Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவர் ஞானஸ்தானம் பெற்று கிறிஸ்தவராக இருந்து குறளை எழுதினார் – என்ற பேரா.தெய்வநாயகத்த


Guru

Status: Offline
Posts: 7474
Date:
திருவள்ளுவர் ஞானஸ்தானம் பெற்று கிறிஸ்தவராக இருந்து குறளை எழுதினார் – என்ற பேரா.தெய்வநாயகத்த
Permalink  
 


திருவள்ளுவர் ஞானஸ்தானம் பெற்று கிறிஸ்தவராக இருந்து குறளை எழுதினார் – என்ற 

பேரா.தெய்வநாயகத்தின் கருத்து ஆய்வுக்கு உரியது திருமாவளவன் கருத்து தெரிவித்து 

உள்ளார். இந்தக் கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

இங்கு அடிப்படையில் கவனிக்க வேண்டியது திருவள்ளுவர் பிறந்த ஆண்டு என ஆய்வாளர்கள் 

கூறுவது கி.மு.31ஆம் ஆண்டு, ஏசு பிறந்தது என்று ஆய்வாளர்கள் கூறுவது கி.மு.6ஆம் 

ஆண்டு (ஆமாம் வரலாற்றின்படி கி.மு.என்பது கிறிஸ்துவுக்கு முன் அல்ல!.).

 

அடுத்து ஏசு பிறந்த உடன் அல்லது அவர் இறந்த உடன் கிறிஸ்தவம் உருவாகி பரவி 

விடவில்லை. ஏசு இறக்கும்போது அவரே ஒரு யூதராகத்தான் இறந்தார். ஏசு இறந்த பின்னர் 

அவரது சீடர்கள் அனைவரும் வேட்டையாடப்பட்ட பின்னர் வெகுகாலம் கழித்து போப்புகள்தான் 

ஏசுவைக் கையில் எடுத்து ஒரு புதிய மதத்தை உருவாக்குகின்றனர். கிறிஸ்தவம் என்ற மதம் 

திருவள்ளுவருக்கு குறைந்தது ஒரு நூற்றாண்டாவது இளைய மதமாக இருக்கும். 

 

அடுத்து, ஏசுவின் கொள்கைகளும் திருவள்ளுவரின் கருத்துகளும் ஒன்றாக இருப்பதன் 

காரணத்தைப் பார்த்தால், ஐரோப்பாவின் சட்டங்கள் ஹெமுராபியின் ‘கண்ணுக்குக் கண்… 

பல்லுக்குப் பல்’ என்ற தோற்றத்தில் உருவாகின. 

 

பண்டைய இந்திய மதச் சட்டங்கள் மற்கலி, புத்தர், மகாவீரர் இவர்களின் தாக்கத்தால் 

மன்னிப்பை போதித்தன.ஐரோப்பிய வரலாற்றில் ‘ஒரு கண்ணத்தில் அறைந்தால் மறு கண்ணத்தைக் 

காட்டு’ என்று சொன்ன முதல் நபர் ஏசு. ஆனால் இந்திய வரலாற்றில் மற்கலி, புத்தர், 

மகாவீரர், திருவள்ளுவர் எனப் பலரும் வலியுறுதிய கருத்தாக்கம் அது. எனவே மன்னிப்பு 

என்ற கருத்தாக்கத்தை கிறிஸ்தவம் பண்டைய இந்தியாவில் இருந்து எடுத்தது என்று கொள்வதே 

சரி.

 

இது போக மதம், மத நூல், மிஷனரிகள் மூலம் மதம் பரப்புதல், சிஸ்டர் முறை – என 

கிறிஸ்தவ மதத்தில் உள்ள அனைத்தும் புத்த மதத்தின் நேரடி சாயலைக் கொண்டவை. இதனால் 

ஏசுவே இந்தியா வந்து சில ஆண்டுகள் இங்கு தங்கி புத்த மதத்தின் அடிப்படைகளைக் கற்று, 

புதிய கருத்தாக்கத்தைப் பெற்றார் என நம்பப்படுகிறது. இதற்கு துணை செய்யும் விதமாக 

ஏசுவின் வரலாற்றில் பல ஆண்டுகள் அவர் எங்கே இருந்தார்? – என்ற குறிப்பே இல்லை.

 

பிபிசி தொலைக்காட்சியே ‘ஜீசஸ் வாஸ் எ புத்திஸ்ட் மாங்க்’ – என்று ஒரு விரிவான ஆவணப் 

படத்தை வெளியிட்டு உள்ளது. ஐரோப்பியர்களே ‘புத்தத்தில் இருந்து வந்தது கிறிஸ்தவம்’ 

என்று கூறும்போது, தமிழர்கள் தலைகீழாக கருத்துக் கூற வேண்டிய தேவை என்ன? – 

தெரியவில்லை. 

 

புத்தம் குறித்து அதிகம் பேசும் திருமாவளவன் அவர்கள் கிறிஸ்தவத்துக்கும் 

புத்தத்துக்கும் உள்ள நேரடித் தொடர்பை அறியவில்லையா? அல்லது சைவம் மீதான 

தாக்குதலுக்கு அவர் கிறிஸ்தவத்தையும் உடன் சேர்த்துக் கொள்கிறாரா என்பதும் 

புரியவில்லை. அடுத்து அவர் தரப்பினர் ‘புத்தர் வாஸ் எ கிறிஸ்டியன் மாங்க்’ என்று 

சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை!.

 

ஏசு ஒரு கிறிஸ்தவர் – என்று எழுதிய பேரா.தெய்வநாயகம் ஒரு பாதிரியார். எனவே அவரது 

நோக்கத்தை எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஒரு பாதிரியாரின் சிந்தனையை 

வரலாற்று ஆய்வாக மேற்கோள் காட்டுபவர்களின் நோக்கத்தைத்தான் புரிந்து கொள்ள 

இயலவில்லை.

 

இவை அனைத்துக்கும் மேல் பேரா.தெய்வநாயகத்தின் கருத்து அவரது கண் முன்பாகவே அடித்து 

துவைத்து நிராகரிக்கப்பட்ட கருத்துகளில் ஒன்று. பேரா.தெய்வநாயகத்தின் நூலில் உள்ள 

சொற்பிழை, பொருட்பிழை, இலக்கணப் பிழை, கருத்துப் பொருந்தாமை இவற்றை விளக்கி 

‘திருக்குறள் விவிலியம் சைவசிந்தாந்தம் ஒப்பாய்வின் மறுப்பு நூல்’ – என ஒரு நூலே 

எழுதப்பட்டு உள்ளது. 

 

எனவே, ஏற்கனவே முடிந்த விவாதம் இங்கு மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. ஆதாரமும் 

தேவையும் இல்லாத விவாதம் இது.

 

– இரா.மன்னர் மன்னன்



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
உலக ஆன்மவியல் மாநாடு
Permalink  
 


திரு தெயவநாயகத்தின் மாநாட்டின் 2௩ம் நாள் இரண்டு நாளின் பெரும்பான்மையான நேரம் நானும் ஒரு ஆய்வு மாணவனாக உள்ளே இருந்தேன்.

2ம் நாள் மத்யம் ஒருவர் இவர்- எம்பில் மற்றும் பிஎக்டி பட்டம் படித்தவர் ஆற்றிய உரை. நிகழ்ச்சிக்கு, சென்னை பல்கலைக் கழகப் பேராசிரியர் திரு.த்ய்வசுந்தரம் தலைமை. உரை படித்தபின் வந்திருநோர் கேள்விகட்கு உரையாசிரியர் பதில் தரவேண்டும், ஆனால் அவர் தனக்கு பதிலாக தெய்வநாயகமே பதில் தருவார் எனறிட தலைவர் அது தவறு என்றிடவும், கடைசியில் தெய்வநாயகம் தான் பதில்கள் உளறினார்.
அவர்கள் இடைவேளையின் போது தனி பேச்சில் படிக்கப்பட்ட கட்டுரையின் மேற்கோள்கள், சொன்ன பதிலின் இவற்றில் பல தவறு என தெளிவாக மறுக்கப் பட்டவை, ஆனால் இது ஒன்றும் அறிஞர் சபையோ சிமினாரோ அல்ல, வெறும் சர்ச்சின் பண பலத்தால் பெருமைக்கு நடத்தப் படுவது, நான் பழகிய நண்பர் என வந்தேன் என்றார். முன்பெ தேர்ந்தெடுக்கப் பட்ட நண்பர்கள் தான் பெரும்பான்மையான கலந்து கொண்டவர்கள். கேள்விகளும் தெ தயாரித்தவை, வந்த ஒரு சில நடுநிலையாளர் நந்து கேள்வி எழுதித் தந்தாலும் அது நேரமின்மை என படிக்கப் படாது என்பதையும் சுட்டிக் காட்டினார்.

3ம் நாள் தெய்வநாயகத்தின் தலைமை உரை. தலைமை நாங்க திரு. ஒளவை.நடராசான் அவர்கள். தெய்வநாயகம் ஆன்மவியல் என்னும் தன் கட்டுரை வாசித்த பின், ஒளவை.நடராசான் அவர்கள் எழுந்து தெய்வநாயகம் கூறியவை பெரும் பாலும் தவறானவை. சமயம், ஆன்மா போன்ற அடிப்படை சொற்கள் சமஸ்க்ருதம் என்றார். உடனே தெய்வநாயகத்தின் தவறான் ஆய்வுக் கட்டுரை என முனைவர் பட்டம் ரத்துஆனதின் கைடான – தமிழ் பன்னாட்டுத்துறையின் அன்னி தாமஸின் கணவருமான திரு.ச.வே.சுப்ரமணியம் சில கூறினார். அவையும் தவறு என ஒளவை.நடராசான் தெளிவாகக் கூற, தமிழ் – சமஸ்க்ருதம் தமிழ்பற்று என்பதாக என்னவோ தெய்வநாயகம் உளறிட அத்தலைமை உரை விவாதமே செய்யப் படவில்லை. தலைவரே தவறு என்றதோடு. ஒளவை.நடராசான் உடன் இடைவேளை போது தனியாக பேசிய போது, மேலும் தொல்காப்பியத்க்தை தெய்வநாயகம் பயன்படுத்தியுள்ளவையும் அர்த்தமற்ற – எழுதப்ப்ட்ட முறைக்கும் ஒவ்வாதது என்றார், ச,வெ கூறியது தமிழ் நடைக்கே எவ்வளவு தவறு என்றும் சிறு விளக்கம் கொடுத்தார்.

மாநாட்டரையில் நான் நண்பர் மூலைம் ஒலிப்பதிவு செதேன்.

தேவகலா ஒளிப்பதிவு ஏற்பாடு செய்திருந்தார். அதன் VCD வேண்டும் என மின் அஞ்சல் அனுப்பினேன்
விலைப் பட்டியல் அனுப்பினார் –தேவகலா.

நான் மாநாட்டின் போது தருமபுர ஆதின மடத்தில் முன்பு தெய்வநாயகம் கலந்து கொண்ட கேள்விபதில் நிகழ்ச்சியின் VCD என விற்றதை வாங்கியதில் ஒரு சில நிமிடம் தவிர தேவகலா தன் அப்பாவை பற்றி வெற்று பேச்சுக்களெ இருந்தது.

அந்த நிகழ்ச்சியில் த்திற்கு பைபிள் அறிவோ, சைவ சித்தாந்த அறிவோ வெகு குறைவு, பல கேள்விகட்கு மௌனம் என நடந்து வெளியேறினார். ஆனால் VCD பொய் கூறியது.

நான் தேவகலாவிற்கு ஆய்வு மாணவன் எனக்கு முழுமையான பதிவு சற்றும் எடிட் செய்யாதது வேண்டும் நீங்கள் கொடுத்துள்ள விலைப் பட்டியல் VCD அப்படியா என மின் அஞ்சல் அனுப்பினேன், இரு நினைவூட்டலும் அனுப்பினேன்.
பதில் இல்லை.

இவர்கள் தராதரம் அவ்வளவு தான்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

Dr. Deivanayagam’s work being analysed by Christian Tamil Scholars

திருக்குறளில் கிறித்தவம்-மெய்த்திரு (டாக்டர்) எஸ். இராச மாணிக்கம், S.J.
Rev. S.J.Rajamanikam was the H.O.D of Tamil Dept, and he was asked to present a Paper on –Presence of Christianity in ThiruKural, at Venkateshwara University – Thirupathi in Tamil; here Learned Scholar explains the ideals of Valluvar and how it varies with the important ideals of Christianity- and finally comes to Deivanayagam and I quote-
“ நிற்க. தற்போது ‘தெய்வநாயகம்’ என்ற புலவர் ‘திருவள்ளுவர் கிறித்தவர்’ என்று கூறி, கிறித்தவத்துக்கு முரணாகத் தென்படும் பல குறளுக்குப் புதிய விளக்கம் கூறி வருகிறார். மேலும், 1. ‘திருவள்ளுவர் கிறித்தவரா? 2. ஐந்தவித்தான் யார்? 3. வான் 4. நீத்தார் யார்? 5. சான்றோர் யார்? 6. எழு பிறப்பு 7. மூவர் யார்? 8. அருட்செல்வம் யாது? என்ற பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை ஊன்றிப் படித்தும், அவர் வலியுறுத்தும் கருத்தை நம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ‘திருவள்ளுவர் மறுபிறப்பை ஏற்கவில்லை’ என்றும், ‘ஐந்தவித்தான் என்பான் கிறித்து’ என்றும், ‘வான் என்பது பரிசுத்த ஆவி’ என்றும், நித்தார் என்பவர் கிறித்து பெடுமானார்’ என்றும், ‘சான்றோர் என்பது கிறித்தவர்களைச் சுட்டுகின்றது’ என்றும் பல சான்றுகளால் அவர் எடுத்துரைக்கின்றார்.

இக்கருத்துக்களோ, அவற்றை மெய்ப்பிக்க அவர் கையாளும் பலச் சான்றுகளோ, நமக்கு மனநிறைவு அளிக்கவில்லை. கிறித்துவ மதத்துக்குரிய தனிச்சிறப்பான கொள்கை ஒன்றும் திருக்குறளில் காணப்படவில்லை. கிறித்துபெருமானின், பெயர் கூட வரவில்லை. ஆனால் இந்திரன்(25), திருமால்(அடியளந்தான்-610;அறவாழி-8; தாமரைக் கண்ணான்-103), திருமகள் (செய்யவள்-167; செய்யாள்-84; தாமரையினாள்-617), மூதேவி(தவ்வை-167, மாமுகடி-617), அணங்கு(1081). பேய்(565), அலகை(850), கூற்று(375,765,1050,1083; கூற்றம்-269,1085), காமன் (1197), புத்தேள் (58,234,213,290,966,1322), இமையார்(906), தேவர்(1073), வானோர்(18, 346) முதலிய இந்து மதத் தெய்வங்கள் சுட்டப்படுகின்றன. பக்கம்-92-93- from திருக்குறள் கருத்தரங்கு மலர்-1974,(Thirukural Karuththarangu Malar-1974) Edited by Dr.N.Subbu Reddiyar.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

After the Frist World Tamil Conference, Karunanithi in a meeting advised the Tamilnadu Universities to Research Kural and Madurai Kamaaraj University got Aram for its Kural PEETAM.

I take from Madurai Kamarajar University’s Kural Peedam established by Mu.Varadarajanar, and Peedam selected Lecturer. Selvi.Kamatchi Sinivasan, who was born in a Saivite family in Srilanka, came to India, served various collages before Joining the Kural Peedam. She had converted to Christianity also. She was of highest repute for integrity, and Peedam asked her to bring Books

1. குறள் கூறும் சமுதாயம்
2. திருகுறளும் விவிலியமும் (Tirukural and Bible)
3. குறள் கூறும் சமயம் ( Religion of Tirukural) and One more also.

The books were published by Peetam after the death of the Author, i.e., the views represented edited by A team of Experts who made final Edition.
The Author was selected for Her Strict Integrity, being a Christian Convert- as that was the time Deivanayagam was making with the political support of DMK rule and Pavanar links that Tiruvalluvar was Christian and Tirukural is a book based on Bible. The end result was that the Author Madam lost her beliefs on Christianity on researching Bible.

Finally looking at the Methods Adopted by M.Deivanayagam, the Learned Author says –from the works of Deivanayagam, it is doubtful whether Deivanayagam Understood Thirukural or for that Matter Deivanayagam’ Credential of Understanding of History of Christianity is doubtful. I QUOTE Kamatchi Sinivasan book called Kural Kurum Samayam-

“மு.தெய்வநாயகத்தின் நூல்களைப் படிக்கும்போது அவர் திருக்குறளைச் சரியாக புரிந்து கொண்டாரா என்பதனுடன் கிறிஸ்தவ சமய வரலாற்றையும் எவ்வளவு கற்றறிந்தார் என்ற ஐயமே ஏற்படுகிறது. – குறள் கூறும் சமயம்



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

பல ஆண்டுகளுக்கு முன்னர் என் நண்பர் ஒரு தமிழாசிரியர், அவர் திருக்குறள் ஆர்வலர், ஒரு திருக்குறள் மன்றத்தில் பல மாதங்கள் வாராந்திர்க் கூட்டங்களில் தொடர் சொற்பொழிவு செய்து வந்தார்.

அஙுகு திருக்குறளையும் பைபிளையும் ஒப்பிட்டு பார்த்து சொற்பொழிவு ஆற்ற, திரு. ப.ச.ஏசுதாசன், முன்னாள் திருச்சி பிஷப். ஹீபர் கல்லூரி துணை முதல்வரும், தமிழ்த் துறைத் தலைவராகவும் இருந்தவர் பேசுவதாக ஏற்பாடு நடந்தது.

என் நண்பர், தானே இரண்டையும் பொருத்தி வேறுபாடுகளை பல சொற்பொழிவுகளில் பேசினார். என்னிடம் சிலவற்றை விவாதிப்பார்.

அந்தப் பேராசிரியர் ஒரு நூல் எழுத உள்ளார் என்ற செய்தி வந்தவுடன் நான் நண்பரிடம் நிறைய பேசிய போது, என் நண்பர் கூறினார்-முதலில் பைபிளோடு குறளை ஒப்பிட்டுப் பேச தெய்வநாயம் தொடர்பு கொள்ளப்பட, அவர் சற்றும் ஆர்வம் காட்டாததால் இந்தப் பேராசிரியர் தேர்ந்தெடுக்கப் பட்டார், இத்தலைப்பு வருகிறது என்பதால் பல வாரங்கள் நான் திருக்குறள் அறங்கள் கிறுஸ்துவத்துக்கு முரண் எனக் காட்டினேன், விவிலிய வாக்கியங்கள் தேர்ந்தெடுக்க உங்கள் உதவியும் ந்ன்றாகப் பயன்பட்டது ,அதையும் பேராசிரியர் கேட்டார் என்றார்.

நான் மேலும் பல வரலாற்று ரீதியிலான நூல்களின் பக்கங்களின் ஜெராக்ஸ் எடுத்து; ரோம் சர்ச் வரலாற்றுப் பதிவுகளின் மிகவும் பழைமையானவைப்படி தாமஸ், மத்தேயூ, பிலிப் போன்ற சீடர்கள் மதப் பிரச்சாரப் பணியில் ஈடுபடானல் ஜெருசலேமில் சாதாரணமாக இறந்தனர் என்பதக் காட்டினேன். பேராசிரியர் எழுதியதைப் பாருங்கள்.

“திருவிவிலியக் கருத்துக்களைத்தான் திருக்குறள் கூறியுள்ளது என்று நிறவும் முயற்சியில் நான் ஈடுபடவில்லை. அது தேவையற்ற, பயனற்ற ஒன்று. அதனாலே அழுக்காறு தான் தோன்றும். ஒத்த சிந்தனைகள், நன்நெறிக் கருத்துக்கள் நற்சிந்தனையாளர்களிடையே நாடு கடந்தும், மொழி கடந்தும், இனம் கடந்தும், சமயம் கடந்தும் தோன்றுவது இயல்பே. எனவே இதிலிருந்து தான் இது தோன்றியது என வாதிடுவது நல்லதல்ல. ஒரு மொழியில் தோன்றிய ஒரு நூலின் செல்வாக்கு, பதிவு, அம்மொழியில் தோன்றும், பிற இலக்கியங்களிடையே இடம் பெறப் பல நூற்றாண்டுகள் ஆகும். அவ்வாறாயின், தகவல் சாதனங்கள் வளர்ச்சி பெற்றிறாத, போக்குவரத்து சாதனங்கள் பெரிதும் அற்ற காலத்தில் இனத்தாலும், மொழியாலும் சமய நிலையாலும் வேறான திரு விவிலியமும், பொது மறையாம் ஒன்றையொன்று தழுவியன எனக் கூறல் ஏற்புடையதன்று.”
பக்கம் -5,6. திருக்குறளும் திரு விவிலியமும்- P.S..இயேசுதாசன்

முடிவாக –
“திரு விவிலியத்தின் பழைய ஏற்பாட்டுப் பகுதியோடு தான் திருக்குறள் செய்திகளைப் பெரிதும் ஒப்பிட முடிகிறது.”
பக்கம் -167திருக்குறளும் திரு விவிலியமும்- P.S..இயேசுதாசன்

That is New Testament – the books of Christianity has nothing in common with KuraL.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

http://biblelamp.wordpress.com/1995/04/01/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/

இச்சஞ்சிகை ஆசிரியரிடம் பொதுவாகக் கூட்டங்களில் பலர் கேட்ட முக்கியமான கேள்விகளையும் பதிலையும் ஏனையோரது பயன்கருதி இப்பகுதியில் வெளியிடுகிறோம்.

திராவிட சமயங்களுக்கும் கிறிஸ்தவத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? கிறிஸ்தவமும் சைவமும் ஒன்றுதான் என்ற முறையில் சிலர் போதித்து வருகிறார்களே, திருமறையில் இதற்கு என்ன ஆதாரம் உண்டு?

இப்போதனை இன்று தமிழகம், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் தமிழ்க் கிறிஸ்தவர்கள் மத்தியில் பரவியிருப்பதை அவதானிக்க முடிகின்றது. சிலர், இப்போதனை இந்துக்களைக் கவர ஓர் அருமையான வழி என்று நினைத்து பயன்படுத்தி வருகிறார்கள். இதுபற்றி சிறிது விளக்கமான பதில்கூற வேண்டியது அவசியம்.

அ. இவர்கள் போதிப்பதென்ன?

டாக்டர் மு. தெய்வநாயகம் (விவிலியம், திருக்குறள், சைவசித்தாந்தம் ஒப்பாய்வு), ஞானசிகாமணி (அகத்தியர் ஞானம்) போன்றோர் வடவராகிய ஆரியர்களின் செல்வாக்கற்ற, கலப்பில்லாத திராவிட சமயங்கள், தமிழகத்திற்கு வருகை தந்த அப்போஸ்தலனாகிய தோமாவின் (தோமா தமிழகத்திற்கு வருகை தந்தார் என்பது வரலாற்றில் நிரூபிக்கப்படாத ஆதாரபூர்வமற்ற ஓர் ஊகம் மட்டுமே) கிறிஸ்தவப் போதனைகளின் செல்வாக்கினால், தனித்துவமுள்ள உருவவழிபாடற்ற, ஒரே தேவனைக் கொண்ட தமிழர்களின் சமயமாக இருந்தது என்றும், சைவசித்தாந்தமும், திருக்குறளும் சித்தர்களின் பாடல்களும் கிறிஸ்தவ செல்வாக்கினால் வளர்ந்த இவ்வாதி திராவிட சமயங்களைப் பற்றித்தான் போதிக்கின்றன என்றும் எழுதியுள்ளார்கள். இப்போதனைகளை இன்னும் பெரிதுபடுத்தி சாது செல்லப்பா போன்றோர் இந்துக்களைக் கவரும் நோக்கில் கிறிஸ்தவப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாது, கிறிஸ்தவத்திற்கும் இந்து மதத்திற்கும் இவ்வளவு தொடர்பு இருக்கும்போது நான் ஏன் அவர்களோடு சமமானமுறையில் ஒரே மேடையில் அமர்ந்து இருபகுதியுமே பயனடையும் விதத்தில் அமைதியான கலந்துரையாடல்களை (Dialogue) நடந்தக்கூடாது? என்ற முறையிலும் தயானந்தன் பிரான்ஸிஸ் (தமிழ்ச் சைவம்) போன்றோர் எழுதி வருகிறார்கள். இப்போதனைகள் இன்று தமிழகத்தின் வேதாகமக் கல்லூரிகள்வரை போயிருக்கின்றன. இவர்களுடைய கூற்றுகளுக்கும் போதனைகளுக்கும் வேதத்தில் எந்தவிதமான ஆதாரமும் இல்லை.

ஆ. இவர்களுடைய போதனை ஏன் தவறானது?

தோமா தமிழகத்திற்கு வந்தாரா? என்ற ஆராய்ச்சியை எல்லாம் உங்கள் கரத்தில் வைத்துவிட்டு இவர்களுடைய கருத்துக்களின் மூலமும், எழுத்துக்கள் மூலமும் எவ்வளவு தூரம் திருமறை தவறான முறையில் உண்மைக்குப் புறம்பாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதை எடுத்துக் காட்டுவதுதான் எனது முக்கிய நோக்கம். அதை வைத்தே நீங்கள் உண்மை எங்கிருக்கிறது என்று கண்டு கொள்ள முடியும்.

தோமா தமிழகம் வந்தாரா?

தோமா இந்தியாவிக்கு வந்தார் என்று இன்றுவரை வரலாற்றினால் நிரூபிக்கப்படவில்லை. இது வழிவழி வந்த நம்பிக்கையே தவிர அதற்கான ஆதாரங்கள் மிகக்குறைவு. தோமாவின் வழியில் வந்ததெனக் கருதப்படும் சீரியக்கிறிஸ்தவம் திருமறையின் போதனைகளுக்கு முரணான காரியங்களைக் கொண்டிருப்பதால் அதைக் கிறிஸ்தவத்தோடு தொடர்புபடுத்திப் பேசுவது தவறானது. இது கத்தோலிக்க மதமும் கிறிஸ்தவமும் ஒன்று என்று கூறுவது போலாகும். மயிலாப்பூரிலும், கேரளத்திலும் கண்டுபிடிக்கப்பட்ட ஆலயங்களில் சிலை வழிபாட்டிற்கான பல அறிகுறிகள் காணப்படுவதால் அதற்கும் திருமறை சார்ந்த கிறிஸ்தவத்திற்கும் தொடர்பிருக்க முடியாது. ஏனெனில் திருமறை சிலை வழிபாட்டை வற்புறுத்திக் கண்டிக்கின்றது (யாத்திராகமம் 20:1-7). அதேநேரம், வரலாற்றை வைத்து திருமறையை நிரூபிக்க முற்படுவதும் தவறான காரியம். வரலாற்றின் கண்டுபிடிப்புகளோடு திருமறையின் போதனைகளும் ஒத்துப்போகுமானால் அதை ஏற்றுக்கொள்ளலாம். வரலாறும் பாவத்தினால் கறைபடிந்து காணப்படுவதால் அதைக்கொண்டு பரிசுத்த வேதத்தை நிரூபிக்க முற்படுவது தவறு.

திராவிட எழுச்சி இயக்கம்

இவ்வாய்வுகள் தமிழரையும் அவர்களுடைய பண்பாட்டையும் ஆரியர்களுக்கு எதிராக உயர்த்திக் காட்டும் நோக்கத்தில் எழுந்தனவே தவிர திருமறையையும், கர்த்தரையும் மேன்மைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எழுந்தவையல்ல. இவ்வாய்வுகளின் முக்கிய நோக்கமே தமிழகத்தில் காணப்பட்ட திராவிட சமயங்கள் ஆரியக் கலப்பற்ற தளித்தன்மை கொண்ட சமயங்களாக இருந்தன என்று நிரூபிப்பதுதான். சித்தர்களின் பாடல்களும், திருக்குறளும் பல தெய்வ வழிபாட்டை ஆதரிக்காமல் அவற்றைக் குறைகூறுகின்றன என்பதற்காக, அவை கிறிஸ்தவ செல்வாக்குப் பெற்றதால்தான் அப்படிப் போதிக்கின்றன என்ற வாதம் பொருத்தமற்றது. இது அக்காலத்தில் ஆரிய எதிர்ப்பினால் எழுந்த போதனையாகவும் இருக்கலாம். அதுமட்டுமல்லாது சைவசித்தாந்தத்திலும் திருக்குறளிலும் திருமறைக்கு ஒவ்வாத அநேக போதனைகள் உண்டு. திருக்குறளில் காணப்படும் தெய்வத்தைக் குறித்த பொதுவான வார்த்தைகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத்தான் குறிப்பிட்டுக் கூறுகின்றன என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் இது தமிழ் மரபு என்று சிலர் வாதிட முற்பட்டாலும், திருமறை அதை ஏற்றுக் கொள்ளவில்லை. வேதத்தில் காணப்படாத வேறு பெயர்களை பயன்படுத்தி கர்த்தரை அழைப்பதை வேதம் அனுமதிப்பதில்லை. அதேநேரம் திருவள்ளுவர் இயேசுவை அறிந்திருந்தார் என்பதற்கும் உறுதியான ஆதாரம் இல்லை. உண்மையிலேயே அவர் கிறிஸ்துவை அறிந்திருந்தாரானால் தெளிவாக கிறிஸ்துவை வெளிப்படையாக அறிக்கையிட்டிருப்பதோடு, திருமறையின் போதனைகளைத்தான் தன்நூலில் விளக்கியிருப்பார், வள்ளுவர் புலால் உண்ணலையும் வன்மையாகக் கண்டிக்கிறார். வேதம் அதைத் தடைசெய்வதில்லை (ரோமர் 14:1-4).

திராவிட சமயங்கள்

திராவிட சமயங்கள் என்று அழைக்கப்படுகின்ற சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்தியம், சௌரம் ஆகிய ஆறு சமயங்களும் கிறிஸ்தவ திருமறையின் அடிப்படையில் எழுந்த இந்தியத் திராவிட சமயங்கள் என்பது டாக்டர் மு. தெய்வநாயகத்தின் வாதம். கிறிஸ்தவத்திற்கே உரித்தான திரித்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் பிதா, குமாரன், ஆவியாகிய அதே தேவனைத்தான் திராவிட சமயங்களும் வேறு பெயர்களில், தமிழகத்திற்கேற்ற முறையில் பயன்படுத்தின என்று இவர் எழுதியுள்ளார். ஆனால் இது திருமறைக்கே புறம்பான ஒரு விளக்கம். எந்த ஒரு மனிதனும் திருமறையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ள கர்த்தரைப்பற்றிய திரித்துவ விளக்கங்களைத் தாம் நினைத்த விதத்தில் எந்தவொரு இனம் அல்லது விளக்கங் கொடுக்க முடியாது. அது நம் பார்வைக்கு எவ்வளவுதான் கவர்ச்சியுள்ளதாகவும் நன்மை அளிக்கும் காரியமாகவும் தென்பட்டாலும் அது திருமறைக்கு விரோதமான காரியம். அதேநேரம் இவர்கள் கூறுவதுபோல் பரிசுத்த ஆவியைப் பெண்ணாக உருவகப்படுத்தி ‘அம்மையாக‘ அழைக்க திருமறை எவ்விதத்திலும் இடங்கொடுக்காது. இத்தகைய விளக்கங்கள் திருமறையைத் தம் சுயநலத்திற்காகப் பயன்படுத்தும் காரியங்களே தவிர, கர்த்தருடைய வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து அவரை மேன்மைப்படுத்தும் செயல்களல்ல.

திருமறை, திருக்குறள், சைவசித்தாந்தம்

திருக்குறள், சைவசித்தாந்தம் போன்ற சாதாரண மனிதர்களால் எழுதப்பட்ட நூல்களைக் கர்த்தருடைய வார்த்தையோடு ஒப்பிடுவது வேதத்திற்குப்புறம்பான காரியமாகும். திருமறை தேவ ஆவியினால் அருளப்பட்ட திருவசனமாக இருக்கின்றது. அதன் சத்தியங்களிலும், போதனைகளிலும் எந்தவித தவறிற்கும் இடமேயில்லை. அதை உலக நூல்களோடு ஒப்பிட்டு சமப்படுத்திப் பார்க்கக்கூடாது. டாக்டர் மு. தெய்வநாயகமும் மற்றவர்களும் இதைத்தான் செய்துள்ளார்கள். அதேநேரம், திருக்குறள், சைவசித்தாந்தம் போன்றவற்றில் சில நல்ல கருத்துக்களும், போதனைகளும் காணப்படலாம். அவற்றை மட்டும் வைத்து, திருமறைக்கு சமமாக இப்புத்தகங்களை நாம் மதிப்பிடக்கூடாது. திருமறையைப் பொறுத்தவரையில் அதற்கு சமமான நூல்கள் உலகில் ஒன்றுமேயில்லை. கிறிஸ்துவை அறிந்து கொள்ளவும், கிறிஸ்தவ வாழ்க்கையை வாழவும் ஒருவனுக்கு சத்திய வசனமாகிய திருமறை மட்டுமே தேவையே தவிர, வேறு எந்தப்புத்தகத்தின் உதவியும் தேவையில்லை. ஆகவே திருமறையின் விளக்கத்தைத்தான் நாமனைவரும் நாடவேண்டும் வேறு சமயக் கோட்பாடுகளையோ சித்தாந்தங்களையோ அல்ல.

கிறிஸ்தவமும் இனப்பாகுபாடும்

திருமறையில் இனப்பாகுபாட்டிற்கு இடமில்லை. அப்படியிருக்க, திருமறை வழிவந்த சமயங்களாக திராவிட சமயங்கள் இருக்குமானால் அவை ஆரிய, பிரமாண வெறுப்புள்ளவைகளாக இருப்பதெப்படி? திருமறை எல்லா இனமக்களுக்கும் உரித்தானது. அதன் போதனைகளனைத்தையும் எல்லா இனமக்கள் மத்தியிலும், எந்தவிதப் பாகுபாடுமின்றி அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த முடியும். நம் இனத்திற்கும், கலாச்சாரத்திற்கும் ஏற்றவிதத்தில் நாம் திருமறையை மாற்றமுடியாது. ஆனால், நமது கலாச்சாரத்தில் இருந்து, தேவனுக்கும், திருமறைக்கும் பொருந்தாது காணப்படும் அம்சங்களைக் களைந்தெடுக்க வேண்டியது நமது கடமை. ஆகவே, ஓர் இனத்தைப் பெருமைப்படுத்தும் விதத்தில் அமைந்த திராவிட சமயங்களுக்கும், எல்லா இனங்களுக்கும் சொந்தமானதும் எல்லா இனங்களையும் பாவத்திலிருந்து விடுவிக்கும் வல்லமையுள்ள திருமறையின் அடிப்படையிலான கிறிஸ்தவத்திற்கும் எவ்விதத் தொடர்புமில்லை.

கிறிஸ்தவத்தைத் திராவிட சமயங்களோடு ஒப்பிட்டுக் காட்டும் செயலின் பல்வேறு தவறுகளை நாம் அடையாளம் காணமுடிந்தாலும் முடிவாக சில உண்மைகளை மட்டும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இத்தகைய ஆய்வுகளில் ஈடுபட்டிருப்பவர்களும் அதை ஆதரிப்பவர்களும் பரந்த கொள்கையுடையவர்கள் (Liberal). இவர்கள் கர்த்தருடைய வார்த்தையின் பூரணத்துவத்திலும் அதன் போதுமான தன்மையிலும் நம்பிக்கையுள்ளவர்களல்ல. ‘தம்முடைய மகிமையினாலும், காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும் அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளியுள்ளது‘ என்ற பேதுருவின் வார்த்தைகளை இவர்கள் விசுவாசிப்பதில்லை. கல்வாரிச் சிலுவையில் சிந்தப்பட்ட கிறிஸ்துவின் இரக்கத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள இரட்சிப்பின் வழிமுறைகளிலும் இவர்களுக்கு ஆர்வமில்லை. புற சமயங்களோடு கிறிஸ்தவத்தை சமப்படுத்தி கிறிஸ்துவின் பெயருக்கே இவர்கள் களங்கம் தேடித்தருகிறார்கள். இவர்களின் வார்த்தையில் மயங்கி, இப்போதனை மற்றவர்களை இலகுவாக கிறிஸ்துவிடம் கொண்டுவர உதவுமே என்று எண்ணிச் செயல்படுவது கர்த்தருடைய வார்த்தையை நம் காலில் போட்டு மிதிப்பதற்கு சமம். எரிச்சலுள்ள தேவன் இப்பேராபத்திலிருந்து நம்மைக் காப்பாராக.

This Article is though saying too much as boasting for Christianity still worth reading for all.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

திராவிட சான்றோர் பேரவை சென்ற ஆண்டில் நிகழ்ந்த விழாப் படங்கள்.
By devapriyaji
கிறிஸ்துவ சூழ்ச்சிகளைத் தகர்த்த பேரியோர் பாராட்டு விழாப் படங்கள்.
சாந்தோம் சர்ச்சின் மற்றும் பல தமிழ்நாட்டு ச்ர்ச் சூழ்ச்சியான திருவள்ளுவரையும் திருக்குறளையும் கேவலப்படுத்தும் ஆய்வுகள் என்னும் பெயரிலான உளறல்கள்.
திராவிட சான்றோர் பேரவை சென்ற ஆண்டில் நிகழ்ந்த விழாப் படங்கள்.
இங்கே சாந்தோம் சர்ச்சிற்கு எதிராக கணேஷ் ஐயருக்கு வாதடிய வழக்கறிஞர். தி.ரு. T.N.ராமச்சந்திரன் -அனைத்துலக சைவ சங்கம் சார்பாக தருமபுர ஆதினத்தில் உளறல் தெய்வநாயகத்தை அழைத்து அவரை வெளிப்பட செய்தவர்.
தெய்வநாயகம் உளறல் நூலிற்கு அற்புதமான மறுப்பு எழுதிய அருணை வடிவேல் முதலியாருக்காக அவர் மகன்.
I.A.S. அதிகாரி. திரு.சுந்தரம் என அனைவரும் இவ்விழாவில் பாராட்டு பட்டனர்.
Sri.Ganesh who distributed the Tamil Hindu fliers in Deivanayagam’ Conference and Mr.Natesan – Dravida Saanror Peravai Chief releasing books.
You can see Mr.Haran in the back
http://devapriyaji.wordpress.com/2009/11/09/dsp-phots/



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

http://bharatabharati.wordpress.com/2010/05/14/2-mythical-thomas-devious-deivanayagam-and-conniving-church-b-r-haran/
http://apostlethomasindia.wordpress.com/2010/05/13/1-mythical-thomas-devious-deivanayagam-and-conniving-church-b-r-haran/

  1. திருக்குறளும் இயேசு கிறிஸ்து சர்ச்சும்

    http://saintthomasfables.wordpress.com/2010/05/24/church-and-thirukural/

    பி.எச்டி. வாங்கலியோ பி.எச்டி.! சாந்தோம் சர்ச்

    http://saintthomasfables.wordpress.com/2010/05/24/santhome-p-hd/

    Friends visit here and make your comments.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard