மனித சமுதாயம் ஒற்றுமையுடன் வாழ்வதற்கான பல கருத்துக்களையும் திருக்குறளிலே காணலாம். வள்ளுவர் காலத்திலே மக்கள் தனித்தனிக் குடும்பங்களாகச் சிறந்து வாழ்ந்து வந்தனர். அவர்களிடையே சண்டைச் சச்சரவுகள் உண்டாகாமலிருக்க வேண்டும்; அவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு வாழவேண்டும். அவர்களுக்குள் தொடர்பு இருக்க வேண்டும். அன்பும் அமைதியும் சமுதாயத்தில் என்றும் நிலைத்திருக்க வேண்டும். இந்நிலைமை யுண்டாக வேண்டுமானால், ஒவ்வொருவரிடமும் அன்பு, விருந்தோம்பல், செய்நன்றி மறவாமை, அடக்கம், ஒழுக்கம், பொறுமை, இன் சொல் முதலிய பண்புகள் வளர்ந்து நிலைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தி யிருக்கின்றார் வள்ளுவர்.
செய்நன்றி அறிதல்
செய்நன்றி அறிதல் என்பதைப்பற்றி மட்டும் சிறிது ஆராய்ந்தால் போதும். சமுதாய ஒற்றுமைக்கு மக்கள் இனம் முன்னேற இவ்வுணர்ச்சி எவ்வளவு அவசியம் என்பது விளங்கும். ஒருவர் செய்த நன்றிக்காக அவரை வணங்குவதோ, அல்லது அவரையே நினைத்துக் கொண்டிருப்பதோ மட்டும் செய்த் நன்றி அறிதல் ஆகாது. பிறர் நமக்குச் செய்த நன்மையைப் போல நாமும் பிறர்க்கு நன்மை செய்ய வேண்டும்; இந்த எண்ணம் உணர்ச்சி பிறக்க வேண்டும். இதுதான் செய்ந்நன்றி மறவாமையின் பலனாகும்.
“நன்றி மறப்பது நன்று அன்று; நன்று அல்லது
அன்றே மறப்பது நன்று.
ஒருவர் செய்த நன்றியை மறந்து விடுவது நன்மையாகாது; ஒருவர் செய்த தீமையை அவர் செய்த அன்றே மறந்து விடுவது தான் நல்லது” (ஞ708)
கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்
முன்பு நமக்கு நன்மை செய்தவர். பின்பு நம்மைக் கொல்வதைப் போன்ற தஇமையைச் செய்தாராயினும் அவர் முன்செய்த ஒரு நன்மைமையை நினைத்தாலே அவர் செய்த தமை மறந்து போகும்.” (ஞ.170)
இவைகளைப் போலவே செய்ந்நன்றியறிதலின் சிறப்பைப் பற்றி அவ்வதிகாரத்தில் உள்ள பத்து வெண்பாக்களும் கூறுகின்றன.
நாம் துன்புற்றபோது நமக்குப் பிறர் செய்த நன்றியை என்றும் மறத்தல் கூடாது. மறவாமல் மனத்தில் வைத்திருந்தால் தான் பிறர் துன்புறும்போது நாமும் அவர் துன்பத்தைக் களைய முந்துவோம். இந்த உண்மையை எவரும் மறுக்க முடியாது.
செய்ந்நன்றி மறவாத பண்பு ஓவ்வொரு மனிதனிடமும் குடி கொண்டிருக்குமானால் சாதி, மதப் பூசல்களுக்கு இடமில்லை; சமூதாயத்தில் சண்டை சச்சரவுகளும் நிலைத்திருக்கமாட்டா.
பிறர் செய்த நன்மையை மறந்து விட்டுப் பிறர் செய்த இமையை மட்டும் மனத்திலே வைத்திருப்பதனால் தீமைதான் விளையும். நமக்குத் தமை செய்தோர்க்கு நாமும் இமை செய்வதற் கான காலத்தை எதிர்பார்த்துக் கொண்டுதான் இருப்போம். சமயம் கிடைத்தபோது பழிக்குப் பழிவாங்கத்தான் தோன்றும். இதனால் பகைமை தான் வளரும். எதிரிகள் பக்கம் பலர்; நமது பக்கம் பலர்; இவ்வாறு பிளவுபட்டு நிற்போம். இத்தகைய பிளவுக்கு மக்கள் அளாவார்களானால் சமுதாயத்தில் ஒற்றுமை நிலைத்திருக்க முடியாது. அகையால்தான் செய்ந் நன்றி மறவாமையை வலியுறுத்தி யிருக்கின்றார் வள்ளுவர்.
மிறனில் விழையாமை
மக்கள் நாகரிக மில்லாதவர்களாக வாழ்ந்த காலத்தில், அவர்களிடம் தனித்தனிக் குடும்ப வாழ்க்கை முறையும் இருந்த தில்லை. அண் பெண்கள் அனைவரும் ஒன்றாக வாழ்ந்தனர்; கும்பல் கும்பலாக வாழ்ந்தனர். தாய், மகள்; தந்ைத, மகள்; அண்ணன், தங்கை; மக்கள் வாழ்ந்து வந்த காலம் ஒன்றுண்டு. அக்காலத்தில் மண வாழ்க்கை முறையே அவர்களுக்குத் தெரியாது. மக்கள் நாகரிகப் படியிலே அடிவைத்து ஏறத்தொடங்கிய பிறகுதான் அவர்களிடம் மண வாழ்க்கை முறை தோன்றியது.
கணவன் மனைவி என்ற கட்டுப்பாடும் பிறந்தது. தனித்தனிக் குடும்ப வாழ்க்கை முறையும் ஏற்பட்டது.
அனால் சமுதாய ஒற்றுமையைக் கருதி ஒன்றை மட்டும் அவர்கள் கண்டிப்பான அறமாக அமைத்தனர்; அவ்விதியைப் பின்பற்றியும் வந்தனர்; பின்பற்ற வேண்டும் என்று அண் மக்களை வற்புறுத்தினர். ஒருவனுக்கு மனைவியாக வாழ்க்கைப்பட்ட ஒருத்தியை மற்றொருவன் விரும்பக்கூடாது என்பதே அக்கட்டுப்பாடு நீதி நூல்களில் எல்லாம் இக்கட்டுபாட்டை வலியுறுத்தி யிருக்கின்றனர். இதுவே சிறந்த ஒழுக்கம் - அறம் -நீதி என்றெல்லாம் எழுதியிருக்கின்றனர். இக்கட்டுப்பாட்டை மீறுகின்றவன் உயிருடன் இருக்கும்போது பழிக்கப்படுவான்; இறந்த பின்னும் நரகத்தை அடைவான் என்று பயமுறுத்தியும் இருக்கின்றனர்.
சமுதாயக் கட்டுப்பாடு ஒழுங்காக நடைபெறு வேண்டுமானால் மக்கள் பட்டினியால் பரிதவிக்கக் கூடாது. பட்டினிப் பட்டாளம் நாட்டிலே பெருகுமாயின் பல நல்ல செயல்களெல்லாம் நாசமாகிவிடும். பட்டினியால் வாடும் மக்கள் தமது உயிரைக் காத்துக் கொள்ள எதையும் செய்யத் துணிவார்கள் நீதி, நல்லொழுக்கம், அன்பு, பொறுமை முதலிய பண்புகளுக்கெல்லாம் ஆபத்து வந்துவிடும். சமுதாய ஒற்றுமைக்கு இடமே இராது ஆதலால் மக்களைப் பட்டினியில்லாமல் பாதுகாப்பது இல்லறத்தான் கடமை என்று கூறினார் வள்ளுவர்.
“அற்றார் அழிபசி தீர்த்தல் அஃது ஒருவன்
பெற்றான் பொருள் வைப்பு உழி.
வறியோரை வதைக்கும் பசியைப் போக்கும் சிறந்த செயலே செல்வம் பெற்ற ஒருவன் அச்செல்வத்தைச் சேர்த்துவைக்கும் இடமாகும்” (கு.226)
இவ்வாறு ஈகையென்னும் அதிகாரத்திலே கூறுகின்றார்.இதுவும் மக்கள் ஒற்றுமைக்கு வழி காட்டுவதேயாகும் சிலர் அளவுக்குமேல் உண்ணுகின்றனர்; பலர் பட்டினி கிடந்து மடிகின்றனர்; இத்தகைய சமுதாயத்திலே ஒற்றுமை எப்படி நிலைத்திருக்கும். அதலால்தான் வறியோர்க்கு உணவளிக்க வேண்டியதே வளம் பெற்றவர் கடமை என்று வலியுறுத்தியிருக்கின்றார் வள்ளுவர்.
வள்ளுவர் காலத்திலே மக்கட் சமுதாயத்திலே செல்வரும் இருந்தனர்; வறியவர்களும் இருந்தனர். முன்பிறப்பில் நல்வினைகளைச் செய்தவர்கள் இப்பிறப்பில் செல்வர்களாக வாழ்கின்றனர்; முற்பிறப்பில் தீவினை செய்தவர்கள் இப்பிறப்பில் வறியவர்களாய்ப் பிறந்து வாடுகின்றனர். என்ற நம்பிக்கை மக்களிடம் ஊன்றியிருந்தது. ஆதலால் உள்ளவர்கள், இல்லாதவரார்களுக்கு உதவ வேண்டும் என்ற அறத்தைத்தான் அவரால் வற்புறுத்த முடிந்தது.
செய்ந்நன்றி அறிதல், பிறன் இல் விழையாமை, ஈகை முதலியவைகளை வள்ளுவர் வலியுறுத்திக் கூறுகின்றார். இதற்குக் காரணம் சமூகக் கட்டுப்பாடு அழியாது நிலைத்திருக்கவேண்டும் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. எல்லா மக்களும் இல்லற வாழ்விலே இன்புற்று வாழவேண்டும்; மக்கள் சமுதாயம் ஒன்று பட்டு வாழ வேண்டும்; முன்னேற்ற பாதையிலே முனைந்து செல்ல வேண்டும், என்ற உறுதியான கருத்துள்ளவர் வள்ளுவர் இக்கருத்துக்கு ஆதரவான அறதநெறிகளையெல்லாம் இல்லறவியலிலே எடுத்துக் கூறியிருக்கின்றார் அவர். இல்லறவியலைத் துருவிப் படிப்போர் இவ்வுண்மைகளைத் காணலாம்.