வள்ளுவர் தம் காலத்திலிருந்து பழக்கவழக்கங்களை மறைக்கவில்லை. அவற்றைப் பலவிடங்களில் அப்படியே எடுத்துக் காட்டுகின்றார். இதைக்கொண்டு அவரைப் பிற்போக்காளர் என்றுமுடிவுகட்டிவிடக்கூடாது;: அவரிடம் முற்போக்கான கருத்துக்கள் பலவற்றைக் காணலாம். அவர் வாழ்ந்த காலத்திலே உள்ள சூழ்நிலையை மாற்றவேண்டும் என்பதே அவர் கருத்து. அதை மாற்றுவதற்கு அவர் காட்டும் வழி மிகவும் சிறந்த வழி. முற்போக்குக் கருத்துள்ளவர்கள் பின்பற்றக் கூடிய வழி.
திருவள்ளுவர் பழைய அறங்கள் பலவற்றை எடுத்துக் கூறுகின்றார். அவர் காலத்தில் இருந்து சமுதாய நிலை அப்படியே நிலைத்திருக்க வேண்டும் என்று அவர் விரும்ப வில்லை. நாகரிகமும் அறிவும் வளர வளர சமுதாயத்திலே மாறுதல் ஏற்பட்டுத்தான் தீரும் என்ற உண்மையை அவர் மறந்து விடவில்லை. முற்போக்காக வழியிலே மனித சமுதாயம் மாறிக்கொண்டு போக வேண்டும்; இதற்காக அறிஞர்கள் முயலவேண்டும்; என்பது அவர் கருத்து. வள்ளுவர் காலத்திலே தமிழகத்தில் அந்தணர், அரசர், வாணிகர், வேளாளர் என்னும் நால்வகை வகுப்புக்கள் இருந்தன. இந்த நால்வகை வகுப்புக்களும் தொழில் காரணமாக ஏற்பட்டமை தாம். அயினும் பிறப்பிலே உயர்வு தாழ்வு உண்டு என்ற கொள்கையும் அவர் காலத்திலே தலை தூக்கி நின்றது.
ஒருவனுடைய நல்ல குணங்களுக்கு இடையே அன்பில்லாமை காரணமாக உண்டாகின்ற கொடுஞ்செயல்கள் காணப்பட்டால், அப்பொழுது அவனைப்பற்றி மட்டும் சந்திக்கத் தோன்றாது; அவன் பிறந்த குலத்தைப் பற்றியே ஐயந்தோன்றும்" (கு. 938)
“நிலத்தில் கிடற்தமை கால்காட்டும்; காட்டும் குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல் நிலத்தின் தன்மையை அதில் முளைத்த பயிர் காட்டி விடும்; உயர்ந்த குலத்தில் பிறந்தவரின் குணத்தை அவர் கூறும் 53
இம்மூன்று குறளும் குடிமையென்னும் அதிகாரத்தில் உள்ளவை பிறப்பில் உயர்வு உண்டு என்பதையே அவ்வதிகாரத்தின் பத்துப் பாடல்களும் எடுத்துக் காட்டுகின்றன. குடிமை - உயர்ந்த குடியில் பிறந்தாரது தன்மை. குடி, குலம் என்பவை ஒரு சாதியைக் குறிப்பவையல்ல; தனிப்பட்ட குடும்பத்தைக் குறிப்பவை. அதாவது பரம்பரைக் குறிப்பனவாம். வள்ளுவர் தமது காலத்தில் நிலவியிருந்த உயர்வு தாழ்வுக் கொள்கைகளையே இவ்வாறு சொல்லியிருக்கின்றார்.
பிறப்பிலே உயர்வு தாழ்வு காட்டும் வழக்கம் தவறு. உண்மை யில் பிறப்பினால் உயர்வு தாழ்வுகள் ஏற்படுவதில்லை. இதுவே வள்ளுவர் கொள்கை. இதை அவர் தெளிவாகக் கூறுகின்றார்.
“பிறப்பு ஓக்கும் எல்லா உயிர்்கும்; சிறப்பு ஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.”
எல்லா உயிர்களுக்கும் பிறப்பு ஒரு தன்மையானதே. அயினும் அவ்வுயிர்கள் அயினும் அவ்வுயிர்கள் செய்யும் வெவ்வேறு தொழில்கள் காரணமாகப் பெருமை ஒத்திருக்காது? வெவ்வேறாக இருக்கும்” (கு.972)
வள்ளுவர் வாழ்ந்த தமிழகம் 109
பிறப்பினால் உயர்வு தாழ்வு உண்டு என்ற நம்பிக்கை தவறு. தொழில் காரணமாகத்தான் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன. அதலால் பிறப்பினால் உயர்வுதாழ்வுகள் பாராட்டுதல் பிமை என்பதை இக்குறள் மூலம் எடுத்துக் காட்டினார். பெருமை என்னும் அதிகாரத்தில் உள்ள குறள் இது. தொழில் காரணமாகத்தான் வகுப்புப் பிரிவு உண்டாயிற்று: அதுவே உயர்வு தாழ்வுக்கு இடந்தந்து விட்டது; என்ற பழந்தமிழர் கருத்தை இக்குறனால் விளக்கினார் வள்ளுவர். எல்லோரும் சிறந்தவர்களாக வாழமுடியும்; உயர்ந்த குடியினராக வாழமுடியும்; உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேற்றுமையில்லாத ஒரு சமுதாயத்தை ஏற்படுத்த முடியும் என்பதே வள்ளுவர் நம்பிக்கை. இத்தகைய சமுதாயம் ஏற்படுவதற்கு அவர் காட்டும் வழி மிகவும் சிறந்ததாகும்.
ஒழுக்கந் தவறாதவன் சிறந்தவன்; சமூகத்தாரால் பழிக்கப் படும் செயல்களைச் செய்யாமலிருப்பது; சமூகத்திற்குத் தமை தரும் செயல்களை விட்டொழிப்பது; இவைகளே சிறந்த ஒழுக்கம் ஆகும். இத்தகைய ஒழுக்கத்தைப் பின்பற்றும் மக்கள் சிறந்தவர்கள்: பெருமைக்குரியவர்கள்.
ஒழுக்கதில் தவறாதவர்கள் உயர்ந்த குடியினர் அவர்கள் எக்குடியிலே பிறந்தவராயிருப்பினும் உயர்ந்த குடியினராய் விடுவர். ஒழுக்கமற்றவர்கள் இழிந்தவர்கள். அவர்கள் உயர்ந்த குடியிலே பிறந்தவராயினும் இழிந்த குடியினராய் விடுவர். அதலால் மக்களிடையிலே பிறப்பினால் நிலவும் உயர்வு தாழ்வு வேற்றுமை மறைய ஒழுக்கமே சிறந்த வழி; என்று கூறினார் வள்ளுவர். அவர் காட்டும் ஒழுக்க நெறியைப் பின்பற்றினால் இன்று காணப்படும் சாதி வேற்றுமைகள் மறைந்து விடும் என்பதில் ஐயம் இல்லை.
மூடநம்பிக்கை
பண்டைத் தமிழ் மக்களிடம் பல நம்பிக்கைகள் குடி கொண்டிருந்தன. அந்நம்பிக்கைகள் பலவற்றை இக்காலத்திலே மூடநம்பிக்கைகள் என்று மொழிகின்றோம். “நாம் நினைப்பதைப்போல் எதுவும் நடக்காது: எல்லாம் முன்னைய ஊமழ்வினையின்படி தான் நடக்கும்; முன் பிறப்பிலே தவம் புரிந்தவர்கள் தாம் இப்பிறப்பிலே செல்வம் உள்ளவர்களாய் வாழ்கின்றனர். முற்பிறப்பிலே தவம் புரியாதவர்கள் தாம் இப்பிறப்பிலே தவம் புரியாதவர்கள் தாம் இப்பிறப்பிலே வறுமையால் வாடுகின்றனர்” என்பது ஒரு மூடநம்பிக்கை. இந்த நம்பிக்கை வள்ளுவர் காலத்திலே மக்கள் மனத்திலே வேரோடி ருந்தது. இதை அவர் மூடநம்பிக்கை, குருட்டு நம்பிக்கை, அறியாமை என்று ஓரிடத்திலாயினும் எடுத்துரைக்கவில்லை. இந்த நம்பிக்கை உண்மையானது என்று எண்ணும்படியே உரைத்திருக்கிறார்.
தவம் செய்த சிலரே செல்வர்களாகப் பிறக்கின்றனர். தவம் செய்யாத பலரே வறுமையுள்ளவர்களாகப் பிறக்கின்றனர்; என்பது தான் இக்குறளின் கருத்து. தனியுடைமைச் சமுதாயத்தில் வேரோடி யிருந்த இக்கருத்தை இக்காலத்தினர் ஏற்க முடியாது. சமதர்மத்திலே நம்பிக்கையுள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இக்கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டால் - இக்கருத்து உண்மையானால் - இவ்வுலகில் வர்க்க பேதமற்ற சமுதாயம் தோன்றவே முடியாது.
முன்னேற வழி
மக்கள் இந்த நம்பிக்கையிலே உறுதியாக நிற்பார்களானால் அவர்கள் முயற்சியற்ற சோம்பேறிகளாகி விடுவார்கள்; ஒரு தொழிலையும் செய்ய மாட்டார்கள்; நாட்டிலே உற்பத்தி குறையும்: உற்பத்தி குறைந்தால் பசியும் வறுமையும் வளரும்.
பசியும் வறுமையும் வளர்ந்தால் மக்கள் ஒழுக்க நெறியிலிருந்து ஒதுங்கி விடுவார்கள். சமுதாயக் கட்டுப்பாடுகள் அனைத்தும் அழிந்து போகும். இந்த உண்மையை வள்ளுவர் உணர்ந்தார். மக்களின் இரத்தத்தோடு கலந்திருக்கும் அந்த நம்பிக்கையைக் கண்டிக்காமலே அவர்கள் முன்னேறுவதற்கு வழிகாட்டி இருக்கின்றார்.
“ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா
ஊக்கம் உடையான் உழை,
தளராத கஊளக்கம் உள்ளவனிடத்தில், செல்வம் அவன் இருக்கும் இடத்திற்கு வழி கேட்டுக்கொண்டு, தானே சென்று சேரும்” (கு.594)
இவ்விரண்டு குறள்களும், “தவத்தைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்; ஊக்கமும் முயற்சியுமே செல்வத்துக்கு அடிப்படை; அவைகளே செல்வத்தைச் சேர்க்க உதவி செய்வன.” என்ற உண்மையை விளக்கின. சோர்ந்து கிடக்கின்ற மக்கள் மனத்திலே உற்சாகத்தை ஊட்டுகின்றன
வள்ளுவர் காலத்து மக்கள் தலைவிதியிலே, ஊழ்வினை யின் வலிமையிலே கொண்டிருந்த நம்பிக்கையை ஊழ்வினை என்னும் அதிகாரத்தால் காணலாம். அவர் காலத்து மக்கள் நம்பிக்கையை அவர் மறைத்துவிடவில்லை. அப்படியே எடுத்துக்காட்டுகிறார்.
““இகுஊழால் தோன்றும் அசைவு இன்றை; கைப்பொருள்
போகு ஊழால் தோன்றும் மடி
செல்வம் சேர்வதற்குரிய நல்வினையினாலேயே ஒருவனிடம் முயற்சி தோன்றும். கைப்பொருள் அழியக் கூடிய தீவினை காரணமாகவே ஒருவனிடம் சோம்பல் தோன்றும்” (கு. 380) முயற்சிக்குக் காரணமும் ஊழ்வினைதான்; சோம்பலுக்குக் காரணமும் ஊழ்வினைதான்; என்று அழுத்தமாகக் கூறுகிறது
வதற்கு முட்டுக்கட்டைகளாக நிற்கும் மூட நம்பிக்கைகளைக் கண்டி ப்பதில் மட்டுந்தான் கவலை காட்டுகின்றனர். மூடநம்பிக்கையுள்ளவர்களின் உள்ளத்திலே அத்திரம் உண்டாகும் படி அவ்வளவு கடுமையாகத் தாக்குகின்றனர்; அவர்களையும் அறிவற்றவர்கள் என்று வசைபாடுகின்றனர். இவ்வாறு மூடநம்பிக்கைகளையும், அந்நம்பிக்கை யுள்ளவர்களையும் தாக்குவதுதான் சீர்திருத்தத்திற்குக் காட்டும் வழியென்று நம்புகின்றனர்.
வள்ளுவர் கருத்தை ஆராய்ந்தால் அவர் ஒரு சீர்திருத்த வாதி என்பது விளங்கும். அனால் அவருக்கும் இன்றைய சீர்திருத்த வாதிகளுக்கும் ஒரு வேற்றுமையுண்டு. “நீங்கள் முன்னேறுவதற்கான வழிகள் இவை; நீங்கள் செய்யாமல் விடவேண்டியவை இவை” என்று மக்களிடம் நயமாக எடுத்துரைக்கின்றார். இதுவே வள்ளுவர் முறை. “உங்கள் நம்பிக்கை மூடத்தனமானது; அதை விட்டொழியுங்கள்; விட அஞ்சுவீர்களானால் நீங்கள் கோழைகள்; மூடர்கள்,” என்று திட்டுவதோடு இன்றைய சீர்திருத்த வாதிகளுக்கும் உள்ள வேற்றுமை. வள்ளுவர் காட்டும் சீர்திருத்த வழியே சிறந்ததாகும். அவ்வழியைப் பின்பற்றினால்தான் சீர்திருத்தத் துறையிலே வெற்றி கிடைக்கும்.