்பு கொள்வ

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 682 சாமி.சிதம்பரனார்‌ நூற்‌ களஞ்சியம்‌ - 4

 

 

 

தாகிய. இருபால்‌ ஓர்‌ஆறு- இருபால்‌ இயல்‌ ஆறு அதிகாரம்‌.

நாமத்தின்‌- பெயரில்‌ சிறந்த. (22 - வது வெண்பாவில்‌ உள்ள

பொருள்‌ 25, 26, 2727 ஆகிய மூன்று வெண்பாக்களில்‌

விரித்துரைக்கப்பட்டது).

28 ஐஜறும்‌, நூறும்‌ அதிகாரம்‌ மூன்றும்‌ ஆம்‌,

மெய்‌ஆய வேதப்‌ பொருள்விளங்கப்‌ - பொய்யாது

தந்தான்‌ உலகிற்குத்‌ தான்‌, வள்ளுவன்‌ ஆகி

அம்தா மரைமேல்‌ அயன்‌.

(காவிரிப்பூம்பட்டினத்துக்‌ காரிக்கண்ணனார்‌)

(கு-௨) ஐஆறும்‌, நூறும்‌ அதிகாரம்‌ மூன்றுமாய்‌- நூற்று

முப்பத்துமூன்று அதிகாரங்களாய்‌. “அம்தா மரைமேல்‌ அயன்‌

வள்ளுவன்‌ ஆகி என்பதை முதலில்‌ வைத்துப்‌ பொருள்‌

கொள்ள வேண்டும்‌. இது திருக்குறளின்‌ அதிகார எண்ணிக்கை

யைக்‌ கூறிற்று. வள்ளுவர்‌ நான்முகன்‌ அவதாரம்‌

29. எல்லாப்‌ பொருளும்‌ இதன்பால்‌ உள; இதன்பால்‌

இல்லாத எப்பொருளும்‌ இல்லை; ஆல்‌ - சொல்லால்‌

பரந்த பாவால்‌ என்பயன்‌? வள்ளுவனார்‌

சுரந்தபா வையத்‌ துணை, (மதுரைத்‌ தமிழ்‌ நாகனார்‌)

(கு-௨) எல்லாப்பொருளும்‌- பலவகை நூல்களில்‌ சொல்லப்‌

படும்‌ எல்லாப்‌ பொருள்களும்‌. வள்ளுவனார்‌ சுரந்தபா- திருக்குறளே.

வையத்‌ துணை- உலகினர்க்குத்‌ துணையாகும்‌.

30, எப்பொருளும்‌, யாரும்‌, இயல்வின்‌ அறிவுறச்‌

செப்பிய வள்ளுவர்தாம்‌; செப்பவரும்‌ - முப்பாற்குப்‌

பாரதம்‌, சீராம கதை, மனுப்‌, பண்டைமறை

நேர்வன; மற்றுஇல்லை நிகர்‌,

(பாரதம்‌ பாடிய பெருந்தேவனார்‌)

(கு-௨) இயல்பின்‌- முறைப்படி. செய்பவரும்‌- சொல்லவந்த.

முப்பாற்கு- திருக்குறளுக்கு. குறளுக்கு பாரதம்‌, இராமாயணம்‌,

மனுநீதி, வேதங்கள்‌ இவைகளே ஓப்பாகும்‌; மற்றுநிகர்‌ இல்லை.

31, மணல்கிளைக்க நீர்ஊறும்‌; மைந்தர்கள்‌ வாய்வைத்து

உணச்சரக்கும்‌ தாய்முலை ஒண்பால்‌| - பிணக்கு இலா

 

திருக்குறள்‌ பொருள்‌ விளக்கம்‌ 883

 

 

 

வாய்மொழி வள்ளுவர்‌ முப்பால்‌ மதிப்புலவோர்க்கு

ஆய்தொறும்‌ ஊறும்‌ அறிவு, (உருத்திரசன்மர்‌)

 

(கு-௨) பிணக்கு இலா- வெறுப்பதற்கு இடமில்லாத.

 

“வள்ளுவர்‌ முப்பால்‌ ஆய்தொறும்‌ மதிப்புலவோர்க்கு அறிவு

ஊறும்‌” என்று பொருள்‌ கொள்க. மணல்நீர்‌ ஊற்றும்‌, தாய்‌

முலையும்‌ குறளுக்கு உவமைகள்‌.

 

32. தம்‌ இல்வள்ளுவர்‌ இன்குறள்‌ வெண்பாவினால்‌

ஓதிய ஒண்பொருள்‌ எல்லாம்‌- உரைத்ததனால்‌,

தாதுஅவிழ்‌ தார்மாற தாமே? தமைப்பயந்த

வேதமே மேதக்‌ கன? (பெரும்சித்திரனார்‌)

 

(கு-௨) “தாதுஅவிழ்‌ தார்‌ மாற! ஏதம்‌....உரைத்ததனால்‌

 

தாமே..மேதக்கன?” ஏதம்‌- குற்றம்‌. ஓதிய- வேதங்களில்‌ சொல்லப்‌

பட்ட. தாமே- திருக்குறளோ. தமைப்பயந்த வேதமே: திருக்குறள்‌

பாடல்களைத்‌ தந்த வேதமோ. மேதக்கன- இவற்றுள்‌ சிறந்தன

எவை? தாது- மகரந்தம்‌. தார்‌- மாலை.

 

33, இன்பம்‌,பொருள்‌, அறம்வீடு என்னும்‌ இந்நான்கும்‌

முன்புஅறியச்‌ சொன்ன முதுமொழிநூல்‌- மன்பதை கட்கு

உள்ள அரிது; என்று அவை, வள்ளுவர்‌ உலகம்‌

கொள்ள மொழிந்தார்‌ குறள்‌. (நரிவெரூஉத்தலையார்‌)

 

(கு-௨) முதுமொழி நூல்‌- வேதம்‌. மன்பதை- மக்கள்‌. உள்ள

 

அரிது- ஓதி உணர்வதற்கு அரிதானது. அவை- அவ்வேதப்‌

பொருள்களை. “அவை உலகம்‌ கொள்ள வள்ளுவர்‌ குறள்‌

மொழிந்தார்‌” என்று மாற்றிப்‌ பொருள்‌ கொள்ளுக.

 

34. புலவர்‌ திருவள்‌ ளுவர்‌ அன்றிப்‌ பூமேல்‌

சிலவர்‌ புலவர்‌ எனச்‌ செப்பல்‌, நிலவு

பிறங்குஓளி மாலைக்கும்‌ பெயர்மாலை; மற்றும்‌

கறங்குஇருள்‌ மாலைக்கும்‌ பெயர்‌.

 

(மதுரைத்‌ தமிழாசிரியர்‌ செங்குன்றூர்க்கிறார்‌)

 

(கு-௨) நிலவுஓளி வீசும்‌ மாலைக்‌ காலத்தையும்‌, மாலை

 

என்று கூறுவர்‌; நிலவு இல்லாத இருட்டுள்ள மாலைக்‌

காலத்தையும்‌ மாலையென்று கூறுவர்‌. இது போன்றதே

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

664 சாமி.சிதம்பரனார்‌ நூற்‌ களஞ்சியம்‌ - 4

 

 

 

திருவள்ளுவரையும்‌ புலவர்‌ என்று சொல்லி, வேறு சிலரையும்‌

புலவர்‌ என்று கூறுவது.

 

35. இன்பமும்‌ துன்பமும்‌ என்னும்‌ இவைஇரண்டும்‌,

மன்பதைக்கு எல்லாம்‌ மனம்மகிழ - அன்புஒழியாது

உள்ளி உணர உரைத்தாரே; ஓதுசீர்‌

வள்ளுவர்‌ வாயுறை வாழ்த்து.

 

(மதுரை அறுவை வாணிகன்‌ இனவேட்டனார்‌.)

 

(கு-௨) “ஓதுசீர்‌ வள்ளுவர்‌ இன்பமும்‌. . . உள்ளி உணர,

 

வாயுறை வாழ்த்து உரைத்தாரே' என்று மாற்றிப்‌ பொருள்‌

கொள்க. திருக்குறளை வாயுறை வாழ்த்தாகக்‌ கூறினார்‌. வாயுறை

வாழ்த்து என்பதுநன்மை - தீமைகளை எடுத்துக்கூறி அறிவுறுத்துவது.

 

36. பூவிற்ருத்‌ தாமரையே, பொன்னுக்குச்‌ சாம்புனதம்‌,

ஆவிற்கு அருமுனியாய்‌, யானைக்கு அமரர்‌ உம்பல்‌,

தேவில்‌ திருமால்‌, எனச்சிறந்தது என்பவே

பாவிற்கு வள்ளுவர்‌ெண்‌ பா.

 

(கவிசாகரப்‌ பெருந்தேவனார்‌)

 

(கு-௨) பூவில்‌ சிறந்தது தாமரை. பொன்னில்‌ சிறந்தது

 

சாம்புனதம்‌. பசுவில்‌ சிறந்தது காமதேனு. யானையில்‌ சிறந்தது

 

தேவர்‌ யானையாகிய ஐராவதம்‌. தேவர்களில்‌ திருமால்‌

சிறந்தவர்‌. பாடல்களிலே வள்ளுவர்‌ குறள்‌ வெண்பா சிறந்தது.

 

37. அறம்முப்பத்‌ தெட்டுப்‌, பொருள்‌எழுபது, இன்பத்‌

திறம்‌இருபத்து ஐந்தால்‌ தெளிய- முறைமையால்‌

வேத விழுப்பொருளை வெண்குறளால்‌ வள்ளுவனார்‌

ஒத வருக்கற்றது உலகு.

 

(கு-௨) அறம்‌ முப்பத்தெட்டு- அறத்துப்பால்‌ முப்பத்தெட்டு

அதிகாரம்‌. பொருள்‌ எழுபது- பொருட்பால்‌ எழுபது அதிகாரம்‌.

இன்பத்‌ திறம்‌ இருபத்தைந்து- இன்பத்துப்பால்‌ இருபத்தைந்து

அதிகாரம்‌. உலகு வழுக்குஅற்றது- உலகம்‌ குற்றத்திலிருந்து

தப்பியது. இச்செய்யுள்‌ திருக்குறள்‌ அதிகார எண்ணிக்கையைக்‌

 

கூறியது.

38, அறம்முதல்‌ நான்கும்‌ அகல்‌இடத்தோர்‌ எல்லாம்‌

'திறம்‌உறத்‌ தேர்ந்து தெளியக்‌ குறள்வெண்பாப்‌

 

திருக்குறள்‌ பொருள்‌ விளக்கம்‌ 885

 

 

 

பன்னிய வள்ளுவனார்‌ பால்முறைநேர்‌ ஒவ்வாதே

முன்னை முதுவோர்‌ மொழி. (கோஷர்கிறார்‌)

(கு-௨) அகல்‌ இடத்தோர்‌- பெரிய இவ்வுலகில்‌ உள்ளோர்‌.

திறம்‌உற- வகைப்பட. வள்ளுவனார்‌ பால்‌ முறை நேர்‌- வள்ளுவரின்‌

முப்பால்‌ நீதிக்கு எதிரில்‌. முன்னை முதுவோர்‌ மொழி

ஓவ்வாதுஏ- பழம்புலவர்கள்‌ மொழிந்த நூல்களும்‌ ஓப்பாகாது.

39, தேவிற்‌ சிறந்த திருவள்ளுவர்‌, குறள்வெண்‌

பாவில்‌ சிறந்திடும்‌ முப்பால்பகரார்‌- நாவிற்கு

உயல்‌இல்லை; சொற்சுவை ஓர்வுஇல்லை; மற்றும்‌

செயல்‌இல்லை என்னும்‌ திரு. (உறையூர்‌ முதுகூற்றனார்‌)

(கு-௨) திருவள்ளுவர்‌- திருவள்ளுவரது. குறள்‌ வெண்பாவில்‌

சிறந்திடும்‌- குறள்‌ வெண்பாக்களால்‌ அமைந்து சிறந்திருக்கின்ற.

முப்பால்‌- முப்பால்‌ நூலை. பகரார்‌- சொல்லாதவர்களின்‌. உயல்‌

இல்லை- வாழ்வில்லை. ஓர்வு- உணர்ச்சி. என்னும்‌ திரு- என்று

நினைத்து இலக்குமி சேரமாட்டாள்‌.

40. இம்மை மறுமை இரண்டும்‌ எழுமைக்கும்‌

செம்மை நெறியில்‌ தெளிவுபெற மும்மையின்‌,

வீடுஅவற்றின்‌ நான்கின்‌ விதிவழங்க, வள்ளுவனார்‌

பாடினர்‌ இன்குறள்வெண்‌ பா.

(இழிகட்பெரும்கண்ணனார்‌)

(கு-௨) இம்மை மறுமை இரண்டும்‌- இம்மை மறுமை

இரண்டின்‌ பயனையும்‌. எழுமைக்கும்‌- ஏழுபிறப்பினும்‌. செம்மை

நெறியில்‌- நல்ல முறையிலே. தெளிவு பெற- அறிந்து தெளியும்படி.

மும்மையின்‌- முப்பால்களில்‌. வீடு அவற்றின்‌ நான்கின்‌

விதிவழங்க - வீடோடு கூடிய அவைகள்‌ நான்கின்‌ விதிகளையும்‌

கூற; “வள்ளுவர்‌ இக்குறள்‌ வெண்பா பாடினர்‌.”

41. ஆவனவும்‌ ஆகா தனவும்‌ அறிவுடையார்‌

யாவரும்‌ வல்லார்‌எடுத்து இயம்பத்‌ தேவர்‌

திருவள்‌ ளுவர்தாமும்‌ செப்பியவே செய்வார்‌;

பொருவில்‌ ஒழுக்கம்பூண்‌ டார்‌.

 

(செயிர்க்காவிரியார்‌ மகனார்‌ சாத்தனார்‌!



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

686 சாமி.சிதம்பரனார்‌ நூற்‌ களஞ்சியம்‌ - 4

 

 

 

(கு-௨) “அறிவுடையார்‌ யாவரும்‌ எடுத்து இயம்ப

வல்லார்‌”, “பொருவில்‌ ஓழுக்கம்‌ பூண்டார்‌ தேவர்‌

திருவள்ளுவர்‌ தாம்‌ செப்பியவே செய்வார்‌”. அறிவுள்ளவர்கள்‌

இிருக்குறளிலிருந்தே செய்யக்கூடியன இவை, செய்யக்கூடாதன

இவை என்பதை எடுத்துக்கூற வல்லவர்‌ ஆவார்‌- ஓழுக்கம்‌

உள்ளவர்‌ திருவள்ளுவர்‌ கூறியபடியே நடப்பார்கள்‌. தேவர்‌

இிருவள்ளுவர்‌- தேவராகிய திருவள்ளுவர்‌.

 

42, வேதப்‌ பொருளை விரகால்‌ விரித்து, உலகோர்‌

 

ஓதத்‌ தமிழால்‌ உரைசெய்தார்‌; ஆதலால்‌,

உள்ளுநர்‌ உள்ளும்‌ பொருள்‌ எல்லாம்‌ உண்டுஎன்ப

வள்ளுவர்‌ வாய்மொழி மாட்டு,

 

(செயலூர்க்‌ கொடும்‌ செங்கண்ணனார்‌)

 

(கு-௨) விரகால்‌ விரித்து - அறிந்துகொள்ளும்‌ உபாயத்தால்‌

விரிவாக. உள்ளுநர்‌ - நினைக்கின்றவர்‌. “வள்ளுவர்‌ வாய்மொழி

மாட்டு உள்ளுநர்‌ உள்ளும்‌ பொருள்‌ எல்லாம்‌ உண்டு என்ப”

என்று பொருள்‌ கொள்க.

 

43. ஆரியமும்‌ செந்தமிழும்‌ ஆராய்ந்து, இதனின்‌இது

 

சீரியது என்றுஒன்றைச்‌ செப்பரிதுஆல்‌; ஆரியம்‌,

வேதம்‌ உடைத்துத்‌ தமிழ்‌, திரு வள்ளுவனார்‌

ஓது குறட்பா உடைத்து. (வண்ணக்கம்‌ சாத்தனார்‌)

 

(கு-௨) இதனின்‌ இது சீரியது- இதைவிட இது சிறந்தது.

செப்ப அரிது- சொல்லமுடியாது. ஆரியம்‌- வடமொழி.

 

44. ஒருவர்‌ இருகுறளே முப்பாலின்‌ ஒதும்‌

 

தருமம்‌ முதல்நான்கும்‌ சாலும்‌;- அருமறைகள்‌

ஐந்தும்‌, சமயநூல்‌ ஆறும்‌, நம்‌ வள்ளுவனார்‌

புந்தி மொழிந்த பொருள்‌. (களத்தூர்கிளார்‌)

 

(கு-௨) ஒருவர்‌- ஒருவர்க்கு. இருகுறளே- சிறந்த குறளிலே.

முப்பாலின்‌ ஓதும்‌- மூன்று பகுதியிலும்‌ கூறப்படும்‌. சாலும்‌-

போதுமானதாகும்‌. அருமறைகள்‌ ஐந்து- இருக்கு, எசுர்‌, சாமம்‌,

அதர்வணம்‌, பாரதம்‌ என்பன. சமயநூல்‌ ஆறும்‌- அறுவகைச்‌

சமயங்களுக்குரிய ஆறு நூல்கள்‌. (சமயம்‌ ஆறு 9-ஆம்‌ வெண்பா

பார்க்க.)

 

திருக்குறள்‌ பொருள்‌ விளக்கம்‌ 3

 

 

 

45, எழுத்து, அசை, சீர்‌, அடி, சொல்‌, பொருள்‌, யாப்பு,

வழுக்குஇல்‌ வனப்புஅணி, வண்ணம்‌, இருக்கின்றி

என்றுஎவர்‌ செய்தன எல்லாம்‌ இயம்பின

இன்றுஇவர்‌ இன்குறள்வெண்‌ பா, (நச்சமனார்‌)

 

(க-௨) எழுத்துமுதல்‌ வண்ணம்வரை உள்ளவை

செய்யுளின்‌ இயல்பு. இழுக்குஇன்றி - குற்றம்‌ இல்லாமல்‌ குறள்‌

வெண்பாவில்‌ எழுத்து முதல்‌ வண்ணம்‌ வரையுள்ள இயல்புகள்‌

அமைந்துள்ளன.

 

46, கலைநிரம்பிக்‌ காண்டற்கு இனிதுஆகிக்‌ கண்ணின்‌

நிலைநிரம்பு நீர்மைத்து எனினும்‌ தொலைவுஇலா

வான்ஊர்‌ மதியம்‌ தனக்கு உண்டோ, வள்ளுவர்முப்‌

பால்நூல்‌ நயத்தின்‌ பயன்‌ (அக்காரக்கனி நச்சமனார்‌)

 

(கு-௨) கலைநிரம்பி- கதிர்நிறைந்து. கண்ணின்‌ நிலை-

கண்ணால்பார்க்கும்‌ நிலையில்‌. நிரம்பும்‌ நீர்மைத்து- நிறைந்திருக்கும்‌

தன்மையுடையது. தொலைவுஇலா- அழிவில்லாத. வான்‌- வானம்‌.

“வள்ளுவர்‌ முப்பால்‌ நூல்‌ நயத்தினால்‌ வரும்‌ வயன்‌ தொலைவுஇலா

வான்களர்‌ மதியம்‌ தனச்கு உண்டோ” என்று மாற்றிப்‌ பொருள்‌ கொள்க.

 

47. அறம்தகளி, ஆன்ற பொருள்திரி, இன்பு

சிறந்தநெய்‌, செஞ்சொல்தீத்‌ தண்டு குறும்பாவா

வள்ளுவனார்‌ ஏற்றினார்‌ வையத்து வாழ்வார்கள்‌

உள்‌இருள்‌ நீக்கும்‌ விளக்கு. (நப்பாலத்தனார்‌)

 

(கு-௨) திருக்குறள்‌ மக்கள்‌ மன இருட்டை நீக்கும்‌ விளக்காகும்‌.

அறம்‌ அகல்‌; பொருள்திரி; இன்பம்‌ நெய்‌; செஞ்சொல்‌ தண்டு;

குறள்வெண்பா தீ. இவ்வாறு அமைந்தது திருக்குறள்‌ விளக்கு. ஆன்ற-

சிறந்த. “செம்சொல்‌ தண்டு; த குறும்பாவா” என்று மாற்றிப்‌ பொருள்‌

கொள்ளுக.

 

48. உள்ளக்‌ கமலம்‌ மலர்த்தி, உளத்துள்ள

 

தள்ளற்கு அரியஇருள்‌ தள்ளுதலால்‌, வள்ளுவனார்‌

வெள்ளைக்‌ குறட்பாவும்‌ வெம்கதிரும்‌ ஒக்கும்‌எனக்‌

கொள்ளத்‌ தகும்‌ குணத்தைக்‌ கொண்டு.

 

 

(குலபதி நாயனார்‌!



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 665 சாமி.சிதம்பரனார்‌ நூற்‌ களஞ்சியம்‌ - 4

 

 

 

(கு-௨) குறளும்‌ சூரியனும்‌ ஓரு தன்மையுடையன என்று

கூறுகிறது இச்செய்யுள்‌. தன்ளற்கு அரிய இருள்‌- நீக்க முடியாத

அறியாமை என்னும்‌ இருட்டை. வெள்ளைக்குறட்பா- குறள்‌

வெண்பா.

 

49. பொய்ப்பால பொய்யேயாய்ப்‌ போயின; பொய்‌அல்லா

மெய்ப்பால மெய்யாய்‌ விளங்கினவே; முப்பாலில்‌

தெய்வத்‌ திருவள்‌ ளுவர்செப்‌ பியகுறளால்‌,

வையத்து வாழ்வார்‌ மனத்து. (தேனீக்குடிக்‌ கீரனார்‌)

 

(கு-௨) “முப்பாலில்‌...மனத்து, பொய்ப்பால ...விளங்கினவே”

 

என மாற்றுக. பொய்ப்பால- பொய்த்‌ தன்மையுடையன.

மெய்ப்பால- மெய்யாயின.

 

50. றன்‌ அறிந்தேம்‌; ஆன்ற பொருள்‌ அறிந்தேம்‌; இன்பின்‌

திறன்‌ அறிந்தேம்‌; வீடு தெளிந்தேம்‌; மறன்‌ எறிந்த

வாள்‌ஆர்‌ நெடுமாற! வள்ளுவனார்‌ தம்‌ வாயால்‌

கேளா தனவெல்லாம்‌ சேட்டு.

(கொடிஞாழன்‌ மாணிபூதனார்‌)

(கு-௨) “மறன்‌ எறிந்த... கேட்டு, அறன்‌ அறிந்தேம்‌...

தெளிந்தேம்‌” என்று மாற்றிப்‌ பொருள்‌ கொள்க. ஆன்ற- சிறந்த.

மறன்‌ எறிந்த- பகைவரைக்கொன்ற. வாள்‌ஆர்‌- வாளாயும்‌ ஏந்திய.

51. சிந்தைக்கு இனிய; செவிக்கு இனிய; வாய்க்குஇனி௰;

வந்த இருவிளைக்கு மாமருந்து; முந்திய

நன்னெறி நாம்‌ அறிய நாப்புலமை வள்ளுவனார்‌

பன்னிய இன்குறள்வெண்‌ பா. (கவுணியனார்‌)

(கு-௨) முந்திய பழமையான. வந்த- தொடர்ந்து வந்த.

இருவினை- நல்வினை, தீவினை. நல்நெறி- நல்லொழுக்கங்களை.

நாப்புலமை- நாவன்மையும்‌ புலமையும்‌ நிறைந்த.

52. வெள்ளி, வியாழம்‌, விளங்கு இரவி, வெண்திங்கள்‌

பொள்‌என நீக்கும்‌ புறஇருளை; - தெள்ளிய

வள்ளுவர்‌ இன்குறள்‌ வெண்பா, அகிலத்தோர்‌

உள்‌இருள்‌ நீக்கும்‌ ஒளி. (மதுரைப்பாலாசிரியனார்‌)

 

திருக்குறள்‌ பொருள்‌ விளக்கம்‌ 389.

 

 

 

(கு-௨) இரவி- சூரியன்‌. பொள்‌என- விரைவில்‌. உள்‌ இருள்‌-

மன இருள்‌. வெள்ளி முதலியன மனத்திருளை நீக்கமாட்டா.

வெள்ளி, வியாழம்‌ இரண்டும்‌ பிரகாசம்‌ உள்ள நட்சத்திரங்கள்‌.

 

53. வள்ளுவர்‌ பாட்டின்‌ வளம்‌ உரைக்கின்‌, வாய்மடுக்கும்‌

 

தெள்‌ அழுதின்‌ தீம்சவையும்‌ ஒவ்வாதுஆல்‌:-

தெள்துமுதம்‌

 

உண்டுஅறுவார்‌ தேவர்‌; உலகு அடைய உண்ணும்‌ஆல்‌

 

வண்தமிழின்‌ முப்பால்‌ மகிழ்ந்து, (ஆலங்குடி வங்களார்‌)

 

(கு-௨) வாய்மடுக்கும்‌- உண்ணப்படுகின்ற. தீம்‌ சுவையும்‌-

இனிய சுவையும்‌. “வண்தமிழின்‌ முப்பால்‌ மகிழ்ந்த உலகு

அடைய உண்ணும்‌ ஆல்‌”. முப்பால்‌- திருக்குறளாகிய

அமுதத்தை. மகிழ்ந்து- மகிழ்ச்சியுடன்‌. உலகுஅடைய- உலகம்‌

முழுவதும்‌.

 

54, கடுகைத்‌ துளைத்துஏழ்‌ கடலைப்‌ புகட்டிக்‌

 

குறுகத்‌ தறித்த குறள்‌, (இடைக்காடர்‌)

 

(கு-௨) கடுகின்‌உள்‌ ஏழு கடலையும்‌ புகுத்தி வைத்தது

போன்றது திருக்குறள்‌.

 

55. அணுவைத்‌ துளைத்துஏழ்‌ கடலைப்‌ புகட்டிக்‌

 

குறுகத்‌ தறித்த குறள்‌. (ஒளவையார்‌)

 

(கு-௨) அணுவுக்குள்‌ ஏழு கடல்களையும்‌ புகுத்தி வைத்தது

போன்றது திருக்குறள்‌.

 

“4

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard