Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆளத்‌ தகுதியற்றவர்‌


Guru

Status: Offline
Posts: 7474
Date:
ஆளத்‌ தகுதியற்றவர்‌
Permalink  
 


ஆளத்‌ தகுதியற்றவர்‌

ஆளுவோருக்கு நெஞ்சிலே இரக்கம்‌ வேண்டும்‌; துன்புறுவோரைக்‌ கண்டால்‌ மனம்‌ இளக வேண்டும்‌. இந்த இரக்கத்திற்கே கண்ணோட்டம்‌ என்று பெயர்‌. இதையே தாட்சண்யம்‌ என்பர்‌. கண்ணோட்டத்தைத்‌ தான்‌ தயவு தாட்சண்யம்‌ என்று இக்காலத்தில்‌ வழங்குகின்றோம்‌.

கடமை தவறாமை

தயவு தாட்சண்யம்‌ காரணமாகத்‌ தம்‌ கடமையை மறந்து விடக்கூடாது; கைவிட்டு விடக்கூடாது. தயவு தாட்சண்யம்‌ காரணமாக - கடமையைக்‌ கைகமுவி விடுகின்றவர்கள்‌ நாடாளத்‌ தகுதியற்றவர்கள்‌.

“கருமம்‌ சிதையாமல்‌ கண்ணோட வல்லார்க்கு

உரிமை உடைத்து இவ்வுலகு”

தம்‌ கடமையாகிய காரியங்களிலே குறைவு நேராமல்‌ கண்ணோட்டம்‌ காட்டவும்‌ வல்லவர்களுக்கே, இவ்வுலகம்‌ உரிமையுள்ளதாகும்‌.” (கு.578) கடமை தவறு கின்றவர்களும்‌, கண்ணோட்டம்‌ அற்றவர்‌களுக்கும்‌ நாடாளத்‌ தகுதியற்றவர்களாவர்‌; என்று இக்குறள்‌ கூறுவதைக்‌ காணலாம்‌.

நாட்டின்‌ நடப்பறிதல்‌

நாட்டில்‌ நடக்கும்‌ நிகழ்ச்சிகளையெல்லாம்‌ அளுவோர்‌ நன்றாகத்‌ தெரிந்துகொள்ள வேண்டும்‌. பல நிகழ்ச்சிகளையும்‌ தாம்‌ நேரே போய்ப்‌ பார்த்தறிய முடியாவிட்டாலும்‌ ஒற்றர்‌களைக்‌ கொண்டு உணர்ந்து கொள்ள வேண்டும. இக்காலத்தில்‌ ௪ி. ஐ.டி. என்னும்‌ இரகியப்‌ போலீசார்‌ நாட்டின்‌ நடப்புகளை அரசாங்கத்துக்கு அறிவித்து வருகின்றனர்‌. இதுபோல்‌ பண்டைக்‌ காலத்தில்‌ நாட்டில்‌ நடைபெறும்‌ நிகழ்ச்சிகளை அரசாங்கத்துக்கு அறிவித்து வந்தவர்களுக்கு ஒற்றர்கள்‌ என்று பெயர்‌.

இந்த ஒற்றர்கள்‌ மிகவும்‌ நேர்மையுள்ளவர்களாயிருக்க . வேண்டும்‌. நாட்டுக்குக்‌ கேடு சூழ்பவர்கள்‌ யாராயிருந்தாலும்‌ சரி, தம்‌ நண்பர்களாயிருந்தாலும்‌, உறவினர்களாயிருந்தாலும்‌ அவர்களைப்‌ பற்றி அளுவோர்க்கு அறிவிக்க வேண்டும. இத்‌தகைய நேர்மைக்‌ குணம்‌ உள்ளவர்களே ஒற்றர்‌ வேலைக்குத்‌ தகுதியுள்ளவர்கள்‌ என்பது வள்ளுவர்‌ கருத்து.

அளுவோர்‌ ஒரு ஒற்றன்‌ உரைப்பதை அப்படியே நம்பி விடக்கூடாது. அந்த ஒற்றன்‌ உரைக்கும்‌ செய்தி உண்மையா என்பதைப்பற்றி மற்றொரு ஒற்றனைக்‌ கொண்டு ஆராயவேண்டும்‌.

அதன்‌ பிறகுதான்‌ நடவடிக்கையில்‌ இறங்க வேண்டும்‌. ஒரு ஒற்றன்‌ சொல்வதை மட்டும்‌ உண்மையென்று நம்பி நடவடிக்கை எடுப்பது தவறாகும்‌. இப்படிச்‌ செய்கின்றவர்கள்‌ நாட்டை ஆளுவதற்குத்‌ தகுதி அற்றவர்கள்‌.

“ஒற்றுஒற்றித்‌ தந்த பொருளையும்‌, மற்று ஒர்‌

ஒற்றினால்‌ ஒற்றிக்‌ கொளல்‌.”

ஒரு ஒற்றன்‌ உளவறிந்து தெரிவித்த செய்தியையும்‌, மற்றொரு ஒற்றனால்‌ உண்மைதானா என்று தெரிந்துவரச்‌ செய்து இருவர்‌ கூற்றும்‌ ஒன்றாக இருந்தால்‌ தான்‌ அதை உண்மையென்று கொள்ளவேண்டும்‌” (ஞ.589)

இந்த முறையைப்‌ பின்பற்றாத எந்த அரசாங்கமும்‌ நேர்மை யான அரசாங்கமாயிருக்க முடியாது. இரகசியப்‌ போலீசார்‌ கூறுவனவெல்லாம்‌ உண்மையென்று நம்பும்‌ அரசாங்கம்‌. அதிகாரம்‌ செலுத்தும்‌ ஆட்சியாகத்தான்‌ இருக்கும்‌; உண்மை உணர்த்து நீதி செலுத்தும்‌ ஆட்சியாக இருக்கமுடியாது.

அளுவோர்க்கு உள்ளத்திலே ஊக்கம்‌ வேண்டும்‌. ஊக்கம்‌ அற்றவர்களால்‌ ஒன்றையும்‌ செய்ய முடியாது. ஊக்கமே உடல்‌ வலிமையைத்‌ தரும்‌; நெஞ்சுரத்தையும்‌ அளிக்கும்‌. எடுத்துக்‌ கொண்ட செயல்களைச்‌ சோர்வில்லாமல்‌ சுறுசுறுப்பாகச்‌ செய்யும்‌ திறமை அளுவோர்க்கு அமைந்திருக்க வேண்டும்‌. காலந்‌ தாழ்த்தாமல்‌ காரியங்களை நடத்துகின்றவர்களால்‌ எந்தத்‌ திட்டத்தையும்‌ எளிதில்‌ நிறைவேற்ற முடியும்‌.

ஆட்சிக்கு எதிராகக்‌ கிளம்பும்‌ தவறான செய்திகளை உடனே மறுக்க வேண்டும்‌; தவறு இருந்தால்‌ காலந்‌ தாழ்த்தாமல்‌ தவறுகளைத்‌ திருத்திக்‌ கொள்ள வேண்டும்‌. உடனடியாகச்‌ செய்ய வேண்டி யவைகளைப்‌ பிறகு செய்து முடிக்கலாம்‌ என்று தள்ளி வைப்பவர்‌ அளத்‌ தகுதியற்றவர்கள்‌. இத்தகையவர்கள்‌ ஆட்சியிலே இடம்‌ பெற்றிருந்தால்‌ அந்த ஆட்சி மக்களுக்குப்‌ பயன்படாது. இவ்வுண்மைகளை, ஊக்கம்‌, மடியின்மை என்னும்‌ இரண்டு அதிகாரங்களிலும்‌ உள்ள இருபது குறள்களிலும்‌ காணலாம்‌.

நன்மை செய்யுந்‌ துணிவு

நாட்டுக்கு நன்மை தரத்தகுந்த செயல்களை துணிந்து செய்யும்‌ முயற்சியுள்ளவர்களே அளத்‌ தகுந்தவர்கள்‌. இவ்வளவு

பெரிய காரியத்தை நாம்‌ எப்படிச்‌ செய்வது என்று அஞ்சு கின்றவர்கள்‌ - தயங்குகின்றவர்கள்‌ - சோர்வடைகின்றவர்கள்‌ -நாடாளத்‌ தகுதியற்றவர்கள்‌. அவர்களால்‌ எந்த நல்ல காரியத்‌ தையும்‌ செய்து முடிக்க இயலாது. அஞ்சாமல்‌ - சோர்வடை யாமல்‌ - ஒன்றைச்‌ செய்து முடிக்கும்‌ துணிவுக்கே முயற்சியென்று பெயர்‌. இதையே அள்வினையுடைமை என்று கூறுகிறார்‌ வள்ளுவர்‌. தான்‌ செய்யும்‌ தொழிலைத்‌ தனக்கு கட்டுப்பட்டதாகச்‌ செய்துகொள்ளும்‌ தன்மையே அள்வினை உடைமை, 

“அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்‌

பெருமை முயற்சி தரும்‌”

இக்காரியம்‌ செய்வதற்கு அருமையானது என்று சோர்வடையாமலிருக்கவேண்டும்‌; அருமை என்று எண்ணும்‌ காரியத்தைச்‌ செய்வதற்கு ஏற்ற பெருமையை முயற்சியே உண்டாக்கும்‌”

முயற்சியற்றவர்கள்‌ எதையும்‌ செய்யத்‌ தகுதியற்றவர்கள்‌ என்பதை இக்குறளால்‌ காணலாம்‌.

துன்பத்தைக்‌ கண்டு துடை நடுங்குகிறவர்கள்‌ கோழைகள்‌. எத்தனை தொல்லைகள்‌ வந்தாலும்‌ நெஞ்சத்துடிக்காமலிருப்‌பவர்களே துணிவுள்ளவர்கள்‌. இவர்களால்‌ தான்‌ துன்பங்களை எதிர்த்துப்‌ போராட முடியும்‌; அவைகளை விரட்டியடிக்க முடியும்‌. இப்பண்பை இடுக்கண்‌ அழியாமை என்று கூறுகிறார்‌ வள்ளுவர்‌. துன்பத்தைக்‌ கண்டு உள்ளம்‌ தளராமலிருப்பதே இடுக்கண்‌ அழியாமை. இடுக்கண்‌ - துன்பம்‌. அழியாமை - வருநீதாமை.

“அடுக்கி வரினும்‌ அழிவிலான்‌ உற்ற

இடுக்கண்‌ இடுக்கண்‌ படும்‌”

அடுக்கு அடுக்காகத துன்பங்கள்‌ தொடர்ந்து வந்தாலும்‌, அவைகளைக்‌ கண்டு கலங்காதவனே சிறந்தவன்‌; அவன்‌ அடைந்த துன்பம்‌ அவனை ஒன்றும்‌ செய்யாது. அத்துன்பமே துன்பத்திற்கு அளாகி அவனை விட்டு ஓடும்‌” (கு.629)

இதனால்‌, வந்த துன்பத்தை விரட்டியடிக்க வழியறியாமல்‌ ஏங்கியிருப்பவன்‌ அரசாளத்‌ தகுதியற்றவன்‌ என்பதை அறியலாம்‌.

இரக்கம்‌ அற்றவர்கள்‌; நாட்டிலே நிகழும்‌ உண்மை நிகழ்ச்சியை உணர்ந்து கொள்ளாதவர்கள்‌; நன்மை தரும்‌ பெரிய காரியங்களைத்‌ துணிந்து செய்யும்‌ அண்மையற்றவர்கள்‌ துன்பத்தைக்‌ கண்டால்‌ உள்ளந்‌ துடித்துச்‌ சோர்வடைகின்றவர்கள்‌; இவர்கள்‌ எல்லாம்‌ நாடாளத்‌ தகுதியற்றவர்கள்‌. இவ்வுண்மையை வள்ளுவர்‌ தெளிவாகக்‌ கூறியிருக்கின்றார்‌.

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard