Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: முகலராஜபுரம் குகைக் கோவில்கள்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
முகலராஜபுரம் குகைக் கோவில்கள்
Permalink  
 


 முகலராஜபுரம் குகைக் கோவில்கள்

 

https://en.wikipedia.org/wiki/Mogalrajapuram_Caves

https://www.trawel.co.in/city/Vijayawada/mogalarajapuram-caves

 

ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவிற்கு ஐந்து கிலோமிட்டர் தொலைவில் உள்ள ஒரு பாரம்பர்ய சின்னம் மொகலராஜபுரம் குடைவரைகள். இந்த குடைவரைகள் ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டினை சார்ந்ததாக பல தரவுகள் இருந்தாலும் இங்குள்ள குடைவரைகளில் இரண்டு பௌத்த குடைவரைகளாகவும் மூன்று இந்து சமய குடைவரைகளாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. கிருஷ்ணா மாவட்டத்தில் விஜயவாடாவின் கஸ்தூரிபாய்ப்பேட்டை என்னும் இடத்தில் உள்ள இந்த குடைவரைகள் 19 அடி உயரம் வரையிலும் சிறிய பாறை போன்ற குன்றுப்பகுதியில் செதுக்கப்பட்டுள்ளன. ஒரு மலைமுகட்டின் இருபகுதிகளில் தனித்தனியே இவை உருவாக்கப்பட்டவை. கருவறை, முகமண்டபம் ஆகியவைகளுடன் பாறையின் வெளிப்பகுதிகளில் இருந்து ஆரம்பித்து படிப்படியாக வெட்டி உருவாக்கப்பட்ட இந்த குடைவரைகளில் இனி முதலாம் குடைவரைக்கு வருவோம். இக்குடைவரையின் மற்றோரு பக்கத்தில் அமைந்துள்ளதே இரண்டாவது குடைவரை. 

முதலாம் குடைவரை கருவறை, முன்மண்டபம் ஆகியவை கொண்ட ஒரு சிறு ஆலயமாக வடிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தில் இரண்டு தூண்கள் கொண்ட முன்மண்டபத்தில் நடுவில் அமைந்துள்ள வாயிலுக்குள் பிரவேசிக்க மூன்று படிகளையும் காண்கிறோம். சதுர வடிவ ப்ரஹ்மகாந்த தூண்களில் நடுப்பகுதி விஷ்ணுகாந்தமாக எட்டுபட்டைகளுடன் அமைந்துள்ள. மேலே உள்ள கபோதம் மற்றும் தூண்களின் பொது அமைப்பு முற்கால குடவரைகளின் பாணியை ஒத்துள்ளது. இந்த வெட்டு போதிகைகளின் மேலே அமைந்த கபோதத்தின் நெற்றியில் நாசிக்கூடுகள் வெட்டப்பட்டுள்ளன. போதிகையின் கீழ்ப்பகுதியில் வரிவடிவங்கள் தொகுப்பாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. மிகவும் முற்காலங்களில் இந்த போதிகை எந்தவித அழகு உறுப்புகளும் இல்லாமல் வெறுமனே வளைந்த வடிவுடனோ அல்லது நீள்சதுர வடிவுடனோதான் அமைக்கப்பட்டன. ஆனால் இங்கோ கீழ்ப்பகுதியில் படிப்படிகளாக அமைந்தவாறு உருவாக்கப்பட்டிருக்கின்றன. கபோதப்பகுதியின் முதல் நாசிக்கூட்டில் மூன்று முக உருவமும் ( ? பிரம்மா ), பிறவற்றில் தம்பதி சமேதராக மார்பளவு உள்ள தெய்வ உருவங்களும் வடிக்கப்பட்டுள்ளன. முதலாமவர் பிரம்மா என்று சிலர் கருதினாலும் எனக்கு இவர் சதாசிவ சொரூபமாகத்தான் தெரிகிறார். கபோதத்தின் நாசிக்கூடுகளில் உள்ள மற்றைய இரண்டு உருவங்களும் சிவனின் பிற ரூபபேதமே. பிரதான கருவறையில் அர்த்தநாரீஸ்வர கோலம் வடிக்கப்பட்டுள்ளதிலிருந்து இது ஒரு சிவாலயமாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் தெளிவாக அனுமானிக்கலாம். 

உள்ளே கருவறையில் ஒரு உடைந்த யோனிபீடம் ( ஆவுடையார் ) மட்டுமே எஞ்சியுள்ளது. அதனுள் இருக்க வேண்டிய பாணலிங்கத்தைக்காணோம். கருவறையின் வெளிப்பக்கம் துவாரபாலகர்கள் உருவம் மெல்லியதாக தென்படுகிறது. இவை முற்றிலும் அழிந்து விட்டனவா அல்லது முழுமையாக வடிக்கவில்லையா என்பதும் தெளிவாக தெரியவில்லை. குடைவரையின் முகமண்டபத்தின் முற்பகுதியில் இருபுறமும் கோஷ்டங்கள் வெட்டப்பட்டு அவற்றில் துவாரபாலகர்களும் கருவறையின் இருபுறமும் விநாயகரும் ஆடல்வல்லானும் புடைப்புச் சிற்பங்களாகவும் வடிக்கப்பட்டுள்ளனர். __________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

நாம் விஷ்ணுகுண்டின் மஹாராஜாவினால் உருவாக்கப்பட்ட இந்த முதலாம் கருவறையின் ஆடல்வல்லானைப்பற்றி சற்றே பார்ப்போம்.

ஊர்த்வஜானு கரணத்தில் காணப்படும் இந்த நடராஜரும் அபஸ்மார பூதத்தின் மீதே நடனமாடுகிறார். இந்த சிற்பமும் சேதமுற்றதே.. ஆயினும் பல்லவ காலத்திற்கு முற்பட்டதாகையினால் இந்த குடைவரையைப்பற்றி இவ்வளவு விரிவாக நான் பகிர நேர்ந்தது. வடஇந்திய பாணியை ஒத்து பற்பல கரங்களுடன் தென்னகப்பாணியை ஒத்து திருவடிக்குக் கீழே முயலகனோடு வடிக்கப்பட்டுள்ளது ஆறாம் நூற்றாண்டு காலத்தில் அரிதல்லவா !!

எனினும் எங்கு தேடினும் இந்த குடைவரையினுள்ளே அமைக்கப்பட்டுள்ள நடராஜ மூர்த்தத்தின் நிழற்படம் எங்குமே கிடைக்கவில்லை. நண்பர்கள் இந்த பதிவினைப் படித்த பின்னர் ஏதேனும் கிட்டினால் தயை கூர்ந்து எனக்கு பகிருமாறு பணிவன்போடு கேட்டுக் கொள்கின்றேன். நண்பர் பாலாஜி கிருஷ்ணமூர்த்தி அங்கு சென்றபோதும் அவரால் குடைவரையின் உள்பக்கம் படம் பிடிக்க இயலவில்லை என்பதும் வருந்தத்தக்கதே. ஆயினும் இந்த தொடருக்காக பல்வேறு தரவுகளுடன் படங்களை சேகரித்து பகிர்வினை எழுத்தாக்கம் செய்திட்டபோது அவரது பதிவு எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது. நமக்கு அதிகம் தெரிந்திராத இடத்தைப்பற்றி இரு வேறு நபர்கள் ஒரே சமயத்தில் தகவல்களை திரட்டி பகிர்வு இடுவது என்பது அனைவரின் வியப்பை தூண்டும் என்பதில் ஐயமில்லை.

அதெல்லாம் சரி. எங்கோ உள்ள ஆந்திர மாநில பகுதியில் அதுவும் ஐந்தாம் நூற்றாண்டிலேயே, இல்லை இல்லை, அதற்கும் முன்னரே உருவாக்கப்பட்ட குடைவரைகளில் எப்படி பல்லவரின் பாணி போன்ற அமைப்புகள் வந்தன

 
320-214-15869418-thumbnail-3x2-svg.jpg

 

1280px-Achaemenid_Empire_at_its_greatest

 

294142769_10160218195698205_277595162821

 

Tamil_News_large_3079428.jpg


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard