Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 01. வள்ளுவர் பெருமை


Guru

Status: Offline
Posts: 7387
Date:
01. வள்ளுவர் பெருமை
Permalink  
 


 வள்ளுவர்‌ பெருமை

தமிழகத்திலே வாழும்‌ அனைவரும்‌, இன்று திருக்குறளைத்‌ தலை சிறந்த நூலாகப்‌ போற்றுகின்றனர்‌. அதன்‌ ஆசிரியர்‌ திருவள்ளுவரைத்‌ தலைவணங்கி ஏற்றுகின்றனர்‌. “எல்லோரும்‌ திருக்குறளைப்‌ படிக்க வேண்டும்‌; அவர்‌ வகுத்துள்ள நீதிகளைப்‌ பின்பற்றி வாழவேண்டும்‌; வள்ளுவர்‌ சொல்லும்‌ அறநெறியே எல்லோராலும்‌ ஏற்கத்‌ தகுந்தது;” என்று பலரும்‌ கூறுகின்றனர்‌.இன்று தமிழ்‌ நாட்டில்‌ எழுந்துள்ள இவ்வுணர்ச்சி எல்லோராலும்‌ பாராட்டத்‌ தக்கது.

பல்லாண்டுகளாகத்‌ - திருக்குறள்‌ தோன்றிய கால முதல்‌ ---அதன்‌ பெருமையை அனைவரும்‌ அறிவார்கள்‌. திருக்குறளைப்‌ படித்தவர்கள்‌ அதற்கு நிகரான நூல்‌ வேறொன்றும்‌ இல்லையென்று வியக்கின்றனர்‌; பாராட்டுகின்றனர்‌. திருக்குறளைப்‌ படிக்காதவர்கள்‌ கூடத்‌ திருக்குறளையும்‌, திருவள்ளுவரையும்‌ போற்றிப்‌ புகழ்ந்து வந்தனர்‌. திருவள்ளுவரைப்‌ பற்றியும்‌ திருக்குறளைப்‌ பற்றியும்‌, தமிழ்நாட்டில்‌ கர்ண பரம்பரைக்‌ கதைகள்‌ பல வழங்கிவருகின்றன. நெடுங்காலமாகத்‌ தமிழ்‌ மக்கள்‌ இவ்வாறு வள்ளுவரையும்‌ குறளையும்‌ போற்றி வந்திருக்கின்றனர்‌.இது வள்ளுவர்க்கும்‌ குறளுக்கும்‌ தமிழ்நாட்டில்‌ உள்ள ஒரு தனிச்‌ சிறப்பாகும்‌.

இன்று பொதுமக்களிடையிலே திருவள்ளுவர்‌ நடமாடத்‌ தொடங்கி விட்டார்‌. பாட்டாளிகள்‌ -- உழவர்கள்‌ -- படித்தவர்கள்‌ படிக்காதவர்கள்‌ அனைவரும்‌ திருக்குறளின்‌ பொருளைத்‌ தெரிந்துகொள்ள ஆவல்‌ கொண்டு விட்டனர்‌. இந்த அளவுக்கு இன்று திருவள்ளுவரைப்‌ பற்றியும்‌, திருக்குறளைப்‌ பற்றியும்‌ உணர்ச்சி வெள்ளம்‌ தமிழ்நாட்டில்‌ பெருக்கெடுத்து ஓடுகின்றது

தமிழகத்தில்‌ மட்டும்‌ அன்று; மற்றும்‌ பல நாடுகளிலும்‌ திருவள்ளுவர்‌ குடியேறி நிலைத்துவிட்டார்‌. திருக்குறளைப்‌ பிற நாட்டு மக்களும்‌ பெருமையாகப்‌ போற்றி பாராட்டுகின்றனர்‌; மேல்‌ நாட்டு மொழிகள்‌ பலவற்றிலே பெயர்த்‌ தெழுதப்பட்டிருக்‌கின்றது. ஆதலால்‌ வேற்று நாட்டினரும்‌, வேற்று மொழியினரும்‌ அதை விரும்பிப்‌ படிக்கின்றனர்‌. அதன்‌ ஆசிரியரின்‌ அறிவைப்‌ பாராட்டுகின்றனர்‌. இந்திய மொழிகள்‌ பலவற்றிலும்‌ இப்பொழுது திருக்குறள்‌ மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றது.

உலகப்‌ பொது நூல்‌

திருக்குறளை இன்று உலகப்‌ பொது நூலாகப்‌ போற்று கின்றனர்‌. திருவள்ளுவர்‌ உலக குரு என்ற அரியாசனத்தில்‌ ஏறி வருகிறார்‌. “திருவள்ளுவர்‌, “திருக்குறனைத்‌ தமிழர்களுக்கு மட்டும்‌ என்று இயற்றித்தரவில்லை; உலக மக்கள்‌ அனைவருக்கும்‌ பொது நூலாக ஆக்கித்‌ தந்தார்‌; இதனால்‌ தமிழகமே பெரும்‌ புகழ்பெற்றது.” இவ்வாறு பல்லாண்டுகளுக்கு முன்பே புத்துலகக்‌ கவிஞர்‌ பாரதியார்‌ முழங்கினார்‌.

வள்ளுவன்‌ தன்னை உலகினுக்கே தந்து

வான்‌ புகழ்‌ கொண்ட தமிழ்நாடு  என்பது பாரதி முழக்கம்‌. இச்செந்தமிழ்‌ முழக்கம்‌ இன்று உலகெங்கும்‌ பரவி வருவதைப்‌ பார்க்கின்றோம்‌. இது தமிழர்க்குப்‌ பெருமை; தமிழுக்குச்‌ சிறப்பு.

திருவள்ளுவரின்‌ பெருமைக்கு- திருக்குறளின்‌ - மாண்புக்குப்‌ - பல காரணங்கள்‌ இருக்கலாம்‌. ஆயினும்‌ ஒரு காரணமே அதன்‌ அத்தனை மாண்புக்கும்‌ அடிப்படையாகும்‌. இவ்வுண்மையை மற்றொரு புலவர்‌ பாராட்டிப்‌ பாடி மகிழ்ச்சி யடைகின்றார்‌.

“வள்ளுவர்‌ செய்‌ திருக்குறளை

மறுஅற நன்கு உணர்ந்தோர்கள்‌

உள்ளுவரோ மநுஆதி

ஒரு குலத்துக்கு ஒரு நீதி”  -திருவள்ளுவரால்‌ இயற்றப்பட்ட திருக்குறளைக்‌ குற்றமற நன்றாகக்‌ கற்றறிந்தவர்கள்‌, அதன்‌ ஒப்பற்ற சிறப்பை உணர்ந்து போற்றுவார்கள்‌; ஒவ்வொரு குலத்துக்கு வெவ்வேறு நீதிகளை வகுத்துக்‌ கூறும்‌ மநுதர்மம்‌ போன்ற அறநுூல்களை அவர்கள்‌ சிறந்ததாக நினைக்கமாட்டார்கள்‌””

இவ்வாறு திருவள்ளுவரைப்‌ பாராட்டிப்‌ பாடியவர்‌ காலஞ்சென்ற பேராசிரியர்‌ சுந்தரம்‌ பிள்ளை அவர்கள்‌, இவர்‌ மனோன்மணீயம்‌ என்ற நாடகச்‌ செய்யுள்‌ நூலின்‌ ஆசிரியர்‌.

வடமொழி, தமிழ்‌, ஆங்கிலம்‌ ஆகிய மும்மொழிகளிலும்‌ முதிர்ந்த அறிவுள்ளவர்‌. எம்மொழியிலும்‌, எவரிடத்திலும்‌ வெறுப்பில்லாதவர்‌. தான்‌ உணர்ந்த உண்மையை - திருக்குறனிலே தான்‌ கண்டறிந்த கருத்தை - இவ்வாறு ஓளிவு மறைவு இல்லாமல்‌ கூறினார்‌.

திருக்குறளுக்குப்‌ பின்னே தோன்றிய நீதி நூல்களும்‌ வள்ளுவர்‌ வழியைப்‌ பின்பற்றியே எழுந்துள்ளன. மக்களுக்குப்‌ பொதுவான நீதிகளையே கூறிச்செல்கின்றன. இது குறிப்பிடத்‌தக்கது.

தனிச்‌ சிறப்பு

செந்தமிழ்‌ நூல்கள்‌ எல்லாவற்றிலும்‌ திருவள்ளுவர்‌ ஆட்சி செலுத்துகிறார்‌; திருவள்ளுவர்க்குப்‌ பின்‌ பிறந்த நூல்களில்‌ எல்லாம்‌ அவருடைய கருத்துக்கள்‌ புகுந்திருக்கின்றன; மொழிகள்‌ அமைந்திருக்கின்றன. திருக்குறளின்‌ கருத்துக்களோ, சொற்‌களோ, சொற்றொடர்களோ ஏறாத இனிய தமிழ்‌ நூல்கள்‌ ஒன்றுமே இல்லையென்று கூறிவிடலாம்‌. திருக்குறளுக்குப்‌ பின்‌ பிறந்த எல்லாச்‌ சிறந்த நூல்களிலும்‌ இவற்றைக்‌ காணலாம்‌.

சைவர்கள்‌, வைணவர்கள்‌, சமணர்கள்‌, பெளத்தர்கள்‌ அனைவரும்‌ திருக்குறளிலிருந்து தங்களுக்கு வேண்டியவற்றை அள்ளிக்‌ கொண்டிருக்கின்றனர்‌. அவர்கள்‌ ஆக்கிய தமிழ்ப்‌ பாமாலைகளிலே திருக்குறளிலிருந்து பல மலர்களைப்‌ பறித்து வைத்துத்‌ தொடுத்திருக்கின்றனர்‌. இவ்வாறு திருக்குறள்‌ கருத்தையோ சொற்றொடர்களையோ சேர்த்துத்‌ தொடுத்தால்‌ தான்‌ தங்கள்‌ பாமாலை நல்ல அழகும்‌, நறுமணமும்‌ பெற்று விளங்கும்‌ என்று அவர்கள்‌ விரும்பினார்கள்‌.

இக்காலத்திலும்‌ எல்லா மதத்தினரும்‌ - கிருஸ்துவர்கள்‌ -இஸ்லாமியர்களை உள்ளிட்ட அனைவரும்‌ திருக்குறளை மறந்து விடுவதில்லை. அவர்களுக்குப்‌ பிடித்த பகுதிகளை எடுத்துச்‌ சேர்த்து எழுதுகின்றனர்‌.

இதற்குக்‌ காரணம்‌ உண்டு. திருவள்ளுவர்‌ மதவாதிகளைப்‌ பின்பற்றி அறநெறிகளைக்‌ கூறவில்லை. உலக நிலைமையை ஆராய்ந்து, உண்மைகளை எடுத்து உரைக்கின்றார்‌. உவகத்தோடு ஓட்டி வாழ, நாம்‌ பின்பற்ற வேண்டிய அறங்கள்‌ இன்னின்னவை என்று இயம்புகின்றார்‌. இதுதான்‌ அனைவரும்‌ திருவள்ளுவரைக்‌ கொண்டாடுவதற்குக்‌ காரணம்‌. இதை,

““சமயக்கணக்கர்‌ மதிஷி கூறாது,

உலகியல்‌ கூறிப்‌, பொருள்‌ இது என்ற

வள்ளுவன்‌.” (பா, 178    என்ற கல்லாடர்‌ கவிதையால்‌ காணலாம்‌. இன்றுள்ள கல்லாடம்‌ என்னும்‌ நூல்‌ சைவ சமயநூல்‌. சிவபெருமான்‌ திருவிளையாடல்களையும்‌, பெருமைகளையும்‌ போற்றும்‌ நூல்‌. அத்நூலே இவ்வாறு இயம்புமாயின்‌ வள்ளுவரின்‌ மத நடுநிலைமைக்கு வேறு என்ன தான்‌ சான்று வேண்டும்‌?

இலக்கிய ஆசிரியர்களை - நூலாசிரியர்களை -கவிஞர்களை - விட்டுவிடுவோம்‌. மற்றவர்களைப்‌ பார்ப்போம்‌. அரசியல்‌ வாதிகள்‌ - சமுதாயச்‌ சர்திருத்தக்காரர்கள்‌ - மத வாதிகள்‌ - மத எதிர்ப்பாளர்கள்‌ - பகுத்தறிவு வாதிகள்‌ - வகுப்பு வாதிகள்‌ -தேசிய வாதிகள்‌ அனைவரும்‌ வள்ளுவரை மறந்து விடுவதில்லை; திருக்குறளைப்‌ பயன்படுத்திக்‌ கொள்ளுகின்றனர்‌. எழுத்துக்களில்‌ மட்டும்‌ அன்றி; அவர்களுடைய பேச்சுகளிலும்‌ வள்ளுவரை மேற்கோள்‌ காட்டிக்‌ பேசுகின்றனர்‌.

சுருங்கச்‌ சொன்னால்‌, திருக்குறள்‌ கலக்காத எழுத்தும்‌ சுவையற்றவை என்று கருதப்படுகின்றன. அவை எவ்வளவு இனிமையாக இருந்தாலும்‌ சர்க்கரை கலக்காத பால்‌; அல்லது உப்பில்லாமல்‌ சமைத்த உணவு; என்று தான்‌ எண்ணப்படுஇன்றன.

எல்லாம்‌ நிறைந்தது

எல்லாப்‌ பொருளும்‌ இதன்பால்‌ உள; இதன்பால்‌

இல்லாத எப்பொருளும்‌ இல்லையால்‌ - சொல்லால்‌

பரந்த பாவால்‌ என்பயன்‌ ? வள்ளுவனார்‌

சுரந்த பாவை அத்துணை.

இது திருவள்ளுவ மாலையில்‌ உள்ள ஒரு வெண்பா.

மதுரைத்‌ தமிழ்‌ நாகனார்‌ என்னும்‌ சங்கப்‌ புலவர்‌ பெயரால்‌ உள்ளது. திருவள்ளுவ மாலையிலே திருக்குறளைப்‌ பாராட்டிக்‌ கூறும்‌ 55 வெண்பாக்கள்‌ இருக்கின்றன. அவைகள்‌ பழ;ந்‌தமிழ்ப்‌ புலவர்களின்‌ செய்யுட்கள்‌, அவற்றுள்‌ ஒன்றுதான்‌ இவ்‌வெண்பா. “எல்லாப்‌ பொருள்களும்‌ இத்திருக்குறளில்‌ இருக்கின்றன. 'இதில்‌ கூறப்படாதது ஒன்றும்‌ இல்லை. வள்ளுவரால்‌ மனங்களனிந்து பாடப்பட்ட சுருக்கமான பாடல்களே சிறந்த பயன்‌ தருவன. சொல்லால்‌ பரந்த வேறு புலவர்களின்‌ பாடல்களிலே இவ்வளவு பயனைப்‌ பெறமுடியாது” இதுவே இவ்வெண்பாவில்‌ அமைந்துள்ள பொருள்‌.

இச்‌ செய்யுளைக்கொண்டு “திருக்குறளிலே எல்லாப்‌ பொருளும்‌ அடங்கிக்‌ கிடக்கின்றன; அது ஓன்றைப்‌ படித்தாலே அனைத்தையும்‌ அறிந்து கொள்ளலாம்‌; வேறு எந்நூலையும்‌ படிக்க வேண்டாம்‌.” என்று உரைப்போர்‌ உண்டு. இவர்களைப்‌ பார்த்து “இன்றுள்ள எல்லாக்‌ குறைகளையும்‌ திருக்குறளைக்‌ கொண்டு தீர்த்து விட முடியுமா?” என்று கேட்கலாம்‌. 

இக்கேள்விக்கு விடை கூறுவது அவ்வளவு எளிதன்று. ஒரு உண்மையை மறக்காமல்‌ நினைவிலே வைத்துக்‌ கொண்டால்‌ இக்‌ கேள்வி பிறக்க வேண்டியதேயில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

திருவள்ளுவர்‌ காலத்திற்கும்‌ நமது காலத்திற்கும்‌ நெடுந்தூரம்‌; இடைவெளி ஏராளம்‌. அவர்‌ வாழ்ந்த காலத்தின்‌ சூழ்நிலைக்கு ஏற்றவாறுதான்‌ அவர்‌ அறங்களைத்‌ திரட்டிக்‌ கூறியிருக்க முடியும்‌; அவர்‌ காலத்திலிருந்த எல்லாப்‌ பொருள்‌ களைப்‌ பற்றியும்‌ அவர்‌ ஆராய்ந்து சொல்லியிருக்க முடியும்‌.

இவ்வாறு தான்‌ நாம்‌ முடிவு கட்ட வேண்டும்‌. இக்‌ காலத்தில்‌ உள்ள சமுதாய நிலைமை, அரசியல்‌ அமைப்பு, மக்கள்‌ மனப்பான்மை, வாழ்க்கை, திருவள்ளுர்‌ காலத்திலிருந்து வேறு பட்டவை திருவள்ளுவர்‌ கால நிலையையும்‌, இக்கால நிலையையும்‌ ஒப்பிட்டுப்‌ பார்த்தால்‌ ஒற்றுமையையும்‌ காணலாம்‌; வேற்றுமை யையும்‌ காணலாம்‌. அக்கால நிலையும்‌ இக்கால நிலையும்‌ ஓத்திருக்கும்‌ அமைப்புக்களுக்கே திருக்குறள்‌ வழிகாட்டமுடியும்‌. மாறுபட்ட நிலைமைக்கு அது வழி காட்டமுடியாது.

இன்று நாம்‌ விஞ்ஞானத்‌ துறையிலே முன்னேறி வருகின்றோம்‌. விஞ்ஞான உலகம்‌ அணுசக்தி உலகமாக மாறி வருகின்றது. வள்ளுவர்‌ காலத்திலே இன்றுள்ள விஞ்ஞானமும்‌ இல்லை; அணுசத்தி ஆராய்ச்சியும்‌ இல்லை. அவர்‌ காலத்திலே உழவுத்‌ தொழில்‌ தான்‌ நமது நாட்டின்‌ தலை சிறந்த தொழில்‌. ஏனைய தொழில்களெல்லாம்‌ குடிசைக்‌ கைத்‌ தொழில்களாகவே வளர்ந்து வந்தன.

வண்ணார்‌, மருத்துவர்‌, தச்சர்‌, கொல்லர்‌, கொத்தர்‌ முதலிய தொழிலாளிகள்‌ எல்லாம்‌ பரம்பரைத்‌ தொழிலாளி ளாகவேயிருந்து வந்தனர்‌. குலவிச்சை கல்லாமல்‌ பாகம்படும்‌ என்பது அக்காலக்‌ கொள்கை. குலத்‌ தொழில்‌ தானாகவே வந்து விடும, அதைக்‌ கற்றுக்‌ கொள்ள வேண்டும்‌ என்ற அவசியம்‌ இல்லை. இந்த நம்பிக்கை குடிகொண்டிருந்த காலம்‌ அவர்‌ லம்‌. கைத்தொழில்‌ செய்வோர்க்குக்‌ கல்வி வேண்டுவதில்லை என்று மக்கள்‌ எண்ணியிருந்த காலம்‌. ஆனால்‌ இதைப்‌ பற்றித்‌ தஇிருவள்ளுவர்க்கு மாறுபட்ட கருத்துண்டு. கல்வி அனைவர்க்கும்‌ அவசியம்‌ என்பதே அவர்‌ கருத்து.

வேற்றுமையையும்‌ காணலாம்‌. அக்கால நிலையும்‌ இக்கால நிலையும்‌ ஓத்திருக்கும்‌ அமைப்புக்களுக்கே திருக்குறள்‌ வழிகாட்டமுடியும்‌. மாறுபட்ட நிலைமைக்கு அது வழி காட்டமுடியாது.

இன்று நாம்‌ விஞ்ஞானத்‌ துறையிலே முன்னேறி வருகின்றோம்‌. விஞ்ஞான உலகம்‌ அணுசக்தி உலகமாக மாறி வருகின்றது. வள்ளுவர்‌ காலத்திலே இன்றுள்ள விஞ்ஞானமும்‌ இல்லை; அணுசத்தி ஆராய்ச்சியும்‌ இல்லை. அவர்‌ காலத்திலே உழவுத்‌ தொழில்‌ தான்‌ நமது நாட்டின்‌ தலை சிறந்த தொழில்‌. ஏனைய தொழில்களெல்லாம்‌ குடிசைக்‌ கைத்‌ தொழில்களாகவே வளர்ந்து வந்தன.

வண்ணார்‌, மருத்துவர்‌, தச்சர்‌, கொல்லர்‌, கொத்தர்‌ முதலிய தொழிலாளிகள்‌ எல்லாம்‌ பரம்பரைத்‌ தொழிலாளி களாகவேயிருந்து வந்தனர்‌. குலவிச்சை கல்லாமல்‌ பாகம்படும்‌ என்பது அக்காலக்‌ கொள்கை. குலத்‌ தொழில்‌ தானாகவே வந்து விடும, அதைக்‌ கற்றுக்‌ கொள்ள வேண்டும்‌ என்ற அவசியம்‌ இல்லை. இந்த நம்பிக்கை குடிகொண்டிருந்த காலம்‌ அவர்‌ காலம்‌. கைத்தொழில்‌ செய்வோர்க்குக்‌ கல்வி வேண்டுவதில்லை என்று மக்கள்‌ எண்ணியிருந்த காலம்‌. ஆனால்‌ இதைப்‌ பற்றித்‌ இிருவள்ளுவர்க்கு மாறுபட்ட கருத்துண்டு. கல்வி அனைவர்க்கும்‌ அவசியம்‌ என்பதே அவர்‌ கருத்து.

திருக்கும்‌ புலவர்களே தெய்வப்‌ புலவர்கள்‌ என்று போற்றப்படுவார்கள்‌; மக்களுக்கு அறநெறியைப்‌ போதிக்க ஆண்டவனால்‌ அனுப்பப்பட்டவர்கள்‌ என்று கொண்டாடப்படுவார்கள்‌. அவதார புருஷர்கள்‌ என்றும்‌ எண்ணப்படுவார்கள்‌. இத்தகைய தலைசிறந்த அறிஞர்களிலே திருவள்ளுவர்‌ முதல்‌ பெற்றவர்‌; தனக்கு நிகர்‌ தானாகவே விளங்குகின்றவர்‌; இதில்‌ எள்ளளவும்‌ ஐயம்‌ இல்லை.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard