Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆரியர்‌ தமிழர்‌ மாண்பு


Guru

Status: Offline
Posts: 7329
Date:
ஆரியர்‌ தமிழர்‌ மாண்பு
Permalink  
 


ஆரியர்‌ தமிழர்‌ மாண்பு

தமிழர்‌ நாகரிகத்தை விளக்குவதே திருக்குறள்‌; திருக்குறள்‌ கூறுவனவே தமிழர்‌ பண்பு; தமிழர்‌ கலாசாரம்‌; தமிழர்‌ சமயம்‌; தமிழர்க்கு வழி காட்டுவன; என்று அனைவரும்‌ கூறுகின்றனர்‌. இவ்வாறு கூறுவது உண்மை; போற்றத்தக்கது; ஒப்புக்கொள்ளத்‌தக்கது; வாழ்த்தி வரவேற்கத்தக்க து.

சிலர்‌ ஆரியர்‌ நாகரிகம்‌ வேறு; தமிழர்‌ நாகரிகம்‌ வேறு; திருக்குறள்‌ ஆரியர்‌ நாகரிகத்தைக்‌ கண்டிக்கிறது, தமிழர்‌ நாகரிகத்‌தைப்‌ போற்றுகின்றது; என்று கூறுகின்றனர்‌. இவர்கள்‌ கூற்றுக்குத்‌ திருக்குறளில்‌ இடம்‌ உண்டா? திருவள்ளுவரிடத்திலே இத்தகைய விருப்பு வெறுப்பு உண்டோ? இவற்றை ஆராய வேண்டும்‌. திருக்குறளை நடு நிலையிலிருந்து படிப்போர்‌ ஆரியர்‌ தமிழர்‌ வேற்றுமை அவரிடம்‌ இருப்பதாக எண்ண முடியாது.

“செய்யா மொழிக்கும்‌, திருவள்ளுவர்‌ மொழிந்த

பொய்யா மொழிக்கும்‌ பொருள்‌ ஒன்றே; - செய்யா

அதற்குரியர்‌ அந்தணர்‌; ஆராயின்‌, ஏனை

இதற்குஉரியர்‌ அல்லாதார்‌ இல்‌.”

ஒருவரால்‌ செய்யப்படாத மொழியாகிய வேதத்துக்கும்‌, திருவள்ளுவர்‌ கூறிய பொய்யா மொழியாகிய திருக்குறளுக்கும்‌ பொருள்‌ ஒன்றுதான்‌. வேதத்தைப்‌ படி. ப்பதற்குரியவர்‌ அந்தணர்‌; திருக்குறளைப்‌ படிக்க உரிமையற்றவர்‌ ஒருவருமே இல்லை, எல்லோரும்‌ படிக்கலாம்‌.

“ஆரியமும்செந்தமிழும்‌ ஆராய்ந்து, இதனின்‌ இது

சீரியது, என்று ஒன்றைச்‌ செப்பரிதால்‌; ஆரியம்‌

வேதம்‌ உடைத்துத்‌; தமிழ்‌ திருவள்ளுவனார்‌

ஒது குறட்பா உஉைத்து.”

வடமொழியும்‌ செந்தமிழும்‌ சமமான மொழிகள்‌. அவற்றை ஆராய்ந்தால்‌, வடமொழியைக்‌ காட்டிலும்‌ தமிழ்‌ சிறந்தது என்றோ, தமிழைவிட வடமொழி உயர்ந்தது என்றோ சொல்ல முடியாது. வடமொழியிலே வேதம்‌ இருக்கின்றது; தமிழிலே திருவள்ளுவர்‌ கூறிய குறள்‌ இருக்கின்றது.”

இவ்‌ வெண்பாக்கள்‌ திருக்குறளில்‌ கூறப்படும்‌ கொள்கைகளும்‌, வடமொழி வேதத்தில்‌ கூறப்படும்‌ அறங்களும்‌ ஒன்றே கருத்தை வலியுறுத்துகின்றன. முதன்‌ வெண்பா வெள்ளி வீதியார்‌ என்னும்‌ புலவரால்‌ பாடப்பட்டது. இரண்டாவது வெண்பா வண்ணக்கஞ்‌ சாத்தனார்‌ என்னும்‌ புலவரால்‌ பாடப்பட்டது. இவர்கள்‌ பன்னூறாண்டுகளுக்கு முன்னிருந்த புலவர்கள்‌.

“அகரம்‌ முதல எழுத்தெல்லாம்‌ ஆதி

பகவன்‌ முதற்றே உலகு.

எழுத்துக்கள்‌ எல்லாம்‌ அ என்னும்‌ எழுத்தைத்‌ தலைமையாகக்‌ கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம்‌ கடவுளைத்‌ தலைமையாகக்‌ கொண்டிருக்கின்றது” என்பது முதற்‌ குறள்‌. பின்னும்‌ பற்று அற்றான்‌ (350) உலகு இயற்றியான்‌ (1062) என்று கூறப்பட்டி ருக்கினறன. இவைகளால்‌ திருவள்ளுவர்‌ கடவுள்‌ ஒருவர்‌ உண்டென்று ஒப்புக்‌ கொள்ளுகின்றார்‌ என்பதைக்‌ காணலாம்‌.

“அறத்துஆறு இதுஎன வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான்‌ இடை.

அறநெறியிலே நின்றதன்‌ பயன்‌ இதுவென்று வாயினால்‌ சொல்ல வேண்டுவதில்லை. பல்லக்கைத்‌ தூக்கிச்‌ செல்கின்றவன்‌; அதில்‌ ஏறிச்‌ செல்பவன்‌ இவர்களிடையே கண்டு கொள்ளலாம்‌” (கு. 37). இது நல்வினை தீவினைகளின்‌ பயனை வலியுறுத்தும்‌

குறள்‌. ஊழ்‌ வினையைப்‌ பற்றி ஒரு தனி அதிகாரமே உண்டு. அதில்‌ உள்ள பத்துக்‌ குறள்களிலும்‌ ஊழின்‌ வலிமையை எடுத்துக்‌ கூறுகிறார்‌ வள்ளுவர்‌.

மறு பிறப்பு

மறுபிறப்பைத்‌ திருவள்ளுவர்‌ ஓப்புக்கொள்ளுகிறார்‌.

“ஒருமைக்கண்‌ தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும்‌ ஏமாப்பு உடைத்து.

ஒரு பிறப்பிலே தான்‌ கற்ற கல்வியானது ஒருவனுக்கு ஏழு பிறப்பிலும்‌ உதவி செய்யும்‌ தன்மையுள்ளது.” (ஞே. 399)

“வேண்டுங்கால்‌ வேண்டும்‌ பிறவாமை; மற்றது

வேண்டாமை வேண்ட வரும்‌.

ஒருவன்‌ ஒன்றை விரும்புவதனால்‌ மீண்டும்‌ இவ்வுலகில்‌ பிறவாத நிலையையே விரும்ப வேண்டும்‌; அந்தப்‌ பிறவா நிலை மை அசையற்ற நிலையை விரும்புவதனால்தான்‌ உண்டாகும்‌.” (ஞூ.362) இவைகளால்‌ மறுபிறப்பு உண்டு என்பதைக்‌ காணலாம்‌.

சுவர்க்க நரக மோட்சம்‌

சுவர்க்கம்‌, நரகம்‌ என்பவை தனித்தனி உலகங்கள்‌. சுவர்க்கம்‌ இன்பம்‌ நிறைந்த உலகம்‌; நரகம்‌ துன்பம்‌ நிறைந்த உலகம்‌. இவ்வுலகிலே நன்னெறியிலே நடப்பவர்‌ இறந்தபின்‌ சுவர்க்கத்தை அடைவர்‌; இன்பம்‌ துய்ப்பர்‌. இவ்வுலகிலே அறநெறியை மீறி - கடந்து - நடப்போர்‌ இறந்தபின்‌ நரகத்தை நண்ணுவர்‌; துன்புற்று நலிவார்கள்‌. இது பண்டைக்கால நம்பிக்கை.

“அடக்கம்‌ அமரர்உள்‌ உய்க்கும்‌; அடங்காமை

ஆர்‌இருள்‌ உய்த்து விடும்‌.

அறநெறியிலே அடங்கி நடக்கும்‌ குணம்‌ ஒருவனைச்‌ சுவர்க்க மாகிய வானவர்‌ உலகில்‌ சேர்க்கும்‌; அறநெறிக்கு அடங்காத்‌ தீயொழுக்கம்‌. நிறைந்த இருள்‌ என்னும்‌ நரகத்தில்‌ சேர்த்துவிடும்‌” (க.127). இக்குறள்‌ துறக்கம்‌ வேறு; நரகம்‌ வேறு; இரண்டும்‌ இவ்வுலகிற்கு அப்பால்‌ உள்ளவை; என்ற கருத்துடையது.

“யான்‌ எனது என்னும்‌ செருக்கு அறுப்பான்‌ வானோர்க்கும்‌

உயர்ந்த உலகம்‌ புகும்‌.

நான்‌, எனது, என்னும்‌ அகங்கார உணர்ச்சியை ஆழிப்‌பவனே தேவர்களாலும்‌ அடையமுடியாத வீட்டுலகத்தை அடைவான்‌.” (கு.346). இக்குறளிலே வானோர்க்கும்‌ உயர்ந்த உலகம்‌” என்று மோட்ச லோகத்தைக்‌ குறிப்பிடுகின்றார்‌. உடம்பை நான்‌ என்று நினைப்பதும்‌, செல்வப்‌ பொருளை என்னுடையவை என்று எண்ணுவதும்‌ அறியாமை யகும்‌. யான்‌, எனது, என்னும்‌ ஆசையைத்‌ துறந்தவர்களே ஞானிகள்‌: பிறவா நெறியைப்‌ பெறுவதற்கு த்‌ தகுதியுள்ளவர்கள்‌. இதுவே வேதாந்த சாரம்‌. இந்த வேதாந்த சாரத்தை இக்குறள்‌ திரட்டி விளக்கியிருக்கின்றது.

மோட்சம்‌, முத்தி, விடுதலை என்று சொல்லப்படுவது

என்றும்‌ அழியாத நிலை. இது வானவர்‌ வாழும்‌ துறக்கத்தை

விட மேலானது. இந்த நிலையை அடைந்தால்தான்‌ மீண்டும்‌

பிறவாத நிலையைப்‌ பெறமுடியும்‌. இது முன்னோர்‌ கொள்கை:

இக்கொள்கையிலே வள்ளுவர்க்கு உறுதியான நம்பிக்கை

உண்டு.

 

வேத ஒழுக்கம்‌

வேதங்களையும்‌ வேத ஒழுக்கங்களையும்‌ வள்ளுவர்‌ ஒப்புக்‌

கொள்ளுகின்றார்‌.

“அந்தணர்‌ நூற்கும்‌, அறத்திற்கும்‌ ஆதியாய்‌

நின்னது மன்னவன்‌ கோல்‌.

 

அந்தணர்களின்‌ வேதத்திற்கும்‌, அறநெறிக்கும்‌ அடிப்படை

யாய்‌ நிற்பது அரசனுடைய செங்கோலேயாகும்‌.” (கு.543).

 

“ஆபயன்‌ குன்றும்‌, அறுதொழிலோர்‌ நூல்மறப்பர்‌,

 

காவலன்‌ காவான்‌ எனின்‌.

 

நாடு காப்போன்‌ முறைப்படி நாட்டைக்‌ காக்காவிட்டால்‌,

பசுக்கள்‌ தரும்‌ பயன்‌ குறையும்‌; அந்தணர்கள்‌ வேதங்களை

மறப்பர்‌” (ஞ.560)

 

வள்ளுவர்‌ காலத்திலே தமிழ்நாட்டிலே வேதங்கள்‌ வழங்கப்‌

பட்டு வந்தன; வேதங்களைக்‌ கற்றவர்கள்‌, வேதநெறியைப்‌ பின்‌

பற்றியவர்கள்‌, பரப்பியவர்கள்‌, அந்தணர்‌ என்று அமைக்கப்‌

பட்டனர்‌. இவ்வுண்மையை இக்குறள்கள்‌ எடுத்துக்‌ காட்டுகின்றன.

“அவிசொரிந்து ஆயிரம்‌ வேட்டலின்‌ , ஒன்றன்‌

உயிர்செகுத்து உண்ணாமை நன்று,

நெய்‌ முதலிய பண்டங்களைத்‌ தீயிலே சொரிந்து ஆயிரக்கணக்கான வேள்விகளைச்‌ செய்வதைக்‌ காட்டிலும்‌, ஒரு பிராணியின்‌ உயிரை அழித்து அதன்‌ உடம்பை உண்ணாதிருத்தல்‌ சிறந்தது” (ஞ.259). சிலர்‌ இக்குறளை எடுத்துக்கூறி திருவள்ளுவர்‌ யாகத்தைக்‌ கண்டிக்கிறார்‌; அவர்‌ ஆரிய நாகரிகத்தின்‌ எதிரி; தமிழர்‌ நாகரிகத்தைப்‌ போற்றுகிறார்‌; என்று கூறுவர்‌. இக்குறள்‌ புலால்‌ உண்ணாமை௰யை வலியுறுத்துவது; வேள்வியைக்‌ கடிவது அன்று. இது, வேள்வி செய்வதைக்‌ காட்டிலும்‌ உயிர்க்கொலை செய்து புலால்‌ உண்ணாமையே சிறந்தது என்பதைத்தான்‌ கூறிற்று. அதைவிட இது சிறந்தது என்றால்‌, அது கைவிடத்தக்கது என்பது பொருள்‌ அன்று. வேத வேள்வியைவிடப்‌ புலால்‌ உண்ணாமை சிறந்தது. என்று கூறியதாகத்‌ தான்‌ கொள்ள வேண்டும்‌. வள்ளுவர்‌ புலால்‌ உண்ணாமை தான்‌ சிறந்த அறம்‌ என்று கருதியவர்‌. ஆதலால்‌ அவர்‌ காலத்தில்‌ சிறப்பாக மக்கள்‌ கருதி வந்த வேள்வியைவிடப்‌ புலால்‌ உண்ணாமையே சிறந்தது என்று எடுத்துக்‌ காட்டினார்‌.

பிரம்மச்சரியம்‌, கிரகஸ்தம்‌, வானப்பிரஸ்தம்‌, சந்நியாசம்‌ என்னும்‌ நால்வகை அசிரம முறையும்‌ தமிழகத்தில்‌ இருந்தது. இதையும்‌ வள்ளுவர்‌ எடுத்துக்‌ காட்டுகிறார்‌...

“இல்வாழ்வான்‌ என்பான்‌, இயல்புடைய மூவர்க்கும்‌

நல்லாற்றின்‌ நின்ற துணை.

இல்லறத்திலே வாழ்கின்றவன்‌ என்று சொல்லப்படுகின்றவன்‌ அறத்தின்‌ இயல்புடைய பிரமச்சாரி, வானப்பிரஸ்தன்‌. சந்நியாசி அகிய மூவர்க்கும்‌ நல்வழியிலே நடப்பதற்கு நிலைத்து நின்ற துணையாவான்‌” (கு.41). இக்குறள்‌ நால்வகை அஸ்ரம நிலை தமிழகத்தில்‌ இருந்தது என்பதற்கு ஆதரவு. திருவள்ளுவர்‌ இந்த நால்வகை ஆஸ்ரம நிலைகளைப்‌ பற்றித்‌ தனித்தனியே கூறவில்லை. இல்லறம்‌ துறவறம்‌ என்று இரண்டாக வகுத்துக்‌ கொண்டார்‌. இல்லறம்‌ கிரகஸ்தாசிரமம்‌; துறவறம்‌ சந்நியாச ஆஸ்ரமம்‌, இல்லறத்திலே பிரம்மச்சரியத்தை அடக்கினார்‌; துறவறத்திலே வானப்பிரஸ்தத்தை அடக்கிக்‌ கூறினார்‌. திருக்குறளைப்‌ படிப்போர்‌ இவ்வுண்மையைக்‌ காணலாம்‌.

குவ ஒழுக்கம்‌

தவம்புரிதல்‌ தமிழர்‌ நாகரிகம்‌ அன்று; தவத்தைப்‌ பற்றித்‌ திருவள்ளுவர்‌ கூறவில்லை; என்று உரைப்போர்‌ உண்டு. தவம்‌ என்று ஒரு அதிகாரமே திருக்குறளில்‌ இருக்கின்றது, இவ்‌வதிகாரத்தின்‌ வெண்பாக்களையும்‌ படித்தவர்கள்‌ இவ்வாறு சொல்லத்‌ துணியார்‌.

“தவம்‌ செய்வார்‌ தம்கருமம்‌ செய்வார்‌; மற்று அல்லார்‌

அவம்‌ செய்வார்‌ ஆசையுள்‌ பட்டு.

தவம்‌ செய்கின்றவரே தாம்‌ நன்மையடைவதற்குரிய காரியத்தைச்‌ செய்கிறவர்‌ ஆவார்‌; தவம்‌ செய்யாதவர்கள்‌ ஆசையுள்‌ வீழ்ந்து தமக்குக்‌ கேடு தேடிக்‌ கொள்பவர்‌ ஆவார்‌.”(ஞ..266)

“தவமும்‌ தவம்‌ உடையார்க்கு ஆகும்‌; அவம்‌ அதனை

அஃது இலார்‌ மேற்கொள்வது.

தவக்கோலம்‌, உண்மையான தவ ஒழுக்கம்‌ உள்ளவர்க்கே ஏற்றதாகும்‌; உண்மையான தவம்‌ அற்றவர்‌, அக்கோலத்தை மேற்‌கொள்ளுவது வீணாகும்‌.” (ஞு. 262)

இக்குறள்கள்‌ தவத்தின்‌ சிறப்பையும்‌, உண்மைத்‌ தவசிகளே தவக்கோலம்‌ பூணலாம்‌ என்பதையும்‌ எடுத்துக்‌ காட்டின. திருவள்ளுவர்‌, தவம்‌, தவப்பயன்‌ இவற்றை ஒப்புக்‌ கொண்டவர்‌ என்பதற்கு இவ்விரண்டு செய்யுட்களே போதும்‌.

“தவம்‌ என்பது கண்மூடித்‌ தனித்திருப்பது அன்று? முயற்சியே தவம்‌ அகும்‌. ஆதலால்‌ முயற்சியையே வள்ளுவர்‌ தவம்‌ என்ற சொல்லால்‌ குறிக்கின்றார்‌” என்போரும்‌ உண்டு. இது பொருந்தாது. திருக்குறள்‌ பொருட்பாலில்‌ ஊக்கம்‌ உடைமை, மடியின்மை, ஆள்வினை உடைமை, இடுக்கண்‌ அழியாமை என்று நான்கு அதிகாரங்கள்‌ தனியாக இருக்கின்றன. இவற்றை மறந்தவர்களே இவ்வாறு மயங்கி உரைப்பார்கள்‌. அந்த நான்கு அதிகாரங்களும்‌ முயற்சியின்‌ பெருமையையே வலியுறுத்துவன. அதலால்‌ தவம்‌ என்ற அதிகாரம்‌ தவத்தைப்‌ பற்றித்தான்‌ கூறுகிறது என்பது உறுதி.

தென்புலத்தார்‌

தென்புலத்தாரைப்‌ பிதிரர்‌ என்பர்‌. பிதிர்கள்‌ முன்னோர்கள்‌. முன்னோர்களை வணங்கும்‌ வழக்கம்‌. பண்டை நாகரிகம்‌ பெற்ற பலரிடமும்‌ இருந்தது. எகிப்தியர்‌ நாகரிகம்‌ பழைமை யானது; சீனர்‌ நாகரிகம்‌ பழைமையானது. எகிப்தியர்களும்‌ சீனர்களும்‌ தங்கள்‌ முன்னோர்களை வணங்கி வந்தனர்‌. இறந்தவர்கள்‌ பொருட்டு நினைவுச்‌ சின்னங்கள்‌ அமைத்தனர்‌. இதே வழக்கம்‌ தமிழரிடமும்‌ உண்டு. தமிழர்கள்‌ இறந்தவர்‌ களுக்குக்‌ கல்நாட்டி, வழிபட்டனர்‌. இந்த வழக்கத்திலிருந்து தான்‌ தென்புலத்தார்‌ என்னும்‌ பிதிரர்களைப்‌ போற்றும்‌ வழக்கம்‌ எழுந்தது.

“தென்புலத்தார்‌, தெய்வம்‌, விருந்து, ஒக்கல்‌, தான்‌, என்று ஆங்கு

ஐம்புலத்து ஆறு ஓம்பல்‌ தலை.

பிதிர்க்கள்‌, தேவர்கள்‌, அதிதிகள்‌, சுற்றத்தார்‌, தான்‌ என்று சொல்லப்பட்ட ஐந்து இடத்திலும்‌ செய்ய வேண்டிய காரியங்‌களைத்‌ தவறாமல்‌ செய்தல்‌ இல்லறத்தில்‌ வாழ்வோனது தலைமையான கடமையாகும்‌.” (க.43)

முன்னோர்களை வணங்கும்‌ முறையிலே வேற்றுமை இருக்கலாம்‌. அந்தந்த நாட்டின்‌ நிலைமைக்கு ஏற்றபடி மாறுபட்டிருக்கலாம்‌. அனால்‌ முன்னோர்களை வணங்கும்‌ வழக்கம்‌. நாகரிகம்‌ பெற்ற மக்களிடம்‌ நிலைத்திருந்தது.

இதையே வள்ளுவர்‌ எடுத்துக்‌ காட்டினார்‌. இக்கருத்தைச்‌ சங்க இலக்கியங்களிலும்‌ காணலாம்‌.

“இம்மை உலகத்து இசையொடும்‌ விளங்கி

மறுமை உலகமும்‌ மறுஇன்றி எய்துப

செறுநரும்‌ விழையும்‌ செயிர்தீர்‌ காட்சிச்‌

சிறுவர்ப்‌ பயந்த செம்மலோர்‌.

இவ்வுலகத்திலே புகழுடன்‌ வாழ்வர்‌; குற்றம்‌ இன்றி மறுஉலகத்தையும்‌ பெறுவர்‌; பகைவர்களும்‌ விரும்பத்தகுந்த அறிவுள்ள சிறுவர்களைப்‌ பெற்றவர்கள்‌.” (அகம்‌. 66)

தென்புலம்‌ வாழ்நர்க்கு அருங்கடன்‌ இறுக்கும்‌

பொன்‌ போல்‌ புதல்வர்‌ (புற. 9)

தென்‌ திசையிலே வாழும்‌ பிதிர்களுக்கு ஆற்ற வேண்டிய அரிய கடன்களைச்‌ செய்யும்‌, பொன்‌ போன்ற சிறந்த புத்திரர்கள்‌. மேலே காட்டிய அகநாறூற்றுப்‌ பாட்டும்‌, புறநானூற்றுப்‌ பாட்டும்‌ முன்னோர்கள்‌ நல்லுலகம்‌ பெறுவதற்காகப்‌ புத்திரர்கள்‌ வேண்டும்‌ என்று விரும்பினர்‌. புத்திரர்களும்‌ பிதிர்களுக்காகச்‌ சில கடன்களைச்‌ செய்து வந்தனர்‌ என்பதைக்‌ காட்டுகின்றன. இவ்வுண்மையைப்‌ பின்பற்றித்தான்‌ வள்ளுவரும்‌ “தென்புலத்‌தார்‌” என்னும்‌ குறளை இல்லறத்தான்‌ கடமையை வலியுறுத்து வதற்காகக்‌ கூறியிருக்கின்றார்‌.

இத்தகைய சரித்திர உண்மையை மறந்தவர்களே தென்‌புலத்தார்க்கு அருங்கடன்‌ இறுக்கும்‌ வழக்கம்‌ தமிழர்‌ வழக்கம்‌ அன்று, ஆரியர்‌ வழக்கம்‌; என்று கூறுவர்‌. இவர்கள்‌ இக்குறளுக்கு, வள்ளுவர்‌ கருத்துக்கும்‌, வரலாற்று உண்மைக்கும்‌ பொருந்தாத பொருள்‌ கூற மண்டையை உடைத்துக்‌ கொள்ளுவார்கள்‌.

வள்ளுவர்‌ கருத்துப்‌ பொருந்துமா? பொருந்தாதா? என்று முடிவு செய்வது வேறு; அவர்‌ கருத்து என்னவென்று காண்பது வேறாகும்‌. “தென்புலத்தார்‌” என்பதற்குப்‌ பிதிரர்‌ என்று பொருள்‌ செய்யாமல்‌ வேறு பொருள்‌ கூறுவது பொருந்தாது. அது தமிழர்‌ பண்பையும்‌ , வரலாற்று உண்மையையும்‌ மறந்துரைக்கும்‌ பொருளாகும்‌.

புராணங்கள்‌

வள்ளுவர்‌ புராணக்‌ கொள்கைகளையும்‌, கருத்துக்களை யும்‌ மறக்கவில்லை, வள்ளுவர்‌ காலத்‌ தமிழகத்திலே புராண வரலாற்றுகள்‌ வழங்கியிருந்தன; மக்கள்‌ அவ்வரலாறுகளிலே நம்பிக்கை கொண்டிருந்தனர்‌.

“ஐந்து அவித்தான்‌ ஆற்றல்‌ அகம்விசும்பு உளார்‌ கோமான்‌

இந்திரனே சாலும்‌ கரி” (கு. 85)

ஐந்து புலன்களையும்‌ அடக்கி அண்டவனுடைய வலிமைக்கு பெரிய வானத்தில்‌ வாழ்கின்ற தேவர்களின்‌ தலைவனாகிய இந்திரனே போதுமான சாட்சி” (க. 25)

இந்திரனைப்‌ பதவியிழந்து பரிதவகிக்கும்படி துர்வாச முனிவர்‌ சாபம்‌ இட்டது; அவன்‌ அகலிகை மேல்‌ காதல்‌ கொண்டதால்‌ கெளதம முனிவரின்‌ சாபம்‌ பெற்றது; பொன்று கதைகளை இக்குறள்‌ நினைஷூட்டுகின்றது. இந்திரனைத்‌ தென்னாட்டினர்‌ வடநாட்டினர்‌ அனைவரும்‌ போற்றினர்‌. தமிழ்‌ நாட்டிலே இந்திரவிழா நடைபெற்று வந்த செய்தியைப்‌ பழந்தமிழ்‌ நூல்களிலே காணலாம்‌. மருத நிலத்‌தினர்ககு இந்திரன்‌ தெய்வம்‌. இவைகளும்‌ குறிப்பிடத்தக்கவை.

“மடியிலா மன்னவன்‌ எய்தும்‌ அடி அளந்தான்‌

தாஅயது எல்லாம்‌ ஒருங்கு

சோம்பலற்ற மன்னன்‌, திருமாலால்‌ ஓரே அடியால்‌ அளக்கப்பட்டதாகிய இவ்வுலகம்‌ முழுவதையும்‌ ஒரே மூச்சில்‌ பெறுவான்‌.” (ஞ.670)

“தாம்வீழ்வார்‌ மென்தோள்‌ துயிலின்‌ இனிது கொல்‌?

தாமரை கண்ணான்‌ உலகு

தம்மால்‌ காதலிக்கப்படும்‌ பெண்களின்‌, மெல்லிய தோள்‌ களின்‌ மேல்‌ படிந்து தூங்குவதைவிட, திருமாலின்‌ வைகுந்த பதவியை அடைந்து வாழ்வது இன்பமுடையதோ” (கு.1103)

இவ்விரண்டு குறள்களும்‌ திருமாலைப்பற்றிக்‌ கூறின. முதற்‌ குறள்‌ திருமாலின்‌ வாமனாதாரத்தைப்‌ குறித்தது. இரண்டாவது குறள்‌ திருமாலின்‌ வைகுந்தலோகத்தின்‌ இன்பத்தைக்‌ கூறிற்று.

கூற்றம்‌ குதித்தலும்‌ கைகூடும்‌. 269(269)

உயிர்‌ உண்ணும்‌ கூற்று. (326)

கூற்றத்தைக்‌ கையால்‌ விளித்து அகற்றால்‌ (894)

பண்டு அறியேன்‌ கூற்று என்பதனை (1083)

கூற்றமோ, கண்ணோ, பிணையோ. (1085)

இவைகள்‌ கூற்றுவன்‌ உண்டு என்பதை ஒத்துக்‌ கொள்ளு கின்றன; மக்களின்‌ உயிரையும்‌ உடம்பையும்‌ வேறாகப்‌ பிரிப்பவன்‌ கூற்றுவன்‌. அவனுக்குத்‌ தனி உலகமும்‌ தனித்தூதர்களும்‌ உண்டு; அவன்‌ மறம்‌ புரியும்‌ மக்களின்‌ உயிரைப்‌ பறித்துச்‌ செல்வான்‌; அவவுயிர்களுக்குத்‌ தண்டனையளிப்பான்‌. இக்கொள்கையை வள்ளுவர்கால மக்கள்‌ நம்பி வந்தனர்‌.

 

“அவ்வித்து அழுக்காறு உடையானைச்‌ செய்யவள்‌

தவ்வையைக்‌ காட்டிவிடும்‌.

பொறாமைப்படுகின்றவனைக்‌ கண்டு, திருமகள்‌ பொறுக்‌்காமல்‌ அவனைத்‌ தன்‌ மூத்தாளிடம்‌ காட்டிவிட்டு நீங்குவாள்‌.”(கு. 162)

“மடிஉளாள்‌ மாமுகடி என்ப, மடியிலான்‌

தாள்‌ உளாள்‌ தாமரையிளாள்‌.

“சோம்பலிலே கருமையான மூதேவி வாழ்கின்றாள்‌. சோம்பல்‌ இல்லாதவன்‌ முயற்சியிலே திருமகள்‌ வாழ்கின்றாள்‌, என்று கூறுவர்‌ அறிஞர்‌. (ஞே. 677)

செல்வத்தைத்‌ தருகின்றவள்‌ சீதேவி; வறுமையைச்‌ சேர்ப்‌பவள்‌ மூதேவி. இருவரும்‌ உடன்‌ பிறந்தவர்கள்‌. இளையவள்‌ சீதேவி - திருமகள்‌; மூத்தவள்‌ மூதேவி. செய்யவள்‌ தாமரை யினாள்‌ - சீதேவி. தவ்வை, மாமுகடி. - மூதேவி. மேலே காட்டிய இரண்டு குறள்களும்‌ இவ்வுண்மையை உரைத்தன.

பேய்‌, அலகை, தாக்கணங்கு, என்ற பெயர்களும்‌ திருக்‌குறளிலே காணப்படுகின்றன. இவைகள்‌ வள்ளுவர்‌ காலத்து மக்கள்‌ பேய்‌ பிசாசுகளின்‌ நம்பிக்கை வைத்திருந்தார்கள்‌ என்பதைக்‌ காட்டும்‌.

மேலே கூறியவைகளிலிருந்த திருவள்ளுவரின்‌ உண்மைக்‌ கருத்துக்களை நாம்‌ உணர்ந்து கொள்ளலாம்‌. அவர்‌ ஆரியர்‌ பண்பு, தமிழர்‌ பண்பு என்ற வேற்றுமை காணாதவர்‌; கடவுள்‌ நம்பிக்கையுள்ளவர்‌; நல்வினை தீவினைப்‌ பலன்களிலே நம்பிக்‌கையுள்ளவர்‌; மறுபிறப்பிலே நம்பிக்கையுள்ளவர்‌. சுவர்க்கம்‌, நரகம்‌ என்ற கொள்கையுள்ளவர்‌; மோட்சத்திலே நம்பிக்கை கொண்டவர்‌. வேதங்களையும்‌” வேதக்‌ கொள்கைகளையும்‌ ஒப்புக்‌ கொண்டவர்‌; நால்வகை ஆஸ்ரமங்களை ஓப்புக்கொள்ளுகின்றார்‌; தவத்திலே நம்பிக்கையுள்ளவர்‌; தென்புலத்தார்க்குரிய கடன்களைச்‌ செய்யவேண்டும்‌ என்பதையும்‌ ஒப்புக்கொண்டவர்‌. புராணக்‌ கொள்கைகளிலும்‌ நம்பிக்கையுள்ளவர்‌; இவைகளை எல்லாம்‌ திருக்குறளிலே காணக்கிடக்கின்றன. இவைகளை ஆரியர்களோ வடநூல்களோ மறக்கவில்லை. வட நூல்களிலும்‌ இவைகள்‌ கூறப்படுகின்றன. ஆதலால்‌ வள்ளுவர்‌ கூறியிருப்‌பனவெல்லாம்‌ ஆரியர்‌ தமிழர்‌ என்ற வேற்றுமையில்லாமல்‌ அனைவரும்‌ ஓப்புக்கொள்ளக்‌ கூடியனவே. இத்தகைய பொதுக்‌ கொள்கைகளே திருக்குறளில்‌ காணப்படுகின்றன. பொதுவான இந்த நீதி நூலைக்கொண்டு ஆரியர்‌ தமிழர்‌ வேற்றுமைக்கு வழிகாட்டுவது சிறிதும்‌ பொருந்தாது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard