கொடுமைகளைக் கண்டால் கோபங் கொள்ளுவது பெரியோர் இயற்கை. கூடா ஒழுக்கங்களை அவர்கள் வன்மையாகக் கண்டித்துக் கூறுவார்கள். அடாத செயல்களிலே மக்கள் ஈடுபட்டு அல்லலுக்கு அளாகக் கூடாது என்பதே அவர்கள் கருத்து. அகையால் அறநூல்களை இயற்றிய அறிஞர்கள் அனைவரும், தீச் செயல்களைக் கடுமையாகத் தாக்கி எழுதி யிருக்கின்றனர்.
“உலக மக்கள் அனைவரும் சிறந்த வாம வேண்டும். துன்பத்திலே அழ்ந்துவிடக் கூடாது; இன்புற்று வாழ வேண்டும்” என்பதே அறிஞர்களின் உறுதியான கொள்கை. இவர்கள் மக்கள் அறியாமையால் தீ நெறிகளிலே தலையிடும்போது அதைத் தடுக்காமல் இருக்க மாட்டார்கள்.” தவறான வழியிலே செல்லும் மக்களைஅவ்வழியிலே செல்லாமல் தடுப்பதே நமது கடமை; இதுவே மக்களிடம் காட்டும் அன்பிற்கு அடையாளம்; மனம்போன போக்கிலே மக்களை நடக்க விடுவது அவர்களைக் கேட்டுக்கு இரையாக்கும்படி காட்டிக்கொடுப்பதேயாகும்” என்பதே இவர்கள் கொள்கையாகும்.
திருவள்ளுவர் உலகத்தாரிடம் அன்பு பாராட்டும் அறிஞர்; அலக மக்களிடம் நட்புக் கொண்டவர்; உலக மக்கள் அனைவரும் உயர்ந்த வாழ்வு நடத்தவேண்டும் என்னும் உள்ளம் படைத்தவர். இந்த நோக்கத்துடனேயே திருக்குறளை இயற்றினார்.
“நகுதற் பொருட்டு அன்று நட்டல்; மிகுதிக்கண்
மேற் சென்று இடித்தற் பொருட்டு
ஒருவரோடு ஒருவர் நட்புக்கொள்ளுதல் வேடிக்கையாகப் பேசி நகைப்பதற்காக அன்று; நண்பா் வரம்புமீறிச் செல்லும் போது முன் சென்று கடிந்துரைத்து அவர் செய்கையைத் தடுப்பதற்காகத்தான்” (ஞ..784)
ஒருவரோடு ஒருவர் நட்புக்கொள்ளுதல் எதற்காக என்பதைப்பற்றி இக்குறளிலே தெளிவாகக் கூறி விட்டார். உலக மக்களிடம் அன்பு பூண்ட அவர் இக்குறளின் கருத்தைத் தானும் பின்பற்றிச் செல்லுகின்றார்.
தஇமைகளைக் காணும்போது இருவள்ளுவர் உள்ளம் குழுறுகின்றது. அவர் மனம் வேதனையடை கின்றது. பொறுமையிழக்கின்றார். தமை செய்யும் மக்களைக் கடுஞ்சொற்களால் திட்டுகின்றார். திருவள்ளுவர் ஏன் இவ்வளவு ஆத்திரப்படுகின்றார் என்று நாம் எண்ணும்படி சில குறட்பாக்கள் அமைந்திருக்கின்றன. அறிவின்றி அடாத காரியங்களைச் செய்கின்றவர்களை அதட்டி நிறுத்தினால் தான் அவர்கள் அடங்குவார்கள். இந்த உண்மையை எண்ணித்தான் வள்ளுவர் சில பாடல்களை வசை கூறும் முறையிலே அமைத்திருக்கின்றார். இது அவருடைய கருணை உள்ளத்தையே காட்டுவதாகும். இத்தகைய செய்யுட்கள் சிலவற்றைக் கழே காணலாம். அவைகளால் வள்ளுவர் உள்ளத்தின் உயர்வைக் காணலாம்.
“உலகத்தோடு ஒட்ட ஒழுகல், பலகற்றும்
கல்லார், அறிவிலா தார்
பல நூல்களைக் கற்றிருந்தாலும் உயர்ந்தவர்களுடன் இணைந்து நடக்கக் கற்றுக் கொள்ளாதவர் அறிவற்றவர்” (கு.140)
இக்குறள் உயர்ந்த அறிவுள்ளவர்களுடன் ஓத்துப் போகாதவர் அறிவற்றவர் என்று திட்டுகின்றது.
“அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.
தீ நெறியிலே நிற்கின்றவர் எல்லோருள்ளும் மற்றொருவன் வீட்டு வாசலிலே அவன் மானைவியை விரும்பி நிற்கின்றவரைப் போல மறையர் வேறு ஒருவரும் இல்லை...” (கு.142 ) இக்குறள் பிறர் மனைவியை விரும்புகின்றவனை பெரிய மடையன் என்று கூறுகின்றது.
“பயன்இல் சொல் பாராட்டுவானை மகன் எனல்;
மக்கள் பதடி எனல்
எப்பொழுதும் பயனற்ற வீண் சொற்களையே பாராட்டிப் பேசிக் கொண்டிருப்பவனை மனிதன் என்று சொல்லற்க; மனிதர்களுக்குள் பதர் என்று சொல்லுக” (க.196)
இக்குறள் வீண்சொற்கள் பேசிப் பொழுது போக்குகின்றவனைப் பயன் அற்ற பதர் என்று கடிந்துரைக்கின்றது.
“உளர் என்னும் மாத்திரையர் அவ்வால், பயவாக்
களர் அனையர் கல்லா தவர்
கல்வி கற்காதவர்கள் மனித உருவில் இருக்கின்றனர் என்ற அளவில் தான் எண்ணப்படுவர்கள்; இதைத் தவிர அவர்களால் ஒரு பயனும் இல்லை; அவர்கள் ஒன்றுக்கும் உதவாத களர் நிலத்தைப் போன்றவர்கள்” (க.406)
இக்குறள் கல்வி கற்காதவரைக் களர்நிலம் போன்றவர் என்று இழித்துரைக்கின்றது.
மக்கள் தம் உயர்வுக்குக் காரணமான நிலையைக்காத்துக் கொள்ள வேண்டும்; காத்துக்கொள்ளாமல் கீழ்நிலையை அடைவார்களானால் அவர்கள் ஒருவராலும் மதிக்கப்பட மாட்டார்கள்; தலையிலிருந்து எடுக்கப்பட்ட மயிரைப்போலத் தான் கருதப்படுவார்கள்; என்று கடுமையாகக் கூறுகிறது இக்குறள்.
தமை செய்கின்றவர்களை - நெறிதவறி நடப்பவர்களை அறிவற்றவர்களை - இவ்வாறு கண்டித்துக் கூறும் செய்யுட்கள் இன்னும் பல உண்டு. உதாரணத்திற்காக மட்டும் இங்கே சில பாடல்கள் காட்டப்பட்டிருக்கின்றன.
திருவள்ளுவர் இமையை வெறுப்பவர்; தஇமையிலே சிக்கித் திகைக்கும் மக்களுக்கும் இடித்துப் புத்தி புகட்டுகின்றவர்; மக்கள் அனைவரும் நன்னெறியிலே நடந்து நல்வாழ்வு வாழ வேண்டும் என்னும் மனப் பண்பு உள்ளவர். இவ்வுண்மையை மேலே காட்டிய செய்யுட்கள் விளக்குகின்றன.