Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சிவ வழிபாடு


Guru

Status: Offline
Posts: 7329
Date:
சிவ வழிபாடு
Permalink  
 


சிவ பெருமான் வழிபாடு இந்தியா முழுவதும் பல ஆயிரம் ஆண்டுகளாக தொடர்வது. தமிழின் மிகவும் தொன்மையான சங்க இலக்கியப் பாடல்களில் 

பணியிய ரத்தைநின் குடையே முனிவர்

முக்கட் செல்வர் நகர்வலம் செயற்கே                    புறம் 6. 17-18

 

ஓங்குமலைப் பெருவில் பாம்பு ஞாண் கொளீஇ

ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப்

பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த

கறைமிடற்றண்ணல் காமர் சென்னிப்

பிறை நுதல் விளங்கும் ஒருகண் போல                  புறம் 55,5

 

ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை மாற்று

அருங் கணிச்சி மணி மிடற்றோனும்                     புறம் 56, 1-2

 

12. பால் புரை பிறை நுதற் பொலிந்த சென்னி

நீலமணி மிடற்று ஒருவன் போல

மன்னுக பெரும நீயே                                  புறம் 91, 5-7

 

நன்றாய்ந்த நீணிமிர்சடை

முதுமுதல்வன் வாய்போகா

தொன்றுபுரிந்த வீரிரண்டின்

ஆறுணர்ந்த வொருமுதுநூல்

இகல்கண்டோர் மிகல்சாய்மார்

மெய்யன்ன பொய்யுணர்ந்து

பொய்யோராது மெய்கொளீஇ

மூவேழ் துறையு முட்டின்று போகிய

உரைசால் சிறப்பி னுரவோர் மருக                              புறம் 166, 1-9

 

நீரும் நிலனும் தீயும் வளியும்  

மாக விசும்போடு ஐந்து உடன் இயற்றிய

மழு வாள் நெடியோன் தலைவன் ஆக,   455

மாசு அற விளங்கிய யாக்கையர், சூழ் சுடர்      

வாடாப் பூவின், இமையா நாட்டத்து,   

நாற்ற உணவின், உரு கெழு பெரியோர்க்கு,     

மாற்று அரு மரபின் உயர் பலி கொடுமார்,      

அந்தி விழவில் தூரியம் கறங்க                         மதுரைக் 453-460

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

சிவ வழிபாடு

"ஆதி பகவன் முதற்றே உலகு" - இந்த உலகம் இறைவனிடமிருந்து தொடங்கியது எனவும் கல்வி கறபதன் முழுப் பயனே இறைவன் திருவடி வணங்கி தொழுவதற்கே என்பதே திருவள்ளுவ நாயனார் காட்டும் வழி. கவன் எனும் வடசொல்  பதினெண் கீழ்க்கணக்கு நூலான இன்னா நாற்பது, முக்கட் பகவன் என்பதால் குறள் ஆதி பகவன் எனக் கூறியது அம்மையப்பரை எனும் சைவ அறிஞர்கள் கருத்து ஏற்பதற்கு உரியதே.

 

சிவபெருமான் வழிபாடு பல ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வரும் மரபு என்பதை நாம் தொல்லியல்  ஆதாரம் முக்கியமாகவும் மற்றும் இலக்கிய ஆதாரத்தோடு காண்போம்.

நன் றாய்ந்த நீள் நிமிர்சடை

முது முதல்வன் வாய் போகாது,
ஒன்று புரிந்த ஈரி ரண்டின்,
ஆறுணர்ந்த ஒரு முதுநூல்

Meanings:  நன்று ஆய்ந்த – analyzed carefully, நீள் நிமிர் சடை – very long hair, முது முதல்வன் – ancient god, வாய் போகாது – never swerving from truth, ஒன்று புரிந்த – desired just one thing (righteousness), ஈர் இரண்டின் – two times two, four divisions, ஆறு உணர்ந்த – understood by six sections, ஒரு முதுநூல் – an ancient book, the Vedas

நன்கு ஆராயப்பட்ட மிக நீண்ட சடையினையுடைய
முதிய இறைவனது வார்த்தைகளைவிட்டு விலகாமல்
அறம் ஒன்றையே சார்ந்து, நான்கு பகுதி உடையதாகி
ஆறு அங்கங்களாலும் உணரப்பட்ட ஒரு பழைய நூலாகிய வேதத்துக்கு

You who is an heir of learned men who performed

the twenty-one rituals without fault, who understood
those who disrespected and spoke truth-like lies,
defeating those who would contend with the ancient
work of four divisions and six sections, focused on
righteousness, never swerving from the well chosen
words of the ancient Being with long matted hair!

ஆவூர் மூலங் கிழார்  ஒரு சமயம், சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன் ஒரு வேள்வி நடத்தினான். அவ்வேள்விக்கு ஆவூர் மூலங் கிழார் சென்றிருந்தார். அவ்வேள்வியின் சிறப்பையும் விண்ணந்தாயனின் வள்ளல் தன்மையையும் இப்பாடலில் ஆவூர் மூலங் கிழார் புகழ்ந்து பாடுகிறார்.

ஆவூர் மூலங் கிழார் எழுதிய புறநானூறு 166 பாடலில் மேன்மை பொருந்திய நீண்ட சடையை உடைய, எல்லாவற்றையும் நன்கு நுணுகி அறிந்த, முழுமுதற் கடவுளாகிய சிவனின் வாக்கிலிருந்து நீங்காது அறம் ஒன்றையே அடிப்படையாகக் கொண்ட, நான்கு பிரிவுகளும், ஆறு உறுப்புகளும் உடைய பழைய நூலாகிய வேதங்கள் என்கிறார் 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

6 காரிகிழார்
வடாஅது பனி படு நெடு வரை வடக்கும்
தெனாஅது உரு கெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரை பொரு தொடு கடல் குணக்கும்
குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும்
கீழது மு புணர் அடுக்கிய முறை முதல் கட்டின்	5
நீர் நிலை நிவப்பின் கீழும் மேலது
ஆனிலை_உலகத்தானும் ஆனாது
உருவும் புகழும் ஆகி விரி சீர்
தெரி கோல் ஞமன்ன் போல ஒரு திறம்
பற்றல் இலியரோ நின் திறம் சிறக்க		10
செய்_வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்து
கடல் படை குளிப்ப மண்டி அடர் புகர்
சிறு கண் யானை செவ்விதின் ஏவி
பாசவல் படப்பை ஆர் எயில் பல தந்து
அ எயில் கொண்ட செய்வு_உறு நன் கலம்		15
பரிசில்_மாக்கட்கு வரிசையின் நல்கி
பணியியர் அத்தை நின் குடையே முனிவர்
முக்கண் செல்வர் நகர் வலம் செயற்கே
இறைஞ்சுக பெரும நின் சென்னி சிறந்த
நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே		20
வாடுக இறைவ நின் கண்ணி ஒன்னார்
நாடு சுடு கமழ் புகை எறித்தலானே
செலியர் அத்தை நின் வெகுளி வால் இழை
மங்கையர் துனித்த வாள் முகத்து எதிரே
ஆங்க வென்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய	25
தண்டா ஈகை தகை மாண் குடுமி
தண் கதிர் மதியம் போலவும் தெறு சுடர்
ஒண் கதிர் ஞாயிறு போலவும்
மன்னிய பெரும நீ நில மிசையானே

Puranānūru 6, Poet Kari Kizhār sang to Pandiyan Palyākasālai Muthukudumi Peruvazhuthi, Thinai: Pādān, Thurai: Seviyarivurūu, Vālthiyal
May your great glory and endless fame spread to the north
of the lofty northern Himalayas with snow, south of the fierce
Kumari river of the south, east of the eastern ocean dug out of
the earth that has waves that attack the shores, west of the very
ancient western ocean, in the earth, the lowest tier that rose out
of the ocean, below the land and in the upper world with cows!       

May you be without bias, like the perfect pointer of a balance
that measures large quantities!  May your abilities flourish!
You entered the countries of those who opposed you
in battles, goaded your elephants with dense spots and small
eyes to charge, took many guarded forts with green fields, and
distributed the fine ornaments you seized, according to rank.

May your umbrella bow down when it circumambulates
the temple of the god with three eyes!  May your head bend
down when the Brahmins of the four Vedas lift their hands!
May your garland wilt, assaulted by the smoke of flames
you lit in the lands of your enemies! 

May your anger vanish when you see your women wearing
pure jewels, their faces bright with the anger of lovers’ quarrels!
O Great Kudumi who gives without limits!  You who have won
everything and never boasts about your victories!
May you live long on this earth forever, like the moon with
cool rays and the glowing sun with bright rays!

6 காரிகிழார்
வடக்கிலிருக்கும் பனி தங்கிய நெடிய இமயமலையின் வடக்கும்,
தெற்கிலிருக்கும் அச்சந்தரும் குமரியாற்றின் தெற்கும்,
கிழக்கிலிருக்கும் கரையை மோதுகின்ற சகரரால் தோண்டப்பட்ட கடலின் கிழக்கும்,
மேற்கிலிருக்கும் பழையதாய் முதிர்ந்த பெருங்கடலின் மேற்கும்,
கீழேயிருக்கும், நிலம், வான், சுவர்க்கம் என்ற மூன்றும் சேர்ந்து அடுக்கிய முறையில் முதலாவதான
நீர்நிலையிலிருந்து உயர்ந்து தோன்றும் நிலத்திற்குக் கீழேயும், மேலேயிருக்கும்
ஆனிலையுலகம் எனப்படும் கோ லோகத்திலும் அடங்காத
அச்சமும் புகழும் உன்னுடையதாகி, பெரிய அளவில்
சமமாக ஆராயும் துலாக்கோலின் நடுவூசி போல ஒரு பக்கத்தில்
சாயாது இருப்பாயாக; உன் படை, குடி முதலியன சிறந்துவிளங்கட்டும்;
போர் செய்ய எதிர்த்துவந்த பகைவரின் நாடுகளில்
உனது கடல் போன்ற படை உள்ளே புகுந்து முன்செல்ல, அடர்ந்த புள்ளிகளையும்
சிறிய கண்களையும் உடைய யானைப்படையை தடையின்றி நேரே ஏவி,
பசுமையான விளைநிலப் பக்கத்தையுடைய பல அரிய அரண்களைக் கைப்பற்றி
அந்த அரண்களில் கொள்ளப்பட்ட அழகுபடச் செய்த அணிகலன்களைப்
பரிசிலர்க்கு முறையாக வழங்கி,
தாழ்வதாக நின் வெண்கொற்றக்குடை, முனிவர்களால் துதிக்கப்படும்
முக்கண் செல்வரான சிவபெருமான் கோயிலை வலம்வருவதற்கு;
வணங்குக, பெருமானே உன் மணிமுடி, சிறந்த
வேதங்களை ஓதும் அந்தணர்கள் உன்னை வாழ்த்த எடுத்த கைகளின் முன்னே;
வாடிப்போகட்டும் இறைவனே, உன் தலைமாலை, பகைவரின்
நாடுகளை எரிக்கின்ற மணக்கின்ற புகை தடவிச்செல்வதால்;
தணியட்டும் உன் கோபம், வெண்மையான முத்தாரத்தையுடைய
உன் தேவியரின் சிறுசினம் சேர்ந்த ஒளிமிகு முகத்தின் முன்னே;
இதுவரை வென்ற வெற்றியினால் எழும் இறுமாப்பை வென்று, அவற்றை உன் மனத்துள் அடக்கிய,
குறைவுபடாத கொடைக்குணம் கொண்டு தகுதி மிகுதியும் பெற்ற குடுமியே!
குளிர்ந்த கதிர்களைக் கொண்ட திங்கள் போலவும், சுடுகின்ற தீச்சுவாலைகளைக் கொண்ட
ஒளி பொருந்திய கதிர்களைக் கொண்ட ஞாயிறு போலவும்
நிலைபெறுவாயாக, பெருமானே! நீ இந்த நிலத்தின் மேல்.


-- Edited by admin on Thursday 18th of August 2022 08:56:40 AM

__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

புறநானூறு
பாடல்:6. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
பாடியவர்: காரிகிழார்
திணை: பாடாண் திணை
துறை:
1.செவியறிவுறூஉ(அறத்தை ஆராய்கிற செங்கோல் மன்னனுக்கு மறமும், பிறழ்வும் இல்லா நிலைத்த பெரிய கருத்தை உரைத்தல்)
2.பொருண்மொழிக் காஞ்சி(இம்மை, மறுமைகளில் உறுதி தரும் பொருளை உரைப்பது. முனிவர் தாம் தெளிந்த பொருளைக் கூறுதல்)
3.வாழ்த்தியல்
பொருள்:
வடக்கிலுள்ள பனி படர்ந்த நெடியமலையின் வடக்கும்,
தெற்கிலுள்ள அச்சமுடைய கன்னியாகுமரியின் தெற்கும்,
கிழக்கிலுள்ள கரையை மோதும் அலைகளையுடைய கடலின் கிழக்கும்,
மேற்கிலுள்ள பழைய முதிர்ந்த கடலின் மேற்கும்,
கீழேயுள்ள நிலம், வானம், வீடுபேறு என்ற
மூன்று அடுக்கின் முதலில் இருக்கிற
நீர்நிலை இருக்கும் நிலத்தின் கீழும்,
மேலே உள்ள பசுக்களின் உலகத்திலும்,
உன்னிடம் அச்சமும்,
உனக்குப் புகழும் உண்டாகட்டும்.
பொருள்களை அளக்கும்
துலாக்கோலின் நாக்குப் போல,
ஒரு பக்கம் சாயாது இருப்பாயாக!
உனது திறம் சிறக்கட்டும்!
போரிட எதிர்த்து நின்ற
பகைவரின் நாட்டில்
கடல் போன்ற உன் படை
உள்ளே வெகுவாகப் புகுந்துவிடும்.
சிறிய கண்ணுடைய யானையைத்
திறமையாக ஏவி,
பசுமையான விளைநிலங்களையுடைய
பாதுகாப்பு மதில்களைக் கைப்பற்றினாய்.
அங்குக் கைப்பற்றிய அணிகலன்களை
வேண்டியவருக்கு அவரவர் தகுதிக்கேற்பத் தந்தாய்.
முனிவர்,
முக்கண் சிவபெருமானின்
கோவிலை வலம் வருமுன் - உன்
கொற்றக்குடை அவரைப் பணியட்டும்!
பெருமையுடையவனே!
நான்மறை வல்ல
அந்தணர் உன்னை வாழ்த்தக்
கையை உயர்த்தும் முன் - உனது முடி
வணங்கட்டும்!
இறைவனே!
பகைவர் நாட்டைச் சுடும்
வாசனைப் புகை படுவதால் - உன் முடியில் சூட்டப்படும் மாலை
வாடட்டும்!
வெண் முத்துமாலை அணிந்த
மங்கையரின் ஊடல் கொண்ட
முகத்தின் முன் - உன் சினம்
தணியட்டும்!
வெற்றியினால் இறுமாந்துபோகாமல்
மனத்தில் உள்ள ஈகை குணத்தைத்
தகுதியாகக் கொண்ட
முதுகுடுமிப் பெருவழுதியே!
குளிர் கதிர் நிலா போலவும்,
சுடும் கதிர் ஞாயிறு போலவும்
நிலைத்து இருப்பாயாக!


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

புல‌வர் காரிகிழார் பாடிய புறநானூறு 6 பாடலில் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் வெண்கொற்றக் குடை முனிவ்ர்கள் போற்றும் முக்கண் செல்வர் முன் மட்டுமே பணியும் என்கிறார்.

 

 

 55 மதுரை மருதன் இளநாகனார்
ஓங்கு மலை பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ
ஒரு கணை கொண்டு மூ எயில் உடற்றி
பெரு விறல் அமரர்க்கு வெற்றி தந்த
கறை_மிடற்று_அண்ணல் காமர் சென்னி
பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல		5
வேந்து மேம்பட்ட பூ தார் மாற
உயர்ந்த மலையாகிய பெரிய வில்லைப் பாம்பாகிய நாணினால் கட்டி,
ஒப்பில்லாத ஓர் அம்பை இழுத்து, அதனால் மூன்று கோட்டைகளை அழித்து
பெரிய ஆற்றல் மிக்க தேவர்களுக்கு வெற்றியைத் தந்த
கருமை படர்ந்த தொண்டையையுடைய இறைவனின் அழகிய திருமுடியில் சூடிய
பிறை சேர்ந்த நெற்றியில் விளங்கும் ஒரு கண்ணைப் போல
மூவேந்தருள்ளும் உயர்ந்த பூமாலை அணிந்த மாறனே!

 56 மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்

# மதுரை மருதன் இளநாகனார் எனவும் பாடம்
ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை
மாற்று அரும் கணிச்சி மணி மிடற்றோனும்
கடல் வளர் புரி வளை புரையும் மேனி
அடல் வெம் நாஞ்சில் பனைக்கொடியோனும்
மண்_உறு திரு மணி புரையும் மேனி		5
விண் உயர் புள் கொடி விறல் வெய்யொனும்
மணி மயில் உயரிய மாறா வென்றி
பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும் என
ஞாலம் காக்கும் கால முன்பின்
தோலா நல் இசை நால்வருள்ளும்			10
கூற்று ஒத்தீயே மாற்று அரும் சீற்றம்
வலி ஒத்தீயே வாலியோனை
புகழ் ஒத்தீயே இகழுநர் அடுநனை
முருகு ஒத்தீயே முன்னியது முடித்தலின்		
காளையை வெற்றிக்கொடியாக உயர்த்திய, எரிகின்ற தீயைப் போன்று விளங்கும் சடையை உடைய,
தடுப்பதற்கு அரிய கோடரியையுடைய, நீலமணி போலும் கரிய கழுத்தினையுடைய சிவபெருமானும்,
கடலில் வளரும் முறுக்குண்ட சங்கினைப் போன்ற மேனியை உடைய,
கொலையை விரும்பும் கலப்பையையுடைய பனைக்கொடியோனாகிய பலராமனும்,
கழுவப்பட்ட அழகிய நீலமணி போன்ற திருமேனியை உடைய,
வானளாவ ஓங்கிய கருடக்கொடியை உடைய, வெற்றியை விரும்புவோனாகிய கண்ணனும்,
நீலமணி போன்ற நிறத்தையுடைய மயில் கொடியை உடைய, மாறாத வெற்றியையுடைய,
பிணிமுகம் என்ற யானையை ஊர்தியாகக் கொண்ட ஒளியையுடைய செய்யோனாகிய முருகவேளும், என்ற
உலகத்தைக் காக்கும் முடிவுகாலத்தைச் செய்யும் வலிமையினையும்
தோல்வியில்லாத நல்ல புகழையும் உடைய நான்கு கடவுளர்க்குள்ளும்
தடுக்கமுடியாத சீற்றத்தில் நீ எமனைப் போன்றவன்;
வலிமையில் நீ வெண்மையான பலராமனைப் போன்றவன்;
புகழில் நீ தன்னை இகழ்ந்தவரை அழிக்கும் கண்ணனைப் போன்றவன்;
நினைத்ததைச் செய்துமுடிப்பதில் முருகனைப் போன்றவன்;
அவ்வவ்வாறு நீ அவரவர்களைப் போன்று இருப்பதால், எங்கும்
செய்யமுடியாதது ஒன்று உண்டோ உனக்கு? அதனால்


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

சங்க காலத் தமிழ் புலவர்கள் வேதங்கள், புராணங்கள் கொண்டு அரசரைப் புகழ்தல் எனில் அனைவரும் அறிந்தவைகளே அவை என்பது தெளிவாகும்.

நாம் தொல்லியல் அகழாய்வில் சிவ வழிபாடு காண்போம்.

வரலாற்று காலத்திற்கு முன்பு 

பீம்படுகா பாறை வசிப்பிடங்கள் என மத்தியப்பிரதேச மாநிலத்தில் 1 லட்சம் ஆண்டுகளாக வாழ்ந்தது அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குகைப் பாறைகளில் தங்கள் வாழ்வினை வெண்/சிவப்பு சாந்து கொண்டு வரைந்த கோடு படங்களில் மிகப் பழமையானவை 30,000 ஆண்டுகள் தொடங்கி பொஆ.முதல் நூற்றாண்டு வரை என அறிஞர்கள் கணித்து உள்ளனர்

Dw7cAInWsAAC9Oe.jpg278324740_5088105107940554_4710467726495

img_1_1659772719518.jpgimg_1_1659772797983.jpgimg_1_1659772589482.jpg 69681263_10157463247778252_3346301220376

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Scholars have interpreted early prehistoric paintings at the Bhimbetka rock shelters, considered to be from pre-10,000 BCE period,[61] as Shiva dancing, Shiva's trident, and his mount Nandi.[62] Rock paintings from Bhimbetka, depicting a figure with a trident or trishul, have been described as Nataraja by Erwin Neumayer, who dates them to the mesolithic.[63]

  1.  Klostermaier 2007, pp. 24–25: "... prehistoric cave paintings at Bhimbetka (from ca. 100,000 to ca. 10,000 BCE) which were discovered only in 1967..."
  2. ^ Javid 2008, pp. 20–21; Mathpal 1984, p. 220; Rajarajan 1996.
  3. ^ Neumayer 2013, p. 104.

 Bhimbetka caves were discovered as recently as 1958 by V. S. Wakankar. He did a detailed survey of the region on behalf of Vikram University, Ujjain?

He classified the various types of rocks and rock shelters. Later the excavations were carried out by ASI and others. Before the discovery of these prehistoric caves, this area was thought of as Buddhist hills, sprinkled with various stupas. These caves indicate the continued existence of human life in this region over the ages, from prehistoric time to right up to the medieval period.

https://www.inditales.com/rock-paintings-of-bhimbetka/

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

வரலாற்று காலத்திற்கு முன்பாக எனப் பார்த்தால் மத்திய பிரதேசம் பீம்பேட்கா ஆதி மனிதன் வாழ்ந்த மலை பாறை

குகை வசிப்பிடங்களில் உள்ள பாறை ஓவியங்களில்(30000 முதல் 8000 ஆண்டுகளுக்கு முன்பான) சிவ பெருமான் மற்றும் நடராஜர் வழிபாடு உள்ளது என உலகப் புகழ்பெற்ற இந்திய ஆராய்ச்சியாளர் வி.எஸ் வாகங்கர் காட்டியுள்ளார்.  ஜெர்மனியைச் சேர்ந்த எர்வின் நியூமேயர்- பாறை கோட்டு ஓவியங்கள்  வளர்ச்சி ஆய்வில் போற்றப்படுவரும் ஏற்பது -அந்தப் பாறைகளும் சிவ வடிவத்தினை காட்டுகிறதே நடராஜர் வழிபாட்டின் தொன்மை இருக்கிறது எனப் படுகிறது ஆனால் மற்ற மதச்சார்பற்ற அறிஞர்கள் இதை சிவன் என்று ஏற்பது சற்றுக் அதீத கற்பனை என்பது என்னும் வாதமும் உள்ளது

சிந்து சரஸ்வதி நாகரீகத்தில்

கிடைத்த யோக முனிவர் தோற்றத்தை சிவனின் பசுபதி சிவ ருத்ரர் தோற்றம் என ஜான் மார்ஷல் குறித்தார் அதேபோல பல சிறிய உருண்டையான சிவ லிங்கம் போன்ற கற்கள் கிடைத்தன என்றும் அவர் பதிவு செய்துள்ளார் ஆனால் இன்றைய நிலையில் ஆராய்ச்சியாளர்கள் இவற்றை ஏற்பது இல்லை அதேபோல விழாவில் கிடைத்த சிறிய சிறிய லிங்கத்தையும் லிங்கம் அல்ல என்று வாதிக்கும் அறிஞர்களும் உள்ளதால் நாம் மேலே சொன்ன இரண்டையும் முக்கியமாக கருதவில்லை



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard