ஒருகாலத்திலே துறவிகளுக்கு நல்ல மதிப்பிருந்தது. அவர்கள் அண்டவன் அருளைப் பெற்றவர்கள் என்று மக்கள் நம்பிவந்தனர். உலகம் உய்யவேண்டும் என்னும் உள்ளங்கொண்டவர்கள்; அவர்களுடைய தவ வலிமையாலும் வேண்டுகோளாலுந்தான் மழை பெய்கின்றது; நிலம் விளைகின்றது நாடு செழிக்கின்றது; மக்கள் நோய் நொடியில்லாமல் வாழ்கின்றனர்; என்று பெரும்பாலான மக்கள் நினைத்தார்கள்; நம்பினார்கள். அகையால் துறவிகளை ஆதரிக்க வேண்டியது - அவர்களுக்கு ஒரு துன்பமும் உண்டாகாமல் பாதுகாக்கவேண்டியது இல்லத்தாரின் கடமையென்று எண்ணி வந்தனர்.
தந்தலம் கருதாமல் பொது நன்மைக்கு உழைத்தவர்களும், உலக இன்பத்தை நுகரும் ஆசையைத் துறந்து, அத்ம சாந்தியின் பொருட்டு, இறைவனை எண்ணித் துறவிகளும் தவம் புரியும் துறவிகளும் இருந்தனர்.
தவக்கோலம் உண்மையான தவம்புரிவோர்க்கே பொருத்தமானதாகும். உண்மையான தவத்திலே ஈடுபடாதவர்கள் அந்தத் தவக்கோலத்தை மேற்கொண்டி ருப்பது வீணாகும்” (கு 262)
போலித் துறவிகள் இன்னார் என்பதை இக்குறளால் வெளிப்படுத்தினார். “துறவிக்கோலம் தரித்தவர்களையெல்லாம் உண்மையான துறவிகள் என்று நம்பிவிட வேண்டாம். அவர் களுடைய சொற்களை நம்பிச் செல்வத்தையிழந்து ஏமாற வேண்டாம்; போலித் துறவிகளை பொய்கோலம் பூண்டவர்களை - சமுதாயத்தை விட்டு விரட்டியடியுங்கள்” என்று இக்குறளால் அறிவுறுத்தினார் வள்ளுவர்.
“ நெஞ்சில் துறவார், துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கனார் இல்”
மனத்தில் உள்ள அசைகளைத் துறக்கமாட்டார்கள். துறந்தாரைப் போல் வஞ்சகமாக நடிப்பார்கள். இவர்களைப் போல் இரக்கம் அற்றவர்கள் வேறு எவருமே இல்லை .”(க.178)
“மனத்தது மாசாக, மாண்டார் நீராடி,
மறைந்து ஒழுகும் மாந்தர் பலர்”
உள்ளத்திலே அசை, கோபம், அறியாமை என்னும் குற்றங்கள் நிரம்பியிருக்கும்; வெளியிலே குற்றமற்ற பெருமை யுள்ளவர்களைப்போல் நடிப்பார்கள்; நீராடித் தவவேடத்திலே மறைந்து வாழ்வார்கள்; இத்தகைய மக்கள் பலர் உண்டு.” (கு.278)
இவைகளும் போலித் துறவிகள் யார் என்பதைக் காட்டு கின்றன. “உள்ளத்திலே ஊறும் எல்லாப் பற்றுக்களையும் எடுத்து வீசியவர்கள் தாம் உண்மைத் துறவிகள்; உள்ளத்திலே அசையை வைத்துக் கொண்டு அசையற்றவர்களைப் போல் நடிப்பவர்கள் வஞ்சகர்கள்; தந்நலத்திற்காகவே துறவி வேடம் கொண்டவர்கள். அவர்கள் இரக்கம் அற்றவர்கள்; கல்நெஞ்சம் படைத்தவர்கள். அவர்கள் மனத்திலே மாசு படிந்திருக்கும்; கெட்ட எண்ணங்கள் நிரம்பியிருக்கும்; நல்லவர்களைப் போலவே நீராடி வேடம் பூண்டிருப்பார்கள் வேடத்தைக் கண்டு மயங்கி விட வேண்டாம்.” இக்கருத்துக்களை இக்குறள்களிலே காணுகின்றோம்.
உண்மைத் துறவு
உண்மைத் துறவிகள் பின்பற்ற வேண்டிய ஓழுக்கங்கள் இவை யென்பதையும் வள்ளுவர் விரித்தக் கூறியிருக்கின்றார். எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்துதல் உடம்பைக் கொழுக்க வைக்கும் புலால் போன்ற உணவுகளை நீக்கி விடுதல்;
தவம் புரிதல்; இயொழுக்கங்களைத் துறத்தல்; பிறர் பொருளைக் களவாடாமல் இருத்தல்; உண்மையுரைத்தல்,; சினத்தைவிட்டு விடுதல்; யாருக்கும் துனபம் செய்யாமை; பிற உயிர்களைக் கொலை செய்யாமல் வாழ்தல்; உலக இன்பம் நிலையற்றது என்பதை ஆராய்ந்து காணல்; அசையை அடியோடு விட்டு விடுதல்; இன்று நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுக்கெல்லாம் முன செய்த வினையே காரணம் என்று நம்புதல்; இவைகள் எல்லாம் துறவிகளில் ஒழுக்கங்கள் என்று உரைக் கின்றார் வள்ளுவர்.
“மன்உயிர் ஒம்பி அருள் ஆள்வர்க்கு இல்என்ப
தன் உயி/ அஞ்சும் வினை”
உலகிலே வாழ்கின்ற மற்ற உயிர்களைப் பாதுகாத்து, அருள் உள்ளவராய் - அவ்வுயிர்களிடத்தில் இரக்கம் உள்ளவராய் - வாழ்கின்றவர்களுக்கு எத்தகைய அச்சமும் இல்லை; தன் உயிர்க்கு ஆபத்து வருமோ என்று அஞ்சுகின்ற நிலை ஏற்படவே இடமில்லை; இவர்கள் ஏனையோர் இன்புற்று வாழும் பொருட்டுத் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் உழைப்பார்கள்.” (கு.244)
“உற்றநோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு”
தனக்கு வந்த துன்பத்தைத் தாங்கிக் கொள்ளுவது; ஏனைய உயிர்களுக்கு எவ்வகையான துன்பங்களையும் செய்யாமவிருப்பது; அவ்வளவே தவத்தின் உருவமாகும். (ஞ.276)
உண்மையான தவம் - துறவிகள் பின்பற்ற வேண்டிய தவம் தவத்திற்கு அடிப்படையான ஓழுக்கம் - எவையென்பதை இக்குறளால் காணலாம்.
இந்த இரண்டு குறள்களின் கருத்துக்களுக்கு இலக்கியமாக இருப்பவர்கள் சந்நியாசியாக இருந்தாலும் சரி குடும்பத்தினராயிருந்தாலும் சரி திணித்து நின்று பொதுப்பணி புரிகின்றவர் களாயினும் சரி, அவர்களே உண்மையான துறவிகள்.
“மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து வீடின்
உலகத்தார் வெறுத்துப் பழிக்கும் கெட்ட நடத்தைகளை விட்டு விட்டால் போதும்; அதுவே உயர்ந்த ஒழுக்கமாகும்; தலையை மழுங்க மொட்டையடித்துக் கொள்ளுதல் - அல்லது தலைமயிரை நீட்டி வளர்த்துச் சடையாக்கிக் கொள்ளுதல் -போன்ற வெளி வேடங்கள் வேண்டுவதில்லை.” (ஞ..280)
இக்குறளும் துறவிகளுக்கு வேண்டியது தூய்மையான மனமும் நடத்தையுமேதாம்; புறக்கோலங்களால் பயன் இல்லை; என்று விளக்கிற்று.
துறவிகளின் கடமை
பொறுமையே உண்மைத் துறவிகளின் பண்பு - பொறுமையற்றவர்கள் துறவிகளாகமாட்டார்கள். அவர்கள் துறவி வேடம் கொண்டிருந்தாலும் பயன் இல்லை. இது வள்ளுவர் கருத்து.
“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்”
நமக்குத் துன்பம் செய்தவர்களுக்கு அளிக்கும் தண்டனையாவது, அவர்கள் வெட்கித் தலை குனியும்படி. நன்மை செய்து, அவர்கள் செய்த தீமையை மறந்து விடுவதாகும்.” (ஞ.314)
துறவிகளுக்கு இக்குணம் இன்றியமையாதது என்பதே வள்ளுவர் கருத்து. பொறுமைக் குணம் பூண்டவர்களிடம்தான் இந்த உயர்ந்த பண்பைக் காணமுடியும்.
இவ்வாறு பொருட்பாலில் சான்றாண்மை என்னும் அதிகாரத்திலும் கூறப்பட்டுள்ளது.
தமிழர்களின் சிறந்த பண்பாட்டுக்கு இந்த இரண்டு செய்யுட்களும் எடுத்துக்காட்டாக நிற்கின்றன. இக்குறளுரை யைப் பின்பற்றி நடக்கும் மக்கள் மனிதப் பண்பின் உச்சியிலே நிற்பவர்கள்.
அடித்தவரைத் திருப்பித் தாக்கவேண்டும் என்ற ஆத்திரந்தான் வரும்; திட்டியவரை எதிர்த்துத் திட்டத்தான் தோன்றும். இதுவே மனித இயற்கை. இந்த இயற்கைக்கு மாறாக நடந்து கொள்ளுவதற்கு நெஞ்சிலே உரம் வேண்டும் பொறுமை வேண்டும்; அறிவும் ஆண்மையும் வேண்டும்.
“வலது கன்னத்தில் அறைந்தால் இடது கன்னத்தையும் திருப்பிக் காட்டு” என்று ஏசுநாதர் கூறினார். அதற்கு மேல் ஒரு படி அதிகமாக ஏறிவிட்டார் வள்ளுவர்; துன்பம் செய்தவனுக்கு நன்மையும் செய், என்று கூறுகிறார்; அவன் செய்த துன்பத்தையும் மறந்துவிடு, என்று உரைக்கின்றார்.
மனித இயற்கைக்கு மீறிய இத்தகைய பொறுமையும் - பண்பும் உள்ளவர்களே உண்மையான துறவிகள்; இவர்களே சான்றோர்கள்; எல்லா நற்குணங்களும் அறிவும் நிரம்பியவர்கள்; என்று வள்ளுவர் கூறினார்.
மக்களிடையிலே பகைமை வளராதிருக்க வள்ளுவர் காட்டும் இவ்வழியே சிறந்த வழியாகும். துன்பம் செய்தவனுக்கு நன்மை செய்தால் அவன் வெட்கமடைவான். இந்த நல்ல மனிதருக்கு இப்படிக் கொடுமை செய்தோமே என்று எண்ணி உள்ளம் வருந்துவான்; அவன் மனமே அவனைச் சுடும். இது உண்மைதான். வள்ளுவர் காலத்திலிருந்த மக்களிடம் இத்தகைய பண்பு இருந்தது அதலால் அவர் இதை வலியுறுத்தினார். இக்காலத்து மக்களிடம் இப்பண்பு உண்டா? வள்ளுவர் சொல்லியபடி துன்பம் செய்தவர்க்கு நன்மை செய்வதனால் பயன் உண்டா? அவர்கள் திருந்துவார்களா? என்பவை அராய்ந்து பார்க்க வேண்டியவைகளே.
இதுவரையிலும் கூறியவைகளைக் கொண்டு போலித் துறவிகள் யார்? உண்மைத் துறவிகள் யார்? துறவிகளின் கடமை என்ன? என்பவைகளைக் காணலாம். வள்ளுவர் காலத்தில் துறவிகள் எப்படி யிருந்தனர்? எப்படி வாழ்ந்தனர்? என்பதையும் அறியலாம்.