தென் புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான் என்று ஆங்கு
ஐம்புலத்து ஆறுஒம்பல் தலை.
முன்னோர்கள் (பிதிரர்) தெய்வம், விருந்தினர் (அதிதிகள்) சுற்றத்தார், தான், என்னும் இந்த ஐந்து இடத்தில் உள்ளவர்களையும், அறநெறிப்படி காப்பாற்றுவது இல்வாழ்விலே இருப்பவனுடைய தலை சிறந்த கடமையாகும்” (கு.43)
இல்லறத்திலே இருந்து செல்வங்களைப் பாதுகாத்து இல்லறம் நடத்துவதெல்லாம், விருந்தினரைப் பாதுகாத்து, அவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டே யாகும்” (ஞ.81)
இல்லறத்தார்க்குச் சொல்லப்படும் இம்மூன்று குறள் களையும் நன்றாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். இக்குறள் களின் கூற்றை அறங்களை - இந்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் இன்று பின்பற்றி நடக்க முடியுமா? இந் நாட்டு மக்கள் இதற்கேற்ற வாழ்க்கை வசதி பெற்று வாழ்கின்றார்களா?
இடமும், பொருளும் இருந்தால் தான் துறவிகளுக்குத் துணை செய்ய முடியும்; வறுமையுள்ளவர்களுக்கு வழங்க முடியும். இறந்தவர்களுக்கு ஆவன செய்ய முடியும்.
முன்னோர்களை வழிபடுவதற்கும், தெய்வத்தைப் பணிவதற்கும், விருந்தினரைப் பேணுவதற்கும், சுற்றத்தாரைப் பாதுகாப்பதற்கும், தன்னைத் தான் காத்துக் கொள்ளுவதற்கும் பொருளும் இடமும் வேண்டும். இவைகள் இல்லாமல் என்ன செய்ய முடியும்2
வறியவர்கள் அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கு முடியாமல் அவதிப்படுகின்றனர். மக்கள் சமுதாயத்தில் பெரும்பாலோர் வறியவர்கள்தாம். இவர்கள் விருந்தினரைப் பேணுவது எப்படி?
“தந்தைகயாக இருப்பவன் தன் மகனைப் படிக்க வைப்பதே மகனுக்குச் செய்யும் முதற் கடமை” என்ற வள்ளுவர் குறளை மனத்திலே மறவாமல் வைத்துக் கொள்ள வேண்டும். இதை மறவாத ஓவ்வொரு தந்தையும் மகனைப் படிக்க வைக்கவே முயற்சி செய்வான். இப்படி, ஒவ்வொருவரும் முயற்சி செய்வார்களானால் வெற்றி காண்பார்கள். தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஒன்றுபட்டு வற்புறுத்துவார்களானால் நிறை வேறாமற் போகாது. இத்தகைய சிறந்த கடமைகளை வலியுறுத்துகிறார் வள்ளுவர்.